Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாயினி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  8,513
 • Joined

 • Days Won

  13

Everything posted by யாயினி

 1. அவ்வப்போது சில மாற்றங்கள் செய்து போடுவது நல்ல விஷயம்.
 2. அதனால் தான் கருணைக் கிழங்கு வந்துச்சு போலும்.
 3. Ontarioவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (September 26) ஒருபாலின திருமணம் ஒன்றை சைவ சமய ஆகம முறைப்படி நடத்தியதற்காக சிவஸ்ரீ.வி.ரங்கநாதக் குருக்களை வன்மையாகக் கண்டிப்பதாக கனடா இந்து குருமார் ஒன்றியம் நேற்று (வெள்ளி - October 1) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. Thesiyam இந்து குருமார் ஒன்றியம் என்ன பதில் சொல்லப் போகிறது......சொல்ல வேண்டும் என்று தான் அன்று வானொலி ஒன்றில் ஒரு அம்மா கேட்டு இருந்தார் அதற்கான பதில் ....
 4. மருத்துவம் சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்கள் அதுவும் வீட்டுக்கு சென்று நோயாளிகளை பார்ப்பவர்கள், தயவு செய்து ஊசி போட்ட பின்னர் வீடுகளுக்கு செல்வது உங்களுக்கும் நன்மை தரும் நோயாளிகளும் பயமின்றி உங்களை வரவேற்பார்கள்.எனது குடும்பத்தினர் யாரும் போட வில்லை அதனால் நானும் ஊசி போட வில்லை என்று சொல்லிக் கொண்டே home visit செய்யாதீர்கள்.நான் அறிந்த உண்மை ஒன்று அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.
 5. டைனோசர் இனங்களின் 50 எலும்புகள் - புதிய பார்வை தந்த கண்டுடிப்பு பட மூலாதாரம்,ANTHONY HUTCHINGS படக்குறிப்பு, புதிய கண்டுபிடிப்புகளுக்கு செரடோசூப்ஸ் இன்ஃபெரோடியோஸ் (முன்புறம்) மற்றும் ரிபார்வேனேட்டர் மில்னேரே என்று பெயரிடப்பட்டுள்ளது 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் தென் பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு புதிய டைனோசர் இனங்களின் கண்டுபிடிப்பு, அவை பற்றிய புதிய பார்வையை ஆராய்ச்சியாளர்களுக்கு கொடுத்துள்ளது. இந்த மாமிச ஊர்வனங்களில் ஒன்றை "நரக ஹெரான்" என்று விவரிக்கும் பறவையியலாளர்கள், அதன் வேட்டை பாணியை பறவையின் அச்சுறுத்தும் வடிவத்துடன் ஒப்பிடுகின்றனர். இங்கிலாந்தின் ஐல் அவ் வைட் கடற்கரையில் மூன்று கால்விரல் டைனோசர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஸ்பினோசாரிட் குழுவைச் சேர்ந்தவை என்றும் அவற்றின் நீளம் ஒரு மீட்டர் (3 அடி) மற்றும் மண்டை ஓடுகள் 9 மீ (29 அடி) நீளம் கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. டைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா? நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் - புதிய உயிரினம் கண்டுபிடிப்பு இந்த 50 எலும்புகளை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆனது. பட மூலாதாரம்,CHRIS BARKER படக்குறிப்பு, ரிபார்வேனேட்டர் மில்னேரேவுக்கு, முதலைகளைப் போன்ற 1 மீ நீளமான மண்டை ஓடு இருப்பதாக கருதப்படுகிறது இதில் செராடோசூப்ஸ் இன்ஃபெரோடியோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள முதலாவது மாதிரி, "கொம்பு முதலை முகம் கொண்ட நரக ஹெரான்" என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. புருவப் பகுதியைச் சுற்றி குட்டையான கொம்புகள் மற்றும் புடைப்புகள் இருப்பதால், ஹெரான் போன்ற வேட்டை பாணியை இது கொண்டிருக்கலாம் எனக் கருதி இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மாதிரிக்கு ரிப்பரோவெனேட்டர் மில்னேரே என்று பெயர் வைத்துள்ளனர். இது சமீபத்தில் இறந்த பிரிட்டிஷ் தொல்லியலாளர் ஏங்கலா மில்னரின் நினைவாக "மில்னரின் ஆற்றங்கரை வேட்டையாளர்" என்று இது அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் புதைபடிம சேகரிப்பாளர்கள், இரண்டு மண்டை ஓடுகளின் சில பகுதிகளைக் கண்டுபிடித்தனர், அதைத்தொடர்ந்து, டைனோசர் தீவு அருங்காட்சியக குழு டைடோனசர் வாலின் ஒரு பெரிய பகுதியை கண்டுபிடித்தது. 1983ஆம் ஆண்டில் சர்ரேயில் உள்ள ஒரு குவாரியில் பாரியோனிக்ஸைச் சேர்ந்த கடைசி ஸ்பினோசாரிட் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஒற்றை எலும்புகள் மற்றும் டைனோசரின் பற்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. பட மூலாதாரம்,CHRIS BARKER படக்குறிப்பு, பல வருட காலப்பகுதியில், இந்த எலும்புகள் ஐல் அவ் வைட், பிரிக்ஸ்டோன் அருகே உள்ள கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டன. செளத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் கிறிஸ் பார்கர், "பாரியோனிக்ஸில் கண்டறியப்பட்ட டைனோசர் எச்சங்களுடன் தற்போதைய டோனோசர் எச்சங்கள் வேறுபடுகின்றன. இதை பார்க்கும்போது, நாம் நினைத்ததை விட பல வகை ஸ்பினோசாரிட் டைனோசர்களுக்கு வாழ்விடமாக பிரிட்டன் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது'' என்றார். மூன்று கால் விரல் கொண்ட தெரோபாட் டைனோசர்கள் நிபுணரான இணை எழுத்தாளர் டேரன் நயிஷ், ""பாரியோனிக்ஸ் போன்ற டைனோசர்கள் ஐல் அவ் வைட் கண்டுபிடிப்புக்கு முன்பே இருந்ததை இரண்டு தசாப்தங்களாக நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால், இப்போது இந்த இரண்டு வகை டைசோனர்களின் எச்சங்களை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது," என்றார். