Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. சிபாரிசு செய்த அரசியல்வாதிகளின் பெயர்கள் விசாரணையின் பின்னர் வெளியிடப்படும் என்று அரசு இன்று அறிவித்திருக்கின்றது: https://www.dailymirror.lk/breaking-news/Government-assures-to-release-names-of-politicians-who-recommended-issuing-of-liquor-licenses/108-297490
  2. 🤣................ இலங்கையில் இந்த வரிசையில் வேறு எவராவது கோதபாயவை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வருவதென்பது மிகவும் கஷ்டமான ஒரு விடயம்............ நாடு, நகரம், குடும்பம் என்று எதையும் மிச்சம் வைக்காமல் முடித்தவர் அவர்........... அனுமார் கூட அசோகவனத்தை தவிர்த்தே இலங்கையை தீயிட்டுக் கொளுத்தினார்............
  3. பையன் சார், அரிஸ்டாட்டில், பிளேட்டோ வரிசையில் ஒரு தத்துவஞானியாக வளர்ந்து வருவோம் என்று பார்த்தால், கவுண்டமணி செந்திலுக்கு பின்னர் ஒரு இடைவெளி வந்து விட்டது, அங்கே தான் நான் நிற்கின்றேன் என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள்......................🤣. நீங்கள் சொல்வது போலவே இன்றைய வீரர்கள் மின்னல் வேகத்தில் அடிக்கின்றார்கள், எப்படி எப்படி எல்லாமோ அடிக்கின்றார்கள்........ 'லப்பர் பந்து' படம் பார்த்தீர்களா.............👍. அந்த நாட்களில் ஆஸ்திரேலிய வீரர்கள், டேவிட் பூன், ஷேன் வார்ன் போன்ற ஓரிருவரைத் தவிர, மிகவும் சிறப்பான உடற்தகுதியுடன் இருந்தார்கள். கரீபியன் வீரர்கள் இயற்கையிலேயே அப்படி இருந்தார்கள்............ எங்களின் அர்ஜூன பந்தைப் பார்த்து பார்த்து நடந்து கொண்டு திரிந்தார், இன்னும் பலரும் அப்படியே. இப்பொழுது பொதுவாக எல்லா நாடுகளின் வீரர்களும் நல்ல உடற்தகுதியுடனேயே இருக்கின்றார்கள்.......
  4. விக்கினேஸ்வரன் ஐயாவின் கன்னியுரையில் தானே 'நாங்கள் தான் இந்த தீவின் ஆதிக்குடிகள். தமிழ் ஆதி மொழி.............' இப்படியான கருத்துகள் இருந்தன. அவர் மூன்று மொழிகளிலும் 'வெளுத்து வாங்குவார்' எனறும் சொன்னார்கள் அன்று. ஸ்திரமற்ற நிலைகளும், சிறுபிள்ளைத்தனமான செய்கைகளுமே அர்ச்சுனாவின் பெரிய பலவீனங்கள். இவைகளிலிருந்து முன்னேறி, பலன் கருதாது உண்மையிலேயே மக்களுக்கு ஏதாவது செய்தார் என்றால் மக்கள் கொடுத்துவைத்தவர்கள்......................
  5. பிரச்சனை வரலாம் என்றாலே அது வந்து விட்டது என்று தானே அர்த்தம்..................🤣. இங்கும் அவர்கள் ஓரளவிற்கு அப்படியே. கிரிக்கட்டில் காட்டும் ஈடுபாட்டை வேறு எந்த விளையாட்டிலும் காட்டமாட்டார்கள்.
  6. 🤣...................... வெளியால் வந்தால் அரைக் கிலோ கறுப்புச் சாயம் அடித்துக் கொண்டு வருகின்ற மகிந்த, மைத்திரி, துரைமுருகன் அல்லது நாலு விக்குகளை மாற்றி மாற்றிப் போடும் ஸ்டாலின் போன்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டேன் போல..............🤣. அதை விட்டால் ஜோ பைடன் அல்லது ட்ரம்ப்.................. நம்ம தோஸ்து பரவாயில்லை தானே................😜. இந்த அரசியல்வாதிகள் தினமும் எவ்வளவு நேரம் ஒப்பனைக்காக செலவிடுகின்றார்கள் என்ற ஒரு கேள்வி எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளேயும் இருக்கின்றது............. முக்கியமாக ஸ்டாலின் & மகிந்த.............
