Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. யப்பானில் சில நாட்கள்:2 ஷின்டோ ஆலயம் - நடேசன் - - நடேசன் - பயணங்கள் 14 ஜூன் 2025 * Photo by David Edelstein on Unsplash மாலையில் டோக்கியோவில் உள்ள புத்த பகோடாவிற்கும் சின்ரோ ஆலயத்திற்கும் அழைத்து சென்றார்கள். ஆரம்ப காலத்திலே சின்ரோ மதம் யப்பானில் உருவாகிறது. ஒரு விதத்தில் சின்ரோ மதம் விக்கிரகங்கள் அற்ற இந்து மதம் போன்றது. மனிதர்கள் பயந்த, அல்லது தங்களுக்கு உபயோகமான இயற்கையின் சக்திகளின்பாலான வழிபாட்டு முறையாகும். பின்பு மக்களிடையே விவசாயம், நெசவு என்பது உருவாகும் காலத்தில்தான், கொரியாவிலிருந்து பௌத்த மதம் யப்பான் வருகிறது. பௌத்தத்தின் தாக்கத்தில் உயிர்க்கொலைகள் இங்கு தடுக்கப்படுகிறது. இது பல எதிர்ப்புகள் உருவாக்கியபோதும் முக்கிய செல்வாக்கு உள்ள பிரபுக்களால் பௌத்தம் ஏற்கப்படுகிறது. பிற்காலத்தில் புத்த குருக்களின் ஆதிக்கம் அங்கு மேலோங்குவதனால் ஆரம்பத் தலைநகர் நாராவிலிருந்து பின் கொயோட்டா நகருக்கும் , இறுதியில் எடோ என்ற இடத்திற்கு மாறுகிறது . ஆரம்பத்தில் மீன்பிடிக்கும் கிராமமாக இருந்த அந்த எடோ, டோக்கியோவாகிறது. எப்படி பௌத்தம் கொரியாவிலிருந்து வந்ததுபோல் சீனாவிலிருந்து எழுத்து, மொழி, கலண்டர், மற்றைய பல கலாச்சாரத்தின் கூறுகள் வந்து சேரும் போது இங்கு சில குழுவினர் செல்வாக்கடைந்தபின் சமூகம் வளர்ந்து அரசுருவாக்கம் ஏற்படுகிறது. யப்பானில் 80 வீதமானவர்கள் ஷின்ரோ. அதேபோல் 75 வீதமானவர்கள் புத்த சமயத்தவர்கள் இதனால் பெரும்பாலானவர்கள் இரண்டு மத நம்பிக்கையும் உள்ளவர்கள். ஷின்ரோ மதம் யப்பானுக்கு ஏகபோகமானது அதேவேளையில் இதற்கு ஒரு வேதப்புத்தகமோ முழு முதற்கடவுளோ இல்லை. எவரும் புத்தர் யேசுபோல் இதை ஸ்தாபிக்கவும் இல்லை .பல கடவுளை வழிபடும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளது. ஆனால் , விக்கிரகம் இல்லை. ஒரு விதத்தில் மக்களின் வாழ்க்கைக்கு வழியாக அதாவது எழுதப்படாத வாழ்வு முறை போன்றது. ஷின்டோ மதத்தின் கொள்கைகள் எழுதப்படாததால் தற்போது பல பௌத்த கொள்கைகள் இதில் சேர்ந்துள்ளது. கிறிஸ்துவத்தில் பேகன் கொள்கைகளான ஈஸ்டர் முட்டை விடயங்கள்போல் எனலாம். மத்திய கிழக்கில் எப்பொழுது கிறிஸ்மஸ் மரம் (Fir tree) இருந்தது? யப்பானில் உள்ள பௌத்தம், மகாஞான பௌத்தமானதால் வரலாற்றில் இருந்த புத்தரைவிட வான்வெளியில் உள்ள புத்தர்களும் (Celestial Bhuta) அத்துடன் தேவதைகளும் இங்கு நிறைந்துள்ளார்கள் . இவற்றிடையே புவியில் மனிதரகளாக வாழ்ந்தவர்கள் ஷின்டோ மதத்தில் தெய்வமாக்கப்பட்டதால் அவரவர் தேவைக்கேற்ப மக்களுக்கு நம்பிக்கை வைத்து வழிபட இடமுண்டு. யப்பானிய ஆதிகடவுளர்களுக்கு நம்மைப்போல் தொன்மக் கதை உள்ளது. இரு தெய்வங்களால் யப்பான் உருவாகிறது (Male Izanagi and the female Izanami) இவர்களிடமிருந்து இயற்கையில் உள்ள சூரியன், காற்று, நெருப்பு என்ற தெய்வங்களும் உருவாகிறது. அதேபோல் மக்களும் உருவாகிறார்கள். இவர்கள் மதத்தில், இறப்பு கெட்ட விடயம் அதாவது சோகமான முடிவு. இங்கே பௌத்தம் இறப்பை சோகமானதாக பார்க்காது, யதார்த்த வாழ்வின் ஒரு பகுதியாகமட்டுமல்ல புதிய அத்தியாயத்தில் ஆரம்பமாக பார்க்கிறது . இதனால் புதிய அணுகு முறையை யப்பானிய மக்கள் ஏற்கிறார்கள் . யப்பானியர் பிறப்பை ஷின்டோ கோவிலில் கொண்டாடி இறப்பைப் பௌத்த ஆலயத்தில் நடத்த முடிகிறது. ஷின்டோ மதத்தில் முக்கிய தெய்வங்கள் சூரியனும் வாயுவும் அதில் அதில் சூரியனைப் பெண் தெய்வமாக உருவகப்படுத்தி உள்ளதால் யப்பானிய மன்னர் சூரிய வம்சத்தில் வந்தவராவார் . இவை எல்லாம் நாம் கேட்டது போல் இருக்கிறதா ? பௌத்தம் இங்கு வாழ்வின் துன்பங்களைப் பேசுகிறது . ஆனால், சின்ரோ வாழ்க்கையின் வழியையும் அதற்கு சில வழிபாடுகளையும் கொண்டது. உண்மையில் ஷிண்டோ மதம் நமது இந்து மதம் போல் பல மக்களது நம்பிக்கைகளின் தொகுப்பாகும். சின்ரோ ஆலயத்தில் புத்தர் இருப்பார். அதேபோல் புத்த பகோடாக்களில் சின்ரோ வழிபாடு நடக்கிறது. தற்போது இரு மதங்களும் ஒன்றை ஒன்று தழுவியபடி உள்ளன. ஒட்டு மொத்தத்தில் இரண்டு மதங்களும் யப்பானிய மக்கள் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தழுவிச் செல்கிறது. உதாரணமாக மக்கள் நடந்து செல்லும் போது புல்வெளியில் ஒரு பாதை உருவாகிறது. பின்பு அந்த பாதையில் மக்கள் செல்வார்கள் என்பது போல எனக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. புத்த மதம் இங்கு மகாஜான புத்தமாக இருப்பதுடன் இங்குள்ள ஆரம்ப நம்பிக்கைகளுடன் நீரோடு பாலாக கலந்துள்ளது. [தொடரும்] uthayam12@gmail.com https://www.geotamil.com
