Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாயினி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  8,513
 • Joined

 • Days Won

  13

Everything posted by யாயினி

 1. இன்றோடு கனடாவுக்கு புலம் பெயர்ந்து 27 ஆண்டுகள்...தாயகத்தில் இருந்ததை விட கனடாவோடு நீண்ட பயணம்..இந்த மண்ணில் கால் பதிக்கும் போது அடிப்படை ஆங்கில அறிவோடு மட்டுமே கால் பதித்தேன்..ஆரம்ப காலத்தில் படிப்பு.எழுத்து.வானோலி நிகச்சிக்களில் பங்கெடுப்பு என்று எனது நாட்கள் சென்றது..அதன் பின் அவற்றிலிருந்து சற்று விடு பட்டு முள்ளி வாய்க்காலின் பின் யாழோடு ஐக்கியமாக அதுவும் ஒரு நீண்ட பயணம்..சொன்னால் நம்புவீர்களா...இன்று ஒரு சிறந்த பணியிலிருக்கிறேன் புகுதி நேரமாக இருந்து முழு நேர பணிக்கு நகர இருக்கிறேன்..அனைத்துக்கும் கனேடிய மண்ணிற்கே நன்றி.
 2. நினைப்பதெல்லாம் நடந்துவிடும் எனும் ஒரே நம்பிக்கையில்தான் இப்பூமி சுற்றிக்கொண்டிருக்கிறது! இன்று கற்றுக் கொண்டது....
 3. இன்று மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் வைத்திய கலாநிதி சத்தியமுர்த்தியவர்கள்.
 4. #ஒரு_கதை #சொல்லட்டுமா_சார் ? #தொடரின்_முதல்_கதை... 2019 ம் ஆண்டு வாரமலரில் வெளிவந்தது நான் படித்து ரசித்த கதை...உங்களுக்காக.. ஒவ்வொரு சிறுகதையும் எளிய மனுசங்களோட வாழ்க்கையில நடந்த , கேட்ட, படித்த கதைகள் தானேங்க.. ஏராளமா கதை இருக்கு சொல்ல பெரியவங்களு இருக்காங்க...ஆனா நமக்கு தான் கேட்க நேரமில்ல.. காரணம் : பொருளாதாரமின்மை , விஞ்ஞானம் வளர்ச்சி( மொபைல்) ( கதை பெரிசா இருக்கேனு விட்றாதீங்க...படிங்க...) #கரு : ஒரு எழுத்தாளனுக்கு நேர்மை எவ்ளவு முக்கியமானதுனு சொல்ற கதைங்க.... #நான்_ரசித்த_கதை - #பகுதி - 1 #போட்டி வாரமல்லிகை' இணைப்பு புத்தகத்தை புரட்டினான், விக்னேஷ்குமார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், இருநுாறுக்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதிக் குவித்த எழுத்தாளன். வயது, 57, மாநிறம், உயரம், 170 செ.மீ., பருத்த வட்ட முகம், 'பியர்' தொப்பை. ஆறாவது பக்கத்தில் வந்திருந்த விளம்பரத்தில், கண்களை ஊன்றினான். 'அமரர், எஸ்.வி.ஆர்., கிருஷ்ணய்யர் சிறுகதை போட்டி - 2019' அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் பரிசு, 20 ஆயிரம் ரூபாய். 'வாரமல்லிகை' நடத்திய முதலாம் ஆண்டு சிறுகதை போட்டியில், விக்னேஷ்குமார் தான், முதல் பரிசு பெற்றான். அடுத்தடுத்த நான்கைந்து ஆண்டுகளில், சிறுகதை போட்டிகளுக்கு நடுவர்களில் ஒருவனாய் இருந்தான். பொதுவாக, 'வாரமல்லிகை' நடத்தும் சிறுகதை போட்டிகளுக்கு, பெண் எழுத்தாளர்கள் தான் அதிகம் எழுதுவர். போட்டிக்கு, 10 ஆயிரம் சிறுகதைகள் வரும். 10 நடுவர்களை வைத்து கதைகளை படித்து, முதலாம் கட்ட தேர்வு நடக்கும். பல கட்டங்களுக்கு பின், இறுதி தேர்வுக்காக, கதைச் சுருக்கத்துடன், 50 சிறுகதைகள், ஆசிரியரின் மேஜைக்கு போகும். முதல் மூன்று பரிசுகளுக்கு, மூன்று கதைகள்; ஆறுதல் பரிசுக்கு, ஏழு கதைகளை ஆசிரியர் தேர்ந்தெடுப்பார். பாரபட்சமில்லாத தேர்வு. சிறந்த சிறுகதை, குப்பன், சுப்பன் எழுதியிருந்தாலும், முதல் பரிசு அவர்களுக்கு தான். காபி எடுத்து வந்து வைத்தாள், விக்னேஷ்குமாரின் மனைவி, கார்த்திகா. சிறுகதை போட்டி விளம்பரம் வந்த பக்கத்தை, அவளிடம் நீட்டினான். வாங்கி பார்த்து, ''வழக்கம்போல, 2019ன், சிறுகதை போட்டி அறிவிச்சிருக்காங்க... இதுக்கென்ன?'' தயங்கிய விக்னேஷ்குமார், ''எனக்கொரு ஆசை... நீ கோவிச்சுக்க கூடாது!'' ''என்ன?'' ''இந்த ஆண்டு, 'வாரமல்லிகை' சிறுகதை போட்டிக்கு, நானும் சிறுகதை எழுதி அனுப்ப முடிவெடுத்திருக்கேன்!'' ''மூத்த எழுத்தாளர்கள் கலந்துக்க கூடாதுன்னு நிபந்தனை இருக்கே?'' ''காலம் சென்ற எழுத்தாளர் ராஜேந்திரகுமாரிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. எந்த பத்திரிகை, சிறுகதை போட்டி நடத்தி, யார் முதல் பரிசு பெற்றாலும், அவருக்கு, வாழ்த்து கடிதம் அனுப்புவாராம். முதல் பரிசு, 10 பேர் பெற்றால், அதில், ஒன்பது பேர் காணாமல் போய் விடுகின்றனர். அவர்களின் இரண்டாவது படைப்பு வெளியாவதே இல்லை என கண்டுபிடித்தார். ''ஆகவே, ஒரு முடிவுக்கு வந்தார். பிரபல எழுத்தாளர்களே, பொய் புனை பெயரில் கதை எழுதி, முதல் பரிசு பெறுகின்றனர். பரிசு பெற்ற பின், உதவிய புனை பெயரை, குப்பை கூடைக்கு அனுப்பி விடுகின்றனர் என, மோப்பம் பிடித்தார்.'' ''அதனால, என்ன சொல்ல வர்றீங்க?'' ''உன் பெயரில் சிறுகதை எழுதி, 'வாரமல்லிகை' சிறுகதை போட்டிக்கு அனுப்பவா?'' ''என் பெயர், 'வாரமல்லிகை' ஆசிரியருக்கு தெரியுமே!'' ''உனக்கு இரண்டு பெயர்கள் உள்ளன. ஒரு பெயர் தான், பத்திரிகை உலகிற்கு பிரபலம். நான் கையால் எழுதிய கதை பிரதியை, வெளியில் ஒரு கணினி நிறுவனத்திடம் கொடுத்து, தட்டச்சு செய்வோம். உன் தோழி, திருநெல்வேலி சந்திரா முகவரியிலிருந்து கதை அனுப்புவோம். அவரிடம் விஷயத்தை சொல்லி, அனுமதி பெற்று விடு!'' ''இது, திருட்டுத்தனம் இல்லையா?'' ''போட்டியில், தகுதியான கதையாக என் படைப்பு இருந்தால்தான் முதல் பரிசோ, இரண்டாம் பரிசோ பெறும். போட்டி என்றால் எல்லாருக்கும் பொதுதானே... கதைகள் எழுத ஆரம்பித்து, 32 