Everything posted by யாயினி
-
கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன்.
அங்கு ஓரிருவர் கதைத்தால் உடனே கட்சி அரசியலாக்கி இந்த வார கட்டுரைக்கு முதலே எழுதி வைத்திருந்தாரோ? நிலாந்தன்.எடிட் பண்ணும் போது கொஞ்சம் பிழை வருகிறது..பொறுத்துக் கொள்ளுங்கள் ஈழப்பிரியன் அய்யா.மற்றும் ஏராளன். இவரை பற்றி இங்கு ஏதாவது எழுதினால் நமது முகப் புத்தக பக்கம் பெரிய பந்தி, பந்தியாக எழுதி போட்டு விட்டு இருந்து விடுவார்.(அதுவும் இன்பொக்சில்).கடந்த கால அரசியல் , நமக்கே கொஞ்சம் வெறுப்பை தருவது போல் எழுதி போட்டு விட்டுவார்..இப்போ கொஞ்சக் காலத்திற்கு முன் அப்படி ஒன்று வந்து கிடந்தது நான் அதனை நீக்கி விட்டேன்..கமலகாசன் ஒரு திரைப்படததில் பத்திரிகை நிருபராக வருவாரே.இவர்களுக்கு இருக்க கூடிய மரியாதை அவ்வளவு தான்.
-
“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி
நான் இணைப்பதை ஓரு சிலரவாது பார்க்கிறீர்களே என்று சந்தோசம் சுவியண்ண..🤭
-
“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி
Posted inStory “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி Posted byBookday04/11/2025No CommentsPosted inStory “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி பப்பர …. பப்பர …. பப்பர … ஒலிச் சத்தம் மாணவர்களின் காதுகளை கிழித்தது. சவ்வு மிட்டாய்காரர் தகரத்தால செய்யப்பட்ட நீண்ட புனல் போன்ற வடிவில் செய்யப்பட்ட ஒலி வாங்கிக்கொண்டு ஊதி கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மாணவர்கள் காசிருப்போர் படையெடுத்து வந்தனர் சவ்வு மிட்டாய் வாங்கிட. ராமண்ணாவின் சவ்வு மிட்டாய்க்கு பெரியவர் முதல் சிறியவர் வரை அடிமை. அவரின் ஊதல் சப்தம் கேட்டாலே பலர் அவர் முன் குவிந்திடுவர் காரணம் அவரது சவ்வு மிட்டாய் மட்டுமல்ல. அந்த சவ்வு மிட்டாயை சுற்றி இருக்கும் மூங்கில் மேலே இருக்கும் பொம்மையின் கைத்தாளத்தை வேடிக்கை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் கூடிவிடும். ராமண்ணா மிகவும் நல்லவர். அவரின் பரம்பரையே சவ்வுமிட்டாய் தொழில் செய்பவர்கள். ராமண்ணா காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சவ்வுமிட்டாய் தயாரிக்க ஆரம்பித்துவிடுவார். சீனி பாகு, லெமன், கலர் முதலியவற்றை சரியான முறையில் கலந்து பக்குவப்படுத்தி அதை இழுத்துப் பார்த்து நீண்ட பெரிய மூங்கிலிலே சுற்றி விடுவார். அதன் மீது ஈக்கள் புகாத வண்ணம் தரமான சவ்வுக்காகிதம் கொண்டு சுற்றிவிட்டு மூங்கிலின் மேலே அழகிய பொம்மை ஒன்றை வைத்து அதற்கு சட்டை, பாவாடை முதலியவற்றை அணிவதோடு பொம்மை காதினில் கடுக்கணும் மூக்கினில் மூக்குத்தியும் பொம்மையின் இரு கைகளிலும் வட்டமான ஜால்ரா கருவி (சிஞ்சா) யை பொருத்திவிட்டு மூங்கிலை தனது தோளிலே சுமந்தபடி 8 மணிக்கெல்லாம் ஆரம்பப் பள்ளியின் வாசலுக்கு வந்து விடுவார். அதன் பின்பு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊர் சுற்றுவது என்று வாடிக்கையாக கொள்வார். ராமண்ணா காலை 8 மணிக்கு ஆரம்பப் பள்ளி வாசல் வந்தவுடன் அவரது பப்பர பப்பர ஓசை முழங்கிடும். ஆரம்பப்பள்ளியின் அருகே ஒருமணி நேரம் வியாபாரம். உணவு இடைவேளையின் போது உயர்நிலைப்பள்ளிஅருகே வியாபாரம் அதன் பின்பு ஊர் சுற்றி வியாபாரம் என வாடிக்கையாக வியாபாரம் செய்பவர். இவரின் ஊதல்சத்தம் கேட்டாலேசிறுவர் சிறுமியர் ஆர்வத்துடன் வெளியே வருவர். ராமண்ணா ராமண்ணா எனக்கு ஒரு வாட்ச், அன்னம், ரயில், வாத்து என மாணவர்கள் அனைவரும் அவரிடம் துளைத்துக் கொண்டு கேட்பர். ராமண்ணா ஒரு மிட்டாய்க்கு ஒரு விலை வைத்திருப்பார் 10 பைசா 20 பைசா 25 பைசா என டிசைனுக்கு தகுந்தவாறு சவ்வு மிட்டாயின் விலை அதிகரிக்கும். அதிகமாக வாட்ச் விற்பனையாகும். ஓசி மிட்டாய் கேட்டு ராமண்ணாவை குழந்தைகள் நச்சரிக்கும். சிறிது சவ்வுமிட்டாயைப் பிய்ந்து அவர்களது கன்னங்களில் ஒட்டி விடுவார். எந்தவித கள்ளம், கபடம் இல்லாது. குழந்தைகளைக் கூட அய்யா அம்மா என்றுதான் அழைப்பார். குழந்தைகளுக்கு ராமண்ணா மீது தனிப்பிரியம் இதுபோன்றுதான் உயர்நிலைப் பள்ளியிலும் விற்பனை.. அதோடு மட்டுமல்லாது ஊர் முழுவதும் வலம் வருவார். ஆண்கள், பெண்கள் என எல்லோரும் தங்களுக்குப்பிடித்த சவ்வுமிட்டாயை விரும்பிச் சாப்பிடுவர். யாரிடமும் கடுகடு என்று விழமாட்டார். யாராவது பையன் ராமண்ணா கடன் கொடுங்கள் நாளைக்கு தருகிறேன் என்றால் தம்பி இந்த வயதில் கடன் வாங்காதீர்கள் அது நல்ல பழக்கம் இல்லை. உங்களுக்கு சவ்வுமிட்டாய் வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அன்புடன் இலவசமாக கொடுப்பார்.இதுவே அவர் வாழ்வின் வாடிக்கையாகிப்போனது. ஒருநாள் காலை தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு காலை 8 மணிக்கு தனது பப்பரப் பப்பர ஓசையை குழந்தைகளுக்கு அறிவித்தார். குழந்தைகள் வழக்கம்போல் சவ்வுமிட்டாய் வாங்க வந்தன. மூங்கிலில் உள்ள குச்சியில் உள்ள பொம்மையை கைத்தாளம் போட வைத்தார். குழந்தைகளும் அந்த பொம்மை போல கைத்தளம் போட்டுக்கொண்டு ஆடத் தொடங்கினார்கள். ராமண்ணா சவ்வு மிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்தபோதே நிலை தடுமாறி கீழே விழுந்தார் சவ்வுமிட்டாய் மூங்கில் கட்டை “டம்“ என கீழே விழுந்தது. சில குழந்தைகள் பயந்து போய் ஓட்டம் பிடித்தன. சில குழந்தைகள் ராமண்ணா ராமண்ணா என்று எழுப்பி பார்த்தனர் .அவர் எழுந்தபாடில்லை. குழந்தைகள் ஆசிரியைரை நோக்கி படையெடுத்தனர்.சார் ராமண்ணா கீழே விழுந்து விட்டார் சார் அவருக்கு என்னாச்சு என்று தெரியவில்லை. குழந்தைகள் மாணிக்கம் ஆசிரியரிடம் சொல்ல அவருடன் கமலா டீச்சரும் சென்றார்.. மாணிக்கம் அருகில் வந்து அவரது கை கால்களை கசக்கி விட்டனர். ஒன்றும் உணர்வில்லை. சுற்றிவர குழந்தைகள் நின்று கொண்டு அழுதவாறு இருந்தன. ராமண்ணாவிற்கு ஒன்றுமில்லை அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனால் சரியாயிடும். நீங்க எல்லோரும் அவரவர் வகுப்பிற்கு போங்க கமலா டீச்சர் அறிவுரை. மனமில்லாமல் கண்கலங்கியவாறே குழந்தைகள் வகுப்புக்குச் சென்றனர். சார் முதல்லே ராமண்ணா வீட்டிற்கு தகவல் தெரிவியுங்கள். ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யுங்கள் மதிவண்ணன் ராமண்ணா குடும்பத்திற்கு தகவல் தந்த பின்பு பள்ளியின்அருகில் தொலைபேசி உள்ள வீட்டிற்குச்சென்று ஆம்புலன்ஸிற்கு போன்செய்தார்.. சிறிது நேரத்திற்கு பின்பு ராமண்ணாவின் உறவுகள் அனைத்தும் பதறி அடித்தபடி பள்ளிக்கு அருகில் வந்தனர். ஆம்புலன்சும் வந்தது. சார் யார் போன் செய்தது? நான் தான் சார். என் பெயர் மாணிக்கம் இந்த ஸ்கூல் டீச்சரா ஒர்க் பண்றேன். மாணிக்கம் அண்ணன் சவ்வுமிட்டாய் வித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து விட்டாருன்னு குழந்தைகள் வந்து சொன்னாங்க அதான் உடனே உங்களுக்கு கால் பண்ணினேன் ஆம்புலன்ஸில் வந்த நர்ஸ் உதவியாளர்கள் ராமையாவை தொட்டுப் பார்த்தார்கள். சார் உயிர் போய் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு மேலே ஆகிருச்சு மாரடைப்பால் உயிர் பிரிஞ்சிடுச்சு. ஆக வேண்டிய காரியத்தை குடும்பத்தில் உள்ளவரிடம் சொல்லி பார்க்கச் சொல்லுங்க. இது இயற்கை மரணங்கிறதுனாலா தாரளமா பிணத்தை வீட்டுக்கு எடுத்து சொல்லுங்க இருந்தாலும் சில பார்மாட்டிகளை முடித்து தருகிறோம். ராமண்ணாவின் மனைவி, மகன் உறவினர் என கதறி அழுதனர். பள்ளிக்கூடம் விடுமுறை அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஏ.இ.ஓ விடம் அனுமதி வாங்கி பள்ளிக்கு விடுமுறை அளித்தார். குழந்தைகள் அழுது கொண்டே தங்களின் வீட்டிற்கு சென்றனர் ராமண்ணாவின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. குழந்தைகள் கனத்த இதயத்துடன் அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர். மாலை ராமண்ணாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. சுடுகாடு எடுத்துச் செல்லப்பட்டது. நீ இறந்த பின்பு உன் பின்னால் வரும் கூட்டமே உன்னை முடிவு செய்யும் என்பார். முஃ ப்தி ஓமர். அதுபோல ராமண்ணாவின் இறுதி சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இவற்றிற்கெல்லாம் காரணம் ராமண்ணாவின் நல்ல உள்ளமும் அவரின் சவ்வுமிட்டாய் ருசியும் தான். மறுநாள் காலை எட்டு மணி ராமண்ணாவின் “ பப்பரப் பப்பர“ ஒலி ஏதும் கேட்கவில்லை. குழந்தைகள் அவர் விற்கும் இடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ராமண்ணா மிட்டாய் செய்து தருவது போன்றும் அந்த பொம்மை தாளமிடுவது போன்ற காட்சிகள் அந்த குழந்தைகளின் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. ஒவ்வொருவராக வந்து அந்த இடத்தை பார்த்துவிட்டு அழுதபடியே பள்ளிக்குள் சென்றனர். இப்படியே ஒரு மாதம் கழிந்தது திடீரென்று மீண்டும் “பப்பரப்பப்பர“ சத்தம் குழந்தைகளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஓடிவந்து பள்ளியின் நுழைவாயில் கேட்டருகே வந்து நின்றனர். ராண்ணாவின் மகன் முருகன் அந்த இடத்தில் சவ்வுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்தார். குழந்தைகள் அவரிடம் செல்ல தயக்கம் காட்டினர். அவரும் அப்பா போல அய்யாவே அம்மாவே வாங்க என்று அன்பாய் அழைத்தார். குழந்தைகள் ராமண்ணா இறந்து போயிட்டாரா? அவரு யாரு உங்க அப்பாவா? உங்க பேரு என்ன? என்பேரு முருகன். நாங்க உங்களை முருகண்ணா என்று கூப்பிடலாமா? தாரளமாக் கூப்பிடுங்க முருகன்னா எனக்கு ஒரு வாட்ச் கட்டி விடுங்க எனக்கொரு மயில் வேணும் ”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதை உணர்ந்த மகன் முருகன் ஒவ்வொருவருக்கும் கண்ணீர் வடித்தபடியே சவ்வு மிட்டாய் விற்பனையை தொடங்கினார். ராமண்ணா : சாரி முருகண்ணா! நாளைக்கும் வாங்க. அப்பா மாதிரியே சவ்வுமிட்டாய் ருசி அப்படியே இருக்கு என்ற குழந்தைகளின் பேச்சு முருகனுக்கு ஆறுதல் தந்தது. பப்பர பப்பர ஒலி மீண்டும் கேட்டது. குழந்தைப்பொம்மையின் கைதட்டல் சிறார்களை மகிழ்வித்தது. எழுதியவர்: – கு. மணி த/பெ:குருசாமி தெற்குப்புதுத் தெரு சக்கம்பட்டி -625512 ஆண்டிபட்டி வட்டம், தேனி மாவட்டம் https://bookday.in/90s-kids-javvu-mittaikarar-tamil-short-story-written-by-k-mani/
-
போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர் மீது 25 வழக்குகள் நிலுவையில் - பொலிஸார்
போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர் மீது 25 வழக்குகள் நிலுவையில் - பொலிஸார் Published By: Vishnu 14 Nov, 2025 | 03:19 AM போதைப்பொருளை மீட்க சென்ற பொலிசாரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் புதன்கிழமை (12) இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்து சோதனையிட்ட போது , இளைஞனிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டிருந்தனர். குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனிடமும் போதைப்பொருள் இருப்பதாக பொலிஸாருக்கு இளைஞன் கூறியுள்ளார். அதனை அடுத்து குறித்த இளைஞனை கைது செய்யும் நோக்குடன் , நாவற்குழியில் உள்ள இளைஞனின் வீட்டிற்கு பொலிஸார் சென்ற வேளை, வாளினை காட்டி பொலிசாரை அச்சுறுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை இளைஞனை பொலிஸார் மடக்கி பிடித்து , கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர். மேலதிக விசாரணைகளில் , யாழ்ப்பாணத்தில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் குறித்த இளைஞனுக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். Virakesari.lkபோதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர் மீது...போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர் மீது 25 வழக்குகள் நிலுவையில் - பொலிஸார்
-
சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியிருக்கலாம் – டீ.வி. சானக
சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியிருக்கலாம் – டீ.வி. சானக Published By: Vishnu 14 Nov, 2025 | 03:12 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நான்கு பேர் கொண்ட சாதாரண குடும்பமொன்றுக்கு உணவுக்காக மாத்திரம் மாதந்தம் 65,500 ரூபா செலவாகும் என்று மூன்று வருடங்களுக்கு முன்னரே மதிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அந்த தொகை ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியிருக்கலாம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டீ.வி.சானக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித வரியும் இல்லை என்று அரசாங்கத்தினால் கூறப்பட்டது. ஆனால் வாசிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் 150 பில்லியன் ரூபா வட் வரி எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 18 வீதத்தில் இருந்து 20 வீதமாக வட் வரி அதிகரிப்பது மட்டுன்றி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் போது அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி இலாபமும் அதிகரிக்கும். மறைமுக வரிகளை குறைப்பதாக கூறிக்கொண்டு வரி அறவிடுவதையே செய்கின்றனர். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கூறப்பட்டது. இதன்படி 56,145 ரூபாவே சாதாரண ஊழியர் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் சனத்தொகை மதிப்பீட்டு திணைக்களத்தில் வீட்டு மற்றும் வருமான செலவு கணக்கெடுப்பு மூன்று வருடங்களாக செய்யப்படவில்லை. இதனை செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற ஆய்வுக்குழு கூறியுள்ள போதும் அது இதுவரையில் நடக்கவில்லை. என்றாலும் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி நபரொருவருக்கு தனது உடலுக்கு தேவையான களரியை பெற்றுக்கொள்வதற்கான உணவுக்காக 16,413 ரூபா மாதத்திற்கு செலவிட வேண்டும். அப்படியாயின் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 65,500 ரூபா மாதத்திற்கு உணவுக்காக மட்டும் செலவிட வேண்டும். இது இப்போது ஒரு இலட்சம் ரூபாவையும் கடந்திருக்கும். அதனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் இது தொடர்பில் சரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவே எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் விவசாயிகளின் பிரச்சினைகளையாவது தீர்க்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்கின்றோம். இல்லையென்றால் அவர்கள் அன்றைய தினத்தில் நுகேகொட நகருக்கு வருவார்கள் என்றார். Virakesari.lkசாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியி...Sri Lanka Podujana Peramuna MP T.V. Sanaka stated that while a family of four’s monthly food expenses were estimated at Rs. 65,500 three years ago, the current cost may now exceed one lakh rupees.
