Everything posted by ரசோதரன்
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
இப்படி ஒன்று இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கின்றது: சங்கி என்றால் சகதோழன், நண்பன் என்று தான் அர்த்தம் --- சீமான். வாராய்............நீ வாராய்........... --- சரத்குமார். விஜய் மட்டும் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது சினிமாவை விட்டு அரசியலுக்கு வரவில்லை. தானும் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலுக்கு வந்ததாகவும் சொல்லியிருக்கின்றார் சரத்குமார்...................😮.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
🤣................ வாழ்த்துகள் பிரபா, வாதவூரான், வாலி................... வாலிக்கு விருப்பத் தெரிவு அடிப்படையில் இன்னுமொரு வாழ்த்து.............🤣. 🤣...................... சும்மா இருக்கின்ற அந்த மனுசனை போய் வம்புக்கு இழுக்கின்றது................... அப்புறம் அந்த ஆள் வந்து சீமானைத் தான் அடி அடி என்று அடிக்கப் போகின்றார்............ நீங்கள் அந்த சீமான் - ரஜனி திரியில் சேதம் பெரிதாக இல்லாமல் தப்பி இருப்பதே உங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம்.................🤣.
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
👍.............. சில இடங்களில் சமைப்பார்கள் என்று தான் கேள்விப்பட்டிருக்கின்றேன். எங்கள் ஊரில் கடல் ஓரமாக அலை அடித்து ஈரமாக இருக்கும் மண்ணை காலால் சலித்தாலே உள்ளிருந்து மட்டிகள் வரும். சில மட்டிகள் பெரிதாகவே இருக்கும்.
-
குப்பையிலிருந்து குப்பை
👍................ தனியார் துறைகளும் இதையே முயலக்கூடும்.............. ஏற்கனவே 'ஹைபிரிட்' முறை ஒன்று தனியார் துறைகளில் வந்துவிட்டது. இரண்டோ மூன்றோ நாட்கள் அலுவலகம், மிகுதி நாட்கள் வீட்டிலிருந்து வேலை என்று. தனியார் துறைகளில் திறமைக்கு கொஞ்சம் கூடுதலான ஒரு மதிப்பு இருக்கின்றது. திறமையுள்ளவர்களை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக சில விட்டுக் கொடுப்புகளை அவர்கள் செய்வார்கள்.
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
பழக்கம் இல்லாவிட்டால் இவற்றை சாப்பிடுவது முடியாத ஒரு காரியம் தான்........... அருவருப்பும், ஒவ்வாமையும் இருக்கும்................👍. மஞ்சள் என்றவுடன் ஞாபகத்தில் வந்த ஒரு நிகழ்வு. நாங்கள் பல நண்பர்கள் ஒரு ஒன்றுகூடலை திருகோணமலைப் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கே முதல் நாள் மட்டி வறுவல் செய்து கொடுத்திருந்தார்கள். எக்கச்சக்கமான மஞ்சள் மற்றும் மசாலாக்களும் போட்டு. யாழ்ப்பாணத்தில் நாங்கள் மட்டி அவ்வளவாக சாப்பிடுவதில்லை. கடலோரம் பிறந்து வளர்ந்த நான் கூட சும்மா விளையாட்டாக சில மட்டிகளை சுட்டுச் சாப்பிட்டிருக்கின்றேனே தவிர கறியாகவோ அல்லது வறுத்தோ சாப்பிட்டதில்லை. ஆனாலும் எங்களில் சிலர் 'நாங்கள் பார்க்காத மட்டியா..............' என்று அள்ளி அள்ளிச் சாப்பிட்டனர். அவர்கள் வெளிநாடுகளில் பார்க்கும் மட்டியும், அந்தச் சூப்பும் வேறு, எங்களூர் மட்டியும், எங்கள் சமையலும் வேறு என்று நான் சொல்ல முயன்றும் பலனில்லை. அதன் பின்னர் சிலர் அறைக்கு ஓடினவர்கள் ஓடினவர்கள் தான்................ மூன்று நாட்களின் பின்னரே ஓட்டம் நின்றது.................🤣. அதில் ஒரு நண்பன் மூன்று நாட்களாக அறைக்குள் அடைப்பட்டுக் கிடந்ததில், எங்கள் எல்லோருக்கும் பலத்த சந்தோசம்...............🤣.
