Everything posted by ரசோதரன்
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
இந்து தமிழ் இதழே இப்படியான கட்டுரைகளையும் போட ஆரம்பித்திருப்பதே ஒரு மாற்றம் தான்........ பல வருடங்களின் முன்னேயே, எங்கே என்று மறந்து விட்டது, ஷங்கரின் பட/கதை நாயகர்களையும், கதையில் வரும் எதிரானவர்களையும் ஒரு கோடு கீறி பிரித்து ஒரு கட்டுரை வந்திருந்தது. விஷம் தான்........ இவரின் படங்கள் வேற ஒரே ஜிம்மிக் ஷோ, அதை எத்தனை தரம் தான் திரும்ப திரும்ப பார்ப்பது......
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
CrowdStrike என்னும் Cybersecurity மென்பொருள் ஒன்றால் தான் இந்த 'உலக செயல் இழப்பு' ஆரம்பித்துள்ளது. CrowdStrike உலகெங்கும் கணினிகளில் மிகப்பரவலாக உபயோகத்தில் இருக்கும் ஒரு 'பாதுகாப்பு' மென்பொருள். புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டார்கள், அதுவே தப்பாகிவிட்டது........ மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இருந்த ஒரு தவறும் இதனால் வெளியே வந்து உலகையே கொஞ்ச நேரம் ஆட்டிவிட்டது. இரண்டு நிறுவனங்களும் தங்களின் மென்பொருட்களை சரி செய்து விட்டோம் என்கின்றனர். Cheap Labor, Recent Mass Layoffs, No Quality Control.............. என்று ஏற்கனவே கட்டுரைகள் வர ஆரம்பித்து விட்டன........🤣. எவ்வளவோ பார்த்திட்டோம்.......
-
குறுங்கதை 18 -- பூவரசம் வேர்
👍..... இவை எல்லாமே எனக்கு புதிய தகவல்கள், அல்வாயன்..... கும்பமுனி என்ன பாட்டெழுதி வைத்திருக்கின்றாரோ.... அவருக்கும் பூவரசு அறிவு அரைகுறை போல.....🫢. 👍..... துவரம் தடி என்று கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆனால் பார்த்ததில்லை...... ஊரில் மரங்கள், வேலிகள் குறைவு தான் ஒப்பீட்டளவில்.....
-
குறுங்கதை 18 -- பூவரசம் வேர்
நீங்கள் சொன்னவுடன் வீட்டில் பூவரசம் தடி ஒன்று மேலே செருகப்பட்டிருப்பது ஞாபகத்தில் வருகின்றது. நினைத்தே பார்க்க முடியாத கால மாற்றம் ஒன்று........... இப்பொழுது பிள்ளைகளுக்கு அடிப்பதற்காக தடியோ அல்லது பிரம்போ வைத்திருப்பதை நினைக்கவே மனம் மறுக்கின்றது...........
-
மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு
👍..... சரியாகவே இருக்கும் என்று தான் நினைக்கின்றேன். புத்தகங்களை அதனால் தான் அப்படியே நூல்கள் என்று அச்சுத் தொழில்நுட்பம் வந்த பின்பும் சொல்லியிருக்கின்றார்கள் போல.........👍.
-
குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
அதுவும் எவ்வளவு விரைவாக மாறுகின்றார்கள்.......... செல்லப்பிராணிகளை தவிர்த்து வந்ததிற்கு ஒரு பெரிய காரணம் அவை போய்ச் சேர்ந்தவுடன் அந்த துக்கம் வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்ற பயமுமே. ஆனால் இப்பொழுது நடைமுறை வேறு என்று தெரிந்துள்ளது.....
-
குறுங்கதை 17 -- நளபாகம்
🤣............ கவிஞரே, நீங்கள் எங்கே சுற்றினாலும் எங்கே வருகிறீர்கள் என்று தெரிகின்றது............😜. என்றாவது நீங்கள் என் வீட்டிற்கு வந்தால், அன்று என் வீட்டில் உங்களுக்கு இப்படி ஒரு பதில் கிடைத்தால்.......... தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடித் தப்பி விடுங்கள்...............🤣.
-
குறுங்கதை 18 -- பூவரசம் வேர்
மிக்க நன்றி ஏராளன். பிளாஸ்டிக்கால் புற்றுநோய் வருகுது என்று சொன்ன பின், யார் சொன்னார்கள் என்று நான் தேடிப் பார்க்கவில்லை, இங்கு பல விதமானவற்றால் செய்த பல பொருட்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. நான்ஸ்டிக் பாத்திரங்களும் புற்றுநோயை உண்டாக்கும் என்ற செய்தி வந்து அவையும் பின்னுக்கு போய்விட்டன. எவர் சில்வர் பாத்திரங்கள் பற்றி இன்னமும் செய்தி எதுவும் வெளியில் வரவில்லை என்று நினைக்கின்றேன். முடிந்தளவிற்கு மரம், நார், ஓலை போன்றவற்றால் செய்த பொருட்களை பாவித்தால், இவர்களின் ஆராய்ச்சிகளை நாங்கள் ஆராயத் தேவையில்லை............👍.
-
மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு
நூல்கள் இல்லை, அந்த நாளில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் என்று தான் ஆங்கிலச் செய்திகளில் இருக்கின்றது. ஓலைச் சுவடிகளின் படமும் போட்டிருந்தார்கள். இந்த அறிவிப்பை வெளியிட இதை விட பொருத்தமான ஒரு நேரத்தை யுனெஸ்கோ தேடிக் கண்டு பிடித்திருக்க முடியாது போல.........🤣.
