Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ரசோதரன்

  1. வணக்கம் ராஜன் அம்மான்! உங்களின் முதலாவது பதிவே கலக்குதே.............🤣. சீமான் ஒருமையிலும், ஏக வசனங்களிலும் தொண்டர்களை திட்டினால், எல்லோரும் அதைப் பொறுத்துக் கொண்டு அவருடனேயே இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது தானே..............
  2. அமைச்சர்கள் ஆகியிருக்கும் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட சிலர் அவர்களின் நீண்டகால உறுப்பினர்களே. ஒரு தொழிற்சங்கம் போன்று முடிவுகள் எடுத்திருக்கின்றார்கள் என்றே தெரிகின்றது. என்னுடைய காலத்தில் இவர்களை ஜெப்பாஸ் என்று அழைத்ததில்லை. பெரும் இழப்புகளைத் தாண்டி இவர்கள் மீண்டும் துளிர் விட்டுக் கொண்டிருந்த காலம் அது. பின்னர் அப்படி அழைத்திருக்கக்கூடும். இல்லை, இவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதில்லை. ஆனால் கண்களில் ஒரு அனல் பறந்து கொண்டே இருக்கும். பெரும் சந்தேக குணமும் உள்ளவர்கள். அந்த நாட்களில் பல்கலையில் இவர்களைப் போன்ற இனவாதிகளை பார்ப்பது மிகவும் அரிது. அது ஒரு ஆச்சரியமே.......... இது என்ன ஒரு புது வகையான மார்க்ஸிஸம் என்று தோன்றியது...............
  3. எப்படியும் உங்களின் தம்பியை பிரதமர் ஆக்கியே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறீர்கள்...........🤣. அங்கே போனால் என்ன, போகாவிட்டால் என்ன அண்ணை, இப்ப ஒன்றாக முழுநேரம் யாழ் களத்தில் நிற்பதில் தானே இரு வாழ்க்கைகளும் வந்து நிற்கின்றன.............😀.
  4. 🤣............. ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்கள்............ அப்படியே எழுதிய விரல்களும் என்பதையும் அதனுடன் சேர்த்து விடவேண்டும்............. கிறுக்குகின்ற புத்தி............🤣.
  5. தமிழ்வின்னில் வரும் செய்திகளை நம்பாதீர்கள்............... இவர்கள் ஒரு ஊடகப் பொய்யர்கள்........... எங்களின் அரசியல் பொய்யர்கள் போலவே............... வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், உடுப்பிட்டி வீதியில் 'தமிழ்க் கடை' என்று ஒரு கடை இருக்கின்றது. அங்கு பனம் பொருட்கள் மற்றும் இதே போன்ற பொருட்களை மட்டுமே விற்கின்றனர். அங்கு பனங்கட்டி எப்போதும் கிடைக்கும். சடையாண்டி வைரவர் கோயிலின் முன்னே இந்தக் கடை உள்ளது. முன்னொரு காலத்தில் இந்தக் கடையின் பெயர் சித்தி விநாயகம் ஸ்டோர்ஸ் என்று ஞாபகம்..................
  6. 🤣............. 'வெளிநாட்டுக் காசு அல்லது வீட்டிலிருந்து காசு வந்து கொண்டிருக்கும் சில தமிழ் மாணவர்கள்............' என்று அங்கே ஒரு தேவையுடனேயே எழுதியிருக்கின்றேன், அல்வாயன்............. இந்த இரண்டு வழிகளிலும் காசு வரத்து இல்லாமல், அரசாங்கம் கொடுக்கும் அந்தச் சிறிய மகாபொல கொடுப்பனவை வைத்தே நான்கு வருடங்களும் படித்து முடித்த தமிழ் மாணவர்களும் பலர் இருந்தனர். அவர்களுக்கு இந்த 'நாலு ரூபாய் சாப்பாட்டுச் சட்டம்' இருந்தாலும் ஒன்று தான், இல்லாவிட்டாலும் ஒன்று தான்......... எப்போதும் நாலு ரூபாய் வரிசை மட்டுமே.............. இதில் நான் எந்த வகை என்று சொன்னால், அது ஒரு 'பில்டப்' ஆகப் போய்விடும்............🤣. 🤣............. அண்ணா, உங்கள் பெயரில் இருக்கும் 57 நான் நினைக்கும் 57 தான் என்றால், ஜெயக்கொடிக்கு உங்களை விட 10 வயதுகள் குறைவு............... ஆமாம், அவர் கொஞ்சம் வயதானவர் தான்.............😜.
