Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகிடி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பகிடி

  1. தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனை என்றால் என்ன? பிரிவினை பேசி இலங்கைக்குள் தமது ஆசைகளை நிறைவேற்ற முயலும் வேறு நாடுகளுக்கு பகடைக் காய்களாக இருந்து தமிழ் வெறியேற்றி சிந்திக்க மறுத்து வாழ்ந்து சாவதா?
  2. ஒரு நல்ல விஷயம் நடந்திருகின்றது தேசியம் பேசி தம்மை பகடைக்காய்களாக பயன்படுத்தும் புலிகளின் காசை கொள்ளை அடித்த புலம் பெயர் கூட்டத்துக்கும் இந்தியாவுக்கும், இலங்கைத் தமிழரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சீமான் வகையறாக்களுக்கும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் சங்கூதி உள்ளனர்.
  3. உண்மை! இங்கே அமெரிக்காவிலும் அது தான் நடந்தது. டிரம்ப்பை பிடித்தவர்கள் கூட வெளியே அதை சொன்னால் எதுக்கு வம்பு என்று வாய் மூடி இருந்துவிட்டு வாக்களிக்கும் பொழுது காட்டி விட்டார்கள். மீசை முளைத்த பெண் -ஈயக் குழுக்கள் என்ன செய்வதேன்றே தெரியாமல் இப்போது பம்முகின்றர்கள்.
  4. ஆக மக்கள் மனதறிந்து செய்யப்பட்டு இருக்கின்றார் சுமோ
  5. மற்றவர்கள் எல்லாம் இப்பொழுதும் தனி நாடா கேட்க்கிறார்கள்?
  6. தாம் போடும் ஆட்டதுக்கு ஆடாத, மனநிலை பிறலாமல் சுயமாக சிந்திக்கும் சுமத்திரனை வெறுத்து ஒதுக்க தமிழ் இன வெறியர்கள் போட்ட திட்டத்தால் கிடைத்த பரிசு இது என்று தலைப்பு வந்திருக்க வேண்டும்
  7. சிறந்த கட்டுரை. சில நாட்களுக்கு முன் ஆங்கிலத்தில் வாசிக்க கிடைத்தது. தமிழிலில் வந்திருப்பது சிறப்பு. ஏன் எங்கள் மக்கள் அரளைபெயர்கிறார்கள் என்பதற்கு ஒரு கருத்துகொள் இந்தக் கட்டுரையில் உள்ளது. முல்லைத்தீவு, வன்னி மற்றும் தீவுப் பகுதி மக்களின் கவனத்திற்கு..
  8. அப்படி முடியாத பொழுது மத்தியில் ஆட்சியில் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்த பழியை இவ்வளவு காலம் சுமக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது
  9. தமிழ் நாட்டு மக்கள் உங்களை எங்களைப் போல மலம் கழித்த பின் toilet paper பாவிப்பதில்லை. தவிர கை தான். எல்லோரும் ஒழுங்காக கை கழுவுவார்களா என்றும் தெரியாது. ஆகவே தான் கை எடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்லும் பாரம்பரியம் தமிழர்களுக்கு வந்தது. கை கொடுக்கும் பழக்கம் வருகின்றது என்றால் அதோடு toilet paper பாவிக்கும் பழக்கமும் நன்றாக கைகள் கழுவும் பழக்கமும் வர வேண்டும்.
  10. 1) திமுக வரும் தேர்தலில் தோல்வி அடைந்தால் அதன் நிலை அதோகதி தான். 13 வருடங்கள் ஆட்சி போன பின்பும் மீண்டும் வர கட்சியில் இங்கு இன்னொரு கலைஞர் இல்லை. 2) வரும் தேர்தலில் வெற்றி பெற்றால்த் தான் உதயநிதி விசுவாசிகளை அவர்கள் குடும்பங்களை தொடந்து திமுக தக்கவைக்க முடியும். உதய நிதி தான் ஒரு நல்ல தலைவர் என்று காண்பிக்க வரும் தேர்தல் வெற்றி அவசியம் 3) சித்தாந்தம் வாழ வேண்டும் என்பதற்காக விஜையை தி மு க வளரவிடுமா என்று கேட்க்கிறீர்கள். சிலர் அதற்கு ஓம் என்று சொல்லலாம் ஆனால் இன்னொரு பக்கம் இப்படியும் நோக்கலாம். சிந்தாந்தம் வாழ வேண்டும் என்று நினைப்பதை விட அந்த சிந்தாந்தம் இருக்கும் வரைக்கும் தான் தி மு க என்ற கட்சியே இருக்க முடியும். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் தி முக தனித்து போட்டி இட்டபொழுது அதற்கு 23% வாக்குகள் கிடைத்தது. ஆகவே அந்தக் கட்சிக்கு என்று தமிழ் நாட்டில் 20%+ வாக்குகள் தொடந்து இருக்கிறது. அதை தக்க வைத்தாலே ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆடசிக்கு வர முடியும். அந்த 20% வாக்குகளும் இவர்கள் நம்ப வைத்துள்ள தீவிர திராவிட அரசியல் கருத்தை ஆதரிக்கும் மக்கள் கூட்டம். இந்த வாக்குகள் தொடர்ந்து உதயநிதி பக்கம் செல்வதை உறுதிப் படுத்த இன்னும் ஒரு 5 ஆண்டு ஆட்சி தி மு க வுக்கு தேவை.
