Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 04 Apr, 2025 | 05:24 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் வரியை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம்கொடுக்க நேரிடும் அபாயம் இருக்கிறதென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் இலங்கைக்கு விதித்திருக்கும் 44வீத தீர்வை வரி அதிகரிப்பு, எமது ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. ஏனெனில் எமது ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கே அதிக ஏற்றுமதிகளை மேற்கொள்கிறோம். 2024ஆம் ஆண்டில் எமது நாடு 12.7 பில்லியன் டொலர் வரை ஏற்றுமதி செய்திருக்கிறது. அதில் 3 பில்லியன் டொலர் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.எமது மொத்த ஏற்றுமதியில் நூற்றுக்கு 23சதவீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த 23சதவீதத்துக்கும் அமெரிக்காவின் வரி அதிகரிப்பு தாக்கம் செலுத்தும். இதில் ஆடை தொழிற்சாலைக்கே பாரிய பாதிப்பு ஏற்படப்போகிறது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 3 பில்லியன் டொலரில் 2 பில்லியன் டொலர்கள் ஆடை உற்பத்தியாகும். அதனால் அமெரிக்காவின் இந்த தீர்வை வரி அதிகரிப்பால் எமது ஆடை தொழிற்சாலைகளுக்கு பாரிய தாக்கம் செலுத்தம் அபாயம் இருக்கிறது. அதனால் எங்களுக்கு ஆடை விலை அதிகரித்து ஏற்றுமதி செய்யும்போது எமது ஆடைகளுக்கான கேள்வி குறைந்துவிடும். எமக்கு ஏனைய நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும். இதன் காரணமாக நாட்டில் ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டு, பாரியளவில் தொழில் இல்லாமல் போகும் அபாயம் இருக்கிறது.இதுதொடர்பில் ஆராய்ந்து பார்க்க ஜனாதிபதி குழுவொன்றை அமைத்திருக்கிறார். ரணில் விக்ரமசிங்க கொண்டுவந்த அதிகாரிகளைக்கொண்டே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ரணிலின் இந்த அதிகாரிகளை விரட்டுவதாகவே அரசாங்கம் ஆரம்பத்தில் தெரிவித்து வந்தது. ஆனால் தற்போது ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரிகளை வைத்துக்கொண்டே அரசாங்கம் பொருளாதாரத்தை செயற்படுத்தி வருகிறது. குழு அமைத்து பிரயோசனம் இல்லை. இதற்கு அரசியல் தலைமைத்துவ வழிகாட்டல் மற்றும் சர்வதேச முகாமைத்துவம் ஒன்று இருந்தாலே இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியுமாகும். அதேநேரம் அரசாங்கம் எந்த திட்டமும் இல்லாமல் வருமான வரிகளை குறைத்துக்கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எந்த திட்டமும் இல்லாமலே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அதனால் அரசாங்கம் பொய் உரைப்பதை கைவிட்டு உண்மை நிலைமையை மக்களுக்கு தெரியப்படுத்தி உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். அதேநேரம் நாட்டில் மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு இந்த நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு செல்லும். அதேபோன்று எரிவாயு விலை அதிகரித்துள்ளதால் ஹோட்டல்களில் தேநீரின் விலையை 10ரூபாவால் அதிகரிக்க ஹோட்டல் உரிமையாயளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. முட்டை விலையை அரசாங்கம் வேண்டுமென்றே அதிகரித்துள்ளது. முட்டைக்கு 18வீத வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் முட்டை விலை 10ரூபா வரையாவது விலை அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளபோதும் அது ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த கொடுப்பனவுகளை நீக்கியே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் அடுத்த மாத சம்பளத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் சம்பள அதிகரிப்பு கிடைக்கப்போவதில்லை. ஆனால் அரசாங்கத்தின் இந்த சம்பள அதிகரிப்பு, குறித்த அரச ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களுக்கு பூரண நண்மை கிடைக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றார். பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் ஆபத்து - ஐ.தே.க. அரசாங்கத்துக்கு எச்சரிக்கை | Virakesari.lk
  2. (இராஜதுரை ஹஷான்) இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.அவரை அன்புடன் வரவேற்கிறோம். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதில் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய விடயங்களை உள்ளடக்கிய வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்துக்கும்இ நாட்டு மக்களுக்கும் அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் உள்ளடங்கங்கள் என்னவென்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை வெளிப்படுத்தாத வரையில் சாதாரண சந்தேகம் தோற்றம் பெறும். இலங்கை பிளவுப்படாத வெளிவிவார கொள்கையை கடைப்பிக்கின்ற நிலையில் பாதுகாப்பு தொடர்பில் ஒரு நாட்டுடன் மாத்திரம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது நாட்டின் வெளிவிவகார கொள்கையை கேள்விக்குள்ளாக்கும். இந்தியாவுக்கும்இ சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு தான் அனைத்து நாடுகளுடன் செயற்பட வேண்டும்.குறித்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இராணுவ பயிற்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டசபையில் இலங்கையின் கச்சத்தீவை மீளப்பெற்றுக் கொள்வதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் இந்தியாவுடனான பாதுகாப்பு குறித்து சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிகாலத்தில் தான் விடுதலை புலிகள் அமைப்புக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில் தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆகவே இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார். இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் சீனா அதிருப்தியடையும் - அரசாங்கத்துக்கு வீரசேகர எச்சரிக்கை | Virakesari.lk
