Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 21 Mar, 2025 | 04:42 PM சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட, மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் கி.அஜந்தன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, அனுமதியற்ற வகையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு, உரிய ஆவணங்கள் இன்றி சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்தமையை கண்டறிந்தனர். அவற்றினை சான்று பொருட்களாக கைப்பற்றிய சுகாதார பரிசோதகர் , கடை உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். குறித்த வழக்கு வியாழக்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை , கடை உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் 64 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம் | Virakesari.lk
  2. மனைவி ஆபாசப் படங்கள் பார்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது போன்றவை கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கரூரை சேர்ந்த நபர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை ரத்து செய்து விவாகரத்து வழங்கக் கோரி அந்த நபர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம்: மனுதாரருக்கும் அவர் மனைவிக்கும் 2018-ல் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். இருவரும் முதல் திருமணத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். தற்போது 2-வது திருமணத்தில் இருந்தும் வெளியேறும் வகையில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 2020 டிசம்பர் மாதத்திலிருந்து கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், தனது மனைவிக்கு பாலியல் நோய் உள்ளது. அவர் ஆபாச படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார். மாமனார், மாமியாரும் தன்னை மதிக்கவில்லை, அதிமாக செலவு செய்கிறார். அதிக நேரம் போனிலேயே செலவிடுகிறார். வீட்டு வேலைகளை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளை கூறி விவாகரத்து கோரி மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார். மனைவி பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவில்லை. உண்மையில் மனைவிக்கு பாலியல் நோய் இருந்திருந்தால் இருவரும் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளதால் மனுதாரருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அவ்வாறு எதுவும் இல்லை. மேலும் மனைவிக்கு பெண்கள் தொடர்பான நோய் இருப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். அந்த நோய் எளிதில் குணப்படுத்தக்கூடியதே. மனைவி ஆபாசப் படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். தடை செய்யப்பட்ட வகையைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமாகாது. ஆபாச படங்களுக்கு அடிமையாவது தவறு. மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என்பது மனுதாரரின் மற்றொரு குற்றச்சாட்டு. ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதை குற்றமாக கருத முடியாது. ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவது இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு தரவுகள் எதுவும் இல்லை. சுய இன்பம் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. இதனால் மனைவி ஆபாச படங்கள் பார்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது ஆகிய கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது. தனியுரிமை அடிப்படை உரிமையாக உள்ளது. இது திருமண உறவுகளில் இருப்பவர்களுக்கு பொருந்தும். திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் மனைவியாக மாறுகிறார். அப்போது அவரது தனியுரிமையை கைகொள்கிறார். மனைவியின் தனியுரிமைக்கான வரையறையில் அவரது பாலியல் சுதந்திரத்தின் பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளது. ஒரு பெண் மனைவியாகிவிட்டார் என்பதற்காக அவரது அடிப்படை உரிமையை மறுக்க முடியாது. மனைவி மீது மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அவைகள் உண்மையாக இருப்பினும் அந்தக் குற்றச்சாட்டுகள் சட்டப்படி விவாகரத்து கோருவதற்கான காரணங்களாக இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளனர். Tamilmirror Online || “சுய இன்பத்தில் பெண்கள் ஈடுபடுவது குற்றம் அல்ல”
