Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகிடி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பகிடி

  1. அனுராவின் பிளான் இது தான். இப்போதைக்கு தமிழ் இனப்பிரச்னை பற்றி கதைக்காமல் விடுவது, அல்லது இதே போக்கில் இன்னும் 4 வருடங்களுக்கு இழுத்தடிப்பது. அதே நேரத்தில் ஏனைய மக்கள் பிரச்சனைகளைக் கையாளும் விஷயத்தில் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது.இப்படியே நாளைக் கடத்தி தமிழ் மக்களின் இனப் பிரச்னை குறித்த கொதிக்கும் மனப்பாங்கினை ஓரளவுக்கு குளிர் நிலைக்கு கொண்டு வருவது. பின்னர் சிங்கள மக்களும் விரும்பும் தீர்வை வழங்குவது. 83 ம் ஆண்டில் பிரச்சனையை பார்த்த தமிழ் மக்களின் பெரும் எண்ணிக்கை 2014 இல் 70 வயதைக் கடந்து இருக்கும். புதிய தலைமுறை தமிழர்களிடம் பழைய தலைமுறைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு இல்லை. கிட்டத்தட்ட கொழும்பு தமிழ் லிபரலுக்கும் வடக்கு தமிழர்களுக்கும் உள்ள வித்தியாசம் போல..
  2. உலக ஒழுங்கு மாறுகிறது, ரஷ்யா + இந்தியா + சீனா +இரான் + வட கொரியா + இஸ்லாமிய நாடுகள் ஒருபக்கம் கூடுகின்றன, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள பிரச்னை ஓரளவுக்கு சமரசத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும் இப்பொழுதும் அமெரிக்கா தலைமையில் ஆங்கிலோ அமெரிக்க வல்லரசு தான் மேலோங்கி உள்ளது, ஆயினும் அவர்களின் பலம் கொஞ்சம் குறைக்கப் பட்டுள்ளது. ஆகவே இந்த ukraine vs Russia சண்டையில் Ukraine ஓரளவுக்கு விட்டுக்கொடுத்தாக வேண்டும். இப்போது உள்ள நிலையில் சப்ராரோஸியா + luhansk + donestsk + கிரீமியா + kerson ஆகிய பிராந்தியங்கள் ரஷ்யா கைக்குள் முழுவதும் போவதை தடுக்க முடியாது. அதற்கு பதிலீடாக Ukraine க்கு மீண்டும் nuclear state அந்தஸ்தை கொடுக்க அமெரிக்கா ஆராய்வதாக தகவல்.அத்துடன் poland, ருமேனியா, பிரான்ஸ், uk, ஜெர்மனி ஆகிய நாடுகள் ukrainin ஏனைய பிறதேசங்களின் பாதுகாப்பு பொறுப்பை பிரித்து எடுப்பதாகவும் ஒரு தகவல். ரஷ்யா கிட்டத்தட்ட 5 லட்ஷம் வீரர்களை இழந்து இருக்கிறது, ukraine க்கும் அதே நிலை தான். இந்தப் போரை ரஷ்யா இன்னும் கொஞ்சக் காலம் நீடிக்க முடியும். Ukraine ஆல் அது இனிமேல் முடியாது. இந்த அளவில் அவர்கள் ரஷ்யாவுக்கு இழப்பை ஏற்படுத்தியதே பெரும் வெற்றி தான். செக்கோஸ்லாவிக்கியாவை கொடுங்கள் இதோடு விட்டு விடுகிறேன் என்று சொன்ன ஹிட்லர் போல் தான் புட்டினும். ரஷ்யா ஒரு பேரரசு, அவர்கள் மொல்டோவா, ஜோர்ஜியா, போன்ற நாடுகளை தம்மோடு இணைக்கும் வரைக்கும் ஓய மாட்டார்கள். இந்த யுத்தம் முடிந்து ஒரு 15 ஆண்டுகளில் மீண்டும் ஒரு போரை ஆரம்பிப்பார்கள். அது தான் அமெரிக்காவின் பயம். (அதனால்த் தான் இப்போது ரஷ்யாவின் கூட்டணி நாடான இந்தியாவுக்கு எதிரான நகர்வுகள் இங்கே நடக்கிறது, அதானி மீதான குற்றச்சாட்டு, கனடா இந்திய பிரச்னை. )
