Everything posted by ரசோதரன்
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
👍............... மனுஷ்யபுத்திரன் முன்னரே திமுகவின் அரசவைப் புலவர் போலத் தான்............ இப்ப இன்னும் கூட. இப்படித்தான், நீங்கள் சொல்வது போலவே, பல முன்னணி எழுத்தாளர்களும். விசிக மற்றும் இடதுசாரிகளின் பக்கம் இருப்பவர்கள் குறைவு என்றாலும், இவர்கள் நன்றாக எழுதுவார்கள். அதிமுக என்றாலே................. சிக்கல் தான். ராஜூ அண்ணனிடமும், ஜெயக்குமாருடனும் இலக்கியம் பேச எக்கச்சக்கமான பொறுமை வேண்டும் என்று நினைக்கின்றேன்......................... அரசு ஊழியர்களும் இதே போலவே. ஒரு 70 வீதம் திமுக தான்.......... நிறையக் கதைகள் சொல்வார்கள் தமிழ்நாட்டு நண்பர்கள் இது சம்பந்தமாக. எல்லாவற்றையும் மீறி எம்ஜிஆர் செய்தது ஒரு இமாலயச் சாதனை தான்.................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பையன் சார், விஜய் அன்றே அறிக்கை ஒன்றை, வழமை போல பனையூரிலிருந்து, விட்டிருந்தார். பெரியார் அவரின் கொள்கை தலைவர் என்று ஆரம்பித்து, அந்த அறிக்கை சீமானை சினம் கொண்டு எதிர்த்தது. இது விஜய்யின் வழமையான ஒரு வகை 'மேட்டுக்குடி அரசியல்'. அவருடைய ரசிகர்களே விஜய்யின் அறிக்கை அரசியலால் துவண்டு போயிருக்கின்றார்கள், இதில் நாங்கள் எங்கே விஜய்யின் அறிக்கையை தேடி வாசிக்கப் போகின்றோம்.......... சீமான் பெரியாரை ஏற்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சீமான் இந்த தடவை ஒரு தமிழ்ப் படத்தின் கடைசி சண்டைக் காட்சி போல ஆரம்பித்து இருக்கின்றார்............... கிளைமாக்ஸ் ஃபைட்......😜.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
🤣................... அந்த 'மோட்' இலேயே நீங்கள் எப்பவும் இருக்கின்றீர்கள், ஓணாண்டியார்.................😜. சீமானின்பெரியார் மீதான விமர்சனத்தின் பின் தாக்குதலை முதலில் ஆரம்பித்தது பெரியார் கட்சியைச் சேர்ந்தவர்களும், திராவிட கழகத்தவர்களும். பின்னர் பல பிரபலங்கள் சேர்ந்து கொண்டனர். அதன் பின்னர் தான் அதிமுக ஜெயக்குமாரே கருத்துச் சொன்னார். பின்னர் அன்புமணி சொன்னர்................பின்னர் தான் நியூஸ் 18 உள்ளே வந்தது. என்ன, எழுத்தாளர்கள் பலர் இன்னும் கருத்து வைக்கவில்லை. அவர்களைத் தான் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமான் மீதான அண்மைக்கால தாக்குதலை ஆரம்பித்து வைத்தது சீமான் தான். சீமான் பெரியாரைப் பற்றி சொல்லிய கருத்துகள் தான் சமீபத்திய நிகழ்வுகளின் தொடக்கம். சீமான் மெதுவாக ஒரு சின்ன ஊர்வன என்று தான் இலேசாக ஒரு வாலைப் பிடித்து இழுத்தார், இப்பொழுது அது ஒரு பாம்பாக படமெடுத்துக் கொண்டு நிற்கின்றது. நியூஸ் 18 இன் முதலாளி பாஜகவின் அபிமானி தான், ஆனால் இதுவரை காலமும் நியூஸ் 18 குழுமம், இந்தியாவின் பல மொழிகளிலும், மிக நல்லதொரு ஊடகமாகவே இருந்து வருகின்றது. இன்னமும் அவர்கள் எந்தப் பக்கமும் சாயவில்லை.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பையன் சார், சீமான் பேசும் தமிழ்த்தேசியம் சரி என்பதும், நித்தியோ அல்லது ஜக்கியோ அல்லது ரஜனிகாந்தோ பேசும் ஆன்மீகம் சரியென்பதிற்கும் வித்தியாசங்கள் கிடையாது. இந்த நால்வரும், இவர்களைப் போன்ற பலரும், வெறும் சுயலாப அடிப்படை ஒன்றில் மட்டுமே சில உயரிய, உணர்ச்சிகரமான விடயங்களை வியாபாரப் பொருட்கள் ஆக்கியுள்ளனர். சீமானை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக, நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக, திமுக அப்படிச் செய்ததே, இப்படிச் செய்ததே என்பது ஒரு சரியான ஒப்பீடு இல்லை. இவர் அல்லாவிட்டால் அவர் என்று நாங்கள் இங்கு கருத்தாடவில்லை. மேலும் இவர் அல்லாவிட்டால் அவர் என்று இரண்டே இரண்டு தெரிவுகள் தான் எங்கள் முன் இருக்கின்றது என்றும் இல்லை. சீமானின் மேல் இருக்கும் அதே அருவருப்பு தான் கருணாநிதியின் உண்ணாவிரதத்தின் மீதும் இன்றும் இருக்கின்றது. பிரணாப் முகர்ஜி இறந்த பொழுது, இதே நியூஸ் 18 இல் பிரணாப் முகர்ஜியைப் பற்றி ஒரு தொகுப்பு போட்டார்கள். அந்த தொகுப்பில் பிரணாப் முகர்ஜி எவ்வாறு கருணாநிதியை எங்கள் மக்கள் மீதான் நடவடிக்கைகளுக்கு சம்மதிக்க வைத்தார் என்றும், இது பிரணாப் முகர்ஜியின் ஒரு சாதனை