Everything posted by பகிடி
-
யாழ்ப்பாணத்திற்கு_ஒரு_ஆறு
இந்த விஷயத்தை படித்து விளங்கி அதை தனது வாக்காளர்களுக்கு சொல்லி புரியவைக்கும் திறமையும் பக்குவமும் தமிழரசுக் கட்சியின் தலைவராக வர ஆசைப்படும், இரணை மடு குளத்து வான் பாயும் மீதி நன்னீரை யாழ் மாவட்ட மக்களுக்கு பயன் பட அனுமதிக்க மறுக்கும் திரு பள்ளிக்கூட அதிபர் ஸ்ரீதரனுக்கு உண்டா??
-
‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன?
எனக்கு ஆப்பிள் போன் மீது எந்தக் கோபமும் இல்லை ஆனால் பொதுவாக ஆப்பிள் போன் வைத்து இருக்கும் ஆட்கள் ஒரு லூசு type என்பது எனது எண்ணம்.🤣 ( நீங்களும் உங்கள் சுற்று வட்டத்தில் ஆப்பிள் மொபைல் பாவிப்பவர்களைப் பாருங்கள், ஒரு களன்ற கேசுகளாகவே இருப்பார்கள் 🤣🤣) ஆகவே என்னைப் பற்றி யாரும் அப்படி யோசிக்கக் கூடாது என்பதற்காகவே நான் ஆப்பிள் பாவிக்காமல் சாம்சங் பாவிக்கிறேன்
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இது தான் எனது கருத்தும்
-
பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம் - பொ.ஐங்கரநேசன் அழைப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பின் இல்லாமைக்குப் பின் வடக்கில் ஒரு அரசியல்வாதி வாயால் வடை சுடாமல் உருப்படியாக சில விஷயங்களை செய்தார் என்றால் அது ஐங்கரநேசன் தான்.
-
தேயும் ஈழத் தமிழ்மொழி
சந்தேகம் இல்லாமல் பண்பாட்டின் ஏனைய அலகுகள் யாவையும் போல பேசும் மொழியும் ஒரு மாறும் பொதுமைதான். ஆனால், அண்மைய ஒரு தசாப்த காலமாக ஈழத் தமிழ் மொழி சென்று கொண்டிருக்கும் மாறு திசையும் – அதன் வேகமும் – அந்த மாற்றத்தின் காரணங்களும் அதன் காவிகளும் – அது தொடர்பில் எம்மிடமுள்ள அசட்டையும் பண்பாட்டு நோக்கில் வேதனை தருமொன்றாக இருக்கிறது. இன்று வரைக்கும் தமிழ் நாட்டில் பலரிடம் ‘ஈழத்தமிழ் மொழி உயர்வானது’ – ‘கலப்பற்றது அல்லது ஒப்பீட்டளவில் கலப்பற்ற நல்ல தமிழை ஈழத்தமிழர்கள் பேசுகிறார்கள்’ என்ற பலமான ஒரு ஜனரஞ்சக நம்பிக்கை உண்டு. மொழியல் ரீதியாக யோசித்தால் மேற்படி நம்பிக்கைகள் அதிகம் அறிவியல் பூர்வமானவை அல்ல. ஆனால் நிச்சயமாக ஆங்கிலத்தை அதிகம் தமிழுக்குள் இட்டுப் பேசுதல் அல்லது ஆங்கிலத்தை தமிழ்த்தனமாகப் தமிழோடு கலந்து பேசுதல் என்ற நிலைவரம் ஈழத்தமிழ் மொழிப்பயல்வுள் ஒப்பீட்டளவிற் குறைவுதான். எந்த ஒரு மொழியும் கலப்பற்றது – பேச்சு வழக்காற்று மாற்றங்களும் – கிளைகளும் அற்றவை எனப் பேசுவது மொழியின் வரலாற்றை மறுப்பதும், அதனியல்பைப் புரிந்து கொள்ளாததன் விளைவாகவும் மட்டுமே அமையும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே தொல்காப்பியம் ‘திசைமொழிகள்’ பற்றிப் பேசுகிறது. போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்த மொழிச் சொற்கள் பலவற்றை தமிழ் என்று நினைத்தே பல நூற்றாண்டு காலமாகக் கையாண்டுவருகிறோம். அது மட்டுமின்றி ஏதாவது ஒரு மொழி உயர்வானது – மற்றையது தாழ்வானது என்று கருதுவதோ அல்லது சில மொழிகளை தெய்வீக அந்தஸ்து உடையவை என்று கூறுவதோ கூட அடிப்படையில் மொழியதிகாரம் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே அமையும். ஆனால் ஒவ்வொரு மொழிப் பயில்வு வட்டகையும் தனது சொற் தெரிவுகள், உச்சரிப்புக்கள் – தொனி நிலைகள் – குழும வேறுபாடுகள் சார்ந்த