Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்! written by admin November 27, 2025 யாழ். பல்கலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கொடிகாமம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின் தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். கோப்பாய் துயிலுமில்லம்! யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். நல்லூர் நினைவாலயத்தில் யாழ்ப்பாணம் ,நல்லூர் மாவீரர் நினைவலையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் பொது சுடரினை ஏற்றி வைத்தார். எள்ளங்குளம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார். சாட்டி துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , தீவகம் சாட்டி துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலம் பொது சுடரினை ஏற்றி வைத்தார். மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று (27) வியாழன் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. -தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) மாலை மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது . மாலை 6.5 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். https://globaltamilnews.net/2025/223152/
  2. லவ் பெயிலியர் அதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பதிவொன்று பார்த்தேன்..🤔
  3. அனைத்து மக்களுக்காகவும் மரணித்த மா வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.🕯️🙏
  4. உங்கள் வீட்டு குட்டி புது வரவுக்கு வாழ்த்துக்கள்.🖐
  5. இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு written by admin November 25, 2025 தமிழ் திரையுலகில் இசையமைப்பாளா் இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை (copy right) குறித்த சா்ச்சை எப்போதும் சூடான விவாத பொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது தம்பியும் பிரபல இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத் தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாக விளக்கம் அளித்துள்ளார். இளையராஜா தன்னுடைய பாடல்களை சினிமாவில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்டுத் தொடர்ந்து வழக்குப் போடுவது குறித்து கங்கை அமரனிடம் கேட்கப்பட்ட போது . ‘ஆமாம் அண்ணன் கேட்பதில் எந்த தவறும் இல்லையே! அண்ணன் என்ன எதிர்பார்க்கிறார்? அவருடைய பாடல்களை இப்போதுள்ள படங்களில் பயன்படுத்தும் போது ‘இந்தப் பாடல் இளையராஜாவுக்குச் சொந்தமானது’ என்று ஒரு நன்றிக் குறிப்பு போடத்தானே கேட்கிறார்? அப்படிப் போடுவதில் என்ன தப்பு இருக்கிறது? அதைச் செய்யாதவர்கள் இடம்தான் இளையராஜா காப்புரிமை கேட்கிறார்’ என தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். மேலும் ஒரு பாடலை பயன்படுத்தும் போது ஒரு சில வரிகளை மட்டும் பயன்படுத்தினால் அது காப்புரிமை பட்டியலில் வராது. ஆனால் ஒரு பாடலை அப்படியே முழுவதுமாக பயன்படுத்தும் போது அது கண்டிப்பாக காப்புரிமை என்றுதானே வரும்? ‘ பொட்டு வெச்ச தங்கக்குடம், சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா’ போன்ற பாடல்களை எல்லாம் சிலர் பயன்படுத்துறாங்க. குறைவாகப் பயன்படுத்தினால் கூடப் பரவாயில்லை . முழுப் பாடலையும் பயன்படுத்தினால் தான் பிரச்சனையே வருகிறது’ என கங்கை அமரன் தன் வாதத்தை உறுதிப்படுத்தியுள்ளார். https://globaltamilnews.net/2025/223052/
  6. சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்? written by admin November 23, 2025 கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. விரைவில் விசாரணை நடத்தவும் எஸ்ஐடி திட்டமிட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்கள் 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் தங்க முலாம் பூசி மீண்டும் அதனை மீண்டும் கோயிலுகு கொண்டு சென்றனர். அப்போது அவற்றின் எடை குறைந்ததாக குற்றம் சாட்டு எழுந்தது.. மேலும் அந்த சிலைகளில் இருந்த தங்கம் திருடப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டு கேரள சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் அரசு மீதும், தேவசம் போர்டு மீதும் குற்றம் சாட்டின. இந்த நிலையில் உரிய விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தங்க கவசங்களை புதுப்பிக்கும் செலவை ஏற்றுக் கொண்ட பெங்களூர் தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் முதலில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்திலுள்ள டவுனில் நகைக்கடை நடத்தி வரும் தங்க வியாபாரியான கோவர்தன் நகைக்கடையில் இருந்து 478 கிராம் தங்க நகை மீட்கப்பட்டது. இதற்கிடையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகர் ஜெயராம் மீதும் சர்ச்சை எழுந்தது. 2019-ம் ஆண்டு சபரிமலை ஐய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை வைத்து சென்னையில் நடைபெற்ற ஒரு பூஜையில் அவர் கலந்து கொண்டதே இந்தக் குற்றச்சாட்டுக்கு காரணமாக அமைந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஜெயராம்: “கடந்த 50 ஆண்டுகளாக நான் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தராக உள்ளேன். கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை காட்சிப்படுத்திய பூஜையில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில்தான் அந்த பூஜையில் பங்கேற்றேன். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அது தற்போது இப்படி ஒரு பிரச்சினையை தரும் என நான் நினைத்ததில்லை. உண்மை வெளிவரட்டும். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் வாசு, பத்மகுமார் மற்றும் சிலர் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வுக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜெயராமிடம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட இருப்பதாக வெளியாகும் தகவல் சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Global Tamil Newsசபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத...கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத்…
  7. இன்னும் பல வருடங்கள் ஆயுள், ஆரோக்கியத்தோடு இருவரும் வாழ வேண்டும்.இதை விட வேறு எப்படி சொல்வது.,மிகவும் நெகிழ்வான சந்திப்பாக அமைந்திருக்கும்.!
  8. ஒரு நாட்டுக்கு முதல் தடவையாக வரும் ஒருவர் அதுவும் எங்கள் நாட்டிலிருந்து வருபவர்கள் எதிர் நோக்கும் சட்ட சிக்கல் பற்றி உண்மையாகவே உங்களுக்கு தெரியாது தானா.?.வைத்தியர் அர்ச்சனா ஊர் பாரளமன்றில் எப்படி பேசினாலும் அவர்களுக்கும் பழகி விட்ட போலும், ஆனால் ஒரு புதிய நாட்டுக்கு வரும் போது அனைத்து நடை முறைகளை கடைப்பிடிக்க வேணும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும், அவருக்கும் தெரிந்திருக்கும்.வேணாம்..சில இடங்களில் எழுதுவது சுத்த வேஸ்ட்.
  9. நான் ஐ போண் வழியாக வந்து எழுதி பார்த்து விட்டு தான் இதனை எழுதுகிறேன்.நீங்களும் உங்கள் போண் ஊடாகவே யாழில் உள் வந்து எழுத வேண்டிய பகுதிக்கு கீளே உள்ள பெட்டியில் எழுதி விட்டு, மேலே உள்ள பெட்டியில் கொப்பி பேஸ்ட் செய்யுங்கள்.உங்களுக்கு இலகுவாக இருக்கும் என்பதற்காக இதை எழுதுகிறேன்.மற்றப்படி ஒன்றுமில்லை.
  10. அங்கு ஓரிருவர் கதைத்தால் உடனே கட்சி அரசியலாக்கி இந்த வார கட்டுரைக்கு முதலே எழுதி வைத்திருந்தாரோ? நிலாந்தன்.எடிட் பண்ணும் போது கொஞ்சம் பிழை வருகிறது..பொறுத்துக் கொள்ளுங்கள் ஈழப்பிரியன் அய்யா.மற்றும் ஏராளன். இவரை பற்றி இங்கு ஏதாவது எழுதினால் நமது முகப் புத்தக பக்கம் பெரிய பந்தி, பந்தியாக எழுதி போட்டு விட்டு இருந்து விடுவார்.(அதுவும் இன்பொக்சில்).கடந்த கால அரசியல் , நமக்கே கொஞ்சம் வெறுப்பை தருவது போல் எழுதி போட்டு விட்டுவார்..இப்போ கொஞ்சக் காலத்திற்கு முன் அப்படி ஒன்று வந்து கிடந்தது நான் அதனை நீக்கி விட்டேன்..கமலகாசன் ஒரு திரைப்படததில் பத்திரிகை நிருபராக வருவாரே.இவர்களுக்கு இருக்க கூடிய மரியாதை அவ்வளவு தான்.