என்றும் சொல்லப்பட்டிருந்தது. இன்று சீமான் மேல் வரும் ஒவ்வாமையும், அருவருப்பும், அன்றே கருணாநிதியின் மீதும், பிரணாப் முகர்ஜியின் மீதும் வந்தது. நான் சொல்ல வருவது என்னவென்றால், சீமான் பற்றிய குற்றச்சாட்டுகள் வரும் வேளைகளில் எல்லாம், திமுகவையோ, வைக்கோவையோ, வேறு எவரையோ ஒப்பீடாகக் கொண்டு வந்து, அவர்கள் செய்யாததையா சீமான் செய்து விட்டார் என்று கருத்து வைப்பது சரியான நியாயப்படுத்தல் இல்லை என்பதே. நியூஸ் 18 தாங்கள் இந்த விவாதத்திற்கு எப்போதும் தயார் என்றே இன்றும் அவர்களின் தளத்தில் போட்டிருக்கின்றார்கள்: https://tamil.news18.com/tamil-nadu/news18-tamil-nadu-ready-to-arrange-debate-between-seeman-and-cameraman-santhosh-nw-azt-ws-b-1712912.html நியூஸ் 18 திமுகவின் கைகளில் இல்லை. அது அதைவிட உச்சத்தில் இருக்கின்றது. திமுகவால் நியூஸ் 18 ஐ தொடவே முடியாது.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நேற்று நியூஸ் 18 இல் செய்திகளின் ஒரு பகுதியாக அதன் ஆசிரியர் கார்த்திகைச்செல்வனுக்கு ஒளிப்பதிவாளர் பிரசாந்த் வழங்கிய நேர்கணலின் சில பகுதிகள் போய்க் கொண்டிருந்தது. அந்தப் பகுதிகளை பார்த்த பின், தலைவர் மேல் இன்னும் மரியாதை கூடியது. 'கொன்று போட்டீர்களே...................' என்று உலகத்தின் மேல் உள்ள கோபம் அப்படியே துயரமாக மாறி உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. சீமானின் ஏமாற்று வேலைகளுக்கும், போலிப் பாவனைகளுக்கும் இது இன்னுமொரு சாட்சியமாகவும் இருந்தது. எவ்வளவு ஏமாற்று வேலைகள், அது அவ்வளவும் ஒரு தனிமனிதனின் நலனுக்கு மட்டுமே என்னும் போது இன்னும் அருவருப்பாகவும் இருந்தது. இன்று எங்களின் சமூகத்திற்கு, எம்மக்களுக்கு ஒரு மாற்று, ஒரு தலைமை இல்லை என்னும் நிலையில், சீமான் போன்ற ஒருவரை நம்பும் நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பது ஒரு பெரும் ஏமாற்றம் ஆகவும் இருக்கின்றது.
-
பாட்டுக் கதைகள்
🤣.................. பதினைந்து அல்லது இருபது வருடங்களின் முன், சில மிக அருமையான ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகளை சில தளங்களில் நான் வாசிப்பதுண்டு. இப்படியெல்லாம் எழுதவும் முடியுமா என்று ஆச்சரியப்பட வைத்தவர்கள் அவர்கள். போராட்ட காலம் அதன் நெருக்கடிகள் என்றில்லாமல், சாதாரண வாழ்க்கைகளையும் எழுதியிருந்தனர். அவர்கள் அன்று எழுதிய சில கதைகள் அப்படியே இன்றும் மனதில் தங்கி நிற்கின்றன. பின்னர் அவர்கள் காணாமல் போனார்கள். இணைய தளங்களில் எங்கும் அவர்களின் எழுத்துகளை நான் காணவில்லை. அவர்களின் முகப்புத்தகங்களில் சில தகவல்களை பதிந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன், ஆனால் நான் முகப்புத்தகங்களை முற்றாக தவிர்த்துக் கொண்டிருப்பதால், எனக்கு அவர்களிடம் இருந்த அந்த இணைப்பு அப்படியே விடுபட்டுவிட்டது. இங்கு தான் நீங்கள் சொல்லும் பரிணாம வளர்ச்சி அவர்களின் பாதைகளில் நடந்ததை பின்னர் தெரிந்துகொண்டேன். எழுத்தில் இருந்து அவர்கள் சினிமாவிற்கு போயிருந்தனர். அதுவே தான் எழுத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி என்று பலரும் நினைத்துக் கொள்கின்றனர். அவர்கள் பணி செய்த சில படங்களையும் பார்த்தேன். மோசமான படங்கள், எந்த விதமான அனுபவத்தையும் கொடுக்காத, பல வகைகளில் செயற்கையான கதை, நடிப்பு என்பன. ஏன் இவர்கள் இப்படி ஆகினார்கள் என்று கவலையாக இருந்தது. இவர்கள் இந்த வளர்ச்சியை தேடிப் போகாமல், எழுதிக் கொண்டே இருந்திருக்கலாம் என்று தான் எனக்குத் தோன்றுகின்றது. அன்று எங்களின் சில எழுத்தாளர்கள் அ. முத்துலிங்கம் அவர்களை பகிடி செய்வார்கள். ஈழத்தின் சிறந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கம் என்று சில இடங்களில், விமர்சகர்களால் சொல்லப்பட்டிப்பதால், இந்த ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம். இது அந்த உலகில் மிகச் சாதாரண ஒரு வழக்கம், ஒருவரை ஒருவர் மதிக்காமல் இருப்பது. ஆனால், முத்துலிங்கம் அவர்கள் எழுத்துடன் மட்டுமே நின்று கொண்டார். பின்னர் ஒரு காலத்தில் திரும்பிப் பார்க்கையில், முத்துலிங்கம் அவர்கள் தான் முன்னுக்கு தெரியப் போகின்றார் போல. பரிணாம வளர்ச்சி என்ற பாதையில் கட்டாயம் போக வேண்டும் என்றில்லை போல, வசீ..............