  11. எனக்குத் தெரிந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பின்னணியில் திராவிடர் கழகம் உள்ளது, அதற்கு தி மு க வின் திரைமறைவு ஆசீர்வாதமும் உள்ளது. திராவிடர் கழகம் தமிழ் நாடு அடுத்த 25- 50 ஆண்டுகளுக்கு அரசியல் ரீதியாக எப்படிப் போக வேண்டும் என்று சிந்திக்கும் அமைப்பு. நாங்கள் நினைப்பது போல் பன்றிக்கு பூணூல் மட்டும் போடும் கூட்டம் அல்ல. அவர்களின் இன்றைய கவலை தமிழ் நாட்டில் உருவெடுத்து வரும் இந்துத்துவ சிந்தனைகளை ( பிஜேபி ) ஒடுக்க வேண்டும். மற்றும் தமிழ் தேசியம் என்னும் பெயரில் திராவிடத்தை மறங்கடிக்க நினைக்கும் சிந்தனையை வளர விடாமல் இந்த அளவில் நிறுத்த வேண்டும் இதற்கு தி மு க vs அதிமுக என்று ஒரு அரசியலைக் கட்டமைப்பது இனியும் பலன் தராது. அதிமுக பலம் குன்றி அதன் வாக்குகள் மெல்ல மெல்ல சாதிய வாக்குகளாகவும் இந்துத்துவ ஆதரவு வாக்குகளாகவும் மாறி வருவது கண்கூடு. இது திராவிடர் கழகத்தை உறுத்தி இருக்கும் இதற்காக உள்ளே கொண்டு வரப்பட்டவர் தான் விஜய். விஜய் குடும்பம் தி மு க ஆதரவு குடும்பம். கிறிஸ்தவர்கள். லயோலா கல்லூரி இவர்களின் ஆட்களால்த் தான் நடத்தப்படுகின்றது என்றும் கேள்வி. தமிழ் நாட்டு அரசியலை கன காலமாக கவனிப்பவர்களுக்கு லயோலா கல்லூரி எந்தக் கட்சியின் பின்புலம் என்று தெரியும். திட்டம் இது தான் விஜய்க்கு தி மு க கடும் நெருக்கடி கொடுப்பது போல் பல காரியங்கள் நடக்கும், அது பேசு பொருளாக வைக்கப்படும், இது வரைக்கும் சீமானை பற்றி வாயே திறக்காத ஸ்டாலின் போன்றவர்கள் வேண்டும் என்றே விஜய்யை எதிர்த்து அவரை பெரிய ஆள் ஆக்குவார்கள், ஆனால் தி மு க கூட்டணி உடையாமல் அப்படியே இருக்கும், இந்தா அந்தா என்று வதந்திகள் உலாவி விஜய் அரசியலில் சொல்லிக்கொள்ளும் படி வளர வைக்கப்படுவார். ஆக வரும் தேர்தலில் 5 முனைப் போட்டி உறுதி செய்யப்படும். இதில் பிஜேபி, நாம் தமிழர், அதிமுக மரண அடி வாங்கும். மீண்டும் திமுக ஆட்சி மலரும், விஜய் 15%- 20% வரைக்கும் வாக்குகள் வாங்க அனுமதிக்கப் படுவார். உதயநிதி கொஞ்ச நாளில் முதல்வர் ஆவார். 2020 தேர்தலில் விஜய் ஆகப் பெரும் கட்சியாக காங்கிரஸ்,, Vck, கம்யூனிஸ்ட் புடை சூழ ஆட்சிக்கு வருவார். அதுவரை விஜய் அரசியலில் தாக்குப் பிடிக்க அவருக்கு பண உதவிகள் திரைமறைவில் செய்யப்படும் திமுக vs திவெக என்று களம் மாற்றி அமைக்கப்படும். யாவும் கற்பனை 😄😄
  12. உடன்படுகின்றேன். டிரம்ப் வெற்றி அடைய நான் அவதானித்த சில விடயங்கள் இவை இந்த முறை டிரம்ப்க்கு வாக்களித்த பலரில் லத்தீன் அமெரிக்கர்களும் கருப்பின மக்களும் அடங்கும். அதுவும் இதுவரைக்கும் ஜனநாயக கட்சியின் வாக்காளறாக இருந்தவர்கள் கூட டிரம்ப் க்கு வாக்களித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் ஆண்கள் என்றாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெண்களும் உள்ளார்கள் Black life matter என்ற ஒரு சுலோகத்தோடு போன முறை நடைபெற்ற புரட்சி(?) உண்மையில் கருப்பின மக்களின் பிரச்னைகளை வெளிக்கொணர்ததை