-
குப்பையிலிருந்து குப்பை
அது மட்டுமா, அண்ணை.............. காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி மட்டும் வேலை செய்ய வேண்டுமாம்............. நல்ல காலம், இவர்கள் யோசிக்கும் இந்தப் புது நடைமுறைகள் எல்லாம் மத்திய அரசாங்க வேலைகளுக்குத் தான்............... அரசாங்க வேலைகளுக்கு ஆட்கள் போவதற்கு காரணமே அப்படியே அப்பளத்தை காயப் போட்டுவிட்டு பார்த்துக் கொண்டிருப்பது போல சும்மா அப்படியே சாய்ந்திருக்கலாம் என்று தான்........... ஆனால் இப்ப இந்த எலானும், விவேக்கும் அவர்கள் எல்லோரையும் வீட்டுக்கும், ஆஸ்பத்திரிக்கும் அனுப்பாமல் ஓயமாட்டார்கள் போல...........
-
குப்பையிலிருந்து குப்பை
🤣............ அமெரிக்க தேர்தல் முடிவுகள் ஒரு சலிப்பு தான்............ ஆனால், இங்கு 'He is not my president...........' என்ற ஸ்டிக்கர்களுடன் கார்கள் தெருவில் போய் வந்து கொண்டிருப்பதால், அந்த சலிப்பு நீங்கிக் கொண்டிருக்கின்றது. இலங்கை தேர்தல் முடிவுகள் எனக்கு பெரும்பாலும் சந்தோசமே........... அந்த ஒரே ஒரு டாக்டரை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது............ அவருக்காகவே இது எழுதியது........... 👍............. ஒன்றிரண்டு குண்டுமணிகளும் வரும் தான், அண்ணா.......... மிச்சம் எல்லாம் குப்பையிலிருந்து குப்பை தான் வருகின்றது................... garbage in, garbage out.................
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
🤣.................. யாழ் களத்தில் இந்த அடு பத் கூட்டத்திலிருந்து இன்னும் பலர் இருக்கின்றார்கள்............. நீர்வேலியான், வாதவூரான்,............ எங்கள் எல்லோருக்கும் மேலே தில்லை ஐயா............ ஊரில் வீட்டில் குடல்கறி சமைத்திருக்கின்றார்கள். ஏதோ ஒரு பத்தியக்கறி போல பக்குவமாக கழுவிச் சமைப்பதாக ஒரு ஞாபகம். ஆடு அடிக்கும் நாட்களில் இது நடந்திருக்கின்றது. இங்கும் நண்பர்கள் சிலர் சேர்ந்து ஆடு அடிக்கும் போது, இந்தக் குடல்கறி சமைப்பார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் அடுவுக்கு மேல் அடு எடுத்துச் சாப்பிடும் சிலர் இருப்பார்கள். அப்பொழுது ஒரு அடு ரூபா 1.50 என்று நினைக்கின்றேன். என்னுடைய வகுப்பிலும் இருந்தார்கள். அதில் ஓரிருவர் இப்பொழுது அடிக்கடி டயட்டில் இருக்கின்றார்கள்.......................🤣. நாங்கள் சிலர் அப்பவே டயட்டில் இருந்தோம்................🤣.
