Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. இல்லை அண்ணா. உக்ரேன் தனியாக நின்றால், அதிபர் புடின் சொன்ன மூன்று வாரக் கணக்கு சரியாகவே இருந்திருக்கும். இன்னும் கொஞ்சம் உக்ரேன் தனியாக இறுதிவரை போராடி இருந்தால், மூன்று மாதங்கள் வரை போயிருக்கலாம். இந்த சண்டை ஆரம்பிக்கும் போது நான் யாழ் களத்தில் இணையவில்லை. ஆனால் சில குழுமங்களில் எழுதியிருந்தேன், மூன்று வாரங்கள் ரஷ்யாவிற்கு போதுமென்று. அதே போன்றே சீனாவிற்கும் இந்தியாவுடன் ஒரு சண்டை வந்தால் மிகக் குறுகிய காலமே போதும் என்றும் எழுதியிருந்தேன். நான் சொன்ன இழுக்கு இலங்கை இளைஞர்களை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்திருப்பதைப் பற்றி. அது முற்றிலும் தேவையே இல்லாத ஒரு விடயம் ரஷ்யாவிற்கு........... எங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக ஒருவரை கண்மூடிக் கொண்டு ஆதரிக்க தேவையில்லை, அவர்களின் எல்லா நடவடிக்கைகளையும் நியாயப்படுத்த தேவையும் இல்லை, அண்ணா............. அமெரிக்கா, ரஷ்யா என்பதையும் தாண்டி, எங்களுக்கு ஒரு பெறுமதி இருக்கின்றது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதன் வழியே தான் என் பார்வையும், கருத்துகளும் அமைகின்றன............... இதை ஒரு மூன்று வார கால Special Operation என்றே புடின் ஆரம்பத்தில் ஆரம்பித்திருந்தார். முதலாவது குளிர்காலத்தில் எல்லாம் தலைகீழானது, அத்துடன் மேற்கு நாடுகளின் உக்ரேனுக்கான இடைவிடாத உதவிகளும் எதிர்பார்க்காத சிக்கல்களை கொண்டு வந்துவிட்டன. எந்த நாடும் நீண்ட ஒரு போரை விரும்பப் போவதில்லை.............................
  2. அப்படி இல்லை, அண்ணா.......... இவை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியே பராமரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஊர்களிலும் அல்லது பிரதேசங்களிலும் இதற்கென தண்ணீர் பெரிய தேக்கங்களில் இருக்கும். அது மிக அதிக அழுத்தத்துடன் எரியும் நெருப்பை அணைப்பதற்கு வரவேண்டும். வீட்டுக்கு வரும் தண்ணீரை விட மிக அதிக அழுத்தத்துடன். மாலிபு பகுதியில் இருந்த தண்ணீர் தேக்கத்தில் தண்ணீர் முடிந்து போனது. அதுவே தான் காரணம். வீட்டுக்கு வரும் தண்ணீரையும், அந்த அழுத்தத்தையும் கொண்டு நெருப்பை எதுவும் செய்ய முடியாது. என்னுடைய நண்பர்கள், இலங்கைத் தமிழர்கள் தான், லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் நீர் வழங்கும் அமைப்பின் பிரதம பொறியியலாளர்களாகவும், பொறியியலாளர்களாகவும் இருக்கின்றார்கள்.
  3. 👍.............. ரஷ்யாவின் மீது உக்ரேன் தாக்குதல் நடத்துகின்றது. எங்களுக்கு உதவியாக வட கொரியாவில் இருந்து 11 ஆயிரம் வட கொரிய துருப்புகள் வந்து சண்டையில் ஈடுபட்டுள்ளன என்று ரஷ்யா சொன்னால் எவரும் எதுவும் செய்ய முடியாது................அது அவர்களுக்கிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம்........... ஆனால் ரஷ்யா அப்படிச் சொல்லாது............... 'கெத்து' ஒன்று இருக்கின்றதல்லவா.............. இலங்கையிலிருந்து பிடித்து, உக்ரேன் எல்லைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பியிருக்கும் இலங்கை இளைஞர்களை, 500 அல்லது அதற்கு மேலே??, ரஷ்யா விடுதலை செய்து விடலாம்............. அந்த இலங்கைக் குடும்பங்கள் பாவம் தானே.......... பெரிய பெரிய இராணுவ பலமுள்ள நாடு என்று சொல்லிக் கொண்டே ரஷ்யா இப்படிச் செய்வது இழுக்கு தானே........... மற்றபடி, உலக ஒழுங்கில், உக்ரேன் மேற்கு நாடுகளின் ஒரு சின்னக் கருவியே. முடிவில் உக்ரேன் என்னவானாலும் எவரும் திரும்பிப் பார்க்கப் போவதில்லை. ரஷ்யாவை கொஞ்சமாவது பலவீனமாக்கினால் அதுவே அமெரிக்காவிற்கும், மேற்கு நாடுகளுக்கும் போதும்............ இவர்கள் அதற்காக செலவழிக்கும் தொகை அப்படி ஒன்றும் பெரிது கூட இல்லை.............. பொல்லாத உலகமும், பொல்லாத மனிதர்களும்...............