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிற்குள் சிதறிச் செல்வதற்கு முன்பாக, ஸ்பினோசோரிட்கள் ஐரோப்பாவில் தான் முதலில் உருவாகியிருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சாண்டவுனில் உள்ள டைனோசர் அருங்காட்சியகத்தில் சுமார் 50 எலும்புகளின் சேகரிப்பு காட்சிப்படுத்தப்படவுள்ளது. இது குறித்து அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் மார்ட்டின் மன்ட் கூறுகையில், "ஐரோப்பாவிலேயே ஐல் அவ் வைட்டில்தான் டைனோசர்களின் முதன்மையான இருப்பிடமாக இருந்திருக்க வேண்டும் என்பதற்கு இந்த ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன," என்று தெரிவித்தார். காணொளிக் குறிப்பு, டைனோசர் இனத்தை அழித்த விண்கல் மோதலின்போது பாம்புகள் தப்பிப் பிழைத்தது எப்படி? bbc.com
 6. இன்று கனடாவில் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான முதலாவது தேசிய தினம் - National Day for Truth and Reconciliation ...... Thesiyam
 7. பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் விசு அண்ணா
 8. 48 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் தோற்றம் !!! 1973ம் ஆண்டில் இலங்கை எவ்வாறு காணப்பட்டது என்பது தொடர்பான புகைப்படங்கள் இவை . அந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஸ்கொட்லாந்து நாட்டை சேர்ந்த டன்கன் என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவை . உலகளாவிய ரீதியில் சிறந்த சுற்றுலாத் தளங்களில் #இலங்கை யும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இன்று #உலக_சுற்றுலா_தினம் #WorldTourismDay Loganathan Kanapathipillai
 9. வணக்கம் சொல்லலாமா ? ** நாள் விடிந்ததும் நாம் எதிர்கொள்வோரிடம் ’குட் மார்னிங்’ என்று ஆங்கிலத்தில் சொல்வது பரவலாக இருக்கிறது. காலையில் ஒருவரை நாம் முதன்முதலாகப் பார்க்கையில் அதனைச் சொல்ல வேண்டுமாம். ‘உங்களுக்கு நல்ல காலைப் பொழுதாக அமையட்டும்’ என்னும் வாழ்த்துச் செய்திதான் அது. இதுவே நண்பகல், மாலை, இரவு என்று பொழுதுக்கேற்பச் சொல்லப்படும். அந்தந்தப் பொழுது நல்லதாக அமைவதற்கான வாழ்த்து அது. ஆங்கிலத்தில் கூறப்படும் இந்த மேல்நாட்டு வழக்கம் நம்மவர்கள் மனத்தில் ஆழ ஊன்றிவிட்டது. ‘என்னைப் பார்த்ததும் ஒரு குட்மார்னிங்கூடச் சொல்லாமல் போறான்’ என்பது பெரிய குற்றச்சாட்டு. அலுவலக மட்டத்தில் உள்ளவர்களிடம் இப்போக்கு ஊன்றி நிலைத்துவிட்டது. இதனைத் தமிழில் எப்படிச் சொல்வது ? நாம் ஒருவரை முதலில் கண்டதும் செய்ய வேண்டிய செயல்கள் சில இருக்கின்றன. ஒருவரை முதலில் கண்டதும் நாம் செய்யும் செயல் வணங்குவது. அவர் யாராயினும் மனமுவந்து வாழ்த்துவது. அவரைப் பற்றி நல்லன அறிந்திருந்தால் போற்றுவது. இம்மூன்றையும் நாம் பல்வேறு நிலைமைகளில் செய்து வந்தோம். கோவிலுக்குள் சென்றதும் இறையுருக் கண்டு என்ன செய்கிறோம் ? வணங்குகிறோம். ஒரு நூலின் தொடக்கமும் வணக்கப் பாடல்கள், வாழ்த்துச் செய்யுள்கள் என்றே இருக்கின்றன. பெரியவர்களைக் கண்டால் என்ன செய்கிறோம் ? வணங்குகிறோம். அவரிடம் நேரடியாக ஒன்றைப் பேசத் தொடங்கும் முன் அவருடைய நற்செயல்களைப் போற்றிச் சொல்கிறோம். அவ்வாறு செய்வதனால் ஒருவர் மனங்குளிர்ந்து அன்பைப் பொழிவார். ஓர் உரையாடலை மிகச்சிறந்த மனநிலையோடு தொடங்குவதற்கு இது அருமையான அணுகுமுறைதானே ? வணக்கத்திற்கும் வாழ்த்திற்கும் போற்றலுக்கும் பெரியவர் சிறியவர் வேறுபாடு இல்லை. ஒருவரை முதலில் கண்டதும் வணங்குவதே நம் வழக்கு என்பதால் ‘வணக்கம்’ என்று சொல்கிறோம். அதனால்தான் குட்மார்னிங் என்பதற்கு ‘வணக்கம்’ என்பது தமிழ் மாற்று ஆனது. ஆங்கிலேயர்களின் முதற்செயல் நற்பொழுதாய் அமையட்டும் என்று சொல்வது. நம்முடைய முதற்செயல் வணங்குவது. சிலர் குட்மார்னிங் என்பதற்குத் தமிழில் நற்காலை என்பார்கள். அது ஆங்கில மொழிபெயர்ப்பு. நாம் வணக்கம் என்பதே பொருத்தம். - கவிஞர் மகுடேசுவரன்
 10. யாழ் என்ற ஒரு தளத்தை கண்ணியமான ஒரு தளமாக மட்டும் பாவியுங்கள்..அதை விடுத்து பத்தோடு பதினொன்றாக யாழின் தரத்தை கண்ட கன்றாவி ஆக்கங்களையும் போட்டு துலைக்காதீங்கள்..எது என்றாலும் வீட்டு வாசற் படி தாண்டாதவரை மனிதனுக்கோ யாருக்கோ அழகு.செய்தி என்றால் போல் எல்லாமே செய்தி ஆகாது....நன்றி.
 11. பாவம் இந்த அம்மாவை சும்மா இருக்க விடுவதே இல்லை போலும்..