-
குப்பையிலிருந்து குப்பை
குப்பையிலிருந்து குப்பை --------------------------------------- நல்ல எழுத்தா........... அதை யார் வாசிப்பார்கள் ஏதாவது கேளிக்கையாக இருந்தால் சொல் என்றோம் முடிவு: இன்றைய எழுத்து எதுவும் நாளை நிற்காது. கலைப் படமா.................. இருக்கிற பிரச்சனை போதாதா ஜனரஞ்சகமா ஏதாவது வந்தால் சொல் என்றோம் முடிவு: வந்தது கங்குவா. அரசியல்வாதியா............ அவர் நல்ல பகிடி ஆளும் பார்க்க நல்லா இருக்கின்றார் அவரே பிரதிநிதி என்றோம் முடிவு: எல்லாமே பகிடி எதுவுமே வெற்றி இல்லை. கருத்துச் சொல்கின்றாயா......... அதெல்லாம் போதும் ஏதாவது சிரிக்க சிரிக்க இருந்தால் சொல் என்றோம் முடிவு: தினம் ஒரு மீம்ஸ். அடுத்த தலைமுறையா............ அவர்கள் தான் உருப்படாதவர்கள் ஆயிட்டுதே எல்லாமே போய் விட்டதே இனி என்ன செய்வது என்கின்றோம். உள்ளே போவது தான் வெளியே வருகின்றது.
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
😮............... அந்த இடம் நன்றாகவே ஞாபகத்தில் இருக்கின்றது, ஜஸ்டின். ஆனால் நான் இந்தக் குடல் கறியை ஒரு நாளேனும் சாப்பிட்டதில்லை. ஒரு நாள் இந்த இடத்தில் தான் என்னுடைய வகுப்பு தமிழ் மாணவர்கள் இருவருக்கு அடி விழுந்தது. ஜேவிபியினரின் பகிஷ்கரிப்பையும் மீறி எங்களில் சிலர் வகுப்பிற்கு போனதாகச் சொல்லியே அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த இருவரை போட்டுத் தாக்கினார்கள்.............
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
👍................... நிதி விரய விடயத்தில் மிகவும் அக்கறையுடன் இருப்பார்கள் என்றே தோன்றுகின்றது.......... இன்று வெள்ளிக்கிழமை, நீங்கள் கொட்டுக்கொளவை ஞாபகப்படுத்தி விட்டீர்கள், இன்றைக்கு விரதமாகவே போகட்டும்............🤣.
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
இலங்கையில் பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படப் போகின்றது என்று ஒரு தகவல் வந்தது. பின்னர், தாங்கள் அதை மூட மாட்டோம் என்று ஜேவிபியினர் உறுதியளித்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தக் கூட்டம் எங்கே போனாலும் அங்கே காண்டீனில் கைவைத்து, சமூகநீதியை நிலைநாட்டாமல் விடமாட்டார்கள் போல.....................🤣. https://www.dailymirror.lk/breaking-news/NPP-MP-assures-Parliament-canteen-will-not-be-closed-Harsha/108-296557#
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இறுதி முடிவை z-score இல் அறிவித்து விடுவோம்...........🤣.
-
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது அமெரிக்காவில் வழக்கு
இதையே சாட்டாக வைத்து அநுரவின் அரசாங்கமும் அதானியின் மன்னார் காற்றாலை திட்டத்தை ரத்துச் செய்யலாம் தானே.....................என்று நாங்கள் நினைக்கக்கூடும், ஆனால் அது நடக்காது. இந்திய அரசாங்கமே அதானியைக் கைவிட்டால், அதன் பின் இலங்கை அதானியின் திட்டத்தை ரத்துச் செய்யக் கூடியதாக இருக்கும். ஆந்திரா, தமிழ்நாடு, ஜார்கண்டு என்று மூன்று மாநில அரசுகளின் பெயர்கள் தான் லஞ்சம் வாங்கியவர்களின் பட்டியலில் இருக்கின்றது போல.............. அமெரிக்கா லஞ்சம் வாங்கியவர்களின் பெயர்களை வெளியே விட்டால், திமுகவிற்கும் நெருக்கடி இருக்கின்றது.....................
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
🤣................. வன்முறையான வழிகள் ஒன்றையும் நீங்கள் பிரேரிக்கவில்லை தானே, விசுகு ஐயா.................... உரிமைக்கும், பிச்சைக்கும் இடையேயான கோடு அப்பப்ப இடம்மாறிக் கொண்டேயிருக்கின்றது, சிறி அண்ணா..................
