Everything posted by யாயினி
-
ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
சரி.இனிமேல் காணொளிகள் போடுவதை தவிர்க்கிறேன்.இப்படி சித்தரிச்சு போட்டால் தான் கூடுதல் வியூஸ் போகும் என்றதனாலும் போடுகிறார்கள்.
-
ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
அனேக விடையங்கள் இப்போ யூருப்காரர்களால் வெளி வருவதனால் யூருப்களை இணைக்க வேண்டிய நிலை.இறப்பதற்கு முன் தன்னுடைய நிலைமைய அந்தப் பிள்ளை பதிவு செய்திருக்கிறார்..இப்படியான இறப்புக்களுக்கு பின்னராவது தமிழ்கடைகள் வைத்திருப்பவர்கள் கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு நடவுங்கள்.
-
மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது!
மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது! written by admin December 7, 2025 மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது! யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில், வரவேற்பு வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ‘அணையா விளக்கு’ போராட்ட நினைவுத்தூபி, இனந்தெரியாத விஷமிகளால் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 7, 2025) மீண்டும் உடைத்து எறியப்பட்டுள்ளது. இந்த நினைவுத் தூபி, செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரியும் ‘மக்கள் செயல்’ எனும் இளையோர்களால் கடந்த ஜூன் மாதம் நடந்த போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்டது. தொடரும் அத்துமீறல்! அமைதி வழியில் நீதி கோரும் இந்த நினைவுத்தூபி, கடந்த ஒக்டோபர் மாதமும் விஷமிகளால் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. அன்றைய தினமே அது மீண்டும் நிறுவப்பட்ட போதிலும், தற்போது இரண்டாவது முறையாக உடைத்து எறியப்பட்டுள்ளது. மக்கள் உணர்வுகளுடனும் போராட்டக் கோரிக்கைகளுடனும் தொடர்புடைய ஒரு நினைவுச் சின்னம் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது கவலை அளிக்கிறது. https://globaltamilnews.net/2025/223798/
-
Heathrow விமான நிலையத்தில் spray தாக்குதல் .
- இயற்கையே ஏன் இந்தக்கோபம்!
இதை கவிதைக் களத்தில் இணைக்க மறந்து வீட்டீர்களா கோபி..?- நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்
நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும் written by admin December 6, 2025 “வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்!” – ஆளுநர் நா.வேதநாயகன். யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாப்பதில் இன்றியமையாத வழுக்கையாற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார். ‘பங்கேற்புச் செயல் ஆய்வின் ஊடாக நீர் பாதுகாப்பு’ (WASPAR) திட்டத்தின் கீழ், வழுக்கையாறு தொடர்பான ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்த இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. 🌊 இயற்கையின் கோபம் அல்ல, நம் தவறு! சுன்னாகத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்தாய்வில் உரையாற்றிய ஆளுநர், காலநிலை மாற்றம் குறித்துக் கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்தார்: வழுக்கையாறு போன்ற இயற்கையான நீரோட்டப் பாதைகள் தூர்ந்து போனதும், ஆக்கிரமிக்கப்பட்டதும், பராமரிப்பின்றிக் கிடப்பதுமே இன்றைய பேரிடர்களுக்கு மூல காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 🗺️ வழுக்கையாற்றின் முக்கியத்துவம் என்ன? யாழ். குடாநாட்டின் உயிர்நாடியாக வழுக்கையாறு திகழ்கிறது. மயிலிட்டித்துறையிலிருந்து அராலித்துறை வரை செல்லும் இந்த வடிகால்: நிலத்தடி நீரைச் செறிவூட்டுகிறது: முறையாகப் பராமரித்தால் மட்டுமே வலிகாமம் பகுதியின் கிணறுகளில் நீர் சுரக்கும். உவர் நீர் ஊடுருவலைத் தடுக்கிறது: கடலின் உப்பு நீர் உட்புகுவதைக் கட்டுப்படுத்துகிறது. வெள்ளத் தடுப்பு: கனமழை காலங்களில் வலிகாமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழாமல் இருக்க, இந்த ஆறு தடையின்றி ஓட வேண்டும். 🛠️ அடுத்து வரும் நடவடிக்கைகள்: உலக வங்கியின் நிதியுதவியுடன் அடுத்த ஆண்டு குளங்களைத் தூர்வாரும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. வழுக்கையாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள குளங்களும் இதில் தூர்வாரப்படும். 🤝 மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆளுநரின் வேண்டுகோள்: “யாழ்ப்பாணத்தின் குடிநீருக்கும் விவசாயத்துக்கும் நிலத்தடி நீரே ஆதாரம் என்பதை உணர்ந்து, எமது நீரின் அளவையும் தரத்தையும் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும்.” யாழ்ப்பாணத்தின் நீர் வளத்தைக் காக்க, இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்! https://globaltamilnews.net/2025/223694/- போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?
