Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 👍.......... கோலியும், ரோகித்தும் 8, 17 என்று கூட்டுத்தொகை 8 ஆக வரவேண்டும் என்று எண்ணி எண்ணி அடித்து இருக்கின்றார்கள் போல.............🤣 அந்த நாட்களில் ஒரு புரளி இருந்தது. ஈராக் உதைபந்தாட்ட அணி போட்டிகளில் தோற்றால், சதாமின் மகன் உதய் அந்த அணி வீரர்களை இரும்புச் சங்கிலிகளால் கட்டிப் போடுவாராம் என்று.......... இப்ப ஜெய் ஷா அந்தச் சங்கிலிகளை தேடிக் கொண்டிருப்பார் போல........
  2. @வாலி, நான் உங்களின் கருத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன்...............🤣. முக்கியமாக ஈரானின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கவே கூடாது என்று புடின் எச்சரித்திருப்பதைப் பற்றி........
  3. 👍.......... இந்த தோல்விக்கு பின்னால் இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஒரு சில உலக நாடுகளின் சதி இருக்கின்றது என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் இப்போது சொல்வதற்கில்லை.......... இதற்கு ஆதாரம் என்னிடம் கேட்காதீர்கள்....... எனக்கு தெரிந்த தகவல்களை நான் சொல்கின்றேன். வேண்டும் என்றால் அந்த சில உலக நாடுகள் இங்கு வந்து இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுக்கட்டும்...........🤣........(உபயம்: உதய கம்மன்பில).
  4. 🤣........... குரல்தர வல்ல வல்லுநர் பையன் சார் @வீரப் பையன்26 வந்து, கோலியையும் ரோகித்தையும் அந்தக் குழிக்குள் போட்டு மூடச் சொல்லுவார் என்று தெரிகின்றது.............
  5. ஜெய் ஷா (அமித் ஷாவின் மகன்) உலக கிரிக்கெட் தலைவராகும் இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஏன் இப்படித் தவ்வுகின்றது............... இந்திய சுழல் பந்துவீச்சில் நியூசிலாந்து சுருண்டு போகும் என்று பார்த்தால், இந்திய அணி இப்படி கவிழ்ந்து கிடக்குதே............🫢.
  6. 🤣............. முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன அரசியலைத் துறந்து சினிமா எடுக்க போய்விட்டார். உதய கம்மன்பில பந்துல எடுக்கப் போகும் படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதலாம். ஈஸ்டர் குண்டுவெடிப்பு கதை, சமஷ்டி கதை என்று ஒவ்வொரு வாரமும் தூள் கிளப்புகின்றார் கம்மன்பில............ சமஷ்டியா.............. ஒரு சட்டி கூட எங்களுக்கென்று தனியாக கொடுக்க மாட்டார்கள் எந்த பெரும்பான்மை கட்சிகளும், அரசியல்வாதிகளும்...........
  7. எரியும் ரகசியங்கள் ----------------------------- ஒருவருக்குமே சொல்லாத ஒன்றை உங்கள் ஒருவருக்கு மட்டுமே சிலர் சொல்லியிருப்பார்கள் ரகசியம் பத்திரம் என்று நீங்களும் உங்களின் சில ரகசியங்களை சிலருக்கு மட்டும் சொல்லியிருப்பீர்கள் பத்திரம் என்று வீடு ஒன்று வாங்கும் விசயம் கூட ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அந்த வீட்டை வாங்க முன் இன்னார் இன்னாரை கட்டப் போகின்றார் அதுவும் ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அவர்கள் கட்ட முன்னர் எப்போதும் வெளியே சொல்லி விடாதே என்று சத்தியமும் கேட்டிருப்பார்கள் அந்த வீட்டை வாங்கிய பின் அவர்கள் கல்யாணத்தை கட்டிய பின் சத்திய சோதனை சங்கடம் இல்லை உங்களுக்கு இதைவிட உலகில் உங்களைத் தவிர எவருக்குமே தெரியாத உங்களின் ரகசியங்களும் பலவும் உண்டு சிலருக்கு அவர்களின் எல்லாமே ரகசியங்கள் 'பொத்தர்' என்று பெயர் வைக்கலாம் அவர்களுக்கு வெகு சிலருக்கு அவர்களின் எதுவுமே ரகசியம் இல்லை திறந்த புத்தகம் என்பார்கள் சிலரிடம் நாலைந்து புத்தகங்கள் உண்டு ஒன்றை அப்படியே திறந்து வைத்து விட்டு மூன்றை முழுக்க மூடி வைத்திருப்பார்கள் இப்பொழுதெல்லாம் அடிக்கடி மரண வீடுகளுக்கு போக வேண்டியிருக்கின்றது அங்கே கடைசியில் புகையாக கூண்டினூடு வெளியேற எத்தனை ரகசியங்கள் எவருக்குமே தெரியாமல் எரிந்து போகின்றதோ என்று தோன்றுகின்றது.
