Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (19) நிராகரித்துள்ளது. இந்த மனு இன்றைய தினம் பரிசீலிக்கப்பட்டதையடுத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு! | Virakesari.lk
  2. 19 Mar, 2025 | 02:15 PM புதுடெல்லி: இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ “கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். ஜனவரி 25-ம் தேதி முதல் 45 நாட்களில் பல்வேறு தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தி இருக்கிறது. ஜனவரி 25 அன்று 3 படகுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு லட்சக்கணக்காண ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பிப்ரவரி 2-ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஏராளமான படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களின் படகையும் பறிமுதல் செய்தது. பிப். 19-ம் தேதிஇ இலங்கை கடற்படை 42 இந்திய மீனவர்களை கைது செய்தது. இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மீன்படி தொழிலை அழிக்க இலங்கை கடற்படை விரும்புகிறது. நமது கடற்படை அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது? நாங்கள் இந்திய அரசுக்கு வரி செலுத்துகிறோம். தமிழக மீனவர்கள் என்ன அனாதைகளா? நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்குச் சென்று அந்நாட்டின் ஆட்சியாளர்களைச் சந்தித்தார். நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அதேபோல் சந்தித்தார். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது என்ன காரணத்துக்காக நமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார்? இலங்கை அரசுக்கும் அதன் கடற்படைக்கும் கண்டனம் தெரிவிக்கப் போகிறாரா? இன்றும்கூட ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனர்கள் இந்திய அரசிடம் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரை சந்தித்து இது தொடர்பாக பேசி இருக்கிறார். வெளியுறவு அமைச்சரையும் சந்தித்துப் பேசி இருக்கிறார். பலமுறை கடிதம் எழுதி இருக்கிறார். அவை அனைத்துமே குப்பைத் தொட்டியில் போடப்பட்டுவிட்டன . இதுதான் இந்திய அரசு தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களை நடத்தும் விதமா? இனிமேலாவது நீங்கள் அங்கே செல்லாதீர்கள் அவர்களை இங்கே வரவழையுங்கள். இந்திய கடற்படை ஒருமுறையாவது ஒரு துப்பாக்கிச் சூட்டையாவது நடத்தி இருக்கிறதா? இவ்விஷயத்தில் இந்திய கடற்படையும் இலங்கை கடற்படையும் இணைந்து செயல்படுகிறார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மொத்த தமிழகமும் இந்திய அரசால் கைவிடப்பட்டது போல் உணர்கிறது.” என தெரிவித்தார். வைகோவின் உரைக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “அவையின் மூத்த உறுப்பினர் வைகோ உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். அவரது கவலையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் அவர் பேசியதில் ஒரே ஒரு வார்த்தை அவர் கோபத்தில் பேசி இருக்கிறார் என கருதுகிறேன். அந்த வார்த்தை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் அது உண்மையல்ல. நமது மீனவர்களை துன்புறுத்துவதற்காக நமது கடற்படை இலங்கை கடற்படையுடன் இணைந்து செயல்படுமா? இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 2014ல் பிரதமர் மோடி பதவியேற்ற உடனேயே இலங்கை அரசுடன் பேசினார். இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை உயிருடன் திருப்பி அனுப்ப வேண்டும் என கூறினார். நமது மீனவர்களுக்கு உதவுவதற்கான ஒரு வாய்ப்பையும் நாம் வீணடிக்கவில்லை. நமது மீனவர்களுக்கு எப்போது எல்லாம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோ அப்போதெல்லாம் நமது வெளியுறவுத்துறை அமைச்சகமும் பிரதமரும் உதவி இருக்கிறார்கள். வைகோவின் கவலைகள் அனைத்தையும் நான் அங்கீகரிக்கிறேன். ஆனால் அந்த ஒரு வார்த்தையை மட்டும் நீக்க வேண்டும் என்று அவைத் தலைவரை கோருகிறேன்.” என குறிப்பிட்டார். இதையடுத்து அவையை நடத்தி வந்த துணை தலைவர் ஹரிவன்ஷ் வைகோவின் அந்த குறிப்பிட்ட வார்த்தையை நீக்க உத்தரவிட்டார். இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது -வைகோ | Virakesari.lk
  3. 19 Mar, 2025 | 03:38 PM காட்டு யானைகளின் ஆக்கிரமிப்பினால் வயல் வெளியில் காவல் நின்றவர் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை (18) மாலை இடம்பெற்றது. சுமார் 50 க்கும் அதிகமான யானைகள் வயல் அறுவடையின் பின்னர் மேற்குறிப்பிட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உட்புகுந்து அங்கு புதிதாக முளைத்துள்ள புற்களை உண்டு வருவதுடன் சட்டவிரோதமான குப்பைக்கூளங்களும் நாடி வயல் வெளிகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சம்பவ தினம் மாலை அறுவடை செய்யப்பட்ட வயல்வெளியில் மாடுகளை மேய்ப்பதற்காக காவலுக்கு சென்ற நபரை திடீரென அங்கு சென்ற யானைகள் சுற்றி வளைத்ததுடன் குறித்த நபரை தாக்க முயன்றுள்ளன. உடனடியாக செயற்பட்ட அந்நபர் அருகில் உள்ள உயரமான இடமொன்றில் ஏறியுள்ளார். எனினும் குறித்த நபரை விடாது துரத்திய யானைகள் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இதேவேளை தகவலை அறிந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து வெடி பொருட்களை பாவித்து யானைக் கூட்டத்தை பின்வாங்க செய்ததுடன் யானை தாக்குதல் ஆபத்தில் இருந்த நபரையும் மீட்டுள்ளனர். தற்போது இப்பகுதியில் சுமார் 200 க்கும் அதிகமான யானைக் கூட்டம் வருகை தருவதுடன் பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றன. அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் கூட்டமாக ஊடுருவும் யானைகள் காய்க்கும் தென்னை மரங்கள் உட்பட பயன் தரும் மரங்கள் வீட்டுத் தோட்டங்கள், குடியிருப்புகள், வேலிகள் என்பவற்றை துவம்சம் செய்து வருகிறது. பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதுடன், நூற்றுக்கணக்கான காய்க்கும் தென்னை மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசத்தில் யானை, மனித மோதலை கட்டுப்படுத்தி சொத்துக்கள் சேதம், உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கில் இதற்கான நிரந்தர தீர்வு ஒன்றை பெற்று தருமாறு பொதுமக்கள் கேட்டுள்ளனர். இதேவேளை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் கீழ் உள்ள குடாக்கள்ளி மேற்கு கண்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 15 ஏக்கர் வேளாண்மைகளை காட்டு யானைகள் நாசமாகியுள்ளன. யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நபரை மீட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் | Virakesari.lk
  4. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஏற்பாட்டில், 'வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்' தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றது. யுனொப்ஸ் நிறுவனத்தில் கென்யாவில் பணிபுரியும் கலாநிதி வி.நவநீதன் இந்த இரு நாள் பயிற்சிக் கருத்தரங்கின் வளவாளராகக் கலந்துகொண்டார். ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் எம்.கிருபாசுதன், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - பொறியியல் சேவைகள் எந்திரி ந.சுதாகரன், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் சர்வானந்தா ஆகியோர் பங்கேற்றனர். ஆளுநரின் செயலாளர், இந்தப் பயிற்சிக் கருத்தரங்கை ஆளுநர் ஒழுங்கு செய்திருப்பதன் நோக்கத்தை தெளிவுபடுத்தினார். வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் எம்.கிருபாசுதன் மாகாணத்தின் ஒட்டுமொத்த நிலைமை தொடர்பில் சுருக்க விளக்கத்தை முன்வைத்தார். அதன் பின்னர் வளவாளர் கலாநிதி வி.நவநீதன் அவர்களால் பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் அபிவிருத்தி மற்றும் திட்டமிடலுடன் தொடர்புடையதாகப் பணியாற்றும் திணைக்களத் தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதில் பங்கேற்றனர். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஏற்பாட்டில், 'வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்' தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றது. யுனொப்ஸ் நிறுவனத்தில் கென்யாவில் பணிபுரியும் கலாநிதி வி.நவநீதன் இந்த இரு நாள் பயிற்சிக் கருத்தரங்கின் வளவாளராகக் கலந்துகொண்டார். ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் எம்.கிருபாசுதன், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - பொறியியல் சேவைகள் எந்திரி ந.சுதாகரன், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் சர்வானந்தா ஆகியோர் பங்கேற்றனர். ஆளுநரின் செயலாளர், இந்தப் பயிற்சிக் கருத்தரங்கை ஆளுநர் ஒழுங்கு செய்திருப்பதன் நோக்கத்தை தெளிவுபடுத்தினார். வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் எம்.கிருபாசுதன் மாகாணத்தின் ஒட்டுமொத்த நிலைமை தொடர்பில் சுருக்க விளக்கத்தை முன்வைத்தார். அதன் பின்னர் வளவாளர் கலாநிதி வி.நவநீதன் அவர்களால் பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் அபிவிருத்தி மற்றும் திட்டமிடலுடன் தொடர்புடையதாகப் பணியாற்றும் திணைக்களத் தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதில் பங்கேற்றனர். வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் தொடர்பில் கருத்தரங்கு | Virakesari.lk
