Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. இலங்கைக்கு Beechcraft King Air 350 என்ற Royal Australian Air Force கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலவசமாக வழங்கியுள்ளது. இந்த விமானம் விமானப்படையின் வான்வழி கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்களை விரிவுபடுத்துவதுடன், அமைதியான மற்றும் பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைப் பேணுவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பங்களிக்கும். அவுஸ்திரேலியா இந்த விமானத்தை இலங்கைக்கு வழங்கியமை, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை வலியுறுத்துவதோடு, மனித கடத்தலை தடுப்பதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியது அவுஸ்திரேலியா | Virakesari.lk
  2. 25 Oct, 2024 | 10:35 AM மாற்றத்தை விரும்பிய மக்களின் ஆணையால் இலங்கைத் தீவில் ஆட்சி மாறியிருக்கிறதே தவிர, அதிகாரபீடங்களின் செயல்நோக்கும், மனோநிலையும் சிங்கள வல்லாதிக்கத்தின் வெளிப்பாடாகவே இன்றும் தொடர்கிறது என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சிறீதரன், நேற்று வியாழக்கிழமை (24) கிளிநொச்சி - கண்ணகிநகர் கிராமத்தில் தமது ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, காலம்காலமாக இந்த நாட்டின் அதிகாரபீடங்களும், கொள்கைவகுப்பாளர்களும் எத்தகையதோர் ஆதிக்க மனோநிலையுள் சிக்குண்டிருந்தார்களோ, அதே மனோநிலையில்தான் அநுர அரசின் நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. இன்றையதினம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ். மாநகரசபையின் மேனாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியதாகும். அதேபோல், இலங்கையின் அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்மொழி இதுவரைகாலமும் அரச ஆவணங்களில் இரண்டாம் மொழியாக பிரயோகிக்கப்பட்டுவந்த நிலையில், புதிய கடவுச்சீட்டுகளில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளமையும், சனாதிபதி செயலகத்தினால் அனுப்பப்படும் கடிதங்கள் தனிச்சிங்கள மொழியில் அமைந்திருப்பதும் இந்த நாட்டின் மொழிக்கொள்கையின் தளம்பலையே காட்டுகிறது. இத்தகைய சம்பவங்களும் , திட்டமிட்ட நகர்வுகளும் "இந்தநாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளதே தவிர தமிழினத்தின் தலைவிதி ஒருபோதும் மாறப்போவதில்லை" என்ற அபாயச் செய்தியின் அறிவிப்புகளாகவே அமைந்துள்ளன. இத்தகைய யதார்த்தப் புறநிலைகளை புரிந்துகொண்டு, இந்தத் தேர்தல் களத்தில் பெருந்தேசியவாத கட்சிகளை முழுமையாக நிராகரித்து, இனத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் காலக்கடமை எமது மக்களின் கைகளிலேயே உள்ளது என்றார். சிங்கள பௌத்த மனோநிலையையே அநுர அரசாங்கமும் பின்பற்றுகின்றது ; சிறீதரன் தெரிவிப்பு! | Virakesari.lk
  3. கட்சி அரசியலில் ஈடுபடும் ஆலிம்கள் தேர்தல் பிரசாரங்களின்போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெயரை பயன்படுத்துவது ஜம்இய்யாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது; பிழையானது என்பதுடன் உலமா சபையின் பெயரை எந்தக் கட்டத்திலும் எந்த நிலையிலும் தங்களது பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. இன்றையதினம் (25) உலமா சபை வெளியிட்ட ஊடகச் செய்தியினூடாகவே இவ்வாறு அறிவித்துள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்பது ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட அரசியல் சார்பற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும் என்பதுடன் இதில் எமது நாட்டின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆலிம்கள் அங்கத்தவர்களாக உள்ளனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் அங்கத்துவர்கள் எவராவது, கட்சி அரசியலில் ஈடுபடுவார்களாயின் அது அவர்களது ஜனநாயக உரிமை மற்றும் தனிப்பட்ட விருப்பின் அடிப்படையில் அமைந்ததே தவிர, அது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதித்துவமாக கணிக்கப்படமாட்டாது என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருகிறோம். அவ்வாறு கட்சி அரசியலில் ஈடுபடும் ஆலிம்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பெயரை பயன்படுத்துவது ஜம்இய்யாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதனால் அவ்வாறு பயன்படுத்தி பிரச்சாரங்களைச் செய்வது பிழையான செயலும் கண்டிக்கத்தக்க செயலுமாகும் எனத் தெரிவிப்பதுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெயரை எந்தக் கட்டத்திலும் எந்த நிலையிலும் தங்களது பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என கண்டிப்புடன் அறிவிக்கின்றோம். அத்துடன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் ஏனையோரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெயரை பயன்படுத்தி பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாம் என்று வினயமாக வேண்டிக்கொள்கின்றோம். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகம் மற்றும் மாவட்ட பிரதேசக் கிளைகள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அனுசரனை வழங்குவதில்லை என்பதை மிக உறுதியுடன் அறிவித்துக்கொள்கின்றோம் என்றுள்ளது. சபையின் பெயரை பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவிப்பு | Virakesari.lk
