Everything posted by பிழம்பு
-
உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு
17 Apr, 2025 | 04:24 PM பூமியிலிருந்து தொலைதூரத்திலுள்ள நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கோளொன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்தும் கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. பூமியிலுள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள் இந்த கோளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த முடிவுகளை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக தரவுகள் அவசியம் என ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் குழுவினரும் வானியல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு | Virakesari.lk
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
உதய கம்மன்பில பிள்ளையானை சந்தித்தது சட்டத்தரணியாகவா?, அரசியல்வாதியாகவா? - அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ சட்டத்தரணி என்ற போர்வையில் ஒரு அரசியல்வாதியாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) உதய கம்மன்பில சிறையில் வைத்து சந்தித்துள்ளார் என சுகாதார, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கண்டியில் நடந்த தேசிய எண்ணெய் தேய்க்கும் வைபவத்தை அடுத்து ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உதய கம்மன்பில நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காடியதை அனேகமாக பொதுமக்கள் கண்டிருக்க முடியாது. இந்நிலையில் அவர் பிள்ளையானுக்காக ஆஜராகும் ஒரு சட்டத்தரணியாகக் தன்னைக் கூறிக் கொண்டு அவரை சந்தித்ததில் வேறு கதைகளும் இருக்கலாம். பிள்ளையானுக்கு, உதய கம்மன்பில சட்டத்தரணியானதன் ஊடாக முன்னைய காலங்களில் எந்தளவு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்பதை ஊகிக்க முடியும். பிரபலமான வழங்குகளில் சட்டத்தரணியாகத் தொழிற்படாத ஒருவர் இப்படி இந்த வழக்கிற்கு திடீர் எனத் தோன்ற முற்பட்டார் என்பது சிந்திக்க வேண்டிய விடயம். முன்னைய காலங்களில் கீழே ஒதுக்கப்பட்ட பல்வேறு ஊழல்களுக்கான கோவைகள் தற்போது மேல் எடுக்கப்பட்டு குற்றத்தடுப்பு மற்றும் மோசடி ஒழிப்புப் பிரிவினர் செயற்பட ஆரம்பித்துள்ளனர். சட்டரீதியாகச் செய்ய வேண்டியவைகளை நீதித்துறை மேற்கொள்கிறது. அரசு என்ற வகையில் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலையை மட்டுமே அரசு செய்கிறது. கடந்த காலத்தில் அழிவுக்கு உற்பட்ட பல நிறுவனங்களில் சுகாதரத்துறையே முன்னிலையில் உள்ளது. சுகாதாரத்துறையில் இன்று மருந்துகளுக்கு ஏதும் பிரச்சினைகள் என்றால் அது 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பிரதிபலனாகும். அக்காலப்பகுதியில் சரியான முறையில் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படவில்லை. உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்று வெறுமனே உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களை உருவாக்குவது எமது நோக்கமல்ல. கிராமிய மட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான மாபெறும் மாற்றம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம். நாம் மேற்கொள்வது அபிவிருத்தி என்பதை விட பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெறும் செயற்பாடாகும் என்பது பொருத்தமாகும். கிராம மட்டத்தில் அபிவிருத்திக்கான ஒரு பொறி முறையை அமைக்க முயற்சிக்கிறோம். எனவேதான் அதற்காக நாம் ஆதரவு கேட்கிறோம் என்றார். உதய கம்மன்பில பிள்ளையானை சந்தித்தது சட்டத்தரணியாகவா?, அரசியல்வாதியாகவா? - அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ | Virakesari.lk
-
மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனையளிப்போம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு
12 Apr, 2025 | 04:47 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தென்னாபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுப்போம். உலகில் உள்ள சிறந்த விசாரணை நிபுணர்களை அழைத்து மனித படுகொலையாளியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது இறுதி காலத்திலாவது தண்டனை வழங்குவோம் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பட்டலந்த அறிக்கையில் வரலாற்று சிறப்புமிக்க பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அதற்கு அப்போதைய அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். 1983 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டது.1987 ஆம் ஆண்டு வரை இந்த நாட்டில் ஆயுத போராட்டம், மக்கள் போராட்டம் ஏதும் காணப்படவில்லை. நான்கு ஆண்டுகாலமாக அடக்கு முறைகளும், படுகொலைகளும், அழிவுகளும் மாத்திரமே இருந்தது. 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது யார் தீ வைத்தது. அப்போது எதிர்க்கட்சியாக செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தான் நாடு தழுவிய ரீதியில் தீ வைத்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முரண்பாடு காணப்பட்ட சந்தர்ப்பத்தில் சுதந்திர கட்சி கலவரத்துக்கு மத்தியில் கொள்ளையடித்தது. இதற்கு பல சாட்சிகள் உள்ளன. இந்த சாபத்தினால் தான் சுதந்திர கட்சி இன்று அழிவடைந்துள்ளது. இந்த நாட்டில் நல்லிணக்கம் என்ற விடயத்தை மறக்க முடியாது.பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி எதிர்க்கட்சிகள் ஏதும் பேசவில்லை. எவ்விதமான உரிய காரணிகளுமில்லாமல் தான் 1982 ஆம் ஆண்டு ஜே.ஆர். தேர்தலை பிற்போட்டார். 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்தை உருவாக்கினார். இதனால் சுமார் 3 இலட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இவர்கள் ஒருபோதும் நாட்டுக்கு வரமாட்டார்கள். மனித படுகொலைக்காகவே நாட்டை நாசம் செய்தார்கள். ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக்கு இந்த நாட்டில் வாழ்ந்த தமிழர்களும், மக்கள் விடுதலை முன்னணியும், கம்யூனிச கட்சியும் ஒருபோதும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை.ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகக ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார்கள். அதன் விளைவாகவே போராட்டங்களும், கலவரங்களும் தோற்றம் பெற்றன. மனித படுகொலையாளிகளுக்கு தண்டனையளிப்பதற்காக மாத்திரம் பட்டலந்த விசாரணை அறிக்கையை கொண்டு வரவில்லை. நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது எமது பிரதான நோக்கமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராகவே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். வடக்கில் நேர்ந்த அழிவு பற்றி பேசுவதில்லையா என்று வடக்கு மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள். எமது கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் நந்திகடல் வரை சென்று உயிர்தப்பியவர்கள். நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கான விசேட திட்டங்களை இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முதல் பகுதியில் செயற்படுத்துவோம். புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம். தென்னாப்பிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுப்போம். உலகில் உள்ள சிறந்த விசாரணை நிபுணர்களை அழைத்து மனித படுகொலையாளியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது இறுதி காலத்திலாவது தண்டனை வழங்குவோம் என்றார். மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனையளிப்போம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு | Virakesari.lk
-
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதம் : ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறல்
12 Apr, 2025 | 10:57 AM (நா.தனுஜா) இலங்கையின் இவ்வாண்டு பொருளாதாரம் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது. அதேவேளை அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்வை வரிகள் தொடர்பில் கருத்துவெளியிட்டிருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான சிரேஷ்டபொருளியலாளர் லிலியா அலெக்சன்யன், அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்வைகளுக்கு விலக்களிக்கப்படக்கூடும். அல்லது பேச்சுவார்த்தைகள் ஊடாக அவ்வரி அறவீட்டு வீதத்தைக் குறைத்துக்கொள்ளமுடியும். அதன்மூலம் சகலரும் குறைந்தளவிலான தாக்கங்களுக்கே முகங்கொடுக்கநேரும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று இலங்கையின் நிதியியல் மற்றும் நாணயக்கொள்கை முகாமைத்துவம் சிறப்பானதாகக் காணப்படுவதாகவும், அதனூடாக வெளியகக்கடன் பெறுமதி மற்றும் பணவீக்கம் என்பன குறைவடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்காஃபுமி கடொனோ, இந்த அடைவுகளுக்கு மத்தியிலும், இலங்கையின் மீட்சி இன்னமும் நலிவான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு, தற்போது பெருமளவுக்குப் பெரும்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நீண்டகால அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்கு தற்போதைய கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது அவசியமாகும். அதுமாத்திரமன்றி உலகளாவிய வர்த்தக அழுத்தங்கள் உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கு பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்திக்கொள்வது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதம் : ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறல் | Virakesari.lk
-
'புத்தாண்டுப் பலகாரங்களுக்கான’ விலையானது, 2024 ஐ விட 2025 இல் 7% அதிகரித்துள்ளது
11 Apr, 2025 | 03:40 AM 2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய “பலகாரங்கள் அடங்கிய மேசையைத்” தயார் செய்வதற்கான செலவினம் 7% ஆல் அதிகரித்துள்ளதோடு இது 2019ஆம் ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும். இது, வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் முதன்மையான பொருளாதார தகவல் தளமான PublicFinance.lk ஆல் மேற்கொள்ளப்படும் வருடாந்த ‘புத்தாண்டு பலகார மேசையைத்’ தயார் செய்வதற்கான பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. 2024 மார்ச் மாதம் முதல் 2025 மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மூலப்பொருட்களின் விலைகளில் 7% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இப் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. இதற்கு முதன்மையாக, தேங்காய் விலை மற்றும் தேங்காய் எண்ணெய் விலைகள் முறையே 80% மற்றும் 40% ஆல் அதிகரித்தமையே காரணமாகும். ஏனைய பெரும்பாலான பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன அல்லது மாற்றமடையவில்லை. 2019 உடன் ஒப்பிடும்போது மூலப்பொருட்களின் விலையானது, 2024 ஆம் ஆண்டில் 2.2 மடங்கு அதிகரித்துள்ளதோடு 2025ஆம் ஆண்டில் 2.4 மடங்கு அதிகரித்துள்ளது. செழுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் இலங்கையின் பாரம்பரிய இனிப்புகள் பல புத்தாண்டுக்கான தின்பண்டங்களில் இடம்பெறும். குடும்பங்களுக்கு இடையே இவற்றில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும், பாரம்பரிய புத்தாண்டு இனிப்புப் பண்டங்களில் பொதுவாக பாற்சோறு, கொக்கிஸ், வாழைப்பழம், அலுவா, பணியாரம், தொதல், பயத்தம் பணியாரம் மற்றும் பட்டர் கேக் ஆகியவை பெரும்பாலும் இடம்பிடிக்கும். இந்தப் பகுப்பாய்வில் பிரபல யூடியூப் சேனலான “அப்பே அம்மா” சேனலில் உள்ள சமையல் குறிப்புகளின் அடிப்படையில், 4-5 நபர்களைக் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான அளவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான மூலப்பொருட்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன. மின்சாரம், எரிவாயு மற்றும் மசாலாப் பொருட்களுக்கான செலவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. 2019 (ஏப்ரல் வாரம் 1), 2023 (ஏப்ரல் வாரம் 1), 2024 (மார்ச் வாரம் 3) மற்றும் 2025 (மார்ச் வாரம் 3) ஆகியவற்றுக்கான கொழும்பு மாவட்ட திறந்த சந்தையின் வாராந்த சராசரி சில்லறை விலைகள் உட்பட விலைகளுக்கான தரவு நேரடியாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. 'புத்தாண்டுப் பலகாரங்களுக்கான’ விலையானது, 2024 ஐ விட 2025 இல் 7% அதிகரித்துள்ளது | Virakesari.lk
