Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ரசோதரன்

  1. போர் என்று தெரிந்தும் எம்மவர்களோ அல்லது எந்த அந்நியர்களும் அதை ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்தும் தொழிலாக நினைத்து அதில் ஈடுபடுவதை நம்புவதற்கு கஷ்டமாக இருக்கின்றது. அமெரிக்காவில் இப்படியான நிறுவனங்கள் இருக்கின்றன............... உலகெங்கும் இருக்கின்றன போல................... சுதந்திரத்திற்கான போர், உரிமைக்கான போர் அல்லது தன் நாட்டிற்கான போர் போன்றவற்றில் ஈடுபடுவதை நான் சொல்லவில்லை.
  2. நீங்கள் சொல்வது விற்பனைக்கான அல்லது வியாபாரத்துக்கான விளம்பரங்கள் அல்லது முன்னேற்ற நடவடிக்கைகள் போன்ற ஒன்றை. இதன் பின்னால் இலாப நோக்கம் ஒன்று இருக்கும். பொதுவாகவே இவை பொய்கள் தான், அதனால் தானே விளம்பரங்கள் தேவைப்படுகின்றன................ நம்பிக்கைகள் ஞாயிறு காலைகளில் என் கதைவை தட்டுபவர்களிடம் உள்ளவை. அவர்கள் தீர்க்கமாக நம்புகின்றார்கள், கண்களைப் பார்த்திருக்கின்றேன். எங்களையும் அவர்கள் நம்புவதை நம்பும்படி அவர்கள் சில வேளைகளில் வாதிடுகின்றார்கள், சில வேளைகளில் மன்றாடுகின்றார்கள்.
  3. ஏமாந்த கடிகாரம் ----------------------------- கையில் கட்டுவதெல்லாம் கடிகாரமே என்னும் பழைய ஒரு பிறவி நான் கடிகாரம் ஒன்றும் இருந்ததும் இல்லை எந்த வேளையிலும் இரவலாகவும் கட்டினதும் இல்லை மாமனார் கொடுத்த ஒன்று தங்கம் போல தகதகத்தது கல்யாணம் முடிந்த அன்றே கழட்டி வைத்தேன் இப்ப அது எங்கேயோ மாமாவிற்கு கடைசிக் காலத்தில் இதுவும் ஒரு கவலை ராத்திரி ஆழ்ந்த தூக்கம் இல்லை என்கின்றான் ஒருவன் எப்படி என்றால் அவனின் கடிகாரம் சொன்னது என்கின்றான் விளையாட்டின் நடுவிலேயே அய்யோ........... இதயம் எக்கச்சக்கமாக துடித்து விட்டது என்று அலறுகின்றான் இன்னொருவன் அதுவும் கடிகாரம் தான் சொன்னது ஐம்பது வயதுக்காரான் நாற்பத்து ஐந்தே என்கின்றான் ஆதாரம் அவனின் கடிகாரம் அது நாற்பத்து ஐந்து என்றே காட்டுகின்றது எத்தனை ஆயிரம் அடிகள் எத்தனை கலோரிகள் இப்படி அளவேயில்லாத அளவு கணக்குகளை கைகளில் கொண்டு திரிகின்றனர் நான் ஓடும் போது நண்பன் ஒருவன் அவனின் கடிகாரத்தை கட்டி விட்டான் வரும் எண்களை அவன் எங்கோ கொடுக்க வேண்டுமாம் ஆதாரத்துடன்.
  4. புலத்தில் இருக்கும் தமிழர்களோ அல்லது புலம் பெயர்ந்த தமிழர்களோ அப்படியான ஒரு அழுத்தத்தை இலங்கை அரசின் மீது ஏற்படுத்தும் பலம் இல்லாதவர்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். இது ஏலவே தேய்ந்து இன்று ஒரு கட்டெறும்பு, சிற்றெறும்பு நிலைக்கு வந்துவிட்டது. பல கருத்துகளை கருத்துகள் சொல்பவர்களின் நம்பிக்கைகளாகவும், அந்த நம்பிக்கைகளை தாங்கி நிற்கும் ஒரு வகைப் பிரச்சாரங்களாகவும் தான் எடுக்கவேண்டும் போல. ஒரு மதப் பிரச்சாரம் போல.