-
சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம் – சுனில் செனவி
சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம் – சுனில் செனவி Published By: Vishnu 14 Nov, 2025 | 03:06 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்தியாவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மேற்கொள்ளும் யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்துள்ளோம். கடந்த காலங்களில் எத்தனை அரசாங்கங்கள் இருந்தன. எவரும் இதனை கருத்திற் கொள்ளவில்லை. மத விவகாரங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, உரிமைகளை வென்றெடுக்க போராட்டம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சகல பிரச்சினைகளுக்கும் நாங்கள் தீர்வளித்துள்ளோம் என்று குறிப்பிடவில்லை. கட்டம் கட்டமாகவே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிப்போம். அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையில் உள்ள எதிர்க்கட்சியினர் வரவு - செலவுத் திட்டத்தையும் எதிர்ப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல, இந்து மத விவகாரத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளமை குறைவாக உள்ளது என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.இது முற்றிலும் தவறானது. தேசிய தைப்பொங்கல் உற்சவத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடினோம். இந்தியாவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மேற்கொள்ளும் யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்துள்ளோம். கடந்த காலங்களில் எத்தனை அரசாங்கங்கள் இருந்தன.எவரும் இதனை கருத்திற் கொள்ளவில்லை. கோயில் உட்பட மத தலங்கள் புனரமைப்புக்கு பல மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையர் தினத்துக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே மதங்களுக்கு வேறுப்படுத்தப்பட்ட வகையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என்றார். Virakesari.lkசபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து தேசிய நல்ல...Minister of Buddhist Affairs and Religious Affairs, Sunil Senavi, stated that the pilgrimage to Sabarimala Ayyappan Temple in Kerala, India, has been declared a holy pilgrimage. He emphasized that the
-
10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்!
ஒருவரது சுய விருப்பின்றி அல்லது அவர்களது குடும்பத்தினரின் விருப்பின்றி தனிப்பட்ட ஒரு தாதியர் கருணைக் கொலை செய்ய இயலாது..இரவு நேரப் பணியாளர்களுக்கு இருக்க கூடிய அதிக மன அழுத்தம் நோயாளிகள் தங்களை தொந்தரவு செய்யாமலிருக்க, சத்தமின்றி தூங்க வைப்பதற்கு தூக்க மருந்துகளை குடுத்திருக்க கூடிய வாய்ப்புக்களே அதிகம்.இங்கு கூட இரவு நேர பணிகளில் ஏற்படும் அழுத்தங்களினால் (அதுவும் பெண்கள்) போதைக்கு அடிமையாகி வேலையை விட்டுட்டு அலைபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
-
வவுனியாவில் மரணித்த பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு
பெரதெனியாவில் புதுமுக மாணவர்களிடம் பகிடிவதை மற்றும் தேவை அற்ற விடையங்களில் தலையிடக் கூடாது என்று ஆரம்ப்பதிலயே கையப்பம் வாங்கியுள்ளார்களாம்.நான் அடிக்கடி கதைத்துக் கொள்ளும் மாணவர் சொன்னார்.செப்ரம்பரில் விரிவுரைகளுக்கு உரிய ஆயத்தங்கள் தொடங்கி இப்போ தொடர்ந்து நடக்கிறது.யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திறமை சித்தி பெற்று பெரதெனியா சென்ற ஒரு மாணவன் எனது பராமரில் இருக்கிறார்.
-
புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்
இங்கே பணி புரியும் அனேகமானவர்கள் வறுமையான குடும்பங்களை சேர்ந்தவர்கள் ,மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்டவர்களாவே இருக்கிறார்கள்.பொதுவாக நான் ஊர் நிலவரங்கள் பற்றியே பார்ப்பதனால் அறிந்திருக்கிறேன்.
-
களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ.
களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ. written by admin November 1, 2025 பெண் என்றால் மென்மையின் வடிவம். பொறுமை, அடக்கம், வலிமையற்ற தன்மை, தியாகம் என்று தான் சமூகத்தின் பார்வை காணப்படுகின்றது. சமூகத்தில் பெண்ணின் அடையாளம் என்பது ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவள் இருக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள், அவளது தனிப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அவளது உரிமைகள் என அவளினுடைய பொறுப்பு பன்முகத்தன்மை கொண்டதாக தான் இருக்கின்றது. குழந்தைகளை பெற்றெடுக்கும், வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் பொறுப்புள்ளவளாக பெண் பார்க்கப்படுகின்றாள். அதே மாதிரியாக மனைவி என்ற வகையில் கணவனுக்கு துணைவியாகவும், குடும்பத்தை நிர்வாகிப்பவளாகவும், குடும்பத்தின் நலன் காப்பவளாகவுமே கருதப்படுகின்றாள். பெண்ணானவள் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்துவதற்கு பல வழிகளில் முயற்சிகளை எடுக்கின்றாள். தன்னுடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக எவ்வளவோ காலம் எடுக்கிறது. ஒரு பெண் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்தி கொள்வதற்கு பல எதிர்ப்புகள் வருகின்றன. சுயமாக தன்னை அடையாளப்படுத்துவது என்பது வியக்கத்தக்கதொரு விடயம் என்று தான் கூற வேண்டும். எனது முன்னேற்றத்திற்கு பின்னால் எனது தாய் இருக்கின்றாள், எனது தந்தை இருக்கிறார், எனது சகோதரர்கள் இருக்கின்றார்கள் அல்லது எனது ஆசான் இருக்கின்றார் என்பதை தாண்டி எனது முன்னேற்றத்திற்கு பின்னால் நானும் எனது முயற்சியும் இருக்கின்றது என்பது சிறப்பிற்குரிய விடயம்தான். இப்படியான ஒரு இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருப்பவரே கிளிநொச்சி வட்டக்கச்சி என்கின்ற அழகியதொரு கிராமத்தை இருப்பிடமாக கொண்ட துஷானி சத்தியசீலன். துஷானி அவர்கள் தனது உயர்கல்வியை முடித்துவிட்டு சுயத்தொழில் செய்வதனை ஆர்வம் கட்டிவந்தார். அவருடைய ஆர்வம் பல துறைகளில் திறமை உடையவராக மாற்றியது. பெண் ஒருவர் எவ்வாறான தொழிலை செய்தாலும் அந்தப் பெண் தனக்கென ஒரு கைத்தொழிலை கற்று அதில் தேர்ச்சிகளை பெற்றிருப்பது கட்டாயமானது. அது அவளினுடைய எதிர்காலத்தில் ஏதோ ஒரு இடத்தில் பயன் தருவதாக அமையும். பெற்றோர் தனது பிள்ளைகளினுடைய எதிர்காலத்தை எண்ணி பல கனவுகள் காண்பார்கள். அவை கனவுகளாகி விடாமல் அதனை நிஜமாக்க வேண்டும் என்பதற்காகவே தினமும் ஒவ்வொன்றையும் வழிகாட்டுகின்றார்கள். பிள்ளைகளையும், அவர்கள் செல்லும் வழிகளையும் பெற்றோர் கண்காணிப்பதும் வழக்கம். அதில் ஆதரவும், கண்டிப்பும் இருப்பது கூட வழக்கம் தான். அவ்வாறு துஷானி அவர்களுக்கும் அவரது சுய தொழில் சார்ந்து பெற்றோர்களிடமிருந்து ஆரம்பத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. தனது பிள்ளை நன்றாக கல்வி கற்க வேண்டும், பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாக அரசாங்கத் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பது பிழையானதொரு விடயமும் இல்லை. ஆனால் துஷானி அவர்களுக்கு மேற்கொண்டு கற்றல் மீதான ஈடுபாட்டை விடவும் அவர் கைப்பணிகளை செய்வதிலேயே பெருமளவில் ஆர்வம் கொண்டிருந்தார். இன்றைய காலங்களில் பட்டதாரிகளாக இருந்தாலும் நிரந்தரமான தொழிலுக்காக பல காலங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு மாறிவரும் சூழலில் துஷானி அவர்கள் கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்திவிட்டு கைத்தொழிலை பல பிரச்சினைகளுக்கு மத்தியில் செய்கின்றார். இன்றைய சூழலில் சான்றிதழ்களுக்கு தான் எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. துஷானி அவர்களுக்கு சான்றிதழ் இல்லை என்பதால் அவர்களுடைய உற்பத்திகளுக்கு தரம் இல்லை என்று பலர் மத்தியில் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் சான்றிதழ் என்பதனை தாண்டி தனது திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டிருந்ததால் பல துறைகளில் தேர்ச்சி பெற்றார். இவர் ஒரு தொழிலை மட்டும் செய்வதுடன் நின்று விடாமல் பல கைவினை உற்பத்திகளை செய்து தொழிலில் முன்னேற்றத்தை அடைந்தார். இவருடைய தொழில்களாக களிமண் அணிகலன்களை உருவாக்குவது, நூல் ஆபரண தயாரிப்பு, ரெசின் கலை வடிவமைப்பு, cake செய்தல், online shopping இத்துடன் மேலும் பல கைவினை வேலைகளைக் கொண்டு சுயதொழிலை செய்து வருகின்றார். துஷானி அவர்கள் கைவினை கலைகளில் களிமண் நிகழ்வுகள் தயாரிப்பதை இணையதளங்களின் மூலம் பார்த்து அதன் மீதான ஆர்வத்தினால் தானும் YouTube videos ஊடாக பயிற்சிகளை பெற்று தேர்ச்சி அடைந்தார். பின்னர் இந்தியாவில் அணிகலன்கள் தயாரிப்பவர்களை தொடர்பு கொண்டு online வகுப்புகளினூடாக களிமண் அணிகலன்களை உருவாக்குவது தொடர்பாக நுட்பமான விடயங்களை கற்றுக் கொண்டார். இன்று தனக்கானதொரு அடையாளத்தை Qresh store என்ற வணிகத்தளத்தினூடாக தனது சுய தொழில்களை செய்து வருகின்றார். துஷானியினுடைய களிமண் அணிகலன்கள் உள்நாட்டு, வெளிநாட்டு நுகர்வோர்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இவரினுடைய முயற்சியால் பிற்பட்ட காலங்களில் பெற்றோரின் ஆதரவும் கிடைத்தமையானது இவருக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது. துஷானியின் இந்த விடாமுயற்சியினால் எவ்வாறு You Tube காணொளிகளை பார்த்து கற்றுக் கொண்டாரோ அதுபோல இன்று YouTube, Facebook, Instagram, Tik Tok, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களின் ஊடாக தனது வியாபாரத்தை மேம்படுத்துவதுடன் கைவினைகளை செய்வது தொடர்பாக கற்றும் கொடுக்கின்றார். அத்துடன் சமூக வலைத்தளங்களினூடாக நேர்காணல்களையும் கொடுத்துள்ளார். ஒரு பெண் ஆணுக்கு சமமாக இந்த சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது என்பது சவால்கள் நிறைந்ததாகும். அந்தவகையில் தனது முழுமையான உழைப்பை கொடுத்து சுயதொழிலை மேற்கொண்டு வருகிறார். தனக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் களிமண் அணிகலன்கள் உருவாக்குவதற்கான உபகரணங்களையும் பெற்றுக் கொள்கின்றார். மேலும் அணிகலன்கள் உருவாக்குவதற்கான களிமண்ணை கொள்வனவு செய்து அணிகலன்களை உருவாக்கினார். கொரோனா தொற்றுக் காலபகுதிகளில் களிமண்ணைத் தானே தயாரித்துக் கொண்டார். அந்த காலப்பகுதியில் களிமண் அணிகலன்களை உருவாக்குவதிலும் அவற்றை விநியோகம் செய்வதிலும் பெருமளவான சவால்களுக்கு துஷானி முகம் கொடுத்துள்ளார். இருந்தாலும் சுயதொழிலில் சரிவுகள் ஏற்பட்டாலும் தனது முயற்சியை கைவிடாது போராடி இன்று சமூகத்தில் இளந்தலைமுறை பெண்களுக்கு முன்னோடியாக தடம் பதித்துள்ளார். 22 வயதான துஷானி அவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் சுயதொழிலில் மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளார். அவருடைய இந்த விடாமுயற்சி அவருக்கு சிறந்த அளவில் வருமானத்தையும் பெற்றுக் கொடுக்கின்றது. கிரிஜா மானுஶ்ரீ கிழக்கு பல்கலைக்கழகம் https://globaltamilnews.net/2025/222165/
