Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 🤣.............. விக்ரமாதித்தன் அண்ணாச்சி ஒரு புயல் போன்ற ஆளுமை. அவருடைய ஆக்கங்களை வாசிக்கும் போது, சில வேளைகளில், உரு/சாமி வந்துவிடுமோ என்று ஒரு பயமும் வரும்.............. அவர் மீது எல்லோருக்கும் ஒரு பயமும் இருந்தது. அவரின் வீட்டில் இருந்தவர்கள் தான், 'என்ன இந்த மனுஷன் இப்படி விளங்காம போயிட்டுதே.................' என்று பலகாலம் நினைத்திருந்தார்களாம் என்று வாசித்திருக்கின்றேன்...............😜.
  2. பாடப் புத்தகங்களில் இருக்கும் புலவர்களுடையதை போன்ற ஒரு நடை, கோபி.................👍.
  3. நீங்கள் சொல்வது சரியே, நாதமுனி. நீங்க சொல்வது போலவே, அயல் நாட்டுத் தமிழர் என்ற வகையில் நாங்கள் அவர்களின் சாதி அடுக்குக்குள், அதன் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் அவர்களின் சமூக, அரசியல் அமைப்புகளுக்குள் ஆழமாக போகத் தேவையேயில்லை. ஆனால், நான் ஆழமாக போகவேண்டி இருந்ததிற்கு இரண்டு காரணங்கள்: 1. நீங்கள் என்னிடம் கேட்டிருந்த ஒரு கேள்வியும், நீங்களே சொல்லியிருந்த விளக்கமும்: "நீங்கள் தமிழக அரசியலை, ஈழ அரசியல் ஊடாக பார்க்கிறீர்கள் என்று நிணைக்கிறேன், சரியா? எனக்கும் அதே குழப்பம் இருந்தது. தமிழக அரசியலை தனித்தே அதன் போக்கில் மட்டும் பார்தால் சில பரிமாணங்கள் புரியும்." 2. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நான் ஒரு அயல் நாட்டுத் தமிழனே இல்லை. எனக்கு இலங்கையின் வடக்கு கிழக்கை விட தமிழ்நாடு தான் அதிகப் பரிச்சயம். ஒப்பிடுகையில், அதிகமான ஆட்களை எனக்கு தமிழ்நாட்டில் தான் பழக்கம். நான் அவர்களின் தமிழைக் கூட சில வட்டாரவழக்குகளில் அப்படியே பேசுவேன். இதன் பின்னணி, எங்கள் பலரினதும் வாழ்வில் இருப்பது போன்ற, துன்பமும், அலைச்சலும் தான். இது ஒரு மகிழ்வோ அல்லது பெருமையோ கிடையாது. இவற்றை கதைகளாக எழுதினால் அனுதாபம் கிடைக்கும், ஆனால் அது என்னத்திற்கு................... அங்கிருக்கும் ஊர்கள் மட்டும் இல்லை, எம்மவர்களின் அகதி முகாம்களும் தெரியும். அங்கு தங்கியும் இருக்கின்றேன். எம்மவர்கள் ஏதாவது பிரச்சனைகள், சிக்கல்கள் வந்தால், அங்கே யாரிடம் போகின்றார்கள் என்றும் தெரியும். நிச்சயமாக நீங்கள் சொல்லும் ஆட்களிடம் இல்லை. அவர்களை நான் அங்கே பார்த்ததே இல்லை. தமிழ்நாட்டு அரசியல் பற்றிய என்னுடைய பார்வை தமிழ்நாட்டுக்காரர் ஒருவருடையதாகவே இருக்கின்றது. 'முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராடுங்கள், அது தான் முக்கியம்...............' என்று தான், என் தமிழ்நாட்டு நண்பர்கள் போலவே, நானும் நாதகவிற்கு சொல்கின்றேன்..............
  4. பாடசாலை நாட்களை விட இன்று அதிக இக்கட்டான சந்தர்ப்பங்களில் சிக்கி விடுகின்றோம். இன்று எத்தனையோ நண்பர்கள், தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் புத்தகங்களாகவே பதிப்பித்துக் கொடுக்கின்றார்கள். அனுபவங்களும், ரசனைகளும் வேறுவேறாக இருப்பதாலோ என்னவோ, பலதையும் ஓரிரு பக்கங்களுக்கு மேல் தாண்ட முடிவதில்லை. ஆனால் சில நாட்களின் பின், கொடுத்தவர்கள் எப்படி இருக்கின்றது என்னும் போது, என்ன சொல்வதென்றே தெரிவதில்லை. இது எல்லாவற்றையும் ஒரேயடியாக நிராகரிகரிப்பது என்றில்லை. நான் முன்பும் சொல்லியிருந்தது போல, இருபது வருடங்களின் முன் அளவில் ஒரு ஈழத்துப் பெண் எழுத்தாளரின் சிறுகதைகளை வாசித்து விட்டு, இப்படியும் எழுதலாமா என்று ஆச்சரியப்பட்டிருக்கின்றேன். மிகவும் நன்றாக, சில புதிய கோணங்களை எழுதியிருந்தார். சில ஆக்கங்களுக்கு, படைப்புகளுக்கு ஒரு தார்மீக ஆதரவு கொடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு தரப்பும் இருக்கின்றது. ஒரு வகுப்பு நண்பன் ஒருவன் ஒரு கவிதை எழுதிக் கொடுத்து, அது எப்படியிருக்கின்றது என்று கேட்டால்.......................... அங்கே தான் இந்த தார்மீக உணர்வும் வரவேண்டும் போல, நண்பனின் கவிதை என்னவாக இருந்தாலும்..................🤣.
  5. இந்தக் கதையை சிறுவனாக இருக்கும் போது ஒரு தடவை வாசித்திருக்கின்றேன். எங்கே என்று சரியாக ஞாபகம் இல்லை. அந்த நாட்களில் ஊரில் இருக்கும் ஒரு வாசிகசாலையில் ஒரு நீளமான சஞ்சிகை ஒன்று இடைக்கிடையே போடுவார்கள். அது ஒரு சிற்றிதழ் என்று நினைக்கின்றேன். அதில் தான் இந்தக் கதை இருந்திருக்கவேண்டும். இந்தக் கதையை பின்னர் தேடி இருக்கின்றேன், ஆனால் அகப்படவில்லை. ஒரு மழைநாளில் ஒரு நாய் சுருண்டு படுத்திருப்பது போல ஒரு சித்திரம் இந்த கதையைப் பற்றி மனதில் இன்றும் இருக்கின்றது. ஒவ்வொருவரும் இன்னொருவரின் அடிமைகள் என்று அன்று தோன்றியது போல...........
