Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகிடி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பகிடி

  1. நான் அப்படி எங்கும் சொல்லவில்லை @nunavilan. நீங்கள் ஏன் அப்படி விளங்கிக் கொண்டீர்கள் என்று தெரியவில்லை. நான் சொல்ல வந்தது சட்ட நுணுக்கம் அறிந்தவர்கள் தீர்வு கிடைக்கும் வரைக்கும் பாராளுமன்றம் செல்லட்டும் என்பது தான். தவிர திரு சம்பந்தன் , நீலன், சுமந்திரன் ஆகியோருக்கு வழக்கறிஞர் தொழில் வருமானமே அதிகம். வேறு வழியின்றி அரசியலுக்கு இவர்கள் வரவில்லை. சரி இப்பொழுது கூட்டமைப்பு சார்பில் போட்டி இடும் எந்த நபர் பிரச்சனைக்கு உரியவர்? கந்தையா பாஸ்கரன் முதலாளியாக இருக்கும் ஊடகங்கள் சொல்வதை மட்டுமே கேட்டால் எப்படி? ஆமாம், மக்கள் மூடர்கள் ஆக்கப் படுகின்றனர். உணர்ச்சிவசப்படுத்தலை ஊடகங்கள் திருப்ப திரும்ப செய்வதால் மக்கள் முடிவுகளை எடுக்கும் பொழுது உணர்ச்சி தூண்டுதலால் எடுக்கின்றார்களே ஒழிய தீர சிந்தித்து நிதானமாக எடுப்பதில்லை அல்லது எடுக்க அனுமதிக்கப் படுவதில்லை.
  2. 75% சிங்கள மக்களோடு சேர்ந்து வாழும் தீர்வு என்று வரும்பொழுது அங்கு விட்டுக்கொடுப்புக்கள் இரண்டு பக்கமும் தேவைப்படுகிறது. சிங்கள இனவாதிகளின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு அங்கு சிங்கள மக்களில் உள்ள மிதவாதிகள் அரசை அமைக்கும் நிலை வரும் பொழுது இங்கே எமது பக்கத்தில் சீமான் வகையறாக்களை, இந்திய அருவருடிகளை, புலிகளின் பணத்தை கொள்ளையடித்த கூட்டத்தின் சொல் கேட்டு நடக்கும் ஆட்களை வைத்துக்கொண்டு ஒரு தீர்வு நோக்கி நகர முடியாது. அதற்கு அப்படிப்பட்டவர்களை மண்டையில் போடவும் கூடாது. ஆகவே தான் மெதுவாக கட்சியில் இருந்ததை அகற்றப்பட வேண்டியவர்கள் ஆகின்றார்கள். நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள், தீர்வு என்று வரும் பொழுது குதிரை கஜேந்திரன்கள் , மருத்துவம் மட்டுமே படித்த சட்ட நுணுக்கங்கள் தெரியாதவர்கள், பள்ளிக்கூட அதிபர்கள், முன்னாள் கொலையாளிகளை எல்லாம் அனுப்பலாமா? இதே பதிலை நீங்கள் செல்வம் அடைக்கலன்நாதனுக்கும், விக்கிக்கும், கஜேந்திர குமார் பொன்னம்பலதுக்கும் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.
