Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 🤣...................... இலங்கையில் எல்லா வீதிகளும் போடப்பட்டாலும், இந்த வீதியை மட்டும் போடவே மாட்டம் என்று அடாத்தாக நின்றார்கள்................ பழி வாங்குகின்றார்களாம்.................🫣.
  2. சென்னை பஜாரிலும், கொழும்பிலும் கிடைக்காத பிராண்டுகளா, அண்ணா........... ஒரு எழுத்தை மாற்றி விட்டிருப்பார்கள்................🤣.
  3. காற்றாடி - அத்தியாயம் இரண்டு ------------------------------------------------ சில்லென்று குளிர்ந்த இடத்தை விரல்களால் தொட, விரல்கள் அதைவிடக் குளிராக இருந்தது தெரிந்தது. உரசி சூடாக்கிக் கொண்டே, தான் இன்று பரீட்சைக்கு போகப் போவதில்லை என்பதை எப்படி பக்குவமாகச் சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அம்மா அழக்கூடும், ஊரையும் கூட்டக் கூடும், ஆனால் இந்த மழையில் ஊர் இங்கே வராது. அப்பா குதிக்கத்தான் போகின்றார். வளர்ந்த பிள்ளை என்று இப்பொழுது ஒரு வருடமாக அடிகள் எதுவும் விழவில்லை. இன்று அது மாறக்கூடும். சித்தப்பா அவர் வாங்கித் தந்த முழுக்காற்சட்டை பற்றி கவலைப்படக்கூடும். அம்மா ஏற்கனவே எழும்பி விட்டிருந்தார். அடுப்படியில் அரவம் கேட்டது. இப்ப, இந்த மழையில் எந்த விறகு ஈரமில்லாமல் இருக்குமோ தெரியவில்லை. ஆனாலும் எங்கள் எல்லோருக்குமாக அவர் அந்த இரண்டு அடுப்புகளையும் தினமும் விடாமல் ஊதிக் கொண்டேயிருக்கின்றார். தேத்தண்ணியை போட்டு விட்டு, எல்லோருக்கும் காலையில் ஏதாவது உணவு செய்யும் நாட்களில், நாங்கள் எல்லோரும் பாடசாலைகளுக்கு கிளம்பிப் போகும் வரை அவர் அடுப்புக்குள் முன்னால் ஒரு காலை முழுவதும் மடக்கி, மறு காலை முழங்கால் வரை மடித்தும் இருப்பார். 'ஏன் இப்படி இருக்கிறீங்கள், அம்மா...............' என்று கேட்டால் சிரிப்பொன்றே பதிலாக வந்து கொண்டிருந்தது. பெண்கள் எதையுமே வெளியில் சொல்லமாட்டார்களாமே. இன்று பரீட்சைக்கு போகாவிட்டால், இன்றுடன் படிப்பு நின்றுவிடும். அடுத்ததாக என்ன செய்வது............... ஆரம்ப ஆரவாரங்களின் பின், என்ன செய்யப் போகின்றாய் என்று கேட்கவும் போகின்றார்கள். என்ன செய்வது என்று பல திட்டங்கள் இருக்கின்றன. அதில் எதையாவது ஏற்றுக் கொள்வார்களா என்று தான் தெரியவில்லை. தங்கைகளும், தம்பிகளும் என்ன நினைப்பார்களோ. ஒரு தம்பியை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது. எங்கு படித்தாலும், அவன் தான் வகுப்பில் முதலாவதாக வந்து கொண்டிருக்கின்றான். அவன் மட்டும் இப்படி எப்படி பிறந்தானோ தெரியவில்லை. வயிற்றில் பிள்ளைகள் இருக்கும் போது, தாய்மார்களின் உணவுப் பழக்கம் கூட பிள்ளைகளின் மூளைத் திறனை வளர்க்கும் என்று சொல்லுகின்றார்கள். இந்த முற்றத்தில் நிற்கும் புளி வைரக்கண்டி மாங்காயைத் தான் அம்மா எப்போதும் கடித்துக் கொண்டிருந்திருப்பார். தம்பி வயிற்றில் இருக்கும் போது, அந்த வருடம் அந்த மரம் காய்க்கவில்லையோ என்னவோ. மழை தற்காலிகமாக விட்டிருந்தது. மீண்டும் அது ஆரம்பிக்க முன், முகத்தை கழுவி விட என்று கிணற்றடிக்கு போனான். பெரிய வட்டக் கிணறு. ஆனால் மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தது. மூன்று வீடுகளுக்கு அது தான் கிணறு. கிணற்றின் மேலேயே தகர வேலிகளால் அது பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு வீட்டுக்காரருக்கு இன்னொரு வீட்டுக்காரை பார்க்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலிகள். அவை தார் தகரங்கள். எம் எஸ் விஸ்வநாதன், கே வி மாகாதேவன் போன்ற பழையவர்களின் ரசிகரான அப்பா, இந்த தார் தகர வேலியை தினமும் பார்ப்பதால் தான், புதிதாக வந்த இளையராஜாவின் பாடல்கள் தார் தகரத்தில் கம்பால் அடிப்பது போல கொடூரமாக இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லுவார். அவர் சிவாஜியின் ரசிகரும் கூட. பொதுவாகவே அப்பாமார்களும், மூத்த மகன்களும் எதிரும் புதிருமாகவே வளர்வார்கள் போல. அள்ளிய வாளித் தண்ணீருக்குள் ஒரு