Everything posted by ரசோதரன்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டி விதிகளின் படி, இப்படி எல்லாம் மகிழ்ச்சி அடையக் கூடாது. வேறு அணிகள் வெல்லும் போது மகிழ்ச்சி அடைந்தால், மைனஸ் புள்ளி..............😜. நீங்கள் தெரிவு செய்த அணி வெற்றி பெற்றால், உபிசி (உருண்டு பிரண்டு சிரிக்கவேண்டும். தாங்க்ஸ் செம்பாட்டான்......) நீங்கள் தெரிவு செய்த அணி தோற்றால், உபிஅ (உருண்டு பிரண்டு அழவேண்டும்............)
-
காதலர் தினக் கதை
'பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லாம்......................' என்பது போல, கட்டிய பின் கடையில் வாங்கிக் கொடுத்தாலும், தெருவில் புடுங்கிக் கொடுத்தாலும், அங்கிருந்து வரும் எஃபக்ட்டில், ரியாக்ஷனில் ஏதாவது குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருக்குமா என்று தெரியவில்லை..................🤣.
-
காற்றாடி
அதுவே தான் புங்கையூரான். பொதுவாகவே ஒரு போட்டி பொறாமை என்ற எண்ணங்கள் ஏற்படாத இடங்களில் மனிதர்கள் நல்லவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகக் குறைந்தது அப்படியான இடங்களில் அவர்கள் விரோதிகளாக மாறுவதில்லை. அதுவே ஒரு போட்டி பொறாமை போன்றன இடையில் வந்து விட்டால், மெதுமெதுவாக அங்கே மனிதப் பண்புகள் சிதைந்து போக ஆரம்பிக்கின்றன. அக்கறையும், கருணையும் உள்ள மனிதர்கள் சிலருக்கு அவற்றை வெளிப்படுத்துவதில் சிக்கல்களும் இருக்கின்றன. இதில் வந்த முரளி அண்ணா போல...............
-
காதலர் தினத்தில் கனவொன்று கண்டேன்...
🤣......... கனவை வீட்டில் சொல்லவில்லை தானே.....
-
காதலர் தினக் கதை
காதலர் தினக் கதை ------------------------------ என் நண்பன் சொன்ன அவனின் கதை இது ஆள் அப்படி ஒன்றும் கண்டவுடன் காதலிக்க தோன்றும் புற அழகு என்றில்லை ஆனால் அவனின் அகம் நல்ல அழகு என்று அவனே சொல்லிக் கொள்வான் சொந்த இடம் பீஜிங் சோகக் கதை நடந்ததும் அங்கே தான் அங்கே ஒரு பெண் நல்ல அழகு அவர் ஊரில் பலரும் அவர் பின்னால் திரிய அவரோ நம்மாளை எப்படியோ காதலிக்க ஆரம்பித்தார் கனவா நிஜமா என்று காற்றிலே மிதந்து கொண்டிருந்தான் நம்மாள் அடுத்து வந்த காதலர் தினத்தில் நம்மாள் ஒரு பூங்கொத்து கொடுத்தார் எங்கே வாங்கிய பூங்கொத்து என்ற கேள்விக்கு நானே செய்தேன் என்றார் நம்மாள் பூ......... என்று இழுத்தாள் ஊரில் அழகான அந்தப் பெண் வீட்டுக்கு முன் இருந்தது என்றான் அப்பாவியாக அன்று போன அந்த அழகுப் பெண் பின்னர் திரும்பிப் பார்க்கவே இல்லை இப்ப இருப்பது இரண்டாவது காதலா என்றேன் ஆமாம் என்று அவசரமாக தலையாட்டினான் இப்ப அவர் அவனின் மனைவியும் கூட பூ............ என்று நான் இழுத்தேன் கடையில் வாங்கிக் கொடுத்தேன் என்றான் சோகமாக இதில் ஏன் சோகம் என்று நான் முழிக்க இவருக்கும் அப்பவே தெருவில் புடுங்கி கொடுத்திருக்க வேண்டும் என்றான்...................