-
இலங்கையில் முதல் முறையாக ஆழ்கடலில் புத்தாண்டு கொண்டாட்டம்
11 Apr, 2025 | 12:37 PM இலங்கையில் முதல் முறையாக திருகோணமலைக்கு கடற்படை தளத்தில் ஆழ்கடலில் சிங்கள - தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இலங்கை கடற்படையின் சுழியோடி பிரிவினரின் ஒத்துழைப்புடன் கடற்படையின் மலிமா ஹொஸ்பிடாலிட்டி சர்வீசஸ் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது. சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் இலங்கையின் அழகிய நீரின் ஆற்றலை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சுழியோடும் வீரர்கள் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளை நடத்தி, விளையாட்டுக்களில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இலங்கையில் முதல் முறையாக ஆழ்கடலில் புத்தாண்டு கொண்டாட்டம் | Virakesari.lk
-
அதிவிரைவு டோரா படகின் துணையோடு கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு - 6 பேர் கைது
11 Apr, 2025 | 11:27 AM யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதிகளில் ஒளி பாய்ச்சி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (10) காலை கைது செய்யப்பட்டனர். கடந்த புதன்கிழமை (09) இரவு தொடக்கம் வியாழக்கிழமை காலை வரை வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளும் அங்குள்ள கடற்பரப்பு பகுதிகளும் சமநேரத்தில் வெற்றிலைக்கேணி கடற்படையினரால் திடீரென சுற்றிவளைக்கப்பட்டன. கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடல் பகுதிகளில் பல படகுகள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த கடற்பரப்புக்கு கடற்படையின் படகுகள் அனுப்பப்பட்டு, காங்கேசன்துறையில் இருந்து அதிவிரைவு டோரா படகும் வரவழைக்கப்பட்டு, இக்கடற்பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் 5 படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ். நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதிவிரைவு டோரா படகின் துணையோடு கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு - 6 பேர் கைது | Virakesari.lk
-
புலிபாய்ந்தகல்லில் சட்டவிரோத மீன்பிடி குடிசைகளை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தல்; வாடியை அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு
11 Apr, 2025 | 06:32 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை இனத்தவர்களால் அமைக்கப்பட்ட வாடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியநிலையில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மஞ்சுளாதேவி சதீசன் குறித்த பகுியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்றுமாறு குறித்தபகுதியில் வெள்ளிக்கிழமை (11) அறிவித்தலைக் காட்சிப்படுத்தியுள்ளார். அத்தோடு அப்பகுதியில் அத்துமீறி வாடி அமைத்த சந்தேகநபராக இனங்காணப்பட்ட W.L.நிசாந்த என்னும் பெரும்பான்மை இனத்தவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கரைதுறைப்பற்றுபிரதேசசெயலாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழ் மீனவர்கள் பன்நெடுங்காலமாக மீன்பிடியில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் பகுதியை ஆக்கிரமித்து அங்கு வாடிஅமைப்பதற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்து முனைப்புக்காட்டிவருகின்றனர். அந்தவகையில் கடந்தவருடமும் அத்துமீறி குறித்த பகுதியில் வாடிஅமைப்பதற்கு சில மீனவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். இத்தகைய சூழலில் மீளவும், கடந்த 02.04.2025அன்று குறித்த புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மையின மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்திருந்தனர். அத்தோடு புலிபாய்ந்தகல் பகுதியில் பூர்வீகமாக மீன்பிடியில் ஈடுபடும் சில தமிழ் மீனவர்களின் வாடிகளை அடாவடித்தனமாக அகற்றியே இவ்வாறு தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் வாடி அமைக்கப்பட்டுமிருந்தது. அதேவேளை அப்பகுதியில் OFRP-A-5491 CHW என்னும் இலக்கமுடைய மீன்பிடிப் படகொன்றும் அனுமதி பெறப்படாமல் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று கடந்த 04.04.2025அன்று அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளைப் பார்வையிட்டதுடன், அப்பகுதியில் பெரும்பான்மையின தென்னிலங்கை மீனவர்களால் அத்துமீறி வாடி அமைக்கப்பட்டமைதொடர்பில் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்ருக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதேவேளை கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலரையும் உடனடியாக குறித்த இடத்திற்கு அழைத்து நிலமைகளைக் காண்பித்ததுடன் அவரிடமும் இதுதொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் க. மோகனகுமாருடனும் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி, அனுமதியின்றி கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுதொடர்பிலும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் குறித்த பகுதியில் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அத்துமீறி அடாவடியாக தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலக்காணிப் பிரிவால் அப்பகுதியில் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்படுமென கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணி உத்தியோகத்தரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கொக்குத்தொடுவாய் கிராம அலுவலரும் இது தொடர்பில் உரிய இடங்களுக்கு தாம் தெரியப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார். அத்தோடு அனுமதிபெறப்படாது கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த படகுதொடர்பில் தம்மால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.மோகனகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.04.2025 இன்றையதினம் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணி உத்தியோகத்தருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கேட்டதுடன், உடனடியாக புலிபாய்ந்த கல் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வாடியை அகற்ற அப்பகுதியில் அறிவித்தல்களை காட்சிப்படுத்துமாறும் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று மேலதிக பிரதேசசெயலாளர், கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமஅலுவலர் ஜெயபாலகுணசேகரன் சுஜீனோ ஆகியோர் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தனர். இந் நிலையில் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலவாடிகள் முழுமையாகவும், சிலவாடிகள் பகுதியளவிலும் அகற்றப்பட்டுக் காணப்பட்டிருந்தன. இவ்வாறு குறித்த பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தவர்கள் அங்குள்ள நிலைமைகளை அவதானித்தனர். அதனைத் தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளரால் குறித்தபகுதியில் சட்டவிரோத மாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை முழுமையாக அகற்றுமாறு அறிவித்தல்களும் அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டன. கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, " கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமஅலுவலர் பிரிவில் அமைந்துள்ள புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் காணப்படும் இக்காணியானது அரச காணியாகக் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் எமது அனுமதியின்றி வாடிகள் அமைத்தல் மற்றும் எவ்விதமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளவேண்டாம் என்பதனை தெரிவித்துக்கொள்வதுடன் மீறி வாடிகள், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டில் தங்கள்மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த பகுதிக்கு வருகைதந்த W.L.நிசாந்த என்பவர் தாமே அப்பகுதியில் வாடி அமைத்ததாகத் தெரிவித்தார். இந் நிலையில் அரச காணியில் அனுமதியின்றி எவ்வாறு வாடி அமைத்தீர்கள் என குறித்த நபரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும், பிரதேசசெயலாளர் ஆகியோர் கேள்வி எழுப்பியதுடன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குறித்த நபரிடம் பெயர் விபரங்களைப் பெற்றதுடன் அவருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். அத்தோடு குறித்த பகுதியில் அனுமதியின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுக்குரிய சட்டநடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் தொலைபேசியூடாக வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் அதற்குரிய சட்டநடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. புலிபாய்ந்தகல்லில் சட்டவிரோத மீன்பிடி குடிசைகளை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தல்; வாடியை அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு | Virakesari.lk
-
யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டார் பிரதமர் ஹரிணி
11 Apr, 2025 | 04:16 PM யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (11) காலை இடம்பெற்ற நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய பகல் வேளையில் ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே ஆலய வழிபாட்டிலும் கலந்துகொண்டார். பிரதமரின் வருகையை முன்னிட்டு ஆலய வளாகத்துக்குள் விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் அனைவரும் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்ததால் பக்தர்கள் விசனம் தெரிவித்ததையடுத்து ஆலய தர்மகர்த்தா முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டார் பிரதமர் ஹரிணி | Virakesari.lk
-
'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானதன் பின்னணி!
