Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. இரண்டு விதமான பயிற்சிகளிலும் இவர்கள் ஈடுபடுகின்றார்கள். இராணுவ விமான நிலையங்கள் மற்றும் தளங்களிலும், சில பயணிகள் விமான நிலையங்களிலும். யுத்த விமானங்களின் பயிற்சிகளையோ அல்லது யுத்த விமானங்களைக் கூட நாங்கள் வருடத்தில் ஓரிரு நாட்கள் தவிர்த்து இங்கே பார்ப்பது கிடையாது. வருடத்தில் ஒன்றோ இரண்டோ நாட்கள் ஒரு 'Air Show' நடத்துவார்கள், அதுவும் நகரை விட்டுத் தள்ளி இருக்கும் இராணுவ விமான தளத்திற்கு அருகில். அங்கே தான் இந்த வகையான விமானங்களை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும். என்னுடைய முதலாவது வேலை இப்படியான ஒரு தளத்திற்கு வெளியே இருந்தது. அப்பொழுது நான் குடியுரிமை பெற்றிருக்கவில்லை, ஆதலால் ஒரு எல்லை தாண்டி நான் போகவே முடியாது. அந்த எல்லைக்கு பின்னல், பல மைல்கள் தள்ளி, ஓடுபாதைகள் இருக்கின்றன. ஆனால், சில பயிற்சிகள் பயணிகள் விமான நிலையங்களின் அருகில், அந்த சூழ்நிலையில், மிகத் தாழ்வான உயரங்களில் நடத்தப்பட வேண்டியிருக்கின்றது. Real life conditions........... மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட விதிகளும், வெளிகளும் இருக்கின்றன என்கின்றனர். மீறும் போது விபத்துகள் நடந்துவிடுகின்றன. சமீபத்திய லாஸ் ஏஞ்சலீஸ் நெருப்பின் போது இதையொட்டிய ஒரு சிக்கல் வந்தது. விமானங்கள் மூலம் தீயணைக்கும் நடவடிக்கைக்கு லாஸ் ஏஞ்சலீஸில் இருக்கும் ஐந்து விமான நிலையங்களுக்கும் வந்து போகும் பயணிகள் விமானங்கள், இராணுவ விமானங்கள், தனியார் விமானங்கள், ட்ரோன்கள் என்று பல வகையானவர்களுடன் தீயணைக்கும் விமானங்கள் அனுசரித்துப் போகவேண்டி இருந்தது. அப்படி இருந்தும் ஒரு ட்ரோன் ஒரு தீயணைக்கும் விமானத்தின் இறக்கையுடன் மோதி, அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
  2. தமிழில் இருக்கும் பழைய இலக்கியங்கள் சிறந்தது என்று சொல்கின்றோம். ஆனால், இன்றிருக்கும் தமிழர்களில் கம்பரின் கம்பராமாயணத்தில் இருக்கும் பத்து பாடல்களை என்றாலும் எந்த துணையும் இல்லாமல் வாசித்து பொருளும், அதன் அழகும் அறியும் ஆற்றல் எத்தனை பேருக்கு உள்ளது என்பது வருத்தமளிக்கும் ஒரு விடையையே கொடுக்கும். இதுவே தான் இரண்டு வரிகள் உள்ள திருக்குறளுக்கும். 'அகர முதல எழுத்தெல்லாம்.................' என்னும் முதற் குறளையே அதன் அர்த்தத்தில் எத்தனை வீதமானவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று பார்த்தோம் என்றால், அங்கேயும் ஏமாற்றம் தான் மிஞ்சும். இன்றைய தமிழர்கள் மத்தியில் இளங்கோவடிகள் நிலை இன்னும் பரிதாபம். ஆகவே, அன்றைய இலக்கியம் - இன்றைய இலக்கியம் என்பதன் ஊடாக வரும் வேறுபாட்டை விட, அன்றைய தமிழ் சமூகம் - இன்றைய தமிழ் சமூகம் என்பதன் ஊடாக