Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. இல்லை கபிதன், அதிகாரமும் செல்வாக்கும் தான் எங்களின் செயல்களை தீர்மானிக்கும் என்றில்லை. கூட்டத்துக்குள் சிக்காமல் நாங்கள் நாங்களாகவே வாழலாம். ஆனால் தனிப்பட்ட ரீதியில் சில இழப்புகள் இதனால் ஏற்படும். ஆனாலும், அப்படி வாழும் போது உள்ளுக்குள் இருக்குமே ஒரு செருக்கு........... பாரதியார் கவிதைகள் புனையும் போது, அவர் நிமிர்ந்து, அவரது கண்கள் ஆகாயத்தில் குத்தி சிவந்து இருக்கும் என்பார்கள்.............. அற்ப மாயைகளாகவே அவருக்கு சுற்றி இருந்தவர்கள் தெரிந்தார்கள்........
  2. தேரை இழுத்துக் கொண்டு போய் தெருவில் விட்டுவிட்டு ஓடி மறைவது போல, எல்லாத் திரிகளும் இப்படியே ஒரே பக்கமாக இழுபட்டுப் போகின்றனவே.......................🤣. இந்தச் செயற்கை நுண்ணறிவால் கிடைத்துக் கொண்டிருக்கும் சாதக பாதகங்கள், அடுத்த நகர்வு, தேவையான ஒழுங்குமுறைகள் என்று சிலதையாவது இங்கு பகிர்வதற்கு இது ஒரு சந்தர்ப்பம்...............👍.
  3. இதை ஒரு செய்தியாகவே அறிந்திருந்தேன், அண்ணா. இதை ஒரு கொலை என்னும் கோணத்தில் முதலில் நினைத்திருக்கவில்லை. ஆனால், இது ஒரு கொலையாக இருப்பதற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. சில மாதங்களின் முன், எழுத்தாளர் ஜெயமோகன் எல்லா செயற்கை நுண்ணறிவு தகவல் திரட்டிகளையும் திருட்டுத் தகவல் திரட்டிகள் என்று குறிப்பிட்டிருந்தார். பாலாஜியின் மரணத்தின் முன்னரேயே, பாலாஜியுடன் ஒரு தொடர்பும் இல்லாமலேயே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார். ஜெயமோகன் ஒரு படைப்பாளியாக அவருக்கு காப்புரிமை உள்ள அவரது படைப்புகள் எவ்வாறு இந்த தகவல் திரட்டிகளால் திரட்டப்பட்டு, உருமாற்றப்பட்டோ அல்லது உருமாற்றப்படாமலேயோ பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை வைத்து இப்படி ஒரு முடிவிற்கு வந்திருந்தார். யுவன் சங்கர் ராஜாவும் பின்னர் இதைப்பற்றி, தன் அனுபவத்தை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இதையே தான் காப்புரிமைகளை வைத்திருக்கும் எந்த படைப்பாளியும் சொல்வார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். எழுத்தோ, ஓவியமோ, இசையோ, மென்பொருள் நிரல்களோ........... எதுவென்றாலும் இன்று திருட்டுப் போவது தடுக்கப்பட முடியாததாக இருக்கின்றது. சட்டதிட்டங்கள் மிகவும் மேம்போக்காக, பழைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையிலேயே உள்ளது. புதிதாக மிகவும் கறாரான ஒழுங்குமுறைகள் உருவாக்கப்படவேண்டும். இது முதலில் அமெரிக்காவிலேயே நடைமுறைப்படுத்தப்படவேண்டும். பாலாஜி இதையே தான் சொல்லியிருந்தார். அவரின் வேலை அனுபவத்தில் இருந்து மிக உறுதியான ஆதாரங்களை காட்டியிருக்கின்றார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், சில முக்கியஸ்தர்கள் மற்றும் பேராசிரியர்களும் பாலாஜியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுவான, 'உலகம் முன்னுக்குப் போகின்றது.............. நீ முட்டுக்கட்டை போடாதே...........' என்பது போன்ற அடிப்படையுடன், அவர்களின் புத்திக்கூர்மையையும் சேர்த்து திருட்டு என்று சொல்லப்படுவதை அது திருட்டே இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எலான் மஸ்க்கும் பாலாஜியின் மரணம் தான் கொலை போன்று தெரிகின்றது என்று சொல்லியிருக்கின்றாரே தவிர, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும், அதில் இருக்கும் குறைபாடுகளையும் பற்றிக் கதைக்கவில்லை. அவரே இதில் மிகப்பெரிய ஒரு நிறுவனம் வைத்துள்ளார். எந்த எல்லைவரை போயும் இவர்கள் பணம் சேர்ப்பார்கள். மிக மிகத் திறமையான ஒரு இளைஞன் இழக்கப்பட்டது மிகவும் வருத்தமான ஒரு நிகழ்வு. அச்சு அசலாக இங்கிருக்கும் பல பிள்ளைகள் போன்றே கள்ளம் கபடமற்ற, உள்ளுக்குள் நிகழ்ச்சிநிரல்கள் வைத்துக் கொள்ளாமல், சரியென்று தோன்றுவதை சரியென்றும், பிழையென்று தோன்றுவதை பிழையென்றும் சொல்லும் அறம் தெரிந்த பிள்ளை................🙏.
