Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 🤣............ ஓணாண்டியார், நீங்கள் எந்த குணா குகைக்குள் போய் இருந்தாலும், உங்களை விடுவதாகவில்லை. குகைக்குள் ஒரு கூட்டமே இறங்குது......................🤣.
  2. 🙏.............. எப்போதும் இங்கு நீங்களும், பல நட்புகளும் கொடுக்கும் உற்சாகமே என்னுடைய முயற்சிகளுக்கு முழுமுதற் காரணம். பல மாதங்களின் முன், நீங்கள் உங்களின் ஓவியங்களை எப்படி செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் வரைகிறீர்கள் என்று கேட்டிருந்தேன். அதையே முயற்சி செய்து பார்க்கின்றேன்.
  3. 🤣..................... அந்தப் பெண்மணி இப்படியே அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால், மெக்சிக்கோவின் பெயரையும் மாற்றும் ஒரு திட்டம் இருக்கின்றதாம்............
  4. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ PAK 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND PAK 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA AUS 😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK NZ Select NZ Select BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) PAK #A2 - ? (2 புள்ளிகள்) IND 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SA Select SA SA ENG Select ENG Select AFG Select AFG Select 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) SA 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) IND 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) PAK இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி PAK சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) AUS 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Travis Head 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shaheen Shah Afridi 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Rohit Sharma 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) PAK 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Shaheen Shah Afridi 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammad Rizwan 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK
  5. நீங்கள் அங்கு படித்தீர்களா, புங்கையூரான். இங்கு ஈழத்தமிழர் ஒருவர் மருத்துவராக இருக்கின்றார். அவர் Zambia இல் படித்ததாகச் சொன்னார். முன்னர் எங்கள் நாட்டிலிருந்து ஆசிரியர்களாக அங்கு சிலர் போயிருந்ததாகவும் ஞாபகம். தத்துவமும், கவிதையும் என்ற வகையில் எதையாவது எழுதுவது சுலபம் தானே, வில்லவன், ஆனால் வாசிப்பவர்களின் நிலை தான் சில நேரங்களில் அப்படி இப்படி ஆகிவிடுகின்றது போல....................🤣.
  6. எல்லா நாடுகளிலும் விலை குறையும் போது தான் இங்கேயும், அமெரிக்காவிலும், விலை குறையும் என்றால், நாங்கள் ஏன் ட்ரம்பை அதிபர் ஆக்கவேண்டும்............. கமலா ஹாரீஸ்ஸை அதிபராக ஆகியிருப்பம் தானே.................. ஓபெக் நாடுகளின் சில எண்ணெய் கிணறுகளை எப்படி அமெரிக்காவிற்கு கைமாற்றி, அப்படியே பெயரும் மாற்றுவது என்ற அறிக்கை இந்த வாரம் வரும் தலையிடமிருந்து...................😜.