  5. Simrith / 2025 மார்ச் 18 , பி.ப. 07:00 - 0 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2020 ஆம் ஆண்டு பிறப்பித்த தடுப்புக்காவல் உத்தரவு சட்டவிரோதமானது என்றும் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கியது, மனுதாரருக்கு ரூ. 100,000 இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. ஹெனாகம, பொக்குனுவிட்ட பகுதியைச் சேர்ந்த காஞ்சனா பிரியதர்ஷனி மதுரப்பெரும தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு பதிலளிக்கும் போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி 2020 ஆம் ஆண்டு பேலியகொட சிறப்பு புலனாய்வுப் பிரிவால் மனுதாரர் கைது செய்யப்பட்டார். அவரது அடுத்தடுத்த தடுப்புக்காவல் இரண்டு தனித்தனி தடுப்பு உத்தரவுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டது, ஒன்று 1929 ஆம் ஆண்டு 17 ஆம் எண் நச்சு, அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனவரி 30, 2020 அன்று வெளியிடப்பட்டது, மற்றொன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிப்ரவரி 6, 2020 அன்று வெளியிடப்பட்டது. அரசியலமைப்பின் பிரிவுகள் 12, 13(1), மற்றும் 13(2) ஆகியவற்றின் அடிப்படையில் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்தது. அரசியலமைப்பின் 20வது திருத்தம் இன்னும் நடைமுறைக்கு வராததால், இந்த வழக்கைத் தாக்கல் செய்யும் போது அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராகச் செயல்பட எந்த அதிகாரமும் இல்லை என்பது தெரியவந்தது. அந்த வகையில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பிப்ரவரி 06, 2020 அன்று பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு அரசியலமைப்பை மீறுவதாகும், எனவே அதற்கு எந்த சட்ட செல்லுபடியும் இல்லை. Tamilmirror Online || கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
  6. காணாமல் போயுள்ள மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு! கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவரையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மீனவர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள பிரதானிகளுடன் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, மீனவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையை உடன் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தற்கமைய தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. 46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ் மற்றும் 54 வயதுடைய பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. காணாமல் போயுள்ள மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு!
  7. Published By: Vishnu 18 Mar, 2025 | 03:53 AM (எம்.மனோசித்ரா) உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கண்டியில் தராசு சின்னத்திலும் கொழும்பு மற்றும் புத்தளத்தில் மர சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) புத்தளம் - கற்பிட்டி நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ரவுப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை தேர்தல் விதிமுறைகளில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக, குறிப்பாக பல அங்கத்தவர் தொகுதிகளில் ஒரு வாக்கு அதிகமாகக் காணப்பட்டாலும் அனைத்து ஆசனங்களும் அந்த கட்சிக்கே உரித்தாகக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே அந்தந்த தொகுதிகளிலுள்ள இன விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழரசு கட்சியும் நாமும் கலந்தாலோசித்து சில இடங்களில் அவர்கள் சார்பில் தமிழ் வேட்பாளர்களையும், எம் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களையும் அவர்களது சின்னத்திலேயே களமிறக்கத் திட்டமிட்டுள்ளோம். அந்தந்த தொகுதிகளில் எமக்கு கிடைக்கக் கூடிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதே இந்த உடன்பாட்டின் உண்மையான நோக்கமாகும். தமிழரசு கட்சிக்கு அந்தந்த தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவையும் வழங்குவோம். புத்தளம் நகரசபையிலும் மாநகசபையிலும், கொழும்பு, கண்டி மாநகரசபைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் போட்டியிடவுள்ளது. கண்டி மாநகரசபையில் தராசு சின்னத்தில் களமிறங்கவுள்ளோம். கொழும்பு மாநகரசபையில் கட்சியின் சொந்த சின்னமான மர சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். அதேபோன்று புத்தளத்திலும் மர சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ் | Virakesari.lk
  8. 18 Mar, 2025 | 02:05 PM (எம்.மனோசித்ரா) இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (17) இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால்,கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடல் எல்லையைத் தாண்டி உள்நாட்டு கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு மீனவர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித்தலை தடுத்து, உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு யாழ்.மயிலடி கடல்வள பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள் கைது | Virakesari.lk
  9. 18 Mar, 2025 | 03:57 PM பழங்குடியின சமூகமான வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்து யூடியூப் நிகழ்ச்சியை தயாரித்ததாகக் கூறப்படும் பிளாக் அண்ட் டினோ என்ற நகைச்சுவை நடிகர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பிளாக் அண்ட் டினோ என்ற நகைச்சுவை நடிகர்களால் தயாரிக்கப்பட்ட யூடியூப் நிகழ்ச்சியில் தங்களது வர்த்தக நோக்கத்திற்காக இலங்கையின் பாரம்பரியத்தை அவமதித்து, வேடுவர் சமூகத்தின் மொழி மற்றும் மரபுகளை நகைச்சுவையாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது. இந்த யூடியூப் நிகழ்ச்சியின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு குறித்த காணொளியை நீக்குமாறு கோரிக்கை விடுக்கவிருந்தேன். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. நவீன காலகட்டத்தில் சிலர் சமூக ஊடகங்களைத் தவறாக பயன்படுத்துகின்றனர். இது பாரம்பரிய விடயங்களுக்கு தீங்கு விளைவிக்கும். சமூக ஊடக பரப்பில் விதிமுறைகள் இல்லாமையாலும் பல இணையத்தள நிகழ்ச்சிகளாலும் ஊடக சுந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார். வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் காணொளிகளை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்கிறேன். வேடுவர்களின் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்தார். வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப் நிகழ்ச்சிக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் - வேடுவத் தலைவர் | Virakesari.lk
  10. 18 Mar, 2025 | 05:09 PM (எம்.நியூட்டன்) வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் வடக்குமாகாணத்திற்கு அதிகமான பாதிப்புகளை சந்தித்துள்ளது இவை தொடர்பில் ஐனாதிபதியின் கவனத திற்கு கொண்டுசெல்லப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி பல்வேறு வகையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அதிகூடிய பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். மக்களின் மீள்குடியமர்வு, விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இடையூறாக இந்த இரு திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. வடக்கு மாகாணம் கால்நடை உற்பத்தித் துறையில் மிகச் சிறந்த நிலையில் உள்ளபோதும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இல்லாமல் இருப்பது பெரும் பின்னடைவு சட்டவிரோதமான மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினையாகவுள்ளது . வடக்கு மாகாணத்தில் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்றும், ஆளணிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்றார். அரச திணைக்களம் இரண்டால் வடக்கு மாகாணத்திற்கு அதிக பாதிப்பு ; ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் | Virakesari.lk
  11. இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிப்படுத்துடும் ஆவணப்படம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணப்படம் இன்று யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் கடற்றொழில் அமைச்சரிடம் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது. இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியால் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதுடன் பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளமை இதன்போது குறிப்பிடத்தக்கது. அத்துமீறிய இழுவைமடி மீன்பிடி தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட ஆவணப்படம்!