-
குறுங்கதை 18 -- பூவரசம் வேர்
பூவரசம் வேர் -------------------- எனக்குத் தெரிந்து பூவரசு மரத்திற்கு ஒரே ஒரு பயன் தான் அன்று இருந்தது. இலையைப் பிடுங்கி, நுனியைக் கிள்ளி விட்டு, அதைச் சுருட்டி, பீப்பீ செய்து ஊதுவது தான் எனக்குத் தெரிந்திருந்த அந்த ஒரு பயன். ஆட்டுக்கு போதிய குழை இல்லாத நாட்களில், கிடைக்கும் சில முள்முருங்கை, கிளிசரியா குழைக்குள் நடுவில் பூவரசம் குழையை வைத்து ஆடுகளைப் பேய்க்காட்ட சில தடவைகள் முயன்றிருக்கின்றேன். பூவரசங்குழை வீட்டிலும், வெளியிலும் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் ஆடுகள் அறிவுள்ளவையாக இருந்தன. பூவரசம் குழை குப்பைக்குள் மட்டுமே போய்க் கொண்டிருந்தது. பின்னர் ராதிகா 'பூவரசம் பூ பூத்தாச்சு.................' என்று அறிமுகமானார். பூவரசு திடீரென்று கொஞ்சம் அழகாகத் தெரிந்தது. அதில் இருந்த மஞ்சள் பூ கண்ணுக்கு தெரிந்தது. பச்சை இலைகள் எப்போதும் பசுமையாக இருந்ததும் தெரிந்தது. பூவரசம் மரங்கள், எவரும் அவைகளைக் கவனிக்காமல் இருந்தாலும் கூட, ஒரு கவலையும் இல்லாமல் எப்போதும் செழிப்பாகவே இருந்தன. சமூக ஊடகங்கள் மிகப் பிந்தியே எனக்கு அறிமுகமானது. அதுவும் ஒரே ஒரு ஊடகம் மட்டுமே. ஆனால் ஒரே ஒரு சமூக ஊடகமே ஒரு மனிதனுக்கு ஒரு வாழ்நாளில் போதும். மேலும் ஒருவர் எவ்வளவு தான் பிந்திச் சேர்ந்தாலும், சுழற்சி முறையில் வந்து கொண்டிருக்கும் பதிவுகளால், பிந்திச் சேர்ந்தவரும் முந்திச் சேர்ந்தவர்கள் போலவே சமூக ஊடகங்களில் ஒரு பூரண நிலையை மிக விரைவில் அடைந்தும் விடுகின்றார். பூவரசின் பயன்கள் என்ன என்னவென்று கும்பமுனி சித்தர் எழுதிய பாடல் ஒன்று சமூக ஊடகம் ஒன்றில் வந்தது. அகத்திய முனிவரைத் தான் கும்பமுனி என்றும் சொல்வார்கள். சுருக்கமாகச் சொன்னால் பூவரசு ஒரு ஆயுர்வேத மருந்தகம் என்று அந்தப் பாடல் சொல்கின்றது. பூவரசின் பச்சை இலை, பழுத்த இலை, பட்டை, வேர், பூ, விதை இவை எல்லாமே மருந்து என்றும், அவை என்ன என்ன நோய்களைக் குணப்படுத்தும் என்ற விளக்கங்களும் அதில் இருந்தது. எல்லாமே மருந்து, எல்லாமே நோய் என்கின்ற மாதிரித்தான் சமூக ஊடகங்களில் பதிவுகளும், காணொளிகளும் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஒரு நண்பன் நான் அவன் வீட்டிற்கு போய் இருந்த பொழுது வாழைப்பூ வடை சுட்டுக் கொடுத்திருந்தான். முப்பது வருடங்களுக்கும் மேலாக நாங்கள் ஒருவரை ஒருவர் கண்டிருக்கவில்லை. நான் அவனிடம் போயிருந்த போது அவனுக்கு நீரிழிவு உச்சத்தில் இருந்தது. அவன் இப்போது இல்லை. இந்த விடயத்தில் முறையான ஆலோசனைகளை தகுதியானவர்களிடம் இருந்து பெறுவதே சரியான வழியாக இருக்கும். ஊருக்கு போய் வரும் போது, ஒவ்வொரு தடவையும், சில பொருட்களை கட்டாயம் வாங்கி வருவது ஒரு வழக்கம். சுளகு, இடியப்ப தட்டுகள், இடியப்ப உரல் போன்றவை. நல்ல ஒரு இடியப்ப உரல் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்க, அங்கே ஊரிலேயே ஒரு கடையில் பல இடியப்ப உரல்கள் நீட்டாகத் கட்டித் தொங்க விட்டிருப்பது தெரிந்தது. ஆட்டோவில் எங்கேயோ போய்க் கொண்டிருந்த நாங்கள் அந்தக் கடையடியில் ஆட்டோவை நிற்பாட்டச் சொன்னோம். ஆட்டோக்காரர் மிகவும் தெரிந்தவர், உறவினர் கூட. எங்களுடன் இறங்கி வந்த ஆட்டோக்காரர் நாங்கள் உரல் வாங்குவதை தடுத்துவிட்டார். இந்த உரல்கள் சரியில்லை வேறு ஒரு இடத்தில் நல்ல உரல்கள் விற்கின்றார்கள், அங்கே கூட்டிக் கொண்டு போகின்றேன் என்றார். வீட்டில் இடியப்பம் எப்போதும் நல்லாவே தான் வந்து கொண்டிருந்ததது. இன்னும் நல்ல உரலில் இன்னும் நல்லா இடியப்பம் வரும் போல என்று நினைத்தேன். நல்ல உரல் விற்கிற அந்தக் கடை அயல் கிராமத்தில் இருந்தது, ஆனால் நாங்கள் போன அன்று பூட்டி இருந்தது. பக்கத்தில் இருந்த வீட்டில் கேட்டோம். இப்ப சில நாட்களாகவே பூட்டியிருக்குது என்றார்கள். திரும்பி வரும் போது ஆட்டோக்காரர் நல்ல இடியப்ப உரல் என்ன மரத்தில் செய்வார்கள் என்று எனக்குத் தெரியுமா என்று கேட்டார். எனக்கு உண்மையில் தெரியாது, ஆனால் வேம்பாக இருக்குமோ என்று அவரைக் கேட்டேன். 