Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. கப்பலில் போனவர்கள் திரும்பி வரும்போது வெள்ளை மா கொண்டு வந்ததாகச் சொல்வார்கள்...............🤣.
  2. ஹலோ ஜோசப் த ட்ரீமர், என்ன கேள்வி இது............................🤣. எத்தனை கதைகள், கட்டுரைகள், புத்தகங்கள், காமிக்ஸ் ஒன்று கூட சமீபத்தில் வந்திருந்தது. ஒரு முழுப்படம் தான் இன்னும் எடுக்கப்படவில்லை. அதையும் எடுத்து விடுவோமா என்று இரண்டு மூன்று பேர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள்........... 1930ம் ஆண்டுகளிலேயே சிலர் ஊரிலிருந்து உள்ளூரில் செய்த கப்பலில் ஏறி அமெரிக்கா வந்தார்கள். அன்றிலிருந்து கோதுமை மாவை அமெரிக்கன் மா என்று சொல்லவும் ஆரம்பித்தார்கள்.................😜.
  3. 👍.................. இதையே தான் ஜெயமோகனும், யுவன்சங்கர்ராஜாவும் சொன்னதாக மேலே ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன். என்னுடைய ஒரு அனுபவத்தை இங்கு களத்தில் முன்னர் பகிர்ந்திருந்தேன். அகாலமான ஒரு நண்பனுக்கு நினைவஞ்சலி மலர் ஒன்று வெளியிட நண்பர்களிடமிருந்து ஆக்கங்களை பெற்றிருந்தோம். ஆக்கங்களை பரிசீலித்து, திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி என்னிடமும் கொடுக்கப்பட்டது. நான்கு கட்டுரைகள் ஒரே மாதிரியானவை. எந்த வித உணர்வும் அற்ற, இந்த தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட 'பிளாஸ்டிக்' கட்டுரைகள். நான்கையும் திருப்பி அனுப்பி, சொந்தமாக சில வசனங்கள் எழுதிக் கொடுங்கள், அது போதும் என்று சொன்னோம்.
  4. காட்டோர ஊருக்குள் யானைகளும், காட்டு மிருகங்களும் வருவது போலத்தான் இதுவும். காடுகளை ஊர்களாக்கினால் காட்டு மிருகங்கள் வேறு எங்குதான் போவது................ லாஸ் ஏஞ்சலீஸ் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மக்கள் தொகை மிக அதிகமாக அதிகரித்த பின், மக்கள் நகரிலிருந்து வெளியே அடிவாரங்களையும், மலைகளையும் நோக்கிப் போனார்கள். அத்துடன் வசதி படைத்தவர்கள் மலை உச்சிகளில் குடியேறினர். புதிய வீடுகள், மிகப் பெரிய வீடுகள் அத்துடன் ஆரம்பத்தில் நகர்ப் பகுதிகளில் இருப்பதை விட இவற்றின் விலை குறைவாக இருந்தது. ஆகவே மக்கள் அதிகமாக இந்த இடங்களை நோக்கிப் போனார்கள். இன்று இந்தப் பகுதிகளும் நகர்களாகி விட்டது, அத்துடன் இன்று விலைகளும் எல்லா இடங்களிலும் ஒன்றே. மிக உலர்ந்த காலநிலை, அதிக வெப்பம், எளிதில் தீப்பற்றும் இந்த மண்ணின் மரங்கள் மற்றும் புதர்கள் இவற்றுடன் சேர்த்து மிக வேகத்துடன் வீசும், மிக உலர்ந்த காற்றும் வருடத்தில் சில நாட்கள் வீசும். இவையே தான் மலைகளிலும், அதையொட்டிய பகுதிகளிலும் தீ ஆரம்பிப்பதற்கும், பரவுவதற்கும் மூல காரணங்கள். இது இயற்கையின் ஒரு சுற்று தான். இப்படித்தான் மலைக்காடுகளில் இருக்கும் முதிய மரங்கள் அழிவதும், புதிய மரங்கள் உண்டாவதும் ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. இப்பொழுது, புதிதாக மனிதர்கள் போய் இடையில் மாட்டுப்பட்டுவிட்டார்கள். அத்துடன் மனிதர்களின் புதிய நடவடிக்கைகளால் மண் அரிப்பு, நிலச்சரிவு என்பனவும் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. ஒரு துவாரத்தை நாங்கள் அடைக்க முற்பட்டால், இன்னுமொரு துவாரத்தை இயற்கை உண்டாக்கும் போல.....................