  12. 17 Mar, 2025 | 05:23 PM வடக்கு பிராந்தியத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு பயனுள்ள பாதையை உருவாக்கும் நோக்கில் கனேடிய - இலங்கை வர்த்தக சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் கனேடிய கல்வி கண்காட்சி மற்றும் யாழ்ப்பாண முதலீட்டு வர்த்தக மாநாடு ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (17) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த கனேடிய - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் முகமட் ஹமீட் இவ்வாறு கூறியதுடன் அது குறித்து மேலும் கூறுகையில், யாழ். குடா நாட்டு இளைஞர் யுவதிகளின் கல்வி மற்றும் தொழில்துறை குறித்த எதிர்கால கனவுகளை நனவாக்கிக் கொடுக்கும் வகையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. அதனடிப்படையில் குறித்த மாநாடு மே 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. குறித்த மாநாட்டில் முதலாம் நாளன்று கனடா மற்றும் பிற சந்தைகளுக்கு இலங்கை மாணவர்களை பணிக்கமர்த்தல், இலங்கையில் கனேடிய கல்வியை வழங்கல், தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை நிறுவுதல், கனடா கல்வி மற்றும் திதன் பயிற்சி உரிமையாளர்களை ஊக்குவித்தல், திறன் இடப்பெயர்வு மற்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சி மற்றும் திறன்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி நடைபெறவுள்ளது. அதேநேரம் யாழ். வேலைவாய்ப்பு வாய்ப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் என்ற தலைப்பில் இரண்டாம் நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் யாழ் வேலை வாய்ப்பும் தொழிலாளர்களுக்கான சாதக நிலைகளை உருவாக்கல். இளைஞர்களுக்கு வேலவாய்ப்பு வழங்கல், பல நூறு படித்த பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கல் மற்றும் வர்த்தகம் தொடர்பான மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பு, சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான எதிர்கால திட்டங்கள் முதலீடுகளை உருவாக்குவது தொடர்பான பயிற்சிகளும் இதன்போது இடம்பெறவுள்ளது. குறிப்பாக காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய பகுதிக்கு உருவாக்கப்பட இருக்கும் முதலீட்டு வலயங்களில் இத்தகைய வாய்ப்புக்களை அரச மற்றும் தனியார் இணைந்த கட்டமைப்பில் உருவாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எமது இந்த நிகழ்வுக்கு இலங்கையின் பிரதமர் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள இருக்கின்றார். வலம்புரி விருந்தினர் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வினூடாக கனடாவிலிருந்து முதலீடுகளைக் குறிப்பாக வடபகுதிக்குக் கொண்டுவர முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளோம். அதுமட்டுமல்லாது இலங்கையிலிருந்து சென்று வெளிநாடுகளில் கற்று மீளவும் வரும் மாணவர்களுக்குத் தகுதிக்கேற்ப வேலைகளும் ஊக்குவிப்பு வழங்கவும் ஏற்பாடுகள் இருக்கின்றது. அந்தவகையில் இந்த வாய்ப்பை வடக்கின் இளைஞர் யுவதிகள் சரியாகப் பயன்படுத்தி வாழ்வை வெற்றிகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் மே மாதம் கனேடிய கல்வி கண்காட்சி, முதலீட்டு வர்த்தக மாநாடு ; கனேடிய - இலங்கை வர்த்தக சம்மேளனம் | Virakesari.lk
  13. 17 Mar, 2025 | 05:24 PM யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு மீனவர்கள் சனிக்கிழமை (15) ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து IDAY-A-0035 JFN நீலம் மற்றும் வெள்ளை நிற படகில் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால் அவர்களில் எவரும் இன்னும் கடலுக்குத் திரும்பவில்லை என யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்துள்ளார். காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை! | Virakesari.lk
  14. அர்ச்சனா சுக்லா மற்றும் நிகில் இனாம்தார் பதவி,பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா மீதான டொனால்ட் டிரம்பின் பதிலடி வரி விதிப்பு இன்னும் ஒரு மாதத்தில் அமலாகும் சாத்தியக்கூறு உள்ள நிலையில் லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் திடீர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகளுக்குப் பதிலடியாக ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் இந்தியா மீது வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் பின்னர் அறிவித்தார். இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதித் தொழில்களாக இருக்கும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி மீதான வரி உயர்வை நிறுத்த பியூஷ் கோயல் விரும்புகிறார். அமெரிக்காவில் விற்கப்படும் ஜெனரிக் மருந்துகளில் கிட்டத்தட்ட பாதி இந்தியாவில் இருந்துதான் வருகிறது. பிராண்ட் பெயர் கொண்ட மருந்துகளின் மலிவான பதிப்புகளான ஜெனரிக் மருந்துகள், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் மருத்துவர்களால் மக்களுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் 10இல் ஒன்பது இதுபோன்ற மருந்துகளே. இது வாஷிங்டனுக்கு பல பில்லியன் டாலர் சுகாதாரச் செலவை மிச்சமாக்குகிறது. 2022ஆம் ஆண்டில் மட்டும் இந்திய ஜெனரிக் மருந்துகள் காரணமான சேமிப்பு 219 பில்லியன் டாலர்களை (169 பில்லியன் பவுண்டுகள்) எட்டியதாக ஆலோசனை வழங்கும் நிறுவனமான IQVIA-இன் ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய மருந்துகளைச் சார்ந்திருக்கும் அமெரிக்கர்கள் வர்த்தக ஒப்பந்தம் இல்லாதபட்சத்தில் டிரம்பின் இந்த வரி சில இந்திய ஜெனரிக் மருந்துகளை எட்ட முடியாத ஒன்றாக ஆக்கிவிடும். சில நிறுவனங்கள் சந்தையில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படும். இதன் காரணமாகத் தற்போதுள்ள மருந்து பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "இந்த வரிவிதிப்பு, தேவை-விநியோக சமநிலையின்மையை மோசமாக்கலாம். காப்பீடு இல்லாதவர்கள் மற்றும் ஏழை மக்கள் அதிக செலவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று யேல் பல்கலைக்கழகத்தின் மருந்து செலவு நிபுணர் டாக்டர். மெலிசா பார்பர் கூறுகிறார். இது பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்படும் மக்களை மேலும் பாதிக்கலாம். அமெரிக்காவில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனநல நோய்களுக்கான மருந்துகளில் 60%க்கும் அதிகமானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் என்று இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணி நிதியளித்த IQVIA ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்கர்கள் இந்திய அத்தியாவசிய மருந்துகளை எவ்வாறு சார்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு அமெரிக்காவில் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் ஆன்டி-டிப்ரஸன்ட் மருந்தான செர்ட்ராலைன் ஒரு பிரதான உதாரணம். இதுபோன்ற பல மருந்துகள், இந்தியா அல்லாத நிறுவனங்களுடைய மருந்துகள் விற்கப்படுவதில் இருந்து பாதி விலையில் கிடைக்கின்றன. "இதுகுறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்," என்று மருந்துகளுக்கான அணுகலுக்காகப் போராடும் குழுவான 'பப்ளிக் சிட்டிசன்ஸின்' வழக்கறிஞர் பீட்டர் மேபர்டுக் கூறுகிறார். மருந்துகளின் விலை காரணமாக நான்கு அமெரிக்க நோயாளிகளில் ஒருவர் மருந்துகளை எடுக்கத் தவறுகிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார். சீன இறக்குமதிகள் மீதான வரிகள் காரணமாக டிரம்ப் ஏற்கெனவே அமெரிக்க மருத்துவமனைகள் மற்றும் ஜெனரிக் மருந்து தயாரிப்பாளர்களிடம் இருந்து அழுத்தத்தை