Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. பிரதமருக்கு கருப்புக் கொடி போராட்டம்: தள்ளாத வயதில், தளராத தீரத்துடன் பங்கேற்ற ஹீரோ! சென்னை: தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் திமுகவினர் மட்டும் அல்லாமல், திரையுலகினர், ஏராளமான கட்சியினர், பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர். இன்று காலை கருப்புச் சட்டை அணிந்த ஏராளமானோர் விமான நிலையத்தை முற்றுகையிட்டு, பிரதமர் மோடிக்கு தங்களது எதிர்ப்பைக் காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல, தமிழகத்தில், ராணுவ கண்காட்சி நடக்கும் திருவிடந்தை உள்ளிட்ட பல பகுதிகளில் கருப்புச் சட்டை அணிந்து, கருப்புக் கொடியை கையில் ஏந்திய தொண்டர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினர், நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகே "கோ பேக் மோடி" என்ற வாசகம் அடங்கிய கருப்பு பலூன்களையும் பறக்க விட்டனர். திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும் கருப்புச் சட்டை அணிந்து மோடிக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஒரு முத்தாய்ப்பாய், ஓசூரைச் சேர்ந்த 77 வயது ஜேவி நாராயணப்பா என்ற திமுக தொண்டர், மிகவும் சிரமங்களுக்கு இடையே சென்னைக்கு வந்துள்ளார். தள்ளாத வயதிலும், தளராத மனத்துணிவோடு, கருப்புச் சட்டை அணிந்து, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டி தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற உணர்வோடு ஓசூரில் இருந்து சென்னை வந்து திமுக தொண்டர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஏராளமான தொண்டர்களுக்கு மத்தியில், மனதில் தளராத உணர்வோடு கருப்புக் கொடி ஏந்தியிருக்கும் நாராயணப்பா ஹீரோவாக மின்னுகிறார். இவரது புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது ஒன்றே தமிழனின் தேச உணர்வை பறைசாற்றும் என்று பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் தினமணி
  2. தமிழர் விரோத மோடிக்கு இன்று சென்னையில் கிட்டிய வரவேற்பு..படங்கள்!
  3. மனைவி என்பவர் சொத்து கிடையாது; தன்னுடன் வாழ, கணவன் கட்டாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி மனைவி என்பவர், திடப் பொருளோ அல்லது சொத்தோ கிடையாது. தன்னுடன்தான் சேர்ந்து வாழ வேண்டும்! என்று கணவர் விரும்பினால் கூட, மனைவிக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே அது நடக்கும், அவரைக் கட்டாயப்படுத்தி வாழ வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவர் தன்னை கொடுமைப்படுத்துகிறார், அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற வேண்டும். ஆனால், அதற்கு கணவர் சம்மதிக்க மறுக்கிறார். தன்னுடன் வாழ தொடர்ந்து கட்டாயப்படுத்துகிறார் என்று பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவைத் தாக்கல் செய்த பெண்ணும், அவரின் கணவரும் நன்கு படித்தவர்கள், இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள். இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆனால், அதற்கு இருவரும் சம்மதிக்கவில்லை, அந்தக் குழுவின் ஆலோசனையையும் இருவரும் ஏற்கவில்லை. இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன் அந்தப் பெண் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்தப் பெண்ணின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண் கணவனால் மிகுந்த கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அவருடன் தொடர்ந்து வாழ அவருக்கு விருப்பமில்லை. விவாகரத்து கொடுக்க விரும்புகிறோம் என்ற போதிலும், அதற்கு கணவர் உடன்பட மறுக்கிறார். அவர் மீது கொடுத்த புகார்களை வாபஸ் பெறுகிறோம். ஆனால், கணவருடன் சேர்ந்து