Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகிடி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பகிடி

  1. எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். அப்ப பகவத் கீதையில் கிருஷ்ணர் சொன்னது பொய் எங்கிறீர்களா ?
  2. நீலன் விஷயத்திலோ அல்லது லக்ஸ்மன் கதிர்காமர் விஷயத்திலோ நான் விடுதலைப் புலிகளை வைய மாட்டேன். காரணம் புலிகள் தாம் எடுத்துக்கொண்ட கொள்கைக்கு நேர்மையாய் இருந்தனர் என்ற ஒரே காரணத்தால்த் தான். தமிழரின் தாயகம் தமிழ் ஈழத் தாயகம் என்பதில் உறுதியாக அவர்கள் இருந்ததால் அதற்கு குறைந்த எந்த தீர்வையும் முன்மொழியும் அனைவரும் அவர்களுக்கு துரோகிகளே தன் லட்சியதுக்காக தன்னையும் தன் குடும்பத்தையும் இழந்த தலைவரின் நேர்மை சந்தேகத்துக்கு இடமற்றது அந்தந்த காலத்துக்கு எற்றால் போல் தான் காரியங்கள் நடைபெறும், அதை அந்த காலப்பொருளில் உள்வாங்கிக் கொள்ளல் வேண்டும். இன்று காலம் +நிலைமை வேறு என்பதால் வேறு நிலைப்பட்டுடன் சிந்திக்க வேண்டி உள்ளது
  3. உண்மை, இவர்கள் உண்மையிலேயே புலிகளுக்கும் விசுவாசமாய் இருந்தார்களோ என்று பார்த்தால் அங்கும் அந்தோ பரிதாபமே
  4. நல்ல கட்டுரை. Facebook இல் யாரோ ஒருவர் வேலை சம்பந்தமாக கேட்ட கேள்விக்கு Alberta வாருங்கள் ஓரளவு வேலை உண்டு, ஹோட்டல் house keeping வேலை உண்டு என்று சொல்லி இருந்தேன், அடுத்த நாள் face book கை திறந்தால் குறைந்தது ஒரு 20 மெசேஜ். அனைவரும் visiting விசாவில் வந்தவர்கள், எல்லோருக்கும் களவாய் வேலை செய்ய உதவி வேண்டுமாம்.கஷ்டம், வீட்டு வாடை கட்ட முடியவில்லை, சாப்பிட காசு இல்லை உதவி செய்யுங்கோ என்று கேட்க்கிறார்கள். நினைச்சால் பாவமாய் இருக்குது, இலங்கையில் எனது ஆசிரியர் ஒருவர் தனது மகன் இங்கு வந்து கஷ்டப்படுவதாகவும் உதவி செய்யும் படியும் கேட்க்கிறார். என்ன சொல்லி விளங்கப் படுத்துவது என்று தெரியவில்லை.
  5. நான் சுமத்திரனை மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து அணுகாமல் சுமத்திரன் தன் வாயால் என்ன தான் சொல்கிறார் என்பதை அவர் அரசியலுக்கு வந்த காலம் முதல் கொடுத்த பத்திரிகை, தொலைக்காட்சிப் பேட்டிகள் மூலம் மட்டுமே அணுகியிருந்தேன். காய்தல் உவர்தல் இன்றி நான் கவனித்ததில் என்னைப் பொறுத்த வரையில் சுமந்திரன் 1) தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் இப்பொழுது இருப்பதை விட ஒரு படி ஏனும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புபவர் 2) இப்போதைக்கு அடைய முடியாத தமிழ்க் கனவைக் காண்பவர் அல்லர். 3) லிபரல் கொள்கை கொண்டவர், வலது சாரி மனநிலை இல்லாதவர் ஆகவே one way thinking இல்லாதவர். Critical thinking ability நன்கே உண்டு 4) தமிழனாக உணரும் அதே நேரம் இலங்கையனாகவும் உணர்கின்றார் 5)இந்திய எதிர்ப்பு மனநிலை உள்ளவர் 6) மேற்குக்கு விசுவாசமானவர் 7) காசுக்காக அவர் அரசியல் செய்யவில்லை 8) சட்டம் தெரிந்து இருப்பதால் உள்குத்து வேலைகளை சட்டப்படி எப்படி செய்வது என்று தெரியும் 9) சுமத்திரனின் பலம் தெளிவான அவரின் விளங்கப்படுத்தும் திறமை 10) இவர் செய்த தவறு இனப்படுகொலை விசாரணை விஷயத்தில் இலங்கை அரசு தப்பிக்க உதவியாய் இருந்தது ( அதையும் சட்ட வியாக்கியானம் செய்து தான் தவறு செய்யவில்லை என்று விளங்கப்படுத்தி இருப்பார் 😭😭) 11) தி மு க அனுதாபி
  6. யாப்பின் படி நடக்காது பிழை செய்துவிட்டு இப்பொழுது பிடி பட்ட பின்பு ஐயோ தமிழ் மானம் காற்றில் பறக்குதே, பிழை பிடித்தவர்கள், வழக்குப் போட்டவர்கள் துரோகிகள், சகுனிகள் என்று புலம்பி என்ன பிரியோசனம்? "செய் வினை திருந்தத் செய்
  7. வாக்குகளுக்காக நடத்தப்படும் நாடகம். முடித்தால் இலங்கையுடனான வர்த்தக உறவுகளை முறிக்கட்டும் பார்க்கலாம்.