  5. 🙏............ ஆபத்து என்று தெரிந்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றி விடுவார்கள், சுவி ஐயா. Mandatory evacuation. இன்னமும் மற்ற இடங்களுக்கு பரவவில்லை. இன்றுடன் காலநிலையும், காற்றும் மீண்டும் மிதமாவதால், இது இத்துடன் நின்றுவிடும் என்றே நினைக்கின்றேன்.....................
  6. அது தான் என்னுடைய திட்டமும்.................😜. ஒரு நெருப்பு எரிவது Malibu என்னும் இடத்தில். அது பெரும் பணக்காரர்கள் வாழும் கடலுடன் கூடிய மலைப்பகுதியான இடம் அது. இந்தப் பாதை தான் சரி என்று நினைக்கின்றேன்...........
  7. இழப்பீடுகள் கிடைத்து விடும் பயப்படாதீர்கள், அண்ணா............ அந்தப் பகுதியில் இருப்பவர்களை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் சம்மதத்துடன் ஓரிரு நாட்கள் வேறு இடத்திற்கு போய் தங்கச் சொல்வார்கள். இன்றுடன் கடும் காற்று நின்றுவிடும்..................... அதன் பின்னால் எரிவது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்..................
  8. என்னுடைய பகுதியில் நெருப்பு வருவதில்லை, அண்ணா........... உங்கள் மகள் இருக்கும் இடத்திலிருந்து கொஞ்ச தொலைவில் ஒன்று எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அது உங்கள் மகள் இருக்கும் இடத்திற்கு பரவாது. பயப்படாதீர்கள், அண்ணா...............
  9. இது என்னுடைய பகுதி இல்லை, இது அமெரிக்காவின் பகுதி, அண்ணா.............🤣. ஆமாம், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சுற்றித்தான் எரிந்து கொண்டிருக்கின்றது. மலைப்பகுதிகளிலும், அடிவாரங்களிலும் எரிகின்றது. இது எப்போதும், வருடா வருடம், நடக்கும். எந்த வருடம், எந்த மலைகள் எரியும் என்பது தான் நடந்த பின்பே தெரிகின்றது. என்னுடைய வீடு மலையிலோ அல்லது அடிவாரத்திலோ இல்லை. கடற்கரைப் பக்கமாக உள்ளது. தேவைப்பட்டால், ஓடிப் போய் கடலுக்குள் விழும் திட்டம் ஒன்று கைவசம் இருக்கின்றது. ஃபயர் வந்ததால் பனாமாக் கால்வாய் கிடையாது என்று நீங்கள் சொல்வது கொஞ்சமும் நியாயம் இல்லை, அண்ணா................ பனாமாவிலும் ஃபயர் வரும்....................🤣.
  10. அமெரிக்கா மட்டுமே நன்றாக இருக்க வேண்டும், மற்றவர்கள் என்னவானாலும் எங்களுக்கு கவலை இல்லை என்ற நிலைப்பாடு தான் அமெரிக்காவில் இருக்கும் ட்ரம்பினதும், ட்ரம்பின் ஆதரவாளர்களினதும் கொள்கை, அண்ணா. அந்தக் கொள்கையைத் தான் நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். அது சீனா, மெக்சிக்கோ, கனடா, ஐரோப்பிய நாடுகள் போன்ற நாடுகளுடனான ஒரு மறைமுக, வர்த்தக யுத்தம் என்றாலும் எதிர்க்கின்றோம். மத்திய கிழக்கு நாடுகளுடனான, முக்கியமாக ஈரானுடனான, நேரடி யுத்தம் என்றாலும் எதிர்க்கின்றோம். நேட்டோ வேண்டும் என்கின்றோம். அணு ஆயுத ஒப்பந்தங்கள் வேண்டும் என்கின்றோம். ஐநாவிற்கும், உலக ஸ்தாபனங்களிற்கும் அமெரிக்காவின் பெரிய பங்களிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும் என்கின்றோம். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் மிகப் பெரிய பங்கு அமெரிக்காவிற்கு தொடர்ந்தும் இருக்கின்றது என்கின்றோம்............ இப்பொழுது புதிதாக, பனாமாக் கால்வாய் பனாமாவிற்கும், கிரீன்லாந்து டென்மார்க்கிற்கும், கனடா கனடாவிற்கும் ஆக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் நாங்கள் சொல்கின்றோம், அண்ணா.............