  6. எம்மவர்கள் எழுதும் புலம் பெயர்ந்த இலக்கியங்களை புலம்பல் அல்லது கோஷம் என்று மிக இலேசாக ஒதுக்கித் தள்ளும் ஒரு போக்கு தமிழ்நாட்டு இலக்கியவாதிகளிடையே இருப்பதை அவதானித்து இருக்கின்றேன். இதை அவர்கள் இதே வார்த்தைகளை பயன்படுத்தியே எழுதி, சொல்லியிருப்பார்கள். தாய்மண்ணையும், சொந்தங்களையும் பிரிந்த ஒரு புலம்பல் அல்லாவிட்டால் வெறும் இலட்சிய கோஷங்கள் என்று வகைப்படுத்து விட்டு, இவை இலக்கியங்கள் இல்லை என்று விமர்சித்து இருக்கின்றார்கள். முக்கியமாக நாங்கள் எழுதும் கவிதைகளை, கவிஞர்களை பூச்சி மருந்து அடித்து அழிக்க வேண்டும் என்று ஒருவர் இலேசாகச் சொல்ல, அது பெரிய விவாதம் ஆனது. எங்களின் கதைகள், நாவல்களும் இந்த மதிப்பீட்டில் இருந்து தப்பவில்லை. நாங்களும், எங்களின் பங்கிற்கு, புலம் பெயர்ந்த இடங்களில் இருந்து எழுதுபவைகளில் மிகப் பெரும்பானமை இந்த வகையே. அதிலும் கவிதைகள், இந்த இரு வகைகளையும் தவிர வேறு வகையானதை தேடி எடுப்பதே சிரமம்தான். சமீபத்தில், தமிழ் இலக்கிய உலகில் பிரபலமான இரண்டு எழுத்தாளர்களுக்கு இடையே பிரச்சனையாகிவிட்டது. இருவரும் பின்நவீனத்துவவாதிகள், ஒருவர் ஈழத்தவர், மற்றவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இருவருக்கும் வாசகர்கள் உள்ளனர். இருவரும் விருதுகளும் பெற்றவர்கள். தமிழ்நாட்டு இலக்கியவாதி ஈழத்து இலக்கியவாதியை ஒரு ஜூனியர் விகடன் நிருபர் என்றே பார்க்கலாம் என்றார். நடந்த சம்பவங்களை அப்படியே எழுதும் ஒரு சாதாரண நிருபர் இவர், இவர் எழுதுவது இலக்கியமே கிடையாது என்கின்றார். ஈழத்து இலக்கியவாதி தமிழ்நாட்டு இலக்கியவாதியை வெறும் பாலியல் எழுத்தாளார், போர்னோ ரைட்டர், என்று சொல்கின்றார். இவர் எழுதுவது பாலியல் வறட்சி உள்ளவர் ஒருவர் எழுதும் சாதாரண பாலியல் கதைகள், இவை இலக்கியமே கிடையாது என்கின்றார். இருவரின் ஆக்கங்களையும் நான் வாசித்திருக்கின்றேன்.
  7. சீமானும் மிகச் சாதரண ஒரு சாதிக்கட்சியை நடத்தும் தலைவர் என்று தான் எழுதியுள்ளேன், விசுகு ஐயா. அதற்கு தமிழ்த்தேசியம் என்னும் முலாம் பூசி உள்ளார் என்றும் ஆதாரத்துடன் எழுதியிருக்கின்றேன். வேங்கைவயல் சமீபத்திய ஒரு ஆதாரம். இதுவே தான் என் பக்கத்தின் அடிப்படையே. இதை நான் எழுதவில்லை என்று நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை, விசுகு ஐயா. தன்னலம் மட்டுமே அங்கிருக்கின்றது, தமிழ்த்தேசியம் என்று ஒன்று அவரிடம் அறவே கிடையாது என்றும் சொல்லியிருந்தேனே. இவர் எம்மக்களை ஏமாற்றுகின்றார், எம்மவர்கள் இவரிடம் ஏமாறுகின்றார்கள் என்பதே என் நிலை. அதற்கு எதிரான ஒரு சாதாரண மனிதனின் குரலே என்னுடையது, ஐயா.
  8. என்னுடைய சங்கடம் எல்லாம் சாதிப் பெயர்களை சொல்வதிலும், அவற்றை எழுதுவதிலுமே, கோஷான். இந்தப் பிரிவுகள் எங்களையே அழிக்க வந்த கொடும் நோய்கள் மற்றும் அசிங்கங்கள் போல. இவர்களின் நடவடிக்கைகளை தொடராக வரிசைப்படுத்தி, இவர்கள் யார் என்ற உண்மையை வெளிக்கொண்டு வருவதில் எனக்கு சங்கடமே இல்லை. அதை நான் என் வழியில் செய்துகொண்டே இருக்கின்றேன். இதில் மாற்றுக்கருத்து கிடையவே கிடையாது, ஜஸ்டின். இப்படியான ஒரு களத்தில் இவை நிச்சயம் பகிரப்பட வேண்டியவையே. இவை தொடர்ச்சியாக தெளிவுபடுத்தப்பட வேண்டியவையே. சைனாவின் டீப்சீக்கைவிட, அமெரிக்க - ரஷ்ய சார்பு வாதங்களை விட, இன்னும் பல இன்னோரன்ன உலக விடயங்களை விட இது மிகவும் கட்டாயமானது.