  7. 🤣............ கிரிக்கட் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆன பின், இங்கு களத்தில் நடந்த டி-20 போட்டியினால் அந்த நேரத்தில் கிரிக்கட் பார்த்தேன். ரோகித்தை அப்பதான் பார்த்தேன். அவர் ஒரு சூப்பர் பாட்ஸ்மேன் என்றார்கள். ஆனால் ஆளைப் பார்த்தால், ஆளின் தோற்றம் அன்னதான மடத்திலேயே படுத்திருந்து சாப்பிடுகிறவர் மாதிரி இருந்தார். இதென்னடா....... இந்தக் காலத்தில் எல்லா வீரர்களும் நல்ல ஃபிட்டா இருப்பார்கள் என்று சொன்னார்களே, இந்த மனுஷன் ஏன் இப்படி (என்னை விடக் கேவலமாக............🤣) இருக்குதே என்றுதான் நினைத்தேன்..................
  8. 🤣................ ஆள் அம்சமாகத்தான் இருக்கின்றார்.............. தேர்தலிற்கு முன் நிலாம்டீன் இவர் பார்க்க விஜய் போலவே இருக்கின்றார் என்றும், அது தான் கூட்டம் வடக்கிலும், கிழக்கிலும் அள்ளுது என்றும் சொல்லியிருந்தார். ஆனால், வாக்குகள் என்னவோ சஜித்திற்குத் தான் என்ற மாதிரியும் சொன்னார். கடைசியில் சனம் அம்சமான ஆளுக்கே வாக்குகளையும் அள்ளிப் போட்டுவிட்டது.................... படித்தவர்கள் கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் என்று பலவற்றையும் வெறும் கணக்குகளாக மட்டுமே பல நேரங்களில் பார்த்துவிடுவார்கள். முன்பொரு காலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தண்ணீர்ப் பிரச்சனைக்கு தீர்வாக ஒரு கணக்கு சொன்னது போல.......... நடைமுறைச் சிக்கல்களையும், மனிதர்களின் உள்ளங்களையும் தோழர்கள் புரிந்து நடந்து கொண்டால் முழு நாட்டிற்குமே நல்லது. முதலாவதாக டட்லி போன்ற அரிசி மாஃபியாக்களை சரியாகக் கையாள வேண்டும். இன்றைக்கு இது தான் அங்கு முக்கிய பிரச்சனை. சந்தையில் இரண்டு கிழமைகளுக்கு போதுமான அரிசியே இருக்கின்றது என்கின்றார்கள்................
  9. 🤣............ இல்லை, அண்ணன் இப்போது கிழக்கில் நிற்கின்றார். பேச்சு வெறும் பேச்சாக மட்டுமே இருக்கும்............🤣.
  10. இன்று வெள்ள நிவாரணப் பொருட்கள் வாங்க விழுப்புரத்திலிருந்து சென்னையிலிருக்கும் பனையூர் போய் வரிசையில் நிற்க வேண்டி வந்ததிற்கு அவர் தான் மூலகாரணம்...................🫣. எங்களுக்கு கருணாநிதியின் மேல் இருக்கும் வெறுப்பில், எம்ஜிஆர் தெய்வம் ஆகிவிட்டார்.
  11. உண்மை தான், பையன் சார், இன்றைய உலகில் அமெரிக்க மட்டுமே ஒரேயொரு ஆதிக்க வல்லரசாக இருப்பதே அதற்கான காரணம். சோவியத் யூனியனின் வீழ்ச்சி உலகின் சமநிலையை ஒரு பக்கம் சரித்துவிட்டது. இன்றைய நிலையில் இன்னொரு ஆதிக்க வல்லரசு உருவாகவும் போவதில்லை. சீனாவும், ரஷ்யாவும், ஐரோப்பிய ஒன்றியமும் அங்கங்கேயே நின்று கொண்டு இருக்க வேண்டியதுதான். ஒரு பிரதேச நாடுகள் ஒன்றாகக் கூடி, தங்களைத் தாங்களே பலமானவர்களாக ஆக்கிக் கொள்வது மட்டுமே சாத்தியமான ஒன்றாகத் தெரிகின்றது. எங்களிடம் என்ன வளம் இருந்திருந்தாலும், அது முடிய எங்களை நடுத்தெருவில் விட்டிருப்பார்கள், அது எந்த வல்லரசு என்றாலும். சியாரோ லியோன் போல ஆக்கிவிடுவார்கள்.