-
பாட்டுக் கதைகள்
இல்லை கவிஞரே, நான் செந்தூர பூவை இதுவரை பார்த்ததில்லை. தேனி மாவட்டத்தில் பார்க்க வேண்டிய ஏராளமான இடங்களும், விடயங்களும் இருக்கின்றன போல . இளையராஜாவும், பாரதிராஜாவும், வைரமுத்துவும், அவர்களைத் தொடர்ந்து அங்கிருந்து வந்தவர்களும் தேனியை எல்லோர் மனதிலும் பதிய வைத்துவிட்டனர். முள்முருக்கம் பூவைப் போல, ஆனால் கொஞ்சம் வெளிறிய சிவப்பு நிறத்தில், அடர்த்தியாக இந்தப் பூ தெரிகின்றது படத்தில். பூவைப் பற்றித்தானே கேட்டீர்கள்...................😜.
-
பாட்டுக் கதைகள்
🤣...... அப்படியான எண்ணம் வருவது இல்லை, வசீ............ இனிமேல் அது சுத்தமாகவே வராது போல...
-
பாட்டுக் கதைகள்
பாடல் இரண்டு - செந்தூர பூவே செந்தூர பூவே --------------------------------------------------------------------------- ஊரில் பல பாடசாலைகள் இருந்தன. வீட்டுக்கு அருகிலேயே ஒரு பாடசாலை இருந்தது. கொஞ்ச தூரத்திலும் ஒரு பாடசாலை இருந்தது. ஆனால் என்னை வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இருக்கும் பாடசாலையிலேயே சேர்த்தார்கள். என்னை மட்டும் இல்லை, எங்கள் வீட்டில் எல்லோரும் அந்தப் பாடசாலைக்கு தான் போய் வந்து கொண்டிருந்தார்கள். அது தான் எங்களின் பரம்பரைப் பாடசாலை என்று காரணம் கூறப்பட்டது. சார்பட்டா பரம்பரைக் கதைகள் போல பரம்பரைப் பெருமைகள் எதுவும் வெளி வந்திருக்காத அந்த நாளில், இது என்ன பெரிய பரம்பரை, இதற்காக நான் ஏன் நேர்த்திகடன் போல தினமும் நடக்க வேண்டும் என்று அலுப்பாக இருந்தது. அந்தப் பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. சில நாட்களில் நான் போகும் பொழுது பாடசாலையின் கதவுகள் திறந்திருக்காது. அவ்வளவு முன்னரே அங்கு போயிருக்கின்றேன். படிப்பில் எக்கச்சக்கமான ஆர்வம் என்றோ, பாடசாலையில் விருப்பமோ என்றில்லை. இது ஒரு பிறவிப் பழக்கம். இன்றும் இது தொடர்கின்றது. பாடசாலைக்கு அருகிலேயே ஒரு ஆசிரியரின் வீடு இருந்தது. அவர் வீட்டில் போய்க் கேட்டால், வந்து கதவைத் திறந்துவிடுவார்கள். ஆசிரியர் அலுத்திருக்கமாட்டார், ஆனால் அவர் வீட்டில் இருந்தவர்களுக்கு இது அலுப்பாக இருந்திருக்கக்கூடும். பாடசாலை முடிந்தால் வீட்டை எப்போதும் போய்க் கொள்ளலாம். தேடவே மாட்டார்கள். ஒரு நாள் பூரா போகாமல் இருந்தால் கூட, அப்படி ஒரு நாளும் நடக்கவில்லை, அடுத்த நாள் வந்து விடுவான் என்று இருந்திருப்பார்களோ தெரியாது. எப்போதும் பாடசாலைக்கு வருவது ஒரே வழியில் தான் என்றாலும், திரும்பிப் போவதற்கு மூன்று வழிகள் இருந்தன. வந்த வழியிலேயே, தெருக்களினூடாக, திரும்பிப் போவது முதலாவது வழி. இரண்டாவது வழி கடற்கரையின் வழியே நடந்து போய், பின்னர் ஒரு ஒழுங்கையினூடாக பிரதான வீதியைக் கடந்து வீட்டுக்கு போகும் வழி. மூன்றாவது வழி கடலினூடாக நடந்து போவது. முழங்கால் ஆழம் வரை இருக்கும் கடலுக்குள் போய், பின்னர் அப்படியே நடப்பது. இது ஒரு பெரிய உடற்பயிற்சியாக இன்று உலகெங்கும் செய்யப்படுகின்றது. நாங்கள் அன்று முழங்கால் அளவு ஆழக் கடலில் பறந்திருக்கின்றோம். பவளப்பாறைகள் காலைக் கிழித்து இரத்தம் சொட்டச் சொட்ட எதுவுமே நடக்காத மாதிரி இருந்திருக்கின்றோம். கடல் பொங்குவதும், கடல் வற்றி நீர் உட் போவதும் ஒரு சுழற்சியில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. சில நாட்களிலேயே இந்த அறிவு அனுபவத்தில் வந்துவிட்டது. எந்த நேரம் கடல் பொங்கும், எப்போது நீர் வற்றும் என்று தெரிய ஆரம்பித்திருந்தது. பாடசாலை விடும் நேரத்தில் கடல் பொங்கும் என்று தெரிந்தால், அன்று அந்தப் பாதையை தவிர்த்து, வந்த வழியிலேயே தெருக்களினூடாக வீட்டுக்கு போக வேண்டும். அப்படியே உடனேயே நேரே போய் வீட்டை என்ன தான் செய்வது. போகும் வழியில் மூன்று வாசிகசாலைகள் இருந்தன. சந்தியில் இருந்த வாசிகசாலை பெரியது. ஆங்கில, தமிழ் செய்தித்தாள்கள், ஆனந்த விகடன், குமுதம் போன்ற இந்திய வார வெளியீடுகள், டொமினிக் ஜீவாவின் மல்லிகை என்று எல்லா