 12. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களில் மறக்க முடியாதது அற்புதம் எது? மனம் திறந்த பாடகி சித்ரா ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 24 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,INSTAGRAM@KSCHITHRA படக்குறிப்பு, சித்ரா - பாலசுப்ரமணியம் தான் எவ்வளவு பெரிய பாடகராக இருந்தாலும் அணியில் இருந்த இசைக்கலைஞர்களின் நலனில் அக்கறை உள்ளவராக இருந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று கூறி ஒரு நிகழ்வை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார் பின்னணிப் பாடகி சித்ரா. திரையுலகில் 25,000 பாடல்கள் பாடி, ஆறு தேசிய விருதுகள் வென்றவர் சித்ரா. கிட்டத்தட்ட இந்தியாவின் பெரும்பாலான பிரபல மொழிகளிலும் தன்னுடைய குரலால் ரசிகர்களை ஈர்த்தவர். அயல்நாட்டு மொழிகளிலும் கூட இவர் பாடி இருக்கிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாடகியாக கோலோச்சி வரும் சித்ரா, பத்ம பூஷன் விருது பெற்றவர். பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் முதல் நினைவு நாளை ஒட்டியும், தனது இசைப் பயணம் தொடர்பாகவும் பிபிசி தமிழுக்கு அவர் அளித்த நேர்காணல்: பின்னணி பாடகியாக திரைத்துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகள் ஆகிறது. கடினமான இந்த இசைத்துறையில் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்க முடியும் என நினைத்தது உண்டா? அப்போது உங்கள் லட்சியம் என்னவாக இருந்தது? "திரைத்துறையில் பின்னணி பாடகியாக வரவேண்டும் என நிச்சயம் நான் எதிர்ப்பார்க்கவில்லை. இசையை நான் முக்கிய பாடமாக எடுத்து நான் கற்றதற்கு காரணம் எதாவது ஒரு கல்லூரியிலோ அல்லது பள்ளியிலோ இசை ஆசிரியையாக பணி புரிய வேண்டும் என்பதுதான். என்னுடைய நண்பர்கள் பலர் இன்று இசை ஆசிரியர்களாக இருக்கின்றனர். என்னுடைய அம்மா, அப்பா இருவருமே இசை ஆசிரியர்கள்தான். என்னுடைய குரு டாக்டர். ஓமணக்குட்டி அவர்களுடைய சகோதரர் எம்.ஜி. ராதாகிருஷ்ணன் அகில இந்திய வானொலியில் இசை இயக்குநராக இருந்தார். அவர் எங்களுடைய குடும்ப நண்பரும் கூட. அவர்கள் திருவனந்தபுரத்தில் ஒரு இசை ஸ்டுடியோ ஆரம்பித்தார்கள். அங்கு பாடல் பதிவு ஆரம்பித்தபோது அங்கே உள்ளவர்களுக்கு முதல் வாய்ப்பு கொடுக்கலாம் என்று யோசித்ததன் விளைவாக எங்கள் நண்பர்கள் குழுவுக்கு அந்த வாய்ப்பு வந்தது. நீதிக்கதைகளை எல்லாம் நாங்கள் நண்பர்களாக இணைந்து பாடல்களாக மாற்றி பாடிக்கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் பாடகர் ஜேசுதாஸ் அவர்களோடு இணைந்து பாடும் வாய்ப்பு வந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம்: பொறியியல் படிப்பு முதல் இசையமைப்பாளர் ஆனது வரை பாடகி சித்ராவை அழ வைத்த எஸ்.பி.பி - சுவாரஸ்ய பக்கங்கள் அப்பொழுதும் நான் பின்னணி பாடகி ஆவேன் என நினைக்கவே இல்லை. தாஸ் அவர்களுடைய குழுவில் இணைந்து தேவைப்படும் போது அவருடைய கச்சேரிகளில் பாடி வந்தேன். அதன் பிறகுதான் புதிதாக ஒரு குரல் தாஸ் குழுவில் இருக்கிறது என திருவனந்தபுரத்தில் நிறைய பாடல்கள் பாடுவதற்கு வாய்ப்பு வந்தது. அதுபோல, அங்கு ரவீந்திரன் மாஸ்டர் அவர்களுக்கு ஒரு பாடல் பதிவு செய்து கொடுத்தேன். அவர்தான் என்னை முதன் முதலாக சென்னைக்கு அழைத்து வந்தது". தமிழில் பாடிய முதல் பாடல் நினைவிருக்கிறதா? "தமிழில் என்னுடைய முதல் பாடலை இளையராஜா இசையில்தான் பாடினேன். அந்த வாய்ப்பு வந்தது சுவாரஸ்யமான கதை. பாசில் இயக்கத்தில் ஒரு மலையாள படத்தில் பாடியிருந்தேன். அந்த படத்தில் நடித்திருந்த நாயகிக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். இருவருமே புதியவர்கள். அதனால், நாயகிக்கு என்னுடைய குரல் ஒத்து போயிருந்தது. இந்த குரலையே தமிழிலும் முயற்சி செய்து பார்க்கலாம் என இளையராஜா சொன்னதால், சென்னையில் பாடல் பதிவுக்கு செல்லும்போது இளையராஜாவை சென்று சந்திக்க சொன்னார். பாசில் சார் எதோ விளையாட்டாக என்னிடம் சொல்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகுதான் அது உண்மை என புரிந்தது. அடுத்து ஒரு மலையாள பாடல் பதிவிற்காக சென்னை வந்தபோது இளையராஜாவை சந்தித்தேன். வாய்ஸ் டெஸ்ட் செய்தது என்னவோ 'பூவே பூச்சூடவா' படத்திற்குதான். ஆனால், முதலில் வாய்ப்பு வந்தது பாரதிராஜா படத்திற்குதான். அன்று அந்த படம் 'பச்சைக்கொடி' என்று சொன்னார்கள். ஆனால், அந்த பாட்டு அதில் வராமல் 'நீதானா அந்த குயில்' படத்தில் வெளி வந்தது". தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பல பாடல்களை பாடியிருக்கிறீர்கள். எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறோம் என்ற கணக்கு பார்த்தது உண்டா? "முன்பு எல்லாம் பாடல் பாடும்போது இசைத்தட்டு கொடுத்தார்கள். இப்போது அவை இல்லை. அதனால், நான் பாடும் பாடல்கள் குறித்து எழுதி வைத்து கொள்வதுதான் என்னுடயை ரெக்கார்ட். அதை கணக்கெடுத்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் அது குறித்த சரியான விவரம் சொல்லுவேன். இத்தனை மொழிகளில் எப்படி பாடினேன் என கேட்டால், எனக்கு நன்றாக தெரிந்த மொழி மலையாளம். கேரளாவில் இந்தி கட்டாயம் கற்க வேண்டும். இந்தி எழுத, வாசிக்க நன்றாக தெரியும். ஆனால், பேசும் அளவுக்கு பயிற்சி இல்லை. தெலுங்கு, தமிழ் இரண்டும் ஓரளவு பரிச்சயம் என்றாலும் அந்த அளவுக்கு பயிற்சி இல்லை. பட மூலாதாரம்,INSTAGRAM@KSCHITHRA படக்குறிப்பு, சித்ரா சென்னை வந்ததும் தமிழ் எனக்கு எழுத, படிக்க சொல்லி கொடுத்தது பாடகி லத்திகா. அதேபோல், தெலுங்கு பாலு சார் எழுதி கொடுப்பதுதான். அதில் இருந்துதான் பயிற்சி எடுத்து இரண்டையும் கற்று கொண்டேன்". 