Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு - என்ன காரணம்? பட மூலாதாரம்,CPAC 6 ஜனவரி 2025, 16:23 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் கனடாவில் எதிர்பார்க்கப்பட்டபடியே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் புதன்கிழமை கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவிருந்த நிலையில், ட்ரூடோ தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2015-ஆம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன். நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளேன். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்ததை கண்ணுற்றேன். வட அமெரிக்க கண்டத்தில் தடையில்லா வர்த்தகம் நீடிக்க உழைத்தேன்" என்றார். தனது கடந்த கால செயல்பாடுகளை விவரித்த பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக அறிவித்த அவர், அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்போதைய பதவியில் நீடிப்பேன் என்றார். குடும்பத்துடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பதவி விலகும் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். தனது வெற்றிக்கு அவர்களது ஆதரவே காரணம் என்று அவர் கூறினார். தனது பதவி விலகல் முடிவு குறித்து நேற்றைய இரவு உணவின் போது குழந்தைகளிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். ட்ரூடோ பதவி விலக என்ன காரணம்? ட்ரூடோவின் பதவி விலகல் கனடா அரசியல் களத்தில் ஒரு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. அவர் யாரும் எதிர்பாராத சமயத்தில், 2015 இல் தனது கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். அப்போது 43 வயதாக இருந்த ட்ரூடோ, அரசியலில் புதிய முகமாகவும் இளம் தலைவராகவும் இருந்தார். வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட ஒரு புதிய வகையான அரசியலை உறுதியளித்தார். செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரித்தார் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவளித்தார். ஆனால் அவரது முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன. மிக சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் அவரது ஆட்சி மீதான விரக்தி காரணமாக அவரின் செல்வாக்கு குறைந்து வருகிறது. கியூபெக், ஒன்டோரியோ மற்றும் அட்லாண்டிக் கனேடிய மாகாணங்களைச் சேர்ந்த டஜன்கணக்கான, ட்ரூடோவின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர். கருத்துக்கணிப்புகளில் பங்கேற்ற மூன்றில் இரு பங்கு பேர் ட்ரூடோ மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். செப்டம்பர் மாதம் `Ipsos' தளத்திற்கு பதிலளித்தவர்களில் 26% பேர் மட்டுமே ட்ரூடோ பிரதமருக்கான சிறந்த தேர்வு என்று கூறினர். அந்த கருத்துக்கணிப்பில் கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை விட 19 புள்ளிகள் பின்தங்கி இருந்தார் ட்ரூடோ. கனேடிய அரசியல் வரலாறும் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை. கனடாவில் இதுவரை இரண்டு பிரதமர்கள் மட்டுமே தொடர்ந்து நான்கு முறை பதவி வகித்துள்ளனர். வரிகளைக் குறைப்பது, பண வீக்கத்தைச் சமாளிப்பது மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது போன்ற வாக்குறுதியின் பேரில் 2022 இல் பொய்லிவ்ரே (Poilievre) தனது கட்சியின் உயர்மட்டத்திற்கு உயர்ந்தார். 45 வயதான அவர் கோவிட் ஆணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஃப்ரீடம் கான்வாய் டிரக்கர்களுக்குப் பின்னால் ஆதரவைத் திரட்டினார் - இது ஒட்டாவா உள்ளிட்ட கனேடிய நகரங்களை ஸ்தம்பிக்கச் செய்த முற்றுகை ஆகும். கனடாவின் அடுத்த பிரதமர் டிரம்பின் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண வேண்டும். ஒழுங்கற்ற குடியேற்றம், சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக, அமெரிக்காவுடனான தனது எல்லையை கனடா பாதுகாக்கவில்லை என்றால் கனேடியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இது "கடுமையான சவால்" என முன்னாள் கனடா நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டின் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு பதவி விலகினார். "நான் ட்ரூடோ அரசாங்கத்தின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகராக இருப்பதை அவர் விரும்பவில்லை என என்னிடம் தெரிவித்தார்" என்றும் கிறிஸ்டியா கூறினார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு - என்ன காரணம்? - BBC News தமிழ்
  2. டாம் ஜியோகெகன் பதவி,பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த சில நாட்களில் தனது பதவி விலகலை அறிவிக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து அவர் பரிசீலித்து வருகிறார், இது அவரது ஒன்பது ஆண்டு கால பிரதமர் பதவி காலத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. கனேடிய பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரிகளை விதிக்கும் என்ற டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்ற விவகாரம் உட்பட சில கருத்துவேறுபாடுகளை மேற்கோள் காட்டி கடந்த மாதம் அவரது நிதி அமைச்சர் பதவி விலகினார். ட்ரூடோவின் புகழ் கனடா மக்கள் மத்தியில் சரிந்துள்ளது. அவரது கட்சி இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஓரிரு நாட்களில் பதவி விலகலா? ட்ரூடோ தனது சொந்த எம்.பி.க்களால் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பது போன்ற ஒரு பிம்பம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, புதன்கிழமை நடக்கவுள்ள தனது கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு முன்பே பதவி விலகுவது குறித்து அவர் அறிவிப்பு வெளியிடலாம் என்று `குளோப் அண்ட் மெயில்' நாளிதழ் தெரிவித்துள்ளது. `குளோப் அண்ட் மெயில்' தகவலின்படி, ட்ரூடோ உடனடியாக பதவி விலகுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் தனது எதிர்காலம் குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரூடோவுக்குப் பிறகு யார் பொறுப்பேற்றாலும், அமெரிக்காவுடன் சாத்தியமான வர்த்தகப் போரை எதிர்கொள்ளும் அதேவேளையில், வலுவான பிரசாரத்தின் மூலம் தேர்தலில் கட்சியை வழிநடத்தவும் வேண்டியிருக்கும். கனடாவில் பொதுத்தேர்தல் அக்டோபர் மாதத்திற்கு முன் நடக்க வேண்டும். ஆனால் லிபரல் கட்சியின் தலைமையில் ஏற்படும் மாற்றம் வரவிருக்கும் மாதங்களிலேயே தேர்தல் நடப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கலாம். ட்ரூடோ மீது சொந்தக் கட்சியிலேயே அதிருப்தி ட்ரூடோவின் பதவி விலகல் என்பது கனடா அரசியல் களத்தில் ஒரு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும். அவர் யாரும் எதிர்பாராத சமயத்தில், 2015 இல் தனது கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். அப்போது 43 வயதாக இருந்த ட்ரூடோ, அரசியலில் புதிய முகமாகவும் இளம் தலைவராகவும் இருந்தார். வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட ஒரு புதிய வகையான அரசியலை உறுதியளித்தார். செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரித்தார் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவளித்தார். ஆனால் அவரது முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன. மிக சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் அவரது ஆட்சி மீதான விரக்தி காரணமாக அவரின் செல்வாக்கு குறைந்து வருகிறது. கியூபெக், ஒன்டோரியோ மற்றும் அட்லாண்டிக் கனேடிய மாகாணங்களைச் சேர்ந்த டஜன்கணக்கான, ட்ரூடோவின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர். கருத்துக்கணிப்புகளில் பங்கேற்ற மூன்றில் இரு பங்கு பேர் ட்ரூடோ மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். செப்டம்பர் மாதம் `Ipsos' தளத்திற்கு பதிலளித்தவர்களில் 26% பேர் மட்டுமே ட்ரூடோ பிரதமருக்கான சிறந்த தேர்வு என்று கூறினர். அந்த கருத்துக்கணிப்பில் கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை விட 19 புள்ளிகள் பின்தங்கி இருந்தார் ட்ரூடோ. கனேடிய அரசியல் வரலாறும் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை. கனடாவில் இதுவரை இரண்டு பிரதமர்கள் மட்டுமே தொடர்ந்து நான்கு முறை பதவி வகித்துள்ளனர். வரிகளைக் குறைப்பது, பண வீக்கத்தைச் சமாளிப்பது மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது போன்ற வாக்குறுதியின் பேரில் 2022 இல் பொய்லிவ்ரே (Poilievre) தனது கட்சியின் உயர்மட்டத்திற்கு உயர்ந்தார். 45 வயதான அவர் கோவிட் ஆணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஃப்ரீடம் கான்வாய் டிரக்கர்களுக்குப் பின்னால் ஆதரவைத் திரட்டினார் - இது ஒட்டாவா உள்ளிட்ட கனேடிய நகரங்களை ஸ்தம்பிக்கச் செய்த முற்றுகை ஆகும். கனடாவின் அடுத்த பிரதமர் டிரம்பின் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண வேண்டும். ஒழுங்கற்ற குடியேற்றம், சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக, அமெரிக்காவுடனான தனது எல்லையை கனடா பாதுகாக்கவில்லை என்றால் கனேடியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இது "கடுமையான சவால்" என முன்னாள் கனடா நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டின் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு பதவி விலகினார். "நான் ட்ரூடோ அரசாங்கத்தின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகராக இருப்பதை அவர் விரும்பவில்லை என என்னிடம் தெரிவித்தார்" என்றும் கிறிஸ்டியா கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஓரிரு நாட்களில் பதவி விலகலா? புதிய தகவல்கள் - BBC News தமிழ்
