Everything posted by ரசோதரன்
-
பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில்
தோல்வி வலியாக இருப்பதற்கு சந்தர்ப்பம் மிகக்குறைவு, ஏராளன். புதிய பிரதமர் ஹரிணி சரியாக எண்ணி ரணில் மாஸ்டர் இதுவரை 17 தடவைகள் தோற்றிருக்கின்றார் என்று சொல்லியிருக்கின்றார். தோல்வி ஒன்றும் புதிதல்ல நம்ம மாஸ்டருக்கு. பதவி போனதும் கூட பரவாயில்லை............. 16 சமையல்காரர்களும் கூடப் போய் விட்டார்களே........ அது தான் தீராவலி.......😜.
-
பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில்
🤣............ ரணில் மாஸ்டர் கணிதமும் படிப்பிப்பாரா............... சொல்லவேயில்லை........... அந்த நாட்களில் எங்கள் பாடசாலையில் ஒரு ஆசிரியர் இருந்தவர். அவர் எல்லாப் பாடங்களும் - தூய கணிதம், இரசாயனவியல், வர்த்தகம் - படிப்பிப்பார். ரணில் மாஸ்டரும் வரவர அப்படி ஆகிக் கொண்டிருக்கின்றார்...............
-
சீனாவுக்கு லட்சக்கணக்கில் கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்; காரணம் தெரியுமா?
சில காலத்திற்கு முன் சீனாவிற்கு இலங்கையிலிருந்து ஒரு வகை குரங்குகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் ஒன்று வந்தது. சீனர்கள் அந்தக் குரங்குகளை கொல்லப் போகின்றார்கள் என்று எதிர்ப்புகளும் எழுதப்பட்டது........... ஒவ்வொரு நாட்டிலிருந்தும் மிகச் சிறந்தவற்றை சீனர்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள் போல................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🙃................ சேத்துக்குள்ள மீனை சரியாக தேடிப் பிடிக்கிறது என்பது இதுதானோ.............🤣.
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
ஓ............... அவரா......... 'வேற வழி தெரியல்ல, ஆத்தா.......' என்ற நிலைமை தான் என் நிலை இப்ப........... அதுவும் சரி தான், அண்ணை.........
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
🤣........... கமல், ரஜனி, சிவாஜி, எம்ஜிஆர்........... இப்படி நிறைய இருக்குதே, வசீ. இதில் எம்ஜிஆரைத் தவிர மற்றதெல்லாம் தோற்றது அல்லது ஓடிய கூட்டம்............. உங்களுக்கு வேறு கற்பனை அதிகம்........... நீங்களே சொல்லிவிடுங்கள்.............
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣........... இந்தக் காட்சியில் பையன் சார் ஃபோன் போட்டது அண்ணனுக்கா அல்லது தளபதிக்கா.......
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
மூன்று நட்சத்திரங்கள்.......... மூன்றெழுத்தில் தான் தமிழர்களின் மூச்சே இருக்கின்றது என்கின்றார்கள்....... எல்லாருமே மூன்றெழுத்துகள்...........
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
அநுரவை வைச்சு செய்வீர்கள் என்று நினைத்தால், எல்லாரும் என்னை வைச்சு செய்யிறங்களே, இது நியாயமா................🤣. மார்க்கிஸிஸம், மரவள்ளிக் கிழங்கு தோட்டம் என்று போகாமல், அநுரவின் ஆட்சி நல்லாத்தானே ஆரம்பித்திருக்குது...........😜. ரணில் தான் 'நானும் ரௌடிதான் ..............' என்று விடாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றார். உனக்கு சட்டம் தெரியுமா, உனக்கு அரசியலமைப்பு தெரியுமா ............. இப்படியே இவர் கேட்டுக்கேட்டு ஒரு நாள் பக்கத்தில் நிற்கிற ஒரு ஆளை பாய்ந்து கடித்து விடப்போகின்றார்.............. இந்த நிலாம்டீன் தான் அநுரவைப் பார்த்தால் நடிகர் விஜய் மாதிரி இருக்குது, அதால தான் சனம் கூட்டமாக அள்ளுப்படுகின்றது என்று ஜனாதிபதி தேர்தலில் சொன்னவர்.......... இதைக் கேள்விப்பட்ட உண்மையான விஜய், அநுர வென்றவுடன், உடனே தனது கட்சியின் முதலாவது மாநாட்டை நடத்தினார் என்பது வரலாறு..............😜.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣.......... எங்கள் ஊரில் போசா என்று தான் சொல்லுவோம்......... அண்ணன் தான் தெர்மகோல் என்ற சொல்லையே எனக்கு அறிமுகப்படுத்தினார்.............. அண்ணனை மீண்டும் ஒரு தடவை பாருங்கள்.........