  3. 11 இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை 05 Apr, 2025 | 09:09 AM யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை செயயப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீரியல் வளத்துறை திணைக்களத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்தினால் நல்லெண்ண அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட அனைவரும் யாழில் இருந்து மிரிகானைக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னர் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகைதந்துள்ள நிலையில் குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 11 இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை | Virakesari.lk
  4. 05 Apr, 2025 | 02:13 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில், புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வெள்ளிக்கிழமை (04) குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், உரிய தரப்பினரோடு தொடர்புகொண்டு கலந்துரையாடி தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் அத்துமீறி அமைக்கப்பட்ட வாடிகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழ் மீனவர்கள் பன்நெடிங்காலமாக மீன்பிடியில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் பகுதியை ஆக்கிரமித்து அங்கு வாடி அமைப்பதற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்து முனைப்புக்காட்டிவருகின்றனர். அந்தவகையில் கடந்த வருடமும் அத்துமீறி குறித்த பகுதியில் வாடிஅமைப்பதற்கு சில பெரும்பான்மையின மீனவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். இத்தகைய சூழலில் மீளவும், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக குறித்த புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மையின மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்துள்ளனர். அத்தோடு புலிபாய்ந்தகல் பகுதியில் பூர்வீகமாக மீன்பிடியில் ஈடுபடும் சில தமிழ் மீனவர்களின் வாடிகளை அடாவடித்தனமாக அகற்றியே இவ்வாறு தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் வாடி அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை OFRP-A-5491 CHW என்னும் இலக்கமுடைய மீன்பிடிப் படகொன்றும் அனுமதி பெறப்படாமல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளைப் பார்வையிட்டதுடன், அப்பகுதியில் பெரும்பான்மையின தென்னிலங்கை மீனவர்களால் அத்துமீறி வாடி அமைக்கப்பட்டமைதொடர்பில் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதேவேளை கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலரையும் உடனடியாக குறித்த இடத்திற்கு அழைத்து நிலமைகளைக் காண்பித்ததுடன் அவரிடமும் இதுதொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் க.மோகனகுமாருடனும் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி, அனுமதியின்றி கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகு தொடர்பிலும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் குறித்த பகுதியில் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அத்துமீறி அடாவடியாக தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலக் காணிப் பிரிவால் அப்பகுதியில் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்படுமென கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணி உத்தியோகத்தரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டதுடன், கொக்குத்தொடுவாய் கிராம அலுவலரும் இது தொடர்பில் உரிய இடங்களுக்கு தாம் தெரியப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார். அத்தோடு அனுமதி பெறப்படாது கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த படகு தொடர்பில் தம்மால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.மோகனகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிம் தெரிவித்திருந்தார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், கொக்குத்தொடுவாய் வடக்கு, தெற்கு, மத்தி ஆகிய மூன்று கிராமங்களிலும் வாழும் தமிழ் மக்களின் ஒரேயொரு மீன்பிடித்துறையாக இந்த புலிபாய்ந்தகல் பகுதியே காணப்படுகின்றது. இந்நிலையில் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடும் வகையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இத்தகைய அத்துமீறல், அடாவடித்தனமான முயற்சிகளை தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது. ஓரளவிற்குத்தான் நாமும் பொறுமையாக இருக்கமுடியும் என்றார். இதன்போது கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தலைவர் ந.மதியழகன், தமிழரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச உபசெயலாளர் கி.சிவகுரு ஆகியோரும் குறித்த இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு - புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி | Virakesari.lk
  5. 05 Apr, 2025 | 04:32 PM ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கொழும்பு இளைஞன் முகமட் ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டுள்ள ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளதாவது கொழும்பில் 22 வயது முகமது ருஸ்டி மார்ச் 25ம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டுள்ள ஆவணத்தை சர்வதேச மன்னிப்புச்சபை பார்வையிட்டுள்ளது. இலங்கையின் புதிய தலைமை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாக அதன் அரசாங்கம் வாக்குறுயளித்துள்ள போதிலும்,அதிகாரிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவது குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம். ருஸ்டியை தடுத்துவைப்பதற்கான உத்தரவில்,அவர்தீவிரவாத சித்தாந்தங்களால் தூண்டப்பட்டு,சமூகங்களிற்கு இடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்படுவது மற்றும் பாதுகாப்பு படையினரிடம் அத்தகைய தகவல்களை தெரிந்தே மறைப்பது குறித்து சந்தேகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ருஸ்டி கைதுசெய்யப்பட்டு இரண்டு வாரங்களான பின்னரும்,அவரை கைதுசெய்தமை அல்லது தொடர்ந்து தடுத்து வைத்துள்ளமை ஆகியவற்றை நியாயப்படுத்தக்கூடிய குற்றவியல் செயற்பாடுகள் எவற்றிற்குமான ஆதாரங்களை வெளியிடக்கூடிய நிலையில் இலங்கை அதிகாரிகள் இல்லை. இலங்கை அதிகாரிகள் உடனடியாக ருஸ்டிக்கான நியாயமான நடைமுறைகளை உறுதி செய்யவேண்டும்,அவர் தனது குடும்பத்தவர்கள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு தடையற்ற அனுமதியை வழங்கவேண்டும். மேலும் அவர் சர்வதேச அளவில் குற்றம் என கருதக்கூடிய எவற்றிலாவது ஈடுபட்டார் என்பதற்கான நம்பகதன்மை மிக்க ஆதாரங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டால் அவரை விடுதலை செய்யவேண்டும். கொழும்புஇளைஞன் ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு அனுரகுமார திசநாயக்க உத்தரவிட்டுள்ள ஆவணத்தை பார்வையிட்டுள்ளோம்- பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது ஏமாற்றமளிக்கின்றது- சர்வதேச மன்னிப்புச்சபை | Virakesari.lk