  4. ஒரு மனிதனுக்கு ஆகப்பெரிய கரைச்சல் அந்த மனிதனின் மனைவியாலேயே கொடுக்கப்பட முடியும் என்பது தசரத சக்கரவர்த்தி காலத்தில் இருந்து நாங்கள் கண்ட உண்மை............... தசரத சக்கரவர்த்தி கொஞ்சம் அளவுக்கதிகமாக வைத்திருந்ததும் ஒரு பிழை தான்..............😜. ஆனால், ஆபிரகாம் லிங்கன் அந்தப் பெரிய வீட்டுக் கரைச்சலையும் தாண்டி, அவர் மனைவி இடைக்கிடையே தாண்டவம் ஆடுவாராம் என்று சொல்கின்றனர், அரசியலில் சாதித்தார். சில பேர்கள் கரைச்சலை கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டு விடுவார்களோ................ சுமந்திரனுக்கும் லிங்கனுடன் பெயர் ஒத்துப் போகுது............🤣. இவர்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பம்.............. ஆனால் தலை வரவர உண்டியல் மாதிரி உள்ளுக்குள் ஒன்றும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது............🤣.
  5. உண்மை தான்.............. கடவுள் இந்த ஆளை சும்மா விட்டாலும், போகிற போக்கில் இவரது குடியரசுக்கட்சி ஆட்களே கரைச்சல்கள் கொடுத்து தான் ஆளை கட்சியிலிருந்து அனுப்புவார்கள் போல.......... பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், ஜெஃப் பேசோஸ், இப்படி எத்தனை பேர் அமைதியாக உலகப் பணக்காரராக வந்து, அமைதியாகப் போயும் விட்டார்கள்........... இந்தப் புதுப் பணக்காரரின் தலைவலி பெரிய தலைவலியாக இருக்குது எல்லாருக்கும்........🤣.
  6. 🤣............... 'மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர்............' என்று அவர் மறைத்து மறைத்து சொல்ல, நீங்கள் புத்தக அட்டையிலேயே அந்தப் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்தியிருக்கின்றீர்கள்................
  7. நேற்று நியூஓர்லியன்ஸில் நடந்து இருக்க வேண்டிய Georgia vs. Notre Dame College Football Playoff போட்டி இதனால் நேற்று நடைபெறவில்லை...............இன்று மதியம் இந்தப் போட்டி நடைபெறுகின்றது. இன்று சுவடே இல்லாமல் மக்கள் இந்தப் போட்டியை பார்ப்பார்கள், ரசிப்பார்கள்............ ஊரில் அரசாங்கம் எங்களின் பாடசாலைக்கு குண்டு போட்ட மறுநாளே நான் பள்ளிக்கூடத்திற்கு முதல் ஆளாகப் போயிருந்தேன்............ எனக்கும் விசர், எல்லாருக்கும் விசர்..............🫣.
  8. அவரும் கறுப்புக் கண்ணாடிக் காரில் வருவதாகச் சொல்லியிருக்கின்றார்............ இவரும் கறுப்புக் கண்ணாடிக் காரில் வருவதாகச் சொல்லியிருக்கின்றார்.......... அப்புறம் என்ன பிரச்சனை............. இருவரும் கார்களை பனையூர் பக்கமாக ஓட்டிக் கொண்டு போய், அப்படியே அந்தப் பக்கமாக ஒருவரை ஒருவர் மன்னித்து விடுங்கள்.......... இப்ப பனையூர் தான் ஹாட் & விவிஐபி ஸ்பாட்............ ஆனாலும், என்ன இருந்தாலும் வருண்குமார் இப்படி சொல்லியிருக்கக்கூடாது...........'அவரு மைக்கிற்கு முன்னாடி தான் புலி, மைக்கிற்கு பின்னாடி அவரு ஒரு எலி...............' என்று வருண் சீமானை வாரியிருக்கக்கூடாது................. இது ஒருவரின் தொழிலை, சீவனத்தை அழிப்பது போல...........😜.