  3. புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காத நிலையில், கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களில் நடைபெறவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இலங்கையர்களிடமிருந்து அதிகளவான கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் குவியும் எனவும், கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அடுத்த சில வாரங்களில் சுமார் 30,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்கள் கடவுச்சீட்டு பெறுவதில் தொடர்ந்தும் சிக்கல்கள் ஏற்படுமானால், இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வேறு நாடுகளுக்கு திருப்பி விடப்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. R Tamilmirror Online || மீண்டும் தலை தூக்கும் கடவுச்சீட்டு பிரச்சினை
  4. யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்தவ கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழு அவரை கட்டிவைத்து தாக்கி வீடியோ காணொளி பதிவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு சென்ற நிலையில், தங்க நகை போன்ற ஆபரணம் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்தேன். அதனை எடுத்து அந்த வெதுப்பகத்தில் ஒப்படைத்ததுடன் அது தங்க ஆபரணமா என ஆராய்ந்து உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என கடந்த 24ஆம் திகதி வழங்கினேன். இரண்டு நாட்கள் கடந்த நிலையில் குறித்த வீதியில் செல்லும்போது குறித்த வெதுப்பகத்திற்கு சென்று நான் வழங்கிய ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைத்தீர்களான கேட்டேன். அதற்கு அவர்கள் இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறினர். மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து குறித்த வெதுப்பகத்துக்கு சென்ற நிலையில் அந்தப் பொருளை உரியவர்களிடம் ஒப்படைத்தீர்களா? என கேட்ட நிலையில் ஒப்படைக்கவில்லை என பதில் வழங்கினர். இந்நிலையில் குறித்த பொருளைத் தாருங்கள் ஏதாவது சிறுவர் இல்லத்திற்கு அதை வழங்கி வைப்போம் என கேட்டேன். இதன்போது குறித்த வெதுப்பகத்தில் நின்ற இருவர் என் கழுத்தைப் பிடித்து தாக்கினர். “நான் சொல்வதை கேளுங்கள் ஏன்? தாக்குகிறீர்கள் என கத்தினேன் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் என்னை தாக்கியதுடன் கம்பத்தில் கட்டிவைத்து தாறுமாறாக தாக்கினர்”. வீதியால் சென்ற சிலர் என்னை தாக்குவதை அவதானித்த நிலையில் எனது நியாயத்தை கேட்டு என்னை மீட்டனர். முகத்திலும் உடலிலும் அடி காயங்களுக்கு உள்ளாகிய நான் கோப்பாய் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தெரிவித்து விட்டு வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் சென்றுவிட்டேன். வைத்திய சாலையில் இருந்து வீடு திரும்பியபின் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்றேன் என்னை தாக்கியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை. பொலிஸ் நிலையம் வந்த சட்டத்தரணி ஒருவர் சமாதானமாக செல்லுங்கள் என்றார். ”எனக்கு நியாயம் வேண்டும் என்னை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் உயிர் மாய்ப்பேன்” என அவர் மேலும் தெரிவித்தார். பு.கஜிந்தன் Tamilmirror Online || “தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் உயிர் மாய்ப்பேன்”
  5. Simrith / 2025 ஜனவரி 06 , பி.ப. 05:22 - 0 - 56 இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து மக்கள் போராட்ட முன்னணி கவலை வெளியிட்டுள்ளது. அமைச்சர் விஜித ஹேரத்துக்கு எழுதிய கடிதத்தில், தற்போதைய ஜனாதிபதியின் இந்திய அரச சுற்றுப்பயணத்தின் போது செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் அதிகாரம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், இது தொடர்பிலான இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் 2025 ஜனவரியில் இறுதி செய்யும் அவர் அண்மையில் கூறியதை கட்சி முன்னிலைப்படுத்தியுள்ளது. “இந்த ஒப்பந்தம் ஜனநாயக உரிமைகள், தேசிய பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு, தேசத்தின் பொருளாதாரம் மற்றும் அரசு மற்றும் அதன் மக்களின் இறையாண்மைக்கு தவிர்க்க முடியாத ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒரு இந்திய நிறுவனம் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க அனுமதித்த வரலாற்றை மறு ஆய்வு செய்வது மிகவும் முக்கியமானது,” என்று கட்சி மேலும் கூறியது. மக்கள் போராட்டக் முன்னணி மேலும் தெரிவிக்கையில்; "நாம் தகவல்களின் சகாப்தத்தில் வாழ்கிறோம், மேலும் ஒரு நாடு தனது மக்களின் தகவல்களையும் தரவுகளையும் மற்றொரு வெளிநாட்டு நாட்டிற்கு வழங்குவது பாரிய ஆபத்து. ஒரு தேசம் தனது மக்களின் தகவல்களை வேறொரு நாட்டிலிருந்து பெறுவதன் மூலம் கூட அடிபணிய வைக்க முடியும். அந்த மூலோபாயத் தலையீட்டை இந்தியா இன்று இலங்கையில் செய்து வருகிறது. இந்த நிலையில், இலங்கை மக்களின் பொது பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளது. புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்களைப் பெறும் அதே வேளையில், இந்திய நிறுவனத்திடம் டிஜிட்டல் அடையாள அட்டை பணியை ஒப்படைக்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெறுவதற்கான முன்மொழிவை பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்று கட்சி வலியுறுத்தியது. Tamilmirror Online || ”இலங்கை மக்களின் பொது பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளது”
  6. இன்னும் ஒரு வாரத்துக்குப் பிறகு வரும் தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயார் செய்ய முடியாமல் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை அரிசி மொத்த வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை விதித்தல், அரிசியை இறக்குமதி செய்தல், அரிசி விற்பனை செய்பவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் கையிருப்பு பதுக்கி வைத்திருப்பவர்களை கண்டறிய விசாரணைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. மேலும், அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததுடன், அதற்கேற்ப 88,000 மெற்றிக் தொன் அரிசி இன்றுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த பண்டிகை காலத்தை போன்று இன்றும் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் உள்ளுர் கச்சா மற்றும் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்களும் நுகர்வோரும் குற்றம் சுமத்துகின்றனர். இதேவேளை, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மரக்கறிகளின் விலை கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயார் செய்ய அரிசி தட்டுப்பாடு - புறக்கோட்டை அரிசி மொத்த வியாபாரிகள் | Virakesari.lk
  7. (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகளில் 60 இற்கும் அதிகமானோர் உத்தேச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு கட்சிகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளில் போட்டியிட்டு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து கட்சி மட்டத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் கடந்த காலங்களில் மாகாண சபை முதலமைச்சர் பதவிகளை வகித்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டவரைவு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில் ,சட்ட வரைவினை விடயதானத்துக்கு பொறுப்பான மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் இந்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் நடத்துவது அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில் குறித்த திருத்தச் சட்டமூலத்தை வெகுவிரைவாக நிறைவேற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தியதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில், மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். மாகாணசபைத் தேர்தல் முறைமையில் சட்ட சிக்கலால் தேர்தலை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு எதிர்வரும் காலப்பகுதியில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகள் ; மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட கலந்துரையாடல் | Virakesari.lk