  9. இவர்கள் சொல்லுவது தான் உண்மையான செலவு என்றால், இங்கு ஆயிரக்கணக்கான தனியார் நிறுவனங்களே தங்களுக்கென்று தனிப்பட்ட ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தேவையான inputs மிகச் சொற்பமே. அதனால் மிகவும் திறன் கூடியதை அவரவர் தேவைக்கேற்ப உருவாக்குவது எளிதாகிவிடுகின்றது. இவர்களின் source code கிடைக்கின்றது என்கின்றார்கள். அதை எடுத்து பார்க்க வேண்டும் என்றால், நேரமும் பொறுமையும் வேண்டும். நேரத்தை விட பொறுமை தான் வேண்டும் போல...................😜. முன்னர் நடந்த ஒரு பகிடி: ஒரு நிறுவனத்தில் மிகத் திறமையான ஒருவன் வேலை செய்தான். அந்த நேரத்தில் நானும் அங்கே இருந்தேன். நல்ல நண்பனும் ஆனான், ஆனால் வேலையில் ஒரே அணியில் இல்லை. ஒரு நாளும் நேரத்திற்கு வரவேமாட்டான். அவனால் அவனின் மேற்பார்வையாளருக்கு மாரடைப்பு வராதது ஒன்று தான் குறை. ஆனால் மிகக்கடினமான பிரச்சனைகளையும் மிக எளிதாக செய்து முடிப்பான். ஒரு வருட மதிப்பீட்டில் அவனுக்கு மிகக் குறைவான புள்ளிகளே போடப்பட்டது. அவன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் ஆளே கிடையாது. அப்பொழுது ஐஃபோன் மிகப் பிரபலமாக இருந்த காலம். அவனின் மேற்பார்வையளர் அவனைக் கூப்பிட்டு, நீ நிறுவனத்திற்கு புதிதாக எதுவும் செய்வதே இல்லை, அதனால் தான் உனக்கு மிகக்குறைவான மதிப்பீடு போடப்பட்டிருக்கின்றது என்றார். 'அப்ப நான் அடுத்த ஐஃபோனை ரிலீஸ் செய்யவா.................' என்று அவன் மேற்பார்வையாளரை பார்த்துக் கேட்டான்...................... இப்பொழுது வேறு ஒரு இடத்தில் வேலை செய்கின்றான். ஆனால் அவனில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வருடம் அவனின் மேற்பார்வையாளரை கேட்க வேண்டி இருந்தால், இப்படித்தான் கேட்பான் என்று நினைக்கின்றேன்: 'அப்ப நான் அடுத்த ஏஐயை ரிலீஸ் செய்யவா....................' ஆள் தமிழ் தான்............... சொந்த ஊர் தேனி மாவட்டம்................
  10. இதையே தான் சீமான் - சசிகலா - ஓபிஎஸ் என்று முடியுமானவரை சில அடையாளங்களை தவிர்த்து நேற்று எழுதியிருந்தேன். இவற்றை பெயர் சொல்லி பொதுவெளியில் எழுதுவதே எங்களுக்கு பெரும் சங்கடமாக இருக்கின்றது, ஆனால் இதற்குள்ளேயே வாழ்கின்றனர் இவர்கள்..................😌.
  11. பாடல் மூன்று - புத்தம் புது காலை பொன்னிற வேளை ----------------------------------------------------------------------------------- வீடியோ என்று சொல்லப்படும் சின்னத்திரையில் படங்களை ஓட விடும் காலம் அது. ஒரே இரவில் இரண்டு அல்லது மூன்று படங்களை அடுத்தடுத்து போடுவார்கள். அன்றைய நிலைக்கு பெரிய தொலைக்காட்சி என்பது 20 அங்குலங்களை விட சிறிது பெரிதாகவே இருந்ததாகவே ஞாபகம். ஒரு விசிஆர் கொண்டு வருவார்கள். அதை டெக் என்று சொல்வார்கள். அத்துடன் சில வீடியோ கேசட்டுகளும் வரும். இதைக் கொண்டு வருபவர்களும், இணைப்புகளைக் கொடுப்பவர்களும் விஞ்ஞானத்தின் உச்சியில் இருப்பவர்கள் போன்ற ஒரு பிரமை அன்று மனதில் இருந்தது. அதிலும் ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் வரும் குறுக்கு கோடுகளை இல்லாமல் செய்பவர் இன்றைய நாசாவின் தலைமை விஞ்ஞானி போன்று அன்று தெரிந்தார். ஊரில் ஒரு சின்னப் பாடசாலை அல்லது சுற்றிலும் அடைக்கப்பட்ட வெறும் காணிக்குள் இந்த வீடியோ படக்காட்சி நடக்கும். பெரியவர்களுக்கு ஒரு கட்டணம், சின்னவர்களுக்கு ஒரு சின்னக் கட்டணம் என்று அனுமதியின் விலை இருக்கும். பின்னர் தமிழ்நாட்டில் இருந்து கேள்விப்பட்ட 'தரை டிக்கெட்' தான் இது. தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ள கொட்டைகைகள் எனப்படும் தியேட்டர்களில் மண்ணைக் சின்னதாக குவித்துப் போட்டு அதன் மேல் அமர்ந்து திரையில் ஓடும் படங்களை ஒரு காலத்தில் பார்த்திருக்கின்றார்கள். இங்கும் எங்கு இடம் கிடைக்கின்றதோ அங்கு அமர வேண்டியதுதான். பல வீடுகளில் படிக்கும் பிள்ளைகளை இந்த மாதிரியான வீடியோ படங்கள் ஓடும் இடங்களுக்கு போக அனுமதிக்கமாட்டார்கள். என் வீட்டில் அனுமதி இலவசம் தான், ஆனால் காசு கொடுக்கமாட்டார்கள். என்ன படம் என்றாலும் பார்த்தே தீர வேண்டும் என்ற அவா இருந்த நாட்கள் அவை. ஒரு சினிமாப் பைத்தியம் போல. அந்த வயதில் என்னவென்றே விளங்கியிருக்காத 'அக்ரஹாரத்தில் ஒரு கழுதை' என்ற படத்தை கூட முதலில் இருந்து முடிவு மட்டும் பார்த்திருக்கின்றேன். மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் தான் என்ற நம்பிக்கையை ஆரம்பத்தில் கொடுத்த இடங்களில் ஒன்று இந்த வீடியோ காட்சிகள் நடைபெற்ற இடங்கள். அங்கே வாசலில் போய் அங்கேயே நிற்கவேண்டும். காசு கொடுத்துப் படம் பார்க்க வருபவர்களை எல்லாம் உள்ளே விடுவார்கள். பின்னர் அன்றைய முதலாவது படம் ஆரம்பிக்கும். படம் சிறிது ஓடிய பின், அங்கு இன்னமும் காத்துக்கொண்டு நிற்கும் என் போன்றோரை, இலவசமாக, உள்ளே விடுவார்கள். முதல் படத்தில் தான் ஒரு ஆரம்பப் பகுதியை பார்க்க முடியாது. ஆனால் மற்றைய படங்களை முழுவதும் பார்த்துவிடலாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்குப் போய் வசதியான ஒரு இடத்தை கூட பிடித்தும் விடலாம். ஒரு படம் முடியும் முன்னமே நித்திரையாகிப் போகின்றவர்களும் பலர் உண்டு. 