  11. 🤣............. நான் படிச்சு படிச்சு, விழுந்து விழுந்து, உருண்டு உருண்டு, பிரண்டு பிரண்டு சொன்னேனே, விசுகு ஐயா......... இந்த ஆள் வேண்டாம் என்று. இவர் வந்தால் உலகத்திற்கு இன்னும் கேடு என்றால், என்ன கேடு என்று எதிர்க் கேள்வி தான் கேட்டார்கள். மருத்துவர் அர்ச்சுனா புத்திசாலி, ஆனால் பைத்தியக்காரர் போலவும் கதைப்பார், தெரிவார்............ ஆனால், நம்ம தல உள்ளும் புறமும் ஒன்றே...............
  12. சைனாக்காரர்களால் வைரஸை நிற்பாட்ட முடியாது.......... ரஷ்யர்களால் உக்ரேனை நிற்பாட்ட முடியாது............... மத்திய கிழக்கால் இஸ்ரேலை நிற்பாட்ட முடியாது.............. அமெரிக்கர்களால் ட்ரம்பை நிற்பாட்ட முடியாது............ இந்த மனுஷன் முழுச் சந்திரமுகியாகித்தான் முடியும் போல.............
  13. அண்ணா, உங்களின் லொகேஷனை பின்னர் அனுப்பி விடுங்கோ.............. ஏதாவது குண்டு மிஞ்சினால் அல்லது கெட்டுப் போகும் திகதி வந்தால், உங்களுக்கு ஒன்று.................😜.
  14. 🤣.................. கந்தையா அண்ணாவின் விருப்பப்படியே அதையே வைத்துக் கொள்ளட்டும், விசுகு ஐயா........... நமக்குத் தேவை தலைக்கு மேல் ஒரு கூரை, அடுப்படியில் சாப்பாடு, அதைவிட்டால் பந்தடிப்பதற்கு ஒரு இடமும், சில ஆட்களும்................... இவைகளை குறைவில்லாமல் தந்துவிட்டு என்ன பெயரையாவது வைத்துக் கொள்ளட்டும்...........🤣.
  15. 'யெஸ் சார்..............மார்வலஸ் ஐடியா.........' என்று சுற்றி இருப்பவர்கள் தலையாட்டிக் கொண்டு இருப்பார்கள் போல..................🤣.
  16. நான் 2010ம் ஆண்டுகளில் வேலை செய்த நிறுவனத்திற்கு அருகிலேயே இந்த ஹேர்பல் லைஃப் நிறுவனமும் இருந்தது. பெருந்தெருவில் இருந்து பார்த்தாலே இதன் பெயர் தெரிவது போல, உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் இதன் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதற்கு அருகில் தான் எனது வேலை இடம் என்று குறிப்பிட்டு இந்த நிறுவனத்தை ஒரு அடையாளமாக பயன்படுத்திக் கொண்டிருந்தேன். அது மட்டுமே தான் இந்த நிறுவனத்தின் ஒரே ஒரு பயன்பாடு எனக்கு. இங்கு இப்படி பல நிறுவனங்களும், பொருட்களும் உண்டு. சுகதேகியான ஒருவர் Balance Dietஐ தவிர்த்தால், நிச்சயம் பக்கவிளைவுகள் வந்தே ஆகும். உடல் பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகளால் சிலவற்றைத் தவிர்ப்பது வேறு............. தமிழ்நாட்டில் இருவர் இறந்த நிகழ்வு சில வருடங்களின் முன் என்று ஒரு ஞாபகம். இங்கு நண்பர்கள் சிலர் புரதம் மற்றும் கொழுப்புணவுகள் மட்டுமே என்று முயன்றிருக்கின்றனர். சமிபாட்டுப் பிரச்சனை மற்றும் சில ஒவ்வாமைகளும் ஏற்பட்டு, இப்பொழுது எல்லோரும் ஓரளவிற்கு சமச்சீரான ஒரு உணவுப் பழக்கத்திற்கு வந்துவிட்டனர் என்று நினைக்கின்றேன்.
  17. இலங்கை அரசு இவர்கள் எல்லோரையும் பர்மாவிற்கு திருப்பி அனுப்ப முடிவெடுத்து, பர்மா அரசை தொடர்பு கொண்டது. ஆனால் பர்மா அரசு இவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இது ஒரு 'கடவுள் இருக்கார், குமார்..........' தருணம். இந்தச் சனங்கள் அந்தக் கொடிய அரசிடம் மீண்டும் போனால் அவர்களுக்கு கொடுமையைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. இலங்கையிலிருந்து எல்லா இனங்களையும் சேர்ந்த எத்தனை இலட்சம் மக்கள் அகதிகளாக உலகெங்கும் போய் வாழ்கின்றனர். இலங்கை நாடும் உலகத்திற்கு ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டாமா............. இலங்கை அரசு இந்தச் சனங்களை அகதிகளாக அறிவித்து, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கவேண்டும். சென்னையில் இந்த மக்கள் பலர் அகதிகளாக ஏற்கனவே வாழ்கின்றனர்.
