Everything posted by ரசோதரன்
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
👍............. அவருக்கு அரசியலில், அதிகாரத்தில் நாட்டம் இல்லை என்றால், அவர் போட்டிருக்கும் வழக்குகளையாவது இந்த அரசு விரைவாக வெளிப்படையாக விசாரித்து தீர்ப்பை வழங்கவேண்டும். இந்த விடயத்தில் ஷாஃபிக்கு எதிராக சதி செய்தவர்களின் பெயர்கள் ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது.
-
மூடிய என் முகம்
மிக்க நன்றி அல்வாயன். மிக்க நன்றி சுவி ஐயா. சரியாகவே சொல்லியிருக்கின்றீர்கள்............... கழிவிரக்கம் என்னும் சொல்லுக்கு அகராதிகளில் வேறு என்ன என்ன சொற்கள் இருக்கின்றன என்று தேடிய பின்னே, பரிதாபப்படுகின்றேன் என்ற சொல்லை தெரிந்தெடுத்தேன், சுவி ஐயா............👍. அது மிகக் கொடியதே, அதனால் அதை இயன்றவரை தவிர்ப்பதே நலம் என்ற ஒரு எண்ணம் முளை விடக் கூடும் என்றே நினைத்தேன்.......................
-
மூடிய என் முகம்
மூடிய என் முகம் -------------------------- என் முகமூடியை எப்போதும் நான் இறுகப் போட்டிருக்கின்றேன் அறிவு தெரிந்த அந்த நாளில் இருந்து வீட்டில் பாடசாலையில் வெளியில் வேலையில் இந்த முகமூடி எனக்கு அணியப்பட்டது நானும் இதை விரும்பி ஏற்றேன் ஆகக் குறைந்த ஒரு அடையாள மறுப்பு கூட காட்டாமல் போகுமிடம் எங்கும் இருக்குமிடம் எங்கும் கதைக்கும் இடம் எங்கும் இதை இறுக்கிக் காக்கின்றேன் இப்பொழுதெல்லாம் சில தனிமைகளில் அதை விலக்கி பார்க்கும் போது பரிதாபப்படுகின்றேன் எனக்காக தனி ஆளுமையுடன் பிறந்த உயிர் ஒன்று ஏதோ ஓர் அங்கீகாரம் விரும்பி அல்லது அகங்காரம் கொண்டு பொது ஆளுமை ஒன்றைச் சூடி முகத்தை மறைத்து முடிகின்றதே என்று.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
😌................. உங்களின் அதே வேதனை தான் எனக்கும். கடைசியில் பலரும் இவ்வளவுதானா என்று நினைக்கவைத்து விடுகின்றனர்............😌.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அப்படித்தான் முடிவுகள் தெரிவிக்கின்றன.............. இந்த தேர்தல் முறையில் இப்படியும் நடக்கும்........ முதலில் கட்சி, பின்னர் கட்சிக்குள் இருப்பவர்கள்............
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
செல்வமும் வென்றதாகவே அறிவிக்கப்பட்டிருக்கின்றது............. Vanni District NPP Selvathambi Thilakanathan – 10,652 Arumugam Jegadishwaran – 9,280 ITAK Thurairasa Ravikumar – 11,215 SJB Rishad Bathiudeen – 21,018 DTNA A Adaikkalanathan – 5,695 SLPP Cader Masthan – 13,511
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஒரே வசனத்தில் எல்லோரையும் சண்டைக்கு கூப்பிட்டிருக்கின்றீர்கள்................🤣.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
🤣............. நான் பெயரைச் சொன்னால், இங்கு களத்தில் யார் யார் வந்து என் தலையில் குட்டு வைப்பார்கள் என்று தெரியும், அண்ணா................🤣. எப்படியோ சொல்ல வந்த விசயத்தை சொல்லிவிட்டேன் தானே...........😜.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஒரு கண்துடைப்புக்கு தேர்தல் நடத்தும் நாடுகளில் வருகின்ற முடிவுகள் போலவே இந்த தேர்தல் முடிவுகளும் இருக்கின்றது....................🫣.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
🤣.......... அங்கஜனின் சொந்த ஊர்........... சுமந்திரனின் கோட்டை........... சிவாஜிலிங்கத்தின் பிறப்பிடம்............ டக்ளஸின் ஆதரவாளர்கள்............ இன்னும் பின்னோக்கிப் போய்ப் பார்த்தால்.......... பொன்னம்பலம் அவர்களின் பூர்வீகம்......... இவ்வளவு பெருமைகள் நிறைந்து இருந்தும்........ பார்ப்பம்.........
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்த வடையும் போச்சா............. இன்னும் உடுப்பிட்டி தொகுதி வரவில்லை தானே..........