  3. தமிழ் மக்கள் பிரச்சனையின் தீர்வு முயற்சிக்கு இரு வகை சிந்தனைகள் உண்டு 1)இரத்தம் சிந்தித் தான் விடுதலை என்பது ஒரு சிந்தனை 2)சிங்கள மக்களோடு இணைந்து ஒரு தீர்வுக்கு இரத்தம் சிந்தாமல் வர முடியும் என்பது இன்னொரு வகையான சிந்தனை இப்போது சுமத்திரனை எதிர்பவர்கள் இதில் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்? இரத்தம் சிந்தி போராடுவது தான் முதல் நிலைப்பாடு என்றால் அதில் ஒரு நேர்மை உண்டு. மதிக்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு சூழல் இல்லாத பொழுது இரண்டாவது சிந்தனை தான் சரி என்றாகும் பொழுது அப்பொழுதும் சுமந்திரன் வெறுப்பு என்பதற்கு காரணம் பின்வருமாறு 1) தமிழ் இனத்தை இப்படியே ஒரு பதை பதைப்பில் வைத்துக்கொண்டு பெரிய கனவுகளை காண சொல்லி நலிவடைந்த இனமாக எம்மை மாற்றுவது. 2) புலிகள் பெயரில் கொள்ளை அடித்த பணத்தை மக்கள் கேட்டு விடக்கூடாது என்ற பயம். 3) சரியாக பேசி விட்டால் நண்பகளை இழக்க வேண்டும் என்ற பயம்.அதனால் நாலு பேர் சொல்வதை வழிமொழிகிறேன் கூட்டம் 4) புலிகள், மாவீரர்கள் அவர்களின் தியாகம் ஆகியவற்றில் உள்ள பெரும் மதிப்பு. இவர்கள் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். இவர்கள் நிலை புரிந்து கொள்ளத் தக்கது. ஆனாலும் காலம் இவர்களின் சிந்தனையை மாற்றி விடும். இது புதிய அரசியல் அமைப்பு சாசன மாற்றத்தில் திரு சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரோடு சேர்த்து இயங்கிய திரு ஜெயம்பதி விக்ரமரட்ண வின் செவ்வி. சிங்கள மக்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மிதவாதிகள் உண்டு. நம்பிக்கையோடு பயணம் செய்தால் நல்ல வளமான இலங்கையை கட்டி எழுப்பலாம்.
  4. ஏற்கனவே தெரிந்த தகவல்கள் தான் என்றாலும் தொகுத்து சொன்ன விதம் நன்றாக இருந்தது.
  5. திட்டுபவர்கள் இதையும் பார்த்து விடவும்.
  6. ரஜினி திரணகம துரோகி கதிர்காமர் துரோகி நீலன் துரோகி ரட்ன ஜீவன் கூல் துரோகி சம்பந்தன் துரோகி கருணாநிதி துரோகி ப சிதம்பரம் துரோகி இப்போது சுமந்திரனும் துரோகி ஆக பாலசிங்கம் கொஞ்ச நாள் உயிரோடு இருந்து இருந்தால் அவரும் துரோகி ஆக யாரெல்லாம் தமிழ் மக்களுக்குள் உலக ஒழுங்கை மனதில் கொண்டு கொஞ்சம் நிதானமாக சிந்திக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் துரோகி.
  7. Anthropology யின் படி நாம் உறவுகளை கொண்டாடும் முறையில், உணவு உண்ணும் முறையில், திருமணம் சார் உறவுகள் அடிப்படையில் தமிழர், தெலுங்கர் சிங்களவர் எல்லோரும் ஒரே இனமே.