25,000 பாடல்கள் கடந்தும் இப்போது வரை தொடர்ந்து பணியாற்றி கொண்டே இருக்கிறீர்கள். இசைத்துறையில் உங்களுடைய இடத்தை தக்க வைப்பதற்கு என்ன மாதிரியான போராட்டங்கள் இருந்தது? இந்த காலக்கட்டத்தில் உங்கள் குடும்பத்துடைய ஆதரவு எப்படி இருந்தது? "முதலில் என் குடும்பத்திற்குதான் நன்றி சொல்ல வேண்டும். மனைவியாக, தாயாக எனக்கு சில கடமைகள் இருந்தன. ஆனாலும், என் சூழல் புரிந்து என் கணவரும், மகளும் நடந்திருக்கிறார்கள். அவர்களது ஒத்துழைப்பு இருந்ததால்தான் இத்தனை பாடல்களை பாட முடிந்தது. என்னுடைய அப்பாவுக்கும் இதில் மிகப்பெரிய பங்கு உண்டு. அவருக்கு வாய் புற்றுநோய் இருந்த காலத்தில் கூட வலியை எனக்காக சகித்து கொண்டு என்னுடன் பாடல் பதிவிற்காக கூட வருவார். பிறகு அவருக்கு முடியாமல் இருந்த காலத்தில்தான் எனக்கு திருமணம் நடந்தது. அப்பா எப்படியோ அதேபோல என் கணவரும் என்னை நன்றாக பார்த்து கொள்வார். இதுவரை என் வேலையில் இருந்து விடுமுறை என எடுத்தது இல்லை. அப்படியே சென்றாலும் கூட என் இசைப்பெட்டி இல்லாமல் சென்றது இல்லை. நான் உண்டு என் வேலை உண்டு என்றுதான் இருப்பேன்". சிறுமியாக, மகளாக, மனைவியாக, தாயாக, பாடகியாக பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை சுமந்து வந்திருக்கிறீர்கள். ஒரு பெண்ணாக சவால்களை எதிர்கொள்வதும், இழப்புகளை தாண்டி மீண்டு வருவது என்பதும் மிகக் கடினம். இதை எல்லாம் நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீகள்? "வீட்டில் செல்ல பிள்ளையாகதான் வளர்ந்தேன். பெரிதாக எனக்கு சமைக்க தெரியாது. தாய் என்ற முறையில் என் குழந்தைக்கு எல்லாம் தெரிய வேண்டும் என நினைத்துதான் வளர்த்தேன். பண்டிகைகள், அவளது பிறந்தநாள் என அத்தனையும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கொண்டாடுவோம். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கடவுள் எது நினைத்திருக்கிறாரோ அதுதானே நடக்கும்? அந்த கடினமான சமயத்தில் நிறைய பேருடைய வேண்டுதல்கள் எனக்கு இருந்தது. என்னை விட கடினமான சூழலை கையாண்டவர்கள் அவர்களுடைய அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். இவர்கள் யாரையும் எனக்கு முன் பின் தெரியாது. ஆனால், அத்தனை பேரும் எனக்கு ஆறுதல் சொல்ல இருந்தார்கள். இவர்கள் எல்லாம் கொடுத்த தைரியம்தான் என்னை மீட்டெடுத்தது. அதுதான் வாழ்க்கையில் நான் செய்த புண்ணியம் என நினைக்கிறேன். இவர்கள் எல்லாம் இல்லாமல் போயிருந்தால் நான் அப்படியே போயிருப்பேன். யார் என்ன சொன்னாலும் அதில் உள்ள நல்ல விஷயங்களை நம் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை கடவுள் எனக்கு கொடுத்திருந்தார். நான் மீண்டு வரவேண்டும் என நினைக்கும் இத்தனை பேர் இருக்கும் போது இவர்களுக்காக திரும்ப வந்தால்தான் என்ன என்ற எண்ணம்தான் இப்போது இருக்கும் நான்". ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ரஹ்மான் அவர்களுடைய இசையில் 100-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறீர்கள். அவருடன் பணியாற்றிய அனுபவம் மற்றும் அவர் இசையில் நீங்கள் பாடிய பாடல்களில் அடிக்கடி முணுமுணுக்கும் ஒன்று? "ரஹ்மான் இசையில் நிறைய, மறக்க முடியாத நல்ல பாடல்களை பாடியிருக்கிறேன். அவருடைய இசையில் முதன் முறையாக பாடிய போது பாடல் பதிவு அனுபவம் அதுவரை நான் பணியாற்றியதில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. பாட்டு பாடிய பிறகுதான் அவர் பின்னணி இசை எல்லாம் செய்வார். அதனால், அந்த பாடல் எப்படி முழுமையாக வந்துள்ளது என்பது வெளியேவந்த பிறகுதான் எனக்கு தெரிய வரும். மறக்க முடியாத அனுபவம் ஒன்று இருக்கிறது. 'மலர்களே மலர்களே' பாடல் பதிவின் போது நான் பாடியது அவருக்கு திருப்தி அளிக்கவில்லையோ, அவர் என்னிடம் இருந்து வேறு எதிர்ப்பார்க்கிறாரோ என தோன்றியது. ஆனால், அந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு 'ஓகே கண்மணி' படத்தில் பாட வைப்பதற்காக என்னிடம் ரஹ்மான் கேட்டிருந்தார். அப்போது நான் ஊரில் இல்லை என்பதால் பாட முடியவில்லை. வேறு யாராவது பாடியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். அப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஹ்மானை சந்தித்தேன். 