  11. நான் இணைப்பதை ஓரு சிலரவாது பார்க்கிறீர்களே என்று சந்தோசம் சுவியண்ண..🤭
  12. Posted inStory “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி Posted byBookday04/11/2025No CommentsPosted inStory “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி பப்பர …. பப்பர …. பப்பர … ஒலிச் சத்தம் மாணவர்களின் காதுகளை கிழித்தது. சவ்வு மிட்டாய்காரர் தகரத்தால செய்யப்பட்ட நீண்ட புனல் போன்ற வடிவில் செய்யப்பட்ட ஒலி வாங்கிக்கொண்டு ஊதி கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மாணவர்கள் காசிருப்போர் படையெடுத்து வந்தனர் சவ்வு மிட்டாய் வாங்கிட. ராமண்ணாவின் சவ்வு மிட்டாய்க்கு பெரியவர் முதல் சிறியவர் வரை அடிமை. அவரின் ஊதல் சப்தம் கேட்டாலே பலர் அவர் முன் குவிந்திடுவர் காரணம் அவரது சவ்வு மிட்டாய் மட்டுமல்ல. அந்த சவ்வு மிட்டாயை சுற்றி இருக்கும் மூங்கில் மேலே இருக்கும் பொம்மையின் கைத்தாளத்தை வேடிக்கை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் கூடிவிடும். ராமண்ணா மிகவும் நல்லவர். அவரின் பரம்பரையே சவ்வுமிட்டாய் தொழில் செய்பவர்கள். ராமண்ணா காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சவ்வுமிட்டாய் தயாரிக்க ஆரம்பித்துவிடுவார். சீனி பாகு, லெமன், கலர் முதலியவற்றை சரியான முறையில் கலந்து பக்குவப்படுத்தி அதை இழுத்துப் பார்த்து நீண்ட பெரிய மூங்கிலிலே சுற்றி விடுவார். அதன் மீது ஈக்கள் புகாத வண்ணம் தரமான சவ்வுக்காகிதம் கொண்டு சுற்றிவிட்டு மூங்கிலின் மேலே அழகிய பொம்மை ஒன்றை வைத்து அதற்கு சட்டை, பாவாடை முதலியவற்றை அணிவதோடு பொம்மை காதினில் கடுக்கணும் மூக்கினில் மூக்குத்தியும் பொம்மையின் இரு கைகளிலும் வட்டமான ஜால்ரா கருவி (சிஞ்சா) யை பொருத்திவிட்டு மூங்கிலை தனது தோளிலே சுமந்தபடி 8 மணிக்கெல்லாம் ஆரம்பப் பள்ளியின் வாசலுக்கு வந்து விடுவார். அதன் பின்பு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊர் சுற்றுவது என்று வாடிக்கையாக கொள்வார். ராமண்ணா காலை 8 மணிக்கு ஆரம்பப் பள்ளி வாசல் வந்தவுடன் அவரது பப்பர பப்பர ஓசை முழங்கிடும். ஆரம்பப்பள்ளியின் அருகே ஒருமணி நேரம் வியாபாரம். உணவு இடைவேளையின் போது உயர்நிலைப்பள்ளிஅருகே வியாபாரம் அதன் பின்பு ஊர் சுற்றி வியாபாரம் என வாடிக்கையாக வியாபாரம் செய்பவர். இவரின் ஊதல்சத்தம் கேட்டாலேசிறுவர் சிறுமியர் ஆர்வத்துடன் வெளியே வருவர். ராமண்ணா ராமண்ணா எனக்கு ஒரு வாட்ச், அன்னம், ரயில், வாத்து என மாணவர்கள் அனைவரும் அவரிடம் துளைத்துக் கொண்டு கேட்பர். ராமண்ணா ஒரு மிட்டாய்க்கு ஒரு விலை வைத்திருப்பார் 10 பைசா 20 பைசா 25 பைசா என டிசைனுக்கு தகுந்தவாறு சவ்வு மிட்டாயின் விலை அதிகரிக்கும். அதிகமாக வாட்ச் விற்பனையாகும். ஓசி மிட்டாய் கேட்டு ராமண்ணாவை குழந்தைகள் நச்சரிக்கும். சிறிது சவ்வுமிட்டாயைப் பிய்ந்து அவர்களது கன்னங்களில் ஒட்டி விடுவார். எந்தவித கள்ளம், கபடம் இல்லாது. குழந்தைகளைக் கூட அய்யா அம்மா என்றுதான் அழைப்பார். குழந்தைகளுக்கு ராமண்ணா மீது தனிப்பிரியம் இதுபோன்றுதான் உயர்நிலைப் பள்ளியிலும் விற்பனை.. அதோடு மட்டுமல்லாது ஊர் முழுவதும் வலம் வருவார். ஆண்கள், பெண்கள் என எல்லோரும் தங்களுக்குப்பிடித்த சவ்வுமிட்டாயை விரும்பிச் சாப்பிடுவர். யாரிடமும் கடுகடு என்று விழமாட்டார். யாராவது பையன் ராமண்ணா கடன் கொடுங்கள் நாளைக்கு தருகிறேன் என்றால் தம்பி இந்த வயதில் கடன் வாங்காதீர்கள் அது நல்ல பழக்கம் இல்லை. உங்களுக்கு சவ்வுமிட்டாய் வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அன்புடன் இலவசமாக கொடுப்பார்.இதுவே அவர் வாழ்வின் வாடிக்கையாகிப்போனது. ஒருநாள் காலை தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு காலை 8 மணிக்கு தனது பப்பரப் பப்பர ஓசையை குழந்தைகளுக்கு அறிவித்தார். குழந்தைகள் வழக்கம்போல் சவ்வுமிட்டாய் வாங்க வந்தன. மூங்கிலில் உள்ள குச்சியில் உள்ள பொம்மையை கைத்தாளம் போட வைத்தார். குழந்தைகளும் அந்த பொம்மை போல கைத்தளம் போட்டுக்கொண்டு ஆடத் தொடங்கினார்கள். ராமண்ணா சவ்வு மிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்தபோதே நிலை தடுமாறி கீழே விழுந்தார் சவ்வுமிட்டாய் மூங்கில் கட்டை “டம்“ என கீழே விழுந்தது. சில குழந்தைகள் பயந்து போய் ஓட்டம் பிடித்தன. சில குழந்தைகள் ராமண்ணா ராமண்ணா என்று எழுப்பி பார்த்தனர் .அவர் எழுந்தபாடில்லை. குழந்தைகள் ஆசிரியைரை நோக்கி படையெடுத்தனர்.சார் ராமண்ணா கீழே விழுந்து விட்டார் சார் அவருக்கு என்னாச்சு என்று தெரியவில்லை. குழந்தைகள் மாணிக்கம் ஆசிரியரிடம் சொல்ல அவருடன் கமலா டீச்சரும் சென்றார்.. மாணிக்கம் அருகில் வந்து அவரது கை கால்களை கசக்கி விட்டனர். ஒன்றும் உணர்வில்லை. சுற்றிவர குழந்தைகள் நின்று கொண்டு அழுதவாறு இருந்தன. ராமண்ணாவிற்கு ஒன்றுமில்லை அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனால் சரியாயிடும். நீங்க எல்லோரும் அவரவர் வகுப்பிற்கு போங்க கமலா டீச்சர் அறிவுரை. மனமில்லாமல் கண்கலங்கியவாறே குழந்தைகள் வகுப்புக்குச் சென்றனர். சார் முதல்லே ராமண்ணா வீட்டிற்கு தகவல் தெரிவியுங்கள். ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யுங்கள் மதிவண்ணன் ராமண்ணா குடும்பத்திற்கு தகவல் தந்த பின்பு பள்ளியின்அருகில் தொலைபேசி உள்ள வீட்டிற்குச்சென்று ஆம்புலன்ஸிற்கு போன்செய்தார்.. சிறிது நேரத்திற்கு பின்பு ராமண்ணாவின் உறவுகள் அனைத்தும் பதறி அடித்தபடி பள்ளிக்கு அருகில் வந்தனர். ஆம்புலன்சும் வந்தது. சார் யார் போன் செய்தது? நான் தான் சார். என் பெயர் மாணிக்கம் இந்த ஸ்கூல் டீச்சரா ஒர்க் பண்றேன். மாணிக்கம் அண்ணன் சவ்வுமிட்டாய் வித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து விட்டாருன்னு குழந்தைகள் வந்து சொன்னாங்க அதான் உடனே உங்களுக்கு கால் பண்ணினேன் ஆம்புலன்ஸில் வந்த நர்ஸ் உதவியாளர்கள் ராமையாவை தொட்டுப் பார்த்தார்கள். சார் உயிர் போய் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு மேலே ஆகிருச்சு மாரடைப்பால் உயிர் பிரிஞ்சிடுச்சு. ஆக வேண்டிய காரியத்தை குடும்பத்தில் உள்ளவரிடம் சொல்லி பார்க்கச் சொல்லுங்க. இது இயற்கை மரணங்கிறதுனாலா தாரளமா பிணத்தை வீட்டுக்கு எடுத்து சொல்லுங்க இருந்தாலும் சில பார்மாட்டிகளை முடித்து தருகிறோம். ராமண்ணாவின் மனைவி, மகன் உறவினர் என கதறி அழுதனர். பள்ளிக்கூடம் விடுமுறை அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஏ.இ.ஓ விடம் அனுமதி வாங்கி பள்ளிக்கு விடுமுறை அளித்தார். குழந்தைகள் அழுது கொண்டே தங்களின் வீட்டிற்கு சென்றனர் ராமண்ணாவின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. குழந்தைகள் கனத்த இதயத்துடன் அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர். மாலை ராமண்ணாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. சுடுகாடு எடுத்துச் செல்லப்பட்டது. நீ இறந்த பின்பு உன் பின்னால் வரும் கூட்டமே உன்னை முடிவு செய்யும் என்பார். முஃ ப்தி ஓமர். அதுபோல ராமண்ணாவின் இறுதி சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இவற்றிற்கெல்லாம் காரணம் ராமண்ணாவின் நல்ல உள்ளமும் அவரின் சவ்வுமிட்டாய் ருசியும் தான். மறுநாள் காலை எட்டு மணி ராமண்ணாவின் “ பப்பரப் பப்பர“ ஒலி ஏதும் கேட்கவில்லை. குழந்தைகள் அவர் விற்கும் இடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ராமண்ணா மிட்டாய் செய்து தருவது போன்றும் அந்த பொம்மை தாளமிடுவது போன்ற காட்சிகள் அந்த குழந்தைகளின் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. ஒவ்வொருவராக வந்து அந்த இடத்தை பார்த்துவிட்டு அழுதபடியே பள்ளிக்குள் சென்றனர். இப்படியே ஒரு மாதம் கழிந்தது திடீரென்று மீண்டும் “பப்பரப்பப்பர“ சத்தம் குழந்தைகளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஓடிவந்து பள்ளியின் நுழைவாயில் கேட்டருகே வந்து நின்றனர். ராண்ணாவின் மகன் முருகன் அந்த இடத்தில் சவ்வுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்தார். குழந்தைகள் அவரிடம் செல்ல தயக்கம் காட்டினர். அவரும் அப்பா போல அய்யாவே அம்மாவே வாங்க என்று அன்பாய் அழைத்தார். குழந்தைகள் ராமண்ணா இறந்து போயிட்டாரா? அவரு யாரு உங்க அப்பாவா? உங்க பேரு என்ன? என்பேரு முருகன். நாங்க உங்களை முருகண்ணா என்று கூப்பிடலாமா? தாரளமாக் கூப்பிடுங்க முருகன்னா எனக்கு ஒரு வாட்ச் கட்டி விடுங்க எனக்கொரு மயில் வேணும் ”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதை உணர்ந்த மகன் முருகன் ஒவ்வொருவருக்கும் கண்ணீர் வடித்தபடியே சவ்வு மிட்டாய் விற்பனையை தொடங்கினார். ராமண்ணா : சாரி முருகண்ணா! நாளைக்கும் வாங்க. அப்பா மாதிரியே சவ்வுமிட்டாய் ருசி அப்படியே இருக்கு என்ற குழந்தைகளின் பேச்சு முருகனுக்கு ஆறுதல் தந்தது. பப்பர பப்பர ஒலி மீண்டும் கேட்டது. குழந்தைப்பொம்மையின் கைதட்டல் சிறார்களை மகிழ்வித்தது. எழுதியவர்: – கு. மணி த/பெ:குருசாமி தெற்குப்புதுத் தெரு சக்கம்பட்டி -625512 ஆண்டிபட்டி வட்டம், தேனி மாவட்டம் https://bookday.in/90s-kids-javvu-mittaikarar-tamil-short-story-written-by-k-mani/