ஆண்டுகள் ஆகின்றன. நான், சிறுகதைகளை பழைய வீரியத்துடன் எழுதுகிறேனா இல்லையா என்பதை, சுயபரிசோதனை செய்துகொள்ள இது நல்ல சந்தர்ப்பம்!'' ''கதையின் எழுத்து நடையை பார்த்து, எழுதியது நீங்கள் தான் என கண்டுபிடித்து விடுவர்.'' ''தனி நடையில் முயற்சிப்பேன்!'' ''என் இரண்டாவது பெயரில் கதையை எழுதி அனுப்புவதை விட, உங்கள் கோவில்பட்டி வாசகி, மீனாட்சி பெயரில் அனுப்பலாம்... யாருக்கும் சந்தேகம் வராது!'' ''இது நல்ல யோசனை, கார்த்திகா!'' ''இன்னொரு முக்கியமான சந்தேகம் எனக்கு!'' ''என்ன?'' ''சிறுகதை போட்டிக்கு, நீங்க அனுப்புற கதை தேர்வாகாம போயிருச்சுன்னா, அது உங்க மனநிலையை வெகுவா பாதிக்கும். அப்புறம் ஒரு வார்த்தை கூட, உங்களால எழுத முடியாது. உங்க, 'கேரியர்ல டெட் எண்ட்' வந்துரும்!'' யோசித்தான், விக்னேஷ்குமார். ''என் தகவல் குறிப்பு நோட்டில், 50க்கும் மேற்பட்ட சிறுகதை கரு, குறித்து வைத்துள்ளேன். அதில், பத்தை தேர்ந்தெடுத்து, உன்னிடம் வாய்வழி கதையாக கூறுகிறேன். பத்தில் எது சிறந்தது எனக் கூறு, அதை எழுதுகிறேன். எழுதியதை, 10 நாள் கிடப்பில் போட்டு மீண்டும் வாசித்து, திருத்தி, இரண்டாம் முறை எழுதுகிறேன். ''திரும்ப, 10 நாள் கிடப்பில் போட்டு, பின், மீண்டும் வாசித்து, மூன்றாம் முறை திருத்துகிறேன். அதன்பின், சிறுகதையை தட்டச்சு செய்து, மீனாட்சிக்கு அனுப்புவோம். அந்த பிரதியை, அவர் முகவரியிலிருந்து 'வாரமல்லிகை'க்கு, மீனாட்சி அனுப்புவார்!'' ''முதல் பரிசு கிடைச்சா, மீனாட்சிக்கு நாம எதுவும் குடுக்கணும்ல்ல?'' ''என் அன்பிற்காக எதையும் செய்வார், மீனாட்சி. எதுவும் கேட்க மாட்டார். நாமாக ஏதாவது பரிசு பொருள் வாங்கி தரவேண்டியது தான்.'' ''இப்போதே முதல் பரிசு பெற்று விட்டதை போல ரொம்ப ஆடுகிறோமோ?'' சிரித்தான், விக்னேஷ்குமார். ''நம்மிடம் இருப்பது தலைக்கனம் அல்ல, தன்னம்பிக்கை!'' ''எதற்கும் இன்னும் பலமுறை யோசித்து முடிவெடுங்கள்... நீங்கள் சிறுகதை போட்டியில் கலந்துகொள்வது, எனக்கு உடன்பாடான விஷயமில்லை. போட்டியில் ஜெயித்தாலும், குற்ற உணர்ச்சி ஆயுளுக்கும் தொடரும்,'' எனக் கூறி, சமையலறைக்குள் சென்றாள், கார்த்திகா. ஒருமணி நேர யோசனைக்கு பின், தகவல் குறிப்பு நோட்டில், 50 சிறுகதை கருக்களை அலசி ஆராய்ந்து, 10 கதை கருக்களை தேர்ந்தெடுத்தான், விக்னேஷ்குமார். ஒவ்வொரு கதைக் கருவுக்கும், கதை தலைப்பு, கதாபாத்திரங்களின் பெயர், வயது, தொழில், தோற்றம், வசிப்பிடம் மற்றும் தெளிவான கதைச் சுருக்கத்தை எழுதினான். கட்டடம் கட்ட, 'ப்ளூபிரின்ட்' தயாரிக்கப்படுவது போல, சிறுகதை எழுத, உள்கட்டமைப்பு ஆயத்தம் செய்தான். ஒரு சிறந்த கதை சொல்லியான அவன், மனைவியிடம் ஒவ்வொரு கதையாய் விவரித்தான். விக்னேஷ்குமார் கூறிய, ஒரு சிறுகதை, கார்த்திகாவை வெகுவாக கவர்ந்தது. ''கதை புதுசா, உருக்கமா, சமுதாயத்துக்கு பயனுள்ளதா இருக்கு. இதையே எழுதுங்க!'' தேநீர் உறிஞ்சியபடி, அச்சிறுகதையை எழுதி முடித்து, உரக்க வாசித்தான், விக்னேஷ்குமார். ''சொன்னதை விட, எழுதினது, 50 சதவீதம் கூடுதல் சிறப்பா வந்திருக்கு,'' என்றாள், கார்த்திகா. மீனாட்சிக்கு போன் செய்து விக்னேஷ்குமார் விசாரிக்க, ''பிரமாதம்... நான், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்டேன்... நீங்க முந்திக்கிட்டு போன் பண்ணிட்டீங்க!'' என்றாள். ''சொல்லுங்க!'' ''முப்பது ஆண்டுகளாக, உங்க கதைகளை படிச்சு படிச்சு, நானே பாதி எழுத்தாளர் ஆயிட்டேன். பலமுறை, 'வாரமல்லிகை' சிறுகதை போட்டிக்கு, சிறுகதைகள் அனுப்ப நினைச்சும், ஏனோ முடியாம போயிருச்சு... இந்த ஆண்டு நிச்சயம் சிறுகதை போட்டியில கலந்துக்க போறேன்... குரு ஸ்தானத்துல நின்னு, சிஷ்யை என்னை ஆசிர்வதிங்க!'' ''ஆசிர்வதிக்கிறதுக்கு முன், ஒரு கேள்வி... மாற்று புனை பெயர்ல இந்த சிறுகதை போட்டியில் பங்கேற்று, நான் முதல் பரிசு வாங்கினா என்ன நினைப்பீர்கள், மீனாட்சி!'' ''அப்படி ஒருபோதும் செய்ய மாட்டீர்கள்... எழுத்தும் நேர்மையா இருக்கணும், எழுதுற எழுத்தாளனும் நேர்மையா இருக்கணும்ன்னு நினைக்கிறவரு நீங்க... எதை எழுதினாலும் அதில் சத்தியமும், உண்மையும் கொப்பளிக்கும். கேவலம், 20 ஆயிரம் ரூபாய்க்காக சோரம் போகிற எழுத்தாளர், நீங்க இல்லைன்னு எனக்கு தெரியும். இளைய தலைமுறை எழுத்தாளர்களின் வெற்றியை, உங்க வெற்றியா பாவிக்கிறவர் நீங்க!'' உச்சந்தலையில் தொடர்ந்து குட்டுகள். கன்னத்தில் பளார் பளார் அறை... விக்னேஷ்குமாரின் காதை திருகினாள், எழுத்து தேவதை. 'உன் வாசக - வாசகியரின் நம்பிக்கையை வீணாக்கி விடாதே...' ''என் மீது நீங்க கொண்டிருக்கும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் மிக்க நன்றி. 