  8. ஆக இலங்கைக்குள் பிரச்சனை நீடிப்பது இந்தியாவுக்கும் மேற்குக்கும் தத்தமது நோக்கத்துக்காக எப்போதும் தேவை. இது தெரிந்தும் நாங்கள் என்ன செய்யப்போகின்றோம்?மீண்டும் மீண்டும் சிங்களவரைக் குற்றம் சாட்டி அவர்களுடன் கொழுவிக்கொண்டே இருந்து இந்தியாவுக்கும் மேற்குக்கும் துருப்புச் சீட்டாக்கவே இருந்து சீரழியப் போகின்றோமா அல்லது சிங்களவர் கொடுப்பதை வாங்கி அவர்களுடன் இணைந்து வாழ்ந்து தமிழரும் சிங்களவரும் ஒற்றுமையாக வாழ முயற்சி எடுக்கப் போகின்றோமா? அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது தமிழப் பழ மொழி தான் என்றாலும் அது இலங்கையர்களாக சிங்கள தமிழ் மக்கள் இருவருக்கும் பொருந்தும்
  9. இலங்கைத் தமிழர்கள்( வெளிநாட்டுக்காரர் உட்பட )சீரழிந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. இனிமேலும் மீட்க முடியாது என்றே நினைக்கின்றேன். பலர் திடீர் பணக்காரர் ஆக எதையும் செய்ய தயார், நல்ல கல்வியில், கடும் உழைப்பில் இனியும் அக்கறை இல்லை, பாடசாலை ஆசிரியர்களோ சமூக வலைத்தள அடிமைகள், எந்த வேலையையும் உருப்படியாக செய்யும் திறமை அற்ற தொழிலார்கள், இளசுகள் என்ற போர்வையில் நாச வேலைகளைச் செய்யும் வப்புகள்,கழுசறைகள் ( பெண் பிள்ளைகளும் இதில் சரி சமனாக அடக்கம் ) இப்படி இலங்கையில் உள்ளவர்களை இங்கிருந்து படங்காட்டி கெடுத்ததில் புலம் பெயர்ந்த தமிழர்க்கு பெரும் பங்கு உண்டு. அங்கோன்றும் இங்கொன்றுமாக ஒரு சில நல்ல குடும்பங்கள் இந்த சூழலுக்குள் சிக்கி என்ன செய்வது என்று தெரியாமல் மனதுக்குள் அழுது புலம்புகின்றன. இங்கே உள்ள ஓரளவு நல்ல மனிதர்களோ வெளியே தம்மை தமிழர் என்று இனம் காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றன
  10. ஆர்வம் உள்ளவர்கள் இவர் எழுதிய புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.
  11. அரசியல் படுத்தப்படாத ஒரு 50 வீத மக்கள் தமிழ் நாட்டில் உண்டு. அந்த ஐம்பது வீதத்தில் முக்கால் வாசி அதிமுகவிடம் உள்ளது. அது ஆர் எஸ் எஸ் சித்தாந்ததை நோக்கி இலகுவில் திருப்பப்படலாம். அதை தடுப்பது முக்கியம். இல்லாவிட்டால் தமிழ் மொழியும் இனமும் வாழ்வியலும் நிலமும் போய்விடும். விஜய்க்கு பின்னால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டுக்காக யோசிக்கும் தீவிர திராவிட சித்தாந்தவாதிகள் இருக்கலாம். ஏன் ஸ்டாலின் கூட இருக்கலாம். விஜய் vs உதை என்று வருவது திமுகவுக்கும் நல்லது.