'பூவரசம் வேர்' என்ற பதில் அவரிடமிருந்து வந்தது. இதைக் கும்பமுனி கூட அவரின் பூவரச மரம் பற்றிய பாடலில் சொல்ல மறந்துவிட்டார். அடுத்த முறை ஊருக்கு போகும் போது பூவரசம் வேரில் செய்த ஒரு இடியப்ப உரல் வாங்கியே தீரவேண்டும்.
-
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை-நீதிமன்றம் அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியைக் கொடுப்பதில் திறைசேரிக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அடுத்த அடுத்த வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டும் விடும். அக்டோபர் மாதமாக இருக்கலாம். அதற்கு முன்னர் சில தேரர்களையும், வீரர்களையும் தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது போல மகிந்த மற்றும் ரணில் கூட்டணி........ வெறும் 50,000 ரூபா பிணையிலேயே வெளியே வந்து விட்டார்.........🫣
-
குறுங்கதை 17 -- நளபாகம்
அப்பவும் படு ஸ்டைலாகத்தான் இருந்திருக்கிறீர்கள்............👍 சமூகக் கல்வியில் பெரிய ஆறு என்று படித்த மகாவலி கங்கை வருடத்தில் முன்னூறு நாட்களுக்கு மேல் கால் பாதம் அளவு உயரத்தில் ஓடிக் கொண்டிருந்தது முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது........
-
‘தமிழன்’ என மார்தட்டும் சமூகம், பாரம்பரிய அடையாளத்தை இழக்கிறதா? அழிவின் விளிம்பில் பனையேறிகள்!
அங்கே கள் இறக்குவதற்கு தடை இல்லை. ஆனால் பலர் இந்தத் தொழிலை இப்பொழுது செய்வதில்லை என்று தான் தெரிந்தது. எங்களூரில் முந்தி கள்ளுத் தவறணை இருந்த இடத்தில், பனங்கூடல் ஒன்றின் ஓரத்தில், இப்பொழுது வீடுகள் வந்துவிட்டன. தவறணை அங்கே எங்கேயும் இல்லை என்றே நினைக்கின்றேன். ஆனாலும், ஊர்ச் சந்திக்கு அருகில் 'தமிழ்க் கடை' என்ற பெயரில் ஒரு புதுக் கடை வந்துள்ளது. பனம் பொருட்கள் பலவும் அங்கே விற்கப்படுகின்றன. கடையில் உள்ளே ஒரு நீட்டு வாங்கில் போடப்பட்டிருக்கின்றது. அந்தக் கடையை நடத்துபவர் பல சமயங்களில் அந்த வாங்கிலில் படுத்தே இருந்தார்.
-
குறுங்கதை 17 -- நளபாகம்
🤣......... கனம் கோர்ட்டார் அவர்களே, ஒரு 'யூ' கதைக்குள் 'ஏ' விசயத்தை அல்வாயன் அவர்கள் புகுத்துகின்றார்............😃. வெங்காயம், முருங்கைக்காய், மட்டி, ................... இப்படி ஒரு வரிசையே இருக்குது போல......😜.
-
‘தமிழன்’ என மார்தட்டும் சமூகம், பாரம்பரிய அடையாளத்தை இழக்கிறதா? அழிவின் விளிம்பில் பனையேறிகள்!
'நெடும் பனை' என்னும் தலைப்புடன் இருக்கும் காட்சன் சாமுவேல் அவர்கள் வலைப்பூ இது. பனை பற்றி வேறு எவராவது இவ்வளவு ஆர்வமாக எழுதியிருக்கின்றார்களா என்று எனக்குத் தெரியாது: https://pastorgodson.wordpress.com/ இந்தப் வலைப்பூவில் அவர் அவரைப் பற்றி எழுதியிருப்பது: பனை மரம் எனது தீராத தேடலின் கரு. அது என்னை அழைத்துசென்ற இடங்களில் மட்டுமே என்னல் வேரூன்ற முடிகிறது. வரும் காலங்களில் பனையோடுகூடிய என் நெடும் பயணம் என்னை எங்கு இட்டுச்செல்லும் என்பதை அறியவே ஆவலாய் உள்ளேன். பனைஓலையில் நான் படைக்கும் ஒவியங்கள், இதுவரை நான் காப்புரிமை பெறாத எனது சொந்த கண்டுபிடிப்புகள், போதகப்பணியிலும், அனுதின வாழ்விலும் நான் சந்திக்கும் அனுபவங்கள் என் ஆன்மீகவாழ்விற்கு ஆற்றிய எதிர்வினையே இவ்வலைப்பதிவு.