எதிர்கொள்கிறார் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் விற்கப்படும் மருந்துகளின் 87% மூலப்பொருட்கள் நாட்டிற்கு வெளியில் இருந்து வருகின்றன. மேலும் அவை முக்கியமாக சீனாவில் குவிந்துள்ளன. இது உலகளாவிய விநியோகத்தில் சுமார் 40 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. டிரம்ப் பதவியேற்றதில் இருந்து சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 20% அதிகரித்துள்ளதால், மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இந்திய மருந்துகளை உற்பத்தி செய்ய முடியுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனநல நோய்களுக்காக மருத்துவர்களால் அளிக்கப்படும் மருந்துகளில் சுமார் 60% இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளாகும். வரிகளைத் தவிர்க்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்ற வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். பிராண்ட் பெயர் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளை விற்கும் ஃபைசர், எலி லில்லி போன்ற பெரிய மருந்து நிறுவனங்கள், தங்களின் ஒரு சில உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்ற ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால் குறைந்த விலை கொண்ட மருந்துகளுக்கு இது சாத்தியமில்லை. தனது நிறுவனம் அமெரிக்காவில் ஒரு பாட்டிலுக்கு 1 டாலர் முதல் 5 டாலர் வரையிலான விலையில் மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், வரிகள் காரணமாக உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்றுவது கட்டுப்படியாகாது என்றும் இந்தியாவின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பாளரான சன் ஃபார்மாவின் தலைவர் திலீப் ஷாங்வி கடந்த வாரம் ஒரு தொழில்துறை கூட்டத்தில் கூறினார். "அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது மருந்துகளை இந்தியாவில் உற்பத்தி செய்வது குறைந்தது மூன்று முதல் நான்கு மடங்கு மலிவானது" என்று ஐபிஏ-வின் சுதர்சன் ஜெயின் கூறுகிறார். எந்தவொரு விரைவான இடமாற்றமும் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒரு புதிய உற்பத்தி வசதியைக் கட்டுவதற்கு 2 பில்லியன் டாலர் வரை செலவாகும். மேலும் அது செயல்படுவதற்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும் என்று லாபி குழு PhRMA தெரிவித்துள்ளது. இந்திய நிறுவனங்களைப் பாதிக்கும் வரிவிதிப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு காலகெடு நெருங்கி வரும் நிலையில் இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டார் இந்த வரிவிதிப்பு இந்தியாவில் உள்ள உள்ளூர் மருந்து நிறுவனங்களையும் மோசமாகப் பாதிக்கலாம். மருந்துப் பொருட்கள், இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை ஏற்றுமதியாக உள்ளதாக வர்த்தக ஆராய்ச்சி நிறுவனமான ஜி.டி.ஆர்.ஐ தெரிவிக்கிறது. இந்தியா கிட்டத்தட்ட எந்த வரியும் செலுத்தாமல் ஆண்டுதோறும் சுமார் 12.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இருப்பினும் இந்தியாவுக்குள் வரும் அமெரிக்க மருந்துகள் 10.91% வரி செலுத்துகின்றன. இது 10.9% 'வர்த்தக வித்தியாசத்தை' ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் எந்தவொரு பதிலடி வரிவிதிப்பும் ஜெனரிக் மருந்துகள் மற்றும் சிறப்பு மருந்துகளுக்கான விலையை அதிகரிக்கும் என்று ஜி.டி.ஆர்.ஐ தெரிவித்துள்ளது. அமெரிக்க சந்தையில் விலை உயர்வு ஏற்படும் அதிக வாய்ப்புள்ள துறைகளில் ஒன்றாக மருந்துகள் துறை உள்ளதாக அது சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலும் ஜெனரிக் மருந்துகளை விற்கும் இந்திய நிறுவனங்கள் ஏற்கெனவே குறைவான லாபத்தில் செயல்படுகின்றன. அதிக வரிவிதிப்பை அந்த நிறுவனங்களால் சமாளிக்க முடியாது. போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அவை மிகக் குறைந்த விலையில் மருந்துகளை விற்கின்றன. மேலும் உலகின் மிகப்பெரிய மருந்து சந்தையில் இதயம், மனநலம், தோல் மருத்துவம் மற்றும் பெண்கள் சுகாதார மருந்துகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. "செலவுக் குறைப்புகள் மூலம் சிறிய அளவு வரிவிதிப்பைச் சமாளிக்க முடியும். ஆனால் வரிவிதிப்பு மிகவும் அதிகமாக இருந்தால் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும்," என்று தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஒரு முன்னணி இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,Getty Images அமெரிக்காவின் மருந்து சந்தை வட அமெரிக்கா இந்த நிறுவனங்களின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாகும். இது பெரும்பாலான நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபத்தில் மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது. "இது வேகமாக வளர்ந்து வரும், மிகவும் முக்கியமான சந்தை. மற்ற சந்தைகளுக்கு மருந்துகளைக் கொண்டு சென்றாலும்கூட அமெரிக்க சந்தையில் ஏற்படும் இழப்புகளை அது ஈடுசெய்யாது," என்று அவர் மேலும் தெரிவித்தார். வணிக நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வரிகள் முடிவு செய்யக்கூடாது. ஏனெனில் 'நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வரிகள் நீங்கிவிடக்கூடும்' என்று இந்தியாவின் மூன்றாவது பெரிய மருந்து நிறுவனமான சிப்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி உமங் வோஹ்ரா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் தெரிவித்தார். ஆனால் நான்கு ஆண்டுகள் என்பது நீண்ட காலம். பல நிறுவனங்களின் அதிர்ஷ்டத்தை உருவாக்கவோ அல்லது உடைக்கவோ இதனால் முடியும். அமெரிக்க மருந்துகளின் மீதான இந்தியாவின் இறக்குமதி வரிகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தியா வரிகளை 'பெருமளவு குறைக்க' ஒப்புக்கொண்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கூறினார். "இவற்றையெல்லாம் தவிர்க்க இந்தியா மருந்துப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க வேண்டும்" என்று மூத்த சந்தை நிபுணர் அஜய் பக்கா பிபிசியிடம் கூறினார். "இந்தியாவுக்குள் வரும் அமெரிக்க மருந்துகளின் மதிப்பு சுமார் 50 கோடி டாலர்கள் மட்டுமே. எனவே தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார். பதிலடி வரி காரணமாக இந்தியா எதிர்மறையாக பாதிக்கப்படாமல் இருக்க, அமெரிக்கா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் மருந்துகள் மீதான வரிவிதிப்பை விலக்க வேண்டும் என்று இந்தியாவின் மிகப் பெரிய மருந்து உற்பத்தியாளர்களைக் கொண்ட ஐபிஏ பரிந்துரைத்துள்ளது. இந்தியாவின் சமீபத்திய பட்ஜெட்டில், அடிப்படை சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் 36 உயிர் காக்கும் மருந்துகள் சேர்க்கப்பட்டன. இந்தியா தனது அழுத்தத்திற்கு அடிபணியக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் கோடிட்டுக் காட்டினார். "யாரோ ஒருவர் இறுதியாக அவர்கள் செய்ததை அம்பலப்படுத்தியதால், 'பெருமளவில் வரியைக் குறைக்க' இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது" என்று அவர் கூறினார். இந்தியா இதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. ஆனால் இரு நாடுகளிலும் உள்ள மருந்து நிறுவனங்கள், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தின் வடிவத்தைக் காண பதற்றமாகக் காத்திருக்கின்றன. "புதிய வரிவிதிப்பு காரணமாக குறுகியகால சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் இன்னும் சில மாதங்களில் முதல் கட்ட (வர்த்தக) ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கிறேன்," என்று அமெரிக்க-இந்திய செயல் உத்திக் கூட்டாண்மை மன்றத்தின் மூத்த ஆலோசகர் மார்க் லின்ஸ்காட் பிபிசியிடம் கூறினார். "மருந்து விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் முறிவை இரு நாடுகளாலும் தாங்க முடியாது" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இந்திய மருந்துகள் மீது டிரம்ப் வரி விதிப்பது அமெரிக்கர்களுக்கே சுமையாக மாறும் அபாயம் - BBC News தமிழ்
