Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. யாழ்ப்பாணம் 17 மணி நேரம் முன் யாழ். உடுப்பிட்டியில் இன்று கன்றுகளை ஈன்ற பசு! மிக அரிதாக இடம்பெறும் சில நிகழ்வுகளில் பசு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய நிகழ்வு வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி, உடுப்பிட்டி இலக்கணாவத்தை பகுதி விவசாயி ஒருவர் விலங்கு வேளாண்மையிலும் ஈடுபட்டு வருகின்றார். இவ் விவசாயியின் பசு மாடு நேற்று முன்தினம் மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது. இரண்டு நாம்பன் ஒரு பசுக் கன்று ஈன்றுள்ளதானது இலங்கையிலேயே முதலாவதாக இருக்கலாம் என விவசாயி மகழ்ச்சியாக தெரிவித்தார். இதேவேளை இம்மூன்று கன்றுக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருக்கிறமை குறிப்பிடத்தக்கது. யாழ். உடுப்பிட்டியில் இன்று கன்றுகளை ஈன்ற பசு!
  2. குடியிருக்க வீடு காணி இல்லை, பேருந்து நிலையத்திலேயே சில வாரமாக தங்கியிருந்த நிலையில் ஜனாதிபதிக்கு தமது நிலை சென்றடையும் வரை நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர். நேற்று (06) மாலை அச்செழு, அச்சுவேலியில் இருந்து நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். ஏழு வயதான ஆண் பிள்ளை மற்றும் ஆறு வயதுடைய பெண் பிள்றையுடன் கணவன், மனை நால்வராக குறித்த நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இந் நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்காவின் கவனத்திற்கு சென்றடையும் வரை நடை பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இ.கலீபன் நடைபயணி தெரிவித்தார். ஆனாலும் இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வடமாகாண ஆளுநரை சந்தித்துள்ளனர். இதன் போது ஆளுநர் நா.வேதநாயகன் இவர்களுக்கான காணியனை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு மருதங்கேணி பிரதேச செயலர் க.பிரபாகரமூர்த்தி அவர்களைத் தொடர்பு கொண்டு ஆவண செய்யுமாறு கோரியுள்ளார். ஆளுநரின் கோரிக்கைக்காக்க மருதங்கேணி பிரதேச செயலர் க.பிரபாகரமூர்த்தி நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (ப) குடியிருக்க வீடு காணி இல்லை - நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர்!...
  3. 08 Apr, 2025 | 05:23 PM 1988-89ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டி பாடசாலையொன்றில் இயங்கிய வதை முகாமிலிருந்து இளைஞர்களை டிரக்கில் கொண்டு சென்று வழியில் அவர்களை கீழே தள்ளிவிட்டு அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த பின்னர் அவர்கள் பெட்ரோலை ஊற்றி கொலை செய்தனர் என காணாமல்போனவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயலாளர் எம்சி இக்பால் தெரிவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம் உட்பட பல சர்வதேச அமைப்புகளும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். எம்சிஎம் இக்பால் இந்த வீடியோவில் மேலும் தெரிவித்துள்ளதாவது. எனது மனதில் நினைவில் இருக்கும் விடயங்களில் ஒன்று கண்டியின் பாடசாலையொன்றில் காணப்பட்ட வதை முகாம் பற்றியதாகவும். பல இளைஞர்கள் அங்கு சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஒரு லொறி நிறைய பிரம்புகள் அந்த கல்லூரியில் உள்ள வதை முகாமிற்கு கொண்டு செல்லப்படுவதை பார்த்தவர்கள் எமக்கு சாட்சியமளித்திருந்தனர்.இளைஞர்கள் மாணவர்களிற்கு அடித்து சித்திரவதை செய்வதற்காக அதனை பயன்படுத்தியிருக்கவேண்டும். தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை பேசச்செய்வதற்காக அவர்களிற்கு அடிப்பார்கள் அதன்பிறகும் அவர்கள் பேசாவிட்டால் பிரம்பால் அடிப்பார்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் சித்திரவதை செய்யப்பட்டவர்களை டிரக் ஒன்றில் ஏற்றி வேறு எங்கோ கொண்டு செல்வார்கள் இ அவர்களை வேறு முகாமிற்கு கொண்டு செல்வதாக தெரிவிப்பார்கள். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் வழியில் என்ன நடந்தது என எங்களிற்கு தெரிவித்தார். 'அவர்கள் எங்களின் கைகளை கட்டி லொறியில் ஏற்றினார்கள். தனிமையான இடத்தில் செல்லும்போது அந்த டிரக்கிலிருந்து ஒவ்வொருவராக தள்ளிவிடுவார்கள். பின்னால் இரண்டு வாகனங்கள் வரும் ஒன்றில் ஆயுதமேந்திய பொலிஸார் காணப்படுவார்கள் மற்றையதில் பெட்ரோலுடன் பொலிஸார் காணப்படுவார்கள். டிரக்கிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டவர் தப்பியோட முயலும்போது பின்னால் வரும் வாகனத்திலிருக்கும் பொலிஸார் அவர்கள் மீதுதுப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவார்கள். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் துடிதுடித்துக்கொண்டிருக்கும் போது பின்னால் வரும் வாகனத்தில் உள்ளவர் பெட்ரோலை ஊற்றி தீ மூட்டுவார்இ இதனை போகும் வழியெல்லாம் தொடர்ந்து செய்வார்கள். இவ்வாறு ஒருவரை தள்ள முயன்றவேளை அவரை உயிருடன் எரிப்பதற்கு பெட்ரோல் இல்லாத நிலை காணப்பட்டது அதன் காரணமாகவே அவர் தப்பினார். அவரை முகாமிற்கு கொண்டு சென்றவர்கள் அவர் அதிஸ்டசாலி என்றார்கள் அவரை வேறு ஒரு நாள் அழைத்து வருவதே அவர்களின் நோக்கம். எனினும் அதிஸ்டவசமாக மற்றுமொரு நாள் அவருக்கு வரவில்லை அவர் அந்த வதை முகாமிலிருந்து தப்பினார்இ உயிர் பிழைத்தார்.அவரே பின்னபு எங்களின் ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தார். இது கண்டியின் அனிவத்தை என்ற பகுதியில் இடம்பெற்றது.கண்டியில் அந்த பகுதியில் வீதிகள் இருள்மயமாக காணப்பட்டன. கண்டி பாடசாலையொன்றில் இயங்கிய வதைமுகாமிலிருந்து இளைஞர்களை டிரக்கில் கொண்டு அவர்களை எப்படி கொலை செய்தனர்- 1988- 89 இல் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் முன்னாள் அதிகாரியின் வீடியோ | Virakesari.lk