  18. 🤣...................... அந்த நாட்களில் எங்கள் ஊர்களில் ஒட்டுகளில் இருந்து கொண்டு அரசியலை அலசியவர்களே நாட்டு, உலக நடப்புகளை இதைவிட அறிந்து கருத்து சொன்னார்கள் போல.................. ட்ரம்பின் விளக்கக் குறைவு உலகத்திற்கு கேடு................🫣.
  19. சில வருடங்களின் முன் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைக்குள் ஒரு வண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இலங்கைத் தேயிலையை இனிமேல் வாங்க மாட்டோம் என்ற செய்தியும் பரப்பபட்டது. இலங்கைத் தேயிலையை அதிகமாக வாங்கிக் கொண்டிருந்தவர்கள் ரஷ்யர்களும், மத்திய கிழக்கு நாடுகளும் தான். அதற்கு முன்னர் இலங்கை அரசு அஸ்பெஸ்டாஸ் பாவனையை முற்றாக தடைசெய்திருந்தது. அஸ்பெஸ்டாஸ் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வந்து கொண்டிருந்தது. வெள்ளை அஸ்பெஸ்டாஸிற்கு பதிலாக நீல அஸ்பெஸ்டாஸ் தகடுகளை இலங்கை அரசு மீண்டும் அனுமதித்தது. பின்னர் ரஷ்யா வழமை போல தேயிலையை இலங்கையிலிருந்து வாங்கிக் கொண்டது. இன்னொரு பக்கமாக, பிடிபட்ட வண்டை ஆராய்ந்து பார்த்தார்கள். அந்த வண்டு இலங்கை வண்டே கிடையாது என்ற உண்மை தெரிந்தது. வண்டு மீண்டும் வரலாம்.................😜.
  20. 🤣............. எங்கள் ஊர் வள்ளிக் கிழங்குகள் போலவே தான் உருவங்களும், அளவுகளும்.......... தோல் நிறம் தான் பழுப்பு....................😜.
  21. தில்லை ஐயா, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உங்களின் பேத்திக்கு!
  22. இங்கு இது கடைகளில் கிடைக்கின்றது. மத்திய, தென் அமெரிக்க மக்கள் புழங்கும் கடைகளில் அதிகமாகக் கிடைக்கின்றது. 'இது என்ன வஸ்து, புதுசா இருக்குதே............' என்று எடுத்து ஒரு உருட்டு உருட்டு விட்டு, எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு வருவது ஒரு வாடிக்கை. இந்த வருடத்தையும் தவற விட்டாயிற்று............. அடுத்த ஆங்கில புதுவருடத்தில் ஆரோக்கியமாக வாழ்வதாக ஒரு உறுதிமொழி எடுத்து, ஹிகாமாவை வீட்டை கொண்டு வரவேண்டும்.................🤣.
  23. 🤣................ எனக்கு முன் வீட்டில் சில வருடங்களின் முன்வரை ஒருவர் குடியிருந்தார். மிகவும் வயதானவர். நல்ல வேடிக்கையாகக் கதைப்பார்............ சுவி ஐயா போலவே........ அவர் வைக்கும் செடிகள், தாவரங்கள் சிலது அவ்வளவாக வளரவில்லை. இங்கே மெக்சிக்கோ அல்லது தென் அமெரிக்க நாடுகளிலிருந்து வந்த மக்களே தோட்டவேலைகளில் உதவி செய்கின்றனர். ஒரு தடவை அவர் சொன்னார், 'நான் எதை வைத்தாலும் அது வளருதேயில்லை. ஆனால் அவர்கள் மரத்தை தலைகீழாக நட்டாலும் அவை செழித்து வளர்கின்றன................' என்று...........🤣.
  24. ஏராளன், இப்படிச் செய்யலாம் என்று ஒரு யூடியூப் வீடியோவில் சொல்லுகின்றார்கள். வீடியோவின் கீழே பதியப்பட்டிருக்கும் பின்னூட்டங்களையும் வாசிக்கவும். இது மட்டும் வேலை செய்தது என்றால், மண்கும்பான் முழுவதையும் கறுத்தக் கொழும்பான் ஆக்கிவிடலாம்..................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.