  3. இந்த நேரத்தில் இலங்கைத் தமிழர் சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு ஓத்தாசையாக இருக்க வேண்டியது அவசியம்.எமக்கும் சிங்களவருக்கும் நடந்த சண்டையில் தம்மை வளப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள் தான். இலங்கை நிர்வாக சேவை பரீட்சை மற்றும் இலங்கை law council நாடாத்தும் பரீட்சைகள், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு நாடாதப்படும் viva exam போன்றவற்றில் முஸ்லீம் இனத்தவரின் தமிழ் மக்கள் மீதான வெறுப்பு அனைவரும் அறிந்ததே. முறைப்படி பன்றி இறைச்சி பரிமாறப்படும் பாராளுமன்றதுக்கு ஒழுங்கான முஸ்லீம் போகவே கூடாது. இலங்கையில் தமிழ் தெரிந்த உத்தியோகாஸ்தர் பதவிகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்படாமல் கொச்சை தமிழ் பேசும் முஸ்லீகளுக்கு அவர்களின் அரசியல் வாதிகளால் வழங்கப்பட்டபொழுது நாம் சும்மா தானே இருந்தோம், அதே போல் இப்போது தமிழ் பேசும் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று முஸ்லீம்கள் சும்மா இருக்க வேண்டியது தான்.
  4. இல்லை உண்மை நான் ரஷ்யாவால் பிடிக்கப்பட்ட கிரீமியா, Luhansk Donetsk மற்றும் இன்றும் ukraine வசம் உள்ள கார்கிவ் இல் உள்ள பழைய நண்பர்களுடன் தொடர்பில் உள்ளேன். Luhansk Donetsk இல் உள்ளவர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக சொல்கிறார்கள். அங்குள்ளவர்களுக்கு ரஷியன் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு பென்ஷன் அதிகரிக்கப்பட்டுள்ளது. கார்கிவ் இல் உள்ளவர்கள்( all ukraine )குடும்பமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப் படவில்லை. பெண்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள். ஆண்கள் வெளியே செல்ல முடியவில்லை.
  5. தொந்தியையும் வண்டியையும் குறைக்க பயிற்சி அளிக்கப்படுமா? 200-300 சொற்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆங்கில மேதாவிகள் என்று காட்டும் பழக்கம் நிறுத்தப்பட உதவி அளிக்கப்படுமா? காலையில் புட்டு, சிற்றுண்டிக்கு தோதல் & Milk tea என்று 40 வயதில் நீரிழுவு நோய் தாக்கும் நிலையை தடுக்க முயற்சி மேற்கொள்ளப் படுமா சாறி உடுத்தும் பெண்டிரின் பொக்குள் காட்டும் பழக்கம் நிறுத்தப்படுமா? வேலை நேரத்தில் you tube பார்க்கும் நிலை நிறுத்தப்படுமா?
  6. இப்பொழுதும் வெளிநாடு என்று அலையும் ஈழத்தமிழர்களை என்ன சொல்லி திட்டுவது? யாழ்ப்பாணத்தில் படித்து முன்னேற முடியாதா என்ன? பிரான்ஸ் இல் இருக்கும் எங்கள் மக்களின் நிலையை விட யாழ்ப்பாண வாழ்வு மிகவும் சிறந்தது.
  7. நான் சாதாரண தரம் படிக்கும்போது சித்தார்த்தன் எம்பி யுடன் போயிருந்தேன். அருமையான சாப்பாடு. யாழ்ப்பாணப் பெண்கள் சமைக்கும் சாப்பாடு எல்லாம் கிட்டவே வாராது.
