Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 👍............ வீட்டில் ஆறுதல் கிடைக்கின்றது என்பது சரியே........... ஆனால், சில வேளைகளில் அதுவே ஒரு அளவுக்கதிகமான Comfort Zone என்றாகி, வேறு எதையும் அறிய முடியாமலும் போய்விடுகின்றது. பல வருடங்களின் முன், மகனை பல்கலையில் கொண்டு போய் விட்ட முதல் நாள், அங்கு ஒருவர் புதிய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரு உரையாற்றினார். ஒரு வட்டத்தை கீறி, அதை விட்டு மாணவர்கள் வெளியே வர வேண்டும் என்று இதைப்பற்றி அவரது பேச்சு போய்க் கொண்டிருந்தது. பிள்ளைகள் மட்டும் இல்லை, பெற்றோர்களும் வட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று தான் எனக்கு விளங்கியது.................
  2. பூச்சிய மாற்றம் --------------------------- வீட்டுக் கதவினூடு வெளியேறியதும் இன்னொரு நாடு வருகின்றது எத்தனை தடவைகள் கதவைத் திறந்து நான் போய் வந்தாலும் அது பழக்கமில்லாத இடமாகவே இருக்கின்றது அதனூடு என் நாட்டிற்கு போய் என்னவர்களுடன் நான் வட்டமாக இருக்கின்றேன் விளையாடுகின்றேன் சிரிக்கின்றேன் சில வேளைகளில் நாங்கள் சேர்ந்து அழுவதும் உண்டு மீண்டும் அதே பாதையில் அந்த நாட்டை கடந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்ததும் இது தான் என் இடம் என்று மீண்டும் நிமிர்கின்றேன் வீட்டினுள் இருந்து மாற்றம் ஒன்றே மாறாதது மாறுங்கள் மாறுங்கள் என்று எழுதிக் குவிக்கின்றேன் என் எழுத்து கூட அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை.
  3. 🤣............... நீங்கள் தான் 'கணக்கு வாத்தியார் கந்தையா அண்ணை' ஆச்சே........... அது நீங்கள் இல்லை, அண்ணா......... ஒரே தொப்பியை 25 பேரும் போடப் போகின்றார்களோ..........
  4. இல்லை........ இல்லை, பையன் சார். உங்களின் தெரிவுகள் மற்றோரின் தெரிவுகள் போலவே. நான் சொன்னது வேறொரு நண்பனின்/ உறவின் தெரிவுகள்..............
  5. இலங்கையில் எவருமே மானநஷ்டஈடென்றால் ஆயிரம் கோடிகளிலிருந்து தான் ஆரம்பிப்பார்கள் போல.......... ரணிலின் ஆலோசகர் அவருடைய நண்பியின் வளர்ப்பு நாயுடன் ஏதோ செய்ததாக வந்த விடயத்திலும் அவர் நண்பியை ஆயிரம் கோடி நஷ்டஈடாக கேட்டிருந்தார் என்று ஞாபகம். பின்னர் ஹிருணிகாவையும் யாரோ ஆயிரம் கோடி கேட்டிருந்தனர். டயான கமகே ஆயிரம் கோடி கேட்டாரா அல்லது இனிமேல் தான் கேட்கப் போகின்றாரோ...... அப்படி ஏதோ ஒன்று.................. 'ஆயிரம் கோடி வழக்குகள்.............' என்று ஒரு தொகுப்பே வெளிவிடலாம் போல................🤣.
  6. 👍................ இந்தப் போட்டி எல்லாருக்குமே கொஞ்சம் சிக்கலானது தான், பையன் சார். ஆனாலும், இதுவரை வந்துள்ள 25 போட்டியாளர்களில் எவர் 25வதாக வரப் போகின்றார் என்று மட்டும் ஓரளவிற்கு தெரிகின்றது.............😀.
  7. நன்றி, பையன் சார். தோற்கும் வரை நாம தானே வெற்றியாளர்..........🤣. அந்த கிரிக்கட் களப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக கொடி பிடித்தது போல, இந்தப் போட்டியில் ஒரு தமிழ்க் கட்சிக்கு எதிராக கொடி ஏற்றியிருக்கின்றேன்............ என்னுடைய அதிர்ஷ்டப்பிரகாரம் அவர்கள் தோற்கப் போகின்றார்கள்..............😜.