  2. யப்பானில் சில நாட்கள் (1) - நடேசன் - - நடேசன் - பயணங்கள் 06 ஜூன் 2025 * Photo by David Edelstein on Unsplash இரவில் டோக்கியோ போய் சேர்ந்ததும் நாங்கள் தங்க வேண்டிய ஹொட்டேலை அண்ணாந்து பார்த்தேன். இத்தனை உயரமான மாடிக்கட்டிடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர் தப்புவோமா என்ற வினா மனத்தில் எழுந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது இடத்தில் நடுங்கியபடி இருக்கும் நாடு யப்பான். கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் தங்களை காப்பாற்றும்படி பிரார்த்திப்பார்கள். படைப்பில் நம்பிக்கையற்ற, பரிணாமத்தை நம்பும் நான் என்ன செய்ய முடியும் ? அரைநூற்றாண்டு தாம்பத்தியம் எங்களிடையே இருப்பதால் எனக்கும் சேர்த்து சியாமளாவே பிரார்த்திக்கலாம்! இலகுவான வழி? எப்படி இந்த நாட்டில் இவ்வளவு உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தில் தப்புகிறது என்ற எனது கேள்வியை நாகரிகமாக எமது வழிகாட்டியிடம் ஹொட்டேல் வாசலில் வைத்துக் கேட்டேன். அந்த யப்பானிய இளைஞன் என்னை பார்த்து சிரித்தான். ஆனால் , பதில் தரவில்லை. இந்த இரவு நேரத்தில் இது தேவையான கேள்வியா என சியாமளாவின் பார்வை என்னை நோக்கி கூரிய கணையாக வந்தது. அவனது மனத்தில் என்ன நினைத்திருப்பான்? அதைபற்றி என்ன கவலை? நான் கேட்டதற்கு காரணம் உள்ளது. (On 11 March 2011, the Fukushima nuclear power station was damaged after the magnitude 9.0 earthquake and subsequent tsunami.) யப்பானில் ஆங்கிலம் பேசுபவர்கள் மிக குறைவு. ஆனால் , அமெரிக்காவில் இரு வருடங்கள் படித்த இளைஞன் வழிகாட்டியாக கிடைத்தது எங்கள் அதிஸ்டமே . அடுத்த நாள் காலையில் ஹொட்டேலை விட்டு பஸ்சில் ஏறியபின் அவனிடமிருந்து, எனது இரவு கேள்விக்கான விடை அரைநாள் தாமதமாக கிடைத்தது. ‘யப்பானில் ஃபுக்கசீமா நில நடுக்கத்தால் கடலில் ஏற்பட்ட சுனாமியாலே அணு உலையின் குளிராக்கி ( Cooling pond) உடைந்து கதிரியக்கம் வெளிப்பட்டது. அந்த நில நடுக்கம் டோக்கியோவில் தாக்கியபோதும் உயரமான கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ஆனால், சிறிய தனி வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. பெரிய கட்டிடங்கள் நிலத்தின் கீழ் அத்திவாரமற்று அவற்றை இரும்பு பிரேம் தாங்கியபடி இருக்கும். அந்த பிரேமில் இப்படியான அதிர்வைத் தாங்கி அசைந்து ஆடிவிட்டு (Horizontal Shock absorber) மீண்டும் அதே நிலைக்கு வரும் தன்மை உள்ளதால்,அடுக்குமாடிகள் இங்கு பாதுகாப்பானவை‘ என்று விளக்கம் கிடைத்தது. யப்பானுக்கு கடந்த வருடம் சென்ற ஒரு மில்லியன் அவுஸ்திரேலியர்களில் இருவராக நானும் சியாமளாவும் சென்றோம். நாங்கள் நடு இரவில் டோக்கியோ சென்றடைந்தபோது ஒரு நாற்பது மாடிகள் கொண்ட ஹொட்டேலுக்கு அழைத்து சென்றார்கள். ஒரு குழுவாக சென்றதால் மொழி, போக்குவரத்து , உணவு என்ற பிரச்சினைகள் எமக்கு இருக்கவில்லை. ஜப்பான் வரலாறு பல ஆசிய நாடுகளில் இருந்து வித்தியாசமானது. எந்த ஒரு ஐரோப்பிய நாடுகள்போல் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருக்காதது மட்டுமல்ல மற்ற நாடுகளை தனது காலனியின் கீழ் வைத்திருக்க முயன்றது. ஜெங்கிஸ்கான் காலத்தில் மங்கோலியர்கள் மூன்று முறை கடல் கடந்து படையெடுத்து தோற்றார்கள். ஒரு முறை புயலே யப்பானியர்களை காப்பாற்றியது என அறிந்தேன். ஆயிரம் வருடங்கள் வரையும் ஷோகன் (Shogun) என்ற ஒரு வித இராணுவ பொறுப்பானவர் முழு யப்பானுக்கும் பொறுப்பாக இருந்தாலும் அவரின் கீழ் இந்திய ஜமீன்தார்கள் போல் பல பிரபுக்கள் கொண்ட பிரிவுகளாக யப்பான் அக்காலத்தில் ஆளப்பட்டது. அவர்களது அதிகாரம் எல்லை கடந்தது. அவர்களிடம் சமுராய் எனப்படும் விசுவாசமாக போர் வீரர்கள்- ( அதாவது பாண்டிய மறவர்கள் போல) இருந்தார்கள். அதன்பின் எல்லா பிரதேசங்களையும் இணைத்து மொத்தமான ஜப்பானுக்கு ஒரு மன்னர் வருகிறார். 7ஆம் நூற்றாண்டின் பின்பாக மன்னர் இருந்தாலும் அவர் அதிகாரமற்றவர். யப்பானிய மன்னர் மீண்டும் அதிகாரம் பெற்றது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே நடந்தது. வரலாற்றுக்கு முன்பாக அதாவது 35,000 வருடங்கள் முன்னால் யப்பான் ஆசியாவோடு நிலமாக இணைந்திருந்த காலத்தில் மக்கள் சைபீரியாவின் பகுதிகளிலிருந்து சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆரம்பக்கால யப்பானின் வரலாறு மற்றைய நாடுகளினது கற்கால மக்கள்போல் ஆரம்பிக்கிறது. அதாவது 10,000 வருடங்களுக்கு முன்பு கரையோரத்தில் வாழும் மக்கள் மீன் பிடித்தல், உள்பகுதியில் வசிப்பவர்கள் வேட்டையாடுதல் என்பன முக்கிய ஜீவனோபாயத் தொழிலாக நடந்தது. யப்பானிய வரலாற்றில் ஒரு வித்தியாசமான விடயம் எனக்கு அறிய முடிந்தது . பெரும்பாலாக பிரதேசங்களில் மண்பாண்டங்களின் உருவாக்கம் விவசாயத்தோடு தொடங்கும். ஆனால், யப்பானில் மண்பாண்டங்கள் விவசாயத்திற்கு ஆயிரம் வருடங்கள் முன்பு தொடங்கியது என்கிறார்கள். யப்பானுக்கு கிட்டத்தட்ட 2500 வருடங்கள் முன்பாக கொரியா போன்ற இடங்களிலிருந்து விவசாயம் மற்றும் உலோக சாதனங்களின் தொழில்நுட்பம் சென்றது. யப்பானின் தெற்குத் தீவுகள் கொரியாவிலிருந்து 40 மைல் தொலைவில் உள்ளன. அதாவது இலங்கைக்கு ,இந்தியா போல அக்கால கடல் பயணத்திற்கு அதிக தூரமில்லை. விவசாயம் ஆரம்பித்தபின் பின்பு சமூக கட்டுமானங்களின் படிமானங்கள் உருவாகிறது. ஒரு காலத்தில் ( கி.