Everything posted by ரசோதரன்
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாதையைக் காப்பாற்றும் முகமாக பீஷ்மரின் பின்னால் ஓடிய அன்றைய பாரததேச அரசர்களில் ஒரு அரசன் திராவிட அரசன் என்று வாசித்ததாக ஞாபகம். பீஷ்மரின் அம்பு பட்டு ஒரு ஓரமாக இவர் விழுந்தார் என்றும் ஞாபகம். இதற்கு முன்னரேயே இன்னொரு அரசனின், சித்ராங்கதன், தேவைகளுக்காக ஆண்கள் பல இடங்களில் இருந்தும் அவருடைய அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் வருகின்றது. பழுப்பு நிறத்தில் இருந்த யவனர்களும், கருமையான நிறத்தில் இருந்த திராவிடர்களும் கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் அங்கே இருந்தது என்று நினைக்கின்றேன். மேலே ஆரியம், கீழே திராவிடம் என்று தான் ஆரியர்களின் வருகையின் பின்னர் பாரததேசம் இருந்தது போல. ஆரியத்தையும், அதன் ஊடகமான பிராமணியத்தையும், தேவபாசை என்று அவர்களே சொல்லிக் கொள்ளும் சமஸ்கிருதத்தையும், ஆட்சி மொழி என்று சொல்லிக் கொள்ளும் ஹிந்தி மொழியையும் ஒரே குடையின் கீழ் நின்று எதிர்த்துப் போராடுவோம் என்று தென்னிந்திய மக்களை ஒற்றுமைப்படுத்த இதே கருதுகோளை பின்னாட்களில் சிலர் கையில் எடுத்தனர். அதில் ஒருவர் பெரியார். ஆனாலும், தமிழர்கள் தவிர மற்ற தென்னிந்தியர்கள் ஏன் இந்த திராவிட ஒற்றுமையை முன்வைப்பதில்லை என்ற கேள்வி சரியானதே. திராவிட மொழிகளின் மூலமொழி தமிழ் என்றும், தமிழில் இருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வந்தன என்றும், தமிழர்கள் ஒரு முன்னோடிகள் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் விடயங்களை வேறு எந்த தென்னிந்திய மக்களும் ஏற்கத் தயாராகவில்லை. இது அவர்களை காயப்படுத்துகின்றது, அந்நியப்படுத்துகின்றது. சமஸ்கிருதம் தான் ஆதிமொழி என்பது எப்படி எங்களை வட இந்திய மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றதோ, அது போலவே தான் தமிழ் மொழி தான் ஆதிமொழி என்பதும் மற்றைய தென்னிந்திய மக்களை அந்நியப்படுத்துகின்றது. அதனால் தான் அவர்கள் திராவிடம் என்னும் குடையின் கீழ் வருவதில்லை. இதை விட்டு விட்டால், தமிழ்நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், மிகச் சாதாரண அரசியல் செய்பவர்களே. சிலர் திராவிடம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். இன்னும் சிலர் தமிழ் தேசியம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். தங்களினதும், தங்கள் குடும்பங்களின் நலன்களையும் தவிர, இவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு திராவிடம் மீதோ அல்லது தமிழ் மீதோ எந்தப் பற்றும் அறவே கிடையாது. சீமானுக்கும் பற்றில்லை, உதயநிதிக்கும் பற்றில்லை, விஜய்க்கும் பற்றில்லை........................... சீமானின் அரசியல் பரபரப்பு சார்ந்தது. ஈழத்து மருத்துவரின் அரசியலும் அதுவே. ஆனால் இவை பொருளற்றவை. திமுகவிற்கு அவர்களின் கொள்கைத் தலைவரை சீமான் எப்படி இப்படிச் சொல்லலாம் என்பது ஒரு தன்மானப் பிரச்சனை. அதனால் திமுகவினர் சில நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றனர். அதில் ஒன்று தான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை. ஈழத்தில் எங்களுக்கு தமிழர் என்னும் அடையாளமே எங்களின் நோக்கத்திற்கு, எங்கள் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு, போதுமானதாக இருந்தது. நாங்கள் திராவிடம் என்பதையும், தமிழ் தேசியம் என்பதையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் நலன்களுக்கு ஏற்ப ஆக்கிக் கொண்டதைப் போல ஆக்கவும் இல்லை, அதற்கான தேவைகளும் எங்களுக்கு இருக்கவில்லை. நாங்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறவும் இல்லை.