  13. போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர் மீது 25 வழக்குகள் நிலுவையில் - பொலிஸார் Published By: Vishnu 14 Nov, 2025 | 03:19 AM போதைப்பொருளை மீட்க சென்ற பொலிசாரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் புதன்கிழமை (12) இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்து சோதனையிட்ட போது , இளைஞனிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டிருந்தனர். குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனிடமும் போதைப்பொருள் இருப்பதாக பொலிஸாருக்கு இளைஞன் கூறியுள்ளார். அதனை அடுத்து குறித்த இளைஞனை கைது செய்யும் நோக்குடன் , நாவற்குழியில் உள்ள இளைஞனின் வீட்டிற்கு பொலிஸார் சென்ற வேளை, வாளினை காட்டி பொலிசாரை அச்சுறுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை இளைஞனை பொலிஸார் மடக்கி பிடித்து , கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர். மேலதிக விசாரணைகளில் , யாழ்ப்பாணத்தில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் குறித்த இளைஞனுக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். Virakesari.lkபோதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர் மீது...போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர் மீது 25 வழக்குகள் நிலுவையில் - பொலிஸார்
  14. சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியிருக்கலாம் – டீ.வி. சானக Published By: Vishnu 14 Nov, 2025 | 03:12 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நான்கு பேர் கொண்ட சாதாரண குடும்பமொன்றுக்கு உணவுக்காக மாத்திரம் மாதந்தம் 65,500 ரூபா செலவாகும் என்று மூன்று வருடங்களுக்கு முன்னரே மதிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அந்த தொகை ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியிருக்கலாம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டீ.வி.சானக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித வரியும் இல்லை என்று அரசாங்கத்தினால் கூறப்பட்டது. ஆனால் வாசிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் 150 பில்லியன் ரூபா வட் வரி எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 18 வீதத்தில் இருந்து 20 வீதமாக வட் வரி அதிகரிப்பது மட்டுன்றி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் போது அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி இலாபமும் அதிகரிக்கும். மறைமுக வரிகளை குறைப்பதாக கூறிக்கொண்டு வரி அறவிடுவதையே செய்கின்றனர். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கூறப்பட்டது. இதன்படி 56,145 ரூபாவே சாதாரண ஊழியர் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் சனத்தொகை மதிப்பீட்டு திணைக்களத்தில் வீட்டு மற்றும் வருமான செலவு கணக்கெடுப்பு மூன்று வருடங்களாக செய்யப்படவில்லை. இதனை செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற ஆய்வுக்குழு கூறியுள்ள போதும் அது இதுவரையில் நடக்கவில்லை. என்றாலும் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி நபரொருவருக்கு தனது உடலுக்கு தேவையான களரியை பெற்றுக்கொள்வதற்கான உணவுக்காக 16,413 ரூபா மாதத்திற்கு செலவிட வேண்டும். அப்படியாயின் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 65,500 ரூபா மாதத்திற்கு உணவுக்காக மட்டும் செலவிட வேண்டும். இது இப்போது ஒரு இலட்சம் ரூபாவையும் கடந்திருக்கும். அதனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் இது தொடர்பில் சரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவே எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் விவசாயிகளின் பிரச்சினைகளையாவது தீர்க்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்கின்றோம். இல்லையென்றால் அவர்கள் அன்றைய தினத்தில் நுகேகொட நகருக்கு வருவார்கள் என்றார். Virakesari.lkசாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியி...Sri Lanka Podujana Peramuna MP T.V. Sanaka stated that while a family of four’s monthly food expenses were estimated at Rs. 65,500 three years ago, the current cost may now exceed one lakh rupees.
  15. சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம் – சுனில் செனவி Published By: Vishnu 14 Nov, 2025 | 03:06 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்தியாவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மேற்கொள்ளும் யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்துள்ளோம். கடந்த காலங்களில் எத்தனை அரசாங்கங்கள் இருந்தன. எவரும் இதனை கருத்திற் கொள்ளவில்லை. மத விவகாரங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, உரிமைகளை வென்றெடுக்க போராட்டம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சகல பிரச்சினைகளுக்கும் நாங்கள் தீர்வளித்துள்ளோம் என்று குறிப்பிடவில்லை. கட்டம் கட்டமாகவே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிப்போம். அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையில் உள்ள எதிர்க்கட்சியினர் வரவு - செலவுத் திட்டத்தையும் எதிர்ப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல, இந்து மத விவகாரத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளமை குறைவாக உள்ளது என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.இது முற்றிலும் தவறானது. தேசிய தைப்பொங்கல் உற்சவத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடினோம். இந்தியாவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மேற்கொள்ளும் யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்துள்ளோம். கடந்த காலங்களில் எத்தனை அரசாங்கங்கள் இருந்தன.எவரும் இதனை கருத்திற் கொள்ளவில்லை. கோயில் உட்பட மத தலங்கள் புனரமைப்புக்கு பல மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையர் தினத்துக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே மதங்களுக்கு வேறுப்படுத்தப்பட்ட வகையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என்றார். Virakesari.lkசபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து தேசிய நல்ல...Minister of Buddhist Affairs and Religious Affairs, Sunil Senavi, stated that the pilgrimage to Sabarimala Ayyappan Temple in Kerala, India, has been declared a holy pilgrimage. He emphasized that the
  16. ஒருவரது சுய விருப்பின்றி அல்லது அவர்களது குடும்பத்தினரின் விருப்பின்றி தனிப்பட்ட ஒரு தாதியர் கருணைக் கொலை செய்ய இயலாது..இரவு நேரப் பணியாளர்களுக்கு இருக்க கூடிய அதிக மன அழுத்தம் நோயாளிகள் தங்களை தொந்தரவு செய்யாமலிருக்க, சத்தமின்றி தூங்க வைப்பதற்கு தூக்க மருந்துகளை குடுத்திருக்க கூடிய வாய்ப்புக்களே அதிகம்.இங்கு கூட இரவு நேர பணிகளில் ஏற்படும் அழுத்தங்களினால் (அதுவும் பெண்கள்) போதைக்கு அடிமையாகி வேலையை விட்டுட்டு அலைபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
  17. பெரதெனியாவில் புதுமுக மாணவர்களிடம் பகிடிவதை மற்றும் தேவை அற்ற விடையங்களில் தலையிடக் கூடாது என்று ஆரம்ப்பதிலயே கையப்பம் வாங்கியுள்ளார்களாம்.நான் அடிக்கடி கதைத்துக் கொள்ளும் மாணவர் சொன்னார்.செப்ரம்பரில் விரிவுரைகளுக்கு உரிய ஆயத்தங்கள் தொடங்கி இப்போ தொடர்ந்து நடக்கிறது.யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திறமை சித்தி பெற்று பெரதெனியா சென்ற ஒரு மாணவன் எனது பராமரில் இருக்கிறார்.
  18. இங்கே பணி புரியும் அனேகமானவர்கள் வறுமையான குடும்பங்களை சேர்ந்தவர்கள் ,மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்டவர்களாவே இருக்கிறார்கள்.பொதுவாக நான் ஊர் நிலவரங்கள் பற்றியே பார்ப்பதனால் அறிந்திருக்கிறேன்.