பி300) சீனாவிலிருந்து சென்ற ஒரு தூதுவர் ஒருவர் யப்பானை பற்றிச் சொல்லிய சில விவரங்கள் எழுத்தில் உள்ளன . அதில் பல சிறிய அரசுகள் அக்காலத்தில் ஒன்றாகிய யப்பானில் 30 பெரிய அரசுகள் இருந்தன அதில் முக்கியமான அரசைப் பெண் மந்திரவாதி அவளது சகோதரனது உதவியுடன் அரசாண்டாள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சூரியனை முக்கிய கடவுளாக கொண்டாடிய யப்பானியர்களது வாழ்க்கை சீனாவிலிருந்து சென்றவருக்கு வித்தியாசமானதாகத் தெரிந்திருக்கலாம் . பிற்காலத்தில் எழுத்துமுறை சீனாவிலிருந்து சென்றது. இதனால் ஆரம்ப ஷின்டோ மத நம்பிக்கை, தொன்மைக் கதைகளே. கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டு வரையில் வாய்மொழி விடயங்களாகவே மத நம்பிக்கை இருந்தன. நமது இதிகாசம் புராணங்கள்போல், இதற்கு மேல் வரலாறு தேவையில்லை. நாங்கள் யப்பான் சென்றது இலையுதிர்காலம். வசந்த காலமும் இலையுதிர் காலமும் விசேடமானவை . இளஞ்சிவப்பு நிறத்தில் ஷெரி மரங்கள் வசந்தகாலத்தில் பூத்து குலுங்குவதுபோல் சிவப்பு மஞ்சள் என மாப்பிள் இலைகள் வர்ணத் தோரணமிட்டு நம்மை வரவேற்கும். டோக்கியோவில் முதல் நாள் காலையில் சென்றது அருகில் உள்ள யப்பானிய பூங்காவிற்கு. இந்த பூங்கா 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டோக்கியோ, நாட்டின் தலைநகரானபோது, அப்போதிருந்த ஷோகன் இந்த அழகிய பூங்காவை தனக்காக வடிவமைக்கிறார். அக்காலத்தில் பொதுமக்கள் இந்த பூங்காக்களுக்கு செல்ல முடியாது. கடந்த 100 வருடங்களாக மட்டுமே பொதுமக்கள் உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த யப்பானிய பூங்காக்களின் தத்துவமே தனியானது. மற்றைய நாடுகளில் பூங்காக்கள் இருந்தாலும் அவைகள் கலாசாரக் கூறுகள் அல்ல.அழகுக்காக உருவாக்கப்பட்டவை. இங்கு பூங்காக்கள் யப்பானிய கலாசாரத்துடன் இணைந்துள்ளன. முக்கியமாக அமிடா பௌத்தம்( Pure land Buddhism) வந்தப்பின் இவை பூமியில் சொர்க்கத்தை பிரதிபலிப்பன . ஷோகன் இறந்தபின், அவர் சொர்க்கம் செல்லும் நம்பிக்கையுடன் இருந்தார் என்பதால் அவரது கற்பனையில் இப்படித்தான் சொர்க்கம் இருக்கும் என்ற நினைவுடன் இந்தப் பூங்காக்கள் வடிவமைக்கப்பட்டது. உண்மையில் சொர்க்கம் இப்படி இருக்குமென்றால் நல்ல விடயம், நானும் அதற்கு பயண சீட்டை எடுக்க விரும்புவேன். கியோசூமி பூங்கா (Kyosumi Garden) மிகவும் அழகானது. பூங்கா என வார்த்தையில் சொல்லாது நான் அதை விவரிக்கவேண்டும். ஒரு மணி நேரம் பூங்காவை சுற்றி வந்தபோது, இதுவரையிலும் ஆங்காங்கு நான் கேள்விபட்ட யப்பானிய பூங்காவின் முக்கிய கூறுகளை அங்கு முழுமையாக பார்க்க முடிந்தது. உலகத்தின் பல பெரிய பூந்தோட்டங்களைப் பார்த்துள்ளேன். பேராதனையில் படித்த காலத்தில் அங்குள்ள பூந்தோட்டம் என்னைக் கவர்ந்தது. அவுஸ்திரேலியாவில் பலவற்றைப் பார்த்தாலும் எனது மனதில் நிற்பது கனடாவின் மேற்குப்பகுதியில் உள்ள விக்டோரியா நகரில்(Butchart Garden) உள்ளதே. இங்கு அழகை விட இந்த பூங்கா ஒரு காலத்தில் சுண்ணாம்பு கற்கள் அ௧ன்றெடுத்த இடமாக இருந்தது. அதை தனி ஒருவராக வடிவமைத்து இப்பொழுது அரசின் பொறுப்பில் உள்ளது. சமீபத்தில் அவுஸ்திரியாவின் சலஸ்பேர்க்கில் உள்ள மிரபெல்லா பூங்காவைப் பார்த்தேன். இவைகள் எல்லாம் ஐரோப்பிய சிந்தனையின் வடிவங்கள். அதேபோல் டெல்லியில் சில பூங்காக்கள் முகாலய அல்லது பேர்சிய சிந்தனையின் வடிவமைப்பில் அமைந்தது. இவற்றிலிருந்து யப்பானியர்களது பூங்கா அமைப்பு முற்றாக வித்தியாசமானவை. யப்பானின் கால நிலைக்கும் அவர்களது நில அமைப்பையும் ஒன்றிணைத்து அமைப்பார்கள். யப்பானில் நான்கு காலநிலைகளிலும் அந்த பூங்காக்கள் அழகாக இருப்பதற்கு, அதற்கேற்ப மலர் செடிகளுடன், எல்லா கால நிலைக்கும் ஏற்ற மரங்கள், யப்பானின் நில அமைப்பு அதாவது மலைகள், பள்ளங்கள், நீர்நிலைகள், அருவிகள் என்பவற்றை ஒன்றிணைத்து, அதற்கேற்ப நீர் தடாகங்கள் உருவாக்கி, அதில் சிறிய அருவிகள் மெல்லிய ஓசையுடன் சலசலத்தபடி ஓடும். ஒழுங்கற்ற தடாகத்தில் மீன்கள், பறவைகள்,நீர்த்தாவரங்களுடன், குறுக்கே வாய்கால்கள் மீது சிறிய மரப்பாலங்கள் பாதையாக அமைந்திருக்கும். ஆங்காங்கே கற்கள் வைக்கப்பட்டு , அவைகளில் பச்சைப் பாசி படித்திருக்கும். சுற்றியிருக்கும் கருங்கற்களில் சிறிய சிற்பங்கள் அல்லது பகோடா போன்ற அமைப்பு இருக்கும். நடக்கும்போது பாதைகளாக மரத்தாலான சிறிய பாதைகள் வளைந்து செல்லும். வர்ண விளக்குகள் பல இடங்களில் அமைத்திருப்பார்கள். மொத்த பூங்காவும் அமிடா புத்தரின் சொர்க்க உலகத்தை நமக்கு படிமமாக்குகின்றன. பூங்காவில் மரங்கள் சிறிதாக, அதாவது பொன்சோ முறையில் வளர்க்கப்படுகிறது. நான் பார்த்தபோது, சில மரங்களின் அடிப்பகுதிகளை சுற்றி காயமடைந்த இடத்தில் துணி சுற்றுவதுபோல் மூங்கில் பாய் போன்ற ஒன்றைக் கொண்டு அந்த மரத்தை சுற்றியிருந்தவர்கள் . அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது . ‘ மரத்தின் சில பகுதிகள் ஏதாவது காரணத்தால் உடைந்தால் அந்த இடங்களில் தொற்று ஏற்படாது பாதுகாப்பதற்காக’ என்ற பதில் கிடைத்தது. பூங்காவின் நுழைவாயில், மூங்கில்களால் அமைந்தது இவை எல்லாம் இங்கு இருந்தால் உள்ளே வருபவர்கள் மனங்கள் பூரண அமைதி அடைய முடியும் என கருதுகிறார்கள். இங்கு யப்பானிய மன்னரது இறுதிக் சடங்குகள் நடந்ததுடன் பல நில நடுக்கங்களை கடந்து வருங்கால சந்ததிக்காக இந்த பூங்கா தற்போது டோக்கியோ நகரசபையினரால் பராமரிக்கப்படுகிறது என்ற அறிவிப்பு அங்கிருந்தது [தொடரும்] uthayam12@gmail.com https://www.geotamil.com
  3. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த மற்றும் மருத்துவ மாணவர்களின் சிலரின் புகைப்படங்கள். RIP #ahmedabad #IndiaGlitz
  4. வேலையிருக்கும் போது கேள்விபட்டேன் அதனை தான் இங்கு பதிந்தேன்.பின்னர் தான் வெவ்வேறு செய்திகள் வரத் தொடங்கியது..
