Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகிடி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பகிடி

  1. எனக்கும் இதே கொள்கை தான், மற்றும் சொந்த இடம் சாவகச்சேரி தான் என்பதால் நீங்கள் சொல்லும் தகவல் உண்மை என இத்தால் அறிவிக்கப்படுகின்றது 🥹
  2. சீன இந்திய ரஷ்ய பயணிகள் இலங்கையில் ஒரு நாளில் செலவு செய்யும் பணம் சராசரியாக $20-50 டாலர் க்குள் தான் உண்டு. இதை ரணிலே ஒருமுறை பிச்சைக்கார உல்லாசப் பிரயாணிகள் என்ற பொருள் படக் கூறி எம் நாட்டுக்கு மேற்கு ஐரோப்பிய பயணிகள் வேண்டும் என கூறி இருந்தார். போற போக்கைப் பார்த்தால் இலங்கை இன்னும் பிச்சைக்காரர்களிடம் கையெந்தும் நிலையில் இருந்து விடுபடவில்லை என்றே தோன்றுகிறது.
  3. நன்றி @goshan_che. இலங்கையில் உள்ள சில சட்டத்தரணிகளை அணுகி உள்ளேன். பலர் நீங்கள் மூன்றாவதாக சொன்ன விஷயத்தையே செய்யுமாறும் பலர் அவ்வாறே செய்வதாக்கவும் சொல்கிறார்கள். எனக்கு என்னவோ மீண்டும் இலங்கை பிராஜா உரிமையைப் பெற்று காணியை என் பெயரில் மாற்றுவதே ஓரளவுக்கு நடைமுறை சாத்தியம் உள்ளது போல் தோன்றுகிறது. ஒருவர் பின்வரும் விசயத்தைச் சொன்னார். அதாவது இலங்கை JvP கட்சியின் பிடியில் வரும் சந்தர்ப்பத்தில் இப்படி வெளிநாட்டினர் இலங்கை பிராஜா உரிமை இல்லாமல் இலங்கையில் சொத்து வைத்திருப்பின் அவை பொது உடமை ஆக்கப்படும் நிலை ஏற்படுமாம். பலர் இலங்கை பிராஜா உரிமையை இழந்த பின்னும் தமது தேசிய அடையாள அட்டையை கொண்டு தமது பெயரில் எழுதிய காணிகளுக்கு வீடுகளுக்கு அந்த நிலைமை ஏற்படும் என்றும் இலங்கை அரசு இதனை அனுமதிக்கும் பின் புலம் ஒரு காலத்தில் அவற்றை தன் வயப்படுத்தும் முனைப்பே என்றும் கூறினார். நன்றி @vasee நன்றி @யாயினி எனது மனைவி கனடாவில் பிறந்து வளந்தவர்.ஆகவே இலங்கை பிரஜா உரிமை அவரிடம் இல்லை.
  4. நன்றி 5 பரப்புக் காணி ( அம்மம்மாவின் தாயாரின் காணி ) 20 வருசத்துக்கு முன் வெறும் 30 லட்ஷத்துக்கு வந்தது, நான் வெளிநாட்டில் படித்துக்கொண்டு இருந்ததால் அம்மாவால் அதை வாங்க முடியவில்லை. பின்னர் போன வருடம் பரப்பு 27 லட்ஷம் படி கிட்டத்தட்ட மொத்தம் ஒண்டரை கோடி என்று விலைக்கு திடீர் என்று வந்தது. இங்கு எனக்கு படிப்பு, exam வேலை என்று பல நெருக்கடிகளுக்கு இடையில் இருக்கிற காசை எல்லாம் போட்டு அதை வாங்கினேன். வாங்கினதும் அம்மம்மா சந்தோசமாக என்னுடன் அந்தக் காணியில் தான் வாழ்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து மூத்த பேரன் அதை வாங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்த கிழமை தனது 94 ம் வயதில் இறந்தும் போனார். அவர் இறந்த அதே நாள் எனக்கு மகனும் பிறந்தான்.