வாழ மனுதாரரை கட்டாயப்படுத்தக் கூடாது’ என்று தெரிவித்தனர். ஆனால், கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ‘மனைவி என்பவர் திருமணத்துக்குப் பின் கணவருக்கு சொந்தம், அவர் கணவருடன் தான் வாழ வேண்டும். மனைவிக்கு விருப்பமில்லாவிட்டாலும், அவரிடம் சமாதானம் பேசி நீதிமன்றம் சேர்த்து வைக்க வேண்டும்’ எனத் தெரிவித்தனர். இருதரப்புவாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: மனைவி என்பவர் ஒரு திடப்பொருள் கிடையாது. திருமணம் செய்துகொண்டதால், அவர் கணவருக்கு சொத்துகிடையாது. சொத்தாகவும் கருத முடியாது. திருமணத்துக்கு பின் மனைவியுடன் வாழ கணவருக்கு விருப்பம் இருந்தால் கூட மனைவி விரும்பினால் மட்டுமே வாழ முடியும். தன்னுடன்தான் வாழ வேண்டும் என்று மனைவியை கணவர் கட்டாயப்படுத்துதல் கூடாது. உங்களுடன் வாழ விருப்பம் இல்லாத ஒரு பெண்ணை எப்படி, உங்களுடன் வாழ கட்டாயப்படுத்த முடியும்? விருப்பமில்லாத பெண்ணுடன் வாழ வேண்டும் என்ற கணவரின் ஆசையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அந்தப் பெண்ணின் கணவர் அவரை ஒரு திடப்பொருள் போல், சொத்துபோல் நடத்தியுள்ளார். பெண் என்பவர், மனைவி என்பவர் சொத்து கிடையாது. இந்தவழக்கை ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழ் இந்து
  4. எனக்கும் இந்த உணர்வு இருந்தது.. ஆனால் பொறுப்பற்ற பெற்றோர்களும் சமூகத்தில் இருக்கிறார்கள்தானே..? எதிலும் வெளிப்படை என இப்போதிருக்கும் உலகில் பழைய சம்பிரதாயங்கள், கட்டுக்கோப்புகள் நீர்த்துப்போகும் காலம் இப்போது. ஆகவே ஆணென்ற திமிரில் அப்பன்கள் ஆட்டம் போடுவதும், பெண்ணென்று சமுதாய மதிப்பில் எல்லை பிறழ்வதும் தவிர்க்கப்பட வேண்டியவை.
  5. அப்படி பார்த்தால் திரைப்படங்களில் காதல், படுக்கையறை, வன்முறை காட்சிகளே காண்பிக்கக் கூடாதல்லவா..?
  6. அந்த உந்துருளியில் வருபவர் யார்? 'வைகோ'வா?
  7. அப்பன் எப்படி வேணுமென்றாலும் இருந்துவிட முடியாது. அப்பன், தன் குடும்பத்திற்கு பொறுப்பாக இருந்தால் ஏன் திட்டப் போகிறார்கள்..? அதுதானே இந்த நகைச்சுவையின் கரு..?
  8. வாழ்க்கையை எதிர்நோக்க தேவையான கல்வி, தன்னம்பிக்கையை சேமித்துக்கொடுத்தால் போதும் சார்.. கரைசேர்ந்துவிடுவார்கள்..! ஈழப்பிரியன் ஏன் சோகமாயிட்டார்..?
  9. பென்சனர் குரூப்..! நகரங்களில், கிராமங்களில் இம்மாதிரியான 'பெருசு'கள், உதார் விட்டுக்கொண்டு, வெட்டியாக பொழுதைக் கழிப்பதைக் காணலாம்.. இக்காணொளியும் அம்மாதிரியான மனிதர்களை பிரதிபலிக்கிறது..!
  10. நாங்களும் 'தினமலம்' என்றே பலரும் ஒருத்தருக்குள் அழைத்துக்கொள்வது.. பொதுவெளியில் நாகரீகம் கருதி அப்படி சொல்வதில்லை..! பாமர மக்களுக்கு அரசியல் முதற்கொண்டு மிக எளிமையான மொழி(?)யில் நாட்டு நடப்புகளை கவர்ச்சியாக வெளியிடுவதில் தினத்தந்தி ஃபார்முலாவை அப்படியே காப்பியடித்து காசு பார்ப்பது இந்த தினமலரின் வியாபார உத்தி. 'பலே ஆசாமி, படபடவென்று பேசினார்.. டமாலென குதித்தார், வலைவீச்சு, பாலியல் வல்லுறவு, கில்லாடி' போன்ற பதங்களை செய்திகளில் மிக அதிகம் பாவிப்பது தினத்தந்தியும், தினமலரும் தான். செய்திகளில் கொஞ்சம் 'தமிங்லிஷை' கலந்து அப்பாவி மத்தியத்தர தமிழர்களை ஈர்ப்பது விகடனின் வியாபார உத்தி..! உதாரணமாக, 'பேரிக்காட், கான்பிடன்ஷியல் நோட், விசிட், ஃப்லை செய்தார், வொர்க்கவுட் ஆகவில்லை..' இன்னபிற பதங்கள்..!!
  11. முக்கியமான தமிழர் விடயங்களில் தி.மு.க நிச்சயம் யோக்கியம் இல்லை.. இந்தி எதிர்ப்பு போராட்டமும் அதன் வெற்றியுமே இன்றளவிற்கு அவர்களின் அரசியல் மூலதனம்.. இந்த உரையாடல் குறூப்பாக திட்டமிட்டு ஊடக அலுவலகத்தை அழைத்து பதிவு செய்து அவற்றை ஒன்றிணைத்து வெளியிட்டுருக்கலாம்.. அவற்றின் உண்மைதன்மை அறிய இயலாது.