சின்ன ஜப்பான் மீன் குஞ்சும் வந்திருந்தது. மழை பார்க்க மேலே வந்து ஆவென்று நின்றிருக்கின்றார் போல. அப்படியே வாளிக்குள் வந்தும் விட்டார். இரண்டு கைகளாலும் அதை தண்ணீருடன் அள்ளி எடுத்து கிணற்றுக்குள் கொட்டிவிட்டான். கிணற்று நீர் சூடாக இருந்தது. வெளியே குளிராக இருக்கும் போது இப்படித்தான், கிணற்று நீர், கடல் நீர் கூட, சூடாக இருப்பது போல தெரியும். இன்னும் சில நாட்கள் மழை பெய்தால், கிணற்றில் தண்ணீர் எட்டித் தொடும் அளவிற்கு வந்துவிடும். எங்களின் பக்க கிணற்றில் உயரமான தடுப்புக் கட்டுகள் எதுவும் இல்லை. ஆனாலும் இதுவரை எவரும் இந்தக் கிணற்றுக்குள் தெரிந்தோ அல்லது விபத்தாகவோ விழுந்திருக்கவில்லை. அம்மா தேத்தண்ணி போட்டு வைத்திருந்தார். அது எல்லோருக்கும் சேர்த்து ஒரு பெரிய சட்டியில் இருக்கும். 'எத்தனை மணிக்கு சோதனை...............' என்று கேட்டார் அம்மா. பதில் எதுவும் சொல்லாமல் குடித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்த அம்மா மீண்டும் அதையே கேட்டார். 'நான் போகவில்லை, அம்மா......................' என்றான் அவன். அப்படியே சில கணங்கள் இருந்த அம்மா, மீண்டும் நினைவு வந்தவராக, 'போகாமல் என்ன செய்யப் போகின்றாய்................' என்றார். ஒரு வேலைக்குப் போகலாம் என்றிருக்கின்றேன் என்றான் அவன். 'அப்பாவிடம் இதை யார், எப்படிச் சொல்வது..................' என்று அம்மா அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக போய்க் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. நான் எப்படியும் படிக்கப் போவதில்லை என்று அம்மாவிற்கு முன்னமே தெரிந்திருந்தது போல. தாய்க்கு தெரியாத பிள்ளைகளா........... 'டில்லிக்கு ராஜாவானாலும்........................' என்று ஒரு பழமொழியை அம்மா அடிக்கடி சொல்லுவார். எந்தப் பிள்ளை டில்லிக்கு ராஜாவாக வரும் என்றும், எது டில்லியையே வாழ்நாளில் பார்க்காது என்றும் அவர்களுக்கு தெரியும் போல. அப்பா எப்போதும் அப்படியே படுக்கையில் இருந்தபடியே அன்றைய நாளின் முதலாவது தேத்தண்ணியைக் குடிப்பார். பின்னர் ஒரு பத்து அல்லது பதினைந்து குடிப்பார். ஆனால், வீட்டில் எல்லோரும் பல் துலக்கி, முகம் கழுவி விட்ட பின்னேயே, எதை என்றாலும் குடிப்போம் அல்லது சாப்பிடுவோம் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் பதில்களை பாடசாலையில் சொல்லியிருக்கின்றேன். முதலாவது தேத்தண்ணியின் பின் கொஞ்ச நேரம் கண்மூடிப் படுத்திருப்பார். அது அவரின் சிந்திக்கும் நேரம் போல. அம்மா அப்பாவின் சிந்தனையைக் கலைக்காமல், பொறுமையாகவே விசயத்தை உடைத்தார். எதிர்பார்த்த எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 'சரி, இனி என்ன செய்யப் போகின்றாராம்............' என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே, அப்பா எழுந்து இருந்தார். அம்மா அடுத்த தேத்தண்ணியை சுடவைக்கப் போனார். பெரும் எடுப்போடும், பரபரப்போடும் வாழ்க்கையின் ஒரு தருணத்திற்கு காத்திருக்கும் போது, சில வேளைகளில் அந்த தருணம் ஒரு பூனையின் நடை போல எந்த சத்தமும் எழுப்பாமல் எங்களைக் கடந்து போய்விடுகின்றது. (தொடரும்........................)
  4. 🤣................. ஏதோ அந்த ஊர் வீதியை இப்பவாவது திருத்துகின்றார்களே............. அங்கே தெருவில் ஒரு நாய் கலைத்தால் கூட, நாயையும் பார்த்து, வீதியில் இருக்கும் பள்ளங்களையும் பார்த்து ஓட வேண்டிய நிலை.....
  5. 🤣.................. ஜெயமோகன் தனக்கும் கணிதபாடம் வரவே வராது என்று சொல்லியிருக்கின்றார். ஆனால், எல்லாக் கணக்குகளையும் பாடமாக்கி, கணிதப் பரீட்சைகளில் நல்ல புள்ளிகள் எடுத்தேன் என்றும் சொல்லுகின்றார். அவருக்கு ஞாபகசக்தி அதிகம் தான், அதற்காக கணக்குகளையே பாடமாக்குவதா............🤣. அத்துடன் இலங்கையில் படிப்பிக்காத கணக்கு மட்டும் தானே பரீட்சையில் வரும்............ நாங்கள் எதையென்று பாடமாக்குவது....................