  19. களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ. written by admin November 1, 2025 பெண் என்றால் மென்மையின் வடிவம். பொறுமை, அடக்கம், வலிமையற்ற தன்மை, தியாகம் என்று தான் சமூகத்தின் பார்வை காணப்படுகின்றது. சமூகத்தில் பெண்ணின் அடையாளம் என்பது ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவள் இருக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள், அவளது தனிப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அவளது உரிமைகள் என அவளினுடைய பொறுப்பு பன்முகத்தன்மை கொண்டதாக தான் இருக்கின்றது. குழந்தைகளை பெற்றெடுக்கும், வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் பொறுப்புள்ளவளாக பெண் பார்க்கப்படுகின்றாள். அதே மாதிரியாக மனைவி என்ற வகையில் கணவனுக்கு துணைவியாகவும், குடும்பத்தை நிர்வாகிப்பவளாகவும், குடும்பத்தின் நலன் காப்பவளாகவுமே கருதப்படுகின்றாள். பெண்ணானவள் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்துவதற்கு பல வழிகளில் முயற்சிகளை எடுக்கின்றாள். தன்னுடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக எவ்வளவோ காலம் எடுக்கிறது. ஒரு பெண் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்தி கொள்வதற்கு பல எதிர்ப்புகள் வருகின்றன. சுயமாக தன்னை அடையாளப்படுத்துவது என்பது வியக்கத்தக்கதொரு விடயம் என்று தான் கூற வேண்டும். எனது முன்னேற்றத்திற்கு பின்னால் எனது தாய் இருக்கின்றாள், எனது தந்தை இருக்கிறார், எனது சகோதரர்கள் இருக்கின்றார்கள் அல்லது எனது ஆசான் இருக்கின்றார் என்பதை தாண்டி எனது முன்னேற்றத்திற்கு பின்னால் நானும் எனது முயற்சியும் இருக்கின்றது என்பது சிறப்பிற்குரிய விடயம்தான். இப்படியான ஒரு இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருப்பவரே கிளிநொச்சி வட்டக்கச்சி என்கின்ற அழகியதொரு கிராமத்தை இருப்பிடமாக கொண்ட துஷானி சத்தியசீலன். துஷானி அவர்கள் தனது உயர்கல்வியை முடித்துவிட்டு சுயத்தொழில் செய்வதனை ஆர்வம் கட்டிவந்தார். அவருடைய ஆர்வம் பல துறைகளில் திறமை உடையவராக மாற்றியது. பெண் ஒருவர் எவ்வாறான தொழிலை செய்தாலும் அந்தப் பெண் தனக்கென ஒரு கைத்தொழிலை கற்று அதில் தேர்ச்சிகளை பெற்றிருப்பது கட்டாயமானது. அது அவளினுடைய எதிர்காலத்தில் ஏதோ ஒரு இடத்தில் பயன் தருவதாக அமையும். பெற்றோர் தனது பிள்ளைகளினுடைய எதிர்காலத்தை எண்ணி பல கனவுகள் காண்பார்கள். அவை கனவுகளாகி விடாமல் அதனை நிஜமாக்க வேண்டும் என்பதற்காகவே தினமும் ஒவ்வொன்றையும் வழிகாட்டுகின்றார்கள். பிள்ளைகளையும், அவர்கள் செல்லும் வழிகளையும் பெற்றோர் கண்காணிப்பதும் வழக்கம். அதில் ஆதரவும், கண்டிப்பும் இருப்பது கூட வழக்கம் தான். அவ்வாறு துஷானி அவர்களுக்கும் அவரது சுய தொழில் சார்ந்து பெற்றோர்களிடமிருந்து ஆரம்பத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. தனது பிள்ளை நன்றாக கல்வி கற்க வேண்டும், பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாக அரசாங்கத் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பது பிழையானதொரு விடயமும் இல்லை. ஆனால் துஷானி அவர்களுக்கு மேற்கொண்டு கற்றல் மீதான ஈடுபாட்டை விடவும் அவர் கைப்பணிகளை செய்வதிலேயே பெருமளவில் ஆர்வம் கொண்டிருந்தார். இன்றைய காலங்களில் பட்டதாரிகளாக இருந்தாலும் நிரந்தரமான தொழிலுக்காக பல காலங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு மாறிவரும் சூழலில் துஷானி அவர்கள் கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்திவிட்டு கைத்தொழிலை பல பிரச்சினைகளுக்கு மத்தியில் செய்கின்றார். இன்றைய சூழலில் சான்றிதழ்களுக்கு தான் எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. துஷானி அவர்களுக்கு சான்றிதழ் இல்லை என்பதால் அவர்களுடைய உற்பத்திகளுக்கு தரம் இல்லை என்று பலர் மத்தியில் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் சான்றிதழ் என்பதனை தாண்டி தனது திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டிருந்ததால் பல துறைகளில் தேர்ச்சி பெற்றார். இவர் ஒரு தொழிலை மட்டும் செய்வதுடன் நின்று விடாமல் பல கைவினை உற்பத்திகளை செய்து தொழிலில் முன்னேற்றத்தை அடைந்தார். இவருடைய தொழில்களாக களிமண் அணிகலன்களை உருவாக்குவது, நூல் ஆபரண தயாரிப்பு, ரெசின் கலை வடிவமைப்பு, cake செய்தல், online shopping இத்துடன் மேலும் பல கைவினை வேலைகளைக் கொண்டு சுயதொழிலை செய்து வருகின்றார். துஷானி அவர்கள் கைவினை கலைகளில் களிமண் நிகழ்வுகள் தயாரிப்பதை இணையதளங்களின் மூலம் பார்த்து அதன் மீதான ஆர்வத்தினால் தானும் YouTube videos ஊடாக பயிற்சிகளை பெற்று தேர்ச்சி அடைந்தார். பின்னர் இந்தியாவில் அணிகலன்கள் தயாரிப்பவர்களை தொடர்பு கொண்டு online வகுப்புகளினூடாக களிமண் அணிகலன்களை உருவாக்குவது தொடர்பாக நுட்பமான விடயங்களை கற்றுக் கொண்டார். இன்று தனக்கானதொரு அடையாளத்தை Qresh store என்ற வணிகத்தளத்தினூடாக தனது சுய தொழில்களை செய்து வருகின்றார். துஷானியினுடைய களிமண் அணிகலன்கள் உள்நாட்டு, வெளிநாட்டு நுகர்வோர்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இவரினுடைய முயற்சியால் பிற்பட்ட காலங்களில் பெற்றோரின் ஆதரவும் கிடைத்தமையானது இவருக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது. துஷானியின் இந்த விடாமுயற்சியினால் எவ்வாறு You Tube காணொளிகளை பார்த்து கற்றுக் கொண்டாரோ அதுபோல இன்று YouTube, Facebook, Instagram, Tik Tok, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களின் ஊடாக தனது வியாபாரத்தை மேம்படுத்துவதுடன் கைவினைகளை செய்வது தொடர்பாக கற்றும் கொடுக்கின்றார். அத்துடன் சமூக வலைத்தளங்களினூடாக நேர்காணல்களையும் கொடுத்துள்ளார். ஒரு பெண் ஆணுக்கு சமமாக இந்த சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது என்பது சவால்கள் நிறைந்ததாகும். அந்தவகையில் தனது முழுமையான உழைப்பை கொடுத்து சுயதொழிலை மேற்கொண்டு வருகிறார். தனக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் களிமண் அணிகலன்கள் உருவாக்குவதற்கான உபகரணங்களையும் பெற்றுக் கொள்கின்றார். மேலும் அணிகலன்கள் உருவாக்குவதற்கான களிமண்ணை கொள்வனவு செய்து அணிகலன்களை உருவாக்கினார். கொரோனா தொற்றுக் காலபகுதிகளில் களிமண்ணைத் தானே தயாரித்துக் கொண்டார். அந்த காலப்பகுதியில் களிமண் அணிகலன்களை உருவாக்குவதிலும் அவற்றை விநியோகம் செய்வதிலும் பெருமளவான சவால்களுக்கு துஷானி முகம் கொடுத்துள்ளார். இருந்தாலும் சுயதொழிலில் சரிவுகள் ஏற்பட்டாலும் தனது முயற்சியை கைவிடாது போராடி இன்று சமூகத்தில் இளந்தலைமுறை பெண்களுக்கு முன்னோடியாக தடம் பதித்துள்ளார். 22 வயதான துஷானி அவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் சுயதொழிலில் மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளார். அவருடைய இந்த விடாமுயற்சி அவருக்கு சிறந்த அளவில் வருமானத்தையும் பெற்றுக் கொடுக்கின்றது. கிரிஜா மானுஶ்ரீ கிழக்கு பல்கலைக்கழகம் https://globaltamilnews.net/2025/222165/