'இது என்ன கண்றாவி...............' என்று எழும்பிப் போகின்றவர்களும் உண்டு. கடைசி வணக்கம் காணாமல் கண் மூடாத கூட்டங்களாக சிலர் உடன் இருப்பார்கள். ஒரு நாள் நாங்கள் வேதப் பள்ளிக்கூடம் என்று சொல்லும் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வீடியோ காட்சி போட்டார்கள். வழமையான அதே நடவடிக்கைகள் தான். முதல் படத்தின் இடையில் உள்ளே விட்டார்கள். 'அலைகள் ஓய்வதில்லை' என்று கார்த்திக்கும் ராதாவும் ஊரை விட்டு அந்தப் படத்தின் முடிவில் ஓடினார்கள். 'ஓடிப் போன பின் தானே இருக்கின்றது வாழ்க்கை..........' என்று பெரியவர்கள் சொல்லிச் சிரித்தனர். வாழ்க்கையில் கஷ்டங்கள் எல்லாம் சின்னவர்களுக்கே, பெரியவர்கள் அவர்களின் இஷ்டப்படி வாழலாம், இவர்களுக்கு என்ன கஷ்டம் வந்து விடும், இவர்கள் ஏன் இப்படிச் சொல்கின்றார்கள் என்று அப்போது பொதுவான ஒரு எண்ணம் மனதில் இருந்தது. அன்று இலங்கை வானொலியில் காலை 6:30 மணிக்கு செய்திகள் வாசிக்கப்படும். அதற்கு முன்னர் சில பாடல்களை ஒலிபரப்புவார்கள். இரண்டோ மூன்றோ பாடல்கள். இவை பெரும்பாலும் காலை நேரப் பொழுது பற்றிய பாடல்கள் அல்லது பக்திப் பாடல்களாக இருக்கும். 'அலைகள் ஓய்வதில்லை' என்னும் படத்திலிருந்து 'புத்தம் புது காலை பொன்னிற வேளை.......' என்று அந்தக் காலை நேரத்தில் கிறங்க வைக்கும் ஒரு பாடலை இடையிடையே ஒலிபரப்புவார்கள். ஆனால், நான் இந்தப் பாடலை அந்தப் படத்தில் பார்க்கவில்லை. நான் உள்ளே போகும் முன்னர் இந்தப் பாடல் முடிந்திருக்க வேண்டும் என்று தான் பல வருடங்கள் நினைத்து இருந்தேன். ஆனால் இளையராஜா இந்தப் பாடலை அந்தப் படத்திற்காக பதிவு செய்திருந்தார் என்றாலும், இந்தப் பாடல் அந்தப் படத்தில் இடம்பெறவே இல்லை என்ற தகவல் மிகவும் பிந்தியே எனக்கு தெரியவந்தது. காசு கொடுக்காமல் இலவசமாக ஒன்றை நுகர்ந்ததால் வந்த விளைவு இது என்றும் சொல்லலாம். கதை இத்துடன் முடியவில்லை. பின்னர் ஒரு புதுப்படம் ஒன்றில் ஒரு நடிகை, ராதா அல்ல வேறொரு நடிகை, ஒரு வீட்டுக்குள் இருந்து இந்தப் பாடலை பாடும் காட்சி இருந்தது. அதில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன எனக்கு. ஒன்று, இந்தப் பாடல் எப்படி இந்தப் படத்தில் வந்தது என்று. இரண்டாவது, இந்தப் பாடலுக்கான என் மனதில் இருந்த காட்சியை இந்தப் புது இயக்குனர் சுக்குநூறாக உடைத்துப் போட்டாரே என்ற ஏக்கம். ஒரு பெண் 'புத்தம் புது காலை, பொன்னிற வேளை..........' என்று வீட்டுக்குள் இருந்து நடனமாடுவதை ஏற்றுக் கொள்வது இன்றுவரை சிரமமாகவே இருக்கின்றது. ஆகக் குறைந்தது, வீட்டுக்கு வெளியே நின்றாவது அந்த நடிகை இந்தப் பாடலுக்கு நடனமாடியிருக்கலாம் என்று தோன்றுகின்றது.
  12. 🤣................... இந்தச் சிரிப்பு உங்கள் வீட்டில் உங்களைப் பற்றி சொல்லுவதை நினைத்து, வில்லவன், ஏனென்றால் என் வீட்டிலும் இதுதான் நிலை. எழுதுவது, கதைப்பது எல்லாவற்றிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்கின்றது என்பார்.........🤣...............'லூசாடா நீ...............' என்று செல்லமாகக் குட்டுகள் பல வாங்கியிருக்கின்றேன். உங்களின் கருத்தை தாரளமாக முன்வையுங்கள், வில்லவன். நாங்கள் எல்லோருமே நட்புகள் தான், சமனாகவே எங்களை நினைத்துக் கொள்ளுங்கள், தாழ்மையாக சொல்ல வேண்டும் என்றில்லை...............👍. எது இலக்கியம், எது இல்லை என்பது முடிவில்லாமால் போய்க் கொண்டிருக்கும் ஒரு விவாதம். புதுமைப்பித்தனையே குப்பை என்று ஒதுக்கித் தள்ளியவர்கள் அவரின் காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்களும், விமர்சகர்களும். இன்று அவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர். ஆனால் நவீன தமிழின் பிதாமகன்களாக பாரதியும், புதுமைப்பித்தனுமே இன்று நிற்கின்றனர். இன்று இலக்கியமாக தெரிவது நாளை காணாமலும் போகக்கூடும் போல, அதே போலவே இன்று குப்பை என்று தோன்றுவது பின்னர் நிலைத்து இருக்கவும் கூடும் போல.................