வரும் வேறுபாடே பிரதான ஒரு காரணியாக இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன். தேவாரங்கள், திருவாசகங்கள், அதையொட்டிய பக்தி இலக்கியங்கள், கூட்டுப் பாடல்கள் போன்றவை தான் கடைசி ஆயிரம் வருடங்களிற்கு மேலாக தமிழ் மொழியில் இருந்த பெரும்பாலான இலக்கியச் செயற்பாடுகளாகவும் இருந்தன. இதே கால கட்டத்தில் நாயக்கர்களின் வருகை, முகாலயர்களின் வருகை, ஐரோப்பியர்களின் வருகை என்பனவும் அடங்குகின்றன. மொழியில், இலக்கியத்தில், தனிமனித சிந்தனைகளில் சுதந்திரமான எந்த எழுச்சியும் இந்தக் காலகட்டதில் நடக்கவும் இல்லை. பாரதியார் வரும் வரை இதுவே தான் நிலைமை. தமிழ் மொழியின் உண்மையான இருண்ட காலம் இங்கே தான் உருவாகியது என்று நான் நினைக்கின்றேன். அதன் பின்னர், எங்கேயோ போய் விட்டிருந்த உலகத்தை ஓடிப் பிடிக்க எங்களில் சிலர் முயன்றார்கள். ஆனாலும் மக்களைக் கவர்வதில் சினிமாவும், அரசியலும் ஒரு மாய உலகத்தை உருவாக்கி முழுச் சமூகத்தின் ரசனையையும், தேவையையும் மாற்றிவிட்டார்கள். மிகவும் மேம்போக்கான சிந்தனைகள், கருத்துகள், ரசனைகள் என்பனவே எங்களின் அடையாளமாக மாறிப் போய்விட்டன. இளங்கோவடிகள் இன்றிருந்து இன்னொரு சிலப்பதிகாரத்தையே இன்று, இன்றைய வழக்கில் எழுதினாலும், அதுவும் இருநூறு பிரதிகளே இன்று விற்பனையாகும். ஒரு இரண்டாயிரம் பேருக்கு மட்டுமே அவரைத் தெரியவரும். அவர் வீட்டில் அடுப்பு எரியாது. தமிழில் பாரதிக்கு பின் வந்த ஒரு நூறு எழுத்தாளர்களின் ஆயிரம் படைப்புகளாவது மண்ணையும், மக்களையும், வரலாற்றையும், பண்பாட்டையும் சொல்லி நிற்கின்றது. இவை தமிழில் நவீன உலகத்திற்கான ஒரு உரைநடையை அறிமுகப்படுத்தியும் இருக்கின்றன. ஆனால், தமிழ் மக்கள் மட்டும் இல்லை, தெலுங்கு மக்களும் கூட தொடர்ச்சியாக அவர்களின் மொழியை, அவற்றின் அழகை இழந்து கொண்டே இருக்கின்றார்கள். மேற்கு வங்கமும், கேரளாவும் இந்தச் சுழலுக்குள் அகப்படவில்லை. இது அங்கே இடதுசாரிகள் பலமாகும் முன்னேயே இருந்த நிலையும் கூட. ஹெமிங்வேயையும், 'கிழவனும் கடலும்' பற்றிக் கூட பேசும் தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆனால், ப.சிங்காரம் பற்றியோ அல்லது அவரின் 'புயலில் ஒரு தோணி' பற்றியோ பேசுவோரை எண்ணிவிடலாம். தமிழில் வந்த நாவல்களில் ஆகச் சிறந்தது என்று சொல்லகூடியது 'புயலில் ஒரு தோணி'. சிங்காரம் அப்படியே வெறுத்து ஒதுங்கினார். அவர் கடைசி நாட்களில் எவருடனும் பேசக்கூட விரும்பவில்லை. இன்றும் அதே நிலை தான். 'கொற்றவை' நாவலை மிகவும் பிராயசைப்பட்டே வாசிக்க ஆரம்பித்தேன். முடிவில் பெரும் பிரமிப்பாக அது முடிந்தது. அது ஒரு வாழ்வனுபவமாக இறுதிவரை வரும். எங்களின் சமூகம் ஏன், எப்படி இப்படியாகியது என்று ஆரம்பிப்பதே சரியான கேள்விகளாக இருக்குமோ என்று எனக்குத் தோன்றுகின்றது.