வகையானவைகளும் அங்கே போடப்பட்டுக்கொண்டிருந்தன. அந்த வயதில் எப்போதும் என்னை ஈர்த்தது சினிமாச் சஞ்சிகைகளான பொம்மையும், ஜெமினி சினிமாவும் தான். ஒரு பத்து வயது அளவில் இருக்கும் பையனுக்கு இவை தான் அன்றைய டிக்டாக். ஜெமினி சினிமாவில் நடுப்பக்கத்தில், இரண்டு பக்கத்தையும் சேர்த்து, ஒரு நடிகையின் படம் இருக்கும். ஆனால் அதை யாரோ புதிதாக ஜெமினி சினிமாவை போட்ட அன்றே கிழித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். இதை ஒரு பிரச்சனையாக பெரியவர்கள் கதைத்தார்கள். எல்லோரும் அந்தப் படத்தை பார்த்த பின், அந்தப் படத்தை கிழித்துக் கொண்டு போனால் பரவாயில்லை என்று நினைத்தார்களோ என்னவோ. அதனால் ஜெமினி சினிமாவிற்கு கிட்டே போய் வருபவர்களை எல்லோரும் கொஞ்சம் கவனமாகவே பார்க்காத மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொம்மைக்கு அவ்வளவு காவலும், கண்காணிப்பும் இருக்கவில்லை. அன்று பொம்மையில் வரும் கேள்வி - பதில் பகுதி மிகவும் பிடிக்கும். அன்று ஆகப்பெரிய அறிவாளிகள் என்று நான் நினைத்திருந்தது எம்ஜிஆரையும், சிவாஜியையும் தான். ஒரு பொம்மையில் கேள்விகளுக்கு சிவாஜி பதிலளித்து இருந்தார். இந்த வருடத்தின் சிறந்த பாடல் எது என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 'செந்தூர பூவே செந்தூர பூவே...........' என்று அவர் பதில் சொல்லியிருந்தார். நான் இந்த பாடலை அதுவரை கேட்டிருக்கவில்லை. இந்தப் பாட்டை எப்படியாவது கேட்டு விடவேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக்கொண்டேன். அடுத்த நாள், வழமை போலவே, நான் பாடசாலை போன பொழுது, பாடசாலைக் கதவு பூட்டியிருந்தது. மெதுவாக ஆசிரியரின் வீட்டுக்குள் போனேன். 'சரி வா.................' என்று ஆசிரியர் திறப்புக் கொத்துடன் வந்தார். அந்த நேரம் அவர்களின் வானொலியில் 'செந்தூர பூவே செந்தூர பூவே..........' என்று ஆரம்பித்தது. நான் அசையவேயில்லை. ஆயிரம் தடவைகள் அல்லது அதற்கு மேலும் இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டேன். இந்தப் பாடல் அசைய விடுவதேயில்லை. காணொளியாகப் பார்த்தாலும் அப்படியே. ஶ்ரீதேவியை அவரின் வீட்டில் இருந்து கூட்டி வந்து, இந்தப் பாடலில் அப்படியே நடிக்க வைத்திருப்பார்கள். அவர் இந்தப் பாடலில் கொஞ்சம் கறுப்பாக இருப்பது போல இருக்கும். ஒரு ஊரில் இருக்கும் மிக அழகான பெண் போன்று தான் இருப்பார். ஒரு நடிகை போன்று இந்தப் பாடலில் அவர் இருக்கவில்லை. இப்போது எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் அப்படியே அவரின் கடைசி நாட்களும் ஞாபகத்திற்கு வரும். அது வேற ஶ்ரீதேவி, செந்தூரப் பூ ஶ்ரீதேவி வேற என்றும் மனதில் தோன்றிக் கொண்டிருக்கின்றது.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
🤣................ இதை பல திரிகளில் பார்த்திருக்கின்றேன், பையன் சார்.............. இப்படி இலேசான விடயங்களும் இடையில் வந்து போகும் போது, சில வேளைகளில் திரிகளில் மனக்குறைகள் ஏதும் ஏற்பட்டிருந்தால், அவை காணாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு போல........... என்னுடைய சுய ஆக்கங்களுக்கும் இப்படி நடக்கின்றது............ அது எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது.................❤️.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
👍............... இப்படித்தான் சொல்லுகின்றார்கள், கிருபன். ஆனால், ஏதோ பிரச்சனையாகி விட்டதே என்று எல்லா வாடிக்கையாளர்களும் கதறிக் கொண்டிருக்கும் போது, என்னவென்று விழுந்தடித்து போய் பார்த்தால், சில சர்வர்களில் சிபியு 90 வீதத்திற்கும் மேலே போய் கடைசி மூச்சை அவை விட்டுக் கொண்டிருக்கும். இது என்ன கோலம் என்று உள்ளே தோண்டிக் கொண்டு போனல், மூல காரணம் அநேகமாக ஒரு long running SQL/Database query ஆக இருக்கும். 28 வருடங்களாக இங்கு வேலை செய்கின்றேன், எந்த தொழில்நுட்பம் வந்தும் இது மட்டும் மாறவே இல்லை...............