  13. இதையொட்டிய சில கருத்துகளும், நிகழ்வுகளும் என்னிடம் உண்டு, வசீ................. பின்னர் வேறு ஒரு தருணத்தில் எழுதலாம் என்றிருக்கின்றேன். இங்கு களத்தில் சும்மா விளையாட்டாக போகும் போக்கில் எதையும் எழுதிவிட முடியாதுள்ளது. முயற்சி எடுத்து, உள்வாங்கி, சிந்தித்து, நிதானமாக எழுதும் பலர் உள்ளனர்.............👍.
  14. நன்றி கோஷான். நீங்களும், இன்னும் சிலரும் இது சம்பந்தமாக முன்னரும் எழுதியிருப்பீர்கள் என்று தான் நினைத்தேன். முன்னரே நான் சொன்னது போல, யாழை விட்டுப் போகமாட்டேன், ஆனால் இக்கட்டான சமயங்களில் தேவை என்றால் நாளுக்கு நான்கு கவிதைகள் என்ற கணக்கில் எழுதிப் போடுவதாக உள்ளேன்............🤣. முன்னோர்களும் தமிழர்களாகவே இருந்து, இன்றும் அவர்களின் தாய்மொழி தமிழாகவும் இருக்கும் எம் மக்களில் ஒரு பிரிவினரையே தள்ளி வைப்பதை பற்றித் தான் நான் குறிப்பிட்டிருந்தேன், ஓணாண்டியார். கோஷான் மேலே எழுதியிருப்பதும் இதையொட்டியே. தாய்மொழியை வைத்து ஒரு அடையாளம் கொள்வதில் உயர்வு தாழ்வு கிடையவே கிடையாது. பிறப்பால் வரும் எந்த அடையாளத்தாலும் உயர்வு தாழ்வு என்பது கிடையவே கிடையாது.
  15. தீண்டத்தகாதவர்கள் என்று ஒரு பிரிவு மக்களை ஒதுக்கி விடுதல் எந்த நாட்டிலும், எந்த அடையாளங்களை சுமந்தாலும் ஒரு பாவச் செயல் தானே.....................
  16. முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி. இல்லை, நான் தமிழ்நாட்டு அரசியலை ஈழத்துக்கு முற்றிலும் தொடர்பில்லாமலேயே பார்க்கின்றேன். என்னுடைய நிலைப்பாடுகள் இங்குள்ள பொதுவான போக்கிற்கு ஒத்ததாக இல்லாமல் இருப்பதற்கு அதுவே காரணம். உதாரணமாக, தமிழ்நாட்டு மக்களை அரசியல், தேர்தல்கள் என்ற வகையில் தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், பட்டியலின மக்கள் என்ற ஒரு பார்வையிலேயே நான் பார்க்கின்றேன். சமீபத்தில் வந்து போன விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட இப்படித்தான் நான் எந்தப்பகுதி எங்கு சாயும் என்று எழுதியிருந்தேன். எந்தப் பகுதிக்குள் எவர் போகமாட்டார்கள் என்றும் சொல்லியிருந்தேன். பாமகவும், திமுகவும் எப்படி வன்னிய சமூகத்தை இரண்டாகப் பிளந்து வைத்துள்ளார்கள் என்று சொல்லியிருக்கின்றேன். மதுரையும் தேனியும் எப்படி அதிமுகவின் கோட்டையாக இருந்தது என்றும், அதே போலவே சேலமும் ஈரோடும் என்று எனக்கு சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சொல்லியிருக்கின்றேன். என்னுடைய பார்வையில் அங்கே தமிழ்த்தேசியமும் கிடையாது, திராவிடமும் கிடையாது. இருப்பது எல்லாம் 'பெல்ட்' என்று சொல்லப்படும் - தேவர் பெல்ட், கவுண்டர் பெல்ட், வன்னியர் பெல்ட்,........ - என்ற ஒரு குழு அரசியல் மட்டுமே. இந்த குழு அமைப்பு அரசியலும் தாண்டியது, அவர்களின் சமூகத்தில் இதன் வேர்கள் எங்கும் போய்க் கொண்டிருக்கின்றன. சீமான் ஒரு ஒற்றுமையான தமிழ்த்தேசியம் தானே பேசுகின்றார் என்று எம்மவர்கள், ஈழத்தவர்கள், சொல்லுகின்றனர். போனவாரம் வெளிவந்த வேங்கைவயல் விசாரணை அறிக்கை சம்பந்தமாக யாழில் வந்த திரியில் நான் எழுதியிருந்தது - சீமானும், ராமதாசும், அன்புமணியும் இதைக் கண்டும் காணாமல் போய்விடுவார்கள் என்று. ராமதாசும் அன்புமணியும் வெளிப்படையாக தமிழ் மக்களில் ஒரு பிரிவினருக்காகவும், தமிழ் மக்களில் இன்னொரு பிரிவினரை எதிர்த்தும் அரசியல் செய்கின்றனர். அவர்கள் பட்டியலின மக்களை சக தமிழ்மக்களாக கருதுவதேயில்லை. ஆனால், தமிழ்த்தேசியம் பேசும் சீமானும் ஏன் இப்படிச் செய்கின்றார். திருமாவும், ரஞ்சித்தும், சீமானும் ஒரே மேடையில் ஒரே நோக்கிற்காக ஏறவே மாட்டார்கள் என்று நான் முன்னர் இங்கு எழுதியிருக்கின்றேன். ஆனால் சீமானும், சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் ஒரே மேடையில் ஏறுவார்கள். இவர்கள் இடையே இருக்கும் பொதுவான ஒன்று எது என்று நான் சொல்லியிருக்கின்றேன். தமிழ்த்தேசியம் என்னும் அகண்ட பார்வையே இவர்களிடம் கிடையாது என்று இதனால் தான் சொல்லுகின்றேன். ஒரு சிறு வட்டத்துக்குள் தான் சீமானும் நிற்கின்றார், பெயர் மட்டும் வேறு அத்துடன் சில பாவனைகள். நான் யாழ் களத்திற்கு புதியவன். நான் இங்கு வந்த பின் என்னளவிற்கு இந்தப் பாகுபாடுகளை எவரும் இங்கு எழுதியதை நான் பார்க்கவில்லை. என்னுடன் இருக்கும் ஈழ நண்பர்கள் வட்டம் பொதுவாகவே இதில் எந்த அடிப்படையும் இல்லாதவர்கள். அவர்கள் சில நேரங்களில் என்னை பகிடியாக ஒரு 'தமிழ்நாட்டுக்காரரன்' என்றே சொல்வார்கள். சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டு அரசியலையும், ஈழ அரசியலையும் நான் தொடர்பு படுத்துவதேயில்லை. அதனால் தான் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு உள்ள, உணர்ச்சிகளை தூண்டும் ஒருவராகவே மட்டுமே சீமானை நான் பார்க்கின்றேன். இவர் முன்னெடுப்பது எந்த வகையிலும் எங்களின் தலைவர் எண்ணியிருந்த