-
"பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]"
தில்லை ஐயா, உங்கள் பேரன் திரேனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
குறுங்கதை 17 -- நளபாகம்
🤣............ நான் விபரமான சமையல்காரன் இல்லை. எனக்கும் இது எட்டவே எட்டாது, அத்துடன் சமைப்பதில் ஆர்வம் துளியளவும் இல்லை. ஆனால் எல்லோர் சொல்லும் விபரங்களையும் கேட்டு வைத்துள்ளேன். ஏட்டுச் சுரைக்காய் என்று சொல்லலாம்......😃 நீங்கள் சொல்லியிருப்பது சரியே. நீட்டு, குறுக்கு, வட்டம், மெல்லியது என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமையலுக்கு சரியாகப் பொருந்தும் என்று சொல்வார்கள்.
-
‘தமிழன்’ என மார்தட்டும் சமூகம், பாரம்பரிய அடையாளத்தை இழக்கிறதா? அழிவின் விளிம்பில் பனையேறிகள்!
விஷச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்படும் போதெல்லாம் கள் இறக்குவதை அரசு தடை செய்து வைத்திருப்பதற்கு எதிரான குரல்கள் கேட்கும். பின்னர் அவை அமைதியாக அடங்கிவிடும். சமீபத்தில் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வந்திருந்த கட்டுரை ஒன்று கீழே உள்ளது. இதை காட்சன் சாமுவேல் அவர்கள் எழுதியிருந்தார். https://www.jeyamohan.in/202235/ ******************************************************** பனை மரம், கள்: ஒரு விண்ணப்பம்: காட்சன் June 29, 2024 புதுக்கோட்டை மாவட்ட வேளாண் கூட்டமைப்பு செயலாளர் நடராஜன் அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பனை மர கள் நிபந்தனையின்றி விற்க அரசு அனுமதிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சங்க காலம் துவங்கி, தற்போது வரைக்கும் கள் மருந்தாகவும் உணவாகவும் இருப்பதை அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுரேஷ்குமார் அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் பாலசுந்தரம் அவர்கள் ஆஜராகி சமீபத்தில் கள்ள சாராயம் குடித்த பலர் பலியாகியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, இது போன்ற சம்பவங்களைத் தடுக்க பனை மர கள் விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும் என வாதாடினார். இதையடுத்து நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையானது அரசின் கொள்கை ரீதியான முடிவுகளுடன் தொடர்புடையது. எனவே இந்த வழக்கு குறித்து அரசு அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர். அடுத்த கட்ட விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். இந்த நான்கு வாரங்கள் பனை ஆர்வலர்களுக்கும் பனை சார்ந்து இயங்குகிறவர்களுக்கும் நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதுகிறேன். நம்பிக்கையுடன் நமது வாதங்களை முன்வைத்தால், கனிந்துவரும் இக்காலத்தில் மாபெரும் மாறுதல்கள் நிகழ வாய்ப்புண்டு. அரசு தனது கொள்கை முடிவினை மாற்ற மக்கள் ஒன்று திரள வேண்டும். மக்களின் கோரிக்கைகள் அரசிடம் மிக வலிமையாக முன்னெப்போதும் இல்லாதவைகையில் ஆதாரங்களுடன் எடுத்து வைக்கப்படவேண்டும். ஒரு குறிப்பிடத் தகுந்த அசைவை இந்த நான்கு வாரங்களுக்குள் நம்மால் உருவாக்க முடிந்தால், மிகப்பெரும் மாற்றத்திற்கு வித்திடுகிறவர்களாக இருப்போம். ஒரு பண்பாட்டு அசைவை நேரில் காணும் பெறும்பேறு கிட்டும். பனங்கள், மரபு பனை மரக் கள் அல்லது பனங்கள் சங்க காலத்திலிருந்தே உணவாகவும் மருந்தாகவும் களிப்புண்டாக்கும் உற்சாக பானமாகவும் இருந்து வந்திருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில், தங்கள் வெளிநாட்டு மதுவை விற்பனை செய்வதன் மூலம் அபரிமிதமாக வரி வசூலிக்க முடியும் என நம்பினர். ஆனால், இவ்வித கடுமையான போதைக்கு பழகாத தமிழக மக்கள் ஆங்கிலேயரின் போதை வஸ்துக்களை விரும்பவில்லை. உற்சாகமளிக்கும் மருந்தான கள் கைவசமிருக்கையில் வெளிநாட்டு மதுவினை எவரும் சீண்டிக்கூட பார்க்கவில்லை. வரி வசூல் பாதிக்கும் என்ற ஒற்றைப் பார்வையில் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள், பனை மர கள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இந்தியா சுதந்திர அடைந்த பின்பு, தமிழகத்தில் கழக ஆட்சியில் மீண்டும் இருமுறை கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. இம்முறை