  4. 08 Apr, 2025 | 03:23 PM "கலிப்சோ" எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட தொடருந்து சேவையானது நானுஓயா மற்றும் தெமோதரை புகையிரத நிலையங்களுக்கு இடையே இன்று (08) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த தொடருந்து அதன் பயணத்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு நானுஓயா புகையிரத நிலைய வளாகத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நானுஓயாவிலிருந்து தெமோதரை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படுவதுடன் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா ரயில் பெட்டிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ரயில் உணவு, இசை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளது. தற்போது நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மலையக தொடருந்து பாதையின் அதிசயங்களை பார்த்து இரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாகவே இந்த ரயில் சேவையை ஆரம்பித்ததாகவும், தெமோதரை வரை இயங்கும் ரயில் மீண்டும் பண்டாரவளை வரையிலும், பின்னர் தெமோதரையிலிருந்து பதுளை வரையிலும் இயக்கப்படும் என்றும் இந்த ரயிலில் பயணித்த ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த தெரிவித்தார். மேலும், விரைவில் மேலதிகமாக "கலிப்சோ" ரயில்களை சேவையில் இணைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டார். ‘கலிப்சோ’ ரயில் சேவை நானுஓயாவிலிருந்து ஆரம்பம் | Virakesari.lk
  5. 08 Apr, 2025 | 03:45 PM இதய நோய் காரணமாக வருடாந்தம் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக இதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகளவானோர் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு உள்ளிட்ட இதய பாதிப்புக்கள் காரணமாக உயிரிழக்கின்றனர். 20 சதவீதமானோர் கரோனரி ஆர்டரி என்ற இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இதயம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக தினமும் சுமார் 200 நோயாளிகள் வைத்தியசாலைக்கு செல்கின்றனர். இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவையே காரணம். ஆரம்பகாலத்தில் இருந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் இதய நோய் உருவாகும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கலாம். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயம் என அவர் தெரிவித்தார். இதய நோய் காரணமாக வருடாந்தம் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழப்பு! | Virakesari.lk
  6. 08 Apr, 2025 | 03:16 PM தமிழ் மக்களுக்கு உள்ளூராட்சி தேர்தல் ஆனது தமிழின இருப்புக்கான தேர்தலாக பார்க்கப்படுகின்ற நிலையில் தமிழ் மக்கள் தமது பொறுப்பை உணராவிட்டால் சரித்திரத்தில் இல்லாமல் ஆக்கப்படுவோம் என என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.. நேற்று திங்கட்கிழமை யாழ் நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் பேரவை இணைந்து நடாத்திய உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜேவிபி யின் மாயையில் சிக்கி தமிழ் மக்கள் ஒரு பகுதியினர் ஈர்க்கப்பட்டமை உண்மையான விடயம். தமிழ் மக்களுக்கு தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக ஆறு மாத காலங்கள் போதும் என நினைக்கிறேன். தென் இலங்கைக்கு வேண்டுமானால் உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தல் ஒரு சாதாரண தேர்தலாக அமையலாம் ஆனால் வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் உள்ளூராட்சி மன்ற அதிகாரம் என்பது தமிழ் மக்களின் உரிமை போராட்டம் சார்ந்த பிரச்சனை. சிங்கள தேசியவாதம் விதைக்கப்படுகின்ற நிலையில் தமிழ் தேசியவாதத்தை பாதுகாப்பதற்காகவும் தமிழ் மக்களின் இருப்புக்களை பாதுகாப்பதற்கான ஒரு தேர்தலாக உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலை பார்க்க வேண்டும். 2009 மே 18 உரிமை போராட்டம் மெளனிக்கக்கப்பட்ட பின் சிலர் உரிமைப்போயாட்டத்த்தை விலக்கி தமிழ் தேசிய நீக்க அரசியலை செய்ய ஆரம்பித்தனர். அதன் விளைவாக தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்த கட்சிகளை மெல்ல மெல்ல உடைத்து சிங்கள தேசியத்திற்கு உயிரோட்டம் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். அவ்வாறான ஒரு சந்தர்ப்பமாக நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்ட ஏக்கிய ராஜ்சிய என்ற ஒற்றை ஆட்சி அரசியலமைப்பை தமிழ் மக்களுக்கான தீர்வாக திணிக்க முயற்சியில் ஈடுபட்டார்கள். அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அரசியலில் இருந்து நீக்கி இருக்கின்ற நிலையிலும் ஏதோ ஒரு வகையில் சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்துவதற்காக