தமிழ்த்தேசியமே கிடையாது. இன்றைய திராவிடக் கட்சிகளுக்கு பெரியார் ஒரு கவர்ச்சியான பிரச்சார ஆயுதம் போலவே, அங்கு தமிழ்த்தேசியம் பேசும் சீமான் போன்றோர்களுக்கு எங்களின் தலைவர் ஒரு கவர்ச்சியான ஆயுதம் மட்டுமே. தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டில் வளர்ந்தால், ஈழமும் பொங்கும் என்பது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் இன்று தமிழ்த்தேசியமே கிடையாது. அப்படியான ஒரு ஒருங்கிணைந்த பார்வை அங்கு எவரிடமும் கிடையாது. ஒரு அரசியல் கட்சியாக, எம்ஜிஆர் - ஜெயலலிதா கால அதிமுகவும், என்றுமே திமுகவும், இடதுசாரிகளும் இந்த அடையாளம் பேணும் குழு அரசியலில் இருந்து ஓரளவு வெளியே வந்தவர்கள். ஆனால், இவர்களில் கூட, இடதுசாரிகள் தவிர்த்து, எந்த தொகுதியில் யார் வேட்பாளாரக நிற்கப் போகின்றார் என்பதை தீர்மானிப்பது 'தமிழன்' என்னும் அடையாளம் அல்ல, இன்னொரு வேறு அடையாளமே அதை தீர்மானிக்கின்றது. ஈரோடு கிழக்கும் அதே தான். இவர்கள் தமிழ்த்தேசியம் அல்லது திராவிடம் பேசுபவர்கள் என்று எம்மவர்கள் ஏமாறுகின்றனர். ஆனால் ஒரு தமிழ்நாட்டவர் அவரின் ஊரையும், பெயரையும் சொன்னவுடனேயே புரிந்து விடுகின்றது அவர் யாரென்று. இனத்தலைவர், குலத்தலைவர் என்று தங்களை நியாயப்படுத்தும் தமிழ்நாட்டு நண்பர்களும் எனக்கு உண்டு. அங்கு விதிவிலக்கானவர்கள் மிகச்சிலரே. பாளையக்காரர்களும் விஜயநகரப் பேரரசின் பின் வந்தவர்கள் தான். கட்டபொம்மனை எங்களின் ஒரு வீரனாக நாங்கள் ஏற்று பெருமைப்படவில்லையா. சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷும் அந்த வழியில் வந்த ஒருவர் தான். நான் மிகவும் பெருமப்பட்டேன். விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியனாக போட்டியிடும் போது எவ்வளவு பெருமைப்பட்டேனோ, அவ்வளவு பெருமை குகேஷ் வென்ற போதும் வந்தது. எம்ஜிஆரை ஒரு மலையாளியாகவும், கருணாநிதியை ஒரு தெலுங்கராகவும், ஜெயலலிதாவை மைசூர் ராணியாகவும் பார்க்கும் நிலையை நான் கடந்து வந்துவிட்டேன். இன்றில்லாவிட்டாலும், இன்னொரு நாட்களில், இதை பலரும் கடந்து போவார்கள் என்று நான் நம்புகின்றேன். சீமானை விமர்சிப்பவர்கள் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். சமூக அக்கறை கொண்ட, ஆனால் மிகச் சாதாரண மனிதர்கள் என்ற இன்னொரு வகையினரும் இருக்கின்றனர் என்று நினைக்கின்றேன்.
  17. அதுவே தான், அண்ணா. இங்கு பலரினதும் பிற்காலக் கனவு வாழ்க்கைகளினதும் அடிப்படையே ஆடிப்போய் விடுகின்றது....................... இதைவிடவும், இங்கு இன்றைய நிலையில் பலரினதும் தனி முதலீடுகளும், சிறுதோ அல்லது பெரிதோ, இந்த துறையையே நோக்கியே இருக்கின்றன. இது கடந்த சில வருடங்களாக நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. இந்த வாரம் இழப்பு வாரம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான்...........
  18. இதுவரை DeepSeek இன் ஆர்-1 மாடல் இந்த துறையில் ஒரு சாதனை போன்றே தெரிகின்றது. இதைப் பற்றிய கட்டுமான விபரங்களும் வெளியே வந்துள்ளன. Open Source ஆக எம்ஐடி லைசென்ஸ் ஊடாக எவரும் தரைவிறக்கி, அவர்களின் தேவைகளுக்கேற்ப செம்மையாக்கிக் கொள்ளலாம் என்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.............................❤️. அவர்களின் முன்னைய மாடலின் வழமையான 671 பில்லியன் inputs களிலிருந்து, மிகக் குறைவான, ஆனால் அதிகம் பயன்படுத்தப்படும் சிறிய ஒரு பகுதியையே பயன்படுத்துகின்றார்கள் என்று சில விபரங்களில் இருக்கின்றது. இதைப் போலவே தகவல்களை எங்கே, எப்படி ஒரு சுருக்கிய வடிவில் சேமித்து, பின்னர் விரைவாகக் கொண்டு வருவது என்பதிலும் சில மாற்றங்கள் செய்துள்ளனர். NVIDIA இன் H800 GPUs ஐயே இவர்கள் பயன்படுத்தி இருக்கின்றார்கள். இந்த துறையில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் இதைவிட மிகவும் திறன் வாய்ந்தவற்றை, மிக அதிக எண்ணிக்கையில் உபயோகித்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் பிரதி செய்யும் சைனாவால் இவைகளை பிரதி செய்ய முடியாமல் இருப்பதும், இதற்கு அமெரிக்காவில் தங்கி இருப்பதும் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இதை தரைவிறக்கம் செய்து இது என்னதான் என்று பார்க்க ஆரம்பித்தால், யாழ்களப் பக்கம் வரமுடியாது. யாழ்களம் இதைவிட எனக்கு முக்கியம்......................😜. வேறு யாராவது பார்த்து விட்டுச் சொல்லுங்கள்......... இங்கு பங்குச் சந்தைக்கு விழுந்த அடி, புட்டுச் சாப்பிட்டு விட்டு வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்த சிவபெருமானுக்கு முதுகில் விழுந்த அடி போல. இங்கு எங்கள் எல்லோருக்கும் அந்த அடி விழுந்திருக்கின்றது. இப்படி இடைக்கிடை இங்கு நிகழும். 'எதைக் கொண்டு வந்தாய் அதைக் கொண்டு போக..................'...................🤣.