  4. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எமக்கெதிரான அனைத்துவிதமான பிரச்சாரங்களையும் மேற்கொண்டவர்கள் தற்போது, ஏதாவது பிரச்சினையையோ அல்லது புனைகதையையோ உருவாக்கி மீண்டும் அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொள்ள முயற்சிசெய்து வருகிறார்கள். எங்கள் அரசாங்கம் 3 அல்லது 6 மாதங்களில் வீழ்ந்துவிடுமென கூறவும் தொடங்கி இருக்கிறார்கள். நாங்கள் இந்த நாட்டை சீராக்கியே தீருவோமென்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். அதனை சாதிக்காமல் தேசிய மக்கள் சக்தி நின்றுவிடப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். புத்தளத்தில் வியாழக்கிழமை (24 ) இடம்பெற்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பல தொகுதிகளில் எமக்கு வெற்றியைப் பெற்றுத்தந்ததைப்போன்றே பொதுத்தேர்தலிலும் இந்த மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவதை இந்த பெருந்திரளான மக்கள் கூட்டம் உறுதிசெய்கின்றது. புத்தளம் மாவட்டத்தில் இருந்து இதுவரை தெரிவுசெய்து அனுப்பிய உறுப்பினர்கள் மக்களுக்கு துரோகமிழைக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள். பலவந்தமாக காணிகளை கைப்பற்றுதல், போதைத்தூள் வியாபாரம் செய்தல், கள்வர்கள் தங்கக் கடத்தலில் ஈடுபடுதல், கப்பம் பெறுதல், பலவந்தமாக இறால் பண்ணைகளை கைப்பற்றுதல் போன்ற மக்களை அல்லற்படுத்துகின்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக மக்களுடன் தோள்கொடுத்து நாட்டைக் கட்டியெழுப்பகின்ற புதிய கலாச்சாரத்தைக்கொண்ட உறுப்பினர்களை புத்தளம் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவையுங்கள். அதற்காக இருப்பது தேசிய மக்கள் சக்தியின் அணி மாத்திரமே. பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது பொதுவில் நிலவுகின்ற எதிர்ப்பினை முடிவுறுத்தி பாராளுமன்றத்தை துப்புரவாக்குகின்ற பாரிய சிரமதானத்திற்காக திசைகாட்டியிலிருந்து அதிகமான எண்ணிக்கைகொண்ட உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும். நாங்கள் அவ்வாறு கூறும்போது திசைகாட்டி வேட்பாளர்களின் முகங்கள்கூட தெரியாதென ஒருசிலர் கூறுகிறார்கள். எனினும் பலவிதமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு முழுநாட்டிலுமே பிரபல்யமடைந்துள்ள குற்றச்செயல் புரிபவர்களுக்குப் பதிலாக இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய திசைகாட்டியின் பலம்பொருந்திய அரசாங்கமொன்றை உருவாக்க செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உலகில் இருக்கின்ற மிகச்சிறிய அமைச்சரவையை முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகளை உணர்கிறீர்களா? அவ்வாறான குறைபாடு கிடையாது. ஒரு பட்டாசுகூட கொளுத்தாமல் வெற்றியைக் கொண்டாடியதன் மூலமாக வெளிப்படுத்திய எடுத்துக்காட்டினை இந்த பொதுத்தேர்தலிலும் தேர்தல் இயக்கத்தில் பாதுகாத்து வருகிறோம். குறிப்பாக புத்தளம் மாவட்டம் என்பது தேர்தல் பீதிநிலையை பரப்பிய மாவட்டமாகும். எனினும் இந்த தேர்தல் காலத்தில் அமைதியான தேர்தலொன்றை நடாத்துதல் தொடர்பில் வரலாறு படைத்துள்ளோம். ஐரோப்பாவில் நிலவுகின்ற முன்னேற்றமடைந்த அரசியல் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புகின்ற தேர்தல் இயக்கமொன்றை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து வருகின்றது. பொதுத்தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியின் பின்னரும் இந்த நிலைமையைப் பாதுகாக்கின்ற அரசியல் கலாச்சாரத்தை உறுதிசெய்கிறோம். அரசியலை வெறுத்திருந்த இளைஞர் தலைமுறையினரை முதன்மையாகக்கொண்ட மக்கள் புதிய உணர்வுடன் நாடு பூராவிலும் அரசியலில் ஒன்றுசேர்ந்து வருகிறார்கள். தேர்தலின் பின்னர் விஞ்ஞானரீதியான அடிப்படையில் இருபத்தைந்து பேருக்கு குறைவான அமைச்சரவையை நியமித்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை அமுலாக்குவோம். "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்பதைக் கட்டியெழுப்புகின்ற வேலைத்திட்டம் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது திட்டங்களை அமுலாக்கி வருகின்ற அதேவேளையில், குறிப்பாக மத்திய கிழக்கில் உருவாகியுள்ள யுத்த முரண்பாட்டின் தாக்கம் உலகம் பூராவிலும் பரவிவருவதோடு இலங்கை மீதும் ஒருசில அபாயநேர்வுமிக்க நிலைமைகள் வந்துள்ளன. அவற்றில் ஏதேனுமொரு சம்பவம் இலங்கையிலும் ஏற்படக்கூடுமென்ற தகவல் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் எமக்கு கிடைத்தது. நாங்கள் சம்பந்தப்பட்ட இடங்களின் பாதுகாப்பினை வேகமாக உறுதிசெய்தோம். உளவுப் பிரிவுத் தகவல்கள் பதிவாகின்றபோது நாங்கள் ஊடக கலந்துரையாடல்களை நடாத்துவதில்லை. அந்த தகவல்களுக்கு நேரொத்தவகையில் பொறுப்புடன் செயலாற்றுவோம். பொறுப்புடையவர்களாக பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வோம். அதைப்போலவே உளவுப்பிரிவுத் தகவல்களின் அடிப்படையில் புலனாய்வுகளை துரிதமாக நடாத்தி ஒருசில சந்தேக நபர்களைக் கைதுசெய்தோம். எனினும் செய்திகளை வெளியிடுவதையோ ஊடக கலந்துரையாடல்களை நடாத்துவதையோ செய்யவில்லை. ஒரு அரசாங்கம் என்றவகையில் எமது பொறுப்பு அவ்வாறான சம்பவங்களை தடுப்பதாகும். முன்னர் செய்தது அவ்வாறான உளவுத் தகவல்களை பொருட்படுத்தாமல் விடுவது அல்லது ஊடகங்களுக்கு அறிவித்து பதற்றத்தை உருவாக்குவதாகும். மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாருடனும் பாதுகாப்பு பிரிவுகளுடனும் மிகவும் நெருக்கமாக கவனஞ்செலுத்தி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அது சம்பந்தமாகவும் ஒருசிலர் கலவரமடைந்திருக்கிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது பொறுப்புடன் இயங்கிவருகின்ற