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
🤣............... இராஜாங்க அமைச்சர்கள் தான் இல்லை என்று சொன்னார்கள், விசுகு ஐயா. பிரதி அமைச்சர்கள் இருப்பார்கள் என்று தான் சொன்னார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட இந்த எண்ணிக்கை அதிகமே. எங்களின் நிர்வாக முறையில் இந்த எண்ணிக்கை வேண்டுமே. ஆட்சிக்கு வெளியில் இருக்கும் போது எதையும் சொல்லலாம், உள்ளே வந்த பின் தான் தெரியும் எவை எவை நடைமுறையில் சாத்தியமானவை என்று..................... இது ஒரு விதத்தில் குறைநிரப்பும் ஒரு வழியும் தான், ஆனால் இஸ்லாமியர்களின் குறை நிரப்பப்படவில்லை என்றே தெரிகின்றது............
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
தமிழ் என்று தான் விபரங்களில் இருக்கின்றது. ஆனால் சிங்கள மொழியில் கைதேர்ந்த ஜேவிபியினர் போன்றே பேசுகின்றார். The winds of change blew even stronger in Trincomalee, where a young Tamil comrade, Arun Hemachandra, an indefatigable JVP volunteer—achieved a historic victory. His triumph was not anchored in ethnic loyalties but was instead secured through the overwhelming support of Sinhala and Muslim voters. Given that the electorate had already elected an ITAK MP from the same district in this election, it was mathematically impossible for the Tamil vote alone to secure another Tamil MP for Trincomalee. It is, therefore, clear that Sinhala and Muslim voters played a decisive role in elevating Arun Hemachandra as their Member of Parliament, heralding a remarkable shift towards inclusive and collaborative politics. https://slguardian.org/north-and-east-bid-farewell-to-rhetoric-tamil-nationalism/
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
🤣............... பெருந்தோட்டத்துறைக்கும் ஒரு தமிழர் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றார் - சுந்தரலிங்கம் பிரதீப். அங்கே நிச்சயம் ஒருவர் வேண்டும் தானே.............. திருகோணமலையில் அருண் தான் மிக அதிக வாக்குகள் பெற்றிருந்தார் - 38, 368. Trincomalee District NPP Arun Hemachandra – 38,368 Roshan Akmeemana – 25,814 SJB Imran Maharoof – 22,779 ITAK Shanmugam Kugathasan – 18,470
-
கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு!
கமல் என்னும் நடிகர் மீது எனக்கு நல்லதொரு அபிப்பிராயம் இருக்கின்றது, வளவன். பார்வையாளர்களை நம்பி பல நல்ல படங்களில் நடித்திருக்கின்றார். நீங்கள் சொல்லியிருப்பது போலவே சில கூட்டணிகளில் இன்னும் நல்லாவே செய்திருக்கின்றார். ஆனாலும் பல படங்கள் தலையை சுத்தியும்விடும். விஸ்வரூபம் - 2, இந்தியன் - 2 , மன்மதன் அம்பு, உத்தம வில்லன்,................. இப்படி பல. சில படங்கள் மிகச் சிக்கலானவை - குணா, ஹே ராம்,............. போன்றவை. என்ன ஆனாலும் இவரின் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைத்து இவரின் படங்களுக்கு போவேன். சில படங்களுக்கு ஒரு படம் நல்ல தரமாக இவரிடம் இருந்து வந்துவிடும் என்ற அந்த ஒரே நம்பிக்கையில்............... *********************************** நாங்கள் இருவரும் 'ஹே ராம்' பார்த்துக் கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட இப்படி நடந்தது: 'ஏங்க, இது ஹிந்திப் படமா.............' 'இல்லை, பெங்காலி................' 'என்ன............... பெங்காலிப் படமா.............' 'இல்லையனை, அவர்கள் பெங்காலியில் கதைக்கிறார்கள் என்று சொல்ல வந்தேன்...........' 'அப்ப தமிழில் கதைக்க மாட்டார்களா...........' 'வங்காளத்தில் பெங்காலியில் தான் கதைப்பார்கள்..............' நான் என்னுடைய வீட்டுக்காரியின் முகத்தை படம் முடியும் வரை பார்க்கவேயில்லை. படம் முடிய, எனக்கு அவர் பதிலாக சொன்ன வசனம் - இனி கமல் படம் என்றால் நான் வரவேமாட்டேன்.......🤣.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