- TwoValentineBirds.jpg
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
30ம், 31ம் விடைகள் மாறிவிட்டன, கிருபன். 30 வது கேள்விக்கான விடை: Shaheen Shah Afridi 31 வது கேள்விக்கான விடை: PAK பச்சைக் கலர் முக்கியம்.............................🤣. 👍.............. பையன் சார், எண் சாத்திரப்படி எட்டாம் நம்பர் எங்கேயோ போகுமாம். இங்கு களத்தில் தான் சில நாட்களின் முன் இந்த சாத்திரத்தை சொன்னார்கள். பங்குபற்றுபவர்களின் வரிசையை ஒரு தடவை பார்த்துக் கொள்ளுங்கள், குறிப்பாக யாருடைய பெயர் எட்டாவதாக இருக்கின்றது என்று...................😜.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வழமையான கடும் போட்டியாளர்கள் சிலர் இன்னும் மிஸ்ஸிங்............. டெம்பிளேட் பதில்கள் பல தாராளமாக ஏற்கனவே இருக்கின்றன, இலகுவாக ஒன்றை எடுத்து, அதை ஒரு கலக்கு கலக்கி கலந்து கொள்ளுங்கள்: இந்தியா பக்கம் நின்று களப் போட்டியில் கீழே போக ---> வீரப்பையன் டெம்பிளேட் ஆஸ்திரேலியா பக்கம் நின்று அதைவிட கீழே போக --> வசீ டெம்பிளேட் பாகிஸ்தான் பக்கம் நின்று புகழின் உச்சிக்கு போக --> ரசோதரன் டெம்பிளேட் ..................🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்திய அணியில் மற்ற எட்டு பேருக்கும் எதுவுமே தெரியாது என்று தான் நானும் நினைத்தனான்........... அதனால் தான் பாகிஸ்தான் பக்கம் போய் நிற்கின்றேன்...............🤣.
-
காற்றாடி
காற்றாடி - அத்தியாயம் ஐந்து -------------------------------------------- சிவா அண்ணாவும், முரளி அண்ணாவுமே அந்த அறையில் எப்போதும் இருப்பார்கள். இருவருக்கும் மட்டுமே அந்த அறையில் இருந்த இரண்டு திரைப்படக் கருவிகளையும் இயக்கத் தெரிந்திருந்தது. அவன் திரைப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது, அந்த அறையின் கதவோரம் நின்று எட்டிப் பார்ப்பான். சிவா அண்ணா எதுவும் சொல்லமாட்டார். முரளி அண்ணா அவன் அங்கே வருவதை விரும்புவதில்லை. 'கீழே போடா.........' என்று சத்தம் போடுவார். அந்த அறையின் கதவோரத்திலேயே வெக்கை அடிக்கும். ஒரு அடி அளவு நீளமான கார்பன் குச்சிகள் திரப்படக் கருவிகளின் உள்ளே எரிந்து கொண்டிருக்கும். அங்கிருந்து வரும் ஒளியே திரையில் ஓடும் திரைப்படமாக விழுத்தப்படுகின்றது. அந்த வெக்கை தான் முரளி அண்ணாவை எரிச்சல் படுத்துகின்றது போல என்று நினைத்துக் கொள்வான். படங்கள் ஆயிரம் அடிகள் நீளமான ரீல்களாக வரும். அநேகமாக ஒரு தமிழ்ப் படம் என்றால் 14 ரீல்கள் இருக்கும். ஒவ்வொரு படமும் 14000 அடிகள் நீளமானது என்று சொல்லலாம். ஒவ்வொரு ரீலும் தனிதனியே ஒரு வட்டமான, தட்டையான தகரப் பெட்டிக்குள் இருக்கும். எல்லா வட்ட தகரப் பெட்டிகளும் ஒரு பெரிய வெள்ளி நிறத்திலான பெட்டிக்குள் இருக்கும். ஒரு ரீல் 11 நிமிடங்கள் வரை ஓடும். பெரிய படங்கள் என்றால் ரீல்களின் எண்ணிக்கை இன்னும் கூடும். ஆங்கிலப் படங்கள் போல சிறிய, 90 நிமிடங்களே