'வாரமல்லிகை' சிறுகதை போட்டி 2019ல், நீங்கள் முதல் பரிசு பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்!'' கைபேசியை அணைத்து, கார்த்திகாவிடம் திரும்பினான், விக்னேஷ்குமார். ''பொய் புனை பெயரில் கதை எழுதி, 'வாரமல்லிகை' சிறுகதை போட்டியில் நான் கலந்துகொள்ள போவதில்லை. இப்போது எழுதிய சிறுகதையை சாதாரண பிரசுரத்துக்காக, 'வாரமல்லிகை'க்கு அனுப்புவோம். வாசகர் பாராட்டே, எனக்கான முதல் பரிசு!'' பரிசு போட்டி முடிவுகள் வெளியாகின. முதல் மூன்று பரிசுகள் புதுமுகங்களுக்கு, ஆறுதல் பரிசு வாங்கியிருந்தார், மீனாட்சி. முதல் பரிசு கதை, வெளியான இதழிலேயே, விக்னேஷ்குமாரின், சிறுகதையும் வெளியாகியிருந்தது. விக்னேஷ்குமாருக்கு, கடிதம் எழுதியிருந்தார், ஆசிரியர். எழுத்தாள நண்பருக்கு... கடந்த, 10 ஆண்டுகளில், நான் படித்த சிறுகதைகளில் சிறந்தது, இக்கதை தான். சிறுகதை போட்டிக்கு என, குறிப்பிட்டு அனுப்பி இருந்தீர்கள் என்றால், மூத்த எழுத்தாளர்கள் போட்டியில் கலந்துகொள்ளக் கூடாது என்ற நிபந்தனையை தளர்த்தி, உங்களுக்கே முதல் பரிசு கொடுத்திருப்பேன். எனக்கு, அப்படி ஒரு தர்மசங்கட நிலையை ஏற்படுத்தாமல், புதுமுகங்களுக்கு வழி விட்டுள்ளீர்கள். உங்கள் எழுத்தையும், புதுமுகங்களுக்கு வழிவிடும் நேர்மையையும் சிலாகித்து, இன்னொரு முதல் பரிசு தொகையை, உங்களுக்கு சிறப்பு சன்மானமாக அனுப்பியுள்ளேன். வாழ்த்துகள் ! நெகிழ்ந்து போனான், விக்னேஷ்குமார். மீனாட்சியின் ஆறுதல் பரிசு கதை, நான்காவது வாரம் வெளியாகியிருந்தது. எழுத்தாளருக்கான வாழ்க்கை குறிப்பில், 'என் முதல் கதை, விக்னேஷ்குமாருக்கு சமர்ப்பணம்' என, மீனாட்சி குறிப்பிட்டிருந்தார். எழுத்து தேவதை கண் சிமிட்டி சிரித்தாள், 'உண்மைக்கு இரட்டை ஊதியம் உண்டு!' #எழுதியவர் : #மதுமிதா_ராகவ் ( #படிச்சிட்டீங்களா..? கதைய பத்தி நீங்க என்ன நெனக்குறீங்க...? கமெண்ட் பண்ணுங்க...) #கதைகள்_தொடரும்..... — in Tirupur. நான் இன்று வாசித்ததிலிருந்து......................
 5. · இலங்கையில் இருந்து இயங்கும் சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஸ் ஞானப்பிரகாசம் - Pragas Gnanapragasam - கோவிற் தொற்றுக் காரணமாக மரணமடைந்துள்ளார்.. ஜீவா சதாசிவம் is with Siva Ramasamy and 2 others . 4h · #சகோதரர்கள் மூவர் இருந்தாலும் பெற்றோர் இல்லாத எதிர்காலத்தை நினைத்துப் பார்த்தால் அல்லது விரைவில் மரணித்துவிடுவேன் என்பதை நினைக்கும் போது கவலையுடன் இலேசாக கண்கள் நனைந்துவிடும். இறக்கும் வரை ஒருவரது பெறுமதி தெரிவதில்லை... இவனுடன் பழகியதில்லை... ஆனால், இவன் வழங்கிய நேர்காணல் மனதை கனக்கச் செய்து விட்டது.. முழுமையாக வாசிப்பதற்காக பதிவிடுகின்றேன் ( நேர் கண்டவர்- கேஜி.கேஜி) 1. உங்கள் அடையாளம் என்ன என கேட்டால் என்ன சொல்வீர்கள் ?. பதில் :- எழுத்து என்று தான் சொல்வேன். அதற்கான அடித்தளத்தினை முகநூல் வலைத்தளமே ஏற்படுத்தித்தந்தது. ஏனென்றால், முகநூல் பயனராகிய பின்னரே எனக்குள் இருந்த எழுத்துத்திறமை வெளிப்பட்டது. அது, ஊடகவியலாளர் எனும் அந்தஸ்த்தையும் பெற்றுக் கொடுத்துள்ளது. 2. உங்கள் குடும்பம், பிறந்த, வளர்ந்த ஊர் பற்றி ஒரு அறிமுகம். பதில் :- அம்மா, அப்பாவுடன், அக்கா மற்றும் இரண்டு அண்ணன்கள் அடங்கலாக ஆறு பேரை கொண்டது எங்கள் குடும்பம். அதில், நான் கடைக்குட்டி. பிறந்தது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொடிகாமம், வெள்ளாம் போக்கட்டி எனும் பனை, தென்னை, மா மரங்கள் நிறைந்த அழகிய கிராமத்தில் தான். வளர்ந்ததும் இதே கிராமத்திலேயே. எனினும், சிறு வயதில் போர்ச் சூல்நிலைகளின் போது உறவினர்கள் உள்ள ஊர்களான பண்டத்தரிப்பு மற்றும் உரும்பிராயிலும் சில காலம் வாழ்ந்துள்ளேன். 3. உங்களுக்கு இந்த ஊடக துறையில் சாதிக்க தூண்டிய காரணி எது ?. பதில் :- பத்திரிகை, வானொலிகள் மீது மிகுந்த ஆர்வமும், செய்திகளை படிப்பதில் இருந்த ஈர்ப்பும் ஒரு காரணியாக இருக்கின்றது. அதேபோல், "ஊடகவியலாளன்" என்ற அடையாளத்தை நானாக சூட்டிக்கொண்டதால் அதனை முழுமையாக நிரூபிக்க வேண்டும் என்ற உந்துதலும் முக்கியமான காரணியாகும். அந்தவகையில் தற்போது தான் ஊடகத் துறையில் இலை மறை காயாக இருந்து சாதிக்க ஆரம்பித்துள்ளேன். 4. உங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் இது போன்று சாதிக்க உங்கள் ஒரு குடும்பம் என்ற வகையில் என்ன மாதிரியான பங்களிப்பை செய்கிறது அல்லது செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள் ?. பதில் :- எனது தேவையறிந்து செயற்படுவதுடன், தேவையான பங்களிப்பை எனது குடும்பத்தினர் செய்துவருகின்றனர். அம்மா இல்லை என்றால் என்னால் எதுவும் சாதித்திருக்க முடியாது. மக்களுக்கான போராட்டங்களில் கலந்து கொள்ள அம்மா என்னை தயார்ப் படுத்துவார். அப்பாவே, அழைத்து செல்வார். அது பெற்றோரின் அளப்பரிய பங்களிப்பாகும். அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் தொடர்பில் நீதி கோரிய போராட்டம் ஒன்றை ஒழுங்கமைத்து அதில் பங்குகொள்ள சென்ற என்னைப்பற்றிய தகவல் புலனாய்வாளர்களுக்கு சென்றிருந்தது. ஆனாலும், அச்சம் இருந்தும் எனது குடும்பத்தினர் என்னை தடுக்கவில்லை. எனவே, அத்தகைய பங்களிப்பை தொடர்ந்தும் செய்ய வேண்டும். செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 5. சமூக ஊடகங்கள் குறிப்பாக முகநூல், இணையத்தளம் என்பன உங்களுக்கு எவ்வளவு பெரிய உதவியாக உள்ளது ?. பதில் :- மேற்குறிப்பிடப்பட்டவை நிறைவேறவும், இப்போது இந்த பேட்டியை வழங்கும் நிலையை அடையவும் முகநூல் வலைத்தளம் மட்டுமே எனக்கு முழுமையான பேருதவியாக அமைந்துள்ளது. முகநூல் இல்லை என்றால் நிச்சயம் எனக்குள் இருந்த திறமை வெளிப்படாமல் வீணாகிப் போயிருக்கும். பலரும் முகநூல் பாதிப்பை மட்டுமே தரும் என்று கருதுகின்றனர். ஆனால் எனக்கு ஒரு எதிர்காலத்தை தந்தது என்றால் அது முகநூல் தான். அத்துடன், என்னால் முடியாது என நினைத்தவற்றை முடியும் என்று தன்னம்பிக்கையை விதைக்கும் சிறந்த நண்பர்களையும் இந்த முகநூல் தந்துள்ளது. 