காட்சியின் பொதுச் செயலாளராக வந்துள்ளார். வீட்டில் இருக்கும் கிருமியை அகற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்களுக்கு இருக்கின்ற நிலையில் அதற்கான முடிவுகளை அவர் சார்ந்த கட்சிக்கு வழங்க வேண்டும் தமிழ் மக்களால் ஜனநாயக வாக்குகளின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று தமிழரசு கட்சியை ஆக்கிரமித்து உள்ள நிலையில் அதிலிருந்து விடுபட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கட்டி எழுப்புவதற்காக எம்முடன் பலர் கைகோத்துள்ளார்கள். எங்களுடன் கூட்டாக இணைந்துள்ள தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்பு கிளை தலைவர் சட்டத்தரணி கேவி தவராசா எனது தந்தையார் காலத்தில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி மூலம் தமிழ் மக்களுக்கான தீவிர அரசியலில் ஈடுபட்டவர். எங்களுடன் இணைந்துள்ள தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் எம் கே சிவாஜிலிங்கம் தமிழ் தேசிய பற்றுடன் சுமார் 52வருட கால தீவிர அரசியலில் ஈடுபடுவரும் நிலையில் அவரும் எங்களுடன் கைகோத்துள்ளார். பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் தமிழ் தேசியத்திற்காக தமிழ் ஈழப் போராட்டத்திற்காக பல வழிகளில் உதவியவர் . முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜ் மறைவுக்குப் பின்னர் தலைவர் பிரபாகரனால் அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர் அவரோடு மூத்த சட்டத்தரணி தமிழின உணர்வாளர் ஸ்ரீகாந்தா அவர்களும் எம்முடன் இணைந்துள்ளனர். எமது கூட்டானது உள்ளூராட்சி மன்ற கூட்டாக மட்டும் அமையாது தொடர்ந்து தமிழ் தேசிய இருப்பை பாதுகாப்பதற்கும் தமிழினத்திற்கான குரலாகவும் இணைந்து பயணிப்போம். ஏனெனில் தமிழ் தேசிய நிலைப்பட்டில் உள்ளவர்களை இணைத்து ஏனையவர்களை நிராகரிப்பதன் மூலமே தமிழ் தேசியத்தை பாதுக்க்கலாம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்த பின்னரே எமது கூட்டினை அமைக்க வேண்டிய தேவையை உணர்ந்தோம். ஆகவே தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்டத்திற்காக உயிரிழந்த மாவீரர்களின் தியாகங்களை நினைத்துப் பாருங்கள் கை கால் இழந்தவர்களின் தியாகங்களை நினைத்துப் பாருங்கள் உங்கள் கைகளால் வழங்கப்படும் வாக்குகள் உண்மையான தமிழ் தேசியத்தை பாதுகாப்பதாக அமைய வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் மக்கள் பொறுப்பை உணராவிட்டால்.. சரித்திரத்தில் இல்லாமல் ஆக்கப்படுவோம்.. கஜேந்திரகுமார் எம்பி தெரிவிப்பு . | Virakesari.lk
  7. தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முடிந்தால் பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேள்வி கேளுங்கள் என வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சவால் விடுத்துள்ளார். அதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு, மண் அபகரிப்பு, மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியல் அமைப்பு, தமிழ் மக்களுக்கு இவ் அரசு என்ன செய்துள்ளது என்பதனை பற்றி நான் கேட்கின்றுன். முடிந்தால் நீங்கள் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கேள்விகளை கேளுக்கள் என்று மேலும் சவால்விடுத்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் திங்கட்கிழமை (07) மாலை மண்டூர் கணேசபுரம், கண்ணகி விளையாட்டுக் கழக மைதான அரங்கில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே இரா. சாணக்கியன் மேற்கண்டவாறு சவால் விடுத்துள்ளார். வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள சவால் ! | Virakesari.lk
  8. Published:Today at 3 AMUpdated:Today at 3 AM பிரியங்கா - நிகில் டெல்லியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் புதன்கிழமை 24 வயது பெண் ஒருவர் ரோலர் கோஸ்டரிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாணக்யபுரியைச் சேர்ந்த விற்பனை மேலாளரார் பிரியங்கா. கடந்த புதன்கிழமை மதியம் தனது வருங்கால கணவர் நிகிலுடன் கபாஷேராக்கு அருகிலுள்ள ஃபன் அண்ட் ஃபுட் வில்லேஜ் பொழுதுபோக்கு பூங்காவுக்குச் சென்றிருந்தார். அங்கு இருந்த நீர் விளையாட்டுகள் எனப் பல்வேறு விளையாட்டுகளில் பங்கெடுத்து மகிழ்ந்தனர். அதின் ஒருபகுதியாக, ரோலர்-கோஸ்டர் சவாரியை மேற்கொண்டனர். அது உச்சிக்கு சென்றபோது, அதன் ஸ்டாண்ட் உடைந்து, பிரியங்கா நேராக கீழே விழுந்தார். அதில் பிரியங்காவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நிகில், பிரியங்காவின் குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். நிகில் அளித்த தகவல்களின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு பிரியங்காவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரோலர் கோஸ்டர் சித்திரிப்பு படம் பிரியங்காவின் சகோதரர் மோஹித், ``அந்தப் பூங்காவில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை. என் சகோதரி மிகவும் தாமதமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனால்தான் அவர் உயிர் இழந்தார். இப்போதுதான் அந்தப் பூங்காவின் ஒரு பகுதி, ரோலர் கோஸ்டர் உட்பட, பழுதுபார்ப்பதற்காக மூடப்பட்டிருக்கிறது." என்றார். விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. உயிர் பலியில் முடிந்த ரோலர் கோஸ்டர் சவாரி; வருங்கால கணவர் கண்முன் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