  15. 15 Mar, 2025 | 05:30 PM மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் இந்த நியமனத்தை வழங்கினார். மடு திருப்பதியில் ஐந்து நாட்கள் நடைபெற்ற மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானத்தின் நிறைவில் வெள்ளிக்கிழமை (14) இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. ஒரு மறைமாவட்டத்தில் குரு முதல்வர் பதவி என்பது மறைமாவட்ட ஆயருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர் பதவியாகும். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் மன்னார் மாவட்டத்தின் முருங்கன் கிராமத்தில் காலம்சென்ற சந்தான் பாவிலு தம்பதியருக்கு பதினொராவது மகனாக 1969ஆம் ஆண்டு பிறந்தார். முருங்கன் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணம் புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் தனது உயர்தரக் கல்வியையும் கற்றார். யாழ்ப்பாணம் புனித மாட்டினார் சிறிய குருமடத்தில் தனது ஆரம்ப குருத்துவ உருவாக்கத்தைப் பெற்ற இவர், தனது மூன்று வருட மெய்யியல் கல்வியை கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியிலும், நான்கு வருட இறையியல் கல்வியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியிலும் கற்றார். 1997ஆம் ஆண்டு அன்றைய மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகையினால் மன்னார் மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். வங்காலை, மன்னார் ஆகிய பங்குகளில் உதவி பங்குத்தந்தையாகவும், தலைமன்னாரில் பங்குத்தந்தையாக மூன்று வருடங்களும் பணியாற்றினார். தொடர்ந்து, மன்னார் மறை கல்வி இயக்குனராக ஐந்து வருடங்களும், கலையருவி எனப்படும் சமூகத்தொடர்பாடல் அருட்பணி மைய இயக்குனராக ஏழு வருடங்களும், மன்னார் மறைமாவட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் சர்வமத உரையாடல் ஆணைக்குழுவின் இயக்குனராக ஒன்பது வருடங்களும், 'மன்னா' என்ற மறை மாவட்டப் பத்திரிகையின் ஆசிரியராக 16 வருடங்களும், மன்னார் சிறிய குருமட அதிபராக ஐந்து வருடங்களும், மன்னார் மறைமாவட்ட செனட் சபையின் செயலாளராக ஐந்து வருடங்களும் பணியாற்றினார். தற்போது தோட்டவெளி வேதசாட்சிகள் இராக்கினி திருத்தலத்தின் பரிபாலகராகவும், தோட்டவெளி பங்கு தந்தையாகவும், மன்னார் மறைக்கோட்ட முதல்வராகவும் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில் இந்தப் புதிய பணிப்பொறுப்பு அடிகளாருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நேசன் அடிகளார் சிறந்த கல்வித் தகைமை கொண்டவராக விளங்குகின்றார். ரோமாபுரியில் உள்ள ஊர் பானியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மாணிப் பட்டத்தையும் இறையியல் மாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் எம். ஏ. பட்டத்தையும் கிறிஸ்தவ நாகரீகத்தில் எம். பில். பட்டத்தையும் பெற்றுள்ளார். தற்போது கண்டிபேராதெனிய பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்யும் நிலையில் உள்ளார். சிறந்த தமிழ் அறிஞராக திகழும் தமிழ் நேசன் அடிகளார் பத்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளமை குறமிப்பிடத்தக்கது. மேலும், இவர் பல தேசிய, சர்வதேச தமிழ் மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு நாடுகளில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அத்தோடு, 2009 ஆம் ஆண்டு மன்னாரில் மன்னார் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் தலைவராக இரண்டு தடவைகள் பணியாற்றியுள்ளார். 2010ஆம் ஆண்டு நான்கு நாள் மன்னார் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும், 2013ஆம் ஆண்டு மூன்று நாள் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவையும் மன்னாரில் பிரமாண்டமாக நடாத்தி தேசிய சர்வதேச கவனத்தைப் பெற்றுக்கொண்டார். இந்த இரண்டு மாநாடுகளும் அடிகளாரின் செயற்திறனை வெளிப்படுத்திய இருபெரும் நிகழ்வுகளாகும். அடிகளாரின் தந்தை சந்தான் பாவிலு அவர்களும். அவருடைய தந்தை மரியான் சந்தான் அவர்களும் பல கத்தோலிக்க நாட்டுக் கூத்து நாடகங்களை எழுதிய புலவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தின் முதுபெரும் தமிழ் அறிஞர்களான நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் வழியில் தமிழ் பணி புரியும் அடிகளார் தொடர்ந்து எழுதியும், தமிழ் மாநாடுகளில் பங்கெடுத்தும் வருகின்றார். சமயப் பணியையும், தமிழ்ப் பணியையும் தனது இரு கண்களாகக் கொண்டு இடையறாது பணியாற்றும் அடிகளாரின் திறமையையும் செயற்திறனையும் அங்கீகரிக்கும் முகமாக மன்னார் மறைமாவட்ட திருச்சபை மறைமாவட்ட குருமுதல்வர் பணிப்பொறுப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமனம் | Virakesari.lk
  16. 15 Mar, 2025 | 06:55 PM (எம்.நியூட்டன்) தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இலங்கை இந்திய மீனவ பிரச்சினை தொடர்பாக அமைச்சர் கச்சத்தீவில் தமிழக மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த முறை இந்திய பக்தர்கள் பங்கேற்கவில்லை. இம்முறை பங்கேற்றிருந்தனர். கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இராமேஸ்வரத்தின் அனைத்து மீனவ கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையென்பது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினை.இதற்கான தீர்வு தொடர்பில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டுவருகின்றது. இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என நாம் நினைக்கவில்லை. அதற்கான தேவைப்பாடும் எமக்கு கிடையாது. எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாலும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிப்பதாலுமே கைது செய்யப்படுகின்றனர். இந்திய மீனவர்கள் இழுவை படகை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல்வளத்தை அழித்தால் இந்து சமுத்திரமே பாலவனம் ஆகக்கூடும். போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் இன்னும் மீண்டெழவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்கள் அவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல என்றார். தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல ; சந்திரசேகர் | Virakesari.lk
  17. 5 Mar, 2025 | 05:42 PM (எம்.மனோசித்ரா) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் கொலை, கொள்ளை கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியே (ஜே.வி.பி.) கற்றுக் கொடுத்தது. எனவே தற்போது நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த இயலுமைய இந்த அரசாங்கத்துக்கே காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். கண்டியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்மிக்க நிலையிலேயே காணப்படுகிறது. நாட்டில் கொலை, கொள்ளை கலாசாரத்தை ஜே.வி.பி. தான் முதன் முதலில் ஆரம்பித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பி. தான் இவற்றை கற்றுக் கொடுத்தது. 1984, 1985களில் ஜே.வி.பி.யிலிருந்து கொண்டு அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காதவர்கள் அந்தக் கட்சினராலேயே கொல்லப்பட்டனர். எனவே தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் துப்பாச்சூடுகள், வாள் வெட்டுக்களை கட்டுப்படுத்தக் கூடிய இயலுமையும், அனுபவமும் ஜே.வி.பி.க்கு காணப்படுகிறது. தற்போதுள்ள அரசாங்கம் அதற்கு மிகப் பொறுத்தமானதாகும். எனவே இந்த கொலை, கொள்ளை கலாசாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசபந்து தென்னகோன் தலைமறைவாகுமளவுக்கு ஒன்றும் இடம்பெறவில்லை. அவர் தலைமறைவாகாமல் இருந்திருந்தால் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணையில் விடுதலையாகியிருக்கலாம். எவ்வாறிருப்பினும் அவர் ஓரிரு தினங்களில் வெளியே வருவார். அவர் இந்தளவுக்கு அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நாட்டு மற்றும் மக்கள் மீதான அன்பின் அடிப்படையிலேயே அரசியலில் ஈடுபட வேண்டும். அதனை விடுத்து தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல. நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கான காலம் வந்துவிட்டது. எனவே உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை, கொள்ளை கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியே கற்றுக்கொடுத்தது : எஸ்.பி.திஸாநாயக்க | Virakesari.lk