அரசாங்கமொன்றின் செயற்பொறுப்பாகும். பொருளாதார ரீதியாக, பாதுகாப்புரீதியாக, தொழில்முயற்சிகளை முன்னேற்றுகின்ற பக்கத்தில், பிள்ளைகளின் கல்விப் பக்கத்தில் போன்றே உழைக்கும் மக்களின் பக்கத்தில் அனைவரையும் பேணிப்பாதுகாக்கவேண்டியது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை நாங்கள் ஈடேற்றிக்கொண்டிருக்கிறோம். வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறைக்குமான நிதி ஒதுக்கப்படுகின்றது. அவ்வாறின்றேல் குறைநிரப்பு மதிப்பீடு மூலமாக சம்பந்தப்பட்ட செலவினை ஏற்பதற்கான அங்கீகாரம் பெறப்படல் வேண்டும். அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பணத்தை ஒதுக்கியதாக முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார். அவர் ஒதுக்கியிராவிட்டாலும் எதிர்வரும் வரவுசெலவில் நாங்கள் அதற்கு அவசியமான நிதியை ஒதுக்கீடுசெய்வோம். முன்னாள் ஜனாதிபதி தோல்விகண்ட பின்னர் எம்மை அங்குமிங்கும் கிள்ளிக்கொண்டிருக்காமல் வீட்டில் இருக்கவேண்டுமென நாங்கள் ஞாபகப்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் ஏதாவது பிரச்சினையையோ அல்லது புனைகதையையோ உருவாக்கி மீண்டும் அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொள்ள முயற்சிசெய்து வருகிறார்கள். எங்கள் அரசாங்கம் மூன்றே மாதங்களில், ஆறே மாதங்களில் வீழ்ந்துவிடுமென கூறவும் தொடங்கி இருக்கிறார்கள். நாங்கள் இந்த நாட்டை சீராக்கியே தீருவோமென்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். அதனை சாதிக்காமல் தேசிய மக்கள் சக்தி நின்றுவிடப் போவதில்லை. பொருளாதாரரீதியாக முன்னேற்றமடைந்த ஒரு நாடு, சுத்தத்தினால் முன்னேற்றமடைந்த ஒரு நாடு, மனிதர்களின் நடத்தைகளால் முன்னேற்றமடைந்த ஒரு நாடு, சட்டத்தின் ஆதிக்கத்தினால் முன்னேற்றமடைந்த ஒரு நாடு போன்றே சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களிடையே தேசிய ஒற்றுமை பாதுகாக்கப்படுகின்ற ஒரு நாட்டை நாங்கள் உருவாக்குவோம். அதற்கு மேலதிகமாக தேசிய பாதகாப்பினை உறுதிசெய்து, சுற்றாடலை நேசித்து, பாசத்துடன் பாதுகாக்கின்ற முன்னேற்றமடைந்த நாடாக இலங்கையை மாற்றியமைப்போம். எவருக்காவது இதனைப் பார்த்துப் பொறுத்துக்கொண்டிருக்க முடியாவிட்டால் ஒருபுறம் ஒதுங்கி அழுதுபுலம்பிக் கொண்டிருக்கவே நேரிடும். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எமக்கெதிரான அனைத்துவிதமான பிரச்சாரங்களையும் அவர்கள் மேற்கொண்டார்கள். எமக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் கிடையாதென அவர்கள் ஒரு பீதியைக் கிளப்பினார்கள். ஏற்கெனவே மத்தியவங்கி உத்தியோகத்தர்கள், நிதி அமைச்சின் உத்தியோகத்தர்கள், பொருளாதார ஆலோசகர்கள் அமெரிக்காவிற்குச் சென்று சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறார்கள். அதைப்போலவே உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருக்கமான உறவுகளை இராஜதந்திரரீதியாக உறுதிசெய்து கொண்டிருக்கிறோம். அதனால் இன்று அவர்களால் கூட்டமொன்றுக்கு வந்து கூறுவதற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. அதனால் ஊடக சந்திப்புகளை நடாத்தி மீண்டும் மீண்டும் அவதூறான கதைகளைக் கூற, பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி எல்லாவேளைகளிலும் உண்மையை அடிப்படையாகக்கொண்டு அரசியலில் ஈடுபடுகின்ற இயக்கமென்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். பாராளுமன்றத்திலும் காலில் இழுக்க இடமளிக்காத, பிரச்சினையை ஏற்படுத்த முடியாத பலம்பொருந்திய அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுங்கள். உங்கள் அனைவரதும் பொறுப்பினை ஏற்கின்ற அரசாங்கமொன்றை நாங்கள் நிறுவுவோம். ஏதேனும் சந்தேகத்தை மனதில் வைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் எமக்கு வாக்குகளை அளித்திராதவர்கள் இந்த தேர்தலில் எமக்காக ஒன்றுசேர்ந்து வருகிறார்கள். அரசாங்கமென்பது தனக்கு வாக்குகளை அளித்திராதவர்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த சக்தியாகும். கழிகின்ற ஒவ்வொரு தருணத்திலும் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்து வருகின்றது. அதனால் எமது அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியுமென நினைத்துக்கூட பார்க்கவேண்டாமென அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். அவர்களின் பல தலைமுறையினர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற நிலைமை முற்றுப்பெற்றுள்ளதால் வேதனையின் ஓலக்குரல்கள் பல ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்த எவையுமே எமது அரசாங்கத்திற்கு சிறிதளவிலேனும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாதென்பதை ஞாபகப்படுத்துகிறேன். ஒருசில அரசியல் கட்சிகள் இறுதித்தருணத்திலும் அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பிரச்சாரங்களை மேற்கொண்டு, தேர்தலின்பின்னர் எம்மோடு இணைவதாக கூறிவருகின்றன. அங்குமிங்கும் தாவுதல் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு நிலவுகின்றது. சந்தர்ப்பவாதிகளாக தாவுகின்ற தரகர்கள், கொந்துராத்துக்காரர்கள் இல்லாத ஒரேயோர் அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும். எதிர்காலத்திலும் எமது நிலைப்பாட்டினை அவ்விதமாகவே பாதுகாத்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய மகத்தான வெற்றியைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். வளமான நாட்டைக் கட்டியெழுப்பி அழகான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுப்பதற்காக அனைவரையும் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் தோற்றவர்கள் பிரச்சினைகளை அல்லது புனைகதைகளை உருவாக்கி மீண்டும் அதிகாரத்தைக் கையகப்படுத்த முயற்சி - ஜனாதிபதி | Virakesari.lk
