Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. கோட்டாபய ராஜபக்சவை நான் காப்பாற்றினேனா?- ரணில் மறுப்பு – அல்ஜசீரா பேட்டியின் இடைநடுவில் வெளியேறப்போவதாக மிரட்டல் அல்ஜசீராவிற்கு வழங்கிய பேட்டியொன்றின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாதுகாத்ததாக தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேட்டியின் இடைநடுவில் வெளியேறப்போவதாக எச்சரித்தார். அல்ஜசீராவின் இன்று ஒளிபரப்பாகவுள்ள ஹெட் டு ஹெட் பேட்டியில் கோத்தாபய ராஜபக்சவை தான் பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டை ரணில்விக்கிரமசிங்க மறுத்துள்ளார். பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனது அரசாங்கம் நம்பகதன்மை மிக்க விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அளித்தீர்களா என்ற கேள்விக்கு எனது நாட்டில் அரசியல்தொடர்பற்றவரான சட்டமாஅதிபரே வழக்குதாக்கல் செய்வது குறித்து தீர்மானிப்பார் எங்களால் அவருக்கு ஆதாரங்களை அனுப்பமுடியும் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவை நான் காப்பாற்றினேனா?- ரணில் மறுப்பு – அல்ஜசீரா பேட்டியின் இடைநடுவில் வெளியேறப்போவதாக மிரட்டல் | Virakesari.lk
  2. யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு , பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சந்தேக நபர் ஒருவர் ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். சந்தேக நபர் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் , வரணி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்று , வெளிநாட்டு பணத்தினை உள்ளூர் பெறுமதிக்கு மாற்ற வங்கியில் கால தாமதம் ஏற்பட்டதாக நேரலையில் காணொளி பதிவிட்டு, வங்கியின் முகாமையாளர் , உத்தியோகஸ்தர்கள் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். அதேபோன்று சந்தேக நபர் சில வாரங்களுக்கு முன்னர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தினுள் சென்று , பொலிஸார் முறைப்பாடுகளை பதிய கால தாமதம் செய்வதாக நேரலை காணொளிகளைப் பதிவிட்டு பொலிஸாருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் வரணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்ல மெய்வல்லுனர் போட்டி ஒன்றுக்குச் சென்று , மாணவிகளின் அனுமதியின்றி , ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்ட போது , பாடசாலையில் கடமையில் நின்ற பொலிஸார், அதிபரின் அனுமதியின்றி மாணவிகளைக் காணொளி எடுக்க முடியாது என அறிவுறுத்திய போது , பொலிஸ் உத்தியோகத்தர்களுடனும் முரண்பாட்டில் ஈடுபட்டு , அவற்றினையும் காணொளிகளாக பதிவிட்டுள்ளார். குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து , பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேக நபர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் | Virakesari.lk
  3. 06 Mar, 2025 | 03:12 PM கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் வேகமாகப் பரவி பன்றி வளர்ப்புப் பண்ணைகளில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இந்த ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி - பளை மற்றும் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசங்களில் அமைந்திருந்த 5 பன்றிப்பண்ணைகளிலும் பரவி பன்றிகளுக்கு பல இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் தெரிவித்தார். வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேற்படி ஐந்து பண்ணைகளிலும் பன்றிகளின் குருதிமாதிரிகள் பெறப்பட்டு பேராதனை மிருகவியல் ஆராய்ச்சி நிலையத்தால் நோய் உறுதிப்படுத்தப்பட்டமையை தொடர்ந்து இப்பண்ணைகளை உடனடியாக மூடி பண்ணையின் சகல நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு இப்பண்ணைகள் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கடந்த மூன்றுதினங்களுள் மூடப்பட்டுள்ளன. ஆபிரிக்க பன்றிக்காய்சலானது மனிதரில் நோயை ஏற்படுத்தாத போதும் பன்றிகளில் மிக வேகமாகப் பரவி அவற்றில் பல இழப்புக்களை ஏற்படுத்தக்கூடிய நோயாகும். நோயுற்ற பன்றிகளின் நேரடி தொடுகை மூலமாக மட்டுமன்றி மனித உடல், உடை மற்றும் வாகனங்கள் ஊடாகவும் வேறு பண்ணைகளில் நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் நோய்தொற்று கண்டறியப்பட்ட சகல பண்ணைகளையும் தற்காலிகமாக மூடி பண்ணை நடவடிக்கைகளை முடக்கி வைப்பதற்கு திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் ; பல பன்றிகள் இறந்துள்ளன - வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் | Virakesari.lk
  4. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவருக்கு விளக்கமறியல் கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் மூவரும் இன்று வியாழக்கிழமை (06) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவருக்கு விளக்கமறியல் | Virakesari.lk
  5. சென்னை: “தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கும் பாஜகவும், அதன் சில ஏஜண்டுகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தார்கள். அவர்கள் என்றும் தமிழகத்தின் பகைவர்கள்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்” என்று திமுக சாடியுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 5 கட்சிகள் புறக்கணித்தது கவனிக்கக்கது. தமிழக அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில், “தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலினால் கூட்டப்பட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமானது தலைமைச்செயலகத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 2.30 வரைக்கும் நடைபெற்றது. 63 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 58 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் பேராபத்தை விளக்கமாக எடுத்துரைத்து, பவர்பாய்ன்ட் மூலம் தகவல்களை விளக்கி அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவைக் கோரினார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தின் ஒட்டுமொத்த கூட்டுணர்வை வெளிப்படுத்தும் வகையில் சிறிய கட்சிகள், பெரிய கட்சிகள் என்ற பாகுபாடு இன்றி கலந்துகொண்ட அனைவரின் குரல்களும் தமிழகத்தின் உரிமை காக்க ஒருமித்த கருத்தில் ஒன்றாக ஒலித்தன. கலந்து கொண்டவர்கள் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்ததோடு தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான தீர்மானத்துக்கும் தங்களது ஆதரவையும் அளித்தார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்து, நாடாளுமன்ற அவைகளில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க திட்டமிட்டிருந்த பாஜகவின் சதிக்கு எதிராக, இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பு குரலும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்கள் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிரான இந்த எதிர்ப்புக் குரல் திமுகவுடையது மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உரிமைக் குரல் என்பது இன்று ஒன்றிய பாஜக அரசுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கும் பாஜகவும், அதன் சில ஏஜண்டுகளும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தார்கள். அவர்கள் என்றும் தமிழகத்தின் பகைவர்கள்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.