Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. மட்டக்களப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரவாளர்கள் கொண்டாட்டம். .07 May, 2025 | 04:06 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களை வெற்றிகொண்டதன் காரணமாக நேற்று (6) இரவு பட்டாசு கொழுத்திக் கொண்டாடியது. அத்துடன் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஊர்வலமாகவும் அழைத்துச் செல்லப்பட்டனர். நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபை உட்பட பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழ் அரசு கட்சி வெற்றிவாகை சூடியுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் 20 வட்டாரங்களில் 16 வட்டாரங்களை இலங்கை தமிழ் அரசு கட்சி கைப்பற்றிய நிலையில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலான மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு மாநகர சபையின் பல்வேறு வட்டாரங்களிலும் நேற்று மாலை வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதுடன் வேட்பாளர்களை மக்கள் கொண்டாடிய நிகழ்வும் நடைபெற்றது. இதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றிபெற்றதையடுத்து அங்கு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளரும் ஊடகவியலாளருமான செ.நிலாந்தனின் ஆதரவாளர்களினால் கட்சியின் சின்னத்தின் வடிவம் கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரவாளர்கள் கொண்டாட்டம் | Virakesari.lk
  2. 07 May, 2025 | 05:18 PM நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கிறார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று (7) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியானது வடக்கு, கிழக்கிலே அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. நாடு யாரிடமாவது இருக்கட்டும், தமிழர் தாயகம் தமிழரசோடு என்பது நாங்கள் தேர்தல் பரப்புரை காலத்தில் சொன்னதற்கமைய வடக்கு, கிழக்கிலே இருக்கின்ற மக்கள் எங்களுக்கு அமோகமான வெற்றியைத் தந்திருக்கின்றார்கள். இது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வெற்றி என்பதைத் தாண்டி இது தமிழர்களுடைய எதிர்காலத்துக்கான ஆணையொன்றை தமிழ் மக்கள் தமிழ் அரசுக் கட்சியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வினை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கிறார்கள். அந்த வகையில் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலிலும் வடக்கு, கிழக்கில் நாங்கள் கூடுதலான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்க இருக்கிறோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம். பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கின்ற அனைத்து பிரதேச சபைகளிலும் நாங்கள் பெரும்பான்மையான ஆசனங்களை வென்றிருக்கின்றோம். அனைத்து பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் இருக்கின்றது. அத்துடன் நாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற இரண்டு பிரதேச சபைகளிலும் ஆசனங்களை பெற்றிருக்கின்றோம். இன்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முதற்கட்டமாக பட்டியல் ஆசனங்கள், சபை அமைத்தல், யாருடன் இணைவது என்பது பற்றி கலந்துரையாடவுள்ளோம். நாளைய தினம் நாங்கள் போட்டியிட்ட அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் ஒவ்வொரு சபையாக அழைத்து, அந்தந்த சபைகளில் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்றும் தவிசாளர், பிரதி தவிசாளர் பற்றி எவ்வாறு தீர்மானம் எடுப்பது என்பது பற்றியும் யாருடன் நாங்கள் இணைந்து ஆட்சியமைப்பது என்பது பற்றியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலந்துரையாடவுள்ளோம். எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய ஒரு வியூகத்தை நாங்கள் அமைக்கவிருக்கிறோம் என்றார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கூறுகையில், உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதித்துவ முறை என்பது சற்று சிக்கலான முறை என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படியான சிக்கலான ஒரு முறை காணப்பட்டபோதிலும் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற அனைத்து சபைகளிலும் நாங்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். வாக்குத்தொகை அடிப்படையில் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம். சபைகளின் பிரதிநிதித்துவத்தை கைப்பற்றியிருப்பதன் அடிப்படையிலும் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம். பிரதிநிதித்துவ முறையில் காணப்படுகின்ற சில குறைபாடுகள் காரணமாக நாங்கள் அதிகப்படியான வாக்குகள் பெற்றிருந்தாலும் தொங்கு நிலையான ஆசனங்கள் எனப் பலவாறான ஆசனங்கள் காணப்படுகின்றபடியால் அவற்றையெல்லாம் கடந்து ஒன்பது உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய அளவுக்கு எமது கட்சி உரிய ஆசனங்களை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. எதிர்வரும் காலங்களில் சபைகளை அமைத்து சுமுகமான முறையில் அவற்றை கொண்டுசெல்லக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்துவோம். சில கட்சிகள் கூட்டணியாகச் சேர்ந்து கடுமையான பிரயத்தனங்கள் செய்தும் கூட அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை. தமிழர் தாயகம் தமிழ் அரசுக் கட்சியின் பக்கம் இருக்கிறது