  5. ‘No words’: Toronto dentist killed in Air India crash on her way home from trip, family friend says.. Dr. Nirali Patel was on her journey back to Toronto from a social trip in India when tragedy struck. Patel was among the 241 passengers who died when an Air India flight bound for London crashed into a college hostel in northwestern India after takeoff on Thursday. It is unclear how many people on the ground were killed in the crash. READ MORE: At least 240 people, including those on the ground, killed in the Air India crash, official says The 32-year-old dentist who lived in Etobicoke was the lone Canadian national on board the Boeing 787-8 Dreamliner. “It’s absolutely shocking. There’s no words in this grievance,” community leader Don Patel, who knows the family, told CTV News Toronto on Thursday. He said Nirali was visiting India for four or five days. “She was coming back. And we heard this tragic thing happened as soon as we wake up.” The husband of Patel briefly spoke with The Canadian Press, confirming he was in the process of booking a flight for himself and their one-year-old child to India. Patel worked at a Mississauga dental clinic. According to the Royal College of Dental Surgeons of Ontario, she got her dental degree in India in 2016 and received her licence in Canada in 2019. Nirali Patel is shown in this photo confirmed by CTV News. Patel was the Canadian aboard an Air India flight that crashed after takeoff. (NIRALI PATEL/FACEBOOK) Don said Nirali’s parents, brother and sister-in-law live in Brampton. “I spoke to her brother very briefly this morning while we were trying to help and arrange their travel going (to India),” Don said, sharing that the brother was in shock and wasn’t able to talk much. “We’ll try to give them a strength, whichever way we can. Sometimes words might not help them, but moral support or just showing (up) and being there with them gives them so much strength.” The tail of the airplane is seen stuck in a building at the site of an airplane that crashed in India's northwestern city of Ahmedabad in Gujarat state, Thursday, June 12, 2025. (AP Photo/Ajit Solanki) Ontario Premier Doug Ford offered his condolences in a post on X, saying he was saddened to learn about the Canadian who was among those who died. “On behalf of the people of Ontario, I extend my deepest condolences to the families and loved ones of every victim. We are keeping you in our thoughts during this difficult time,” Ford’s post reads. Prime Minister Mark Carney said he was “devastated” to learn of the crash and has been receiving updates on the situation. “My thoughts are with the loved ones of everyone on board,” his post on X reads. The prime minister added that Canadian transport officials are in close contact with their international counterparts. The cause of the crash is under investigation. India’s aviation regulatory body said the aircraft gave a mayday call, signalling an emergency, but then did not respond to the calls made by the airport traffic control. It is the first crash involving a Boeing 787 Dreamliner, according to the Aviation Safety Network. With files from The Canadian Press and The Associated Press https://www.cp24.com/news/canada/2025/06/12/canadian-dentist-killed-in-air-india-crash-lived-in-etobicoke/
  6. Viduni Basnayake 2h · UPSC Network 2h · Pratik Joshi had been living in London for six years. A software professional, he’d long dreamed of building a life abroad for his wife and three young children, who stayed back in India. After years of waiting for due clearances the dream was finally coming true. Just two days ago, his wife, Dr. Komi Vyas, a renowned doctor in Udaipur, resigned from her job. The bags were packed, goodbyes said, the future within reach. This morning, the family of five, filled with hope and excitement, boarded Air India flight 171 to London. They clicked a selfie. Sent it to relatives. A one-way journey to a new life. But they never made it. The plane crashed. No one survived. In a matter of moments, a lifetime of dreams turned to ash. A brutal reminder, life is terrifyingly fragile. Everything you build, everything you hope for, everything you love, it all hangs by a thread. So while you can, live, love, and don’t wait for happiness to start tomorrow. இலண்டனில் நிரந்தரமாக குடியேறச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர்கள் பலியாகி உள்ளமையும் வேதனைக்குரியது. இந்த பெண் ஒரு மருத்துவர்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தனது வேலையிருந்து விடு பட்டு லண்டனுக்கு குடும்பத்தோடு போகும் போது விமான விபத்தில் சிக்கியுள்ளார்கள்.குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் பலியாகியுள்ளார்.
  7. இந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த (கனேடிய) பெண் மருத்துவர் ஒருவரும் அடங்கிள்ளார்.மிசிசாகாவில் பல் மருத்துவராக பணியாற்றிக் கொண்டு இருப்பவர் என்று அறிந்து கொண்டேன்.மற்றும் 9 பேர் காயங்களோடு தப்பியுள்ளார்கள். ஆனாலும் அவர்களது நிலையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.விமான விபத்தில் மரணித்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..🙏
  8. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.ஆனால் இந்த விடையங்களை ஒரு வைத்தியரது பக்கத்தில் பார்த்தேன்.இந்த மருத்துமனையிலும் சில ஊழல்கள் நடை பெற்றுள்ளதால் மல்லாகம் நீதி மன்றில் வழக்கு போய் கொண்டு இருக்கிறது..அது மட்டுமல்ல காலை 9 மணிக்கு வைத்தியசாலைக்கு போன நோயாளியை இரவு 11 மணிக்கு பின்னர் தான் வைத்தியர் ஒருவர் பார்த்துள்ளார்.உண்மையாக அந்த நோயாளியை வைத்தியசாலைக்கு போனதும் பார்த்திருக்க வேண்டிய நிலை(நெஞ்சு வலி வந்திருக்கிறது அந்த நோயாளிக்கு).பயிற்சியிலிருப்பவர்களுக்கு (எவருக்கும் )சில நிபந்தனைகள் இருக்கிறது.அதனை மீறனால் தண்டனைகளுக்கு முகம் குடுக்க வேண்டி வரும் இல்லயா..அப்படித் தான் இந்த நோயாளியை பார்த்தவரும் நாட்டை விட்டு தப்பி ஓடும் முயற்சியிலிந்து தடுக்கபட்டுள்ளார்.இப்படி பல பிரச்சனைகள் நீதி மன்றில் போய் கொண்டு இருப்பதாக பகிர்ந்திருந்தார் வைத்தியர்.