தமிழகத்தின் உரிமைகளை காக்க வேண்டும் எனும் ஒற்றை நோக்கத்தோடு கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழகத்தின் ஒற்றுமைக் குரல் ஒலிக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது. நாட்டின் கூட்டாட்சிக்கும், தமிழகத்தின் உரிமைக்கும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் ஏற்பட்டிருக்கும் பேராபத்தை எதிர்த்து நின்று இணைந்து போராடி வெற்றி பெற அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தென்னிந்திய மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் உரிமை பறிப்பிற்கு எதிரான போராட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கேட்டுக்கொண்டனர். முதல்வரின் தலைமையில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாய் இணைந்து எழுச்சியுடன் போராடும்; இந்த உரிமைப் போராட்டத்தில் வெல்லும்!’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 5 கட்சிகள் புறக்கணித்தது கவனிக்கக்கது. முதல்வர் நன்றி - தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “அநீதியான தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக, தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி. இதன்மூலம், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தெளிவான, சமரசமற்ற செய்தியை நாம் பதிவு செய்திருக்கிறோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். முன்னதாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 5) தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு - மாநில உரிமையை காப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில், 58 கட்சிகள் பங்கேற்றன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: > இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய - மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது. > நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். > நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது. > தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. > தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது. > இக்கோரிக்கைளைத் தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக் கட்சிக் கூட்டம் முன்வைக்கிறது. > இக்கோரிக்கைளையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘தமிழகத்தின் பகைவர்கள்...’ - அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த பாஜக, நாதக மீது திமுக காட்டம் | CM MK Stalin thanks to political parties on All party meeting and dmk on delimitation issue - hindutamil.in
  6. கொழும்பிலிருந்து கண்டிக்கு அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாகவும், உடலில் எந்த ஆடையும் இல்லாமல் பயணித்த இளைஞன் ஒருவரை, வீதித் தடைகளைப் பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டு கைது செய்ததாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-கொழும்பு வீதியில் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளில் அந்த இளைஞன் பயணிப்பதை பல பொலிஸ் அதிகாரிகள் கவனித்து, அவரை கைது செய்ய பின்தொடர்ந்த போதிலும், அவர்களில் எவராலும் அவரை அடைய முடியவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். கேகாலை மற்றும் மாவனெல்ல பொலிஸார் அந்த நபரைத் துரத்திச் சென்ற போதிலும், அவர்களால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. கடுகண்ணாவை மற்றும் பேராதனை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்த பின்னர், கடுகண்ணாவை பொலிஸார் வீதித் தடைகளைப் பயன்படுத்தி வாகனங்களைத் தடுத்து அந்த நபரைப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவர் பீதுருதலாகலைப் பார்வையிட வந்ததாகக் கூறினார். அவர் அஹங்கமவிலிருந்து வந்து கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியதாகவும், திங்கட்கிழமை (03) காலை புறப்பட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாகவும், அவ்வப்போது தான் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி வீசிவிட்டதாகவும் கூறினார். வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது ஆடைகளைக் கழற்றியதாகவும், அவர் பயன்படுத்தி வந்த ஆப்பிள் போனையும் வழியில் தூக்கி எறிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். அவரது விளக்கமறியல் மார்ச் 19 ஆம் திகதி வரை கண்டி நீதவானால் நீடிக்கப்பட்டுள்ளது. Tamilmirror Online || நிர்வாண சைக்கிள் ஓட்டிக்கு விளக்கமறியல் நீடிப்பு
  7. Simrith / 2025 மார்ச் 05 , பி.ப. 06:37 - 0 - 13 இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மீனவர் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியதுடன் இது இலங்கையின் வடபகுதி சமூகங்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரத்நாயக்க, இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க இந்திய மத்திய அரசும் தமிழக நிர்வாகமும் தங்கள் சொந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். "வடக்கு மக்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த வாழ்வாதாரம் அவர்களிடமிருந்து பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய அரசாங்கத்தையும், தமிழக அரசாங்கத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார். இந்தியா இலங்கைக்கு பல்வேறு வகையான உதவிகளை வழங்கியிருந்தாலும், இந்த முக்கியமான பிரச்சினையை தீர்க்கத் தவறியது ஒரு கேள்வியை எழுப்புகிறது என்று அமைச்சர் கூறினார். "இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வளவு உதவி செய்திருந்தாலும், இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் வடக்கின் மக்களுக்கு உதவத் தவறினால், இது உண்மையில் உதவியா என்ற கேள்வி எழுகிறது," என்று அவர் கூறினார். உள்ளூர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் போராட்டங்களை எடுத்துரைத்த அமைச்சர், தெற்கத்திய சமூகங்களுடன் ஒப்பிடும்போது இலங்கையின் வடக்கில் உள்ள மீன்பிடி சமூகங்கள் பொருளாதார ரீதியாகப் போராடி வருவதாகக் கூறினார். "மன்னாரில் உள்ள மீனவர்கள், முன்பு ஒரே நாளில் சம்பாதித்ததை ஐந்து நாட்கள் கடலில் எப்படிச் செலவிடுகிறார்கள் என்பது பற்றி என்னிடம் கூறியுள்ளனர்," என்று அமைச்சர் கூறினார். "மக்களுக்கு உதவுவது என்பது வெறும் வெள்ள நிவாரணத்தை விநியோகிப்பதல்ல; அவர்கள் சுயமாக நிற்க வாய்ப்புகளை உருவாக்குவதாகும்" என்று ரத்நாயக்க கூறினார். "இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அமைச்சர் கூறினார். Tamilmirror Online || ”இந்தியா விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”