-
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்
போய்ச்சேர்ந்தான் நண்பனும் முன்னாள் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான அகீபன்!!! அவன் இறந்துவிட்டான் தற்கொலை முயற்சி செய்து வைத்தியசாலையில் அனுமதித்து மீண்டெழ போராடுகையில் இறுதியில் காலன் தான் வென்றான். அவன் தற்கொலைக்கு பின்னால் இன்றைய சமூக ஊடகங்கள் தீயாய் பரவுகின்ற செய்தியாக "பப்ஜீ" கேம் விளையாட்டிற்கு அடிமையாகி பண இழப்பினால் உயிர்மாய்த்தான் என்று. ஆனால் நாம் உண்மையையும் ஆராய்ந்து இவன் தற்கொலைக்கு பின் எம் சமூகத்தில் இப்படி இனியொரு ஆபத்து ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வூட்டுவதும் அவசியம் அல்லவா! அகீபன் நல்ல பண்பான குணமுள்ள நண்பன். யாருக்கு உதவி என்றாலும் முன்நிற்பவன், "அண்ண அண்ண" என எப்போதும் அரசியல் ரீதியாகவோ நட்புரீதியாகவோ பேசும் போது அவன் அழைக்கும் வார்த்தைகள் ( எப்போதும் என் பேர் சொல்லி அவன் அழைத்ததில்லை), ஓர் சிறந்த கிரிக்கெட் வீரன், இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் போட்டிகளை நிகழ்த்தி அவர்களை வேறுபாதைகளுக்குள் உள்நுழைய விடாமல் பார்த்து கொண்டவன். பெரியவர்களுக்கு மதிப்பளிக்கும் ஓர் பண்பாளன். இலங்கை மின்சார சபையின் ஓர் உத்தியோகத்தன். விளையாட்டு வீரனாக இருப்பவன் அதுவும் மக்கள் பிரதிநிதியாக தலைமைத்துவ பண்பு கொண்டவன் ஏன் இப்படி தற்கொலை செய்யும் எண்ணுமளவு பலவீனமாகி போனான் என்பதை யோசிக்கையில் அவனின் இறப்பு செய்தி கேட்டதும் இரா நித்திரைகள் தொலைத்தேன்! முன்மாதிரியாக திகழ்ந்தவன் ஏன் இப்படி ஓர் முடிவெடுத்தான் என அதிர்ந்தே போனேன். ஆக எம் சமூகத்தின் மத்தியில் பல அடிமைத்தனமான விடயங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றினை பொதுவெளிக்கு கொணர்ந்து சமூகத்தை விழிப்புணர்வடைய செய்ய வேண்டும். நண்பன் அகீபனின் தற்கொலைக்கு " பப்ஜீ" வீடியோ கேமிற்கு அவன் அடிமையானதாகவும் அதற்காக அதிக பணம் கடன்பட்டு இழந்ததாகவும் அதனால் தான் தற்கொலைக்கு முயன்றான் என்பது தான் சமூக ஊடகங்கள் பூராகவும் கொட்டி கிடக்கின்றன. அவன் இறப்பின் பின் பல நண்பர்களோடு கலந்துரையாடியதன் விளைவாக அவன் எதற்கு உண்மையில் அடிமையாகியிருந்தான் என்பது வெளிச்சமாகியது. அவன் கிரிக்கெட் வீரன், கிரிக்கெட்டை ஆழமாக நேசித்தவன், பல உள்ளூர் வெளியூர் மட்ட கிரிக்கெட் சுற்று போட்டிகளை முன்நின்று நடாத்தியவன். அந்த கிரிக்கெட் எனும் போதையே அவனுக்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆம்! உள்ளூர் மட்டங்களில் தற்போது பிரபலமாக நடைபெறும் கிரிக்கெட் சுற்றுபோட்டிகளில் தானும் ஓர் அணியை தயார் செய்து அந்த அணியை லட்சம் ரூபா செலவு செய்து "ஸ்பான்சர்" எடுத்து விளையாட விடுவதும் அவன் பழக்கமாக இருந்திருக்கிறது. அதாவது அந்த போட்டிகளில் தான் ஸ்பான்சர் பண்ணிய அணி வெல்லும் என்ற நோக்கில் அதை ஸ்பான்சர் பண்ணினால் போட்ட பணத்தை விட அதிகமாக கிடைக்கும் என்ற நோக்கமும், அதைவிட கிரிக்கெட் மீதான மோகமுமே ஆகும். ஸ்பான்சர் என்றால் சாதாரண விடயமல்ல அந்த அணிக்கு ரீசேட் அடிப்பது, பனர் அடிப்பது, சப்பாத்துக்கள், பந்துகள், மட்டைகள் தொடக்கம் உணவு சிற்றுண்டி எல்லாமே பொறுப்பேற்க வேண்டுமானால் அதன் செலவு இலட்சங்களை தாண்டும். போட்டியில் அணி தோற்றால் அந்த பணம் இல்லாமல் போகும். ஆக கடன் படவேண்டி வரும். இப்படி பல கிரிக்கெட் அணிகளினை ஸ்பான்சர் பண்ணியும் பணம் இழந்துருக்கிறான். அதவிட இன்னொன்று கிறிக்கெட் மேலான அதீத ஈடுபாடும் மோகத்தினால் ஒன்லைன் கிறிக்கெட் பந்தயங்களில்(கிறிக்கெட் சூதாட்டம்) பல லட்சங்களில் பணங்களை போட்டு பங்குபற்றியிருக்கிறான். இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் கிறிக்கெட் போட்டிகளில் யார் வெல்வார்கள் தோற்பார்கள் என்ற பல ஒன்லைன் பந்தயங்களில் பணத்தினை லட்சக்கணக்கில் போட்டுவிட்டு அந்த போட்டியை விடாது பார்த்துகொண்டுமிருப்பானாம். அந்த ஒன்லைன் சூதில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்து பணமும் இட்டியிருக்கிறான் அந்த மோகத்தில் இன்னும் பல இலட்சம் பணங்களினை ஒன்லைன் கிரிக்கெட் சூதில் போட்டிருக்கிறான். அது தான் அவனுக்கு விபரீதமாயிருக்கிறது . ஒரு போட்டியில் வென்றால் அடுத்ததில் பெற்றுவிடலாம் என்பது போல, அதாவது மகாபாரதத்தில் பாண்டவர்கள் சூதில் தோற்றுகொண்டிருக்க எல்லாம் இழந்த பின் இறுதியில் ஒன்றுமே இல்லை என்ற நிலை வந்த பின் தம் மனைவியான திரெளபதையினையே சூது வைக்கும் அளவிற்கு அந்த சூதாட்டம் மிக கொடியது. அப்படி தான் இவனும் அடுத்ததில் பெறலாம் பெறலாம் என கடன் பட்டு கடன் பட்டு கிறிக்கெட் சூதில் முதலிட்டிருக்கிறான். அந்த விளையாட்டு வினையாகி போகவே எப்படி மனைவியை சூது வைத்தும் மானமும் மண்ணும் இழந்து பாண்டவர்கள் நிர்க்கதியானார்களோ! அதுபோல அகீபனும் தன் பணத்தினையும், வீட்டார் பணத்தினயும், அதுபோக பல லட்சங்களில் கடன் பட்டும் ஈடுபட்ட கிறிக்கெட் சூதாட்டத்தில் எல்லாமுமே இழந்தான். அதனால் எல்லாம் இழந்தவனாக தற்கொலைக்கு துணிந்துவிட்டான். இப்போது இறந்தும் விட்டான். ஓர் விளையாட்டு வீரன் உடலளவிலும் மனதளவிலும் எவ்வளவு உறுதியாக இருப்பான். ஆனால் அவனை இந்த ஒன்லைன் சூது விளையாட்டு அடிமையாக்கி அழித்தொழித்து விட்டது. கடந்த மாதமும் யாழ் போதனா வைத்தியசாலையில் ஓர் இளைஞன் ஒன்லைன் கிரிப்ரோ கரன்சியில் பல கோடி முதலிட்டு நட்டமாகி தற்கொலை செய்து ஒரு மாதத்திற்குள் அடுத்த ஒன்லைன் சூது மரணம். அதுவும் ஓர் பிரதேச சபை உறுப்பினராக இருந்த தலைமைத்துவ பண்பு கொண்டவன் தற்கொலை செய்திருக்கிறான் என்றால் இந்த ஒன்லைன் வியாபாரங்கள் எவ்வளவு எம்மை அடிமைப்படுத்தி பணம் பொருள் உயிர் என எல்லாம் பறித்துவிடும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். எம் சிறுவர் பராய சமூகமும் ,இளைஞர் சமூகமும் விழிப்புணர்வடைய வேண்டும் , விழிப்புணர்படைய செய்ய வேண்டும் என்பது அத்தியாவசிதமான ஒன்று. பெற்றோர்களே! ஒரு போதும் உங்கள் பிள்ளைகளுக்கு வீடியோ கேம் விளையாட அனுமதிக்காதீர்கள்! அவர்களை சின்ன பராயத்தில் இருந்தே கல்விக்கு புறம்பாக கிரிக்கெட்டோ/ உதைபந்தோ/ கரப்பந்தோ/ கூடைப்பந்தோ/ மேசைப்பந்தோ/பூப்பந்தோ/ நீச்சலோ/ கராத்தையோ/ செஸ் போன்ற இணைவிதான விளையாட்டுகளில் ஈடுபட வையுங்கள். அத்தோடு பாடல்/ நடனம்/ சித்திரம்/இசை போன்ற கலைத்துறைகளில் அவர் அவர் திறமைக்கு ஏற்றால் போல சின்ன வயசில் இருந்தே இணைத்து விடுங்கள். (சும்மா ஒரே பாடத்திற்கு ஒன்பது இடத்திற்கு ரீயூசன் ஏத்தி இறக்காமல்) அப்போது தான் அவர்கள் தேவையில்லா வீடியோ கேம்களில் ஆரவம் காட்ட மாட்டார்கள். போதைபொருளுக்கும் அடிமையானவர்களாக மாற மாட்டார்கள். அதைவிட எம் அன்பான இளம் தலைமுறை நண்ப நண்பிகளே! ஒருபோதும் ஒன்லைன் கிரிப்டோ கரன்சிகளில் முதலிட வேண்டாம், ஒன்லைன் சூது விளையாட்டுகளில் பெரும் பணம் போட்டு விளையாட வேண்டாம். பிறகு பணம், சொத்து, மரியாதை, உறவு, உயிர் என எல்லாவற்றையும் இழக்க வேண்டி வரும். அதற்கு தான் யாழில் இடம்பெற போதனா வைத்தியசாலை ஊழியர் கிரிப்டோகரன்சியால் தற்கொலை செய்தமை. தற்போது அகீபன் எனும் ஆளுமை ஒன்லைன் கிரிக்கெட் சூதாட்டம் மூலம் தற்கொலை புரிந்தமை உதாரணங்களாக அமைகின்றன. மேற்சொன்ன இருவரும் வட்டிக்கு கடன்பட்டு கோடிகளில் ஒன்லைனில் போடாமல் அதை நிலமாக/ தங்கமாக வாங்கி வைத்திருந்தால் கூட இப்போது கடன் காரன் கேட்டால் கூட கடனை அடைத்து விட்டு நின்மதியாக இருக்கலாம். கண்ணுக்கு தெரிந்த முதலீடுகளில் முதலிடுங்கள். உங்கள் கண்ணுக்கு புலப்படா ஒன்லைன் வியாபரங்களில் பணம் போடாதீர்கள், அதைவிட கடன் வாங்கி பணம் போடாதீர்கள். யாழ்பாணத்தில் ஒன்லைன் வியாபாரத்தினால் போன கடைசி உயிராக அகீபனின் உயிர் இருக்கட்டும். இன்னொருமுறை கல்விக்கும் புத்திசாலித்தனத்திற்கும் பேர்போன யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு துர்சம்பவம் நிகழாதிருக்க அனைவரும் விழிப்புணர்வோடு செயலாற்றுவோம். ஓம் சாந்தி மதுசுதன் 29.10.2025
-
யாழில் 11 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை…
இதில் ஒன்பது கோடி சேர்த்தவர்களையும் அடக்கினால் வெளிநாடுகளில் டபுள் அடிச்சு காசு அனுப்பின மக்கள் கொஞ்சமாவது நின்மதியடைவார்கள்.