  6. 🤣.................... இந்தப் பூமிக்கு ஒரே ஒரு சூரியன் தான்........... நான் எழுதியிருப்பதும் அவரே தான்........ எனக்கு பாடசாலையில் அவர் தான் பிரயோக கணித ஆசிரியர். ஆனால் அத்துடன் இல்லாமல், ஊரில் இருந்த வல்வைக் கல்வி மன்றம் என்னும் தனியார் கல்வி நிலையத்திலும் தூய கணிதம், பிரயோக கணிதம் இரண்டும் படிப்பித்தார். நான் அங்கே தான் ஏலெவல் ரியூசனுக்கு போனேன். ரியூசனில் இன்னும் உக்கிரமாக இருந்தார். அந்த நாட்களில் நல்லையா மாஸ்டர் எதிர் வெக்டர் வேலாயுதம் மாஸ்டர் எதிர் இன்னும் சில ஆசிரியர்கள் என்று ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் ரியூசன் வகுப்பில் வேறு எந்த ஆசிரியர்களிடமாவது ரியூசன் படிப்பவர்கள் எழும்பி நில்லுங்கள் என்றார். வகுப்பில், என்னைத் தவிர, எல்லோரும் எழும்பி நின்றார்கள். அவ்வளவு பேரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் அன்று வகுப்பு நடந்தது............... கிறுங்கவே கிறங்காத, பயமறியா மனிதன் அவர்.................. சில வருடங்களின் முன், கனடாவில் பழைய வகுப்புத் தோழி ஒருவரைச் சந்தித்தேன். நீங்கள் வார்த்தகப் பிரிவில் தானே படித்தீர்கள்............ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்: ஆரம்பத்தில் நான் உங்களுடன் கணிதப் பிரிவில் தான் இருந்தேன். ஒரு நாள் கணேசலிங்கம் மாஸ்டர் எனக்கு கணக்கு சரிவராது என்று என்னை வர்த்தகப் பிரிவிற்கு கலைத்துவிட்டார்....................🤣.
  7. இந்த விசயத்தை முதலில் கேள்விப்பட்ட போது நம்ப முடியாமல் தான் இருந்தது. போன வருடம் நான் இலங்கை போயிருந்த பொழுது, விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு போன வாகனத்தின் ஓட்டுநரும் இதே கணக்கை சொல்லியிருந்தார். பல வருடங்களின் ஒரு இந்தியர் குறுகிய கால வேலைக்காக தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்திருந்தார். ஆறு மாதங்கள் மட்டுமே அவருக்கு வேலை என்றிருந்தது. ஆறு மாதங்களின் பின்னர் அவர் திரும்பிப் போகவேண்டும். இங்கு ஒரு கார் வாங்கலாமா, வாங்கினால் திரும்பப் போகும் முன் அதிக விலைக்கு விற்கலாம் தானே என்று என்னைக் கேட்டார். உலகத்தில் எங்குமே அப்படியெல்லாம் விற்க முடியாது, கார் வாங்கியவுடனேயே அதன் பெறுமதியில் நாலில் ஒரு பங்கு குறைந்து விடும் என்று சொன்னேன். அமெரிக்காவில் இது தான் நிலைமை. அப்படியானால் ஏன் அதை நான் வாங்க வேண்டும் என்று அவர் கார் வாங்கவில்லை. ஆனால், பதிலாக, சென்னையில் ஒரு வீடு வாங்கினார். பம்மலுக்கு அருகே இருக்கும் அனகாபுத்தூரில் என்று ஞாபகம். மூன்று நண்பர்களும், இவருமாக நாலு யுனிற் உள்ள ஒரு கட்டிடத்தை வாங்கினார்கள். இரண்டு கீழே, இரண்டு மேலே என்றுள்ள தனித்தனி வீடுகள். அடுத்த வருடம் அங்கு கொட்டிய மழையில் இவரின் ஊர் வெள்ளக்காடாகியது. இவரின் வீடு கீழே இருந்தது. வீடு முழுவதும் வெள்ளத்தல் நிரம்பியது என்று சொன்னார். அமெரிக்காவிடம் இருந்து தப்பி, அனகாபுத்தூரிடம் மாட்டிக்கொண்டார்.
  8. 🤣.................. அது ஒரு கனவுக் காலம்............ அன்னா ஹசரேவிற்கு ஆதரவாக இங்கே மெழுகுவர்த்தி ஊர்வலம் கூட நடந்தது. என்னுடன் வேலை செய்து கொண்டிருந்த பல இந்தியர்கள் இந்த ஊர்வலத்தில் பங்குபற்றியும் இருந்தனர். அடுத்த நாளே பெரிய எல்சிடி அல்லது பிளாஸ்மா தொலைக்காட்சிப் பெட்டிகளை வரி எதுவும் கட்டாமல் எப்படி அவர்களின் விமான நிலையங்களினூடாக எடுத்துப் போவது என்று அவர்கள் ஆலோசனை செய்ததையும் கண்டேன். மெழுகுவர்த்தி எரிந்து முடிய, ஊழலை ஒழிக்கும் சிந்தனையும் முடிந்து விட்டது போல............ இவர்களையா அன்னா ஹசரே நம்புகின்றார், ஐயோ பாவம் அவர் என்று நினைக்க, அந்த மனிசனும் இன்னொரு பக்கம் இழுபட்டு போய்விட்டது. ஊழல் மட்டும் எங்கேயும் போகாமல் அங்கேயே நிற்கின்றது...........🤣.
  9. வேறு திசையில் போய், ஒரு கொடுங்காலமும் ஆகலாம் தான், அல்வாயன். முள்ளிவாய்க்கால் கடைசிநாட்களிலும் பெரும் நம்பிக்கைகளோடு தான் நாங்கள் பலரும் எவ்வளவோ எழுதிக் கொண்டிருந்தோம். எல்லா எழுத்துகளும் பொய்யாக, பெரும் அழிவு மட்டுமே நிஜமானதாக எஞ்சியது.