கள்ளுக்கடைகளுக்கு, பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் பதனீர் இறக்கி கொடுக்கவேண்டும் என்றும், பனையேறிகள் தாமே கள் இறக்க அனுமதியில்லை என்றும் கூறப்பட்டது. பனையேறிகளிடம் வாங்கும் பதனீரை கள்ளுக்கடையில் வைத்து “கள் உறை” ஊற்றி புளிக்கச் செய்து கள்ளாக்கி விற்பனை செய்யப்பட்டது. இக்கடைகளில் பல்வேறுவிதமான போதை அளிக்கும் தாவரங்கள் மற்றும் மாத்திரைகள் சேர்க்கப்பட்டன என்ற கருத்துக்கள் பரவலாக இருக்கின்றன. இப்படித்தான் கள்ளில் கலப்படம் உருவாகியது. கள்ளுக்கடை என்பதை போதைக்கான ஒரு இடமாக சுவீகரிக்கும் போக்கு தமிழகத்தில் மேலோங்கியிருக்கிறது. அது உண்மைதான். இன்றும் டாஸ்மாக்கிற்கு எதிராக கள்ளுக்கடை திறக்கவேண்டும் என்பதும், கள்ள சாராயத்தை ஒழிக்க கள்ளுக்கடை திறக்கவேண்டும் என்பதும் இவ்வித நிலைப்பாட்டில் இருந்து வருகின்ற எண்ணங்களே. அவ்வித எண்ணங்களுக்கு சற்றும் பொருந்தா தொலைவில் இருப்பது பனை மரக் கள். பனை மரக் கள், கடைகளுக்கு வரும்போது அங்கே வருகின்ற “குடிகாரர்களை” திருப்திபடுத்தும் நோக்கில் போதையேற்றம் செய்யப்படுகின்றது. அப்படி போதையேற்றும் சூழலில் பலவித கலப்படங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்கின்றன. கள் விஷமாகிவிடும் நிகழ்வுகள் இப்படிப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட கள்ளுக்கடைகளிலேயே நடைபெறும். ஆகவே கள்ளுக்கடை என்ற ஒரு பிரம்மாண்ட தேவையற்ற, போலிகளை உருவாக்கும் வாய்ப்புள்ள கள்ளுக்கடைகளை திறப்பதை குறித்த தீங்கினை மக்கள் உணரவேண்டும். கள் இறக்குதல், பருகுதல் பகிர்ந்தளித்தல் – பனையேறியின் சுதந்திரம் . தான் இறக்கும் கள்ளினை தானே அருந்தவும் விற்பனையும் செய்ய இயலாத நாடு என்ன சுத்தந்திர நாடா? கருத்து சுதந்திரம் பேசுகிறவர்கள் உணவு சுதந்திரம் பேச முன்வராதது கொள்கை தடுமாற்றமன்றி வேறென்ன? ஒரு பனையேறிக்கு பனை மரத்தில் கள் கலயம் கட்டவும், அதிலிருந்து தனக்கு உரிய கள்ளை எடுத்துக்கொள்ளவும், எஞ்சியவற்றை விற்பனை செய்யவும் முழு உரிமை உண்டு. பனைமரத்தடி கள் விற்பனை – சரியான எளிய முன்னுதாரணம் பனை மரங்களில் ஏறி கள் இறக்கும் பனை தொழிலாளியே பனை மர கள் விற்பனையை செய்யும் அதிகாரம் பெற்றவர். அவரே அவரது கள்ளிற்கு பொறுப்பு. பனை மரத்தின் கீழ் கிடைக்கும் கள்ளில் வேறு போதை ஏதும் இடவேண்டிய அவசியம் ஒரு பனையேறிக்கு இருக்காது. விருப்பமுள்ளவர்கள் வந்து நேரடியாக வாங்கிச் செல்லுவார்கள். வீட்டில் ஆப்பத்திற்கும், கோழி குழம்பிற்கும் வேறு வகையான உணவுகள் தயாரிப்பதற்கும், சூட்டை தணித்து உடல் குளிர்ச்சிபெறவும், வயிறு மற்றும் தோல் சம்பத்தமான நோய்களுக்கு மருந்தாகவும் மக்கள் இதனை வாங்கிச் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. கள் – நகர்புற மக்களுக்கு வேண்டாமா? கூழுக்கும் ஆசை மீசைக்கு ஆசை என்ற நிலை தான் இது. கள் வேண்டுமென்றால் பனை மரம் வேண்டும். பனை ஏறுகிறவர்கள் இருந்தாலே பனை மரக் கள் கிடைக்கும். நகர்புறத்தில் கள்ளுக்கடைகள் திறந்தால் அவை பனை மரக்கள்ளாக இருக்காது. மக்களை ஏமாற்றும் ஒரு போலி கடையாகவே இருக்கும். ஆனால் நகரங்களிலும், புறநகர்பகுதிகளிலும் ஏராளமாக பனை மரங்கள் இருக்கின்றன. கள் விற்பனை செய்ய அரசு எடுத்திருக்கும் கொள்கை முடிவு தளர்த்தப்பட்டால், இவ்வித மரங்களில் இருந்து பனங்கள் இறக்கி விற்பனை செய்ய முடியும். பனங்கள் – வேலை வாய்ப்பு பெருக்கும் அரசு தன் கள் தடைச் சார்ந்த “கொள்கை முடிவினை” மாற்றினால். தமிழகம் முழுக்கவே சுமார் 10 லெட்சம் இளைஞர்களுக்கு உடனடியாக சுயதொழில் செய்ய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தமிழகத்தில் தற்போது 5 கோடி பனை மரங்கள் இருக்கின்றன என வைத்துக்கொண்டாலும், நேரடி மற்றும் மறைமுகமாக பல்வேறு வாலைவாய்ப்புகள் பெருகும். குறிப்பாக அதிக பனை மரங்கள் ஏறும்போது, ஓலைகள் மற்றும் பனை நார் பொருட்களாலான தொழில்கள் புத்துயிர் பெறும். நெகிழி பிரச்சனிகளை கட்டுக்குள் கொண்டுவர இது முக்கிய காரணியாக இருக்கும். கள் – கட்டுப்படுத்தப்பட்ட விற்பனை அரசு தற்போது பரிசீலிக்கவேண்டிய காரியங்கள் கள் இறக்க பனையேறுகிண்றவர்கள் அனைவரும் முறையாக லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும். (லைசன்ஸ் எளிமையாக கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும்) பனை மரம் ஏறுகிறவர், தான் கள் இறக்கும் பனைமரங்கள் இருக்குமிடங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள்ளேயே விற்பனை செய்யவேண்டும். மணி நேர கள் விற்பனை: பனை மரத்திலிருந்து இறக்கிய கள் சுமார் இரண்டு மணிநேரம் மிக நல்ல தரத்தில் இருக்கும். ஆகவே, காலை 6 – 8 மணி வரைக்கும், மாலை 4 – 6 மணி வரைக்கும் என அந்தந்த மாவட்டத்திற்கு என உகந்த நேரங்களை தெரிவு செய்யலாம். 