ஓடும், படங்கள் என்றால், அதில் எட்டு அல்லது ஒன்பது ரீல்களே இருக்கும். திரைப்படக் கருவிகளில் இரண்டு ரீல்களை ஒன்றன் பின் ஒன்றாக பொருத்தும் வசதி இருக்கின்றது. ஒரு ரீல் ஓடி முடிந்தவுடன், அதைக் கழட்டி விட்டு அடுத்த ரீலை எடுத்து மாட்டி விடவேண்டும். இப்படி மாறி மாறி செய்து கொண்டிருப்பதால், தடங்கல்கள் இல்லாமல் படம் ஓடும். இரண்டு திரைப்படக் கருவிகளையும் ஒரு காட்சிக்கு பயன்படுத்தமாட்டார்கள். இரண்டுக்கும் கார்பன் குச்சிகளை போடுவது தேவையில்லாத மேலதிக செலவு. கார்பன் குச்சிகளை கடைசிவரை எரிய விடமுடியாது. ஓரளவு எரிந்து முடிந்து கொண்டு வரும் போது, புதுக் குச்சிகளை போடவேண்டும். அவனிடம் வீட்டில் ஏராளமான எரிந்து மீதமான கார்பன் குச்சிகள் இருந்தன. காதலிக்கும் பெண் எறிந்து விட்டுப் போன பொருட்களை சேர்த்து வைத்துக் கொள்வது போல, அவன் சினிமா தியேட்டரிலிருந்து பொருட்களை சேகரித்து வைத்துக் கொண்டிருந்தான். ஓடிக் கொண்டிருக்கும் ரீல் இடையில் பொசுங்கி அல்லது எரிந்து போவது தான் பெரிய பிரச்சனை. ரீல் எரிவது திரையிலும் தெரியும். படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் சத்தம் போடுவார்கள், கூவென்று கத்துவார்கள். பதட்டப்படாமல் எரிந்து கொண்டிருக்கும் ரீலை கழட்டி, எரிந்த பகுதிகளை வெட்டி எறிந்து விட்டு, இரண்டு பக்கங்களையும் மீண்டும் பொருத்தி, ஓடவிட வேண்டும். பொருத்துவதற்கு ஒரு பசை இருக்கின்றது. அப்படி வெட்டி எறியப்படும் ரீல் துண்டுகளையும் அவன் சேர்த்து வைத்திருந்தான். சில படங்களின் ரீல்கள் அடிக்கடி எரிந்துவிடும். படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் உள்ளே கதிரைகளை உடைத்தும் இருக்கின்றார்கள். பெரிய வாய்ச்சண்டையாகவும் மாறிய நாட்களும் உண்டு. ஆனால் எவரும் எவருக்கும் இதுவரை அடித்ததேயில்லை. அது திரையில் கதாநாயகனும், வில்லன்களும் மட்டுமே செய்வது என்பதில் நல்ல ஒரு தெளிவு எல்லோரிடமும் இருந்தது. அன்றோரு நாள் சிவா அண்ண வரவில்லை. அவரால் சில நாட்களுக்கு வர முடியாத ஒரு நிலையில் இருக்கின்றார் என்று சொன்னார்கள். சிவா அண்ணாவிற்கு ஏர்ப்பு வலி வந்து, அவரை மந்திகை ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தார்கள். அவர் அருந்தப்பில் உயிர் தப்பியதாக சொல்லிக்கொண்டார்கள். எப்பவோ ஏதோ ஒரு பழைய ஆணியோ எதுவோ அவருக்கு காலில் குத்தி இருக்கின்றது. அவர் அதைக் கவனிக்காமல் விட்டிருந்ததாகவும் சொன்னார்கள். பின்னர் அவருக்கு முடியாமல் போகவே, உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தனர். அங்கிருந்து அவசரம் அவசரமாக மந்திகைக்கு அவர் அனுப்பப்பட்டார். அவனின் வீட்டில் இப்படி ஏதாவது நடந்தால், ஏதாவது குத்தினாலோ அல்லது வெட்டினாலோ, மரமஞ்சளை அவித்து குடிக்கக் கொடுப்பார்கள். சிவா அண்ணாவின் வீட்டில் கொடுக்கவில்லை போல. இல்லாவிட்டால் இந்த மரமஞ்சள் அவ்வளவாக வேலை செய்வதில்லையோ தெரியவில்லை. அவன் ஏர்ப்பு வலி என்று