  7. காற்றாடி - அத்தியாயம் நான்கு ----------------------------------------------- தனம் மாமி வீட்டுக்கு வந்திருந்தார். ஊரில் முறை தெரிந்த சொந்தக்காரர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் மாமா, மாமி, அண்ணா, அக்கா, அப்பாச்சி, அம்மாச்சி, இப்படி ஏதாவது ஒரு உறவுமுறை சொல்லி அழைப்பதே வழக்கம் என்றாகியிருந்தது. முறை தெரிந்த சொந்தக்காரர்களை அவர்களின் முறையை வைத்தே அழைத்துக் கொண்டார்கள். ஒரு சில அரச உத்தியோகத்தர்களைத் தவிர, வேறு எவரையும் ஒரு உறவுமுறையில் இல்லாமல் குறிப்பட்டதாகவோ அல்லது அழைத்ததாகவோ ஞாபகமில்லை. தனம் மாமி சொந்தத்தில் மாமி இல்லை. இதே ஒழுங்கையில் அவரும் குடியிருக்கின்றார். வீடு நிறைய ஆண் பிள்ளைகளை பெத்து வளர்த்துக் கொண்டிருக்கின்றார். அவர்களில் இருவரைத் தவிர மற்ற எல்லோருமே அவனை விட வயது கூடியவர்கள். பெண் பிள்ளை ஒன்று வேண்டும் என்றே, அடுத்து அடுத்து ஆண்பிள்ளைகளை சளைக்காமல் பெற்றதாக தனம் மாமி சொல்லியிருக்கின்றார். அவனின் வீட்டில் ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் மாறி மாறிப் பிறந்திருந்தார்கள். அவனின் வீட்டில் வேறு ஒரு கொள்கை வழியில் பெற்றிருக்கின்றார்கள் போல. 'என்ன, மூத்தவன் படிப்பை நிற்பாட்டி விட்டானாம்.................' என்று ஆரம்பித்தார் தனம் மாமி. அவனின் அம்மா பரீட்சை அன்று கடுமையாக மழை பெய்ததால், அவன் பரீட்சைக்கு போகவில்லை, அதனால் படிப்பு நின்று போனது என்று ஒரு வெள்ளந்தியாக கதைக்கவில்லை. அம்மா அப்படிக் கதைக்கவேமாட்டார். அவர் பிடி கொடுக்கவேமாட்டார். ஒரு ஆணாக பிறந்திருந்தால், அவர் எப்படியோ ஒரு பெரியாளாக ஆகியிருப்பார். பெண்ணாகப் பிறந்தபடியால், ஓட்டைகளில்லாத கறுப்பு புல்லாங்குழல் போல இருக்கும் ஒன்றால் சர்வ காலமும் அடுப்பை ஊதிக் கொண்டிருக்கின்றார். அவனும் அதை ஊதிப் பார்த்திருக்கின்றான். ஒரு தடவை ஊதுவதற்கு பதிலாக, அடுப்புப் புகையை உள்ளே இழுத்துவிட்டான். இருமிக் கொண்டே ஊதுகுழலை கீழே போட்டு விட்டு, அதை திருப்பி எடுக்கும் போது, அதன் அடுத்த பக்கத்தில் பிடித்து தூக்கியும் விட்டான். எந்த வேலைக்கும் அனுபவம் மிகவும் முக்கியம். 'படிப்பு என்ன படிப்பு, படிக்காதவர்கள் தான் இன்று உலகத்தை ஆளுகின்றார்கள்............' என்று தொடர்ந்தார் தனம் மாமி. ஏட்டுச் சுரைக்காயில் எங்கே கறி வைப்பார்கள், கழனிப் பானைக்குள் யார் கவிழ்ந்து விழுகின்றார்கள், இப்படி இன்னும் சில உதாரணங்கள் ஒரு மன ஆறுதலுக்காகச் சொல்லப்பட்டன. அவரின் பிள்ளைகள் எவருக்கும், இதுவரை, இந்தப் பழமொழிகளையும், முதுமொழிகளையும் எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு தேவையும் வரவில்லை. நாலு மனிதர்களுடன் மட்டும் பழகுகின்றோம், அந்த நால்வரும் ஒன்றையே சொல்கின்றனர் என்றால் முழு உலகமே ஒத்த குரலில் அதையே சொல்வது போன்றே இருக்கும். இன்று இலங்கையின் பெரிய பணக்காரராக இருப்பவர், அவர் படிக்கவேயில்லை, கொழும்பில் தெருத்தெருவாக பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்தாராம் என்று தனம் மாமி இலங்கையில் உள்ளவர்களிலேயே பெரிய சாட்சியாக ஒருவரை கொண்டு வந்து நிறுத்தினார். 