6. உங்கள் கனவு என்ன ?. பதில் :- சில காலங்களுக்கு முன்வரை எந்த கனவுகளும் இல்லாமல் தான் இருந்தேன். ஆயினும், மாற்றுத்திறனாளியாக இருப்பவர்கள் தம்மிடம் இருக்கும் திறமைகளை கொண்டு சாதித்துவிட்டு மரணித்து போவதை, முக்கியமாக என்னைப்போல் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்பட்ட அழுத்கமை இர்பான் ஹபிஸ் படுக்கையில் இருந்து மூன்று நூல்களை எழுதிவிட்டு எழுத்தாளராக மரணித்த போது தான். "நானும் மாற்றுத்திறனாளி" என்பதை உலகிற்கு வெளிக்காட்டி என்னிடம் இருக்கும் ஊடகத்திறமை மூலம் சாதித்து மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் முன்னுதாரணமாக, தன்னம்பிக்கையை கொடுப்பவனாக இருந்துவிட்டு மரணித்துவிட வேண்டும் என்பதே கனவாக மாறியது அல்லது மாற்றிக்கொண்டேன். அந்தக் கனவை ஒரு போராட்டத்தில் பங்கெடுத்து செயற்படுத்த ஆரம்பித்திருக்கிறேன். 7. உங்கள் ஊடக செயல்பாடுகளை தடையின்றி செய்ய ஏதாவது தடைகள் உள்ளனவா ?. பதில் :- தடை இருப்பதாக நான் உணரவில்லை. ஆயினும், ஊடகவியலாளர் என்ற உத்தியோகபூர்வ அந்தஸ்த்து எனக்கு கிடைக்கவில்லை. அதற்காக, நான் இதுவரை விண்ணப்பிக்கவும் இல்லை. அந்த அந்தஸ்த்தை பெற்றுக் கொண்டால் எனது ஊடகத்துறை பயணத்திற்கு வலு கிடைக்கும். 8. எப்போதாவது உங்களது உடல் அங்கவீனம் குறித்து வருத்தப்பட்டிருக்கிறீர்களா ?. பதில் :- ஆம்!. மனதுக்குள் வருத்தப்பட்டிருக்கிறேன் வெளியில் காட்டிக்கொள்வதில்லை. அத்தகைய கவலை எப்போதும் என் மனதோரத்தில் இருக்கும். சகோதரர்கள் மூவர் இருந்தாலும் பெற்றோர் இல்லாத எதிர்காலத்தை நினைத்துப் பார்த்தால் அல்லது விரைவில் மரணித்துவிடுவேன் என்பதை நினைக்கும் போது கவலையுடன் இலேசாக கண்கள் நனைந்துவிடும். 9. இன்று சமூகத்தில் ஒரு மாற்றுத்திறனாளியாக பல சாதனைகளை முன்னெடுத்து வருகிறீர்கள்.. உங்களைப் போன்றவர்கள் மேலும் என்னென்ன துறைகளில் சாதிக்கலாம் முன்னேறலாம் ?. பதில் :- என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் தமக்குள் இருக்கும் திறமைகளின் அடிப்படையில் எத்துறையிலும் சாதிக்க முடியும். எனவே, மாற்றுத் திறனாளிகளாக இருப்பவர்கள் தமக்குள் இருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு ஏதோவொரு வழியில் அவற்றில் சாதித்து முன்னேற வேண்டும். என்னைப் போல் தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்ட தம் பிள்ளைகளை கேள்விப்படும் வைத்தியர்களிடம் எல்லாம் கொண்டுதிரிந்து அல்லல்ப்பட்டு பிள்ளைகளையும் கஸ்டப்படுத்தாமல் அவர்களது திறமையை வளர்க்க பெற்றோர் முயற்சிக்க வேண்டும். 10. உங்களுக்கு வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் துறை எது ?. பதில் :- இப்போது வருமானத்தை பெற்றுத்தருவது ஊடகத்துறை தான். இணைய ஊடகங்களில் செய்தி ஆசிரியராகவும், செய்தியாளராகவும் பணிபுரிகின்றேன். இந்நிலையை அடைவதற்கு முந்தைய காலத்தில் கதிரை பின்னுவது, நீத்துப்பெட்டி பின்னல் மற்றும் புகைப்பட வடிவமைப்பு செய்வது மூலமும் வருமானத்தை பெற்றுள்ளேன் என்பதையும் இவ்விடத்தில் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். 11. நீங்கள் முழு நேர ஊடகவியலாளர் மட்டுமா அல்லது ஏனைய படைப்புகளில் ஆர்வம் உண்டா ?. பதில் :- முழுநேர ஊடகவியலாளர் என்று தான் சொல்ல வேண்டும். புகைப்பட வடிவமைப்பு துறையில் ஆர்வம் இருந்தாலும் எனது உடல் நிலைக்கு ஏற்ப முழு நேரத்தையும் ஊடகத் துறையில் செலவிடுவதே எனக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. 12. பொதுவாக சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?. பதில் :- சமூகம் என்ற கட்டமைப்பின் கீழ் வாழுகின்ற மக்களிடையில் ஒற்றுமை, மனிதநேயம் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். ஆனால், அனைத்தும் நவீனமயமாக மாறிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அவை அருகியிருப்பதையே காண்கின்றோம். சாமானிய மக்களின் பிரச்சினைகள், வறுமைகளை போக்குவதற்கு கரம்கொடுப்பது ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்கள் பல்வேறு துண்பகரமான பிரச்சினைகளுக்காக அரசிடம் கோரிக்கை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவற்றில், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகள், பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமானவை. அதுபோன்ற, பிரச்சினைகளை தீர்க்க பாதிக்கப்பட்டோருக்காக குரல் கொடுக்கும் ஒற்றுமை மனப்பாங்கு அனைத்து மக்களிடமும் ஏற்பட வேண்டும்மென்று பணிவுடன் வலியுறுத்த விரும்புகின்றேன். மாற்றுத்திறனாளியாக இருந்தும் ஏன் இதற்கு முக்கியம் கொடுக்கிறீர்கள் என்று உங்களிடம் கேள்வி எழுமென்று நினைக்கின்றேன். எனது ஊடகத்துறை வளர்ச்சிக்கும் என்னை மாற்றுத்திறனாளியாக பொது வெளியில் அடையாளப்படுத்தவும் மக்களின் பிரச்சினை (முக்கியமாக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினை) எனக்கு தூண்டுகோலாக இருந்தது என்பதுதான் அதற்கான விடை.