தனியடையாளங்கள் உடையவை என்பது மறுக்கப்பட முடியாத யதார்த்தமாகும். அவ்வகையில் குறிப்பிட்ட பிராந்தியத்தின் மொழிப் பயில்வானது அப் பிராந்தியத்தின் மரபுரிமையும் ஆகிறது. அந்த வகையில் மேற்குறிப்பிட்ட அந்தந்த மொழியின் இயல்புகளுக்கேற்பவே அம் மொழிகளின் மாற்றங்களும் அமைகின்றன. அதாவது குறிப்பிட்ட மொழி புதிதாக உள்ளெடுக்கும் பிற மொழிச் சொற்களும் அல்லது உருவாகும் புதிய சொற்களுங் கூட மேற்படி பயில்மொழியின், மொழியில் அம்சங்களின் உள்ளார்ந்த தர்க்கத்தின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. இவ்வகையான வாதங்களை புரியும் போது – சந்தேகமில்லாமல் ஈழத் தமிழ் மொழியானது, தமிழ் மொழி பயிலும் உலகின் பல்வேறு களங்களில் இருந்து வேறுபட்டதும் தனக்காக தனியான அடையாளங்களை உடையதுமான கட்டமைப்பு என்பதை நாம் கண்டடைய முடியும். அது ஒரு தனியடையாளம் என்ற வகையில் ஒரு பண்பாட்டு முதலீடுமாகும். எனவே ஈழத்தமிழ் இனத்துவத்தின் முக்கிய கூறாக அதன் மொழியும் – மொழிசார் வெளிப்பாடுகளும் காணப்படுகின்றன. எமது நாளாந்த பேசு மொழி, ஆற்றுகை நெறிப்பட்ட மொழி வெளிப்பாடுகள் தொடக்கம் எழுத்து மொழி – அதன் புனைவாக்க மொழிதல்கள் உள்ளிட்ட பரந்த பரப்பு அதனோடு கூடியுள்ளது. நவீன காலத்து மேடைப் பேச்சு என்கிற வடிவமே ஈழத் தமிழிடமிருந்து உருவாகி நிலை பெற்றது என அண்மையிற் காலமான அமெரிக்க யேல் பல்கலைக்கழக மானுடவியற் பேராசிரியரான பேர்னாட் பேற் தனது கலாநிதிப்பட்ட ஆய்வில் எடுத்துக் காட்டியுள்ளார். அதேநேரம் ஈழத்தமிழ் மொழி. இலக்கணம், இலக்கியம் – உரை மரபுகள் பற்றிய ஆய்வாளர்கள் பலரும் பலவேறு ஈழத்தமிழுக்கேயான வேறுபட்ட தனியியல்புகள் பலவற்றை சுட்டிக் காட்டியுள்ளனர். அண்மையில் பட்டமேற்படிப்புக்களுக்கான பிரெஞ்சு வரலாற்று மொழிநூலியல் நிறுவனத்தைச் சேர்ந்த கலாநிதி அப்பாசாமி முருகையன் பொதுத் தமிழ் பாவனையில் இருந்து வேறுபடும் ஈழத்தமிழின் மிக முக்கியான சில இயல்புகளைச் சுட்டிக்காட்டி அது பற்றிய ஆய்வுகளின் அவசியத்தையும் – அவசரத்தையும் தெளிவுபடுத்தியிருந்தார். இந்த வகைப்பட்ட தனித்துவம் தொடர்பிலான கல்விசார்ந்ததும் – ஆய்வியல் ரீதியுமான (academic and research) கருத்தாடல்கள் ஒரு புறமிருக்க, ஒரு காலத்தில் செய்தி ஊடகங்கள் முதலியவற்றின் தமிழ் பிரயோகம் – மொழி நடைகள் என்பனவற்றுக்காக ஈழத் தமிழ் ஊடகங்கள் பொது மக்கள் மத்தியில் உள்நாட்டில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் புகழ் பெற்றுக் காணப்பட்டன. அவை ஈழத் தமிழின் தனியடையாளத்தை பிரதிநிதிப்படுத்தியதோடு அதனை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றும் கைங்கரியத்தையும் செய்தன. எஸ்.பி. மயில்வாகனம் தொடக்கம் இன்றைய வாழும் உதாரணங்களில் ஒன்றான. பி.எச். அப்துல் ஹமீத் வரை பலமான ஈழத்து வானொலித் தமிழின் மையமாக இலங்கை வானொலி இருந்த காலமொன்றுண்டு. பத்திரிகைகள் மொழிப்பாவனையில் எடுத்த கவனம் காரணமாக, அவை மொழிக்கல்விக்கான களமாயும் இருந்ததுண்டு. மொழியின் இயங்கு களத்தை இவை வலுப்படுத்தின. உலகறிவோடு அவை ஈழத்தமிழ் மொழியையும் அவை காவிச் சென்றன. ஆனால் இன்றைய நிலை என்ன? இன்றைய இளைய தலைமுறை ஒருவகையான தென்னிந்திய ஜனரஞ்சகத் தமிழை மிகப் பெருமையோடும், நடப்பு வழக்கின் (fashion) சிறப்புத