  5. மிக்க நன்றி @Kapithanஅவர்களே. நான் முதலில் இலங்கைப் பிராஜா உரிமைக்கு விண்ணப்பித்து அதைப் பெற்று விட்டு அப்பா அம்மாவோடு இலங்கை சென்று வேலையை முடிப்பதே இலக்குவான விடயம் என்று நினைக்கிறன். தகவல்களை தந்ததற்கும் அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட பொன்னான நேரத்துக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி
  6. வணக்கம் உறவுகளே! சென்ற வருடம் எனது மூதாதயரின் காணி விலைக்கு வந்தபொழுது அதை விலைக்கு வாங்கினேன். வாங்கியபொழுது நான் இலங்கையில் இருக்கவில்லை. ஆகையால் காணியை எனது பெயரில் எழுத முடியவில்லை. ( நான் இனிமேலும் இலங்கை citizen இல்லை என்பதாலும் மற்றும் நான் அங்கே நேரடியாக இல்லை என்பதாலும் எனது பெயரில் வாங்க முடியாது என்று காணிப் பதிவாளர் சொல்லி விட்டார் ) ஆகவே காணியை எனது அப்பா அம்மா பெயரில் பதிவு செய்திருந்தேன். இப்போது அப்பா அம்மா இருவரையும் கனடா அழைத்து விட்டேன். கையோடு அவர்களும் காணியின் உறுதியை கொண்டு வந்து உள்ளார்கள். கேள்வி என்னவென்றால் கனடாவில் இருந்துகொண்டு இலங்கையில் அப்பா அம்மா பெயரில் வாங்கிய காணியை எப்படி எனது பெயருக்கு மாற்றுவது? யாராவது தெளிவான பதில் தரமுடியுமா? நன்றி
  7. இனி வரும் காலங்களில் பேசாமல் ஒதுக்குப்புறமாக உள்ள சிறிய ஊர்களில்ப் போய் இருப்பது தான் சிறந்தது என்று நினைக்கின்றேன். வீட்டு விலையும் குறைவு, அதே நேரம் லூசுகளின் பிரச்சினையும் குறைவு, வெள்ளைகளின் இனத்து வேசத்தை சகித்துக் கொள்ளலாம், ஆனால் அடங்காப்பிடாரிகளோடு வாழ முடியாது
  8. இலங்கை வரும் வெளிநாட்டு குடிமக்களுக்கு அரச வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை இப்பொழுதும் வழங்கப்படுகின்றதா? அப்படி இல்லை எனில் அதற்கும் மேற்கு நாடுகளில் ஏற்படும் செலவு அளவுக்கு அறவீடு செய்யலாமே? மருத்துவக் காப்புறுதி இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு நபருக்கு அது பெரிய பிரச்சனையாக இருக்காது அல்லவா? அண்மையில் மெக்ஸிக்கோ போய் இருந்த பொழுது எனக்கு சளி தடிமலுக்கு மருந்துக்கே 320 அமெரிக்கன் டாலர் வரைக்கும் அறவிட்டார்கள். இலங்கைக்கு வரும் உல்லாசப் பிரயாணிகள் அரச வைத்தியசாலைகளில் ஒரு சதம் கொடுக்காமல் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
  9. ஒரு வேளை இது இஸ்லாமிய தீவிரவாதிகள் போர்வையில் மேற்கு நாடுகளோ அல்லது ukraineனோ செய்து இருந்தால்( அப்படி இருக்க காரணங்கள்+ சாத்தியம் உண்டு ) அதற்க்கான ரஷ்யாவின் பதிலடி மேற்கு நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதிகள் போர்வையில் இங்குள்ள சன நெருக்கம் உள்ள இடங்களில் நடத்தப்படலாம்.
  10. இலங்கையிலிருந்து கியூபாவுக்கும் வடகொரியாவுக்கும் போகாமல், காபிடலிஸ்ட் நாடுகளுக்குப் போய் அங்கிருந்து இலங்கையில் சோஷலிஸ ஆட்சியைக் கொண்டுவர முயல்வதெல்லாம் என்ன மாதிரி மனநிலை!