  12. இன்னும் குறைந்தது 4 - 8 ஆண்டுகளுக்கு இந்தியாவில் இந்த மத அரசியல் நன்கு ஓடும், பின்பு சலிப்புத் தட்டி விடும்.ஆகவே 2029 இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர சாத்தியம் உண்டும். விஜய் குடும்பம் அடிப்படையில் காங்கிரஸ் (மற்றும் திமுக) சார்பானது . ஒரு தடவை விஜய் ராகுல் காந்தியை சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பு கேட்டதாக ஞாபகம். எதிர்காலத்தில் விஜய் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரலாம். தீவிர தமிழ்த் தேசியவாதியாக இருந்தால் இந்தியா என்கிற நாட்டை நேசிக்கும் தமிழர்களின் வாக்குகள் கிடைக்காது போய் விடும் என்பதன் காரணமாக தமிழ் நாடு என்ற பெயர் தவிர்க்கப்பட்டு தமிழகம் சேர்க்கப்பட்டு இருக்கலாம். எதுவாக இருப்பினும் ரஜனி போல் விஜய் அங்கொரு கால் இங்கோர் கால் என்று இல்லாமல் அரசியலுக்காக சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்தது நல்லது தான்.
  13. இயல்பில் விஜய் பிஜேபி சித்தாந்தத்துக்கு ஒத்துப்போக்காதவர் என்றே நினைக்கிறன்
  14. இங்கே புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புங்களில் பல இந்தியாவுக்கு காசுக்கு வேலை செய்யும் ஆட்கள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன் ஜெர்மனி அங்குள்ள பஞ்சாபி அமைப்புங்களில் உளவு வேலை பார்த்த சில இந்திய உளவாளிகளை கைது செய்து இருந்தது யாழிலிம் சிலர் இருக்கலாம்
  15. நாங்கள் தான் அறிவு கெட்ட தனமா இந்தியாவை நம்பினமேயோளிய இந்தியாயாவுக்கு நாம் எப்பொழுதும் இலங்கையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்ள்ள ஒரு துருப்புச் சீட்டுதான். ஈழத் தமிழரைக் கைவிட்ட இந்தியா என்ற தலைப்பே பிழை
  16. ஆயுர் வேத சிகிச்சைக்கு வந்ததாகவும் ஒரு செய்தி
  17. ரஷ்யாவின் Ukraine மீதான போருக்கு பின் இருப்பது அங்குள்ள Orthodox church. இந்தியாவை சீழ் படுத்திக்கொண்டு இருப்பது ஹிந்துத்துவா பைத்தியங்கள் இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் பௌதம் இங்கே வட அமெரிக்காவில் Trumb பின் திரள்பவர்கள் பெத்திக்கோஸ்ட் சபையை சேர்ந்தவர்கள் தென் அமெரிக்க நாடுகளில் அரசியலை தீர்மானிப்பது கத்தோலிக்கம் மத்திய கிழக்கில் யூதர் vs இஸ்லாம். உலகப் பொருளாதாரம் மிக வலுவிழந்த நிலையில் உலகம் முழுவதும் இந்த மத ஸ்தாபனங்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பு மதிப்பிட முடியாதது, இவர்கள் Tax கட்டுவதில்லை உலகில் வலது சாரிக்களுக்கு அடி விழும் பொழுது இந்த மதங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நாள் அடி வாங்கலாம். ஐ நா அதை நோக்கித் தான் போகின்றது
  18. இந்தியா இலங்கை தமிழருக்கு உருப்படியாக சில விடயங்களை செய்ய விரும்பி இருந்தால் இது போன்ற ஒன்றை திருகோணமலை, யாழ்ப்பாணம் அல்லது மட்டக்ககளப்பில் செய்து இருக்க வேண்டும் அல்லது செய்ய இலங்கை அரசை நிர்பந்தம் செய்து இருக்க வேண்டும். ஆனால் இந்தியா செய்வது எல்லாம் கலாசார மண்டபம் அமைப்பது, சைவர்கள் வாழும் திருகோணமலையில் பெருமாள் கோவிலைக் கட்டுவது, யாழ்ப்பாணத்துக்கு சம்பந்தம் இல்லா ஆஞ்சநேயர் கோவிலை நிறுவுவது என்று எது எல்லாம் எம்மை மூளைச் சலவை செய்யுமோ அதை செய்கிறது. கேட்பார் யாரும் இல்லை