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣............ என்ன குமாரசாமி அண்ணை..........அங்கே நாலு பேப்பர், இங்கே நாலு பேப்பர் என்று ஆடு கடிச்ச மாதிரி மேலால வாசித்து வாசித்து, கசக்கி எறிந்த கடதாசி குப்பையாகக் கிடக்குது எங்களின் தலைகளுக்குள்.......... ஏதோ பொழுது போனால் சரி தான்..............
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
அண்ணை, கடும் ரகசியம் ஒன்று........... அவர் போய் வருகிற அந்தக் கார் அரசாங்கக் கார் இல்லை...... நாங்கள் நாலு பேர்கள் சேர்ந்து வாங்கிக் கொடுத்தது..............🤣. பெட்ரோல் வாங்க காசு கொடுத்து விட்டே பெருமை பேசும் இந்த உலகில், காரையே வாங்கிக் கொடுத்து விட்டு நாங்கள் கம்மென்று இருக்கின்றோம்...........😜 இலங்கையில் இப்ப இருப்பது ஒரே ஒரு பிரச்சனை தான்.......... கார் பிரச்சனை மட்டுமே.......... அங்கே எந்தக் காரை யார் வைத்திருக்கின்றார்கள் என்பதே அங்குள்ள ஒரு பிரச்சனை..............😀 முழு இலங்கையையும் ஒரு 'சொப்பன சுந்தரி' என்று இந்திய நண்பர்கள் சொல்லிச் சிரிப்பார்கள்.......... இப்ப எவர் வைத்திருக்கின்றார்கள் என்று கேட்பார்கள்............. கோவிட் தொற்றுக் காலத்தில் ஐங்கரநேசன் ஒரு அறிக்கை விட்டிருந்தவர். அதை வாசித்த பின், வாழ்நாளில் இனி ஐங்கரநேசனின் ஒரு சொல்லைக் கூட வாசிக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். அடக் கடவுளே............ இன்றைக்கு விரதம் உடைந்து, வாசிக்க வேண்டியதாகப் போய் விட்டதே...........🤣.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣.......... பையன் சார், அதிமுகவில் இணைய நானும் தயார் தான், ஆனால்............. எடப்பாடியார் தலைமையை ஏற்கமுடியாது. எங்கள் அண்ணன், மதுரைச் சிங்கம் செல்லூர் ராஜூ அண்ணனின் தலைமையில் புதிய 'அகில உலக அதிமுக' ஒன்றை உருவாக்கினால், இன்றைக்கே சந்தாப்பணம் அனுப்புவதாக உள்ளேன்......😜. 'சென்னை ஒரு வெண்ணை........... இனி மதுரை தான் தலைநகர்.........' என்று ராஜூ அண்ணனுக்கு ஒரு உரை எழுதிக் கொடுப்பதாகவும் உள்ளேன். புதிய கட்சிக்கொடியில் ஒன்று இரண்டு மிருகங்கள், பறவைகள் இருக்காது. எல்லோரையும் அரவணைக்கின்றோம் என்று காட்டுவதற்காக கொடியில் ஒரு மிருகக்காட்சிசாலையே இருக்கும். இப்படி இன்னும் கவர்ச்சிகரமான பல திட்டங்கள், செயற்பாடுகள் இருக்கின்றன............ ராஜூ அண்ணனுக்கு வாக்களியுங்கள்........... ராஜாவாக வாழுங்கள்!
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣.............. ஆ........ பார்த்தன்...........பார்த்தன்....... அந்த அபிநயம் பிடிக்கிற பிள்ளைக்கு தான் நான் ரசிகன்.............😜. ஆனால் அந்தப் பிள்ளையை இப்ப அவர்கள் வெளியில் கொண்டு வருகிறதே இல்லையே............ மன்னார்குடிக்கு எதிராக ஒரு போராட்டம் அறிவிக்க வேண்டும், அந்த பிள்ளையை அடுத்த முதலமைச்சர் வேட்பாளாராக அறிவியுங்கள் என்று.......... பையன் சார், எவ்வளவு நேர்மறையாக இருக்க முடியுமோ அவ்வளவு நேர்மறையாக இருக்கின்றீர்கள். நம்பிக்கை தான் ஒரே பலம் என்பது போல. உங்கள் எண்ணப்படியே நடந்தால் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே...............👍.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
படப்பிடிப்பு முடிந்து விட்டது............ இனிமேல் விஜய் தான் ஊர் ஊராக போக வேண்டும், கமல் டார்ச் லைட்டுடன் ஊர் ஊராக போனது போல............... தமிழ்நாட்டு மக்களின் மீது நம்பிக்கை நல்லாவே இருக்கின்றது............. எல்லாம் முடிய, உதயசூரியனிலோ அல்லது இரட்டை இலையிலோ நிற்கும் 'அவர்களின் ஆட்கள்' பார்த்து வாக்குப் போடுவார்கள்............