  11. நடத்தியது இந்தியா. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ரணில் மைத்திரி அரசு தமிழ் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை ஓரளவுக்கு முன்னேறி புதிய அரசியல் அமைப்பு, ஒன்று பட்ட இலங்கைக்குள் ஓரளவுக்கு சமஷ்டி அமைப்புடன் தீர்வு என்று நகர்ந்த பொழுது அதை குழப்ப இந்தியா செய்த வேலை அது.
  12. தமிழர்களும் ஒரு காலத்தில் பௌதர்களே என்பதால் இந்தப் பிரச்சனையை சிண்டு முடியாமல் ஆளை ஆள் உசுப்பேத்தாமல் முடித்துக் கொள்வது சிறப்பு.
  13. என்ன கொடுமை சரவணன் இது?😭😭
  14. போன வருஷம் recreation center க்கு ஜிம் க்கு போயிருந்த பொழுது எனது உடைகள் கைப்பை பர்ஸ் உள்ளிட்டவற்றை ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துப் பூட்டிவிட்டுத்தான் ஜிம்முக்கு போனேன், இரவு 11 மணி அப்படி வந்து திறந்து பார்த்தபொழுது பர்சை காணவில்லை. உடனே வீட்டுக்கு ஓடி வந்து வங்கிக் கணக்கை திறந்து பார்த்தால் 200 டாலர்ஸ் வரை கிரெடிட் கார்டில் இருந்து போயிருந்தது, உடனே வங்கிக்கு அழைப்பை எடுத்து என்னுடைய வங்கி அட்டைகளை deactivate செய்துவிட்டு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தேன். இத்தனைக்கும் என்னுடைய அனைத்து அடையாள அட்டைகள், வாகன சாரதி பத்திரம், $300தாள் காசு, என எல்லாமே போய்விட்டன, அடுத்த நாள் வேலைக்கு போக முடியவில்லை. இழந்த பத்திரங்களைப் பெற பெற ஒரு பத்து நாள் ஆனது. ஒரு மாதம் கழித்து களவு செய்திருந்தவனை பிடித்திருந்தார்கள் போலீசார். களவு செய்தவன் ஒரு 15 வயது சோமாலியன். பெயர் முஹமட். சில மாதங்களுக்கு முன்னர் இளம் வயது குற்றவாளிகளை சீர்திருத்தம் அமைப்பொன்று மேற்படி நபர் தான் செய்த குற்றத்தை உணர்ந்து கொண்டதாகவும் அவரை என்னை வந்து சந்திக்கும்படியும் கேட்டுக் கொண்டார்கள். நான் கேட்டேன் வந்து சந்திப்பதற்கு எனக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தருவீர்கள் என்று? மறுபுறத்தில் என்னுடன் கதைத்துக் கொண்டிருந்த பெண்ணோ அந்த குற்றவாளி திருந்துவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் எந்த பணமும் தர முடியாது என்றும் சொன்னார். இந்த விஷயத்தை வீட்டில் மனுஷியிடம் சொன்ன பொழுது என்னை கடிந்து கொண்டு என்னைப் போய் அவனை சந்திக்கும்படி சொல்லப்பட்டது. நான் போகவில்லை இரண்டு காரணங்கள் ஒன்று :சொந்த ஊர் சோமாலியா இரண்டாவது காரணம் :பெயரோ முகமட் இப்படிப்பட்டவர்கள் திருந்துவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்ன?
  15. பிரச்சனை என்னவென்றால் வாகனக் காப்பீடு இப்பிடி கார் களவு போகும் இடங்களில் வாழ்பவர்களுக்கு வருடா வருடம் கூடிக்கொண்டு போகின்றது. மாசம் $10000 சம்பாதித்தாலும் வாழ்வு என்னவோ வறுமைக் கோட்டுக்கு சற்று மேல்.. அவ்வளவு தான் கனடா வாழ்வு!!😭😭😭
  16. இதை செய்தவர்கள் எல்லாம் பெரிய வீட்டுப் பிள்ளைகளாம், சிலர் பொறியியலாலர்களாம். மூதேசிகள் நல்ல ஏதோ நல்ல வேளையாக அந்தப் பிள்ளையை கொலை செய்து விடவில்லை.