  8. 🤣.................. ஒரு மாதிரி இழுத்து இழுத்து வெட்டி விட்டேன், அண்ணை. சொல் கேட்ட அக்கணமே புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி.......... என்ன உரு எடுக்க வேண்டுமோ அந்த உரு எடுத்து............ காலால் இட்ட பணிகளை தலையால்............. அடுத்த பிறவியில் செய்வதாக உள்ளேன்........😜.
  9. @கந்தப்பு இவை என்னுடைய தெரிவுகள். போட்டியை ஒழுங்கு செய்து நடத்துவதற்கு மிக்க நன்றி.................❤️. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) ஆம் 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) இல்லை 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி, 3 இடங்கள் 28) வன்னி தமிழரசு கட்சி, 3 இடங்கள் 29) மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி, 3 இடங்கள் 30)திருமலை ஐக்கிய மக்கள் சக்தி, 2 இடங்கள் 31)அம்பாறை ஐக்கிய மக்கள் சக்தி, 4 இடங்கள் 32)நுவரெலியா ஐக்கிய மக்கள் சக்தி, 5 இடங்கள் 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி, 4 இடங்கள் 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி, 11 இடங்கள் 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) ஶ்ரீதரன் 38) மானிப்பாய் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 39) உடுப்பிட்டி தமிழரசுக் கட்சி 40) ஊர்காவற்றுறை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி 41) கிளிநொச்சி தமிழரசுக் கட்சி 42) மன்னர் தமிழரசுக் கட்சி 43) முல்லைத்தீவு தமிழரசுக் கட்சி 44) வவுனியா ஐக்கிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி 46) பட்டிருப்பு ஐக்கிய மக்கள் சக்தி 47) திருகோணமலை ஐக்கிய மக்கள் சக்தி 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 8 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 6 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54)தமிழரசு கட்சி 11 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 1 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 80 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 11
  10. 🤣.............. வீட்டுக் கோழி வளவுக்குள்ளேயே சுத்திச் சுத்தி வருகிறது போல சில நாட்களில் என்னுடைய பகல் நேரங்களில் யாழ் களத்துக்குள் சுற்றிக் கொண்டே இருக்கின்றோம்................. வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் போக வேண்டிய கட்டாயம் இப்ப...........😌. அங்கே பாயுடன் போக முடியாது...........🤣. இலங்கையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போது அலுவலகத்தில் இருக்கப் போகின்றனே என்ற கவலை........... பார்ப்பம், படைத்தவன் கைவிட மாட்டான்............
  11. புரிகின்றது நிழலி. அதுவும் சரிதான், கோஷான். 🤣................ எப்போதாவது அப்படியே எதிர்ப்புகள் அதிகமாகி சமாளிக்கவே முடியாமல் போனால்........... இங்கு கவிதை கவிதைகளாக, கதை கதைகளாக எழுதித் தள்ளி விடுவேன், நீங்கள் வாசித்தே ஆக வேண்டும் என்று பயம் காட்டுவதாக உள்ளேன்......😜.
  12. 🤣........... பார்ப்பவை பலதும் அப்படியே படங்களாக மனதில் ஓரளவிற்கு நிற்கும், அல்வாயன்........... அதை வைத்து தான் என் காலமே ஓடிக் கொண்டிருக்கின்றது. எம்ஜிஆர் சிலை இருக்கும் இடத்தில் அவரைத் தவிர வேறு எவருக்கும் இடம் இல்லை........ அந்தப் பகுதியை உங்களுக்கு தெரியும் தானே...... ஆதிசக்தி விளையாட்டுக் கழகம்........ நல்லவர்களுக்கு மட்டுமே அவர்கள் நல்லவர்கள்..............
  13. மிக்க நன்றி, ஓணாண்டியார். நீங்கள் நல்ல ஒரு ரசிகரும் கூட, உங்களின் எழுத்தைப் போலவே..........👍.
  14. 7, 12, 5, 6 இலிருந்து 7, 12, 6, 6 ஆகியிருக்கின்றது.....................
  15. நீங்கள் போடுவதற்கு முன்னும், போட்ட பின்னும், நான் போட்டதற்கு பின்னிருந்த எண்ணிக்கையில் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கின்றது..............🤣.
  16. 🤣............ போன தேர்தலில் இவர்களின் கட்சியில் கிழக்கு மாகாணத்தில் வகுப்புத் தோழன் ஒருவன், தமிழ் தான், நின்று தோற்றான் என்று முன்னர் சொல்லியிருந்தேன் அல்லவா........... இந்த தடவை அந்த நண்பனுக்கு சந்தர்ப்பமே வழங்கப்படவில்லை........ இப்படியே பல விடயங்களிலும் உள்ளவற்றில் சரியான முடிவை அவர்கள் எடுப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கை இருக்கின்றது..............😜.