-
பாட்டுக் கதைகள்
அண்ணா, நீங்கள் பலர் இங்கு களத்தில் பழம் தின்று மரம் நட்ட அளவு அனுபவம் உள்ளவர்கள். நாங்கள் ஓரிருவர் புதியவர்கள். எங்களுக்கு இது ஒரு குழந்தைப் பிள்ளையை முட்டாசிக்கடைக்குள் எதை வேண்டும் என்றாலும் எடு என்று விட்டது போலத்தான் இருக்கின்றது......................🤣.
-
பாட்டுக் கதைகள்
அல்வாயன் சாத்திரியாரா........... அப்ப பகுதிநேரமாகத்தான் அரசியல் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்.............🤣. என்ன சாத்திரங்களோ, அண்ணா.............. ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் எடுத்து கொடுத்துக் கொண்டிருக்கின்ற படங்களைப் பார்த்தால், இந்தப் பிரபஞ்சத்தில் நாங்கள் எல்லாம் ஒரு சொல் கூட கதைக்க கூடாது என்று தான் தெரிகின்றது............ ஒரு தூசுக்கு கூட நாங்கள் சமானம் இல்லை போல..................
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
எரியுது, எரியுது....................... வேற என்ன சொல்வது, அண்ணா. இப்பொழுது இங்கு நடுக்குளிர் காலம், ஆனால் இன்றைய வெப்பநிலை 27 C அல்லது 81 F ................🫣. இந்த இடத்திலிருந்து 10 மைல்கள் தெற்குப் பக்கமாக சில நண்பர்கள் இருக்கின்றார்கள். தங்களின் பகுதிக்கு இன்னும் ஆபத்தில்லை என்று நேற்றிரவு சொன்னார்கள்................
-
பாட்டுக் கதைகள்
கவிஞரே, உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோன்றுகின்றது...............🤣. மணடைதீவுச் சாத்திரியார் சொன்னது போல வாழ்க்கை அப்படி ஒன்றும் மோசமாக இல்லை............ அதுவும் யாழ் களத்தில் இணைந்த இந்த ஒரு வருடத்தில் வாழ்வு நல்லாகவே இருக்கின்றது என்று தான் சொல்ல வந்தேன்............😜.
-
பாட்டுக் கதைகள்
சில மணங்கள் அப்படியே தான், கோஷான். உதாரணமாக, உழுத்தம் மாவின் மணம் போன்ற ஒன்று பாம்புகள் பற்றிய நினைவுகளையும், என்னவென்று ஒரு காரணம் இல்லாமலேயே, சுப்பிரமணியம் சோடா தொழிற்சாலைக்கு பின்னால் இருந்த சில இடங்களையும் நினைவிற்கு இழுத்துக் கொண்டு வரும். பாம்பின் கொட்டாவி உளுத்தம் மாவின் மணத்தை ஒத்தது என்று சிறுவயதில் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். பாம்பு கொட்டாவி விடுமா என்று கூட எனக்கு உண்மையில் தெரியாது.....................🤣. 🤣................... அமெரிக்கா போகின்றேன் என்று வீட்டில் சொன்னவுடன், ஏன் போகின்றாய், எப்பொழுது போகின்றாய் என்று கூட வீட்டில் கேட்கவில்லை. 'சரி போ...............ஆனால், ஒரு கல்யாணத்தை கட்டிக் கொண்டு போ........' என்று மட்டுமே சொன்னார்கள். மண்டைதீவுச் சாத்திரியார் சொன்னது எல்லாமே தவிடுபொடியாகிக் கொண்டிருந்தாலும், 'அந்நிய வழி' என்பது சரியாகி விடுமோ என்று ஒரு பயம் அவர்களின் மனதில் இருந்தது போல............🤣.