என்பதை இவ்விடத்தில் கூற முடியும். எதிர்காலத்தில் நாங்கள் சிறப்பான செயற்பாடுகளையும் முன்கொண்டு செல்வோம். தேசிய மக்கள் சக்தியானது தாங்கள் நடுநிலை வகிப்பதாக கூறியிருப்பதாக அறிய முடிகிறது. நாங்கள் தமிழ்த் தேசியம் சார்ந்து சிந்திப்பவர்களாக இருக்கின்றபடியால் தமிழ்த் தேசிய எண்ணத்தோடு இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம். மற்றையவர்கள் சிநேகபூர்வமாக எங்களுக்கு ஆதரவு தருவதற்கு முன்வருகின்றபோது பரஸ்பரம் நாங்கள் ஆதரவுகளை வழங்கி சபைகளை அமைக்கவேண்டிய தேவை இருக்கிறது. நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம். ஏனென்றால், மட்டக்களப்பு பல்லினமும் வாழும் ஒரு பிரதேசமாக இருப்பதால் பரஸ்பரம் புரிந்துணர்வு, பரஸ்பர விட்டுக்கொடுப்பு என்பது தவிர்க்க முடியாத விடயமாக உள்ளது. அதனால், அவற்றை கையாளவேண்டிய தார்மீக பொறுப்பு எங்களிடம் இருக்கிறது எனத் தெரிவித்தார். நிரந்தரமான அரசியல் தீர்வு என்கிற எமது இலக்கிற்கு வட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் ஆணையளித்துள்ளனர் - சாணக்கியன் | Virakesari.lk
  3. 07 May, 2025 | 06:04 PM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை. தமிழ் மக்கள் தேசிய அரசியலில் எம்முடன் கைகோர்த்ததை போன்று பிரதேசவாரியான அரசியலிலும் எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் புதன்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பாரம்பரியமான அரசியல் கட்சிகளை காட்டிலும் ஒப்பீட்டளவில் வெற்றிப்பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஆளும் தரப்பு 150 உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளது. மன்னார், வவுனியா , யாழ்ப்பாணம் ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி சிறந்த முறையில் வெற்றிப்பெற்றுள்ளது. ஒருசில பகுதிகளில் பெரும்பான்மை பலத்தை ஆதரவை பெற்றுக்கொண்டுள்ளோம். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 81 உறுப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு பிரதேச சபை ஆசனம் கூட கிடைக்கப்பெறவில்லை. ஆகவே வடக்கு மாகாணத்தில் 150 உறுப்புரிமையை பெற்றுக்கொண்டமை வரலாற்று ரீதியிலான வெற்றியாகும். வடக்கு மாகாணத்தில் பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சிகள் வீழ்ச்சியடைந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலும் தேசியத்தை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட கட்சிகளே உள்ளன. இவ்வாறான நிலையிலும் தேசிய மக்கள் சக்தி அங்கும் வெற்றிப்பெற்றுள்ளது. தேசிய அரசியலுக்கும், பிரதேச அரசியலுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய அரசியலில் வெற்றிப்பெற்றதை போன்று, பிரதேச அரசியலிலும் நாங்கள் வெற்றிப்பெற்றுள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தி தேசிய மக்கள் சக்தி வகுத்த திட்டங்கள் இந்த பெறுபேற்றின் ஊடாக வலுப்படுத்தப்பட்டுள்ளன என்றார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை - பிமல் ரத்நாயக்க | Virakesari.lk
  4. (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைப் பிரதிநிதிகள், சர்வதேச தராதரங்களுக்கு அமைவான புதிய சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்வதற்கு அவசியமான கால எல்லை குறித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின்கீழ் இயங்கும் ஆட்சியியல் நிர்வாகம், சட்டவாட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பணிக்குழுவின் 8 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (5) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது ஊழலை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள், தொழிலாளர் உரிமைகள் உள்ளடங்கலாக மனித உரிமைகளை உறுதிப்படுத்தல், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தல், சிவில் சமூக அமைப்புக்களின் இயங்குகைக்கு அவசியமான இடைவெளியை வழங்கல், தேர்தல் செயன்முறைகளை வலுப்படுத்தல், பாலினம் மற்றும் பாலியல் நோக்கை அடிப்படையாகக்கொண்ட பாகுபாடுகளை முடிவுக்குக்கொண்டுவரல் என்பன உள்ளடங்கலாக இருதரப்பினரதும் பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு கடந்த ஆண்டு ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தேர்தல்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு, அமைதியான முறையில் நடாத்தப்பட்டமை குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கையைப் பாராட்டினர். அதற்குப் பதிலளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், ஜனாதிபதித்தேர்தலின்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்புப்பணிகள் தொடர்பில் தமது பாராட்டை வெளிப்படுத்தினர். அதேபோன்று பொருளாதார ஸ்திரத்தன்மை, மீட்சியை இலக்காகக்கொண்ட தொடர் முயற்சிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மறுசீரமைப்புக்கள் உள்ளிட்ட முற்போக்கான முக்கிய நகர்வுகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் நேர்மறையான பிரதிபலிப்பை வெளிப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கைப் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். அதுமாத்திரமன்றி தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதிலிருந்து ஜனநாயக