  4. அருமை அண்ணா.........👍. ஒரே ஒரு வீடு தான் அண்ணா சின்ன வீடும் அதுவே..........
  5. இது என்ன @Kapithan, @குமாரசாமி அண்ணா.............. குழந்தைப் பிள்ளைகள் போல விட்டுவிட்டுப் போகின்றேன் என்று சொல்கிறீர்கள். வேலை கூடிவிட்டது என்றால், முடியுமான நேரங்களில் வாருங்கள், ப்ளீஸ்......... நீங்களும், மற்றவர்களும் இல்லாமல் என்ன களம்...............🤝. என்னைப் போன்ற ஒரு ப்ரியம் உள்ள உறவை இழக்க உங்களுக்கு எப்படி மனம் வருகின்றதோ............😜.
  6. பாரதிராஜாவின் 'தாஜ்மஹால்' படத்தில் 'குளிருது குளிருது இரு உயிர் குளிருது.............' என்று ஒரு பாடல் இருக்கின்றது. அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமை. இந்தப் பாடலில் '.......சுற்றி எல்லாம் எரிகின்ற போது..................' என்று தொடங்கி சில வரிகள் போகும்............ நீங்கள் சொல்லியிருக்கின்றது தான்........🤣. ஆஸ்திரேலியாவால் கலிஃபோர்னியாவிற்கு வந்த நிலை உங்களுக்கு வரவில்லையே என்றும் ஆறுதல் அடையலாம்.................🤣.
  7. இந்தக் காலத்தில் எந்த வீட்டில் அப்பா அந்தப் பக்கம் அப்பாவியாக இருக்கின்றார்கள்................. அது ஒரு காலம், எங்க அப்பா, தாத்தா காலம்....................🤣. நேற்று பின்னேரம் இப்படி ஒரு செய்தி அலைபேசியில் உண்மையாகவே வந்தது. இது என்ன, நெருப்பு 25 மைல்கள் தள்ளித்தானே எரிகின்றது, இவர்கள் ஏன் எங்களை வெளிக்கிட்டு ஓடுங்கள் என்று சொல்கின்றார்கள் என்று நினைத்தேன். கொஞ்ச நேரத்தில், 'மன்னிக்கவும், அந்தச் செய்தியை மறந்து விடவும், அது வேறு இடத்துக்குப் போக வேண்டிய செய்தி, தவறுதலாக உங்களுக்கும் வந்து விட்டது.........' என்று இன்னொரு குறுஞ்செய்தி வந்தது...........🤣. எவ்வளவு செயற்கை நுண்ணறிவுகள் வந்தாலும், நம்ம புரோகிராமர்ஸ், எஞ்சினியர்ஸ் அவர்களின் கைவரிசையை, திறமைகளை இப்படிக் காட்டாமல் விடமாட்டார்கள் போல............🤣
  8. அந்தக் காலத்திலேயே 'எரியப் போகின்ற வீட்டில் பிடுங்குவது இலாபம்...........' என்று கலிஃபோர்னியாவிடம் இருந்து எடுத்திருக்கின்றீர்கள்.................🤣. மத்திய மற்றும் வட கலிஃபோர்னியாவில் சில சஞ்சீவி மரங்களைக் கண்டிருக்கின்றேன். இலங்கையில் கூட ஒரு காலத்தில் இந்த மரங்கள் ஏதோ ஒரு நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு மிக வேகமாக அறிமுகப்படுத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டன. ஆஸ்திரேலியாவில் இருந்து தான் இலங்கைக்கும் வந்ததா என்று ஞாபகமில்லை. ஆனால், அமெரிக்கர்கள் போலவே ஆஸ்திரேலியர்களும் கொல்லன் தெருவிலேயே ஊசி விற்று விடுவார்கள் போல.................😜 இந்த மரங்கள் நிலத்தடி நீரை மிக ஆழச் சென்று அதி வேகமாக உறிஞ்சி, பூமியை கட்டாந்தரையாக்கி விடுபவை என்று பின்னர் சொன்னார்கள். இப்பொழுது இந்த மரங்களை ஒருவரும் அவ்வளவாக நாடுவதில்லை என்று நினைக்கின்றேன்.