  6. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும் என தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஒற்றையாட்சிக்குள் தீர்வு சாத்தியமில்லையென்றும் சமஸ்டித்தீர்வு வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடியிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம் : தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தல் | Virakesari.lk
  7. யாழ்ப்பாணம் மாநகர சபையானது நடு வீதியில் குப்பைகளை கொட்டுவதால் பயணிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். யாழ்ப்பாணம் மாநகர சபையானது நடு வீதியில் குப்பைகளை கொட்டுவதால் பயணிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்; மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் இடம் உள்ளது. ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் வீதியூடாகவே அந்த குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கழிவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு கழிவுப் பொருட்களை கொண்டு செல்லப்படும்போது மாநகர சபையின் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றுவதில்லை. பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளை திறந்தவாறு கொண்டு செல்வதால் அந்த கழிவுகள் வீதியில் கொட்டப்படுவதுடன், காற்றுடன் அந்த கழிவுப் பொருட்களின் தூசுகள் பறந்து வீதியில் செல்வோரது கண்களுக்குள் செல்வதானால் வாகனத்தை சரியாக செலுத்த முடியாத அபாயகரமான நிலைகளும் ஏற்படுகின்றன. இது இவ்வாறு இருக்கையில் இன்றையதினம் காக்கைதீவு சந்தையில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் பக்கமாக அண்ணளவாக 200 மீட்டர்கள் தொலைவில் நடு வீதியில் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு காணப்படுகின்றன. இந்த கழிவுகளானது மாநகர சபையின் கழிவு பொருட்களை ஏற்றும் வாகனத்தில் இருந்து கொட்டப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த வீதியானது 784, 785 மற்றும் 789 ஆகிய வழித்தட பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் மற்றும் சித்தங்கேணி நோக்கி பயணிக்கும் பிரதான வீதியாக காணப்படுகிறது. இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளமையால் மக்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டவாறு பயணத்தை மேற்கொள்கின்றனர். இது குறித்து மானிப்பாய் பிரதேச சபையின் செயலாளரை தொடர்புகொண்டு வினவிய வேளை, குறித்த வீதியில் யாழ். மாநகர சபையினர் கழிவுகளை கொட்டி இருக்கலாம் எனவும், அவர்கள் இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக இவ்வாறு வீதியில் கழிவுகளை கொட்டி செல்வதாகவும், தாங்கள் இது குறித்து தெரியப்படுத்தியும் அவர்கள் அதனை சீர் செய்வதாக தெரியவில்லை என கூறினார். உள்ளூராட்சி சபைகள் என்பன கிராமங்களையும், நகரங்களையும் அபிவிருத்தி செய்வதையும், தூய்மையை பேணுவதையுமே பிரதான நோக்கமாக கொண்டு காணப்படுகிறன. இவ்வாறு இருக்கின்ற நிலையில் மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே இவ்வாறு வீதிகளில் குப்பைகளை கொட்டும்போது இவர்கள் ஏனைய விடயங்களில் எவ்வாறு சரியாக நடந்து கொள்வார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருகையில்; மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் இடம் உள்ளது. ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் வீதியூடாகவே அந்த குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கழிவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு கழிவுப் பொருட்களை கொண்டு செல்லப்படும்போது மாநகர சபையின் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றுவதில்லை. பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளை திறந்தவாறு கொண்டு செல்வதால் அந்த கழிவுகள் வீதியில் கொட்டப்படுவதுடன், காற்றுடன் அந்த கழிவுப் பொருட்களின் தூசுகள் பறந்து வீதியில் செல்வோரது கண்களுக்குள் செல்வதானால் வாகனத்தை சரியாக செலுத்த முடியாத அபாயகரமான நிலைகளும் ஏற்படுகின்றன. இது இவ்வாறு இருக்கையில் இன்றையதினம் காக்கைதீவு சந்தையில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் பக்கமாக அண்ணளவாக 200 மீட்டர்கள் தொலைவில் நடு வீதியில் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு காணப்படுகின்றன. இந்த கழிவுகளானது மாநகர சபையின் கழிவு பொருட்களை ஏற்றும் வாகனத்தில் இருந்து கொட்டப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த வீதியானது 784, 785 மற்றும் 789 ஆகிய வழித்தட பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் மற்றும் சித்தங்கேணி நோக்கி பயணிக்கும் பிரதான வீதியாக காணப்படுகிறது. இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளமையால் மக்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டவாறு பயணத்தை மேற்கொள்கின்றனர். இது குறித்து மானிப்பாய் பிரதேச சபையின் செயலாளரை தொடர்புகொண்டு வினவிய வேளை, குறித்த வீதியில் யாழ். மாநகர சபையினர் கழிவுகளை கொட்டி இருக்கலாம் எனவும், அவர்கள் இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக இவ்வாறு வீதியில் கழிவுகளை கொட்டி செல்வதாகவும், தாங்கள் இது குறித்து தெரியப்படுத்தியும் அவர்கள் அதனை சீர் செய்வதாக தெரியவில்லை என கூறினார். உள்ளூராட்சி சபைகள் என்பன கிராமங்களையும், நகரங்களையும் அபிவிருத்தி செய்வதையும், தூய்மையை பேணுவதையுமே பிரதான நோக்கமாக கொண்டு காணப்படுகிறன. இவ்வாறு இருக்கின்ற நிலையில் மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே இவ்வாறு வீதிகளில் குப்பைகளை கொட்டும்போது இவர்கள் ஏனைய விடயங்களில் எவ்வாறு சரியாக நடந்து கொள்வார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது. நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!
