Ramanathan Archchuna
11m ·
My sincere apologies Akka. It's my fault. Please Apologize me.
Umachandraa Pragash
20m ·
சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ்!
1- சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாக ஜூலை 07 ஆம் திகதி மாலை 06 மணி தொடக்கம் - நள்ளிரவு 12 மணி வரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுடன் Dr. அர்ஜுனா அவர்களைத் தொடர்பு கொள்ள உமாச்சந்திரா பிரகாஷ்
எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.
2- அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி தாண்டி, Dr. அர்ஜுனா அவர்களுடன் உமாச்சந்திரா பிரகாஷுக்கு உரையாடக் கிடைத்த சந்தர்ப்பத்தில், அவரிடம் பின்வரும் பொருள்படக் கூடிய செய்தியைக் கூறினார். “நான் உமாச்சந்திரா பிரகாஷ். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர். சாவகச்சேரி வைத்தியசாலை நிலைமை தொடர்பில் உங்களுடன் பேசுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் பல தடவை உங்கள் தொலைபேசிக்கு முயற்சித்தும் பலனளிக்கவில்லை. அத்துடன் அவரை உங்களுடன் connecting call ஊடாக இணைப்பதற்கு பல தடவைகள் நான் முயற்சித்தும் பலனளிக்கவில்லை.”
3- அதற்கு Dr. அர்ஜுனா அவர்கள் உமாச்சந்திரா பிரகாஷுக்கு இவ்வாறு பொருள்படும் வகையில் பதிலளித்தார். “நான் எனது தொலைபேசி் இலக்கத்தை முகப்புப் புத்தகத்தில் பதிவிட்ட காரணத்தால் தொடர்ச்சியாக பல அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஆகவே அழைப்பை ஏற்க முடியவில்லை” எனக் குறிப்பிட்டார்.
4- உமாச்சந்திரா பிரகாஷ் Dr. அர்ஜுனா அவர்களிடம், “எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களை நாளை காலை connecting call ஊடாக இணைக்கிறேன், தயவுசெய்து எனது பெயரை உங்கள் தொலைபேசியில் பதிவுசெய்து வைத்திருங்கள். அத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான உங்கள் முறைப்பாட்டு பிரதிகளை எனக்கு what’s up ஊடாக அனுப்பி வையுங்கள். எதிர்க்கட்சித் தலைவர் இவ்விடயம் தொடர்பாக ஜூலை 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கவுள்ளார்.” எனக் குறிப்பிட்டார்.
5- ஜூலை 08 ஆம் திகதி காலை 06 மணி தொடக்கம் Dr. அர்ஜுனா அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் உமாச்சந்திரா பிரகாஷும் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.
6. ஜூலை 08 ஆம் திகதி காலை 08 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் Dr. Asela Gunawardena (Director General of Health Services) அவர்களைத் தொடர்பு கொண்டு, உமாச்சந்திரா பிரகாஷையும் connecting call ஊடாக இணைத்து, சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாக எடுத்துரைத்தார். அத்துடன் உமாச்சந்திரா பிரகாஷ் அவர்களையும் நிலைமை தொடர்பில் குறிப்பிடுமாறு்
கூறினார். சஜித் பிரேமசாச அவர்கள் தொடர்பில் இருக்கும்போது, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் Dr. Asela Gunawardena (Director General of Health Services) அவர்களுக்கு சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் உமாச்சந்திரா பிரகாஷை தெரியப்படுத்தினார். ஆயினும் சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாக Dr. அர்ஜுனா அவர்கள் எவ்விதமான எழுத்து மூலமான முறைப்பாடு எதையும் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் Dr. Asela Gunawardena அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடமும் உமாச்சந்திரா பிரகாஷிடமும் கூறினார். சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் இடம்பெறும் மக்கள் எழுச்சிக்கு நீங்கள் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என உமாச்சந்திரா பிரகாஷ் கேட்டபோது, சுயாதீன ஆணைக்குழு ஒன்றை கொழும்பில் இருந்து அனுப்பி, நியாயத்தைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
07- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் உமாச்சந்திரா பிரகாஷும் ஜூலை 09 ஆம் திகதி காலை பாராளுமன்ற அமர்வுகளுக்கு முன்பதாக Dr. அர்ஜுனா அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
08- Dr. அர்ஜுனா அவர்கள் உமாச்சந்திரா பிரகாஷுக்கு ஜூலை 10 ஆம் திகதி காலை வேளையில் “Thank you. Please kindly call me whenever you see this message.” என்ற செய்தியை குறுந்தகவலாக அனுப்பியிருந்தார். ஆயினும் தொடர்ந்து அவருக்கு உமாச்சந்திரா பிரகாஷ் அழைப்பு ஏற்படுத்தியபோதும், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மதிய வேளையில் Dr. அர்ஜுனா அவர்களுக்கு உமாச்சந்திரா பிரகாஷ் “Good afternoon Doctor! Are you free?” என்ற குறுந்தகவலை அனுப்பியதுடன், அதற்கு “Yes. Please let me know how can I help you” என்ற பதிலே கிடைத்தது.
09- ஜூலை 17 ஆம் திகதி சுகாதார அமைச்சர் Dr. ரமேஷ் பத்திரண அவர்கள் வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளமை தொடர்பில் அறிந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், உமாச்சந்திரா பிரகாஷை connecting call ஊடாக இணைத்து, தனது பிரதிநிதியாக அவரை அனுப்பி வைப்பதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் Dr. Asela Gunawardena (Director General of Health Services) அவர்களுக்கு அறிவித்தார்.
10. அதன் பிரகாரம் வட மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் ஜூலை 17 ஆம் திகதி காலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து உமாச்சந்திரா பிரகாஷ் கலந்து கொண்டார். அங்கு சுகாதார அமைச்சர் Dr. ரமேஷ் பத்திரண மற்றும் அமைச்சு செயலாளர் ஆகியோரிடம் உமாச்சந்திரா பிரகாஷ், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் ஆளுனர் அவர்களிடமும் குறித்த வேண்டுகோளை முன்வைத்தார். ஆயினும் சுகாதார அமைச்சர் Dr. ரமேஷ் பத்திரண, அமைச்சு செயலாளர் மற்றும் ஆளுனர் ஆகியோர், சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான ஆணைக்குழு தீர்மானத்தின் பின்னர் அங்கு விஜயம் செய்வதாக உமாச்சந்திரா பிரகாஷுக்குத் தெரிவித்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லாமல் தவிர்த்துக் கொண்டனர்.
All re