  5. 25 Oct, 2024 | 05:21 PM நவீன தமிழ் தேசிய வாதத்தை முன்னெடுத்து செல்ல உள்ள எங்களுக்கு தமிழ் மக்கள் ஆணையை வழங்க வேண்டும் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், என்னை பொறுத்த வரையில் இந்த மண்ணிலும் அரசியல் மாற்றம் ஏற்பட்ட வேண்டும் அந்த மாற்றம் ஊடாக புதிய அரசியல் கலாச்சாரம் ஏற்பட்டு புதியவர்கள் பாராளுமன்றுக்கு அனுப்பப்பட வேண்டும். நீங்கள் கடந்த காலங்களில் யாருக்கு வாக்களித்தீர்களோ , அவர்கள் பல்வேறு கட்சிகளாக இன்று உங்கள் முன் வந்துள்ளார்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாராளுமன்றில் இருந்தும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள் இன்று பல்வேறு வடிவங்களில் உங்கள் முன் வருகின்றார்கள். தமிழ் மக்கள் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் ஆயின் முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் தேர்ந்தெடுக்காமல் , இளையோரை , தகமையுடையோரை , பல்துறை ஆளுமைகளை கொண்டோரை கொண்டுள்ள ஒரே ஒரு தரப்பான மான் சின்னத்தில் போட்டியிடும் எங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எந்தவொரு கட்சிக்கு வாக்களித்தாலும் அதில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரே மீண்டும் பாராளுமன்றம் செல்வார். அதனூடாக எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. கடந்த காலத்தில் எதனை செய்தோம். எதிர்காலத்தில் எதனை செய்ய போறோம் என்று உங்கள் முன் சொல்ல கூடிய ஒரே ஒரு தரப்பும் நாங்கள் தான். யாழ் . மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவை குறுகிய காலமே எம்மிடம் கையளிக்கப்பட்டது அதில் செய்தவற்றை சொல்லிக்காட்ட கூடிய நிரூபிக்க கூடியவர்கள் நாமே. எதிர் காலத்தில் பாராளுமன்றில் என்ன செய்ய போகிறோம் என்ன மாற்றத்தை கொண்டு வர போகிறோம் என தெளிவாக சொல்ல கூடிய ஒரே ஒரு தரப்பும் நாங்களே. எனவே நிச்சயம் தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் இதுவரை காலமும் உள்ள அரசியல் சித்தாந்தத்தை மாற்றி நவீன புதுப்பிக்கப்பட்ட ஒரு தேசிய வாத அரசியலை நாங்கள் முன்னெடுக்க போறோம் எங்களை பொறுத்த வரை தமிழ் மக்களின் அரசியல் உரிமையும் , நீடித்த பொருளாதார வளர்ச்சியும் இரண்டு கண்கள் போன்றவை இவற்றை நாங்கள் பிரித்து பார்க்க முடியாது. ஒன்றை ஒன்று புறம் தள்ள முடியாது. இரண்டையும் , சமாந்தரமாக மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு தமிழ் மக்களுக்கு இருக்கிறது. இதனை செய்ய கூடிய ஒரே தரப்பு மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி மாத்திரமே. ஆகவே இந்த மண்ணிலே மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் , இந்த மண்ணில் சாதித்த இளைஞர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் நவீன தமிழ் தேசிய வாதத்தை முன் வைக்க உள்ளோம். அதனை முன்னெடுத்து செல்ல உங்கள் ஆணையை உங்களிடம் இருந்து வேண்டிக்கொள்கிறோம் என்றார். நவீன தமிழ் தேசிய வாதத்தை முன்னெடுக்க ஆணையைத் தாருங்கள் - சட்டத்தரணி வி. மணிவண்ணன்! | Virakesari.lk
  6. நாம் தமிழர் கட்சி எனது திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது என்று அறிக்கை விட்டிருக்கிறது. மீறி திரையிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். சில திரையரங்க உரிமையாளர்கள் அறிக்கையைப் பார்த்தபின் தங்கள் திரையரங்குகளிலும் படத்தை திரையிடுமாறு கேட்கிறார்கள். எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அது மட்டுமல்லாது அண்டைய மாநிலங்களிலிலும் திரையரங்க உரிமையாளர்கள் கேட்கத் தொடங்கியுள்ளார்கள். கேரளாவில் இதுவரை பத்து திரையரங்கங்கள் உறுதிசெய்து விட்டன. என் மண்ணைப் பற்றி, என் மக்களின் வாழ்வியலைப் பற்றி என் அரசியல் சார்ந்து படம் செய்வது எனது உரிமை. படத்தைப் பார்த்து ஆதரிப்பதும் நிராகரிப்பதும் பார்வையாளர்கள் உரிமை... அறிக்கையில் சொல்கிறார் , படம் பொய்ப்பிரச்சாரம் செய்கிறதாம் அப்போ இவர் சொல்லிறதெல்லாம்...... விதானையார் இடையில எதுக்கு கெம்பிறார். Puthiyavan Rasiah https://www.facebook.com/share/p/RqbE9yoi5ewCNMiR/
  7. ஈழத் தமிழரின் ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை வெளியிட சீமான் கடும் எதிர்ப்பு சென்னை: “ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றைப் பனைமரம்' திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கக் கூடாது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக 'ஒற்றைப் பனைமரம்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப்பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஈழத்தில் நடைபெற்றது வெறும் வன்முறை வெறியாட்டம் அல்ல; உலகத் தமிழர் உணர்வோடும், உயிரோடும் இரண்டற கலந்துவிட்ட விடுதலைப் போராட்டம். ஈழத்தில் வாழ்ந்த தொப்புள்கொடி உறவுகள் வன்முறையின் மீது தீராக்காதல் கொண்டு மனநோயாளிகள் போல ஒரே நாளில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடவில்லை. இனவெறி சிங்களவர்களின் இனவழிப்பு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, தமிழர் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு இனி தங்கள் தாய் மண்ணில் வாழவே முடியாது என்ற கொடுஞ்சூழல் ஏற்பட்ட பிறகு முதலில் தொடங்கப்பட்டது தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டம்தான். 