Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. மண்டியிடும் மன்னர்கள் ------------------------------------- இரண்டு சிறு குழந்தைகளுடன் இருவர் நாங்கள் இந்த வீட்டிற்கு அநேக வருடங்களின் முன்னொரு நாள் குடி வந்தோம் பன்னிரண்டு வீடுகள் உள்ள தெருவில் பதினொரு மன்னர்கள் குடி இருந்தனர் சில மன்னர்கள் பேசினர் சிலர் வெறும் புன்னகை மட்டும் சிலர் எங்களைக் காணவேயில்லை அடைமழை நாளென்றில் கடும் காற்றில் என் முன் நின்ற பெரும் மரம் காற்றின் முன் மண்டியிட மறுத்து முறிந்து விழுந்தது மன்னர்கள் ஓடி வந்தனர் அவர்கள் வீடுகளுக்கும் சேதமில்லை என் வீட்டிற்கும் சேதமில்லை எல்லோரும் மீண்டும் போய் விட்டனர் வந்த வழியே ஓங்கி வளர்ந்து உள்ளே ஆழ வேர் விட்டு நித்தியம் என்று நின்ற மரங்களே பொத்தென்று விழ இங்கே மன்னர்கள் மட்டும் நிலைக்கவா போகின்றார்கள் மூப்பும் நோயும் பிணியும் பிரிவும் காலத்தில் வர அவர்கள் எவ்வளவு மண்டியிட்டும் காலம் விடவில்லை பதினொரு மன்னர்களையும் மாமன்னன் அலெக்சாண்டரே கடைசியில் மண்டியிட்டாராம் இந்த தெருவில் இப்போது நான் ஒரு மன்னன்.
  2. அவர் இலங்கைப் பல்கலைக்கழகம் போய், பின்னர் சட்டக் கல்லூரி பரீட்சை எழுதினார் என்று தான் விபரங்கள் இருக்கின்றது, கோஷான். நீங்கள் சொல்வது சரியானதே, இலங்கையில் பல்கலைக்கழகம் போவதென்பது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. இன்றாவது ஓரளவு பரவாயில்லை, பல வருடங்களின் முன்னர் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இலங்கையில் நான்கு வருட பல்கலைப் படிப்பு முடிந்தவுடன் ஒரு சில மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அனுமதியும், காமன்வெல்த் நிதியுதவியும் கிடைக்கும். உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் பொறியியல் பீடத்தில் இருந்து ஒருவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். பேராசிரியர் துரைராஜா, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன போன்றோர் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு கேம்பிரிட்ஜ் பல்கலையில் மேற்படிப்பை படித்தவர்கள். இந்த வகையில் வருடத்தில் ஒரே ஒருவர் என்னும் போது அதற்கு தகுதியடைபவர் மிகச் சிறப்பானவர் என்று இலங்கையில் கருதப்படுகின்றது. ரணிலையும் இந்த வகைக்குள் கொண்டுவர முயற்சிப்பதையே நான் மேலே சொல்லியிருந்தேன்...............
  3. முரளி சாக்கு ஊசியால் அர்ச்சுனாவிற்கு ஒரு குத்து இன்னும் குத்தல்லையே என்ற தேடலுடனேயே முரளியின் பதிவை வாசித்துக் கொண்டே வர.............. கடைசிப் பந்தியில் விஷ ஊசியால் குத்து விழுந்திருக்கின்றது................🤣.
  4. இவர் இலங்கையில் மட்டும் தான் படித்து பட்டம் பெற்றார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் கௌரவ பட்டம் ஒன்றை பின்னர் வழங்கியிருந்தது. ஆக்ஸ்ஃபோட்டில் கேட்டார்கள், கேம்பிரிட்ஜில் கேட்டார்கள்............ என்று 'கரகாட்டக்காரன்' கோவை சரளா போல அவரது ஆதரவாளார்கள் கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்...........🫣.