  12. டமில் நாட்ல என்னா சத்தம்..? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து தொடரும் நிலையில், தில்லி உச்சநீதிமன்ற நீதிபதி திரு.தீபக் மிஸ்ரா அவர்கள், தமிழக அரசு வழக்கறிஞரை அழைத்து, "டமில் நாட்ல என்ன நடக்கிறது, ஏனிந்த சத்தம்? எல்லாம் 9ந் திகதி வழக்கு விசாரணைக்கு வருகிறது, தமிழ்நாட்டிற்கு நிச்சயம் தண்ணீர் வரும்" எனக் கூறியதாக செய்தி வெளியானது. அச்செய்தியை தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமலர் என்ற ஊடகம், தமிழர்களை நக்கலடிக்கும் விதமாக கடைகளில் விற்கும் தினசரி விளம்பர தாள்களில் தலைப்புச் செய்தியாக அச்சடித்து தனது குதர்க்க ஆரிய புத்தியை வெளியிட்டுள்ளது. அதைக் கண்டு வெகுண்டெழுந்த சில தமிழர்கள், தினமலர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.. அவற்றின் சில உரையாடல்கள் ஒலியாக..இங்கே..!
  13. அப்பன் பெரிய பதவியில இருக்கருங்கிற திமிரு..!
  14. ராஜன் விஷ்வா, சுமே அக்கா(?) ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  15. தமிழ்நாட்டில் ஒவ்வொன்றுக்கும் விலை இருக்கிறது.. சிறிது 'நரித்தனம்' இருந்தால் எளிதில் மக்களை திசைதிருப்பி விலைக்கு வாங்கிடலாம்.. அவ்வளவு 'பே சனங்கள்' திரியுதுகள்..! இங்கே தண்ணீர் உரிமைக்காக தமிழகம் அல்லாடுது..! ஓட்டுக்கும் இலவசங்களுக்கும் விலைபோகும் பொதுசனங்கள் ஒருபுறம், மற்றொரு பக்கம் இளசுகள், ஐ.பி.எல். க்கு 'டிக்கட் வாங்க' க்யூவில் அடிபடுதுகள்..!! ஏன் மற்ற நாட்டுக்காரன் ஏறி மேய மாட்டான்..?
  16. அ.தி.மு.க நடத்தும் அடடே உண்ணா விரதம்! சென்னை : அதிமுக நடத்தும் உண்ணா விரத போராட்டத்தில் கட்சியினர் இடையிடையே சாப்பாடு, நொறுக்குத் தீனி சாப்பிடுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக அரசு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் கட்சி நிர்வாகிகள் காலையில் இருந்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். சென்னையில் அதிமுக போராட்டத்தை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்தார்கள். தற்போது இந்த போராட்டம்தான் பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தை அதிமுக கொண்டாட்டம் போல கொண்டாடி வருகிறது. பல மாவட்டங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் களைகட்டி வருகிறது. முக்கியமாக பழைய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாடல்கள் இதில் ஒலிபரப்பப்பட்டு, அதற்கு தொண்டர்கள் நடனமாடி வருகிறார்கள். அதே சமயம் அதிமுகவினர் இடையிடையே நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு வருகிறார்கள். கடலைமிட்டாய், சிப்ஸ், சாக்லேட், சமோசா, வடை என நிறைய தின்பண்டங்கள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் சாப்பிடுவதை சமூக வலைதளத்தில் பலர் கலாய்த்து வருகிறார்கள். அதே சமயத்தில் புதுக்கோட்டையில் வேறு மாதிரி உண்ணாவிரத(!) போராட்டம் செய்து இருக்கிறார்கள். அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தின் இடையில் மதிய உணவு இடைவெளி கேட்டு வெளியே சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதே சமயத்தில் இந்த உண்ணா விரத போராட்டம் காலையிலேயே பெரிய பிரச்னையை உருவாக்கியது. அதிமுக கட்சியினர் 10 மணிக்கு மேல்தான் பல இடங்களில் போராட்டம் தொடங்கினர். இதனால் காலை உணவை சாப்பிட்டுவிட்டு உண்ணா விரத போராட்டத்திற்கு கட்சியினர் வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒன் இந்தியா