  8. நாம் ஆங்கிலேயேருக்கு அடிமைப் பட்ட காலம் முதல் எதிர்த்து நின்றாலும் இயலுமான வரைக்கும் எங்களை மேற்கொண்டவர்களிடம் இணங்கியே போனோம், அதனால் தான் ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டுப்போன பின் சிங்களவரை விட கல்வியிலும் பொருளாதாரதிலும் சனத்தொகையிலும் நல்ல நிலையில் இருந்தோம். இன்றும் ஆயுதப் போராட்டத்துக்குப் பின் நாம் தோல்வி அடைத்து விட்டோம் என்பதை ஏற்போம், கிட்டத்தட்ட வெள்ளையர்கள் சில நூற்றாண்டுக்கு முன் எம்மை அடிமைப் படுத்த வந்த காலம் போல் ஆகி விட்டது நம் நிலை, ஆகவே இனி இணக்க அரசியல் தான் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பயன் தரும்.அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு இனி தமிழ் தேசியம் என்பதன் பொருள் கல்வி, பொருளாதாரம் தான் . அதனை அடிபட்டு பிரிவினை பேசி விட்டுக்கொடுக்காமல் இருந்தால் அடைய முடியாது. முக்கியமாக இந்தியா என்கின்ற நாடு உடையாமல் அது நடக்காது.எங்களின் உண்மையான பகையாளிகள் சிங்களவர் அல்லர், மாறாக இன்றைய உலக ஒழுங்கும் அருகில் உள்ள இந்தியா என்ற நாடுமே ஆகும். இந்த உலக ஒழுங்கு மாறும் வரைக்கும் நாம் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.ஆகவே இன்றைய தமிழ் அரசுக் கட்சி மற்றவர்கள் போல் அரசியல் செய்யாமல் சிங்களாவரோடு ஒத்து இணங்கி நாம் இருக்கும் நம் நிலம் மற்றும் பொருள் வளத்தை காப்பாற்ற முயல வேண்டும். பிரியாணிக்கு ஆசைப்பட்டு பட்டினி கிடந்தது போதும், கிடைக்கும் சாப்பாட்டை இப்போது சாப்பிடுவோம்.
  9. நீங்கள் குறிப்பிட்டு இருந்தவர்கள் பழைய ஈரோஸ் இயக்கத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பிரச்சனையை அணுகும் முறை மற்ற இயக்கங்களை விட சிறந்ததாகவே அன்று இருந்தது
  10. ஆறு மாதங்களுக்கு முன்னர் bbc யில் இந்த புத்தகம் பற்றிய ஒரு கட்டுரை வந்ததும் இதை வாங்கிப் படித்தேன். தமிழில் இப்போது வந்திருகின்றது என்று அறிகின்றேன். நல்ல புத்தகம்.
  11. நன்றி அண்மையில் நான் ஒரு கட்டுரை ஒன்றை வாசித்தேன். Noyal நடேசன் எழுதியது. உங்கள் கேள்விக்கு அது பதிலாக அமையலாம். // சிங்கள மக்கள் விடயத்தில் உண்மையான யதார்த்தமுள்ளது. அவர்களது 2500 வருட இந்திய எதிர்ப்பு உண்மையானது. சேர சோழ பாண்டிய நாயக்க அரசுகளின் படையெடுப்பால் காலம் காலமாக இலங்கை மக்கள் அழிந்தது உண்மை . அதேபோல் அவர்கள் தங்களது பவுத்த மதத்திற்கு இந்தியாவால் ஆபத்துவருமென்று எண்ணியதால் மகாவம்சம் உருவாகியது. அதையும் பொய் எனச் சொல்லமுடியாது. தென்னிந்தியாவில் இருந்து பவுத்த மதம் அழிந்துபோனதை அவர்கள் கண்டார்கள். அப்படி தங்களுக்கு வரலாம் என நினைக்கிறார்கள் . அந்தப் பயம் உண்மையா என்பது விவாதமில்லை போராட்ட இயக்கங்களுக்கு போர் பயிற்சி இந்தியாவில் நடந்தது உண்மையானது பின்பு ராஜீவ் – ஜேஆர் ஒப்பந்தம் என்பன இந்தியாவின் திணிப்பு