  8. யாழ்ப்பாணத்தில் திருட்டு தொழிலா? ஒழித்தே தீருவோம் - அமைச்சர் சந்திரசேகரன் சூளுரை! Published By: Digital Desk 7 06 Jan, 2025 | 10:01 AM சுண்ணக்கல் ஏற்றி வந்த பார ஊர்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் செயல்பட்டது பரவாயில்லை அல்லது நல்லது. கல் அகழ்வு விடயத்தில் அதிகாரிகளின் அசமந்த போக்கு காணப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (05) யாழ்ப்பாணம் சரசாலை பகுதியில் கல் அகழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு லொறியில் சுண்ணக்கல் ஏற்றி சென்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வழிமறித்து அந்த லொறியை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த விடயமானது கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் நீங்கள் செய்தது தவறு, குற்றச்செயல்கள் இடம்பெறும்போது அவற்றினை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, அவர்கள் மூலமாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் இளங்குமரனுக்கு அறிவுறுத்தினேன். ஆனால் தற்போது பார்க்கும் பொழுது இளங்குமரன் செய்தது பரவாயில்லை அல்லது நல்லது என்று தோன்றுகிறது. இளங்குமரனின் இந்த வேலையால் அனைவரும் கலக்கமடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. வெட்ட வெட்ட பூதம் கிளம்பியது போல இன்று பல பிரச்சினைகள் வெளிவருகின்றன. சரசாலை பகுதியில் சட்டரீதியான வேலைகள், சட்ட ரீதியற்ற வேலைகள் இடம்பெறுகின்றன. தனியார் காணிகளில் அகழ்வுகள் இடம்பெறுகின்றன, அதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு அருகாமையில் அரச காணிகள் உள்ளன அதில் அனுமதி பெறப்படாமல் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் வேளையில் சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகின்றது. இந்த விடயத்தில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் இந்த தொழிலை புரிகின்ற வியாபாரிகளோ, தொழில்புரிகின்ற ஊழியர்களோ அல்ல. மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலர், கிராம செயலர், புவிசரிதவியல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். அரசு அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். அத்துடன் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் விளைகிறேன். சரசாலையில் உள்ள சுண்ணக்கல்லுக்கும் இளங்குமரன் எம்.பி மறித்த லொறியில் இருந்த சுண்ணக்கல்லுக்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது. அப்படியாயின் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் இந்த திருட்டுத் தொழில் இடம்பெறுகின்றதா என்று கேள்வி எழுகின்றது. ஒரு சிலர் வந்து, இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பதால் தொழில் இல்லாமல் போகின்றது, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள். ஆனால் இவ்வாறான அகழ்வுகள் மூலமாக ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கு பல பரம்பரைகள் பலியாகும் என்ற விடயத்தை நாங்கள் மறந்து விடக்கூடாது. ஒரு சில வியாபாரிகளின் பணப் பசியை போக்கும் தேவைக்காக இந்த செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் எமது அரசாங்கத்தில் இது தடுத்து நிறுத்தப்படும் என மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் திருட்டு தொழிலா? ஒழித்தே தீருவோம் - அமைச்சர் சந்திரசேகரன் சூளுரை! | Virakesari.lk
  9. ஈழத்தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு ஆக்கபூர்வமான அல்லது மனச்சுத்தியுடனான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என பேராசிரியர் ரகுராம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுப்பேருரையை ஆற்றிய பேராசிரியர் ரகுராம் இதனை தெரிவித்துள்ளார். இன்றைக்கு எங்களின் மிக முக்கியமான பிரச்சினைகளாகயிருக்கின்ற வலிந்து காணாமலாக்கபட்டோர்,தொடர்பான நிலை, படைகளிடம் கையளிக்கப்பட்டோர் தொடர்பான நிலை,பற்றிய வெளிப்படையான பிரகடனம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினாலே வெளிப்படுத்தப்படவேண்டும். இன்றைக்கு மீதமாகவுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்.பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள பேராசிரியர் ரகுராம் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது. விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்தபோது கொழும்பிலிருந்து குமார் பொன்னம்பலம் ஆற்றிய பணிகள் மாத்திரமல்ல,போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற ஆரம்ப காலகட்டங்களிலும், அந்த போராட்டத்தினுடைய நேர்மையை தாற்பரியத்தை உணர்ந்தவராக அவர் ஆற்றிய பணிகளும் எடுத்த முடிவுகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக கொழும்பிலே விடுதலைப்போராட்டத்தை மிக நியாயத்துடன் உச்சகுரலிலே எடுத்துச்சொல்லி,அந்த நியாயத்தை உலகெங்கும் பரப்புவதற்கும் விடுதலைப்போராட்டத்திற்கு தன்னால் இயன்ற தார்மீக அந்தஸ்த்தை பெற்றுதருவதிலும் அவர் முனைப்புடன் செயற்பட்;டுள்ளார். குறிப்பிட்ட காலப்பகுதியில் நாங்கள் வன்னிப்பகுதியில் ஊடகத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது,அவருடைய பேச்சுக்கள் அவர் அளிக்கின்ற விளக்கங்கள் எல்லாம் எமக்கு கிடைக்கின்ற போது அவரை பற்றிய மிகப்பெரிய பிரமிப்பு எங்களிற்கு ஏற்பட்டது. சாதரணமாக அரசியல்வாதிகள் தமிழ் தலைவர்கள் என சொல்லப்படுபவர்கள் அவ்வாறான சூழலிலே எப்படி செயலாற்றவேண்டும்எப்படி தங்கள் குரல்களை வெளிப்படுத்தவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக குமார்பொன்னம்பலம் விளங்கினார். உண்மையில் இன்று மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவுப்பேருரையை ஆற்றுவதற்கு எனக்கு அழைப்பு கிடைத்தபோது.எனக்குள் என்னுடைய வாழ்க்கையிலே முதல் தடவையாக 1982 ம் ஆண்டு எனது 9 வயதிலே சந்தித்த முதலாவது அரசியல்வாதி அவர்தான் என்ற நினைப்பு எழுந்தது. திருகோணமலையிலே எங்கள் குடும்பம் வாழ்ந்துகொண்டிருந்தபோது 82ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் திருகோணமலைக்கு வந்திருந்தார். அப்போதுதான் அவரை நான் முதலில் பார்த்தேன். எனது வாழ்க்கையில் நான் கண்ட முதலாவது அரசியல்வாதி அவர்தான்.அப்படி அறிமுகத்தை தந்தவரின் 25வது ஆண்டு நினைவுதினத்தில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்த காலப்பொருத்தத்தை நான் எண்ணிப்பார்க்கின்றேன். இன்று மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுகளை நாங்கள் மீட்டுக்கொண்டிருக்கின்றபோது , அவர் தனது பிரதிநிதித்துவத்தை, ஒரு போராட்டம் மிக வேகமாக தியாகங்களுடன் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது பொதுமகனாகயிருந்து மக்கள் பிரதிநிதியாகயிருந்து தனது கடமைகளை செய்தார் என்பதை இன்றைக்கு இந்த வரலாற்று சந்திப்பிலே இன்றைய பொழுதுகளில் நாங்கள் மீட்டிப்பார்க்கவேண்டியுள்ளது. அந்த வகையிலேதான் எனது நினைவுப்பேருரையை மக்கள் மயப்படுத்தவேண்டிய அரசியல் என்ற தலைப்பிலே நான் நிகழ்த்தவுள்ளேன். இந்த நினைவுப்பேருரையிலே ஐந்து விடயங்களை நான் முக்கியமாக தொட்டுச்செல்லலாம் என நான் நினைக்கின்றேன். ஒன்று தமிழ் மக்களுடைய ஈழத்தமிழ் மக்களுடைய அடிப்படை கோரிக்கைகள்,அவற்றை பற்றிய புரிதல்கள் எண்ணக்கருக்கல் முதலாவதாகவும், இரண்டாவது எங்களிற்கு தற்போது பேசுபொருளாக மாறியிருக்க கூடிய அரசியலமைப்பு நகல்வடிவத்தில் காணப்படும் பிரச்சினைகள் பற்றியும்,இதற்கு மாற்றாக நாங்கள் முன்னெடுக்கப்படுவதாக பரிந்துரைத்து ,பார்க்ககூடிய தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டம் அது பற்றிய கரிசனைகள் குறித்தும். எவ்வாறு இருந்தாலும் இன்றைய பொழுதுகளில் ஈழத் தமிழர்களின் மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு ஆட்சியில் இருக்ககூடிய தேசிய மக்கள் சக்தி,ஜேவிபியின் பார்வை அவர்களுக்கு ஊடாக நாங்கள் பெறக்கூடிய சாத்தியங்கள் குறித்தும்,அதன் ஊடாக மக்கள் மயப்படுத்தவேண்டிய ஈழத்தமிழர் அரசியலை ,தேர்தல்களிற்கு அப்பால், அரசியல் கட்சிகளிற்கு அப்பால் கட்டமைக்கப்படவேண்டிய அரசியலை,பற்றி பேசுவதாக எனது இறுதி பகுதியும் அமைந்திருக்கும். ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளிற்கான அடிப்படை கோட்பாடுகளை நாங்கள் இந்த கட்டத்திலே நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டிய ஒரு கடப்பாட்டில் இருக்கின்றோம். இன்றைக்கு புதிய அரசாங்கம் பதவியேற்று அதிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலிலே மிகக்கணிசமான வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியிலே நீண்டு தொடரும் எங்களுடைய பிரச்சினையை எங்களுடைய போராட்ட வரலாற்றின் தீர்வை நோக்கி நாங்கள் நகரவேண்டுமாகயிருந்தால்,அந்த தீர்விற்காக கொழும்பிலிருந்து வெளிப்படுத்தப்படவேண்டிய சமிக்ஞைகள் குறித்து நாங்கள் மிக கவனமாகயிருக்கவேண்டும். வெறுமனே எங்களது கோரிக்கைகளை அபிலாசைகளை நாங்கள் தன்னியல்பாக முன்வைப்பதை விட ,அவ்வாறான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதற்கான கவனத்தில் எடுக்கப்படுவதற்கான ஏதுநிலைகளை கொழும்பிலிருந்து அறிகுறிகளாக சமிக்ஞைகளாக எதிர்பார்த்திருக்கவேண்டிய இடத்திலிருக்கின்றோம். இன்றைக்கு பதவியேற்றிருக்ககூடிய தேசிய மக்கள் சக்தி மிகவும் வலுவான கட்டத்திலிருந்தாலும் கூட கொழும்பிலிருந்து கிடைக்ககூடிய செய்திகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது வலுவான பிரதிநிதித்துவம் ஊடாக எதனை சாதிக்கப்போகி;ன்றது என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டேயுள்ளது. கட்டமைப்பு மாற்றத்தை முன்வைத்து வந்த அரசாங்கத்தினால் அந்த கட்டமைப்பு மாற்றத்தை முழுமையாக எடுத்துச்செல்ல முடியுமா கட்டமைப்பு மாற்றத்தை மேலிருந்து கீழாக எடுத்துச்செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மிகக்குறைந்த காலப்பகுதி தான்அவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது அவர்கள் தங்கள் போக்கினை அல்லது நிருபிக்கவேண்டிய காலப்பகுதி என்பது ஒப்பீட்டளவில் குறுகியது என நாங்கள் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அரசியல் வாழ்வு என்பதும் கடந்தகாலத்தில் ஸ்ரீலங்காஅரசாங்கத்தை ஆண்டுகொண்டிருந்தவர்கள் விட்டுச்சென்ற பாதைகளில் இருந்து மிகவித்தியாசமானவர்களாக அவர்கள் தங்களை காட்டவேண்டிய தேவையிருப்பதை வைத்து பார்க்கும்போதும்,இந்த நாட்கள் மிக முக்;கியமானவையாக உள்ளன. தனியே தமிழ்மக்கள் மத்தியில் மாத்திரம் அல்லாது தெற்கிலிருந்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது குவிந்திருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான அதீத எதிர்பார்ப்பு தான் அவர்களிற்கான பெரிய அச்சமாகவும் இன்று மாறிவருகின்றது. ஒரு எதிர்பார்ப்பு என்பது அதி உச்ச அளவிலே இருக்கும்போது,அந்த எதிர்பார்ப்பை எப்படி திருப்தி செய்து கொள்வது என்பதிலே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு முனைப்பான முன்நகர்வை எடுத்து வருவதாக இன்னமும் உறுதிப்படுத்தக்சூடிய தடயங்கள் எங்களிற்கு கிடைக்கவில்லை. அவ்வாறான பொழுதிலே ஆகக்குறைந்தது ஈழத்தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு அரசியல் நல்லெண்ணத்தை எடுத்துக்காட்டும் முயற்சிகளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இதுவரைக்கும் அவ்வாறான முயற்சிகள் எங்கள் கண்களிற்கே எங்கள் அறிவுபுலத்திற்கோ தெரிவதாக கிடைக்கப்பெறவில்லை. குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு ஆக்கபூர்வமான அல்லது மனச்சுத்தியுடனான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும். இன்றைக்கு எங்களின் மிக முக்கியமான பிரச்சினைகளாகயிருக்கின்ற வலிந்து காணாமலாக்கபட்டோர்,தொடர்பான நிலை, படைகளிடம் கையளிக்கப்பட்டோர் தொடர்பான நிலை,பற்றிய வெளிப்படையான பிரகடனம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினாலே வெளிப்படுத்தப்படவேண்டும். இன்றைக்கு மீதமாகவுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்.பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும். Local News | Virakesari
  10. அரிசி விவகாரம் தொடர்பில் வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புககள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்துள்ளார். அரிசி விற்பனை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரிசி விலை மற்றும் பதுக்கல் தொடர்பில் கவனம் செலுத்தி 2024 ஆம் ஆண்டு அரிசி விற்பனை தொடர்பான வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா மாவட்டத்தில் அரிசி தொடர்பில் 126 விசேட சுற்றிவளைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், வட மாகாணத்தில் பெரியளவிலான பதுக்கல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தார். அரிசி விவகாரம் ; வட மாகாணத்தில் 774 சுற்றிவளைப்புக்கள் | Virakesari.lk
  11. “பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்தின் உண்மையான செலவு” என்ற தலைப்பில் 2024.12.29 ஆம் திகதி ஞாயிறு சிங்கள மொழிப் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் பாராளுமன்றம் விளக்கம் அளித்துள்ளது. பாராளுமன்ற செலவுத் தலைப்பின் கீழ் சம்பிரதாயமாக நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் தேநீர் விருந்துபசாரத்திற்காக ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வில் 287,340 ரூபாவும், பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசராத்திற்கு 339,628.55 ரூபாவும் செலவு செய்யப்பட்டிருப்பதாக குறித்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பம் 2020.08.20ஆம் திகதியும், பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பம் 2024.11.21ஆம் திகதியும் இடம்பெற்றன. இதற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றம் மற்றும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசாரங்களுக்கான செலவுகள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களினால் வேறுபடுகின்றன என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றோம். ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாராளுமன்றங்களின் முதல்நாள் அமர்வுகளுக்கிடையில் 4 வருட கால இடைவெளி காணப்படுகின்றது. இக்கால இடைவெளியில் சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்ற இறக்கங்கள் விருந்துபசாரத்துக்கான செலவுகள் உள்ளிட்ட ஏனைய செலவினங்கள் அதிகரிப்பதற்குப் பிரதான காரணமாக அமைந்தது. இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவினால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்தமையால் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான செலவுகள் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் அண்ணளவாக 100 வீதத்தினால் அதிகரித்துள்ளன என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றோம். மேலும், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி, இராஜதந்திரிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் என பாராளுமன்றம் விளக்கமளித்துள்ளது. பாராளுமன்ற தேநீர் விருந்தின் செலவு விபரம் குறித்து விளக்கம் | Virakesari.lk
  12. ஆர்.ராம் ரஷ்யப்படையில் வடபகுதி இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டுள்ளமை உட்பட இலங்கையர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் ரஷ்ய வெளிவிவார அமைச்சருடன் அமைச்சர் விஜித ஹேரத் விரைவில் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா போராட்டக்காரர்களுடனான கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த முகவர்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணையொன்றை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு முன்னாலுள்ள சுற்றுவட்டத்தில் ரஷ்யப்படையில் தமது உறவுகள் வலிந்து இணைக்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவித்து நான்கு தாய்மார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சிவில் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் இணைந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும், பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரவுக்கும் இடையிலான சந்திப்பு வெளிவிவகார அமைச்சின் பிரதி அமைச்சர் அலுவலகத்தில் இன்று (6) நண்பகலளவில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ரஷ்ய படையில் இலங்கையர்கள் வலிந்து இணைப்பு குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் விரைவில் பேச்சு - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா | Virakesari.lk
  13. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காற்றுமாசு உயர்வடைந்திருந்த நிலையில், அது தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்ததாவது: நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் வளித்தரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் மாதம் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காற்றுமாசு நிலை (சுட்டெண்) அதிகளவில் ஏற்பட்டிருந்த நிலையில், டிசெம்பர் மாதம் 2ஆம் திகதிமுதல் நிலைமை மெல்லமெல்ல இயல்புக்குத் திரும்புகின்றது. காற்றின் வடிவம் மாறி வீசுகின்றபோது (மாறுபட்ட சுழற்சி நிலை) அயல் நாடுகளில் இருந்து மாசுத் துணிக்கைகள் அதிகளவில் எடுத்து வரப்படுகின்றன. இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையே காற்றுமாசை அதிகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் வருகின்றது. காற்றின் வழித்தரச் சுட்டெண் 50க்கு உட்பட்டதாக இருந்தால் அது ஆரோக்கியமான நிலையாகக் காணப்படும். 50 தொடக்கம் 100 வரை ஓரளவு பாதிப்பு நிலையாகவும், 100 தொடக்கம் 150 வரை கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் நிலையாகவும் காணப்படும். இலங்கையில் இத்தகைய காற்றுமாசே ஏற்பட்டிருந்தது. காற்றுமாசு அதிகரிக்கின்றபோது, அதனை எதிர்கொண்டு மக்களை சுகாதார நிலையில் பேணிப் பாதுகாக்க சர்வதேச நிறுவனங்கள், தேசிய நிறுவனங்களுடன் இணைந்து நாம் பணியாற்றுகின்றோம். மேலும் வளியின் தரத்தைக் கண்காணிக்க வளித்தர உணரிகளை மையமாக வைத்து செயற்பாடுகளை மேற்கொள்கின்றோம் - என்றார். (ப) யாழ்ப்பாணத்தில் காற்று மாசு கட்டுக்குள்!