  3. 20 Mar, 2025 | 08:58 AM விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான், கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யபோவார்கள் அல்ல மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் சுயேச்சைக்குழுவாக தேர்தலில் போட்டியிடும் விமலசேன லவக்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபையில் சுயேச்சைக்குழுவில் போட்டியிடுவதற்கா நேற்று புதன்கிழமை (19) பழைய கச்சேரியில் வேட்புமனுதாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கோறளைப்பற்று பிரதேச சபையில் 14 வட்டாரத்திலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களை எனது தலைமையில் களமிறக்கியுள்ளேன். கிராமங்களின் அபிவிருத்தியை மேற்கொள்ளும் ஒரு தேர்தல் இதில் வெற்றிபெறும் வேட்பாளர் 900 மீற்றருக்குள் இருக்கின்ற ஒரு வீதியை புனரமைக்க முடியும் குறிப்பாக பிரதேச சபை எல்லைக்குள் உள்ள அடிப்படை தேவைகளை செய்து முடிக்கமுடியும். அப்படிச் செய்வோம் இப்படிச் செய்வோம் என பிரச்சாரங்களை செய்வார்கள் இந்த காலங்களில் துரஸ்டவசமாக ஒட்டுக்குழுக்களாகவும் பயங்கரவாத கழுக்களாகவும் செயற்பட்டு பல கொலைகளை செய்த குழுக்கள் இந்த தேர்தல் காலத்தில் ஒன்றாக இணைந்துள்ளனர். பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தொடர்பாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தொடர்பாகவும் பல விமர்சனங்கள் உண்டு இவர்கள் எல்லாம் மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இந்தமுறை போட்டியிடுகின்றனர். எனவே மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் இவர்கள் மக்களின் இருப்புக்களை சுரண்டி எத்தனையோ உயிர்கள் பறித்தவர்கள் கடந்தகாலத்தில் புலிகள் இருந்தகாலத்தில் பிள்ளையானும் கருணாவும் பிரிந்தபோது தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளில் இருந்து பிள்ளையான் கருணா பிரிந்தபோதுதான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர் மாவட்டத்திலுள்ள அநேகமானவர்கள் பறிகொடுத்து உறவுகளாக, தாய் தந்தைகளாக, சகோதர்களாக இருக்கின்றோம் எனவே மக்கள் விழிப்போடு இந்த தேர்தலில் செயற்படவேண்டும் என்றார். வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ; மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே - விமலசேன லவக்குமார் | Virakesari.lk
  4. தேசபந்து தென்னக்கோனின் வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை - எட்டு வீடுகள் ஆனால் அவரது பெயரின் கீழ் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை- நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம். 20 Mar, 2025 | 12:06 PM முன்னாள் பொலிஸ்மா அதிபர்தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்வதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கை போன்ற ஒன்றில் பொலிஸார் ஈடுபட்டனர் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தின் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனெரல் திலீபா பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- கைதுசெய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் இவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பெரும் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.பிரபாகரனை தேடுவது போல . இவர் நேற்றுவரை தனது சமூக மத செல்வாக்கை பாவித்து கைதுசெய்யப்படுவதை தவிர்;த்து வந்தார். இவர் தனது முகவரியாக வழங்கியுள்ள வீட்டில் உண்மையில் பௌத்தமதகுரு ஒருவர் வசிக்கின்றார். கடந்த சில நாட்களாக பொலிஸார் அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,மற்றும் ஏனையவர்களிடம் இவர் எங்கிருக்கின்றார் என விசாரணை செய்தனர். செல்வாக்குள்ளவர்களுடன் இவர் உடன்பாடுகளை செய்துகொண்டுள்ளார்,இவரது வீட்டை சோதனையிட்டவேளை 795 மதுபான போத்தல்கள் அங்கு காணப்பட்டன.100க்கும் மேற்பட்ட ஆடம்பர பரிசு கூடைகள் காணப்பட்டன. அரசாங்க ஊழியர்களால் சிறிய பரிசுப்பொதியை கூட பெறமுடியாது, இவரால் எப்படி இதனை பெற முடிந்தது. அவரது வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை ,அவரது பெயரின் கீழ் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை,ஆனால் அவருக்கு எட்டு வீடுகள் உள்ளன.இதன் காரணமாகவே இவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை விட ஆபத்தானவர் என தெரிவிக்கின்றேன் இவர் ஒரு பிசாசு. தேசபந்து தென்னக்கோனின் வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை - எட்டு வீடுகள் ஆனால் அவரது பெயரின் கீழ் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை- நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் | Virakesari.lk