தகமையாக பேசத் தொடங்கியுள்ளது. அது ஈழத் தமிழையோ அல்லது அதன் வேறுபட்ட பிராந்தியங்களிற் (யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு – மலையகம் என்றோ அவற்றின் உட் பிராந்திய கிளை வழக்காறுகளின் எண்ணற்ற பிரிவுகள் சார்ந்தோ) பயிலப்படும் சிறப்பு வேறுபாடுகளையுடைய மொழியையோ பேசாது புறந் தள்ளிவிட்டு இப் புதிய போக்கு வழிப்பட்டு விரைந்து செல்கிறது. அது ‘சுட்டுக் கொண்டு வருதல்’(திருடல்), ‘கேமுக்கு வாறியா?’ (சண்டை போட வருகிறாயா?), ‘செமையா இருக்குது’ (நல்லா இருக்குது) ‘டீல்’, ‘கெத்து’ என பல சொற் பிரயோகங்கள் மற்றும் ‘அவங்க’ – ‘சொல்றாங்க’ எனும் வாக்கிய முடிப்பு முறைகள் என இவை விரைந்து பரப்பப்படுகின்றன. இவை பேரளவில் பயிலப்படுதலுக்கு முக்கியமாக வெகுஜன ஊடகங்கள் காரணமாகின்றன. குறிப்பாக ஈழத் தமிழ் இளைய சமூகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகுஜன சினிமாப் பண்பாட்டால் ஆக்கப்பட்டுள்ளது. பாலாபிஷேகங்களும், கட்டவுட் (cutout) பூசைகளும் ஆரம்பமாகி விட்டன. இங்கிருந்துதான் மேற்படி தென்னிந்திய ஜனரஞ்சகத் தமிழ் அதிகம் பொறுக்கப்படுகிறது. ஆனால் இதை பேரளவில் நடவு செய்யும் முகவர் வேலையை – குறிப்பாக எமது பண்பலை வானொலிகள் (FM radio) செய்கின்றன. பேராசிரியர் சிவத்தம்பி இந்த வானொலிகளை Talkative radios எனக் கூறுவார். அவை எப்போதும் – பெரும்பாலும் இந்த தென்னிந்திய சினிமா வழிவரும் வெகுஜனப் பேச்சு முறையை – சொற் பிரயோகங்களை நாடு முழுவதும், 24 மணிநேரமும் பேசிக் கொண்டிருக்கின்றன. அவற்றினைக் கேட்பவர்கள் அல்லது அதன் ரசிகர் குழாம் என்பது அதிகம் இளைஞர்களாகவும் இருக்கிறார்கள். இந் நிலைவரங்கள் ஈழத்தழிழ் மொழிக்குப் பதிலாக மேற்படி கொச்சையான இதுவுமல்ல – அதுவுமல்ல என்ற மொழிப் பயில்வொன்றை நடவு செய்து வருகின்றன. ஆனால் இது தொடர்பில் எம்மிடம் எந்தக் கேள்வியும் கிடையாது. இதன் அடுத்த பெருங்களம் தொலைக்காட்சி அலை வரிசைகளாகும். இவை வீடு முழுவதும் சதா சர்வகாலமும் புகுந்து நிற்கின்றன. ஒரு வகை சன் ரீவி மயமாக்கத் தமிழ் இன்னொரு பக்கம் மடை திறந்தோடி ஈழத் தமிழ் வீடுகளை நிறைத்து மெல்ல அவரவர் பிராந்தியத் தனித்துவ மொழியை தட்டையாக்கி மேற்படி ஜனரஞ்சகத் தென்னகத் தமிழை எல்லோர் நாவிலும் மெல்ல – அவர்கள் அறியாமலே பதிகின்றது. இதில் மிக முக்கிய இடத்தை சிறு பிள்ளைகளுக்கான கார்ட்டூன்கள் செய்கின்றன. 05 வயதுக்கு முன்பதாகவே ஈழத் தமிழ் குழந்தைகளின் பேசு மொழி, மேற்படி ஜனரஞ்சகத் தென்னகத் தமிழைக் இக் கார்ட்டூன்கள் வழி பெற்றுக் கொள்கிறது. இது மிகப் பெரிய ஈழத் தமிழ் மொழி இழப்புக்குக் காரணமாகப் போகிறது. நாம் இதை விடுத்து இச் சிறுபராயப் பிள்ளைகளுக்காக வாங்கும் அனைத்து Nursery Rhymes உட்பட்ட குறுமொலித் தட்டுக்கள் கூட இந் நிலைவரத்தை பேரளவில் அதிகரிக்கப் போகின்றன. (எத்தனை ஆயிரம் பக்தி பாடல்கள் ஊர்க் கோயில்கள் தோறும் வெளியிடும் ஈழப் பெருந் தலைவர்கள் தமது குழந்தைகளுக்கான மழலைப் பாடல்களை பதிவு செய்து உருவாக்குவதில் மட்டும் பெரியளவிற் கவனம் எடுப்பதில்லை). இதேநேரம் கல்விச் சாலைகள் மொழிக் கல்வியில் கொண்டுள்ள பாராமுகம் மற்றும் சர்வதேசப் பாடசாலைகள் மற்றும் ஆங்கில மூலக் கல்வி பற்றிய ஆய்வறிவற்ற மோகம் அல்லது