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
@வீரப் பையன்26 பையன் சார், முதலில், தமிழில் விடாமல் எழுதிக் கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் கைதட்டல்கள்...........👍. இங்கு களத்திற்கு பங்கெடுப்பவர்கள், பார்வையாளர்கள் என்று பலரும் வருவதேயில்லை என்று நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால், இப்படியான களங்கள் அப்படித்தான் இருக்கும். இங்கு வந்து சில பந்திகளை தொடர்ச்சியாக எழுதுவது அல்லது வாசிப்பது ஒரு இலகுவான செயல் அல்ல. பரவலான வாசிப்பும், பல்வேறு அனுபவங்களும், கிரகிக்கும் தன்மையும், முயற்சியும் இருந்தால் மட்டுமே அது முடியும். இன்று உலகில் தமிழ் சமூகம் வாசிப்பதில் மிகவும் அடிமட்ட நிலையில் இருக்கும் ஒரு சமூகம். தமிழில் வரும் உலகத்தரமான புத்தகங்கள், கட்டுரைகளைக் கூட ஒரு 200 பேர்கள் வாசித்தாலே, இருக்கும் ஒன்பது கோடித் தமிழர்களில், அது ஒரு பெரிய விடயம். இங்கு களத்தில் 200 பேர்கள் ஒன்றைப் பார்வையிடுகின்றார்கள் என்றால் அதையிட்டு அதிகம் கவலையில்லாமல் நாங்கள் முன்னே சென்று கொண்டிருக்கலாம். எங்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம் ஒரு விதிவிலக்கு. பொதுவான சமூக விதிகள் அந்த காலகட்டத்திற்குப் பொருந்தாது. கேளிக்கைகள் எப்போதும் மக்கள் மத்தியில் பிரபலமானவை. அது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வடிவில் வந்து கொண்டேயிருக்கும். ஆனால் அவற்றின் இறுதி முடிவு பெரும் சலிப்பாகவே முடியும். இந்தப் பொருளற்ற கேளிக்கைகளால் வாழ்வே ஒரு நாள் சலிப்பாக மாறும். ஒவ்வொரு தனிமனிதனும் இதிலிருந்து வெளியே வருவது அவரவர் பொறுப்பே. புதைமணலில் சிக்கி போய்க் கொண்டிருப்பது போல போய்க் கொண்டிருக்கும் சமூகம். இப்படியான களங்கள், உரையாடல்கள் சில மனிதர்களையாவது மீட்டெடுக்கும் ஒரு முயற்சி என்றும் சொல்லலாம். ஒருவர் தன்னைத்தானே மீட்டெடுக்கும் முயற்சி இது என்றும் சொல்லலாம். அறம் - பொருள் - இன்பம் - வீடு என்று சொல்லப்படுவதில் வீடு என்பது விடுதலை. அறிவதால் வரும் விடுதலை அது. ஒன்றை தெளிவாக அறிந்தவுடன் அதிலிருந்து விடுதலை கிடைத்துவிடுகின்றது. கேளிக்கைகளால் விடுதலை வருவதில்லை. வாசிப்பதாலும், உரையாடல்களாலும் அது கிடைக்கக்கூடும். அடுத்த தலைமுறையின் இன்றைய உலகம் வேறு. எனக்கு இரு பிள்ளைகள் - மகன் 28 வயது, மகள் 25 வயது (எனது வயது 56). அவர்களின் உலகமும், என்னுடைய உலகமும் வேறுவேறானவை. ஆனால், 'எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தார்......................' என்பது போல, பின்னொரு காலத்தில் என் பிள்ளைகளின் தேடுதல்களும், உங்கள் பிள்ளைகளின் தேடுதல்களும் எங்களுடயது போன்றே வரப் போகின்றது. இவர்கள் இன்று யாழ் களங்கள் போன்றவற்றுக்கு வரமாட்டார்கள். ஆனால், பின்னர் ஒன்றைத் தேடுவார்கள். நானே அப்படித் தானே யாழ் களத்திற்கு வந்தேன்..............🤣. நிர்வாகம் அதன் பொறுப்பில் இருக்கட்டும், நாங்கள் எங்களின் பொறுப்பில் இருப்போம். சில சொற்கள், தனிமனித தாக்குதல்கள், சீண்டல்களைத் தவிர்த்து விட்டால், இங்கே நிர்வாகம் ஒருவரையும் ஒன்றும் சொல்வதில்லையே. போராளிகளையும், போரட்டத்தையும் இழிவு செய்யும் கருத்துகளை தவிர்த்து, வேறு எந்தக் கருத்தையும் நாங்கள் முன்வைக்க இங்கு தடை ஏதும் இல்லையே. எதையும் இழிவு செய்யாமல், நாகரிகமாக உரையாடுவதும் ஒரு விடுதலையே.........................🙏.