  5. 20 Mar, 2025 | 02:37 PM கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீபகாலமாக பதின்ம வயது கர்ப்பம் என்பது இலங்கையை பொறுத்தளவில் சற்று அதிகரித்துள்ளது. பதின்ம வயது கர்ப்பம் என்பது நிகழும்போது தாய்க்கும், சேய்க்கும், சமூகத்துக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான எஸ்.ரகுராம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு பதின்ம வயதுப் பெண் சரியாக முதிர்ச்சி அடையாமல், தனது தேவைகளை சரியா அறிந்துகொள்ளாமல், கல்வியறிவு போதியளவு இல்லாமலும் இருக்கலாம். இவ்வாறான சூழ்நிலையில் கர்ப்பத்தை சுமக்கும் போது உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் ஆயத்தப்படுத்தும் தன்மை போதாமல் இருக்கிறது. இது குறித்த பெண்ணுக்கு உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். பதின்ம வயதுடைய தாய்க்கு குருதிச்சோகை, உயர் குருதி அழுத்தம், நீரிழிவு போன்றன ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. குழந்தையை சரியான விதத்தில் கவனிக்காத பட்சத்தில் அந்த குழந்தை நிறை குறைவாக பிறக்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளதுடன் அந்த குழந்தைக்கு பின்னாளில் சில சில பிரச்சினைகளும் ஏற்படலாம். சமூகத்திலே 16,17,18 வயதுகளை கொண்ட பெண்கள் கர்ப்பமடையும்போது வித்தியாசமாவும், வரவேற்கப்படாத விடயமாகவும்தான் பார்க்கப்படுகிறது. ஆகையால் அவர்கள் சரியான பராமரிப்புகளையோ, சேவைகளையே குடும்பத்திடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ, சமூகத்திடமிருந்தோ எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறாக காணப்படும் போது அவர்களுக்கு ஒரு உளவியல் தாக்கம் ஏற்படும். இன்னும் ஒரு விடயம் என்னவென்றால் பதின்ம வயதுப் பெண்கள் திருமணம் ஆவதற்கு முன்னர் கர்ப்பமடைகின்றனர். திருமணம் ஆவதற்கு முன்பு கர்ப்பமடையும்போது அந்த கர்ப்பத்தை அழித்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள். இலங்கையை பொறுத்தவரை கர்ப்பம் அழித்தல் என்பது சட்டவிரோதமானது. இவ்வாறான சட்டவிரோத செயல்களகல் ஈடுபடும்போது அதுவும் அவர்களிடத்தில் உடல், உள் தாக்கத்தை ஏற்படுத்தும். பதின்ம வயது பெண்கள் திருமணமாகியோ அல்லது திருமணம் ஆகாமலோ இருக்கும்போது குழந்தைக்காக அவர்கள் முயற்சிப்பதை தடுக்க முடியாது. ஆனால் அவர்கள் அதற்கான குடும்ப கட்டுப்பாட்டை பயன்படுத்த முடியும். இப்போது இலங்கையை பொறுத்தவரையில் குடும்ப சுகாதார நல மாது என்பவர் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றார். அவர்களை அணுகுவது மிகவும் இலகுவானது. இப்போது ஒவ்வொரு இடங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர்களும் தாராளமாக உள்ளனர். அவர்களிடம் ஆலோசனைகளை பெற முடியும். தங்களுக்கு ஏற்றவாறான கர்ப்பத்தடை முறைகளை பாவிக்க முடியும். கர்ப்பத்தடை முறைகளை பாவிப்பது குறித்து நிறைய பிரச்சனைகளும், சந்தேகங்களும் மக்களிடையே காணப்படுகின்றன. கர்ப்பத்தடை முறைகள் மிகவும் பாதுகாப்பானதும், மிகவும் பயனுள்ளதுமான விடயமும் ஆகும். கர்ப்பத்தடை முறைகளை பயன்படுத்தி நிறுத்திய பின்னர் அவர்கள் கர்ப்பமடைவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் கர்ப்பமடைவார்கள். பதின்ம வயது பெண்ணொருவர் கர்ப்பமடைந்தால் அதனை அழிக்கவோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபடவோ கூடாது. இலங்கையை பொறுத்தவரையில் தாய் - சேயுடன் இருக்கின்றபோது கருக்கலைப்பு செய்கின்ற நிலைகள் இருக்கின்றது. இது சட்டவிரோதமானது. இதனால் கிருமிகள் பாதிப்பு ஏற்படலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடும்பேது அங்கு சகலவிதமான சேவைகளும் வழங்கப்படும். அந்தரங்கத்தன்மை பேணப்பட்டு, காத்திரமான சேவை வழங்கப்படும். சரியான முறையில் அவர்கள் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே இந்த பதின்ம வயது கர்ப்பம் என்பது தாய்மார்களிடத்தும், பெண்களிடத்தும், சமூகத்திலும் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நாங்கள் இதுகுறித்து சரியான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். பதின்ம வயது கர்ப்பம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் - மகப்பேற்று வைத்திய நிபுணர் ரகுராம் ! | Virakesari.lk
  6. 20 Mar, 2025 | 05:27 PM யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் இன்று வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது. மார்ச் 2020 இல் சுனில்ரத்நாயக்கவிற்கு அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பொதுமன்னிப்பிற்கு எதிராக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மிருசுவிலில் இருந்து இடம்பெயர்ந்த 9 பேர் 2000ம் ஆண்டு டிசம்பர் 19ம் திகதி தங்கள் வீடுகளை பார்ப்பதற்காக மீண்டும் மிருசுவில் பகுதிக்கு சென்றனர்.இவர்களில் பதின்மவயதினரும்,ஐந்து வயது சிறுவனும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிவந்தவேளை இரண்டு இராணுவத்தினர் அவர்களின் கண்களை கட்டி மோசமாக தாக்கியுள்ளனர். ஒரு இளைஞன் அவர்களின் பிடியிலிருந்து தப்பினான்.எனினும் ஏனைய 8 பேரும் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் அருகில் உள்ள பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பகுதியில் மீட்கப்பட்டன. மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவிற்கு பயணத்தடை | Virakesari.lk