  9. யுகலிப்ஸ் மரங்களை சஞ்சீவி மரங்கள் என்று ஊரில் சொல்லுவோம். இவை தென் கலிஃபோர்னியாவில், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் மிகக் குறைவு. இங்கிருப்பவை சவுக்கு மரங்களின் பல்வேறு வகைகள். மிகவும் உலர்ந்த பாலைநிலத்துக்கான மரங்கள். அதனால் காலநிலைக்கேற்ற பசுமையற்ற, ஆனால் எண்ணெய் பிடிப்புக் கொண்ட மரங்கள். எங்கள் ஊர் ஆமணக்கு, சவுக்கு போன்ற சில குணாதிசயங்கள் கொண்ட, ஆனால் பெரும் விருட்சங்கள். இவை எரிய ஆரம்பித்தால் நின்று எரிந்து கொண்டேயிருக்கும். இங்கு எரியும் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகள் செய்வதில்லை. தீ பரவாமல் இருப்பதற்கே நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  10. 🤣............ எனக்கும் இந்த வகையான ஒரு சில இந்திய நண்பர்கள் இருக்கின்றார்கள், வசீ. கொகா கோலா என்ன சுவை, பெப்சி என்ன சுவை என்று தெரிந்து தானே அந்தச் சோடாக்களை குடிக்க ஆரம்பிக்கின்றோம், அது போலவே தான் சில மனிதர்களும்................ இப்படித்தான் கதைப்பார்கள் என்று முன்னரே தெரிந்துள்ளபடியால் தயாராகவே இருக்க வேண்டியது தான்............ சினிமா, கதாநாயகர்கள் வழிபாடு, அவர்களின் உள்ளூர் அரசியல் சழக்குகள் என்றில்லாமல் சிலர் இருப்பதால் ஒரு வித மேதாவித் தன்மையும் இவர்களிடம் இருக்கக்கூடும். ஒருவர் மேதாவி என்று தன்னை நினைப்பதில் தவறு எதுவும் இல்லை, ஆனால் அப்படி தங்களை நினைப்பவர்கள் பலர் சுற்றி இருப்பவர்களை கொஞ்சம் குறைவான ஆவிகளாக நினைப்பார்கள்......... அது தான் சிக்கல்...............😜. இலங்கை நாங்களே அழிகின்றோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ஒரு தேசம். சீனா தான் கடன் கொடுத்து அழித்திருக்க வேண்டும் என்றில்லை..............
  11. தேவையானவை --------------------------- அலைபேசியில் அபாயச்சங்கு முழங்கியது நெருப்பு உங்கள் அருகில் உடனடியாக கிளம்பவும் அவசியமாக தேவையானவற்றை அளவாக எடுக்கவும் என்று அலைபேசி மின்னியது எவை தேவை என்று முகட்டைப் பார்த்தேன் முதலில் தேவை ஒரு காற்சட்டை' வீட்டிலிருந்து வேலை என்பதால் இடுப்பில் இருந்தது வெறும் சாரம் மட்டுமே அடுத்தது தேவை மட்டைகள் காசு மட்டை கடன் மட்டை அடையாள மட்டை என்று ஒரு கொத்து மட்டைகள் இருக்கின்றன் இங்கு எல்லோரிடமும் எதற்கும் கடவுச்சீட்டையும் எடுப்போம் ஓடிப் போக மெக்சிக்கோ வந்து நான் உள்ளே போய் விட்டால் திரும்பி வர அது வேண்டுமே அலைபேசியும் அதன் மின்னூட்டியும் மிக அவசியம் மடிக்கணினி தேவையேயில்லை முக்கியமாக வேலைக்கணினி அது வெந்து போகட்டும் குடும்பப் படங்கள் சில கையில் கிடைக்கும் சில உடுப்புகள் இப்படி காரை நிரப்பவும் அவசியப் பொருட்கள் பல இருக்கின்றன என்ன அலைபேசியில் இப்படியொரு பயங்கரச் சத்தம் என்று பின்னுக்கு இருந்து வீட்டுக்குள் ஓடி வந்தார் என் வீட்டுக்காரி ஆளைக் கண்டவுடன் மிக அவசியமான ஒன்று மறந்தே போயிருந்தது தெரிந்தது இப்ப காரில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு பொருட்களை ஏற்ற வேண்டும்.