கடந்த வருடம் காலவதியான அரிசியைத் தான் குடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல இன்னும் கப்பலில் பொருட்கள் அனுப்ப பட இருக்கிறது என்று செயதிகளில் கேட்க முடிகிறது. கப்பலில் இருந்த பொருட்கள் இலங்கைக்கு அனுப்ப பட்டது என்றால். அவசர நிலையில் எப்படி இலங்கையின் இலச்சினை பைகளில் பொறிக்கப்பட்டது.?- யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
முகப் புத்தகத்திலும் எழுதிப் போட்டு கிடந்தது.தாக்கபட்டு இறந்த இந்த நபரும் அவரது துணைவியாரும் படிக்கும் பிள்ளைகளை தவறான வழிக்கு கொண்டு போகிறார்களாம்.இவரை விட இவரது மனைவியே (போதைகளை விற்று கூடுதலாக) தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் எழுதிஇருந்தது.எதனால் இப்படி நடந்தது என்று யூருப்காரர்களோ , பத்திரிகைகாரர்களோ இவர்களின் அயலவர்களிடம் போய் விசாரித்த போது அவரகளே சொல்லி இருக்கிறார்கள்.இந்தக் குடும்பம் பற்றி.ஊரிலிருப்பவர்களுக்கு இருப்பதை வைத்து வாழ முடியாமலிருக்கிறது.- யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
உங்கள் எழுத்து ஏன் இந்த செய்தியை இங்கு கொண்டு வந்து போட்டேன் என்று இருக்கிறது..- யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
கொட்டும் மழைக்குள் இளைஞன் வெட்டிப் படுகொலை written by admin November 30, 2025 *** யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளாா், திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அதன் பிரகாரம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் , தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் ஆடியபாதம் வீதி ஊடாக தனது வீடு நோக்கி பயணித்த வேளை காவல் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் , திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் அடங்கிய வன்முறை கும்பல் அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து , பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர். தாக்குதலாளிகளிடம் இருந்து உயிரை காக்க வாள் வெட்டு காயங்களுடன் வீதியில் சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி சென்றவரை ,தாக்குதலாளிகள் துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர். ஓடி சென்றவர் வர்த்தகநிலையம் ஒன்றின் முன்பாக விழுந்த போது,துரத்தி வந்த நால்வரும் சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டதில் , இளைஞனின் கால் ஒன்று கணுக்காலுடன் துண்டாட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , நோயாளர் காவு வண்டியில் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் இளைஞன் உயிரிழந்துள்ளாா். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்பகை காரணமாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களில் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் தாக்குதலாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். https://globaltamilnews.net/2025/223286/- வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
இரவா, பகலா செய்திகளை வந்து பார்த்துட்டு தான் போறனான்.உங்கள் செய்தி இணைப்புக்களுக்கு மிக்க நன்றி ஏராளன்.நீங்களும் பத்திரமாக இருங்கள்.- யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்!
யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்! written by admin November 27, 2025 யாழ். பல்கலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கொடிகாமம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின் தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். கோப்பாய் துயிலுமில்லம்! யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். நல்லூர் நினைவாலயத்தில் யாழ்ப்பாணம் ,நல்லூர் மாவீரர் நினைவலையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் பொது சுடரினை ஏற்றி வைத்தார். எள்ளங்குளம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார். சாட்டி துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , தீவகம் சாட்டி துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலம் பொது சுடரினை ஏற்றி வைத்தார். மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று (27) வியாழன் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. -தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) மாலை மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது . மாலை 6.5 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். https://globaltamilnews.net/2025/223152/- மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
லவ் பெயிலியர் அதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பதிவொன்று பார்த்தேன்..🤔- இன்று மாவீரர் தினம்!
- காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து அங்கிருந்த தாயின் 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி பொலிஸாரால் கைது #இலங்கை
எவ்வளவு நல்ல பிள்ளை.ஆரம்பமே இப்படி என்றால்...🤭- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் வீட்டு குட்டி புது வரவுக்கு வாழ்த்துக்கள்.🖐- இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு
இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு written by admin November 25, 2025 தமிழ் திரையுலகில் இசையமைப்பாளா் இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை (copy right) குறித்த சா்ச்சை எப்போதும் சூடான விவாத பொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது தம்பியும் பிரபல இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத் தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாக விளக்கம் அளித்துள்ளார். இளையராஜா தன்னுடைய பாடல்களை சினிமாவில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்டுத் தொடர்ந்து வழக்குப் போடுவது குறித்து கங்கை அமரனிடம் கேட்கப்பட்ட போது . ‘ஆமாம் அண்ணன் கேட்பதில் எந்த தவறும் இல்லையே! அண்ணன் என்ன எதிர்பார்க்கிறார்? அவருடைய பாடல்களை இப்போதுள்ள படங்களில் பயன்படுத்தும் போது ‘இந்தப் பாடல் இளையராஜாவுக்குச் சொந்தமானது’ என்று ஒரு நன்றிக் குறிப்பு போடத்தானே கேட்கிறார்? அப்படிப் போடுவதில் என்ன தப்பு இருக்கிறது? அதைச் செய்யாதவர்கள் இடம்தான் இளையராஜா காப்புரிமை கேட்கிறார்’ என தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். மேலும் ஒரு பாடலை பயன்படுத்தும் போது ஒரு சில வரிகளை மட்டும் பயன்படுத்தினால் அது காப்புரிமை பட்டியலில் வராது. ஆனால் ஒரு பாடலை அப்படியே முழுவதுமாக பயன்படுத்தும் போது அது கண்டிப்பாக காப்புரிமை என்றுதானே வரும்? ‘ பொட்டு வெச்ச தங்கக்குடம், சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா’ போன்ற பாடல்களை எல்லாம் சிலர் பயன்படுத்துறாங்க. குறைவாகப் பயன்படுத்தினால் கூடப் பரவாயில்லை . முழுப் பாடலையும் பயன்படுத்தினால் தான் பிரச்சனையே வருகிறது’ என கங்கை அமரன் தன் வாதத்தை உறுதிப்படுத்தியுள்ளார். https://globaltamilnews.net/2025/223052/- சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?
சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்? written by admin November 23, 2025 கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. விரைவில் விசாரணை நடத்தவும் எஸ்ஐடி திட்டமிட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்கள் 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் தங்க முலாம் பூசி மீண்டும் அதனை மீண்டும் கோயிலுகு கொண்டு சென்றனர். அப்போது அவற்றின் எடை குறைந்ததாக குற்றம் சாட்டு எழுந்தது.. மேலும் அந்த சிலைகளில் இருந்த தங்கம் திருடப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டு கேரள சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் அரசு மீதும், தேவசம் போர்டு மீதும் குற்றம் சாட்டின. இந்த நிலையில் உரிய விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தங்க கவசங்களை புதுப்பிக்கும் செலவை ஏற்றுக் கொண்ட பெங்களூர் தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் முதலில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்திலுள்ள டவுனில் நகைக்கடை நடத்தி வரும் தங்க வியாபாரியான கோவர்தன் நகைக்கடையில் இருந்து 478 கிராம் தங்க நகை மீட்கப்பட்டது. இதற்கிடையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகர் ஜெயராம் மீதும் சர்ச்சை எழுந்தது. 