  9. 06 Apr, 2025 | 02:09 PM யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடு செல்வதற்காக வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒருவரிடம் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பணத்தினை கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பணத்தினை வாங்கிய நபர் அவரை வெளிநாட்டுக்கும் அனுப்பாமல், அந்த பணத்தினை திருப்பியும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார். அந்தவகையில் மேற்படி குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.உதயானந்தன் தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இந்நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். யாழில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான பண மோசடி செய்த சந்தேகநபருக்கு விளக்கமறியல் | Virakesari.lk
  10. 06 Apr, 2025 | 03:51 PM நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் வைத்தியரால் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் 31 ஆம் திகதி பெண்ணொருவர் தனது தாயாருடன் பல்வலி மற்றும் தோல் நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது, தன்னை பரிசோதித்த வைத்தியர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மூலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். அதன்படி, கடந்த 2 ஆம் திகதி இந்த பெண்ணை சட்ட வைத்திய அதிகாரி பரிசோதித்தார். எனினும், வைத்திய அறிக்கையில் திருப்தியடையாமையினால், விசேட மருத்துவ குழுவால் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வைத்தியரால் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகம் ; விசாரணைகள் ஆரம்பம் | Virakesari.lk
  11. யாழ்.பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல் - சிரேஷ்ட மாணவர்கள் இருவர் விளக்கமறியலில். 06 Apr, 2025 | 04:05 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளனர். தாக்குதல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளான நாத்தாண்டிய பகுதியை சேர்ந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு சிரேஷ்ட மாணவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து இரு மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்கள் தொடர்பிலும் தாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , தலைமறைவாகவுள்ள அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல் - சிரேஷ்ட மாணவர்கள் இருவர் விளக்கமறியலில் | Virakesari.lk
  12. பத்தரமுல்லையில் உள்ள IPKF நினைவிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இலங்கையின் அமைதி, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த இந்திய அமைதி காக்கும் படையின் துணிச்சலான வீரர்களை நாங்கள் நினைவு கூர்கிறோம். அவர்களின் அசைக்க முடியாத துணிச்சலும் அர்ப்பணிப்பும் நம் அனைவருக்கும் உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளது. R Tamilmirror Online || IPKF நினைவிடத்தில் மோடி அஞ்சலி
  13. சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆண்டிற்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான (மாற்றுத் திறனாளிகளுக்கான) தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி இன்றையதினம் 03.04.2025 மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தேசிய மட்டத்தில் 25 மாவட்டத்திலிருந்தும் இதில் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். 06 தங்கப் பதக்கத்தையும் , 10 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டது. குறித்த விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 21 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியிருந்தனர். குறித்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் பங்குபற்றியிருந்தனர். (ப) தேசிய ரீதியாக நடைபெற்ற போட்டியில் 06 தங்கப் பதக்கங்களை சுவீகரித்த கிளிநொச்சி!.. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுகளில் கிளிநொச்சி முதலிடம்! மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுப்போட்டியில் 6 தங்கப் பதக்கங்களையும் 10 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனையீட்டியுள்ளது. சமூக சேவைகள் திணைக்களத்தால் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை ஹோமகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் 25 மாவட்டத்திலிருந்தும் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்தப் போட்டிகளில் முல்லைத்தீவு மாவட்டம் 5 முதலிடங்களையும் 4 இரண்டாமிடங்களையும் 5 மூன்றாமிடங்களையும் பெற்று தேசிய ரீதியில் மூன்றாவது இடத்தைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டம் சாதனை படைத்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் இரண்டு தங்கப் பதக்கங்களையும் மூன்று வெற்றிச் சான்றிதழ்களையும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுகளில் கிளிநொச்சி முதலிடம்!