மிழக பா.ஜ.க-வின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்கிற தகவல் கடந்த சில வாரங்களாக தீயாக பரவியது. இந்தசூழலில்தான் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதன் பின்னணி என்ன? கடந்த 2021-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது, பா.ஜ.க. முடிவில் அந்த கட்சிக்கு நான்கு இடங்கள் கிடைத்தன. பிறகு அ.தி.மு.க தலைவர்கள் குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்ததால் தே.ஜ கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியது. இதனால் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலுக்கு பா.ஜ.க தள்ளப்பட்டது. முடிவில் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றிபெறவில்லை. இதற்கு அ.தி.மு.க-வுடனான உறவை முறித்துக்கொண்டதுதான் காரணம் என பா.ஜ.க-வுக்குள் சர்ச்சை வெடித்தது. பாஜக தலைவர் அண்ணாமலை இந்தசூழலில்தான் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என பா.ஜ.க-வின் டெல்லி தலைமை விரும்புகிறது. இப்படியான பரபர சூழலில்தான் அமித் ஷா, எடப்பாடி இடையிலான சந்திப்பு நடைபெற்றது. அதில், 'அண்ணாமலையை தலைவராக வைத்துக்கொண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க முடியாது' என எடப்பாடி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், 'சீனியர் தலைவர்களை அண்ணாமலை மதிக்கவில்லை' என தமிழக பாஜகவில் இருந்தும் மூத்த நிர்வாகிகள் பலர் தலைமைக்கு புகார் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து புதிய தலைவரை நியமிக்கும் முடிவுக்கு டெல்லிக்கு வந்தது. இதையடுத்து தலைவர் பதவியை பிடிக்க நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் கோதாவில் குதித்தனர். இந்த போட்டியின் முடிவில் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவியை தட்டி சென்றிருக்கிறார். இதன் பின்னணி குறித்து பேசும் கமலாலய சீனியர்கள், "ஆரம்பத்தில் இருந்தே மாநில தலைவர் பதவிக்கான ரேஸில் நயினார்தான் முதலிடத்தில் இருந்தார். அவருக்கு அமித்ஷாவின் ஆதரவு இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜ.க-வுக்கு வந்தபோதே நயினாருக்கு மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தார். பிறகு அது தள்ளிப்போனது. இந்தசூழலில்தான் தற்போது புதிய தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு அவர் ஏற்கெனவே அ.தி.மு.க-வில் இருந்திருக்கிறார். எனவே அவர்களுடன் கூட்டணியை எளிதாக அமைக்க முடியும். அதற்கான நெளிவு, சுளிவு அவருக்கு தெரியும். மேலும் இதுவரை தமிழக பா.ஜ.க-வில் மாநில தலைவராக நாடார், கவுண்டர் சமுதாயத்தினர் இருந்து விட்டார்கள். இதையடுத்து முக்குலத்தோர், வன்னியர் சமுதாயத்திலிருந்து ஒருவரை தலைவராக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் வன்னியர் சமுதாயத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய தலைவர் இல்லை. எனவேதான் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நயினாரை தலைவராக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதன் மூலம் முக்குலத்தோரின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு கிடைக்கும். இதையெல்லாம் கணக்கு போட்டு பார்த்துதான் நாயினரை தலைவராக்கியிருக்கிறது டெல்லி. இதில், சீனியர் தலைவர்கள் பலருக்கு வருத்தமும் இருக்கிறது. அவர்கள் நயினாருக்கு எதிராக காய் நகர்த்துவார்கள். எப்படியோ 2026 தேர்தலுக்கான பரமபதம் விளையாட்டை ஆட தொடங்கியிருக்கிறது, டெல்லி" என்றனர். 'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானத்தின் பின்னணி! - Vikatan
-
குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!
’மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா துளிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் ஆன்ட்டி-ஹீரோ அவதாரம் என டீசர், ட்ரெய்லரின் இப்படத்துக்கு பயங்கர ஹைப் ஏற்றப்பட்டது. அப்படி ஏற்றப்பட்ட ஹைப்புக்கு இப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியதா என்பதை பார்ப்போம். ஊர், உலகமே பார்த்து நடுங்கும் மிகப் பெரிய கேங்ஸ்டர் ஏகே என்கிற ரெட் டிராகன் (அஜித் குமார்), தனது மனைவியின் (த்ரிஷா) பேச்சுக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் விட்டு சரண்டர் ஆகிறார். புதிதாக பிறந்த தன் குழந்தையிடமும் அவனது 18-வது பிறந்தநாளன்று உன் பக்கத்தில் இருப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். 17 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் அவர், தனது மகனின் பிறந்தநாள் நெருங்கும் வேளையில் சிறையிலிருந்து தனது செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வருகிறார். ஆனால், அவர் வெளியே வரும் சமயத்தில் ஸ்பெயின் நாட்டில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவரது மகன் பொய் வழக்கில் சிக்க வைக்கப்படுகிறார். ADVERTISEMENT குடும்பத்தோடு மீண்டும் சேரும் கனவோடு வரும் ஏகேவிடம், இந்த பிரச்சினைகளை மீண்டும் சரிசெய்யுமாறு அவரது மனைவி சொல்கிறார். தன் மகனை சிக்க வைத்தது யார் என்று கண்டுபிடித்தாரா? அடுத்து என்ன நடந்தது என்பதுதான் ‘குட் பேட் அக்லி’ படத்தின் திரைக்கதை. சமீபகாலமாக பெரிய ஹீரோக்களின் படங்களில் நாஸ்டால்ஜியா என்ற பெயரில் அவர்கள் நடித்த பழைய படங்களின் ரெஃபரன்ஸ்களை வசனங்கள் அல்லது பாடல்களாக வைப்பதுதான் ட்ரெண்ட் ஆக உள்ளது. ஆனால், இதுவரை அப்படி வந்த படங்களுக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கும் ஒரு சின்ன வித்தியாசம் உள்ளது. அந்த படங்களில் காட்சிகளுக்கு நடுவே ஆங்காங்கே ரெஃபரன்ஸ் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ரெஃபரன்ஸ்களுக்கு நடுவே தான் படம் கொஞ்சம் வருகிறது. அந்த அளவுக்கு அஜித்தின் ஆரம்பகால படங்கள் தொடங்கி சமீபத்திய படங்கள் வரை ரெஃபரன்ஸ், ரெஃபரன்ஸ், ரெஃபரன்ஸோ ரெஃபரன்ஸ். ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு வசனத்துக்கு அஜித்தின் முந்தைய படங்களின் ஒரு குறியீடாவது வசனங்களாகவோ அல்லது பாடல்களாகவோ வந்துவிடுகிறது. படத்தின் ஆரம்பத்தில் அவை குதூகலத்தை தந்தாலும் போகப் போக அதுவே ஓவர்டோஸ் ஆகி போதும் என்று தோன்றவைத்து விடுகிறது. ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையை எழுதி அதில் ஒரு முக்கியமான கட்டத்தில் பார்ப்பவர்களை ‘கூஸ்பம்ப்ஸ்’ ஆக்கும் வகையில் ரெஃபரன்ஸ் வைத்தால் ரசிக்கும்படி இருக்கும். ஆனால், வெறுமனே முதல் மூன்று நாட்கள் வரும் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்தும் நோக்கில் காட்சிக்கு காட்சிக்கு ரெஃபரன்ஸ்களை நிரப்பி வைத்திருக்கிறார் இயக்குநர் ஆதிக். சரி, எழுதிய திரைக்கதையை குறைந்தபட்சம் கோர்வையாக எடுத்திருக்க வேண்டும். ஆனால், காட்சிகள் இஷ்டத்துக்கு எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஹீரோ நினைத்தால் ஜெயிலில் மகனுடன் வீடியோ கால் பேசுகிறார். நினைத்தபோது மூன்று மாதத்துக்கு முன்பே ரிலீஸ் ஆகிறார். இந்தக் காட்சிக்கு நியாயம் செய்கிறேன் பேர்வழி என போலீஸ்காரரான சாயாஜி ஷிண்டேவுக்கும் அஜித்துக்கும் 17 வருட பழக்கம் என்று ரெடின் கிங்ஸ்லியை வைத்து ஒரு வசனம் வேறு. எந்தக் காட்சியிலும் மருந்துக்கும் ‘டீடெட்டெயிலிங்’ என்ற ஒன்று இல்லவே இல்லை. இது ஒரு ஸ்பூஃப் படமா? அல்லது முந்தைய அஜித் படங்களின் ரெஃபரன்ஸ்களுக்கான கோர்வையா என்ற குழப்பம் கடைசி வரைக்குமே நீடிக்கிறது. படத்தில் நினைவில் இருக்கும் காட்சிகள் என்று சொன்னால் ‘இளமை இதோ இதோ’ பாடல் பின்னணியில் ஒலிக்க நடக்கும் பார் சண்டை. இடைவேளை காட்சி (அதிலும் ஒரு படத்தின் ரெஃபரன்ஸ்) என ஒரு சில காட்சிகளை மட்டுமே சொல்ல முடியும். என்னதான் படம் போரடிக்காமல் காட்சிகள் சென்றாலும், படம் முடிந்த பிறகு யோசித்தால் அஜித்தின் பழைய படங்களின் குறியீடுகள் மட்டுமே நினைவில் தேங்கியிருக்கின்றன. படம் முழுக்க அஜித் ராஜ்ஜியம்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு உற்சாகம் ததும்பும் அஜித்தை திரையில் காண்பதே ஒரு ரகளையான அனுபவமாக இருக்கிறது. நெகட்டிவ் தன்மை பொருந்திய ஹீரோ கதாபாத்திரம் என்றால் அல்வா சாப்பிடுவது போல பிரித்து மேய்கிறார். படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் சிகரெட், குடி என்று வந்தாலும், அஜித் எந்த காட்சியிலும் மது, சிகரெட் பயன்படுத்துவது போல நடிக்காதது பாராட்டத்தக்கது. அஜித்தை தவிர படத்தின் மற்ற எந்த கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்படவில்லை. த்ரிஷா, பிரசன்னா, பிரபு, ஜாக்கி ஷ்ரோஃப் மலையாள நடிகர் டாம் ஷைன் சாக்கோ உள்ளிட்ட அனைவரும் வீணடிக்கப்பட்டுள்ளனர். படத்தின் பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷின் பணி பாராட்டுக்குரியது. பாடல்களின் ‘காட் ப்ளஸ் யூ’ பாடல் மட்டுமே ஓகே ரகம். மற்றவை நினைவில் இல்லை. அபிநந்தன் ராமானுஜத்தின் ரெட்ரோ ஸ்டைல் ஒளிப்பதிவு படத்தின் தன்மைக்கு வலு சேர்த்துள்ளது. எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பெரும்பாலான காட்சிகள் ஒன்றோடு ஒன்றுக்கு தொடர்பில்லாததைப் போல இருப்பது உறுத்தல். என்னதான் படத்தின் நாஸ்டால்ஜியாவை தூண்டும் ரெஃபரன்ஸ், ஸ்லோமோஷன் ஷாட்ஸ் என இருந்தாலும் அடிப்படையாக ஒரு வலுவான கதை, திரைக்கதை அவசியம். ஆனால் அவை இப்படத்தில் முற்றிலுமாக மிஸ்ஸிங். இப்படத்தில் வரும் ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘வரலாறு’, ‘பில்லா’ போன்ற படங்களை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் குறியீடுகளாக வைப்பதற்கு அவற்றில் இருந்த நல்ல திரைக்கதையே காரணம். ஆனால் வெறுமே ‘ஃபேன் சர்வீஸ்’ என்ற பெயரில் எடுக்கப்படும் இது போன்ற படங்களை எத்தனை ஆண்டுகள் நினைவில் வைத்திருக்க முடியும் என்பது இயக்குநர்களுக்கே வெளிச்சம். குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்! | Good Bad Ugly Movie Review - hindutamil.in
-
பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்
Editorial / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 05:08 - 0 - 50 பூப்பெய்த மாணவியை பாடசாலையில் தனியாக அமர வைத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் தனியார் பாடசாலையில், பூப்படைந்த மாணவியை வகுப்பறையின் வெளியில் அமரவைத்து பரீட்சை எழுத வைத்த சம்பவம் குறித்து பாடசாலை கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் மெட்ரிகுலேஷன் பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் கடந்த 5-ம் திகதி பூப்பெய்தி உள்ளார். இந்நிலையில் தற்பொழுது முழு ஆண்டு பரீட்சைகள் நடைபெறுவதால் பரீட்சைஎழுதுவதற்காக வகுப்பறைக்கு சிறுமி வந்துள்ளார். ஆனால் சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காத பாடசாலை நிர்வாகம் சிறுமியை 7-ம் திகதி அறிவியல் பரீட்சையும், 9-ம் திகதி சமூக அறிவியல் பரீட்சைகளையும் மற்ற மாணவிகளுடன் அமர்ந்து எழுத விடாமல் வகுப்பறை வாசலில் அமர வைத்து எழுத வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த வெளியிட்டதால் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையாக பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல், பாடசாலை வகுப்பறைக்குள் சிறுமியை அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து பரீட்சை எழுத வைத்த தனியார் பாடசாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் விடுதலை முன்னணியினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், கோவை மாவட்ட பள்ளி கல்வி துறை உதவி இயக்குநர் வடிவேல் ஆகியோர், பள்ளி முதல்வர், பாடசாலை கண்காணிப்பாளர், பள்ளி தாளாளர் ஆகியேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Tamilmirror Online || பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்
-
”ரணில் ராஜபக்சவின் முடியையும் அரசாங்கம் தொடாது”
கொள்ளையர்களைப் பிடிப்பதாக பெருமை பேசினாலும், மஹிந்த ராஜபக்ஷ அல்லது ரணில் விக்கிரமசிங்க மீது இந்த அரசாங்கம் கை வைக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "பெரிய மீன்களுக்குப் பதிலாக சில சிறிய மீன்களை மட்டுமே நீங்கள் பிடிப்பீர்கள். தற்போதைய அரசாங்கம் கைது செய்த ஒரே எம்.பி நான்தான்" என்று தசநாயக்க மேலும் கூறினார். பெரகல தடுப்பு முகாம் மிகவும் ஆபத்தானது, இருப்பினும் அரசாங்கம் பட்டலந்தவை மட்டுமே குறிவைக்கிறது என்று அவர் கூறினார். Tamilmirror Online || ”ரணில் ராஜபக்சவின் முடியையும் அரசாங்கம் தொடாது”
-
யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி!