  8. 04 Apr, 2025 | 01:21 PM சென்னையிலிருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் நேற்று வியாழக்கிழமை (03) மாலை வந்தடைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (04) மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளன. 400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு "Royal madras yacht club" அங்கத்தவர்களால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தனர். இன்று மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி புறப்படுகின்ற இப்படகு பின்னர் பூம்புகாரை அடைந்து அங்கிருந்து பாண்டிச்சேரியை சென்றடைந்து அங்கிருந்து கோவளத்தினையும் இறுதியில் மீண்டும் சென்னையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. காங்கேசன்துறையை வந்தடைந்த பாய்மரக் கப்பலில் இருந்த பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் வடமாகாண ஆளுனர் நா.வேதநாயகன், வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், சுற்றுலா துறை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர். யாழ். காங்கேசன்துறைக்கு வந்த பாய்மரப்படகுகள் நாகபட்டினம் நோக்கி புறப்பட்டன | Virakesari.lk
  9. பிராந்தியத்தின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி வீதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இலங்கையை விட குறைந்த வரி விதிக்கப்படும் நாடுகள் விரைவில் அமெரிக்க சந்தையில் நுழையும் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படும். இது ஆடை தொழிற்துறையை பெரிதும் பாதிக்கும் என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 2ஆம் திகதி அறிவித்த 10 வீத அடிப்படை வரியை இன்று முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதன் கீழ், இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத வித்தியாசமான விகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இது 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். எமது பிராந்தியத்தின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க வரி வீதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இலங்கையை விட குறைந்த சுங்க வரி விதிக்கப்படும் நாடுகள் விரைவில் அமெரிக்க சந்தையில் நுழையும் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படும். இலங்கையின் ஆடை ஏற்றுமதிகளில் மிகப்பெரிய ஒற்றை சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. இது மொத்த ஏற்றுமதிகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது. 2023ஆம் ஆண்டு மாத்திரம் ஆடை ஏற்றுமதி 5.5 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது. இந்த வரி மாற்றம் காரணமாக இலங்கை ஏற்றுமதிகளுக்கு உடனடியாகவும் கடுமையாகவும் பாதிப்பு ஏற்படலாம். இதன் விளைவாக, அமெரிக்க சந்தைக்கான நமது ஏற்றுமதிகளில் கணிசமான பங்கு போட்டிச் சந்தைகளுக்கு மாற்றப்படுவதை நாம் காணலாம். எனினும், அமெரிக்காவில் நாம் ஈட்டியிருந்த சந்தைப் பங்கை மற்ற சந்தைகளில் ஈடுசெய்ய முடியாது. இந்த நிலைமைக்கான பொருத்தமான நடவடிக்கைகளை தீர்மானிக்க, இலங்கை அரசு ஏற்கனவே தொழில்துறைப் பிரதிநிதிகள் மற்றும் பிற தரப்பினருடன் கலந்தாலோசனைகளைத் தொடங்கியுள்ளது. இந்த நெருக்கடியைக் தவிர்க்க அரசு மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள நாணய திட்டத்தின் வரம்புகளுக்குள் இருக்கும்போது, அமெரிக்க அரசால் உருவாக்கப்பட்ட இந்த சிக்கலுக்கு மிகவும் பொருத்தமான தீர்வுகளை எவ்வாறு வழங்குவது என்பதைக் கண்டறிய தொடர்புடைய அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறோம். இந்த சவால்கள் இடையேயும், இலங்கையின் ஆடைத்துறை வெளிப்படைத்தன்மை, நெறிமுறைபூர்வமான உற்பத்தி மற்றும் நிலைத்தன்மைக்கான மதிப்புகளை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. தற்போது நாங்கள் தொழில்துறையின் உற்பத்தித் திறன், செயல்திறன் மற்றும் நம்பகமான மூலப்பொருட்களின் பயன்பாட்டை உறுதி செய்வதில் கவனம் செலுத்தியுள்ளோம். ஆனால் இது ஒரு மிகவும் கடுமையான நெருக்கடியாகும், இதை ஒரு அவசர தேசியப் பிரச்சினையாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் புதிய வரி கொள்கைக்கு இலங்கை ஆடைத் தொழிற்துறை எதிர்ப்பு | Virakesari.lk
  10. இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் வெள்ளிக்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினைகளில் இழுவைமடிப் படகுகள் ஊடாக இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவதும் ஒன்று. வடமாகாண தமிழ் கடற் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் நிலையில் இருக்கிறது. எனவே கட்டாயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இது தொடர்பாக பேச வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. இது தொடர்பாக நான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளேன் எனத் தெரிவித்தார். இதேவேளை, கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு மோடி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறித்தும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்தார். அதன்படி, இது ஒரு அரசியல் ரீதியான தீர்மானமே. இது நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒரு விடயம் என அவர் குறிப்பிட்டார். கடற் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவது தொடர்பில் இந்திய பிரதமர் மோடியிடம் பேச வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா | Virakesari.lk
  11. அபு அலா திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ், அவருக்கு குற்றவாளி ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து புதன்கிழமை (02) தீர்ப்பளித்தார். கிண்ணியா கட்டையாறு மதரஸா வீதியில் வசித்து வரும் 38 வயதான ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா கட்டையாறு பகுதியில் மதரஸாவுக்கு 2015 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி சென்ற சிறுவனை பலவந்தமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் கடந்த பத்து வருடங்களாக இடம் பெற்று வந்த நிலையில் புதன்கிழமை (02) திறந்த நீதிமன்றில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. மதரஸாவுக்குசென்ற மாணவனை பலாத்காரமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறி அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும், 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அந்த தண்ட பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதை கட்டத் தவறினால், மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை வழங்குமாறும் பாதிக்கப்பட்டோர் நிதியத்திற்கு தண்டனை பணத்தில் இருந்து 20 வீதம் செலுத்த வேண்டும் எனவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Tamilmirror Online || மதரஸா மாணவன் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை
  12. யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குள் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் புரிவது தடை செய்யப்பட்ட போதிலும் தொடர்ந்து உழவு இயந்திரத்தை பாவித்து நபர் ஒருவர் தொழில் புரிந்துவருவதால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்; கடந்த 2024ஆம் ஆண்டு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைப் பகுதிக்குள் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் புரிவது தடை செய்யப்பட்டு பொதுச்சபையாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆயினும் பொதுச்சபையினதும், நீரியல்வளத் திணைக்களத்தினதும் சட்டதிட்டங்களை மீறி அப்பகுதியில் நபர் ஒருவர் அடாத்தாக உழவு இயந்திரத்தை பாவித்து தொடர்ந்து கரைவலை தொழில் புரிந்துவருவது மீனவர்கள் இடையே முறுகல் நிலையை உண்டுபண்ணி வருகின்றது. பொதுச்சபையின் தீர்மானத்தை மீறி ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் இரகசியமான முறையில் குறித்த கரைவலை சம்மாட்டிக்கு உழவு இயந்திரத்திற்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதற்காக நீரியல் வளத்திணைக்கள அதிகாரிக்கு கடிதம் எழுதியது அம்பலமாகியுள்ளது. செயற்பாட்டில் இருந்த ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க செயலாளர் பதவியில் இருந்து விலகிச் சென்றதால் கடந்த பொதுச்சபை கூட்ட தீர்மானத்தில் செயலாளர் ஒருவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் காலமாக இருப்பதால் தேர்தல் முடியும்வரை தற்பொழுது தெரிவு செய்யப்பட்ட செயலாளருக்கு படகு பதிவு செய்தல், படகு விற்பனை, அங்கத்தவர்களுக்கு வங்கி கணக்கு பதிவு செய்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு கடிதம் வழங்கவே பொதுச்சபையால் அனுமதிக்கப்பட்டது ஆயினும் ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் மிக இரகசியமான முறையில் மீனவர்களின் தீர்மானத்தை மீறி உழவு இயந்திரத்திற்கு அனுமதி கோரி நீரியல்வளத் திணைக்களத்திற்கும், பாதுகாப்பு கோரி மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகத்தினரின் அண்மைக்கால செயற்பாடுகள் தமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் நிர்வாகம் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டுமென அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர் அப்பகுதி மீனவர்களின் தீர்மானத்தை மீறி இரகசியமான முறையில் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்திற்கு அனுமதி கோரி கடிதம் எழுதிய ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க செயலாளர், தலைவர் ஆகியோர் மீனவர்கள் இடையே இடம்பெறும் முறுகல் நிலைக்கு பொறுப்பென அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். உழவு இயந்திரத்தை கொண்டு கரைவலை இழுப்பதற்கு அனுமதி கோரி இரகசிய கடிதம் - ஆழியவளையில் முறுகல் நிலை!