  7. 👍................. மீண்டும் மீண்டும் கட்டுக்கதைகளையும், வதந்திகளையும் பரப்பும் ஊடகங்களை முற்றாக தவிர்க்க வேண்டும், பையன் சார். உங்களின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. அத்துடன் தமிழ் கொலைகளைச் செய்யும் ஊடகங்களும் தவிர்க்கப்படவேண்டும். முக்கியமாக ஆதவன் போன்ற செய்தித் தளங்கள். தமிழ், தமிழ் என்று நாங்கள் சொல்லிக் கொண்டே, இவைகளை எப்படி ஆதரிக்க முடியும்............. ஒரு தனிநபர் தமிழில் தவறுகள் விடுவதை புரிந்து கொள்ளலாம். தமிழ்மொழி மிகக் கடினமான ஒரு மொழி.... ஆனால் ஒரு ஊடகம் என்று குழுவாக இருப்பவர்கள், இயங்குபவர்கள் இதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யக் கூடாது.............. மொழி மீது ஒரு பற்றும், மரியாதையும் அவர்களுக்கு இல்லை என்றே இதை எடுக்கவேண்டும்.
  8. மணிப்பூரில் மீண்டும் கலவரம் என்ற செய்தியை நேற்று இரவு பார்த்தேன்...........😌. நல்லவர்கள் என்ற பெயருடன் பொறுப்புமிக்க இடங்களில் இருப்பவர்களால் தான் அதிக துன்பம் ஏற்படுகின்றதோ என்று சில வேளைகளில் தோன்றுகின்றது.......... கொடுமைகளைச் செய்பவர்கள் செய்பவற்றைச் செய்து விட்டு இந்த நல்லவர்கள் எனப்படுவர்களின் பின்னால் ஒளிந்து கொள்கின்றனர்............
  9. உண்மை தான், கோஷான்............. பாக்கு நீரிணைக்கு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் இப்படி எத்தனை எத்தனை பில்டப்புகளை எங்கள் வாழ்நாளில் நாங்கள் பார்த்துவிட்டோம்................. அவர்களாகவே கொடுக்கும் பில்டப்புகள் போதாதென்று, இந்த ஊடகங்கள் இன்னும் சில படிகள் மேலால் போய், அவர்களை தேரில் ஏற்றி இழுத்துக் கொண்டு திரிகின்றன. அநுர அவரது மாளிகைக்கு தினமும் வரும் மரக்கறிகளை வேண்டாம் என்று சொல்லி விட்டார் என்று ஒரு பில்டப்பு..................🫣. அப்துல் கலாம் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் உண்மையிலேயே இப்படியான ஒன்றைச் செய்திருந்தார். இப்போது அப்துல் கலாம் ஆகிவிட்ட அநுர, அடுத்ததாக ஆபிரகாம் லிங்கன் ஆவார் எங்கள் ஊடகங்களில்..............
  10. சில விடயங்களில் இவர்கள் மாறவே மாட்டார்கள். இந்தியாவில் பிஜேபி அரசு ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளை கொண்டு இழுப்பது போல........... வலு அமைச்சர் ஆகியிருக்கும் குமார ஜெயக்கொடி எங்களுக்கு ஒரு வருடம் முந்தியவர். ஆனாலும் நாங்களும், அவர்களும் ஒரே வகுப்பில் தான் படித்தோம். அந்த வருடம் இரண்டு வகுப்புகளை ஒன்றாக உள்ளே எடுத்திருந்தனர். அமைச்சரவையில் அநுர குமார, குமார ஜெயக்கொடி என்று 'நாலு ரூபாய் சாப்பாட்டுச் சட்டம்' கொண்டு வந்தவர்கள் பலர் இருக்கின்றர் என்று நினைக்கின்றேன்..............🤣
  11. 🤣................. 'உடனடித் தீர்ப்புகள்...............' வழங்கப்படும். அவர்கள் எல்லோருமே நடமாடும் நீதிமன்றங்கள் போல...........🤣. 'உங்களுக்கு பொருத்தமானது எதுவோ அதையே நீங்கள் பெற்றுக் கொள்கின்றீர்கள்..............' என்று சொல்வார்கள். இலங்கைக்கு இப்போது இது தான் பொருத்தமானது போல...... இங்கு அமெரிக்காவில் நாங்களும் தான் ட்ரம்பை அதிபராக்கியிருக்கின்றோம். ஆற்றிலோ குளத்திலோ போய் விழாமல், உயிருடன் தானே இன்னமும் உலாவிக் கொண்டிருக்கின்றோம்................😜.