-
பாட்டுக் கதைகள்
மனதில் சில பாடல்களுடன் சில சம்பவங்கள் இணைந்தே இருக்கும். பாடலைக் கேட்டவுடன், பாடலின் முதல் ஓரிரு வரிகளின் பின், பாடல் பின்னால் ஒலிக்க மனம் அந்தப் பழைய நினைவில் மூழ்கிவிடும். மீண்டு இன்றைய உலகத்திற்கு திரும்பி வருவதே சிலவேளைகளில் பெரும் சிரமம்தான். பழைய நினைவுகளை மீட்பது என்பது தேன் தடவிய விசம் போன்று என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டிருந்ததை பார்த்திருக்கின்றேன். ஊக்கத்தை கெடுத்து விடும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்கள் போல. ஆலால கண்டன் போல விசம் முழுவதும் உள்ளிறங்காமல் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டு, நினைவுகளை இடையில் கலைத்து விட்டு, ஊக்கமது கைவிடேல் என்று வாழ வேண்டும் போல...............😜. *********************************************************************************** பாடல் ஒன்று - கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் -------------------------------------------------------------------------- எத்தனை தடவைகள் தான் ஊரின் ஒரு எல்லையிலிருந்து மற்ற எல்லைக்கு நடப்பது. என்னதான் தெருவெங்கும் குழாய் மின்விளக்குகள் பத்து அடிகளுக்கு ஒன்று என்று இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டு, அவை பளிச்சென்று பகல் போல எரிந்து கொண்டிருந்தாலும், சூடான தேநீர் கோப்பி மற்றும் குளிரான இனிப்பு பானங்கள் என்று தாராளமாக, இலவசமாகவே, பல இடங்களில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், கால்கள் போதும் போதும் என்று கெஞ்ச ஆரம்பித்திருந்தது. அக்காவின் கால்களின் நிலைமையும் அதுவே தான். ஆனால் அக்காவிற்கு பாடல்கள் மேல் இருக்கும் ஆசை பூமிக்குள் கொதித்து எரிந்து கொண்டிருக்கும் எரிமலை போன்றது. அன்று அது வெளியே வந்து ஆகாயம் வரை பரவிக் கொண்டிருந்தது. பாடல்களை கேட்பதில் மட்டுமே அவரின் கவனம் குவிந்திருந்தது. அந்த இரவில் ஊரின் பிரதான வீதியில் பத்து இசைக்குழுக்கள் பாடிக் கொண்டிருந்தன. இரண்டு மைல்கள் நீண்ட வீதியில் ஓரளவிற்கு சரியான இடைவெளிகள் விட்டு இசைக்குழுக்களின் மேடைகள் இருந்தன. ஒரு இசைக்குழுவின் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் அக்கா, 'சரி வா, அடுத்ததிற்கு போவோம்.............' என்று சொல்லிக் கொண்டே, என் பதிலை எதிர்பார்க்காமலேயே, எழும்பி நடந்து கொண்டிருந்தார். அவர் பின்னால் நான் ஓடிக் கொண்டிருந்தேன். அக்காவிற்கும் எனக்கும் ஒரு வயது தான் இடைவெளி. ஆனால் அக்கா எங்களிருவருக்கும் இடையில் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது போல நடந்துகொள்வார். அவருக்கு எல்லாமே தெரிந்தும் இருந்தது. எனக்கு எதுவுமே தெரியாது என்று தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அதனாலோ என்னவோ ஒரு நசிந்த விரலை கவனமாக பொத்திப் பொத்தி பார்ப்பது போல அக்காவும் அம்மாவும் என்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மண்டைதீவிலிருக்கும் ஒரு சாத்திரியார் தான் வீட்டில் எல்லோருக்கும் குறிப்புகள், ஜென்ம பலன், எழுதி இருந்தார். என்னைத் தவிர மற்ற எல்லோருடைய குறிப்புகளிலும் அவர்கள் ஆஹா, ஓஹோ என்று வருவார்கள் என்று இருந்தது. என்னுடைய குறிப்பு மட்டும் படு மோசமாக இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் நல்ல குறிப்புகளும், எனக்கு மட்டுமே மோசமாகவும் இருந்தபடியால் வீட்டில் எல்லோரும் எல்லா குறிப்புகளையும் சரியே என்று நம்பியும் இருந்தனர். மண்டைதீவு சாத்திரியார் எழுதிய குறிப்பின் படி நான் கடைசியாக படிக்கும் வகுப்பு பத்தாம் வகுப்புத்தான். அத்துடன் கல்வி முடிந்து விடும் என்று தெளிவாக எழுதி இருந்தார். நான் அந்தக் குறிப்பை