ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
Everything posted by ரசோதரன்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
உண்மை தான் ஐலண்ட்............. எனக்கு இங்கு களத்தில் சிலரின் மீது ஒரு பயம் இருக்கின்றது. சில திரிகளுக்குள் நான் போவதே இல்லை, மற்றும் சிலவற்றை சில நிலைகளில் தவிர்த்துவிடுகின்றேன். நேற்று வேறு ஒரு திரியில் கருத்துகள் எழுதப்பட்டது போல எழுதும் வல்லமை எனக்கு கிடையாது. ஆனால் ஈழப்பிரியன் அண்ணா மீது பயம் துளியளவும் இல்லை................🤣. நாங்கள் இப்பொழுது ஒரே ஊர்க்காரர்களாம்................... வன்னியில் நடந்தவை பற்றி சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். கதைகள், நாவல்கள் வாசித்திருக்கின்றேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்து 1989ம் ஆண்டு வெளியேறினேன். அன்றுவரை அங்கு நடந்தவையை வைத்தே நான் அதைச் சொல்லியிருந்தேன்.
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
சில மாதங்களின் முன் அப்பொழுது இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த அல் சஃப்ரி ஒரு மாநாட்டிற்காக ரஷ்யா போயிருந்தார். அப்பொழுது அவர் ரஷ்ய அதிகாரிகளை இனிமேல் இலங்கையர்களை ரஷ்ய படைகளில் இணைக்க வேண்டாம் என்று கேட்டிருந்தார். ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சொல்லியிருந்தார். இது ஒரு செய்தியாக பல ஊடகங்களில் வந்தது. ஆனால் பின்னர் இது சம்பந்தமான செய்திகள் எதையும் நான் காணவில்லை....................😌.............. இந்தச் செய்தி வரும்வரை.
-
நல்லிணக்கம் - சுப.சோமசுந்தரம்
🤣🤣...................... நீங்கள் எழுதியதை வாசித்து சிரித்துவிட்டு, திரும்பவும் வாசித்தேன். 'உயர்தர சைவ உணவு........' என்று எங்கள் ஊர்களில் சில கடைகளில் மதிய நேரத்தில் ஒரு அறிவிப்பு போடுவார்கள், அதே போல இருந்தது நான் எழுதியிருந்தது...............🤣. பிளஸ் - 1, பிளஸ் - 2 வகுப்புகளை இலங்கையில் உயர்தர வகுப்புகள் என்போம். அதற்கு முன்னர் வரும் 10ம் வகுப்பை சாதாரணதர வகுப்பு என்போம். சில வருடங்களின் முன் என்று நினைக்கின்றேன். தமிழில் கலைச்சொற்களை உருவாக்குதலும், அதை பயன்பாட்டில் கொண்டு வருதலும் என்ற பொருளில் ஒரு கட்டுரையை வாசித்திருந்தேன். இலங்கை ஒரு காலத்தில் இதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருந்தது. இன்று அப்படியில்லை...............
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
இப்படி பணம் கொடுத்து இன்னொரு நாட்டுக்கு போவதை சட்டரீதியாக தப்பென்று சொல்லலாம், ஆனால் இதையே மனிதாபிமானரீதியாக ஒரு தப்பென்று சொல்ல முடியுமா, கொழும்பான்................. எங்களில் கூட பெரும்பாலானோர் இப்படித்தானே புலம் பெயர்ந்தவர்கள். இன்றும் அமெரிக்க தெற்கு எல்லையில் இப்படியானவர்கள் உலகெங்கும் இருந்து வந்து சேருகின்றனர். இந்தியர்கள், சீனர்கள், நேபாள மக்கள்,.................... இவர்கள் ஒரு நல்ல வாழ்வைத் தேடித்தான் இங்கு வருகின்றார்கள். அவர்களும் இங்கு வாழட்டும் என்றே நான் நினைக்கின்றேன்................