  8. 05 Mar, 2025 | 05:26 PM யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான “டெய்சி ஆச்சி” என அழைக்கப்படும் டெய்சி பொரஸ்ட் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டார். யோஷித ராஜபக்‌ஷவின் பாட்டியான டெய்சி ஆச்சி, பணத் தூய்மையாக்கல், தொடர்பில் இன்று (5) புதன்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட டெய்சி ஆச்சி, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான 2 சொந்தப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. யோஷித ராஜபக்ஷவின் டெய்சி பாட்டி பிணையில் விடுதலை ! | Virakesari.lk
  9. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் கரைதுறைப்பற்று பிரதேச சபை அதிகார பிரதேசம் மற்றும் மன்னார் நகர சபை அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு பிரிவு அமைப்பதற்காக உலக வங்கியின் உதவியுடன் 60.5 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நிலையியல் கட்டளை 27/ 2 இன் கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 27/2 இன் கீழ் கேள்விகளை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முல்லைத்தீவு மன்னார் பிரதேசங்களில் தீயணைப்பு படை என்பதொன்று இல்லை. முல்லைத்தீவு நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாக இருக்கின்ற நிலையில் அங்கு மக்கள் தீயால் பாதிக்கப்படுகின்ற போது அல்லது கடைத் தொகுதிகள் எரியும் போது யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவில் இருந்தே தீயணைப்பு வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும் போது அங்கிருந்த உடமைகள் அழியும் நிலைமை உள்ளது. இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த அரசாங்கத்திடம் முன்வைத்திருந்த போதும் இன்னும் அது நடக்கவில்லை. அதனால் புதிய அரசாங்கத்திடம் அந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம். இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கடைகள் பல தீக்கிரையான பின்னரே வவுனியாவில் இருந்து தீயணைப்பு படை வருகின்றது. இந்த மாவட்டத்திலும் தீயணைப்பு படை இல்லாமையினால் அங்குள்ள மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் குறித்த மாவட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம் என்றார். இதற்கு பதிலளித்த பொதுநிருவாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் முன்வைத்த விடயம் சரியானதே. மன்னாரில் மட்டுமன்றி நாட்டில் இன்னும் பல பிரதேசங்களில் நிலவும் பிரச்சினையாக உள்ளது. அவர் முன்வைத்துள்ள பிரச்சினை தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். உள்ளூராட்சி நிறுவனங்களில் தீயணைப்புக்காக மத்திய அரசாங்கத்தினால் நிதியை வழங்குமாறு தொடர்ச்சியாக கோரிகக்கை முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் தேவையான உபகரணங்கள் கொரிய அரசாங்கத்தினால் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் கரைதுறைப்பற்று பிரதேச சபை அதிகார பிரதேசம் மற்றும் மன்னார் நகர சபை அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு பிரிவை அமைப்பதற்காக உலக வங்கியின் உதவியுடன் 60.5 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கூடிய விரைவில் அவை அமைக்கப்படும் என்றார். முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவு அமைப்பதற்கான 60.5 மில்லியன் ரூபா திட்டம் | Virakesari.lk
  10. Editorial / 2025 மார்ச் 04 , பி.ப. 07:18 - 0 - 25 பாலித ஆரியவன்ச இந்தியாவின் தமிழ்நாடு புதுக்கோட்டை கிராமத்தில் பிறந்த தெய்வானை ராமசாமி, தனது 4 வயதில் தனது தந்தையுடன் இலங்கைக்கு வந்தார். அவர் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலைக்குச் சென்றபோது அவருக்கு 8 வயது. ஒரு தேயிலைச் செடியை விட உயரமில்லாத இந்தப் பெண், முதுகில் தொங்கும் ஒரு பிரம்புக் கூடையுடன் கொழுந்துகளை பறிக்கும்போது, கங்கனியால் பலமுறை பிரம்பால் அடிக்கப்பட்டிருக்கிறாள். வேறு எந்தக் குற்றத்தாலும் அல்ல. ஏனென்றால் தேவையான அளவு தேயிலை கொழுந்து பறிக்கப்படவில்லை என்பதற்காக. இந்தத் துன்பங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு வேலை செய்யக் கற்றுக்கொண்ட தெய்வானி, டீன் ஏஜ் பருவத்தை அடையும் போது, தோட்டத்தில் அதிக கொழுந்துகளை பறிக்கும் திறமையான இலை பறிப்பாளராக மாறிவிட்டார். நான் என் மாமாவுடன் சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு 15 வயது. பின்னர், அந்தப் பெயர் முத்து தெய்வானை என மாற்றப்பட்டது. பெற்றோரின் அழுத்தம் காரணமாக, அந்தத் தம்பதியினரின் வாழ்க்கை இப்படித்தான் தொடங்கியது. இந்த தகவலை அன்னை தேவி சுமார் 2 வருடங்களுக்கு முன்பு என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவள் எனக்குக் கூடுதல் தகவல்களைச் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. அன்று அன்னை தெய்வானியின் கதையை நான் ஆவலுடன் கேட்டேன். "கடந்த காலத்தில், தோட்டங்கள் வெள்ளையர்களால் நிர்வகிக்கப்பட்டன. தேயிலைத் தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது. நாங்கள் சுண்ணாம்பு அறைகளில் இருந்தோம். அவர்கள் சுண்ணாம்பு அறைகளை உரம் மற்றும் களிமண்ணைப் பயன்படுத்தி மிகவும் சுத்தமாக வைத்திருந்தனர். வெள்ளைக்கார மனிதர் குதிரையில் வந்து எலுமிச்சை பழங்களின் சுத்தத்தைப் பரிசோதிக்கிறார். அது அழுக்காக இருந்தால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால் இப்போது போலல்லாமல், அப்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அரிசி ரேஷன் மற்றும் மாவு ரேஷன் தோட்டத்திலிருந்தே வழங்கப்படுகிறது. விறகுகளும் தோட்டத்திலிருந்துதான். தோட்டத்தில் கிடைக்கும் தேயிலை இலைகள் மற்றும் பிற பொருட்களின் விலை மிகவும் குறைவு. நாங்கள் பெரும்பாலும் அரிசி, கொண்டைக்கடலை உள்ளிட்ட தானியங்களை சாப்பிட்டோம். நோய் குறைவாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நம் நாடு சிறிது காலம் நன்றாகச் செயல்பட்டாலும், இப்போது தோட்டங்கள்இடிந்து விழுந்துவிட்டன. நான் இப்போது ஸ்பிரிங் வெலி தோட்டத்தில் கொட்டகொட பிரிவில் இருக்கிறேன், அது ஒரு எலும்புக்கூடு போல தோற்றமளிக்கும் ஒரு தொழிற்சாலை. தொழிற்சாலை மூடப்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது போன்ற பல தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன என்று என் பேரக்குழந்தைகள் கூறும்போது என் இதயம் உடைகிறது. ஊட்டச்சத்து இல்லை. குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள், அவர்களின் குழந்தைகளின் குழந்தைகள் படும் துன்பங்களைப் பார்க்கும்போது, சில சமயங்களில் நானும் பாவம் செய்துவிட்டேன் என்று நினைக்கத் தோன்றுகிறது.