விட பாதிக்கப்படும் கறுப்பின மக்களின் பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவே பயன் பட்டது. பல கறுப்பின கனவான்கள் அதை அப்பொழுதே உணரத் தலைப்பட்டனர். இங்கே வந்து minimum salary க்கு வேலை செய்து கடினமாக உழைத்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறும் புலம் பெயர் மக்களில் பெரும்பான்மையானோர் குடியரசுக் கட்சி பக்கம் சாய்கின்றனர். வேலைக்குப் போகாமல் அரசு கொடுக்கும் வீட்டில் இருந்துகொண்டு வேலை இல்லை என்பதற்கு காரண காரியங்களை சொல்லிக்கொண்டு சோம்பேறி ஆகி போதைக்கு அடிமைப்பட்டு பின்னர் homeless நிலைக்கு ஆளாகும் மக்களின் அவல நிலைக்கு புறக்காரணிகள் மட்டுமே காரணம் என்றும் பாதிக்கபடுபவர்கள் வெறும் victims என்றும் அவர்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லை என்றளவுக்கு liberalism செயல்படுகின்றது.எந்த பெரிய நகரத்தின் Downtown பக்கமும் இப்பொழுது நிம்மதியாக போக முடிவதில்லை.இதனை உழைக்கும் மக்கள் ரசிப்பதில்லை. இதுவரைக்கும் சரி என்று நம்பிக்கொண்டு இருந்த விழுமியங்கள் left wing ideology பேசுவோரால் அசுர பலம் கொண்டு தாக்கப்படும் பொழுது கேள்விக்கு உடப்படுத்தப் படும் பொழுது எதிர்ப்பு வருவதை நிறுத்த முடியாது. எல்லாவற்றுக்கும் நேரம் கொடுக்கப்பட வேண்டும். முக்கியமாக நாம் சரி என்று நம்பும் விஷயங்கள் பிழையோ அல்லது இதை வேறு பரிமாணத்தில் பார்க்கலாமோ என்று எண்ண பக்குவப்பட்ட மனநிலை தேவைப்படுகிறது. இதற்க்கு திணிக்கப்படும் இடது சாரி அரசியல் உதவப் போவதில்லை. இதைத் தவிர கட்டுப்பாடு அற்ற illegal immigrants, மத்திய கிழக்கு மற்றும் ukraine போருக்கு அளிக்கப்படும் அபரிமிதமான நிதிஉதவி ஆகியவை நிஜமாகவே மத்திய தர குடும்பங்களை பாதித்து உள்ளது.
  13. அன்று பல மேள வாசிப்புக் காரர்கள் வாய்ப்புத் தேடி இலங்கை வந்து இங்குள்ள நட்டுவருடன் கலந்து விட்டதாக ஒரு கதை கேள்விப்பட்டுளேன். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயராக இருக்கலாம்
  14. நாங்கள் வெறுமனே டிரம்ப் என்பவர் மீது தனிமனித வெறுப்பின் காரணமாகவோ அல்லது அவரின் Right wing Ideology மீது பிடிப்பின்மை காரணமாகவோ இந்த வெற்றியை குறைத்து மதிப்பிடலாம், ஆனால் left wing அரசியல் பொதுவான மக்களிடம் மதிப்பிளந்து வருகின்றதை நாம் கவனிக்காமல் போய் விட முடியாது. Left wing அரசியலின் போலித்தனமும் அது குடும்ப அமைப்பு மீது செலுத்தும் அழுத்தமும் ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்தையும் பாதித்து உள்ளதை நேர்மையுடன் உணரத் தவறியதால் தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. கனடாவிலும் அதுவே நிலை Right here right nowஎன்ற ஒரு புத்தகம் முன்னால் கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அவர்களால் சில வருடங்கள் முன்னம் வெளியிடப் பட்டது. அதில் இந்த populism வளரக் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாதது. முடிந்தால் எல்லோரும் அதை வாங்கி வாசியுங்கள்.