பல தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்திருக்கின்றேன். திருமணம் அந்நிய வழியில் நடக்கும் என்றும் ஜென்ம பலனில் எழுதப்பட்டிருந்தது. அந்நிய வழி என்றால் என்னவென்ற சந்தேகம் எப்போதும் இருந்தது, ஆனால் நான் எவரையும் இது சம்பந்தமாக இன்று வரை விசாரிக்கவில்லை. அக்காவும் நானும் ஊரின் ஒரு எல்லையில் நடந்து கொண்டிருக்கும் இசைக்குழுவின் மேடை போடப்பட்டிருந்த பாடசாலை மைதானத்தின் முன் மீண்டும் வந்து விட்டிருந்தோம். இது நாலாவது தடவை. இதற்கு மேலால் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, இங்கேயே இருப்போம் என்று நான் அக்காவிடம் கெஞ்சினேன். அக்கா என்னைக் கவனிக்கவில்லை. அவர் மேடையையே பார்த்துக் கொண்டிருந்தார். கிழக்கு மேற்காக நீண்ட மைதானத்தில் மேடை வடக்குப் பக்கமாக அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்தின் மேற்குப் பக்கத்தில் ஒரு வரிசை வீடுகள், அதன் பின்னர் இராணுவ முகாம். மைதானத்தின் வடக்குப் பக்கமாக, மேடையின் பின்னால், பனைமரங்கள், அதன் பின்னால் கடல். தெற்குப் பக்கத்தில் வீதி, அதன் பின்னர் பாடசாலை. அக்கா மைதானத்திற்குள் கால் வைக்காமல் வீதி ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தார். திரும்பி நடந்து விடுவாரோ என்று நான் ஏங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். இராணுவ முகாமில் இருந்து பல இராணுவ வீரர்கள் அங்கங்கே வந்து நின்று இசைக்குழு பாடுவதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகளில் எதுவும் இல்லை. அவர்கள் எல்லோரும் சாதாரண உடையிலேயே இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வேறு, நாங்கள் வேறு என்றும், எங்களுக்கிடையில் ஏதோ சில அடையாள வித்தியாசங்கள் இருப்பதும் வெளிப்படையாகவே இருந்தன. மேடையின் பின்னால், கொஞ்சம் மேற்குப் பக்கமாக, முன் நின்ற மிக உயர்ந்த சில பனைமரங்களின் முன்னால் மிகப்பெரிய ஒரு போர்டிகோ கட்டப்பட்டிருந்தது. கட் அவுட்டை நாங்கள் போர்டிகோ என்று சொல்வோம். இன்று நடிகர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வைக்கும் கட் அவுட்டுகளை விட என்னுடைய ஊரில் சிறப்பானதும், பெரியதுமான கட் அவுட்டுகளை அன்றே வைப்பார்கள். ஐம்பது அடிகளில் கூட சாதாரணமாக செய்து வைப்பார்கள். எல்லா கட் அவுட்டுகளும் சாமியின் உருவங்களாகவோ அல்லது அழகிய பெண்ணின் உருவங்களாகவோ மட்டுமே இருக்கும். ஆண் உருவங்களில் கட் அவுட் வைப்பதில்லை போல. நான் பார்த்ததில்லை. அந்த மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் பிரமாண்டமாக இருந்தது. லவனும் குசனும் ஒரு குதிரையை கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போன்ற மிக உயர்ந்த ஒரு கட் அவுட். பனைமரங்களிற்கு மேலால் லவனும் குசனும் நின்றார்கள். அவர்கள் இருவருக்குமிடையில் ஒரு வெள்ளைக் குதிரை. சீதாப்பிராட்டியின் புத்திரர்களின் அதே அளவு கம்பீரத்துடன் அந்தப் புரவியும் அங்கே நின்று கொண்டிருந்தது. அடுத்த பாடல் 'கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான். கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்..................' என்று அந்த இசைக்குழுவின் அறிவிப்பாளர் அறிவித்தது எதிரொலித்துக் கொண்டிருந்தது. 'சரி............. வா, போய் இருப்பம்...........' என்று அக்கா மைதானத்திற்குள் நடந்தார். நான் அக்காவைப் பின்தொடர்ந்தேன்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
🤣.................. நீங்கள் இருவருமாக என்னையும் ஒரு கருத்தியல்வாதியாக மாற்றாமல் விடமாட்டீர்கள் போல............. நான் ஒரு இருத்தலியல்வாதி............. 'நேசம் நேசம்.............' என்று சொல்லுகின்ற நேசமணி குரூப்...........🤣.