தொடரும் மொழி தொடர்பான காலனியகால தாழ்வுச் சிக்கல்கள் – சமூக அந்தஸ்தை மொழியோடு இணைத்துப் பார்க்கும் நோக்குகள் என்பன பாடசாலைகளிலும் – பல்கலைக்கழகங்களிலும் காணப்பட்ட பலமான ஒரு தாய்மொழிக் கல்விப் பாரம்பரியத்தை வீழ்ச்சியடையச் செய்துவிட்டன. அத்தோடு இவற்றுக்கு வெளியாற் காணப்பட்ட பலமானவொரு மரபுவழிக் கல்விப் பாரம்பரியமும் கடந்த காலத்துக் கதையாகிப் போய் முடிந்து விட்டது. இவை யாவும் ஈழத் தமிழ் மொழியின் எதிர்கால வாழ்வை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளன. ஈழத்தமிழ் மொழியை அதன் பல்பரிமாணங்களை, அதன் பிராந்திய வேறுபாடுகளை, அவற்றின் கிளைகளோடு காத்திட என்னதான் செய்யப் போகிறோம்? தொடரும். https://ezhunaonline.com/தேயும்-ஈழத்-தமிழ்மொழி/
-
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மூலம் தமிழர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும்- அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்
ரணில் ஏதோ ஒரு விதத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை, இந்தியா இனிமேலும் இலங்கை தமிழ் மக்கள் மேல் இந்தியா செல்வாக்கு செலுத்த முடியா தீர்வை வழங்க விரும்புகின்றார். தமிழ் மிதவாதிகளும் சிங்கள மக்களின் மிதவாதிகளும் இணைந்து தீர்வை நோக்கி செல்லும் பொழுது இந்தியாவின் நரித் தனத்தில் இருந்து நாம் சற்றேனும் தள்ளி இருக்கலாம்.
-
ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்துவது? நிலாந்தன்.
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி முதல் கருத்துக் கூறியவர் விக்னேஸ்வரன். விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளை எழுத்துக்களை பேட்டிகளை, இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னும் சில மாதங்களுக்கு முன்னும் செய்த சந்திப்புக்களை சேர்த்துப் பார்த்தால் விக்னேஸ்வரணை வைத்து இந்தியா காய் நகரத்துகின்றதோ என்னும் சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இந்தியாவிற்கு ரணில் இலங்கையில் தொடர்ந்து அதிகாரப் படத்தில் இருக்கக் கூடாது என்பது விருப்பம். அதனால் தான் ரணில் பாராளுமன்ற எம்பிக்களூடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட இருந்த பொழுது தமிழ் கூட்டமைப்பை வைத்து ரனிலை வீழ்த்த பார்த்தது இந்தியா. இப்பொழுதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் வரக்கூடாது என்பதில் இந்தியா மிகுந்த கவனம் செலுத்துகின்றது. மிதவாத சிங்கள மிதவாத தமிழ் கூட்டணியானது இலங்கைக்குள் இனப் பிரச்சினையை ஓரளவு தீர்த்து வைத்து விடும் என்ற பயம் இந்தியாவை இப்படி காய் நகர்த்த வைக்கிறது எனது கணிப்பு சரியாக இருந்தால் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சுமத்திரன் தெரிவாக இலங்கை புலனாய்வுத்துறை உதவும். சுமத்திரன் சாணக்கியன் ஆகியோருக்கும் ரணிலுக்கும் இடையிலான பிணக்கு வெளியில் வெறும் அரசியல் செய்வதற்கு என்றே நான் நினைக்கின்றேன். உள்ளூர இந்த இவர்கள் எல்லோரும் சேர்ந்து பயணிக்கின்றார்கள். தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி மிதவாத தமிழர்களின் வாக்குகள் ரணிலை நோக்கி செல்லாமல் பார்த்துக் கொள்வது விக்னேஸ்வரனை வைத்து இந்தியா செய்யும் திட்டமாக இருக்கலாம்.