  20. போய்ச்சேர்ந்தான் நண்பனும் முன்னாள் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான அகீபன்!!! அவன் இறந்துவிட்டான் தற்கொலை முயற்சி செய்து வைத்தியசாலையில் அனுமதித்து மீண்டெழ போராடுகையில் இறுதியில் காலன் தான் வென்றான். அவன் தற்கொலைக்கு பின்னால் இன்றைய சமூக ஊடகங்கள் தீயாய் பரவுகின்ற செய்தியாக "பப்ஜீ" கேம் விளையாட்டிற்கு அடிமையாகி பண இழப்பினால் உயிர்மாய்த்தான் என்று. ஆனால் நாம் உண்மையையும் ஆராய்ந்து இவன் தற்கொலைக்கு பின் எம் சமூகத்தில் இப்படி இனியொரு ஆபத்து ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வூட்டுவதும் அவசியம் அல்லவா! அகீபன் நல்ல பண்பான குணமுள்ள நண்பன். யாருக்கு உதவி என்றாலும் முன்நிற்பவன், "அண்ண அண்ண" என எப்போதும் அரசியல் ரீதியாகவோ நட்புரீதியாகவோ பேசும் போது அவன் அழைக்கும் வார்த்தைகள் ( எப்போதும் என் பேர் சொல்லி அவன் அழைத்ததில்லை), ஓர் சிறந்த கிரிக்கெட் வீரன், இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் போட்டிகளை நிகழ்த்தி அவர்களை வேறுபாதைகளுக்குள் உள்நுழைய விடாமல் பார்த்து கொண்டவன். பெரியவர்களுக்கு மதிப்பளிக்கும் ஓர் பண்பாளன். இலங்கை மின்சார சபையின் ஓர் உத்தியோகத்தன். விளையாட்டு வீரனாக இருப்பவன் அதுவும் மக்கள் பிரதிநிதியாக தலைமைத்துவ பண்பு கொண்டவன் ஏன் இப்படி தற்கொலை செய்யும் எண்ணுமளவு பலவீனமாகி போனான் என்பதை யோசிக்கையில் அவனின் இறப்பு செய்தி கேட்டதும் இரா நித்திரைகள் தொலைத்தேன்! முன்மாதிரியாக திகழ்ந்தவன் ஏன் இப்படி ஓர் முடிவெடுத்தான் என அதிர்ந்தே போனேன். ஆக எம் சமூகத்தின் மத்தியில் பல அடிமைத்தனமான விடயங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றினை பொதுவெளிக்கு கொணர்ந்து சமூகத்தை விழிப்புணர்வடைய செய்ய வேண்டும். நண்பன் அகீபனின் தற்கொலைக்கு " பப்ஜீ" வீடியோ கேமிற்கு அவன் அடிமையானதாகவும் அதற்காக அதிக பணம் கடன்பட்டு இழந்ததாகவும் அதனால் தான் தற்கொலைக்கு முயன்றான் என்பது தான் சமூக ஊடகங்கள் பூராகவும் கொட்டி கிடக்கின்றன. அவன் இறப்பின் பின் பல நண்பர்களோடு கலந்துரையாடியதன் விளைவாக அவன் எதற்கு உண்மையில் அடிமையாகியிருந்தான் என்பது வெளிச்சமாகியது. அவன் கிரிக்கெட் வீரன், கிரிக்கெட்டை ஆழமாக நேசித்தவன், பல உள்ளூர் வெளியூர் மட்ட கிரிக்கெட் சுற்று போட்டிகளை முன்நின்று நடாத்தியவன். அந்த கிரிக்கெட் எனும் போதையே அவனுக்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆம்! உள்ளூர் மட்டங்களில் தற்போது பிரபலமாக நடைபெறும் கிரிக்கெட் சுற்றுபோட்டிகளில் தானும் ஓர் அணியை தயார் செய்து அந்த அணியை லட்சம் ரூபா செலவு செய்து "ஸ்பான்சர்" எடுத்து விளையாட விடுவதும் அவன் பழக்கமாக இருந்திருக்கிறது. அதாவது அந்த போட்டிகளில் தான் ஸ்பான்சர் பண்ணிய அணி வெல்லும் என்ற நோக்கில் அதை ஸ்பான்சர் பண்ணினால் போட்ட பணத்தை விட அதிகமாக கிடைக்கும் என்ற நோக்கமும், அதைவிட கிரிக்கெட் மீதான மோகமுமே ஆகும். ஸ்பான்சர் என்றால் சாதாரண விடயமல்ல அந்த அணிக்கு ரீசேட் அடிப்பது, பனர் அடிப்பது, சப்பாத்துக்கள், பந்துகள், மட்டைகள் தொடக்கம் உணவு சிற்றுண்டி எல்லாமே பொறுப்பேற்க வேண்டுமானால் அதன் செலவு இலட்சங்களை தாண்டும். போட்டியில் அணி தோற்றால் அந்த பணம் இல்லாமல் போகும். ஆக கடன் படவேண்டி வரும். இப்படி பல கிரிக்கெட் அணிகளினை ஸ்பான்சர் பண்ணியும் பணம் இழந்துருக்கிறான். அதவிட இன்னொன்று கிறிக்கெட் மேலான அதீத ஈடுபாடும் மோகத்தினால் ஒன்லைன் கிறிக்கெட் பந்தயங்களில்(கிறிக்கெட் சூதாட்டம்) பல லட்சங்களில் பணங்களை போட்டு பங்குபற்றியிருக்கிறான். இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் கிறிக்கெட் போட்டிகளில் யார் வெல்வார்கள் தோற்பார்கள் என்ற பல ஒன்லைன் பந்தயங்களில் பணத்தினை லட்சக்கணக்கில் போட்டுவிட்டு அந்த போட்டியை விடாது பார்த்துகொண்டுமிருப்பானாம். அந்த ஒன்லைன் சூதில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்து பணமும் இட்டியிருக்கிறான் அந்த மோகத்தில் இன்னும் பல இலட்சம் பணங்களினை ஒன்லைன் கிரிக்கெட் சூதில் போட்டிருக்கிறான். அது தான் அவனுக்கு விபரீதமாயிருக்கிறது . ஒரு போட்டியில் வென்றால் அடுத்ததில் பெற்றுவிடலாம் என்பது போல, அதாவது மகாபாரதத்தில் பாண்டவர்கள் சூதில் தோற்றுகொண்டிருக்க எல்லாம் இழந்த பின் இறுதியில் ஒன்றுமே இல்லை என்ற நிலை வந்த பின் தம் மனைவியான திரெளபதையினையே சூது வைக்கும் அளவிற்கு அந்த சூதாட்டம் மிக கொடியது. அப்படி தான் இவனும் அடுத்ததில் பெறலாம் பெறலாம் என கடன் பட்டு கடன் பட்டு கிறிக்கெட் சூதில் முதலிட்டிருக்கிறான். அந்த விளையாட்டு வினையாகி போகவே எப்படி மனைவியை சூது வைத்தும் மானமும் மண்ணும் இழந்து பாண்டவர்கள் நிர்க்கதியானார்களோ! அதுபோல அகீபனும் தன் பணத்தினையும், வீட்டார் பணத்தினயும், அதுபோக பல லட்சங்களில் கடன் பட்டும் ஈடுபட்ட கிறிக்கெட் சூதாட்டத்தில் எல்லாமுமே இழந்தான். அதனால் எல்லாம் இழந்தவனாக தற்கொலைக்கு துணிந்துவிட்டான். இப்போது இறந்தும் விட்டான். ஓர் விளையாட்டு வீரன் உடலளவிலும் மனதளவிலும் எவ்வளவு உறுதியாக இருப்பான். ஆனால் அவனை இந்த ஒன்லைன் சூது விளையாட்டு அடிமையாக்கி அழித்தொழித்து விட்டது. கடந்த மாதமும் யாழ் போதனா வைத்தியசாலையில் ஓர் இளைஞன் ஒன்லைன் கிரிப்ரோ கரன்சியில் பல கோடி முதலிட்டு நட்டமாகி தற்கொலை செய்து ஒரு மாதத்திற்குள் அடுத்த ஒன்லைன் சூது மரணம். அதுவும் ஓர் பிரதேச சபை உறுப்பினராக இருந்த தலைமைத்துவ பண்பு கொண்டவன் தற்கொலை செய்திருக்கிறான் என்றால் இந்த ஒன்லைன் வியாபாரங்கள் எவ்வளவு எம்மை அடிமைப்படுத்தி பணம் பொருள் உயிர் என எல்லாம் பறித்துவிடும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். எம் சிறுவர் பராய சமூகமும் ,இளைஞர் சமூகமும் விழிப்புணர்வடைய வேண்டும் , விழிப்புணர்படைய செய்ய வேண்டும் என்பது அத்தியாவசிதமான ஒன்று. பெற்றோர்களே! ஒரு போதும் உங்கள் பிள்ளைகளுக்கு வீடியோ கேம் விளையாட அனுமதிக்காதீர்கள்! அவர்களை சின்ன பராயத்தில் இருந்தே கல்விக்கு புறம்பாக கிரிக்கெட்டோ/ உதைபந்தோ/ கரப்பந்தோ/ கூடைப்பந்தோ/ மேசைப்பந்தோ/பூப்பந்தோ/ நீச்சலோ/ கராத்தையோ/ செஸ் போன்ற இணைவிதான விளையாட்டுகளில் ஈடுபட வையுங்கள். அத்தோடு பாடல்/ நடனம்/ சித்திரம்/இசை போன்ற கலைத்துறைகளில் அவர் அவர் திறமைக்கு ஏற்றால் போல சின்ன வயசில் இருந்தே இணைத்து விடுங்கள். (சும்மா ஒரே பாடத்திற்கு ஒன்பது இடத்திற்கு ரீயூசன் ஏத்தி இறக்காமல்) அப்போது தான் அவர்கள் தேவையில்லா வீடியோ கேம்களில் ஆரவம் காட்ட மாட்டார்கள். போதைபொருளுக்கும் அடிமையானவர்களாக மாற மாட்டார்கள். அதைவிட எம் அன்பான இளம் தலைமுறை நண்ப நண்பிகளே! ஒருபோதும் ஒன்லைன் கிரிப்டோ கரன்சிகளில் முதலிட வேண்டாம், ஒன்லைன் சூது விளையாட்டுகளில் பெரும் பணம் போட்டு விளையாட வேண்டாம். பிறகு பணம், சொத்து, மரியாதை, உறவு, உயிர் என எல்லாவற்றையும் இழக்க வேண்டி வரும். அதற்கு தான் யாழில் இடம்பெற போதனா வைத்தியசாலை ஊழியர் கிரிப்டோகரன்சியால் தற்கொலை செய்தமை. தற்போது அகீபன் எனும் ஆளுமை ஒன்லைன் கிரிக்கெட் சூதாட்டம் மூலம் தற்கொலை புரிந்தமை உதாரணங்களாக அமைகின்றன. மேற்சொன்ன இருவரும் வட்டிக்கு கடன்பட்டு கோடிகளில் ஒன்லைனில் போடாமல் அதை நிலமாக/ தங்கமாக வாங்கி வைத்திருந்தால் கூட இப்போது கடன் காரன் கேட்டால் கூட கடனை அடைத்து விட்டு நின்மதியாக இருக்கலாம். கண்ணுக்கு தெரிந்த முதலீடுகளில் முதலிடுங்கள். உங்கள் கண்ணுக்கு புலப்படா ஒன்லைன் வியாபரங்களில் பணம் போடாதீர்கள், அதைவிட கடன் வாங்கி பணம் போடாதீர்கள். யாழ்பாணத்தில் ஒன்லைன் வியாபாரத்தினால் போன கடைசி உயிராக அகீபனின் உயிர் இருக்கட்டும். இன்னொருமுறை கல்விக்கும் புத்திசாலித்தனத்திற்கும் பேர்போன யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு துர்சம்பவம் நிகழாதிருக்க அனைவரும் விழிப்புணர்வோடு செயலாற்றுவோம். ஓம் சாந்தி மதுசுதன் 29.10.2025
  21. இதில் ஒன்பது கோடி சேர்த்தவர்களையும் அடக்கினால் வெளிநாடுகளில் டபுள் அடிச்சு காசு அனுப்பின மக்கள் கொஞ்சமாவது நின்மதியடைவார்கள்.