  8. நாம் சிங்களவர்கள் பார்வையில் இருந்தும் காரியங்களை நோக்க வேண்டும் பெருமாள். அவர்களுக்கு தமது இன மொழி அடையாளங்களை காப்பாற்ற இலங்கை என்ற இந்த சிறு தீவை விட்டால் வேறு போக்கிடம் இல்லை இந்தியாவோ இலங்கை தமிழரை தனது அரசியல் கருவியாக இலங்கையில் பாவிக்கின்றது. இலங்கையை அமைதியான தீவாக வைத்திருக்க இந்தியா ஒருபோதும் விடாது இந்த நிலையில் ஒரு சிங்களாவராக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? தமிழர்களுக்கு இந்தா பிடி என்று வெற்றிலை பாக்கு தட்டுடன் வட கிழக்கை இணைத்து தனி மாநிலமாக்கி போலீஸ் அதிகாரத்துடன் கொடுத்து விடுவீர்களா? அப்படி கொடுத்தால் இந்தியா மீண்டும் மீண்டும் இங்கு தமிழ் உணர்வை பட்டை தீட்டி (சீமான் வைகோ போன்றவர்கள் மூலம் ) ஒரு நெருப்பாக இலங்கை தமிழரை சிங்களவருக்கு எதிராக அடுத்த 50 வருடம் கழித்தும் பயன் படுத்தாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? நாம் விட்டுக்கொடுத்து சிங்களாவரோடு இணைத்து செல்வதே அமைதியான இலங்கையை உருவாக்கும். இந்தியாவின் கண்ணி வெடிகளாக நாம் ஏன் இருக்க வேண்டும்?
  9. திருப்பி திருப்பி இந்தியாவின் காலை பிடித்துத் தான் இலங்கைத் தமிழர்கள் வாழ வேண்டுமா என்ன? இலங்கைத் தமிழர் தனி தேசிய இனம், இந்திய தமிழர்களும் தமிழர்களே எனினும் எங்கள் தனித்துவ அடையாளங்களைப் பாதுகாக்க இந்தியனுடன் செல்வதை விட சிங்களாவரோடு சேர்ந்து விட்டுக்கொடுத்து வாழ்வது தான் சரியானது.
  10. 👍🙏❤️ அதனால்த் தான் சண்டை சச்சரவுகளுக்குப் போகாமல் எங்கள் உரிமையில் பிடிவாதம் காட்டாமல் இயலுமானவரை சிங்கள மக்களுடன் ஒத்துப்போவோம் என்கின்றேன், அறமும் தர்மமும் எம்மை எம் அடுத்த சந்ததியை அரணாய்க் காக்கும்
  11. ஒரு சிங்களவர் ( கடும்போக்கு வாதி ) என்னிடம் சில வருடங்களுக்கு முன் இப்படி சொன்னார் " நீங்கள் தமிழர்கள் கேட்டீர்கள், கிடைக்காத பொழுது சண்டைக்கு வந்தீர்கள், அதில் தோல்வி அடைந்தீர்கள் ஆனால் அதில் நேர்மையும் உண்மையும் இருந்தது. இந்த முஸ்லீம்கள் சண்டைக்கு நேர வாறார்களே இல்லேயே "...
  12. யாழ்ப்பாணத்தில் சீன தூதரகம் திறக்கப்பட்டு யாழ் மாணவர்களுக்கு சீன பல்கலைக்கழகங்களில் படிக்க புலமைப் பரிசில்கள் வழங்கப்படல் வேண்டும் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும் பண்டைய தமிழர்களுக்கும் சீனார்களுக்கும் இடையில் இருந்த வியாபார கலாச்சார உறவுகள் பற்றி ஆராய நிதியம் ஏற்படுத்தப்பட வேண்டும் கன்பூசியஸ் தத்துவங்கள் குறித்து தமிழில் சீன அரசின் உதவியுடன் தமிழில் நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டு வெளியிடப்பட வேண்டும் சீன உதவியுடன் யாழ்ப்பாணம் வவுனியா வன்னி முல்லைத்தீவு போன்ற இடங்களில் திறன் சார் தொழில்நுட்ப கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்
  13. கேட்க நல்லா இருக்கும் ஆனால் மதம் சாதி பிரதேச பற்றை விட்டுட்டு எப்படி தனியே இன மொழி பற்றினை மட்டும் வலுப்படுத்த முடியம்? ஆயிரம் கரும்புகளை ஒன்றாக சேர்த்து ஒரே கட்டாகக் கட்டினால் ஒரே வெட்டில் எல்லாம் அவிழ்த்து விழுந்து விடும். பத்துப்பத்துக் கட்டுக்களாக கட்டி எல்லாவற்றையும் சேர்த்து பிறகு ஒரு முழுக் கட்டாகக் கட்டினால்த் தான் பாதுக்காப்பாக இருக்கும்.