  13. 03 Apr, 2025 | 05:20 PM இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, வீதியைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து தெரு நாய்களை அகற்றுமாறு இலங்கை அரசாங்கம் சுற்றறிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விலங்குகள் நலனுக்கு எதிரானது, நெறிமுறையற்றது, விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது மற்றும் நீண்டகால மனித - நாய் மேலாண்மை திட்டங்களை மீறுகிறது என்று தெரிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், இலங்கையில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்களின் குழுவான RARE Sri Lanka, இன்று வியாழக்கிழமை (03) கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. தெரு நாய்களை அகற்றுமாறு அரசாங்கம் சுற்றறிக்கை ; விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் போராட்டம் | Virakesari.lk
  14. 2025 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 722,276 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 118,315 ஆகும். இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து 93,568 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 69,705 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 50,201 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 39,513 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 43,366 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 27,353 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை | Virakesari.lk
  15. கொழும்பு காசல் மகப்பேற்று மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி ஏற்கெனவே ஆறு பெண்களுக்கு உதவியுள்ளதாகவும் விந்தணு தானம் குறித்து தேவையான தகவல்களை நாங்கள் வழங்குகிறோம் என்றும் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அஜித் குமார தண்டநாராயணா தெரிவித்துள்ளார். டெய்லி மிரருக்கு அளித்துள்ள செவ்வியின்போதே அவர் அதனை குறிப்பிட்டள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, இலங்கையில் மலட்டுத்தன்மையுடன் இருக்கும் தம்பதிகளுக்கு உதவுவதில் இது ஒரு பெரிய படியாகும். சமீபத்தில் திறக்கப்பட்ட விந்தணு வங்கி, ஏற்கெனவே விந்தணு தானத்திற்கு சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்களை பதிவு செய்துள்ளனர். இந்த முயற்சியின் மூலம் சுமார் 200 மலட்டுத்தன்மை கொண்ட பெண்கள் உள்ளனர் குழந்தை பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். "இந்த விந்தணு வங்கியின் முக்கிய குறிக்கோள், மலட்டுத்தன்மையுடன் போராடும் பெற்றோருக்கு குழந்தைகளைப் பெற உதவுவதாகும். விந்தணுவை தானம் செய்ய விரும்புவோர் பல மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், விந்தணு தானம் குறித்து மருத்துவமனை தினமும் தொலைபேசி விசாரணைகளைப் பெறுவதாகவும் ஆர்வமுள்ளவர்களுக்கு தேவையான தகவல்களை நாங்கள் வழங்குகிறோம் என்றும் கூறினார். Tamilmirror Online || இலங்கையில் வரவேற்பை பெறும் விந்தணு தானம்
  16. இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப்பயணம் செய்வதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. வடமாகாண மக்கள் அதிகளவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளமையால், அவர்களுக்கான துரித சேவைகளை வழங்குவதற்காக குடிவரவுமற்றும் குடியகல்வுதிணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிப்பது பொருத்தமானதென, 2025.01.31 அன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Tamilmirror Online || யாழில், கடவுசீட்டு பிராந்திய அலுவலகம்
  17. வடக்கின் பிரதான ரயில் சேவைகளுள் ஒன்றான யாழ் ராணியின், ஒழுங்கற்றதும் பலவீனமானதுமான சேவைகள் காரணமாக தாம் பாதிக்கப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையிலிருந்து காலை 6 மணிக்கு சேவைகளை ஆரம்பிக்கும் யாழ் ராணி, அனுராதபுரத்தை காலை 10:30 மணியளவில் சென்றடையும். அதன் பின்னர் மாலை 2:30 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து புறப்படும் சேவையானது மாலை 6:30 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும். அரச அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரின் நேர அட்டவணையுடன் தொடர்புடைய ரயில் சேவையாக இருப்பதால், அவர்களில் பலர் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த ஒரு மாதமாக முன்னறிப்புகள் இல்லாமல் ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்படுவதால் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்துடன் ரயில் சேவைகளில் நேரதாமதங்களும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் காங்கேசன்துறை ரயில்நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தெரிவித்ததாவது: வடக்கில் தற்போது ஒரேயொரு இயந்திரமே சேவையில் ஈடுபட்டு வருகின்றது. ஆதலால்தான், சேவையில் தாமதங்கள் ஏற்படுகின்றன. விரைவில் இந்தப் பிரச்சினைகள் சீர்செய்யப்படும் - என்றார். ஒருங்கற்ற ரயில் சேவையால் பயணிகள் பெரும் அந்தரிப்பு!