  14. 03 Jan, 2025 | 03:43 PM (எம்.மனோசித்ரா) நாட்டு மக்களின் 76 ஆண்டு கால சாபம் குறித்து பேசிய தேசிய மக்கள் சக்தியே இன்று மக்களுக்கு பெரும் சாபமாகியிருக்கிறது. 100 நாட்களில் அரிசியின் விலையை நூறு ரூபாவால் அதிகரிக்கச் செய்திருக்கிறது. 24 மணித்தியாலங்களில் செய்து காட்டுவதாகக் கூறிய விடயங்களில் ஒன்றையேனும் 100 நாட்கள் கடந்தும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 76 ஆண்டுகளின் பின்னர் இம்முறை அதிக விலையில் பாற்சோற்றை உண்ணவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த அரசாங்கம் பதவியேற்கும்போது 170 ரூபாவாகக் காணப்பட்ட சிவப்பரிசியின் விலை தற்போது 280 ரூபா வரை உயர்வடைந்துள்ளது. 100 நாட்களில் அரிசியின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அறவிடப்படும் 65 ரூபா வரியைக் குறைத்து, உள்நாட்டு சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்தி குறைந்த விலையில் மக்களுக்கு அரிசியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக அரிசி ஆலை உரிமையாளர்களை பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. விலை சூத்திரம் இருந்தால் அரசாங்கம் என்ற ஒன்று எதற்கு என கேள்வியெழுப்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இவ்வாண்டிலிருந்து எரிபொருளுக்கான வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரண விலையில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்று எதிர்பார்த்த மக்கள் இன்று அமைச்சர்களின் பிரச்சினைகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். மக்கள் இதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவில்லை. விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியை மறுசீரமைத்து பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் மக்களுக்கான சேவையை ஆற்றுவோம் என்றார். மக்களுக்கு பெரும் சாபமாகியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் - ஜே.சி.அலவத்துவல | Virakesari.lk
  15. நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய அத்து மீறிய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை இந்தியாவுக்கு வழங்கி விடுங்கள் என நெடுந்தீவு இளம்பிறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் சமாச பிரதிநிதியுமான சத்தியாம்பிள்ளை தோமாஸ் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (3) யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவு கடற்பரப்பில் பல வருட காலமாக இந்தியா அத்து மீறிய இழுவை படகுகளினால் எமது மீனவர்கள் பாரிய இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். கடந்த 29 ஆம் திகதியும் இந்தியா அத்துமீறிய இழுவைப் படகுகளினால், எமது 30 மீனவர்களின் சுமார் நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. எமது மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு இந்திய ரோலர்களினால் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். முன்னாள் கடற் தொழில் அமைச்சர் இந்தியா ரோலர்களை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் பேச்சு வர்த்தை நடத்தினார் தோல்வியில் முடிவடைந்தது. கச்சதீவில் இருநாட்டு மீனவர்களையும் அழைத்து பேசினார் தோல்வியில் முடிவடைந்தது. இவ்வாறு இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தால் நாம் என்ன செய்வது. ஆகவே நெடுந்தீவில் இருந்து கொண்டு எமது வாழ்வாதார தொழிலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எம்மை வாழ்வதற்கு ஏற்ற ஒரு இடத்துக்கு மாற்றிவிட்டு இந்தியாவுக்கு நெடுந்தீவை ஒப்படையுங்கள் எங்களை வாழ விடுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இந்திய ரோலரைக் கட்டுப்படுத்துங்கள் - இல்லையேல் நெடுந்தீவை இந்தியாக்கு வழங்குங்கள்! | Virakesari.lk
  16. வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற பொழுது வீதியின் குறிப்பிட்ட சில இடங்களில் ஒரு அடி ஆழமான நீளமான குழிகள் தோண்டப்பட்டு அதற்குள் காவோலைகள் போடப்பட்டு அதற்கு மேலாக கற்கள் போடப்பட்டு வீதி புனரமைப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான முறையில் பிரதான வீதி ஒன்று புனரமைக்கப்படுமா என்று மக்கள் விசனத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு அதற்கான விளக்கத்தையும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் கோரிக்கை விடுத்துள்ளார். (ச) காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி - கிஷோர் விசனம்!