-
சமிக்கை-கிறிஸ்டி நல்லரெத்தினம்
சமிக்கை கிறிஸ்டி நல்லரெத்தினம்- ஜூலை 13, 2025 No Comments வீட்டின் நடுவே இருந்த ஊஞ்சல் தனியே ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ தேவாரங்களை முணுமுணுத்துக் கொண்டோ இருக்கும் அப்பு அங்கில்லை. அவரின் சிம்மாசனம் அது. அதில் உட்கார்ந்து கொண்டு எங்கள் குடும்ப பிணைக்குகளை பஞ்சாயத்து செய்யும் அந்த ஜீவன் இல்லாத வீடு வெறிச்சோடிக்கிடந்தது. அப்பு, அவர்தான் என் தாத்தா, என்னிடம் கொண்டிருந்த அந்தப் பாசப்பிணைப்பு புறவயமானதன்று. எங்கள் இருவரையும் இணைத்த அந்த நூலை எவரும் தொட்டதில்லை. ‘“ ஏ, பையா, உன்ன உங்கம்மா தூக்கிறதக்கு முன்னமே நான்தான் தொட்டுத் தூக்கினன் தெரியுமோ?” என்று கூறி பெருமைப்படுவார். என்னை ஏனே அவர் ‘“பையா” என்று அழைப்பதில் ஒரு அணுக்கமான உரிமையும் உறவும் இருப்பதாய் தோன்றும். அம்மாதான் அவர் ஒரே மகள். எனவே அவருடன் தாத்தாவின் பாசமுடன் உரிமையும் ஒட்டிக்கொண்டது. ‘மகள், அத எடு… இத எடு’ என்று அம்மாவை விரட்டிக்கொண்டே இருப்பார். அம்மாவும் அவர் அன்பில் அடைக்கலமாவார். அப்பாவிற்கும் தாத்தாவிற்குமிடையே ஏனே பசை போதவில்லை. அப்பா எமது குடும்பத்தில் சங்கமமானது அறுபதுகளில். அப்பா ஒரு ‘வேதக்காறன்’. சமயம் மாறி வந்து அம்மாவை கைப்பிடித்ததாலோ என்னவோ அப்பாவின்மேல் ஒரு தாத்தாவிற்கு ஒரு இரண்டாந்தரம். அப்பாவிடம் தாத்தா நேராக முகம்பார்த்து பேசமாட்டார். அப்பா என்றும் மந்தையில் இல்லாத ஆடு. ஒரு முறை அப்பாவிற்கும் அப்புவிற்கும் இடையே ஏதோ பிணக்கு “என்ர சையிக்கிள தொட வேண்டாம் எண்டு சொல்லு” என்று அம்மாவிடம், அப்பாவின் காது பட, சற்று உரக்கவே சொல்லிவிட்டார். சாமானிய குடும்பங்களில் சைக்கிள்தான் அந்நாட்களில் டெஸ்லர். வீட்டிற்கு ஒரு வாகனம் மட்டுமே. அப்பாவோ சாது. ஒருபோதும் அப்புவை போருக்கழைத்ததில்லை! எதிர்வசை பாடி பிளவை பெரிதாக்கும் எண்ணம் அப்பாவிற்கில்லை. அப்புவின் சைக்கிளை அப்பாவும் பின்னர் தொட்டதில்லை. அப்புவைத் தேடி வீட்டிற்கு பலர் வந்து போவதால் எப்போதும் எங்கள் வீடு களைகட்டியிருக்கும். அதற்கும் காரணம் உண்டு. அப்புதான் ஊர் எலும்பு முறிவு மற்றும் ‘பாம்புக்கடி’ வைத்தியர் …. வைத்தியர் என்ன வைத்தியர் … ஊர் பரியாரியார். எங்கள் ஐந்து அறை கல் வீட்டின் முன் பரந்து இருக்கும் குருத்து மணல் முற்றம். முற்றத்தின் மருங்கில் இரண்டு பெரிய மாமரமும் பலா மரமும் (அதென்ன பலா? பிலா மரம் என்றே வாசியுங்கள்!) கிளை விரித்து நிற்கும் வேப்ப மரமும் இருந்தன. அப்புவைப்பார்க்க வருவோர் கூடி இருக்க ஒரு திறந்த ஓலை மேய்ந்த ஒரு குடில். குடில் என்றதும் ‘அம்புலிமாமா’வில் நீங்கள் பார்த்த குட்டி குடிலை கற்பனையில் இழுத்து வந்து எங்கள் முற்றத்தில் வைக்காதீர்கள். உயர்ந்த கூரையுடன் அறைகள் போல் இரு தடுப்பு சுவர் வேலி போட்டு மேய்ந்த அமைப்பு அது. அப்பு இருக்க கதிரை மேசை வசதிகள் உண்டு. மேசை மேல் இருக்கும் ‘ஒத்த றூள் கொப்பி’ தான் அப்பு மருந்து எழுதும் றெஜிஸ்டர். நோய் என வருவோரை தன் முன் இருக்கும் கதிரையில் அமர்த்தி நாடி பிடித்து, இருமச் சொல்லி, முட்டியை தட்டி மேலும் ஏதோ ஏதோ பரீட்சாத்தங்கள் செய்து பின் மேசைக்கு பின்னே இருந்த அலுமாரியை திறந்து வடகம், தூள்கட்டு என பல உருவங்களில் மருந்துகளை பரிமாறுவார். அவற்றை எப்போது சாப்பிட வேண்டும் என்ற விபரங்களை நான் சொன்ன ‘ஒத்த றூள்’ கொப்பியின் ஒரு பக்கத்தில் எழுதி அடிமட்டம் வைத்து கிழித்து நோயாளிக்கு கையளிப்பார். அப்பு எவருக்கும் ‘தண்ணி மருந்து’ கொடுத்ததை கண்டதில்லை. “இந்த தூளை தேனில கரைச்சு விடியத்தால சாப்பிட வேணும் கண்டியோ? …. என்ன… நான் சொல்லுறது விளங்தோ?” என்று சொல்லி தன் வார்த்தைகளின் புரிதலை உறுதிப்படுத்திக் கொள்வார். தேனுக்குப் பதிலாய் முலைப்பாலும் வந்து போகும். எலும்பு முறிவிற்கு ‘பத்துப் போட’ வருபவர்களைப்பார்க்க எனக்கு ஆர்வம் இல்லை. ஒரு முறை மரத்தால் விழுந்தவனை நாலு பேர் தூக்கிக் கொண்டு வந்து கிடத்தினர். அப்பு அருகில் குந்திக்கொண்டு குசலம் விசாரிப்பது போல் அவனிடம் பேசிக் கொண்டு அவனின் நோய்ப்பட்ட கையை மருந்தெண்ணை தடவி மெதுவாக நீவி விட்டார். அவனும் அப்புவின் கேள்விகளுக்கு அனுகிய குரலில் “ஓம் ஐயா… ஓம் ஐயா” என்று பதில் சொல்லிக் கொண்டு இருந்தான். அவன் முழங்கையில் விலகிய எலும்பு துருத்திக் கொண்டு முழங்கையில் நீலம் பாவித்து வீங்க வைத்திருந்தது. அப்பு அவன் மேல் கையை பலமாக பற்றியவாறு கேள்விகளை தொடுத்தவாறு இருந்தார். ‘இந்த முறை விழைச்சல் எப்படி?… இந்த போகத்தில நெல்லு வில என்னவாம்?…..’ போன்ற கமம் செய்பவனிடம் கேட்கும் கேள்விகளால் அவன் காதை நிரப்புவார். அவன் கவனம் எல்லாம் அவரின் கேள்விகளுக்கு பதில் தேடுவதிலேயே அப்போது இருந்தது. அதுதான் தருணம் என்று அப்பு உணர்ந்திருக்க வேண்டும். சடாரெண்டு அவன் கையை ஒரு பொம்மையின் கையை திருகுவதைப் போல் திருகி பலமாக இழுத்து விட்டார். “ஐயோ… எண்ட ஆண்டவனே “ என்ற அவன் கூக்குரல் கூரையை பிய்த்தது! இந்த தருணத்திற்கு காத்திருந்தாற்போல் அப்பு ஒரு புன்சிரிப்புடன் ”இனி பத்து ஒண்டு போட்டா சரி, எலும்பு மூட்டுக்குள்ள சரியா கொளுவிற்று .. மூண்டு கிழமையில பத்த கழற்ற ஏலும் “ என்று வலியால் துடித்தவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி இனி ‘பத்துப்போடு’வதற்கான ஆயுத்தங்களில் இறங்கினார். அப்புவின் எலும்பு முறிவு வைத்தியத்தை விட பாம்புக்கடி வைத்தியம் பார்க்க சுவாரசியமாக, ஒரு நாடகத்தன்மையுடன் கூடியதாய், இருக்கும். ஒருமுறை எங்கள் ‘வயல்காறன்’ வேலுமணியை வயல் அறுவடை சீசனில் ஏதோ பாம்பு கடித்துவிட்டது. ஊரார், அவன் வாயில் நுரை தள்ள, தூக்கிக்கொண்டு அப்புவிடம் ஓடி வந்தனர். “புடையன் பாம்பு கடிச்சிப்போட்டாம் ஐயா” என்ற சபையோரின் சாட்சியத்தை காதில் வாங்காமல் கடித்த பாம்பின் உடல் அடையாளங்களை முதலில் கேட்டறிந்து கொண்டார் அப்பு. அந்த விபரணையில் இருந்து கடித்த பாம்பு என்னவென்று கணித்துக் கொண்டு அதற்கான மந்திரங்களை ஓதத் தொடங்கினார். ஏறிய விஷத்தை இறங்கும்படி உருக்கமாய் அம்மாளிடம் வேண்டுவதாகவே அந்த மந்திரங்கள் ஓதப்பட்டன. ஆம், அவை கட்டளைகள் என்பதை விட வேண்டுதல்களே! அப்பு கையில் ஒரு வேப்பிலை கத்தை எடுத்துக் கொண்டார்.. வேலுமணி அரை பிரஃஜையுடன் வாயில் நுரை தள்ள தரையில் பாதி உணர்வுடன் கிடந்தான். அப்புவின் ஒரு கையில் வேப்பம் கொத்து … மறு கையில் ஒரு கைப்பிடி மிளகு. வேப்பம் கொத்தால் அவன் கன்னதில் பலமாக மாறி மாறி அறைந்தவாறு மந்திரங்கள் ஓதியவாறு ஒரு மிளகை அவன் பற்களுக்கிடையே திணித்து “மிளக முன் பல்லால கடிச்சி நுனி நாக்கால ருசி பாரு… என்ன உறைக்குதா சொல்லு?” என்று கேட்க அவன் இல்லை என்பதற்கு அடையாளமாக தலையை பக்கவாட்டில் அசைத்தான். பாம்பின் விஷம் தலைவரைக்கும் ஏறிவிட்டது என்பதை உணர்ந்தார் அப்பு. இல்லையெனில் மிளகு உறைத்திருக்க வேண்டுமே. இனி காலம் தாழ்த்த முடியாது….. செய்வதை விரைவாய் செய்தாக வேண்டும். மீண்டும் வேப்பம் கொத்து கசையடியும் உச்சஸ்தானத்தில் மந்திரங்களும் தொடர்ந்தன. மீண்டும் அதே பரீட்சை…. மிளகு அவனுக்கு உறைக்கவில்லை…. விஷம் இன்னும் இறங்கவில்லை. மந்திரமும் கசையடியும் தொடர ஒரு கட்டத்தில் “ஐயா… மிளகு உறைக்கிதையா” என்றான் உரத்த குரலில். வேப்பம் கொத்தின் விசையோ அப்புவின் மந்திர ஓதல்களோ…. ஏதோ ஒன்று அந்த மாயையை செய்தன. “விஷம் இறங்கிற்று… இறங்கிற்று … அம்மாளே நன்றி அம்மா!“ என்று பூரண திருப்தியுடன் கூறி தலையை நிமிர்த்தி சூழ்திருந்த கூட்டத்தை பெருமையுடன் பார்த்தார் அப்பு. சூழ்ந்திருந்த கூட்டமும் வாய் திறந்து நின்றது! ஊர்க்கோயில் இருந்த திசையில் தலையை திருப்பி இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பி தெய்வானை அம்மானை வணங்கி அந்த சடங்கை முடித்து வைத்தார். அப்புவுடனான என் உறவு திவ்வியமானது. அப்பு நல்ல கதை சொல்லி. எனக்கு கம்பராமாயணத்தையும் கீதையையும் ஒரு தொடர்கதையின் சுவாரசியத்துடன் சொல்வார். ராமாயணம் ராமர் கதையை சொல்லும் ஆனால் காட்சியாக காட்டாது என்போர் சிலர். ஆனால் அப்புவின் விவரணங்களுடன் கூடிய ராமர் கதையில் காட்சிகள் அவர் வார்த்தைகளில் ஒரு ரம்யமான காட்சியாய் திரைப்படம் போல் கண் முன்னே விரியும். அவர் வார்த்தைகளில் வனத்தில் சீதை மட்டுமல்ல நானும் வனத்தில் ஒரு கல்லில் உட்கார்த்து காட்சிகள ரசிக்கும் ஒரு உணர்வை உருவாக்கித்தருவார். கதை கேட்கும் படலம் முடிந்ததும் ஒரு சிறு பரிசளிப்பு. அவர் அறையில் இருந்த பெரிய முதிரை மர அலுமாரியின் மேல் தட்டில் அவரின் வேட்டி சால்வையின் பின் மறைத்து வைத்திருக்கும் சிறு டப்பாவை திறந்து இரண்டு மூன்று ‘மில்க்டொபி’ இனிப்புகளை பரிசளிப்பார். மூன்றுதான் தினக்கணக்கு. அம்மாவின் கட்டளையை மீறி நடக்கும் ஒரு இரகசிய பரிசளிப்பு இது. ‘“அப்பு, இவன் சின்னவனுக்கு டொபி, சொக்களட் ஒண்டும் கொடுக்காதேயுங்கோ…. பல்லு சூத்தை