  7. 20 Mar, 2025 | 04:52 PM எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை வியாழக்கிழமை (20) கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் 11 சபைகளுக்கே வேட்பு மனுக்களை கையளித்துள்ளோம். ஏனைய தீவகம் உள்ளிட்ட 06 சபைகளில் போட்டியிடவில்லை. யாழ். மாநகர சபை வேட்பு மனு சிலவேளைகளில் நிராகரிக்கப்படலாம். அவ்வாறு நிராகரித்தால் கஜேந்திரகுமார் பென்னம்பலத்தின் கட்சிக்கே எமது ஆதரவை வழங்குவோம். அவர்களுக்கே வாக்களிக்குமாறு கோருவோம். தற்போதுள்ள தமிழ் தலைமைகளில் கஜேந்திரகுமார் பென்னம்பலமே விலை போகாதவராக இருக்கின்றார் எனவே அவருக்கே எமது ஆதரவை வழங்குவோம். ஆட்சியில் உள்ளவர்கள் எம்மை பார்த்து பயப்படுகின்றனர். நான் பாராளுமன்றத்தில் கூறாத விடயத்தை கூறியதாக கூறி எனது உரைகளை ஒளிபரப்ப தடை விதித்துள்ளார்கள். அதேபோன்று எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு நான் கோரிய போதிலும் எனக்கான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆனால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். எனது உயிருக்கு சிறுபான்மை இனத்தவர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது என மேலும் தெரிவித்தார். எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா | Virakesari.lk
  8. 0 Mar, 2025 | 05:28 PM அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின் (INDOPACOM) கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோ இன்று வியாழக்கிழமை (20) தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் சர்வதேச பாதுகாப்பிற்கு இலங்கை ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்தார், மேலும் இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் கருத்தின் அடிப்படை உலகளாவிய செழிப்புக்கு அவசியம் என்பதை வலியுறுத்தினார். ஜனநாயக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் பிராந்திய ஸ்திரத்தன்மையை பராமரிக்க நீடித்த அமெரிக்க-இலங்கை உறவு இந்த ஈடுபாடுகள் வலுப்படுத்துகின்றன. இந்த ஈடுபாடுகள் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான நீடித்த அமெரிக்க-இலங்கை உறவு வலுப்படுத்துகின்றன. அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம் | Virakesari.lk
  9. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பப்படுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வணக்கஸ்தலங்கள் பொது நிகழ்வுகள் மற்றும் வீடுகளில் அதிக ஒலி எழுப்பப்படுவதால் கல்வி கற்கும் மாணவர்கள் வயோதிபர்கள் மற்றும் கற்பிணித் தாய்மார்கள் உட்பட பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. வணக்கஸ்தலங்கள் மற்றும் ஒலி வழங்குநர்கள் குறித்த பிரதேசத்திற்குள் ஒலி எழுப்புவதற்கு இனி மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . குறித்த அறிவிப்பு வடமராட்சிகிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தியால் விடுக்கப்பட்டு அனைத்து பிரதேசங்களிலும் சுவரொட்டி மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை! | Virakesari.lk
  10. இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் தெரிவு! யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு தெரிவாகியுள்ளனர் இந்த பெருமைமிகு சாதனைக்காக அவர்களுக்கு கல்லுாரி சார்பாகவும் பழைய மாணவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். (ப) இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் தெரிவு!
  11. அத்துமீறிய யூடியூப்பருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு! அத்துமீறிய யூடியூப்பரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த யூடியூப்பர் தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் யூடியூப்பரை கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை சில்லையூர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டார். விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் கடந்த 10ஆம் அன்று அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இந்நிலையில் அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து அவர் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துமீறிய யூடியூப்பருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!
  12. தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது! தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்க்க முடியாத காரணத்தினால் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்ய முடியவில்லை என தெரிவிக்கிறோம் - என்றுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது!