2019-ம் ஆண்டு சபரிமலை ஐய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை வைத்து சென்னையில் நடைபெற்ற ஒரு பூஜையில் அவர் கலந்து கொண்டதே இந்தக் குற்றச்சாட்டுக்கு காரணமாக அமைந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஜெயராம்: “கடந்த 50 ஆண்டுகளாக நான் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தராக உள்ளேன். கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை காட்சிப்படுத்திய பூஜையில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில்தான் அந்த பூஜையில் பங்கேற்றேன். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அது தற்போது இப்படி ஒரு பிரச்சினையை தரும் என நான் நினைத்ததில்லை. உண்மை வெளிவரட்டும். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் வாசு, பத்மகுமார் மற்றும் சிலர் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வுக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜெயராமிடம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட இருப்பதாக வெளியாகும் தகவல் சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Global Tamil Newsசபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத...கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத்…- இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி
இன்னும் பல வருடங்கள் ஆயுள், ஆரோக்கியத்தோடு இருவரும் வாழ வேண்டும்.இதை விட வேறு எப்படி சொல்வது.,மிகவும் நெகிழ்வான சந்திப்பாக அமைந்திருக்கும்.!- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
ஒரு நாட்டுக்கு முதல் தடவையாக வரும் ஒருவர் அதுவும் எங்கள் நாட்டிலிருந்து வருபவர்கள் எதிர் நோக்கும் சட்ட சிக்கல் பற்றி உண்மையாகவே உங்களுக்கு தெரியாது தானா.?.வைத்தியர் அர்ச்சனா ஊர் பாரளமன்றில் எப்படி பேசினாலும் அவர்களுக்கும் பழகி விட்ட போலும், ஆனால் ஒரு புதிய நாட்டுக்கு வரும் போது அனைத்து நடை முறைகளை கடைப்பிடிக்க வேணும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும், அவருக்கும் தெரிந்திருக்கும்.வேணாம்..சில இடங்களில் எழுதுவது சுத்த வேஸ்ட்.- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
நான் ஐ போண் வழியாக வந்து எழுதி பார்த்து விட்டு தான் இதனை எழுதுகிறேன்.நீங்களும் உங்கள் போண் ஊடாகவே யாழில் உள் வந்து எழுத வேண்டிய பகுதிக்கு கீளே உள்ள பெட்டியில் எழுதி விட்டு, மேலே உள்ள பெட்டியில் கொப்பி பேஸ்ட் செய்யுங்கள்.உங்களுக்கு இலகுவாக இருக்கும் என்பதற்காக இதை எழுதுகிறேன்.மற்றப்படி ஒன்றுமில்லை.- யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.🙏- கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன்.