  18. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மனித உரிமை பேரவையில் அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து பாரியளவில் வேறுபட்டிருக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அதுதொடர்பான விடயங்களை அரசாங்கம் தெளிவாக தெரிவித்திருக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த மாதம் 25ஆம் திகதி இடம்பெற்றிருந்த 25ஆவது மனித உரிமை பேரவையில் எமது வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றி இருந்தார். கடந்த வருடம் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பல விடயங்கள் அங்கு கையாளப்பட்டிருந்தன. எனினும் கடந்த கால அரசாங்கங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து அரசாங்கம் பாரியளவில் வேறுபட்டிருக்கவில்லை. மனித உரிமை தொடர்பில் பல விடயங்களை அமைச்சர் கூறி இருந்தார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். எமது நாடு பொருளாதார ஸ்திரதன்மைற்று இருக்கிறது. அதில் இருந்து மீள்வதற்கு தேவையான விடயங்களை செய்துவருகிறது என்பதை நாங்கள் அறிவோம். தமிழ் பேசும் பொலிஸார் இணைத்துக்கொள்ளல் போன்ற பல விடயங்களை தெரிவித்திருந்தீர்கள். ஆனால் இவை அனைத்தும் ஒரு அடையாளமாக மட்டுமே எமக்கு தெரிகிறது. அதிகாரிகளிடமிருக்கும் பணி நிலை தொடர்பான செயற்பாட்டையே நீங்களும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவகம், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அதுதொடர்பான விடயங்களை அரசாங்கம் தெளிவாக தெரிவித்திருக்க வேண்டும். அதன் நடைமுறைகள் தொடர்பில் தெரிவித்திருக்க வேண்டும். பொறுப்புக்கூறும் விடயம் காலதாமதாகி இருக்கிறது. இது தொடர்பில் சர்வதேச எம்மை குற்றம் கூறி இருக்கிறது. மனித உரிமை ஆணைக்குழு தொடர்பில் இலங்கையில் மனித உரிமை செயற்திட்டம் தொடர்பில் நேற்று ஆவணம் ஒன்று வெளிவந்திருக்கிறது. இணையத்தளத்தில் அது இருக்கிறது. செப் டெம்பர் அமர்வுகளுக்காக தயாராகி வருவதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அக்காலப்பகுதியில் மனித உரிமை தொடர்பில் அரசாங்கம் எடுத்த முன்னேற்றம் தொடர்பில் கூறுவதாக தெரிவித்திருந்தார்.அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் தற்போது மனித உரிமை ஆணைக்குழுவினால் வெளியிட்டிருக்கும் அறிக்கையை அரசாங்கம் பார்க்க வேண்டும். அதில் பல்வேறு தலைப்புகளில் பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. நீதி நியாயம் தொடர்பில் உறுப்பு நாடுகளின் நிலைப்பாட்டு தொடர்பில் கேட்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்திலான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளின் ஏற்பாடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 51 (1) பிரேரணைக்காகவும் அரசாங்கம் தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலும் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் இலங்கை ஆக்கப்பூர்வமாக செயற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று பொறுக்கூறும் விடயத்தில் அவர்கள் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாதல், தேசிய ரீதியாக அல்லது பிராந்திய ரீதியாக அல்லது சர்வதேச ரீதியாக அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்தல் என்பனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே கடந்த காலத்தில் இடம்பெற்ற அனைத்து தவறுகளும் இங்கு திருத்தப்பட்டிருக்கின்றன.பல கோரிக்கைகள் இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மனித உரிமை வன்முறைகள் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் பின்பற்றப்படும் மரபுரிமைகள் இதற்கான டிஜிட்டல் தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, இந்த சாட்சியங்களும் தரவுகளும் சுருக்கமாக பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளன. எனவே அரசாங்கத்தின் புலனாய்வு துறையை பயன்படுத்தி அனைத்து சிவில் அமைப்பினராலும் இதனை செய்ய முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையை கண்டறிவதற்கு பல விடயங்கள் நாங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும். உண்மையை கண்டறிதல் எனும்போது முஸ்லிம்கள் பாரிய துன்பங்களுக்கு முகம்கொடுத்திருக்கின்றார்கள். முஸ்லிம்கள, தமிழர்கள் சிங்களவர்கள் என அனைவரும் துன்பப்பட்டிருக்கிறார்கள். அதனால் நாங்கள் இதில் இருந்து வெளியில் வரவேண்டும். மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கமைய அனைத்தும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றார். அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம் | Virakesari.lk
  19. கூறியது ஏன்? பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN கட்டுரை தகவல் எழுதியவர்,நந்தினி வெள்ளைச்சாமி பதவி,பிபிசி தமிழ் 13 மார்ச் 2025 பெரியார் மீது அவருடைய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறினார் என்பதுதான். நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், "தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொரு அறையிலும் (திமுகவினர்) வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர், திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியுள்ளார்" எனப் பேசினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இத்தகைய விமர்சனத்தைப் பெரியார் மீது வைத்திருக்கிறார். உண்மையிலேயே பெரியார் தமிழ் மொழியை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறினாரா? தமிழ் மொழி குறித்த அவருடைய பார்வை என்ன? பெரியார் கூறியது என்ன? தமிழை 'காட்டுமிராண்டி மொழி' என்று பெரியார் கூறியிருப்பதாகத் தெரிவிக்கிறார், பிபிசி தமிழிடம் பேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன். ஆனால், அதை எந்த அர்த்தத்தில் கூறினார் என்பதைப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்கிறார் அவர். "இதிகாசங்கள், புராணங்களைச் சுட்டிக்காட்டி, தமிழ் மொழியில் சாதி, மதத்தைப் பாதுகாக்கும் வகையிலான அம்சங்கள் இருப்பதை பெரியார் பல சந்தர்ப்பங்களில் கோடிட்டுக் காட்டியுள்ளார். மாறாக, மனித வளர்ச்சிக்கும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பதற்கும் தமிழில் எதுவும் இல்லை என்பதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அந்த அர்த்தத்தில்தான் காட்டுமிராண்டித்தனமான விஷயங்கள் தமிழ் மொழியில் இருப்பதாக பெரியார் கூறினார்" என்கிறார் கலி. பூங்குன்றன். பெரியாரின் நோக்கம், தமிழ் மொழியைக் குறை கூறுவதாக அல்லாமல், விஞ்ஞான ரீதியாக தமிழ் மொழி சீர்திருத்தம் அடைய வேண்டும் என்பதே