  3. 🤣................... பிள்ளைகள் வளர்ந்து வெளியே போன பின், நிறைய நேரம் சும்மாவே கிடக்கும், வில்லவன். அப்பவும் இதே குருவிகள் வந்து போகும்.................🤣. இங்கே களத்திலும் நாங்கள் சிலர் சுதந்திரமாக, மனதுக்கு பிடித்ததையும், மனதில் தோன்றுவதையும் அந்த அந்தப் பொழுதுகளில் எழுதிக் கொண்டிருக்க, ஆனால் வேறு சிலர் சில நோக்கங்களுக்காகவும், சில பயன்களுக்காகவும், சில பின்புலங்களுடன் எழுதுகின்றார்கள் என்று சொல்லப்படும் போது சிறு குருவிகளும், பருந்துகளுமே மனதில் வந்தது..................
  4. எங்களின் மக்களைப் போலவே தான், அண்ணா, இந்த மக்களும். ஒரு வாழ்வைத் தேடி ஓடி வந்தவர்கள். அதில் சிலர் சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்பவர்கள் ஆகவும் இருப்பார்கள் தான். எங்கள் மக்களில் சிலரும் அப்படி நடந்து கொண்டவர்கள் தானே............... அதற்காக எல்லோரையுமா பிடித்து அனுப்புவது.........................😌. ____________________________________ அந்த விமான விபத்து தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது. மிக அருகிலேயே எத்தனையோ தடவைகள் அதே இடத்தில் முன்னர் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. மிகவும் நெருக்கமான வான் மற்றும் பறக்கும் பிரதேசம் அது. அங்கு இராணுவ பயிற்சிப் பறப்புகள மிகவும் கவனமாக இருக்கப்பட வேண்டியவை. 200 அடிக்கு கீழே பறந்திருக்க வேண்டிய பயிற்சி உலங்கு வானூர்தி, 300 அடிகளுக்கு மேலே போய்விட்டது. இந்த மிகக் குறைந்த உயரத்தில், இவ்வளவு கட்டுப்பாடான பிரதேசத்தில், விமானிகளால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது..................... இராணுவ விமானங்களும், சாதாரண விமானங்களும் ஒரே அலைவரிசையில் தொடர்பு கொள்வதில்லை. ஒன்று VHF, மற்றையது UHF. இது எப்போதும், எங்கேயும் உள்ள நடைமுறைதான். ஆகவே அவர்கள் இருவரும் நேரடியாக தொடர்பு கொள்ளவும் முடியவில்லை................
  5. @kandiah Thillaivinayagalingam தில்லை ஐயா இங்கு களத்தில் மிகவும் பயனுள்ள, சிந்திக்கத் தூண்டும், தெளிவைக் கொடுக்கும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றார். அவர் எழுதியதில் ஒன்று - 'சோதிடமும் அசட்டு நம்பிக்கையும்'. இதே போலவே 'பண்டைய தமிழர்களின் மூட நம்பிக்கைகள்' என்ற தலைப்பில் பல கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கின்றார். அவைகளில் பல இன்றும் தொடருகின்றது, இன்றைய தமிழர்களின் மூட நம்பிக்கைகளாக, என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. மோகன் அண்ணாவும் இந்தக் கட்டுரைகளை 'Our Picks' என்ற தெரிவில் சரியாக முதன்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றார். மாற்றுச் சிந்தனைகள், வேறு நம்பிக்கைகள் உள்ளவர்களும் வாசிக்க வேண்டிய ஆக்கங்கள் இவை. உதாரணமாக, சில மாதங்களின் முன், இங்கு களத்தில் ஒரு பால் திருமணம் பற்றிய ஒரு உரையாடலில் தில்லை ஐயா நீண்ட விளக்கங்களை கொடுத்திருந்தார். அவருடைய கருத்துகளுடன் முற்று முழுதாக ஒத்துப் போக முடியாவிட்டாலும், பல விடயங்களை அவருடைய எழுத்தில் இருந்து அறியமுடிந்தது...............