  12. நீங்கள் சொல்வதும் சரிதான், செவ்வியன்................ இவருக்கு வாக்குகளை போட்டுக் கொண்டிருக்கும் மக்களில் ஒரு தொகுதியினராவது இவரை இனிவரும் காலங்களில் தவிர்த்தால் அது நன்மையே...........👍.
  13. 🤣................... ஆளில்லாமல் அந்தப் பக்கமாக விமானத்தில் வந்து இறங்குபவர்களையே பிடித்து அனுப்பிக் கொண்டிருக்கின்றார்களாம்...............😜.
  14. 🤣............... இந்திய இராணுவ காலங்களில் நடந்த ஒரு விசயம். மாரிகாலம் தவிர்த்து மற்றைய நாட்களில் தீருவில் மைதானத்தில் தான் விளையாடுவோம். மாரிகாலத்தில் வெள்ளம் மைதானத்தை நிரப்பிவிடும். மைதானம், அதனை ஒட்டி தெற்குப் பக்கமாக வயலூர் முருகன் கோவில், அதன் பின்னால் குமரப்பா, புலேந்திரன் மற்றும் போராளிகள் ஞாபகத் தூபி அமைக்கப்பட்ட இடம், அதன் பின்னால் பனங்கூடல்கள் என்று தீருவில் வயல்வெளி அந்த நாட்களில் இருந்தது. ஒரு நாள் காலை விளையாடிக் கொண்டிருக்கும் போது, படபடவென்று பல ஜீப்புகள் மைதானத்தின் வடக்குப் பக்கமாக வந்து நின்றன. இந்திய இராணுவத்தின் பரா துருப்புகள். எங்கள் எல்லோரையும் மைதானத்தில் விழுந்து படுக்கச் சொன்னார்கள். அவர்கள் சொல்ல முன்னரே நாங்கள் பலர் நிலத்தோடு நிலமாகக் கிடந்தோம். துப்பாக்கிகளை நீட்டிக் கொண்டே மைதானத்தின் ஊடாக ஓடி, முருகன் கோவிலைத் தாண்டி, வெளியால் ஓடி பனங்கூடலுக்குள் ஓடினார்கள். சில இராணுவத்தினர் எங்களுடன் நின்றார்கள். ஓடிய இராணுவத்தினர் திரும்பி வரும் போது, ஒருவரைக் கைது செய்து கொண்டு வந்தனர். அவர் இன்று வேறு ஒரு நாட்டில் மிக நன்றாக இருக்கின்றார். வீட்டில் நாங்கள் சொல்லவேயில்லை. அடுத்த நாள் காலையிலும் அதே மைதானத்தில் விளையாடினோம். ஊரிலிருந்து வெளியே போகும் வரை அதே மைதானத்தில் தான்................ இதைவிட மிக இலகு இங்கு வந்து போகும் நெருப்பு....................
  15. உக்ரேன் சண்டைக்காக இதுவரை ரஷ்யா வடகொரியாவிடம் வாங்கிய ஆயுதங்களின் மொத்தச் செலவு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், வட கொரியா ரஷ்யாவிற்கு அனுப்பியிருக்கும் பத்தாயிரம் வீரர்களுக்கு வருடம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுக்க வேண்டும் என்றும் எங்கேயோ வாசித்திருந்தேன்................ இன்று உலகிலேயே இதுதான் அதிக இலாபம் தரும் வியாபாரம் போல............... ** கபிதன் ஆதாரம் எங்கே என்று கேட்டால், நான் தேடவேண்டும்............... நீங்களே தேடியும் கொள்ளலாம்..........🤣.