  19. ///தலாக் சொல்ல சொல்ல count ரீ செட் ஆகும்// சிரிப்பை அடக்க முடியவில்லை
  20. காலேல 12 இடியப்பம், 11 மணிக்கு tea வடை, மத்தியானம் மலை மாதிரி சோறு, இரண்டு மணிக்கு வெயில் சூட்டுக்கு fanta சோடா. பின்னரம் மிக்ஸ்ர் கொண்டல் கடலை and Tea. இரவைக்கு beer with கொத்து ரொட்டி இப்பிடி சாப்பிட்டுகொண்டு சனம் 35 வயசுக்கு மேல் வாழுதே.. அதே பெரிய விஷயம்
  21. வணக்கம் @Cruso வின் சொற் பிரயோகங்கள் தவறு தான், உணர்ச்சி வசப்படும் பொழுது வார்த்தைகளை அவதானமாகக் கையாள வேண்டும். ஆனால் நான் குறிப்பாக உங்களுக்கு @MEERA பதில் அளித்ததன் நோக்கம், பெரும்பான்மை சைவர்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் அச்ச உணர்வை விளங்கி அவர்களை விட கொஞ்சம் பக்குவமாக இருந்தல் வேண்டும் என்பதால்த் தான். ( ஜனநாயக சமூக அமைப்பில் பெரும்பான்மையோரிடம் அது வேண்டப்படும் ).இதன் பொருள் சிறு பான்மை கிறிஸ்தவர்கள் நினைத்தபடி வாள் சுழற்றலாம் என்பதல்ல. 2010-2011 வாக்கில் நான் ஒரு முறை தற்போதைய இந்திய மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களை இன்னொருவர் சகிதம் சந்திக்கக் கிடைத்தது. அப்பொழுது காங்கிரஸ் ஆட்சி. கொமான்வெல்த் ஊழல், 2 ஜி ஊழல் என்று காங்கிரஸ் ஆட்சிக்கு போதாத காலம். நிர்மலா இரண்டோரு வருடங்களுக்கு முன் தான் பிஜேபி இல் இணைந்து இருந்தார்.அப்பொழுது அவர் BJP இன் உத்தியோக பூர்வ ஊடகப் பேச்சாளர். (சந்திப்பின் நோக்கம் அது எவ்வாறு அமைந்தது போன்ற விபரங்களுக்குள் போக விரும்பவில்லை) அவர் அப்போது பகிர்ந்து கொண்ட ஒரு விஷ(ய)த்தை இங்க சொல்வது சாலப் பொருத்தம். ஸ்ரீலங்கன் ஹிந்துத் தமிழர்கள் தமது தலைவர்களாக ஹிந்துத் தலைவர்களையே தெரிவு செய்ய வேண்டும் எனவும், western Agenda வை ஸ்ரீலங்காவில் நடைமுறைப் படுத்த விளையும் கிறிஸ்தவ தலைவர்களை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சில காலத்துக்குப் பின்னர் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் ஒரு செவ்வியில் ஏன் யுத்தம் முடிந்து இவ்வளவு காலம் போன பின்பும் இன்னமும் இந்திய அரசு 13ம் அரசியல் அமைப்புச் சட்டத்தை அமுல் படுத்தவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இலங்கை தமிழர்களின் முடிவெடுக்கும் இடத்தில் கிறிஸ்தவர் ஒருவர் இருக்கும் வரைக்கும் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்றும், கிறிஸ்தவ தமிழர்களுடன் பேசுவதில்லை என்பதே மத்திய அரசின் நிலை என்றும் பட்டவர்த்தனமாக தெரிவித்தார். அர்ஜுன் சம்பத் ஒரு ஜோக்கர் என்ற போதிலும் அவரின் தகவலை நாம் கடந்து சென்று விட முடியாது. இப்பொழுது சீனிதம்பி ஜோகேஸ்வரன், சச்சிதானந்தம், போன்றவர்கள் முலம் இந்தியா நடப்பிக்கும் அரசியலைக் கவனியுங்கள், ரணில் போன்ற மிதவாத சிங்களர்வர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வரக்கூடாது என்று துடிக்கும் இந்தியாவைக் கவனியுங்கள். மைத்திரி ரணில் அரசுடன் தமிழ் அரசுக் கட்சி நடத்திய பேச்சு வார்த்தை ஓரளவு முன்னேற்றம் அடைந்த பொழுது யார் ஈஸ்டர் குண்டு வெடிப்பை நாடாத்தி குழப்பதை ஏற்படுத்தி இருக்க முடியும் என