  22. சமிக்கை கிறிஸ்டி நல்லரெத்தினம்- ஜூலை 13, 2025 No Comments வீட்டின் நடுவே இருந்த ஊஞ்சல் தனியே ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ தேவாரங்களை முணுமுணுத்துக் கொண்டோ இருக்கும் அப்பு அங்கில்லை. அவரின் சிம்மாசனம் அது. அதில் உட்கார்ந்து கொண்டு எங்கள் குடும்ப பிணைக்குகளை பஞ்சாயத்து செய்யும் அந்த ஜீவன் இல்லாத வீடு வெறிச்சோடிக்கிடந்தது. அப்பு, அவர்தான் என் தாத்தா, என்னிடம் கொண்டிருந்த அந்தப் பாசப்பிணைப்பு புறவயமானதன்று. எங்கள் இருவரையும் இணைத்த அந்த நூலை எவரும் தொட்டதில்லை. ‘“ ஏ, பையா, உன்ன உங்கம்மா தூக்கிறதக்கு முன்னமே நான்தான் தொட்டுத் தூக்கினன் தெரியுமோ?” என்று கூறி பெருமைப்படுவார். என்னை ஏனே அவர் ‘“பையா” என்று அழைப்பதில் ஒரு அணுக்கமான உரிமையும் உறவும் இருப்பதாய் தோன்றும். அம்மாதான் அவர் ஒரே மகள். எனவே அவருடன் தாத்தாவின் பாசமுடன் உரிமையும் ஒட்டிக்கொண்டது. ‘மகள், அத எடு… இத எடு’ என்று அம்மாவை விரட்டிக்கொண்டே இருப்பார். அம்மாவும் அவர் அன்பில் அடைக்கலமாவார். அப்பாவிற்கும் தாத்தாவிற்குமிடையே ஏனே பசை போதவில்லை. அப்பா எமது குடும்பத்தில் சங்கமமானது அறுபதுகளில். அப்பா ஒரு ‘வேதக்காறன்’. சமயம் மாறி வந்து அம்மாவை கைப்பிடித்ததாலோ என்னவோ அப்பாவின்மேல் ஒரு தாத்தாவிற்கு ஒரு இரண்டாந்தரம். அப்பாவிடம் தாத்தா நேராக முகம்பார்த்து பேசமாட்டார். அப்பா என்றும் மந்தையில் இல்லாத ஆடு. ஒரு முறை அப்பாவிற்கும் அப்புவிற்கும் இடையே ஏதோ பிணக்கு “என்ர சையிக்கிள தொட வேண்டாம் எண்டு சொல்லு” என்று அம்மாவிடம், அப்பாவின் காது பட, சற்று உரக்கவே சொல்லிவிட்டார். சாமானிய குடும்பங்களில் சைக்கிள்தான் அந்நாட்களில் டெஸ்லர். வீட்டிற்கு ஒரு வாகனம் மட்டுமே. அப்பாவோ சாது. ஒருபோதும் அப்புவை போருக்கழைத்ததில்லை! எதிர்வசை பாடி பிளவை பெரிதாக்கும் எண்ணம் அப்பாவிற்கில்லை. அப்புவின் சைக்கிளை அப்பாவும் பின்னர் தொட்டதில்லை. அப்புவைத் தேடி வீட்டிற்கு பலர் வந்து போவதால் எப்போதும் எங்கள் வீடு களைகட்டியிருக்கும். அதற்கும் காரணம் உண்டு. அப்புதான் ஊர் எலும்பு முறிவு மற்றும் ‘பாம்புக்கடி’ வைத்தியர் …. வைத்தியர் என்ன வைத்தியர் … ஊர் பரியாரியார். எங்கள் ஐந்து அறை கல் வீட்டின் முன் பரந்து இருக்கும் குருத்து மணல் முற்றம். முற்றத்தின் மருங்கில் இரண்டு பெரிய மாமரமும் பலா மரமும் (அதென்ன பலா? பிலா மரம் என்றே வாசியுங்கள்!) கிளை விரித்து நிற்கும் வேப்ப மரமும் இருந்தன. அப்புவைப்பார்க்க வருவோர் கூடி இருக்க ஒரு திறந்த ஓலை மேய்ந்த ஒரு குடில். குடில் என்றதும் ‘அம்புலிமாமா’வில் நீங்கள் பார்த்த குட்டி குடிலை கற்பனையில் இழுத்து வந்து எங்கள் முற்றத்தில் வைக்காதீர்கள். உயர்ந்த கூரையுடன் அறைகள் போல் இரு தடுப்பு சுவர் வேலி போட்டு மேய்ந்த அமைப்பு அது. அப்பு இருக்க கதிரை மேசை வசதிகள் உண்டு. மேசை மேல் இருக்கும் ‘ஒத்த றூள் கொப்பி’ தான் அப்பு மருந்து எழுதும் றெஜிஸ்டர். நோய் என வருவோரை தன் முன் இருக்கும் கதிரையில் அமர்த்தி நாடி பிடித்து, இருமச் சொல்லி, முட்டியை தட்டி மேலும் ஏதோ ஏதோ பரீட்சாத்தங்கள் செய்து பின் மேசைக்கு பின்னே இருந்த அலுமாரியை திறந்து வடகம், தூள்கட்டு என பல உருவங்களில் மருந்துகளை பரிமாறுவார். அவற்றை எப்போது சாப்பிட வேண்டும் என்ற விபரங்களை நான் சொன்ன ‘ஒத்த றூள்’ கொப்பியின் ஒரு பக்கத்தில் எழுதி அடிமட்டம் வைத்து கிழித்து நோயாளிக்கு கையளிப்பார். அப்பு எவருக்கும் ‘தண்ணி மருந்து’ கொடுத்ததை கண்டதில்லை. “இந்த தூளை தேனில கரைச்சு விடியத்தால சாப்பிட வேணும் கண்டியோ? …. என்ன… நான் சொல்லுறது விளங்தோ?” என்று சொல்லி தன் வார்த்தைகளின் புரிதலை உறுதிப்படுத்திக் கொள்வார். தேனுக்குப் பதிலாய் முலைப்பாலும் வந்து போகும். எலும்பு முறிவிற்கு ‘பத்துப் போட’ வருபவர்களைப்பார்க்க எனக்கு ஆர்வம் இல்லை. ஒரு முறை மரத்தால் விழுந்தவனை நாலு பேர் தூக்கிக் கொண்டு வந்து கிடத்தினர். அப்பு அருகில் குந்திக்கொண்டு குசலம் விசாரிப்பது போல் அவனிடம் பேசிக் கொண்டு அவனின் நோய்ப்பட்ட கையை மருந்தெண்ணை தடவி மெதுவாக நீவி விட்டார். அவனும் அப்புவின் கேள்விகளுக்கு அனுகிய குரலில் “ஓம் ஐயா… ஓம் ஐயா” என்று பதில் சொல்லிக் கொண்டு இருந்தான். அவன் முழங்கையில் விலகிய எலும்பு துருத்திக் கொண்டு முழங்கையில் நீலம் பாவித்து வீங்க வைத்திருந்தது. அப்பு அவன் மேல் கையை பலமாக பற்றியவாறு கேள்விகளை தொடுத்தவாறு இருந்தார். ‘இந்த முறை விழைச்சல் எப்படி?… இந்த போகத்தில நெல்லு வில என்னவாம்?…..’ போன்ற கமம் செய்பவனிடம் கேட்கும் கேள்விகளால் அவன் காதை நிரப்புவார். அவன் கவனம் எல்லாம் அவரின் கேள்விகளுக்கு பதில் தேடுவதிலேயே அப்போது இருந்தது. அதுதான் தருணம் என்று அப்பு உணர்ந்திருக்க வேண்டும். சடாரெண்டு அவன் கையை ஒரு பொம்மையின் கையை திருகுவதைப் போல் திருகி பலமாக இழுத்து விட்டார். “ஐயோ… எண்ட ஆண்டவனே “ என்ற அவன் கூக்குரல் கூரையை பிய்த்தது! இந்த தருணத்திற்கு காத்திருந்தாற்போல் அப்பு ஒரு புன்சிரிப்புடன் ”இனி பத்து ஒண்டு போட்டா சரி, எலும்பு மூட்டுக்குள்ள சரியா கொளுவிற்று .. மூண்டு கிழமையில பத்த கழற்ற ஏலும் “ என்று வலியால் துடித்தவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி இனி ‘பத்துப்போடு’வதற்கான ஆயுத்தங்களில் இறங்கினார். அப்புவின் எலும்பு முறிவு வைத்தியத்தை விட பாம்புக்கடி வைத்தியம் பார்க்க சுவாரசியமாக, ஒரு நாடகத்தன்மையுடன் கூடியதாய், இருக்கும். ஒருமுறை எங்கள் ‘வயல்காறன்’ வேலுமணியை வயல் அறுவடை சீசனில் ஏதோ பாம்பு கடித்துவிட்டது. ஊரார், அவன் வாயில் நுரை தள்ள, தூக்கிக்கொண்டு அப்புவிடம் ஓடி வந்தனர். “புடையன் பாம்பு கடிச்சிப்போட்டாம் ஐயா” என்ற சபையோரின் சாட்சியத்தை காதில் வாங்காமல் கடித்த பாம்பின் உடல் அடையாளங்களை முதலில் கேட்டறிந்து கொண்டார் அப்பு. அந்த விபரணையில் இருந்து