'பிறகு............... அவருக்கு என்ன லொத்தரே விழுந்தது...............' என்று அவனின் அம்மா ஆச்சரியம் காட்டினார். அம்மா கேட்பதைப் பார்த்தால், அந்தப் பணக்காரருக்கு லொத்தர் விழவில்லை என்பது அம்மாவிற்கு ஏற்கனவே தெரிந்தே இருந்தது போன்றே அவனுக்கு தெரிந்தது. கடுமையாக உழைத்து, படிப்படியாக அவர் முன்னேறினார் என்று தனம் மாமி சொன்னார். தன்னுடைய மூத்த பிள்ளைகளும் கடுமையாக வேலை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அதில் மூத்த அண்ணன் போன மாதம் இதே ஒழுங்கையில் இருக்கும் அக்கா ஒருவருக்கு கடிதம் கொடுத்து, அது பெரிய வாக்குவாதம் ஆகியது. அன்று இரவு அந்த அக்காவின் வீட்டிற்கு கல்லெறி கூட விழுந்தது. இரவு வெளியே வரப் பயந்து இருந்த அவர்கள், விடி விடியென ஆள் சேர்த்துக்கொண்டு அடிக்கப் போனார்கள். தனம் மாமி வீட்டில் என்ன நடந்தது என்றே தெரிந்திருக்கவில்லை. வேற யாரோ ஒரு கணக்குப் பண்ணி, அந்த அக்காவின் வீட்டிற்கு இரவு கல்லை எறிந்து விட்டுப் போயிருக்கின்றார்கள் போல. கொழும்பில் பேப்பர் பொறுக்கி, பின்னர் பெரும் பணக்காரராக ஆனவரும் முதலில் அவரின் சொந்த ஊரில் ஒரு கடிதப் பிரச்சனையில் மாட்டுப்பட்டிருப்பாரோ என்று அவன் நினைத்தான். அவனை அப்பொழுது தான் கண்ட தனம் மாமி, 'என்ன வேலைக்கு போகின்றாய்..................' என்றார். அவனின் அம்மா வயரிங் வேலைக்குப் போகின்றான் என்று சொன்ன அதே நேரத்தில், அவன் தான் தியேட்டரில் வேலை செய்வதாகச் சொன்னான். சில பின்னேரங்களிலும், இரவுகளிலும் அங்கே போய் தியேட்டரிலும் சும்மா நிற்கின்றவன் என்று அவனின் அம்மா, அப்படியே அவனை முறைத்துக் கொண்டே, சமாளித்தார். 'தியேட்டருக்கு எல்லாம் போகவே கூடாது, அங்கே தான் எல்லா கெட்ட பழக்கங்களையும் இந்தப் பிள்ளைகள் பழகுதுகள்...............' என்று சொல்லிக்கொண்டே மாமி நல்ல வசதியாக பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்து கொண்டார். மேடைப்பேச்சாளர் ஒருவர் தொண்டையைக் கணைத்து முழுவீச்சில் பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பது போன்ற ஒரு நிலையில் மாமி இருந்தார். இன்று இரவு மாமி வீட்டிற்கு யாரும் கல்லால் எறிந்தால் பரவாயில்லை என்று எண்ணம் ஒரு மின்னல் போல தோன்றி மறைந்தது. புகை, குடி, கூத்து என்று பல கெட்ட பழக்கங்கள் வரிசையாக அடுக்கப்பட்டன. எல்லாமே தியேட்டரிலேயே ஆரம்பிக்குது என்றார். ஆனால், காதல், கடிதம் என்ற சொற்கள் மட்டும் வரவேயில்லை. நல்லதோ, கெட்டதோ வெளியில் தான் எட்டிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. எந்த மனிதனும் கொஞ்சமாக கண்ணை மூடி அவனுக்குள்ளே எவைகளையும் தேடுவதில்லை. (தொடரும்.........................)
  8. இல்லை, அண்ணா, நான் இப்ப எதுவும் குடிப்பது இல்லை. ஆனால் பின்னுக்கு போய்ப் பார்த்தால், ஒரு பாட்ஷா இருந்தார், பம்பாயில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று ஒரு வரலாறும் இருக்கின்றது................🤣. 'நான் வேறு ஒன்றுமே கேட்கவில்லை. இதை மட்டும் தானே உங்களிடம் கேட்கின்றேன்.................' என்பது ஒரு தமிழ் வசனம் அல்ல, இது அவர்களின் ஒரு ஆயுதம்..........................🤣.
  9. காஸ்ட்கோவில் முட்டை இல்லை, அண்ணா, ஆனால் வேறு இடங்களில் கிடைக்கின்றது என்று போன வாரம் சொன்னார்கள். அந்த அதிபர் மலையில், Mount Rushmore, இருக்கிற எல்லா முகங்களையும் தட்டிப் போட்டுவிட்டு, தன்னுடைய முகத்தை மட்டும் செதுக்கிறது............. அல்லது புதிதாக இன்னுமொரு மலையை பிடித்து செய்யிறது................... Mount Trump என்று பெயரையும்வைத்துக் கொண்டால், அப்படியே வரலாற்றில் நின்று விடலாம்தானே.......................😜.