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
ஓபாமாவின் பின்னர் ஒரு மாற்றம் திடீரென்று வந்தது, பூமியில் ஒரு ice age வந்தது போல............... இது அமெரிக்காவிற்கு மட்டும் இல்லை............ ட்ரம்ப், கோதபாய, மோடி, போரிஸ் ஜான்சன், இன்னும் பலர் என்று ஒரு விதமான தீவிர மற்றும் வெளிப்படையான பிரிவினைகளைத் தூண்டி, அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் குழுக்கள் உலகெங்கும் உருவாகிவிட்டன. ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு காரணங்களால் இவை வலுப்பெற்றன. இதை ஏற்க மறுத்தவர்கள் ஒதுங்கினர் அல்லது தலைவர்களாக அந்த அந்தக் கட்சிகளிலேயே மேலே வர முடியவில்லை என்று நினைக்கின்றேன். இப்படித்தான் எதிர்காலத் தலைவர்களை இழந்தோம் என்று நினைக்கின்றேன். சில மாதங்களின் முன், ஏதோ ஒரு திரியில் மனிதர்களின் நாகரீக முன்னேற்றம் என்பது ஒரு நீர்க்குமிழியோ என்று ஐயம் வருகின்றது என்று இதையே எழுதியிருந்தேன். மிக இலகுவாக, முன்னே போய்க் கொண்டிருக்கும் நாங்கள் சில தலைமுறைகள் பின்னே போய்விட்டோம். அமெரிக்காவில் மிகச் சாதாரண மனிதர்களிலேயே மிகவும் அற்புதமானவர்கள் இருக்கின்றனர். தலைவர்களாகும் தகுதி கொண்டவர்களும் நிச்சயம் இருப்பார்கள். இங்கிருக்கும் கல்விமுறையும் ஓரளவிற்கு சுதந்திரமான சிந்தனையை ஊக்குவிக்கின்றது. ஆனாலும் மக்கள் ஒரு உணர்ச்சிப் பெருக்கில் சிக்கி நிற்கின்றனர், ஒரு போராட்ட காலம் போல, காட்டாற்றில் பலதும் மூழ்குவது போல சில மூழ்கி விட்டன................. மீண்டு வந்து விடுவார்கள் என்பதே என் நம்பிக்கை.
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
அண்ணா, எங்களின் விட்டுக்கொடுப்பிற்கும் ஒரு அளவு தான் உள்ளது............... நாங்கள் என்ன ஒரு கலன் ஒரு டாலருக்கா கேட்கின்றோம்................ உலகத்தின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு, ஒரு கலனை இரண்டு டாலர்களுக்கு வாங்குவதற்கு இறங்கி வந்திருக்கின்றோம்...........................🤣. பெரிய சிரிப்பே அமெரிக்கர்கள் அல்ல, அவர்களின் தெரிவிற்கு நியாயங்கள் உள்ளன. ஆனால், மற்றைய நாட்டவர்கள் பலர் ட்ரம்ப் வந்தால் உலகத்துக்கே ஒரு விடிவு வந்தது போல என்று சொல்வது தான் பெரிய சிரிப்பு........
-
வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!