👍.............. குமார் குணரட்ணம் இன்று ஜேவிபியிலிருந்து விலகி Frontline Socialistic Party என்று ஒன்றை நடத்துகின்றார் என்று நினைக்கின்றேன். சமீபத்தில் ஒரு பல்கலையில் ஜேவிபியினருக்கும், குமாரின் ஆட்களுக்கும் இடையில் தகராறு ஆகியது என்று செய்திகளில் இருந்தது. ஆமாம், அவர்களின் அடையாளத்தை ஏற்றுக் கொண்டாலே அங்கே அவர்களில் ஒருவராக முடியும். அந்த அடையாளத்தை அவர்கள் இலங்கையர்கள் என்னும் அடையாளம் என்கின்றனர், ஆனால் அது உண்மையில் அப்படியான ஒன்றில்லை, மாறாக அது ஒரு சிங்கள பௌத்த அடையாளமே என்பது வெளிப்படையே. தமிழ்நாட்டில் தமிழிசையின் பேச்சுகளை, பேட்டிகளை கேட்டிருப்பீர்கள் தானே............... சங்கடம், அருவருப்பு இப்படி பலதும் கலந்த ஒரு உணர்வு வரும். இலங்கையிலும் அப்படியான சிலர் முன்னரும் இருந்தவர்கள், புதுதாகவும் சிலர் உருவாகின்றனர் போல.................
-
கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு!
🤣............... 'பாபா'வா நீங்கள் கடைசியாக தியேட்டரில் போய் பார்த்தது...............🤨. இப்படியே தப்பி தப்பி இருந்தால் இது என்ன நியாயம்.................. நாங்கள் அதற்குப் பிறகும் ஒரு நூறு இருநூறு துன்பக்கேணிகளில் விழுந்து விழுந்து நீந்திக் கொண்டே இருக்கின்றோம்........... இந்தியன் 2 இல் தாத்தா எங்களைக் கதற விட்டார் என்றால், கங்குவாவில் அவர்களே கதறுகின்றார்கள்.......... ஆனால் நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்........... அடுத்தது என்ன தல படமா............🤣.
-
கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு!
கங்குவாவிற்கு காட்டும் எதிர்ப்பை ஒரு கவுன்சிலருக்கு காட்டுவதில்லையே என்று சொல்வது அவ்வளவு சரியான ஒரு உவமையாக, ஒப்பீடாகத் தெரியவில்லை. ஒரு நாயகனின் நாலு படங்கள் ஓடினாலே புரட்சி, செம்மல், தளபதி என்று வகைவகையாக பட்டங்களும் கொடுத்து, அடுத்த முதலமைச்சர் என்று கொண்டாடுவதும் இதே மக்களே. அவர்கள் ஒரு நல்ல கவுன்சிலருக்கு இந்தப் பட்டங்களும் கொடுப்பதில்லை, கவுன்சிலரை அடுத்த முதலமைச்சர் என்று சொல்வதும் இல்லை. கொடுக்கும் போது அளவுக்கதிகமாகவே கொடுக்கின்றனர், பின்னர் எடுக்கும் போதும் பறித்து எடுத்துக் கொள்கின்றனர். இந்த தொழிலில் இருக்கும் அபாயம் இது. தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கும் இதே அளவு அபாயம் இருக்கின்றது. நன்றாக விளையாடினால் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள், இல்லாவிட்டால் 'வீட்டுக்கு போ..................' என்று கல்லெறிவார்கள். ஒரு கடையில் அரிசி நன்றாக இல்லை என்றால், மக்கள் அங்கே அரிசி நன்றாக இல்லை, அங்கே போகாதே என்று தான் சொல்லுவார்கள். அது போலவே இந்த வியாபார நோக்கில் எடுக்கப்பட்டு சந்தைக்கு வரும் சினிமாக்களுக்கும் நடக்கின்றது.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நன்றிகள் வாதவூரான்....................👍. எங்களின் காலத்தில் பின்னால் அந்த விடுதி இருந்திருக்கவில்லை என்றே நினைக்கின்றேன். ஒரு சின்ன மண்மலை இருந்ததாக ஞாபகம். அந்த இடத்தில் கட்டப்பட்டதற்குத் தான் நிஷ்மியின் பெயர் வைத்துள்ளனர் போல................. எங்களின் காலத்தில் அக்பருடன் நியூ விங்க் மற்றும் சி-குவாட்டர்ஸ் என்பன இருந்தன.