  12. அமெரிக்க அரசியல் மட்டும் இல்லை, உலக அரசியலே இப்படித்தான், பையன் சார்................. இலங்கையில் கூட இப்படித்தான் செய்கின்றார்கள். சஹ்ரானின் கதையைப் பாருங்கள், அச்சு அசலாக நீங்கள் சொல்லியிருப்பது தான் அது. எந்த நாடும், எந்த தலைவர்களும் தங்கள் சுய இருப்பையும், சுயலாபத்தையும் தவிர்த்து பரோபகாரிகளாகவோ அல்லது உலகப் பொதுநலம் நாடுபவர்களாகவோ இங்கு இல்லை. அமெரிக்காவின் பக்கம் நிற்பவர்கள் அமெரிக்கா செய்வதைக் கண்டும் காணாமல் இருப்பார்கள். ரஷ்யாவின் பக்கம் நிற்பவர்கள் ரஷ்யா செய்வது எல்லாம் சரி என்பார்கள். ஈரான் அந்தப் பெண்ணுக்கு செய்ததைக் கூட நாங்கள் சரி என்போம், ஏதோ ஒரு காரணத்திற்காக நாங்கள் ஈரானின் பக்கம் நின்றால்.....................😌.
  13. பகலில் போட்டியை வைத்தாலும் நாங்கள் போகிறது இல்லை........... அது தான் இரவில் இரகசியமாக வைக்கின்றார்களோ............... இரகசியங்களை இரவில் செய்து கொள்வது வழக்கம் தானே.............🤣. டி 20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு நியூயோர்க் மைதானத்திற்கு வந்த பிட்ச் அடிலேட்டில் இருந்தே கொண்டு வரப்பட்டது என்று ஒரு ஞாபகம். வேற ஒன்றும் வேண்டாம்............. அதே பிட்சை இப்பவும் போடுங்கோ................ ஒரு விக்கட் இலவசம்..................🤣.
  14. 🤣............ அந்த நாட்களில் கோவில் திருவிழாக்களில் கலர் கலரான மட்டைக் கண்ணாடிகள் விற்பார்கள். விலை சில சதங்கள் மட்டுமே. ஒரு தடவை சிவப்புக் கண்ணாடி ஒன்றை வாங்கி போட்டுப் பார்த்தால், பப்பாசி மரம் கூட சிவப்பாகத் தெரிந்தது. அப்படி ஒரு கண்ணாடியுடனேயே இப்பொழுது வாழ்கின்றோம் போல...................
  15. நீங்கள் கெத்து தான், அக்னி.....................👍. இங்கு போனவாரம் ஒரு நீண்ட விடுமுறை. பலர் சில தடவைகள் சந்தித்துக்கொண்டோம். அலசப்பட்ட ஒரு தலைப்பு: இரட்டைக் குடியுரிமை. ஆனால் ஒருவரும் எடுக்கமாட்டோம்.............. சும்மா ஒரு பொது அறிவுக்காகக் கதைத்தோம்................😜.
  16. சீமானின் வெருட்டல்களுக்கு பனையூரில் கூட ஒரு அசைவும் இருப்பதில்லை, இதில் நீங்கள் திமுக பயப்படுகின்றது என்கிறீர்கள்...................... திமுக ஒரு திமிங்கிலம், அதிமுகவும் ஒரு திமிங்கிலமாகத்தான் இருந்தது............ சீமான் நாங்கள் மீன்வறை செய்கின்ற சின்ன பால்சுறா............... வருகிற தேர்தலில் பனையூர்காரங்களே அந்தச் சுறாவை வறையாக்கி விடுவார்கள் போல...................😜.