நடவடிக்கையே. பிற்காலத்தில் விடுதலைப்புலிகளைத் தேவையற்றபோது ஒடுக்குவதற்கு உதவினார்கள் என்பது அவர்களுக்கு வசதியானபோதே செய்தார்கள் . தற்போது தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் கூட ஒருகாலத்தில் இலங்கைமீதான இந்தியாவின் ஆதிக்கத்தில் பணயக் கைதிகளாக முடியும். இப்படியான தன்மைகளால் சிங்கள மக்கள் கிராமத்திற்குள் வழிதவறி வந்து மூலைக்குள் ஒதுங்கிய காட்டு மிருகத்தின் நிலைக்கு தள்ளப்படுகிறாரகள். இதுபோதாதென்று இலங்கையில் நடந்த இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஈஸ்டர்குண்டு வெடிப்பும் அவர்களை மேலும் பல பக்கங்களிலுமிருந்து வரும் அபாயமெனப் பயமுறுத்துகிறது. கடைசியாக நடந்த தேர்தல்களின் தெரிவுகள் இதையே காட்டுகின்றன. 75 வீதமான சிங்கள பவுத்த மத மக்கள் கொண்ட இலங்கையில் சமாதானம், இனங்களின் பரஸ்பர நல்லிணக்கத்தாலேதான் உருவாகமுடியும். மற்றைய தீர்வுகள் எந்த உருவில் வந்தாலும் எதுவும் நடைமுறைச்சாத்தியமற்றது. இதுவரை வட கிழக்கு தமிழருக்கு மட்டும் இருந்த நூடில்ஸ் போன்ற சிக்கல் இஸ்லாமியர்களும் இந்த விடயத்தில் சேர்ந்து இடியப்ப சிக்கலாகிறார்கள். நடைமுறைச்சாத்தியமற்றது. இதுவரை வட கிழக்கு தமிழருக்கு மட்டும் இருந்த நூடில்ஸ் போன்ற சிக்கல் இஸ்லாமியர்களும் இந்த விடயத்தில் சேர்ந்து இடியப்ப சிக்கலாகிறார்கள். தமிழர்களுக்கு, அரசியல்வாதிகளின் மடியைத் தடவி பால்கறக்க 20 வருடம் தேவைப்பட்டது. ஆனால் இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் இந்த வேகத்தில் போனால் பாதிக்காலம்தேவைப்படாது. மூன்று இனங்களும் இனவாதத்தால் கூர்மையாக்கப்படும்போது யாருக்கும் நன்மை வராது தொடர்ச்சியான முறுகல் நிலை ஏற்பட்டால் பாதிப்புகள்தான் தொடரும் . இலங்கை மீதோ அல்லது சிங்கள மக்கள் மீதோ உலக நாடுகளால் எந்த முடிவையும் திணிக்கமுடியாது. ஆனால், இலங்கையை ஒரு ஏமன் அல்லது சோமாலியாவாக்க முடியும்.//
  12. பயப்படக் காரணம், இங்கே கொஞ்ச அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால் அதை வைத்து கிடைக்கும் சுதந்திரத்தில் இந்தியாவின் உதவியுடன் மீண்டும் இங்கே ஒரு தமிழ் கிளர்ச்சிக் குழு உருவாகும் என்ற பயம் தான். நாம் தமிழர்களாக இருக்கும் அதே நேரம் இந்தியாவுக்கு செம்படிக்காத நல்ல இலங்கையர்களாகவும் இருப்பதை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு உறுதிப் படுத்த வேண்டும். அப்பொழுது பெரும்பான்மை மக்களுக்கு எமக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க விருப்பம் வரலாம்.
  13. இது தெரிந்த உங்களுக்கு இலங்கையில் தமிழ் அரசுக் கட்சியை சுமந்திரன் போன்றவர்களிடம் இருந்து பிரித்து எடுத்து அந்தக் கட்சியை காலாவதியாக்கி ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களை தன் பக்கம் வைக்க இந்தியா செய்யும் சூழ்ச்சிகள் உங்களுக்கு விளங்கவில்லையே?