-
Inaugural Chair in Tamil Studies looks to establish U of T Scarborough as a global hub for Tamil scholarship
இந்த தமிழ் இருக்கைக்கு நிதி சேகரிப்பு நடந்து கொண்டு இருந்தபொழுது தமிழ்நாட்டில் உள்ள ஆர் எஸ் எஸ் அனுதாபிகளின் எரிச்சலை அவர்கள் எழுதிய கட்டுரைகளிலும் பொதுப் பேட்டிகளிலும் காண முடிந்தது. முக்கியமாக ராஜீவ் மல்கோத்திரா மற்றும் அவரின் தமிழக சகாக்கள் இந்த குமட்டலை வெளிப்படுத்தி இருந்தனர். அவர்களின் அடுத்த இலக்கு இந்த தமிழ் இருக்கைக்குள் தமது ஆட்களை புலைமைசார் நபர்களாக அனுப்பி வைப்பதாகவே இருக்கும். ஏற்கனவே ஆசான் என்று தன்னை தானே அழைத்துக் கொள்ளும், உள்ளுணர்வில் தமிழ் இனத்துக்கு விரோதியாக வெகு சமரத்தியமாக நடந்து கொள்ளும் மலையாளி ஜெயமோகனுக்கு இயல் விருது வழங்கி வருவது நாம் தான் என்பதால் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
Facebook இல் கனடா தமிழ் இந்துக்கள் என்னும் ஒரு group உண்டு. அது மஹா சங்கராந்தியை தை பொங்கலோடு சேர்த்து வைத்து வாழ்த்துக்கள் சொல்கிறது. Group நடத்துப்பவர்கள் ஈழத்து சைவர்கள்
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
நான் "படித்த நல்ல பின்புலம் " என்று சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட அதிக வாய்ப்பு இருப்பதை அப்படி எழுதும் பொழுது உணர தவறி விட்டேன். எங்களுக்கு இருக்கும் அக்கறை ஏன் இந்தப் பிள்ளையை பெற்ற பெற்றோருக்கு இல்லை என்று யோசித்த பொழுது அந்தப் பெற்றோருக்கு பக்குவமோ, தெளிவான தூர நோக்குடனான சிந்தனையோ ஏன் இல்லாமல் போனது என்ற கேள்வி வந்ததால் அப்படி சொல்லி விட்டேன். "எப்பொழுதுமே பெற்றோரின் நல்ல கல்விப் பின்புலம் என்பது மட்டுமே பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதில் செல்வாக்கு செலுத்தும் காரணி" என்னும் கூற்று தவறுதான். தவறுக்கு மனதார வருந்துகிறேன். குறிப்பிட்டு காட்டிய @Kapithan @விளங்க நினைப்பவன் @நிழலி ஆகியோருக்கு நன்றி
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
அண்மையில் University of Alberta வின் முன்னால் President மற்றும் Vice Chancellor ஆக இருந்த Dr.திருமதி இந்திரா சமரவிக்கிரம அவர்கள் இன்னொரு வெற்றி பெற்ற பெண்ணாகிய Martha Piper என்பவரோடு சேர்ந்து எழுதிய Lessons On Leadership From Two Women Who Went First என்ற நூலை வாசிக்க கிடைத்தது. வாழ்வில் உண்மையான வெற்றியை அடைய முயலும் நபர்கள் பிள்ளைகள் எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம் அது. extra curricular activities என்பது முக்கியம் தான் ஆனால் அது Academically எமக்கு உதவ வேண்டும். கில்மிஷா இந்த பாராடுக்களை புறம் தள்ளி விட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாது விடில் விட்டில் பூச்சிகள் போல் இந்த பெயர் புகழ் எல்லாம் மறைந்து விடும்.
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
நன்றாய் சொன்னீர்கள். படித்த நல்ல பின்புலம் உள்ள பெற்றோர் இதனை ஊக்குவிக்க மாட்டினம்.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
ஒடுக்கப்படும் மக்கள் அதிலிருந்து வெளியே வராமல் இருக்க ஒரு அதி தீவிர தலைமையையே கொண்டு இருக்க வேண்டும் என அம் மக்களை ஒடுக்க வேண்டும் என நினைக்கும் அரசுகள் நினைக்கின்றன ஆகவே அனுமதிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட நிபந்தனைகளுள் அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கான ஒரு அதிதீவிரத் தலைமையை தேர்வுசெய்வதே உண்மையில் நடக்கிறது. இது அம்மக்களை பரிதாபகரமானதும் நம்பிக்கை இழந்ததுமான நிலைக்குள் தள்ளவிடுகின்றது ஹமாசை உருவாக்கி பலஸ்தீனியர்களை அதி தீவிர தன்மைக்குள் தள்ளிய இஸ்ரேலும், போராளிகளை உருவாக்கி எம்மை அதி தீவிர நிலைக்கு தள்ளிய இந்தியாவுக்கும் நோக்கம் ஒன்று தான். தூர நோக்கும் கூரிய சிந்தனையும் கொண்ட மக்கள் கூட்டம் என உரிமை பாராட்டும் நாம் மீண்டும் மீண்டும் அதி தீவிர நிலையை எடுத்து,எமக்கு நாமே கொள்ளிக் கட்டையால் சூடு போட்டுக்கொள்வது ஏனோ தெரியவில்லை.