  17. 🤣.............. அதெல்லாம் கரெக்டா பார்த்து, கரெக்டான இடங்களில் இருந்து கொள்வோம்.................. இப்ப கூட செவ்வாய் கிரகம் தான் திறம் என்று சொன்னார்கள் என்றால், எலான் மஸ்க்கின் ராக்கெட்டுக்குள்ளே அவருக்கே தெரியாமலேயே நாங்கள் இருப்போம்..............
  18. ஆச்சரியம் தான், நம்மவர்கள் அநுர மீது காட்டும் பரிவும், ஆதரவும். நான் மானசீகத் தேர்தலிலும், களத் தேர்தல் போட்டியிலும் அநுரவையே தெரிந்தெடுத்திருந்தேன். ஆனாலும் தமிழர் பிரதேசங்களில் தமிழரசுக்கட்சியையே தெரிந்தெடுத்திருந்தேன். அப்படித்தான் நடக்கும் என்று முற்றாக நம்பியும் இருந்தேன். நம்மவர்கள் அநுரவை தள்ளியே வைப்பார்கள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் நடப்பவை தலைகீழாக நடந்து கொண்டிருக்கின்றன.................😶.
  19. பனையூரில் பத்து கிலோ அரிசி கொடுக்கின்றார்கள். அங்கே போய் வரிசையில் நிற்கின்றோம்................🫣. சர்வதேசங்களும் கோமாளிகளால் நிறைந்து இருக்குதே, ஏசப்பா...............😌.
  20. வெள்ளத்திற்குள் நின்று ஒரு வீடியோ வரப் போகுதோ என்று நினைத்துக் கொண்டிருக்க, 'டீச்சர், இவன் நுள்ளிட்டான்..................' என்று ஒன்று வந்திருக்கின்றது...............🫣.
  21. சதுரங்க வேட்டை ----------------------------- இது கதையில்லை, செய்திதான். ஆனால் கதைகளை மிஞ்சும் செய்தி. இன்றைய டெயிலி மிர்ரரில் இருக்கின்றது. அனுராதபுரத்தில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வயது 70. அவர் தன்னிடம் இருந்த ஒரு டிராக்டரை 29 இலட்சம் ரூபாய்களுக்கு விற்றார். டிராக்டரை வாங்க வந்தவர்களில் ஒருவர் தான் ஒரு சோதிடர் என்று அந்தச் செல்வந்தருக்கு சொன்னார். இந்த வீட்டில் உள்ள தோட்டத்தில் ஒரு பெரும் புதையல் புதைக்கப்பட்டு இருப்பதை தன்னால் உணரக்கூடியதாக இருப்பதாகவும், அதை எடுப்பதற்கு தான் அந்தச் செல்வந்தருக்கு உதவுதாகவும் சொன்னார். சோதிடர் அன்றிரவு யாருக்கும் தெரியாமல் செல்வந்தரின் தோட்டத்தில் சில போலி இரத்தினக்கற்களை புதைத்தார். அடுத்த நாள் இன்னொருவருடன் அங்கே போனார். அவருடன் கூடப் போனவர் ஒரு பாம்பாட்டி. அவர்கள் ஏற்கனவே ஒரு பாம்பை செல்வந்தரின் தோட்டத்தில் விட்டு வைத்தும் இருந்தனர். அந்தப் பாம்பு தான் புதையலைக் காக்கும் சக்தி என்று செல்வந்தருக்கு சொன்னார்கள். பின்னர் புதைத்து வைத்திருந்த போலி இரத்தினக்கற்களை எடுத்துக் கொடுத்தனர். அதன் பெறுமதி நான்கு கோடி ரூபாய்கள் என்றனர். சோதிடரின் பங்காக 50 இலட்சம் ரூபாய்கள் கேட்டனர். மிகவும் மகிழ்ந்திருந்த செல்வந்தர் கையில் டிராக்டரை விற்று வைத்திருந்த 29 இலட்சம் ரூபாய்களை அவர்களிடம் கொடுத்து விட்டு, மிகுதியை இரத்தினக்கற்களை விற்ற பின் கொடுப்பதாகச் சொன்னார். சோதிடர் செல்வந்தரை இரத்தினக்கற்களை ருவான்வெலிசாயவிற்கு எடுத்துப் போய் ஒரு பூஜை செய்யும் படி கேட்டுக்கொண்டார். தான் ஒரு சில நாட்களில் திரும்பி வருவதாகவும் சொன்னார். போன