  6. என்னதான் வீரம், திறமை என்று பலரிடமும் இருந்தாலும், எல்லாவற்றையும் ஒருங்கமைக்கவும், ஒழுங்கமைக்கவும் ஒரு நல்ல தலைமை தேவை போல.......😔
  7. நீங்கள் சொல்வது சரியே. பழைய போலீஸ் நிலைய ஒழுங்கையால் வந்து எள்ளங்குளம் போகும் ஒழுங்கையில் அந்த வீடு இருந்தது. அது வல்வெட்டி தான். அப்பொழுது நாங்கள் வேவில் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்தோம். வல்வெட்டி, கம்பர்மலை, பொலிகண்டி, தொண்டைமனாறு இப்படி சுற்றி இருக்கின்ற எல்லா சிறு ஊர்களையும் என் ஊர் என்றே சொல்லுகின்றேன். வல்வை நகரசபைக்குட்பட்ட பகுதிகள்...........👍. தங்கத்துரை அவர்களையும், ஜெகனையும், பண்டிதரையும், சங்கரையும், சூசையையும், கஸ்ட்ரோவையும் இப்படி இன்னும் எத்தனையோ பேர்களை அயலூர்க்காரர்களாக ஒருபோதும் எண்ணியதேயில்லை...............
  8. அப்படியே இருந்து விட்டுப் போகட்டும், அண்ணா.......................👍. என்ன, ஒரு பெரிய அரசியல்வாதியாகி, புகழ்பெற்று, திடீரென்று ஒரு நாள் அகாலமாகப் போய்விடுவனோ என்ற புதுக்கவலை ஒன்று மனதில் துளிர் விடாமல் இருந்தால் சரி................அமெரிக்காவில் ஒரு அரசியல் வெற்றிடம் இருக்குது என்றும் சொல்கின்றார்கள்..................🤣.
  9. 10 வீதம் வரி போடப் போகின்றோம் என்று ட்ரம்ப் சொன்னவுடனேயே, 'இங்கே பாருங்கோ............ பேச்சு வெறும் பேச்சாகவே இருக்க வேண்டும்..................' என்று பவ்வியமாக நிற்கிறவர்கள் குண்டு எல்லாம் அமெரிக்காவிற்கு போடமாட்டார்கள். அடக்க முடியாத கோபம் அவர்களுக்கு வந்தால், இந்திய எல்லைப் பகுதிக்கு போய், அங்கே போடுவார்கள்....................😜. தாவடியில் முதலாவது விமானக்குண்டு வீச்சு. இரண்டாவது குண்டு வீச்சு என் ஊரில். என் வீட்டிற்கு சில வீடுகள் பின்னால் இருந்த ஒரு வீட்டிற்கே குண்டு போட்டார்கள். என்னுடைய வீட்டின் மேலே விமானங்கள் இரண்டு குத்தி இறங்கின. 'இது என்ன, நல்ல சர்க்கஸ் ஆக இருக்குதே................' என்று நாங்கள் ஆவென்று பார்த்துக் கொண்டு நின்றோம். அப்படியே கழட்டி விட்டார்கள் குண்டுகளை..................... விழுந்தடிச்சு ஓடிப் போய் முற்றத்தில் நின்ற கறுத்த கொழும்பான் மாமரத்துக்கு கீழே பதுங்கினோம்..................🤣.
  10. நான் இதை இப்போதைக்கு தரவிறக்கம் செய்யப் போவதில்லை. வேறு ஏதாவது வழிகளில் உபயோகித்து பார்க்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கின்றேன். ஆனால் இதன் source code ஐ எடுத்துப் பார்ப்பதாக உள்ளேன். சீனாவிற்கு என்னுடைய தகவல்கள் எல்லாம் போய்விடும் என்ற பயமில்லை.................. என்னிடம் எதுவுமே இல்லை என்ற விபரம் சீனாவிற்கு தெரிந்து போய் விடுமே என்ற கவலையில் தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை..................🤣.