  18. 02 Apr, 2025 | 08:59 AM (செ.சுபதர்ஷனி) இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் இவ்வருடம் வேறு எந்த தேர்தலும் இடம்பெறாது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தல் இடம்பெறும். எனினும் இவ்வருடம் தேர்தல் இடம்பெறாது. தேர்தலை நடத்த தேர்தல் சட்ட விதிமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமையால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (01) பாணந்துறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தால் அரசியல் தலைவர்கள் எவருக்கும் வாகன பேமிட் வழங்கப்பட மாட்டாது. அரசியல் தலைவர்களுக்காக வழங்கப்படும் சலுகைகளை குறைப்பதே எமது நோக்கம். அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் பணிபுரிவதற்கு அத்தியாவசியமான வளங்கள் வழங்கப்படும் அதனைக் கொண்டு கடமையாற்றுங்கள். நாட்டின் பொருளாதாரம் ஸ்த்திர நிலையை அடையும் வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அரச வாகனங்கள் வழங்கப்பட மாட்டாது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றம் அமைதியாக செயற்படுகிறது. இந்த அரசியல் கலாசாரமே நாட்டின் அபிவிருத்திக்கு சிறந்த அடித்தளமாக உள்ளது. நாட்டை மறுசீரமைப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒரு தேசிய கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவது அவசியம். ஆகையால் அத்திட்டத்தின் படி பாணந்துறை மட்டுமல்லாது அனைத்து உள்ளூராட்சிப் பிரிவுகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும். இம்முறை தேர்தலில் சுமார் 70 சதவீத மக்களின் வாக்குகளால் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுகிறேன். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற மாட்டார் எனக் கூறிய நபேரே பொதுமக்களால் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்குமாறு நாம் கோரவில்லை. எனினும் மக்கள் எம்மை வெற்றிப்பெறச் செய்தனர். அதிகூடிய ஆசனங்களை கைப்பற்றிய கட்சியாக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக அது பதிவாகியுள்ளது. அதேபோல் உள்ளூராட்சி பலதையும் எமக்கு பொதுமக்கள் அளிபார்கள் என்ற நம்பிகையுள்ளது. இது மிகவும் அவசியம். நாள்தோறும் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் இவ்வருடம் வேறு எந்த தேர்தலும் இடம்பெறாது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தல் இடம்பெறும். எனினும் இவ்வருடம் தேர்தல் இடம்பெறாது. தேர்தலை நடத்த தேர்தல் சட்ட விதிமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமையால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இவ்வருடம் மாகாணசபை தேர்தல் இடம்பெறாது - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ | Virakesari.lk
  19. 02 Apr, 2025 | 04:18 PM பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி வழங்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. அதன்படி, மியன்மாரில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களுக்காக 10 இலட்சம் டொலர்களை நிதியுதவியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று புதன்கிழமை (02) தெரிவித்துள்ளார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கு இலங்கை நிதியுதவி | Virakesari.lk
  20. பெண்ணொருவர் தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த அலெக்சான்ட்ரா ஹில்டெப்ரான்ட் (66) பெர்லின் சுவர் அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1970-களில் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து 8 குழந்தைகளை பெற்றார். 50 வயதை கடந்த பிறகும் குழந்தைகளை பெற்று வந்தார். அனைத்து குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமே பிறந்தன. இதில் முதல் குழந்தையான ஸ்வெட்லானாவுக்கு 46 வயதாகி விட்டது. 9-வது குழந்தையான கதரினாவுக்கு 2 வயதாகிறது. இந்நிலையில், அலெக்சான்ட்ரா தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை கடந்த 19-ம் திகதி பெற்றெடுத்தார். ஆண் குழந்தையான அதற்கு பிலிப் என பெயரிட்டுள்ளார். இத்தனைக்கும் இயற்கைவழியில்தான் இவர் கருத்தரித்திருக்கிறார். இதுகுறித்து அலெக்சான்ட்ரா கூறும்போது, “சத்தான உணவுகளை சாப்பிடுகிறேன். தினமும் ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்கிறேன். 2 மணி நேரம் ஓடுகிறேன். புகை மற்றும் மது பழக்கம் இல்லை. கருத்தடை சாதனங்களை பயன்படுத்தியதே இல்லை” என்றார். இந்தப் பெண் இவ்வளவு அதிக வயதில் குழந்தை பெற்றுக் கொண்டது ஒன்றும் புதிது அல்ல. கடந்த 2023-ம் ஆண்டு உகாண்டாவைச் சேர்ந்த சபினா நமுக்வாயா என்ற பெண், 70-வது வயதில் ஐவிஎப் மூலம் இரட்டை குழந்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || 10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
  21. வடக்கு மாகாணத்தில் 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்காக வருடமொன்றுக்கு 620 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படவேண்டும். இந்தக் கட்டணம் இன்னமும் செலுத்தப்படாது நிலுவையிலுள்ளது என்று இலங்கை மின்சாரசபையின் வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். வடக்கிலிலுள்ள பெரும்பாலான வீதிகளில் அண்மைக்காலமாக வீதி மின்விளக்குகள் இரவு வேளைகளில் ஒளிராதுள்ளமை தொடர்பாகவும், அதனால் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பாகவும் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆரம்பகாலத்தில் வீதி விளக்குகள் மின்சாரசபையால் பொருத்தப்பட்டு, அதற்குரிய பராமரிப்புகள் மற்றும் மின்சாரப் பட்டியல் பணத்தை ஒவ்வொரு மின் பாவனையாளர்களும் செலுத்துகின்ற மின்பட்டியலில் சிறுதொகையை மேலதிகமாக அறவிடப்பட்டு செலுத்தப்பட்டது. எனினும் வீதி விளக்குகள் பொருத்தப்படாத பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்படுவதாலும், உள்ளூராட்சி சபைகள் தமது சபை எல்லைக்குட்பட்ட மக்களிடம் வரி வசூலிப்பதாலும் உள்ளூராட்சிசபைகள் மின்சாரசபை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்று வீதி விளக்குகளை பொருத்துதல், பராமரித்தல் மற்றும் மின் கட்டணங்களை செலுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது வடக்கு மாகாணத்தில் பொருத்தப்பட்டுள்ள 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விளக்குகளுக்கு வருடம் ஒன்றுக்கு 620 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தவேண்டும். இந்தக் கட்டணத்துக்கான மின்பட்டியல் மின்சாரசபையால் உள்ளூராட்சி சபைகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றபோதிலும் பல்வேறு காரணங்களைக் கூறி இதுவரையில் வடமாகாணத்தில் உள்ள எந்த உள்ளூராட்சி சபையும் மின்கட்டணத்தைச் செலுத்தவில்லை– என்றார். வீதி மின் விளக்குகளுக்கு ரூ.620 மில்லியன் நிலுவை இருளில் மூழ்குமா வடக்கு...