அன்று தெய்வானை சொன்னாள். கடைசியாக அவளைப் பற்றி செய்தி வெளியிட்டபோது, அவளுக்கு 108 வயது. வீட்டின் முன் இருந்த சிறிய முற்றத்தை அவர் பெருக்கி சுத்தம் செய்த விதம், கோழிக் கூடுக்குள் புகுந்து முட்டைகளை வெளியே எடுத்த விதம், கடந்த காலத்தை நினைத்து சிரித்த விதம் ஆகியவற்றை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ஏழு குழந்தைகள், 45 பேரக்குழந்தைகள் மற்றும் 15 நான்காம் தலைமுறை குழந்தைகளைப் பார்க்கும் ஆசீர்வாதத்துடன் தாய் தெய்வானை 110 ஆண்டுகள் வாழ்ந்தார். ஸ்பிரிங் வேலி தேயிலைத் தோட்ட மக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அவர்களின் நீண்ட பயணத்திற்குப் பிறகு சிறிது நேரத்திலேயே அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். தேவியின் பேத்தி மலகமட ராசலிங்கம் மல்லிகா, அவரது வாழ்க்கையை பின்வருமாறு விவரித்தார்: "பாட்டிக்கு ஒருபோதும் உடம்பு சரியில்லாமல் போனதில்லை." மிகவும் ஆரோக்கியமான பாட்டி. எங்கள் குழந்தைகளைக் கூட பாட்டி கவனித்துக் கொண்டார். நான் என் வீட்டுப்பாடத்தை நன்றாகச் செய்தேன். என் பாட்டியின் 103வது பிறந்தநாளுக்கு நாங்கள் அழகாகத் தயாராகிக் கொண்டிருந்தபோது, இந்தியாவில் ஒரு மகன் (என் மாமாக்களில் ஒருவர்) இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அதனால் நாங்கள் அந்த பிறந்தநாளைக் கொண்டாடவில்லை. பாட்டி இறக்கும் வரை அந்த மரணம் பற்றி அவளுக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் பாட்டியின் 110வது பிறந்தநாளைக் கொண்டாடினோம். அன்று இலங்கையில் தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், அழகான கேக் வாங்கப்பட்டது, பல உணவுகளை சமைத்தார். இந்தியாவில் உள்ள ஒரு மகளின் மகனால் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை, அதனால் அவர் சில நாட்களுக்குப் பிறகு வந்தார், அவர் அங்கு இருந்தபோது, அவரது பாட்டி இறந்துவிட்டார். இந்த மரணம் வயது முதிர்வு காரணமாக நிகழ்ந்தது என்று தீர்மானிக்கப்பட்டது. அவளே அழுது கொண்டே, இந்தியாவிலிருந்து வந்திருந்த தன் பேரன் தன் பிறந்தநாளுக்குக் கொண்டு வந்திருந்த அழகான புடவையைத் தன் ஆச்சியின் உடலின் மேல் போர்த்தினாள் என மல்லிகா என்னிடம் சொன்னாள். பேரன் தியாடகராஜா, தனது பாட்டியைப் பற்றி மேலும் கூறினார். "பாட்டி தெய்வீகப் பாடல்களையும் நாட்டுப்புறப் பாடல்களையும் அழகாகப் பாடுவார், சில சமயங்களில் அருட வேலயில் பக்தியுடன் நடனமாடுவார்." நீங்கள் குழந்தைகளை, குழந்தைகளின் குழந்தைகளை, அந்தக் குழந்தைகளின் குழந்தைகளைப் பார்த்தால், சுமார் 60 தலைமுறைகள் உள்ளன. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவில் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் எங்களைப் பார்த்ததே இல்லை. "இந்த மரணம் எங்களுக்கு துக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது," என்று பேரன் கூறினார். இறுதி ஊர்வலத்தில் உடன் சென்ற நானும் ஒரு பெரிய அதிர்ச்சியை உணர்ந்தேன். உடல் மரியாதையுடன் ஒரு விலையுயர்ந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. கொடிகளை உடைக்காத தோட்ட மக்கள், தங்கள் இரங்கலைப் பகிர்ந்து கொள்ள வந்தனர். சுற்றுவட்ட மக்களும், ஸ்பிரிங் வேலி மற்றும் கோடா கிராம மக்களும் மூன்று நாட்களாக உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததாக அறியப்பட்டது. இந்து வழக்கப்படி, மதச் சடங்குகளைச் செய்த பிறகு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் உடல் வைக்கப்பட்டது. இந்த தேனா இந்தியாவில் உள்ள பிரமுகர்கள் மட்டுமே பயன்படுத்தும் தேனாவைப் போலவே தயாரிக்கப்பட்டது என்று அறியப்பட்டது. இறுதி ஊர்வலம் லைம்பேலா வழியாக பிரதான சாலைக்கு கொண்டு வரப்பட்டது. முன்னால் ஒரு இசைக்குழு அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தது. தோட்டங்களில் இறுதிச் சடங்குகளில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் இறுதிச் சடங்கு இசைக்குப் பதிலாக, மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒரு இசைக்குழு கொண்டுவரப்பட்டதாக சிலர் கூறினர். ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கேட்டபோது, "நீங்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை? வேறு யாரும் இவ்வளவு காலம் வாழ்ந்ததில்லை" என்றார்கள். இறந்தவருடன் சென்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். நாங்கள் மீண்டும் பாரம்பரிய பாடல்களைப் பாடி, கைதட்டி மகிழ்ச்சியடைகிறோம். ஏன் அப்படி? நான் கேட்டேன். தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் இந்து மக்கள், அப்படி மகிழ்ச்சியாக இருக்கும்போது, இறந்தவருக்கு நல்ல ஆன்மா கிடைக்கும் என்று நம்புவதாக அவர்கள் கூறினர். மக்களின் ஆயுட்காலம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால், அன்னை தெய்வத்திடமிருந்து நீண்ட ஆயுளைப் பெறுவது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தோட்டத்தின் ராணியாக இருந்த அவளுடைய பாசத்தை இழப்பது அனைவருக்கும் ஒரு துக்கமாகும். எனக்கு உயிர் கொடுத்த தேயிலை மரம், தேயிலை புதர்களுக்கு மத்தியில் நான் கல்லறையில் தனியாக படுத்திருந்த தேயிலை மரம், தேயிலை மரத்தை குடிக்கக் கொடுத்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் போது, ஒரு மழைத்துளி கண்ணீர் துளியாக விழுந்து தேயிலை மரத்தை முத்தமிட்டது. Tamilmirror Online || 110 ஆண்டுகள் ராணியாகவே வாழ்ந்த தெய்வானை
  11. யாழ்ப்பாணம் 20 மணி நேரம் முன் யாழ். மாநகரசபையால் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு!.. யாழில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த இளைஞனிடம் யாழ். மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு, இளைஞனின் வியாபாரத்தை இடை நிறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனுக்கு இன்று(03) ஒரு இலட்சம் ரூபா உதவித் தொகை வழங்கிவைக்கப்பட்டது. லஷ்மிகா அறக்கட்டளையின் நிறுவுனர் தர்மிகா அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய் உதவித் தொகையை வடமராட்சி கிழக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையம் ஊடாக இன்று வழங்கிவைத்தார். சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் வைத்து இளைஞனிடம் உதவித் தொகையை கையளித்த ஊடகமைய தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.த காண்டிபன் கருத்து தெரிவிக்கையில், லஷ்மிகா அறக்கட்டளை நிறுவுனருக்கு நன்றி தெரிவிப்பதுடன் மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப்பட்டு, அவர்களது மனித உரிமைகளும் மதிக்கப்பட்டு சமூக மாற்றம் ஒன்றை உருவாக்க அனைவரும் முன்வரவேண்டுமென தெரிவித்தார். (ப) யாழ். மாநகரசபையால் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு!..