  11. உங்களின் பார்வையில் தவறு இல்லை, வசீ, அது இன்னொரு வகையானது என்று தான் சொல்லப்பட அல்லது வகைப்படுத்தப்பட வேண்டும். 'இப்படி எழுதும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது...........' என்று ராஜாஜி புதுமைப்பித்தனின் எழுத்துகள் குறித்து கேள்வி எழுப்பியதாகச் சொல்லப்படுகின்றது. 'சாபவிமோசனம்' கதையைப் படித்த பின்னர், அவருக்கு அப்படி தோன்றியது போல. ஆற்றில், நீரில் மிதந்து வரும் மனிதக் கழிவுகளுக்கு ஒப்பானது என்று சாருவின் எழுத்தை சொன்ன இலக்கியவாதிகளும் உண்டு. இன்றைய ஈழத்து படைப்பாளிகளில், முத்துலிங்கத்தை ஷோபா சக்தி ஏற்றுக்கொள்வதில்லை. இப்படியான பல உதாரணங்கள் உண்டு. எந்த நவீன படைப்புகளையுமே, படைப்பாளிகளையும் உலகம் ஒற்றுமையாக ஏற்றுக் கொள்ளாது போல. தமிழில் மொழிபெயர்ப்பில் இருக்கும் சிக்கல்கள் என்றுமே அப்படியே இருக்கின்றது. பெரும்பாலும், இரண்டு மொழிகளும் தெரிந்த, ஆனால் இலக்கியத்தில் பயிற்சி இல்லாதவர்களே மொழிபெயர்ப்பாளர்களாக இருப்பதே அதற்குக் காரணம். கோவிட் காலத்தில் 'அன்னா கரேனினா' இன் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு வாட்ஸ்அப் குழுமங்களில் வந்தது. அதைக் கொடுமை என்று சாதாரணமாக சொல்லிவிட்டுப் போக முடியாது, அது ஒரு பெரிய அவமதிப்பு என்றும் சொல்லவேண்டும். இந்த மொழிபெயர்ப்பாளார்கள் மூலப் பிரதியை உள்வாங்காமலேயே ஏதோ ஒன்றைச் செய்கின்றார்கள். நாளைய உலகை உருவாக்குபவர்கள் இன்று வாழ்பவர்களில் மிகமிகச் சிறிய ஒரு பகுதியினரே. இலக்கியவாதிகள், இலட்சியவாதிகளும் அதற்குள் வருகின்றனர் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகச்சரியே.
  12. இந்தப் பாடல் சில நாட்களாகவே பின் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.......... ஏன் என்று இப்பொழுது காரணம் புரிகின்றது...................🤣. இங்கே களத்தில் இருந்த/இருக்கும் நட்புகள் சிலர், அதிலும் அவர்கள் செயற்பாட்டாளர்கள், இன்று நாங்கள் சொல்ல வருவதை களத்திலும், பொதுவெளியிலும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள் என்பது ஆறுதல் தரும் ஒரு விடயம்..................👍. அறிந்ததும், தெரிந்ததும், அனுமானித்ததும், அனுபவமும் என்பவற்றைக் கொண்டு, இருக்கும் சிறிய நுண்ணுணர்வையும் உபயோகித்து, பொய்யை பொய்யென்று என்று கருத்துகளை எழுதினால், கடைசி ஆயுதமாக 'நீங்கள் என்ன பங்களிப்பு செய்தீர்கள்.................' என்று கேட்கப்படுகின்றது. சரி, என் போன்றோரின் கருத்துகளை விட்டு விடலாம்............. செயற்பாட்டாளர்களின் கருத்துகளையாவது கேட்டுப் பார்க்கலாம் தானே...............
  13. அண்ணா, இப்படி ஒன்றைச் சொல்லி திக்குமுக்காட வைத்து விட்டீர்களே............. எண் சாத்திரம் மட்டும் இல்லை, எல்லா சாத்திரங்களுமே இட்டுக்கட்டிய பொய்கள் அல்லவா..............