-
வேங்கைவயலில் மலம் கலந்தது யார்?
நேற்று விசாரணையின் அறிக்கை வந்தவுடனேயே திருமாவும், ரஞ்சித்தும் இதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தது. அவர்களே அவர்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலப்பார்களா என்ற கேள்விக்கு, அவர்கள் செய்திருக்கக்கூடும் என்பதற்கும் சாத்தியம் இருக்கின்றது. அவர்கள் தான் செய்தார்கள் என்று உறுதியாக நான் சொல்ல வரவில்லை. டிஎன்ஏ சோதனை, அலைபேசி உரையாடல்கள், அதன் உண்மைத் தன்மை என்று எல்லாவற்றையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வசதி இன்று எந்த ஆளும் தரப்பிடமும் இருக்கின்றது. சில தலைவர்கள், சீமான், ராமதாஸ், அன்புமணி, போன்றவர்கள் இந்த விடயத்தில் பட்டும் படாமலுமேயே இருப்பார்கள். ஏனென்றால் இது பட்டியல் சமூக மக்கள் சம்பந்தமானது.................😌. திமுகவை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு இது நல்ல ஒரு வாய்ப்பு.............. திமுகவை குற்றம் சொல்வதற்கு.
-
வேங்கைவயலில் மலம் கலந்தது யார்?
இதற்குப் பின்னர் மின்னம்பலம் இன்னொரு செய்தியை மேலதிக விபரங்களுடன் வெளியிட்டிருக்கின்றனர்: https://minnambalam.com/political-news/vengaivayal-chargesheet-cbcid-shocking-information/ கீழடியும், வேங்கைவயலும் அருகருகே இருக்கும் இடங்கள்............... இந்த சம்பவத்தால், இந்தப் பிரதேசம் எங்களின் தொன்மை என்று பெருமைப்படுவதா அல்லது இது என்ன கொடுமை என்று கூனிக்குறுகுவதா என்ற வினா கேட்கப்பட்டிருந்தது. இது பட்டியல் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட சாதியக் கொடுமை என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருந்தது. ஆனால் இறுதியில் பட்டியலினத்தவர்களே இதைச் செய்தார்கள் என்று முடிவு விசாரணையில் வந்திருக்கின்றது................😌.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
பையன் சார், நீங்கள் சொல்வது மற்றைய இடங்களுக்கு பொருந்தும் என்றாலும் யாழ் களத்திற்கு பொருந்தாது என்று தான் நினைக்கின்றேன். இப்படியான ஒரு களத்திற்கு காணொளி பார்க்க வருவது அப்படி வருபவர்களுக்கு நேர விரயம் என்றும் நினைக்கின்றேன். மிக இலகுவாக பல்வேறு காணொளிகளையும் வேறு இடங்களில், தங்கள் தங்கள் வசதிக்கேற்ப மிக இலகுவாக பார்த்துக் கொள்ளலாம் அல்லவா, அவர்கள் ஏன் இங்கு வரவேண்டும். ஒருவர் ஓயாமல் தன்னுடைய கருத்துகளாக வேறு மனிதர்களின் காணொளிகளை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கின்றார் என்றால், அவர் ஒரு கருத்தாளர் என்றில்லாமல் ஒரு பிரச்சாரகர் அல்லது கழகப் பேச்சாளர் போன்று ஆகின்றார். ஒரு பிரச்சாரத்தையோ அல்லது கொள்கை பரப்பையோ ஒரு தடவைக்கு மேல் அந்தக் கட்சியைச் சாராதவர்கள் கேட்கத் தேவையில்லை. அவர் சொல்ல வருவதில் எதுவும் புதுமையாகவோ அல்லது சிந்தனையை வளர்ப்பதாக தொடர்ந்தும் இருக்கமாட்டாது. இது ஒரு ரசிகனின் மனநிலை. தேசியம், திராவிடம் என்று மட்டும் இல்லை, இதே போக்கு அமெரிக்கா, ரஷ்யா, விளையாட்டுகள், அரசியல் கட்சிகள், நடிகர்கள், ஆளுமைகள் போன்ற பல விடயங்களிலும் பலரால் பொதுவெளிகளில் வெளிப்படுத்தப்படுகின்றது. சிறிய காலப்போக்கிலேயே அவர்களுடன் விவாதிப்பதிற்கு எதுவும் கிடையாது என்றாகிவிடுகின்றது. ஒவ்வொரு ரசிகனின் முன்னாலும் ஒரு இரும்புத்திரை உள்ளது. அதைத் தாண்டி எதுவும் அந்த ரசிகனை அடைவதேயில்லை. அவர்கள் சார்ந்த காணொளிகள் மட்டுமே அவர்களின் ஊடகம் என்றாகிவிடுகின்றது. உதாரணமாக, திமுக கழக பேச்சாளர் ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்களை எத்தனை தடவைகள் கேட்க வேண்டும்.......... ஒரு தடவை மட்டும் போதுமல்லவா. அதையே தான் இந்த காணொளிகளைப் பற்றியும் நான் சொல்லுகின்றேன். காணொளிகளுக்கும், வாசிப்புக்கும் இருக்கும் இடைவெளி மலையும், மடுவும் போன்றது என்று கூட சொல்லமுடியாது. இரண்டும் தொடர்பு அற்றவை. காணொளிகள் அவற்றைப் பார்ப்பவர்களை ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே சுய சிந்தனை எதுவுமின்றி இழுத்துச் செல்லும். ஒரு சினிமா போல. வாசிப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி. வாசிப்பவரும், வாசிக்கப்படுவதும் சேர்ந்தே பொருளை உண்டாக்குகின்றன. வரிகளுக்கிடையில் அனுபவங்கள் வந்து