  19. பையன் சார், என்னுடைய நேரம் நேற்றிரவு நியூஸ் 18 செய்திகளில் விவாதத்திற்கு சந்தோஷ் தயாரக இருப்பதாகச் சொன்னார்கள். இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரும் நேரடி விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள். நியூஸ் 18 இவர்கள் எல்லோரையும் இணைத்து, ஜனநாயக வழியில் ஒரு நேரடி விவாதத்தை நடத்தப் போவதாகவும் சொன்னார்கள். சந்தோஷ் இதற்குள் எப்படி உள்ளே வந்தார் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தகவல் இருந்தது. நியூஸ் 18 கார்த்திக்குடனேயே முதல் சந்திப்பை நடத்தியுள்ளனர். கார்த்திக்கே சந்தோஷிற்கு கூடுதலான விடயங்கள் தெரியும் என்று கார்த்திகைச்செல்வன் மற்றும் நியூஸ் 18 ஆசிரியர் குழுமத்திற்கு சொல்லியுள்ளார். இவ்வாறே சந்தோஷ் இப்பொழுது இந்த விடயத்தில் முக்கியமான ஒருவர் ஆகியுள்ளார். ஈரோடு கிழக்கில் பம்பரமாக சுற்றிக் கொண்டிருப்பதால், இந்த விவாதம் இப்போதைக்கு நடக்குமா என்றுமா தெரியவில்லை. அத்துடன் இன்னொருவரும் நேரடி விவாதத்தில் பங்குபற்றப் போவதாக அதே செய்திகளில் ஒரு குறிப்பும் இருந்தது.
  20. 🤣.............. என்ன தூயவன் இது........ எந்த விடயத்தில் கருத்துகள் எழுதுவது என்றாலும், எனக்கு அதில் என்ன தகுதி இருக்கின்றது என்று சொல்லிய பின்பே தான் எழுத வேண்டுமா.... உங்களுக்கென்று சில நியாயங்கள் இருப்பது போலவே எனக்கென்றும் சில நியாயங்கள் இருக்கின்றன. நீங்கள் உங்களின் பாதையில், நான் என் பாதையில். ஆனால், எந்நிலையிலும் அடிப்படை நாகரிகம் இல்லாத ஒரு சொல் கூட என்னிடமிருந்து வரப் போவதில்லை.
  21. அண்ணா, கணக்கில் நீங்கள் ஒரு புலி என்று நானும், சிலரும் இங்கு உங்களை சொல்லிக் கொண்டு இருந்ததற்கு நீங்கள் எங்களைப் பழிவாங்குகின்றீர்கள் போலத் தெரியுது.......................🤣.
  22. 👍..................... நீங்கள் எழுதியிருப்பதை சில தடவைகள் மீண்டும் மீண்டும் கவனமாக வாசித்து புரிந்துகொள்ள முயன்றேன், வசீ. ஒரு தனிமனிதன் தன்னுடைய வளர்ச்சியாக எண்ணி ஒரு பாதையில் முன்னே போவதையே நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் ஒரு செயற்பாட்டின் வளர்ச்சியை சொல்லியிருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். யோசித்துப் பார்த்தால், ஆச்சரியமாக இருக்கின்றது. இவை இரண்டும் ஒன்று அல்ல என்பது மட்டும் இல்லை, இவை எதிர் எதிரானவை போன்றும் தோன்றுகின்றன. செவ்விலக்கியங்கள், சாஸ்திரிய கலைகள் என்று சொல்லப்படுபவை உலகெங்கும் சாமானிய மக்களால் புரிந்து கொள்ளப்படக் கூடியவையோ அல்லது ரசிக்கப்படக் கூடியவையோ இல்லை. உதாரணமாக, கர்நாடக சங்கீதத்தை சொல்லலாம். சாமானிய மக்களால் ஒரு சாஸ்திரிய சங்கீதம் ஏன் ரசிக்கப்பட முடியாமல் இருக்கின்றது என்ற கேள்விக்கு, சாமானிய மக்களுக்கு அதில் பரிச்சயம் இல்லை, பயிற்சி இல்லை என்பதே சொல்லப்படும் காரணம். அதை ரசிப்பதற்கான பயிற்சியே ஒரு பெரும் முயற்சி என்கின்றனர். இதே தான் செவ்விலக்கியங்கள் என்று சொல்லப்படுபவைக்கும். ஆனாலும், இவைதான் ஒரு மொழியின், ஒரு கலாச்சாரத்தின், ஒரு மக்கள் கூட்டத்தின் பெருமைகளாக, அதன் தொடர்ச்சியை முன்கொண்டு செல்லுபவைகளாக கருதப்படுகின்றன. இங்கு ஒரு முரண்பாடு இருக்கின்றது போலத் தோன்றுகின்றது, ஆனால் இதில் முரணே இல்லை என்கின்றனர். ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாகும் என்கின்றனர். சாஸ்திரிய சங்கீதத்தில் இருந்து மெல்லிசை/திரையிசை உருவாவது போல, செவ்விலக்கியம் ஒன்றிலிருந்து கல்கியின் 'பொன்னியின் செல்வன்' உருவானது போல. முதலில் அம்புலி மாமா, பின்னர் பட்டுக்கோட்டை பிரபாகர், பின்னர் சுஜாதா, பின்னர் பாலகுமாரன், அதன் பின்னர் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், உலக இலக்கியங்கள் என்று ஒரு பாதையில் போனது மட்டும் இல்லை, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு போகும் போது, நாங்கள் கடந்து போவதை நிராகரித்துக் கொண்டும் தானே போகின்றோம். ஆனால், இதில் இருக்கும் ஒவ்வொருவரையும் அவர்கள் தான் இலக்கியவாதிகள் என்று