  8. உதயநிதி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகிய பின் தான் இப்படியான அற்புதங்கள் எல்லாம் நடக்குது என்று நான் சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள்................😜. முதல் டெஸ்ட் மாட்சை தோற்ற இழுக்கில், இனி இரண்டு டெஸ்ட் மாட்சுகளிலும் சுழல் பந்து வீச்சு மட்டும் தான் போல........
  9. பாஞ்ச் ஐயா அவர்களின் மனைவியார் விரைவில் பூரண சுகமடைய வேண்டும் என்று வேண்டுகின்றேன்!
  10. 🙏............ மிக்க நன்றி உங்களின் நேரத்திற்கும், முயற்சிக்கும்.
  11. அண்ணன்மார்கள் எல்லோருக்கும் வீடுகளில் தேத்தண்ணிக்குள் antifreeze கலக்கப்படப் போகுது..........🤣. நம்ம கவிஞர் செமையான ஒரு ஐடியாவை கொடுத்திருக்கின்றார்...........
  12. ரணிலும், அவரின் துணைவியாரும் மட்டுமே.......... ஆனால் இந்த 16 சமையல்காரர்கள், 40 குடைகள் வேண்டும் என்று ரணிலுக்கு தெரியாமல் ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கேட்டு விட்டார்களாம்............ ரணிலின் செயலாளர் சொன்ன காரணம் இது.............🫣. ஹெலிகாப்டர், பிளேன், கப்பல்,.................. அண்ணன், நீங்கள் வேறு எதையோ ஒன்றை இங்கு எதிர்பார்க்கின்றீர்கள் போல.......😜.
  13. இரண்டு கலன் antifreeze கராஜுக்குள் கிடக்குது............. அதிலும் ஒன்று concentrated..............🤣.
  14. வாகனங்களும், பதியப்படாத வாகனங்களும் தான் இலங்கையில் இப்ப பெரிய பேசும் விடயமாக மாறியுள்ளது. கண்டியிலும் ஒரு வீட்டில் இரண்டு வாகனங்கள், ஒரு பஜீரோ மற்றது பிஎம்டபிள்யூ, பதியப்படாமல் நிற்க, அதிகாரிகள் அதை எடுத்திருக்கின்றார்கள். அதுவும் இன்னொரு முன்னாள் அமைச்சரினது என்கின்றார்கள். அந்த அமைச்சரோ, வழமை போலவே, அவை தன்னுடைய வாகனங்கள் என்று நிரூபித்தால் தான் அரசியலில் இருந்தே விலகுகின்றேன் என்கின்றார்............ பதிவே இல்லாவிட்டால் எப்படி நிரூபிப்பது......... அந்த வீட்டுக்காரர்களும் அவை என்னவென்றே தெரியாது என்கின்றார்கள்............🤨. ஜோன்ஸ்டன் கொஞ்சம் கையும் களவுமாக மாட்டுப்பட்டுவிட்டார். உள்ளுக்குள் அவரின் விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் இருந்துவிட்டது. வேறொரு புதிய திரைக்கதை வசனம் எழுதித்தான் அவர் தப்பிக்கவேண்டும். அரகலிய நேரத்தில் இவரைத் தேடினார்கள், இப்பொழுது தான் பிடிபட்டு இருக்கின்றார். மற்ற நாடுகளில் அரசியல்வாதிகள் எதை எதையோ பதியாமல், சொல்லாமல் இரகசியமாக வைத்திருப்பார்கள். நம்ம நாட்டில் வாகனங்களா..............😜. ரணில் கூட 16 சமையல்காரர்கள், 16 வாகனங்கள், அத்துடன் நாற்பது குடைகளும் கேட்டிருந்தார்........... இவர் என்ன ஹோட்டல் ஆரம்பிக்கப் போகின்றாரா என்று தான் உடனே நினைத்தேன். பின்னர் இந்த வேண்டுகோளை விட இன்னும் அதிகமாக சிரிப்பு வருகின்ற ஒரு காரணத்தை அவரின் செயலாளர் சொன்னார்........... மஹிந்தவிற்கு 16 வாகனங்கள் அவர் வீட்டில் நிற்கா விட்டால், அவரின் உயிருக்கு ஆபத்து காத்திருக்குதாம்............. இலங்கையிலேயே இவரின் உயிருக்கு தான் அதிகூடிய ஆபத்தும் இருக்குதாம் என்று மஹிந்தவே சொல்லுகின்றார்............ அடுத்த ஐஎம்எஃப் கொடுப்பனவின் முன், இந்த வாகன, குடை, சமையல்காரர்கள் போன்ற பிரச்சனைகளை ஐஎம்எஃப் கவனத்தில் எடுத்து, கடும் நிபந்தனைகளை விதிக்க வேண்டும்..........🤣. எல்லாருமே அலிபாபாவும் நாற்பது திருடர்களாகவுமே இருக்கின்றார்கள்..............