கடித்த பாம்பு என்னவென்று கணித்துக் கொண்டு அதற்கான மந்திரங்களை ஓதத் தொடங்கினார். ஏறிய விஷத்தை இறங்கும்படி உருக்கமாய் அம்மாளிடம் வேண்டுவதாகவே அந்த மந்திரங்கள் ஓதப்பட்டன. ஆம், அவை கட்டளைகள் என்பதை விட வேண்டுதல்களே! அப்பு கையில் ஒரு வேப்பிலை கத்தை எடுத்துக் கொண்டார்.. வேலுமணி அரை பிரஃஜையுடன் வாயில் நுரை தள்ள தரையில் பாதி உணர்வுடன் கிடந்தான். அப்புவின் ஒரு கையில் வேப்பம் கொத்து … மறு கையில் ஒரு கைப்பிடி மிளகு. வேப்பம் கொத்தால் அவன் கன்னதில் பலமாக மாறி மாறி அறைந்தவாறு மந்திரங்கள் ஓதியவாறு ஒரு மிளகை அவன் பற்களுக்கிடையே திணித்து “மிளக முன் பல்லால கடிச்சி நுனி நாக்கால ருசி பாரு… என்ன உறைக்குதா சொல்லு?” என்று கேட்க அவன் இல்லை என்பதற்கு அடையாளமாக தலையை பக்கவாட்டில் அசைத்தான். பாம்பின் விஷம் தலைவரைக்கும் ஏறிவிட்டது என்பதை உணர்ந்தார் அப்பு. இல்லையெனில் மிளகு உறைத்திருக்க வேண்டுமே. இனி காலம் தாழ்த்த முடியாது….. செய்வதை விரைவாய் செய்தாக வேண்டும். மீண்டும் வேப்பம் கொத்து கசையடியும் உச்சஸ்தானத்தில் மந்திரங்களும் தொடர்ந்தன. மீண்டும் அதே பரீட்சை…. மிளகு அவனுக்கு உறைக்கவில்லை…. விஷம் இன்னும் இறங்கவில்லை. மந்திரமும் கசையடியும் தொடர ஒரு கட்டத்தில் “ஐயா… மிளகு உறைக்கிதையா” என்றான் உரத்த குரலில். வேப்பம் கொத்தின் விசையோ அப்புவின் மந்திர ஓதல்களோ…. ஏதோ ஒன்று அந்த மாயையை செய்தன. “விஷம் இறங்கிற்று… இறங்கிற்று … அம்மாளே நன்றி அம்மா!“ என்று பூரண திருப்தியுடன் கூறி தலையை நிமிர்த்தி சூழ்திருந்த கூட்டத்தை பெருமையுடன் பார்த்தார் அப்பு. சூழ்ந்திருந்த கூட்டமும் வாய் திறந்து நின்றது! ஊர்க்கோயில் இருந்த திசையில் தலையை திருப்பி இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பி தெய்வானை அம்மானை வணங்கி அந்த சடங்கை முடித்து வைத்தார். அப்புவுடனான என் உறவு திவ்வியமானது. அப்பு நல்ல கதை சொல்லி. எனக்கு கம்பராமாயணத்தையும் கீதையையும் ஒரு தொடர்கதையின் சுவாரசியத்துடன் சொல்வார். ராமாயணம் ராமர் கதையை சொல்லும் ஆனால் காட்சியாக காட்டாது என்போர் சிலர். ஆனால் அப்புவின் விவரணங்களுடன் கூடிய ராமர் கதையில் காட்சிகள் அவர் வார்த்தைகளில் ஒரு ரம்யமான காட்சியாய் திரைப்படம் போல் கண் முன்னே விரியும். அவர் வார்த்தைகளில் வனத்தில் சீதை மட்டுமல்ல நானும் வனத்தில் ஒரு கல்லில் உட்கார்த்து காட்சிகள ரசிக்கும் ஒரு உணர்வை உருவாக்கித்தருவார். கதை கேட்கும் படலம் முடிந்ததும் ஒரு சிறு பரிசளிப்பு. அவர் அறையில் இருந்த பெரிய முதிரை மர அலுமாரியின் மேல் தட்டில் அவரின் வேட்டி சால்வையின் பின் மறைத்து வைத்திருக்கும் சிறு டப்பாவை திறந்து இரண்டு மூன்று ‘மில்க்டொபி’ இனிப்புகளை பரிசளிப்பார். மூன்றுதான் தினக்கணக்கு. அம்மாவின் கட்டளையை மீறி நடக்கும் ஒரு இரகசிய பரிசளிப்பு இது. ‘“அப்பு, இவன் சின்னவனுக்கு டொபி, சொக்களட் ஒண்டும் கொடுக்காதேயுங்கோ…. பல்லு சூத்தை குத்திப் போடும்“ என்ற அம்மாவின் அறிவுரைகளும் புறக்கணிக்கப்படும். வாய் நிறைய இனிப்புக்களுடன் நான் அம்மாவிடம் மாட்டிக் கொண்ட தருணங்கள் உண்டு. “ அப்பு, இவன்ர வாய்க்குள்ள டொபி போல…. நீங்களோ குடுத்த நீங்கள்?” என்ற கேள்விக்கு பலமான மறுப்பு தலையாட்டல் அப்புவின் தரப்பில் இருந்து வரும். அப்பு இப்படி குறும்பு பொய் பேசும் வேளையில் தன் வலது கை விரல்களை மடக்கி பெருவிரலை ஆள்காட்டி விரலூடாக நுழைத்து ஒரு சமிக்கை செய்வார். அவர் கண்கள் குறும்பு சிரிப்புடன் “என் விரலைப் பார்” என்று சொல்லாமல் சொல்லும். இது எங்கள் இருவருக்கும் மட்டுமே புரியும் இரகசிய பரிபாஷை! x. x. x. x. x. x. x நாட்கள் உருண்டோடி ஆண்டுகளுக்குள் அடங்கி அவையும் உருண்டோடி…. அப்புவிற்கு பாரிசவாதம் வந்து உடலின் இடது பக்கத்தை இழுத்துக் கொண்டது. சாமி அறைக்குப்பக்கத்தில் தான் அப்புவின் அறை. அந்த அறையில் இருந்து இப்போ அவர் வெளியே வருவதில்ல. எங்கள் வயல்காரன் சாமித்தம்பிதான் இப்போ அப்புவுக்கு எல்லாம். அவனுக்கும் அப்படி ஒன்றும் இள வயது இல்லை. காலையில் அவரை அணைத்தவாறு மூச்சு முட்ட தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கிணற்றடியில் இருந்த கதிரையில் உட்கார்த்தி ஒரு குளியல். அவனே அப்புவின் தலையை துவட்டி புது வேட்டி உடுப்பித்து மீண்டும் அவரை வீட்டிற்குள் தூக்கிக்கொண்டு போவான். அப்புவிற்கு சாப்பாடு பிசைந்துதான் ஊட்டி விட வேண்டும். பற்கள் விடைபெற்றுக்கொண்ட வயது அவருக்கு. அதுவும் சாமித்தம்பியின்ர வேலைதான். ஆனால் அம்மாதான் சோறு கறிகள் எல்லாம் பீங்கானில் பரிமாறி தன் கையால பிசைந்து “சாமித்தம்பி…. இத அப்புவிற்கு தீத்தி விடு பாப்பம்… வேணாம் எண்டு சொன்னாலும் எல்லாத்தையும் தீத்தி விடப்பாரு… நேத்து மத்தியானமும் நல்லா சாப்பிட யில்ல… வர வர உடம்பும் சூம்பிக்கொண்டு போகுது!” என்று சொல்லி வேதனையுடன் அங்கலாய்ப்பார். அம்மாவிற்கும் முன்னரைப் போல் ஓடி ஆடி வேலை செய்ய முடியாது. நாடியில் கைவைத்தபடி அப்புவின் குளியலை பார்த்து ‘எப்படி இருந்த மனுஷன்? வயசு தான் என்னமா அப்புவின்ர சௌந்தரியத்த சிதைச்சுப் போட்டுது?” என்று முணுமுணுப்பார் அம்மா. அப்புவின் தேக சுகம் தேய்பிறையாய் மாறி வருவது அம்மாவின் சோகத்திற்கு முதல் காரணி. வாழ்வின் சோகங்களை வலைக்கரண்டி போட்டா வடித்தெடுக்க முடியும்? வாழ்ந்துதானே கழிக்க வேண்டும். அதுவே உலக நியதி அல்லா? அம்மாவிற்கும் இது தெரியாததல்ல. ஒரு நாள் அயல் வீட்டு செல்வி மாமி அப்புவின் நிலையை புரிந்து கொண்டு “இஞ்ச பாரு புள்ள… எத்தின நாளுக்கு பெரிய ஐயாவ வீட்டோட வச்சு பாக்கப்போறா? சாமித்தம்பியும் நெல்லு மூட்டய தூக்கிற மாதிரி அவர கஸ்டப்பட்டு தூக்கிற்று கிணத்தடியும் வீடும் எண்டு திரியிறான். ஒரு நாளைக்கு தடுக்கி விழுந்தினமோ அவ்வளவுதான். சீவன் போயிடும் கண்டயோ?” என பயம் காட்டினார். செல்வி மாமி சொன்னதும் அம்மாவிற்கு சரியாகவே பட்டது. அப்பாவை