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அங்கிருப்பவர்களுக்கு அங்கிருக்கும் எங்களின் அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை என்பது சரியே....... இந்த அரசியல்வாதிகள் எதற்குமே இலாயக்கற்றவர்கள், நேர்மையற்றவர்கள் என்றே எம் மக்கள் நினைக்கின்றனர்................ அதே நேரத்தில் 'இமயமலைப் பிரகடனம்' போல வெளியில் இருந்து ஏதாவது ஒன்று தீர்வு என்ற பெயரில் உள்ளே போகும் போது அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்...............
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நீங்கள் சொல்லும் இன்றும் மங்காத அந்த உணர்வு என்பது தமிழ் மற்றும் தமிழர் என்னும் மொழி இன உணர்வா அல்லது தனிநாடு அல்லது சமஷ்டி போன்ற ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்ற அரசியல் நோக்கிய உணர்வா................ இதில்தானே புலத்திலிருக்கும் எம் மக்களுக்கும், புலம் பெயர்ந்து இருப்பவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி விழுந்திருக்கின்றது.............
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஆனால் அல்வாயன் நீங்கள் அங்கிருக்கும் எங்கள் நண்பர்கள், உறவுகளுடன் கதைத்தீர்கள் என்றால், அவர்களில் பலர் நாங்களே எங்கள் பாட்டை பார்த்துக் கொள்கின்றோம் என்று தானே சொல்கின்றனர்....... ஓணாண்டியார் இதை சில தடவைகள் மிக விளக்கமாக இங்கே எழுதியும் இருக்கின்றாரே..........
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
👍.......... ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான்............ என்னுடைய ஒரு நண்பன் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப்பட்டு, பின்னர் அவர்களுடன் இருந்தான்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
55 வயதுக்குப் பிறகு இணைவதற்கு யாழ் களம் ஒரு அருமையான இடம்............. இவர்களை இங்கு வரவேற்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்...............🤣.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இது இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில், பையன் சார். 1987, 88, 89ம் ஆண்டுகளில்............. சில இயக்கங்கள் பொடியன்கள், இளைஞர்களை பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். என்னையும் ஒரு நாள் பிடித்தார்கள். பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்தேன் என்றபடியால் என்னை கூட்டிக் கொண்டு போகவில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
👍............ நீங்கள் சொல்வது சரியென்றே எனக்கும் படுகின்றது. இந்த தேர்தல்களின் முன்னர் கூட எனக்கு இப்படியான ஒரு எண்ணமே இருந்தது.............
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அந்த நாளிலேயே உங்களை ஶ்ரீதர் தியேட்டருக்கு கூட்டிக் கொண்டு போகாமல் விட்டார்களே என்று இப்ப சந்தோசப்படுங்கள்............. நான் ஶ்ரீதர் தியேட்டர் போகாமல் அன்றொரு நாள் தப்பியது அருந்தப்பு..............🤣.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது ஒரே மங்கலாக இருக்கின்றது..... நான் அநுரவைச் சொல்லவில்லை............ எங்களைத்தான் சொல்லுகின்றேன்...........
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
🤣.......... இந்த தொகுதியில் நான் டக்ளஸிற்க்காக வாக்குக் கேட்டிருந்தேன்...........
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
களத் தேர்தல் போட்டியில் நான் இந்தத் தொகுதியில் இவர்களைத் தான் தெரிந்தெடுத்திருந்தேன்.......... அங்கே அவர்கள் அப்படித்தான்.................
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்தத் தொகுதிச் சனம் சரியாகத்தான் போட்டிருக்குதுகள்................. என்ன, நமக்கு இது பிடிக்காது...........
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
🤣............. வந்து கொண்டிருக்கின்ற முடிவுகளைப் பார்த்தால், புலம்பெயர்ந்த எவரும் இனி தமிழர் சார்பாக பேசவே தேவையில்லை போலல்லவா இருக்கின்றது.............. புலத்தில் இருப்பவர்கள் தாங்களாகவே பேசி உள்ளார்கள்...........
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
🤣........... 'அடிக்கிற அலையில் சுமந்திரனாவது ம***து..............' என்று ஓணாண்டியார் மேலே எழுதி இருக்கின்றார்..... இது நீங்கள் சொன்னது போலவே அலை இல்லை.........சுனாமி. இந்த சுனாமியில் அநுரவிற்கு பழையது எல்லாம் மறந்து போய் விடுமே............... சிங்கள மக்கள் தமிழ் மக்களை விட கொஞ்சம் கூடுதலான 'எடுப்பார் கை பிள்ளைகள்'........... கொஞ்ச கார், கொஞ்ச வீடு, 16 சமையல்காரர்கள் என்று ஒரு சின்ன அசைவிலேயே இப்படி 'அரோகரா அநுரா.... அரோகரா அநுரா.........' என்று கையைத் தூக்கிவிட்டார்களே............ தமிழ் சனம் பாவங்கள்........... யாராவது கொஞ்சமாவது ஆறுதல் கொடுப்பார்களா என்று ஒன்றைத் தொடர்ந்து தேடிக் கொண்டேயிருக்குதுகள்............... இதுவாவது அதுகளுக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்கட்டும்..........🙏.