  16. பெரியாரின் வழி நின்று, தமிழுக்கு இன்னும் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று நானும் என் பங்கிற்கு சொல்கின்றேன். 'காட்டுமிராண்டி மொழி' என்று சொன்னால் இங்கு கடுங்கோபம் வந்துவிடும் பலருக்கு, அதனால் மிகப்பழைய மொழி, ஆனால் அங்கேயே தங்கி நின்று விட்டது என்று சொல்கின்றேன். முதலாவதாக குற்றெழுத்து விதிகள் இலகுவாகப்படவேண்டும் அல்லது இல்லாமல் ஆக்கப்படவேண்டும். ஒரு மொழியில் அதன் சொற்கள் இணைவதும், பிரிவதும் இவ்வளவு சிரமமானதாக இருக்கக்கூடாது. உதாரணமாக, வெற்றிக் கழகமும் சரி, வெற்றி கழகமும் சரி என்ற விவாதங்களில் விஜய் மீது வந்த எரிச்சலை விட, தமிழ் மீது வந்த திணறல்கள் தான் அதிகம். இதை மிக இலகுவாக்கலாம். திசைச்சொற்களுக்காக சில புதிய எழுத்துகளும் தேவை. பல திசைச்சொற்களை அப்படியே பயன்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் சமனான கலைச்சொற்களை உருவாக்கத் தேவையில்லை. உலகில் முன்னோக்கி செல்லும் மொழிகள் அதையே தான் செய்கின்றன.....................
  17. அதர்மத்திற்கு, அநியாயத்துக்கு யோசித்தே தீருவம் என்று சிலர் பிடிவாதமாக பிறந்திருக்கின்றார்கள்....... அந்த இந்திய நண்பரைச் சொல்லுகின்றேன்........🤣
  18. 🤣............... 2026ம் ஆண்டு தேர்தல்களுடன் ஒரு முடிவுக்கு வரும் போல. தெரிந்து தான் சீமான் சிவப்பு என்றாலும் பரவாயில்லை என்று கையில் எடுத்திருக்கின்றார்..............🫣.
  19. அந்தப் பெண் ஒன்றுக்கு செரீனா தானே பெயர்................ சசிகலாவின் வீட்டுக்காரருடன் இருந்தார் என்று கஞ்சா வைத்து அந்தப் பெண்ணை பிடித்து அடைத்து வைத்தனர்............. சசிகலா எப்பவும் போயஸ் கார்டனிலேயே இருந்தால் நடராஜனும் தான் என்ன செய்வார் என்று அப்ப யோசித்திருக்கின்றோம். ஆனால் சீமானோ இப்படி கீழிறங்கி கீழிறங்கி யோசிக்கின்றாரே........... இதே பெரியார் சொன்னார் என்ற பிரச்சனையை துக்ளக் சோ 70ம் ஆண்டுகளில் கிளப்பி, பின்னர் சோ நீதிமன்றில் மன்னிப்பு கேட்டதாக செய்திகளில் சொல்லிக் கொண்டிருந்தனர். புத்தக விழாவிற்கு சீமான் போனது, அங்கு பேசியது, புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது, பபாசி நிறுவனர்களுடன் முரண்டுபட்டது, பின்னர் பெரியாரை வம்புக்கு இழுப்பது இது எல்லாமே இருட்டு அறைக்குள் சீமான் எதையோ தேடுவது போல இருக்கின்றது. இது எல்லாம் விஜய்யால் வந்த வினை.....................🤣. இருக்கின்ற எட்டு வீதத்தில் ஆறு அல்லது ஏழு வீதம் அங்கே போய் விடும் போல இருக்குதே என்று சீமான் கலங்கிப் போயிருக்கின்றார் போல............. தமிழ்நாட்டில் இது போராட்ட காலம். தினமும் ஒரு கட்சி ஏதோ ஒரு விடயத்திற்காகப் போராடுகின்றது. திமுக கூட ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றது. அன்புமணி, பிரேமலதா, வைகோ, புஸ்ஸி ஆனந்த், எடப்பாடி, தினகரன், சீமான், சாட்டையடி அண்ணாமலை இப்படி எல்லோரும் தெருவில் இறங்கி நிற்கின்றனர்...................... அதனால் சீமானை உடனடியாக குறையும் சொல்ல முடியவில்லை.............. லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்றால் அவரும் வேறு என்ன தான் செய்கின்றது......................🤣................. கொஞ்சம் காரசாரமாக எடுத்து விடுகின்றார்...............