செயன்முறை, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர். அதேவேளை சட்டம், ஒழுங்கை வலுப்படுத்துவதற்கான நிர்வாகம் மற்றும் நீதித்துறைசார் செயன்முறைகளின் முக்கியத்துவத்தினையும், ஜனநாயக சமூகங்களுக்குள் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதும், ஆலோசனை அடிப்படையிலான சட்ட செயன்முறைகளைப் பேணுவதிலும் சிவில் சமூக அமைப்புக்கள் கொண்டிருக்கும் பிரதான வகிபாகத்தினையும் இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், சர்வதேச மனித உரிமைகள்சார் நடைமுறைகளை திறம்பட அமுல்படுத்துவதற்கும் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக இதன்போது ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் உறுதியளித்தனர். அதனையடுத்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியக்குழுவிடம் சுட்டிக்காட்டிய இலங்கைப் பிரதிநிதிகள், சர்வதேச தராதரங்களுக்கு அமைவான புதிய சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்வதற்கு அவசியமான கால எல்லை குறித்துத் தெளிவுபடுத்தினர். அதற்குப் பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியக்குழுவினர், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஊடாக ஐரோப்பிய ஒன்றிய சந்தையைத் தொடர்ந்து அணுகுவதை உறுதிசெய்வதற்கு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நியமங்களுக்கு ஏற்பட்ட பொருத்தமான சட்டத்தைக் கொண்டுவரவேண்டியது அவசியம் என வலியுறுத்தினர். மேலும் இனவாதத்தை முடிவுக்குக்கொண்டுவந்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய பங்கேற்பு செயன்முறை மூலம் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிமொழியையும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வரவேற்றனர். பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதி - ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் இலங்கை எடுத்துரைப்பு | Virakesari.lk
  5. 07 May, 2025 | 06:57 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாகவே ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு தேர்தல் ஒன்றில் யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி நாடுபூராகவும் மொத்தமாக 4இலட்சத்தி 88ஆயிரத்தி 406 வாக்குகளை பெற்றுள்ளது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 9.17வீதமாகும். இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தையும் வெற்றிகொள்ள முடியவில்லை. மொத்தமாக 381 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து சஜித் அணி பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியாக தொலை பேசி சின்னத்தில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் தனித்து போட்டியிட்டது. இதில் ஐக்கிய தேசிய கட்சி மொத்தமாக 2 இலட்சத்தி 49ஆயிரத்தி 435 வாக்குகளை பெற்றிருந்தது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.15 வீதமாகும். என்றாலும் ஐக்கிய தேசிய கட்சி 2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கி இருந்தது. இதில் சஜித் பிரேமதாசவுக்கு 55இலட்சத்தி 64ஆயிரத்தி 239 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன. அதன் பின்னர் 2020 பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சி தற்போது இடம்பெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலிலேயே யானை சின்னத்தில் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தல் பெறுபேறுகளை பார்க்கும்போது வீழ்ச்சியடைந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி புதிய ஜனநாயக முன்னணியில் சிலிண்டர் சின்னத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது | Virakesari.lk
  6. 07 May, 2025 | 07:02 PM (எம்.மனோசித்ரா) உள்ளுராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் ஊடாக அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அத்துடன் உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சகல எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி வலுவான பொது எதிரணியை உருவாக்க மக்கள் வழங்கிய ஆணையை முழு மூச்சுடன் முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உள்ளராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பின்னர் புதன்கிழமை (7) விசேட அறிவிப்பை வெளியிட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதித்திட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த முன்வந்து தேர்தல் வெற்றிக்கு ஒத்துழைப்பை நல்கிய நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களிலும் பெரும் மக்கள் ஆணைகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளமையை உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. எனவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்ற செய்தியை நாட்டு மக்கள் இத்தேர்தலின் ஊடாக எமக்கு முன்வைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை கையாண்டது போலவே இந்த உள்ளூராட்சித் தேர்தலையும் ஜே.வி.பி கையாண்டது. தேர்தலுக்காக மதத்தைக் கூட அரசாங்கம் பயன்படுத்தயது. நாட்டு மக்கள் அரசாங்கத்தின் பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர். பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொய்களை முறியடித்து, உண்மையான பலம் வாய்ந்த மக்கள் சேவைக்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்புகளையும் ஒன்றிணைய வேண்டும் என்ற பொதுமக்களின் அபிலாஷையின் அடிப்படையில் இந்த சவாலான பொறுப்பிற்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பவர்களாக, நாங்கள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு தலைவணங்கி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைப்போம். அதன் ஊடாக வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், கொள்கை ரீதியானதுமான சிறந்த மக்கள் சேவையை வழங்க உள்ளோம். இதற்கான தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார். அரசின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் வலுவான பொது எதிரணியை உருவாக்குவேன் - சஜித் பிரேமதாச | Virakesari.lk
