Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. பெண்டாட்டி வீட்டில் இல்லையெனில் ஆண்களுக்கு சில நாட்கள் கொண்டாட்டம்தான்.. அப்புறம் சலித்து, வெறுமையாகி மனம் ஏங்க ஆரம்பித்துவிடும்.. இந்த உணர்வுகள் எல்லோருக்கும் இருப்பதுதான்.. இந்தக் காணொளியும் அதையே பிரதிபலிக்கிறது..
  2. தண்ணி போட்டுவிட்டு அங்கு பரிமாறப்படும் அரபிய உணவுகளை சுவைத்துக்கொண்டு மேடையை சுற்றி திண்டுகளில் அமர்ந்துகொண்டு பெல்லி டான்ஸ் பார்த்துக்கொண்டிருக்கையில் சிலர் மப்பு ஏறி மேடையில் ஆடும் பெண்ணோடு அளவோடு தான் ஆடுவதும் உண்டு. இப்பொழுது அப்படி ஆட இயலாது. இது 'சனநாயக' கட் இல்லை..! 🤭
  3. ஒன்று கூடல் ஏற்பாடு செய்யலாம்..அதற்கு முன் ஷேக் ஒத்துக்கொள்ள வேணும்..! 😜 பெல்லி டான்ஸ் பற்றி ரொம்பவும் எதிர்ப்பார்ப்புடன் இருக்க வேண்டாம்.. பாலைவன கூடார (After Desert Safari) பெல்லி டான்ஸுக்கு நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. முன்மெல்லாம் பெல்லி டான்ஸரோடு மேடையில் ஏறி ஆடலாம், இப்பொழுது மீறினால் கட்.. கட்.. என கேள்வி..!
  4. இன்றிலிருந்து சரியாக ஒரு வருடத்தில்(01-10-2021) ஆரம்பிக்கபோகும் "துபாய் எக்ஸ்போ 2020" வர்த்தக பொருட்காட்சி பற்றிய படங்கள் இன்றைய நாளிழில் வந்துள்ளது.. வாய்ப்பிருந்தால் கலந்துகொள்ள வேண்டும்..! கலீஜ் டைம்ஸ்
  5. யாருப்பா இது "நாமக்கல் எம்ஜியார்..?" 🤭 இப்படி பின்னுறார்..அதுவும் லண்டனில்..? 🤗
  6. 2016-ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் குறைவான இசைக்கருவிகளைக் கொண்டு எஸ்.பி.பி பாடிய பாடல் இது..! 🌺
  7. சரி, இந்த அருமையான, மனதுருகச் செய்யும் பாடலைக் கேட்டு மகிழலாம்..! 😍
  8. உந்த கன ஆட்களில் முதல் ஆள், இன்னமும் "திருத்த வேலை நடக்குதப்பா" என 'தள்ளாடி' நிற்பவர்தானே? 😜🌺
  9. அப்படியா..? வருந்துகிறேன். வினோதமாக இருக்கிறது. 🤔 அதை விடுங்கள், ஆனாலும் மணமேடயில் இப்படி "சந்தைக் கடை" மாதிரி யாருமே சீந்தாத இடத்தில், ஒருவர் அருமையான பக்திப் பாடலை 'கொலை செய்வது' கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.
  10. நீங்கள் சொன்னவுடன் இந்தக் காட்சிதான் ஞாபகம் வருகிறது தமிழ் சிறீ.. "ரோட்ல.. பீச்சுல.. பார்க்குல.. தியேட்டர்ல..எங்கே போனாலும் ஒங்க தொல்லை தாங்க முடியலைடா..!" நல்ல நகைச்சுவை காட்சி அது..