100 நாள் கள் விற்பனை திட்டம்: ஒவ்வொரு மாவட்டமும் அவர்களுக்கு உகந்த 100 நாட்களை கள் விற்பனை நாட்களாக தெரிவு செய்யவேண்டும். இது காவல்துறை, பனையேறிகள் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகளுக்குமுள்ள உறவினை சீர்படுத்தும். ஒருவருக்கு 1 லிட்டர் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி: பனையேறியிடமிருந்து ஒருவர் ஒரு லிட்டர் கள் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கவேண்டும். பனையேறி அல்லாதோரிடம் ஒரு லிட்டருக்கும் அதிகமான கள் காணப்பட்டால் அவர்களை முறைகேடாக கள் வைத்திருப்பவர்கள் என காவல்துறை கைது செய்யலாம் பனை ஏறுகின்ற ஒவ்வொரு பனையேறியும் அந்தந்த கிராம முன்னேற்றத்திற்கு என்று குறைந்தபட்ச தொகையினை நிர்ணயித்து அதனை முன்பணமாக செலுத்த ஊக்கப்படுத்தலாம் பனையேறி ஒருவர் விற்கும் கள்ளில் ஏதும் கலப்படம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், வாழ்நாளில் அவர் மீண்டும் பனைமரம் ஏறாதபடி தண்டனை வழங்கலாம். (இதைவிட பெரிய தண்டனை ஒரு பனையேறிக்கு கிடையாது) மேலும் சில கருத்துக்கள் அரசு கவனத்திற்கு பனையேறிகள் என்பவர்கள் ஒற்றை ஜாதி கிடையாது. தமிழகம் முழுக்க எந்த ஜாதியைச் சார்ந்தவராகவும் ஒரு பனையேறி இருக்கக்கூடும். பனையேறிகளை கண்ணியத்துடன் நடத்தும் பொறுப்பு காவல்துறைக்கும் அரசுக்கும் உண்டு. உணவை பகிர்ந்தளிக்கும் உழவரைப் போன்று என ஒரு புரிதலுக்காக சொல்லலாம். அதற்கும் ஒரு படி மேல் நின்று பணி செய்கிறவர்கள் இவர்கள். பனையேறிகளை குற்றப்பரம்பரையினர் போன்று கையாளுகின்ற தன்மையினை காவல்துறை உடனடியாக கைவிடவேண்டும். பனையேறிகளுக்கு இழைத்த ஒட்டுமொத்த கொடுமைகளுக்கும் இழிவுகளுக்கும் பரிகாரமாக தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு தன்னை சீர்தூக்கி பார்த்து செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். பொதுவெளியில் பனையேறிகளிடம் மன்னிப்பு கோருவது நன்று. மக்கள் கவனிக்க கள் எனபதை உணவு, மருந்து மற்றும் நம் உரிமை என பாருங்கள். பனையேறிகளை தேடிச்சென்று சந்தியுங்கள். அவர்களிடம் நேரடியாக எதையும் வாங்குங்கள். பனையேறிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருங்கள். பனையேறிகளின் பிரச்சனையில் ஓங்கி குரல் கொடுங்கள். இன்னும் நான்கு வாரத்தில் தமிழக மக்களின் தீர்ப்பே சிறந்த தீர்ப்பாக ஐக்கோர்ட்டு சொல்ல வாய்ப்பிருக்கிறது. பனையேறிகளின் கவனத்திற்கு உங்கள் தொழில் உயர்வானது. நீங்கள் உயர்வானவர்கள். நீங்கள் உங்களை எவருக்காகவும் கீழிறக்கிக்கொள்ளாதீர்கள். கட்சிகளை கடந்து ஜாதிகளைக் கடந்து பனை சார்ந்த உறவுகளை கட்டியணைத்து அலையென புறப்படுங்கள். கள் நமது உணவு – கள் என்பது தமிழர் உணர்வு கள் நமது உரிமை கள் உண்பேன் என்பது உரிமைக் குரல் கள் விற்பேன் என்பது விடுதலை பயணம் அனைத்து நலங்”கள்” பெற்றிட இதனை தவறாது பகிருங்கள் பனை திருப்பணி. காட்சன் சாமுவேல் 9080250653
-
குறுங்கதை 17 -- நளபாகம்
🙃............. தில்லை ஐயா, நான் இன்னும் பல்லாயிரம் பிறவிகள் எடுத்தாலும் இந்தளவிற்கு என்னால் வரவே முடியாது. நீங்கள் 'வேற லெவல்' தில்லை ஐயா............ நீங்களும் அக்பரில் தானே சாப்பிட்டு இருப்பீர்கள்...... அதற்குப் பிறகா, போதுமடா என்று, சமைக்கப் பழகினீர்கள்.......🤣 🤣............. நீங்கள் சொன்ன பின் ஒரு சந்தேகம் வருகுது தான். எல்லா 'பீசுகளையும்' அவனே சாப்பிட்டு விட்டானோ........ ஆனால் குழம்பில் ஒரு அசைவ மணம் கூட இருக்கவில்லை.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
🤣......... என்ன பையன் சார்........ இவர் கடைசியில் நியூயோர்க் பிட்ச் மாதிரி ஆகிவிட்டாரா..... தூக்கிப் போட்டிட்டு அடுத்ததிற்கு காத்திருப்போம்........