  7. உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவு : அம்பாறை மாவட்டம் : அம்பாறை நகர சபை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NNP) வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) - 6034 வாக்குகள் - 10 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2002 வாக்குகள் - 03 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 782 வாக்குகள் - 01 உறுப்பினர் சுயேட்சைக் குழு - 1129 வாக்குகள் - 02 உறுப்பினர்கள் மக்கள் கூட்டணி - 397 வாக்குகள் - 01 உறுப்பினர் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவு : அம்பாறை மாவட்டம் : அம்பாறை நகர சபை | Virakesari.lk
  8. Thunukkai Pradeshiya Sabha Polling District - Mullaitivu Local Authority Final Result ITAK 1,594 29.31% Members 4 ACTC 1,082 19.9% Members 3 DTNA 804 14.78% Members 2 SJB 605 11.13% Members 1 NPP 492 9.05% Members 1 IND1 388 7.13% Members 1 SLLP 254 4.67% Members 1 IND2 219 4.03% Members 0 TOTAL MEMBERS 13 VALID 5,438 98.09 % REJECTED 106 1.91 % POLLED 5,544 64.02 % ELECTORS 8,660 Local Authorities Election 2025 Results - Sri Lanka | Adaderana
  9. All Island Results - Cumulative NPP 19030 40.14% LG Bodies 0 Members 41 SJB 12801 27.00% LG Bodies 0 Members 27 SLPP 5444 11.48% LG Bodies 0 Members 10 IND1 1783 3.76% LG Bodies 0 Members 6 PA 1757 3.71% LG Bodies 0 Members 3 SB 1581 3.34% LG Bodies 0 Members 3 Local Authorities Election 2025 Results - Sri Lanka | Adaderana
  10. முல்லைத்தீவு மாவட்டம் : மாந்தை கிழக்கு பிரதேச சபை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, முல்லைத் தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி -1364 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 990 வாக்குகள் - 03 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 607 வாக்குகள் - 02 உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 808 வாக்குகள் - 02 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 500 வாக்குகள் - 02 உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவு : முல்லைத்தீவு மாவட்டம் : மாந்தை கிழக்கு பிரதேச சபை | Virakesari.lk
  11. உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; முதலாவது தேர்தல் முடிவுகள் - தங்காலை நகர சபை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இற்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,260 வாக்குகள் - 9 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,397 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 795 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 265 வாக்குகள் - 1 உறுப்பினர் சர்வஜன அதிகாரம் (SB)- 177 வாக்குகள் - 1 உறுப்பினர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; முதலாவது தேர்தல் முடிவுகள் - தங்காலை நகர சபை | Virakesari.lk
  12. இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தாஸ் (சசிக்குமார்), அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), இரு மகன்கள் (மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்) ஆகிய நால்வரும், அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், பொருளாதார அகதிகளாக ஆக்கப்பட்டு படகில் ராமேஸ்வரத்திற்குத் தப்பித்து வருகிறார்கள். அங்கிருந்து, வசந்தியின் அண்ணன் (யோகி பாபு) உதவியுடன் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது தாஸின் குடும்பம். Tourist Family review தெருக்காரர்களிடம் ஈழத் தமிழர்கள் என்பதை மறைத்து, சகஜமாக வாழத்தொடங்கும்போது, ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாஸின் குடும்பத்தைத் தேடுகிறது காவல்துறை. இச்சம்பவத்திற்கும் தாஸ் குடும்பத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பதோடு, இறுதியில் தாஸின் குடும்பத்திற்கு என்ன ஆகிறது என்பதையும் பேசியிருக்கிறது அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தின் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.இரக்கம், அனைவருக்கும் உதவும் குணம், அப்பாவித்தனம் என 'வழக்கமான' சசிக்குமாரின் சாயல் அதிகம் கொண்டிருந்தாலும், விவரிக்க முடியாத வலியைச் சுமக்கும் கண்கள், மகனிடம் உடையும் தருணம், குடும்பத்திற்காகப் பதறும் நிமிடங்கள் போன்றவற்றில் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் சசிக்குமார். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்போடு, ரொமான்ஸ், காமெடி, நடனம் போன்றவற்றாலும் பலம் சேர்த்திருக்கிறார் சிம்ரன். மூத்த மகனாக மிதுன் ஜெய் சங்கர், இளமையின் துடிப்போடு, தேவையான இடங்களில் அழுத்தமான நடிப்பையும் வழங்கி கவனிக்க வைக்கிறார். சேட்டைகள் நிறைந்த சிறுவன் கமலேஷின் அட்டகாசமான நடிப்பு, பல காட்சிகளில் சிரிப்பலையைப் பரவவிட்டிருக்கிறது. குறிப்பாக, 'ஜோசப் குருவில்லா' காட்சியிலும், சர்ச் காட்சியிலும் அவரின் குறும்புத்தனத்தால் தியேட்டர் ப்ளாஸ்ட் ஆகிறது! Tourist Family review தான் வரும் எல்லா காட்சியிலும் சிரிப்பு விருந்து வைக்கிறார் யோகி பாபு. எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், ஶ்ரீஜா ரவி, இளங்கோ குமரவேல், பகவதி பெருமாள், அபிஷன் ஜீவிந்த், யோக லட்சுமி ஆகியோர் தங்களது இயல்பான நடிப்பால், காட்சிகளை ஆழமாக்கி, படத்திற்கு வலுசேர்க்கிறார்கள். வில்லத்தனம் கொண்ட போலீஸ் அதிகாரியாக ராம்குமார் பிரசன்னா கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். எதார்த்தமான கோணங்கள், ஃப்ரேம்கள், இயல்பான ஒளியமைப்பு என ஆர்ப்பாட்டமில்லாத ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் அரவிந்த் விஸ்வநாதன். அதற்கு கலரிஸ்ட் அருண் சங்கமேஷ்வரின் பங்களிப்பும் துணை புரிந்திருக்கிறது. நிதானமான திரைமொழியோடு, உணர்வுகளைக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன். ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜா வரிகளில் 'ஆச்சாலே', 'வாழ்ந்து பாரு', 'இறகே' பாடல்கள் மனதிற்கு இனிமை தருவதோடு, கதையோட்டத்திற்கும் கைகொடுத்திருக்கின்றன. Tourist Family reviewஅதீத நல்ல மனிதராக தாஸ் வருவதோடு, அடுக்கடுக்கான நெகிழ்ச்சியான காட்சிகளும் வருவது என்றாலும் அவை திகட்டிவிடாத வகையில் சின்ன சின்ன திருப்பங்கள், தருணங்கள், காமெடி பன்ச் போன்றவற்றைக் கடைசியில் சேர்த்து ரசிக்க வைக்கிறார் இயக்குநர். 'மலையூரு நாட்டாமை' பாடல் காட்சி, இளங்கோ குமரவேல் - ஶ்ரீஜா ரவி ஜோடியின் காட்சிகள், யாழ்ப்பாணத் தமிழைத் தெருக்காரர்கள் கற்றுக்கொள்ளும் காட்சிகள், மிதுன் - குறள் காதல் காட்சி, இறுதிக்காட்சியில் நடக்கும் ட்விஸ்ட்கள் எனப் பல இடங்களும், தொகுப்புகளும் உணர்வுப்பூர்வமாக மனதைக் கனக்க வைக்கின்றன. Tourist Family review "ஏற்கெனவே கடல் தாண்டிதான் வந்திருக்க!", "இந்தத் தமிழ் பேசறது பிரச்னையா, இல்ல நாங்க தமிழ் பேசறதே பிரச்னையா?" என அரசியல் பேசும் வசனங்கள் பிரசாரத் தன்மையின்றி காட்சியோடு இயைந்திருப்பது பாராட்டத்தக்கது. தாஸ் குடும்பத்தின் தினசரி வாழ்க்கை - அதே குடும்பத்தைத் தேடும் போலீஸ் என இரு லைனில் திரைக்கதை நகர்ந்தாலும், போலீஸ் தேடுதலை விறுவிறுப்பாக்கத் தவறுவதால், இறுதிக்காட்சியில் வர வேண்டிய பதைபதைப்பில் சிறிது பற்றாக்குறை ஏற்படுகிறது. எந்த ஆவணமுமில்லாமல் குடியேறியவர்களை எப்படி போலீஸ் முதல் அண்டை வீட்டார் வரை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற கேள்வி படம் முழுவதும் தொக்கி நிற்கிறது. இப்படி ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் லாஜிக் ஓட்டைகளை, எமோஷனல் காட்சிகளால் மறைத்திருக்கிறது திரைக்கதை. காவல் நிலைய மரணத்தை இறுதிக்காட்சியில் பயன்படுத்திய விதமும் நெருடலைத் தருகிறது. போர்களாலும், பொருளாதார வீழ்ச்சிகளாலும் ஆவணமற்ற குடியேற்றங்கள் அதிகரித்து வரும் இச்சூழலில், அவர்களை அரசுகள் மனிதநேயமற்று நடத்தும் முறைகளுக்கு எதிராக உலகம் முழுவதுமிருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இச்சூழலில் இக்கதையை எடுத்துக்கொண்டு, அதன் ஆன்மா சிதறாமல், அழகாகப் பேசியதற்காக இயக்குநருக்குப் பாராட்டுகள்.படத்தின் மொழியில் சொல்லவேண்டுமென்றால்... "பழையகால வாழ்க்கைய நினைச்சுக்கொண்டு, எனியாவது ஏதாவது நல்லது நடக்காதா என்டிற எதிர்பார்ப்பில உலகம் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிற அகதிகளின்ர குரலையும், அவையளுக்கும் - சக மனிசருக்கும் இந்த மனிதம் குடுக்கிற நம்பிக்கையையும் நல்ல ஆழமாக் கதைக்கிற முறையில இந்தப் படம் பாராட்டப்பட வேண்டிய ஒண்டுதான்!" முதல் ப்ரேமிலிருந்தே கதை தொடங்கி விடுகிறது. தமிழ்நாட்டு வருகை, குடியிருப்பு வாசிகளுடனான உரையாடல்கள் எனத் திரைக்கதை, மென்மையான நகைச்சுவைகளோடு நிதானமாக நகர்கிறது. அதனால், தாஸின் குடும்பம் எவ்வித அலட்டலுமின்றி, இயல்பாக மனதில் பதிகிறது. எக்கச்சக்க கதாபாத்திரங்கள் நிறைந்திருந்தாலும், அவற்றை தனித்தனி கதைகளாக அழுத்தமாக எழுதியதோடு, அவற்றுக்குப் பொருத்தமான நடிகர்களையும் தேர்வு செய்திருப்பது திரைக்கதையை ஆழமாகியிருக்கிறது. டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம்: சசிக்குமார், சிம்ரன், யோகி பாபு; இலங்கை அகதிகள் கதையில் சிரிப்புடன் இழையோடும் அரசியல்; - Vikatan
  13. 28 Apr, 2025 | 05:01 PM யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இணுவிலை சேர்ந்த 75 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் இணுவில் பகுதியில் வீதியோரமாக உள்ள தோட்டக்காணி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (27) முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஒப்படைத்தனர். மரண விசாரணையில் அதீத வெப்பம் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் நிலவும் அதீத வெப்பம் ; ஒருவர் உயிரிழப்பு | Virakesari.lk