  14. ஆதவ் மக்களிடையே பிரபல்யம் இல்லை என்பது அவரது பெரிய பலவீனம். அதனால் தான் இப்பொதைக்கு எங்கென்றாலும் நம்பர் 2 ஆக இருந்தால் போதும் என்று ஒரு கணக்கு வைத்திருக்கின்றார் போல. மக்கள் பிரபல்யமும் ஆதவ்விற்கு கிடைத்து விட்டால், விஜய் ஆதவ்விற்கு ஒரு நேர உணவாகிவிடுவார்.................. விஜய் ஒரு அரசியல்வாதியாக வருவதற்கு முன் நான் போய்ச் சேர்ந்து விடுவேன் போல................🤣. அன்று கூட விஜய்யின் முதலாவது களப் போராட்டத்தில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராடும் மக்களுடனான சந்திப்பு, வெறும் எட்டு நிமிடங்கள் தான், அதுவும் கேரவானை விட்டு இறங்கவேமாட்டன் என்று அங்கே மேலேயே நின்றார். இதுவே எம்ஜிஆராக இருந்தால், ஒரு குடிசைக்குள் புகுந்து, அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு, 'தாய்க்குலமே..... ரத்தத்தின் ரத்தங்களே..................' என்று அவரே அவருக்கென்று எழுதிய வசனங்களை சொல்லிவிட்டு வந்திருப்பார்..................😜. அதற்குப் பின், பரந்தூரும் சுற்று வட்டாரமும் காலம் உள்ள வரைக்கும் இரட்டை இலை தான்..................
  15. ஓணாண்டியார், இதை ஒரு பக்கம் போட்டு விட்டு, தொடர்ந்து இதே பெயரிலேயே இணைந்து இருங்கள். தயவுடன் கேட்கின்றேன்.............. இதை எல்லாம் இவ்வளவு தீவிரமாக எடுக்காதீர்கள். நினைவுகள் தப்புவதும், தப்பாகப் போவதும் எல்லோருக்கும் வழமையே. எதுவும் பிழையாக சொல்லி இருந்தாலும், இருந்து விட்டுப் போகட்டுமே............. எவருமே இங்கு எந்தப் பிழைகளும் விடாதவர்களா...........🙏. நாங்கள் இங்கு எதையும் எழுதுவதாலோ அல்லது விவாதிப்பதாலோ மட்டுமே, களத்திற்கு வெளியே ஒரு துரும்பாவது அதன் இடத்தில் இருந்து அசைந்திருக்காது என்று நல்ல நம்பிக்கையுடன் சொல்லுகின்றேன். இதில் இவ்வளவு அவசரப்படாதீர்கள்......................🙏.
  16. இந்த வார ஆரம்பத்தில் கூட ஆதவ் அதிமுகவில் இணைவதாகவே செய்திகள் கசிந்து கொண்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தவெக பக்கம் வந்துவிட்டார். கிஷோரின் கருத்துப்படி, இன்றைய நிலையில் அதிமுகவும், தவெகவும் இணைந்து தேர்தலை சந்திப்பதே திமுகவை நெருக்கடிக்குள்ளாக்கும் ஒரேயொரு வழி. வேறு எந்தக் கூட்டணியுமே திமுகவை அசைக்கமுடியாது. புஸ்ஸி ஆனந்த் அதிமுகவிடம் தவெக நெருங்குவதை விரும்புவது போல தெரியவில்லை. அவருக்கு வேறொரு திட்டம் இருக்கலாம். தவெகவை அதிமுகவுடன் கூட்டணியாக்க ஆதவ்வால் முடியும். மேலும், தவெகவில் ஆதவ் மிகக் குறுகிய காலத்திலேயே நம்பர் 2 என்னும் நிலைக்கும் வந்துவிடுவார். எடுத்த எடுப்பிலேயே நம்பர் 3 ஆக உள்ளே போகின்றார். சில வாரங்களின் முன், ஆதவ் விசிகவையும் திருமாவையும் விட்டு விலகும் போது, இங்கே களத்தில் நான் எழுதியிருந்தேன் - இதையிட்டு தமிழ்நாட்டில் அதிகூடிய கவலை கொள்ள வேண்டியவர் புஸ்ஸி ஆனந்த் என்று. இப்போது தவெகவின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆதவ் இன்று லாட்டரி மருமகன், அதனால் இன்று நிதி வசதிகள், பின்புலம் எக்கச்சக்கமாக உள்ளவர். அதே நேரத்தில், இவரது தனிப்பட்ட ஆளுமை, முன்னைய நாட்கள் எல்லாம் முற்றாக வேறானவை. மிகவும் திறன் கொண்ட, அதே நேரத்தில் அளவில்லாத பிடிவாதமும் கொண்டவர் போலவே இருக்கின்றார். அடிப்படையான சில மாற்றங்களை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றார். ஆனால், பின்னர் உதயநிதியுடன் வந்த மோதலால், இன்று ஆதவ்வின் முழுச் சக்தியும் உதயநிதிக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகின்றது. ஆதவ்வா அல்லது உதயநிதியா என்பது தான் உள்ளிருக்கும் போட்டி. தமிழ்நாட்டிற்கு இந்தப் போட்டி நல்லதொரு வருகை. திமுகவை யோசிக்கவைக்கும், தான்தோன்றித்தனமாக அவர்கள் நடக்க எத்தனித்தால் இந்தப் போட்டி அவர்களை கட்டுப்படுத்தும்.