  5. 👍............ நாகேஷ், சந்திரபாபு, தனுஷ் இவர்கள் மூவரும் பிறவி நடிகர்கள், கலைஞர்கள் போல என்று நினைத்துக் கொள்வேன்...................
  6. வர வர வாயால் வாந்திபேதி போகிறது போல இருக்கின்றது ரணிலின் மேடைப் பேச்சுகள்................🫣.
  7. உங்களை மறக்க விடமாட்டீர்கள் போல......... இந்த மாதம் வந்தால் அப்படியே வெளியே வந்து நிற்கிறீர்களே......... ட்ரம்ப் அதிபராக வந்ததன் ஒரு அனுகூலம் உங்களிடமிருந்தும் மற்றும் இங்கிருக்கும் இன்னும் சில அமைப்புகளிடமும் இருந்து இங்கிருப்போர் தப்பியது................. சமஷ்டி எல்லாம் சரிப்பட்டு வராது, தனிநாடு மட்டுமே ஒரே ஒரு தீர்வு, இந்தா காங்கிரஸிற்கு போகின்றோம், அந்தா செனட்டுக்கு போகின்றோம், இதோ புதிய அரசியலமைப்பை எழுதிக் கொண்டிருக்கின்றோம்.......... இப்படியான கதைகள் அடுத்த நாலு வருடங்களுக்கு இங்கு அவ்வளவாக எடுபடாது.
  8. என்னுடைய வீடு தென் கலிஃபோர்னியாவில் கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு நகரில் இருக்கின்றது, வளவன். குளிர் மிகவும் குறைந்த, பல மாதங்கள் வெப்பமான உலர் காலைநிலை உள்ள இடம், பனி விழுவதே இல்லை. ஓரளவிற்கு எங்களின் ஊர் போலவே. இங்கு பலரின் வீடுகளில் எங்களின் மரங்கள், தாவரங்கள், பூச்செடிகள் பலவும் உள்ளன. பெரிய இரண்டு முருங்கைகள், மா, பலா, கொய்யா, வாழை, நாவல், மாதுளை, பப்பாசி, கறி வேப்பிலை, தேசி என்று பல மரங்கள் இங்கு என் வீட்டில் நிற்கின்றன.............
  9. மிகவும் அழகாக இருக்கின்றது........... அதனாலேயே நம்ப முடியாமல் இருக்கின்றது. ஒட்டு நாவல் மரம் ஒன்று இங்கு வீட்டில் வைத்திருக்கின்றோம். முதல் வருடத்திலிருந்தே நன்றாகவே காய்க்கின்றது, தாய் மரம் வேறொரு வீட்டில் காய்த்துக் கொண்டு நின்றதே. ஆனாலும் வீட்டில் மரத்தின் புதிய கிளைகள் சவண்டு சவண்டு விழுகின்றன. அந்த மரத்தை ஓரளவு தான் எங்களால் ஏமாற்ற முடிந்துள்ளது போல...............🤣.
  10. 🤣............. கவிஞரே, எல்லா தேசங்களிலும் ஒரே கதை....... எல்லா வீடுகளிலும் ஒரே கதை............ முழு உலகமுமே ஒரே ஒரு கதையால் மட்டும் தான் ஆனதோ..............
  11. வாருங்கள் செவ்வியன். உங்கள் வரவு நல்வரவாகுக! செவ்வியல் கலைகள், படைப்புகள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன். செவ்வியன் என்னும் பெயரைக் கேட்பது இதுவே முதல்முறை. அழகான ஒரு பெயர்...........👍.
  12. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். அன்னாருக்கு என்னுடைய அஞ்சலிகள்............🥲.