  11. பாடகர்(?) என்பவர் ஒரு பக்கம் புகழ் பெற்ற பக்திப்பாடலை கொலை செய்துகொண்டிருக்க, "நீ என்ன வேணும்னாலும் பாடு மாமு.. நாங்கள் எங்க வேலையை பார்க்கிறோம்"னு அலட்சியமாக மேடையில் கும்பல்கள் இங்குமங்கும் அலைய, "யாருப்பா இந்தாளு ஏதோ உளருது"ன்னு சிலர் செல்ல, அதுல ஒரு ஜோடி மேடையில் முத்தம் பரிமாறிக்கொள்ளுதுகள்..! 😍 ("பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான், ஃபுல்லு இருக்குறவன் கவுந்து கிடக்குறான்" என்ற வியாக்கியானமெல்லாம் வேண்டாம்.. அது பொது மேடை) என்ன கொடுமை சரவணா..? உன் பாடலுக்கு இந்த கதியா..? 🤔 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள், குறைந்த பட்சம் இந்த பாடகர் குறூப்பை மேடையிலிருந்து வேறு பக்கம் ஒதுக்கிவைத்து "நீ பாட்டுக்கு கத்து மாமு"ன்னு செய்திருக்கலாம்..! "உங்களுக்கு ஏன் இந்த விசனம்..?" எனக் கேட்டால், அந்தப் பாடலின் மகிமை, வசீகரம் அப்படி..! பாடியவர் எங்கள் மதுரைக்காரர்..!! 😜 ஒரு மரியாதை வேணாம்..? இனியொரு கொலை செய்யாதீர்..!!! 😡
  12. ஒரு அருமையான பக்திப் பாடலை 'எப்படியெல்லாம் மதிப்பிழக்க வைத்து, கொலை செய்யலாம்' என்பதற்கு இதுவும் ஒரு அடையாளம்..! கல்யாணக் கச்சேரியில் பாட வேண்டிய பாட்டா இது..? 😡 பாவம் டி.எம்.எஸ்..!
  13. திருட சென்று மாடியிலேயே படுத்து உறங்கிய பொறியியல் பட்டதாரி..! சென்னை மதுரவாயலில் கொள்ளை அடிக்கச் சென்ற வீட்டில் திருடவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் மொட்டை மாடியிலேயே தூங்கிவிட்ட பொறியியல் பட்டதாரி பிடிபட்டுள்ளார். அடையாளம்பட்டைச் சேர்ந்த பிரபாகரன், சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை இவரது வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்பதால் பிளம்பரை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். வீட்டின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்ற போது அங்கு ஒரு நபர் பதுங்கி இருப்பதைக் கண்டு யார் என்று கேட்டபோது அந்த நபர் வீட்டின் மாடியில் இருந்து வேகமாக இறங்கி கீழே ஓடினார். வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால் அந்த நபரால் தப்பித்து செல்ல முடியவில்லை. பின்னர் அந்த நபர் கையில் ஸ்குரு டைவர் வைத்து மிரட்டியுள்ளார். இதனை பொருட்படுத்தாமல் பிரபாகர், ப்ளம்மர் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்தார். அப்போது கொள்ளையன் 'நான் ஒரு பொறியியல் பட்டதாரி என்றும் வங்கி கடன், கடன் பிரச்சனை காரணமாக கொள்ளை அடிக்க வந்ததாகவும்' கூறியுள்ளார். பிறகு பிடிபட்ட நபரை மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் பிடிபட்ட நபர் கொளத்தூரை சேர்ந்த முத்தழகன், என்பதும் ஆன்லைனில் உணவுகளை டெலிவரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. வீட்டு சூழ்நிலை மற்றும் கடன் பிரச்சினை காரணமாக இந்த பகுதியில் உணவு டெலிவரி செய்யும் போது இவ்வீடு தனியாக இருப்பதை கண்டறிந்து கொள்ளை அடிக்க முடிவு செய்ததாகவும் காவல்துறையிடம் கூறினார். நேற்று இரவு போதையில் இருசக்கர வாகனத்தை ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு இந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரின் மீது எகிறி குதித்து உள்ளே புகுந்தார். வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற அவர் மேலே உள்ள வீட்டின் கதவை உடைக்க முடியாததால், கதவை திறந்த பிறகு கொள்ளை அடிக்கலாம் என மாடியிலேயே போதையில் தூங்கி விட்டார். பின்னர் பொழுது விடிந்ததும் மேலிருந்து கீழே வர முடியாததால், மாடியிலேயே மாலை வரை கொளுத்தும் வெயிலில் உணவு ஏதும் உண்ணாமல் பதுங்கி இருந்துள்ளார் முத்தழகன். இந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து பிடிபட்ட நபரை மதுரவாயல் போலிசார் வழக்குப் பதிவுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். புதிய தலைமுறை இந்தக் காட்சிதான் நினைவிற்கு வருகிறது..!