இதன் பொருள் எனச் சுட்டிக்காட்டுகிறார் அவர். இருப்பினும், மேடைகளில் 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என்று பெரியார் பிரசாரம் செய்ததில்லை என்றும் ஓரிரு சமயங்களில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகின்றன, பெரியாரிய இயக்கங்கள். தாய் மொழி என்பதற்காகவே அதிலுள்ள பிற்போக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டக் கூடாது என்று அர்த்தம் இல்லை என்பதே பெரியாரின் வாதமாக இருந்ததாக பூங்குன்றன் கூறுகிறார். மேலும், தமிழ் மொழியின் பழம்பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிராமல், புதுமையை நோக்கி நவீனத்துடன் மொழி பரிணமிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே பெரியார் ஒரு குறையாக இதைக் கூறாமல், ஓர் அக்கறையின் வெளிப்பாடாகவே குறிப்பிட்டதாக, திராவிட இயக்கத்தினர் கூறுகின்றனர். தமிழ் மொழி குறித்த பெரியாரின் பார்வை பெரியாரை பொறுத்தவரையில் தனக்கு எவ்விதமான பற்றும் இல்லை என்றே தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். "எவனொருவன் மனித சமுதாயத்துக்காகத் தொண்டாற்ற வருகிறானோ அவனுக்கு நாட்டுப் பற்று, சாதிப் பற்று, மொழிப் பற்று உள்ளிட்ட எவ்விதப் பற்றும் இருக்கக் கூடாது," என்று அவர் கூறியிருக்கிறார். "மொழி என்பது போர்க்கருவி போல, போர்க் கருவிகளில் மாறுதல் ஏற்பட்டதைப் போல், மொழியிலும் மாறுதல் ஏற்பட வேண்டும்" என்பதே மொழி குறித்த பெரியாரின் பார்வை என்று, 'தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?' என்ற தனது புத்தகத்தில் விளக்குகிறார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. "தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பாய் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நோய்க்கு முக்கியக் காரணம், மதச்சார்புடையோரின் கையில் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான்" எனப் பெரியார் கூறியுள்ளதாக, அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பான 'மொழி - எழுத்து' நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி குறித்த தனது கருத்துகளை 'விடுதலை' நாளிதழில் தொடர்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறார் பெரியார். அவற்றைத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் கி.வீரமணி. 1970ஆம் ஆண்டு, டிசம்பர் 1 விடுதலை நாளிதழில் பெரியார் குறிப்பிட்டுள்ளவை: ''தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி, ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும் பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பு எதுவும் இல்லை.'' ''நான் வீட்டிலும், வெளியிலும் பேசுவது தமிழ், படிப்பது தமிழ், எழுதுவதும் தமிழ், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று சில முறைகளைப் புகுத்தியவனும் நான்தான். தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழியாக அப்படியே இருந்து வருகிறது. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை. ஆகையால், தமிழ் மொழியைப் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் சலுகை தருவதாகக் கூற வேண்டியதாகிறது." பெரியார் தமிழுக்காக என்ன செய்தார்? படக்குறிப்பு,பெரியாரின் மொழி குறித்த பார்வையைத் தனது புத்தகத்தில் விளக்கியுள்ளார் கி.வீரமணி "பெரியார் தமிழுக்கான எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். 1930களில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை பெரியார் முன்னின்று நடத்தினார். அப்போதுதான், தமிழ்நாட்டிலேயே தமிழ் மொழியில் மறுமலர்ச்சி வருகிறது. அந்தக் காலகட்டதில் தமிழில் பல வடமொழி வார்த்தைகள் கலந்திருந்தன. அதையெல்லாம் மாற்றி, தமிழ் வார்த்தைகளை அன்றாடம் உபயோகிக்குமாறு செய்தார்," என்று பெரியார் தமிழ் மொழிக்காகச் செய்துள்ளவற்றைப் பட்டியலிட்டார் கலி. பூங்குன்றன். மேலும், தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதை ஊக்குவித்தார். ஊர்களின் பெயர்களில் சமஸ்கிருத ஊடுருவல் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டியதாகவும், கோவிலில் வழிபாட்டு மொழியாக தமிழ் இருக்கக்கூடாதா என்று பெரியார் கேள்வியெழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். அதோடு, தமிழ் மொழியின் ஆக்கபூர்வமான விஷயங்களை சுட்டிக் காட்டிய அதே நேரம், அதன் குறைகளையும் எடுத்துரைத்தவர் பெரியார் என்கிறார் கலி. பூங்குன்றன். தான் நடத்திய பத்திரிகைகளுக்கு விடுதலை, குடிஅரசு, உண்மை, பகுத்தறிவு, புரட்சி என தமிழ் பெயர்களையே பெரியார் சூட்டியுள்ளார். இந்தப் பத்திரிகைகளில், ஆயிரக்கணக்கிலான கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். தமிழை அறிவார்ந்த மொழியாக மாற்ற நினைத்தே அனைத்து மேடைகளிலும் பெரியார் திருக்குறளை முன்னிறுத்தி, திருக்குறள் மாநாடுகளை நடத்தியதாக, பெரியாரிய இயக்கத்தினர் கூறுகின்றனர். தமிழ் மொழியை எழுதுவதை எளிமையாக்கி எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார் முன்னிறுத்தியுள்ளார். தமிழ் மொழியில் சீர்திருத்தம் தமிழ் மொழியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த பெரியார் பல முயற்சிகளை மேற்கொண்டதாக மூத்த பத்திரிகையாளர் ப. திருமாவேலன் எழுதிய 'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?' எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, "தமிழ்நாட்டு ஆட்சி தமிழில்தான் இருக்க வேண்டும். அது தமிழாட்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார் பெரியார்" எனத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமாவேலன். "தமிழையும் மதத்தையும் பிரித்து, தமிழை அறிவு மற்றும் அறிவியல் மொழியாக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த அடிப்படையில் அனைத்து இடங்களிலும் தமிழ் ஆட்சி செல்ல வேண்டும்" என பெரியாரின் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார் அவர். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழி வாரி ராஜ்ஜியங்களாக பிரிக்கப்பட்டபோது, 1956ஆம் ஆண்டு திராவிடர் கழகம் தஞ்சையில் நடத்திய மாநாட்டில், சென்னை ராஜ்ஜியம் எனும் பெயருக்குப் பதிலாக தமிழ்நாடு எனும் பெயரை வழங்க வேண்டும் என முதன்முதலில் கூறியது பெரியாரும் திராவிடர் கழகமும்தான் என்று கி.வீரமணி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தி, சமஸ்கிருதம் குறித்து பெரியார் கூறியது என்ன? ஹிந்தி எதிர்ப்பில் பெரியார் மிகவும் வலுவாக இருந்ததாக திருமாவேலன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "பெரியாரின் போராட்ட குணத்தை அதிகமாக்கியது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்தான். 1938ஆம் ஆண்டில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வடிவத்தைக் கொண்டாலும், பெரியார் தமது ஹிந்தி எதிர்ப்பை 1929ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டார். 7.3.1929 நாளிட்ட 'குடிஅரசுவில்' ஹிந்தி எதிர்ப்பைத் தொடங்கினார். 'தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் ரகசியமும்' என்பதுதான் 'சித்திரபுத்தன்' எனும் புனைப்பெயரில் அவர் எழுதிய கட்டுரைக்கு இட்ட தலைப்பு" என்று தனது நூலில் திருமாவேலன் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தி திணிப்புக்கு எதிராக மட்டுமின்றி சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிராகவும் தொடர்ச்சியாகத் தனது கருத்துகளை பெரியார் பதிவு செய்துள்ளார். "இன்று தமிழ்நாட்டில் 'சமஸ்கிருதம்' என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காகவாவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் எதிலாவது ஒற்றுமை-பொருத்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில், தமிழர்களின் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும் ஏதாவது ஒரு காரியத்துக்கு இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா?" என்று பெரியார் கேள்வியெழுப்பியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு பெரியார் தமிழ் மொழியை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியது ஏன்? - BBC News தமிழ்