  14. செய்தது இந்தியா பயன்படுத்தப்பட்டவர்கள் தீவிர எண்ணம் கொண்ட இஸ்லாமியர்கள் காரணம் :1) மிதவாத மைத்திரி - ரணில் அரசு தமிழரசுக் கட்சியோடு நடத்திய பேச்சிக்களில் இணக்கம் ஏற்பட்டு தேசிய இனபிரச்னை ஒரு முடிவுக்கு வந்து விடுமோ என்ற பயம் அதனால் கடும் இனவாத கோத்தபாயா அரசை கொண்டு வரும் உபாயம். அப்பொழுது நாட்டுப் பிரச்னை தீராது என்ற விருப்பம், இதனால் தீவிர தமிழ் உணர்வையும் எழுப்பி விடலாம். பிரச்சனை மேலும் தொடர வைக்கப்படும் 2) தமிழர் முக்கியமாக கிறிஸ்தவர்கள் மத்தியில் இஸ்லாமிய விரோதத்தை வளர்த்தல் 3) இலங்கையில் ஹிந்துத்துவ கொள்கையை வளர்க்க ஏற்ற சூழலை ஏற்படுத்துதல் 3) இந்தியாவில் இஸ்லாமிய விரோத மனப்பான்மையை இன்னும் கூர்மைப் படுத்துதல் குண்டு வெடிப்பு நடந்து சில வாரங்களில் இன்னொரு குண்டு வெடிப்புக்கு இந்தியா திட்டமிட்டது என்று ஊகிக்கின்றேன்,இங்கிலாந்து அதை வெளியே இந்தியா என்று சொல்லாமல் இலங்கையில் இன்னொரு குண்டு வெடிக்கலாம் என்று சொன்னதும் அது நாடாத்தப்படவில்லை.
  15. எல்லாம் சரி இந்தியாவின் முதலீட்டில் இலங்கையில் ஒரு தமிழ் அரசியல் கட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாமே அது எந்தக் கட்சி? விக்கி கட்சி? அல்லது தவராசா கட்சியா?
  16. சுமத்திரனை எல்லாரும் திட்டுறீர்கள் சரி, அப்படி என்றால் வெளியேறிய எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து நிற்க வேண்டியது தானே? அதற்கு ஏன் வாய்ப்பில்லை?
  17. எல்லோரும் அந்த வகைக்குள் இல்லை, புலிகளை ஆதரித்த பலரும் பால பாடத்தைக் கற்றுக்கொண்டு சுமந்திரன் வழியை ஆதரிக்கின்றார்கள்.
  18. சரவணபவன் எம்.பியும் அவரது உதயன் பத்திரிகையும் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ‘சப்றா பினான்ஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய நிதி நிறுவனம் இந்த சரவணபவனுக்குச் சொந்தமானது. அந்த நிறுவனம் அதி கூடுதலான வட்டி தருகிறோம் என்று சொல்லி, யாழ்ப்பாண மக்களின் கோடிக்கணக்கான ரூபா பணத்தை தனது நிதி நிறுவனத்தில் வைப்புச் செய்யும்படி கவர்ச்சிகரமான பிரச்சாரத்தில் இறங்கியது. அதை நம்பிய யாழ் குடாநாட்டு மக்கள், தமது பிற்கால சீவியத்திற்காக வைத்திருந்த பணம், தமது பிள்ளைகளின் சீதனத்துக்காக வைத்திருந்த பணம் என எல்லாவற்றையும் சப்றா ஃபினான்ஸில் வைப்புச் செய்தனர். ஆனால் அந்த நிறுவனம் திடீரென ஒருநாள் வட பகுதி தமிழ் மக்கள் வைப்புச் செய்த கோடிக்கணக்கான பணத்தை வாரிச் சுருட்டிக்கொண்டு, காரியாலயத்தையும் இழுத்து மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டது. பணத்தை இழந்த மக்கள் தலையிலடித்துக்கொண்டு வீதி வீதியாகக் கதறியதுதான் மிச்சம். இந்த பெரும் மோசடியால் அதிர்ச்சியடைந்த சிலா மரணத்தையும் தழுவிக் கொண்டனர். அந்த நிறுவனத்தின் பிரதான நிர்வாகியான சரவணபவனும் மக்களின் கண்களில் படாமல் எங்கோ ஒளிந்து கொண்டார். அவரை ‘இன்டர் போல்’ என்ற சர்வதேச பொலிஸ் நிறுவனம் இந்த