  22. முஸ்லீம் இளைஞன் கைதுஇஸ்ரேல் தொடர்பாகவும் பாலஸ்தீனம் தொடர்பாகவும் அரசாங்கம் வேறு வேறு நிலைப்பாட்டை கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது- ராஜ்குமார் ரஜீவ்காந் 31 Mar, 2025 | 05:12 PM ருஸ்டி என்ற இளைஞனை கைதுசெய்த பின்னர் அரசாங்கம் அவருக்கு எதிரான சாட்சியங்களை தேடியலைகின்றது போல தோன்றுகின்றது என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந்முஸ்லீம் இளைஞன் கைது அரசாங்கத்தின் இஸ்ரேல் தொடர்பான பாலஸ்தீனம் தொடர்பான நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார் செய்தியாளர்மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. பயங்கரவாத தடைச்சட்டம் என்பது இலங்கையில் சமான்ய மக்களின் கருத்துசுதந்திரத்தை தடைசெய்து அரசாங்கம் சந்தேகப்படுபவர்களை குற்றவாளிகளாக்கி தண்டனைகளை வழங்கிக்கொண்டிருந்த சட்டம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இந்த ருஸ்டி என்ற நபரின் கைது, அதன் பின்னர் அரசு வெளியிட்ட ஊடக அறிக்கை,மிகவும் பாரதூரமான விடயங்களை எங்களிற்கு சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக அரசாங்கம் அவரை கைதுசெய்த பின்னர் அவருக்கான சாட்சியங்களை தேடி அலைவது போல எங்களிற்கு தோன்றுகின்றது. அரசாங்கத்திடம் போதிய சாட்சியங்கள் இருந்தால் அவரைநீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவரை தடுத்துவைப்பதற்கான ஆணையை நீதிமன்றத்தின் ஊடாக பெறமுடியும்,அப்போதுதான் அவராலும் தான் குற்றம்சாட்டப்பட்டவர் இல்லை என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியும். எனவே ஒரு தரப்பே யார் குற்றவாளி என தீர்மானிக்கின்ற இந்த சட்டத்தினால் இத்தனை காலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும், குறிப்பாக முஸ்லீம் சமூகத்தை எடுத்துக்கொண்டால், வைத்தியர் ஷாபி அவர்கள் கட்டாய கருத்தடை செய்கின்றார் அவர் ஒரு தீவிரவாதி என தெரிவித்து அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்தார்கள் , இந்த கைதின் போது விமல்வீரவன்ச உதயகம்மன்பில போன்ற பலரும் பல ஊடகங்களும், அவர்தீவிரவாதி என அனைத்து தரப்பும் குற்றம்சாட்டியிருந்தது அதன் பின்னர் அவர் குற்றம்சாட்டப்பட்ட அனைத்து விடயங்களில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் எத்தனை ஆண்டுகள் அவரது வாழ்க்கை சிறையில் கழிந்தது அவருக்கு மாத்திரமல்ல அவரது குடும்பத்திற்கும் சமூக்திற்கும்,இந்த விடயத்தால் ஒரு பாரிய சிக்கல் ஏற்பட்டது.பாரிய இனமுறுகலை இது தோற்றுவித்தது , எனவேஅவசரப்பட்டு தீவிரவாதி என முத்திரை குத்துவதாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதாலும் இன முறுகல்கள் இங்கு அதிகரிக்கின்றன என்பதை அரசாங்கம் இங்கு புரிந்துகொள்ளவேண்டும். இதேபோல ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற சட்டத்தரணி சாதாரண தொண்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காரணத்தினால்,பயங்கரவாத நிறுவனங்களில் இருந்து பணம் வாங்குகின்றார் என்ற அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டார். அவரின் கைதின் பின்னர் கட்டார் சரிட்டி என்கின்ற தொண்டு நிறுவனம் தீவிரவாத நிறுவனமாக பட்டியல் இடப்படுகின்றது.பின்னர் ஒரு வருடத்தின் பின்னர் அது பயங்கரவாதஅமைப்பல்ல என அரசாங்கம் நீக்குகின்றது.பின்னர் இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றார். இப்படியே தீவிரவாதி என்பதும் இல்லை என்பதும் குறிப்பிட்டகாலப்பகுதியிலே அவர்களுடைய வாழ்க்கை, நீதிமன்றத்திலும் சிறைச்சாலைகளிலும் கழிவதும் சமூக ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதும்,இந்த வரலாறுகளை நாங்கள் அவதானித்துக்கொள்ளவேண்டும். இதுபோல ரம்சிராசீக் உட்பட பல முஸ்லீம் இளைஞர்கள் குற்றங்கள் எதிலும் ஈடுபடாமல் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுதண்டிக்கப்பட்டிருந்தார்கள். இதுபோல ஆருரன் உட்பட பல அரசியல்கைதிகள் 15 வருடங்களின் பின்னர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். எனவே குற்றமற்றவர்களிற்கு எவ்வாறு தண்டனையை வழங்க முடியும் என்ற விடயம் ஊடாகாவே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை நாங்கள் அணுகவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் இந்த நாட்டில் இருக்ககூடாது என்பதை நாங்கள் மீண்டும்மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரே காரணம்,குற்றவாளிகள் தப்பித்தால் கூட நிரபராதிகள் தண்டனைக்கு உள்ளாக கூடாது என்பதே. இன்னொருவிடயத்தை நீங்கள் அவதானித்து பார்த்தால் தெரியும் ஞானசார தேரர் விமல் வீரவன்ச உதயகம்மன்பில சுமணதேரர் போன்றவர்கள் மிக மோசமான இனவாதத்தினை கக்கி,சமூகங்களிற்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்தி சீர்குலைவுகளை ஏற்படுத்தி,சில நேரங்களில் கலவரங்களை உண்டுபண்ணக்கூடிய பேச்சுக்களை பேசி,கொலை செய்வேன் என்ற பேச்சுக்களை பேசி எல்லாம் சாதாரணமாக எந்த சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்படவில்லை. எனவே அவர்களின் செயற்பாட்டிற்கும் ஒரு விடயமும் தமிழ் முஸ்லீம் மக்களின் கருத்திற்கு ஒரு விடயம் என கையாளப்படுவதும் மிக மோசமானது. மேலும் முஸ்லீம் இளைஞன் கைது அரசாங்கத்தின் இஸ்ரேல் தொடர்பான பாலஸ்தீனம் தொடர்பான நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகின்றது. முஸ்லீம் இளைஞன் கைதுஇஸ்ரேல் தொடர்பாகவும் பாலஸ்தீனம் தொடர்பாகவும் அரசாங்கம் வேறு வேறு நிலைப்பாட்டை கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது- ராஜ்குமார் ரஜீவ்காந் | Virakesari.lk