  9. அறியப்படாத கடல் நாராயணி சுப்ரமணியன் June 3, 2025 “பூமியில் முக்கால் பங்கு கடல்” என்பதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இதையொட்டிய வேறு சில தரவுகள் இருக்கின்றன. முக்கால் பங்கு என்பது கிட்டத்தட்ட 360 மில்லியன் சதுர கிலோமீட்டர். 200 மீட்டர் ஆழத்துக்கும் அதிகமான கடற்பகுதி ஆழ்கடல் (Deep sea) என்று அழைக்கப்படுகிறது. மொத்தக் கடற்பரப்பில் 93% இப்படிப்பட்ட ஆழ்கடலால் ஆனதுதான். ஆக, பூமியின் பரப்பில் 66% ஆழ்கடல் பகுதியாக இருக்கிறது. இவ்வளவு பரந்துள்ள இந்தப் பகுதியில் என்ன இருக்கும் என்ற கேள்வி நமக்கு முன்பே வந்துவிட்டது. 1958ம் ஆண்டு முதலே ஆழ்கடல் ஆராய்ச்சியை மனித இனம் தொடங்கிவிட்டது. அப்போதிலிருந்து 2025ம் ஆண்டு வரை, அதாவது 67 ஆண்டுகளாக நாம் ஆழ்கடலை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இத்தனை ஆண்டுகளில் நாம் தெரிந்துகொண்டது என்ன என்ற ஒரு கேள்வியோடு ஆராய்ச்சியைத் தொடங்கினார் அமெரிக்காவைச் சேர்ந்த கேத்தரீன் பெல் என்ற கடல்சார் ஆராய்ச்சியாளர். தனது குழுவினரோடு இணைந்து, 67 ஆண்டுகளில் நடத்தப்பட்ட எல்லா ஆழ்கடல் ஆய்வுகளின் தரவுகளையும் பரிசோதித்திருக்கிறார். இவரது ஆய்வு முடிவுகள் மே 2025ம் ஆண்டு சயின்ஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டன. கேத்தரீனின் ஆய்வு உண்மையில் சில அதிர்ச்சிகரமான தரவுகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. பல தசாப்தங்களாக மனித இனம் ஆழ்கடலை ஆராய்ந்து வருகிறது என்றாலும், உண்மையில் 0.001%க்கும் குறைவான ஆழ்கடல் பரப்பை மட்டுமே நாம் முழுமையாக அறிந்திருக்கிறோம் என்று கேத்தரீன் சொல்கிறார்! கடலின் தரைப்பகுதி வரை ஒரு ரோபாட் கருவியை அனுப்பி அதன் வரைபடத்தை உருவாக்குவது, மாதிரிகள் சேகரிப்பது, பிற சூழல் கூறுகளை ஆராய்வது என நேரடி ஆய்வில் பல அம்சங்கள் உண்டு. இவை எல்லாம் முடிந்தபின்னரே அந்த இடம் நம்மால் முழுமையாக அறியப்பட்டதாகும். இந்தப் பின்னணியில் பார்த்தால், மொத்தக் கடற்பரப்பில் 0.0006% முதல் 0.001% வரையிலான பகுதிகள் மட்டுமே நமக்குத் தெரியும். இது ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டிய தகவல் தட்டுப்பாடு. மொத்தக் கடலில் ஒரு துணுக்கைக் கூட நாம் அறியவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. வேறு சில முக்கியமான, கவனிக்கத்தக்க அம்சங்களையும் கேத்தரீன் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு நாம் அறிந்து வைத்திருக்கும் 0.01% கடற்பரப்பில் கிட்டத்தட்ட 65% கடற்பகுதிகள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கடற்கரையை ஒட்டி இருப்பவை! இந்த நாடுகளோடு பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டால் சதவிகிதமானது 97% ஆக எம்பிக் குதிக்கிறது. ஆக, நாம் அறிந்து வைத்திருப்பதே ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான கடற்பகுதி, அதிலும் தொண்ணூற்று ஏழு விழுக்காடு ஐந்து நாடுகளைச் சுற்றியே இருக்கிறது. கடல்சார் ஆய்வில் இருக்கும் ஏற்றத்தாழ்வை இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இது மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஆழ்கடல் ஆய்வுகளை நடத்தியிருக்கும் நாடுகளில் 94 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவை பணக்கார நாடுகள் என்றும் கேத்தரீன் கண்டறிந்திருக்கிறார். சரி, குறைந்தபட்சம் எல்லாக் கடற்படுகை அம்சங்களும் ஒரே முக்கியத்துவத்தைப் பெறுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. ஆழ்கடலில் இருக்கும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. கடலுக்கு அடியில் இருக்கும் சமவெளிகள் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை. இந்த ஆய்வின் தரவுகளைப் பின்னணியாகக் கொண்டு யோசித்தால் பல முக்கியமான கேள்விகள் எழும். ஏன் ஆழ்கடல் ஆராய்ச்சிக்குப் போதுமான முக்கியத்துவம் தரப்படுவதில்லை? ஏன் ஒரு சில நாடுகள் மட்டுமே அதிகமாக ஆய்வு செய்திருக்கின்றன? ஏன் சில அம்சங்கள் அதிகமாக ஆராயப்படுகின்றன? ஏன் ஆழ்கடல் ஆராய்ச்சி பரவலாக நடப்பதில்லை என்பது முக்கியமான கேள்விதான். ஆனால் அந்தத் துறையைப் பொறுத்தவரை அது பழைய கேள்வி. போதுமான நிதி வசதியும் தொழில்நுட்பங்களும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் ஆழ்கடல் ஆராய்ச்சி என்பது பல ஆண்டுகளாகவே “அடிப்படை ஆராய்ச்சி” (Fundamental research) என்ற அளவில் மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. சமூகத்திலிருந்து மிகவும் விலகி, மனித இனத்தின் ஆர்வத்துக்கான ஒரு தேடலாக அது முன்வைக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளோடு ஒப்பிடும்போது ஆழ்கடல் பகுதிகள் அவ்வளவாகக் கவனம் பெறவில்லை. ஆனால் வெகு சில ஆண்டுகளாக நாம் ஆழ்கடலைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறோம். காரணம் சற்றே வேதனையானது. கடலுக்கடியில் என்ன இருக்கிறது என்ற அறிவுத்தேடலால் உந்தப்பட்டு நாம் ஆழ்கடலை நாடவில்லை. கடலோரப் பகுதிகளில் மீன்வரத்து குறைந்துவிட்டது. காலநிலை மாற்றம் நம் கழுத்தை நெரிக்கத் துவங்கிவிட்டது. புதிய எரிபொருட்களும் புதிய கனிம வளங்களும் தேவைப்படுகின்றன. ஆகவே மீன்களுக்காகவும் கனிமங்களுக்காகவும் ஹைட்ரோகார்பனுக்காகவும் காலநிலைத் தீர்வுகளுக்காகவும் நாம் ஆழ்கடலை ஆராய விரும்புகிறோம். ஒரு சில நாடுகள், அந்தப் பகுதிகளைக் கையகப்படுத்திக்கொள்வதற்காகவும் ஆழ்கடலை அறிய விரும்புகின்றன. ஆனால் இந்தப் போக்கு இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்பதால் இதிலிருந்து தெளிவான ஆய்வு முடிவுகளும் தரவுகளும் தெரிய இன்னும் கொஞ்ச காலமாகும். ஏன் சில நாடுகளில் அதிகமான ஆராய்ச்சி நடக்கிறது என்ற கேள்விக்கான பதில் எளிமையானது. போதுமான உள்கட்டமைப்பு வசதிகள், அதி நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் அங்குதான் கூடுதலாக இருக்கின்றன. ஆகவே அந்தக் கடற்பகுதிகள் கூடுதலாக ஆராயப்பட்டுள்ளன. ஏன் சில