குத்திப் போடும்“ என்ற அம்மாவின் அறிவுரைகளும் புறக்கணிக்கப்படும். வாய் நிறைய இனிப்புக்களுடன் நான் அம்மாவிடம் மாட்டிக் கொண்ட தருணங்கள் உண்டு. “ அப்பு, இவன்ர வாய்க்குள்ள டொபி போல…. நீங்களோ குடுத்த நீங்கள்?” என்ற கேள்விக்கு பலமான மறுப்பு தலையாட்டல் அப்புவின் தரப்பில் இருந்து வரும். அப்பு இப்படி குறும்பு பொய் பேசும் வேளையில் தன் வலது கை விரல்களை மடக்கி பெருவிரலை ஆள்காட்டி விரலூடாக நுழைத்து ஒரு சமிக்கை செய்வார். அவர் கண்கள் குறும்பு சிரிப்புடன் “என் விரலைப் பார்” என்று சொல்லாமல் சொல்லும். இது எங்கள் இருவருக்கும் மட்டுமே புரியும் இரகசிய பரிபாஷை! x. x. x. x. x. x. x நாட்கள் உருண்டோடி ஆண்டுகளுக்குள் அடங்கி அவையும் உருண்டோடி…. அப்புவிற்கு பாரிசவாதம் வந்து உடலின் இடது பக்கத்தை இழுத்துக் கொண்டது. சாமி அறைக்குப்பக்கத்தில் தான் அப்புவின் அறை. அந்த அறையில் இருந்து இப்போ அவர் வெளியே வருவதில்ல. எங்கள் வயல்காரன் சாமித்தம்பிதான் இப்போ அப்புவுக்கு எல்லாம். அவனுக்கும் அப்படி ஒன்றும் இள வயது இல்லை. காலையில் அவரை அணைத்தவாறு மூச்சு முட்ட தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கிணற்றடியில் இருந்த கதிரையில் உட்கார்த்தி ஒரு குளியல். அவனே அப்புவின் தலையை துவட்டி புது வேட்டி உடுப்பித்து மீண்டும் அவரை வீட்டிற்குள் தூக்கிக்கொண்டு போவான். அப்புவிற்கு சாப்பாடு பிசைந்துதான் ஊட்டி விட வேண்டும். பற்கள் விடைபெற்றுக்கொண்ட வயது அவருக்கு. அதுவும் சாமித்தம்பியின்ர வேலைதான். ஆனால் அம்மாதான் சோறு கறிகள் எல்லாம் பீங்கானில் பரிமாறி தன் கையால பிசைந்து “சாமித்தம்பி…. இத அப்புவிற்கு தீத்தி விடு பாப்பம்… வேணாம் எண்டு சொன்னாலும் எல்லாத்தையும் தீத்தி விடப்பாரு… நேத்து மத்தியானமும் நல்லா சாப்பிட யில்ல… வர வர உடம்பும் சூம்பிக்கொண்டு போகுது!” என்று சொல்லி வேதனையுடன் அங்கலாய்ப்பார். அம்மாவிற்கும் முன்னரைப் போல் ஓடி ஆடி வேலை செய்ய முடியாது. நாடியில் கைவைத்தபடி அப்புவின் குளியலை பார்த்து ‘எப்படி இருந்த மனுஷன்? வயசு தான் என்னமா அப்புவின்ர சௌந்தரியத்த சிதைச்சுப் போட்டுது?” என்று முணுமுணுப்பார் அம்மா. அப்புவின் தேக சுகம் தேய்பிறையாய் மாறி வருவது அம்மாவின் சோகத்திற்கு முதல் காரணி. வாழ்வின் சோகங்களை வலைக்கரண்டி போட்டா வடித்தெடுக்க முடியும்? வாழ்ந்துதானே கழிக்க வேண்டும். அதுவே உலக நியதி அல்லா? அம்மாவிற்கும் இது தெரியாததல்ல. ஒரு நாள் அயல் வீட்டு செல்வி மாமி அப்புவின் நிலையை புரிந்து கொண்டு “இஞ்ச பாரு புள்ள… எத்தின நாளுக்கு பெரிய ஐயாவ வீட்டோட வச்சு பாக்கப்போறா? சாமித்தம்பியும் நெல்லு மூட்டய தூக்கிற மாதிரி அவர கஸ்டப்பட்டு தூக்கிற்று கிணத்தடியும் வீடும் எண்டு திரியிறான். ஒரு நாளைக்கு தடுக்கி விழுந்தினமோ அவ்வளவுதான். சீவன் போயிடும் கண்டயோ?” என பயம் காட்டினார். செல்வி மாமி சொன்னதும் அம்மாவிற்கு சரியாகவே பட்டது. அப்பாவை மாரடைப்பால் மூன்று வருடங்களுக்கு முன் இழந்த அம்மா தனியாக அப்புவை பார்ப்பதை ஒரு சுமையாகவே இப்போது கண்டார். நானும் மனிசியும் மகனும் குடும்பத்தோட கொழும்பு தெமத்தகொடவில இடம்பெயர்ந்துவிட்டதால் அம்மாவும் தனது கைத்துணையை இழந்து விட்டிருந்தார். தினசரி இரவு கைபேசி அழைப்புகளில் அப்புவின் நிலமை பற்றி அழுது புலம்புவது இப்போ வாடிக்கையாகிவிட்டது. செல்வி மாமி அம்மாவிடம் ‘“டவுனில இப்ப புதிசா ஒரு வயோதிபர் மடம் திறந்திரிக்கினமாம்… இப்ப கனடாவில இருக்கிற நம்மட கோயிலடி சண்முகத்தின்ர கொப்பரும் அங்கதானாம் இப்ப இருக்கிறாராம். வேளைக்கு நம்மட ஊர் சாப்பாடு… வருத்தம் வாதை எண்டால் உடனே டாகுத்தர் அங்கேயே வந்து பாப்பினமாம். ஒவ்வொரு நாளும் தியானம், யோகாசானம் எண்டு எல்லாம் இருக்குதாம். ஒருக்கா உன்ர மகனோட கதைச்சிப் போட்டு அப்புவையும் அங்க சேத்து விடலாம்தானே?” என்று ஓதி வைத்தாள். அம்மா தனது தினசரி நச்சரிப்புக்களுடன் இந்த செய்தியையும் என்னுடன் பகிர்ந்தார். அம்மாவின் வார்த்தைகளின் வலிமையை என்றும் உணர்ந்தவன் நான். ஒரு முடிவை எடுத்த பின் அதன் சாரத்தை என்னிடம் கூறி என் அனுமதிக்காய் காத்திராமல் ‘“அதத்தான் செய்வம் மகன்” என்று சம்பாஷணையை முடிப்பார். அப்புவின் இடப்பெயர்ச்சி அடுத்த மாதமே நடந்து முடிந்தது. என்னால் வேலை நிமித்தம் கொழும்பில் இருந்து ஊருக்கு உடனே திரும்பி வர முடியவில்லை. ஆனால் அடுத்த மாதமே லீவில் தனியே ஊர் திரும்பி அப்புவின் புதிய வாசஸ்தலத்தை பார்க்க விரைந்தேன். அம்மா அப்புவை அந்த வயோதிபர் மடத்தில் சேர்ப்பதற்கு பட்ட கஸ்டங்களை பட்டியல் போட்டார். வயல்காரன் சாமித்தம்பியின் பங்களிப்பை சிலாகித்துப் பேசினர் அம்மா. எனது இடைவெளியை நிரப்பிய அவன் உண்மையில் ஒரு புண்ணியவான்தான். அப்பு இல்லாத எங்கள் வீடு களையிழுந்து வெறிச்சோடியிருந்தது. அப்பு உட்காந்திருக்கும் ஊஞ்சல் சலனமற்று ஸ்தம்பித்து நின்றிருந்தது.. தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு தனது சொந்தங்கள் எடுக்கும் முடிவுகளால் நிகழும் இந்த இடப்பெயர்வுகள் கொடியன. தமது விருப்பத்திற்கு மாறாக, சொந்தங்கள் சொல்லும் தேன் பூசிய வார்த்தைகளை நம்பவது போல் பாசாங்கு செய்து, மௌனமே மொழியாகி பெட்டிக்குள் அடங்கும் பாம்பாக எத்தனை ஜென்மங்கள் தம் புளித்துப் போன மீதி வாழ்க்கையை சோகத்தில் வாழ்ந்து கரைக்கின்றன? மண்ணை மீறும் விதைகளாய் வாழ்ந்து காட்டுகிறேன் பார் என்று சமூகத்தை சவாலுக்கு அழைத்த இளமை ஓய்ந்துவிட வேர்கள் வெட்டப்பட்ட மரத்தின் தனிமையுடன் தம் குறுகிய உலகினுள் சுருங்கிக் கொண்ட ஜீவன்களின் பிரதிநிதிதான் அப்பு இன்று. அப்புவின் காலை உணவு பரிமாறப்பட்டதும் நானும் அம்மாவும் அவரை பர்க்க அந்த வயோதிபர் மடத்திற்கு சென்றிருந்தோம். அப்புவிற்கென ஒரு தனி அறை. மேலே மின்விசிறி சுழன்று அறைக்கு ஒரு ஆடம்பரத்தை கொடுத்தது. அப்பு உட்கார்ந்து வாசிக்க நல்ல மரக்கதிரை ஒன்று. மூலையில் ஒரு அரை அலுமாரி. குளியறைக்கு அழைத்துச்செல்லும வாசல் கதவு மூடியிருந்தது. கட்டிலின் அருகில் தொங்கிக் கொண்டிருந்த ‘காலிங் பெல்’. அடித்தால் உதவிக்கு ஆள் வரும். அப்பு என்றும் போலவே வெள்ளை ‘பாலாமணி’ யும் சாரனும் அணிந்து இருந்தார். கட்டிலில் படுத்தவாறு இருந்தவர் எம்மைக் கண்டதும் எழுத்து உட்கார எத்தனித்தார். முடியவில்லை. ‘“ நீங்க படுங்க அப்பு… நான் கட்டிலில கிட்ட இருக்கிறன்… எழும்பி கஸ்டப்பட வேணாம் “ என்று கூறி அருகில் அமர்ந்து கொண்டேன். அம்மாவும் ‘“ எப்படி அப்பா, எல்லாம் வசதி தானே… நல்லா பாத்துக் கொள்ளுகினமா?… உங்கட சாப்பாட்டில சீனி சேர்க்க வேண்டாம் எண்டு சொல்லியிருக்கன்…. இண்டைக்கு குளிப்பாட்டினவையளோ?” என்ற கேள்விக்கு அப்பா இல்லை என்று தலையாட்டியே பதிலளித்தார். மீண்டும் ஏதோ சொல்ல வேண்டும் போல் அவருக்கு தோன்றியிருக்க வேண்டும். முகத்தில் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய மெளனம்… பறிபோன சொற்களை மீட்டெடுக்கும் மெளனம். ‘“மகள் … நான் வீட்டுக்கு வந்து இருக்கப்போறன் மகள்… இஞ்ச ஏலாது…. இஞ்ச இந்த அறைக்குள்ள தனிச்சிப் போயிட்டன் பிள்ள … பயமாய் இருக்கு மகள்… இஞ்ச எனக்கு யாரு இருக்கா?“ என்றபோது அவர் உடல் குலுங்கி அடங்கியது. அப்புவின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் அம்மா என் முகத்தைப் பார்த்தார். அப்புவின் கண்கள் பனித்ததை அம்மாவும் கவனித்தார். ‘பையா… தனிச்சுப் போயிட்டன் ராசா… சாப்பாடும் குளிப்பும்தான் வாழ்கையில்ல பையா… குடும்பமடா… குடும்பம். அது இஞ்ச இல்ல மகன் … என்னை நம்மட வீட்டுக்கு கூட்டிப் போ ராசா“ என்று என்னைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் இடியாய் என்னுள் இறங்கின. அப்போது அறைக்கதவு திறந்து கொள்ள அந்த வயோதிபர் மடத்தின் ‘மேற்ரன்’ உள்ளே நுழைந்து எம் எல்லோரையும் கண்களால் துலாவி “ ஓ… ஐயாவ பார்க்க எல்லொரும் வந்திருக்காங்க போல“ என்று கூறி பின் அப்புவைப் பார்த்து “ எப்பிடி ஐயா இருக்கிறீங்கள். எல்லாம் வசதிதானே? ஏதாவது தேவையென்டால் சொல்லவேணும். என்ன… சந்தோசம் தானே?” என்ற கேள்விக்கு ‘“ஓம் … மெத்த சந்தோசம்… மெத்த சந்தோசம்” என்று தலையை ஆட்டியவாறு கூறி என் கண்களை ஏறிட்டுப்பார்த்தார் அப்பு. பின் அவர் கண்கள் தன் வலது கை விரல்களில் குத்திட்டு நின்றன. என் பார்வை அப்புவின் அந்த கை விரல்களில் குவிந்தது. பெருவிரல் ஆள்காட்டி விரலூடாக நுழைந்து எம்மிருவருக்கு மட்டும் தெரிந்த அந்த இரகசிய சமிக்கையை உருவாக்கிக் காட்டிற்று! https://solvanam.com/2025/07/13/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/
-
12 வயதிற்குட்பட்ட சிறார்கள் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் - அரசாங்கம்
பொதுவாக சில பரீட்சைகளில் திறமை சித்திகளை பெறும் மாணவ, மாணவிகளுக்கு கனவுப் பொருட்களாக இருக்க கூடிய ஆடம்பரமான பொருட்களை பரிசளிப்பதை பெற்றோர் முதல் உறவினர்கள் வரை தவிர்க்க வேண்டும்.