30 ஆண்டுகாலம் இனவாத இலங்கை அரசின் கொடும் அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு தோல்வியடைந்த பிறகு, வேறுவழியின்றிதான் வே.பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் என்பது இனவெறி இலங்கை அரசால் தமிழர்களின் மேல் திணிப்பட்ட ஒன்றாகும். எதிரி எந்த மொழியில் பேசுகிறானோ அதே மொழியில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர் என்பதே வரலாற்றுப் பேருண்மை. போராடினாலும் சாவோம்; போராடாவிட்டாலும் சாவோம். ஆனால் போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தாலேயே அடிமை வாழ்வினை விட உரிமைச்சாவு மேலானது என்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றே எம்மினச்சொந்தங்கள் ஈழத்தில் போராடி இன்னுயிரை ஈந்தனர். கடந்த 2009ஆம் ஆண்டு இருபது நாடுகள் கூடி தமிழீழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்றளவும் தமிழினம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், மண் விடுதலைக்குப் போராடி வீரக்காவியங்களான மாவீரர்த்தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்புவோ முயலும் எந்தவொரு படைப்பையும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கிறேன். ஆகவே, ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றை பனைமரம்' திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக் கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையிடக்கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். மேலும், தமிழ்நாடு அரசு இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, தேவையற்ற சட்டம் - ஒழுங்கு சீர்கெடாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்” என சீமான் தெரிவித்துள்ளார். ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை வெளியிட சீமான் கடும் எதிர்ப்பு | seeman warn Otrai Panai Maram movie do not screen on tamilnadu - hindutamil.in
  8. இலங்கையில் இருந்து வருடம் தோறும் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மேலும் ஐயப்ப யாத்திரைகளுக்கு இந்திய அரசாங்கம் இலவச வீசாவையும் வழங்கி வருகின்றது. இந்த நிலையில் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் தங்களது பிரயாண காலத்தில் விமான டிக்கெட்டுக்காக அதிக செலவு காரணமாக கஷ்டங்களுக்குள் உள்ளாகின்றனர் என பல ஐயப்ப பக்தர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பாபு சர்மாவிடம் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் முன்னைநாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் காரணமாக காங்கேசன் துறைக்கும் காரைக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை நடைபெற்று வருகின்றது. அதே நேரம் போக்குவரத்துக்கான செலவுகளும் குறைவாக இருக்கின்றது. அதேவேளை இந்த வசதி வாய்ப்பினை கொழும்புவாழ் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமல்ல சகல ஐயப்ப பக்தர்களுக்கும் டிசெம்பர், ஜனவரி மாதங்களில் குறித்த கப்பல் சேவையினை டக்ளஸ் தேவானந்தா மூலம் ஏற்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் பாபு சர்மாவிடம் ஐயப்ப பக்தர்கள் விடுத்துள்ளனர். ஐயப்ப பக்தர்களின் நலன் கருதி கேரளாவில் துணை தூதரகம் அமைப்பதற்கான முயற்சிகளை டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்குமாக இருந்தால் நிச்சயம் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவையை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலமாக செயற்படுத்தி தர முடியும் என ஐயப்ப பக்தர்களுக்கு பாபு சர்மா உறுதிமொழி வழங்கினார். Tamilmirror Online || ”ஐயப்ப பக்தர்களுக்கு கப்பல் வேண்டும்”
  9. இன்றையதினம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பேசத் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என அங்கு கடமையில் இருந்த சிங்கள பொலிஸார் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், ஊடகவியலாளர் ஒருவர் செய்தி ஒன்றினை உறுதிப்படுத்துவதற்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தின் 0212263227 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டுள்ளார். இதன்போது அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர், தமிழ் பேசத் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என தெரிவித்துள்ளார். தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என்றால் ஒரு அவசர முறைப்பாட்டினை பதிவு செய்வதற்கு ஒருவர் வந்தால் என்ன செய்வீர்கள் என வினவியவேளை, அவர்கள் நாளையதினம் தான் முறைப்பாடு பதிவு செய்யலாம் என அசமந்தமாக தெரிவித்துள்ளார். தமிழ் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில், தமிழ் பேசத் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் 24 மணிநேரமும் கடமையில் இருப்பது கட்டாயமாகும். சிங்களம் தெரியாத ஒருவர் ஒரு அவசர விடயம் குறித்து பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்கவோ, அல்லது வேறு விடயங்களுக்கோ பொலிஸ் நிலையத்திற்கு செல்லும்போது, தமிழ் பேசத் தெரியாத பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இருக்கும் போது தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கடமை நேரங்களை அட்டவணையிடும்போது இந்த விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும். (ப) பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பேசத் தெரிந்த பொலிஸார் கடமையில் இல்லை!