  5. நாங்கள் இருக்கும் நாட்டின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு முடிந்ததை முழுமனதுடன் செய்தோமே, கந்தையா அண்ணா........ 2009ம் ஆண்டுகளில் எத்தனை நாட்கள் இங்கிருக்கும் அமெரிக்க மத்திய அரச செயலத்தின் முன் நின்றிருக்கின்றோம். அங்கே அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று எங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கவேண்டும். அதற்கு அருகிலேயே எல்லா நாட்டுத் தூதரகங்களும் இருக்கின்றன, இலங்கைத் தூதரகம் உட்பட. இலங்கைத் தூதரகத்திலிருந்து ஆட்கள் வந்து எங்களைப் படமெடுத்துக் கொண்டு போவார்கள். ஒருநாள் இலங்கை தூதரகத்திலிருந்து ஒருவர் எங்களை பேட்டி எடுக்க வந்தார். ஹசீனா, லங்கா கார்டியன் என்று நினைக்கின்றேன். முன்னுக்கு நின்றவர்கள் நழுவிவிட்டார்கள். இவற்றை ஒழுங்கு செய்யாதவர்கள், ஆனால் ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும் என்ற விருப்புடன் அங்கே போயிருந்த இருவருடன் ஹசீனா கதைத்து விபரங்களை தெரிந்துகொண்டார். பின்னர் கோதபாயவின் அரசு வெளியிட்டிருந்த தடைசெய்யப்பட்டவர்களின் பட்டியலில் அந்த இருவரின் பெயர்களும் விபரங்களுடன் இருந்தது.......................
  6. முன்னர் ஒரு காலத்தில் எங்களில் சிலர் அமெரிக்காவின் ஊடாக கனடா போனதுண்டு. அமெரிக்காவிற்குள் வந்ததவுடன் அவர்களை சிறையில் போட்டுவிடுவார்கள். பின்னர் பிணையில் வெளியே விடுவார்கள். அப்படியே எல்லை கடந்து கனடாவிற்குள் போய்விடுவார்கள். இப்பொழுது முகவர்கள் அதே போல ஒரு கதையை ரஷ்யாவைப் பற்றியும் சொல்லி எங்கள் ஆட்களை ஏமாற்றுகின்றார்களோ தெரியவில்லை.
  7. இப்படித்தான் நடக்கப் போகின்றது.................. நாங்கள் சுமந்திரனையும், சிறீதரனையுமே இன்னும் அடித்து முடியவில்லை. அடுத்ததாக யார் வரப் போகின்றார்கள் தேர்தல்களில் முன்னுக்கு நிற்க.................. இப்படிக் கைது செய்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் என்று ஒன்று தான் அவசியம் என்று இல்லை. கைது தான் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால் வேறு சட்டங்களும் இருக்கின்றன. அமெரிக்காவில் பயங்கரவாத தடைச் சட்டம் ஒன்று இல்லை தானே............ 2009ம் ஆண்டின் பின்னர் ஒரு நாள் எங்களில் நாலோ ஐந்து பேர்களின் வீடுகளின் கதவுகள் ஒரு அதிகாலைப் பொழுதில் தட்டப்பட்டன. அன்றுடன் அதுவரை இங்கு மிகப் பெரிதாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த மாவீரர் தினங்கள் அந்த வடிவில் முடிவுக்கு வந்தன. ஆனாலும் ஒரு சிறு வட்டத்திற்குள் வருடா வருடம் அஞ்சலிகள் செலுத்திக் கொண்டேயிருக்கின்றோம், இந்த வருடம் உட்பட, அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட படங்கள் இல்லாமல்..................
  8. மனுநீதிச் சோழன் மகனையே தேரால் ஏற்றிக் கொல்ல உத்தரவிட்டார் என்று இல்லாத பொல்லாத கதைளை எங்களுக்கு சொல்லி எங்கள் மனதுகளை சிறுவயதிலேயே மாற்றிவிட்டார்கள். ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் போல நாங்கள் வளர்ந்திருக்கவேண்டும்.......... அந்தச் சிலையை கடலுக்குள் தாட்டுவிடலாம்............................😌.
  9. ரஜனியின் படுமொக்கைப் படம் கூட ஓடும்........... அது போலவே அவர் வந்து போகின்ற திரிகளும் நின்றுபிடிக்கும்........ இந்த திரியில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இருக்கின்றார்களே..............🤣. அடித்த பென்சால் புயலில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் தண்ணிக்கு கீழே இருக்கின்றன. எந்தக் கட்சி மக்களுக்கு உதவியாக இருக்கின்றது................. தவெக, நாதக இரண்டையும் அங்கே காணோமே............ கமல் அரசியலில் இருந்தால் வீட்டிற்கு ஒரு டார்ச் லைட்டை ஆவது கொடுத்து இருப்பார்............
  10. பொதுவாக படங்களில் விஜய்யை நடிக்க வைப்பது மிகக் கஷ்டம்.......... கல்லில் கூட நார் உரித்துவிடலாம். முன்னேற்பாடுகள், தயாரிப்புகள் இல்லாமல் மக்களையும் ஊடகங்களையும் அவர் சந்திப்பதும் அது போலவே............... அவருக்கு வரவே வராது, கஷ்டம் தான்.......... கமல் மக்களோடு போய்ப் பேச தயாராகவே இருக்கின்றார்........... மக்கள் தான் கமலைக் கண்டவுடன் குதிக்கால் பிடரியில் பட குதித்தோடி தப்பித்து ஓடுகின்றார்கள்...............🤣.