-
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
அடுத்த தலைவரை தெரிவு செய்யும் கூட்டத்திற்கு நைம் காசிம் போகவில்லை போல........... அதால இவரையே தலைவராக தெரிந்து எடுத்துவிட்டார்கள்.................
-
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
🤣........... தாந்திரீகம், அதர்வணம் என்று சில உட்பிரிவுகள் எங்களுக்குள்ளும் இதற்கான வசதி வாய்ப்புகளுடன் இருக்கும்............... தேடிப் பார்க்க வேண்டும்...........😜.
-
மாண்புமிகு முதல்வர் அவர்களே ! - சுப.சோமசுந்தரம்
👋................. மாற்று என்று வேறு ஒன்று தமிழ்நாட்டில் இல்லாததால் தான் இவர்களையே மீண்டும் மீண்டும் நம்ப வேண்டியிருக்கின்றது. அதிலும் முதல்வர் ஸ்டாலின் ஆரம்பத்தில் மிக்க நம்பிக்கையை கொடுத்தார். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியவர்களை விட இவர் வித்தியாசமானவர் என்று எண்ண வைத்தார். ஆனால் இந்த அரசின் தொடர் நடவடிக்கைகள் இவரும் அவர்களில் ஒருவரே என்ற ஒரு அயர்வையே இன்று கொடுக்கின்றது.................😌.
-
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
பின்கதவால் வந்தவர் முன்கதவால் வந்தவரைப் பார்த்து நீயும், நானும் ஒன்று தான் என்று சொல்வதற்கு மிக அகண்ட ஒரு பார்வை வேண்டும்.................🤣. 16 சமையல்காரர்களும், 40 குடைகளும் வேண்டும் என்று கேட்ட செய்தி வெளியில் வந்த பின், இவர் மீது மரியாதை ஏதும் எவர் மனதிலாவது இருக்கும் என்று நினைக்கத் தோன்றவில்லை. வெறும் பதவி ஆசை பிடித்த ஒரு மனிதனாகவே தெரிகின்றார்...........
-
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
அங்கே தேர்தலில் 36,825 வாக்குகள் தான் மொத்தமாக செலுத்தப்பட்டிருக்கின்றது, அல்வாயன். அதில் 520 செல்லாத வாக்குகள். ஆக 36,305 வாக்குகளில் 17, 295 வாக்குகளை இவர்கள் பெற்றிருக்கின்றார்கள். இவர்கள் 47.6 வீத வாக்குகள் பெற்றிருப்பது ஆச்சரியமே..............
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
👍......... இந்த விடயத்தில் தான் முதலாவது உரசல் காத்திருக்கின்றது போல, கோஷான். புஸ்ஸி ஆனந்த் பாஜக மற்றும் அமித் ஷாவுடன் நெருங்கிய உறவில், தொடர்பில் இருப்பவர். இவரை மீறித்தான் பாஜக எதிர்ப்பு காட்டப்படவேண்டும். விஜய்யின் 'சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பிளவுகளே இல்லை...........' என்ற கொள்கை பாஜகவின் அதே கொள்கை ( இது இலங்கையில் ஜேவிபியின் கொள்கையும் கூட...). இந்தக் கொள்கையை வைத்தே பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. விஜய் தமிழ்நாட்டில் பொருட்படுத்தப்பட வேண்டும் என்றால், பாஜகவினருக்கு எதிராக தீவிரமான ஒரு நிலைப்பாட்டை இப்பொழுது வெளிப்படுத்தியே ஆகவேண்டும். ஆனால் மத்திய அரசின் அமலாக்கத்துறை விஜய்யின் வீட்டிற்கு வரும்............... அது நாளடைவில் நல்ல ஒரு விடயமே.............
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
👍........... பையன் சார், பொய்த்தும் போகும் என்பதற்கு முன்னால், கசியவிடப்பட்ட பல தகவல்கள் பொய்யானதாகவும் இருக்கக்கூடும். உளவுத்துறை அரசின், ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். திமுகவிற்கு பாதகமான தகவல்களை வெளியே விடாமல் வைத்திருந்து கொண்டு, கற்களை வேறு பக்கம் எறிந்தும் இருப்பார்கள். 35 வயதிற்கு உட்பட்டவர்கள் என்ற தகவல் சரியானதாக இருக்கக்கூடும்.............. என்னுடைய வயதுக்கு நான் அந்த கூட்டம் நடந்த ஊரில் இருந்தால், ஒரு மூன்று நாட்கள் வீட்டை விட்டு கிளம்பி வேறு ஊரில் போய் இருந்திருப்பேன்.................🤣............