  20. 🤣.................... அண்ணா, உங்களின் பெற்ற மனது பதைபதைத்துக் கொண்டே இருக்கும். எல்லாம் ஓரிரு நாட்களில் சரியாகி விடும்.................. பல வருடங்களின் முன், மகனின் பல்கலைக் கழக முதல் வருடம் பாஸ்டன் நகரில். அந்த வருடம் ஒரு நாள் அடித்த பனியில் அந்த நகரமே மூடப்பட்டது. எதுவுமே வேலை செய்யவில்லை. மகனுடன் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. நாங்கள் நாட்டின் ஒரு மூலையில், பிள்ளை இன்னொரு மூலையில். இறுதியில் ஒருவாறு அந்தப் பல்கலைக் கழக போலீஸுடன் தொடர்பு கொண்டோம். அவர்கள் அங்கு ஒரு விடுதியில் ஒன்றாக தங்க வைக்கப்பட்டிருந்த பல மாணவர்களில் மகனை கண்டுபிடித்து, எங்களுடன் கதைக்கவிட்டனர். அந்த இடைப்பட்ட நேரத்தில் ஆடித்தான் போனோம்..............
  21. ஆழ்ந்த இரங்கல்கள். 'வைதேகி காத்திருந்தாள்' வந்த பின் இவரின் குரல் மேல் வந்த மயக்கம் இன்னும் போகவில்லை. இவருடைய பாடல்களையும், பாடகி ஜென்சியினுடைய பாடல்களையும் தனித்தனியாக கேட்பது ஒரு தெரபி போல.....................🙏.
  22. 'நாங்கள் இங்கே மிஷனரி பணிகளுக்காக வரவில்லை.................' என்று Henry Kissinger சொன்னதை உலகில் உள்ள பல நாடுகளின் பாராளுமன்றங்களில் ஒட்டிவைக்க வேண்டும். அவர்களின் தேவைகளும், காரியங்களும் முடிந்தவுடன் கழன்றுவிடுவார்கள் அமெரிக்காவும், எந்த வல்லரசும். வெளியில் இருந்து வந்து எவரும் தீர்வு எதுவும் தரப்போவதில்லை. நாங்களே ஒரு தீர்வை எட்டினால் தான் உண்டு. இல்லாவிட்டால் முக்குளித்து முக்குளித்து மரியான அகழி வரை நாடு போகும்.
  23. நீர்வேலியான், ஈழப்பிரியன் அண்ணாவின் மகள், நான் ஆகிய மூவரும், எனக்குத் தெரிந்த வரையில், லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் இருக்கின்றோம். இங்கு தான் சில இடங்களில் நெருப்பு. வெளியில் இருந்து பார்க்கும் போது உங்களில் பலருக்கு ஒரு பயங்கரம் போன்று இது தோன்றலாம். ஆனால் இது ஒரு நிகழ்வு மட்டுமே இங்கிருப்பவர்களுக்கு. இரண்டு நாட்களாக விளையாடவில்லை. யார் யார் இன்று விளையாட வருகின்றீர்கள் என்று ஒரு கேள்வியை ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் போட்டுவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றேன். இன்றும் Bad air quality என்று சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள். விடக்கூடாது, வீடுகளுக்கு போய் ஆட்களைச் சேர்க்க வேண்டும்.............🤣.
  24. கப்பலில் போனவர்கள் திரும்பி வரும்போது வெள்ளை மா கொண்டு வந்ததாகச் சொல்வார்கள்...............🤣.
  25. ஹலோ ஜோசப் த ட்ரீமர், என்ன கேள்வி இது............................🤣. எத்தனை கதைகள், கட்டுரைகள், புத்தகங்கள், காமிக்ஸ் ஒன்று கூட சமீபத்தில் வந்திருந்தது. ஒரு முழுப்படம் தான் இன்னும் எடுக்கப்படவில்லை. அதையும் எடுத்து விடுவோமா என்று இரண்டு மூன்று பேர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள்........... 1930ம் ஆண்டுகளிலேயே சிலர் ஊரிலிருந்து உள்ளூரில் செய்த கப்பலில் ஏறி அமெரிக்கா வந்தார்கள். அன்றிலிருந்து கோதுமை மாவை அமெரிக்கன் மா என்று சொல்லவும் ஆரம்பித்தார்கள்.................😜.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.