  13. 19 Mar, 2025 | 11:48 AM வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள், அமர முடியாதவாறு உடைந்து காணப்படுவதுடன் அவை எவ்வித பராமரிப்பின்றி காணப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி இருக்கைகள் உடைந்து மற்றும் பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாதவர்கள் குறித்த இருக்கையில் அமரும் போது உடலில் காயங்கள் ஏற்படுவதாகவும், இருக்கைகளில் இருந்து விழ வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர். வடமாகாணத்தின் பிரதான நுழைவாயிலாகவும், பல மாவட்டங்களில் இருந்து வந்து செல்வோர் அதிகமாக கூடும் இடமாகவும் உள்ள வவுனியா பிரதான பேரூந்து நிலையத்தின் நிலை இவ்வாறு காணப்படுவதால் பயணிகள் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது. பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து நிலைய இருக்கைகள் : பயணிகள் அவதி | Virakesari.lk
  14. தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான போத்தல்கள் கைப்பற்றல் ; பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர். Published By: Digital Desk 3 19 Mar, 2025 | 04:08 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையிட்ட போது 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, இரண்டு ஆப்பிள் ரக தொலைபேசிகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 2023.12.31 ஆம் திகதி வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன், தொடர்புடைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 6 பேரை கைது செய்வதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பில் நாட்டு மக்கள் விசேட கவனம் செலுத்த்தியுள்ளனர். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னகோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்றைய தினம் சோதனையிட்ட போது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 795 மதுபான போத்தல்கள், 214 வைன் போத்தல்கள் உட்பட 1009 மதுபான போத்தல்களை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதேபோல் தேசபந்து தென்னகோன் பயன்படுத்தியதாகக் கருதப்படும் துப்பாக்கி ஒன்றும் இரண்டு ஆப்பிள் வகையான ஸ்மார்ட் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என்றார். தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான போத்தல்கள் கைப்பற்றல் ; பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் | Virakesari.lk
  15. தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (19) நிராகரித்துள்ளது. இந்த மனு இன்றைய தினம் பரிசீலிக்கப்பட்டதையடுத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு! | Virakesari.lk
  16. 19 Mar, 2025 | 02:15 PM புதுடெல்லி: இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ “கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். ஜனவரி 25-ம் தேதி முதல் 45 நாட்களில் பல்வேறு தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தி இருக்கிறது. ஜனவரி 25 அன்று 3 படகுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு லட்சக்கணக்காண ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பிப்ரவரி 2-ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஏராளமான படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களின் படகையும் பறிமுதல் செய்தது. பிப். 19-ம் தேதிஇ இலங்கை கடற்படை 42 இந்திய மீனவர்களை கைது செய்தது. இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மீன்படி தொழிலை அழிக்க இலங்கை கடற்படை விரும்புகிறது. நமது கடற்படை அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது? நாங்கள் இந்திய அரசுக்கு வரி செலுத்துகிறோம். தமிழக மீனவர்கள் என்ன அனாதைகளா? நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்குச் சென்று அந்நாட்டின் ஆட்சியாளர்களைச் சந்தித்தார். நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அதேபோல் சந்தித்தார். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது என்ன காரணத்துக்காக நமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார்? இலங்கை அரசுக்கும் அதன் கடற்படைக்கும் கண்டனம் தெரிவிக்கப் போகிறாரா? இன்றும்கூட ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனர்கள் இந்திய அரசிடம் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரை சந்தித்து இது தொடர்பாக பேசி இருக்கிறார். வெளியுறவு அமைச்சரையும் சந்தித்துப் பேசி இருக்கிறார். பலமுறை கடிதம் எழுதி இருக்கிறார். அவை அனைத்துமே குப்பைத் தொட்டியில் போடப்பட்டுவிட்டன . இதுதான் இந்திய அரசு தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களை நடத்தும் விதமா? இனிமேலாவது நீங்கள் அங்கே செல்லாதீர்கள் அவர்களை இங்கே