 6. 26 ஆகஸ்ட் 2021 பட மூலாதாரம்,WFP/TSIORY ANDRIANTSOARANA படக்குறிப்பு, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி மடகாஸ்கர் உலகின் முதல் "பருவநிலை மாற்றப் பஞ்சத்தை" எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளது. நான்கு ஆண்டுகளாக மழையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் மோசமான பசி பட்டினியாலும், உணவுப் பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வறட்சி, மடகாஸ்கர் நாட்டின் தெற்கில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட விவசாய சமூகங்களை கடுமையாக பாதித்துவிட்டது, இதனால் அவர்கள் பூச்சிகளை வேட்டையாடி உண்டு உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். "இந்த பஞ்சம் போன்ற நிலைமைகள், பருவநிலையால் ஏற்படுகின்றன" என்று ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் ஷெல்லி தக்ரல் கூறினார். தற்போது சர்வதேச அளவில் 30,000 பேர் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பின்மையின் உச்ச நிலையில் (ஐந்தாவது நிலை) இருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது. மடகாஸ்கரில் அறுவடைக்கு முந்தைய பாரம்பரிய காத்திருப்பு காலத்தில் (பயிரை நடவு செய்த பின் அறுவடைக்கு காத்திருக்கும் காலம்) நுழைய இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கவலை நிலவுகிறது. "இதுவரை காணப்படாத நிலை இது. இந்த மக்கள் பருவநிலை மாற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை. அவர்கள் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதில்லை. இருப்பினும் அவர்கள் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்கிறார்கள்," என ஷெல்லி தக்ரல் கூறினார். அம்போசாரி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான ஃபாண்டியோவாவில் வாழும் குடும்பத்தினர், சமீபத்தில் அவர்கள் உண்ணும் வெட்டுக்கிளிகளை, பார்வையிட வந்த ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட குழுவிடம் காட்டினர். பட மூலாதாரம்,WFP/TSIORY ANDRIANTSOARANA படக்குறிப்பு, பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் மக்கள் "என்னால் முடிந்தவரை பூச்சிகளை சுத்தம் செய்கிறேன், ஆனால் கிட்டத்தட்ட தண்ணீரே இல்லை" என நான்கு குழந்தைகளின் தாயான டமரியா கூறினார். "இதைத் தான் நானும் என் குழந்தைகளும் கடந்த எட்டு மாதங்களாக தினமும் சாப்பிட்டு வருகிறோம், ஏனென்றால் நாங்கள் சாப்பிட எதுவும் இல்லை, நாங்கள் விதைத்ததை அறுவடை செய்ய மழை இல்லை," என கூறினார் டமரியா. "'எஞ்சிய வளங்களையாவது விட்டு வையுங்கள்" - செங்கல் சூளைகளால் பாதிக்கப்பட்ட தடாகம் மக்கள் தண்ணீர், தண்ணீர்: ரோம் முதல் சென்னை வரை தீராத உலக பிரச்னை "கற்றாழை இலைகளைத் தவிர இன்று எங்களுக்கு சாப்பிட எதுவும் இல்லை" என மூன்று குழந்தைகளின் தாயான போலே, உலர்ந்த பூமியில் அமர்ந்த படி கூறினார். அண்டை வீட்டாரைப் போலவே, தனது கணவரும் சமீபத்தில் பசியால் இறந்துவிட்டதாக அவர் கூறினார், அவர் உணவளிக்க மேலும் இரண்டு குழந்தைகள் இருந்தன. "நான் என்ன சொல்ல முடியும்? நாங்கள் உயிர்வாழ மீண்டும் மீண்டும் கற்றாழை இலைகளைத் தேடுவதே எங்கள் வாழ்கையாக இருக்கிறது." என்கிறார் போலே. நீர் மேலாண்மை பட மூலாதாரம்,OCHA/REUTERS படக்குறிப்பு, வறாட்சியில் மடகாஸ்கர் மடகாஸ்கர் அடிக்கடி வறட்சியை அனுபவித்தாலும், எல் நினோவால் ஏற்படும் வானிலை மாற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது என்றாலும், காலநிலை மாற்றம் தற்போதைய பிரச்சனையுடன் நேரடியாக இணைக்கப்படலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். "சமீபத்தைய ஐபிசிசி அறிக்கையில், மடகாஸ்கரில் ஈரப்பதம் குறைவதை எங்களால் பார்க்க முடிந்தது. பருவநிலை மாற்றம் தொடர்ந்தால் அது அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. "பல வழிகளில் மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள இது வலுவான வாதமாக பார்க்கலாம்" என்கிறார் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மடகாஸ்கன் விஞ்ஞானி மற்றும் முனைவர் ரோண்ட்ரோ பரிமலாலா. கலிபோர்னியாவில் உள்ள சான்டா பார்பரா பல்கலைக்கழகத்தில் அதே வளிமண்டல தரவைப் பார்த்து, பருவநிலை அபாய மையத்தின் இயக்குநர், க்றிஸ் ஃபங்க், "வளிமண்டல வெப்பமடைதல்" உடனான தொடர்பை உறுதிப்படுத்தினார், மேலும் மடகாஸ்கர் அதிகாரிகள் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் பணிகளைச் செய்ய வேண்டும் என்று கூறினார். "குறுகிய காலத்தில் நிறைய செய்ய வேண்டும், அது செய்ய முடியும் என நாங்கள் நினைக்கிறோம். சாதாரண மழையை விட எப்போது அதிக மழை பொழிய உள்ளது என கணிக்க முடியும், விவசாயிகள் தங்கள் பயிர் உற்பத்தியை அதிகரிக்க அத்தகவலைப் பயன்படுத்தலாம். பருவநிலை மாற்றத்தின் போது நாங்கள் சக்தியற்றவர்கள் அல்ல ," என்று கூறினார். தற்போது நிலவும் இந்த வறட்சியின் தாக்கம், தெற்கு மடகாஸ்கரில் உள்ள பெரிய நகரங்களிலும் உணரப்படுகிறது. பல குழந்தைகள் உணவுக்காக தெருக்களில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். "சந்தையில் விலை மூன்று அல்லது நான்கு மடங்கு உயர்கின்றன. உணவு வாங்குவதற்கு மக்கள் தங்கள் நிலங்களை விற்று பணம் பெறுகிறார்கள்," என டொலானாரோவில் இருக்கும் 'சீட்' என்கிற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் சினா எண்டோர் கூறினார். அவருடைய சக ஊழியர் லோம்பா ஹசோவானா, அவரும் இன்னும் பலரும் தங்கள் மரவள்ளிக் கிழங்கு வயல்களில் தூங்கச் சென்று உணவுக்காக ஆசைப்படும் மக்களிடமிருந்து தங்கள் பயிர்களைப் பாதுகாக்க முயற்சிப்பதாகக் கூறினார். "நீங்கள் உங்கள் உயிரைப் பணையம் வைக்கலாம். எனக்கு இது மிகவும் கடினமாக உள்ளது, ஏனென்றால் ஒவ்வொரு நாளும் எனக்கும் என் குடும்பத்திற்கும் உணவளிப்பது பற்றி நான் சிந்திக்க வேண்டும்," என்று அவர் கூறினார்: "இப்போது வானிலை பற்றி எல்லாம் கணிக்க முடியாத நிலை இருக்கிறது. நாளை என்ன நடக்கும்? என்பது தான் மிகப்பெரிய கேள்வி குறி " என்கிறார்.