  17. தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம். அத்துடன் இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவுக்கு நான் அன்புடன் வரவேற்கின்றேன். ஜனாதிபதியாக இந்தியாவுக்கு முதலாவது விஜயத்தினை மேற்கொள்வதற்கு நீங்கள் மேற்கொண்ட தீர்மானம் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்த விஜயமானது நமது உறவுகளில் புத்துணர்ச்சியுடனான ஆற்றல்களையும் சக்தியினையும் உட்புகுத்தியுள்ளது. நமது பங்குடைமைக்கான எதிர்கால நோக்கினை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அத்துடன் நமது பொருளாதார பங்குடைமையில் முதலீட்டினை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி மற்றும் இணைப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். நேரடியான தொடர்புகள், டிஜிட்டல் மற்றும் ஆற்றல் அடிப்படையிலான இணைப்பு ஆகியவை எங்கள் கூட்டாண்மையின் முக்கிய தூண்களாக இருக்கவேண்டுமென நாம் தீர்மானித்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான மின்சார வலையமைப்பிற்கான இணைப்பு மற்றும் பல்பொருள் பெற்றோலிய உற்பத்திகளை விநியோகிக்கும் குழாய் கட்டமைப்பு ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்காகவும் நாம் பணியாற்றவுள்ளோம். சம்பூர் சூரியக் கல மின்சக்தி திட்டம் துரிதப்படுத்தப்படும். இவற்றுக்கு மேலதிகமாக இலங்கையில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு LNG வழங்கப்படும். இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ETCA உடன்படிக்கையினை நிறைவேற்றும் முயற்சிகள் இரு தரப்பாலும் மேற்கொள்ளப்படும். இன்றுவரை 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான நன்கொடை மற்றும் கடனுதவி இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவினை வழங்கி வருகின்றொம். எமது பங்காளி நாடுகளின் அபிவிருத்தித் தெரிவுகளுக்கு அமைவாகவே எமது திட்டங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. இந்த ஆதரவினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாகோ முதல் அனுராதபுரம் வரையிலான ரயில் பாதை சமிக்கைகள் மற்றும் காங்கேசன்துறை துறைமுக மீளமைப்புக்காக நன்கொடை அடிப்படையிலான ஆதரவினை வழங்க தீர்மானித்துள்ளோம். அத்துடன் எமது கல்வி ரீதியான ஒத்துழைப்பின் அங்கமாக இலங்கையில் உள்ள கிழக்கு பல்கலைக் கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு நாம் மாதாந்த புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளோம். அடுத்துவரும் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இலங்கையைச் சேர்ந்த 1500 சிவில் சேவை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சிகள் வழங்கப்படும். வீடமைப்புத் திட்டம், புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களுடன் இலங்கையின் விவசாயம் பால்பொருள் உற்பத்தி மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளுக்கும் இந்தியா தனது ஆதரவை வழங்கும். இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தில் இந்தியா பங்காளராக இருக்கும். எமது பாதுகாப்பு ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதில் ஜனாதிபதி திசாநாயக்கா அவர்களும் நானும் முழுமையான இணக்கப்பாட்டினைக் கொண்டிருக்கின்றோம். பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையினை துரிதமாக நிறைவேற்றவேண்டுமென நாம் தீர்மானித்துள்ளோம். அத்துடன் நீரியல் சார்ந்த துறைகளிலும் ஒத்துழைப்புடன் செயற்பட நாம் இணங்கியுள்ளோம். பிராந்தியத்தின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு கொழும்பு பாதுகாப்பு குழுமம் மிகவும் முக்கியமான தளம் என நாம் நம்புகின்றோம். இவ்வாறான குடையின் கீழ், கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, இணையப் பாதுகாப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கடத்தல்களுக்கு எதிரான போராட்டங்கள், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் ஆகிய விடயங்களிலும் ஆதரவு வழங்கப்படும். இந்திய - இலங்கை மக்களிடையில் காணப்பட்டும் உறவுகள் நமது நாகரிகங்களில் வேரூன்றியவை ஆகும். பாளி மொழியினை செம்மொழியாக அறிவித்த தருணத்திலும் அதனுடன் இணைந்த கொண்டாட்டங்களிலும் இலங்கையும் எம்முடன் இணைந்திருந்தது. கப்பல் சேவைகளும், சென்னை யாழ்ப்பாண விமான இணைப்புகளும் சுற்றுலாத்துறையினை மாத்திரம் மேம்படுத்தவில்லை, ஆனால் கலாசார உறவுகளையும் வலுவாக்கியுள்ளன. நாகபட்டினம் மற்றும் காங்கேசன் துறைக்கு இடையிலான கப்பல் சேவைகள் வெற்றிகரமாக மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையிலான கப்பல் சேவையினையும் ஆரம்பிக்க நாங்கள் கூட்டாக தீர்மானித்துள்ளோம். பௌத்த மத வளாகம் மற்றும் இலங்கையின் இராமாயணச் சுவடுகள் மூலம் சுற்றுலாத்துறையில் காணப்படும் மகத்தான ஆற்றலை உணர்ந்துகொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். நமது மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக மனிதாபிமான ரீதியிலான அணுகுமுறையினை கடைப்பிடிக்க வேண்டுமென நாம் இருவரும் இணங்கியுள்ளோம். அத்துடன் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு குறித்தும் நாம் கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனைவரையும் உள்ளடக்கிய தனது நோக்கு குறித்து என்னிடம் கூறியுள்ளார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம். அத்துடன் இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்பும் அவரது முயற்சிகளில் இந்தியா உண்மையானதும் நம்பத்தகுந்ததுமான பங்காளியாக இருக்குமென நான் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கா அவர்களிடம் உறுதியளித்துள்ளேன். ஜனாதிபதி திசநாயக்க அவர்களையும் அவரது தூதுக்குழுவினரை மீண்டும் ஒரு முறை அன்புடன் இந்தியாவுக்கு வரவேற்கின்றேன். அத்துடன் புத்தகயாவிற்கு அவர் மேற்கொள்ளும் விஜயம் சிறப்பானதாக அமைய வாழ்த்துவதுடன் அவ்விஜயமானது ஆன்மீக சக்தி மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றால் நிறைந்திருக்குமென நம்புகின்றேன் என மேலும் தெரிவித்தார். தமிழர்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம் - இந்தியப் பிரதமர் மோடி | Virakesari.lk
  18. Exclusive: Telecoms company is loss-making and it is locked in long-running VAT dispute with HMRC Almost 90% of the UK workforce at the telecoms company Lycamobile have been told they could lose their jobs, the Guardian has learned, in an announcement that leaves more than 300 staff fearing for their roles shortly before Christmas. The company, owned by the multimillionaire Tory donor and British-Sri Lankan businessman Allirajah Subaskaran, sells pay-as-you-go sim cards popular with low-paid workers wanting to make cheap phone calls to family overseas, as well as in the UK. On Friday, staff at the Lycamobile’s headquarters in the City of London were told that the company was facing “pretty serious challenges” and was planning to cut up to 316 jobs, leaving as few as 48 in the UK. Lycamobile lost £24m in 2022, the last year for which accounts are available, and its auditors have raised concerns about the opacity of the company’s books. It is also locked in a protracted tussle with HMRC over an alleged £51m unpaid VAT bill related to phone “bundles” sold to customers. Last year, the group’s French business was fined €10m (£8.3m) by a Paris court for money laundering and VAT fraud. Addressing staff on Friday, the company’s general counsel, David Dobbie, blamed competition, cost inflation, “legacy technology issues” and internal inefficiencies due to overlap between divisions based in the UK and India. He did not mention the company’s tax disputes. Dobbie said some of the services due to be cut in the UK, such as customer service, would be moved offshore, including to India. He said it would take some time before staff would learn their fates, with a consultation on jobs to start imminently. He promised that nobody would be dismissed before 31 January. “This proposed expansion of global service centres is going to unlock significant cost savings for us,” he said, asking for the support of staff to “make this no harder than it needs to be”. Cuts are expected to be felt across several businesses in the Lyca group of companies, which include property, media and a restaurant chain, Bella Cosa. In 2019, Labour described Boris Johnson as “unfit” to be prime minister, over reports