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இலங்கையில் உள்ள பல தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றிய அதீத கற்பனை உண்டு. ஆனால் நடைமுறை உண்மையோ வேறு.இன்னும் பத்து ஆண்டுகளில் புலம் பெயர் தமிழர்களிடம் இருக்கும் குறைந்த பட்ச பலமும் முடிவுக்கு வந்து விடும். இங்கே நாட்டில் உள்ள மக்களுக்காக கவலைப் படும், அமைப்புக்களில் இணைந்து செயல்படும் நபர்களின் வயது அறுபது ஆகின்றது. அவர்களின் பிள்ளைகளோ அல்லது கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர்ந்தோரோ இந்த அமைப்புகளில் இல்லை, அதே நேரம் பலர் இன்னும் முழுமையாக இங்கு வீடு வாசல் வேலை என்று செட்டில் ஆகவும் இல்லை. இந்த நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் தீர்வுக்கான குறைந்த பட்ச வாய்ப்பு இப்போது உள்ள எங்களின் குறைந்த பட்சப் பலத்தைப் பயன் படுத்தி ஏதாவது ஒன்றைப் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பது தான். காலமும் சூழலும் மாறட்டும். அதற்கு இன்னும் 100 ஆண்டுகள் கூட ஆகலாம். அது வரைக்கும் இயன்ற வரைக்கும் எமது மொழியையும், நிலத்தையும், அடுத்து வரும் இளம் சந்ததியையும் பாதுகாப்பதே புத்திசாலித்தனம். விரும்பாத தீர்வு ஒன்று கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்பது நீண்ட காலத்துக்கு பயனளிக்கும் எனில் அதை ஏற்போம். எந்தத் தீர்வும் இறுதித் தீர்வு அல்ல. சிதைக்கப் பட முடியாத பலம் மட்டுமே இறுதித் தீர்வு இலங்கைத் தமிழர்களின் உரிமைக்கான பிரச்சனையில் தடையாக இருப்பது அருகில் உள்ள இந்தியா என்கின்ற நாடு. இதை இலங்கை தமிழரில் பலர் முற்றாய் உணர்ந்து தெளிந்ததாக தெரியவில்லை. தமிழர்களை தனி நாடு அடைய விடாமல் தடுப்பதும் இந்தியா தான்,அதேநேரம் இலங்கை அரசோடு ஒன்றிணைந்து நாம் ஒரு தீர்வுத் திட்டத்திற்கு வர முடியாமல் பார்த்துக் கொள்ளும் நாடும் அதுதான். இலங்கையை கையாள தமிழர்களை பயன்படுத்திக் கொள்வது தான் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை. நிலைமை இப்படி இருக்கும் பொழுது எப்படி தனி நாட்டைப் பெறுவது? சரி பிரிக்க முடியாத நாட்டுக்குள் சுய நிர்ணய உரிமை தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டாலும் அதைப் பயன்படுத்தி( அதிகாரம் கொடுக்கப்பட்ட தமிழர்களை பயன்படுத்தி ) எவ்வாறாயினும் இலங்கை அரசுக்கு குடைச்சல் கொடுப்பதே இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் யுக்தியாக இருக்கும். ஏற்கனவே ஒரு சில தடவை குறிப்பிட்டது போல கடந்த மைத்திரி ரனில் அரசாங்கத்தில் இனப்பிரச்சனைத்தீர்வுக்கான ஒரு முஸ்தீவு எடுக்கப்பட்ட பொழுது அதை ஈஸ்டர்குண்டு வெடிப்பை நடத்தி குலைத்த பெருமை இந்தியாவையே சாரும். இந்தியா,தமிழர்கள் தனி நாட்டை அடைய விடுவதுமில்லை, சிங்களவர்களோடு இணைந்து தமிழர்கள் நல்லதொரு தீர்வை பெற்று வாழ விருப்பமும் இல்லை. இரண்டும் கெட்டான் நிலையில் நாங்கள் நின்று தடுமாறி இலங்கைக்குள் இந்தியாவின் கைப்பாவையாக செயல்படவேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். இந்த நிலையில் இலங்கை அரசோடு ஏதேனும் ஒரு வகையிலான ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கைக்குள் நிம்மதியாக வாழக்கூடிய வகையில் ஈழத் தமிழர்களுக்கு எப்பேற்பட்ட ஒரு தீர்வு வந்தாலும் நான் அதை வரவேற்பேன். அந்த வகையில் உலகத் தமிழர் பேரவை எடுத்து இருக்கும் இந்த முயற்சி பலனளிக்க வாழ்த்துக்கள். இந்தியா என்கின்ற நாடு எங்களுக்கு அருகில் ஒரு வல்லரசாக இருக்கும் வரை எம்மால் தனித்து சுய நிர்ணய உரிமையோடு இயங்க முடியாது. இந்தியா உடைந்து சிறு நாடுகளாக சிதறும் போது மட்டும் தான் எமக்கான வாய்ப்புக்கான கதவு திறக்கும். அதுவரை எமது கலாச்சாரங்களையும் அடையாளங்களையும் இயன்றவரை பாதுகாத்துக் கொள்வது தான் தூர நோக்கோடு சிந்திக்கும் ஒருவரால் எடுக்கப்படக்கூடிய முடிவு. கடும் பசியிலும் தாகத்திலும் வாடும் ஒருவர் பிரியாணி தான் வேண்டும் என்று அடம்பிடித்தால் நலிந்து சாக வேண்டி வருலாம் .மாறாக கிடைக்கும் சோற்றையும் நீரையும் பருகி உயிர் தப்பினால் பின்னோரு காலத்தில் பிரியாணிக் கடைக்கே ஓனர் ஆகலாம்.