-
குறுங்கதை 17 -- நளபாகம்
👍......... நீங்கள் சொல்வது போலவே சிலர் இருக்கின்றார்கள், அண்ணை, மிக நல்ல சமையல்காரர்கள். வேறு சில ஆண்களும் சமைப்பார்கள் தான், ஆனால் தரம் சராசரிக்கும் கீழே தான். பலர் சுத்தம்......... 🤣........ மேலே சொன்னதை விட, சுடு தண்ணீர் வைத்து விட்டே, எத்தனை குமிழிகள் வந்தாப் பிறகு அதை இறக்க வேண்டும் என்று கண்கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டு நிற்கும் சில ஆண்களும் இருக்கின்றார்கள்........... இந்த வகுப்பு தான் என்னுடைய வகுப்பு......🤣....... ஆனால் படைத்தவன் காப்பாற்றிவிட்டான்...............
-
குறுங்கதை 17 -- நளபாகம்
🤣..... கோவாவில் குழம்பு வைத்த அவர் அடிக்கடி இப்படியும் கேட்டுக் கொள்வார்: பத்து நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கிற ஒரு சாப்பாட்டை இரண்டு மணித்தியாலம் எடுத்து சமைக்க வேண்டுமா என்று.
-
குறுங்கதை 17 -- நளபாகம்
நளபாகம் --------------- நல்ல கைப்பக்குவம் உள்ளவர் வாழ்வில் துணையாக கிடைத்தால் அது பெரும் அதிர்ஷ்டமே. மூன்று வேளைச் சாப்பாட்டிற்காகத் தான் வாழ்க்கையில் இந்த ஆட்டம் எல்லாம் என்று நடிகர் சிவாஜி கணேசன் சொன்னதாகச் சொல்லுவார்கள். அவரையும், அவருடைய மகன்களையும் பார்த்தால், அவர்கள் மூன்று வேளைகள் தான் சாப்பிட்டிருக்கின்றார்கள் என்று சொல்ல முடியவில்லை. 'எந்தக் கடையில் நீ அரிசி வாங்கினாய்.......' என்ற பாடல் வரிகள் அவர்களுக்காகவே எழுதப்பட்டும் இருக்கின்றது. இதில் இருக்கும் ஒரு சிக்கல் என்னவென்றால், கைப்பக்குவம் உள்ளவர் அவசரமாக சில வாரங்களுக்கு வேறெங்கும் போக வேண்டி வந்தால், வீட்டில் இருக்கும் மற்றவர்களின் நிலை என்ன என்பது தான். அக்கம்பக்கத்தில் நண்பர்கள், உறவுகள் இருப்பார்கள். அவர்கள் கொடுப்பார்கள் கூட. ஆனால் அந்தப் 'பக்குவம்' அங்கே இருக்காது. கொண்டு வந்து கொடுப்பவர்களிடம் வேண்டாம் என்று சொல்ல முடியாது, ஆனால் கொடுப்பது எல்லாவற்றையும் வாங்கி வீட்டில் வைத்தாலும், அவற்றை சாப்பிடவும் முடியாது. சில நேரங்களில் எதையுமே சாப்பிடமுடியாது. பல வருடங்களின் முன் வீட்டில் வந்து நின்ற ஒருவர் அன்று இரவுச் சாப்பாட்டிற்கு சம்பல் செய்ய தயாரானார். அவர் ஏற்கனவே ஒரு தடவை சில நாட்களின் முன் சம்பல் செய்திருந்தார். அப்போது மகன் சிறுவன். மகன் நேரே அவரிடம் போய் இன்று நீங்கள் சம்பல் செய்ய வேண்டாம், அம்மாவே செய்யட்டும் என்று சொன்னான். கொஞ்சம் வயதானவர். சத்தம் ஓய சில நிமிடங்கள் எடுத்தது. சில நாடுகளில் நல்ல உணவகங்கள் இருக்கின்றன போல. இங்கு அப்படி இல்லை. இந்திய உணவகங்கள் இருக்கின்றன. ஆனாலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் அவற்றுடன் தாக்குப் பிடிக்க முடியாது. நள மகாராஜா தான் சமையலில் மிகச் சிறந்தவர் என்பார்கள். இன்றும் உலகில் மிகப் பிரபலமான, மிகச் சிறந்த சமையல் வல்லுநர்கள் என்று சில ஆண்களையே சொல்கின்றனர். அன்னதான மடங்கள், விழாக்கள் என்று பெரிய சமையல்களையும் பொதுவாக ஆண்களே செய்து வருகின்றனர். எனக்குத் தெரிந்த