  10. இங்கு ஒரு ஐந்தாறு வருடங்கள் முன் வரை கூட எம்மவர்கள் எவரும் அமெரிக்கன் கார்களை வாங்கவேமாட்டார்கள். நீண்டகால நம்பிக்கை இன்மை, மிகக்குறைந்த மீள்விலை, அதிக பெட்ரோல் செலவு இப்படி பலப்பல காரணங்கள். பொதுவாக எம்மவர்கள் ஜப்பான் தயாரிப்புகளை வாங்குவார்கள். வருமானம் அதிகமானால் ஜேர்மன் தயாரிப்புகள் தான், அது ஒரு அந்தஸ்து போல......... முன்னர் கொரியாவின் தயாரிப்புகளையும் பலரும் வாங்குவதில்லை. ஆனால் இப்பொழுது அவை மிகவும் தரமும், வசதியும் உள்ளவை என்று அவைகளையும் வாங்குகின்றனர். டெஸ்லா வந்த பின் வாங்குகின்றார்கள், ஆனால் அது வேற கணக்கு. நான் இன்னமும் இல்லை. எலான் மஸ்க்கிற்கு காசு கொடுக்க மனம் இல்லை. நான், முடிந்தவரை, அமெரிக்கன் வாகனங்களையே வாங்கிக் கொண்டிருக்கின்றேன். அமெரிக்க தேசியம் பேசி, அமெரிக்க நாட்டை சிறப்பிக்கப் போகின்றோம் என்ற கொள்கையின் பின்னால் போய்க் கொண்டிருக்கும் என் நண்பர்களில் எவரும் அமெரிக்கன் வாகனங்களை வாங்குவதை நான் இதுவரை காணவில்லை. இவர்களின் இந்த விசயம் ட்ரம்பிற்கு தெரியாது......................🤣. 2008ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின் பின், அமெரிக்கா தெருவில் நின்றது. வேலைகள் இல்லை, வருமானம் இல்லை. வீடுகளை விட்டு விட்டு மக்கள் போய்க் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் வாகன தயாரிப்புகளின் தலைநகரான Detroit இல் நிலை இன்னும் மோசமாக இருந்தது. அப்பொழுது தொலைக்காட்சியில் விவரணப் படம் ஒன்று ஒரு நாள் போனது. வாகனத் தயாரிப்பில் இருக்கும் மிகப்பெரும் நிறுவனங்கள் பெருமளவிலான தொழிலாளர்களை வேலையை விட்டு நிற்பாட்டியிருப்பதால், அந்த நகரத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளைக் காட்டிக் கொண்டிருந்தனர். ஒரு குடும்பத்தலைவி வீட்டில் எதுவுமே இல்லை, மேசையில் பிள்ளைகளுக்கு சாப்பாடு கூட இல்லை என்று சொன்னார். அவர் கண்களில் ஒரு ஆறு உடைத்து ஓட தயாராக இருந்தது. வேலை எதுவும் தங்களுக்கு இங்கே இல்லை என்று சொன்னார். இலவச உணவு கொடுக்கும் இடங்கள் பற்றிய தகவல்களைச் சொன்ன போது, அவர் அடக்கமுடியாமல் அழுதார். பின்னர், மிகக் குறுகிய காலத்திலேயே, அமெரிக்க அரசு இந்தப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தது. அவர்கள் மீண்டும் உற்பத்திகளை ஆரம்பித்தார்கள். அது ஒரு புரட்சி, ஆனால் இங்கு வாழும் எம் மக்களுக்கு அதில் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இப்படி ஒரு விடயம் நடந்ததையே எங்களில் பலர் அறியார்கள். அந்த நிறுவனங்களும், அந்த மக்களும் மீண்டு வந்தார்கள்.
  11. இங்கு அவருடைய ஆதரவாளர்களாக இருக்கும் நம்மவர்களின் வாதங்கள், பூனை ஒன்று ஒரே இரவில் ஒரு சிங்கமாக மாறியது போல இருக்கின்றது. ஜனநாயக் கட்சியினர் எல்லோரையும் நாட்டுக்குள் விடுகின்றனர், நாட்டின் பொருளாதாரம், தொழில்துறை முன்னேறவே இல்லை, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை,............ இப்படியான பலதைச் சொல்கின்றனர். நாங்களும் இங்கு ஓடித்தான் வந்தோம். படித்து விட்டு, மேற்படிப்பிற்கு என்று, முறையாக வந்தோம் என்பது இதற்கான ஒரு நியாயமே கிடையாது. படித்து முடித்தவுடன் அங்கிருந்து தப்பவே இங்கு வந்தோம். படித்திருக்காவிட்டால், ஏதோ ஒரு நாட்டுக்கு எப்படியோ போய்த்தான் இருப்போம். அதுதானே மிகப் பெரும்பாலானோர் முன்னிருந்த ஒரே ஒரு தெரிவு. அதையே தான் வேறு நாட்டவர்களும் செய்கின்றனர். எனக்கு எல்லாமே கிடைத்து விட்டது, ஆகவே இனி அவர்கள் இங்கு வரவே கூடாதா................. ஒரே ஒரு சின்ன மாற்றம்................. நாங்கள் படித்து முடித்து, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு மேல் படிப்பிற்காக விண்ணப்பிக்கும் போது, இதே ட்ரம்ப் அவர்கள் அன்று அமெரிக்காவின் அதிபராக இருந்து இருந்தால், நாங்கள் எவருமே அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தே இருக்கமாட்டம். நாங்கள் எல்லோருமே ட்ரம்பைத் திட்டிக் கொட்டிவிட்டு, ஐரோப்பா, அவுஸ்திரேலியா அல்லது கனடா தான் போய் இருப்போம். ஆனால், இன்று அதே கூட்டத்தில் ஒரு பகுதி அவர் தான் சரி என்கின்றது............🫣.