-
சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
மனுஷன் நினைத்து இருந்தா விமானத்தையே கடத்தி இருக்கலாம். நல்ல மனுஷன் போல..
-
இமாலயப் பிரகடனம் – பின்னணியும் வரலாறும்
நிக்சன் சிறந்த தமிழ் பற்றாளர் தான், யதீந்திரா போன்ற இந்தியாவுக்கு வால் பிடிக்கும் ஆள் அல்லர் நிக்சன். என்றாலும் தமிழ் மக்களின் இன்றைய கையாலாகாத நிலையை முற்றிலும் புரிந்து கொள்ளாத நிலையில் அவர் போன்ற தமிழப் பற்றாளர்கள் இருப்பதாகத் தெரிகிறது. இவர் போன்றவர்கள் புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றிய அளவுக்கு மீறிய ஒரு கற்பிதத்தைக் கொண்டு இருக்கிறார்கள். புலம் பெயர் தமிழர்களின் பலம் இன்னும் பத்து ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விடும். இங்கே நாட்டில் உள்ள மக்களுக்காக கவலைப் படும், அமைப்புக்களில் இணைந்து செயல்படும் நபர்களின் வயது அறுபது ஆகின்றது. அவர்களின் பிள்ளைகளோ அல்லது கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர்ந்தோரோ இந்த அமைப்புகளில் இல்லை, அதே நேரம் பலர் இன்னும் முழுமையாக இங்கு வீடு வாசல் வேலை என்று செட்டில் ஆகவும் இல்லை. இந்த நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் தீர்வுக்கான குறைந்த பட்ச வாய்ப்பு இப்போது உள்ள எங்களின் குறைந்த பட்சப் பலத்தைப் பயன் படுத்தி ஏதாவது ஒன்றைப் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பது தான். காலமும் சூழலும் மாறட்டும். அதற்கு இன்னும் 100 ஆண்டுகள் கூட ஆகலாம். அது வரைக்கும் இயன்ற வரைக்கும் எமது மொழியையும், நிலத்தையும், அடுத்து வரும் இளம் சந்ததியையும் பாதுகாப்பதே புத்திசாலித்தனம். விரும்பாத தீர்வு ஒன்று கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்பது நீண்ட காலத்துக்கு பயனளிக்கும் எனில் அதை ஏற்போம். எந்தத் தீர்வும் இறுதித் தீர்வு அல்ல. சிதைக்கப் பட முடியாத பலம் மட்டுமே இறுதித் தீர்வு.
-
ஜனாதிபதியை சந்திக்க வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு : சந்திக்கமாட்டேன் என்கிறார் சி.வி.
இந்தியாவுக்கு சாமரம் வீசுவதையே தொழிலாக் கொண்டவர் இவர்.
-
இமாலயப் பிரகடனம் – பின்னணியும் வரலாறும்
எல்லோரும் பிரச்சினைகளை கூறிக் கொண்டிருக்கின்றோமே ஒழிய அதற்கான தீர்வை பெறுவதாக தெரியவில்லை. தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு சுய நிர்ணய உரிமையா? அல்லது தனித்தமிழ் ஈழமா? பதில் தனி ஈழம் என்பதுதான். சுயநிர்ணய உரிமையை இருக்கின்றது என்று சொல்லும் இலங்கையரசு பின்னொரு காலத்தில் அதை இல்லாமல் ஆக்கிவிட கூடும், ஆகவே அதுவும் நிலையற்றது தான். இலங்கைத் தமிழர்களின் உரிமைக்கான பிரச்சனையில் தடையாக இருப்பது அருகில் உள்ள இந்தியா என்கின்ற நாடு. இது மிக வெளிப்படையான உண்மை. தமிழர்களை தனி நாடு அடைய விடாமல் தடுப்பதும் அதுதான், அதேநேரம் இலங்கை அரசோடு ஒன்றிணைந்து ஒரு தீர்வுத் திட்டத்திற்கு வர முடியாமல் பார்த்துக் கொள்ளும் நாடும் அதுதான். இலங்கையை கையாள தமிழர்களை பயன்படுத்திக் கொள்வது தான் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை. நிலைமை இப்படி இருக்கும் பொழுது எப்படி தனி நாட்டைப் பெறுவது? சுய நிர்ணய உரிமை தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டாலும் அதைப் பயன்படுத்தி( அதிகாரம் கொடுக்கப்பட்ட தமிழர்களை பயன்படுத்தி ) எவ்வாறாயினும் இலங்கை அரசுக்கு குடைச்சல் கொடுப்பதே இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் யுக்தியாக இருக்கும். ஏற்கனவே ஒரு சில தடவை குறிப்பிட்டது போல கடந்த மைத்திரி ரனில் அரசாங்கத்தில் இனப்பிரச்சனைத்தீர்வுக்கான ஒரு முஸ்தீவு எடுக்கப்பட்ட பொழுது அதை ஈஸ்டர்குண்டு