சோதிடர் போனது தான்.................... அவர் திரும்பி வரவேயில்லை. இரத்தினக்கற்களை ஒரு நகைக்கடைக்காரர் பார்த்து, போலிக் கற்கள் என்று சொன்னார். அனுராதபுர போலீசார் இப்பொழுது சோதிடரையும், பாம்பாட்டியையும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். கேள்வி என்னவென்றால், இந்த செல்வந்தர் எப்படி 70 வயதுகள் வரை எங்கும் ஏமாறாமல் ஒரு செல்வந்தராகவே இருந்தார் என்பதே............. https://www.dailymirror.lk/top-story/Astrologer-cheats-businessman-of-Rs-2-9Mn-with-fake-treasure-scam/155-297301
  22. பிறநாடுகள் பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் இங்கு அமெரிக்காவில் கதவைத் தட்டியவுடன் கதை முற்றும் முடிந்துவிடுகின்றது. அதன் பின் அவர்கள் எங்கேயும் நெருப்பாக நிற்கமுடியாது. முகநூல் கணக்கையே மூடிவிட்டுப் போக வேண்டியதுதான்................. பெயரில் கூட நெருப்பு, அக்னி இப்படி எதுவும் இருந்தால், அதையும் எடுத்து விடவேண்டும்.............🤣.
  23. 👍............... பயன்படுத்திய தேயிலையை ஒரு சின்ன மலையாக வீட்டில் குவித்து வைத்திருக்கின்றார் பொறுப்பாளர்...... இப்பொழுது தான் காரணம் புரிகின்றது...............🤣.
  24. ஒன்றாகப் பயணித்து இருந்தால் சிலவற்றையாவது அடைந்து இருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்துகள் எதுவுமில்லை, கோஷான். ஆனால் இரண்டு விடயங்கள் என்றுமே சிக்கலாக இருக்கின்றன. முதலாவது, புலம்பெயர் சமூகத்தின் எல்லையும், பங்களிப்பும். புலம்பெயர் சமூகம் நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்ற தோரணையில் தாயக மக்களுடன் பயணிப்பதை அவர்கள் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள போவதில்லை. எந்தப் பிரதேச மக்களும் இன்னொரு பிரதேச மக்களின் அதிகாரப் போக்கை ஏற்றுக்கொள்ளவேமாட்டார்கள். சூழ்நிலைகளால் சிலவேளைகளில் அவர்கள் ஒரு குறுகிய காலப்பகுதியில் ஏற்றுக் கொள்கின்றார்கள் போன்று தெரியலாம், ஆனால் இது நீடிக்காது. இன்று இதுவே அங்கு நடக்கின்றது. இரண்டாவது, புலம்பெயர் சமூகம் கேட்கும் சுயநிர்ணய கோட்பாட்டின் அதிகார அலகு. கோட்பாடு என்ற வகையில் இதில் தப்பேதும் இல்லை, ஆனால் விளைவாக நடைமுறைச் சாத்தியம் அற்ற அதிகார அலகு ஒன்றை தீர்வாக முன்வைப்பதால் ஆகப்போவது எதுவுமில்லை. உதாரணமாக, இங்கு அமெரிக்காவில் இருக்கும் சில சிவில் அமைப்புகள் சில மாதங்களின் முன் சமஷ்டி தீர்விற்கு உடன்படோம், தனிநாடு மட்டுமே தீர்வு என்று கையெழுத்து வாங்கினார்கள். இதை என்னவென்று சொல்வது....................
  25. போனாப் போகுது ஒரு உருளைக்கிழங்கு தானே................ இரகசியமாக தேய்த்துப் பார்க்கின்றேன், இங்கே மழைக்காலம் இப்ப...................🤣. ஆயுர்வேத, மூலிகை, இயற்கை வைத்தியங்கள் என்று மனிதர்களுக்கு சொல்லப்படும் ஆலோசனைகளின் சாயல் இவற்றில் தெரிகின்றது.................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.