'ஓகே கண்மனி' படத்தில் நான் பாட வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்கள் காத்திருப்பதாக சொன்னார். அதுவே எனக்கு விருது கிடைத்தது போலதான். அதன் பிறகு பாடிய பாடல்தான் 'மலர்கள் கேட்டேன்'. எஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் - படத்தொகுப்பு பிறகு, இந்தி படத்தில் ஒரு பாடல், உலக அமைதிக்காக அவர் இசையமைத்த ஒரு ஆல்பத்தில் பாடியிருக்கிறேன்". தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக தொடர்ந்து பணியாற்றி வருகிறீர்கள். நீங்கள் எப்போதுமே யாரையாவது போட்டியில் இருந்து விலக்க வேண்டும் என்றால் மிக மென்மையான கருத்துகளை முன் வைப்பீர்கள். இந்த பயணத்தில் நீங்கள் சந்திக்கும் சவால் என்றால் எதை சொல்வீர்கள்? "போட்டியாளர்களிடம் ஒரு விஷயம் சொல்லும் போது, அந்த இடத்தில் என்னை பொருத்தி பார்ப்பேன். நான் சொல்லும் கருத்தால் அவர்கள் கஷ்டப்படக்கூடாது என நினைப்பேன். அதனால், எனக்கு தெரிந்தவரை அவர்கள் பாடலில் திருத்தங்களை சொல்லி கொடுப்பேன். என் அப்பா என்னிடம் 'உன்னை புகழ்ந்து பேசுபவர்களை விட, உன் குறைகளை சுட்டுபவர்கள்தான் நீ நன்றாக வர வேண்டும் என நினைப்பவர்கள்' என்பார். அதை நான் முழுதாக நம்புகிறவள். இளையராஜா இசையில் பாடும்போது கூட, பாடி முடித்ததும் பாடலை என்னை முழுதாக கேட்க சொல்லி குறைகள் என்ன என்று கேட்பார். சுயபரிசோதனை அது. இவை எல்லாம் பெரிய படிப்பினைகள். சிற்பம் வேண்டும் என்றால் செதுக்கிதான் ஆக வேண்டும். குறைகள் சுட்டிக்காட்டுவதை நல்ல விதமாக எடுத்து கொள்ளும்போதுதான் வளர்ச்சி இருக்கும்". பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுடன் இணைந்து நிறைய பாடல்களை பாடியிருக்கிறீர்கள். அவர் இல்லாத இந்த ஓர் ஆண்டு எப்படி இருக்கிறது? பட மூலாதாரம்,SPB / FACEBOOK "கடந்த சில ஆண்டுகளாக பாலு சாருடன் இணைந்து அதிகம் பாடவில்லை. முன்பு எல்லாம் ஒரு நாளில் ஐந்து பாடல்கள் கூட அவருடன் இணைந்து பாடியிருக்கிறேன். பின்பு கால மாற்றத்திற்கேற்ப நான் ஒரு இடத்திலும் அவர் ஒரு இடத்திலும் இருந்து பாடல்களை பதிவு செய்தது எல்லாம் நடந்திருக்கிறது. சந்திப்பு என்பது எப்போதாவதுதான் இருந்தது. இந்த கொரோனா காலத்தில் கூட சமூக வலைதளங்களில் இயங்குவது, இசைக்கலைஞர்களுக்கு நிதி திரட்டி தருவது, மருத்துவர்கள் செவிலியர்களுக்கு நன்றி கூறுவதற்குப் பாடல் என சுறுசுறுப்பாக இருந்தவர். பொதுமுடக்க காலத்தில் அதுவரை நானும் வேலை இல்லாமல் மன உளைச்சலில்தான் இருந்தேன். பாலு சாரை பார்த்துதான் கொரோனா விழிப்புணர்வு குறித்து நானும் பாடல் இயற்றினேன். இப்போதும் அவர் நலமாக எங்கேயோ இருக்கிறார் என்றுதான் நம்புகிறேன்" எஸ்.பி.பி. உங்களிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் ஒரு விஷயம்? "கூட வேலை செய்பவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்திருப்பார். வெளிநாடுகளில் சில நாட்கள் இசை நிகழ்ச்சிகள் இருக்கும்போது ஓய்வுக்கான நேரம் குறைவாகவே இருக்கும். எங்களை விட கூட வரும் இசைக் கலைஞர்களது வேலை இன்னும் அதிகமாக இருக்கும். நிகழ்ச்சி அரங்கில் முதலில் நுழைபவர்களும் கடைசியாக வெளியேறுபவர்களும் அவர்கள்தான். ஒருமுறை, ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் அறைக்கு செல்லும் போது, பாடகர்களை முதலில் அறைக்கு செல்ல சொன்னார்கள். இசைக் கலைஞர்களுக்கான அறை அப்போது தயாராகவில்லை. நள்ளிரவு 12 மணி அது. பாலு சாரை அறைக்கு போக சொன்னார்கள். ஆனால், அவர் இசைக் கலைஞர்களுக்கான அறை தயாரான பிறகுதான் என்னுடைய அறைக்கு செல்வேன் என அங்கேயே அவர்கள் அறைக்கு செல்லும் வரை காத்திருந்தார். அதுபோல, எந்த ஒரு பெரிய பாடகரும் இருப்பாரா என தெரியவில்லை. அது எல்லாம் அவரிடம் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள்". எஸ்.பி.பி. உடன் பாடல் பதிவின்போது அமைதியான சித்ராவை பார்த்திருப்பார். ஆனால், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்கள், பாடகர்கள் மனோ, சுபா இவர்களை கேலி செய்வது, குழந்தைகளுடன் அரட்டை என குறும்புத்தனமான சித்ராவை எஸ்.பி.பி. பார்த்திருக்கிறார். அதை பற்றி ஏதேனும் உங்களிடம் பேசியிருக்கிறாரா? "எஸ்.பி.பி. என்னை விட சீனியர். அவரிடம் எனக்கு நிறைய மரியாதை உண்டு. ஆனால், மனோ எனக்கு தம்பி. அதேபோலதான் சுபாவும். இரண்டு பேரிடமும் எந்த ஈகோவும் கிடையாது. நான் என்ன பேசினாலும் அதை புரிந்து கொள்வார்கள். இந்த குறும்பு எல்லாம் என்னை செய்ய வைத்தது மனோதான். இதை பார்த்து, 'இப்படி ஒரு முகம் உனக்கு இருக்கிறதா?' என எஸ்.பி.பி-யும் சிரித்து கொண்டே கேட்டார்". எஸ்.பி.பி.யுடன் கடைசியாக இணைந்து பாடிய பாடல் எது? "கடைசியாக இருவரும் இணைந்து ஒரு இசைக்கச்சேரியில் பாடினோம். மற்றபடி சமீபத்தில் இணைந்து பாடல்கள் எதுவும் பதிவு செய்யவில்லை. கடைசியாக இணைந்து பாடியது என்றால் 'பார்ட்டி' படத்தில்தான்". பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பி. இதில் உங்களுக்கு பிடித்த முகம் எது? "கண்டிப்பாக பாடகர்தான். அதிலும் குறிப்பாக மேடையில் நிகழ்ச்சியையும் தொகுத்து கொண்டே பாடலும் பாடுவார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் போது சத்தமாக பேச வேண்டும். அதனால், 'பாடும்போது குரல் எதுவும் பாதிப்பு வந்துவிடாதா?' என பலமுறை அவரிடம் கேட்டிருக்கிறேன். அவரை பொருத்த வரை, எந்த ஒரு விஷயம் செய்தாலும் அதில் முழுமையாக இறங்கிவிட வேண்டும் என நினைப்பார்". எஸ்.