  15. வெறித்தனமாகப் பேசினால் நம்பி விடும் கூட்டம். நான் முகநூலில் பல வருடங்களுக்கு முன்னமே சீமான் போக்கு பிழை என்றும் அறிஞர் அண்ணாவை தெலுக்கர் என்று சொல்பது பிழை என்றும் சொன்னப்பொழுது கடிக்க வந்ததால் facebook கையே இழுத்து மூடி விட்டேன்
  16. எனது அக்கா ( லண்டன் ) இல் வங்கியில் பெட்டகத்தில் வைத்திருந்த நகையை எடுத்து திருமண நிகழ்வு ஒன்றுக்கு போட வீட்டுக்கு எடுத்து சென்று, திருமணத்துக்கும் அணிந்து பின்னர் வேலை காரணமாக ஒரு நாள் பிந்தி மீண்டும் வங்கி பெட்டகத்தில் வைப்பம் என்று யோசித்து இருக்க, இவாவும் அத்தானும் பிள்ளைகளும் வீட்டில் இல்லாத நேரம் வீட்டை கோடாலி கொண்டு உடைத்து 35,000 pounds பெறுமதியான நகைகளைக் கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் நடந்து 2 வருஷம் இருக்கும்.
  17. இந்த வயதில் சுன்னத்து ( circumcision) செய்தால் எப்படி நோகும் தெரியுமா? பத்து நாள் உள்ளாடை அணியாமல் நோவுடன் சாறம் கட்டிக்கொண்டு இருக்க வேண்டும். எங்கயும் ஆண்குறி முட்டுப் படாமல் நடக்க வேண்டும்.
  18. மனித உரிமை vs அதிகாரம். இந்த இரண்டும் நாட்டில் நல்லாட்சி நடைபெற அவசியம். மனித உரிமைகள் என்ற பெயரில் அதிகாரம் அற்ற அரசும் அல்லது கொஞ்சமும் மனிதாபிமானம் அற்ற அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் அரசும் இரண்டும் பலன் தரும் ஜனநாயக அமைப்புக்கு குந்தகம் விளைவிக்கும்.
  19. விஜயகாந்துக்கு கொள்கைத் தெளிவு இருந்தாலும்? அதை வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை. மக்களுக்கு நன்மை செய்வம் என்று தான் சொன்னார். தவிர சோ பேச்சைக் கேட்டு ஜெயலலிதா வுடன் போய் சேர்ந்ததால் தான் வீழ்ந்தார். விஜய் அதில் மாறுப்பட்டு நிற்கிறார். கொள்கைத் தெளிவு இங்கே உண்டு
  20. @goshan_che என்ன கன காலம் காணவில்லை? மேலே நீங்கள் எழுதிய ஒவ்வொரு சொல்லும் அர்த்தபுஷ்டி உள்ளது. நான் விஜய் வருகை குறித்து வைக்கப்படும் பல அரசியல் கருத்துக்களைப் பார்க்கிறேன். அதில் நீங்கள் சொன்னதுதான் 100 புள்ளிகள் பெறும். சிறப்பு!❤️
  21. ஆந்திராவின் NTR உம் உதவினார். வைகோ போன்றவர்களை தெலுக்கன் என்று ஏசும் அதே கூட்டம் தான் இங்கே சுமத்திரனை தமிழின விரோதி என்கிறது. தனது உண்மையான எதிரி யார் என்று தெரியாமல் தனக்கு நன்மை செய்ய விரும்புவனுக்கு எதிராக வாள் சுற்றும் கூட்டம் அது.
  22. ஒன்று தான் அல்லது திராவிட இயக்கம் பெற்ற பிள்ளை தான் தமிழ்த் தேசியம். சீமான் போன்றவர்கள் வெறுப்பு அரசியல் பேசுவாதால் இரண்டையும் பிரித்து விட முடியாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.