  12. 04 Mar, 2025 | 12:04 PM வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. வவுனியா, பழைய பேரூந்து நிலையத்துக்கு அருகில் சைவ உணவகம் ஒன்றிற்கு நேற்று திங்கட்கிழமை (03) சென்ற ஒருவர் அங்கு வடையினை கொள்வனவு செய்துள்ளார். குறித்த வடையை வீட்டில் சென்று சாப்பிட்ட போது அவ் வடைக்குள் பெரிய சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த வடையை அதன் முகாமையாளரிடம் காட்டி ஊசி காணப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது. தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் இவ்வாறு நடைபெறாது எனவும் கூறி வடையை வாங்கியவரிடம் சைவ உணகவ முகாமையாளர் மன்னிப்பு கோரியுள்ளார். வவுனியாவில் உணவகம் ஒன்றில் வடைக்குள் சட்டை ஊசி | Virakesari.lk
  13. 4 Mar, 2025 | 12:56 PM இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் நேற்று திருவோடு ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்றக் காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் பிப். 24 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேசுவரம் மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். பின்னர், சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமை 3-வது நாள் போராட்டத்தின்போது தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி காத்திருப்பு பந்தலில் அமர்ந்திருந்த மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், '' மீனவர் பிரச்சினை குறித்து உடனடியாக தான் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) 4-வது நாள் போராட்டத்தில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் மீனவர் சங்கத் தலைவர்கள் சகாயம், சேசுராஜா, தேவதாஸ், எமரிட், ராயப்பன் மற்றும் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை தோல்வி: இதற்கிடையே, தங்கச்சிமடம் போராட்ட பந்தலில் மீனவர்களிடம், நேற்று (திங்கள்) மாலை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் தமிழக அரசின் நடவடிக்கைகளை எடுத்துக்கூறி போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டனர். ஆனால், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அதற்கு ஒப்புக் கொள்ளாமல், போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர். ராமேசுவரத்தில் திருவோடு ஏந்தி மீனவர்கள் போராட்டம்: அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பு | Virakesari.lk
  14. 04 Mar, 2025 | 01:08 PM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4,255 கடலட்டைகளுடன் 17 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட வேளையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபரகள் கடலுக்கு கொண்டு சென்ற நான்கு படகுகள், சுழியோடி உபகரணங்கள், பிடிக்கப்பட்ட 4ஆயிரத்து 255 கடலட்டைகள் என்பவற்றையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள், மணியத்தோட்டம், உதயபுரம், குருநகர் மற்றும் அரியாலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 21 முதல் 56 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும் மேலதிக சட்ட நடடிக்கைக்காக யாழ்ப்பாண நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். யாழில் 4,000 கடலட்டைகளுடன் 17 பேர் கைது | Virakesari.lk
  15. 04 Mar, 2025 | 01:22 PM ஜெனீவாவில் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் “பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டின் (CEDAW)” 90 வது அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து கொண்டார். இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக மேலதிக செலவுகளுக்காக ஒரு நாளைக்கு 40 அமெரிக்க டொலர்கள் படி 6 நாட்களுக்கு வழங்கப்பட்ட 240 அமெரிக்க டொலர்களை அரசாங்கத்திற்கு திருப்பி கொடுத்துள்ளார். அவர் அந்த பணத்தை செலவு செய்யாமல் அப்படியே திருப்பி கொடுத்துள்ளார். பணத்தை திருப்பிக் கொடுத்தமைக்கான பற்றுச்சீட்டை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 240 அமெரிக்க டொலர்களை திருப்பிக்கொடுத்த அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் | Virakesari.lk
  16. 04 Mar, 2025 | 01:50 PM யாழ். நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (4) ஒன்றுகூடிய மக்கள் மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவில் வட மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் நடமாடும் சேவை நாளை புதன்கிழமை (5) முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே இன்றைய தினம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது நெடுந்தீவில் அமைந்துள்ள மதுபானசாலையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். “வேணாம் வேணாம் சாவு வேணாம்”, “போதையை ஒழிப்போம் நல்ல பாதையை வகுப்போம்”, “எம் குடும்ப விளக்கை அணைத்து விடாதே”, “குடியை விடு பிள்ளைகளை படிக்க விடு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர். அத்துடன் மதுபானசாலையை அகற்றுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுந்தீவில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் | Virakesari.lk
  17. (நா.தனுஜா) இலங்கையின் கையிருப்புக்கள் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் ஊடாக அடைவதற்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் அரைவாசியை அடைந்திருப்பதாகவும், இது பெரிதும் வரவேற்கத்தக்க விடயம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் குறித்த மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்தது. அதனையடுத்து வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத் தலைமையகத்தில் இலங்கை நேரப்படி நேற்று திங்கட்கிழமை (03) மு.ப 8.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர், பிரதித்தலைவர் கற்ஸியரினா ஸ்விரிட்ஸென்கா மற்றும் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்த்தா டெஸ்ஃபாயே வோல்ட்மைக்கல் ஆகியோர் கலந்துகொண்டு, இலங்கையின் சமகால பொருளாதார நிலைவரம் தொடர்பில் தெளிவுபடுத்தினர். அதன்படி இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் குறித்துக் கருத்துரைத்த பீற்றர் ப்ரூயர், 'நான் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதற்தடவையாக இலங்கைக்கு வருகைதந்தபோது, நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தது. பொதுமக்கள் எரிபொருள், எரிவாயு, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்ததுடன் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. அக்காலப்பகுதியில் தீவிர நெருக்கடியின் விளைவாக இலங்கை அதன் பொருளாதாரத் தொழிற்பாடுகள் மூலமான வருமானத்தில் 10 சதவீதத்தை இழந்திருந்தது' எனச் சுட்டிக்காட்டினார். இருப்பினும் கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து தற்போதுவரை இலங்கை கடந்த 5 வருடகாலத்தில் இழந்த வருமானத்தில் 40 சதவீதத்தை மீளப்பெற்றிருப்பதாகவும், இலங்கையின் அண்மைய பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக அமைந்திருப்பதே இம்மீட்சிக்கு சான்று எனவும் அவர் தெரிவித்தார். அத்தோடு எதிர்வருங்காலத்தில் இலங்கையில் பொருளாதார வாய்ப்புக்கள் அதிகரிக்கும், வருமானம் உயர்வடையும், வறுமை மட்டம் வீழ்ச்சியடையும், புதிய வாய்ப்புக்களைத்தேடி மக்கள் புலம்பெயரும் எண்ணிக்கை குறைவடையும் என்றும் பீற்றர் ப்ரூயர் நம்பிக்கை வெளியிட்டார். இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு | Virakesari.lk