  11. ரஜனி தான் சூப்பர் ஸ்டார் என்றால், விஜய் சூப்பர் ஸ்டார் இல்லை என்று ஒரு அர்த்தமும் வருகின்றதே.................🤣. இப்ப யானைக் கூட்டங்கள் மிதிக்கப் போகின்றன செந்தமிழனை................😜.
  12. பலத்த சந்தேகம் தான், வளவன். வாழைப்பழத்திலிருந்து வாழையா............ ஆனாலும் சோடாவைக் குடித்தால் உடம்பு கெடும் என்கின்றார்கள்............. சோடாவை வாழைப்பழத்திற்கு கொடுத்துப் பார்ப்போமே என்ன நடக்கிறது என்று............🤣. குட்டி வாழையில் குலைகளை பார்த்தவுடன் பன்றி வாழை நினைவும், இங்கு நடந்த ஒரு நிகழ்வும் நினைவில் வருகின்றது. இங்கு ஒரு கல்யாண வீட்டிற்காக என் வீட்டிலிருந்து இரண்டு வாழைகளை வெட்டிக் கொடுத்தேன். பெரிய வாழைகளை முக்கால்வாசிக்கும் மேல் வெட்டிக் கொடுத்தேன். அப்படித்தான் அவர்கள் கேட்டிருந்தனர். பின்னர் மிகுதியாக இருந்த இரண்டு கால் வாழைகளிலிருந்தும் குருத்துகள் வந்தது. ஏதோ சரியான கவலையாகப் போய்விட்டது. இப்படி செய்திருக்கவே கூடாது என்றும் தோன்றியது. வாழைகள் கொஞ்சம் உயிர் கூடிய மரங்கள் போல தோன்றுகின்றன. சில வாரங்களில் அதில் ஒன்று குலை தள்ளப் போகின்றது என்று தெரிந்தது. புதிதாக வந்த மெல்லிய தண்டு, அதனுள்ளே வாழை மொத்தி, பின்னர் குலை............. கடவுளே, இது எப்படி அதைத் தாங்கும் என்று ஒரே யோசனை............... ஆனால், நான் அதைக் காப்பற்றி எடுத்தேன்.............. இங்கே மனிதர்கள் கேட்டுக்கேள்விகள் இல்லாமல் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பயல் ஒரு வாழைக்கும், அதன் குலைக்கும் பரிதாபப்படுகின்றானே என்று தோன்றினால்............... எனக்கும் தோன்றியது............. ஆனாலும் அந்த வாழை தான் வென்றது. அதன் அடிகள் இன்னமும் வீட்டில் நிற்கின்றன.............
  13. சில மாதங்களின் முன்னர் தான் தேவையை விட அதிக அரிசி இருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். ஏற்றுமதி செய்ய்யப் போவதாகக் கூட சொல்லியிருந்தனர். என்ன தான் நடக்குது..........🫣. பழைய அரிசி அமைச்சர் அரசியலை விட்டே விலகி விட்டார் என்றும் தேர்தலின் பின் ஒரு செய்தி பார்த்ததாகவும் ஞாபகம்............
  14. நல்ல ஒரு பகுப்பாய்வு.............👍. பாதுகாப்பு படையினர், துணை பாதுகாப்பு படையினரை அரைப்பங்காக குறைத்தால் கூட, மலேசியாவிற்கு அடுத்த இடத்தில் இரண்டாவதாகத் தான் இலங்கை இருக்கும். எட்டு வீதம் அளவில் கொண்டு வந்தால் எவ்வளவோ நல்லாயிருக்கும், ஆனால் அரசுப் பணிகளில் இருந்து விடுபடுவோருக்கு வெளியில் வேலைகள் கொடுப்பதற்கு இலங்கையில் இப்போதைக்கு வழியில்லை என்றே தெரிகின்றது. அமெரிக்காவிலும் இப்படி ஒரு நடவடிக்கையையே எலானும், விவேக்கும் முன்னெடுத்து இருக்கின்றார்கள். ஆனால் இங்கே தடாலடிதான்.................. நீங்களாகவே வேலையை விட்டுவிட்டு போகிறீர்களா, அல்லது நாங்களே உங்களை நிற்பாட்டவா என்று ஏற்கனவே எலான் பயம்காட்டத் தொடங்கிவிட்டார்.
  15. வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக!