  10. அமெரிக்காவிலிருந்து பார்த்தால் கூகிள் Gulf of America என்று காட்டுகின்றது. மெக்சிக்கோவிலிருந்து பார்த்தால் Gulf of Mexico என்று காட்டுதாம். மற்ற இடங்களில் இருந்து பார்த்தால், இரண்டையும் காட்டுதாம். இந்த விளக்கம் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, நேற்று காருக்கு பெட்ரோல் அடிக்க போயிருந்தேன். ஒரு கலன் நான்கு டாலர்கள்...................... ஒரு கலன் இரண்டு டாலருக்கு தருவேன் என்று சொல்லிவிட்டு, முன்பு இருந்ததை விட இன்னும் மேலே போயிருக்குது விலை..............🤣. 'கண்ணாடியை திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும் ...................'
  11. 🙏.................. இன்றைக்கு அல்லது நாளை அனுப்பி விடுகின்றேன், கிருபன். AI இன் கிரிக்கட் அறிவு எப்படியும் என்னுடையதை விட பலப்பல மடங்குகள் இருக்கும். ஆக மிஞ்சிப் போனால், அங்கே போய் உதவி கேட்க வேண்டியது தான்............🤣.
  12. காற்றாடி - அத்தியாயம் மூன்று ----------------------------------------------- இரண்டு வேலைகளை அவன் செய்து கொண்டிருந்தான். பகல் நேரங்களில் அயலவர் ஒருவருடன் சேர்ந்து வயரிங் வேலை என்று சொல்லப்படும் வீடுகளுக்குள் செய்யும் மின்சார அமைப்பு வேலையையும், பின்னேரம் மற்றும் இரவு நேரங்களில் ஊரில் இருக்கும் தியேட்டரில் ஒரு வேலையையும் செய்ய ஆரம்பித்திருந்தான். வயரிங் வேலை செய்வதற்கு அவன் வீட்டில் உடன்பட்டார்கள். ஆனால் தியேட்டரில் வேலை செய்வதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை காட்டியிருந்தனர். அவன் வயரிங் வேலைக்கு போவதற்கு காரணமே, அதன் காரணமாக தியேட்டரில் அவன் வேலைக்குப் போவதற்கு வீட்டில் ஒத்துக் கொள்வார்கள் என்ற ஒரே ஒன்றுக்காக மட்டுமே. மற்றபடி வயரிங் வேலையில் அவனுக்கு எந்த நாட்டமும் இல்லை. அதுவும் அந்தக் காங்கிரீட் சுவர்களுக்குள்ளால் வயர்களை கொண்டு செல்வதற்காக, அந்த சுவற்றை வெட்டுவது போன்ற ஒரு வேலையில் எவருக்குத் தான் நாட்டம் வரும். ஆனால், அவனை வேலையில் துணையாக கூட்டிப் போகும் அயலவர் சில வயதுகள் கூடியவர் என்றாலும், நல்ல ஒரு நண்பர் போன்றே பழகினார். வேலை முடிந்தவுடன் அன்றன்றே அவனுக்கான சம்பளத்தையும் கொடுத்துவிடுவார். அதில் ஒரு பகுதியை அவன் அம்மாவிடம் கொடுத்து விடுவான். பல நாட்களிலும் வேலையும் இருக்கும். சினிமாவும் தியேட்டரும் அவனுக்கு ஒரு கனவு போல. அவன் பிறந்ததே சினிமாவிற்கு என்று அவனுக்குள் ஒரு உறுதியான எண்ணம் இருந்தது. பொதுவாக சமூகத்தில் எல்லோருக்கும் இருக்கும் அளவில்லாத நாயக நாயகிகள் மீதான கவர்ச்சி அவனிடம் மிகக்குறைவாகவே இருந்தது. சினிமா என்பது வெறும் ஒரு பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, அதில் வரும் விடயங்களும், அங்கே வரும் கதாபாத்திரங்களும், அவற்றை திரையில் கொண்டு வரும் நடிகர்களும் உண்மை என்றே பலரும் எண்ணி, அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அவர்களால் முடியாத, ஆனால் அவர்கள் செய்ய விரும்பும் சில நாயகத்தனங்களை திரையில் கண்டு, அதுவேதான் தாங்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள் போல. இந்த