Everything posted by ரசோதரன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣... ஏதோ ஒரு வழியில் அடாத்தாக கட்டி விட்டு கவனிக்காமல் விட்டால், நியூயோர்க்கில் வீடுகளில் வாழாமல் தெருவில் வாழும் மக்கள் இந்த மைதானத்தில் குடியேறி விடுவார்கள். அவர்களை அங்கிருந்து எழுப்பு என்று ஒரு கட்சியும், எழுப்பாதே என்று மற்ற கட்சியும் அவர்களுடன் சேர்ந்து அங்கேயே குடியேறி விடுவார்கள்............. இங்கு விளையாடிய மூன்று போட்டிகளில் மொத்தமாக ஐந்து ஓட்டங்களை எடுத்த விராட் கோலி இந்த மைதானத்தை உடைக்கும் செலவில் 50%ஐ ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் சொல்கின்றனர்...........😜.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கையில் 'சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்......' என்று சொல்வது மற்றய இடங்களில் 'குட் மார்னிங்...' என்று ஒவ்வொரு நாள் காலையிலும் சொல்வதற்கு ஈடானது. இந்த எம்பி, Hesha Vithanage, அடிக்கடி இப்படி சொல்லிக் கொண்டே இருக்கின்றார். 'ஈஸ்டர் குண்டு வெடிப்பையே நாங்கள் இந்த இழு இழுக்கிறோம், நீ போவியா.......' என்று எங்களின் நாடு அதே சாதாரணத்துடன் போய்க் கொண்டிருக்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விக்கிபீடியாவில் கிடைக்கும் இந்த மைதானம் பற்றிய தகவல்களில் இருந்து: நியூயோர்க்கில் வேறு ஒரு இடத்திலேயே ஒரு நிரந்தர மைதானம் அமைக்கும் திட்டம் இருந்தது. ஆனால் அந்த திட்டத்திற்கு தொடர்ச்சியாக அந்த ஊர் மக்களும், சுற்றுச் சூழல் அமைப்புகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருந்தனர். பின்னர், இன்று மைதானம் இருக்கும் இடத்திற்கு கடைசி நேரத்தில், ஒரு தற்காலிக மைதானம் என்னும் ஒப்புதலுடனேயே, மாற்றினார்கள். இல்லாவிட்டால் இங்கும் எதிப்புகள் காட்டப்பட்டிருக்கும். இந்த மைதானத்தை Modular Architecture முறையில் உருவாக்கிய நிறுவனம் இதே போன்ற பல கட்டமைப்புகளை வே று விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளுக்காகவும் இங்கே செய்திருக்கின்றார்கள். MLC எனப்படும் Major League Cricket இங்கே அமெரிக்காவில் இருந்தாலும், போட்டிகள் பெரும்பாலும் கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, டெக்சாஸ் போன்ற வருடம் முழுவதும் காலநிலை விளையாட்டிற்கு உகந்ததாக இருக்கும் இடங்களிலேயே நடத்தப்படுகின்றது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஊரில் கல்யாண வீட்டிற்கு பந்தல் போடுவது போல..... அந்த ஊர் மக்கள் 'எப்படா இதை கழட்டி எறிவீர்கள்.......... எங்களுக்கு எங்களின் இடம் வேண்டும்' என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள். சந்தனம் மிஞ்சினால் வீட்டில நிற்கிற தென்னை மரத்திற்கும் பூசுவார்களா? மைக்கிரோசாப்ட் சிஇஓ, அடோபி சிஇஓ இப்படி பலர் முதலிட்டிருக்கின்றார்களாம்.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣...... எவ்வளவு மீட்டிங்குகள் என்கிறீர்கள்....... துணை முதல்வரை சந்தித்தே ஆக வேண்டும் வரிசையில் அடம் பிடித்து நிற்கின்றார்கள்.....🤣 ஒரு நாள், ஒரேயொரு நாள், ஒரு 30 நிமிடங்கள் பிந்தி எழும்பினது உலக அரசியலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது........🤣
-
புகைப்படக்கருவி வரலாறு..
நல்ல தகவல்கள் சுவாரசியமாக வாசிக்க கூடியவாறு எழுதப்பட்டிருக்கின்றது. பகிர்விற்கு நன்றிகள். Ibn al-Haytham ( Alhazen) அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்று இருட்டறையில் அடைக்கப்பட்ட பின் தான் இன்னமும் அதிகமாக ஆராய்ச்சிகள் செய்திருக்கின்றார் போல......இந்த உலகத்தை பரிதாபமாகவே பார்த்திருப்பார்.
-
தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த அமித்ஷா - தமிழிசை அதிருப்தி
🤣🤣........... '..... பிட் அடிச்சு ஐபிஎஸ் எக்ஸாம் பாஸ் பண்ணிய பயல்........' அவரு தான் இதுவரை 20000 புத்தகங்களை படிச்சிட்டன் என்று சொல்லிட்டு திரியிறார், இப்படி ஒரே பதிவில அவரை கவிழ்த்திட்டுங்களே...........