இடங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துத் தரவுகள் சேகரிக்கிறார்கள் என்றால், அந்தப் பகுதிகளில் சில சிறப்பம்சங்கள் உண்டு. கடலுக்கடியில் உள்ள மலைகள் மீன் கூடும் இடங்களாக இருக்கின்றன. ஆகவே அவை மீன்பிடித் தொழிலுக்கான பகுதிகள். கடற்பரப்பில் உள்ள வேறு சில அம்சங்கள் நிலநடுக்கம், கனிம வளம் போன்றவற்றுக்கான சாத்தியக்கூறு கொண்டவை. இவை எதுவும் இல்லாத ஆழ்கடல் சமவெளிகள் போதுமான கவனத்தைப் பெறுவதில்லை. ஆராய்ச்சி வேகமாக இயங்குகிறதோ இல்லையோ, வணிகம் பின்னங்கால் தலையில்பட ஓடி வந்து முன்வரிசையில் நின்றுவிட்டது என்பதுதான் வேதனை. இவ்வளவு குறைவாக நாம் அறிந்துவைத்திருக்கும் கடற்பகுதியில் இருக்கும் கனிம வளங்களையும் எரிபொருட்களையும் எடுத்துக்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் போட்டி போடுகின்றன. கடற்படுகையில் நடக்கும் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சர்வதேசக் கடற்படுகை ஆணையம் (International Seabed Authority) என்ற அமைப்புக்கும் உலக நாடுகளுக்கும் தினசரி இழுபறி நடக்கிறது. சில நாடுகள் ஏற்கெனவே தங்கள் எல்லைக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளில் கனிம வளங்களை எடுக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டன என்றும் சொல்லப்படுகிறது. ஒரு இடம் எப்படிப்பட்டது, அங்கே என்னென்ன உயிரினங்கள் இருக்கின்றன என்பதை அறிவியல் தெரிந்துகொள்கிறதோ இல்லையோ, அங்கு உள்ள வளங்களை எடுத்துக்கொள்ள உரிமம் வேண்டும் என்ற கூக்குரல் நிறுவனங்களிடமிருந்து எழுகிறது. இதன் பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியல் சிக்கல்களும் கொடுக்கல் வாங்கல்களும் தலைசுற்ற வைக்கின்றன. ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு, குறிப்பாக அடிப்படையான ஆழ்கடல் ஆராய்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படவேண்டும். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் நவீனத் தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படவேண்டும். வணிக நோக்கத்துக்கு அப்பாற்பட்டுக் கடற்பகுதிகள் அறிவியல் நோக்கில் ஆராயப்படவேண்டும். ஆராய்ச்சிகளில் இருக்கும் பாரபட்சங்கள் களையப்பட வேண்டும். இவை நடக்கும்வரை ஆழ்கடல் வணிக நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படவேண்டும். இதுவே இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக அமையும். ஆனால் இதை எழுதும்போதே இப்படி நடப்பதற்கான சாத்தியக்கூறு குறைவு என்பது புரிகிறது. ஆழ்கடலை, “இறுதி எல்லை” (Final Frontier) என்று வர்ணிக்கிறார்கள். அதாவது, மனித இனம் எட்டித் தொட்டுவிட நினைக்கும் இறுதி எல்லையாக ஆழ்கடல் உருவகப்படுத்தப்படுகிறது. எட்டித் தொட்டபின்னர் அது என்னவாகும் என்பதே எஞ்சி நிற்கும் கேள்வி. தரவுகள் Katherine C Bell, Kristen N Johannes, Brian R C Kennedy, Susan Poulton. 2025. How little we’ve seen: A visual coverage estimate of the deep seafloor. Donna Ferguson, 2024. Scramble for the oceans : how countries are racing to name and claim remoter parts of the seabed. Guardian Sarah Rose Bieszczad, Maximillian Fochler and Sarah de Rijcke. 2025. Societal Relevance within their epistemic living spaces. Minerva. Danica Coto. 2025. Canadian company turns to Trump for permission to mine international waters, bypassing a UN agency. AP News. Thadari.comThadari.com
  10. நிங்களோ , நானோ யரையும் ஊருக்கு போகாதீர்கள், வராதீர்கள் என்று சொல்ல இயலாது.சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அவரவர் தங்கள் தனிப்பட்ட விடையங்களுக்காக போய் வருகிறார்கள்..அதனையும் விட புலத்தில் இருப்பவர்களுக்கும் ஊருக்கு போய் செய்து விட்டு வர வேண்டி வேலைகள், தேவைகள் நிறைய இருக்கிறது.அப்படியான ஒரு நிலையில் சந்தர்ப்பம் சூழ் நிலையில் திடிரென்று நோய் வாய் பட்டு விட்டால் வைத்தியசாலைக்கு போகும் யாரும் கட்டில், தலைகணி , பாய், என்று எல்லாம் கொண்டா போக முடியும்..? உதாரணத்திற்கு,,,, என்னை எடுத்து கொண்டால்நான் ஊரை விட்டு வந்ததிற்கு இன்னும் ஊர் பக்கம் போகவே இல்லை..ஆனால் எனக்கும் போக வேண்டிய நிலை இப்போ ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது.அப்படியான தருணத்தில் ஊருக்கு போய் திடிரென்று ஏதாவது நோய் தாக்கம் ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு தான் போக வேண்டும்.அந்த தருணத்தில் அவர்கள் என்ன செய்வார்கள்....? கொஞ்சம் நடை முறையை யோசித்து பாருங்கள்.எப்போது என்ன மாதிரி மனிதர்களின் உடல் நிலைகள் மாறும் என்று இல்லை..
  11. இவர்கள் தினம் ஒரு புத்தகம் அறிமுகம் செய்து வைக்கிறார்கள் ஏன்று நினைக்கிறேன்...புத்தக இணைப்பிற்கு மிக்க நன்றி கிருபண்ணா.✍
  12. அரசியல்வாதிகள் இவற்றில் தலையிட மாட்டார்கள், ஏன் எனில் கடந்த காலங்களில் பெண்களுக்கு சுய தொழில் வாய்ப்புக்கு தவறணைகளுக்கு அனுமதி வழங்கிய வரலாறுகளும் அனைவரும் அறிந்ததே.இது அரசியல் வாதிகளைத் தானே சாரும்.
  13. கடந்த காலங்களில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் முகப் புத்தக பக்கத்தில் பகிரப்படும் படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது..நோயாளிகளுக்கிடையேயான மறைப்பு (கேர்ட்டின்)முக்கியமல்லவா..நோயாளிகள் ஒருவரை, ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை படம் பிடித்து முகப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் போது இவர்களுக்கு பிறைவேசி முக்கியமில்லையா என்று கேட்டேன்... இன்ன மாதிரி செய்தால், போட்டால் நன்றாக இருக்கும் என்று எழுதிய பின் தான் ஒரு சிறிய பகுதிக்கு கேர்டின் போட்டு இருக்கிறார்கள்..பிறகும் எதற்கும் முரண்பட்டு எழுதுவேனோ என்ற எண்ணம் போலும் பணிப்பாளர் பேசவும் மாட்டார், பதில் எழுதவும் மாட்டார்..அப்படி ஒரு தலைக்கணம்.வெளிநாடுகளிலிருந்து போய் கதைப்பவர்களுக்கு நன்றாக தேன் ஒழுக கதைத்து அனுப்புகிறார்.