  12. இன்னொரு சக்கரவர்த்தி --------------------------------------- அற்புதமான ஆடை என்று கொடுக்க அதை உடுத்து ஆடம்பரமாக நிமிர்ந்து நடந்து வந்தார் ஒரு சக்கரவர்த்தி என்னே ஆடை இது எப்படி மின்னுது இது இதுவல்லவோ அழகு எங்கள் ராசா என்ன கம்பீரம் என்று கூட்டம் குரல் எழுப்பியது இன்னும் பெருமைப்பட்ட சக்கரவர்த்தி இன்னும் இன்னும் கைகளை நீட்டி கம்பீரமாக நடந்தார் சின்னப் பயல் ஒருவன் திடீரென 'ஐயே................ ராசா அம்மணமாக வருகிறாரே.....' என்று கத்திச் சொல்லி அவன் கண்களையும் மூடினான் சக்கரவர்த்தி வெட்கத்தில் பொத்திக் கொண்டு ஓட கூட்டமும் ஆடை நெய்தவரும் உயிர் தப்ப ஓடினார்கள் என்னைப் பார் என்னைப் பார் என்று இன்று இன்னொரு சக்கரவர்த்தி இப்பொழுது நடந்து வருகின்றார் அழகோ அழகு என்று சுற்றி நிற்கும் கூட்டமும் கைதட்டுகின்றது பின்னர் வரலாறு சொல்லும் 'ஐயே................... இந்த ராசாவும் இவரின் கூட்டமும் ஆடை அணிந்திருக்கவில்லை.................' என்று.
  13. 🤣.................... களத்தில் ஒரே ஒரு கணக்கு வாத்தியார் தான்................. அது யார் என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால், மேலே இருக்கும் கோஷானின் பதிவிற்கு சிரித்து வைத்திருக்கும் அடுத்தவர் யார் என்று பார்க்கவேண்டும்............🤣.
  14. ஒரு நாள் பாடசாலையில் பிரயோக கணித வகுப்பில் நண்பன் ஒருவன் மணிக்கூடு கட்டியிருந்தான். ஆசிரியர் வழமை போல கணக்கை எழுதி விட்டு வகுப்பைச் சுற்றிக் கொண்டிருந்தார். மணிக்கூட்டைப் பார்த்துவிட்டார். எங்களின் வகுப்பறை மேல் மாடியில் இருந்தது. முதலில் நண்பனின் கொப்பி மேல் மாடியில் இருந்து கீழே பறந்தது. சடார் படார் என்று சில அடிகள் விழுந்தது. நல்ல காலம், நண்பனின் மணிக்கூட்டை ஆசிரியர் பறக்க விடவில்லை. அதுவோ எதுவோ, நான் மணிக்கூடு கட்டுவதேயில்லை......🤣
  15. காற்றாடி - அத்தியாயம் ஒன்று ---------------------------------------------- மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையும் இரண்டு கால்களுக்கும் இடையில் வைத்து, கால்களை வயிறு நோக்கி இழுத்து, முழு உடலையுமே குறுக்கி வைத்திருந்தான். சில மழைக் காலங்களை இதே வீட்டில் இப்படியே கடந்து வந்து விட்டபடியால், ஒழுகும் மழையை ஏமாற்றி எப்படி இரவில் தூங்குவது என்று அவன் நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தான். இப்படி ஏராளமான விசயங்களில் அவனுக்கு சமயோசிதமும், அறிவும் இருந்தாலும், அவனுக்கு கழுத்தில் கத்தி வைத்தாலும் வரவே வராது என்று சில விசயங்களும் இருக்கின்றன. எல்லோருக்கும் எல்லாம் வந்து விடுமா என்ன, எந்த மனிதருக்கும் சிலது வரும், சிலது வராது, சிலது வரவே வராது. அவனுக்கு வரவே வராது என்ற வரிசையில் முதலாவதாக வராமல் இருப்பது கணிதபாடம். சாதாரணமான இரண்டு தெரியாக் கணியங்களும், இரண்டு சமன்பாடுகளும் இருக்கும் கணிதம் கூட அவனுக்கு தலைச்சுற்றலைக் கொடுக்கும். அவன் போன வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதியிருந்தான். எட்டுப் பாடங்களில் ஏழு பாடங்களில் சித்தி பெற்றிருந்தான். கணிதத்தில் படுதோல்வி. விஞ்ஞானத்தில் சிறப்புச் சித்தி பெற்றிருந்தான். ஆங்கிலத்தில் சாதாரண சித்தி, ஆனால் கணிதத்தில் எஃப் வந்திருந்தது. கணிதமோ அல்லது எந்தப் பாடங்களுமோ என்றுமே அவன் வீட்டில் படித்ததேயில்லை. ஊரில் இருக்கும் பாடசாலைக்கு போவான், பின்னர் வீட்டுக்கு வருவான், அவ்வளவு தான் அவனுடைய கல்வியின் எல்லையும் தேடலும். வீட்டில் எதையும் படிப்பதோ அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போவதோ கிடையாது. மற்ற நேரங்களில் ஊர் விதானையார் போல ஊரை சுற்றிக்கொண்டு திரிவான். அவன் ஏழு பாடங்களில் நல்ல சித்திகள் பெற்றிருந்தபடியால், அவன் வீட்டில் அவனை அடுத்ததாக இன்னும் மேலே படிக்கச் சொன்னார்கள். இதுவரை