-
சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் -
சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் - - இக்கதையில் வரும் சாந்தா அக்கா போன்ற ஒருவர் என் வாழ்க்கையிலும் இருந்திருக்கின்றார். அவர் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த செய்தியினை அறிந்தபோது எழுந்த உணர்வுகளின் விளைவே இச்சிறுகதை. - 'டேய் கேசவா, சாந்தா அக்கா செத்துப் போய்விட்டாவாம். தெரியுமா?' சின்னம்மா வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் அம்மாவின் கடைசிச் சகோதரி. இன்னும் உயிருடனிருக்கும் சகோதரி. வயது எண்பதைத்தாண்டி விட்டது. பார்த்தால் ஐம்பதைத்தாண்டாத தோற்றம். மனுசி இன்னும் காலையில் ஒரு மணி நேரம் நடை , யோகா , மரக்கறிச் சாப்பாடு, நிறைய பழங்கள் என்று வாழும் மனுசி. 'என்ன சின்னம்மா, சாந்தா அக்கா செத்துப் போய் விட்டாவா? எப்ப சின்னம்மா?' "இன்றைக்குத்தான் விடிய ஜேர்மனியிலை போய்விட்டாவாம்." "என்ன அவ ஜேர்மனியிலையா இருந்தவா? இவ்வளவு நாளும் நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன் அவ ஊரிலைத்தான் இன்னும் இருக்கிறா என்று. அவ எப்ப ஜேர்மனிக்குப் போனவா சின்னமா?" "அட உனக்கு விசயமே தெரியாதா? அவ ஜேர்மனிக்கு எயிட்டியிலேயே போய் விட்டாவே" 'அப்படியா சின்னம்மா, எனக்கு உண்மையிலேயே அவ ஜேர்மனிக்குப் போன விசயம் தெரியாது." சாந்தா அக்கா பற்றிய நினைவுப் பறவைகள் சிறகு விரிக்கின்றன. சாந்தா அக்கா லலிதா அக்காவின் நெருங்கிய சிநேகிதி. லலிதா என் ஒன்று விட்ட அக்கா. அவவுடைய பதின்ம வயதுகளிலை அவவைச் சுற்றி எப்போதும் சிநேகிதிகள் பட்டாளமொன்று சூழந்திருக்கும். நானோ பால்யத்தின் இறுதிக்கட்டத்தில் நின்ற சமயம். அக்காவின் சிநேகிதிகள் பலரையும் அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும் 'பொடி கார்ட்' வேலை அதாவது பாதுகாவலன் வேலை என்னுடையதாகவிருக்கும். அவர்கள் சில வேளைகளில் நகரத்துத் திரையரங்குகளில் மாட்னி ஷோ பார்த்து வருவார்கள். லலிதா அக்காவுடன் அக்கா வீட்டுக்கு வந்து ஆடிப்பாடிச் செல்வார்கள். அவ்விதம் செல்கையில் மாறி மாறி ஓவ்வொருவரையும் அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இவை தவிர யாழ் பொது நூலகத்துக்குச் சில சமயங்களில் லலிதா அக்காவும் சாந்தா அக்காவும் செல்வார்கள். அப்போதெல்லாம் என்னையும் துணைக்கு அழைத்துச் செல்வார்கள். நானோ விரைவாக நடையைக் கட்டுவேன். அவர்களால் என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது. மூச்சிரைக்க என் வேகத்தைப் பிடிப்பற்காக ஓட்டமும் நடையுமாக வருவார்கள். 'இவனோடை நடக்க ஏலாது. ஏன்டா இப்பிடி நடக்கிறாய். கொஞ்சம் ஸ்லோவாக நடடா' என்று லலிதா அக்கா அவ்வேளைகளில் கெஞ்சுவா. நானோ அவவின் கெஞ்சலைப் பொருட்படுத்தாமல் வேகத்தை இன்னும் சிறிது அதிகரித்து நடையைப் போடுவேன். அதைப்பார்த்து சாந்தா அக்கா இலேசாகச் சிரிப்பா. அவ அவ்விதம் இதழோரத்தில் சிரித்தபடி என்னைப் பார்க்கும் தோற்றம் இன்னும் பசுமையாக என் நெஞ்சிலை இருக்குது. இவர்களில் சாந்தா அக்கா என்னைப்பொறுத்தவரையில் தனித்துத் தெரிந்தா. அவவுக்கு நான் ஒரு புத்தகப் புழு என்பது நன்கு தெரியும். அவவும் ஒரு வகையில் புத்தகப்புழுதான். கூடவே கதை எழுதும் திறமையும் அவவிடமிருந்தது. இதனால் எனக்கு அவவை வீட்டுக்கொண்டு போறதென்றால் நல்ல விருப்பம். முக்கிய காரணம் அவவை வீட்டுக்குக் கொண்டு போற சமயங்களில் அவவிடமிருந்து ஏதாவது புத்தகமொன்றை வாசிப்பதற்குத் தருவா. அதற்காகவே அவவுக்குப் பாதுகாவலாகச் செல்வதை நான் எதிர்பார்த்து விரும்பிச் செய்தேன். சாந்தா அக்கா கல்கி, குமுதம், விகடன், கல்கண்டு, ராணி போன்ற சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகள் பலவற்றை அழகாக பைண்டு செய்து வைத்திருந்தா. ஒருமுறை அவவிடமிருந்து அரு.ராமநாதனின் 'குண்டு மல்லிகை' யை எடுத்து வந்து வாசித்தேன். குண்டு மல்லிகை என்றதும் எனக்கு எப்பொழுதும் சாந்தா அக்காவின்ற நினைவுதான் தோன்றும்.அவவும் ஒருவகையில் குண்டு மல்லிகைதான். சிறிது பருமனான, நடிகை குஷ்பு போன்ற உடல் வாகு. செந்தளிப்பான முகத்தில் இரு பெரிய அழகான வட்டக் கருவிழிகள். எப்பொழுதும் புன்னகை தவழும் வதனம். இருக்குமிடத்தைக் கலகலப்பாக்கிக்கொண்டிருக்கும் ஆளுமை. இதனால் லலிதா அக்காவுக்கும் அவ மேல் அதிகப் பிரியம் இருந்தது. சாந்தா அக்கா இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவைக்கு அடிக்கடி இசையும் , கதையும் எழுதி அனுப்பிக்கொண்டிருந்தா. அவவின்ற கதைகள் பல ஒலிபரப்பப்பட்டன. நானும் சிலவற்றைக் கேட்டிருக்கின்றன். அவவின்ற வயதுக்கேற்ற காதல் கதைகளே அவை. ஒரு சமயம் அக்கா அவவை வீட்டுக்குக் கொண்டு விடும்போதுதான் எழுதி வைத்திருந்ததை எடுத்து வாசிக்கத் தந்தா. என்ன அழகான கையெழுத்து! சாந்தா அக்காவின் கையெழுத்தும் அவவைப்போல் அழகானதுதானென்று அச்சமயம் எண்ணிக்கொண்டேன். அவ்விதம் அச்சமயத்தில் எண்ணிக்கொண்டதும் இன்னும் என் நெஞ்சில் இருப்ப்பதை இத்தருணத்தில் உணர்கின்றேன். சில சமயங்களில் இவ்விதம் அடிக்கடி சாந்தா அக்காவை அவவின்ற வீடு வரை கூட்டிச் செல்வது எனக்குச் சிரமமாகவிருக்கும். வேறு ஏதாவது எனக்குப் பிடித்த விடயங்களில் ஈடுபட்டிருக்கும் தருணமொன்றாக அந்நேரம் இருக்கும். அவ்விதமான சமயங்களில் அவவைக் கூட்டிச்செல்வதற்கு எனக்கு விருப்பமில்லாதிருக்கும். அவ்விதமான சமயங்களில் என் மனநிலையை மாற்றுவதற்குச் சாந்தா அக்கா ஒரு தந்திரம் செய்வா. அக்காலகட்டட்த்தில் நான் சாண்டியல்யனின் 'கடல் புறா' நாவலைத் தேடி அலைந்துகொண்டிருந்தேன். யாழ் நூலகத்தில் நாவலின் மூன்று பாகங்களுமிருந்தன. ஆனால் அதற்கான 'டிமாண்ட்' அதிகமாகவிருந்ததால் அதற்காகப் பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கே முன்னுரிமை. நானும் பதிவு செய்திருந்தேன். இரண்டு வருடங்களாகியும் கிடைத்த பாடில்லை. இதனால் அது என் கைக்கெட்டாத தூரத்தில் இருந்ததால் அதன் மீதான வெறியும் எனக்கு அதிகமாகிக்கொண்டே சென்றது. அதன் முதலிரு அத்தியாயங்களைப் பழைய குமுதம் இதழ்களில் பார்த்ததிலிருந்து, அவற்றுக்கான ஓவியர் லதாவின் இளைய பல்லவனின் ஓவியங்களைப் பார்த்ததிலிருந்து வெறி இன்னும் அதிகமாகிக்கொண்டே சென்றது. நகரிலிருந்த புத்தகக்கடையொன்றின் 'ஷோகேசில்' மூன்று பாகங்களுமிருந்தன. ஆனால் அவற்றை வாங்கும் நிலையில் நானில்லை. அப்போது அத்தொகுதியின் விலை ரூபா 115. அது எனக்குப் பெரிய தொகையாகவிருந்தது. கடல்புறா மீதான எனது ஆர்வத்தைச் சாந்தா அக்கா அறிந்து வைத்திருந்தார். அதற்காக அவர் கூறுவார் 'கேசவா, வீடு மட்டும் வாறியா. கட்டாயம் உனக்கு என்ர மாமியிடமிருக்கும் கடல் புறாவை வாங்கித்தருவன்." "என்ன? உங்கள் மாமியிடம் கடல் புறா இருக்குதா?" "ஓமடா. சித்தங்கேணி மாமியிடம் இருக்குது. அவவிட்ட கடல்புறா மூன்றுபாகங்களும் குமுதத்திலை வந்தது இருக்கு. வடிவாக் கட்டி வைத்திருக்கிறா. வடிவான படங்களுடன் இருக்கு." என்பார். எனக்கோ கடல்புறாவை உடனடியாக வாசிக்க வேண்டும்போலிருக்கும், "கட்டாயம் அடுத்த கிழமை அவவிடமிருந்து எடுத்த வாறன்" என்பார். ஆனால் இறுதிவரை அவர் கடல் புறாவைச் சித்தங்கேணி மாமியிடமிருந்து எடுத்து வந்ததேயில்லை. என் ஆசையும் நிறைவேறினதேயில்லை. ஆனால் கடல் புறாவை காரணம் காட்டியே அவரை அவர் வீடு மட்டும் பல தடவைகள் கொண்டுபோய் விட்டிருப்பேன். இப்பொழுதும் சாந்தா அக்காவை நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது என் பால்ய பருவத்தில் சாந்தா அக்கா கடல் புறாவைக் காரணம் காட்டி என்னை ஏமாற்றியதுதான். அந்த சாந்தா அக்காதான் இப்போது போய்விட்டதாகச் சின்னம்மா கூறுகின்றா. நான் பால்ய பருவத்திலிருந்து பதின்ம வயதுக்குள் அடியெடுத்து வைக்கும்போது லலித அக்கா கனடா சென்று விட்டா. அவ கனடா சென்றதுமே அவவுடைய சிநேகிதிகளைக் காண்பதும் குறைந்து விட்டது. அவ்வப்போது சாந்தா அக்காவை வீதிகளில் காணும்போது சிரித்தபடியே 'இப்ப எப்படியடா இருக்கிறாய் கேசவா' என்பார். பதிலுக்கு நண்பர்களுடன் நகரிலில் 'சுழட்'டித் திரியும் நானும் 'நல்லாயிருக்கிறன் சாந்தா அக்கா" என்று கத்தியபடியே செல்வேன். இவ்விதமாகக் காலம் சென்று ஓடிக்கொண்டிருக்கையில் ஒரு நாள் வழியில் சாந்தா அக்காவை இன்னுமொரு நடிகரைப்போன்ற இளைஞர் ஒருவருடன் கண்டேன். என்னைக் கண்டதும் சாந்தா அக்கா "இங்கை வாடா கேசவா" என்றா. சைக்கிளில் சென்று கொண்டிருந்த நான் இறங்கி அவ அருகில் சென்றேன். "கேசவா, இவர் என்ர ஹஸ்பண்ட்" என்றவ தன் கணவர் பக்கம் திரும்பி "நான் சொல்லுவனே, எங்கட பொடி கார்ட் கேசவனென்று . அவன் இவன் தான். " என்றா. பதிலுக்கு ஒரு புன்னகையைத் தவள விட்டார் நடிகர். அதுதான் நான் சாந்தா அக்காவைக் கடைசியாகப் பார்த்தது. நாட்டின் நிலைமை கலவரம்,போர்ச்சூழலுக்குள் சென்று விட்டது. அவ பற்றிய நினைப்பே எனக்கு வருவதில்லை. போர் முடிவுக்கு வந்து ஆண்டுகள் பல சென்று விட்ட நிலையில் சாந்தா அக்கா பற்றிச் சின்னம்மா கூறியதும் ஆழ் மனக் குளத்தின் ஆழத்தில் புதையுண்டு கிடந்த சிந்தனை மீன்கள் மீண்டும் மீளுயிர்பெற்று எழுந்து வந்து நீச்சலடிக்கத்தொடங்கின. சாந்தா அக்கா பற்றிய நினைவுகள் எல்லாம் பசுமையாக மீண்டும் நினைவுக்கு வந்தன. பால்ய பருவத்து அழியாத கோலங்கள் எப்பொழுதும் இன்பம் தருபவை. சாந்த அக்கா பற்றிய நினைவுகளும் அத்தகையவைதாமே. "டாடி" என் சின்னவள் அழைத்தாள். பதிலுக்கு " என்னம்மா" என்றேன். "டாடி, டோண்ட் ஃபொர்கெட் டு பிக் மி அப் டு நைட்?" என்றாள். இன்றைக்கு என் சின்ன மகள் தன் சிநேகிதிகள் சிலருடன் , 'டொரோண்டோ'மாநகரின் 'டவுன் டவுனி'லுள்ள இத்தாலிய உணவகமொன்றுக்குச் செல்கிறாள். அவளைப் போய் பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும். அதைத்தான் அவள் நினைவூட்டுகின்றாள். எனக்குப் பால்ய பருவத்தில் சாந்தா அக்காவின் 'பொடி கார்ட்டா'கச் சென்று திரிந்தது நினைவுக்கு வந்தது. இலேசானதொரு புன்னகையும் முகத்தில் படர்ந்தது. எதற்காக அப்பா இப்படிப் புன்னகைக்கின்றார் என்பது தெரியாமல் சிறிது வியப்புடன் நோக்கினாள் என் இளைய மகள். girinav@gmail.com 22.10.2023 ஈழநாடு வாரமலர் (யாழ்ப்பாணம்) https://vngiritharan230.blogspot.com/2025/10/blog-post_37.html?fbclid=IwY2xjawNkrgxleHRuA2FlbQIxMABicmlkETFyNDAxNzc0bjN1aTZreTZDAR4nYgk-MaWmcqRSV0UGqKRJnarLhrBwLuweYhFzZsqJNR8KC_HZ1KEW-AZk6Q_aem_Ulbig9zfNlgHkWaVY7mZjA
-
தையிட்டி விகாரை தேவதம்பிய தீசன் காலத்தானாம்