  14. கிளிநொச்சி 23 மணி நேரம் முன் இராணுவத்தின் பிடியிலிருந்த பரந்தன் தொழிற்சாலையின் 15 ஏக்கர் காணி விடுவிப்பு பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் காணிகளில் 15 ஏக்கர் பரப்பளவான காணிகள் நேற்று முறைப்படி விடுவிக்கப்பட்டுள்ளன. காணி விடுவிப்புத் தொடர்பான ஆவணங்கள், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனிடம் 553ஆவது படைப்பிரிவின் நிர்வாக அதிகாரியால் கையளிக்கப்பட்டன. இராணுவத்தின் பிடியிலிருந்த பரந்தன் தொழிற்சாலையின் 15 ஏக்கர் காணி விடுவிப்பு
  15. 04 Apr, 2025 | 05:24 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் வரியை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம்கொடுக்க நேரிடும் அபாயம் இருக்கிறதென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் இலங்கைக்கு விதித்திருக்கும் 44வீத தீர்வை வரி அதிகரிப்பு, எமது ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. ஏனெனில் எமது ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கே அதிக ஏற்றுமதிகளை மேற்கொள்கிறோம். 2024ஆம் ஆண்டில் எமது நாடு 12.7 பில்லியன் டொலர் வரை ஏற்றுமதி செய்திருக்கிறது. அதில் 3 பில்லியன் டொலர் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.எமது மொத்த ஏற்றுமதியில் நூற்றுக்கு 23சதவீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த 23சதவீதத்துக்கும் அமெரிக்காவின் வரி அதிகரிப்பு தாக்கம் செலுத்தும். இதில் ஆடை தொழிற்சாலைக்கே பாரிய பாதிப்பு ஏற்படப்போகிறது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 3 பில்லியன் டொலரில் 2 பில்லியன் டொலர்கள் ஆடை உற்பத்தியாகும். அதனால் அமெரிக்காவின் இந்த தீர்வை வரி அதிகரிப்பால் எமது ஆடை தொழிற்சாலைகளுக்கு பாரிய தாக்கம் செலுத்தம் அபாயம் இருக்கிறது. அதனால் எங்களுக்கு ஆடை விலை அதிகரித்து ஏற்றுமதி செய்யும்போது எமது ஆடைகளுக்கான கேள்வி குறைந்துவிடும். எமக்கு ஏனைய நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும். இதன் காரணமாக நாட்டில் ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டு, பாரியளவில் தொழில் இல்லாமல் போகும் அபாயம் இருக்கிறது.இதுதொடர்பில் ஆராய்ந்து பார்க்க ஜனாதிபதி குழுவொன்றை அமைத்திருக்கிறார். ரணில் விக்ரமசிங்க கொண்டுவந்த அதிகாரிகளைக்கொண்டே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ரணிலின் இந்த அதிகாரிகளை விரட்டுவதாகவே அரசாங்கம் ஆரம்பத்தில் தெரிவித்து வந்தது. ஆனால் தற்போது ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரிகளை வைத்துக்கொண்டே அரசாங்கம் பொருளாதாரத்தை செயற்படுத்தி வருகிறது. குழு அமைத்து பிரயோசனம் இல்லை. இதற்கு அரசியல் தலைமைத்துவ வழிகாட்டல் மற்றும் சர்வதேச முகாமைத்துவம் ஒன்று இருந்தாலே இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியுமாகும். அதேநேரம் அரசாங்கம் எந்த திட்டமும் இல்லாமல் வருமான வரிகளை குறைத்துக்கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எந்த திட்டமும் இல்லாமலே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அதனால் அரசாங்கம் பொய் உரைப்பதை கைவிட்டு உண்மை நிலைமையை மக்களுக்கு தெரியப்படுத்தி உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். அதேநேரம் நாட்டில் மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு இந்த நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு செல்லும். அதேபோன்று எரிவாயு விலை அதிகரித்துள்ளதால் ஹோட்டல்களில் தேநீரின் விலையை 10ரூபாவால் அதிகரிக்க ஹோட்டல் உரிமையாயளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. முட்டை விலையை அரசாங்கம் வேண்டுமென்றே அதிகரித்துள்ளது. முட்டைக்கு 18வீத வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் முட்டை விலை 10ரூபா வரையாவது விலை அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளபோதும் அது ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த கொடுப்பனவுகளை நீக்கியே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் அடுத்த மாத சம்பளத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் சம்பள அதிகரிப்பு கிடைக்கப்போவதில்லை. ஆனால் அரசாங்கத்தின் இந்த சம்பள அதிகரிப்பு, குறித்த அரச ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களுக்கு பூரண நண்மை கிடைக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றார். பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் ஆபத்து - ஐ.தே.க. அரசாங்கத்துக்கு எச்சரிக்கை | Virakesari.lk
  16. (இராஜதுரை ஹஷான்) இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.அவரை அன்புடன் வரவேற்கிறோம். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதில் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய விடயங்களை உள்ளடக்கிய வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்துக்கும்இ நாட்டு மக்களுக்கும் அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் உள்ளடங்கங்கள் என்னவென்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை வெளிப்படுத்தாத வரையில் சாதாரண சந்தேகம் தோற்றம் பெறும். இலங்கை பிளவுப்படாத வெளிவிவார கொள்கையை கடைப்பிக்கின்ற நிலையில் பாதுகாப்பு தொடர்பில் ஒரு நாட்டுடன் மாத்திரம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது நாட்டின் வெளிவிவகார கொள்கையை கேள்விக்குள்ளாக்கும். இந்தியாவுக்கும்இ சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு தான் அனைத்து நாடுகளுடன் செயற்பட வேண்டும்.குறித்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இராணுவ பயிற்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டசபையில் இலங்கையின் கச்சத்தீவை மீளப்பெற்றுக் கொள்வதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் இந்தியாவுடனான பாதுகாப்பு குறித்து சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிகாலத்தில் தான் விடுதலை புலிகள் அமைப்புக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில் தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆகவே இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார். இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் சீனா அதிருப்தியடையும் - அரசாங்கத்துக்கு வீரசேகர எச்சரிக்கை | Virakesari.lk