 7. நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் எங்கு எப்போது வாழ்ந்தது? - Amphibious Phiomicetus Anubis எனும் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு 28 ஆகஸ்ட் 2021 பட மூலாதாரம்,DR ROBERT W. BOESSENECKER படக்குறிப்பு, நான்கு கால் கொண்ட திமிங்கலம் நான்கு கால்களைக் கொண்ட திமிங்கல புதிய உயிரினத்தை எகிப்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். அது சுமார் கடந்த 43 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆம்ஃபிபியஸ் ஃபியோமெசிடஸ் அனுபிஸ் (amphibious Phiomicetus anubis) என்கிற உயிரினத்தின் புதை படிமங்கள் எகிப்து நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த உயிரினத்தின் தலை அனுபிஸ் உயிரினத்தை ஒத்து இருக்கிறது. அந்த உயிரினத்துக்கு எகிப்தின் பழங்கால குள்ளநரி தலை கொண்ட மரண கடவுளைத் தொடர்ந்து அந்த உயிரினத்துக்கு அப்பெயர் வைக்கப்பட்டது. தற்போது இருக்கும் திமிங்கலங்களின் மூதாதையர்கள், மான் போன்ற பாலூட்டிகளில் இருந்து வந்தவை. இந்த உயிரினங்கள் கடந்த 10 மில்லியன் ஆண்டுகளில் நிலத்தில் வாழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தோரோயாமாக 600 கிலோ எடை மற்றும் கிட்டத்தட்ட மூன்று மீட்டர் (10 அடி) நீளம் கொண்ட ஃபியோமெசிடஸ் அனுபிஸ் உயிரினம் தன் இரையை வேட்டையாட வலுவான தாடைகளைப் பெற்றிருந்தது என 'தி ப்ரொசீடிங் ஆஃப் தி ராயல் சொசைட்டி பி' என்கிற சஞ்சிகையில் கடந்த புதன்கிழமை பிரசுரிக்கப்பட்டு இருந்தது. அந்த திமிங்கலத்தால் நிலத்தில் நடக்கவும், நீரில் நீந்தவும் முடிந்து இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திமிங்கலம் கோப்புப் படம் அந்த உயிரினத்தில் ஒரு பகுதி எலும்புக் கூடுகள், எகிப்து நாட்டில் இருக்கும் ஃபயூம் டிப்ரஷன் என்கிற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை மன்சோரா பல்கலைக்கழகத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர். தற்போது பாலைவனமாக இருக்கும் எகிப்தின் மேற்குப் பகுதிகள், ஒரு காலத்தில் கடலால் சூழப்பட்டு இருந்தது. அப்பகுதி புதை படிவங்கள் அதிகம் கிடைக்கும் இடமாக இருக்கிறது. "ஃபியோமெசிடஸ் அனுபிஸ் என்பது ஒரு முக்கியமான புதிய திமிங்கல இனம், இந்த கண்டுபிடிப்பு எகிப்து மற்றும் ஆப்பிரிக்காவின் வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களில் முக்கியமானது" என இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியரான அப்துல்லா கோஹர் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார். மனித பற்களுடன் காணப்பட்ட ஆட்டுத்தலை மீன் மீனவர் யூட்யூபர் ஆனது எப்படி: 'உங்கள் மீனவனின்' சாதனை கதை இதை விட ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், இப்படி கால்கள் கொண்ட திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்பது தான். ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஃபியோமெசிடஸ் அனுபிஸ் உயிரினம், நிலத்திலும் நீரிலும் வாழ்ந்த திமிங்கலங்களில் ஆரம்ப காலத்தவையாக கருதப்படுகிறது. திமிங்கலங்கள் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தெற்காசியாவில் பரிணாம வளர்ச்சி கண்டு உருவானதாக கருதப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு வரலாற்றுக்கு முந்தைய கால உயிரினங்களைக் குறித்து ஆராயும் ஒரு அணி பெரு நாட்டில் விரல்கள் ஒட்டிய நிலையில் இருக்கும் நான்கு கால்கள் கொண்ட, 43 மில்லியன் ஆண்டுகள் பழமையான திமிங்கல புதை படிவத்தை கண்டு பிடித்தார்கள் என்பது நினைவுகூரத்தக்கது. bbc.com
 8. காவலூர் அகிலன். Yesterday at 7:54 AM · தமிழர் நாங்கள் அங்கர் இல்லை என்றால் மல்லித் தண்ணீரையும் கோப்பியையும் பருகுவோம் சீனி இல்லை என்றால் குறைந்த விலையில் உள்ள இனிப்பை வைத்து தேநீரை குடித்துமகிழ்வோம் பாண் இல்லை என்றால் பழங்கஞ்சி கரைத்துச் சாப்பிடுவோம் கோதுமை இல்லை என்றால் பச்சை அரிசிமாவைப் பயண்படுத்திக்கொள்வோம் பெற்றோல் டீசல் இல்லையென்றால் மண்ணெண்னையைப் பயண்படுத்துவோம் வெற்றிலை இல்லை என்றால் துளசி இலையை சப்புவோம் பாக்கு இல்லையென்றால் குரும்பட்டியை கடிப்போம் பீடி இல்லையென்றால் கடதாசியைச் சுற்றிப் புகைப்போம் மூவாயிரம் கொடுத்து தேங்காய்வாங்கியவர்கள் ஆயிரம் கொடுத்து விஸ்கேற் வாங்கியவர்கள் ஆக மொத்தத்தில் எங்களுக்கு இல்லை என்று சொல்லி முடிக்கத் தெரியாது வாழ்வோம் வரலாறு பேசும்படி வாழ்வோம் . வாழ்ந்தோம் வீழ்ந்தோம் என்றில்லாமல் வரலாற்றில் இடம்பிடித்து வீழ்ந்தோம் என்றாகட்டும்.
 9. வர்த்தகர்கள் மற்றவர்களின் நலனிற்காக நெல்லிக்காய் இறக்குமதி செய்து அறா விலைக்கு விற்கும் போது அவர்கள் அக்கறை எங்கே போகிறது....சீனியும் அப்படித் தான்
 10. எமது குடும்பத்தில் ஒரு வருடத்துக்குள், இருவர் இறப்பிற்கு இந்த சீனி தான் காரணம்..
 11. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நந்தன் அண்ணா.
 12. `துர்காவதி என்னும் சிம்ம சொப்பனம்!' - அறியப்படாத இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் கதை சு.கவிதா துர்காவதி இந்தியாவில் சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்தபோது எதற்கும் அஞ்சாமல் ஆங்கிலேயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது இந்தப் பெண் சிங்கம்தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் அதிகம் பேசப்படாத ஒரு பெண், துர்காவதி தேவி. குறிப்பாக இந்தியாவில் சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்தபோது எதற்கும் அஞ்சாமல் ஆங்கிலேயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது இந்தப் பெண் சிங்கம்தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இவரது அதிரடித் தாக்குதல்களால் ஆட்டம்கண்ட ஆங்கிலேயர்கள் இவரை `தி அக்னி ஆப் இந்தியா’ (The Agni of India) என்றே அழைத்தனர். உத்தரப்பிரதேசத்திலுள்ள அலகாபாத் மாவட்டத்தில் 1907-ம் ஆண்டு ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் துர்காவதி தேவி. இவரின் தந்தை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்தவர். துர்காவதியின் தாத்தாவும் பிரிட்டிஷ் அரசில் காவல் அதிகாரியாகப் பணிபுரிந்தார். தந்தையும், தாத்தாவும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்தாலும் அவர்களது வழித்தோன்றலான துர்காவதி அப்படி இருக்கவில்லை. சிறுவயதிலிருந்தே விடுதலை தாகம் உள்ளவராக இவர் வளர்ந்தார். இவருக்கு 11 வயது ஆகும்போது செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்த பக்வதி சரண் வோக்ரா என்கிற 15 வயது இளைஞருடன் திருமணம் நடந்தது. துர்காவதியைப் போல பக்வதி சரண் வோக்ராவும் தேச விடுதலை குறித்த பெருங்கனவுடன் இருந்ததைக் கண்டு அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. பகத்சிங் குறிப்பாக பக்வதி வோக்ரா, மாவீரர் பகத்சிங்கை அடிக்கடி சந்தித்தார். ஆனால் ஒரு பணக்கார வீட்டுப் பையன் இப்படி சுதந்திர தாகம் கொண்டு திரிவதை பலரும் சந்தேகக் கண்கொண்டே பார்த்தனர். `ஒருவேளை இவன் பிரிட்டிஷ் அரசின் கைக்கூலியோ’ என்றும் எண்ணினர். ஒருகட்டத்தில் இவரின் உண்மையான சுதந்திரப் பற்று புரியவர, அதன் பின்னரே பகத்சிங், சந்திரசேகர் ஆஸாத் போன்ற