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
விஜய்க்கு கூடிய கூட்டதை பற்றிய உள்ளவுத்துறை அறிக்கையில் இருக்கும் சில விடயங்கள் வெளியில் கசிய விடப்பட்டிருக்கின்றது. பாமகவும், விசிகவும் பதற்றப்பட வேண்டிய தகவல்கள் அவை. கூடிய மூன்று இலட்சம் மக்களில் பெரும்பான்மையினர் வன்னிய மக்கள் அல்லது பட்டியலின மக்கள் என்பதே அந்தத் தகவல். மிகவும் அடித்தட்டு மக்கள் அவர்களின் சொந்தப் பணத்தை செலவழித்து பெரிய வாகனங்களை வாடகைக்கு எடுத்து கூட்டத்திற்கு வந்துள்ளார்கள் என்ற தகவலும் உள்ளது. மேலும் அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கொங்கு நாட்டில் இருந்து (சேலம், ஈரோடு,.........) ஏராளமானோர் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். இதனால் தான் மருத்துவர் ஐயா நடிகர்களையும், சில நடிகர்களின் சினிமாக்களையும் என்றும் எதிர்க்கின்றார். விஜய்காந்திற்கு அதிகமாக வாக்குப் போட்டதும் அவரின் இனசனங்களே. ஏற்கனவே பாமக தேய்ந்து கட்டெறும்பு ஆகிக் கொண்டிருக்க, இப்பொழுது விஜய் அந்தக் கட்டெறும்பை காலால் நசுக்கி விடுவார் போல............ தொல். திருமாவும் பதறத் தான் வேண்டும். வந்திருந்தவர்களில் 90 வீதமானவர்கள் 35 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்ற தகவல் எதிர்பார்த்தது தான். இந்த வயதுக்கு கீழே உள்ளவர்களை அப்படியே வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்வது மிகப் பெரிய, மிகக் கஷ்டமான ஒரு வேலை...............
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
👍............ பையன் சார், இந்தக் கணக்கு வெறும் உதிரிகளின் கணக்காகவே தெரிகின்றது. சீமான் எப்படியும் விஜய்யுடன் சேரமுடியாது, ஏனென்றால் விஜய் எல்லா 'இஸங்களையும்' ஒன்றாகக் கலந்து வைத்திருக்கின்றார் - அண்ணாயிஸம், அம்பேத்காரிஸம், பெரியாரிஸம், தமிழ் தேசியம், திராவிடம்........... சீமானோ தமிழ் தேசியம் மட்டுமே; அம்பேத்காரும் அண்ணாவும் பெரியாரும் அங்கே எதிரிகள், எடுபடாது. தொல். திருமா விஜய்யுடன் சேர்ந்தால், மருத்துவர் ஐயா அதற்கு எதிர்ப் பக்கத்தில் சேர்வார். விசிகவும், பாமகவும் ஒன்றாக ஒரே இடத்தில் இருப்பது மிக அரிது. ஒருவருக்கு ஒருவர் குழி பறிப்பது அவர்களின் இருவரின் நோக்கங்களும். இந்த இருவரும் தங்களின் இனமக்கள் 20 வீதங்கள் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றனர், ஆனாலும் இவர்கள் இருவரும் எட்டு வீதங்கள் அளவிலேயே வாக்குகளைப் பெறமுடியும். விஜய் அதிமுகவுடன் சேர்வது தான் அதிக வாக்குகளை கவர இப்போதிருக்கும் ஒரே வழி. ஆனாலும் எடப்பாடியார் கூட்டணித் தலைமையை விட்டுக் கொடுக்கமாட்டார். தலைமைப் பதவி இல்லாமால் விஜய் கூட்டணி ஒன்றில் சேர்ந்தால், வெறும் பதவிக்காக மட்டுமே அரசியலுக்கு வந்ததாக ஆகிவிடும் அல்லவா........... அதனால் முதலில் தனியே நின்று கள நிலவரத்தை கண்ட பின், கட்சியையும், தன்னையும் விஜய் மாற்றிக் கொள்வதே, வளர்ப்பதே சரியாக இருக்கும்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