  17. 11 இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை 05 Apr, 2025 | 09:09 AM யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை செயயப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீரியல் வளத்துறை திணைக்களத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்தினால் நல்லெண்ண அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட அனைவரும் யாழில் இருந்து மிரிகானைக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னர் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகைதந்துள்ள நிலையில் குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 11 இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை | Virakesari.lk
  18. 05 Apr, 2025 | 02:13 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில், புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வெள்ளிக்கிழமை (04) குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், உரிய தரப்பினரோடு தொடர்புகொண்டு கலந்துரையாடி தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் அத்துமீறி அமைக்கப்பட்ட வாடிகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழ் மீனவர்கள் பன்நெடிங்காலமாக மீன்பிடியில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் பகுதியை ஆக்கிரமித்து அங்கு வாடி அமைப்பதற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்து முனைப்புக்காட்டிவருகின்றனர். அந்தவகையில் கடந்த வருடமும் அத்துமீறி குறித்த பகுதியில் வாடிஅமைப்பதற்கு சில பெரும்பான்மையின மீனவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். இத்தகைய சூழலில் மீளவும், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக குறித்த புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மையின மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்துள்ளனர். அத்தோடு புலிபாய்ந்தகல் பகுதியில் பூர்வீகமாக மீன்பிடியில் ஈடுபடும் சில தமிழ் மீனவர்களின் வாடிகளை அடாவடித்தனமாக அகற்றியே இவ்வாறு தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் வாடி அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை OFRP-A-5491 CHW என்னும் இலக்கமுடைய மீன்பிடிப் படகொன்றும் அனுமதி பெறப்படாமல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளைப் பார்வையிட்டதுடன், அப்பகுதியில் பெரும்பான்மையின தென்னிலங்கை மீனவர்களால் அத்துமீறி வாடி அமைக்கப்பட்டமைதொடர்பில் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதேவேளை கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலரையும் உடனடியாக குறித்த இடத்திற்கு அழைத்து நிலமைகளைக் காண்பித்ததுடன் அவரிடமும் இதுதொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் க.மோகனகுமாருடனும் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி, அனுமதியின்றி கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகு தொடர்பிலும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் குறித்த பகுதியில் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அத்துமீறி அடாவடியாக தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலக் காணிப் பிரிவால் அப்பகுதியில் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்படுமென கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணி உத்தியோகத்தரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டதுடன், கொக்குத்தொடுவாய் கிராம அலுவலரும் இது தொடர்பில் உரிய இடங்களுக்கு தாம் தெரியப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார். அத்தோடு அனுமதி பெறப்படாது கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த படகு தொடர்பில் தம்மால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.மோகனகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிம் தெரிவித்திருந்தார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், கொக்குத்தொடுவாய் வடக்கு, தெற்கு, மத்தி ஆகிய மூன்று கிராமங்களிலும் வாழும் தமிழ் மக்களின் ஒரேயொரு மீன்பிடித்துறையாக இந்த புலிபாய்ந்தகல் பகுதியே காணப்படுகின்றது. இந்நிலையில் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடும் வகையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இத்தகைய அத்துமீறல், அடாவடித்தனமான முயற்சிகளை தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது. ஓரளவிற்குத்தான் நாமும் பொறுமையாக இருக்கமுடியும் என்றார். இதன்போது கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தலைவர் ந.மதியழகன், தமிழரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச உபசெயலாளர் கி.சிவகுரு ஆகியோரும் குறித்த இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு - புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி | Virakesari.lk
  19. 05 Apr, 2025 | 04:32 PM ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கொழும்பு இளைஞன் முகமட் ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டுள்ள ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளதாவது கொழும்பில் 22 வயது முகமது ருஸ்டி மார்ச் 25ம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டுள்ள ஆவணத்தை சர்வதேச மன்னிப்புச்சபை பார்வையிட்டுள்ளது. இலங்கையின் புதிய தலைமை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாக அதன் அரசாங்கம் வாக்குறுயளித்துள்ள போதிலும்,அதிகாரிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவது குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம். ருஸ்டியை தடுத்துவைப்பதற்கான உத்தரவில்,அவர்தீவிரவாத சித்தாந்தங்களால் தூண்டப்பட்டு,சமூகங்களிற்கு இடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்படுவது மற்றும் பாதுகாப்பு படையினரிடம் அத்தகைய தகவல்களை தெரிந்தே மறைப்பது குறித்து சந்தேகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ருஸ்டி கைதுசெய்யப்பட்டு இரண்டு வாரங்களான பின்னரும்,அவரை கைதுசெய்தமை அல்லது தொடர்ந்து தடுத்து வைத்துள்ளமை ஆகியவற்றை நியாயப்படுத்தக்கூடிய குற்றவியல் செயற்பாடுகள் எவற்றிற்குமான ஆதாரங்களை வெளியிடக்கூடிய நிலையில் இலங்கை அதிகாரிகள் இல்லை. இலங்கை அதிகாரிகள் உடனடியாக ருஸ்டிக்கான நியாயமான நடைமுறைகளை உறுதி செய்யவேண்டும்,அவர் தனது குடும்பத்தவர்கள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு தடையற்ற அனுமதியை வழங்கவேண்டும். மேலும் அவர் சர்வதேச அளவில் குற்றம் என கருதக்கூடிய எவற்றிலாவது ஈடுபட்டார் என்பதற்கான நம்பகதன்மை மிக்க ஆதாரங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டால் அவரை விடுதலை செய்யவேண்டும். கொழும்புஇளைஞன் ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு அனுரகுமார திசநாயக்க உத்தரவிட்டுள்ள ஆவணத்தை பார்வையிட்டுள்ளோம்- பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது ஏமாற்றமளிக்கின்றது- சர்வதேச மன்னிப்புச்சபை | Virakesari.lk