வரவழையுங்கள். இந்திய கடற்படை ஒருமுறையாவது ஒரு துப்பாக்கிச் சூட்டையாவது நடத்தி இருக்கிறதா? இவ்விஷயத்தில் இந்திய கடற்படையும் இலங்கை கடற்படையும் இணைந்து செயல்படுகிறார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மொத்த தமிழகமும் இந்திய அரசால் கைவிடப்பட்டது போல் உணர்கிறது.” என தெரிவித்தார். வைகோவின் உரைக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “அவையின் மூத்த உறுப்பினர் வைகோ உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். அவரது கவலையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் அவர் பேசியதில் ஒரே ஒரு வார்த்தை அவர் கோபத்தில் பேசி இருக்கிறார் என கருதுகிறேன். அந்த வார்த்தை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் அது உண்மையல்ல. நமது மீனவர்களை துன்புறுத்துவதற்காக நமது கடற்படை இலங்கை கடற்படையுடன் இணைந்து செயல்படுமா? இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 2014ல் பிரதமர் மோடி பதவியேற்ற உடனேயே இலங்கை அரசுடன் பேசினார். இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை உயிருடன் திருப்பி அனுப்ப வேண்டும் என கூறினார். நமது மீனவர்களுக்கு உதவுவதற்கான ஒரு வாய்ப்பையும் நாம் வீணடிக்கவில்லை. நமது மீனவர்களுக்கு எப்போது எல்லாம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோ அப்போதெல்லாம் நமது வெளியுறவுத்துறை அமைச்சகமும் பிரதமரும் உதவி இருக்கிறார்கள். வைகோவின் கவலைகள் அனைத்தையும் நான் அங்கீகரிக்கிறேன். ஆனால் அந்த ஒரு வார்த்தையை மட்டும் நீக்க வேண்டும் என்று அவைத் தலைவரை கோருகிறேன்.” என குறிப்பிட்டார். இதையடுத்து அவையை நடத்தி வந்த துணை தலைவர் ஹரிவன்ஷ் வைகோவின் அந்த குறிப்பிட்ட வார்த்தையை நீக்க உத்தரவிட்டார். இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது -வைகோ | Virakesari.lk
  17. 19 Mar, 2025 | 03:38 PM காட்டு யானைகளின் ஆக்கிரமிப்பினால் வயல் வெளியில் காவல் நின்றவர் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை (18) மாலை இடம்பெற்றது. சுமார் 50 க்கும் அதிகமான யானைகள் வயல் அறுவடையின் பின்னர் மேற்குறிப்பிட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உட்புகுந்து அங்கு புதிதாக முளைத்துள்ள புற்களை உண்டு வருவதுடன் சட்டவிரோதமான குப்பைக்கூளங்களும் நாடி வயல் வெளிகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சம்பவ தினம் மாலை அறுவடை செய்யப்பட்ட வயல்வெளியில் மாடுகளை மேய்ப்பதற்காக காவலுக்கு சென்ற நபரை திடீரென அங்கு சென்ற யானைகள் சுற்றி வளைத்ததுடன் குறித்த நபரை தாக்க முயன்றுள்ளன. உடனடியாக செயற்பட்ட அந்நபர் அருகில் உள்ள உயரமான இடமொன்றில் ஏறியுள்ளார். எனினும் குறித்த நபரை விடாது துரத்திய யானைகள் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இதேவேளை தகவலை அறிந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து வெடி பொருட்களை பாவித்து யானைக் கூட்டத்தை பின்வாங்க செய்ததுடன் யானை தாக்குதல் ஆபத்தில் இருந்த நபரையும் மீட்டுள்ளனர். தற்போது இப்பகுதியில் சுமார் 200 க்கும் அதிகமான யானைக் கூட்டம் வருகை தருவதுடன் பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றன. அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் கூட்டமாக ஊடுருவும் யானைகள் காய்க்கும் தென்னை மரங்கள் உட்பட பயன் தரும் மரங்கள் வீட்டுத் தோட்டங்கள், குடியிருப்புகள், வேலிகள் என்பவற்றை துவம்சம் செய்து வருகிறது. பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதுடன், நூற்றுக்கணக்கான காய்க்கும் தென்னை மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசத்தில் யானை, மனித மோதலை கட்டுப்படுத்தி சொத்துக்கள் சேதம், உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கில் இதற்கான நிரந்தர தீர்வு ஒன்றை பெற்று தருமாறு பொதுமக்கள் கேட்டுள்ளனர். இதேவேளை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் கீழ் உள்ள குடாக்கள்ளி மேற்கு கண்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 15 ஏக்கர் வேளாண்மைகளை காட்டு யானைகள் நாசமாகியுள்ளன. யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நபரை மீட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் | Virakesari.lk