போகும். சிந்தனைகள் சிதறும். காட்சி ஊடகம் என்பது ஓடும் ஆறு போல, அதன் திசையில் நிற்காமல் ஓடி அது முடிந்துவிடும். வாசிப்பவற்றை தொகுத்து சுருக்கமாக எழுதுவதோ அல்லது சொல்லுவதோ இன்னும் ஒரு படி. புரிதல் இல்லாமல் தொகுத்து எழுதவே முடியாது. இவை தான் ஒரு கருத்துக்களத்தின் அடிப்படைகளாக இருக்கவேண்டும். காணொளிகளும் ரசிக மனநிலையும் நல்ல காத்திரமான கருத்தாடலுக்கு ஏற்றவை அல்ல, அவை நல்ல கருத்தாடலுக்கு துணை புரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது, இன்றைய பெரும்பான்மையினர் என்ன செய்கின்றனர் என்பது நாளைய உலகை தீர்மானிப்பதில்லை. இன்றைய பெரும்பான்மையினர் நுகர்வோர் போன்றோர். ஆயிரம் ஆயிரம் வருடங்களாக அப்படித்தான் உலகம் இருக்கின்றது. நுகர்வோர்கள் நாளைய உலகை தீர்மானிப்பதில்லை. இதற்கு மாறாக ஒரு சிறு பிரிவு எப்போதும் இருக்கும். அவர்கள் சித்தசுவாதீனம் அற்றவர்கள், போராளிகள், முசுறுகள், கற்பனாவாதிகள் போன்று அவர்கள் வாழும் நாட்களில் தோன்றக்கூடும். ஆனால் அவர்களே நாளைய உலகை என்றும், எங்கும் வடிவமைக்கின்றார்கள். டிக்டாக் அதிகம் பார்க்காத, ஃபேஸ்புக் அவ்வளவாக உபயோகிக்காத சிலரும் இளைய தலைமுறையில் இருப்பார்கள். அடுத்து வரும் உலகத்தை அவர்கள் தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு வகையில் தியாகம் தான். ஆனால் அவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். டிக்டாக் வீடியோ ஒன்றைத் தன்னும் பார்க்க வேண்டிய தேவையோ அல்லது ஒரு ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பிக்க வேண்டிய தேவையோ எனக்கு இதுவரை வரவில்லை. அதனால் தானோ என்னவோ, எழுத ஆரம்பித்தால் அது நீளம் நீளமாகவே வருகின்றது...................🤣.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
வணக்கம் வயலார். உங்களின் கருத்துகளை தயக்கமின்றி முன்வையுங்கள். இணைக்கப்படும் காணொலிகளை பெரும்பாலும் பலரும் பார்ப்பதில்லை என்று தான் நினைக்கின்றேன். நானும் பார்ப்பதில்லை, ஒன்றோ இரண்டோ தவிர. 'இரும்புக் காலம்..............' இப்பொழுது ஏன் பொதுவெளியில் பேசப்படுகின்றது என்பது செய்திகளில் இருந்து தெரிந்தது. அறிவியலோ, வரலாறோ ஒன்றை நிரூபிக்க புறவய நிரூபணம் என்பது முக்கியமானது. அது போலவே தான் அவற்றை கொண்டு வருபவர்களின் கல்வி, தகுதி மற்றும் அனுபவங்கள் என்பவையும் இன்றியமையாதவை. இவைக்கு மாற்று இல்லை.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
பையன் சாரும், கோஷானும் நல்ல ஒரு காம்பினேஷன்............. வேலையில் தலைக்கு மேல வேலை என்று சொல்லி விட்டு, என்ன ஈ......... என்று சிரித்துக் கொண்டே இருக்கின்றீர்கள் என்று கேட்டு விட்டுப் போயிருக்கா.............. இதோட ஜஸ்டினும், வாலியும் சேர்ந்தால், கமலின் சிரிப்பு படங்கள் கூட கிட்டவும் நிற்காது....................🤣.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
🤣................ தல இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமாக நடக்குது............. சில feasible studies செய்யச் சொல்லி தல தன்னுடைய குரூப்பிற்கு கட்டளை போட்டிருக்குதாம்........... எலான் மஸ்க் வேற மனிதர்களின் தலைக்குள் ஒரு சிப் வைக்கப் போகின்றேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்................😜.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
தொடராக வாசிப்பது, அதையொட்டி சிந்திப்பது, பின்னர் சுருக்கமாக, ஆனால் தெளிவாக அதை வெளிப்படுத்துவது என்பது ஒரு பெரிய செயற்பாடு. அவை எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும், எங்களின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான கருத்துகள் உடையவர்களிடம் இருந்து வந்தாலும் கூட, மிகவும் மதிக்கப்பட வேண்டிய, கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய கருத்துகள். அதே வேளையில், காணொளிகள் தான் கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படைகளும், ஊடகங்களும் என்றால், அதை இலகுவாகக் கடந்து போய்விடலாம். பாரிசாலனும், ஒரிசா பாலுவும், மன்னர் மன்னனும் தான் தமிழ் ஆய்வாளர்கள் என்றால், அது நாங்கள் ஐராவதம் மகாதேவன் போன்ற முன்னோடிகளுக்கு மட்டும் இல்லை, தமிழ் இனத்திற்கே செய்யும் நிந்தனை.