  12. 🤣.................. கடைசியாகக் கிடைத்த தகவல்களின் படி, சுமந்திரனை இன்னும் ஒரு மாதத்திற்கு இணையத்தில் தாறுமாறாக அடிக்கலாம் என்றும், அதுவரை மற்ற எந்த நடவடிக்கைகளைப் பற்றியும் பேசத் தேவையில்லை என்றும் முக்கியமானவர்கள் சிலர் கூடி முக்கியமான ஒரு முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. ஆதலால் இப்போதைக்கு அநுர எங்களிடமிருந்து தப்பிப் பிழைத்து இருக்கட்டும்.................😜.
  13. 🤣................ எனக்கு இவர்களை, இவர்களின் கொள்கைகளை, இவர்களின் நடவடிக்கைகளை ஓரளவிற்கு தெரியும். முதலில் அந்த பாராளுமன்ற கண்டீனில் கைவப்பார்கள். எந்த விதமான விசேட சாப்பாடும் போட விடமாட்டார்கள். நான் முன்னர் ஒரு தடவை இங்கே எழுதியிருந்தேன், எங்களுக்கு பல்கலை விடுதியில் என்ன நடந்தது என்று. அப்பொழுது நாலு ரூபாய்கள் தான் மதியச் சாப்பாடு, ஆனால் அதை வாயில் வைப்பதே கஷ்டம். தமிழ் மாணவர்களில் சிலர், வெளிநாட்டுக் காசு அல்லது வீட்டிலிருந்து காசு வந்து கொண்டிருந்தவர்கள், கண்டீன் ஆட்களுடன் பேசி 10 ரூபாவிற்கு ஒரு ஸ்பெஷல் சாப்பாடு ஏற்பாடு செய்தனர். பின்னர் ஒருநாள், கண்டீன் ஆட்களுக்கு அடி விழுந்ததா அல்லது விழவில்லையா என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் நாலு ரூபாய் சாப்பாடு மட்டுமே என்று எழுதாத சட்டம் ஒன்று வந்தது. நீங்கள் சொல்வது போலவே, கலிபோர்னியாவில் இருந்து போய் அதை சாப்பிட வேண்டுமா............
  14. 👍............ சம்பளத்தை வாங்குங்கோ.............. ஆனால் 16 சமையல்காரர்களும் கூடவே வேண்டும் என்று அடம்பிடிக்காதேங்கோ என்று தான் மக்கள் சொல்லியிருக்கின்றார்கள்...........🤣 ஜெயலலிதா தனக்கு மாதம் ஒரு ரூபா சம்பளம் போதும் என்று ஒரு தடவை சொல்லிச் செய்திருந்தார். பின்னர் அவரும் சசிகலாவும் நின்ற அந்த ஒரு படத்தில் போட்டிருந்த நகைகளே பல கிலோ கணக்காக இருந்தது.......... இப்படி எத்தனையோ பேர்கள் வந்து போய்விட்டனர். எவரும் தியாகிகளாக மாற வேண்டும் என்றில்லை.... சாதாரணமாக இருந்து விட்டுப் போனாலே போதும்..........
  15. தமிழ்வின்னையும், ஆதவனையும் நம்பி ஆற்றில் இறங்கலாமா..................🤣. என்னுடைய ஊர் ஒட்டுகளில் இருந்து வரும் உலகப் பொருளாதாரக் கொள்கை உரையாடல்கள் போன்றன அவை.................