  9. வேல்ஸிலிருந்து அருள் என்பவர் சொல்லியிருக்கின்றார் இந்த வருடத்துடன் அமெரிக்காவின் கதையே முடிந்து விடும் என்று.....................🤣. போன டெஸ்லா திரும்பி வரத்தான் வேண்டும், அண்ணா......... எச் 1 - பி விசாப் பிரச்சனை தான் எலானுக்கும், விவேக்கிற்கும், ஶ்ரீராமிற்கும் மேல் டெக்சாஸில் தொங்குகின்ற கத்தி போல............. அப்படியே வராவிட்டாலும் நஷ்டமில்லை............ இங்கு கலிஃபோர்னியாவில் போய்க் கொண்டிருக்கும் ஆயிரம் முயற்சிகளில் ஒன்றோ இரண்டோ புதிதாக வெற்றிக்கொடி ஏற்றும்.............
  10. ம்ஹூம்.............. கலிஃபோர்னியாவை விட்டுவிட்டு, பாதாமிற்கும் பிஸ்தாவிற்கும் எங்கே போவார்கள் மற்ற 49 மாநிலக்காரர்களும்.................🤣. இந்தியாவில் தமிழ்நாடு போல அமெரிக்காவில் கலிஃபோர்னியா.......... ஒன்றிய அரசு கொஞ்சம் குனிந்து தான் உள்ளே வரவேண்டும்.................😜. ஆனால், ஒருவரை ஒருவர் கைவிடவும் முடியாது. ரானால்ட் ரேகன் போல ஒருவர் வந்தால் கலிஃபோர்னியாவும் சிவப்பாகலாம்..............
  11. 🤣............. அதிலிருந்து தப்பத்தான் இந்த வேண்டுதல், அண்ணா.......... ட்ரம்பிற்கு கழுத்து சுளுக்கவும், புடினிற்கு இடுப்பு பிடிக்கவும், மோடி தடக்கி விழவும் வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றேன்...........
  12. கரைச்சல் வேண்டும் ---------------------------------- கடவுளே வருடம் வந்து விட்டதே என்று காணி நிலம் கேட்பார்கள் சொத்து சுகம் கேட்பார்கள் நீங்கள் கொடுக்க வேண்டும் என்றில்லை ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கரைச்சலாவது கட்டாயம் கொடுக்கவும் ஒன்றுக்கு மேல் கொடுத்தால் இன்னும் நல்லது பெரிதாக தேவையில்லை சிறியவையாகவே போதும் பச்சை தண்ணீர் குடித்தால் மூக்கு ஓடுவது போல முருங்கைக்காய் சாப்பிட்டால் தோலில் அரிப்பு வருவது போல இனிப்பு சாப்பிட்டால் நெஞ்சு எரிவது உறைப்பு சாப்பிட்டால் வயிறு எரிவது நடந்தால் பாதம் நோவது இருந்தால் பிஷ்டம் நோவது படுத்தால் கழுத்து சுளுக்கு குனிந்தால் இடுப்பு பிடிப்பு இப்படி சிலதை அள்ளி அள்ளி கொடுக்கவும் அளவில்லாத கருணையாளனே இதில் எதுவும் ஒரு போதும் தீரவும் கூடாது எந்தக் கரைச்சலும் இல்லாதவர்கள் உள்நாட்டு பிரச்சனைகள் உலக பிரச்சனைகள் எல்லாப் பிரச்சனைகளையும் தமதென்றாக்கி அடிமுடி தேடி பக்கத்தில் இருப்பவர்களை பாடாய் படுத்துகின்றார்கள் கடவுளே.
  13. 🤣...... ட்ரம்பும் வரியும் வாங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார்....... எல்லாக் காசையும் என்ன செய்யப் போகின்றனோ......
  14. 😁...................... இந்த மீம்ஸை இன்று பார்த்தவுடன், எவ்வளவு தான் ஒரு வருடத்தில் சாப்பிட்டுத் தள்ளுகின்றோம் என்று தோன்றியது, சிறி அண்ணா.................
  15. 👍.............. நீங்கள் சொல்வது நன்றாக இருக்குமே............... இங்கு களத்தில் யாராவது சிலராவது ஏதாவது வித்தியாசமாக பார்த்திருப்பார்கள் அல்லது செய்திருப்பார்கள்.