  13. அண்ணா, பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, இறக்குமதி வரிகளைக் கூட்டி அமெரிக்கப் பொருட்களின் சந்தையை அகலமாக்கி வேலை வாய்ப்புகளை வழங்குவது, பதிவுகள் இன்றி நாட்டில் தங்கியிருக்கும் பதினொரு மில்லியன் மக்களை வெளியேற்றி வீடுகளின் விலைகளை குறைப்பது, இன்னும் அதிக துளைகள் போட்டு மலிவு விலையில் எரிபொருட்கள் வழங்குவது, ........... இப்படியானவற்றை நம்பித்தான் இங்கு வாக்களிக்கப்பட்டது. நேட்டோ, ரஷ்யா, இஸ்ரேல் இவை போன்ற சமாச்சாரங்களுக்காக அல்ல. இங்கு உள்ளூரில் இவை போதைக்கு தேவையான ஊறுகாய்கள் போல மட்டுமே. எதுவும் முன்னரும் நடக்கவில்லை. எதுவும் இனியும் இவர்களால் நடக்கப் போவதில்லை. அதுவாக உலக ஒழுங்கில் நடந்தால், அவரவர் என்னால் தான் நடந்தது என்று சொல்லி பெருமைகளை அடுக்கிக் கொள்ளலாம். பில் கிளின்டனுக்கு கிடைக்காத பெருமைகளா............ எங்கள் வீட்டுப் புல்லை நாங்களே வெட்டினால் தான் உண்டு........ இங்கு அநேகமாக எல்லோரும் மாதம் 50 டாலர்கள் கொடுத்து புல்லு வெட்டிக் கொள்கின்றனர். வெளியேற்றப் போகின்றோம் என்று சொல்லப்படும் அந்த பதினொரு மில்லியன் மக்கள் தான் இவர்களின் புற்களை மாதம் 50 டாலருக்கு வெட்டிக் கொடுக்கின்றனர். திறமை அடிப்படையில் இங்கு முறையாகக் குடியேறியவர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்கள் புல்லு வெட்டும் மெஷினுடன் வெளியே வரட்டும்........எனக்கும் ஒரு கூட்டணி வேண்டும் தானே..........😜.
  14. புல்லை வெட்டுங்கோ ---------------------------------- நாலு நாள் ஆகிவிட்டது ஒவ்வொரு குழாயின் கீழும் அண்டா குண்டா என்று வைத்து தேனும் பாலும் இனி வீடு தேடி வரும் என்றனர் வைத்த அண்டாவும் குண்டாவும் அப்படியே காத்து வாங்கிக் கொண்டு காத்துக் கிடக்கின்றன தேன் எப்ப வரும் பால் எப்ப வரும் என்று கொஞ்சம் முன்னரே சொன்னால் தனி தனியே பிடித்து வீடு முழுக்க வைத்துக் கொள்வேன் எட்டு வருடம் முந்தியும் வரும் வரும் என்றீர்கள் வரவே இல்லை கடைசி மட்டும் பின்னர் நீங்கள் போய் விட்டீர்கள் இப்ப வந்து விட்டீர்கள் இந்த தடவை என்றாலும் ஓட விடுங்கள் பாலையும் தேனையும் 'ரெண்டு கிழமையா புல்லு வெட்டல்ல புல்லை வெட்டுங்கோ...........' உள்ளிருந்து வந்தது எப்பவும் அன்பாக அதட்டும் ஒரே குரல் கற்பனை கலைந்தது.
  15. 🤣.......... உங்களுக்கு கனடாவில் சூரனுடனும், ஐயருடனும் நின்ற சிலரை தெரிந்திருக்கும் என்றே நினைக்கின்றேன்............ நீங்கள் ஒரு பகுதிநேர துப்பறிவாளர்.........😜. முக்கியமாக ஐயர் விழும் போது ஐயருக்கு பக்கத்தில் நின்றவர்........ 'ஏண்டா, ஐயரை தள்ளி விட்டாய்.........' என்று இப்பொழுது சில இடங்களில் அந்த ஆளை பகிடி பண்ணுகின்றனர். 'அரை மண்டியில் ஆயத்தமாக நில்லுங்கோ...........' என்று செட்அப் வாலிபாலில் ஒரு நாள் நான் சொல்ல, 'இது என்ன இன்றைக்கு புதுசா ஒன்று..........' என்பது போல பல பார்வைகள் தான் பதிலாக வந்தது.............😄.