  18. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஏற்பாட்டில், 'வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்' தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றது. யுனொப்ஸ் நிறுவனத்தில் கென்யாவில் பணிபுரியும் கலாநிதி வி.நவநீதன் இந்த இரு நாள் பயிற்சிக் கருத்தரங்கின் வளவாளராகக் கலந்துகொண்டார். ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் எம்.கிருபாசுதன், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - பொறியியல் சேவைகள் எந்திரி ந.சுதாகரன், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் சர்வானந்தா ஆகியோர் பங்கேற்றனர். ஆளுநரின் செயலாளர், இந்தப் பயிற்சிக் கருத்தரங்கை ஆளுநர் ஒழுங்கு செய்திருப்பதன் நோக்கத்தை தெளிவுபடுத்தினார். வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் எம்.கிருபாசுதன் மாகாணத்தின் ஒட்டுமொத்த நிலைமை தொடர்பில் சுருக்க விளக்கத்தை முன்வைத்தார். அதன் பின்னர் வளவாளர் கலாநிதி வி.நவநீதன் அவர்களால் பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் அபிவிருத்தி மற்றும் திட்டமிடலுடன் தொடர்புடையதாகப் பணியாற்றும் திணைக்களத் தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதில் பங்கேற்றனர். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஏற்பாட்டில், 'வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்' தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றது. யுனொப்ஸ் நிறுவனத்தில் கென்யாவில் பணிபுரியும் கலாநிதி வி.நவநீதன் இந்த இரு நாள் பயிற்சிக் கருத்தரங்கின் வளவாளராகக் கலந்துகொண்டார். ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் எம்.கிருபாசுதன், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - பொறியியல் சேவைகள் எந்திரி ந.சுதாகரன், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் சர்வானந்தா ஆகியோர் பங்கேற்றனர். ஆளுநரின் செயலாளர், இந்தப் பயிற்சிக் கருத்தரங்கை ஆளுநர் ஒழுங்கு செய்திருப்பதன் நோக்கத்தை தெளிவுபடுத்தினார். வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் எம்.கிருபாசுதன் மாகாணத்தின் ஒட்டுமொத்த நிலைமை தொடர்பில் சுருக்க விளக்கத்தை முன்வைத்தார். அதன் பின்னர் வளவாளர் கலாநிதி வி.நவநீதன் அவர்களால் பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் அபிவிருத்தி மற்றும் திட்டமிடலுடன் தொடர்புடையதாகப் பணியாற்றும் திணைக்களத் தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதில் பங்கேற்றனர். வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் தொடர்பில் கருத்தரங்கு | Virakesari.lk
  19. Simrith / 2025 மார்ச் 18 , பி.ப. 07:00 - 0 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2020 ஆம் ஆண்டு பிறப்பித்த தடுப்புக்காவல் உத்தரவு சட்டவிரோதமானது என்றும் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கியது, மனுதாரருக்கு ரூ. 100,000 இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. ஹெனாகம, பொக்குனுவிட்ட பகுதியைச் சேர்ந்த காஞ்சனா பிரியதர்ஷனி மதுரப்பெரும தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு பதிலளிக்கும் போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி 2020 ஆம் ஆண்டு பேலியகொட சிறப்பு புலனாய்வுப் பிரிவால் மனுதாரர் கைது செய்யப்பட்டார். அவரது அடுத்தடுத்த தடுப்புக்காவல் இரண்டு தனித்தனி தடுப்பு உத்தரவுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டது, ஒன்று 1929 ஆம் ஆண்டு 17 ஆம் எண் நச்சு, அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனவரி 30, 2020 அன்று வெளியிடப்பட்டது, மற்றொன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிப்ரவரி 6, 2020 அன்று வெளியிடப்பட்டது. அரசியலமைப்பின் பிரிவுகள் 12, 13(1), மற்றும் 13(2) ஆகியவற்றின் அடிப்படையில் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்தது. அரசியலமைப்பின் 20வது திருத்தம் இன்னும் நடைமுறைக்கு வராததால், இந்த வழக்கைத் தாக்கல் செய்யும் போது அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராகச் செயல்பட எந்த அதிகாரமும் இல்லை என்பது தெரியவந்தது. அந்த வகையில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பிப்ரவரி 06, 2020 அன்று பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு அரசியலமைப்பை மீறுவதாகும், எனவே அதற்கு எந்த சட்ட செல்லுபடியும் இல்லை. Tamilmirror Online || கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
  20. காணாமல் போயுள்ள மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு! கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவரையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மீனவர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள பிரதானிகளுடன் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, மீனவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையை உடன் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தற்கமைய தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. 46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ் மற்றும் 54 வயதுடைய பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. காணாமல் போயுள்ள மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு!