வீரர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஹிந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிபப்ளிக் அசோஷியேஷன் (Hindustan Socialist Republican Association) என்கிற புரட்சி அமைப்பில் இவர் சேர்த்துக்கொள்ளப்பட்டார். காலங்கள் மெள்ள நகர்ந்தன. துர்காவதி ஒரு குழந்தைக்குத் தாயானார். துர்காவதிக்கும் பக்வதி சரண் வோக்ராவுக்கும் இடையில் கணவன் - மனைவி என்கிற உறவையும் தாண்டி அற்புதமான ஒரு நட்பு வளர ஆரம்பித்தது. குறிப்பாக கணவரின் சுதந்திரப் போராட்ட முன்னெடுப்புகளை அருகிலிருந்து பார்த்துப் பார்த்து தாமாகவே அந்தப் புரட்சிக் குழுவில் தன்னையும் இணைந்துகொண்டார் துர்காவதி. கணவனும் மனைவியுமாக இணைந்து துப்பாக்கியைப் பயன்படுத்தப் பயிற்சி எடுத்தனர். முதற்கட்டமாக போராட்டக்காரர்களுக்குத் தேவையான உதவிகளையும், ஒத்துழைப்பையும் கொடுக்க ஆரம்பித்தார் துர்காவதி. இதன் காரணமாக, ஹிந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிபப்ளிக் அசோஷியேஷன் குழுவில் இருந்த மற்ற உறுப்பினர்கள் துர்காவதியை `துர்கா பாபி', அதாவது துர்கா அண்ணி என்றே அழைக்க ஆரம்பித்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரப் போராட்டங்களில் துர்காவதியின் பங்கு, நம்மை மெய்சிலிர்க்க வைப்பது. அது பற்றி பார்ப்போம்... அச்சமின்றி மாறுவேடத்தில் பயணம்! பிரிட்டிஷ் காவல் அதிகாரி ஜான் சாண்டர்ஸ் என்பவரை கொன்ற பிறகு 1928-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் நாள் பகத்சிங்கும், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரும் துர்காவதியின் வீட்டிற்குச் சென்றனர். நடந்ததை அறிந்துகொண்ட துர்காவதி பகத்சிங்கை கல்கத்தாவிற்குச் செல்லுமாறு ஆலோசனை வழங்கினார். இதன்படி பகத்சிங் ரயிலில் கல்கத்தாவிற்குப் பயணித்தார். கூடவே அவரின் மனைவி வேடத்தில் துர்காவதியும் அந்த ரயிலில் பயணம் செய்தார். மற்றுமொரு சுதந்திரப் போராட்ட வீரரான ராஜ்குரு இவர்கள் இருவரது சேவகனாகப் பயணப்பட்டார். இதில் வியப்பான செய்தி என்னவென்றால், இவர்கள் பயணித்த அதே ரயிலில் சுமார் 500 காவலர்களும் பயணித்தனர். இத்தனை பேரின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு பகத்சிங்கை கல்கத்தாவிற்கு பத்திரமாகக் கொண்டுசேர்த்த துர்காவதியின் நெஞ்சுரம் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது. சுதந்திரப் போராட்டம் Also Read இந்திய தேசியக்கொடி எத்தனைமுறை மாற்றியமைக்கப்பட்டது என்று தெரியுமா? வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயிற்சி! கல்கத்தாவை அடைந்த பகத்சிங், அதுல் கங்குலி, ஜி.என்.தாஸ், பினிந்தர் கோஷ் ஆகிய தனது வங்காள சகாக்களை துர்காவதியுடன் சென்று சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பகத்சிங் உள்ளிட்ட தனது சகாக்களுடன் சேர்ந்து துர்காவதியும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் பயிற்சியைப் பெற்றார். சகாக்களைக் காப்பற்றப் போராட்டம்! இவை எல்லாவற்றுக்கும் மேலாக பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவருக்கும் ஆங்கிலேய அரசு தூக்குத் தண்டனை விதித்ததும் அதிர்ச்சியடைந்த துர்காவதி தன்னிடமிருந்த நகைகள் அனைத்தையும் மூவாயிரம் ரூபாய்க்கு விற்று அப்பணத்தின் உதவியோடு அவர்களை தூக்குத் தண்டனையிலிருந்து வெளியே கொண்டுவர முயற்சித்தார். பிற விடுதலைப் போராட்ட வீரர்களைச் சந்தித்து உதவி கேட்டும் மன்றாடினார். ஆனால் இவை எதற்கும் செவிசாய்க்காத ஆங்கில அரசு அவர்கள் மூவரையும் தூக்கிலிட்டது. இச்சம்பவத்தின் ஊடே மற்றுமொரு வேதனையான சம்பவமும் நிகழ்ந்தது. அதாவது தூக்குத் தண்டனை பெற்று பகத்சிங் சிறையில் இருந்தபோது சிறைச்சாலையில் வெடிகுண்டு வீசி பகத்சிங்கை தப்பிக்க வைக்கும் முயற்சியில் துர்காவதியின் கணவர் பக்வதி வோக்ரா இறங்கினார். அதற்காக மாதிரி வெடிகுண்டைத் தயாரித்து அதை லாகூர் நகருக்கு அருகிலிருந்த ராவி நதிக்கரையில் வைத்துச் சோதித்துப் பார்த்தபோது ஏற்பட்ட விபத்தில் பக்வதி வோக்ரா தனது உயிரை இழந்தார். இது துர்கா பாபிக்குப் பேரிழப்பு என்றாலும் அவர் கலங்கிவிடவில்லை. ஆங்கிலேயரின் வஞ்சத்தால் வீழ்ந்த தனது சகாக்களுக்காவும், வீரர்களைக் காப்பற்றுவதற்காக தனது இன்னுயிரையும் இழந்த கணவருக்காவும் இன்னும் தீவிரமாகப் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டார். குறிப்பாக பகத் சிங் மற்றும் சகாக்களைத் தூக்கில் போடக் காரணமாக இருந்த பஞ்சாபின் முன்னாள் கவர்னரான லார்ட் ஹெய்லி என்பவரை பழிவாங்கத் துடித்தார் துர்காவதி. இதற்கான முயற்சியில் இவர் இறங்கியபோது அந்த கவர்னர், தப்பிவிட கவர்னரின் உதவியாளர்கள் துர்காவதியின் தாக்குதலால் காயமடைந்தனர். இதற்காகக் கைது செய்யப்பட்ட துர்காவிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைத்தது. இப்படி இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையே அர்ப்பணித்த துர்காவதி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் நகரில் ஒரு சாதாரணப் பிரஜை போல இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தார். லக்னோவில் உள்ள புரானா கிலா என்கிற பகுதியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்காக பள்ளி ஒன்றையும் நடத்தினார். இவர் நடத்திவந்த பள்ளி தற்போது `சிட்டி மான்டிசோரி ஸ்கூல்’ (City Montessori School) என்று அழைக்கப்படுகிறது. இவைதவிர தன்னிடமிருந்த நிலத்தையும் சமூகப் பணிகளுக்காகத் தானமளித்துவிட்ட இவர் 1999-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி தனது 92-ம் வயதில் மறைந்தார். Indian Flag Image by Pexels from Pixabay Also Read சுதந்திர இந்தியா 75... தேசம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய 22 அரசியல் நிகழ்வுகள்! ஆனால் தேச விடுதலைக்காக தனது ஒட்டுமொத்த வாழ்வையே அர்ப்பணித்த இவரது மறைவு குறித்த செய்திகள் தொலைக்காட்சிகளிலோ, அல்லது மற்ற செய்தி ஊடகங்களிலோ தனிச்சிறப்புடன் இடம்பெறவில்லை. இவை குறித்து விரிவாகப் பேசப்படவுமில்லை. இவ்வளவு ஏன்? லக்னோ, மும்பை, காசியாபாத் போன்ற நகரங்களில் இவரது நினைவைப் போற்றும் எந்த ஒரு செயலும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயமே. சமையலறை மட்டுமே உலகமாக, கணவனுக்குப் பின்னால் செல்வதை மட்டுமே பாக்கியமாகக் கருதி இந்தியப் பெண்கள் வாழ்ந்த அந்தக் காலகட்டத்தில் கணவரின் சகாவாகப் பயணப்பட்டு, தனது துணிச்சலான, புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் ஆங்கிலேயரை நிலைகுலையவைத்த துர்காவதியின் உத்வேகமூட்டும் வரலாற்றை, இந்தியர்கள் ஒவ்வொருவரும் அறியவேண்டியது அவசியம். இதன் முதற்கட்டமாக இவரது வாழ்க்கையைத் திரைப்படமாக ஆவணப்படுத்தினால் அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சென்று சேரும் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா? `துர்காவதி என்னும் சிம்ம சொப்பனம்!' - அறியப்படாத இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் கதை | A Story of brave indian woman freedom fighter Durgawati Devi (vikatan.com)
 13. உண்மையில் எவ்வளவு மக்கள் 25 ரூபாய் குடுத்து முகக்கவசம் வாங்கிப் பாவிப்பார்கள்..