பி.பி-யும் நீங்களும் இணைந்து நிறைய பாடல்கள் பாடியிருக்கிறீர்கள். அதில் மறக்க முடியாத ஒரு பாடல் என்றால் எதை குறிப்பிடுவீர்கள்? "பாலு சார் பாடி நான் ஆச்சரியப்பட்ட நிறைய பாடல்கள் உண்டு. தெலுங்கில் கீரவாணி இசையில் ஒரு பாடல் எஸ்.பி.பி. பாடியிருப்பார். குழந்தை பருவத்தில் இருந்து பாட்டி ஆகும் வரை ஒரு பெண்ணின் பல நிலைகளை விளக்கும் வகையில் அந்த பாடல் அமைந்திருக்கும். அதில் ஒவ்வொரு வரியிலும் சொல்லிலும் பொருள் இருக்கும். அதற்கு அத்தனை அழகாக உணர்ச்சியை பாடலில் வெளிப்படுத்தி இருப்பார் எஸ்.பி.பி. அதே படத்தில் இன்னொரு பாடல் ஷைலஜாவுடன் இணைந்து பாடியிருப்பார். அதில் முழுவதும் சிரிப்புதான் இருக்கும். அந்த சிரிப்பில் கூட வித்தியாசம் காட்டியிருப்பார். அதேபோலதான் ஜானகி அம்மாவும். இவர்கள் எல்லாம் எப்படி இப்படி பாடல்களில் இத்தனை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள் என ஆச்சரியமாக இருக்கும். தமிழில் 'சங்கராபரணம்' படத்தில் 'தகிட ததிமி' பாடலில் பேசி கொண்டே பாடலின் உச்சத்தை தொட்டிருப்பார். அதெல்லாம் என்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியம்தான்"
 13. 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால மனித காலடித் தடம் கண்டுபிடிப்பு - அமெரிக்க வரலாற்றுத் திருப்பம் பால் ரின்கன் அறிவியல் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் இணையதளம் 25 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,BOURNEMOUTH UNIVERSITY படக்குறிப்பு, 23 ஆயிரம் ஆண்டுகள் முதல் 21 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலப் பகுதியில் வாழ்ந்த இளைஞர்கள், சிறார்களின் காலடித் தடம். அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனிதர்களின் காலடித் தடங்கள் 23 ஆயிரம் ஆண்டுகள் முதல் 21 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் முன்பு கருதப்பட்டதைவிட 7 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே மனிதர்கள் அமெரிக்க கண்டத்தில் கால்பதித்திருக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆசியாவில் இருந்து மனிதர்கள் எப்போது அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள் என்ற விவாதம் பல பத்தாண்டுகளாக முடிவில்லாமல் தொடர்கிறது. வட அமெரிக்காவின் உட்பகுதிகளில் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை பல ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். இப்போது நியூ மெக்சிகோவில் ஆய்வில் ஈடுபட்டுள்ள ஒரு குழு அங்கு கண்டறியப்பட்டுள்ள ஏராளமான மனித காலடித்தடங்கள் 23 ஆயிரம் முதல் 21 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தவை என்று கண்டுபிடித்துள்ளது. அமெரிக்கக் கண்டத்துக்கு மனிதர்கள் எப்போது வந்தார்கள் என்பது தொடர்பான பார்வையை இந்த புதிய கண்டுபிடிப்பு மாற்றியமைக்கலாம். நமக்கு இதுவரை தெரிந்திராத தலைசிறந்த இடம் பெயரும் குழுவாக அது இருக்கக்கூடும். இந்த முதல் குடியேறிகள் குலம் அழிந்தும் போயிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. ஆழம் குறைந்த ஓர் ஏரியின் ஓரத்தில் மென்மையான மண்ணில் இந்தக் காலடித் தடங்கள் பதிந்திருக்கின்றன. இப்போது இந்தப் பகுதி வெண் மணலில் உள்ள வறண்ட காரப்படுகையாக உள்ளது. இந்த ஆய்வு Science. என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. மண் படிவு அடுக்குகளில் இந்தக் கால்தடத்துக்கு மேலேயும், கீழேயும் கண்டெடுக்கப்பட்ட விதைகளை கார்பன் கால அளவு பரிசோதனைக்கு அனுப்பியது அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஓர் ஆய்வுக்குழு. இதன் மூலம் கால்தடத்தின் காலத்தை அவர்களால் மிகத் துல்லியமாக கணிக்க முடிந்தது. ஆரியர்களும், சிந்துவெளி நாகரிகமும்: மரபணு ஆய்வு சொல்லும் புதிய வரலாறு 'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' கால் தடத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது அவை பெரிதும், முன்னும் பின்னும் நடந்துகொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் காலடித் தடமாக இருக்கும் என்றும் அவ்வப்போது பெரியவர்கள் வந்து போன தடங்களும் இருப்பதாகவும் அறிவியலாளர்கள் நினைக்கிறார்கள். பட மூலாதாரம்,BOURNEMOUTH UNIVERSITY படக்குறிப்பு, காலடித் தடங்களுக்கு மேலேயும் கீழேயும் உள்ள மண் படிவு அடுக்குகளில் காணப்பட்ட விதைகளை கார்பன் பரிசோதனைக்கு உள்ளாக்கி காலத்தை கணித்தனர் விஞ்ஞானிகள். தற்போது அமெரிக்க நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில், ஆதியில் நுழைந்த இந்த மனிதர்களுக்கு வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்துப் பார்ப்பதற்கான