அங்கு ஓரிருவர் கதைத்தால் உடனே கட்சி அரசியலாக்கி இந்த வார கட்டுரைக்கு முதலே எழுதி வைத்திருந்தாரோ? நிலாந்தன்.எடிட் பண்ணும் போது கொஞ்சம் பிழை வருகிறது..பொறுத்துக் கொள்ளுங்கள் ஈழப்பிரியன் அய்யா.மற்றும் ஏராளன். இவரை பற்றி இங்கு ஏதாவது எழுதினால் நமது முகப் புத்தக பக்கம் பெரிய பந்தி, பந்தியாக எழுதி போட்டு விட்டு இருந்து விடுவார்.(அதுவும் இன்பொக்சில்).கடந்த கால அரசியல் , நமக்கே கொஞ்சம் வெறுப்பை தருவது போல் எழுதி போட்டு விட்டுவார்..இப்போ கொஞ்சக் காலத்திற்கு முன் அப்படி ஒன்று வந்து கிடந்தது நான் அதனை நீக்கி விட்டேன்..கமலகாசன் ஒரு திரைப்படததில் பத்திரிகை நிருபராக வருவாரே.இவர்களுக்கு இருக்க கூடிய மரியாதை அவ்வளவு தான்.- “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி
நான் இணைப்பதை ஓரு சிலரவாது பார்க்கிறீர்களே என்று சந்தோசம் சுவியண்ண..🤭- “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி
Posted inStory “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி Posted byBookday04/11/2025No CommentsPosted inStory “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி பப்பர …. பப்பர …. பப்பர … ஒலிச் சத்தம் மாணவர்களின் காதுகளை கிழித்தது. சவ்வு மிட்டாய்காரர் தகரத்தால செய்யப்பட்ட நீண்ட புனல் போன்ற வடிவில் செய்யப்பட்ட ஒலி வாங்கிக்கொண்டு ஊதி கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மாணவர்கள் காசிருப்போர் படையெடுத்து வந்தனர் சவ்வு மிட்டாய் வாங்கிட. ராமண்ணாவின் சவ்வு மிட்டாய்க்கு பெரியவர் முதல் சிறியவர் வரை அடிமை. அவரின் ஊதல் சப்தம் கேட்டாலே பலர் அவர் முன் குவிந்திடுவர் காரணம் அவரது சவ்வு மிட்டாய் மட்டுமல்ல. அந்த சவ்வு மிட்டாயை சுற்றி இருக்கும் மூங்கில் மேலே இருக்கும் பொம்மையின் கைத்தாளத்தை வேடிக்கை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் கூடிவிடும். ராமண்ணா மிகவும் நல்லவர். அவரின் பரம்பரையே சவ்வுமிட்டாய் தொழில் செய்பவர்கள். ராமண்ணா காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சவ்வுமிட்டாய் தயாரிக்க ஆரம்பித்துவிடுவார். சீனி பாகு, லெமன், கலர் முதலியவற்றை சரியான முறையில் கலந்து பக்குவப்படுத்தி அதை இழுத்துப் பார்த்து நீண்ட பெரிய மூங்கிலிலே சுற்றி விடுவார். அதன் மீது ஈக்கள் புகாத வண்ணம் தரமான சவ்வுக்காகிதம் கொண்டு சுற்றிவிட்டு மூங்கிலின் மேலே அழகிய பொம்மை ஒன்றை வைத்து அதற்கு சட்டை, பாவாடை முதலியவற்றை அணிவதோடு பொம்மை காதினில் கடுக்கணும் மூக்கினில் மூக்குத்தியும் பொம்மையின் இரு கைகளிலும் வட்டமான ஜால்ரா கருவி (சிஞ்சா) யை பொருத்திவிட்டு மூங்கிலை தனது தோளிலே சுமந்தபடி 8 மணிக்கெல்லாம் ஆரம்பப் பள்ளியின் வாசலுக்கு வந்து விடுவார். அதன் பின்பு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊர் சுற்றுவது என்று வாடிக்கையாக கொள்வார். ராமண்ணா காலை 8 மணிக்கு ஆரம்பப் பள்ளி வாசல் வந்தவுடன் அவரது பப்பர பப்பர ஓசை முழங்கிடும். ஆரம்பப்பள்ளியின் அருகே ஒருமணி நேரம் வியாபாரம். உணவு இடைவேளையின் போது உயர்நிலைப்பள்ளிஅருகே வியாபாரம் அதன் பின்பு ஊர் சுற்றி வியாபாரம் என வாடிக்கையாக வியாபாரம் செய்பவர். இவரின் ஊதல்சத்தம் கேட்டாலேசிறுவர் சிறுமியர் ஆர்வத்துடன் வெளியே வருவர். ராமண்ணா ராமண்ணா எனக்கு ஒரு வாட்ச், அன்னம், ரயில், வாத்து என மாணவர்கள் அனைவரும் அவரிடம் துளைத்துக் கொண்டு கேட்பர். ராமண்ணா ஒரு