  18. 04 Mar, 2025 | 06:36 PM பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் மற்றும் ஆனையிறவு உப்பளம் ஆகிய இடங்களுக்கு நேற்று திங்கட்கிழமை (03) விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தக்கரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் ஆனையிறவு உப்பு உற்பத்தி குறித்த கட்டிடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், கைத்தொழில் அமைச்சர் எதிர்வரும் 7ம் திகதி யாழ்ப்பாணம் வருகை தர இருக்கின்றார். அதனுடன் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் மற்றும் ஆனையிறவு உப்பளத்திற்கும் வருகை தரவுள்ளார். அவரின் விஜயம் தொடர்பாக முன்னாயத்த விடயங்களை பார்வையிட இன்றைய கள விஜயம் அமைந்தது. ஆனையிறவு உப்பளத்தை கடந்த காலங்களில் இவ்வாறான உற்பத்திகளை முடிவுப்பொருள் ஆக முன்பே வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்தது. நாங்கள் முடிவுப்பொருளாக்கி அதிக இலாபம் ஈட்டுவதுடன், இவற்றின் ஊடாக இப்பிரதேசத்தைச் சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும் என்றார். பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம், ஆனையிறவு உப்பளத்துக்கு இளங்குமரன் எம்பி விஜயம் | Virakesari.lk
  19. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்வம் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டணி உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேசத்தில் கடந்த மாதம் 20ஆம் திகதி வாள்வெட்டு குழுவினால் அங்கு வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யாமல் இருப்பது தொடர்பில் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அத்துடன் கைதுசெய்யப்படாமல் இருப்பது தொடர்பில் மக்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவும் கல்லடி நகரிலும் வாள்வெட்டு குழுவொன்று மட்டக்களப்பு நகரில் வாள்வெட்டு சம்பவம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி இந்த சபையில் வந்து இறுதியாக உரையாற்றும்போது பாதாள குழுக்களால் மட்டக்களப்பு நகரிலும் பாதாள சம்பவங்கள் இடம்பெறலாம் என தெரிவித்திருந்தார், அதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் இவ்வாறான சம்பவம் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான் அமைச்சர் கூடிய கவனம் செலுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். மட்டக்களப்பில் இடம்பெறும் வாள்வெட்டுக்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - சாணக்கியன் | Virakesari.lk
  20. மீனவர் பிரச்சினைக்கு மத்தியஇ மாநில அரசுகள் இணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ராமேசுவரம் செம்மமடம் பகுதியில் மனோலயா மனநல காப்பகக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் மூலம் மதுரை சென்றார் ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் செல்லும்வழியில் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்ற மீனவர்களின் காத்திருப்பு போராட்ட பந்தலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்றார். மீனவர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தண்டனை அனுபவித்து வரும் மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர். காத்திருப்பு பந்தலில் அமர்ந்திருந்த மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய ஆளுநர் ஆர்.என். ரவி மீனவர் பிரச்சினை குறித்து உடனடியாக தான் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். இது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: ராமேசுவரத்துக்கு நான் சென்றிருந்தபோது துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன். 1974 ஆம் ஆண்டு மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த அரசுகள் கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியை அநியாய ஒப்பந்தம் மூலம் கொடுத்து பெரும் பாவத்தை மீனவர்களுக்கு இழைத்தன. அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும் மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும் ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 1974 ஆம் ஆண்டுமத்தியிலும் மாநிலத்திலும் இருந்த அரசுகள் கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியை அநியாய ஒப்பந்தம் மூலம் கொடுத்து பெரும் பாவத்தை மீனவர்களுக்கு இழைத்தன.-தமிழக ஆளுநர் | Virakesari.lk
  21. 03 Mar, 2025 | 03:00 PM யாழ்.நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்று பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக பல்வேறு தவறான நடத்தைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக ஊடக வலையமைப்பில் 10ஆம் மற்றும் 11ஆம் ஆண்டு மாணவர்கள் மாத்திரமன்றி யாழ்ப்பாணப் பாடசாலைகளில் பயிலும் மாணவிகளும் உள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள தன்னார்வ அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த சமூக ஊடக வலையமைப்பின் உறுப்பினர்கள் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பாலியல் காட்சிகளை பரிமாறிக்கொள்வதுடன், அந்த உறுப்பினர்களின் தனிப்பட்ட பாலியல் செயல்பாடுகளும் பரிமாறிக்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த சமூக ஊடக வலையமைப்பை பயன்படுத்தி மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கான விருந்துகளை நடாத்தியதாக யாழ். தன்னார்வ அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. யாழில் மாணவர்களை தவறான நடத்தைகளுக்குள்ளாக்கும் புதிய வலையமைப்பு ! | Virakesari.lk
  22. 03 Mar, 2025 | 03:11 PM இவ் வருடத்தின் முதல் மாதத்தில் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாப் பயணிகளால் வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 341.8 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 17.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மொத்தமாக 232,341 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. இதன்மூலம் இவ்வருடத்தில் பெப்ரவரி ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தமாக 485,102 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 362.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலா வருமானமாக கிடைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த சுற்றுலா பயணிகளால் கிடைத்த வருமானமாக 3,168.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளது என்றும் மத்திய வங்கியின் தரவு தெரிவிக்கின்றன. இது 2023 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 2,068.0 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்துடன் ஒப்பிடும் போது 53.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளால் ஜனவரியில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் | Virakesari.lk