  16. தீருவிலில் மழையிலும் புயலிலும் மாவீரர்களுக்கு அஞ்சலிகள் செலுத்தியதும், புயல் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட நேரடியாக வந்த இலங்கையின் புதிய அமைச்சரை கொண்டாடுவதும் ஒரே மக்கள் தான். வல்வை நகரசபையில் டக்ளஸிற்கும் உறுப்பினர்கள் இருந்தார்கள். என்ன தான் நடக்குது, மக்கள் எந்தப் பக்கம், இங்கு எது தான் உண்மையில் உயிர்ப்புடன் இருக்கின்றது என்று பார்த்தால், இன்று அங்கு மக்கள் உணர்வுகளுடன் உயிர் வாழ எது வழியோ அதை மட்டுமே தேடிப் போகின்றார்கள்...........
  17. நன்றிகள் ஜஸ்டின் உங்களின் தெளிவுபடுத்தலுக்கு........... இதே போன்ற தருணங்களில் வைத்தியர்களையும், மருத்துவமனையும் குற்றம் சாட்டுவது என்பது உலகெங்கும் உள்ள ஒரு உணர்வுபூர்வமான வழக்கமே. சம்பந்தப்பட்ட வைத்தியர்களும், மருத்துவமனை நிர்வாகமும் முயற்சி எடுத்து இதை பாதிக்கப்பட்டவர்கள் என்று நினைப்போருக்கு புரியவைக்கவேண்டும். ஒரு அநாமேதயக் கடிதமாக அல்லாமல், தன் பெயர் விபரங்களுடனேயே அவர் இந்தக் கடிதத்தை எழுதியிருப்பது நல்ல ஒரு விடயம்...........
  18. 🫣................... இதெல்லாம் ஒரு குற்றமோ அல்லது தகாத செயல்களோ அல்ல, இவை போன்றன வாழ்வின் ஒரு அங்கம், சாகசங்கள் என்ற ஒரு பார்வை சிலரிடம் இருப்பதை பல வருடங்களின் முன் அறிந்து, 'நன்றாகத்தானே வளர்ந்தோம்..............' என்று நினைத்தது உண்டு.
  19. அந்தச் சனங்களும் கடைசியில் நாதியே இல்லாமல் உங்களிடம் தான் வந்திருக்கின்றார்கள். இதற்காகவேனும் உங்களால் முடிந்ததை அந்த மக்களுக்கு செய்யுங்கள்...............🙏.
  20. கிழக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவு. நிந்தாவூரிலிருந்து சம்மாந்துறைக்கு போய்க் கொண்டிருந்த போது காரைதீவிற்கு அருகேயுள்ள பாலத்தடியில் இந்த விபத்து நடந்துள்ளது என்று செய்திகளில் இருக்கின்றது.
  21. இனி அடுத்த செஞ்சரி அடிக்க இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்குதோ என்று நினைத்துத்தான், செஞ்சரி எல்லாம் ஒன்றுமேயில்லை, அணியின் வெற்றிதான் முக்கியம் என்று இப்பவே தற்காப்பாக ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கின்றார் போல கோலி பாய்................🤣.
  22. இதைப் பார்த்தால் ரணில் கோபப்படப் போகின்றார், விசுகு ஐயா..................🤣. வசனங்களின் முன்னால் எப்போதும் ஒரு பொருள் இருக்கும், சில வசனங்களின் பின்னாலும் ஒரு பொருள் இருக்கும்...............😀.
  23. 'சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிவிட்டார்கள்.................' என்பது கடந்த சில நாட்களில் பிரபலமான ஒரு வசனம்............. பிடியாணை பிறப்பித்து, பின்னர் மறைந்திருந்தவரை தேடிப் பிடித்து, கருணை அடிப்படையில் பிணை வழங்கப்பட்ட பின், அதுவும் அந்த நீதிபதியின் மனைவியே கருணை மனுவையும் போட்டிருந்தார்......... இதன் பின் தப்பினோம், பிழைத்தோம் என்று வெளியே வந்த நடிகை கஸ்தூரி தான் இதைச் சொல்லியிருந்தார்..........🫣. நம்ம வைத்தியர் ஏற்கனவே ஒரு சீறுவாணம்............ இப்ப முகப்புத்தகத்தில் ஒரு வாண வேடிக்கையை நடத்தப் போகின்றாரே............
  24. 🤣..................... அண்ணன் ஆறு மாதங்கள் நியூ யோர்க், ஆறு மாதங்கள் கலிஃபோர்னியா என்று கிழக்கும், மேற்குமாக நகர்ந்து கொண்டிருக்கின்றார்................ முடிவெடுத்துவிட்டீர்கள்............. எப்படியும் இன்றைக்கு இந்த எறும்பை ஒரு வழி பண்ணாமல் விடப் போவதில்லை போல.............🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.