  17. ‘செயல்திட்டம்’தான்; ‘காவிரி மேலாண்மை வாரியம் அல்ல’: உச்ச நீதிமன்றம் விளக்கம்! புது தில்லி: காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் செயல்திட்டம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோமே தவிர, 'காவிரி மேலாண்மை வாரியம்' என்று கூறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மனுவை அடுத்த வாரம் ஏப்ரல் 9ம் தேதி திங்கட்கிழமை விசாரிப்பதாகக் கூறியுள்ளது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்றே விசாரிக்கக் கோரிய நிலையில், அடுத்த வாரம் திங்கட்கிழமை விசாரணைக்கு ஏற்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 'தமிழகத்தின் நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது' என்று கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 'தமிழகத்துக்கு உண்டான நீர் நிச்சயம் கிடைக்கும்' என்றும் உறுதி அளித்தார். இந்த மனு மீது, நீதிபதி ஒரு சில விளக்கங்களை அளித்தார். அதில், உச்ச நீதிமன்றம் வெளியிட்ட காவிரி தீர்ப்பில் 'செயல் திட்டம்' என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது, 'மேலாண்மை வாரியம்' என்று குறிப்பிடப்படவில்லை. காவிரி பிரச்னையை முழுமையாக தீர்ப்பதற்குரிய திட்டத்தை 'ஸ்கீம்' என்று குறிப்பிட்டோம். அதாவது, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒரு முழு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டதாக நீதிபதி விளக்கம் அளித்தார். மேலும், தமிழக அரசு தரப்பிடம், 'கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொடர்ந்துள்ள வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம். உங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த நீரின் அளவில் எந்த மாற்றமும் செய்யப்படாது. உங்களுக்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும்' என்று உறுதி அளித்தனர். இந்த நிலையில், 'தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்க வேண்டும் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே தீர்வாக இருக்கும்' என்று தமிழகம் கருதுகிறது. எனவே, தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் தேவையான ஆவணங்களை திரட்டி உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தத் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தினமணி
  18. நீதியே, உன் வலிமை இதுதானா..? உச்ச நீதிமன்றத்தின் மாண்பும் வலிமையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. ஏற்கெனவே, இதே காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை கர்நாடக அரசு காற்றில் பறக்கவிட்டது. நீதிமன்றம் கடுமையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது, காவிரி நடுவர் மன்றம் அமைப்பதற்கான கெடு தேதி முடியும் வரை கைகட்டி இருந்துவிட்டு, தமிழகத்தின் கதறல்கள் காதிலேயே விழாதது போல மவுனம் காக்கும் மத்திய அரசுக்கு என்ன கடுமைகாட்டப் போகிறது உச்ச நீதிமன்றம்..? சட்டத்தையும் நீதியையும் இறுதி நம்பிக்கையாக கொண்டிருக்கும் மக்களுக்கு, அந்த நம்பிக்கையை நிலைநாட்டிக் காட்டவேண்டிய கட்டாயம் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. கழுவிய மீனில் நழுவிய மீனாக கடமையைத் தட்டிக்கழிக்க இது அத்தனை சாதாரண வழக்கல்ல. நெடுஞ்சாலையை ஒட்டி மதுக்கடைகள் கூடாது என்ற தீர்ப்புக்கே தண்ணி காட்டும் வகையில் நெடுஞ்சாலைகளை எல்லாம் ஒரே மூச்சில் உள்ளூர் சாலைகளாக மாற்றி 'பெப்பே' காட்டிய அசகாய சூர அரசியல்வாதிகளின் தேசமிது. அப்போது போல் இப்போதும் அரசியல் சித்து விளையாட்டுக்களை உச்ச நீதிமன்றம் கண்டும் காணாது இருந்துவிட்டால், நீதிபதிகள் நியமனம் தொடங்கி மற்ற செயல்பாடுகள் வரையில் அரசியல் குறுக்கீடு இருப்பதாக நீதியரசர்களே எழுப்பிவரும் குற்றச்சாட்டு குமுறல்களுக்கும் மக்கள் ஆதரவு கிடைக்காது. அதேசமயத்தில், கர்நாடக தேர்தலுக்காகத்தான் மத்தியை ஆளும் பாஜக அரசு இப்படியொரு சகுனி வேலை செய்கிறது என்பது உண்மையானால்... இனி, என்றைக்குமே அவர்கள் தமிழகத்தில் தலையெடுக்கக்கூடாது; அப்படியொரு தீர்ப்பை மக்கள் தரவேண்டும். காமதேனு