சமூகத்தில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் தீராத கவர்ச்சிக்கு இந்த மனப்பன்மையும் ஒரு அடிப்படைக் காரணம். அவனுக்கு ஒரு திரைப்படம் எப்படி உருவாக்கப்படுகின்றது, பின்னர் அது எவ்வாறு திரையில் ஓடுகின்றது என்பதிலேயே ஆர்வம் இருந்தது. அம்புலிமாமா புத்தகத்தில் இருக்கும் படங்களை ஒரே அளவுகளில் வெட்டி, அவற்றை நீட்டாக ஒட்டி, ஒரு சுருளாகச் சுற்றி , நடுவே ஒரு ஈர்க்கை வைத்து, அதைச் சுற்றிப் பார்த்து, இப்படித்தான் சினிமா உருவாகின்றது என்று அவனாகவே பரீட்சித்துப் பார்த்திருக்கின்றான். பின்னர் சிந்தனையில் இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு படம் அளவு இடைவெளியில் இரண்டு ஈர்க்குகளை வைத்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அவனின் படச்சுருளை சுற்றிப் பார்த்தான். இது தான் சரியான தொழில்நுட்பம் என்று, அதையே இன்னும் முன்னேற்றி, பலருக்கும் அம்புலிமாமா படங்கள் காட்டியும் இருக்கின்றான். தியேட்டரில் வேலைக்கு போனவுடன், தினமும், தியேட்டரின் உள்பக்கத்தை கூட்ட வேண்டும். ஒவ்வொரு வரிசையாக கூட்ட வேண்டும் என்றில்லை. முன்பக்கம், முகாமையாளர் அறை மற்றும் தியேட்டரின் உள்ளே இருக்கும் நடைபாதைகளை கூட்டவேண்டும். அத்துடன் படம் பார்த்து விட்டுப் போனவர்கள் போட்டுவிட்டுப் போகும் கஞ்சல், குப்பை, கழிவுகளையும் அள்ளி எடுத்து, வெளியில் தியேட்டரின் பின்னால் இருக்கும் குப்பையில் கொண்டு போய் கொட்டவேண்டும். அதை விட்டுவிட்டுப் போனோம், இதை விட்டுவிட்டுப் போனோம் என்று பின்னர் ஓடி வருபவர்களும் உண்டு. அவன் நேராக பின்னால் இருக்கும் அந்த சின்ன குப்பை மலையைக் காட்டுவான். அநேகமானவர்கள் அங்கே தங்கள் பொருட்களை தேடி எடுக்காமலேயே போய்விடுவார்கள். சிலர் அவனையும் சேர்ந்து தேடச் சொல்லியிருக்கின்றனர்.சிலருக்கு அந்த இடத்தை பார்த்தவுடன் பொல்லாத கோபம் வந்து, சீறி விழுந்தும் இருக்கின்றனர். தங்களின் கதாநாயகர்களின் பின்னால், அவர்கள் உலவும் இடத்தின் பின்னால், இப்படி ஒரு குப்பை மலை இருப்பதை அவர்கள் இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. படம் ஆரம்பிப்பதற்கான முதல் மணி அடித்தவுடன், கலரிப் பகுதியில் உள்ள கதவில் அவன் போய் நிற்கவேண்டும். அங்கே வருபவர்களின் அனுமதிச்சீட்டுகளை கிழித்து, அவர்களை உள்ளே விடவேண்டும். கலரிப் பகுதியில் நீண்ட வாங்குகள் மட்டுமே போடப்படிருந்தது. தனிதனியான இருக்கைகள் கிடையாது. ஆண்கள், பெண்கள் என்ற இரு பக்கங்களும் கிடையாது. அதனால் தான் அது மிகக்குறைந்த விலையில் இருக்கும் பகுதியாக இருக்கின்றது. திரைக்கு அருகில் இந்தப் பகுதி இருக்கும். கழுத்தை நிமிர்த்தியே படம் பார்க்கவேண்டும். இந்தப் பகுதியின் பின்னால் இரண்டாம் வகுப்பு, முதலாம் வகுப்பு, ரிசர்வ் என்று மூன்று பகுதிகள் அந்த தியேட்டரில் இருந்தன. மேலே பால்கனி என்று இன்னொரு பிரிவும் இருந்தது. அதற்கான அனுமதி எல்லாவற்றையும் விட மிக அதிகம். பால்கனிக்கு அருகிலேயே, ஒரு தனி அறையில், படம் ஓடும் இயந்திரங்கள் இருந்தன. ஒரு நாள் கலரியிலிருந்து அந்த அறைக்கு முன்னேறுவதே அவனின் இலட்சியமாக இருந்தது. (தொடரும்...................)