  23. இந்திய அமைதி காக்கும் படைகளால் சிறிலங்காவில்மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு வழங்கவேண்டிய கடப்பாடு இந்தியஅரசாங்கத்திற்கு உள்ளது. என யாழ் வடமராட்சியில் நேற்று வெளியான வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் என்ற அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது அந்த அறிக்கை இந்திய அரசாங்கத்திற்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- வல்வெட்டித்துறை படுகொலையிலும் இலங்கையில் இருந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான உரிமை மீறல்களிலும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் வகிபாகம் தொடர்பாக பொறுப்புக்கூறல் மட்டில் சர்வதேச சட்டத்தின் கீழ் தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதுடன் இந்திய அமைதிப்படையின் கட்டளை அதிகார வலையமைப்பினையும் மூத்த அதிகாரிகளின் பெயர் பட்டியல்களையும் வெளியிடவேண்டும். இவ்வன்முறைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவர்களது கட்டளை அதிகாரிகளும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுஇபொறுப்புக்கூறல் செயற்பாட்டின் குற்றச்சாட்டினை எதிர்கொள்வதை உறுதிப்படுத்தவேண்டும். இதன் மூலமாக இவர்களால் இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும்அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்கும்இவல்வெட்டித்துறை மக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்வதை ஏதுவாக்கும் நிலையேற்படும். பரிகாரங்கள் வல்வெட்டித்துறைப் படுகொலையில் பாதிக்கப்பட்டமக்களுக்கு இழப்பீடு மற்றும் ஆதரவினை வழங்க உறுதியளிக்கவும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களைநிவர்த்தி செய்யவும் அவர்களது குடும்பங்கள் மற்றும்பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறைச் சமூகத்திற்குபொருளாதார மற்றும் அடையாள உதவிகளை வழங்குவதையும் மேற்கொள்வதற்கு உறுதியளிக்க வேண்டும். ஒரு விரிவான இழப்பீட்டு மற்றும் புனர்வாழ்வு செயல்திட்டத்தை உருவாக்குதல் இதில் பிரதானஉழைப்பாளிகள் காயமடைந்தவர்கள் சொத்திழப்புக்கள்வருமான இழப்புக்கள் வாழ்வாதார இழப்புக்கள்பொருளாதார வாய்ப்புக்களில் இழப்புக்களுக்கானபதிலீடுகள் மருத்துவ மற்றும் உளவியல் சமூக ஆதரவுகள்என்பன உள்ளடக்கப்படல் வேண்டும வல்வெட்டித்துறைப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள்மற்றும் அவர்களது குடும்பத்திடமும் வல்வெட்டித்துறைச்சமூகத்திடமும் எழுத்து மூலமான பொது மன்னிப்புக்கோருதல் இந்திய அமைதி காக்கும் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு வழங்கவேண்டிய கடப்பாடு இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது - வல்வெட்டித்துறை படுகொலையின் வாக்குமூலங்கள் அறிக்கையில் வேண்டுகோள் | Virakesari.lk
  24. ‘போலீஸ் விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை’ - சீமான் சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வெள்ளிக்கிழமை (பிப்.28) போலீசார் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சீமான் சந்தித்தார். “போலீஸ் விசாரணையில் சென்ற முறை கேட்ட அதே பழைய கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை. விசாரணைக்கு தாமதமாக வர காவல் துறையினரே காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராக தயார். போலீஸ் விசாரணையில் என்ன நல்ல முறையில் நடத்தினர். இந்த வழக்கை விசாரித்து முடிக்க மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. மூன்றே நாளில் இதை விரைந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக்கு சம்மன் கிடைத்த போது நான் பயணத்தில் இருப்பதாக தெரிவித்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன். போலீஸ் தரப்புக்கு இந்த வழக்கில் அழுத்தம் தரப்படுகிறது. ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டு செல்கிறது. என் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மனை அகற்றியதில் எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த இருவரை கைது செய்ததும், அவர்களை தாக்கியதும் தவறு. சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் காவல் நிலைய அதிகாரிகள். அப்படி இருக்கும் போது நீலாங்கரை காவல் நிலைய அதிகாரிகள் ஏன் எங்கள் வீட்டில் இருந்தவர்களை கைது செய்ய வேண்டும். கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னை கைது செய்து முதல்வர் ஆக்க உள்ளனர். கடந்த தேர்தலில் தனித்து நின்று அடையாளம் பெற்றோம். எங்களுக்கு 36 லட்சம் வாக்குகள் விழுந்தன. வாக்குக்கு பணம் கொடுக்காமல் இதை பெற்றுள்ளோம். என் மீதுள்ள நற்பெயரை சிதைக்கும் வகையில் அரசு இதை செய்துள்ளது. புகார் அளித்த நடிகை கடந்த 15 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வருகிறார். விரும்பி வந்து அவர் உறவு வைத்துக் கொண்டார். எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. குழந்தைகள், குடும்பம் ஆகிவிட்டது. என் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதா?” என தெரிவித்தார். “அரசியல் களத்தில் நான் ஒரு பக்கமும், விஜய் ஒரு பக்கமும் நிற்கிறார். என்றைக்கும் அவர் எனது அன்புத் தம்பி தான். மாண்புமிகு முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என சீமான் இந்த சந்திப்பின் போது தெரிவித்தார். முன்னதாக, காவல் துறை சம்மனை ஏற்று சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு சீமான் அளித்த பதில் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையின் இணை ஆணையர் அதிவீர பாண்டியன், உதவி ஆணையர் செம்பேடு பாபு மற்றும் வளசரவாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஆகியோர் சீமானிடம் விசாரணை நடத்தினர். திரண்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்: போலீஸ் விசாரணைக்கு சீமான் ஆஜரான நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகளை காவல் துறை அமைத்திருந்தது. பாதுகாப்பு கருதி 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காவல் நிலையத்துக்குள் சீமான் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதன் காரணமாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காவல் நிலையத்துக்கு வெளியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதை கண்டித்து நாதக நிர்வாகிகள் கண்டன குரல் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னணி என்ன? - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், பாதுகாவலரை போலீஸார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இது தொடர்பாக அனுப்பிய சம்மனில் குறிப்பிட்டபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் வியாழக்கிழமை மீண்டும் சம்மன் ஒட்டப்பட்டது. அதில், பிப். 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த சம்மனை கிழித்தெறிந்தார். இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் போலீஸார் சீமான் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, சீமான் வீட்டில் பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர் அமல்ராஜ், போலீஸாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆவேசமடைந்த காவல் ஆய்வாளர் அவரைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அமல்ராஜை போலீஸார் கைது செய்ய முயன்றதால், அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீஸார் அமல்ராஜின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று, காவல் துறை ஜீப்பில் ஏற்றினர். இதற்கிடையில், பாதுகாவலர் அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவரிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சம்மனை கிழித்ததாக சீமானின் உதவியாளர் சுபாகர் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் நடந்தபோது சீமான் மனைவி கயல்விழி வீட்டிலிருந்து வெளியே வந்து, காவல் ஆய்வாளரிடம் மன்னித்து விடுமாறு முறையிட்டார். கைது செய்யப்பட்ட அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘நான் கைதுக்கு