மாரடைப்பால் மூன்று வருடங்களுக்கு முன் இழந்த அம்மா தனியாக அப்புவை பார்ப்பதை ஒரு சுமையாகவே இப்போது கண்டார். நானும் மனிசியும் மகனும் குடும்பத்தோட கொழும்பு தெமத்தகொடவில இடம்பெயர்ந்துவிட்டதால் அம்மாவும் தனது கைத்துணையை இழந்து விட்டிருந்தார். தினசரி இரவு கைபேசி அழைப்புகளில் அப்புவின் நிலமை பற்றி அழுது புலம்புவது இப்போ வாடிக்கையாகிவிட்டது. செல்வி மாமி அம்மாவிடம் ‘“டவுனில இப்ப புதிசா ஒரு வயோதிபர் மடம் திறந்திரிக்கினமாம்… இப்ப கனடாவில இருக்கிற நம்மட கோயிலடி சண்முகத்தின்ர கொப்பரும் அங்கதானாம் இப்ப இருக்கிறாராம். வேளைக்கு நம்மட ஊர் சாப்பாடு… வருத்தம் வாதை எண்டால் உடனே டாகுத்தர் அங்கேயே வந்து பாப்பினமாம். ஒவ்வொரு நாளும் தியானம், யோகாசானம் எண்டு எல்லாம் இருக்குதாம். ஒருக்கா உன்ர மகனோட கதைச்சிப் போட்டு அப்புவையும் அங்க சேத்து விடலாம்தானே?” என்று ஓதி வைத்தாள். அம்மா தனது தினசரி நச்சரிப்புக்களுடன் இந்த செய்தியையும் என்னுடன் பகிர்ந்தார். அம்மாவின் வார்த்தைகளின் வலிமையை என்றும் உணர்ந்தவன் நான். ஒரு முடிவை எடுத்த பின் அதன் சாரத்தை என்னிடம் கூறி என் அனுமதிக்காய் காத்திராமல் ‘“அதத்தான் செய்வம் மகன்” என்று சம்பாஷணையை முடிப்பார். அப்புவின் இடப்பெயர்ச்சி அடுத்த மாதமே நடந்து முடிந்தது. என்னால் வேலை நிமித்தம் கொழும்பில் இருந்து ஊருக்கு உடனே திரும்பி வர முடியவில்லை. ஆனால் அடுத்த மாதமே லீவில் தனியே ஊர் திரும்பி அப்புவின் புதிய வாசஸ்தலத்தை பார்க்க விரைந்தேன். அம்மா அப்புவை அந்த வயோதிபர் மடத்தில் சேர்ப்பதற்கு பட்ட கஸ்டங்களை பட்டியல் போட்டார். வயல்காரன் சாமித்தம்பியின் பங்களிப்பை சிலாகித்துப் பேசினர் அம்மா. எனது இடைவெளியை நிரப்பிய அவன் உண்மையில் ஒரு புண்ணியவான்தான். அப்பு இல்லாத எங்கள் வீடு களையிழுந்து வெறிச்சோடியிருந்தது. அப்பு உட்காந்திருக்கும் ஊஞ்சல் சலனமற்று ஸ்தம்பித்து நின்றிருந்தது.. தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு தனது சொந்தங்கள் எடுக்கும் முடிவுகளால் நிகழும் இந்த இடப்பெயர்வுகள் கொடியன. தமது விருப்பத்திற்கு மாறாக, சொந்தங்கள் சொல்லும் தேன் பூசிய வார்த்தைகளை நம்பவது போல் பாசாங்கு செய்து, மௌனமே மொழியாகி பெட்டிக்குள் அடங்கும் பாம்பாக எத்தனை ஜென்மங்கள் தம் புளித்துப் போன மீதி வாழ்க்கையை சோகத்தில் வாழ்ந்து கரைக்கின்றன? மண்ணை மீறும் விதைகளாய் வாழ்ந்து காட்டுகிறேன் பார் என்று சமூகத்தை சவாலுக்கு அழைத்த இளமை ஓய்ந்துவிட வேர்கள் வெட்டப்பட்ட மரத்தின் தனிமையுடன் தம் குறுகிய உலகினுள் சுருங்கிக் கொண்ட ஜீவன்களின் பிரதிநிதிதான் அப்பு இன்று. அப்புவின் காலை உணவு பரிமாறப்பட்டதும் நானும் அம்மாவும் அவரை பர்க்க அந்த வயோதிபர் மடத்திற்கு சென்றிருந்தோம். அப்புவிற்கென ஒரு தனி அறை. மேலே மின்விசிறி சுழன்று அறைக்கு ஒரு ஆடம்பரத்தை கொடுத்தது. அப்பு உட்கார்ந்து வாசிக்க நல்ல மரக்கதிரை ஒன்று. மூலையில் ஒரு அரை அலுமாரி. குளியறைக்கு அழைத்துச்செல்லும வாசல் கதவு மூடியிருந்தது. கட்டிலின் அருகில் தொங்கிக் கொண்டிருந்த ‘காலிங் பெல்’. அடித்தால் உதவிக்கு ஆள் வரும். அப்பு என்றும் போலவே வெள்ளை ‘பாலாமணி’ யும் சாரனும் அணிந்து இருந்தார். கட்டிலில் படுத்தவாறு இருந்தவர் எம்மைக் கண்டதும் எழுத்து உட்கார எத்தனித்தார். முடியவில்லை. ‘“ நீங்க படுங்க அப்பு… நான் கட்டிலில கிட்ட இருக்கிறன்… எழும்பி கஸ்டப்பட வேணாம் “ என்று கூறி அருகில் அமர்ந்து கொண்டேன். அம்மாவும் ‘“ எப்படி அப்பா, எல்லாம் வசதி தானே… நல்லா பாத்துக் கொள்ளுகினமா?… உங்கட சாப்பாட்டில சீனி சேர்க்க வேண்டாம் எண்டு சொல்லியிருக்கன்…. இண்டைக்கு குளிப்பாட்டினவையளோ?” என்ற கேள்விக்கு அப்பா இல்லை என்று தலையாட்டியே பதிலளித்தார். மீண்டும் ஏதோ சொல்ல வேண்டும் போல் அவருக்கு தோன்றியிருக்க வேண்டும். முகத்தில் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய மெளனம்… பறிபோன சொற்களை மீட்டெடுக்கும் மெளனம். ‘“மகள் … நான் வீட்டுக்கு வந்து இருக்கப்போறன் மகள்… இஞ்ச ஏலாது…. இஞ்ச இந்த அறைக்குள்ள தனிச்சிப் போயிட்டன் பிள்ள … பயமாய் இருக்கு மகள்… இஞ்ச எனக்கு யாரு இருக்கா?“ என்றபோது அவர் உடல் குலுங்கி அடங்கியது. அப்புவின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் அம்மா என் முகத்தைப் பார்த்தார். அப்புவின் கண்கள் பனித்ததை அம்மாவும் கவனித்தார். ‘பையா… தனிச்சுப் போயிட்டன் ராசா… சாப்பாடும் குளிப்பும்தான் வாழ்கையில்ல பையா… குடும்பமடா… குடும்பம். அது இஞ்ச இல்ல மகன் … என்னை நம்மட வீட்டுக்கு கூட்டிப் போ ராசா“ என்று என்னைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் இடியாய் என்னுள் இறங்கின. அப்போது அறைக்கதவு திறந்து கொள்ள அந்த வயோதிபர் மடத்தின் ‘மேற்ரன்’ உள்ளே நுழைந்து எம் எல்லோரையும் கண்களால் துலாவி “ ஓ… ஐயாவ பார்க்க எல்லொரும் வந்திருக்காங்க போல“ என்று கூறி பின் அப்புவைப் பார்த்து “ எப்பிடி ஐயா இருக்கிறீங்கள். எல்லாம் வசதிதானே? ஏதாவது தேவையென்டால் சொல்லவேணும். என்ன… சந்தோசம் தானே?” என்ற கேள்விக்கு ‘“ஓம் … மெத்த சந்தோசம்… மெத்த சந்தோசம்” என்று தலையை ஆட்டியவாறு கூறி என் கண்களை ஏறிட்டுப்பார்த்தார் அப்பு. பின் அவர் கண்கள் தன் வலது கை விரல்களில் குத்திட்டு நின்றன. என் பார்வை அப்புவின் அந்த கை விரல்களில் குவிந்தது. பெருவிரல் ஆள்காட்டி விரலூடாக நுழைந்து எம்மிருவருக்கு மட்டும் தெரிந்த அந்த இரகசிய சமிக்கையை உருவாக்கிக் காட்டிற்று! https://solvanam.com/2025/07/13/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/
  23. பொதுவாக சில பரீட்சைகளில் திறமை சித்திகளை பெறும் மாணவ, மாணவிகளுக்கு கனவுப் பொருட்களாக இருக்க கூடிய ஆடம்பரமான பொருட்களை பரிசளிப்பதை பெற்றோர் முதல் உறவினர்கள் வரை தவிர்க்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.