that he attended a private dinner at Bella Cosa and met Allirajah, as he sought financial backing for his attempt to become Tory leader. The criticism is understood to have related to Johnson’s decision to attend the meeting while Lycamobile was under investigation for money laundering in France. Lycamobile donated more than £2m to the Tories between 2011 and 2016. Allirajah gave Johnson gifts worth £600 while he was the London mayor, including flowers and a £100 hamper for his birthday. Allirajah is reportedly entering politics in Sri Lanka himself, through an attempt to unite Tamil parties in the country. A spokesperson for Lycamobile said: “As with all other UK companies, Lycamobile reviews its business model on an ongoing basis to provide the best possible service to its customers. “No final decisions have been made on any changes to our model at this time, but we have announced a consultation process regarding strategic changes to align with our long-term growth goals and the challenges facing our business and other telcos, including a focus on digital transformation. “In parallel, our HMRC matters are ongoing in accordance with our previous statements and there are not material updates at this time.” Lycamobile tells nearly 90% of UK staff they could lose their jobs | Telecommunications industry | The Guardian
  19. 12 Dec, 2024 | 05:29 PM வீட்டுப்பணிப்பெண் ஒருவரின் உரிமைகளிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டமைக்காக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம்117,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது. குறிப்பிட்ட வீட்டுப்பணியாளருக்கு செலுத்தாத சம்பளங்கள் மற்றும் அதற்கான வட்டியாக 500,000 அமெரிக்க டொலர்களை ஹிமாலி அருணதிலக செலுத்தவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தநிலையிலேயே இந்த அபராதத்தை விதித்துள்ளது. 2015 முதல் 2018 வரை அவுஸ்திரேலியாவிற்கான பிரதிஉயர்ஸ்தானிகராக பணியாற்றியிருந்த அவர் இலங்கையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயரான பிரியங்க தனரட்ணவை டீக்கினில் உள்ள தனது இராஜதந்திரிகளிற்கான இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தியிருந்ததார். அவுஸ்திரேலியாவிற்கு பிரியங்காவை வேலைக்கு அழைத்திருந்த ஹிமாலி அவுஸ்திரேலியாவின் சம்பளங்கள் நிபந்தனைகளிற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார். எனினும் அந்த வீட்டில் தான் தனிமைப்படுத்தப்பட்டு ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த பணிப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். மூன்று வருடங்கள் தான் வேலை பார்த்ததாகவும்,தன்னை சமையலறையில் எண்ணையை ஊற்றி கொழுத்திக்கொள்ள முயன்றதால்தான் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார். நாளாந்தம் அந்த பணிப்பெண் 14 மணித்தியாலங்கள் பணியாற்றினார் என கணக்கிடப்பட்டது,எனினும் அவரது வேலை இரவு 1 மணி வரை நீடித்தது. மேலும் பிரதி உயர்ஸ்தானிகர் பணிப்பெண்ணின் கடவுச்சீட்டையும் தான் எடுத்துவைத்துக்கொண்டார்,அவர் வீட்டிலிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை.எப்போதாவது அயலில் உள்ள பகுதிகளிற்கு சிறிது நேரம் நடந்து செல்ல அனுமதித்தார். அவர் எனக்கு உரிய உணவையும் உடையையும் வழங்கவில்லை ஒழுங்காக நடத்தவில்லை என்பது போல உணர்ந்தேன் என அந்த பணிப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வீட்டுப்பணிப்பெண்ணின் உரிமைகளை மீறிய அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி- 117,000 டொலர் அபராதம் விதித்தது நீதிமன்றம் | Virakesari.lk
  20. தளபாடங்களை தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பெருமளவான பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்று புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், 20 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்களை தருவதாகக் கூறி, வவுனியாவில் உள்ள நபர் ஒருவரை ஏமாற்றி பணத்தினை பெற்றுக்கொண்டு ஒரு மாதகாலமாக தலைமறைவாக இருந்துள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழில் 20 இலட்சத்துக்கு அதிகமான பண மோசடி - ஒருவர் கைது! | Virakesari.lk
  21. (செ.சுபதர்ஷனி) நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 10 ஆயிரத்துக்கும் அண்ணளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் குமுது வீரகோன்ன் தெரிவித்தார். எலிக்காய்ச்சல் பரவல் குறித்து புதன்கிழமை (11) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த வருடம் மாத்திரம் நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சலால் பாதிப்புற்ற 9 ஆயிரம் பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் 200 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 10 தொடக்கம் 12 மாவட்டங்கள் அதி உயர் அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 10 ஆயிரத்துக்கும் அண்ணளவான நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் பாரிய அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது. மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்படும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. லெப்டோஸ்பைரா எனப்படும் ஒருவகை பற்றீரியா தொற்றால் இக்காய்ச்சல் ஏற்படுகிறது. பெருமளவில், நோய்த் தொற்றுக்கு ஆளான எலிகளின் சிறுநீர் மூலம் மனிதர்களுக்கு பரவுவதால் எலிக்காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. எனினும் நாய், மாடு, பன்றி, ஆடு போன்ற விலங்குகளின் மூலம் இது பரவலாம். பற்றீரியா பரவியுள்ள நீர்நிலைகள், சதுப்பு நிலங்களில் நடமாடுதல், விளையாடுதல், பயிர்ச்செய்கை மற்றும் அகழ்வு பணிகளில் ஈடுபடுவதன் மூலம் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் பெரும்போக பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அவதானத்துடன் செயற்படுவது நல்லது. மேலும் சுற்றுலாவுக்காக செல்வோர் நீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் பழக்கமில்லாத நீர்நிலைகளில் நீராடுதல், விளையாட்டு சாகசங்களில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளலாம். நீர், மண்ணில் கலந்துள்ள பற்றீரியா உடலில் உள்ள சிறு புண்கள், காயங்கள், கீறல்கள் மற்றும் அவ்வாறான நீரை அருந்துவதன் மூலமும் உடலை வந்தடைகின்றது. நோய் அறிகுறிகள் வெளிப்பட சுமார் 7 தொடக்கம் 14 நாட்களாகக் கூடும். ஆகையால் அதானம் மிக்க பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் விவசாயம், இரத்தினக்கல் அகழ்வு பணியை மேற்கொள்பவர்கள் காய்ச்சல்கள் ஏதும் ஏற்படின் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது நல்லது. நோய்த் தொற்றுக்கு ஆளானவரிடம் கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கண் சிவத்தல், வாந்தியும் குமட்டலும் போன்ற அறிகுறிகள் தென்படலாம். நோய் நிலைமையை ஆரம்பத்தில் இனங்கண்டு சிகிச்சை பெறுவது நல்லது. இல்லையேல் கடுமையான விளைவுகளும் உயிரிழப்பும் ஏற்படலாம். அத்துடன் நோய் தொற்று காரணமாக சிறுநீரகம், இதயம், மூளை, நுரையீரல், மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழப்பதற்கும் வாய்ப்புள்ளது. விவசாயிகளின் நலன் கருதி சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மூலம் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்படுகிறது. அவற்றை பொது சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய பெற்றுக் கொள்ளலாம். மேலும் யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலால் ஐவர் உயிரிழந்துள்ளனர். சுவாசக் குழாயில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எவ்வாறெனினும் எலிக்காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பில் தற்போது பரிசோதனைகள் இடம்பெற்று வருகிறது. பரிசோதனை அறிக்கை கிடைக்க பெற்ற உடன் உறுதியான காரணம் வெளியிடப்படும் என்றார். எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிப்பு | Virakesari.lk