  19. 'கூகுள்' வரைபடத்தில் இணைகிறது, நீலகிரி மலை ரயில்! நீலகிரி மலை ரயிலை, 'கூகுள்' வரைபடத்தில் இணைப்பதற்கான ஆய்வுப் பணிகளை அந்நிறுவனத்தார் புதன்கிழமை தொடங்கியுள்ளனர். நீலகிரி மலைகளின் இடுக்குகளிலும், எழில் கொஞ்சும் அடர்ந்த வனப் பகுதிகளிலும் நாள்தோறும் பயணிகளைச் சுமந்தவாறு தவழ்ந்து செல்கிறது மலை ரயில். ஆசியக் கண்டத்தில் மிக நீளமான மீட்டர் கேஜ் மலை ரயில் பாதை இதுவாகும். குன்னூரில் உள்ள என்ஜின் மையம், தெற்கு ரயில்வேயில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஒரே நீராவி இன்ஜின் பணிமனையாகும். இந்தப் பணிமனை கடந்த 1899ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். மேட்டுப்பாளையம்-குன்னூர் பிரிவில் பயன்படுத்துவதற்காக நீராவி என்ஜின்கள் சுவிட்சர்லாந்திலிருந்து தருவிக்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்படுகின்றன. இந்த ரயில் பாதை பல இடங்களில் செங்குத்தாக இருப்பதால் பல் சக்கரத்தின் உதவியுடன் மலை ரயில் இயக்கப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு மேல் மலைப் பாதையில் நீராவி என்ஜின் இயக்கப்பட்டுள்ளதால், சற்று பழுதடைந்துள்ளது. மேலும், நிலக்கரி விலை உயர்வு காரணமாகவும் தற்போது உதகை - குன்னூர் இடையே மலை ரயிலில் டீசல் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட பின், குன்னூரில் இருந்து உதகைக்கு மலை ரயில் 40 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த மீட்டர் கேஜ் மலை ரயில், சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் சிறப்பு வாய்ந்த ரயிலாகத் திகழ்கிறது. 11.516 மீட்டர் நீளமும், 2.15 மீட்டர் அகலமும் உள்ளதாக, 4 பெட்டிகளையும் கொண்டுள்ளது. இந்த நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை 46 கி.மீ. தொலைவு செல்ல 208 வளைவுகளையும், 250 பாலங்களையும், 16 சுரங்கப் பாதைகளையும் கடந்து செல்கிறது. பசுமை நிறைந்த மலைகளின் நடுவே தவழ்ந்து வரும் இந்தக் குட்டி ரயில் நூற்றாண்டைக் கடந்துள்ளது. இதில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், நீலகிரி மலை ரயிலை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என ரயில்வே துறை, நீலகிரி பாரம்பரிய ரயில் பாதுகாப்புச் சங்கம் ஆகியவை வலியுறுத்தி வந்தன. இதைத் தொடர்ந்து 2005 ஜூலை 15-ஆம் தேதி டர்பன் நகரில் நடந்த உலகப் பாரம்பரியக் குழுவின் 29-ஆவது கூட்டத்தில் இக்கோரிக்கை ஒருமனதாக ஏற்கப்பட்டது. அதன்பின் நீலகிரி மலை ரயிலை யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய ரயிலாக அறிவித்தது. இதனால், உதகை ரயில் நிலையமும் மலை ரயிலும் உலக சுற்றுலா ஏட்டில் இடம் பெற்றன. இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் வந்த 3 பேர் கொண்ட கூகுள் நிறுவனத்தினர் மலை ரயில் முன்பு நவீன கருவிகளைப் பொருத்தி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இந்நிறுவனம் இணையத் தேடுபொறி தொழில்நுட்ப நிறுவனமாகும். அவர்கள் கல்லாறு, ஹில்குரோவ், ரன்னிமேடு, பழைய அருவங்காடு, கேத்தி, உதகை உள்ளிட்ட இடங்களில் மலை ரயிலை நிறுத்தி, தங்களுக்குத் தேவையான விவரங்களை சேகரித்துக் கொண்டனர். இந்தப் பணிகள் நிறைவுற்றதும், விரைவில் மலை ரயில், 'கூகுள்' வரைபடத்தில் இணைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. தினமணி
  20. தன் உபயோகத்திற்கு பயன்படுத்தியதற்கு போலீஸ்காரர்கள் எந்தக் காலத்தில் பணம் கொடுத்திருக்கிறார்கள்..? சென்னை கொத்தவால் சாவடியை அண்டிய பகுதிகளிளுள்ள நடைபாதை கடைகளில், எளிய வியாபாரிகளை மிரட்டி அவர்கள் காய்கறிகளை அள்ளிக்கொண்டு செல்லும் காட்சிகளை அடிக்கடி பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.