❤️............... தனிமனித துதிகளாலும், குவிந்த அதிகார மையங்களாலும் உண்டாகும் நீண்டகால பாதக விளைவுகளை நன்றாகச் சொல்லியிருக்கின்றார் பேராசிரியர் ராஜன் குறை. 'மையங்களால் அழித்தல்' என்று சில மாதங்களின் முன் இன்னொரு கட்டுரை வேறு ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. அதை நான் இங்கு களத்தில் பகிர்ந்தும் இருந்தேன். சனி அன்று ஒரு வீட்டிற்கு போயிருந்தேன். முழுவதும் 'ஹெல்தி ஃபுட்'............... குடிக்கும் பானம் கூட எல்லாம் கலந்து உடனடியாக அடித்து எடுக்கப்பட்ட ஒன்று............ கொடுமையும், பசியும் தாங்காமல், திரும்பி வரும் வழியில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டேன். இது போலவே விஜய் கலந்து அடித்திருக்கின்றார். கொழும்பில் மனோ கணேசன் இதைப் போலவே பேசுவார். இந்தப் பேச்சுகளால் எதுவும் நடந்து விடப் போவதில்லை ஏனென்றால் இதில் எதுவும் புதிதே இல்லை. சமூக ஊடகங்கள், யூடியூப் போன்றன பொங்கும். ஆனால் சீமானுக்கு சமூக ஊடகங்களில் இதை விட அதிக வரவேற்பு நீண்ட காலமாக இருந்து வருகின்றதே. மநீம இல் கமல் மட்டும் மேடையிலிருப்பார், இங்கு விஜய் மட்டும் இருப்பார். அடுத்த கட்டத்திற்கு இப்பொழுது கூடும் மக்கள் கூட்டத்தை நகர்த்தும் வல்லமை இவருக்கு இருக்கின்றதா என்பது பெரிய சந்தேகமே. பொதுவாக ஈழத்தமிழர்களுக்கு திமுகவை பிடிக்காது. ஆதலால் இவர் திமுகவை விழுத்துவார் என்று விரும்பி, ஈழத்தமிழர்கள் அதை நோக்கி கருத்துகளை உண்டாக்குகின்றனர். தமிழ்நாட்டில் அதிமுக கொஞ்சம் அந்தரத்தில் இருக்கின்றது. அங்கிருந்து வரும் கருத்துகள் விஜய் அதிமுகவிற்கு மாற்றீடாக வருவதே நடக்கக் கூடும் என்கின்றன. உதயசூரியனுக்கும், இரட்டை இலைக்கும் வாக்குப் போட்டவர்கள் அப்படியே திரும்பி இரண்டு யானகளுக்கு வாக்குப் போடும் அளவிற்கு அங்கொன்றும் அதிருப்தி இருப்பது போலத் தெரியவில்லை. விஜய்யும் அப்படியான ஒரு மாற்று போலவும் இல்லை. ஊழலும், இலஞ்சமும் அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்கைகளுடனும் பின்னிப் பிணைந்தது, சினிமா நடிகர்கள் உட்பட. ஊழல் நீக்கம் என்பது அங்கு ஒரு பொருட்படுத்தக் கூடிய விசயமே இல்லை (இலங்கையில் அது ஒரு பெரிய விசயம்......). ********************************** பெரியாரை பின்பற்றுபவர்கள் பிராமண ஆதிக்கம் பற்றி பேச வேண்டும் என்பது கட்டாயமே. ஆனால் அதை 'பார்ப்பனீயம் அல்லது பார்ப்பனர்கள் ஆதிக்கம்' என்று கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று ராஜன் குறை அவர்கள் சொல்லியிருப்பது சரி என்று தோன்றவில்லை. இந்தச் சொல் கிட்டத்தட்ட ஒரு 'இழி சொல்' ஆக இன்று மாறிவிட்டது. எங்களின் கருத்துகளை இழி சொற்களின் மூலம் தான் எடுத்து வைக்க வேண்டும் என்றில்லை. ** பார்ப்பனன் என்ற சொல்லின் அர்த்தம் இரு முறை உயிர் கொண்டவர்கள் என்பது. பறவைகள் போல. முட்டைக்குள் ஒரு உயிர், பின்னர் முட்டையை உடைத்து குஞ்சுகளாகும் போது இன்னொரு உயிர். பிராமணர்கள் தங்களுக்கு பூணூல் அணிய ஆரம்பிக்கும் முன்னர் ஒரு உயிர், அதன் பின்னர் இன்னொரு உயிர் என்று கருதுகின்றனர். ஆனாலும் இன்று இந்த அர்த்தம் மறைந்து, இது ஒரு இழி வழக்காக போய்விட்டது.