  17. வேறு பலரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது இதில் எனக்குத் தெரிந்த பதில் இது தான். Comfort zone னை விட்டு வெளியே வராத பிள்ளைகள், வாழ்வியல் அனுபவங்கள் குறைந்த பிள்ளைகள் அல்லது அப்படிப்பட்ட பெற்றோற்கு பிள்ளைகளாக வாய்க்கப் பெற்றவர்கள், பாடசாலைகளில் extra curricular activities இல் பங்கு பற்றாத, leadership ability குறைந்த பிள்ளைகள், இலக்கிய நாட்டம், புத்தக வாசிப்பு குறைந்த பிள்ளைகள் critical thinking இல் சாதிக்கவே மாட்டார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு படித்தாலும் கடினமான enterrence exam இல் 67% தை தாண்ட முடியாது. இலங்கையில் இதைக் கவனித்து இருக்கின்றேன். வெறுமனே யாழ்ப்பாணத்தக்குள் மட்டுமே முதல் 20 வருடம் இருந்த ஒரு மாணவனையும்,சில வருடம் யாழ்ப்பாணம் பின்னர் வவுனியா கண்டி அனுராதாபுரம் என்று மாறி மாறி படித்த மாணவனையும் ஒப்பிட்டுப் பாருங்கள். முதல் மாணவர் சில வேளைகளில் உயர்தரத்தில் நன்கு சித்தி பெற்று இருக்கலாம், ஆனால் வாழ்வில் வெற்றி பெற்றவர் பின் சொன்ன மாணவராகவே இருப்பார்.
  18. ஜெயலிதா இறந்தபொழுது எனக்கும் மனம் சற்றேனும் கலங்கவில்லை மாறாக ஆறுதல் கொண்டது.
  19. இலங்கையின் சிறந்த கல்வி அமைச்சராக திரு ரிச்சட் பதிரணவுக்குப் பின் சுசில் பிரேமஜெயந்தை காண்கின்றேன். சென்னை IIT ஐ கண்டியில் ஸ்தாபிப்பது, இப்போது கல்வி அமைச்சு கொண்டு வரும் மாற்றங்களை அவதானிக்கையில் அது தெரிகிறது. எனினும் Out of box யோசிக்கும் தன்மை, critical thinking எமது கல்வி அமைப்பில் இல்லை என்பது துரதிஷ்டமானது. Out of box யோசிக்கும் தகமையை எங்கள் கல்வி ஊக்குவிக்க வில்லை. சீனா சிங்கப்பூர் இந்தியா போன்ற நாடுகளிலும் அதுவே நிலைமை. ஆனால் இங்கே கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள கல்வியை நல்ல கல்வி இல்லை என்று சொல்லும் பல இந்தியர்களையும் எங்கள் தமிழர்களையும் காண்கின்றேன். சீனா, சிங்கப்பூர் இந்திய மாணவர்களின் கணித பாட, விஞ்ஞான பாட அறிவு மட்டமானது அதே வயதுடைய கனேடிய மாணவனை விட அதிகம் என்பது மேற்படி வாதத்தை வைக்கும் நம்மவர் நோக்கு ஆனால் நோபல் பரிசில் வெற்றி பெற்றோரில் அமெரிக்கரோ அல்லது சீனரோ அதிகம் என்று பார்த்தால் அதில் அமெரிக்கரே அதிகம் நீங்கள் உங்கள் பிள்ளையை பத்தில் ஒரு மருத்துவராகவோ, பத்தில் ஒரு பொறியியல் ஆளராகவோ உருவாக்க விரும்பினால் சில வேளைகளில் நாம் கற்ற கல்வி முறை உதவலாம். சில வேளை என்று சொல்லக் காரணம் இன்று இது போன்ற வேலைகளுக்கு critical Thinking தேவைப்படுகின்றது. அதை critical thinking ஐ எப்படி வளர்ப்பது என்று புத்தகம் படித்து தேற