பலாலி ஊடாக காங்கேசன்துறை வரை பஸ் சேவைகள் : தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் 10 Apr, 2025 | 04:35 PM யாழ்ப்பாணம் பலாலி வீதி முழுமையாக வியாழக்கிழமை (10) திறக்கப்பட்டதையடுத்து, காங்கேசன்துறை - பலாலி - யாழ்ப்பாணம் வழித்தட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிக்கும் குறித்த வழித்தட பேருந்துகள் வசாவிளான் சந்தியில் அமைந்திருந்த இராணுவத்தின் வீதி தடையுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்திக்கொண்டன. தற்போது பாதை முழுமையாக திறக்கப்பட்டுள்ளமையால், இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764ஆம் இலக்க வழித்தட பேருந்துகள் பலாலி வீதியூடாக பருத்தித்துறை - பொன்னாலை வீதியை சென்றடைந்து, அதனூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் சேவையில் ஈடுபடும் எனவும், அதன் மூலம் பலாலி வடக்கு, அந்தோணிபுரம், மயிலிட்டியை சென்றடையும். மக்கள் குறித்த பேருந்து சேவை ஊடாக இலகுவாக யாழ்ப்பாண நகர் பகுதிக்கு தமது பயணத்தினை மேற்கொள்ள முடியும் எனவும், இன்னமும் ஓரிரு நாட்களில் நேர அட்டவணைகள் தயார் ஆனதும் , பேருந்து சேவைகள் இடம்பெறும் என 764ஆம் இலக்க வழித்தட , தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். பலாலி ஊடாக காங்கேசன்துறை வரை பஸ் சேவைகள் : தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் | Virakesari.lk
-
கண்டி பாடசாலையொன்றில் இயங்கிய வதைமுகாமிலிருந்து இளைஞர்களை டிரக்கில் கொண்டு அவர்களை எப்படி கொலை செய்தனர்- 1988- 89 இல் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் முன்னாள் அதிகாரியின் வீடியோ
பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 10 Apr, 2025 | 04:31 PM 1977 முதல் 1994 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி பாவிகளே, பட்டலந்த வதை முகாமின் சூத்திரதாரிகளும் கூட. எனவே, பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார். பட்டலந்த வதை முகாம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ”நல்ல வழியில் நாம் அரசியலை முன்னெடுத்து வந்த வேளை 1983ஆம் ஆண்டு எமது கட்சி தடைசெய்யப்பட்டது. ஜுலை கலவரத்தை அடிப்படையாகக்கொண்டே எமது கட்சி மீது தடை விதிக்கப்பட்டது. அன்று ஏற்பட்ட கறுப்பு ஜுலையென்பது இன்றளவிலும் கறுப்பு புள்ளியாகவே இருந்துவருகின்றது. தடையை நீக்குமாறு ஜனாதிபதி முதல் பலரிடம் கோரிக்கை விடுத்தோம். பலன் கிட்டவில்லை. இதற்கிடையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு எமது உறுப்பினர்களை கொன்றொழித்தனர். நாட்டை நாசமாக்குகின்ற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டவேளை, நாடு காட்டிக்கொடுக்கப்பட்ட வேளையில்தான் அதற்கு எதிராகவே 1987 மற்றும் 1989களில் எமது வீரமறவர்கள் வீறுகொண்டெழுந்தனர். அவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர். இவ்வாறு புதைக்கப்பட்டவர்கள் விதைக்கப்பட்டவர்களாக மீண்டெழுந்திருக்கின்றார்கள். உண்மையை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது. உண்மைகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. பட்டலந்த வதை முகாம் கொலையாளிகள், சித்திரைவதை செய்தவர்கள், இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் மலையக மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் நீதி கிடைக்கப்பட வேண்டும்" என்றார். பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk
-
‘கலிப்சோ’ ரயில் சேவை நானுஓயாவிலிருந்து ஆரம்பம்
கலிப்சோ ரயிலின் முதல் நாள் வருமானம் 7 இலட்சம் ரூபா. 10 Apr, 2025 | 04:07 PM நானுஓயா மற்றும் தெமோதரை ரயில் நிலையங்களுக்கு இடையே திறந்தவெளி காட்சிக்கூடங்களைக் கொண்ட “கலிப்சோ" ரயில் சேவையின் முதல் நாளில் 720,000 ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக ரயில் திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வஜிர பொல்வத்தகே தெரிவித்துள்ளார். இந்த ரயில் தனது முதல் சேவையை செவ்வாய்க்கிழமை (08) காலை நானுஓயாவிலிருந்து தெமோதரை ரயில் நிலையத்துக்கு ஆரம்பித்தது. இதன்போது, 172 இருக்கைகள் வெறுமையாக இருந்ததோடு, 72 பயணிகள் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர். அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் 153,000 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டிருக்கும். கலிப்சோ ரயில், வழித்தடத்தில் இயற்கை அழகை வெளிப்படுத்தும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது திறந்தவெளி காட்சிக்கூடங்கள், உணவு, இசை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வசதிகளைக் கொண்டுள்ளது. பயணத்தின் விசேட அம்சமாக சுற்றுலாப் பயணிகள் உலகப் புகழ்பெற்ற ஒன்பது வளைவுப் பாலத்தின் அழகை அனுபவிக்க நிறுத்தப்படும். அத்தோடு, ரயில் பல சுரங்கப்பாதைகள் வழியாகச் செல்லும். இந்த ரயில் பயணம் 4 1/2 மணித்தியாலங்களை கொண்டமைந்துள்ளது. இந்த ரயில் பயணம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து புறப்பட்டு தெமோதரை ரயில் நிலையத்தை பிற்பகல் 12.25 மணிக்கு சென்றடையும். மீண்டும் தெமோதரை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1:15 மணிக்கு புறப்பட்டு நானுஓயாவை மாலை 5:35 மணிக்கு சென்றடையும். நானுஓயாவிலிருந்து தெமோதரை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது. கலிப்சோ ரயிலின் முதல் நாள் வருமானம் 7 இலட்சம் ரூபா | Virakesari.lk
-
உடுத்துறை கடல் பகுதியில் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!
உடுத்துறை கடல் பகுதியில் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு! வடமராட்சி-உடுத்துறை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடலின் போது, சுமார் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, கேரள கஞ்சா கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கு படகுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி-உடுத்துறை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையின் பெறுமதியானது 121 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லியான் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர், கேரள கஞ்சா பொதி மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதன்கேனி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. உடுத்துறை கடல் பகுதியில் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!
-
வேலணை பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்த பசு! - சபை வாயிலில் உரிமையாளர் போராட்டம்!