  13. 🤣................ தெளிவாக ஒருவர் அர்ச்சுனா, அடுத்தவர் சீமான் என்று சொன்னால், இந்த திரி இன்னும் நாலு பக்கங்கள் போகுமே, அந்தப் பயம்தான்....................😜. பாக்கு நீரிணை வடக்கு, பாக்கு நீரிணை தெற்கு என்று ஒரு 'கோட் வேர்ட்' வைத்துக் கொள்ளலாம்..........🤣.
  14. 🤣.............. ஆனால் கதை 'படிக்காத' ஒரு மனிதனைப் பற்றிய சம்பவங்களே.............. கதையில் 10ம் வகுப்பின் பின் படிப்பை நிற்பாட்டிவிட்டேன். இனி என்ன செய்வது என்று இந்தக் கதை நாயகனுக்காக நான் யோசிக்கின்றேன். போராட்டத்தில் இணைவது, இறுதியில் பெரும் துன்பம் என்று நிச்சயமாக போகப் போவதில்லை...............
  15. சிலவற்றை மனம் போன போக்கில், ஒரு சிறுவன் போன்று, அர்த்தங்கள் எதுவும் இல்லாமல் எழுதுவது............... அநேகமாக அம்மாவும் அதில் வந்து சேர்ந்துவிடுவார்..........❤️. இங்கே இந்த வாரம் சில நாட்களில் மழை பெய்தது. எங்கே போய் விட்டார் இந்த சூரிய மகாராஜா, யார் இவரை ஒளித்து வைத்திருக்கின்றார்கள் என்று தேடவேண்டி இருந்தது........🤣.
  16. 👍....................... இது தான் கணக்கு. மற்றவர்கள் எல்லோருக்கும் டிபாசிட் போய் விடும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. திமுகவின் சில சமீபத்திய நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன, உதாரணம்: கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள், அண்ணா பல்கலைக்கழக விவகாரம், வேங்கைவயல் அறிக்கை,.................. ஈரோடு இனி அதிமுக கூட்டணிக்கு கிடைக்காது போல................. நாதக நாலாவதாக அல்லது ஐந்தாவதாக ஓடும் அடுத்த பொது தேர்தலில்................
  17. கர்ண பரம்பரையின் கனவு ----------------------------------------- பொழுது சாய்ந்து விட்டது போதும் விளையாடியது உள்ளே வா............. என்று இழுத்து வைத்துக் கொள்ளும் அம்மா ஏன் தான் இது எப்படி தான் இது ஒவ்வொரு நாளும் சாய்கின்றது என்று நான் விடாமல் நச்சரிக்க அதுவும் தூங்கத்தானே வேண்டும் விடிய எழும்பி வரும் வா........... என்றார் எங்கே அதன் வீடு என்றேன் அந்தப் பக்கம் என்று காலுக்கு கீழே சுட்டினார் அம்மா ஒரு நாள் நிலத்துக்கு கீழே தூங்கப் போன சூரியனை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன் அம்மா எழுப்பும் போது அது மீண்டும் அடி வானத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது.
  18. 👍.............. அதிமுக போட்டியிட்டு இருக்கவேண்டும். இடைத் தேர்தலை வெல்ல முடியாது, ஆனால் திமுகவிற்கு எதிராக இருக்கும் ஒரேயொரு மாற்று நாங்களே என்று அது தமிழ்நாடு முழுவதற்கும் சொல்லும் ஒரு செய்தியாக அமைந்திருக்கும். ஏற்கனவே தேய்ந்து தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு கட்சி இப்பொழுது இன்னும் சிதறிப் போய்விட்டது. இதில் விஜய் வேறு அடுத்த தேர்தலில் புதிதாக உள்ளே வருகின்றார்..............