-
யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
மிகவும் மனவருத்தமான செய்தி. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அந்த வைத்தியசாலையில் இருக்கும் வைத்தியர் பற்றாக்குறை பற்றியும், அதிக வேலைப் பளு பற்றியும் சமீபத்தில் ஊரிலிருந்து வந்த பின்னர் எழுதியிருந்தேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍........ இனிமேல் 39 ஓட்டத்திற்குள் எந்த அணியாவது விழுமா என்றால், விழவே விழாது என்பது தான் நிஜம். யாராவது அதிர்ஷ்டம் உச்சத்தில் நிற்கும் ஒரு ஆள், ஏதாவது ஒரு சின்ன அணியை, உதாரணம்: பபுவா நியூகினியா, தெரிவு செய்திருந்தால், மரத்திலிருந்து ஒரு தேங்காய் உச்சி மண்டையில் விழுந்தது போல அந்த அணி 38 ஓட்டங்களுடன் அவுட் ஆகக்கூடும்............🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த வரலாற்றுத் தருணத்தில் இருவருக்கு என் நன்றியை சொல்ல நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.............🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍.... 19 பந்துகளிலேயே அடித்து விட்டார்கள்.......🫢 இப்பொழுது இங்கிலாந்தின் நெட் ரன் ரேட் 3.081, ஸ்காட்லாந்தின் நெட் ரன் ரேட் 2.164 ஒரு போட்டியிலேயே இங்கிலாந்தின் வாழ்க்கை ஓஹோவென்று ஆகிவிட்டது......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்கிலாந்து இன்று வென்றால் ஏற்கனவே இருக்கும் ஒரு புள்ளியுடன் சேர்த்து - 3 புள்ளிகள் ஸ்காட்லாந்து - 5 புள்ளிகள் இங்கிலாந்திற்கு இன்னும் ஒரு போட்டி நமீபியாவிற்கு எதிராக இருக்கின்றது. ஸ்காட்லாந்திற்கு இன்னும் ஒரு போட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இருக்கின்றது. இங்கிலாந்து நமீபியாவை வென்று, ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்றால், நெட் ரன் ரேட் வித்தியாசம் தான் tie breaker. இன்றைக்கு இங்கிலாந்து ஓமானிற்கு 5 அல்லது 6 ஓவர்களில் அடித்தால், இங்கிலாந்து சூப்பர் 8 உள்ளே போய்விடும்.
-
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
வழ்த்துகளும் பாராட்டுகளும் துமிலனுக்கு!!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
18 வது போட்டி மேற்கிந்தியா எதிர் உகண்டா, ஜூன் 08 மேற்கிந்தியா - 173/5 உகண்டா - 39/10
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உகண்டா ஒரு போட்டியில் 39 எடுத்திருப்பதால் ஓமானுக்கு அங்கேயும் இடம் இல்லை...... நான் போட்டது பபுவா நியூகினியா என்று நினைக்கின்றேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍.... படு மோசமாக இருக்குதே....... Lowest score எடுப்பார்களோ........... உகண்டா ஒரு போட்டியில் 39 எடுத்திருப்பதால், அந்தப் பெருமை உகண்டாவிற்கு மட்டுமே உரியது...
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓமான் இங்கிலாந்தை சூப்பர் 8 ரவுண்டுக்கு அனுப்பி விட்டுத் தான் தாங்கள் வெளியில் போவார்கள் போலுள்ளது.......ஓமான் 35/7, 9 ஓவர்களில்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣.... இருக்கட்டும் அண்ணை.......ஜெயலலிதா வாஜ்பாஜிக்கு கொடுத்த (பின்னர் கெடுத்த) வாழ்க்கை அப்படியே கண் முன்னால் வந்து போகுது........🤣.
-
தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த அமித்ஷா - தமிழிசை அதிருப்தி
இதுவும் சுற்றுது.......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பதவி ஆசை எல்லாம் கிடையாது, அண்ணை. ஒரு தர்மயுத்தம் தான் நடந்து கொண்டிருக்கின்றது......🤣. (உபயம்: ஓபிஎஸ்)
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எல்லாம் அந்த ஒரு நண்பனுக்காகத்தானுங்க........ எதிர்காலத்தில் களத்தில் நடக்கும் ஒரு போட்டியில் நான் கீழே போனால், கடவுளே இறங்கி வந்தாலும் என்னை பையன் சாரிடமிருந்து காப்பாற்ற முடியாது போல.........🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நெதர்லாந்தும் நல்ல ஒரு அணி என்று தான் சொல்கின்றனர்.........ஆகவே அவர்கள் ஒரு 157 அடிக்கட்டும்.......🤣. பங்களாதேஷ் ஐந்து ஓவர்கள் பந்து வீசியவுடன், இலங்கை இந்த உலகப் கோப்பை போட்டியில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேற்றப்படுகின்றது என்று கமெண்ட்ரியில் சொல்கின்றனர். இப்ப உடனடியாக இந்த விவரத்தை ஏன் சொல்வான்........ கொஞ்சம் ஆறுதலாக சொல்லலாம் தானே.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என காட்ட....... என்று சொல்ல வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன், நிழலி............👍
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🧐.......... பார்த்திட்டன் அண்ணை.... யானை சரிந்தால் குதிரை... அடி மட்டத்திற்கு போகமாட்டம் (அந்த துணிவில தானே கம்பை சுத்திறம்.......🤣).
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூசிலாந்தின் பிரச்சனைக்கு ஒரு இலகுவான தீர்வு இருக்குது........ Batting order ஐ அப்படியே தலைகீழாக மாற்றி விட்டால், அவை ஒரு வல்லிய டீம். கடைசியாக வந்தவர் தான் நல்லா அடிச்சார்......🤭.