09 Apr, 2025 | 05:13 PM (எம்.நியூட்டன்) உரிமையாளரால் மேய்ச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் அந்த பசுவை பிரதேச சபையினர் சட்டத்தின்படி பிடித்து கட்டிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணை நகர்ப்பகுதியில் கால்நடை பண்ணை நடத்திவரும் பெண் உரிமையாளர் ஒருவர் பிரதேச செயலக நுழைபாதையை வழிமறித்து இன்று புதன்கிழமை (9) ஆர்ப்பாட்டம் செய்ததால் அப்பகுதியில் சில மணிநேரம் குழப்பநிலை ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது : வேலணை நகர்ப் பகுதியில் பால் உற்பத்தியை சுயதொழிலாகக் கொண்டு பசு மாடு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவரது பசு கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், வேலணை நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த சிறு தாவரங்களை சேதப்படுத்தியதாக கூறி பிரதேச சபையின் ஊழியர்கள் அந்த பசுமாட்டினை பிடித்து, முதற்கட்ட நடவடிக்கையாக உரிமையாளர் தேடி வரும் வரை சட்ட விதிமுறைகளுக்கேற்ப தமது பராமரிப்பில் வைத்திருந்துள்ளனர். இந்நிலையில் அந்த பசுமாட்டின் உரிமையாளர் இரண்டாவது நாளான இன்று பிரதேச சபையின் பொறுப்பில் பசுமாடு இருப்பதை அறிந்து, பிரதேச சபை சட்டத்துக்கு விரோதமாக பசுவினை பிடித்து கட்டிவைத்துள்ளதாக தெரிவித்து, பசுவை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். மேலும், தான் மாடு வளர்ப்புத் தொழிலை பல இலட்சங்கள் முதலீடு செய்து மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு மாடுகளின் நலன் கருதி, அவற்றை அவிழ்த்துவிட்டதாகவும் அவ்வாறான நிலையில், ஒரு பசு பிரதேச சபையின் வளாகத்துக்குள் சென்ற காரணத்துக்காக பிடித்து கட்டிவைக்கப்பட்டுள்ளது எனவும் அந்த பெண் கூறியுள்ளார். இது சட்டமுரணானது. இவ்வாறான செயற்பாடுகள் எமது தொழிலை பாதிக்கின்றன. எனவே, சட்டத்துக்கு முரணாக பிரதேச சபையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பசு மாட்டை தண்டப் பணம் அறவிடாமல் விடுவிக்க வேண்டும் எனவும், இனியொரு முறை இவ்வாறு மாடுகள் பிடிக்கப்படக்கூடாது எனவும் கோரியே போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடர்ந்து அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலணை பிரதேச சபையின் செயலரிடம் கேட்டபோது, எமது பிரதேசத்தில் கால்நடைகளால் வருடாவருடம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. கட்டாக்காலி மாடுகள் ஒருபுறமிருக்க வளர்ப்பு மாடுகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாலும் பிரச்சினைகள் நாளாந்தம் ஏற்படுகின்றன. வளர்ப்பு பிராணிகளை கட்டி வளர்க்கவேண்டியது உரிமையாளர் ஒவ்வொருவரதும் பொறுப்பு. குறிப்பாக, வங்களாவடி சந்தி பகுதியை அண்டிய சூழலில் மாலை 6 மணிக்கு பின்னர் நாளாந்தம் 50க்கு மேற்பட்ட மாடுகள் வீதிகளில் தமது இரவு நேரத்தை கழிக்கின்றன. இதனால் நாளாந்தம் விபத்துக்களும் ஏற்படுகின்றன. ஒருசில பாரிய விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. இதேநேரம் வீட்டுப் பயிர்களை அழிப்பதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன. இவ்வீதியில் உறங்கும் மாடுகளில் அதிகமானவை வளர்ப்பு மாடுகளாகவே இருக்கின்றன. இதை கட்டுப்படுத்துமாறும் தொடர்ச்சியாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. நாம் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டே செயற்பட்டு வருகின்றோம். எமது சபைக்கு கட்டாக்காலி மாடுகளானாலும் சரி வளர்ப்பு மாடுகளானாலும் சரி ஆபத்துக்கள், சேதங்களை ஏற்படுத்தும் வகையில் அவை இருந்தால் அல்லது சபைக்குள் நுழைந்தால், அவற்றை பிடிப்பதற்கும் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் உண்டு. கடந்த மாதம் நடைபெற்ற வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் உலவுகின்ற மாடுகள் மற்றும் கட்டாக்காலிகள் தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை? அல்லது அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. அதன் பின்னர், இவ்வாறான அசௌகரியங்களை ஏற்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எவரும் மாடுகளை பிடிக்க வேண்டாம், தண்டப்பணம் அறவிட வேண்டாம் என கூறவில்லை. நடவடிக்கை எடுக்குமாறே வலியுறுத்தியிருந்தனர். இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட பெண் இவ்வாறான சம்பவம் தொடர்பில் பல முறை பிரதேச சபைக்கு தண்டம் செலுத்தியுள்ளார். ஒரு தடவை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தண்டிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு தண்டமும் செலுத்திய ஒருவர் ஆவார். அவ்வாறான சம்பவம் ஒன்றே இன்றும் நடந்துள்ளது. நாம் சட்டப்படியே செயற்பட்டோம். எவரது கால்நடை விலங்குகளும் இன்னொருவரது வீடுகளுக்கோ அல்லது பொது நிறுவனங்களின் வளாகத்துக்குள்ளோ சென்றால் அல்லது நாசப்படுத்தினால் அதை பிடித்து, அதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, வளர்ப்பு மாடுகளை ஒவ்வொருவரும் தத்தமது வளர்ப்பிடங்களில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமே தவிர அவற்றை கட்டவிழ்த்து விடுவது இவ்வாறான பிரச்சினைகளையே ஏற்படுத்தும் எனவும் பிரதேச சபையின் செயலர் தெரிவித்தார். அத்துடன் அந்த பசு மாட்டின் உரிமையாளர் பிரதேச சபையின் சட்டங்களின் பிரகாரம், பசுமாடு சபையினுள் நுழைந்ததற்கான தண்டப்பணமாக 5,600 ரூபாவினை செலுத்தியே இன்றும் தனது பசுமாட்டை மீட்டுச் சென்றுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். வேலணை பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்த பசு! - சபை வாயிலில் உரிமையாளர் போராட்டம்! | Virakesari.lk
-
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது : முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் -
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது : முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் - பீற்றர் புரூவர் மற்றும் மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் தெரிவிப்பு. 09 Apr, 2025 | 08:33 PM இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது என்றும் முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் என்றும் இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் முன்னாள் சிரேஷ்ட பணிக்குழுப் பிரதானி பீற்றர் புரூவர் மற்றும் இலங்கையிலுள்ள பன்னாட்டு நாணய நிதியத்தின் தற்போதைய வதிவிடப் பிரதிநிதியான மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் நான்கு ஆண்டு கால பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நடுப்புள்ளியை இம்மார்ச் மாதம் குறிக்கின்றது. அதன் தொடக்கத்திலிருந்து இரு ஆண்டுகளில் கடினமான ஆனாலும் மிகவும் தேவையான மறுசீரமைப்புக்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இலங்கை மக்களின் அர்ப்பணிப்பிற்கும் தியாகத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மிகவும் அவதானிக்கத்தக்க விடயம், எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருந்து என்பவற்றிற்கு இனிமேல் வரிசைகள் காணப்படாது என்பதுடன் அட்டவணைப்படுத்தப்பட்ட மின்துண்டிப்புக்களும் இல்லை. பொருளாதாரமானது வலுவாகவும் விரைவாகவும் மீண்டெழுந்துள்ளது – 2024இல் அது 5 சதவீதம் வளர்ச்சியடைந்து 2018இல் உச்சத்திலிருந்து 2023இன் தாழ்வின் எல்லைக்குச் சென்ற வெளியீட்னெ; அரைவாசிக்குக் கீழிருந்து இழப்பு வெறும் 18 மாதங்களிலேயே மீண்டுள்ளது. வானுயர்ந்து சென்ற பணவீக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்காக வரி வருவாய்கள் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் உயர்வடைந்து, வட்டிக் கொடுப்பனவுகள் நீங்கலாக அரசாங்கத்தின் மீதி (ஆரம்ப மீதி) ஏறத்தாழ 6 சதவீதப் புள்ளிகளால் மேம்பட்டுள்ளது. பல குடும்ப அலகுகள் இன்னும் தாக்கத்தினை முழுமையாக உணராத போதிலும் பேரண்டப்பொருளாதாரத் திருப்பமானது குறிப்பிடத்தக்கதாகும். வெளிநாட்டு கடன்கொடுநர்கள் மூலம் வழங்கப்பட்ட படுகடன் நிவாரணம் இலங்கை மக்கள் தோல்கொடுக்க வேண்டிய சுமையினை குறைத்துள்ளது. வெளிவாரி கடன்கொடுநர்கள் படுகடனின் ஐ.அ.