  17. பணம் எதுவும், ஒரு சின்ன கைச்செலவு தவிர, கொடுத்து அனுப்பமாட்டார்கள். கைகளில் விலங்கு போடாமல் அனுப்பினாலே அதுவே பெரிய மரியாதை. அவர்கள் உழைத்து வைத்திருக்கும் பணத்தை எடுத்துப் போக அனுமதித்தால், அதுவே சில ஆயிரங்களாக தேறும். இதே போலவே ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சிலர் திரும்பி வந்தனர், சொந்த விருப்பின் பேரில், இரண்டு நாடுகளின் சம்மதத்துடன். தமிழ்நாட்டின் ஒரு அடையாளமான அந்த கறுப்பு பெட்சீட் மற்றும் சில பொருட்களுடன் மட்டுமே. இரண்டு அரசுகளும் அவர்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை, செய்யவில்லை. தமிழ்நாட்டிலாவது இலவச அரிசியும், மாதாந்த கொடுப்பவனவும், மழைக்கு ஒரு கூரையும் இவர்களுக்கு கிடைத்ததுக் கொண்டிருந்தது. பலர் மீண்டும் அங்கே போய்ச் சேர்ந்துகொண்டனர். அமெரிக்காவின் நீதித்துறை இன்னும் கொஞ்சம் உயிர்ப்புடன் இருக்கின்றது. வழக்குகள் வரும். அதுவரை தடுப்பு முகாம்களில் அடைத்து வைப்பார்கள். சிலரை திருப்பி அனுப்புவார்கள்.
  18. இலக்கில்லா சிறுகுருவி ------------------------------------- இந்த குருவியை எழுத எழுத என்று நினைத்து எழுதாமலேயே போய்க் கொண்டிருக்கின்றேன் இது ஒரு சின்ன சிட்டுக் குருவி தான் கொய்யா மரத்தின் கீழ் கொப்பில் நின்று அப்படியே பறந்து முருங்கையின் ஒரு கொப்பிற்கு அது போகின்றது அங்கிருந்து கண்ணாடி யன்னலில் பாய்ந்து அப்படியே அது சறுக்கி கீழே விழுகின்றது எழும்பி அது மீண்டும் பறந்து கொய்யா மரம் போகின்றது இப்படியே செய்து கொண்டு இடையிடையே நின்று செட்டைகளை விரித்து நீவி விடுகின்றது தன் வாலையும் அப்பப்ப ஆட்டிக் கொள்கின்றது அதையும் இழுத்து நீவியும் விடுகின்றது சில நேரங்களில் காற்றுப் போன ஒரு சின்ன பலூன் போல ஒரு உருண்டையாகி கண்களை மூடி தியானத்தில் இருக்கின்றது திடீரென பாய்ந்து மண்ணைக் கொத்தி எதையோ சாப்பிடுகின்றது பொழுது செக்கலாகி சிவந்து கறுக்க அது எங்கோ போய் விடுகின்றது வானத்தில் வெகு மேலே உச்சத்தில் கழுகுகள் ஒரு சோடியாக ஓய்வே இல்லாமல் வட்டம் போட்டபடியே சுற்றிக் கொண்டிருக்கின்றன.