  14. காணொளியில் மாஸ்க் அணிந்து, வங்கியை விட்டு வெளியேறுபவர்தான் அந்த கிளை மேலாளர்..விஷால் நாராயணன் காம்ளே.
  15. ரொம்ப நல்லது.. இங்கே சட்டப்படி இந்தி தமிழ் நாட்டுக்கு பொருந்தாது என "இந்திய அலுவல் மொழி 1976 விதிகள்" இருந்தும் திணிப்பு இருக்கிறது. அலுவலக மொழி விதி 1976
  16. பெருமையா..? ஒருவேளை தமிழ் ஈழம் என்ற அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்ற எல்லைக்கோடு இல்லை. அதனால் இந்த பிரச்சினையே இல்லையென எண்ணுகிறேன். விதியே என்று ஏற்றுக்கொண்டு இருக்க வேண்டிய நிலையாக இருக்கும்.
  17. கிரந்தம் விடவில்லை என்றால், தமிழர்கள் விரும்பி படிக்கிறார்களா..? என்ன சொல்ல வருகிறீர்களென புரியவில்லையே..? 🤔
  18. "இந்தி தெரியாதா? லோன் இல்லை": வங்கி மேலாளர் பணியிடமாற்றம்! பாலசுப்பிரமணியன் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயணன் காம்ளேவை பணியிட மாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு யுத்தப்பள்ளம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் சொந்த நிலம், வீடு ஆகியவை உள்ளன. இதையடுத்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார். வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் நாராயணன் காம்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டுள்ளார். அப்போது பேசிய வங்கி மேலாளர், “Do u know Hindi?” என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் “I don’t know Hindi, but I know Tamil and English” என ஆங்கிலத்தில் பதில் அளித்துள்ளார். “I am from Maharashtra, I know Hindi. Language problem” என தெரிவித்துள்ளார் மேலாளர். மருத்துவர் மீண்டும் தனது ஆவணத்தை காண்பித்து, "நான் உங்கள் கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது" என தெரிவித்த போதும் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல், "கடன் கொடுக்க இயலாது" என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற மருத்துவர் வங்கி மேலாளருக்கு மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனிடையே திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்தியை திணிக்கும் வங்கியின் மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் "அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்" எனவும் வலியுறுத்தினர். இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயணன் காம்ளேவை திருச்சி மண்டல அலுவலகம் விசாரணைக்கு அழைத்தது. அங்கும் தனக்கு இந்தி மட்டுமே தெரியும் என்றதால் அவரை பணியிடமாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய தலைமுறை
  19. எந்த சட்ட வரையரையில் குறிப்பிடப்பட்டுள்ளது..? Update: இந்தி சர்ச்சை: கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயண் பணியிடமாற்றம்..!
  20. நான்கு மாதமாக கடும் வேலைப் பளு.. கோடை காலம், இரண்டு நாட்களுக்கு முன் முடிந்து இப்பொழுது வசந்த காலம்..! இன்று கடும் புகை மூட்டமாக இங்கே இருக்கிறது.. மனசும் லேசாக பறக்கிறது..!!🥰
  21. அது நாட்டு கட்டுப்பாடு இல்லை, அலுவலக கட்டுப்பாடு..! 😜 ப்ராக்சி செர்வர் முகவரியை மாற்றினால் படங்கள் தெரிகின்றன. இதுவே சிறந்த வழி..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.