டொலர் 3 பில்லியனை கைவிட்டுள்ளதுடன் அண்மைய காலத்தில் நிலுவையாகவிருக்கின்ற அல்லது ஏற்கனவே தவணை கடந்த மற்றுமொரு ஐக்கிய அமெரிக்க டொலர் 25 பில்லியன் தொகையினை மிகவும் குறைக்கப்பட்ட வட்டி வீதங்களுடன் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மேல் மிக நீண்டகால வீச்சில் நீடித்துள்ளனர். இலங்கையின் வர்த்தகப்படுத்தக்க படுகடன் சாதனங்கள் பன்னாட்டு முறிச் சுட்டிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளமையினாலும் இலங்கையின் கொடுகடன் தரமிடலானது குறைந்தது 3 படிமுறைகளினாலேனும் உயர்த்தப்பட்டமையினாலும் அவை மீண்டும் முதலீட்டாளர்களைக் கவருகின்றன. 2023இல் 30 சதவீதம் கொண்ட உச்சத்திலிருந்து தற்போதைய 8 சதவீதத்திற்கு உள்நாட்டு கடன்பெறுதல் செலவில் சடுதியான வீழ்ச்சிகளுடனும் பன்னாட்டுச் சந்தைகளில் நாட்டிற்கான இடர்நேர்வு “விரிவு” குறிகாட்டி 70 சதவீதம் கொண்ட உச்சத்திலிருந்து 5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளமை என்பவற்றைக் கொண்டு சந்தைகள் இலங்கையின் மறுசீரமைப்புகளுக்கு கைமாறளித்துள்ளன. பொறுப்புமிக்க பன்னாட்டு சந்தை அணுகலினை அடுத்த சில ஆண்டுகளில் எட்டக்கூடியதாக இருக்க வேண்டும். இலங்கை மக்கள் கடந்தகால கொள்கைத் தவறுகளுக்காகவும் முடக்கத்தை ஏற்படுத்திய துரதிஸ்டத்திற்காக போதுமானளவு தயாராகாமைக்கும் வருந்தத்தக்கவிதத்தில் உயர் விலையினைச் செலுத்துகின்றனர். நிலைபேறற்ற குறைவான வரிகள் மற்றும் மக்களைவிட பெரும்பாலும் தொழில்முயற்சிகளுக்கு நன்மையளித்த பாரிய வரி விலக்களிப்புகள் என்பன நிகழவுள்ள விபத்தொன்றாகவிருந்தது. வரிசெலுத்துநர்கள் வருமானத்தையும் சொத்துக்களையும் கொண்டு சமமாகப் பங்களிப்பதற்கு அவர்கள் கோரப்பட்டிருந்தும் கூட, அதன் அத்தியாவசிய பணிகளுக்கு இன்று நிதியிடுவதற்கு அரசாங்கத்தின் மேம்பட்ட இயலுமையின் அடுத்த பக்கம் உயர்வான சுமைக்கு அவர்கள் தோல்கொடுக்க வேண்டியிருந்ததாகும். அதேபோன்று எரிபொருள் மற்றும் மின்சாரம் எனபவற்றின்; முழுமையான செலவு தற்போது அரசாங்கத்தின் உதவுதொகைகளின்றி அதன் பயன்பாட்டாளர்கள் மூலமே ஏற்கப்பட்டு, அரிதான அரசாங்க மூலவளங்கள் சமூகப் பாதுகாப்பு போன்ற முன்னுரிமைத் துறைகளை நோக்கி திசைப்படுத்தப்பட்டிருப்பதற்கு இயலச்செய்யப்பட்டுள்ளது. இன்னும் மிகவும் பாதிக்கப்படும் நிலையிலிருக்கின்ற இலங்கை முழுமையாக சுயமாக சிக்கலிலிருந்து விடுபடக்கூடியதாகவிருப்பதை உறுதிசெய்வதற்கும் 2022இல் எதிர்கொண்ட அபாயகரமான நிலைமைகளுக்கு மீண்டும் செல்வதைத் தடுப்பதற்கும் இவ்வகையான தியாகங்கள் அவசியமானதாகக் காணப்படுகின்றன. 2023 தொடக்கம் பன்னாட்டு நாணய நிதிய நிதியிடல், நிகழ்ச்சித்திட்டத்திற்கு முன்னர் இலங்கையர்கள் அனுபவித்த மிக மோசமான விளைவுகளை தவிர்ப்பதற்குத் துணையளித்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியம் ஆதரவளித்த பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் ஏனைய பல்தரப்பு மற்றும் இருதரப்பு பங்காளரிடமிருந்து நிதியிடலை வினையூக்கச்செய்கின்ற மறுசீரமைப்புக்களுக்கு அர்பணிப்பதற்கு நம்பகமான கட்டமைப்பொன்றினைத் தொடர்ந்தும் வழங்குகின்றது. கடன்கொடுநர்கள் வழங்குகின்ற படுகடன் நிவாரணம் மறுசீரமைத்தலின் பின்னர் எஞ்சியிருக்கின்ற படுகடனைத் தீர்ப்பதற்கு இலங்கையினை இயலச்செய்யுமென அது அவர்களுக்கு உத்தரவாதமளித்தது. கடந்த தேர்தல் இடம்பெற்றதன் பின்னர், பன்னாட்டு நாணய நிதியம் அவர்களின் கொள்கை முன்னுரிமைகளின் சிலவற்றை அதிகாரிகள் நிறைவுசெய்வதற்கு உதவுவதற்காக நிகழ்ச்சித்திட்டத்தை மீள அளவமைப்பதற்கு புதிய அரசாங்கத்துடன் விரைவாக நெருங்கிப் பணியாற்றியது. வெற்றிகரமான வருவாய்த் திரட்டல் முயற்சிகளுக்கு நன்றி. இது, நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை மக்களுக்கு சில நிவாரணத்தை வழங்குவதற்கும் வேறு அத்தியாவசியத் தேவைகளை வழங்குவதற்கு அரசாங்கத்தின் இயலுமையினை காக்கின்ற விதத்தில் அரசாங்கத்திற்கு அது சாத்தியமாகவிருந்தது. தனிப்பட்ட வருமான வரி கட்டமைப்பு சீராக்கப்பட்டு, கடந்தகால உயர்வான பணவீக்கத்திற்கு பகுதியளவில் ஈடளிப்பதற்கு அரசாங்கத் துறைச் சம்பளங்கள் உயர்த்தப்பட்டு வருவதுடன் பாற்பண்ணை உற்பத்திப் பயன்பாட்டாளர்களுக்கு சில நிவாரணங்கள் வழங்கப்பட்டன. இந்;நடுநிலைப் புள்ளியில், மறுசீரமைப்பினைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதும் கடந்தகால தவறுகளைத் தவிர்ப்பதும் முக்கியத்துவம் மிக்கதாகும். தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்திற்கு முன்னர் பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டங்களின் சுமார் அரைவாசியளவு இலங்கை முன்கூட்டியே முடிவுறுத்திமையினால் அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் குறைவான செயலாற்றம் இடம்பெற்றது. இவ்வளர்ச்சி முடக்கல் சுழற்சியை நிறுத்தி, நிச்சயமற்ற உலகளாவிய நிலைமையிலும்கூட மீட்சி தொடர்ச்சியாக இருக்கக்கூடிய விதத்திலும் அனைத்து இலங்கையர்களும் அதிலிருந்து நன்மையடையும் விதத்திலும் பொருளாதாரத்தை முகாமைசெய்வதும் முக்கியமானதாகும். நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்குகின்ற வளர்ச்சி மற்றும் அரசிறை மற்றும் படுகடன் நிலைபெறுதன்மை என்பவற்றிற்கான பாதை தொடர்ந்தும் குறுகியே காணப்படுகின்றது. கொள்கைத் தவறுகளுக்கு இடமளிக்கக்கூடாது. வரி விலக்களிப்புக்களை மட்டுப்படுத்தல் மூலமானவை உள்ளடங்கலாக அத்தியாவசிய அரசாங்கப் பணிகளுக்குத் தேவையான வருவாய்களைத் தொடர்ந்தும் வழங்குவது மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கும். எரிபொருள் மற்றும் மின்சாரம் என்பவற்றிற்கான செலவு – மீட்பு விலையிடலை மீளமைத்தல் மற்றும் சமூக ரீதியான ஆதரவை மிகவும் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி நன்கு இலக்கிடுவதை நிச்சயப்படுத்தல் என்பன மூலம் அரிதான அரசாங்க மூலவளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது. பொருளாதார மீளெழுச்சியில் போதுமானளவு பங்கேற்பதற்கு வறியவர்களுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். இலங்கையின் நீண்ட கால உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்வதற்கு நடுத்தரகால வளர்ச்சிக்கு ஆதரவளித்தலில் மூலதனச் செலவிடல் மிகவும் எதிர்வுகூறத்தக்கவிதத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். வரவிருக்கும் கடமைகள் பேராவல்மிக்கவையாயினும் நிறைவேற்றப்படத்தக்கவையாகும். இடம்பெறுகின்ற மறுசீரமைப்பு உத்வேத்தைத் தக்கவைத்தல் முழுமையான மீட்சிக்கு முக்கியமானதாக அமைந்திருந்து இத்தலைமுறைக்கு மாத்திரமின்றி எதிர்காலத் தலைமுறையினருக்கும் நன்மைபயக்கக்கூடியதாகவுமிருக்கும். அனைத்துக் குடிமக்களினதும் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில் வலுவான மற்றும் நீடித்த மீட்சியொன்றினைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் பொருட்டு உறுதியானதொரு பங்காளராகப் பன்னாட்டு நாணய நிதியம் தொடர்ந்தும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர். இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது : முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் - பீற்றர் புரூவர் மற்றும் மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் தெரிவிப்பு | Virakesari.lk
-
முல்லைத்தீவில் நீதிமன்ற அனுமதியுடன் எரியூட்டப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வள்ளங்கள்
09 Apr, 2025 | 05:16 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தொடர்ச்சியாக சில மாதங்களாக கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் மீனவ அமைப்புகள் விசேட அதிரடிப்படை கடற்படை என அனைத்து தரப்பினரும் இணைந்து பல்வேறு சுற்றி வளைப்புகளையும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு மற்றும் கைது நடவடிக்கைகளில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உள்நாட்டு நிர்மாண விதிகளுக்கு முரணாக தயாரிக்கப்பட்ட வெட்டு வள்ளங்கள் எனப்படுகின்ற 20 வள்ளங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்றைய தினம் (08) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நந்திக்கடல் களப்பில் அதிகரிக்கின்ற சட்டவிரோத தொழில்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற குறித்த உள்நாட்டு நிர்மாண விதிமுறைகளுக்கு முரணாக தயாரிக்கப்பட்ட பல்வேறு தினங்களில் கைப்பற்றப்பட்ட வெட்டுவள்ளங்கள் எனப்படுகின்ற 20 வள்ளங்கள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எரியூட்டப்பட்டன. நந்திக்கடல் களப்பை அண்மித்த பகுதியிலே இந்த வள்ளங்கள் இருபதும் எறியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த 03.04.2025 அன்று கைது செய்யப்பட்ட எட்டு வள்ளங்களும் 02.04.2025 அன்று கைது செய்யப்பட்ட ஏழு வள்ளங்களும் 28.02.2025 அன்று கைது செய்யப்பட்ட மூன்று வள்ளங்களும் 25.02.2025 அன்று கைது செய்யப்பட்ட இரண்டு வள்ளங்களுமாக 20 வெட்டு வள்ளங்கள் எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக நந்திக்கடல் களப்பு பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் மீனவர்களை சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது சட்டபூர்வமாக மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தனது வாழ்வாதாரத்தை முன்னெடுக்குமாறு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் மீனவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவில் நீதிமன்ற அனுமதியுடன் எரியூட்டப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வள்ளங்கள் | Virakesari.lk
-
நல்லூரில் பாத்தீனியத்தை அழிக்க நடவடிக்கை