  19. முவவை விட்டு விடலாம், அவர் ஒரு நல்ல பாடசாலை ஆசிரியர் போல. அக்கறை உள்ளவர், நல்வழி காட்ட வேண்டும் என்று நினைப்பவர் என்று வைத்துக் கொள்ளலாம். ஓரளவு முதிர்ச்சி அடைந்த பின், அவருடையவை நீதி நூல்கள் போல தோன்ற ஆரம்பிக்கும் என்று நினைக்கின்றேன். ஒவ்வொருவரின் ரசனையும், அனுபவங்களும் தனித்தனியானவையே........... நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற மூவரும் ஜாம்பவான்களே. 'ஜெமோவின் ஏஜண்ட்' என்று என்னைச் சொல்வான் என்னுடைய தனித்தமிழ் நண்பன். ஆனால், இங்கு களத்தில் வந்து பார்த்தால், கிருபன் தான் ஜெமோவின் பிரதான ஏஜண்ட்.........🤣. ஜெமோவின் பங்களிப்பு அளப்பரியது. அவரின் எல்லா நியாயங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளாமல், ஆனால் அவரின் ஆக்கங்களை வாசித்தபடியே போய்க் கொண்டிருக்கலாம்.
  20. அப்படி வந்தாலும் 'பூவே இளைய பூவே......... வரம் தரும் வசந்தமே.............' தான் வரும்..............🤣. இவர்கள் இருவரும் அருமையான படைப்பாளிகள்........... என்னுடைய வாசிப்பில் புதுமைப்பித்தனும், அசோகமித்ரனும் மற்ற எல்லோரையும் விட அசத்திப்போட்டார்கள். இவர்களால் மட்டும் எப்படி இப்படி முடிகின்றது என்று திருப்பி திருப்பி இவர்களை வாசித்து, எழுத்தும் பிறவியிலேயே அதாகவே வரும் ஒன்று ஆக்கும் என்று இப்பொழுது கொஞ்சம் சமாதானம் ஆகியுள்ளேன்.......... அதுவும் புதுமைப்பித்தன், அவர் வாழ்ந்த அந்தக் காலத்தில்...............❤️.
  21. 🤣................ 'ஆஹா வந்திருச்சி...... ஆஹஹா ஓடி வந்தேன்........' தான் அடுத்த பாடல் என்று முதலே நினைத்து வைத்திருக்கின்றேன்.......................🤣. அதற்கு முன்னர், இப்படி ஒரு முன்னுரை வரும் என்பது எதிர்பாராதது.....😜.
  22. 🤣.................... (பச்சைகள் முடிந்து விட்டது, கிருபன், இன்று இந்தப் பக்கம் ஒரே சிரிப்பாக போய்விட்டது..............) எங்களுக்கும், ஷோபா சக்திக்கும் ஒரு தொடர்பு இருக்குது தானே, கிருபன்..............🤣.
  23. 🤣..................... காதல் கவிதைகள் என்றாலே அது வாசிப்பவருக்கான ஆக்கம் என்ற அறிதல், எல்லாம் கடந்து போன இந்த வயதில் இன்று தான் எனக்கு வந்திருக்கின்றது.......................😜. நான் படித்த பாடசாலையில் உயரத்தின் படியே முன்னிருந்து இருக்கவிடுவார்கள். இது ஒவ்வொரு வருடமும் பாடசாலை முதல் நாளில் நடக்கும். வரிசையில் எனக்கு பின்னல் பெரிய தள்ளுமுள்ளே நடக்கும். யார் உயரம் என்று................நான் எதுவுமே பேசாமல், வரிசையில் அமைதியாக முதல் ஆளாக நிற்பேன்...............🤣. ஆமாம், வில்லவன், அவர் இந்த இரு வகைக்குள்ளும் இல்லை. பெரிய இடைவெளி விட்டிருக்கின்றார் என்று தான் அவரின் விபரங்களில் இருக்கின்றது. அடுத்த சில நாட்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவரை வாசிப்பதாக உள்ளேன்.................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.