  14. 28 Apr, 2025 | 04:28 PM கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்ட பெண் தனது இரண்டாவது கணவர், மகள் மற்றும் மருமகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்த பெண் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் 25 வயதுடைய இளைஞனுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தகாத உறவு குறித்து பெண்ணுக்கும் அவரது இரண்டாவது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கொலை நடந்த பின்னர் பெண்ணின் இரண்டாவது கணவரும் மருமகனும் இணைந்து சடலத்தை துண்டுகளாக வெட்டி அதனை 03 உரைப் பைகளில் போட்டு ஆற்றில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, சந்தேக நபர்களான இரண்டாவது கணவரும் மருமகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டு துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட பெண் ; பின்னணியில் உள்ள காரணம் என்ன? | Virakesari.lk
  15. சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மேலும் இருவருக்கு விளக்கமறியல்!வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மேலும் இருவர் ஞாயிற்றுக்கிழமை (27) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். குறித்த சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக இவ்வாறு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்நிலையில் இந்த விடயம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் சனிக்கிழமை (26) இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் இரு ஆண்கள் ஞாயிற்றுக்கிழமை (27) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட இருவரும் 45 மற்றும் 52 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மேலும் இருவருக்கு விளக்கமறியல்! | Virakesari.lk
  16. 22 Apr, 2025 | 01:09 PM மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜே.வி.பி. ) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் - ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சந்திப்பு | Virakesari.lk
  17. 22 Apr, 2025 | 04:39 PM தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் எந்த வித காரணமும் இன்றி அவரது இளைய மகனை கைதுசெய்துள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார் சற்குணதேவி தனது உறுதியான ஊழல் அற்ற செயற்பாட்டிற்காக பொலிஸாரின் துன்புறுத்தல்களை பல முறை எதிர்கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவி. பருத்திதுறை பிரதேச சபைக்கான தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் எனினும் அது நிராகரிக்கப்பட்டது. சில நாட்களிற்கு முன்னர் வேட்பாளருக்கான கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் மருதங்கேணி பொலிஸார் அவருக்கு உத்தரவிட்டிருந்தனர். எனினும் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர் அந்த கூட்டத்திற்கு செல்லவில்லை. இன்று அவரின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் ஏன் அவர் அந்த கூட்டத்திற்கு வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.அவர் தான் தற்போது வேட்பாளர் இல்லை என பதிலளித்தவேளை பொலிஸார் அவரை நிந்தித்துள்ளனர் கூட்டத்திற்கு கட்டாயம் சமூகமளிக்கவேண்டு;ம் என தெரிவித்த அவர்கள் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் இளைய மகனை எந்த வித காரணமும் இன்றி கைதுசெய்துள்ளனர். சற்குணதேவி தனது உறுதியான ஊழல் அற்ற செயற்பாட்டிற்காக பொலிஸாரின் துன்புறுத்தல்களை பல முறை எதிர்கொண்டுள்ளார். அவரது கணவர் மகன் மற்றும் எங்கள் கட்சியின் ஏனைய உறுப்பினர்களிற்கு எதிராக பொலிஸார் பலமுறை பொய்வழக்குகளை தாக்கல் செய்த பின்னர் விடுதலை செய்துள்ளனர். தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் சற்குணதேவிக்கு எதிரான பொலிஸாரின் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன காரணமின்றி மகன் கைது - கஜேந்திரகுமார் | Virakesari.lk
  18. 22 Apr, 2025 | 05:15 PM உலகளாவிய ரீதியில் நிலவும் வர்த்தக குழப்பங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை (22) நிலவரப்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,500 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், இன்றையதினம் ஒரு பவுண் 22 காரட் தங்கத்தின் விலை 255,000 ரூபாவாகும். ஒரு பவுண் 24 காரட் தங்கத்தின் விலை 277,000 ரூபாவாகும். நேற்று திங்கட்கிழமை (21) ஒரு பவுண் 22 காரட் தங்கத்தின் விலை 246,600 ரூபாவாகும். ஒரு பவுண் 24 காரட் தங்கத்தின் விலை 268,000 ரூபாவாகும். வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு | Virakesari.lk