அவர்களின் குடும்பங்களில், அவனின் அம்மா மற்றும் அப்பாவின் குடும்பங்கள், முதலாவதாக உயர்தர வகுப்புகளுக்கு போகும் ஆள் என்ற பெருமை எவருக்கும் கொடுக்கப்படாமல் அவனுக்காகவே காத்துக்கொண்டு கிடந்தது. கணித பாடத்தில் தவறி இருந்தபடியால், பாடசாலையில் கலை அல்லது வர்த்தகப் பிரிவுக்கு அவனைப் போகச் சொன்னார்கள். அதுவும் கூட அடுத்து நடக்கும் சாதாரண பரீட்சையில் கணித பாடத்தில் சாதாரண சித்தியையாவது அவன் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன். அரைக்காற்சட்டையில் இருந்து அப்போது தான் முழுக்காற்சட்டைக்கு மாறியிருந்தான். வெள்ளை நிற முழுக்காற்சட்டை. அதை தைக்கும் தையல் கடைக்காரர் அவனின் அப்பாவிற்கு மிகவும் தெரிந்தவரே. பாடசாலைக்கு தேவையானது போலவும் இல்லாமல், அன்றைய நாயகர்களின் அகன்ற கால்கள் உடையது போலவும் இல்லாமல், இரண்டுக்கும் மத்தியில் ஒன்றை தைத்துக் கொடுத்திருந்தார் அந்த தையல்காரர். அவனின் ஆலோசனை தான் அது. அந்த முழுக்காற்சட்டையுடன் முதன்முதலாக பாடசாலை போயிருந்த போது, அப்பொழுது தான் கணிதபாடத்தில் சித்தி அடையவே வேண்டும் என்று பாடசாலை அதிபர் சொன்னதற்கு, உடனேயே தலையை ஆட்டியிருந்தான். உயர்தர வகுப்பில் படிக்கின்றோம் என்பதே அவனுக்கு ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது. ஒன்று அல்லது இரண்டு அப்பியாசக் கொப்பிகள் மட்டும், அதையும் சைக்கிளின் பின் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஏதோ சில மணிநேரங்கள் பாடசாலைக்கு போய் வருவது நல்ல ஒரு அனுபவமாகவே அவனுக்கு இருந்தது. அப்படியே அருகிலேயே இருக்கும் தனியார் கல்வி நிலையத்திலும் சேர்ந்திருந்தான். பாடசாலை விட்டு வந்தவுடன் தனியார் கல்வி நிலையத்திற்கு போய்விடுவான். அங்கே போய் அதை நடத்திக் கொண்டிருப்பவருக்கு ஒத்தாசையாகவும் நின்றுகொள்வான். தனியார் கல்வி நிலையத்திற்கு என்று வெள்ளையில் இல்லாத இன்னொரு முழுக்காற்சட்டை, 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் கமல் போட்டு வருவதைப் போன்ற ஒன்று, வைத்திருந்தான். அவனுடைய சித்தப்பா ஒருவர் பெறாமகன் பெரிய படிப்புகள் படிக்கின்றானே, தான் எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று, இந்த இரண்டாவது முழுக்காற்சட்டைக்கான செலவைப் பொறுப்பேற்றிருந்தார். அதுவே சித்தப்பா முறை என்றபடியால் அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருந்தார்கள். இதையே ஒரு மாமன் முறை உள்ளவர் செய்யக் கேட்டிருந்தால், அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருக்கவேமாட்டார்கள். இதுவே ஒரு கடமையாகி, அது எங்கே போய் முடியுமோ என்ற பலமான ஒரு காரணம் இதன் பின்னால் இருந்தது. அவனுக்கு சொந்தத்தில் ஏழு எட்டு மச்சாள்மார்கள் இருந்தனர். இன்று இப்பொழுது விடியப் போகும் காலையில் சாதாரணதர கணிதபாட பரீட்சை. மழை தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து கொண்டிருந்தது. போன தடவை அவன் கணிதபாட பரீட்சை எடுத்ததிற்கும், இன்றைக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கின்றதா என்ற யோசனை அவன் மனதில் ஓடியது. போன தடவை மழை பெய்யவில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த காலப்பகுதியில் அவன் ஒரு நாள் கூட கணிதம் படித்திருக்கவில்லை. போன தடவை வந்த அதே பரீட்சை முடிவு தான் இந்த தடவையும் வரப் போகின்றது என்பது தெளிவாகவே அவனுக்கு தெரிந்தது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே நிமிர்ந்துபடுத்தான். நிலத்தில் விழுந்த மழை ஒழுக்கு ஒன்று தெறித்து அவன் முகத்தில் வந்து விழுந்தது. அது விழுந்த இடம் சில்லென்று குளிர்ந்தது. (தொடரும்....................)
  16. கதை மிகவும் நன்றாக இருக்கின்றது, தில்லை ஐயா.
  17. தொடருங்கள், சுவி ஐயா. நாங்கள் தொடர்ந்து வருகின்றோம். நீங்கள் நலமாகி, எழுத ஆரம்பித்தது மிகவும் சந்தோசம், சுவி ஐயா.