-
பாட்டுக் கதைகள்
👍.................. 'பத்துப்பாட்டு' என்று தலைப்பு வைத்து பத்து சினிமாப் பாடல்களில் சுற்றி இருக்கும் பழைய நினைவுகளை எழுத வேண்டும் என்று தான் இதை ஆரம்பித்தேன், அக்கா. சினிமாப் பாடல்களுக்கும், என்னுடைய நினைவுகளுக்கும் பத்துப்பாட்டு என்று சங்க இலக்கியங்கள் சொல்வதை தலைப்பாக வைப்பது என்று வந்த அந்த எண்ணத்தை பின்னர் தலையில் ஒரு குட்டுக் குட்டி தடுத்து நிறுத்தினேன்.................🤣. ஆனாலும் பத்து பாடல்கள் எழுதுவதாகத்தான் இருக்கின்றேன். சீமானின், திராவிடத் திரிகளிலேயே எழுதக் கிடைக்கும் பொழுதெல்லாம் போய்விட்டது, அக்கா..................🤣. இன்றைக்கு முடிந்தால் இரண்டாவது நினைவை எழுதுவதாக உள்ளேன்.............. சிலராவது தொடர்ந்து அவர்களின் அனுபவங்களை பகிர்வார்கள் என்றும் நினைக்கின்றேன்............. பலதும் பத்துமாக வேறு சில விடயங்களும் வந்து போகும் போல..............👍.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
அண்ணா, நாங்கள் பலர், நீங்களும் நானும் உட்பட, தலைவர் மேல் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் ஒன்றே தான். அதே போலவே எம் மக்களுக்கு யாராவது ஏதாவது சிறு நன்மைகள் ஆவது செய்து விட மாட்டார்களா என்ற ஏக்கமும், தவிப்பும் கூட. ஒரு சாதாரண traffic violation நடந்த பொழுது வந்த பதிவைப் பார்த்தோம். அதில் ஏன் தலைவர் பெயர் வர வேண்டும், அது தலைவருக்கு காட்டும் மரியாதையா.......... அது எம் தலைவருக்கு ஒரு இழிவல்லவா. இதையே தான் சீமானும் செய்கின்றார். வெறும் தன்னலம் கருதி தலைவர் பெயரை மேடை மேடையாக விற்கின்றார். இங்கு களத்தில் ஒரு நண்பரின் உரையாடல் நாகாரீகம் இல்லை என்று தெரிந்தால், கள மட்டுறுத்துனர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர், அவரை கட்டுப்படுத்துகின்றனர். இதுவே தான் பாடசாலைகளில் நடக்கின்றது, விளையாட்டு மைதானங்களில் நடக்கின்றது. ஆனால், பொதுவெளியில் தரக்குறைவாக தொடர்ந்து உரையாடியும், நடந்தும் கொள்ளும் இந்த இருவரையும் நாங்கள் ஏன் கண்டிக்கின்றோம் இல்லை. இதை ஒரு சமூகமாக நாங்கள் கண்டிக்கவேண்டும். இவர்கள் இருவரும் அடுத்த தலைமுறைக்கு ஒரு உதாரணங்களே இல்லை. இவர்களால் ஏதாவது தொடர் நன்மைகள் எங்கள் சமூகத்திற்கு ஆகியிருக்கின்றதா............ இவர்களால் உண்மையான பிரச்சனைகள் புதைக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு, இவர்கள் இருவரும் மட்டும் தானே அதன் மேல் நிற்கின்றார்கள். யாழ் மருத்துவமனையில் 180 தற்காலிக பணியாளர்களின் கதி இனி என்ன............... யாழ் மருத்துவமனையில் சத்யன் இப்போதும் பணிப்பாளராக இல்லையா............. மாவட்டங்களின் அபிவிருத்திக் கூட்டங்கள் இனி நடக்காதா................... சூரிய மின்சார இணைப்பு கொடுப்பதில் இனி ஊழல் நடக்காதா.............. இதுவே தான் ஒவ்வொன்றின் கதியும். எல்லாமே ஒரு நாடகம் போல நடந்து முடிந்து கொண்டிருக்கின்றது. சீமானின் செயல்களும் இப்படியே.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
பையன் சார், உங்களுக்கும் கோஷானுக்கும் இடையில் இருக்கும் பூர்வஜென்ம பந்தத்தில் நாங்கள் சில அப்பாவிகள் இடையில் வந்து மாட்டுபட்டு விட்டோமோ.......................🤣.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இதில் மாற்றுக்கருத்து கிடையாது, கோஷான். எங்களின் வழியில் அவருக்கான எதிர்ப்பை நாங்கள் காட்டவே வேண்டும். அவர் ஒரு போலி, அவர் செய்யும் அரசியல் வெறும் பிழைப்புவாதம் என்று தான் நானும் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். ஆனால் நீங்கள் அடிக்கும் அடி அணுகுண்டு போடுவது போல........... புல்லுப் பூண்டுகள் கூட தப்பாது போலத் தெரியுது...........🤣.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
நீங்கள் வாசிப்பவற்றில், அறிந்து கொள்வதில் சிலவற்றை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆர்வமாக வாசிப்போர் பலர் இங்கு உள்ளனர். கருத்துப் பரிமாற்றம் என்று வரும் போது, சில வேளைகளில், சில சங்கடங்கள் வந்து விடுவது உண்டு தான்.......... மனதில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.............🙏.