வெடிப்பை நடத்தி குலைத்த பெருமை இந்தியாவையே சாரும். இந்தியா,தமிழர்கள் தனி நாட்டை அடைய விடுவதுமில்லை, சிங்களவர்களோடு இணைந்து தமிழர்கள் நல்லதொரு தீர்வை பெற்று வாழ விருப்பமும் இல்லை. இரண்டும் கெட்டான் நிலையில் நாங்கள் நின்று தடுமாறி இலங்கைக்குள் இந்தியாவின் கைப்பாவையாக செயல்படவேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். இந்த நிலையில் இலங்கை அரசோடு ஏதேனும் ஒரு வகையிலான ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கைக்குள் நிம்மதியாக வாழக்கூடிய வகையில் ஈழத் தமிழர்களுக்கு எப்பேற்பட்ட ஒரு தீர்வு வந்தாலும் நான் அதை வரவேற்பேன். இந்தியா என்கின்ற நாடு எங்களுக்கு அருகில் ஒரு வல்லரசாக இருக்கும் வரை எம்மால் தனித்து சுய நிர்ணய உரிமையோடு இயங்க முடியாது. இந்தியா உடைந்து சிறு நாடுகளாக சிதறும் போது மட்டும் தான் எமக்கான வாய்ப்புக்கான கதவு திறக்கும். அதுவரை எமது கலாச்சாரங்களையும் அடையாளங்களையும் இயன்றவரை பாதுகாத்துக் கொள்வது தான் தூர நோக்கோடு சிந்திக்கும் ஒருவரால் எடுக்கப்படக்கூடிய முடிவு. பாலஸ்தீன மக்களின் பிரச்சினையோடு எங்கள் பிரச்சனையை ஓரளவுக்கு மேல் ஒப்பிட முடியாது. பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேலுக்கு மட்டும் தான் பிரச்சனை, ஆனால் அருகில் இருக்கும் அரபு நாடுகள் எல்லாம் அவர்கள் பக்கத்தில். எமக்கோ இந்தியா பக்கத்தில். ஆகவே இரண்டு பேருடைய பிரச்சனையை, சூழ்நிலையை ஒப்பிடுவது சரியல்ல.
-
இனப்படுகொலையுடன் தொடர்புடைய ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' தடைகள் : தமது கட்சி ஆட்சியமைத்தால் நடவடிக்கை - கனேடிய எதிர்க்கட்சித்தலைவர்
ஆமோதிக்கின்றேன்
-
துவாரகா உரையாற்றியதாக...
இப்பொழுது இந்தப் பொய்யை மெய்யாக்க இந்தியா ஒரு வேலையை செய்யும், அது ஈழத்தில் ஏதாவது ஒரு ராணுவ அல்லது அரசியல் ( மஹிந்த ராஜபக்ச குடும்பம் ) இலக்குகளை தாக்கி அழித்து அதன் மூலம் தனது அரசியல் நோக்கத்தை அடைந்து கொள்வது. ஈழத்தில் உள்ள மக்களே மிகவும் கவனம்
-
வெளிநாட்டவர்... இலங்கைக்கு போனால், பணத்தை எங்கு மாற்றுவது நல்லது?
மிகவும் நன்றி
-
வெளிநாட்டவர்... இலங்கைக்கு போனால், பணத்தை எங்கு மாற்றுவது நல்லது?
இந்த திரியில் இன்னொரு கேள்வி. இலங்கையில் இருந்து பெரும்தோகைப் பணத்தை எப்படி வெளிநாட்டுக்கு எடுப்பது? உதாரணத்திற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள எனது காணியை இரண்டு கோடி ரூபாய்க்கு விற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் அந்தப் பணத்தை இங்கே நான் எப்படி வாங்கிக் கொள்ளலாம்.?
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
ரைற்ரானிக் விபத்தில் இறந்து போன மக்களை நினைவுக்கூர யாரையும் காணொம், ஆனால் தாண்டு போன கப்பலை வைத்து படம் தயாரித்து சாம்பாதித்தார்கள், இப்பொழுது இடிபாடுகளைக் காட்டி உழைக்க வெளிக்கிட்டு மாட்டி இருக்கிறார்கள்.
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
எனக்கென்னவோ இதில் கொஞ்சம் இடிக்குது.. இந்தியா வற்புறுத்தித் தான் இந்த படகு சேவை நடைபெறுகிறது. இலங்கை அரசுக்கு இதில் எப்பனும் விருப்பம் இல்லை. வேண்டா வெறுப்பா ஒத்துக்கொண்டு விட்டது. குழப்ப என்ன வேண்டும் என்றாலும் நடக்க சான்ஸ் உண்டு. எல்லோரும் குடும்பமாக ஒன்றாகப் போகாமல் விடுவது கொஞ்சப் பேரை ஆவது குடும்பத்தில் மிச்சம் வைக்கும்
-
PTR நேர்காணல் - வடக்கிற்கு அதிருப்தியா..?
அப்படி இலகுவில் நடக்காது.. இவரின் பாட்டன் தான் நீதிக் கட்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவர். இவரை இழந்தால் இழப்பு திமுக க வுக்கு தான். தவிர உறவு முறையில் இவரும் சபரீசனும் சொந்தம் என்று கேள்வி