  15. எங்களுக்கு அவர்கள் இனவாதிகள்.......... அவர்களுக்கு நாங்கள் இனவாதிகள்............... போதாக்குறைக்கு ஊருக்குள் நாங்கள் சாதியவாதிகள்............ சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் நாங்களும் மார்க்ஸிஸக்காரர்கள் தான், அவர்களைப் போலவே...........😜. மக்கள் இவை எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து, பின்னர் ஒரு கட்சிக்கும் மூன்று வேட்பாளர்களுக்கும் வாக்குகள் போடுவதென்றால்............ ஈலான் மஸ்க் யாருக்கேனும் செல்லக் கூடிய வாக்களிக்கும் எங்கள் சனங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லியன் ரூபாய் பரிசு கொடுக்கலாம்................
  16. மாயபிம்பம் ------------------ ஆரம்பத்தில் தூரத்திலிருந்து அது ஒரு சிலையாக சிற்பமாக தெரிந்தது அப்படித்தான் அது ஒரு அழகு மிளிரும் சிலை என்றும் சொல்லியிருந்தனர் அதுவும் ஒரு காரணம் கொஞ்சம் நெருங்க அது சிற்பம் இல்லை அதில் அங்கங்கே சில செதுக்கல்கள் மட்டும் தெரிந்தது சிலையாக இல்லாவிட்டாலும் வெறும் பாறாங்கல்லாக அப்படியே படுத்தே இருக்காமல் செதுக்கல்கள் இருக்குதே இதுவே இந்நாளில் அரிது என்று இன்னும் இன்னும் நெருங்க பூமியுடன் தோன்றிய அதே கல்லுத் தான் இதுவும் என்று புரிந்தது.
  17. மெதுமெதுவாக தொடுவானம் நோக்கி நடந்து, பின்னர் ஒருநாள் அப்படியே மறைந்தும் போகலாம். ஆனால் அந்தக் கொடுப்பனவு கூட சிலருக்கு வாய்க்காது போல..............
  18. 👍............. ஆளுநர் உரையில் கூட உரையில் எழுதிக் கொடுக்கப்பட்ட திராவிடம், திராவிட நாடு போன்ற சொற்களை ஆளுநர் தவிர்த்தே இருந்தார். இப்பொழுது 'அப்பா குதிருக்குள் இல்லை.........' என்பது போல ஆளுநர் சார்பாக அறிக்கை விடுகின்றனர். இந்த ஆளுநரால் திமுக அரசிற்கு நெருக்கடிகளை கொடுக்கலாம் என்பதே ஒன்றிய அரசின் திட்டம், ஆனால் நடப்பது என்னவோ எதிர்மாறாகவே. ஆளுநர் எதைச் செய்தாலும், அது திமுகவிற்கு ஆதரவாகவே முடிந்துவிடுகின்றது.........🤣. இவரின் ஐந்து வருட பதவிக்காலம் முடிந்து விட்டது. ஒன்றிய அரசு இவரை மாற்றிவிடும் போல.
  19. 🤣........... சரியான கிறுக்கும், கிராக்கியும் பிடிச்ச மனுசன்.................. எவரும் எதிர்பார்க்காத மாதிரி புதுமையாக நல்லதும் செய்யும் இந்த ஆள், அதே போல தேவையே இல்லாத இன்னொன்றையும் செய்யும் இந்த மனுசன். இவரிடம் பரிசு வாங்குகிறவன் மிச்ச வாழ்க்கை முழுவதும் ஒரு செத்த மனிசன்...........
  20. 🤣............ இது என்னுடைய வசனங்கள் ஆயிட்டுதே.............👍.
  21. அனுதாபிகள் --------------------- ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் அனுதாபம் என்றார் இன்னொரு மனிதனும் அதையே சொன்னார் இப்படியே இன்னொன்று இன்னொன்று என அனுதாபங்கள் இலையுதிர் கால பழுத்த இலைகள் போல இடைவெளி இல்லாமல் விழுந்து கொண்டிருந்தன சலித்துப் போன அந்த ஒரு மனிதன் ஒளித்துக் கொள்ள இடம் தேடினான் இன்னும் ஒளித்துக் கொள்ள தேவை வராதவர்கள் இன்னொரு இடம் தேடினர் அவர்களின் அனுதாபங்களை சொல்ல அனுதாபங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது அதைச் சொல்லும் மனிதர்களை.
  22. வணக்கம் வில்லவன்! நீங்கள் இப்பவே எழுதக்கூடியதாக இருக்கும். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.......... '2024ம் ஆண்டு வகுப்பு' என்று ஒன்றை ஆரம்பிக்கலாம் போலத் தெரியுதே...........🤣.
  23. இந்தப் புத்தகம் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடசாலைக் குழுக்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. அரவிந்தசாமி தான் அதன் காரணம் என்று இப்பொழுது தெரிகின்றது...............👍. பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், ஈலன் மஸ்க் இவர்கள் மூவரையும் பற்றிய ஒரு குழுமத்தில் வந்த ஒப்பீட்டில் ஒருவர் இந்தப் புத்தகத்தில் இருந்து சில குறிப்புகளை சொல்லியிருந்தார். இந்த விடயத்தில் ஒரு இம்மியளவு மாற்றம் கூட இனிமேல் உண்டாகப் போவதில்லை என்றாலும் ஒரு தடவை வாசிக்க வேண்டும் போலவே உள்ளது..............👍.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.