09 Apr, 2025 | 03:08 PM யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளில் பாத்தீனிய செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புகுழு கூட்டம் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பாடசாலை இடைவிலகல் மற்றும் ஒழுங்கீனங்கள், சிறுவர்கள் பாடசாலைகளில் சமூகத்தில் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகள், சிறுவர்கள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களின் முக்கியத்துவம் தொடர்பாகவும், பாடசாலையில் புதிய மாணவர்களை இணைக்கும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அதேவேளை பாடசாலை மட்டத்தில், கிராம மட்டத்தில் பாதீனியம் அதிகளவு காணப்படுவதனால் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் நல்லூர் மற்றும் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் இல்ல முகாமையாளர்கள், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் சார் சமூக நலன் விரும்பிகள் ஆகியோர் பங்குபற்றினார்கள். நல்லூரில் பாத்தீனியத்தை அழிக்க நடவடிக்கை | Virakesari.lk
-
புதுக்குடியிருப்பு - மாணிக்கபுரம் கிராமத்தில் மக்களின் போராட்டத்தினை தொடர்ந்து கசிப்பு வியாபாரிகளின் வீடுகள் முற்றுகை ; ஆறு பேர் கைது!
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் கசிப்பு வியாபாரம் அதிகரித்து காணப்படுவதாக கடந்த 6 ஆம் திகதி மாணிக்கபுரம் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட மூன்று குடும்பங்கள் மக்களால் இனங்காணப்பட்டு அவர்களின் வீட்டுப் படலைகளில் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டன. இந்த நிலையில் இவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் வீடுகளில் வைத்து கசிப்பு வியாபாரம் செய்து வந்த குறித்த மூன்று குடும்பங்களின் வீடுகள் புதுக் குடியிருப்பு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிப்படையினரின் சுற்றி வளைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (9) காலை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இந்த சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது 16. 5 லீற்றர் கசிப்பு 3 வீடுகளிலும் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களையும் சான்றுப் பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டு வருகின்றார்கள். புதுக்குடியிருப்பு - மாணிக்கபுரம் கிராமத்தில் மக்களின் போராட்டத்தினை தொடர்ந்து கசிப்பு வியாபாரிகளின் வீடுகள் முற்றுகை ; ஆறு பேர் கைது! | Virakesari.lk
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக் கூட்டமும் வேட்பாளர் அறிமுக கூட்டமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) அன்று பிற்பகல் 3 மணியளவில் செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற உள்ளது. மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வுகள் இம்முறை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச சபை பிரிவிலும் தனித்தனியாக நடாத்தப்பட்டு வரும் நிலையில் ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக் கூட்டமும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன், சிறிநேசன், வைத்தியர் சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர். நீண்ட காலத்திற்கு பிறகு செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற உள்ள மேற்படி நிகழ்வில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இக் கூட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று தொகுதி கிளை அழைப்பு வந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்! | Virakesari.lk
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
“அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை!” - உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பினராயி விஜயன் வரவேற்பு திருவனந்தபுரம்: மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்திவைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பை உறுதிப்படுத்தக் கூடியது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பினராயி விஜயன், "மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்திவைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பையும், சட்டமன்றத்தின் ஜனநாயக உரிமைகளையும் நிலைநிறுத்துகிறது. அமைச்சரவையின் ஆலோசனையின்படி ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த தீர்ப்பு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. சட்டமன்றத்தின் அதிகாரங்களை ஆளுநர்கள் அபகரிக்கும் போக்குக்கு எதிரான எச்சரிக்கையாகவும் இந்தத் தீர்ப்பு அமைகிறது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. கேரள சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் 23 மாதங்கள் வரை கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளன. இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தில் கேரளா ஈடுபட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, கேரளா எழுப்பிய இதுபோன்ற பிரச்சினைகளின் பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார். கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கேரள ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமது கான் அனுமதி வழங்க மறுத்ததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது கவனிக்கத்தக்கது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர், ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது. முதல் முறையாக மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அல்லது, குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம். சட்டப்பேரவை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்க வேண்டும். அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துறைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது. அந்த வகையில், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் கருதுகிறது. 10 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்திவைத்த ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது, எனவே அந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. 10 மசோதாக்கள் சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகு அவை மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம். ஆளுநர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த உச்ச நீதிமன்றத்தின் சில கருத்துகள்: > ஆளுநர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்ப விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் > அரசியல் நோக்கங்களால் வழிநடத்தப்படாமல், ஒரு நண்பராகவும், வழிகாட்டியாகவும், தத்துவஞானியாகவும் தனது செயல்பாடுகளைச் செய்ய வேண்டும் > ஆளுநர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முன்னோடி. அவர் ஒரு ஊக்கியாக இருக்க வேண்டும், தடுப்பவராக இருக்கக்கூடாது. > ஆளுநர்கள் அரசியலமைப்பின் மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டும் > ஆளுநர்கள் தங்களது அரசியலமைப்பு பதவிப் பிரமாணத்தின்படி நடந்து கொள்ள வேண்டும் > ஆளுநர்கள் தங்கள் நடவடிக்கைகள் மக்களின் அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப உள்ளதா என்பதை தங்களுக்குத் தாங்களே ஆய்வு செய்ய வேண்டும். ஆளுநர்களுக்கு காலக்கெடு: ஆளுநர்கள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவின் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநர்களிடம் சமர்ப்பிக்கப்படும்போது, ஒப்புதலை நிறுத்தி வைத்தால், ஒரு மாதம். மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாறாக ஒப்புதலை நிறுத்தி வைத்தால், மூன்று மாதங்கள். மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு எதிராக குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மசோதாக்கள் ஒதுக்கப்பட்டால், மூன்று மாதங்கள். ஆளுநர்களால் மறுபரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் விஷயத்தில், ஒரு மாதம். இவை அதிகபட்ச காலக்கெடு. ஆளுநர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். “அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை!” - உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பினராயி விஜயன் வரவேற்பு | Upholds federal system: Kerala CM welcomes SC verdict RN Ravi witholding bills - hindutamil.in
-
சிறைக்கே மீண்டும் சென்றார் வியாழேந்திரன்
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை (௦8) பிணையில் விடுவிக்கப்பட்டார். ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீரப் பிணைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையில் விணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக ரூ.1.5 மில்லியன் இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, அவரது விளக்கமறியல் ஏப்ரல் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை, ஜூன் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற, செவ்வாய்க்கிழமை (08) மாலை வரையிலும் தவறியமையால், அவர், சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார். Tamilmirror Online || சிறைக்கே மீண்டும் சென்றார் வியாழேந்திரன்