கேள்விப்பட்டிருந்தான், ஆனால் இதுதான் முதல் தடவையாக அந்த வலியால் ஒருவர் சாகும் வரை போனார் என்று தெரிந்து கொண்டது. கீழே குனிந்து காலைப் பார்த்தான். பாடசாலைக்கு போய் வரும் நாட்களில் செருப்பு போட்டிருந்தவன், ஆனால் இப்பொழுது போடுவதில்லை. இனிமேல் செருப்பு போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். சிவா அண்ணா இல்லாததால் முரளி அண்ணா அவனை உதவிக்கு வைத்திருக்க ஒத்துக்கொண்டார். முகாமையாளர் உரத்துக் கதைத்தபடியால் மட்டுமே முரளி அண்ணா சம்மதித்தார். 'சின்னப் பொடியன், அவன் அங்கே வேண்டாம்...................' என்று மட்டுமே முரளி அண்ணா மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். தன்னால் தனியாக சமாளிக்க முடியும் என்றும் அவர் சொன்னார். ஆனாலும் முகாமையாளர் விடவில்லை. தியேட்டரில் கதிரைகள் உடைந்தால், அதற்கு முகாமையாளர் தான் முதலாளிக்கு பதில் சொல்லவேண்டும். முதல் பயிற்சியாக எரிந்து பொசுங்கிப் போன ரீல்களை எப்படி வெட்டி ஒட்டுவது என்று முரளி அண்ணா அவனுக்கு செய்து காட்டினார். மிக வேகமாகச் செய்ய வேண்டும் என்றார். பாடல் காட்சியாக இருந்தால் எவ்வளவையும் வெட்டி எறியலாம், சண்டைக் காட்சியாக இருந்தால் அளவாகத்தான் வெட்டி எறிய வேண்டும் என்று சில தொழில் ரகசியங்களையும் சொன்னார். வெட்டி ஒட்டிக் கொண்டிருந்தவனின் பார்வை அந்த அறையின் ஒரு மூலைக்கு போனது. அங்கே பல வெறும் போத்தல்கள் இருந்தன. 'அங்கே என்ன பார்க்கின்றாய்............. இங்கேயோ அல்லது வேறு எங்கேயுமோ இதை எதையாவது தொட்டாய் என்றால், உன்னை கொன்று போடுவேன்..........................' என்று அதட்டினார். பின்னர், 'படிப்பை விட்டிட்டு ஏண்டா இங்க வந்தாய்............' என்று மெதுவாக முணுமுணுத்தார். அவரின் குரலிலும், முகத்திலும் ஒரு மெல்லிய சோகம் தெரிந்தது. (தொடரும்................................)
- kaaththaadi - 4.jpg
-
தமிழை தவிர வேறு மொழி??
இன்று உலகத்தில் எஞ்சி இருக்கும் ஆதி மொழிகளில் ஒன்று தமிழ் என்று சொல்லலாம். ஆனால் தமிழ் போன்ற ஒரு முதிர்ச்சி அடைந்த மொழி பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், பல நூறு மொழிகள் மனிதனின் வரலாற்றில், பல இடங்களில் தனித்தனியாக இருந்திருக்கும். அவை சுவடே இல்லாமல் அழிந்தும் போய்விட்டன. சில வருடங்களின் முன், அந்தமான் தீவுகளின் பக்கமாக இருக்கும் ஒரு தீவில் ஒரு பழங்குடி மக்கள் பதினைந்தாயிரம் வருடங்களாக வாழ்ந்து வருகின்றார்கள் என்ற செய்தியும், சில படங்களும் வந்தன. அவர்கள் ஒரு ஐம்பது பேர் வரை இருக்கின்றார்கள் போல. அவர்களிடமும் ஒரு மொழி இருக்கும். இது போலவே அமசானின் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பல குடிகளும் பல மொழிகளும் இன்றும் இருக்கின்றன. தமிழ், பழைய சீன மொழி, கிரேக்க மொழி, பழைய ஹீப்ரு போன்ற சில மொழிகள் பூமியில் அழியாமல் நிலைத்து நின்றுவிட்டன. தமிழின் பெருமை அதன் தொடர்ச்சி.................❤️.