  16. அப்படியாயின் பிரதி அமைச்சர்களை நியமிப்பார்கள் போல, ஏராளன். அநுர, ஹரிணி மற்றும் சிலரால் அவர்களின் கீழ் இருக்கும் இவ்வளவு துறைகளையும் தனியே நிர்வகிப்பது மிகச் சிரமமான ஒரு விடயம்.
  17. சிலருக்கு மிக அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றது. பல இராஜாங்க அமைச்சர்களையும் நியமித்தால் அன்றி இது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று.
  18. 🤣.............. எனக்கு பிரதமர் பதவி கொடுக்கப்படாததால் நான் கடும் யோசனையில் இருக்கின்றேன்...........
  19. 👍............. அவருக்கு அரசியலில், அதிகாரத்தில் நாட்டம் இல்லை என்றால், அவர் போட்டிருக்கும் வழக்குகளையாவது இந்த அரசு விரைவாக வெளிப்படையாக விசாரித்து தீர்ப்பை வழங்கவேண்டும். இந்த விடயத்தில் ஷாஃபிக்கு எதிராக சதி செய்தவர்களின் பெயர்கள் ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது.
  20. மிக்க நன்றி அல்வாயன். மிக்க நன்றி சுவி ஐயா. சரியாகவே சொல்லியிருக்கின்றீர்கள்............... கழிவிரக்கம் என்னும் சொல்லுக்கு அகராதிகளில் வேறு என்ன என்ன சொற்கள் இருக்கின்றன என்று தேடிய பின்னே, பரிதாபப்படுகின்றேன் என்ற சொல்லை தெரிந்தெடுத்தேன், சுவி ஐயா............👍. அது மிகக் கொடியதே, அதனால் அதை இயன்றவரை தவிர்ப்பதே நலம் என்ற ஒரு எண்ணம் முளை விடக் கூடும் என்றே நினைத்தேன்.......................
  21. மூடிய என் முகம் -------------------------- என் முகமூடியை எப்போதும் நான் இறுகப் போட்டிருக்கின்றேன் அறிவு தெரிந்த அந்த நாளில் இருந்து வீட்டில் பாடசாலையில் வெளியில் வேலையில் இந்த முகமூடி எனக்கு அணியப்பட்டது நானும் இதை விரும்பி ஏற்றேன் ஆகக் குறைந்த ஒரு அடையாள மறுப்பு கூட காட்டாமல் போகுமிடம் எங்கும் இருக்குமிடம் எங்கும் கதைக்கும் இடம் எங்கும் இதை இறுக்கிக் காக்கின்றேன் இப்பொழுதெல்லாம் சில தனிமைகளில் அதை விலக்கி பார்க்கும் போது பரிதாபப்படுகின்றேன் எனக்காக தனி ஆளுமையுடன் பிறந்த உயிர் ஒன்று ஏதோ ஓர் அங்கீகாரம் விரும்பி அல்லது அகங்காரம் கொண்டு பொது ஆளுமை ஒன்றைச் சூடி முகத்தை மறைத்து முடிகின்றதே என்று.
  22. 😌................. உங்களின் அதே வேதனை தான் எனக்கும். கடைசியில் பலரும் இவ்வளவுதானா என்று நினைக்கவைத்து விடுகின்றனர்............😌.
  23. அப்படித்தான் முடிவுகள் தெரிவிக்கின்றன.............. இந்த தேர்தல் முறையில் இப்படியும் நடக்கும்........ முதலில் கட்சி, பின்னர் கட்சிக்குள் இருப்பவர்கள்............
  24. செல்வமும் வென்றதாகவே அறிவிக்கப்பட்டிருக்கின்றது............. Vanni District NPP Selvathambi Thilakanathan – 10,652 Arumugam Jegadishwaran – 9,280 ITAK Thurairasa Ravikumar – 11,215 SJB Rishad Bathiudeen – 21,018 DTNA A Adaikkalanathan – 5,695 SLPP Cader Masthan – 13,511
  25. ஒரே வசனத்தில் எல்லோரையும் சண்டைக்கு கூப்பிட்டிருக்கின்றீர்கள்................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.