மிட்டாய்க்கு ஒரு விலை வைத்திருப்பார் 10 பைசா 20 பைசா 25 பைசா என டிசைனுக்கு தகுந்தவாறு சவ்வு மிட்டாயின் விலை அதிகரிக்கும். அதிகமாக வாட்ச் விற்பனையாகும். ஓசி மிட்டாய் கேட்டு ராமண்ணாவை குழந்தைகள் நச்சரிக்கும். சிறிது சவ்வுமிட்டாயைப் பிய்ந்து அவர்களது கன்னங்களில் ஒட்டி விடுவார். எந்தவித கள்ளம், கபடம் இல்லாது. குழந்தைகளைக் கூட அய்யா அம்மா என்றுதான் அழைப்பார். குழந்தைகளுக்கு ராமண்ணா மீது தனிப்பிரியம் இதுபோன்றுதான் உயர்நிலைப் பள்ளியிலும் விற்பனை.. அதோடு மட்டுமல்லாது ஊர் முழுவதும் வலம் வருவார். ஆண்கள், பெண்கள் என எல்லோரும் தங்களுக்குப்பிடித்த சவ்வுமிட்டாயை விரும்பிச் சாப்பிடுவர். யாரிடமும் கடுகடு என்று விழமாட்டார். யாராவது பையன் ராமண்ணா கடன் கொடுங்கள் நாளைக்கு தருகிறேன் என்றால் தம்பி இந்த வயதில் கடன் வாங்காதீர்கள் அது நல்ல பழக்கம் இல்லை. உங்களுக்கு சவ்வுமிட்டாய் வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அன்புடன் இலவசமாக கொடுப்பார்.இதுவே அவர் வாழ்வின் வாடிக்கையாகிப்போனது. ஒருநாள் காலை தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு காலை 8 மணிக்கு தனது பப்பரப் பப்பர ஓசையை குழந்தைகளுக்கு அறிவித்தார். குழந்தைகள் வழக்கம்போல் சவ்வுமிட்டாய் வாங்க வந்தன. மூங்கிலில் உள்ள குச்சியில் உள்ள பொம்மையை கைத்தாளம் போட வைத்தார். குழந்தைகளும் அந்த பொம்மை போல கைத்தளம் போட்டுக்கொண்டு ஆடத் தொடங்கினார்கள். ராமண்ணா சவ்வு மிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்தபோதே நிலை தடுமாறி கீழே விழுந்தார் சவ்வுமிட்டாய் மூங்கில் கட்டை “டம்“ என கீழே விழுந்தது. சில குழந்தைகள் பயந்து போய் ஓட்டம் பிடித்தன. சில குழந்தைகள் ராமண்ணா ராமண்ணா என்று எழுப்பி பார்த்தனர் .அவர் எழுந்தபாடில்லை. குழந்தைகள் ஆசிரியைரை நோக்கி படையெடுத்தனர்.சார் ராமண்ணா கீழே விழுந்து விட்டார் சார் அவருக்கு என்னாச்சு என்று தெரியவில்லை. குழந்தைகள் மாணிக்கம் ஆசிரியரிடம் சொல்ல அவருடன் கமலா டீச்சரும் சென்றார்.. மாணிக்கம் அருகில் வந்து அவரது கை கால்களை கசக்கி விட்டனர். ஒன்றும் உணர்வில்லை. சுற்றிவர குழந்தைகள் நின்று கொண்டு அழுதவாறு இருந்தன. ராமண்ணாவிற்கு ஒன்றுமில்லை அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனால் சரியாயிடும். நீங்க எல்லோரும் அவரவர் வகுப்பிற்கு போங்க கமலா டீச்சர் அறிவுரை. மனமில்லாமல் கண்கலங்கியவாறே குழந்தைகள் வகுப்புக்குச் சென்றனர். சார் முதல்லே ராமண்ணா வீட்டிற்கு தகவல் தெரிவியுங்கள். ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யுங்கள் மதிவண்ணன் ராமண்ணா குடும்பத்திற்கு தகவல் தந்த பின்பு பள்ளியின்அருகில் தொலைபேசி உள்ள வீட்டிற்குச்சென்று ஆம்புலன்ஸிற்கு போன்செய்தார்.. சிறிது நேரத்திற்கு பின்பு ராமண்ணாவின் உறவுகள் அனைத்தும் பதறி அடித்தபடி பள்ளிக்கு அருகில் வந்தனர். ஆம்புலன்சும் வந்தது. சார் யார் போன் செய்தது? நான் தான் சார். என் பெயர் மாணிக்கம் இந்த ஸ்கூல் டீச்சரா ஒர்க் பண்றேன். மாணிக்கம் அண்ணன் சவ்வுமிட்டாய் வித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து விட்டாருன்னு குழந்தைகள் வந்து சொன்னாங்க அதான் உடனே உங்களுக்கு கால் பண்ணினேன் ஆம்புலன்ஸில் வந்த நர்ஸ் உதவியாளர்கள் ராமையாவை