  16. மெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கின்றேன், அக்கா............ முப்பது வருட குடும்ப வாழ்க்கையில் சுடுதண்ணீர், பிளேன் டீ, இப்பொழுது பால் டீ வரை வந்துவிட்டேன். இப்படியே மெதுவாக முன்னேறாமல், ஒரேயடியாக திண்டுக்கல் தலைப்பாக்கட்டு பிரியாணியை அடுத்ததாக செய்து விடுவமோ என்றும் ஒரு யோசனை வருகின்றது................. ஆனால் வீட்டில் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் மூச்சு நின்றாலும் நின்றுவிடும்........... ஊரில் கிரவுண்டுக்கு என்றே நேர்ந்து விட்டது போல.......... இங்கேயும் அப்படித்தான்............🤣.
  17. நல்ல ஒரு யோசனை, அண்ணா. 365 எபிசோட்............ ஒவ்வொன்றும் விளக்கம் மற்றும் அளவுகளுடன். இப்பவே ஒரு நட்சத்திரம் உதயமானது போல ஒரு உணர்வு..............🤣.
  18. வருடச் செய்முறை ------------------------------ முப்பது கிலோ கோழி இருபது கிலோ மீன் பதினைந்து கிலோ ஆடு இவற்றை கழுவி துண்டு துண்டாக்கி கறியாக்கவும் ஒரு பகுதியை பொரிக்கவும் 50 கிலோ அரிசி இதை சோறாக்கவும் பத்து கிலோ பருப்பு போதும் இதைவிடக் குறைய கத்தரிக்காய் வாழைக்காய் பயற்றங்காய் போன்றன இவற்றில் பொரித்த குழம்பு பொரிக்காத குழம்பு பால்கறி இப்படி எல்லாம் வைக்கவும் தேவையான அளவு பாகற்காய் பொரிக்கவும் மிளகாய் பொரிக்கவும் வடகம் பொரிக்கவும் வாழைக்காய் பொரிக்கவும் அப்பளம் பொரிக்கவும் ஊறுகாய் வாங்கவும் தயிர் வாங்கவும் நல்ல நாட்களில் வடை சுடவும் பாயாசம் வைக்கவும் பொங்கல் பொங்கவும் வேண்டும் ஆடிப் பிறப்பன்று கொழுக்கட்டை ஆவணிச் சதுர்த்தியில் மோதகம் மீண்டும் விளக்கீட்டில் கொழுக்கட்டை நவராத்திரிக்கு அவல் கடலை நல்ல நாவல் பழம் அம்மாவின் திதி அப்பாவின் திதி என்றால் பதின்மூன்று கறிகள் வைக்கவும் அவ்வளவும் மரக்கறிகளே இன்னும் சிலதும் இருக்கின்றது உடனே நினைவில் வருகுதில்லை உதாரணமாக முழுப் பலாப்பழங்கள் ஒரு ஐந்து இவை மொத்தமும் 2024ம் ஆண்டில் நான் ஒருவன் உண்டு முடித்த கணக்கு வெளியில் உண்டதையும் சேர்த்தால் அசைவம் இன்னும் அதிகமே சைவம் ஒரு சம்பிரதாயத்திற்கே நாளையிலிருந்து இதே கணக்கு மீண்டும் தொடங்குகின்றது கள நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
  19. 'லப்பர் பந்து', 'நிறங்கள் மூன்று' போன்ற படங்களை எடுப்பதற்கு சில கோடிகளே, ஐந்து கோடிகள் அல்லது குறைவாகவே, போதும் என்று நினைக்கின்றேன். இவற்றை விடவும் குறைந்த செலவில் பல படங்கள், நூற்றுக் கணக்கில், வந்திருக்கின்றன போல............ நாம தான் பார்க்காமல் விட்டுவிட்டோம்.......... நீங்கள் சொல்லியிருக்கும் ஆயிரம் கோடி கணக்கு சரியே. நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய தொகை இல்லை, ஆனால் தனிப்பட்ட சிறிய தயாரிப்பாளர்களின், விநியோகஸ்தர்களின் நிதிநிலைக்கு இது மிகவும் அதிகமே.