  19. ருத்தித்துறை, தும்பளையில் பட்டப்பகலில் மூதாட்டி ஒருவர் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்றைச் சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது-69) என்பவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலையில் பலமுறை தாக்கப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுநிலை ஆசிரியையான சகோதரியுடன் குணதேவி ஒரே வீட்டில் வசிந்து வந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினமான நேற்றுக் காலை 7 மணியளவில் சகோதரி அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக குணதேவி தேவாலயத்துக்குச் செல்லவில்லை. தேவாலயத்தில் இருந்து சகோதரி காலை 9 மணியளவில் வீடு திரும்பியபோது குணதேவி வீட்டின் சமையலறையில் இரத்தவெள்ளத்தில் வீழ்ந்து கிடந்துள்ளார். சம்பவம் அறிந்து அயலவர்கள் கூடியநிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக அவர்கள் குணதேவியை சமையலறையில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். அம்புலன்ஸுக்கு அறிவித்திருந்தநிலையில், அம்புலன்ஸில் வந்த உத்தியோகத்தர் குணதேவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த வீட்டில் முன்னர் ஆள்கள் இல்லாதபோது கைத்தொலைபேசி ஒன்று திருடப்பட்டிருந்தது என்பதும், இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபர் ஒருவரை இனங்கண்டனர். அந்த நபர் தும்பளை, மணல் ஒழுங்கையில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முதலில் மறுத்தாலும் பின்னர் மூதாட்டியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் எவரும் இருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் திருடுவதற்காக சந்தேகநபர் சுவர் ஏறிக்குதித்துச் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக சமையலறையில் மூதாட்டியைக் கண்டதும், அங்கிருந்த ரீப்பை கட்டை ஒன்றால் மூதாட்டியைத் தாக்கி விட்டுச் தப்பிச்சென்றுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும், அதனால் புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர் என்றும், இவர் மீது ஏற்பகவே பல்வேறு திருட்டுக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி தும்பளையில் பட்டப்பகலில் மூதாட்டி அடித்துக் கொலை
  20. வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிப்புறங்களில் வேலையின்போது அதிகளவு தண்ணீர் குடிப்பதும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுப்பதும் அவசியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பத்தில் தகிக்கும் வடக்கு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
  21. 21 Apr, 2025 | 06:27 PM வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க, அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கௌ்ளப்பட்டது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையானது கட்டளைக்கு 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆஜராகி வழக்காடியிருந்தார். இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனால் சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது. அவரது சமர்ப்பணத்தின்போது குறித்த வழக்கானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருகைதந்தபோது அதற்கு எதிராகப் போராட்டம் நடாத்தியதாக வழக்கு பொலிஸாரினால் ஏறாவூர் நீதிமன்றில் 36பேருக்கு எதிராகத் தாக்கல்செய்யப்பட்டபோது நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் முறையான ஆதாரங்கள் வழங்காமல் தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு மீண்டும் அதே தகவலுடன் பொலிஸாரினால் புதிய வழக்கு 30பேருக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள்,போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களும் இணைக்கப்பட்டுத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் நீதிபதி அவர்கள் இடமாற்றத்தினால் சென்ற நிலையில் அவரின் கட்டளையொன்று அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிரகாரம் குற்றப்பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு வழக்கு நடாத்தப்படுகின்றது. தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் மக்கள் போக்குவரத்தைத் தடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டே முன்வைக்கப்பட்டுள்ளது. முன்பின் முரணான இரண்டு நீதிமன்ற கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி இரண்டாவது கட்டளை முதலாவது கட்டளை இருப்பதை மறந்து சட்டத்தின் முதலாவது கட்டளை கவனத்தில் கொள்ளப்படாமல் இந்த இரண்டாவது கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. இதேநீதிமன்றம் இதனை மாற்றமுடியும். வழக்கினை தள்ளுபடிசெய்யவேண்டும். வீதியை போராட்டக்காரர்கள் மறித்தார்கள் என்பது ஒரு சிறுவிடயம் இந்த நாட்டில் நடக்கின்ற விடயம். சட்டம் சிறுசிறு விடயங்களை கவனத்தில்கொள்ளாது. சிறிய விடயத்திற்கு வழக்கினை தாக்கல் செய்து அனைவரது நேரத்தினையும் வீணடித்து எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமன்றத்தின் நேரத்தினையும் வீணடித்து இந்த வழக்கினை தாக்கல் செய்யப்பட்டுள்ளதனால் இந்த வழக்கு தள்ளுபடிசெய்யவேண்டும். வீதியை மறித்து போராட்டம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு விநோதமான குற்றச்சாட்டு. ஏனென்றால் ரணில் விக்ரமசிங்க இங்கு வரும்போதுதான் அப்படி செய்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக வந்தது தலைநகரில் பல இடங்களில் வீதியை மறித்து போராட்டம் நடாத்தியதானால்தான். எனவே புதிய புதிய சிந்தனையில் விநோதமான வழக்குகளை தாக்கல்செய்து நீதிமன்ற நேரத்தினை வீணாக்கக்கூடாது என்ற சமர்ப்பணத்தினை முன்வைத்தார். சமர்ப்பணங்களைச் செவிமடுத்த நீதிவான் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி கட்டளைக்காக வழக்கினை ஒத்திவைத்தார். வீதிகளை மறித்துபோராட்டதின் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க; அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு - எம்.ஏ.சுமந்திரன் | Virakesari.lk