  14. நீங்கள் சொல்வது போல் யாராவது எதற்காவது உதவுவோம் என்று பேச முற்பட்டாலும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் (சத்தியமுர்த்தியர்)மற்றவர்களின் முகத்தை முறிப்பது போல் தான் நடந்து கொள்கிறார்.தனக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது அங்கிள் அது, இது என்று சொன்னால் அவர்களுக்கு பதில் கொடுக்கிறார்.அதே நேரம் உண்மையாக ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று எழுதினால் அதற்கு பதில் தரப்படுவது இல்லை.முக்கியமாக ஏதும் கேட்டால் , சொன்னால் அந்த வைத்தியருக்கு பிடிப்பதில்லை.ஆனால் ஒரு விடையம் செய்திருக்கிறார்கள்.வார்ட்டுகளுக்கு கேர்ட்டின் போட்டால் நன்று என்பதை சுட்டிக் காட்டியதும் அதை செய்திருக்கிறார்கள்.
  15. இப்போ இப்படி எல்லாம் எழுத, சொல்லப் போனால் யாரு தாத்தா ஏற்றுக் கொள்வார்கள்..சொல்லியும், எழுதியும்.இனி வேணாம் என்றே போய் விடுகிறது..
  16. விமானத்தை விட வேகமாக பறக்கும் மக்கள் புதுப் பணியாளர்கள் இப்போ இருக்கிறார்கள் .மேற் கொண்டு எழுதினால் கருத்துக் காணாமல் போயிடும் வேணாம்...🤭
  17. பிரபா ஐயாவின் மகனின் மரண அறிவித்தல் ........................ கரவெட்டி, தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் 60 ஆண்டுகள் ஆலய குருக்களாக விளங்கி சிவகதி எய்திய சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள், பாகீரதி அம்மாள் தம்பதியினரதும், மாவையாதீனம் சு. துரைசாமி குருக்கள், பச்சைநாயகி அம்மாள் தம்பதியினரினதும் பேரனும், அண்மையில் சிவபதம் எய்திய ச. பிரபாகரன் (கலாசார சிரேஷ்ட அதிகாரி, இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம்), கலாநிதி. சீதாலக்ஷ்மி (சேர். பொன். இராமநாதன் காண்பிய மற்றும் கட்புல கலைகள் பீடத்தின் நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்) இன் சீமந்த புத்திரனும், அபிஷேக் (IIT,Business Management) இன் பாசமிகு அண்ணனுமான பிரபாகரன் அக்‌ஷை (2017 A/L - St. John's College, Sir John Kothalawala Defence University - Aircraft Maintenance Engineering - Final Year) 1/6/2025 முன்னிரவு 7.30 மணிக்கு சிவபதம் எய்தினார். அன்னார் சச்சிதானந்தக்குருக்கள் திவாகரன் - கஜலக்ஷ்மி தம்பதிகளினதும், விநோத்குமார் - இந்துமதி தம்பதிகளினதும் அருமைப் பெறாமகனும், சுவாமிநாத ஐயர், ஜெகதீஷ்வர ஐயர், இரத்தினகைலாசநாத சர்மா, இராதாகிருஷ்ண ஐயர் ஆகியோரின் மருமகனும், பரத், ஸ்நேஹா, நிதேஷின் அன்பு சகோதரனும், ஸ்ரீவித்தியாவின் பாசமிகு மைத்துனருமாவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை காலை 8 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று மதியம் செம்மணி இந்து மயானத்துக்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும் இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறோம். தகவல் குடும்பத்தினர் 7/9A, பண்டாரக்குளம் மேற்கு வீதி, நல்லூர். 0785688366 0766077633 Laleesan Laleesan
  18. தேசியம் இணையத்தில் நினைவுத்தூபி சேதமாக்கபட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி பகிரப்பட்டிருந்தது..பலதும் பத்திலும் பகிர்ந்திருந்தேன்..பின் வேறு, வேறு இணையங்களில் தேடிப் பார்த்தேன்,,அப்படி ஒரு செய்தியே வரவில்லை..எதையாவது போட்டு நிரப்பும் பத்திரிகைகாரர்களை என்ன செய்வது....🤔
  19. ஆழ்ந்த இரங்கல்கள்.ஒரு றியல் எஸ்டேற் ஏஜன்டுமாவார்.🙏
  20. இலங்கையில் தமிழர் பற்றிய பிராமிக் கல்வெட்டுக்கள் – ஓர் அறிமுகம் September 28, 2022 | Ezhuna இலங்கைத் தமிழர்களுக்கு 2500 ஆண்டுகளுக்குக் குறையாத வரலாறு மற்றும் வழிபாட்டு பாரம்பரியம் உள்ளது. பண்டைய இலங்கைத் தமிழர் பற்றி இதுவரை பலரும் அறிந்திராத, இதுவரை வெளிச்சத்துக்கு வராத, அரிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இலங்கையில் ‘பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர்’ எனும் இவ்வாய்வு அமைகிறது. இலங்கையில் வாழ்ந்த தமிழர் பற்றிய முக்கிய சான்றாக விளங்குவது 2300 ஆண்டுகளுக்கு முன்பு கற்குகைகளில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களாகும். இவ்வாறான ஐந்து பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அந்த கல்வெட்டுக்களில் தமிழர்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்களை இக்கட்டுரைத்தொடர் வெளிப்படுத்துகின்றது. அத்தோடு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு வேலைத் திட்டத்தில், இலங்கையில் காணப்படும், 1500 பிராமிக் கல்வெட்டுகளை மீள்வாசிப்பு செய்ததன் பயனாக வெளிக்கொணரப்பட்ட பல்வேறு அம்சங்களை ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்துவதாகவும் இத்தொடர் அமைகிறது. இவ் ஆய்வில் தமிழர் பற்றி கூறும் மேலும் பல பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அத்துடன் சோழர் காலத்திற்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 600 சிங்களக் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து அவற்றிலும் தமிழர் பற்றிக் கூறப்பட்டுள்ள பல விபரங்கள் பற்றியும் இத்தொடர் கட்டுரை கூறுகிறது. இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழும் தமிழரும் இலங்கையில் கல்மேல் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவற்றில் முதலாவதாக எழுதப்பட்டவை பிராமிக் கல்வெட்டுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை கல்வெட்டு ஆய்வாளர்கள் முற்காலப் பிராமி, பிற்கால பிராமி என இரு வகையாக பிரித்துள்ளனர். இலங்கை முழுவதிலும் சுமார் 2500 பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கல்வெட்டுக்கள் தெற்காசியாவில் இலங்கையைத் தவிர வேறெந்த பிரதேசங்களிலும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை இங்குள்ள இயற்கையான கற்குகைகளிலும், கற்பாறைகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1500 கல்வெட்டுக்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 1000 கல்வெட்டுக்கள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இவற்றில் தமிழர் மற்றும் இந்து சமயம் தொடர்பான கல்வெட்டுகள் பல உள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 1500 கல்வெட்டுக்களில் தமிழர் பற்றிய 5 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. மேலும் இந்து தெய்வங்கள் சம்பந்தமான 300 கல்வெட்டுக்களும் உள்ளன. இவற்றைத்தவிர முனிவர்கள் அல்லது சித்தர்களின் பெயர்கள் பொறிக் கப்பட்ட சுமார் 250 பிராமிக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. தமிழர் என்ற பெயரைத் தவிர இலங்கையில் வாழும் ஏனைய இனங் களின் பெயர் பொறிக்கப்பட்ட எந்த ஒரு