  18. மிச்சிகனில் இருக்கும் இஸ்லாமிய மற்றும் அரபு மக்கள் மட்டும் இல்லை, இங்கு அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஈழத் தமிழர்களும், உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் அதிபர் ட்ரம்பிற்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இங்கு களத்தில் கூட அப்படியான ஒரு நிலைப்பாடும் இருந்தது. ட்ரம்ப் வருவதால் உலகத்திற்கே பெரும் கேடு என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லியிருந்தேன். என்ன கேடு, அவர் எங்கே யுத்தம் செய்யப் போகின்றார் என்ற ஒற்றை வரிக் கேள்விகள் தான் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தன. ஒரு மனிதனை புரிந்து கொள்வதற்கு எங்களுக்கு எவ்வளவு நாட்களும், எத்தனை நிகழ்வுகளும் தேவை. இவர் போன்ற ஒருவரால் சர்வமும் நாசம் தான். 20 இலட்சம் மக்களை 'நீங்கள் உங்கள் மண்ணை விட்டு வேறு எங்கேயாவது போங்கள்...................' என்று சொல்லுவது எந்த யுத்தம் அளவிற்கும் கொடுமையானதே. என்ன ஒரு திமிரும், அறியாமையும் வேண்டும் இப்படிச் சொல்லுவதற்கு. சூடானில் பாடசாலையில் கொடுக்கப்படும் அந்த ஒரு நேர உணவிற்காகவே பாடசாலை போகும் அந்தச் சிறுவர்கள், அமெரிக்க உதவியை நிற்பாட்டிய பின், இன்று என்ன செய்வார்கள், என்ன சாப்பிடுவார்கள் என்ற அந்த நினைவே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. இதுவா இவர் வந்தால் உலகத்திற்கு கிடைக்கும் நன்மை. அதுவும் ஒரு வருடச் செலவே சில பில்லியன் டாலர்கள் மட்டுமே. பக்கத்தில் இருக்கும் நாடு கனடா. முழு உலகத்திலேயேயும் உற்ற தோழன் அது தான். அதனுடனேயே தகராறா............ இத்தனைக்கும் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் போகும் குடியேறிகளும், போதைப் பொருட்களும் தான் மிக அதிகம். கனடாவை பகைப்பதால், பயப்படுத்துவதால், என்ன சமாதானம் இங்கே கிடைத்து விடப்போகின்றது. இங்கு அமெரிக்க உள்நாட்டில் இவருடைய மற்றும் இவரின் சகாக்களின் நடவடிக்கைகளை நீதிமன்றின் மூலம் கேள்வி கேட்கலாம். ஆனால், இவர்களின் அறியாமையினாலும், அதிகாரம் உள்ள திமிரினாலும் உலகிற்கு வந்து சேரப் போகும் கேடுகளுக்கு எவரைப் போய் கேட்பது.....................😌.
  19. இலங்கை, இந்தியா போய் வரும் போது தேவையானவற்றை எடுத்து வந்துவிடலாம், அண்ணா..................🤣. நாலு கிப்ஸ் வாங்கி வந்தால், அது தாரளமாக இரண்டு வருடங்களுக்கு மேல் போகும்..............
  20. இராணுவ விமானங்கள் இன்னொரு அலைவரிசையை உபயோகிக்கின்றார்கள். சக இராணுவ விமானங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கோபுரங்கள் மட்டுமே இராணுவ விமானங்களுடன் தொடர்பு கொள்ளமுடியும். பயணிகள் விமானமும், இராணுவ விமானமும் நேரடியாக தொடர்பு கொள்வது இல்லை என்கின்றார்கள்.
  21. அமெரிக்காவினை மீண்டும் சிறப்பாக மாற்றுகின்றோம் என்ற சுலோகத்தின் வழியே தான் போகின்றார்கள். ஆனால் எடுக்கப்படும் பல முடிவுகளும் இவர்கள் நினைப்பது போலவே தான் நடக்க வேண்டும் என்றில்லையே. பலமான அமெரிக்க டாலர், அதிகரித்த அமெரிக்க உள்நாட்டு உற்பத்திகள், பலமான பேரம்பேசும் வல்லமை என்பன என்று மூன்று பிரதான பயன்களாக அமையும் என்று சொல்லப்படுகின்றது. பலமான அமெரிக்க டாலர் என்று வரும் போது இறக்கும் பொருட்களுக்கு அது சாதகமாக அமைந்தாலும், ஏற்றும் பொருட்களுக்கு அதுவே பாதகமாக அமையும். அமெரிக்காவின் ஒரு பெரிய குற்றச்சாட்டு எல்லா நாடுகளுடனும் அது செய்யும் வர்த்தகத்தில் இருக்கும் குறைநிரப்பின் அளவு. அமெரிக்காவே அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கின்றது, இவர்களே அதிகமாக பொருட்களை இறக்குவதால். இதையே காரணமாக வைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கலாம் என்றும் சொல்கின்றனர். அப்படியே அதிகரித்தாலும், உபரியை என்ன செய்வது. பலமான அமெரிக்க டாலரின் நிலையில் உபரி உற்பத்திகளை எங்கே விற்பது என்ற சிக்கல்கள் வரும். அப்பொழுது குறைநிரப்பின் அளவு மீண்டும் அமெரிக்காவிற்கு பாதகமாகவே முடியும். குறுகியகாலப் பேரம் பேசும் வல்லமை ஒன்று தான் உள்ளே இருக்கும் உண்மையான நோக்கம் போலவும் தெரிகின்றது. கனடாவோ அல்லது மெக்சிக்கோவோ அமெரிக்காவில் அதிகமாகவே தங்கியிருக்கின்றது. இங்கே பேரம் பேசலாம். ஆனால் சீனாவுடன் பேரம் பேசுவது அவ்வளவு இலகுவில்லை, அதனால் தான் சீனாவிற்கு 10 வீதம் மட்டுமே போலும். அதிபர் ட்ரம்ப் அவருடைய கோரிக்கைகளை தெளிவான சில அளவுகளுடனோ, அல்லது முடிவுகளுடனோ அறிவிக்கவில்லை. ஆதலால், நான் வெற்றியடைந்து விட்டேன் என்று எந்த நேரத்திலும் அறிவித்து விட்டு, இந்த வரிவிதிப்புகளிலிருந்து அவர் வெளியே வந்து விடவும் கூடும். பலமான டாலர் என்பதை பலமான அமெரிக்கா என்று அவரது ஆதரவாளர்கள் பார்க்கின்றார்கள். நீங்கள் சொல்லியிருப்பது போல இது மிகப்பெரிய உலகளாவிய ஒரு பொருளாதார வீழ்ச்சியாகக் கூட மாறிப் போகலாம். அப்போது மிகப்பெரிய அடி மிகப்பெரிய நாடான அமெரிக்காவையே தாக்கும். என் அமெரிக்க வாழ்நாளில் இரண்டு தடவைகள் இங்கே அப்படி நடந்திருக்கின்றது.