  16. 🤣............ உண்மையிலேயே விஜய் வாழ்த்துச் சொன்னார் என்ற செய்தியினால் தான் சீமானின் பிறந்தநாள் என்பது எனக்குத் தெரியவந்தது. சீமான் இணைய உலகில் ஒரு அரசன், ஆனால் விஜய் அதே இணைய உலகில் ஒரு சக்கரவர்த்தி. இவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்த்து ஒரு மூச்சு விட்டாலே இணையம் கலகலக்கின்றது..... விஜய்யின் காலண்டரை யாரோ நிரப்பி வைத்திருக்கின்றார்கள் போல. தற்போதைய நிலையில் சசிகலாவின் பிறந்தநாளுக்கு கூட ஒரு வாழ்த்து சொல்லி வைத்துக் கொள்வார்........... 'எந்த ஏழு பேர்...............' என்று ரஜனி போல 'லூஸ் டாக்' எதுவும் விடாமல் கவனமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றார்.............
  17. 🤣............... கூமுட்டை என்றபடியால் மஞ்சள் கருப்பகுதி கொஞ்சம் சிதைந்து இருக்க வேண்டும் போல.............😜.
  18. ஆண்கள் ஏன் மேலாடை அணியக் கூடாதென்ற வழக்கத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு. அவை எதுவுமே இன்றைய உலகத்திற்கு பொருந்துபவை அல்ல மற்றும் அறிவியல் காரணம் என்று கூறப்பட்டுள்ள ஒன்று மிகத் தவறான ஒரு வகை விஞ்ஞான விளக்கம். ஆனால், ஒருவர் இன்னொருவர் மீதோ அல்லது ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினர் மீதோ சேறடிப்பதற்காகவே இந்த விளக்கங்கள் பயன்படும் என்றால் அந்தக் காரணங்களை இங்கு எழுதாமல் விடுதலே நலம் என்று நினைக்கின்றேன். இதே போல உலகம் முழுவதும் நடைமுறைகள் உண்டு. மொத்த மனித குலமுமே ஆராய்ந்து, அறிந்து கைவிட வேண்டிய வழக்கங்கள் இன்னும் நிறையவே எங்கும் உண்டு. இவை காலப்போக்கில் கைவிடப்படுவதும் நடந்து கொண்டிருக்கின்றது.
  19. இராசவன்னியர் அவர்களின் மகன் திலீபனுக்கும், மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துகள்1!
  20. 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.
  21. இன்னும் ஒரு 12 மணி நேரத்தில் எல்லாவற்றையும் எண்ணி முடித்து அறிவித்தும் விடுவார்கள். உண்மையில் 12 மணி நேரம் தேவையில்லை, ஏனென்றால் கலிஃபோர்னியாவை எண்ணினால் என்ன, எண்ணாவிட்டால் என்ன........... யார் வென்று வந்தாலும், நாளைக்கு அதே பொழுது தான் எங்கும் விடியப் போகின்றது என்பது தான் நிஜம்......... பங்குச் சந்தை கீழே போய் மேலே வரும். பங்காளிச் சண்டைகள் இவர்கள் இருவரால் ஓயாது. அவைகளாக நின்றால் தான் உண்டு............ 🤣.......... அவருக்கு அவ்வளவு வயசில்ல.................
  22. 🤣............... குடும்பஸ்தர் ஆனாலே இப்படியான ஒரு சிக்கல் இருக்கின்றது போல........... முந்தி என்னத்தை மிக நல்லாகச் செய்தோமோ, அதை இப்ப செய்ய முடியாது & செய்யக் கூடாது. முந்தி நல்லாகச் செய்த அந்த விசயத்தை ரசித்து, பிடித்து தான் மனையாள் மனைக்கு வந்திருப்பார்........... ஆனால் பின்னரும் அதையே செய்து கொண்டு இருக்கக்கூடாது...................🙄. (இதே அர்த்தத்தில் அராத்து வேறொரு இடத்தில் இப்படி எழுதியிருந்தார் ...............)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.