-
கரண்ட் வந்தது
மிக்க நன்றி மோகன் அண்ணா...................🙏. ஒரு பொழுதுபோக்கிற்கு பத்தோடு பதினொன்றாக இருக்கட்டும் என்றே யாழில் இணைந்தேன்............... கடைசியில் இப்போது இது இல்லாவிட்டால் மூச்சு விடுவதே கொஞ்சம் சிரமமாக இருக்கின்றதே..........🤣.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
அமைச்சரவையில் இஸ்லாமிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்றோ, அல்லது இலங்கைத் தமிழ் பிரதிநித்துவம் வேண்டும் என்றோ ஜேவிபியினர் உளமார நினைக்கப் போவதில்லை. அவர்கள் அவர்களின் 'தோழர்களை' மட்டுமே அதிகாரம் உள்ளவர்களாக ஆக்குவார்கள். இது எந்த இடதுசாரிப் போக்கு உள்ள அமைப்புகளுக்கும் பொருந்தும். மற்றவர்கள் அவர்களுக்கு ஆதரவாக, அனுதாபிகளாக மட்டுமே இருக்கலாம். ஆனாலும் ஒரு ஜனநாயக ஆட்சியில் பலரின் பிரதிநிதித்துவமும் வேண்டும் என்ற ஒரு அரசியல் சரிநிலைக்காக சில பிரதி அமைச்சர் பொறுப்புகள் இந்த இரண்டு சமூகங்களுக்கும் வழங்கப்படும் என்றே நான் நினைக்கின்றேன். 'அக்பர் ஹால்' என்னும் ஒரு இடம் பற்றி இங்கு சிலருக்கு தெரிந்திருக்கும். கோஷானும் சமீபத்தில் வேறொரு திரியில் இதைக் குறிப்பிட்டிருந்தார். இது பேராதனை பொறியியல் பீட மாணவர்கள் தங்கும், வசிக்கும் இடம். இந்த ஹாலையும் இதைச் சுற்றி இப்போது புதிதாக கட்டப்பட்டவற்றையும் ஜேவிபியினர் 'நிஸ்மி ஹால்' என்றே அழைக்கின்றனர். நிஸ்மி என்பவர் 80ம் ஆண்டுகளில் அவர்களின் மாணவர் தலைவராக இருந்து அன்றைய அரசால் காணாமல் ஆக்கப்பட்டவர். அன்று அவர் அநுரவிற்கு பல படிகள் மேலே. நிஸ்மி ஒரு சிங்களவர் இல்லை, அவர் ஒரு இஸ்லாமியர். தமிழ், சிங்களம் இரண்டு மொழிகளிலும் மிகச் சிறந்த பேச்சுத் திறமை கொண்டவர் என்கின்றனர். ஒரு மிகப் பெரிய ஆளுமை என்றும் சொன்னார்கள். அவர்களில் ஒருவராக இருந்தால், எவரையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நினைக்கின்றேன்.