 14. தடுப்பு}சிகளைப் போடுங்கள் என கேட்கிறார்களா? இல்லை போடாமல் வாருங்கள் எங்களிடம் புதைப்பதற்கு இடம் இருக்கிறது என விளம்பரம் செய்கிறார்களா? எல்லாம் பார்க்கின்ற பார்வையில் இருக்கிறது... Nehru Gunaratnam இதை என்னவென்று சொல்வது......
 15. செஞ்சோலை சிறார்களின் நினைவஞ்சலி இறப்பு - 14 AUG 2006 15ம் ஆண்டு நினைவஞ்சலி
 16. ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால் தாலிபன்கள் அதிவேகமாக ஆப்கனை கைப்பற்றி வருகிறார்கள். 2021 செப்டம்பர் 11ஆம் தேதிக்கும் ஒட்டுமொத்த அமெரிக்க படையையும் ஆப்கனில் இருந்து வெளியேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புகிறார். ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கியதில் இருந்து நேட்டோ மற்றும் அமெரிக்கா எவ்வளவு செலவழித்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம். ஆப்கானிஸ்தானில் புகுந்த மேற்குலகப் படைகள் படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க்ப் படைகள் எண்ணிக்கை இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அக்டோபர் 2001ல் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் புகுந்தன. தாலிபன்களை எதிர்கொள்ள பில்லியன் டாலர் கணக்கில் அமெரிக்கா பணத்தை வாரி இரைத்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையும் 2011ஆம் ஆண்டு அதிகபட்சமாக 1,10,000 பேரைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஆண்டு வெறும் இது 4,000 துருப்புகளாகவும், தற்போது 650 துருப்புகளாகவும் சுருங்கி இருக்கிறது. அவர்களும் அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க அங்கு இருக்கிறார்கள். நேட்டோ படைகள் இருந்தாலும், அமெரிக்காதான் ஆதிக அளவில் ஆட்களை களமிறக்கி இருந்தது. செலவழித்தது எவ்வளவு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கன் தேசிய ராணுவத்துக்கு பயிற்சியளித்த நேட்டோ 2010 - 2012 காலத்தில், ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட துருப்புகளைக் கொண்டிருந்த காலத்தில், ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வரை செலவழித்தது அமெரிக்கா. அதிரடி தாக்குதல் திட்டங்களிலிருந்து ராணுவம் தன் கவனத்தை திசை திருப்பி, ஆப்கன் படைகளுக்கு பயிற்சி வழங்கத் தொடங்கிய பின் செலவுகள் கணிசமாக குறைந்தன. கடந்த 2018ஆம் ஆண்டு, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் சுமார் 45 பில்லியன் டாலர் செலவழித்ததாக மூத்த பென்டகன் அதிகாரி ஒருவர் அமெரிக்க காங்கிரசிடம் கூறியுள்ளார். உலகத்தால் கைவிடப்படும் ஆப்கானிஸ்தான் - போர்க்களத்தில் இருந்து ஒரு இந்திய பெண் செய்தியாளரின் பார்வை கந்தஹாரை கைப்பற்றிய தாலிபன் – பல லட்சம் மக்கள் பட்டினியால் வாடும் பரிதாபம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கணக்குப் படி, 2001 - 2019 வரையான காலத்தில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்காக 778 பில்லியன் டாலரைச் செலவழித்திருக்கிறது. அது போக அமெரிக்காவின் உள் துறை அமைச்சகம் போன்ற மற்ற சில அமெரிக்க முகமைகள் எல்லாம் சேர்த்து சுமார் 44 பில்லியன் டாலரை ஆப்கானிஸ்தான் போருக்கு செலவழித்து இருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் 822 பில்லியன் டாலர். இதை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் கடந்த 18 ஆண்டுகளில் சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் வருகிறது என ஒரு புரிதலுக்காக வைத்துக் கொள்ளலாம். 18 ஆண்டுகள் என்பதால் ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மாற்றம் கண்டு இருக்கும் என்பது வேறு. இதை எல்லாம் தாண்டி, ஒவ்வொரு அமெரிக்க முகமைகள் மற்றும் அமைச்சகங்கள் கணக்கு வழக்குகளை பராமரிக்கும் முறை வித்தியாசமாக இருக்கும் என்பதால் சரியாக எவ்வளவு செலவானது என கணக்கிட்டுச் சொல்வது கடினமானது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து பின் வாங்கினாலும் அரசுப் படைகளுக்கு ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் வீதம், 2024ஆம் ஆண்டு வரை உதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. ஏற்கனவே இந்த ஆண்டில் நேட்டோ 72 மில்லியன் டாலர் அளவிலான சாதனங்கள் உள்ளிட்டவற்றை தந்திருக்கிறது. பணம் எப்படி செலவானது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் மறுகட்டமைப்பில் உதவி வரும் அமெரிக்கா கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ஆபரேஷன்கள், ராணுவ வீரர்களின் உணவு, உடை, மருத்துவ வசதிகள், அவர்களுக்கான சிறப்பு ஊதியம், சலுகைகளுக்கே அதிகம் செலவானது. கடந்த 2002ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா இதுவரை சுமார் 143.27 பில்லியன் டாலரை ஆப்கானிஸ்தான் மறுகட்டுமானத்துக்காக செலவழித்துள்ளது. அதில் 88.32 பில்லியன் டாலர் வரை ஆப்கானிஸ்தானின் ராணுவத்தைக் கட்டமைக்க செலவழிக்கப்பட்டது. இதில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவம் மற்றும் காவலர்கள் படை இரண்டுமே அடக்கம். கிட்டத்தட்ட 36 பில்லியன் டாலர் அரசு நிர்வாகத்துக்கும், வளர்ச்சிக்கும் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் சிறு சிறு பகுதிகள் போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கைக்கும், சில மனிதாபிமான உதவிகளுக்கும் செலவழிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தியது, வீணடித்தது, மோசடி செய்தது என மே 2009 முதல் டிசம்பர் 2019 வரை கிட்டத்தட்ட 19 பில்லியன் டாலர் வீணடிக்கப்பட்டிருப்பதாக அக்டோபர் 2020-ல் அமெரிக்க காங்கிரஸில் தாக்கல் செயப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா - BBC News தமிழ் ஏற்கனவேு பதியபட்ட செய்தியாக இருந்தால் நீக்கி விடவும்..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.