  14. நீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும் சுமந்திரன் செய்தது சரியான காரியம் தான் தீவிர தமிழ் தேசியவாத்தத்தை முன்வைக்கும் நபர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவு பெற்ற அரசுடன் இணைந்து ஒரு தீர்வுக்கு வருவதற்கு இடஞ்சலாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஆட்கள் ஜனநாயக ரீதியாக அகற்றப்பட்டது தமிழ் மக்களுக்கு நீண்ட கால் நன்மையை கொடுக்கும். இதற்காக சுமந்திரன் தன்னையே பலி கொடுத்துள்ளார்.ஒரு வகையில் தியாகி தான் சுமந்திரன் மீது பலரும் வைக்கும் குற்றச்சாட்டு அவர் சிங்களவர்களுக்கு துணை போகின்றார் என்பது தானே தவிர அவர் ஊழல் பேர்வழி என்றல்ல. சிங்களாவரோடு சேர்ந்து நாம் விட்டுக்கொடுத்து ஒரு தீர்வுக்கு வருவதே அடுத்த 50 ஆண்டுகளுக்கு நிலைந்திருக்கும் பயனை தமிழர்களுக்கு தரும்.
  15. தொடர்ச்சியாக சவாகச்சேரி மக்களை ஏமாற்றியதன் விளைவு, அருந்தவபாலனை விரும்பினார்கள், சசிகலாவை கொஞ்சம் விரும்பினார்கள், சரிவாராத பொழுது வித்தியாசமாக அர்ச்சனாவுக்கு போட்டு இருக்கிறார்கள்.
  16. தாமாக படித்து முன்னேறி ஒரு நல்ல நிலையை கட்சிக்குள் கூட்டிக்கொண்டு வரப்பட்டவர் சுமந்திரன். புலிகளின் தியாகத்தை விற்று அதில் வளர்த்தவர்கள் ஸ்ரீதரன் போன்றவர்கள். சுய அறிவு அற்றவர்கள். வேற வழியே இல்லை சுமந்திரன் காலில் போய் விழுவதைத் தவிர.
  17. புலிகள் பணத்தை கொள்ளை அடித்த புலம் பெயர் கோஷ்டிகளின் நிலை பரிதாமமானது சுமந்திரன் தோல்வியை கொண்டாடுவம் என்று பார்த்தால் சாணக்கியனின் வெற்றி உறுதுகின்றது, ஓட்டுக் குழுக்களும், தமிழ் இன வியாபாரிகளும் கைப்பற்ற நினைத்து ஏலாமல் விட்டோடிய பின்னும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தான் இப்பொழுதும் அதிகப் படியான வாக்குகளை மற்றும் கதிரைகளை தமிழர் தரப்பில் பெற்று இருக்கிறது, சிங்கள தமிழ் இனவாதத்தை முதலிடாக வைத்து போகும் உயிர்களை எரித்து அதில் குளிர் காய்வோம் என்று நினைத்தால் தமிழ் மக்கள் சிங்கள கட்சிக்கே அதிக பிரதிநிதிகளைக் கொடுத்து இருக்கிறார்கள். பாவம் இவர்கள்
  18. சுமந்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். தமிழ் கட்சிகள் அரசியல் அமைப்பு தொடர்பான சட்ட ஆலோசனைக்கு ஆள் தேடி அலைந்து சுமந்திரன் காலில் வந்து விழுந்தால் மட்டுமே இவர் மீண்டும் இந்தப் பக்கம் ஆலோசனை தர வர வேண்டும். இல்லை எங்களுக்கு சட்டத்தரணி சுகாசும் அர்சுனா கட்சி கவுசல்யாவும் இருக்கினம் என்றால் அது தான் தமிழர் விதி என்று விட்டு விட வேண்டும் நீலனை துரோகி ஆக்கி கொன்றது போல சுமத்திரனை இந்தக் கூட்டம் ஒன்றும் செய்யாமல் விட்டாலே பெரிது
  19. போனமுறை திலீபன் 3000 + வாக்குகளுடன் தெரிவானாரே.
  20. சுமந்திரன் மேல் கோபத்தில் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது யார்?
  21. ஸ்ரீதரனும் சுகாசும் வென்றிருக்கிறார்கள் என்கிறார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.