முடியாது. ஆனால் உங்கள் பிள்ளை தான் தேர்ந்து எடுத்த துறையில் அதி உச்ச நிலைக்கு வர வேண்டும் எனில் தற்போதைய வெறுமனே மனனம் செய்யும் கல்வி முறை உதவாது. தவிர இனி வரும் காலங்களில் University education என்பது வேலைவாய்ப்புக்கு உதாரவாதமாக இல்லை. விரும்பிய பாடத்தில் university degree பெற்றுக்கொள்ளலாம் ஆனால் வேலை எடுக்க Skill இருக்க வேண்டும். Anthropology யில் degree வைத்துக்கொண்டு electrician ஆக வேலை செய்யும் ஒருவரை எனக்குத் தெரியும் இங்கே 25-35 வயதுக்குள் புலம் பெயர்ந்த ஆப்பிரிக்கா, சீனா,அரேபிய, இந்தியா இலங்கை நாடுகளில் பட்டம் பெற்று வந்த பலரில் நான் கண்டது இது தான்
  20. சில வருடங்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் நிதானமாக A9 வீதி வழியாகப் போய்க்கொண்டு இருந்த என்னுடைய அப்பாவின் முன்னால் யாரோ ஒருவரின் வளவுக்குள் இருந்து திடீர் என்று ஓடி வந்த ஒரு நாய் வாகனத்தின் சக்கரத்துக்குள் சிக்கி அப்பாவை கீழே விழுத்தி விட்டு பறந்தடித்து இன்னொரு வளவு வேலிக்குள் புகுந்து ஓடி விட்டது, அப்பாவுக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டு வைத்திய சாலையில் 2 நாள் இருந்தார். அப்பா அம்மாவை இலங்கையில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு எந்நேரம் என்ன நிகழுமோ என்று பதை பதைக்கும் இங்கே வாழும் பிள்ளைகள் நிலையை யோசிச்சுப் பாருங்கள். கேள்வி கேட்டால் மனிதாபிமானம், விலங்கு நலன், பௌதம், ஹிந்து என்று ஆயிரத்தெட்டு நோட்டு நொசுக்குகள்
  21. யாழ்ப்பாணதில் இருந்த பொழுது கூழ் குடிக்க ஒரு நண்பர் என்னை தனது நண்பர் வீட்டுக்கு கூட்டிச் சென்றார். அங்கு எமக்கு சுவையான கூழ் சமைத்து தந்தவர் இந்த ஐயா தான். நான் பார்த்த பொழுது ஐயா 6 பேக் வைத்து இருந்தார், இவரே கோடாலியால் விறகு கொத்தி அடுப்பு மூட்டினார்.
  22. உலகத் தரப்படுத்தல் வரிசையில் கொழும்பு மற்றும் பேரதெனியா பல்கலைக்கழகங்கள் 1100, மற்றும் 1600 க்குள் உள்ளது உண்மையிலேயே வருத்தம் தான். ஆனால் நாங்கள் பெருமை அடிக்கும் யாழ்ப்பாண university இருக்கும் நிலையோ அதள பாதாளத்தில். உலக தர வரிசையில் 7695 ஆவது இடத்தில் உள்ளது Jaffna university. வேப்பிலை அடித்தால் மலேரியா போய்விடும், கந்த புராணம் படித்தால் காய்ச்சல் போய் விடும் என்று கதை விடும் பேராசிரியர்களை உருவாக்கும் இடம் அந்த இடத்தில் இருப்பது தானே சாலவும் சிறந்தது!! நிற்க எத்தியொப்பியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகதியிலும் விட நன்கே முன்னுக்கு உள்ளது.
  23. நான் அப்பிடி சொல்லேல்ல, கிருஷ்ணர் பகவத் கீதையில் சொன்னதை சொன்னேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.