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பையன் சார், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
வீட்டில் கறிவேப்பிலை, மல்லி தழை வளர்ப்பு
👍.............. இங்கு தென் கலிஃபோர்னியாவில் சில நகரங்களில் வீடுகளில் கறிவேப்பிலை வளர்க்கக்கூடாது என்று ஒரு ஒழுங்குமுறை கொண்டு வந்துவிட்டார்கள். நான் இருக்கும் ஊரில் இந்தச் சட்டம் இன்னும் வரவில்லை, ஆதலால் வீட்டில் சில கறிவேப்பிலை மரங்கள் நிற்கின்றன. கறிவேப்பிலை மரத்தில் ஒரு சிறு பூச்சி வளர்ந்து பெருகுகின்றது என்றும், அவை அப்படியே ஆரஞ்சு மரங்களுக்கு தாவி ஆரஞ்சு மரங்களை நாசப்படுத்துகின்றன என்றும் கண்டிபிடித்து இருக்கின்றார்களாம். இலங்கையில் வீட்டின் முன்பக்கம் கறிவேப்பிலை மரங்களை பொதுவாக வைக்கமாட்டார்கள். வீட்டின் பின்பக்கமே இவை நிற்கும். வேர் ஓடி வீட்டிற்குள் போய் விடும் என்பது போல ஏதோ சொல்வார்கள். அமெரிக்கர்களுக்கு இந்த விசயம் இன்னும் தெரிய வரவில்லை..................🤣.
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
தோற்று முடியும் அந்தக் கடைசிக் கணம் மட்டும் நாங்கள் வென்று கொண்டேயிருக்கின்றோம் என்று சொல்வது போரில் ஒரு விதி போல, வசீ. பொதுவாக இந்த அணுகுமுறையை விளையாட்டுகளில் பார்க்கலாம்.................. It is not over until it is over என்று திரும்ப திரும்ப சொல்லுவோம். நான் பல வருடங்கள் இங்கு சிறுவர்களுக்கு பயிற்சியாளராக இருந்திருக்கின்றேன். எத்தனையோ போட்டிகள் எங்களால் வெல்ல முடியாதவை என்று இடையிலேயே தெரிந்துவிடும், ஆனாலும் பிள்ளைகளை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருப்போம். இதே அணுகுமுறை போர்களில் எதிர்மறையாக பயன்படுத்தப்படுகின்றது. ஆமாம், இதைச் செய்பவர்கள் அதனால் இலாபம் அடைபவர்களே. பெரும்பாலும் இந்த இலாபம் அடைபவர்கள் போர்களில் நேரடியாக ஈடுபடுவதும் இல்லை, எதுவும் இழப்பதும் இல்லை............😌.
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
🤣..................... கமலின் 'குரு' படம் கொன்கோட் தியேட்டரில் ஓடிக் கொண்டேயிருந்தது. நானும் தினமும் அது இன்னமும் ஓடுகின்றதா என்று பத்திரிகையைப் பார்த்து உறுதி செய்து கொண்டேயிருந்தேன். அது போலவே இப்பொழுது இந்தச் சண்டையும் ஆகிவிட்டது. எந்த மூன்றாம் தரப்பையும் ஒரு வேலி அடைப்பதற்குக் கூட நம்பக்கூடாது. நம்பினோர் நட்டாற்றில் நிச்சயம் ஒரு நாள் விடப்படுவார்................... 'கர்மா' என்று ஒன்று இந்த உலகில் உண்மையில் இருக்குதா என்று தெரியவில்லை. ஆனால் இந்தச் சொல்லை நேற்று என் மகள் ஒரு தடவை சொன்னார். அப்பொழுது நான் 'ஹலோ, ஹலோ...........இது ஒன்றும் ஆங்கிலச் சொல் கிடையாது. இது எங்களின் சொல்............' என்று வம்பிழுத்தேன். 'ஆ.........., தெரியும் தெரியும்.....' என்று அந்தக் கதை தொடர்ந்தது. பின்னர் ஊழ்வினை என்று இப்பொழுது ஜெயமோகன் அடிக்கடி எழுதுவது நினைவில் வந்தது. அவர் இது சம்பந்தமாக எழுதும் பல விடயங்களை என்னால் இப்போதைக்கு ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது. இன்று நீங்கள் கர்மா என்கிறீர்கள்................. 'கர்மா நாட்கள்' என்ற தலைப்பும் நல்லாவே இருக்கின்றது............🤣.
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
🤣............... இது நீங்களே என்னை தனித்தனியாக அந்த இரண்டு பக்கங்களிடமும் பிடித்துக் கொடுப்பது போலிருக்கின்றதே................ அமிலமும் காரமும் இல்லாத பச்சைத் தண்ணீர் சார் நான்.................. நாங்களே ஒரு நிரந்தர இடம் இல்லாமல் பரதேசங்களாக அலைந்து கொண்டிருக்கின்றோம்.......... எங்களைப் பிடித்து உங்கள் ஆணவப் போர்களுக்கு ஏன் அனுப்புகிறீர்கள் என்ற ஒரு ஆதங்கம் தான்........