தொட்டுப் பார்த்தார்கள். சார் உயிர் போய் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு மேலே ஆகிருச்சு மாரடைப்பால் உயிர் பிரிஞ்சிடுச்சு. ஆக வேண்டிய காரியத்தை குடும்பத்தில் உள்ளவரிடம் சொல்லி பார்க்கச் சொல்லுங்க. இது இயற்கை மரணங்கிறதுனாலா தாரளமா பிணத்தை வீட்டுக்கு எடுத்து சொல்லுங்க இருந்தாலும் சில பார்மாட்டிகளை முடித்து தருகிறோம். ராமண்ணாவின் மனைவி, மகன் உறவினர் என கதறி அழுதனர். பள்ளிக்கூடம் விடுமுறை அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஏ.இ.ஓ விடம் அனுமதி வாங்கி பள்ளிக்கு விடுமுறை அளித்தார். குழந்தைகள் அழுது கொண்டே தங்களின் வீட்டிற்கு சென்றனர் ராமண்ணாவின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. குழந்தைகள் கனத்த இதயத்துடன் அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர். மாலை ராமண்ணாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. சுடுகாடு எடுத்துச் செல்லப்பட்டது. நீ இறந்த பின்பு உன் பின்னால் வரும் கூட்டமே உன்னை முடிவு செய்யும் என்பார். முஃ ப்தி ஓமர். அதுபோல ராமண்ணாவின் இறுதி சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இவற்றிற்கெல்லாம் காரணம் ராமண்ணாவின் நல்ல உள்ளமும் அவரின் சவ்வுமிட்டாய் ருசியும் தான். மறுநாள் காலை எட்டு மணி ராமண்ணாவின் “ பப்பரப் பப்பர“ ஒலி ஏதும் கேட்கவில்லை. குழந்தைகள் அவர் விற்கும் இடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ராமண்ணா மிட்டாய் செய்து தருவது போன்றும் அந்த பொம்மை தாளமிடுவது போன்ற காட்சிகள் அந்த குழந்தைகளின் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. ஒவ்வொருவராக வந்து அந்த இடத்தை பார்த்துவிட்டு அழுதபடியே பள்ளிக்குள் சென்றனர். இப்படியே ஒரு மாதம் கழிந்தது திடீரென்று மீண்டும் “பப்பரப்பப்பர“ சத்தம் குழந்தைகளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஓடிவந்து பள்ளியின் நுழைவாயில் கேட்டருகே வந்து நின்றனர். ராண்ணாவின் மகன் முருகன் அந்த இடத்தில் சவ்வுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்தார். குழந்தைகள் அவரிடம் செல்ல தயக்கம் காட்டினர். அவரும் அப்பா போல அய்யாவே அம்மாவே வாங்க என்று அன்பாய் அழைத்தார். குழந்தைகள் ராமண்ணா இறந்து போயிட்டாரா? அவரு யாரு உங்க அப்பாவா? உங்க பேரு என்ன? என்பேரு முருகன். நாங்க உங்களை முருகண்ணா என்று கூப்பிடலாமா? தாரளமாக் கூப்பிடுங்க முருகன்னா எனக்கு ஒரு வாட்ச் கட்டி விடுங்க எனக்கொரு மயில் வேணும் ”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதை உணர்ந்த மகன் முருகன் ஒவ்வொருவருக்கும் கண்ணீர் வடித்தபடியே சவ்வு மிட்டாய் விற்பனையை தொடங்கினார். ராமண்ணா : சாரி முருகண்ணா! நாளைக்கும் வாங்க. அப்பா மாதிரியே சவ்வுமிட்டாய் ருசி அப்படியே இருக்கு என்ற குழந்தைகளின் பேச்சு முருகனுக்கு ஆறுதல் தந்தது. பப்பர பப்பர ஒலி மீண்டும் கேட்டது. குழந்தைப்பொம்மையின் கைதட்டல் சிறார்களை மகிழ்வித்தது. எழுதியவர்: – கு. மணி த/பெ:குருசாமி தெற்குப்புதுத் தெரு சக்கம்பட்டி -625512 ஆண்டிபட்டி வட்டம், தேனி மாவட்டம் https://bookday.in/90s-kids-javvu-mittaikarar-tamil-short-story-written-by-k-mani/ - இயற்கையே ஏன் இந்தக்கோபம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.