நிதி மோசடிக்காகத் தேடுவதாக மக்கள் பேசிக்கொண்டாலும் அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்த நிதியில் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட உதயன் பத்திரிகை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. அப்பத்திரிகை பொய்ப்பிரச்சாரங்கள் செய்து மக்களைச் சுரண்டி பணம் பண்ணியது மட்டுமின்றி, சப்றா பற்றி கதைத்தவர்களையும், பத்திரிகை பற்றி விமர்சனம் செய்தவர்களையும் அச்சுறுத்துவதற்கு புலிகள் இயக்கத்தைக் கேடயமாகவும் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் இன்றைவரை அந்த நிறுவனத்தில் பணம்; வைப்புச் செய்தவர்களுக்கு, அந்த நிறுவனத்தை நடாத்திய சரவணபவன் எம்.பி உட்பட எவராலும் எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. அரசாங்கமும் இதுபற்றி தொடர்ந்து அக்கறையற்றே இருந்து வருகிறது. சரவணபவனும் ஒன்றும் நடக்காதது போல பின்னர் வெளியே வந்து மக்கள் முன் தோன்றியதுமல்லாமல், தமிழ் கூட்டமைப்பின் டிக்கட் பெற்று தன்னிடமுள்ள பண பலத்தாலும், பத்திரிகை பலத்தாலும் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆகிக் கொண்டார். இன்று யாராவது சப்றா பண மோசடி விவகாரத்தைக் கிளப்பினால், தனது பாராளுமன்ற சிறப்புரிமையை அஸ்திரமாகப் பாவித்து தப்பித்துக் கொள்வாரோ என்னமோ? https://www.sooddram.com/கட்டுரைகள்/அரசியல்-சமூக-ஆய்வு/சரவணபவன்-எம்-பியும்-அவரத/
  19. பெரும்பான்மை மக்கள் ஒரு பக்கம் இருப்பதால் மட்டுமே அந்தப் பக்கம் சரி என்று ஆகி விடுமா என்ன? தலைவன் என்பவன் பிழையாக சிந்திக்கும் மக்களையும் சரியாக வழிநடத்தும் தகமை உடையவனாக இருக்க வேண்டும். யாழ்ப்பாண மக்களில் யாருக்கெல்லாம் சுய அறிவும் தூர நோக்கு சிந்தனையும் இருக்கின்றது என்று பார்த்தால் யாரெல்லாம் அங்கு உதயன் பேப்பர் படிக்காமல் இருக்கின்றர்களோ அவர்களாகவே இருப்பார்கள். சரவணபவன் உதயன் பேப்பர்க் கடை ஓணர்.
  20. அப்படி எப்படி பொதுவில் சொல்ல முடியும்? இப்படி வேண்டுமானால் சொல்லலாம், தமிழரசுக் கட்சி ஒவ்வொரு நற்றமிழனையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று. அந்த நற்றமிழர் வரிசையில் உமாகரன் ராசையா, சிவமோகன், போன்றவர்களுக்கு இடம் இல்லை
  21. நேர்மையாக கதைத்தால் நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மூளைச் சலவை செய்யப்பட்டு உள்ளோம். நீங்களோ நானோ ஒரு பேச்சுக்கு சிங்களப் பெற்றோருக்கு பிறந்து இருந்தால் நீங்களும் நானும் அப்படித்தான். தமிழர்களும் மூளைச் சலவை செய்யப்பட்டு உள்ளோம். மொழி வெறி, கலாச்சார வெறி என்று. இரண்டு பக்கமும் மிதவாதம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் மட்டும் இலங்கையில் இருந்தால் அது சொர்க்கபுரியாக இருக்கும்
  22. உமாகரன் ராசையா போன்றவர்கள் தமிழ் நாட்டின் அர்ஜுன் சம்பத் ரகம். சீமான் போன்றவர்களை விட பைத்தியம் முற்றியவர் இவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.