-
இன்றைய அதிசயம்
ஒரு வீரன் இன்னொரு வீரனை அறிவான்................🤣. இங்கு நெருப்பு எரிந்தால் கூட, விளையாட்டுத் திடல்களுக்குள் இறங்கி விளையாட விடுவார்கள். ஆனால் மழை பெய்தால், எல்லாவற்றையும் பூட்டி வைத்துக் கொள்வார்கள். நாங்களே விளையாடி, நாங்களே சறுக்கி விழுந்து விட்டு, நகர நிர்வாகத்தின் மீது வழக்கு போட்டு விடுவமோ என்ற பயம்தான்...............
-
இன்றைய அதிசயம்
🤣............... இப்படியான ஒரு 'மழைச் சாமியார்' இங்கேயும் வேண்டும் தான்............ ஆனால் ட்ரம்ப் உள்ளே விடுவார் என்று நான் நினைக்கவில்லை. வேலி பாயமுடியுமா............. நான் வந்து வேலிக்கு இந்தப் பக்கமாக நிற்பேன்............🤣. ஒரு வேளை நான் இங்கிருந்து கிளம்பினால், அதன்பின் இங்கு ஒழுங்காக மழை பெய்யுமோ...............😜.
-
இன்றைய அதிசயம்
உண்மையே புங்கையூரான். தண்ணீரே இல்லாத இந்தப் பாலைநிலமான லாஸ் ஏஞ்சலீஸ்ஸில் கூட மண்ணை மூடி புல்லை வளர்த்து வைத்திருக்கின்றோம். முதல் மழையில் கூட இங்கு மண் சிலிர்ப்பதில்லை. அது புல்லின் கீழே எப்போதும் அடங்கியே இருக்கின்றது...............
-
உண்மை தெரிந்தாகனும்
🤣.................... நீங்கள் களத்திற்கு தான் புதிய நட்பு, ஆனால் ஆள் வித்தைகள் தெரிந்தவர் தான்............👍. இங்கு நானும், இங்கிருப்பவர்களுடன் ஒப்பிடும் போது, புதியவனே. இந்த மாதம் முடிய ஒரு வருடம் ஆகின்றது. ஆனால் இங்கு பலரும் மிக நன்றாகவே பழகி, எந்த தயக்கமும் இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்........ இணைந்திருங்கள்...........👍.
-
உண்மை தெரிந்தாகனும்
🤣................... கதாநாயகன் அறிமுகத்தின் போது இப்படித்தான் நடக்கும் போல............ மின்னல் வெட்டும், மழை கொட்டும், இடி இடிக்கும்............. அப்படியே எழுதினது கொஞ்சம் அழிந்தும் விடுமும் போல..........🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வெற்றிபெற வாழ்த்துகள் செம்பாட்டான்! என்னுடைய தெரிவான பாகிஸ்தானை நீங்கள் தூக்கிப் போட்டு மிதித்திருக்கின்றீர்கள்................🤣.
-
இன்றைய அதிசயம்
மீண்டும் பதிந்த போது 'இங்கு' என்ற சொல் கடைசியில் விடுபட்டுப் போய்விட்டது. கடைசி வரியை திருத்தியுள்ளேன் - 'இங்கு இன்றைய அதிசயம் இதுதான்.' இது லாஸ் ஏஞ்சலீஸ் நகரை மனதில் வைத்து நான் எழுதியது. மழையே இல்லாமல், வரலாறு காணாத ஒரு வறட்சியில் இந்த ஊர் இருந்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு துளி கூட, கறுப்பு மேகங்கள் கூட இங்கு வரவில்லை. போன வாரம் சிறிதளவு பெய்தது. இன்று விடாமல் பெய்து கொண்டிருக்கின்றது. இங்கு தெருவில் இருக்கும் மரங்களில் பறவைகள் கொட்டும் மழையில் அப்படியே கூட்டம் கூட்டமாக அசையாமல் இருக்கின்றன. என் யன்னல்களூடாக நான் அவற்றைப் பார்த்து கொண்டிருக்கின்றேன். இந்த மழை மனதில் கொண்டு வரும் சந்தோசம் அளவு கடந்து ஓடுகின்றது............