  19. இனி வரும் வாரத்தில் இருந்து கனடாவோ, மெக்சிக்கோவோ அல்லது உலகில் எந்த நாடுமோ அமெரிக்காவிற்கு ஒரு முக்கிய பிரச்சனை இல்லை. அமெரிக்காவின் அவசரப் பிரச்சனை இனி உள்நாட்டில் தான். எட்டு மாத சம்பளம் கொடுக்கின்றோம், வேலையை விட்டுப் போங்கள் என்று சொன்ன பின்னும், 40000 பேரே மத்திய அரசின் வேலையிலிருந்து விலகியிருக்கின்றார்கள். அவர்கள் ஏற்கனவே இந்த வருடம் ஓய்வடையும் நிலையில் இருந்தவர்கள் தான் என்கின்றனர். அவர்கள் போகும் போது போனஸுடன் போகின்றார்கள். ட்ரம்பும் எலானும் கொடுத்த கெடு முடிந்துவிட்டது. ஆனால், ட்ரம்பும் எலானும் எதிர்பார்த்த 200000 பேர்கள் வேலையை விட்டுப் போகவில்லை. வழக்குகள் தான் போட்டிருக்கின்றார்கள். நீதிபதிகளும் அரசின் நடவடிக்கைகளுக்கு தடை உத்தரவுகளை போட ஆரம்பித்திருக்கின்றார்கள். வேறு சில விடயங்களிலும் இப்படி நீதித்துறையும், அரசும் முரண்டுபட்டுக்கொண்டு நிற்கின்றது. நான் என்ன வழக்கு போடலாம் என்று எனக்கே ஒரு யோசனை வருகுது என்றால் பாருங்களேன்................🤣.
  20. இதே தொகுதியில் நடந்த கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில்: நாதக 14000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது திமுக 5000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது நோட்டா 6000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது கடந்த தேர்தலில் வாக்களித்த ஏறக்குறைய 16000 பேர் இந்த தடவை வாக்களிக்கவில்லை. இது மொத்தமாக 41000 என்று வருகின்றது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் 44000. அதிமுக தான் கவலைப்பட வேண்டும். மற்ற எல்லாம் இருந்த இடத்திலேயே இருக்கின்றது.
  21. இவர்கள் எல்லோரும் எனக்கும் தெரிந்தவர்களே.............! ஆனால், கணேசலிங்கம் மாஸ்டரிடம் மட்டுமே படித்தேன். மற்றவர்களிடம் ஏன் போகவில்லை என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு என்று நினைக்கின்றேன் - ஒரு நோக்கமோ அல்லது வழிகாட்டலோ இருக்கவில்லை. அதைவிட முக்கியமாக பந்தடி மேல் இருந்த விருப்பம். அதிகாலையில் தீருவில் மைதானத்தில் பந்தடிப்பார்கள். அந்த நேரத்தில் தான் இந்த ஆசிரியர்களின் வகுப்புகளுக்கு நண்பர்கள் போய் வந்தார்கள். பூவா தலையா போட்டுப் பார்க்காமலேயே, நான் பந்தடி என்று முடிவு செய்துகொண்டேன். என் அதிர்ஷ்டம் எனக்குத் தெரிந்த கேள்விகளே பரீட்சைகளில் வந்தன.................. 'Slumdog Millionaire' படத்தை பார்த்த போது இது நல்லாவே விளங்கியது................🤣. 'நூறு டாலர் நோட்டில் யார் இருக்கின்றார்கள் என்ற கேள்வியைக் கேட்காமல், வேறு ஏதாவது ஒரு நோட்டில் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டிருந்தீர்கள் என்றால், எனக்கு அதற்கு பதிலே தெரியாது...............' என்பது போல ஒரு காட்சி அந்தப் படத்தில் வரும். நம்ம வாழ்க்கை இது என்று தோன்றியது...............🤣.
  22. சித்திரத்திற்கும், எனக்கும் இடையே இருக்கும் தூரம், இரண்டு நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே இருக்கும் தூர அளவை விட கொஞ்சம் அதிகம். AI இடம் கேட்டு வாங்கியே இங்கே போடுகின்றேன்.................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.