  17. என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன். இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என் தாய்மொழிக்கோ எதிரானவன் இல்லை. ஆனாலும், எவராலும் அங்கு எந்த விதமான அரசியல் தீர்வுகளும் வரும் என்று நான் நம்பவில்லை. இந்த நம்பிக்கையின்மை மிக உறுதியாக எனக்குள் வளர்ந்து நிற்கின்றது. அவர்களில் எவரும் ஒரு கிராமம் தன்னும் கொடுப்பார்கள் என்று நான் நம்பவில்லை, வியாசரின் கதையில் வருவது போலவே. முழு இலங்கை மக்களும் ஒரு புதிய திசை நோக்கி நகர்வதற்கு இந்த மாற்றம் தேவை என்பதாலேயே இந்த தெரிவை நான் எடுத்தேன்.
  18. 👍.......... உங்கள் தெரிவை வெளியால் சொல்ல முடியும் என்றால், நீங்கள் சொன்னால், கோஷான் கணக்கில் சேர்த்துக்கொள்வார்...............
  19. விசுகு ஐயா, நீங்கள் வாக்களிக்காமல் முடிவுகளை ஒரு தடவை, கவனிக்காமல், பார்த்து விட்டீர்கள் என்று நினைக்கின்றேன். ஒரு மெசேஜ் வந்திருக்கும், அதை நீங்கள் கவனிக்கவில்லை போல.
  20. மிக்க நன்றி கொழும்பான். நீங்கள் சொல்லியிருப்பவர் போன்ற சில மனிதர்களை இங்கு கண்டிருக்கின்றேன். அவர்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைகள் எல்லாம் என்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் ஆகிவிட்டது போல ஒரு உணர்வு. சரத்சந்திர சட்டோபாத்யாய என்று நினைக்கின்றேன். மேற்கு வங்காள எழுத்தாளர். மிகப் பிரபலமான 'தேவதாஸ் - பார்வதி' கதையை எழுதியவர். ஒரு காலத்தில் இவர் ஒரு பெரிய நட்சத்திரம் என்று சொல்கின்றனர். இவர் இவரின் கடைசி நாட்களில் ஒரு மாணாக்கருக்கு எழுதிய கடிதம் ஒன்றை பல வருடங்களின் முன், என் இளமைக் காலத்தில், வாசித்திருக்கின்றேன். உங்களுக்கு இருக்கும் யோசனையே அவருக்கும் இருந்தது............. இது எங்கள் எல்லோருக்கும் என்றோ வரும் போல.................
  21. 🤣......... அதுவே தான், கோஷான். அவர் மெத்தப் படித்தவர், உலக ராஜதந்திரி அப்படி இப்படி என்று......... ஆனால் அந்த ஆளோ அட்ரஸ் கேட்டு விட்டு, அடுத்தவன் சட்டையை கிழித்து எறிகின்ற நிலைக்கு இப்ப வந்துவிட்டார்.............. சிங்கள மக்கள் சிலிண்டருக்கு வாக்கும் போடப் போவதில்லை........... அடுத்த கிழமை ஆள் முழுப்பைத்தியம் ஆகப் போகின்றார்...............
  22. நான் இதை எழுதிப் போட்டு விட்டு, என்ன பதிவுகள் புதிதாக வந்திருக்கின்றது என்று பார்க்க உங்களின் 'ஆடியடங்கும் வாழ்க்கையடா............' இருந்தது...............🤣.
  23. எவர் தான் அமெரிக்காவின் அதிபராக வந்தாலும், ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்காவின் சொல்லை ஏன் கேட்க வேண்டும்............... இது ஒரு அடிப்படைக் கேள்வி அல்லவா. புடினின் நோக்கம் என்று ஒன்று இருக்கின்றது. அதை அடையாமல் அவர் ஓயப் போவதில்லை. ஆகக் குறைந்தது தன்னுடைய நோக்கத்தை அடைந்து விட்டேன் என்று அவர் சொல்லிக் கொள்ளும் வரை இந்தச் சண்டை நடந்து கொண்டேயிருக்கும். உக்ரேனுக்கு இது தங்கள் மண்ணை காப்பாற்றுவதற்கான ஒரு போராட்டம். இன்னும் நீண்ட தூரம் போகும், அமெரிக்கா என்ன தான் செய்தாலும், செய்யா விட்டாலும்..........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.