'நாயகன்' படத்தில் குயிலி ஆடிக் கொண்டிருக்கும் போது, கமலும் ஜனகராஜும் இப்படிச் செய்திருக்கின்றார்கள்...................🤣. அந்தக் காலங்களில் ஊரில் மூன்று காவல்காரர்களும் இருந்தார்கள். இராணுவ முகாம், போலீஸ் நிலையம் மற்றும் கடற்கரையில் சுங்க அதிகாரிகள். அதிலும் இந்த சுங்க அதிகாரிகள் இருக்கிறார்களே, அவர்களின் இடம் கடற்கரையை ஒட்டி, கடலைப் பார்த்தபடியே இருந்தது. எல்லோரும் நன்றாக, செழிப்பாக அன்று வாழ்ந்திருக்கின்றார்கள்.................😜.
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
ஏது................ குப்பை மலிவா............... உலகம் பூரா குண்டு போட்டு, சண்டையை மூட்டி, வெருட்டோ வெருட்டோ என்று வெருட்டுகின்ற அமெரிக்காவும், இருக்கின்ற இடம் தெரியாமல் இருக்கின்ற ஜேர்மனியும் ஒன்றா............ முறைப்படி, அமெரிக்காவின் முயற்சிகளின் படி, அமெரிக்காவில் ஒரு லீட்டர் பெட்ரோல் 25 சதத்திற்கு கிடைக்கவேண்டும்................😜. ஒரு கலன் ஒரு டாலர்.......... அப்படித்தான் இருந்தது...........
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
ஓ................. இவர் அணியின் உதவித் தலைவர் வேறயா................இருக்கட்டும் பையன் சார், நமக்கு மூன்று பேர்கள் கிடைத்து விடுவார்கள் போல....................🤣.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பையன் சார், என்னுடைய கருத்துகள் எல்லாம் ஒன்றுமேயில்லை. நான் வெறுமனே பொழுதுபோக்காக எனக்குத் தோன்றுவதை எழுதுகின்றேன். என் கருத்துகளை விட, இங்கிருக்கும் கள நட்புகள் எனக்குப் பெரியது. உங்களின் நட்பும் அதைவிடவும் பெரியது..............❤️. இங்கு எழுதும் பலர் அவர்களின் நிலைப்பாட்டில், கொள்கைகளில் எவ்வளவு உறுதியானவர்கள் என்று அறிந்துள்ளேன். அவர்களின் வாழ்க்கைப் பாதைகளும், அனுபவங்களும், நோக்கங்களும் அப்படியே அமைந்துள்ளன என்று நினைக்கின்றேன். உங்கள் எல்லோரின் மேலேயும் மிக்க மதிப்பும் உள்ளது. நீங்கள் பலர் எழுதும் கருத்துகளை வாசித்து, நீங்கள் சொல்பவைகள் சரியாக இருக்குமோ என்ற யோசனைகள் வருவதும் உண்டு. எவர் மேலும் மனஸ்தாபம் வரப் போவதில்லை...................👍.
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
🤣.................... யாரப்பா அந்த கில்லு............ அவரையும் கண்டிப்பாக 11 க்குள் கொண்டு வாருங்கோ.............. அமித்ஷா, ஜெய்ஷா வரை மனு போடுவதென்றாலும் போடுகின்றோம்....................
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
என்ன சிரிப்பு அண்ணா............... கலன் என்று தான் நாங்களும் சொல்லுவம், ஆனால் அமெரிக்க கலன் வேற.............🤣. ஒரு அமெரிக்க கலன் - 3.7854 லீற்றர் ஒரு பிரிட்டிஷ் கலன் - 4.546 லீற்றர் இந்த விடயம் நம்ம தலைக்கு தெரிந்தால், தல ட்ரம்ப் இரண்டு கலன்களையும் இன்றே ஒன்றாக்கி விடுவார்...............🤣.