  22. 21 Apr, 2025 | 05:00 PM அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன் கருதியும், அவர் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தித் தரவேண்டும் என உதயகலாவின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (21) தனது பேத்தியாரான அருனோதயநாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வமக்கள் கட்சியின் உருவாக்கத்தால் பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் தனது தாயார் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார். எமது தாயார் அரசியல் சூழ்ச்சி காரணமாக சிறையில் இருப்பதால் நான்கு சகோதரர்களான நாங்கள் பாட்டியின் பராமரிப்பில் தற்போது பல அசௌகரியங்களுடன் வாழ்ந்து வருகின்றோம். இந்நேரம் சிறையிலிருக்கும் எமது தாயார், குற்றம் செய்யாது சிறையில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி மருத்துவ வசதி கூட கிடையாத நிலையில் இருக்கின்றார். அதனால் எமது குடும்ப நிலையையும் பிள்ளைகளான எமது நிலையையும் கருத்தில் கொண்டு தாயாரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சிறையில் இருக்கும் எனது தாயாரை விடுவியுங்கள்! - உதயகலாவின் மகள் டிலானி தயாபரராஜ் ஜனாதிபதியிடம் கோரிக்கை | Virakesari.lk
  23. 21 Apr, 2025 | 03:08 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் தலைவர் என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஜனாதிபதி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணை தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏழு வேண்டுகோள்களை விடுத்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான முழுமையான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், பொதுமக்களிற்கு அதனை பகிரங்கப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வழக்குகளை கண்காணிப்பதற்கு சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைத்து சக்திகளையும் அடையாளம் காண வேண்டும், உண்மையை மக்களிற்கு தெரிவிக்க வேண்டும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்கள் அவர்கள் எந்த பதவியிலிருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். 2019ம் ஆண்டு செப்டம்பர் 21ம் திகதியிடப்பட்ட விசாரணைகைள மேற்கொள்வதற்காக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வு பிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும், முக்கிய சாட்சியான ஆசாத் மௌலானா தெரிவித்த விடயங்கள் உட்பட சனல் 4 இன் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதித்திட்டத்திற்கு காரணமான துணை இராணுவ குழு கட்டமைப்புகளை செயல் இழக்கச்செய்வதற்காக புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஆட்சியில் உள்ளவர்கள் மக்களை ஆள்வதை விட மக்களிற்கு சேவையாற்றுவதை உறுதி செய்யும் புதிய கலாச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும். சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்- மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் | Virakesari.lk
  24. 21 Apr, 2025 | 12:27 PM முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக திங்கட்கிழமை (21) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ''அரசே சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலை கட்டுப் படுத்தி நீரியல் வளங்களைப் பாதுகாப்பவர்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்து'' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்துமாறு கோரி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிவந்த நிலையில் அண்மைக் காலமாக கடலிலும் நந்திக் கடல் களப்பு உள்ளிட்ட இழப்பு பகுதிகளிலும் சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று அண்மையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி தொழிலை கட்டுப்படுத்துவதற்காக பாடுபடுகின்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துமாறு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம் | Virakesari.lk
  25. 17 Apr, 2025 | 12:23 PM ( எம்.நியூட்டன்) காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது . ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இது உயர் பாதுகாப்பு வலயம் எனவும் இங்கு கூட்டம் கூட முடியாது எனவும் ஊடக சந்திப்பு ஏற்பாட்டாளர்களுடன் பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முரண்பாட்டில் ஈடுபட்டார். தாம் எமது காணிகள் விடுவிப்பை வலியுறுத்தி ஊடக சந்திப்பை நடாத்தவே தாம் வந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களின் தேசிய அடையாள அட்டையை வாங்கி பெயர்களை பதிவு செய்த பொலிஸார் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களை காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர். இவற்றை காணொளியை எடுத்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் காணொளி எடுத்தனர். ஊடகவியலாளர் சந்திப்பை முடித்து விரைவாக செல்லுமாறு அங்கு வந்திருந்தவர்களுடன் பொலிஸார் தொடர்ச்சியாக தர்க்கத்தில் ஈடுபட்டனர். புதிய ஆட்சியில் பொலிசார் அராஐகம் : ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.