  20. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும் என தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஒற்றையாட்சிக்குள் தீர்வு சாத்தியமில்லையென்றும் சமஸ்டித்தீர்வு வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடியிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம் : தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தல் | Virakesari.lk
  21. யாழ்ப்பாணம் மாநகர சபையானது நடு வீதியில் குப்பைகளை கொட்டுவதால் பயணிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். யாழ்ப்பாணம் மாநகர சபையானது நடு வீதியில் குப்பைகளை கொட்டுவதால் பயணிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்; மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் இடம் உள்ளது. ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் வீதியூடாகவே அந்த குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கழிவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு கழிவுப் பொருட்களை கொண்டு செல்லப்படும்போது மாநகர சபையின் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றுவதில்லை. பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளை திறந்தவாறு கொண்டு செல்வதால் அந்த கழிவுகள் வீதியில் கொட்டப்படுவதுடன், காற்றுடன் அந்த கழிவுப் பொருட்களின் தூசுகள் பறந்து வீதியில் செல்வோரது கண்களுக்குள் செல்வதானால் வாகனத்தை சரியாக செலுத்த முடியாத அபாயகரமான நிலைகளும் ஏற்படுகின்றன. இது இவ்வாறு இருக்கையில் இன்றையதினம் காக்கைதீவு சந்தையில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் பக்கமாக அண்ணளவாக 200 மீட்டர்கள் தொலைவில் நடு வீதியில் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு காணப்படுகின்றன. இந்த கழிவுகளானது மாநகர சபையின் கழிவு பொருட்களை ஏற்றும் வாகனத்தில் இருந்து கொட்டப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த வீதியானது 784, 785 மற்றும் 789 ஆகிய வழித்தட பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் மற்றும் சித்தங்கேணி நோக்கி பயணிக்கும் பிரதான வீதியாக காணப்படுகிறது. இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளமையால் மக்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டவாறு பயணத்தை மேற்கொள்கின்றனர். இது குறித்து மானிப்பாய் பிரதேச சபையின் செயலாளரை தொடர்புகொண்டு வினவிய வேளை, குறித்த வீதியில் யாழ். மாநகர சபையினர் கழிவுகளை கொட்டி இருக்கலாம் எனவும், அவர்கள் இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக இவ்வாறு வீதியில் கழிவுகளை கொட்டி செல்வதாகவும், தாங்கள் இது குறித்து தெரியப்படுத்தியும் அவர்கள் அதனை சீர் செய்வதாக தெரியவில்லை என கூறினார். உள்ளூராட்சி சபைகள் என்பன கிராமங்களையும், நகரங்களையும் அபிவிருத்தி செய்வதையும், தூய்மையை பேணுவதையுமே பிரதான நோக்கமாக கொண்டு காணப்படுகிறன. இவ்வாறு இருக்கின்ற நிலையில் மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே இவ்வாறு வீதிகளில் குப்பைகளை கொட்டும்போது இவர்கள் ஏனைய விடயங்களில் எவ்வாறு சரியாக நடந்து கொள்வார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருகையில்; மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் இடம் உள்ளது. ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் வீதியூடாகவே அந்த குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கழிவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு கழிவுப் பொருட்களை கொண்டு செல்லப்படும்போது மாநகர சபையின் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றுவதில்லை. பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளை திறந்தவாறு கொண்டு செல்வதால் அந்த கழிவுகள் வீதியில் கொட்டப்படுவதுடன், காற்றுடன் அந்த கழிவுப் பொருட்களின் தூசுகள் பறந்து வீதியில் செல்வோரது கண்களுக்குள் செல்வதானால் வாகனத்தை சரியாக செலுத்த முடியாத அபாயகரமான நிலைகளும் ஏற்படுகின்றன. இது இவ்வாறு இருக்கையில் இன்றையதினம் காக்கைதீவு சந்தையில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் பக்கமாக அண்ணளவாக 200 மீட்டர்கள் தொலைவில் நடு வீதியில் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு காணப்படுகின்றன. இந்த கழிவுகளானது மாநகர சபையின் கழிவு பொருட்களை ஏற்றும் வாகனத்தில் இருந்து கொட்டப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த வீதியானது 784, 785 மற்றும் 789 ஆகிய வழித்தட பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் மற்றும் சித்தங்கேணி நோக்கி பயணிக்கும் பிரதான வீதியாக காணப்படுகிறது. இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளமையால் மக்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டவாறு பயணத்தை மேற்கொள்கின்றனர். இது குறித்து மானிப்பாய் பிரதேச சபையின் செயலாளரை தொடர்புகொண்டு வினவிய வேளை, குறித்த வீதியில் யாழ். மாநகர சபையினர் கழிவுகளை கொட்டி இருக்கலாம் எனவும், அவர்கள் இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக இவ்வாறு வீதியில் கழிவுகளை கொட்டி செல்வதாகவும், தாங்கள் இது குறித்து தெரியப்படுத்தியும் அவர்கள் அதனை சீர் செய்வதாக தெரியவில்லை என கூறினார். உள்ளூராட்சி சபைகள் என்பன கிராமங்களையும், நகரங்களையும் அபிவிருத்தி செய்வதையும், தூய்மையை பேணுவதையுமே பிரதான நோக்கமாக கொண்டு காணப்படுகிறன. இவ்வாறு இருக்கின்ற நிலையில் மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே இவ்வாறு வீதிகளில் குப்பைகளை கொட்டும்போது இவர்கள் ஏனைய விடயங்களில் எவ்வாறு சரியாக நடந்து கொள்வார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது. நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!