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
இந்த Tf rinnozah என்ற முகப்புத்தகக்காரார் சும்மா அடித்தும் விட்டிருக்கின்றார். ஒரு உதாரணம்: அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக வருவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் எலான் மஸ்க்.............. என்று இவர் எழுதியிருப்பது. எலான் மஸ்க்கோ அல்லது நானோ அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வரவே முடியாது. ஏனென்றால் நாங்கள் இருவரும் இங்கே பிறக்கவில்லை.............😜. வெளிநாடுகளில் ட்ரம்ப் என்ன செய்கின்றார் என்பது இங்கே முக்கியமேயில்லை. ஒரு கலன் பெட்ரோல் இரண்டு டாலருக்கு வரும் என்று சொன்னார், அது எங்கே என்று தான் முதல் கேள்வி வரும். நானே இந்த வாரம் காரை கொஞ்சமாக பெட்ரோல் விட்டுத் தான் ஓடிக் கொண்டிருக்கின்றேன். இன்றும் ஒரு கலன் $ 3.70............... இரண்டு டாலருக்கு வந்தவுடன் நிரப்பும் திட்டத்துடன்................🤣. இது போலத் தான் மேலே ஏறிய எல்லா விலைவாசிகளும்............ இவை கீழே வராவிட்டால், அடுத்த வருட இடைத் தேர்தல்களில் இவரின் கட்சி காலி.............. காங்கிரஸும், செனட்டும் இவரின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், அதிபர் வெளிநாடுகளுடன் மல்லுக்கட்டுவதை விட்டு விட்டு, அமெரிக்க தலைநகரில் தான் மல்லுக்கட்டவேண்டும். அல்பேர்ட் ஐன்ஸ்டைனும், எலான் மஸ்க்கும், சுந்தர் பிச்சையும் மட்டும் தான் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு தேவை என்றில்லை. தக்காளித் தோட்டத்தில் வேலை செய்வதற்கும், பாதாம் மரங்களை பார்த்துக் கொள்வதற்கும், வீடுகளில் புல்லு வெட்டுவதற்கும் கூட ஆட்கள், மில்லியன் கணக்கில், தேவை............... இங்கேயும் அமெரிக்காவிற்கு வின் - வின் தான். 24 மணிநேரம் ஆகிவிட்டதே............... நின்று விட்டதா சண்டைகள்..................... அப்புறம் செய்து வைத்திருக்கின்ற ஆயுதங்களை யாருக்கு விற்பதாம், புதிய ஆயுதங்களை எப்ப செய்வதாம்.................. இது அமெரிக்க ஜனாதிபதிக்கே அப்பாற்ப்பட்ட விடயம்...................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
என்ன ஓணாண்டியார் நீங்கள், எங்களை பற்றி கொஞ்சம் பெரிதாக நினைத்து வைத்து இருக்கிறீர்கள் போல...........🤣. என்னிடம் அவ்வளவு திறமையும் இல்லை, பொறுமையும் இல்லை. நான் இணைத்த இரண்டும் மின்னம்பலம் மின்னிதழில் இருந்து அப்படியே எடுத்தது.................. என்னுடைய நிலையான கருத்து சீமான் ஒரு 'போலித் தேசியவாதி மற்றும் ஆபத்தான கோமாளி' என்பது தான்......... ஆபத்தை எட்டு வீதத்திலிருந்து எப்படிக் குறைக்கலாம் என்று வெறுமனே யோசிப்பதும் உண்டு.....😜. நாங்களும் மாறப் போவதில்லை, நீங்களும் மாறப் போவதில்லை, சீமானும் மாறப் போவதில்லை....................👍.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
கீழே இணைத்திருப்பது பரவாயில்லையா, வசீ..................🤣. இது என்னுடைய இணைப்பு வேலைகள் இல்லை. இணையத்தில் தம்பிகள் சிலர் பொழுது போகாமல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.......... எனக்கும் கிருபனின் கருத்து தான். நீங்கள் தலைவருடன் ஒன்றாகப் படம் எடுத்தால் தான் என்ன, எடுக்கா விட்டால் தான் என்ன................ ஒரு சல்லிக்காசிற்கு எம் மக்களுக்கு அதனால் பிரயோசனம் கிடையாது........
-
"மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தைக் குடிக்க மாட்டீங்களா?" - தமிழிசை சொல்வதென்ன?