அற்புதமான சாளரங்களாக இந்த காலடித் தடங்கள் அமைந்துள்ளன. இந்தக் காலடித் தடங்களுக்கு சொந்தமான இளைஞர்கள் அங்கே என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பது விஞ்ஞானிகளுக்கு உறுதியாகத் தெரியவில்லை. பிற்காலத்தின் பூர்வகுடி அமெரிக்கர்களிடம் காணப்பட்ட ஒருவகை வேட்டையாடும் தொழிலில் அவர்கள் தங்கள் குலத்தின் பெரியவர்களுக்கு உதவிக் கொண்டிருந்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த வேட்டையாடும் பாணிக்கு எருமை குதிப்பு (பஃபல்லோ ஜம்ப்) என்று பெயர். தாழ்தள மலை முகடுகளை நோக்கி எருமைகளை விரட்டி அவற்றை குதிக்கவைத்து அவற்றை வேட்டையாடுவது இந்தப் பாணி. இந்த விலங்குகளை மிகக் குறுகிய காலத்தில் சமைக்கவேண்டி இருந்திருக்கும். ஒரு பக்கம் நெருப்பு மூட்டவேண்டும். மறுபக்கம், கறியை எடுத்துப் போடவேண்டும். இந்தப் பணியில் விறகு, தண்ணீர், பிற அத்தியாவசியப் பொருள்களை சேகரிப்பதில் இந்த இளைஞர்கள் உதவி செய்திருக்கவேண்டும் என்கிறார் இந்த ஆய்வின் இணை ஆசிரியர் டாக்டர் சாலி ரெனால்ட்ஸ். இவர் போர்னேமௌத் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர். இந்த காலடித் தடங்களின் வயது என்பது மிக முக்கியமானது. ஏனென்றால், ஆதிகால அமெரிக்க மனித குடியிருப்புகள் இங்கே இருக்கின்றன, அங்கே இருக்கின்றன என்று பலரும் பலவிதமான கண்டுபிடிப்புகளை வெளியிடுகிறார்கள். அவை ஒவ்வொன்றையும் ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்கள் மறுக்கவும் செய்கிறார்கள். ஒரு தொல்லியல் தளத்தில் கண்டறியப்பட்ட கல் கருவி உண்மையில் கல் கருவிதானா அல்லது இயற்கை செயல்முறையில் உடைந்த வெறும் கல்லா என்பது தொடர்பான விவாதத்தை பல முறை கண்டிருக்கிறேன். தொல்லியல் தளங்களில் கண்டறியப்பட்ட பழம்பொருள்கள் என்று கூறப்படுகிறவை பல நேரங்களில் மிகத் தெளிவாக இல்லாமல் இருக்கின்றன. வட அமெரிக்காவில் கிடைக்கிற 13 ஆயிரம் ஆண்டு முதலான காலத்தைச் சேர்ந்த அழகாக செதுக்கப்பட்ட வேல் முனைகளைப் போல இவை பல நேரங்களில் தெளிவாக இருப்பதில்லை. இதனால், அவை உண்மையில் என்ன என்ற சந்தேகம் கொள்ளவும் வழி ஏற்படுகிறது. "உறுதியான, சந்தேகத்துக்கு இடமில்லாத தரவுகள் போதாமையால்தான் இவ்வளவு விவாதத்துக்கும் சர்ச்சைக்கும் இடம் ஏற்படுகிறது," என பிபிசியிடம் கூறினார் இந்த ஆய்வேட்டின் முதன்மை ஆசிரியர் பேராசிரியர் மேத்யூ பென்னட். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குளோவிஸ் மக்கள் செய்ததாகக் கருதப்படும் கல்லால் ஆன ஒரு வேல் முனை. இந்த மக்களே ஆதி அமெரிக்கர்கள் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது. ஆனால், "காலடித் தடங்கள் கற்கருவிகளைப் போன்றவை அல்ல. மண் அடுக்குகளில் இந்த காலடித் தடங்கள் மேலேயும் கீழேயும் நகர்ந்திருக்க முடியாது," என்கிறார் அவர். இந்த பொருண்மையான ஆதாரத்தை அவ்வளவு எளிதாக புறக்கணிக்க முடியாது. ஆனால், காலத்தை நிர்ணயிக்கும் நடைமுறை பிழையில்லாமல் நடப்பதை அவர்கள் உறுதி செய்யவேண்டும். இந்த காலடித் தடத்தின் காலத்தை கணிக்கும் முயற்சியில் 'ஏரி விளைவு' என்று கூறப்படும் ஒரு பிழை ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வின் தொடக்க நிலையில் இந்த ஆய்வேடு சுட்டிக்காட்டியது. 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பாலை நிலத்தில் பசுமை புகுத்திய சிந்து சமவெளி நகரம் ஆறு திசைமாறிய பின்பே சிந்து வெளி நாகரீகம் தோன்றியதா? புதிய ஆய்வு முடிவுகள் நீர் நிலை போன்ற ஒரு சூழலில் பழைய கார்பன் மறுசுழற்சிக்கு உள்ளாகி காலக்கணிப்புக்கு உள்ளாகும் பொருளின் மீது படிந்துவிட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்திருக்கும் நிலையில் கார்பனின் காலம் அந்த பொருளின் காலத்தைவிட பழமையானதாக இருக்கும். இப்போது ஆய்வாளர்கள் அந்தக் கார்பனின் காலத்தைக் கணித்துவிட்டு, ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பொருளின் காலத்தை உண்மையில் இருப்பதைவிட பழமையானது என்று கணித்துவிடும் பிழை ஏற்படலாம். இந்தப் பிழையைத்தான் ஏரி விளைவு என்கிறார்கள். இந்த ஏரிவிளைவினை தங்களுடைய ஆய்வில் கவனத்தில் கொண்டே செயல்பட்டதாகவும், அந்த விளைவு இந்தத் தளத்தில் குறிப்பிடும் அளவுக்கு இல்லை என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுகிறார்கள். இந்த காலடித் தடத்துக்கு அருகே இருந்த வேறு சில பொருள்களின் காலத்தை இவர்கள் பரிசோதித்துப் பார்த்தனர். முழுமையாக தரையில் இருந்து கிடைத்த மாதிரிகளின் (கரி) காலமும், காலடித் தடத்துக்கு அருகே எடுக்கப்பட்ட நீர்நிலை உயிரிகளின் காலமும் ஒன்றுபோலவே இருந்தன என்று வியன்னா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரேடியோ கார்பன் காலக் கணிப்பு வல்லுநர் பேராசிரியர் டாம் ஹிக்காம் கூறுகிறார். "அங்கே மனிதர்கள் நடமாடியபோது அந்த ஏரி ஆழம் குறைவான ஒன்றாக இருந்திருக்கவேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். ஏற்கத்தக்க இந்த வாதமும் ஏரி விளைவு குறைவாகவே ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதற்கான காரணம் ஆகும்" என்கிறார் அவர். ஆய்வு முடிவுகளின் தொடர்ச்சியும், காலம் அறிவதற்குப் பயன்படுத்திய பல்வேறு விதமான ஆய்வுகளும் இந்த காலம் தொடர்பான இந்த ஆய்வு முடிவை ஆதரிக்கும் வகையிலேயே வந்துள்ளன என்றும் அவர் கூறினார். 