பிராமிக் கல்வெட்டேனும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. “தமெத” (தமிழ்) எனப் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் கிடைக்கப் பெற்ற பிராமிக் கல்வெட்டுக்களில் 5 கல்வெட்டுக்களில் “தமெத” எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் என்பதன் பிராகிருத வடிவமாகும். இவற்றில் வட மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்தில் 2 கல்வெட்டுக்களும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் 1 கல்வெட்டும், கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் 1 கல்வெட்டும், வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் 1 கல்வெட்டும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு சான்றுகள் மூலம் 2000 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியாகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கும், தமிழ் மொழி பேசப்பட்டுள்ளது என்பதற்கும் இக்கல்வெட்டுக்கள் முக்கிய சான்றுகளாக விளங்குகின்றன. இது பற்றி இலங்கையின் மூத்த வரலாற்று பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்கள் சில முக்கிய குறிப்புக்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரின் குறிப்பு பின்வருமாறு. “கி. மு. மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையிலே தமிழ் ஒரு பேச்சு மொழியாக வழங்கியமைக்கு ஆதாரமாய் அமைகின்ற பிராமிச் சாசனங்கள் தமிழர் பற்றியும் தமிழர் சமுதாயப் பிரிவுகளைப் பற்றியும் குறிப் பிடுகின்றன. அவற்றிலே பல இனங்களைச் சேர்ந்த சமூகங்களின் பெயர்களும், சமுதாயப் பிரிவுகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. தமிழர், நாகர், முருண்டி, காபோஜி என்னும் இனப் பெயர்கள் அவற் றில் உண்டு. பரதர், பதர், பிராமணர் என்போர் பற்றியும் அவற்றிலே குறிப்புகள் உண்டு. இரண்டாயிரத்துக்கும் மேலான பிராமிச் சாசனங்கள் காணப்படுகின்ற பொழுதிலும் அவற்றிலே சிங்களர் பற்றிய குறிப் பெதுவும் காணப்படவில்லை. “சிங்களர்” எனும் இனம் பிராமிச் சாசனங்கள் எழுதப்பட்ட காலத்தில் உருவாகியிருக்கவில்லை என்று கருத வேண்டியுள்ளது. சிங்க உருவம் பொறித்த மிகப் புராதனமான நாணயமும் நாகராசன் ஒருவனின் பெயரையே குறிப்பிடுகிறது.” என பேராசிரியர் எஸ். பத்மநாதன் தனது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் “வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழரின் குடியிருப்புகளும், சமுதாயமும் பிராமிச் சாசனங்களின் காலம் முதலாக உற்பத்தியானவை என்று கொள்ள முடிகிறது” எனக் கூறியுள்ளார். தமிழர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள இக்கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் இந்திரபாலா பின்வருமாறு கூறியுள்ளார். “இலங்கையில் வாழ்ந்த தமிழ் இனக்குழு பிராமிக் கல்வெட்டுக்களில் தமெட என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் கல்வெட்டுக்கள் அநுராதபுரத்தில் மட்டுமன்றி, அப்பால் இன்று தமிழர் வாழும் இடங்களாகிய வவுனியா மாவட்டம் (பெரிய புளியங்குளம்), மட்டக்களப்பு மாவட்டம் (ஸேருவில)மற்றும் அம்பாறை மாவட்டம் (குடிவில்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.” “இலங்கையில் தமிழ் மக்கள் பற்றிக் கிடைக்கும் மிகப்பழைய எழுத்து மூலாதாரங்கள் பொ. ஆ. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுக்களாம். எனினும் அதற்கு முன் அவர்கள் இலங்கையில் இருந்திருக்கக்கூடும் என்று கொள்ளத் தொல்லியல் சான்றுகள் உள்ளன. அத்துடன் பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே, தமிழ் பேசுவோர் பரவலாகத் தமிழ் நாட்டிலும் மற்றும் அயல் இடங்களிலும் இருந்தனர் என்று கொள்ள இடமுண்டு எனக் கொண்டால் இலங்கைக்கும் அதே காலமளவில் அவர்கள் வந்திருக்கலாம் என்று கூறலாம். தமிழ் பேசுவோர் மட்டுமன்றி வேறு திராவிட மொழிகளைப் பேசுவோரும் அங்கு இருந்திருக்கலாம்”. இவ்வாறு பேராசிரியர் இந்திர பாலா தனது “இலங்கைத் தமிழர்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் சில முக்கிய விடயங்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரின் குறிப்பு பின்வருமாறு, “தென்னாசியாவில் பெளத்த மதம் பரவிய நாடுகளில் எல்லாம் அம்மத மொழியான பிராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்தபோது இலங்கையில் தான் பிராகிருத மொழியில் தமிழ் மொழியின் செல்வாக்கு கூடுதலாகக் காணப்படுகிறது. இதில் அவதானிக்கக் கூடிய சிறப்பம்சம் ஆரம்பகாலக் கல்வெட்டுக்களில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிராகிதம் மற்றும் தமிழ் மொழிக்குரிய பெயர்கள், சொற்கள் காலப்போக்கில் தமிழ் மயப்படுத்தப்பட்ட நிலையில் எழுதப்பட்டிருப்பதாகும்.” “இந்த மாற்றத்திற்கு இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த மக்கள் புதிதாக பெளத்த மதத்துடன் அறிமுகமான பிராகிருத மொழியை அம்மொழிக்குரிய வடபிராமி எழுத்தில் எழுதிய போதும், காலப்போக்கில் தமக்குப் பரிச்சயமான தமிழ் பிராமியிலும் பிராகிருத மொழியை எழுத முற்பட்டமை காரணம் எனலாம்”. இவ்வாறு பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் பரமு புஷ்பரட்னம் தனது இன்னுமோர் நூலில் கூறியுள்ள சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு: “இக்கல்வெட்டுக்கள் பெளத்த சங்கத்திற்கு அக்கால சமூகத்தின் பல தரப்பட்ட மக்கள் அளித்த நிலம், குளம், கால்வாய், குகை, கற்படுக்கை, பணம், உணவு போன்ற தானங்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றில் பலவற்றில் தானமளித்தவர் பெயரோடு அவரின் வம்சம், பட்டம், பதவி, தொழில், மதம், இனம் போன்ற தரவுகளும், அவர்கள் வாழ்ந்த இடம், ஊர், நாடு போன்ற செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இதனால் இக்கல்வெட்டுகள் இலங்கையின் குறிப்பிட்ட காலப்பகுதிக்குரிய மொழி, எழுத்து, மதம், பண்பாடு, சமூகம், இடப்பெயர் என்பவற்றை அறிந்துக்கொள்ளவும், சமகாலப் பாளி இலக்கியங்கள் கூறும் வரலாற்றின் நம்பகத் தன்மையை மதிப்பிடவும் உதவுகின்றன.” பக்கத்தில் ஏன் கத்தரிக்கோல் வைக்கிறன் என்றால் தவறாக இருந்தால்..வெட்டி விடவும்.✂️🖐 https://www.ezhunaonline.com/brahmic-inscriptions-on-tamils-in-ceylon-an-introduction/
  21. அந்த பகுதியில் காணப்பட்ட 39 வயது ஜேர்மன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் Virakesari.lkஜேர்மனியில் புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்...ஜேர்மனியில் புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் - 12 பேர் காயம் News | Virakesari.lk
  22. மன்னித்துக் கொள்ளவும் சசியண்ணா..தவறை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அய்யா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.