ஊகியுங்கள் இரண்டு வருடம் முன்பாக எதற்க்காக இங்கிலாந்து திடீர் என்று இலங்கையில் ஒரு குண்டு வெடிப்பு நடக்கலாம் என்று அறிவித்தது என்று யோசியுங்கள் விக்னேஸ்வரன் எதற்காக அர்ஜுன மூர்த்தியை சந்தித்தார் என்று கேளுங்கள் இப்பொழுது சுமத்திரனை ஓரம் கட்ட காட்டப்படும் முனைப்பினைப் பாருங்கள் எனக்கு சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர் என்பது பிரச்னை இல்லை, ஆனால் அவர் மிதவாதி, அதி தீவிரத் தன்மை அற்றவர், இப்போது இருக்கும் தமிழர் நிலையை ஒரு படியேனும் மேலே தூக்கி விட வேண்டும் என்று யோசிப்பதால் அவர் இப்போதைக்கு அடைய முடியாத் தமிழ் கனவைக் காண்பதில்லை.முக்கியமாக இந்தியாவிடம் இருந்து தூர விலகி இலங்கைத் தமிழர் இருக்க வேண்டும் என்று விரும்பவர் ( அப்படி நினைக்க அவரின் கிறிஸ்தவ மன நிலையும் ஒரு காரணம் எனினும் அந்த நிலைப்பாடு எல்லாத் தமிழர்க்கும் பலன் அளிக்கும் ) அதனால் நாம் இலங்கை தமிழர் அரசியலுக்குள் இந்தியா புகுந்து எப்படி அரசியல் செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும். அப்படி எதிர்க்க இந்தியாவால் ஆட்டுவிக்கப் படாதவராக தமிழ் அரசுக் கட்சி தலைவர் இருத்தல் வேண்டும். அவர் எந்த மதம் என்பது பிரச்னை ஆக இருக்கக்கூடாது. இல்லையேல் எமது நிலைமை ஆப்பிழுத்த குரங்கின் நிலை தான். ஆனால் நிலைமை நாம் எதிர் பார்ப்பது போல் அமையாமல் திரும்பத் திரும்ப தமிழர் அரசியல் இந்தியாவின் கால்களையே சுற்றிக்கொண்டு இருக்கும் என்றால் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கிறிஸ்தவ இந்து சண்டை வந்து நாம் மேலும் சீழ் பிடித்த இன்னும் septic ஆகி விட்ட இனமாக போய் விடுவோம். இங்கே யாழில் சிலர் கதைக்கும் கதைகள் நாம் பயப்படும் படி காரியங்கள் நடைபெறுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
  22. தயவு செய்து இது போன்ற சொற் பிரயோகங்களை தவிருங்கள். கடைசியில் அது தமிழ் கிறிஸ்தவர்களை தமிழ் சைவர்களில் இருந்து தூர விலகி நிற்கவே இது போன்ற பதிவுகள் உதவும். தமிழ் கிறிஸ்தவர்கள் + தமிழ் சோனாகர்கள் என்ற நிலை ஏற்படாமல் தவிர்ப்பதே எங்கள் எல்லோருக்கும் நன்மை பயக்கும். ( அப்படி ஒரு நிலைமை ஏற்பட தமிழ் கிறிஸ்தவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டினம் என்பது எனது நிலைப்பாடு ) இல்லையேல் இங்கே தமிழ் சைவர்கள் சிறுபான்மை ஆகி விடுவோம்
  23. ஸ்ரீதரன் வெற்றி பெறலாம் என்று ஒரு தோற்றம் உண்டு, அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் சுமந்திரன் தமிழர் அரசியலை அதன் அதி தீவிரத்தன்மையை அகற்றி மிதவாத அரசியலை முன்னெடுப்பதே இலங்கைத் தீவில் தமிழர்கள் இன்னும் சில தசாப்தங்களுக்கு ஓரளவுக்கேனும் நிம்மதியாக வாழ உதவும் என்னும் கருத்து உள்ளவர் என்பது ஏனது கணிப்பு ஸ்ரீதரனும் சுமந்திரனும் இணைத்தே செயல்படுகின்றார்கள் என்றே கருத்துகின்றேன். யோகேஸ்வரன், விக்கி, உதயன் பேப்பர் சரவணபவன் போன்ற இந்திய எடுபிடிகளோ அல்லது அருந்தவப்பாலன், ஆனந்தி, திருமதி ரவீராஜ் போன்ற தீவிர தமிழ் தேசியர்களோ இலங்கை தமிழர் அரசியலில் இருந்து அகற்றப்பட சுமத்திரனும் ஸ்ரீதரனும் இணைந்தே செயல்பட்டனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.