  22. 04 Apr, 2025 | 01:21 PM சென்னையிலிருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் நேற்று வியாழக்கிழமை (03) மாலை வந்தடைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (04) மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளன. 400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு "Royal madras yacht club" அங்கத்தவர்களால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தனர். இன்று மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி புறப்படுகின்ற இப்படகு பின்னர் பூம்புகாரை அடைந்து அங்கிருந்து பாண்டிச்சேரியை சென்றடைந்து அங்கிருந்து கோவளத்தினையும் இறுதியில் மீண்டும் சென்னையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. காங்கேசன்துறையை வந்தடைந்த பாய்மரக் கப்பலில் இருந்த பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் வடமாகாண ஆளுனர் நா.வேதநாயகன், வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், சுற்றுலா துறை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர். யாழ். காங்கேசன்துறைக்கு வந்த பாய்மரப்படகுகள் நாகபட்டினம் நோக்கி புறப்பட்டன | Virakesari.lk
  23. பிராந்தியத்தின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி வீதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இலங்கையை விட குறைந்த வரி விதிக்கப்படும் நாடுகள் விரைவில் அமெரிக்க சந்தையில் நுழையும் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படும். இது ஆடை தொழிற்துறையை பெரிதும் பாதிக்கும் என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 2ஆம் திகதி அறிவித்த 10 வீத அடிப்படை வரியை இன்று முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதன் கீழ், இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத வித்தியாசமான விகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இது 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். எமது பிராந்தியத்தின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க வரி வீதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இலங்கையை விட குறைந்த சுங்க வரி விதிக்கப்படும் நாடுகள் விரைவில் அமெரிக்க சந்தையில் நுழையும் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படும். இலங்கையின் ஆடை ஏற்றுமதிகளில் மிகப்பெரிய ஒற்றை சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. இது மொத்த ஏற்றுமதிகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது. 2023ஆம் ஆண்டு மாத்திரம் ஆடை ஏற்றுமதி 5.5 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது. இந்த வரி மாற்றம் காரணமாக இலங்கை ஏற்றுமதிகளுக்கு உடனடியாகவும் கடுமையாகவும் பாதிப்பு ஏற்படலாம். இதன் விளைவாக, அமெரிக்க சந்தைக்கான நமது ஏற்றுமதிகளில் கணிசமான பங்கு போட்டிச் சந்தைகளுக்கு மாற்றப்படுவதை நாம் காணலாம். எனினும், அமெரிக்காவில் நாம் ஈட்டியிருந்த சந்தைப் பங்கை மற்ற சந்தைகளில் ஈடுசெய்ய முடியாது. இந்த நிலைமைக்கான பொருத்தமான நடவடிக்கைகளை தீர்மானிக்க, இலங்கை அரசு ஏற்கனவே தொழில்துறைப் பிரதிநிதிகள் மற்றும் பிற தரப்பினருடன் கலந்தாலோசனைகளைத் தொடங்கியுள்ளது. இந்த நெருக்கடியைக் தவிர்க்க அரசு மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள நாணய திட்டத்தின் வரம்புகளுக்குள் இருக்கும்போது, அமெரிக்க அரசால் உருவாக்கப்பட்ட இந்த சிக்கலுக்கு மிகவும் பொருத்தமான தீர்வுகளை எவ்வாறு வழங்குவது என்பதைக் கண்டறிய தொடர்புடைய அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறோம். இந்த சவால்கள் இடையேயும், இலங்கையின் ஆடைத்துறை வெளிப்படைத்தன்மை, நெறிமுறைபூர்வமான உற்பத்தி மற்றும் நிலைத்தன்மைக்கான மதிப்புகளை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. தற்போது நாங்கள் தொழில்துறையின் உற்பத்தித் திறன், செயல்திறன் மற்றும் நம்பகமான மூலப்பொருட்களின் பயன்பாட்டை உறுதி செய்வதில் கவனம் செலுத்தியுள்ளோம். ஆனால் இது ஒரு மிகவும் கடுமையான நெருக்கடியாகும், இதை ஒரு அவசர தேசியப் பிரச்சினையாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் புதிய வரி கொள்கைக்கு இலங்கை ஆடைத் தொழிற்துறை எதிர்ப்பு | Virakesari.lk
  24. இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் வெள்ளிக்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினைகளில் இழுவைமடிப் படகுகள் ஊடாக இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவதும் ஒன்று. வடமாகாண தமிழ் கடற் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் நிலையில் இருக்கிறது. எனவே கட்டாயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இது தொடர்பாக பேச வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. இது தொடர்பாக நான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளேன் எனத் தெரிவித்தார். இதேவேளை, கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு மோடி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறித்தும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்தார். அதன்படி, இது ஒரு அரசியல் ரீதியான தீர்மானமே. இது நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒரு விடயம் என அவர் குறிப்பிட்டார். கடற் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவது தொடர்பில் இந்திய பிரதமர் மோடியிடம் பேச வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா | Virakesari.lk
  25. அபு அலா திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ், அவருக்கு குற்றவாளி ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து புதன்கிழமை (02) தீர்ப்பளித்தார். கிண்ணியா கட்டையாறு மதரஸா வீதியில் வசித்து வரும் 38 வயதான ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா கட்டையாறு பகுதியில் மதரஸாவுக்கு 2015 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி சென்ற சிறுவனை பலவந்தமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் கடந்த பத்து வருடங்களாக இடம் பெற்று வந்த நிலையில் புதன்கிழமை (02) திறந்த நீதிமன்றில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. மதரஸாவுக்குசென்ற மாணவனை பலாத்காரமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறி அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும், 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அந்த தண்ட பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதை கட்டத் தவறினால், மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை வழங்குமாறும் பாதிக்கப்பட்டோர் நிதியத்திற்கு தண்டனை பணத்தில் இருந்து 20 வீதம் செலுத்த வேண்டும் எனவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Tamilmirror Online || மதரஸா மாணவன் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.