  10. ! சாணக்கியன் ஒரு தௌவல். அவருக்கு நல்ல குரல்வளம் உள்ளது. ஆட்களை கவரக்கூடிய கவர்ச்சித் தன்மை உண்டு. அதை சரியாக பாவித்தால் சாணக்கியன் ஒரு தலைவராக வரலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் "இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரான திரு.சிறிநேசன் அவர்கள், திரு.பா.அரியநேந்திரன் அவர்களை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவோ, கட்சியின் நிகழ்வுகளில் ஈடுபடுத்தவோ கூடாது. அவர் தமிழரசுக் கட்சியால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர். அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் எனவே அவரை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்த கூடாது என சாணக்கியன் கூறியுள்ளார். இது குறித்து தங்களது கருத்து என்ன என வினவியவேளை அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிரசார மேடையில் யாரும், யாருக்காகவும் பேசலாம், யாருக்கும் ஆதரவு வழங்கலாம். இன்று சிறிநேசனும் சாதாரண ஆள் தான், சாணக்கியனும் சாதாரண ஆள் தான், நானும் சாதாரண ஆள் தான். எனக்கு ஆதரவாக கடந்த காலங்களில் விடுதலை போராளிகள் மேடையேறி பேசினார்கள், இனியும் பேசுவார்கள். அந்தவகையில் அரியநேந்திரன் யாருக்கு ஆதரவாகவும் பேசலாம். எனவே கட்சிக்கும், ஒழுக்காற்று நடவடிக்கைக்கும், பிரசார நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை. சிறீதரன் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.எனக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதெல்லாம் இனி வருடக்கணக்கில் கிடப்பில் போடப்படும். ஏனென்றால் இதற்கு 10 வருடங்களுக்கு முன்னர் சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை கொண்டுவரப்பட்டது. தமிழரசு கட்சியில் இருக்கின்ற நிர்வாகிகள் தமக்கு ஏற்ற நேரத்தில் ஒரு வருடத்திலும் முடிப்பார்கள், 10 வருடத்திலும் முடிப்பார்கள். எனவே இவற்றை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது. அரியநேந்திரனுக்கு எல்லா ஜனநாயக உரிமைகளும் உள்ளன. எந்த மேடையிலும் ஏறி யாருக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யலாம், இது கட்சி மேடை அல்ல என அவர் தெரிவித்தார். (ப) சாணக்கியன் ஒரு தௌவல் - நகைத்த சரவணபவன்!
  11. 16 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்றிரவு வியாழக்கிழமை(23) இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 16 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளின் பின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (ச) 16 இந்திய மீனவர்கள் கைது!
  12. யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட 07 கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று காலை நடத்தப்பட்ட சோதனையின்போது வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக குறித்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வீட்டில் வசித்த சந்தேக நபர் தலைமறைவான நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் மீட்பு! | Virakesari.lk
  13. (நா.தனுஜா) மும்பையிலிருந்து கொழும்புக்கு வருகைதந்த பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என வெளியான தகவல்களை அடுத்து, விமானம் முன்கூட்டியே தரையிறக்கப்பட்டு, சகல பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை (24) இந்தியாவின் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு கொழும்பில் பி.ப 3.15 மணிக்குத் தரையிறங்கவிருந்த விஸ்தாரா யு.கே 131 விமானத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் தகவல்கள் வெளியானதையடுத்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய நிர்வாகத்தினால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 107 பயணிகள், ஒரு குழந்தை மற்றும் 8 விமானப் பணியாளர்களைக் கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட விமானம் பி.ப 2.55 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டு, சகல பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதன்போது விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் (இலங்கை) தனியார் லிமிடெட் உள்ளடங்கலாக பாதுகாப்புடன் தொடர்புடைய சகல கட்டமைப்புக்களாலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பின்பற்றப்படவேண்டிய நியமங்கள் மற்றும் வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் விமானசேவைகள் எவ்வித தடையுமின்றி மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளன. வெடிகுண்டு அச்சுறுத்தலை அடுத்து முன்கூட்டியே கொழும்பில் தரையிறக்கப்பட்ட விமானம் | Virakesari.lk
  14. கஜேந்திரகுமார் பிணையில் விடுவிப்பு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் வியாழக்கிழமை (24) மாலை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் பொலிஸ் பிணையில் பொலிஸார் விடுவித்துள்ளனர். அதேவேளை பருத்தித்துறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளரான வரதராஜன் பார்த்திபனை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கஜேந்திரகுமார் பிணையில் விடுவிப்பு | Virakesari.lk
  15. கடந்த சில நாட்களாக இராணுவத்தினருக்கு அவதூறு ஏற்படும் வகையிலும் பொதுமக்களுக்கு இராணுவத்தின் மீது உள்ள நம்பிக்கையை இல்லாமல் செய்து வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும், சமூக வலைதளங்களில் இராணுவம் தொடர்பான பொய்யான தகவல் அடங்கிய வீடியோக்களை சிலர் வெளியிட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இராணுவத்தினர் வெளியிட்டுள்ள அறிவித்தலில், “இராணுவத்தில் சிறப்பான எதிர்காலம் இல்லாத உறுப்பினர்கள் சிலரினால் வழங்கப்பட்ட பொய்யான தகவல்களை, முறையாக உறுதிப்படுத்திக்கொள்ளாமல் சிலர் தங்களது தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோக்களில் தெரிவிக்கப்பட்டவாறு, இராணுவ முகாம்களின் படையினரை புதிய இடங்களில் நிலைநிறுத்துவது குறுகிய கால முடிவு அல்ல என்பதுடன் இது இராணுவத்தின் பொருத்தப்பாடு மற்றும் அளவுபரிமான ஒழுங்கமைக்கும் நீண்ட கால செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும், இராணுவத்தின் கட்டளை மற்றும் நிர்வாகம், முப்படைகளின் சேனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதன்படி, பொறுப்பற்ற சிலரின் சுய இலாபங்களுக்காக ஊடக நெறிமுறைகளுக்கு மாறாக பொய்யான தகவல்களைப் பரப்பி, இலங்கை இராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நீண்டகால நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியாக இவ்வாறான செயல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளால் எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு சிலரின் இத்தகைய பொய்யான மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் அறிக்கைகளை இராணுவம் வன்மையாகக் கண்டிக்கிறது. தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு நேரடி பொறுப்பான இராணுவத்தினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படும் பொய்யான தகவல்களுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் நம்பிக்கையை தளர்த்திக் கொள்ள வேண்டாம்” என்றும் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். Tamilmirror Online || இராணுவத்தினருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் போலி வீடியோ
  16. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அங்கஜன் தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டியைச் சேர்ந்தவருமான செந்திவேல் தமிழினியன் என்ற வேட்பாளரே உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ் . போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச) நாடாளுமன்ற இளம் வேட்பாளர் திடீர் இறப்பு!