சொல்லி அங்கேயே நிற்பவர்களும் ஏராளமாக இருக்கின்றார்கள். ஆகவே இலக்கியம் என்பதை, அதன் அழகியலை ஒரு சட்டத்துக்குள் வரையறை செய்து கொள்ள முடியாதோ என்று தான் தோன்றுகின்றது. இடதுசாரி அல்லது தீவிர கொள்கைப் பிடிப்பாளர்களிடம் இருந்து வரும் ஆக்கங்கள் தட்டையானவை என்ற பொதுவான அபிப்பிராயம் இருக்கின்றது. மனிதர்களின் நுண்ணிய உணர்வுகளுக்கும், அகப் போராட்டங்களுக்கும் அங்கே இடமே இல்லை. அந்தக் கலைஞனின், எழுத்தாளனின் கொள்கைப் பிரகாரம் ஒரு நியாயம் அவர்களின் படைப்புகளில் இருக்கும், ஆனால் பெரும்பாலான மனித வாழ்க்கைகள் நுண்ணிய உணர்வுகளால் தானே ஆக்கப்பட்டவை. எமக்குள் தோன்றும் தரிசனங்களை எவ்வித மறைப்புகளும் இன்றி வெளிப்படுத்துவதற்கு சில சிந்தனைகள், கொள்கைகள் தடையாகவும் ஆகலாம். தனிப்பட்ட ரீதியில், நான் ஒரு வாசகனே. என்னால் வாசிக்க கூடிய நாள் வரையில் நான் ஒரு வாசகனாவே தான் இருக்கப் போகின்றேன் என்று தான் நம்புகின்றேன். சில வேளைகளில் 'சரி, இன்று ஏதாவது எழுதுவோம்...........' என்று மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுகின்றேன். சட்டியில் இருப்பது தான் வருவது போல, எழுத்தில் உள்ளிருப்பது அப்படியே வருகின்றது. ஒரு சாதாரண மனிதனின் வாக்குமூலங்களாகவே இவைகளை நான் நினைக்கின்றேன். உங்களின் கேள்விகளும், கருத்துகளும், விளக்கங்களும் பல திசைகளிலும் சிந்திக்கத் தூண்டுபவை, வசீ.................❤️.
  23. நீங்கள் சொல்லியிருக்கும் இந்த அடுக்குகளிற்கு வெளியே யாராவது சிலராவது இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றீர்களா............................ இருக்கின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன். அவர்களின் கருத்துகளை தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் சொல்லியிருக்கும் பிரமிட் அடுக்கு திமுகவை பொறுத்த அளவில் ஓரளவு சரியென்றாலும், அங்கு ஒரு மன்னர் - சில குறுநில மன்னர்கள் போன்ற ஒரு அமைப்பிலேயெ அது இயங்குகின்றது. டி ஆர் பாலு, நேரு, துரைமுருகன், பொன்முடி இவர்கள் போன்ற சிலர் குறுநில மன்னர்கள். இவர்கள் அவரவர்களின் பிரதேசத்தில் சகல அதிகாரங்களும் கொண்டவர்கள். அதிமுகவில் குறுநில மன்னர்கள் கிடையாது. அதிகாரம் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான். உதாரணமாக, செப்பரப்பாக்கம் ஏரியைத் திறந்து, அதனால் சென்னை வெள்ளம் வந்தது இந்த குவிந்த அதிகார மைய அமைப்பால் தான். திமுகவில் பலரும் நல்லாவே சம்பாதிப்பார்கள். அதிமுகவில் மற்றவர்கள் அவ்வளவாக சம்பாதிக்க முடியாது. சசிகலா குடும்பம் உள்ளே வந்த பின்னர் தான், திமுகவிற்கு நிகராக தமிழ்நாட்டை அதிமுக கொள்ளை அடிக்க ஆரம்பித்தது. அதுவும் ஒரு குடும்பம் மட்டுமே கொள்ளை அடித்தது.
  24. சந்தோஷ் ஏன் பின்வாங்குகின்றார் என்று தெரியவில்லை, பையன் சார். இப்படியான ஒரு தகவலும் நியூஸ் 18 தளத்திலும் இன்னும் வரவில்லை. நான் நியூஸ் 18 தினமும் பார்ப்பேன், இன்று இரவு ஏதாவது சொல்லுகின்றார்களா என்று பார்ப்போம்....................... நீங்கள் சந்தோஷ் பின்வாங்கும் தகவலை எங்கிருந்து அறிந்தீர்கள்...............
  25. 👍............... மனுஷ்யபுத்திரன் முன்னரே திமுகவின் அரசவைப் புலவர் போலத் தான்............ இப்ப இன்னும் கூட. இப்படித்தான், நீங்கள் சொல்வது போலவே, பல முன்னணி எழுத்தாளர்களும். விசிக மற்றும் இடதுசாரிகளின் பக்கம் இருப்பவர்கள் குறைவு என்றாலும், இவர்கள் நன்றாக எழுதுவார்கள். அதிமுக என்றாலே................. சிக்கல் தான். ராஜூ அண்ணனிடமும், ஜெயக்குமாருடனும் இலக்கியம் பேச எக்கச்சக்கமான பொறுமை வேண்டும் என்று நினைக்கின்றேன்......................... அரசு ஊழியர்களும் இதே போலவே. ஒரு 70 வீதம் திமுக தான்.......... நிறையக் கதைகள் சொல்வார்கள் தமிழ்நாட்டு நண்பர்கள் இது சம்பந்தமாக. எல்லாவற்றையும் மீறி எம்ஜிஆர் செய்தது ஒரு இமாலயச் சாதனை தான்.................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.