  22. ஒவ்வொரு டாலரிற்கும் கணக்கு காட்டப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. விரயத்தையும், ஊழலையும் தவிர்க்க அது உதவும். ஆனால், செய்யப்படும் உதவிகள் அமெரிக்க தேசிய நலனுக்கு என்பதை விட, உலகில் உள்ள மிக பலவீனமான மக்களின் நலனுக்கு என்று அமைந்தாலும் அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு காரணமே. சூடானில் பிள்ளைகளுக்கு மதிய உணவு போன்ற ஒன்று இதன் மூலம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது அது நின்றுவிட்டது. இப்படியானவற்றை நிற்பாட்டுவதாலும், மொத்தமாகவே வருடம் 40 பில்லியன் டாலர்களை அமெரிக்க சேமிப்பதாலும், அமெரிக்கா புதிதாக எங்கே போகப் போகின்றது. உக்ரேனுக்கு கொடுப்பதில் அல்லது இஸ்ரேலிற்கு கொடுப்பதில் ஒரு சிறு பகுதியை குறைத்தாலே இந்த 40 பில்லியன் டாலர்களையும் விட மிக அதிகமாக சேமித்துவிடலாம். நான் ஆரம்பப்பாடசாலையில் படிக்கும் நாட்களில், பாடசாலைகளில் பிஸ்கட் கொடுப்பார்கள். அந்தப் பெட்டிகளில் அமெரிக்க தொண்டர் நிறுவனம் ஒன்றின் பெயரே இருந்த ஞாபகம். இதைப் போன்றே வேறு பல உதவிகளும் இவர்களிடமிருந்து அது தேவையான மக்களுக்கு கிடைத்திருக்கும். இவற்றை அமெரிக்கா தொடரவேண்டும். உலகில் உள்ள சில நாடுகள் மட்டுமே முழு உலகின் செல்வத்தையும் உடமையாக்கி வைத்துள்ளார்கள். அந்த நாடுகளுக்கு இந்தக் கடப்பாடு நிச்சயம் இருக்கின்றது.
  23. அமெரிக்கா போன்ற நாடுகளில் தங்கி இருப்பவர்களுக்கு இவை போன்றன என்றோ நடக்கும். அமெரிக்கா போலவே தான் சைனாவும், ரஷ்யாவும், ஐரோப்பிய நாடுகளும். இலங்கைக்கு இந்தியா கூட அமெரிக்கா போலவே. பன்முகப்படுத்தப்பட்ட வணிக தொடர்புகள் இல்லாமல், இன்னொரு நாட்டின் மீது மிக அதிகமாக தங்கி இருந்தால், இப்படியான இக்கட்டான நிலை என்றோ வரும். அமெரிக்கா கனடாவிற்கு இப்படிச் செய்வது இது முதல் தடவையல்ல. ட்ரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்திலும், அவர் இப்படியே செய்தார். ஒரு வருடத்திற்கு அதிக வரி விதிப்பை அவர் நடைமுறைப்படுத்தினார். அந்த நிலையிலும் கூட கனடா அமெரிக்காவிற்கு வழங்கிக் கொண்டிருந்த எரிபொருட்களின் வரியைக் கூட்டவில்லை. அமெரிக்காவிற்கு 60 வீதமான கச்சாய் எண்ணெய் இறக்குமதி கனடாவிலிருந்து வருகின்றது. இந்த தடவையும் கனடா கச்சாய் எண்ணெயின் வரியைக் கூட்ட தயாராகவில்லை. இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மொத்த தேசிய உற்பத்தியில் எத்தனை வீதம் என்பதே இரண்டு பக்கங்களினதும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்க உதவும் பிரதான காரணம். ஒரு நாட்டிற்கு அது 5 வீதமாக இருக்கும் போது, இன்னொரு நாட்டிற்கு அதே வர்த்தகம் 20 வீதமாக இருக்கும் என்றால், அதிகமாக பாதிக்கப்படப் போகின்றவர் நிதானமாகவே முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.