  17. 22 Oct, 2024 | 09:32 PM கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று திங்கட்கிழமை (22) காலை உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் இதனை அவதானித்துள்ளனர். இந்நிலையில், கடற் கரையில் ஒதுங்கி தத்தளித்த இராட்சத சுறா மீனை அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர். நிந்தவூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய இராட்சத சுறா! | Virakesari.lk
  18. லலித்குகன் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ரொமேஸ் சில்வா ஊடாக இன்று உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்முன்னைய தீர்ப்பினை சவாலுக்குஉட்படுத்தும் விதத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளையே கோட்டாபயவின் சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் பாதுகாப்பு கரிசனை குறித்து தெரிவித்துள்ளார். லலித்குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம் -யாழ்ப்பாண நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் – கோட்டாபய | Virakesari.lk
  19. 23 Oct, 2024 | 11:10 AM யாழ்ப்பாணத்தில் 1,400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர். சந்தேகநபரிடம் இருந்து 1400 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதனை தொடர்ந்து அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில் 1400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது! | Virakesari.lk
  20. மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருணாகல் பகுதியைச் சேர்ந்த இருவரை இன்று புதன்கிழமை (23) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, குருணாகலைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவருக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள வெண்படல நோயை குணப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மென்றசா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சீயோன் தேவாலயத்தில் போதகருடன் தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து நோய் ஏற்பட்டவரும் அவருக்கு உதவியாக இருவருமாக குருணாகலில் இருந்து பிரயாணித்து சம்பவதினமான இன்றையதினம் காலை மட்டக்களப்பை வந்தடைந்து குறித்த சீயோன் தேவாலயத்துக்கு செல்வதற்காக இடம் தெரியாது அந்தபகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிவருவதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் அவசரசேவை நம்பருக்கு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொலிஸார் அந்த இடத்துக்கு சென்று 35, 25 வயதுடைய இருவரையும் கைது செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரது கைவிரல் அடையாளம் பெற்று விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டு. சீயோன் தேவாலயத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவர் கைது | Virakesari.lk
  21. வடக்கு மாகாண ஆளுநருக்கும் அமெரிக்க தூதுவருக்குமிடையில் சந்திப்பு! இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை சந்தித்தார் . வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று புதன்கிழமை (23) வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. அமெரிக்க தூதுவர், காணி விடுவிப்பு தொடர்பாக விபரங்களை ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். தற்போது ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன என ஆளுநர் தெரிவித்தார். ஆளுநர் அவர்கள் வடக்கு மாகாணத்தில் காணி சம்பந்தப்பட்ட பிணக்குகள் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் பாரியளவில் காணப்படுகின்றன எனவும் அவற்றை தீர்ப்பதற்கு தற்போது உள்ள அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து சாதகமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்ததுடன் ஆளுநரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநருக்கும் அமெரிக்க தூதுவருக்குமிடையில் சந்திப்பு! | Virakesari.lk
  22. 23 Oct, 2024 | 04:55 PM இலங்கை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டு 24 வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில் அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரியுள்ள வன்னி மண்ணின் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்று, அவருக்கு நீதி வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என வலியுறுத்தியுள்ளது. அச்சமற்ற, எளிமையான ஊடகவியலாளராக அறியப்பட்ட, துப்பாக்கிச்சூடு நடத்தி மௌனிக்கப்பட்ட நிமலராஜன் மயில்வாகனத்தின் 24ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் கையொப்பமிட்ட ஊடக அறிக்கையில் சர்வதேச நீதித்துறை அதிகாரம் கொண்ட விசாரணையின் ஊடாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “நிமலராஜனுக்கான நீதி என்பது ஒரு வழக்கைத் தீர்ப்பது மட்டுமல்ல வன்முறை மற்றும் பயம் தடையின்றி நீடிக்க உதவும் கட்டமைப்பை அகற்றுவது பற்றியது. எனவே, இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறவும் மற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான உடனடி நடவடிக்கையாக, சர்வதேச ஊடக கண்காணிப்பாளர்கள், விசாரணையாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் பங்களிப்புடன் நீதித்துறை அதிகாரம் பெற்ற விசாரணையை நாங்கள் கோருகிறோம்” தமிழ் ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் படுகொலை செய்யப்பட்டு 24 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவருக்கு இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை என்பதை வலியுறுத்தும் முல்லைத்தீவு ஊடக அமையம், அவரது படுகொலை உள்ளிட்ட பலரது படுகொலைகளுக்கு நீதி வழங்கப்படாமை இலங்கையில் தொடரும் தண்டனையின்மை கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதோடு, இது குற்றவாளிகள் பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் செயல்பட அனுமதிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர் ஆட்சிக்கு வந்த புதிய ஜனாதிபதியின் அரசாங்கம் கொல்லப்பட்ட மற்றும் காணாமற்போன சுமார் 50 ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்காமை குறித்து முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. “ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் புதிய அரசாங்கம், ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் கொலை செய்யப்பட்டமை உட்பட பல உயர்மட்ட வழக்குகளை மீள ஆரம்பிப்பதாக அறிவித்துள்ள போதிலும், வெளிப்படையான முன்னேற்றம் இன்னும் காணப்படவில்லை. ‘தராகி’ சிவராமின் படுகொலைக்கு நீதி கிடைக்காமல் நீண்ட காலம் கடந்துவிட்ட நிலையில், பெரும்பான்மையான தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக குறைந்தது 44 ஊடகவியலாளர்களின் கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தாததன் நியாயத்தை புதிய நிர்வாகம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.” தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் புலனாய்வுத்துறை மற்றும் இராணுவம் உட்பட அரச பாதுகாப்பு இயந்திரங்களால் துன்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாகவும், இந்நிலை அச்சத்தின் சூழலை மேலும் ஆழமாக்கி அவர்களின் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக முல்லைத்தீவு ஊடக அமையம் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. ஊடக அடக்குமுறையைக் கண்டித்து, ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில், ஊடகவியலாளர்களை குறிவைத்து அச்சுறுத்துபவர்களை ஊக்குவிக்கும் இந்த தண்டனையில்லா கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரியுள்ளது. “நாங்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதைக் கண்டிப்பதோடு, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் மற்றும் குறிவைப்பவர்களுக்கு தைரியம் அளிக்கும் இந்த தண்டனையின்மைக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பே முதன்மையாக இருக்க வேண்டும், அவர்களை ஆபத்துக்கு உட்படுத்துவதல்ல.” கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் மற்றும் தண்டனையிலிருந்து விடுபடுவதை தீவிரமாக ஊக்குவிக்கும் ஆழமாக வேரூன்றிய கட்டமைப்புகள் சீர்திருத்தப்படாத வரை, படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒரு ஊடகவியலாளரின் விசாரணை ஊடக சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்காதெனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கின் செய்திகளை சிங்களத்தில் அதிகம் அறிக்கையிட்ட நிமலராஜனை தென்னிலங்கையில் எந்த ஊடக அமைப்பும் நினைவுகூர்ந்ததாக தெரியவில்லை, ஆனால் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஊடக அமையங்கள் இம்முறையும் நிமலராஜன் மயில்வாகனத்தை நினைவு கூர்ந்திருந்தன. அழிவுகரமான யுத்தம் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட வடக்கின் தமிழ் மக்கள் குறித்து யுத்த பூமியிலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் ஊடாக உலகத்தின் கவனத்தை ஈர்க்க நிமலாராஜனால் முடிந்தது. ஹரய, பிபிசி மற்றும் வீரகேசரி ஆகிய பத்திரிகைகளுக்கு தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் செய்திகளை வழங்கி வந்த நிமலராஜன், கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு, வீரகேசரி நாளிதழில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இன்றும் நீதி வழங்கப்படவில்லை. 2003ஆம் ஆண்டு, மயில்வாகனம் நிமலராஜனை அவரது வீட்டில் வைத்து கைக்குண்டுகளால் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்த ஈபிடிபி துணை இராணுவக் கும்பலை வவுனியா நீதிமன்றம் விடுவித்தது. இக்கொலையுடன் நேரடி தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் ஈபிடிபியின் நெப்போலியன் எனப்படும் செபஸ்டியன் பிள்ளை ரமேஷ் பொலிஸாரால் விசாரிக்கப்படாமல் நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் தஞ்சம் கோரி வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இலங்கையில் ஆட்கடத்தல்கள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு நாட்டில் நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லாத தமிழ் மக்கள் சர்வதேச நீதியை கோரி நிற்கின்றனர். கொல்லப்பட்ட நிமலராஜனுக்கு நீதியை நிலைநாட்ட சர்வதேசத்திடம் கோரிக்கை | Virakesari.lk
  23. 23 Oct, 2024 | 05:37 PM மன்னார் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவணி இன்று புதன்கிழமை (23) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைபவணி ஆனது நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நானாட்டான் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இன்று காலை 9.30 மணியளவில் முருங்கன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டு நானாட்டான் சுற்று வட்டத்தின் வழியாக நானாட்டான் பிரதேச செயலகத்தை சென்றடைந்தது. இந்த நிகழ்வில் மன்னார் பிரதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஒஸ்மான் டெனி , நானாட்டான் மடு சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ,நானாட்டான் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், நானாட்டான் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். மன்னார் - நானாட்டானில் இடம்பெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவணி | Virakesari.lk
  24. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் 23 Oct, 2024 | 05:26 PM குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட கார் மீட்கப்பட்டமை தொடர்பில் வாக்கு மூலம் அளிப்பதற்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று புதன்கிழமை (23) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார். இதன்போது கைதுசெய்யப்பட்ட, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படட்டார். இந்நிலையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் | Virakesari.lk
  25. அறுகம்குடாவிலிருந்து வெளியேறும் இஸ்ரேலியர்கள் இலங்கையிலிருந்து வெளியேறவேண்டும் அல்லது கொழும்பு செல்லவேண்டும் - இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை. இலங்கையின் அறுகம் குடா உட்பட தெற்கு மேற்கு கடற்கரை பகுதிகளில் இருந்து தனது பிரஜைகளை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ள இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை அவ்வாறு வெளியேறியவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறவேண்டும் அல்லது தலைநகருக்கு செல்லுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையின் தலைநகரில் பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் அதிகளவு காணப்படுவதாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் ஏனைய பகுதிகளிற்கு செல்வதை இஸ்ரேலியர்கள் பிற்போடவேண்டும்,என அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு பேரவை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் டைம்ஸ் நீங்கள் இஸ்ரேலியர்கள் என்பதை வெளிப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. அறுகம்குடாவிலிருந்து வெளியேறும் இஸ்ரேலியர்கள் இலங்கையிலிருந்து வெளியேறவேண்டும் அல்லது கொழும்பு செல்லவேண்டும் - இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை. | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.