தையிட்டி விகாரை தேவதம்பிய தீசன் காலத்தானாம் written by admin October 19, 2025 யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தேவநம்பிய தீசன் காலத்து பௌத்த நிலம் அதனை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்து தர வேண்டும் என கோரி இலங்கை பௌத்த காங்கிரஸ் , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக எமது பகுதி இருந்த வேளை எமது உறுதி காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி அதனுள் விகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன் , விகாரையை சுற்றியுள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும் , அந்த காணிகளை எம்மிடம் மீள கையளிக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை விகாரை கட்டுவதற்கான அனுமதிகள் எவையும் பெறப்படாது , அவ்விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் , இனிவரும் வரும் காலங்களில் எவ்விதமான புதிய கட்டட வேலைகளை அனுமதியின்றி முன்னெடுக்க கூடாது என பிரதேச சபையினால் விகாராதிபதிக்கு அறிவுறுத்தலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையிலையே இலங்கை பௌத்த காங்கிரஸ் , தவிசாளருக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். குறித்த கடிதத்தில், தையிட்டி திஸ்ஸ விகாரை தேவநம்பிய தீசன் காலத்து பௌத்த நிலத்தில் நிறுவப்பட்ட புராதன விகாரை ஆகும். அது பிற்காலத்தில் அழிவடைந்த நிலையில் 1950ஆம் ஆண்டு கால பகுதியில் , மீளவும் புனரமைக்கப்பட்டு , 1959ஆம் ஆண்டு வரையில் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. அதற்கான சான்று ஆதாரங்கள் உண்டு. 1958ஆம் ஆண்டு நிலஅளவை திணைக்களத்தின் வரை படத்தின் பிரகாரம் 20 ஏக்கர் காணி விகாரைக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. அப்பகுதியில் குளம் ஒன்றும் காணப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு கால பகுதியில் நகர அபிவிருத்தி திட்டத்தில் கூட இந்த இடம் விகாரை என குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் உள்நாட்டு போர் காரணமாக விகாரையை சுற்றியுள்ள அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அப்பகுதியில் சுமார் 6ஆயிரம் ஏக்கர் காணி இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் அப்பகுதிகள் விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது, 2018ஆம் ஆண்டு கால பகுதியில் விகாரை இருந்த இடம் அடையாளப்படுத்தப்பட்டு , விகாரை அமைக்கும் பணிகள் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையில் விகாரையின் விரிவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. 2024ஆம் ஆண்டு விகாரைக்குரிய காணியை அடையாளப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்ட நில அளவையின் 14 ஏக்கர் 5.97 பேர்ச் காணியே காணப்பட்டது. 1959ஆம் ஆண்டு விகாரைக்கு இருந்த காணியை விட சுமார் 6 ஏக்கர் காணி குறைவாக காணப்பட்டது அதனால் எஞ்சிய காணிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் முதலாவது தமிழ் பௌத்த பாடசாலை திஸ்ஸ விகாரையை அடிப்படையாக கொண்டே அமைக்கப்பட்டது. என்பதையும் கூறி வைக்கிறோம். தற்போது திஸ்ஸ விகாரைக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வழிபாட்டுக்கு வந்து செல்கின்றனர். அதனால் அவர்களின் நலன் கருத்தி விகாரையில் பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள இருப்பதனால் , அப்பணிகளுக்கு பிரதேச சபையினால் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன் , ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விகாரையை பாதுகாத்து தர வேண்டும் எனவும் கோருகிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2025/221709/
-
திருப்பெருந்துறையில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவி – சிந்து!
திருப்பெருந்துறையில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவி – சிந்து! written by admin October 19, 2025 மூன்றாவது கண் உள்@ர் அறிவுத்திறன் செயற்பாட்டு நண்பர்கள் குழுவின் ஓர் அங்கமாகிய முரசம் பேரிசை கலைகள் கற்கைகள் மன்றத்தினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழா ஆனது இவ் வருடமும் 11.10.2025ஆம் திகதி முன்னர் பெரியதுறை என அழைக்கப்பட்ட திருப்பெருந்துறையில் நடத்தப்பட்டது. இவ் விழாவில் முரசம் (பறை) மற்றும் சொர்ணாலி இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களது கலைச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களுடன் அவர்களது ஆற்றுகைகளும் நிகழ்த்தப்படுகின்றமை வழமையாகும். அந்தவகையில் கடந்த வருடம் நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வெகு விமரிசையாக கிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு நுண்கலைத்துறை மாணவன் செல்வன் டானியல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25.ற்கும் மேற்பட்ட பரம்பரை மற்றும் தொழில்முறை பறை மற்றும் சொர்ணாலி இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்து முன்றாவது கண் நண்பர்களால் இவ் விழா முன்னெடுக்கப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவியான செல்வி லாவண்யா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவானது கடந்த சனிக்கிழமை 11.10.2025ம் திகதி காலை 10.00 மணியளவில் மிகச்சிறப்பாக ஆரம்பமானது. இவ்விழாவிற்கு களுதாவளையைச் சேர்ந்த ச. திவ்யபுத்திரன், ச. விஜயபுத்திரன் எனும் இளங்கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பறை மற்றும் சொர்ணாலி இசைக்கருவிகளை இசைக்கும் பாரம்பரிய மற்றும் தொழில்முறை கலைஞர்களாவார்கள். இவர்களோடு பாரம்பரிய கலைகளிலும், பாரம்பரிய வைத்திய முறையிலும் தேர்ச்சி பெற்ற தேனூரான் என்னும் சிறப்புப் பெயருடைய தருமரெத்தினம் அவர்களும் கலந்துகொண்டார். இவ் விழாவிற்கு அழைக்கப்பட்ட கலைஞர்கள் மாலையிட்டு, எமது பண்பாட்டின் மற்றோர் அம்சமான கைத்தறி சால்வை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும் கலைஞர்களது பரம்பரைக் கலைகள் தொடர்பான கருத்துகளும் ஆற்றுகைகளும் பரிமாறப்பட்டதோடு அங்கு வருகை தந்திருந்த எம் பாரம்பரிய கலைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முரசம் மற்றும் சொர்ணாலி இசையின் இசைப்பு முறைகளும் பயிற்றுவிக்கப்பட்டது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் எமது பாரம்பரிய கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் முகமாக சி. ஜெயசங்கர் எழுதிய “எங்களின் அறிவில் எங்களின் திறனில் தங்கி நிற்போம் நாங்கள்” எனும் பாடல் பாடப்பட்டு, தமிழர்களின் தொன்மையான வாத்தியமான பறை வாத்தியம் எங்களது வாழ்வியலோடு எவ்வாறு இணைந்திருந்தது என்றும் அது இன்று பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதோடு இன்று பறை, சொர்ணாலி வாத்தியங்களை எப்படி வாசிக்கிறார்கள் என்றும் அந்த வாத்திய வாசிப்புகளுக்கான தாளக்கட்டுகளுக்கான பயிற்சியும் அழைக்கப்பட்ட இரு கலைஞர்களால் வழங்கப்பட்டது. மேலும் முரசம் மற்றும் சொர்ணாலி இசைக்கலைஞர்கள் தங்கள் கருத்துகளில், இன்று தங்கள் சமூகத்தில் இளம் தலைமுறையினர் பறை இசைப்பதில் பெரிதும் நாட்டம் கொள்ளாத நிலையிலும் தங்கள் கலையை தாங்கள் செய்வதில் பெருமிதம் கொள்கிறோம் என்றும், தங்களுக்கு போதுமான வருமானத்தை தரக்கூடிய கலை வடிவம் இது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந் நிகழ்வில் கலந்துகொண்ட பல்வேறு கலைகளுடனும் கலைச் செயற்பாடுகளுடனும் தொடர்புள்ள இளம் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் இன்று தென்னிந்திய சினிமாப் பாடல்களையும் மேற்கத்தேய வாத்தியங்களையும், இசைகளையும் பழகுவதிலும், நிகழ்த்துவதிலும் பெருமைகொள்ளும் நாங்கள் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், ஒரு தகவலை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் முதன்மையான முரசம் என்கின்ற பறை இசைக்கருவியை இசைக்கும் இசைக்கலைஞர்களை இன்னும் பழைய நிலையிலே தான் பார்க்கிறோம். அதாவது உதாரணத்திற்கு, அவர்கள் கதிரையில் இருந்தால் கூட “ஏன் நீங்கள் இப்போ கதிரையிலும் இருக்க ஆரம்பித்துவிட்டீங்களா?” என கேட்கின்ற நிலையில் தான் எம் சமூகத்தின் மனநிலை அமைந்திருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. இப்படி பல்வேறு வகையில் அவர்களைத் துன்புறுத்தி வைத்திருப்பதாகவே நம் சமூகக் கட்டமைப்பு காணப்படுகின்றது. ஆனால் இன்று பரம்பரைக் கலைஞர்கள் அல்லாத பலரும் பறை மற்றும் சொர்ணாலி வாத்தியங்களை இசைக்கின்றனர். அவர்கள் இக் கலைகளை பாரம்பரிய பரம்பரைக் கலைஞர்களிடமிருந்தே கற்றுக்கொண்டு தற்போது தொழில்முறைக் கலைஞர்களாக உருவெடுத்துள்ளனர். இதற்கு காரணமாக அமைந்தது யாதெனில், இக் கலைகளை இசைத்த பாரம்பரிய பரம்பரைக் கலைஞர்களுக்கும் அவர்களது சமூகத்திற்கும் சுற்றியுள்ள மற்றைய சமூகங்களால் இழைக்கப்பட்ட அநீதிகளும், அவ் அநீதிகளின் நிமித்தம் கலைஞர்கள் அடைந்த அவமானத்தினால் இக் கலையை கைவிட்டுவிட்டு ஒதுங்கி இருந்தமையே ஆகும். மேலும் பரம்பரைக் கலைஞர்கள் அல்லாத தொழில்முறைக் கலைஞர்கள் கோவில்களில் மாத்திரம் இக்கருவிகளை வாசிக்கின்றனரே தவிர இறந்த வீடுகளில் வாசிப்பதில்லை. இது ஏன் என எண்ணுகையில் தொழில்முறைக் கலைஞர்கள் இக் கருவிகளை இறந்த வீடுகளில் வாசிக்க விரும்புவதில்லை அல்லது இறந்த வீட்டில் வாசிப்பதை அவர்கள் இழிவாக நினைக்கிறார்கள் என்பதே புலனாகுகின்றது. இக் கலையோடு தொடர்புபட்ட ஒரு சம்பவமாக, களுதாவளை கோவிலில் பறை மற்றும் சொர்ணாலி இசைக்கும் பரம்பரைக் கலைஞர்களை ஆலயத்திற்குள் இருந்து வெளியேற்றிய சம்பவமும் உண்டு ஆனால் இன்றும் கொக்கட்டிச்சோலை கோவிலின் உள்ளே தொங்கவிடப்பட்டிருக்கும் பறையை கோவிலிற்கு வரும் பக்தர்கள் யாரேனும் வாசிக்கலாம் எனும் வழக்கமும் உண்டு. எதுவாயினும் இது தான் எழுதப்பட்ட விதி என்றோ, அது தான் வகுக்கப்பட்ட கோட்பாடு என்றோ கருத இயலாத அளவிற்கு இயற்கையும் காலமும் அதன் தன்மையை மாற்றி நிற்கும் இவ் நவீன தொழில்நுட்ப யுகத்தில் வாழும் மனிதர்கள் மட்டும் படிப்பறிவால் பகுத்தறிவு பெற்றோம் என பெருமைப்பட முடியாத படி வகுப்பு வாத பிரிவினைகளால் பிளவுண்டு, அருகில் வாழும் சக மனிதரை அதிகாரம் கொண்டு அடக்கி ஆள துடிக்கின்றோம். இத்தகைய எண்ணம் மேலோங்காமல், மனிதர்களாகிய நாம் வர்க்க பாகுபாடுகளை நீக்கி சமத்துவமாக வாழ்வதற்கும், எம் பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்கும், பரம்பரைக் கலைஞர்களை வாழ வைப்பதற்கும் நாம் இணைந்திருக்கும் இயற்கையும் யுகமும் மாறி நிற்பது ஒரு பொருட்டல்ல, மாறாக எம் மனித மனம் மாறவேண்டும். அந்தவகையில் எம் கலைகளை வளர்ப்பதற்கும் அதனை அடுத்த தலைமுறைக்கு கையளிப்பதற்கும் மனப்பாங்கு மாற்றமே இங்கு அடிப்படைத் தேவையாக அமைகின்றது. வி. சிந்து https://globaltamilnews.net/2025/221730/
-
யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு – விசேட தபால் தலை வெளியீடு
யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு – விசேட தபால் தலை வெளியீடு written by admin October 18, 2025 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு சேவையை நினைவு கூர்ந்து, விசேட தபால் தலை (Commemorative Stamp) இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. அஞ்சல் திணைக்களத்தின் உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம், வட மாகாண உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம் மற்றும் அஞ்சல் துணைக் கிளை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த விசேட தபால் தலையை வெளியிட்டனர். அந்நிகழ்வில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராசா , சி.சிறிதரன் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபன் , வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அந்த காலத்திய அரசாங்க அதிபர் மற்றும், அவருடைய நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் நிறுவப்பட்டது. பின்னர், 1907ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலைக்கு “யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை” என்ற புதிய பெயர் வழங்கப்பட்டு, அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன. அதற்குப் பிறகு, 1956ஆம் ஆண்டு, இது “யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை” என மாற்றப்பட்டது. 1980ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலை “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை” (Jaffna Teaching Hospital) என பெயர் மாற்றம் பெற்று, அன்றிலிருந்து அதே பெயரில் தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்காலத்தில் “தேசிய வைத்தியசாலை” (National Hospital) என்ற அடிப்படையில் இந்த வைத்தியசாலை உயர்த்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு சேவையை நினைவு கூர்ந்து, பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் வைத்தியசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/221685/
-
இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணம் - யாழ். திரும்பிய இளைஞர்கள் சாதனை!
- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
இஷாரா செவ்வந்தியுடன் சிக்கிய மிருசுவில் தக்சி நந்தகுமார், பளை சுரேஸ் போன்றோரின் பின்னணி என்ன? அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்காவில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் மறைந்திருந்தபோது நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டார். சந்தேக நபருடன் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே (வயது 26), கிளிநொச்சி- பளையைச் சேர்ந்த ஜீவதாசன் கனகராசா சுரேஸ் (வயது 33), யாழ்ப்பாணம் மிருசுவிலை சேர்ந்த தக்சி நந்தகுமார் (வயது 23) தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா (வயது 49), யாழ்ப்பாணத்தை சேர்ந்த கெனடி பஸ்தியாம்பிள்ளை- ஜே.கே.பாய் (வயது35) மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே (வயது 43) ஆகியோரே கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்று விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். பேலியகொட குற்றப் பிரிவின் இயக்குநனர் ASP ரொஹான் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் IP கிஹான் டி சில்வா ஆகியோரால் மூன்று நாட்களாக நேபாளத்தில் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்தது. நேபாள காவல்துறை மற்றும் இன்டர்போலின் உதவியுடன், காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரி அசங்க கரவிட்ட ஆகியோரின் முழு மேற்பார்வையின் கீழ், கடந்த சனிக்கிழமை (11) முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இஷாரா செவ்வந்தியின் மறைவிடத்தின் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், ரொஹான் ஒலுகலவின் தலைமையில் இந்த சோதனை திட்டமிடப்பட்டது. அதன்படி, காத்மாண்டு சென்ற இலங்கை காவல்துறை அதிகாரிகள், நேபாள காவல்துறையினரை சந்தித்து நடவடிக்கை குறித்து விவாதித்தனர், மேலும் இஷாரா செவ்வந்தி மறைந்திருந்த சொகுசு வீட்டிற்கு அடுத்த வீட்டில் தங்கிய பின்னர், விசாரணையைத் தொடங்கினர். இந்த நடவடிக்கையைத் தொடங்கிய நேபாள பொலிசார், முதலில் இஷாரா செவ்வந்தியின் உதவியாளரான கென்னடி பஸ்தியான்பிள்ளை அல்லது ‘ஜே.கே. பாய்’ என்பவரைக் கைது செய்தனர். அவர் தாமெலில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் போது இஷாராவின் இருப்பிடத்தை உறுதிசெய்த பிறகு, நேபாள காவல்துறையின் உதவியுடன் வீடு சோதனை செய்யப்பட்டு, செவ்வந்தி கைது செய்யப்பட்டார். தன்னைக் கைது செய்ய வந்த உதவி காவல் கண்காணிப்பாளரைப் பார்த்தவுடன் திகைத்துப் போன சந்தேக நபர், “ஓலுகல சேர் எனக்குத் தெரியும் நீங்கள் என்னைக் கைது செய்வீர்கள் என்று" இவ்வாறு கூறியுள்ளார் செவ்வந்தி, பக்தபூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, வீட்டு உரிமையாளரிடம் தான் ஒரு இந்திய பெண் என்று கூறி வந்ததாக புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். “அவர் இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்றும், சுமார் ஒரு மாதமாக பக்தபூரில் தங்கியிருந்ததாகவும், பெரும்பாலும் தனது அறைக்குள் தங்கியிருந்ததாகவும் கூறினார்” என்று விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார். “ஆபத்தை குறைக்க அவர் வெளியே செல்வதைத் தவிர்த்திருக்கலாம்.” ஒலுகல எப்போதாவது வந்து தன்னைக் கைது செய்வார் என்று நினைத்ததாக இஷாரா செவ்வந்தி கூறினார். ஏழு மாதங்களாக நேபாளத்தில் சிக்கியிருப்பதாகவும், இப்படி இருப்பதை விட இலங்கைக்குச் செல்லலாம் என நினைத்ததாகவும், ஆனால் காவல்துறையினரிடம் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயத்தில் தான் நேபாளத்திலேயே இருந்ததாகவும் அவர் மேலும் கூறினார். ஜீவதாசன் கனகராசா மற்றும் தக்சி நந்தகுமார் ஆகியோர் மித்ராபார்க், புதிய பேருந்து நிறுத்தம் அருகே கைது செய்யப்பட்டனர். விசாரணைகளில் ஜே.கே. பாய், இஷாரா செவ்வந்தியை படகில் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அங்கேயே வைத்திருந்தார், பின்னர் ஆறு நாள் ரயில் பயணத்தின் மூலம் நேபாளத்திற்கு அழைத்துச் சென்றார். கடல் வழியாக குற்றவாளிகளை மற்ற நாடுகளுக்கு கடத்துவதை தனது தொழிலாகக் கொண்ட ஜே.கே. பாய், தனது தொடர்புகளைப் பயன்படுத்தி அவளை எல்லை தாண்டி நேபாளத்திற்கு கொண்டு வந்தார், மேலும் காத்மாண்டுவில் ஒரு வாடகை வீட்டையும் அவருக்கு வழங்கினார். கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிறகு பல நாட்களாக கொழும்பைச் சூழவுள்ள பல பகுதிகளில் தலைமறைவாக இருந்த இஷாரா செவ்வந்தி, பின்னர் மதுகம பகுதிக்கும், அங்கிருந்து மித்தேனியாவிற்கும் தப்பிச் சென்றார். ஜே.கே. பாய் மித்தேனியாவில் அவருடன் சேர்ந்தார், மேலும் அங்கு ஒளிந்து கொள்ள சம்பத் மனம்பேரி என்ற குற்றவாளியின் உதவி அவருக்கு கிடைத்ததா என்ற சந்தேகத்தை போலீசார் எழுப்பியுள்ளனர் இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கெஹல்பத்தர பத்மேவின் கும்பலுடன் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் மற்றும் ஒரு பெண் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, காத்மாண்டுவில் வேறு இடங்களில் பதுங்கியிருந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு, கெஹல்பத்தர பத்மே கும்பலின் தலைவரான ‘கம்பாஹா பாபா’, அவரை காவலில் இருந்து விடுவிக்க ASP ரொஹான் ஒலுகலவுக்கு ரூ. 5 மில்லியன் லஞ்சம் கொடுக்க முயன்றார், ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்து மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் சாவகச்சேரியைச் சேர்ந்த தக்சி என அடையாளம் காணப்பட்டார், மேலும் அவர் இஷாரா செவ்வந்தியை மிகவும் ஒத்த தோற்றமுடையவர். இந்த தமிழ்ப் பெண்ணின் தரவு மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இஷாரா செவ்வந்தியின் பெயரில் ஒரு போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் அவளை ஐரோப்பாவிற்கு அனுப்ப திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மேவின் ஆலோசனையின் பேரில், ஜே.கே. பாய் இந்தத் திட்டத்தை செயற்படுத்தினார். ஆனால், பத்மே மற்றும் அவரது கும்பல் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டபோது அந்தத் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன. கெஹல்பத்தர பத்மேவின் உத்தரவின் பேரில் பெப்ரவரி 19 அன்று அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் கொமாண்டோ வீரரும் பத்மேவின் கும்பலின் துப்பாக்கிச்சூட்டாளராகக் கருதப்படும் கொமாண்டோ சாலிந்து, சட்டத்தரணியாக மாறுவேடமிட்டு நீதிமன்ற அறைக்குள் வந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். இந்தக் கொலையின் உள்ளூர் செயற்பாட்டாளராக செவ்வந்தி செயல்பட்டார், மேலும் அவர் ஒரு சட்டத்தரணியாக மாறுவேடமிட்டு நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். இந்தக் கொலைத் திட்டம் பல வாரங்களாக கொமாண்டோ சாலிந்துவுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலைக்குப் பிறகு, இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல மன்னாருக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த கொமாண்டோ சாலிந்த, புத்தளம் பாலாவிப் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார், ஆனால் இஷாரா செவ்வந்தியை கைது செய்ய முடியவில்லை. சஞ்சீவ கொலை செய்யப்பட்ட 17 நாட்களுக்குப் பிறகு இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. கணேமுல்ல சஞ்சீவ அத்தனகல்ல மற்றும் கம்பஹா நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்பட்டபோது, இஷாரா செவ்வந்தி பல முறை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. நேபாளத்தில் கைதானவர்கள் தற்போது இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளனர். Andal Hashini- மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள்.பறவா இல்லை .தனக்கு பிடித்ததை செய்திருக்கிறா இதில் வெள்ளை, கறுப்பு என்று பேசிக் கொள்வதில் அர்த்தமே இல்லை.- இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
யார் என்ன வேணும் எண்டாலும் எழுதுங்கோ பிரச்சைனயே இல்லை.மற்றவைர்களை எவ்வளவுக்கு தரக்குறைவாக பேச முடியுமோ அந்தளவுக்கு தரக்குறைவாகத் தான் நினைப்பது, பேசுவது..சொல்லப் போனால் வைத்தியர் அடுத்த டிரம்ப்.இப்படி நிறைய எழுதலாம்..🖐- இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
இதில் எழுதலாமே தெரியவில்லை..தப்பு என்றால் பொறுத்துக் கொள்ளுங்கள்..ஜெனிவா பக்கம் நடையில் அழுது வடிச்சுக் கொண்டு திரிகிறவரும் நோபல் பரிசு கேட்பார் அதுக்கும் பரிந்துரை செய்யுங்கோ..கடசி ஒரு பியர் கடையாவது அங்கங்கு காட்டி விட்டீர்கள் என்றால் புண்ணியமாக போகும்..🤭- இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
🤭 - இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
Important Information
By using this site, you agree to our Terms of Use.