20ம் நூற்றாண்டின் பின் பகுதியில் அமெரிக்காவுக்கு வந்த முதல் மனிதர்கள் குளோவிஸ் மக்கள் என்பதில் அமெரிக்க தொல்லியலாளர்களுக்குள் ஒரு கருத்தொற்றுமை இருந்தது. பட மூலாதாரம்,BOURNEMOUTH UNIVERSITY படக்குறிப்பு, காலடித் தடங்களுக்கு மேலே உள்ள விதைகளை ஆராயும் வல்லுநர்கள். பனியுகத்தின் கடைசி பகுதியில், கடல் மட்டம் குறைவாக இருந்தபோது, ரஷ்யாவில் உள்ள சைபீரியாவுக்கும், அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவுக்கும் இடையே உள்ள பெரிங் நீரிணையில் உள்ள ஒரு நிலப் பாலம் போன்ற பகுதி வழியாக வேட்டையாடிய நவீன மனிதர்கள் அமெரிக்காவுக்குள் வந்திருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. அதன் மூலம் குளோவிஸ் மக்களே முதல் அமெரிக்க மக்கள் என்ற கோட்பாடு நிலை பெற்றது. அவர்களைவிட முந்திய குடியிருப்புகள் என்று கருதப்பட்ட தொல்லியல் தடயங்களை நம்ப முடியாதவை என்று புறக்கணித்தனர். சில தொல்லியலாளர்கள் குளோவிஸ் மக்களைவிட பழய மனிதர்கள் அமெரிக்காவில் குடியேறியதற்கான தடையங்களைத் தேடும் பணியையே விட்டுவிட்டனர். ஆனால் இந்த இறுகிப் போன பார்வையை மாற்றிக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் 1970களில் ஏற்பட்டது. தென்னமெரிக்கா நாடான சிலியில் மான்டே வெர்டே என்ற இடத்தில் 14,500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான உறுதியான தடயங்கள் 1980களில் கிடைத்தன. 2000மாவது ஆண்டுகளில் இருந்து குளோவிஸ் மக்களுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் தாராளமாக ஏற்கப்பட்டன. இப்போது நியூ மெக்சிகோவில் கிடைத்துள்ள காலடித் தடங்கள், பனி யுகத்தின் உச்சத்தில் மனிதர்கள் வட அமெரிக்கக் கண்டத்தின் உள் பகுதிகளில் வாழ்ந்ததைக் காட்டுகிறது. அமெரிக்க கண்டத்தின் மக்கள் தொகை வரலாற்றில் இந்த கண்டுபிடிப்பு முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மரபியலாளர் டாக்டர் ஆன்ட்ரியா மேனிகா தன்னுடைய அறிவுப் புலத்துக்கு வெளியே சென்று இந்த காலக் கணிப்பு எவ்வளவு நம்பகமானது என்று தம்மால் கூற முடியாது என்கிறார். ஆனால், மனிதர்கள் அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தார்கள் என்ற ஆய்வு முடிவு மரபியல் ஆய்வுகளுக்கு முரணாகவே இருப்பதாகவும் அவர் பிபிசியிடம் கூறுகிறார். ஆசிய மக்களிடம் இருந்து அமெரிக்கப் பூர்வகுடிகள் பிரிவது தோராயமாக 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் நிகழ்ந்துள்ளது என்பதை மரபியல் ஆய்வுகள் காட்டுவதாக அவர் பிபிசியிடம் கூறுகிறார். "எனவே அமெரிக்காவில் முதலில் குடியேறிய மக்களை, பனிப்பாதை உருவான பிறகு வந்த அடுத்த குடியேறிகள் அழித்திருக்கலாம் என்று இந்த புதிய ஆய்வு முடிவுகள் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது எப்படி நடந்திருக்கும் என்பது குறித்து நமக்கு எதுவும் தெரியாது" என்கிறார் அவர். bbc.tamil
 14. தொழில்துறையிலும் மக்கள் வாழ்க்கையிலும் மாற்றங்கள் எவ்வளவு விரைவாக உள்நுழைந்து புரட்டிப் போடும் என்பதற்கு இந்தப் படத்தை எடுத்துக்காட்டாகக் காட்டுவார்கள். உலகப் புகழ்பெற்ற படம் இது. இவ்விரண்டு படங்களும் நியூயார்க் நகரின் நெரிலான ஒரு தெருவில் இருவேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை. முதல் படம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதில் (1920) எடுக்கப்பட்டது. அப்போது அத்தெரு முழுவதும் குதிரை வண்டிகளால் நிரம்பியிருக்கின்றது. குதிரை வண்டிச்சாரையும் போக்குவரத்து நெரிசலுமான தோற்றம் அது. அடுத்து எரிபொறி கண்டுபிடிக்கப்படுகிறது. எரிநெய்யும் கிடைக்கிறது. அதனைக்கொண்டு வண்டிகளை இயக்கும் முன்னேற்றம் அரங்கேறுகிறது. உடனடியாகக் குதிரை வண்டிகள் வழக்கொழிகின்றன. புதிய புதிய எரிபொறி வண்டிகள் மக்கள் போக்குவரத்தினைக் கைப்பற்றுகின்றன. எண்ணி வெறும் பத்தே ஆண்டுகள்தாம். அதே நியூயார்க் நகரின் அதே தெருவில் எரிபொறி வண்டிகளின் அணிவரிசை தோன்றுகிறது. குதிரைகளும் குதிரை வண்டிகளும் காணாமல் போயின. அவ்வண்டியோட்டிகளில் மாற்றத்திற்குத் தகவமைந்தவர்கள் பிழைத்தார்கள். முடியாதவர்கள் வாழ்விழந்தார்கள். இது வரலாறு. இனி வரும் காலத்தில் சாலைகளில் இதனைப்போன்ற பெருமாற்றம் நிகழுமென்றே கணிக்கிறார்கள். புகை கக்கும் எரிபொறி வண்டிகள் சிறிது சிறிதாய் மறைந்துபோய் மின்னாற்றலில் இயங்கும் வண்டிகள் அவ்விடத்தைப் பிடிக்கும் என்கிறார்கள். அது மெய்யாவதற்குரிய எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன. மகுடேஸ்வரன் கோவிந்தராஜன்.
 15. ம்ம் இருக்கும் போது புடுங்குப் பாடு, இறந்த பின் புகழாஞ்சலி.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.