  22. நவம்பர் 21-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் சீமான். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், `ரஜினிகாந்த்தை சந்தித்தாலே சங்கியாகிவிடுவார்களா.. சங்கி என்றால் நண்பன்.. சக தோழன் என்றே பொருள்' என அவர் சொன்ன பதில் பெரும் சர்ச்சையானது. `ஆர்.எஸ்.எஸ் வலையில் சீமான் விழுந்துவிட்டார்' என தி.மு.க தரப்பு கடுமையாகச் சாடியது. இது தொடர்பான நா.த.க-வின் அதிகாரப்பூர்வ மாத இதழான `புதியதொரு தேசம் செய்வோம்' வாயிலாக கேள்வி பதில் வடிவில் கட்சித் தொண்டர்களுக்கு விளக்கமளித்திருக்கிறார், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சீமான், ரஜினி அதில், ``ஐயா ரஜினிகாந்தை நான் சந்தித்ததை வைத்து, என்னை ‘சங்கி’ என முத்திரைக் குத்தினார்கள் திராவிடக் கருத்தாக்கிகள். இதே ஐயா ரஜினிகாந்தை வைத்து, ‘கலைஞர் எனும் தாய்’ எனும் நூலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். நாணய வெளியீட்டு விழாவுக்கும், இன்னப் பிற நிகழ்வுகளுக்கும்கூட அவரை அழைத்தார். அப்போதெல்லாம் ஐயா ஸ்டாலின் சங்கியாகவில்லையா? வெங்கையா நாயுடு ஐயா கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்கிறார்; ராஜ்நாத் சிங் ஐயா கருணாநிதியின் நாணயத்தை வெளியிடுகிறார். கூடவே நிற்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வுக்கெல்லாம் அரசியல் சாயம் பூசாது, அதனை அரசியல் நாகரிகமெனக் கதையளந்தவர்கள் எனக்கும், ஐயா ரஜினிகாந்துக்கும் இடையேயான தனிப்பட்ட சந்திப்புக்கு உள்நோக்கம் கற்பித்து காவிச்சாயம் பூசுவதேன்?" என வினவியிருப்பதோடு சங்கி என்றால் நண்பன் எனச் சொன்னதற்கும் பதில் சொல்லியிருக்கிறார். ரஜினி - ஸ்டாலின் `` ‘சங்கி’ என்பதற்கு உண்மையிலேயே நண்பன் எனும் பொருளிருக்கிறது. இராமாயணத்தை இந்தியில் மொழிபெயர்த்த துளசிதாசர், ராமனுடைய நண்பன் அனுமன் எனக் குறிப்பிடுவதற்கு, ‘சங்கி’ எனும் சொல்லாடலைப் பயன்படுத்துகிறார். ‘சங்கி’ என்றால், ‘பௌத்த சங்கத்தைச் சேர்ந்தவர்’ எனும் பொருளும் பாலி மொழியில் இருக்கிறது. தற்காலச்சூழலில், ‘சங்கி’ என்பதை சங் பரிவார் அமைப்புகளையும், அவர்களோடு உறவு வைத்திருப்பவர்களையும் குறிக்கிற அரசியல் சொல்லாடலாகப் பயன்படுத்துகிறார்கள்” என்றிருக்கிறார். தொடர்ந்து, ``ஐயா ரஜினிகாந்த் உடனான சந்திப்பை வைத்து என்னை, ‘சங்கி’ என்றதற்கு, ‘நண்பன்’ எனும் பொருள் இருப்பதைக் குறிப்பிட்டேன். உள்நோக்கம் கொண்ட அந்த அரசியல் அவதூறைக்கூட ‘நண்பன்’ எனும் வேறு பொருள்பட நான் எடுத்துக் கொள்வதாய் கூறினேன். அதேசமயம், சங் பரிவார் அமைப்புகளைக் குறிக்கிற வகையில், ‘சங்கி’ எனும் சொல்லாடலைப் பயன்படுத்தும்போது அது திமுக-வுக்குத்தான் பொருத்தமானதாக இருக்குமென்பதைக் கூற, “உண்மையான் சங்கி திமுகதான்” என அச்செய்தியாளர் சந்திப்பிலேயே தெளிவாகக் குறிப்பிட்டேன். ஆனால், என் பேச்சை வழக்கம்போல வெட்டி ஒட்டி, திரித்துவிட்டார்கள். இப்போதும் சொல்கிறேன் உண்மையான் சங்கிகள் திமுக-வினர்தான். ``90 விழுக்காடு இந்துக்களின் கட்சி திமுக” எனச் சொல்கிற ஐயா ஸ்டாலின் சனாதன எதிர்ப்பாளர்; “தமிழர்கள் இந்துக்களே இல்லை” எனச் சொல்கிற நான் சங்கியா? திராவிட மாடலின் முன்னோடி ராமர்தான் எனச் சொன்ன அமைச்சர் ரகுபதி சமூக நீதிக்காவலர்; இராவணப் பாட்டனைப் போற்றிக் கொண்டாடும் நான் சங்கியா? பசு மடம் கட்டும் சேகர்பாபு சமத்துவவாதி; மாட்டிறைச்சி உணவுக்காகக் குரலெழுப்பும் நான் சங்கியா? என்ன தர்க்க நியாயமிது?” ``இந்த 14 ஆண்டுக்கால நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயணத்தில் பாஜக-வின் கொள்கைகளையோ, திட்டங்களையோ, சட்டங்களையோ நான் ஆதரித்த ஒரே ஒரு இடத்தைக் காட்ட முடியுமா? இந்துத்துவாவுக்கு எதிர்திசையில் இருக்கும் என் மீது ‘சங்கி’ என முத்திரைக் குத்தும் இவர்கள், “இந்துத்துவா என் ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது” என முழங்கிய உத்தவ் தாக்கரேவை எப்படிப் பார்க்கிறார்கள்? அவரை எதற்காக, ‘இந்தியா’ கூட்டணிக்குள் இணைத்து வைத்திருக்கிறார்கள்? கேரளா முதல் காஷ்மீர் வரை இந்தியா முழுக்க எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் குறிவைத்து அமலாக்கத்துறையாலும், வருமான வரித்துறையாலும் பழிவாங்கப்படுகிறபோது, ஐயா ஸ்டாலினையோ, அவரது குடும்பத்தினரையோ பாஜக விட்டு வைத்திருப்பதேன்? திமுக மீது என்ன பரிவு பாஜக-வுக்கு? என்னை, ‘சங்கி’ என அவதூறுப் பரப்பிய கருத்தாக்கிகளே! ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மதுரை வந்தபோது அவர் செல்லும் சாலையைப் பராமரிக்கச் சொன்னது தி.மு.க ஆட்சிதானே? நான் பா.ஜ.க-வின் ஆளென்றால், என் பிள்ளைகளின் வீட்டுக்கு தேசியப் புலனாய்வு முகமை எதற்கு வந்து சோதனை செய்தது? நான் அவர்களுக்கு அனுசரணையாக இருந்தால், எதற்கு எங்களது சின்னத்தைப் பறிக்கிறார்கள்? இதற்கு என்ன சொல்லப் போகிறது திராவிடக்கூட்டம்? நேர்மையாக என்னையும், எனது அரசியலையும் எதிர்கொள்ள வக்கற்ற கோழைகள் அவதூறுகளின் மூலம் வீழ்த்தத் துடிக்கிறார்கள். அதனால்தான், ஒற்றைச் சந்திப்புக்கே அலறித் துடித்து, இத்தகைய அவதூறைப் பரப்புகிறார்கள். சத்தியமே உருவாய் நின்ற சத்தியத்தலைவன் பிரபாகரனின் மகன் நான். இந்த அவதூறுகளை எல்லாம் நாங்கள் கொண்டிருக்கிற அரசியல் அறமே அறுத்தெரியும்” எனக் காட்டமாக பதிலளித்திருக்கிறார். `உண்மையான சங்கி திமுக தான்; என்மீது ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள்..!' - கொதிக்கும் சீமான் | seeman about the sanghi criticisms against him - Vikatan
  23. யாழ்ப்பாணத்தில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காரணவாய் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறந்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் உள்ள பனங்காணி ஒன்றில் இருந்தே சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில் வெற்றுக் காணியிலிருந்து எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு | Virakesari.lk
  24. முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படலாமா என்பது தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் தெரிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கு இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம். எமது பாராளுமன்றக்குழுவில் ஒரு ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த ஒற்றுமை இல்லாமையினால் எமது தேசத்தில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளது. அது தொடர்ந்தால் இங்கு இனப்பிரச்சனை என்ற ஒன்று இல்லை என்ற நிலமை ஏற்ப்பட்டுவிடும். எனவே இனம்சார்ந்த விடுதலையினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற வகையிலே நாம் ஒன்றிணையவேண்டும். ஒன்றிணைந்தால் மக்கள் எங்களுடன் நிற்பார்கள். எனவே பாராளுமன்றுக்குள்ளும் தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாக சேர்ந்து பொதுவிடயங்களில் ஒன்றாக குரல்கொடுக்கும் நிலையினை ஏற்ப்படுத்தவேண்டும். அத்துடன் வடகிழக்கில் முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படலாமாஎன்பது தொடர்பிலும் பேசிக்கொண்டிருக்கிறோம். அத்துடன் பெருவாரியான வாக்குகளை பெற்ற இந்த அரசாங்கத்தின்ஜனாதிபதி பேசியபோது ஒருமணிகூட வெளியில்இருந்து இறக்கமாட்டோம் என்று சொல்லியிருந்தார். ஆனால் இன்று நிலைமைமாறி இறக்குமதிசெய்யும் சூழல் வந்துள்ளது. சர்வதேச நாணயநிதிய விடயத்தில் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் இவர்கள் கையொயப்பம் இட்டுள்ளனர். எனவே இந்தநிலைமையில் அரசாங்கம் சென்றால் மீண்டும் வரிசையுகம் வரும் சந்தர்ப்பம் ஏற்ப்படும். எனவே அரசாங்கம் நிதானமாக செயற்ப்படவேண்டும். இன்று சாதாரணமக்கள் கூட தேங்காய் வாங்கமுடியாத நிலமை ஏற்ப்பட்டுள்ளது. எனவே ஏழைமக்களின் வயிற்றில் அடிக்கும் சூழலை மாற்றவேண்டும் என்றார். மீளவும் கூட்டமைப்பாக செயற்படலாமா ? ஆராய்வதாக செல்வம் எம்பி தெரிவிப்பு! | Virakesari.lk
  25. "மீனவ சமூத்தின் உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் கண்ணியமான வாழ்விற்கு எம்மை அர்ப்பணிப்போம், உணவு இறையாண்மையை உறுதிசெய்வோம்" என்னும் தொனிப்பொருளில் முல்லைத்தீவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி ஒன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பித்த இந்த நடைபவனியானது, முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பிரதேசசபை கலாச்சார மண்டபம் வரை இடம்பெற்றது. குறித்த நடைபவனியில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்திய இழுவைமடி ஆக்கிரமிப்பை நிறுத்துதல், மீனவசட்டத்தை உடன் அமுல்படுத்துதல், சட்டவீரோத மீன்பிடிச் செயற்பாடுகளை முற்றாக தடைசெய்தல், கனிய மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தல், சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பண்ணை வளர்ப்புத் திட்டங்களை நிறுத்துதல், காற்றாலை மின்சாரத் திட்டத்தைத் தடை செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பியவாறும், பாதாதைகளைத் தாங்கியவாறு நடைபவனியில் ஈடுபட்டனர். வன்னிபாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 16 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதகள், மீனவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் உலக மீனவதின நிகழ்வுகள் இடம்பெற்றன. முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் நடைபவனி ! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.