  20. அண்ணாமலையாருக்காக நாங்கள் எல்லோரும் பரிதாபப்படவேண்டும். தமிழ்நாட்டில் தான் பாஜகவிற்கு ஆகக்குறைந்த எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அமித்ஷா கூப்பிட்டுவைத்து குட்டி இருக்கின்றார். மலையார் நான் இங்கேயே இல்லையே, லண்டனில் இருந்தேனே என்று தப்பப் பார்த்திருக்கின்றார். ஆனால் அது அமித்ஷாவிடம் எடுபடவில்லை. இப்ப சாட்டையால் அடிப்பது, செருப்பு இல்லாமல் நடப்பது என்று ஒரே நேர்த்திக்கடன்களாக அண்ணாமலையார் செய்து கொண்டிருக்கின்றார்............ விஜய் காரில் வந்து ஆளுனரிடம் மனு கொடுத்து, அப்படியே காரிலேயே கிளம்பி, தன் போராட்டத்தை அவர் வழியிலேயே செய்துவிட்டார். அவர் ஆளுனரை பனையூருக்கு வரச் சொல்லாமல் இருந்ததே விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு மைல்கல் தான்.............. மாநிலங்களுக்கு ஆளுனரே தேவை இல்லை என்று விஜய் முன்னர் சொல்லியும் இருந்தார்.............. சீமான் கட்சிக்காரர் ஒருவரும் சில மாதங்களின் முன் இப்படியான ஒரு விவகாரத்தில் மாட்டுப்பட்டு போக்சோ சட்டத்தில் உள்ளே இருக்கின்றார்............. ஆதலால் மெதுவாகத்தான் வருவார், அப்படியே பட்டும்படாமலும் போயும் விடுவார்............
  21. கொடுப்பனவின் அளவு வேலை செய்யும் பிரதேசத்திற்கு ஏற்ப மாறுபட வேண்டும் என்பதைச் சொல்ல மறந்து போய்விட்டேன். கொழும்பில் 50 ஆயிரம் கொடுத்தாலும் போதாதே............. இங்கு அமெரிக்காவில் கலிஃபோர்னியா, நியூ யோர்க் போன்ற இடங்களுக்கு என்று வேறு ஒரு கணக்கு இருக்கும். தொழில்நுட்பத்துறையில் இதை நான் நேரடியாகவே பார்த்திருக்கின்றேன். அரியநேந்திரன் அரசவேலையில் இருக்கவில்லையா................ கட்சியா சம்பளம் கொடுத்தது......... நானும் போய் சேரப் போகின்றேன்..............🤣.
  22. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அரியநேத்திரன் அவர்கள் தனது மாத வருமானம் 60 ஆயிரம் ரூபாய்கள் என்றே குறிப்பிட்டிருந்தார் என்று ஒரு ஞாபகம். இவர் என்ன இவ்வளவு குறைவான சம்பளத்தில் இருக்கின்றாரே, இவர் என்ன வேலை செய்கின்றார் என்ற யோசனை வந்தது. ஊரில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தவர், தனது சம்பளம் 30 ஆயிரம் என்றே சொல்லியிருந்தார். அது தற்காலிக வேலை, அதை நிரந்தரமாக்க என்ன செய்யலாம் என்று அவர் முயன்று கொண்டிருந்தார். 50 ஆயிரம் என்பது அதிகமாகவே தெரிகின்றது. எட்டு மணித்தியாலத்திற்கு மேல் வேலை செய்தால், ஒவ்வொரு மணி நேரத்திற்கான கொடுப்பனவும் அதிகரிக்க வேண்டும் - ஒன்றரை அல்லது இரு மடங்குகள். இவர்கள் ஏன் அரைவாசியாக்கி இருக்கின்றார்கள்..............
  23. நீங்கள் அவரை விடமாட்டீர்கள்..................🤣. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
  24. 👍............. பெரிய நிறுவனங்களுக்கு நீங்கள் சொல்வது பொருந்தும். உதாரணமாக, சண் பிக்சர்ஸ் இப்படிச் செய்யமுடியும். ஆனால், விஷால் போன்ற ஒருவர் பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் பல கோடிகளை கடன் வாங்கி படமெடுத்து நஷ்டப்படும் போது, அந்தக் கடன் விஷாலின் வாழ்க்கையை பாதித்துவிடுகின்றது. இதைப் போன்றே ஊரிலிருந்து அதுவரை தேடியதை எல்லாம் சினிமாக் கனவுகளுடன் கொண்டு வரும் பல தயாரிப்பாளர்கள். நடிகர் சசிகுமார் இன்னுமொரு உதாரணம். ஆனால், சினிமா எவருக்காகவும் நிற்பதில்லை, அது கால வெள்ளத்தில் மூழ்காமல், தேவையான மாற்றங்களுடன், ஓடிக் கொண்டே இருக்கும். மனிதர்கள் தான் மூழ்கிப் போகின்றனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.