  23. 31 Mar, 2025 | 01:04 PM சென்னை: இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக கூறி ரம்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த 1984 ம் ஆண்டு உள் நாட்டு போர் காரணமாக சரவணமுத்துஇ தமிழ்செல்வி தம்பதியர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தனர். பின் வெளிநாட்டவருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கோவையில் பல ஆண்டுகளாக தங்கியுள்ளார் இந்நிலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு கோவையில் அத்தம்பதியருக்கு ரம்யா என்ற பெண் குழந்தை பிறந்துஇ அக்குழந்தை கோவையிலேயே பள்ளிப்படிப்பை முடித்து கோவையை சேர்ந்தவரை திருமணம் செய்து 37 ஆண்டுகள் கோவையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து தங்கி இருக்க பதிவை புதுப்பிக்க அணுகிய போதுஇ சரவணமுத்துஇ தமிழ்செல்வி தம்பதியரின் பதிவை புதுப்பிக்க மறுத்ததுடன் 1987 ஜூலைக்கு பிறகு பிறந்தவர் இந்தியாவில் பிறந்தவர் என்ற அடிப்படையில் மட்டும் இந்திய குடியுரிமை கேட்க முடியாது எனக்கூறி ரம்யாவின் இந்திய கடவுச்சீட்டை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. இதனிடையே இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக கூறி ரம்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளமுகில் ஆஜராகி வாதிட்டார். பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மனுதாரர் இலங்கைக்கு சென்று ஆவணங்களை பெற்று இந்தியாவுக்கு வரும்படி கூறுவது தேவையில்லை என்றும் இந்தியாவில் பிறந்து இந்தியரை மணந்து 37 வருடமாக வாழ்ந்து வருவதை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் குடியுரிமை கோரி அவர் விண்ணப்பம் அளிக்க மனுதாரரை அனுமதிக்க வேண்டும் என மத்திய உள்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். அந்த விண்ணப்பம் மீது சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த விண்ணப்பித்தின் மீது மத்திய அரசு முடிவெடுக்கும் வரை இந்தியாவில் இருந்து மனுதாரரை வெளியேற்ற கூடாது எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார். இலங்கை தமிழ் அகதியின் மகளுக்கு இந்திய குடியுரிமையை வழங்குவது குறித்து மத்திய அரசாங்கம் ஆராயவேண்டும்-சென்னை உயர் நீதிமன்றம் | Virakesari.lk
  24. 31 Mar, 2025 | 11:57 AM உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும், விடுதலை புலிகளாலும், புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை பொய்யல்ல. போர் ஒன்றின்போது அவ்வாறு (மனித உரிமைகள், விதிகள் மீறல்) இடம்பெறும். இது குறித்து உள்நாட்டில் உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார் “மாகாண சபை முறைமை குறித்து இந்தியா எமக்குக் கூற வேண்டிய அவசியம் கிடையாது. எனினும், நாம் உறுதியளித்தபடி மாகாண சபை தேர்தலை நடத்துவோம்” என்றும் அவர் கூறியுள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) தனியார் விடுதி ஒன்றில் சந்தித்த வேளை ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும் விடுதலை புலிகளாலும் புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட பல அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை பொய்யல்ல. போர் ஒன்றின்போது அவ்வாறு ( மனித உரிமைகள், விதிகள் மீறல்) இடம்பெறும். இது தொடர்பில் உள்நாட்டில் உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். சில நாடுகளால் விதிக்கப்படும் தடைகளால் இந்தப் பிரச்னையை தீர்க்க முடியும் என நான் நினைக்கவில்லை. இதனால் நாட்டில் உள்ள இனவாதிகளுக்கே சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தருவது நல்ல விடயமாகும். அவர் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். திருகோணமலையில் சூரிய மின் திட்டம், வடக்கு ரயில் பாதைக்குரிய சமிக்ஞைகள் பொருத்தப்படுதல் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்காகவே அவர் வருகை தரவுள்ளார். மாகாண சபை முறைமை என்பது உள்நாட்டுப் பிரச்னையாகும். அதனை இந்தியா எமக்குக்கூற வேண்டிய அவசியம் கிடையாது. மாகாண சபை முறைமையை நடைமுறைப்படுத்துவோம் என நாம் எமது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்தவுடன் பெரும்பாலும் இந்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கிறோம். நாம் ஏற்கனவே மக்களுக்கு உறுதியளித்துள்ளோம். ஆகையால், அதனை இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டிய தேவை கிடையாது. நான் அறிந்த வரையில் 13ஆவது திருத்தம் தொடர்பில் எமது ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையே நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை - என்றும் கூறினார். உள்நாட்டில் இடம்பெற்ற போர் குறித்து உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க | Virakesari.lk
  25. யாழ். விமான நிலையத்தை 06 மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்வோம் - சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினை ஆறு மாத கால பகுதிக்குள் அபிவிருத்தி செய்து , சர்வதேச விமான நிலையத்தில் இருக்க வேண்டிய அத்தனை வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுப்போம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரில் சென்று விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும், அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இது சர்வதேச விமான நிலையம். இங்கு குறைந்தளவான விமான சேவைகள் இடம்பெறுவதனால் , குறைந்தளவான பயணிகளே வருகை தருகின்றனர். பயணிகள் உள்ளே வருவதற்கும் , வெளியேறுவதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். விமான நிலையத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மிக விரைவில் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வோம். விமான ஓடுபாதைகளை விஸ்தரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதேபோல நிரந்தர கட்டடங்களையும் அமைக்க வேண்டும். இதனை ஒரு சர்வதேச விமான நிலையமாக மாற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். ஆறு மாதங்களுக்குள் இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக நிச்சயம் மாற்றியமைக்கப்படும் என மேலும் தெரிவித்தார். யாழ். விமான நிலையத்தை 06 மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்வோம் - சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.