-
இன்றைய அதிசயம்
இன்றைய அதிசயம் ------------------------------ பிள்ளையார் இயேசு பெருமான் புத்த பெருமான் இப்படி பல தெய்வங்களில் இருந்து நீர் பால் இரத்தம் கூட உலகில் அங்கங்கே வடிந்து கொண்டிருக்கின்றது இது அதிசயம் ஒரு துளி ஈரமும் வருடங்களாக காணாமல் வறண்டு வெடித்து ஒரு இடம் அங்கே ஒரு வெள்ளைக் கொக்கு ஓடின ஓணாணை பிடித்து அப்படியே முழுங்கியது இதுவும் அதிசயம் கடுங்குளிர் காலத்திலும் நெருப்பாக வெயில் எரிய அனல் காற்றும் சேர அந்த இடமே பற்றி எரிந்தது இது அவலமான அதிசயம் இன்று மொட்டை மரம் ஒன்றில் கண்களை மூடியிருந்த குருவிகள் 'இது என்ன அதிசயம் தண்ணீர் மேலே இருந்தும் விழுமா............' என்று என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே உறைந்து நிற்கின்றன வானம் பிளந்து கொட்டும் மழையில் இங்கு இன்றைய அதிசயம் இதுதான்.
- இன்றைய அதிசயம்.png
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
🤣................ அதை அப்படியே ஒரு எனர்ஜியாக மாற்றி, பாகிஸ்தான் பக்கம் அனுப்பி விடுவதாக இருக்கின்றேன்......... இது ஒரு சரியான பேச்சு............... எனக்கும் இந்திய அணியில் தான் நம்பிக்கை................😜. நாங்கள் சும்மா அலட்டின பதிவுகள் தானே.............. அந்த மீம்ஸை தேடி எடுக்கலாம்...............'I am still waiting...........'.............🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
👍.............. நன்றிகள் அல்வாயன். பச்சைக் கலர் அடிக்கிறதில் இருந்த கவனம், பெயர்களைப் பதிவதில் எனக்கிருக்கவில்லை.......🤣. @கிருபன், என்னுடைய 30 மற்றும் 31 வது விடைகளை இடம் மாற்றிவிடவும், ப்ளீஸ்......... நாட்டின் பெயரையும், வீரரின் பெயரையும் மாற்றிப் போட்டுவிட்டேன்..............🙏.
-
காற்றாடி
👍................ உண்மையே அல்வாயன், ஏதாவது ஒரு வகையான அனுபவம் இல்லாமல், அதைச் சார்ந்த புனைவுகளை எழுதுவது முடியாத காரியமே. அறிவியல் புனைவுகளை (Science Fiction), வரலாற்று சாகசங்களை எழுதுவதற்குக் கூட ஒரு துளி தேவை போல............... மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள், வில்லவன். சொற்களும், சொற்களைக் கோர்ப்பதும், அவற்றைச் சொல்லும் இடங்களும் சரியாக அமைந்தால், அது ஒரு நல்ல வாசிப்பாக அமைவதுடன் நினைவிலும் நின்றுவிடுகின்றது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
🤣............. கோஷான், என்னுடையது 'பாக்கிஸ்தான் - இந்தியா' டெம்பிளேட். 'ஆஸ்திரேலியா' டெம்பிளேட் மற்றும் இன்னும் சில டெம்பிளேட்டுகளும் ஓட்டத்தில் இருக்கின்றன. நேற்றைய செய்தியின் பின், களத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா குரூப்பின் நம்பிக்கை கொஞ்சம் இறங்கி விட்டது போல............. பாக்கிஸ்தான் - இந்தியா டெம்பிளேட் இப்ப முன்னுக்கு வரும், பாருங்கள்....................😜.