வரையில் என் நண்பன் ஒருவன் போல உலகில் எவரும் வட்டம் வட்டமாக தோசை சுட மாட்டார்கள். வட்டாரி வைத்துக் கீறியது போல இருக்கும் அவன் சுடும் தோசைகள். பலவிதமான சமையல்களும் திறமாகவே செய்வான். சந்தேகம் இல்லாமல் அவன் நளனின் வழித் தோன்றல் தான். ஆனாலும் நளனின் வழித் தோன்றல்கள் மிகக் குறைவு என்பதே என் அனுபவம். இந்த வழித் தோன்றல்களுக்கு சரியான உதவி, ஒத்தாசை செய்யக் கூடிய நிலையில் கூட பெரும்பாலான ஆண்கள் இல்லை என்பது தான் நிஜம். 'நீட்டாக வெட்ட வேண்டிய வெங்காயத்தை நீ ஏன் குறுக்காக வெட்டினாய்....' என்று புலம்பி, என்னால் ஒருவர் ஒரு தடவை அமைதி இழந்தார். வெங்காயம் வதங்கி சுருங்கிய பின் நீட்டென்ன குறுக்கென்ன என்ன உள்ளுக்குள் நினைத்தேன், ஆனால் வெளியால் சொல்லவில்லை. இறைச்சி துண்டுகளை முக்கோணங்களாக வெட்ட வேண்டும் என்று சொன்னார்கள். வெளிப்பரப்பளவு கூடுமாம். நாங்கள் சட்டிக்குள் போட்டு அவி அவி என்று அவிக்கின்ற அளவிற்கு இறைச்சி துண்டின் பரப்பளவு ஒரு அரைப் பரப்பாக இருந்தால் கூட நன்றாக அவியுமே என்றும் தோன்றியது. ஆனாலும் மகாராஜாக்களை அமைதியிழக்க செய்யக் கூடாது என்று சத்தமில்லாமல் செங்கோண முக்கோணிகள் செய்வதில் கவனம் செலுத்தினேன். திருமணத்தின் முன் சில பேர்கள் சேர்ந்து ஒரு வீட்டிலோ அல்லது அறைகளிலோ இருக்கும் காலங்களில் எல்லாவற்றுக்குமே அட்டவணை இருக்கும், ஒவ்வொருவரும் சமைக்கும் நாட்கள் உட்பட. இப்படி இருக்கும் போது நாள் கிழமை நட்சத்திரம் எதுவும் பார்க்கப்படுவதில்லை. பெரும்பாலும் அசைவம் தான். அசைவ சமையல் அப்படி இப்படி இருந்தாலும் ஒரு மாதிரி, தக்காளிச் சாறு மற்றும் வேறு சில வஸ்துக்களையும் மேலால் ஊற்றி, சாப்பிட்டு விடலாம். நாலு பேர்கள் சேர்ந்து ஒரு இடத்தில் இருந்தார்கள். அன்று இரவு சமையல் பொறுப்பு இருக்கும் ஒருவர் தவிர மற்ற மூவரும் விளையாடப் போக ஆயத்தமானார்கள். சமையல் செய்ய வேண்டியவர் தொலைக்காட்சி பார்த்தபடியே இருந்தார். இவர்கள் மூவரும் நாலாவது நபருக்கு நீ தான் இன்று சமையல் என்று மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டுப்போனார்கள். விளையாடி விட்டு வந்து, குளித்து விட்டு, மூவரும் சட்டியைத் திறந்தனர். நல்ல பசி. சட்டி முட்ட முட்ட சிவப்பு நிறத்தில் குழம்பு. கோழிக் குழம்பு தான் என்று கரண்டியை விட்டு விட்டு எடுத்தனர். எதுவுமே கரண்டியில் வரவில்லை. சில இலைகள் மட்டுமே கரண்டியில் வந்து கொண்டிருந்தது. என்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது.
-
குறுங்கதை 16 -- அதிகப்பிரசங்கி
👍.... இங்கு களத்திலேயே சுய ஆக்கத்தில் இதே சாயலில் ஒன்று எழுதியிருந்தேன், அக்கா. அதை மறந்தே விட்டேன்...... 'நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்' என்ற தலைப்பில்.
-
குறுங்கதை 16 -- அதிகப்பிரசங்கி
🤣........... வரும் சுவி ஐயா........ புத்தம் புது, இதுவரை வந்தே இருக்காத, நீங்கள் பார்த்தே இருக்காத.......... 'விளம்பரத்தை விட்டு விட்டு கதையை ஒழுங்காக எழுதடா........' என்று எனக்குள் இருந்து ஒரு குரல் சொல்லுது.............🤣.