  21. Published By: Vishnu 18 Mar, 2025 | 03:53 AM (எம்.மனோசித்ரா) உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கண்டியில் தராசு சின்னத்திலும் கொழும்பு மற்றும் புத்தளத்தில் மர சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) புத்தளம் - கற்பிட்டி நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ரவுப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை தேர்தல் விதிமுறைகளில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக, குறிப்பாக பல அங்கத்தவர் தொகுதிகளில் ஒரு வாக்கு அதிகமாகக் காணப்பட்டாலும் அனைத்து ஆசனங்களும் அந்த கட்சிக்கே உரித்தாகக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே அந்தந்த தொகுதிகளிலுள்ள இன விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழரசு கட்சியும் நாமும் கலந்தாலோசித்து சில இடங்களில் அவர்கள் சார்பில் தமிழ் வேட்பாளர்களையும், எம் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களையும் அவர்களது சின்னத்திலேயே களமிறக்கத் திட்டமிட்டுள்ளோம். அந்தந்த தொகுதிகளில் எமக்கு கிடைக்கக் கூடிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதே இந்த உடன்பாட்டின் உண்மையான நோக்கமாகும். தமிழரசு கட்சிக்கு அந்தந்த தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவையும் வழங்குவோம். புத்தளம் நகரசபையிலும் மாநகசபையிலும், கொழும்பு, கண்டி மாநகரசபைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் போட்டியிடவுள்ளது. கண்டி மாநகரசபையில் தராசு சின்னத்தில் களமிறங்கவுள்ளோம். கொழும்பு மாநகரசபையில் கட்சியின் சொந்த சின்னமான மர சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். அதேபோன்று புத்தளத்திலும் மர சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ் | Virakesari.lk
  22. 18 Mar, 2025 | 02:05 PM (எம்.மனோசித்ரா) இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (17) இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால்,கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடல் எல்லையைத் தாண்டி உள்நாட்டு கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு மீனவர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித்தலை தடுத்து, உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு யாழ்.மயிலடி கடல்வள பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள் கைது | Virakesari.lk
  23. 18 Mar, 2025 | 03:57 PM பழங்குடியின சமூகமான வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்து யூடியூப் நிகழ்ச்சியை தயாரித்ததாகக் கூறப்படும் பிளாக் அண்ட் டினோ என்ற நகைச்சுவை நடிகர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பிளாக் அண்ட் டினோ என்ற நகைச்சுவை நடிகர்களால் தயாரிக்கப்பட்ட யூடியூப் நிகழ்ச்சியில் தங்களது வர்த்தக நோக்கத்திற்காக இலங்கையின் பாரம்பரியத்தை அவமதித்து, வேடுவர் சமூகத்தின் மொழி மற்றும் மரபுகளை நகைச்சுவையாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது. இந்த யூடியூப் நிகழ்ச்சியின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு குறித்த காணொளியை நீக்குமாறு கோரிக்கை விடுக்கவிருந்தேன். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. நவீன காலகட்டத்தில் சிலர் சமூக ஊடகங்களைத் தவறாக பயன்படுத்துகின்றனர். இது பாரம்பரிய விடயங்களுக்கு தீங்கு விளைவிக்கும். சமூக ஊடக பரப்பில் விதிமுறைகள் இல்லாமையாலும் பல இணையத்தள நிகழ்ச்சிகளாலும் ஊடக சுந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார். வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் காணொளிகளை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்கிறேன். வேடுவர்களின் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்தார். வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப் நிகழ்ச்சிக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் - வேடுவத் தலைவர் | Virakesari.lk
  24. 18 Mar, 2025 | 05:09 PM (எம்.நியூட்டன்) வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் வடக்குமாகாணத்திற்கு அதிகமான பாதிப்புகளை சந்தித்துள்ளது இவை தொடர்பில் ஐனாதிபதியின் கவனத திற்கு கொண்டுசெல்லப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி பல்வேறு வகையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அதிகூடிய பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். மக்களின் மீள்குடியமர்வு, விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இடையூறாக இந்த இரு திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. வடக்கு மாகாணம் கால்நடை உற்பத்தித் துறையில் மிகச் சிறந்த நிலையில் உள்ளபோதும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இல்லாமல் இருப்பது பெரும் பின்னடைவு சட்டவிரோதமான மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினையாகவுள்ளது . வடக்கு மாகாணத்தில் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்றும், ஆளணிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்றார். அரச திணைக்களம் இரண்டால் வடக்கு மாகாணத்திற்கு அதிக பாதிப்பு ; ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் | Virakesari.lk
  25. இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிப்படுத்துடும் ஆவணப்படம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணப்படம் இன்று யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் கடற்றொழில் அமைச்சரிடம் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது. இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியால் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதுடன் பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளமை இதன்போது குறிப்பிடத்தக்கது. அத்துமீறிய இழுவைமடி மீன்பிடி தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட ஆவணப்படம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.