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
🤣................ உங்களுக்கும், கோஷானுக்கும் எதிராக சீமான் தரப்பில் இருந்து ஆஜராகி பதில்தரவே இந்த ராஜன் அம்மான் வந்திருக்கின்றார் என்று நினைத்தேன்................... ஆனால் வந்தவர் அப்படியே காணாமல் போய் விட்டார்........ இங்கு களத்திற்கு ஒரே ஆள் பல பெயர்களுடன், அடையாளங்களுடன் வருகின்றார்கள் என்று இப்பொழுது கேள்விப்படுகின்றேன். இது பெரிய ஆச்சரியமாக இருக்கின்றது............. அப்படி இங்கே என்ன தான் நடக்குது...........😜. நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான முத்தரசன் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். சீமான் காலையில் ஒன்று சொல்கின்றார், மாலையில் இன்னொன்று சொல்கின்றார், அடுத்தநாள் வேறொன்று சொல்கின்றார், அவருக்கே அவர் என்ன சொல்கின்றார் என்று தெரியவில்லை.............. என்று முத்தரசன் கூட்டத்தில் சொல்லியிருந்தார். இன்றோ நாளையோ முத்தரசனுக்கு இருக்குது..............🤣.
-
கதைப்போமா
நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தவுடன் பார்க்க வேண்டும் போல இருக்கின்றது. இந்த வாரம் இங்கு நீண்ட விடுமுறை ஒன்று வருகின்றது. அப்பொழுது நேரம் கிடைத்தால் பார்த்து விடவேண்டும். ஆனால், பொதுவாக விடுமுறை நாட்களில் தான் அதிகமாக ஓடித் திரிகின்றோம்...................😀.
-
நல்லிணக்கம் - சுப.சோமசுந்தரம்
❤️..................... எனக்கு கிடைத்த சில ஆசிரியர்களை நினைக்கவைத்து விட்டீர்கள். நாங்கள் அன்று அங்கே வாழ்ந்த, வளர்ந்த சூழ்நிலையில் பாடத்திட்டத்தை படிப்பித்து முடிப்பதே ஆசிரியர்களுக்கு முடியாத ஒரு காரியம். அதனாலோ என்னவோ, ஒரு ஆசிரியரைத் தவிர வேறு எந்த ஆசிரியரும் எந்த விதமான அறம் சார்ந்த கருத்துகளையோ அல்லது பொதுவான எந்த விடயங்களையும் வகுப்பில் சொன்னதாகவோ அல்லது விவாதித்ததாகவோ நினைவில் இல்லை. சில ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை மிகவும் நன்றாக படிப்பித்தார்கள். உயர்தர கணித ஆசிரியர் ஒருவர் மட்டும் மு. வரதராசனாரின் எழுத்துகளை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருந்தார். அந்த வயதில் நாங்கள் வழி தவறி விடுவோம், நாங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றே அவர் அவற்றை சொன்னார் என்றே நினைக்கின்றேன்.
-
"குமிழி"
👍.............. சித்தர்களின் பாடல்கள் போல எழுதியிருக்கின்றீர்கள், தில்லை ஐயா....................
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
😌................... ஒரு பக்கம் இந்தா, இப்பவே ஏவுகணையை ஏவுகின்றோம், அணுகுண்டை அமுக்குகின்றோம் என்பது. மற்றம் பக்கம் இப்படி அப்பாவி அந்நியர்களை பிடித்து போர்க்களத்திற்கு அனுப்புவது............. ரஷ்ய தலைவரை 'செத்த கிளி' என்று சொல்வது சரிதான்.................... அந்த நாட்களில் எங்கள் ஊரில் வலுக்கட்டாயமாக ஆட்களைப் பிடித்து மொட்டை அடித்து பயிற்சி கொடுத்தது போல.............. நேட்டோவை பிளக்கின்றோம், லண்டனை தொலைத்துக் கட்டுகின்றோம் என்று கங்குவா படத்திற்கு வந்த விளம்பரங்கள் போல இதுக்கு மேலயும் கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.............🫣.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பும்ரா பொய் சொல்லுகின்றார்...................🤣.