அடி ஆத்தி.............. நாங்கள் உங்களைப் பற்றி நினைத்ததை விட நீங்கள் தத்திகளாக இருக்கிறீர்களே...........இதில் நீங்கள் மருத்துவர் வேறு............ பன்றி இறைச்சியும் தான் சாப்பிடுகின்றோம். அதற்காக பன்றியின் சிறுநீரையும் குடிக்கலாம் என்பீர்களா...........
-
யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
இல்லை விளங்க நினைப்பவன், நான் தனியார் நிறுவனங்களில் தான் எப்போதும் வேலை. ஆனால் 'அரசவேலை' போல வேலை செய்யச் சொல்லும் நிறுவனங்களுக்கு மட்டுமே சேவையை வழங்குவதாக முடிவெடுத்து போய்க் கொண்டிருப்பதால், நான் இன்று வேலையில் இருக்கின்றேனோ அல்லது இல்லையோ என்ற சந்தேகம் இடைக்கிடை வரும்...............🤣. ஒரு பாகைமானியில் எலான் மஸ்க், விவேக் போன்றோர் ஒரு நுனியிலும், சிலர் அதற்கு நேர் எதிரான நுனியிலும், ஆனால் தனியார் நிறுவனங்களிலேயே இருக்கின்றார்கள். இங்கும் அரசவேலை பள்ளிக்கூடத்திற்கு போவது போலவே............. படிக்கத் தேவையில்லை, படிப்பிக்கவும் மாட்டார்கள், ஆனால் மணி அடிக்க உள்ளே இருக்க வேண்டும், கடைசி மணி அடிக்க வீட்டுக்கு கிளம்பவேண்டும். தனியார் நிறுவனங்களில், குறிப்பாக ஐடி நிறுவனங்களில் நேரக் கட்டுப்பாடு பொதுவாகக் கிடையாது, அதிகமாக சம்பாதிக்கலாம். அதிக சம்பளம், போனஸ், நிறுவனப் பங்குகள், 401கே முதலீடுகள் என்று கிடைக்கும். நிறுவனங்களின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து இவை அமையும். இங்கு அதிபராக ட்ரம்ப் வந்தவுடன், பங்குச்சந்தை ஏறி, இன்று பலர் புதிய 401கே கோடீஸ்வரர்கள்........ லாஸ் ஏஞ்சலீஸ் நெருப்பு போல இடைக்கிடை தனியார் நிறுவனங்களில் எரிந்து சாம்பலாவதும் உண்டு......🤣. மகளுக்கு முதல் வேலை தனியார் நிறுவனத்திலும், அரசாங்கத்திலும் கிடைத்தது. 'முதல் வேலையே அரசில் வேண்டாம், அம்மா................ வாழ்க்கையில் சில வருடங்களாவது வேலை செய்வது நல்ல அனுபவம். அரசில் பின்னர் சேரலாம். ஆனாலும் உன் இஷ்டம், பிள்ளை...................' என்ற பொறுப்பான ஒரு ஆலோசனையின் பின், மகள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்.............😜.
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
Eagles vs Rams, Bills vs. Ravens இரண்டும் நேற்றுப் பார்த்தேன், பையன் சார். நல்ல விளையாட்டுகள்................. பனி கொட்டோ கொட்டென்று கொட்ட விளையாடினார்கள்.......👍. Eagles நல்ல அணியே.......... Kansan City Chiefs இதுவும் நல்ல அணியே. இவர்கள் இருவரும் இறுதிப் போட்டிக்கு வந்தால் நன்றாக இருக்கும்............
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
எனக்கு இது நல்லா பிடிச்சிருக்கு............... எவ்வளவு பணிவு, அடக்கம்...............
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
🤣................... ரோகித்தும் கோலியும் வந்தால், 'பத்துக்குள்ள நம்பர் ஒன்று சொல்லு...............' என்று வைச்சு செய்வோமே..................... இவர்கள் இருவரும் கிரிக்கட் விளையாடுவதை விட்டு விட்டார்களா அல்லது இன்னமும் விளையாடுகின்றார்களா...............
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
இலங்கை அணி இல்லையா................😙. ஒரு எதிரி அணி இல்லாமல் எப்படிக் களமாடப் போகின்றமோ............🤣.