பயப்பட மாட்டேன்’ - சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்ம் கூறும்போது, “காவல் ஆய்வாளர் ப்ரவீன் போன்றவர்களின் அணுகுமுறையால் காவல் துறைக்கே களங்கம். எனக்கு மட்டுமே வழங்கப்பட்ட அழைப்பாணையை அனைவரும் படிக்கும் விதத்தில் ஊடகங்கள் முன்னிலையில் ஒட்டிய அணுகுமுறையே தவறானது. அதேபோல் காவலாளி அமல்ராஜோ உள்ளிட்டோர் அழைப்பாணையை ஒட்டியபோது தடுக்கவில்லை, அப்படி தடுத்திருந்தால் தவறு. இதுபற்றி எனக்கும், எனது மனைவிக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு அந்த அழைப்பாணை அங்கு ஏன் இருக்க வேண்டும். திமுக கருத்தியல் ரீதியாக எதிர்க்காமல் தனிப்பட்ட முறையில் அனைவரையும் எதிர்க்கிறது. இதை பார்க்கும் போது, அந்த பயம் இருகட்டும் என்ற திமிர் தான் தனக்கு ஏற்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரம், சாரயம் காய்ச்சுவது, பள்ளிகளில் போதை பொருள் புழக்கம், கூட்டு பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் சட்டம் தன் கடமையை ஏன் செய்யவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை (நடிகை விஜயலட்சுமி) பேச வைத்து பிரச்சினை செய்து வருகிறார்கள். நான் கைதுக்கு பயப்பட மாட்டேன். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அது முடிந்ததும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கபடும்” என்றார். ‘போலீஸ் விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை’ - சீமான் | No new questions asked in police investigation says Seeman - hindutamil.in
  25. “நீலாங்கரை போலீஸாரின் ஈகோதான் அனைத்துக்கும் காரணம்” - சீமான் மனைவி கயல்விழி குற்றச்சாட்டு சென்னை: “காவல் துறையினர் ஈகோவில்தான் எல்லாம் செய்கிறார்கள். வீட்டில் ஆள் இருந்தும், எதுவுமே சொல்லாமல் சம்மன் ஒட்டப்பட்டது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி குற்றம்சாட்டியுள்ளார். நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வழக்கு தொடர்பாக, சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில், வளசரவாக்கம் போலீஸார் சம்மன் ஓட்டிய நிலையில், அதை கிழித்த பணியாளர் மற்றும் வீட்டின் காவலாளி ஆகிய இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அப்போது அங்கிருந்த சீமானின் மனைவி கயல்விழி, போலீஸாரிடம் மன்னிப்பு கேட்டும், இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சீமானின் மனைவி கயல்விழி, சென்னை நீலாங்கரையில் வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் கூறியது: “காவல் துறையினர் சம்மன் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி எனக்கு வந்தது. முன்னதாக இரண்டு வாரத்துக்கு முன்பு வளசரவாக்கம் காவல் துறையினர் வீட்டுக்கு வருகை தந்து சீமானிடம் சம்மன் வழங்கிவிட்டு சென்றனர். அப்போது அவரே போலீஸாரிடம் 2 வாரத்துக்கு தேதியில்லை என்றார். பின்னர் போலீஸார் 27-ம் தேதி தங்களது வழக்கறிஞர்கள் வந்து எழுதி கொடுக்கட்டும் என்று சொல்லிவிட்டு சென்றனர். சீமான் நேற்று ஊரில் இல்லை. அந்தவகையில் காவல் துறையினர் சம்மன் கொண்டுவந்தால், கையெழுத்து போட்டு வாங்கிக்கொள்ளலாம் என்ற முடிவில் தான் நான் இருந்தேன். ஆனால், வீட்டுக்கு வந்த போலீஸார் எங்களிடம் எதுவுமே தெரிவிக்காமல், வீட்டில் யாருமே இல்லாததுபோல சம்மனை ஒட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டபோது, காவல் துறையினர் சம்மனை ஒட்டிவிட்டு சென்றுவிட்டால், அதன்பின் எடுத்துவிடலாம் என தெரிவித்தனர். இதையடுத்து சம்மனை படிப்பதற்காக நான்தான் கிழிக்கச் சொன்னேன். பின்னர் படித்து கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் முன்கதவு திறக்கப்பட்டு கூச்சலிடும் சத்தம் கேட்டது. காவலாளி அமல்ராஜ் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். ஆனால், அவரை குப்பை மாதிரி தூக்கிப் போட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர். நான் முதலில் காவலாளிதான் போலீஸை தள்ளி விட்டார் என்று நினைத்துதான் மன்னிப்பு கேட்டேன். ஆனால், அவர்கள் கைது அளவுக்கு கொண்டு செல்வார்கள் என நினைக்கவில்லை. காவலாளி அமல்ராஜ் போலீஸாரை தள்ளவில்லை. அவர் கதவை திறந்தவுடன் போலீஸார் கதவை தள்ளிவிட்டு, அவரை கைது செய்தனர். இது முழுக்க முழுக்க திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் நாடகமாகும். வளசரவாக்கம் போலீஸார் ஒட்டி விட்டு சென்ற சம்மனை, நீலாங்கரை போலீஸார் ஏன் வந்து பார்க்க வேண்டும்? சம்மன் எங்களுக்கு தானே. அதை எடுத்து படிப்பதில் என்ன தவறு உள்ளது? அந்த சம்மனை நானே எடுத்திருப்பேன். ஆனால் இரவு உடையில் வெளியே வரமுடியாததால் பணியாளரை எடுக்க சொன்னேன். அதுதான் நான் செய்த தவறு. நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன். எனில், போலீஸார் என்னிடம் பேசியிருக்கலாமே அல்லது என்னையே கைது செய்திருக்கலாமே? போலீஸார் கதவை தள்ளிவிட்டு வீட்டுக்குள் வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? தொடர்ந்து பணியாளரை காவல் நிலையத்துக்கு அனுப்பவில்லை என்றால் படையை இறக்குவோம் என்றும் சொன்னார்கள். அதேபோல் காவலாளி அமல்ராஜ் துப்பாக்கிக்காக உரிமம் பெற்று வைத்திருப்பவர். தன்னிடம் ஆயுதம் இருக்கிறது என்பதை போலீஸாரிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லி, அவரே எடுத்து கொடுத்திருக்கிறார். ஆனால், துப்பாக்கி காட்டி மிரட்டியதாக வழக்கு போட்டுள்ளனர். நீலாங்கரை ஆய்வாளருக்கு எங்கள் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. அதனால் கைது செய்யப்பட்ட காவலாளி அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபா இருவரும் நேரடியாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. மாறாக, ஒரு பூங்காவுக்கு அழைத்துச் சென்று அடித்திருக்கின்றனர். அதன்பின் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று இரும்பு ராடில் துணியை சுற்றி வைத்து இருவரையும் போலீஸார் அடித்துள்ளனர். எதற்கு காவல் துறை இவ்வாறு செய்ய வேண்டும்? அந்தளவுக்கு என்ன தப்பு செய்தார்கள் இருவரும்? சீமான் ஊரில் இல்லை என போலீஸாருக்கும் தெரியும். அதனால் வேண்டும் என்றே இதை செய்தனர். இரண்டு வாரமாக தொடர் பயணத்தில் இருக்கும் சீமான், ஒரு நாளில் 2 அல்லது 3 முறையாவது ஊடகங்களை சந்திக்கிறார். அவர் எங்கே இருக்கிறார் என எல்லாருக்குமே தெரியும். அவர் மீது எவ்வளவோ வழக்குகள் உள்ளன. அவர் என்ன ஓடியா போய்விட போகிறார். அத்தனையையும் நேர்மையாக அவர் எதிர்கொண்டு தான் வருகிறார். எங்களுக்கு சிறையை கண்டு பயமில்லை. இது முழுக்க முழுக்க காவல் துறை திட்டமிட்ட செய்த செயலாகும். காவல் துறை மீது அதிக மரியாதை இருக்கிறது. ஆனால், அவர்கள் இப்படி நடந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை. நீலாங்கரை போலீஸார் ஈகோவில்தான் அனைத்தையும் செய்திருக்கிறார்கள். சீமான் மீது எத்தனையோ வழக்குகள் இருக்கும்போது பாலியல் குற்றம், பாலியல் குற்றம் என தொடர்ந்து பேசி அசிங்கப்படுத்த வேண்டும் என்றுதான் முயற்சிக்கின்றனர். அந்தப் பெண் (நடிகை விஜயலட்சுமி) எத்தனையோ நாளாக அதைப் பேசி வருகிறார். இந்த வழக்கில் பல குழப்பங்கள் உள்ளன. அதை காவல் துறை நேர்மையாக விசாரிக்கட்டும்” என்று அவர் கூறினார். “நீலாங்கரை போலீஸாரின் ஈகோதான் அனைத்துக்கும் காரணம்” - சீமான் மனைவி கயல்விழி குற்றச்சாட்டு | Seeman wife Kayalvizhi alleges Police over summon issue - hindutamil.in

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.