  20. சென்னை: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டியபோது போலீஸாருடன் பிரச்சினை செய்ததாக கைதான சீமான் வீட்டுக் காவலர் மற்றும் பணியாளருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வீட்டில் வளசரவாக்கம் போலீஸார் சம்மன் ஒட்டினர். இந்த சம்மனை சீமான் வீட்டில் இருந்த பணியாளர் கிழித்தார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டதாக சீமான் வீட்டுப் பணியாளரான சுபாகர் மற்றும் வீட்டின் பாதுகாவலரான அமல்ராஜ் ஆகியோரை கைது செய்த நீலாங்கரை போலீஸார், அமல்ராஜ் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ளது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு உரிமம் இருப்பதால் தங்களை ஆயுத தடுப்புச் சட்ட பிரிவில் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது. ஜாமீனில் வெளியே வரக்கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளபோதும் கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை,” என வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அருள்செல்வம், “சம்மனைக் கிழித்தது தொடர்பாக கேட்கச் சென்ற காவல் ஆய்வாளரை சீமான் வீட்டுப் பாதுகாவலர் உள்ளே செல்ல விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டார். அவரது வீட்டுப் பணியாளர் சம்மனைக் கிழித்துள்ளார். ஒருவேளை பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்து இருந்தால் அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்கும். துப்பாக்கி உரிமம் சொந்த பாதுகாப்புக்குத்தான் வழங்கப்படுகிறதே தவிர, அடுத்தவர்களை மிரட்ட துப்பாக்கியை பயன்படுத்த முடியாது,” என்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “துப்பாக்கியை தவறாக பயன்படுத்தியிருந்தால் அதை ரத்து செய்வது தொடர்பாக அரசு முடிவு எடுக்கலாம். இருவர் மீதான குற்றச்சாட்டுக்குள் செல்ல விரும்பவில்லை. அதை அவர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ளட்டும். எனவே இருவரும் தினமும் காலை 10.30 மணிக்கு சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சீமான் வீட்டுக் காவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்! | Summons tearing incident: Two people including Seeman domestic worker granted bail - hindutamil.in
  21. 13 Mar, 2025 | 02:19 PM யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கிகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக புதன்கிழமை (13) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகைதந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, தொகுதி அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட சிலரும் வருகை தந்திருந்தனர். யாழில் 17 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றுவோம் - அமைச்சர் சந்திரசேகர் | Virakesari.lk
  22. 13 Mar, 2025 | 04:10 PM யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வசித்துவரும் குடும்பம் தெருவோரங்களில் ஆதரவற்று நிற்கும் நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் இரண்டு நாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியானது தற்போது 39 நாய்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நாய்களை தங்களது சொந்த பிள்ளைகள் போலவே வளர்த்து வருகின்றனர். அயல் வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், குறித்த குடும்பத்தினரால் வளர்க்கப்படுகின்ற நாய் ஒன்றின் மீது தாக்குதல் நடாத்திய நிலையில், அயல் வீட்டில் வசிக்கும் நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர். அத்துடன், அவர்களது நாய்கள் காணாமல்போகின்ற சந்தர்ப்பங்களில் ஜோசியம் பார்த்தல், சமூக ஊடகங்கள் மூலம் பதிவுகளை பகிர்தல் ஆகியவற்றின் மூலம் நாய்களை கண்டுபிடிக்கின்றனர். குறித்த குடும்பத்தின் தலைவர் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபயணம் ஒன்றினை மேற்கொண்டு, பலரது கையொப்பங்களை பெற்று நாய்களின் பாதுகாப்புக்கான சட்டங்களை இயற்றுவதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். யாழில் ஆதரவற்ற தெருநாய்களை வளர்க்கும் குடும்பம் | Virakesari.lk
  23. 13 Mar, 2025 | 05:31 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தின் அவசர கோரிக்கையை ஏற்று மருத்துவமனைகளில் நிலவும் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக, இந்திய அரசாங்கம் 50,000 புரோஸ்மைட் ஊசி மருந்துகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வியாழக்கிழமை (13) சுகாதார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் அவற்றை ஒப்படைத்தார். சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறைகளில் நெருக்கடிகள் ஏற்பட்ட காலங்களில் இந்தியா இலங்கைக்கு நம்பகமான நண்பராகவும் முதலில் பதிலளிப்பவராகவும் இருந்து வருகிறது. கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில், 2020 மே மாதத்தில் சிறப்பு விமானம் மூலம் இந்தியா 25 தொன்களுக்கும் அதிகமான மருந்துகளை இலங்கைக்கு வழங்கியது. 2021 ஜனவரியில் 500,000 கொவிஷீல்ட் தடுப்பூசியை வழங்கியது. 2022 பெப்ரவரியில் ஒரு இலட்சம் அன்டிஜென் சோதனை கருவிகளை வழங்கியது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, 2022 இல், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான 1 பில்லியன் டொலர் கடன் வசதி ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. அது மாத்திரமின்றி சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறைக்காக பல்வேறு ஒத்துழைப்புக்களை இந்திய வழங்கியுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அவசர கோரிக்கையை ஏற்று ஊசி மருந்துகளை அன்பளிப்பாக வழங்கியது இந்தியா | Virakesari.lk
  24. 13 Mar, 2025 | 05:38 PM வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில், பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர “மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று வியாழக்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது தந்தை செல்வா கலையரங்கு வரை சென்று நிறைவடைந்தது. பெண்களுக்கு எதிரான சுரண்டல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் | Virakesari.lk
  25. மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி மீது துஷ்பிரயோகம்; துப்புரவுப் பணியாளர் கைது! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டு, உளவியல் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் துப்புரவுப் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் முடிப்பதாக வாக்குறுதி வழங்கியே மனநலம் பாதிக்கப்பட்ட அந்த யுவதியை அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரான துப்புரவுப் பணியாளரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. சந்தேகநபரை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நகர்வுகளும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி மீது துஷ்பிரயோகம்; துப்புரவுப் பணியாளர் கைது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.