Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 5,236 வாக்குகள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,412 வாக்குகள் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) - 1,383 வாக்குகள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,019 வாக்குகள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 966 வாக்குகள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!
  2. இரத்தினபுரி மாவட்டம் - இரத்தினபுரி தேர்தல் தொகுதி முடிவுகள்! போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 51,654 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 17,050 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 4,402 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 3,988 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB)- 2,089 வாக்குகள் இரத்தினபுரி மாவட்டம் - இரத்தினபுரி தேர்தல் தொகுதி முடிவுகள்!
  3. மாத்தளை மாவட்டம் - மாத்தளை தேர்தல் தொகுதி முடிவுகள்! போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 37,287 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 11,014 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,341 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,773 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB)- 773 வாக்குகள் யார் எவரை கைவிட்டாலும், 'குடி'மகன்கள் தமக்கு உதவியவர்களை கைவிடுவது இல்லை 😀
  4. நல்லூர் : 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 8,831 வாக்குகள் தமிழ் மக்கள் கூட்டணி (TPC) - 3,527 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 3,228 வாக்குகள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,396 வாக்குகள் சுயேட்சைக் குழு 17 (IND17)- 2,279 வாக்குகள்
  5. 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, திகாமடுல்ல மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) - 17,316 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,272 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1,898 வாக்குகள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,599 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,326 வாக்குகள் திகாமடுல்ல மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! NALLUR 31.44% Jathika Jana Balawegaya8,831 31.44% Complete 12.56% Thamizh Makkal Koottani3,527 12.56% Complete 11.49% Ilankai Tamil Arasu Kadchi3,228 11.49% Complete 8.53% All Ceylon Tamil Congress2,396 8.53% Complete 8.11% Independent Group 172,279 8.11% Complete
  6. யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! தேசிய மக்கள் சக்தி (NPP) - 5,681 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 4,808 வாக்குகள் யாழ்ப்பாணம் சுயேட்சைக் குழு 17 - 3,548 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -2,623 யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!
  7. கண்டி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) - 44,819 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 4,698 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 2,770 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 928 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB) - 892 வாக்குகள் கண்டி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!
  8. யாழ்ப்பாணம் 41.46% தேசிய மக்கள் சக்தி9,06 11.81% இலங்கைத் தமிழ் அரசு கட்சி2,582 7.37% அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்1,612 6.22% ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி1,361 6.22% Complete 5.14% ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு1,124 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,066 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,582 வாக்குகள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1,612 வாக்குகள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,361 வாக்குகள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,124 வாக்குகள்
  9. வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,371 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,349 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1,825 வாக்குகள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1,399 வாக்குகள் வன்னி- சுயேட்சைக் குழு (IND07-11) - 639 வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!
  10. காலி மாவட்டம் - காலி தேர்தல் தொகுதி முடிவுகள்! 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 39,707 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,410 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 3,741 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,885 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB)- 715 வாக்குகள் காலி மாவட்டம் - காலி தேர்தல் தொகுதி முடிவுகள்!
  11. மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! நடைபெற்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) - 24,954 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,692 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,823 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB) - 641 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 548 வாக்குகள் மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!
  12. 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 36,196 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7,536 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 3,075 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,047 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB)- 1,123 வாக்குகள் காலி மாவட்டம் - அம்பலாங்கொட தேர்தல் தொகுதி முடிவுகள்!
  13. COLOMBO DISTRICT - Postal 28,475 Jathika Jana Balawegaya 80.21% 2,985 Samagi Jana Balawegaya 8.41% 8.41% Votes 1,814 New Democratic Front 5.11% 5.11% Votes 934 Sri Lanka Podujana Peramuna 2.63% General Election 2024
  14. இது வரைக்கும் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்,... General Election 2024 Result 76.1% Jathika Jana Balawegaya Votes - 125,855 11.6% Samagi Jana Balawegaya Votes - 19,242 5.5% New Democratic Front Votes - 9,146 Sri Lanka Podujana Peramuna Votes - 5,9223.6% Sarvajana Balaya Votes - 2,3981.5% People's Struggle Alliance Votes - 514
  15. அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இது தீவிரவாத குழுவினால் திட்டமிடப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க பிரதிநிதிகள் அமெரிக்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர். எயார் வைஸ் மார்ஷல்(ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொண்டா, மற்றும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (30ம் திகதி) இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைவர்களை சந்தித்து இதுபற்றி தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட குழுவை வழிநடத்திய ஈரான் பிரஜை உள்ளிட்ட தலைவர்கள் இந்த வலையமைப்பு தீவிரவாத வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவாக செயற்பட்ட ஒரு கும்பலின் முயற்சியே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. R Tamilmirror Online || அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து வெளிவந்த உண்மை
  16. இனச்சுத்திகரிப்பின் 34 ஆவது வருட நினைவு கூறல் வடக்கு முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தின் 34 ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் யாழ். ஒஸ்மானியா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் கடந்த 30 ஆம் திகதி மாலை நடைபெற்றது. கதை சொல்லும் நிகழ்வு எனும் தலைப்பில் முஸ்லிம் கலாசார சபையின் தலைவர் ஏ.சி.நைசர் தலைமையில் 'இனச்சுத்திகரிப்பிலிருந்து மீளெழுவோம் - வடக்கு முஸ்லிம் மக்கள்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாகவும், பிரதம பேச்சாளர்களாகவும் பி.எஸ்.எம்.சரபுல் அனாம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.திருவரங்கன் மற்றும் மௌலவி எம்.ஏ.பைசர் மதனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீஸ் மற்றும் யாழ். கதீஜா மகா வித்தியாலய அதிபர் ஏ.சி.ஜென்சி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 30.10.1990 ஆம் திகதி வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை கதை வடிவில் இளம் தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது. விருந்தினர்களின் உரைகள் ஒவ்வொன்றும் வெளியேற்றத்தின் சம்பவங்கள், மக்களின் இழப்புக்கள், அகதி வாழ்க்கையின் அவலங்கள், மீள்குடியேற்றத்தின் சவால்கள், முஸ்லிம் சமூகம் தாமாக இனச்சுத்திகரிப்பிலிருந்து மீளெழுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளை தொடர்ந்தும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணம் முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள், பாடசாலை மாணவர்கள், யாழ். முஸ்லிம் ஒன்றியத்தின் பிரதிநிதி ஜனாப் ஆரிப், பொதுமக்கள் மற்றும் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் உ இனச்சுத்திகரிப்பின் 34 ஆவது வருட நினைவு கூறல்
  17. எதிர்காலத்தில் நானும் எனது நண்பர்களும் போல்கார்ட் (ballguard) சின்னத்தின் கீழேயே தேர்தலில் போட்டியிடவேண்டியிருக்கும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது நீங்கள் அனைவரும் எந்த கட்சி என யோசிக்கின்றீர்கள்,நானும் எனது நண்பர்கள் சிலரும் நாங்கள் இதனை முயற்சி செய்து பார்க்கவேண்டும் என விரும்பினோம்,நாங்கள் கட்சியொன்றை உருவாக்கி ஆர்வத்தை ஏற்படுத்துவோம் என நினைத்தோம். ஆனால் கட்சிக்கான பெயர்களை தேடியபோது எல்லா பெயர்களிலும் ஏனையவர்கள் பதிவு செய்திருந்தனர். அதன் பின்னர் கட்சியின் சின்னத்துடன் ஆரம்பிப்போம் என தீர்மானித்து கிரிக்கெட் மட்டையை தெரிவு செய்யமுயன்றவேளை அதனை பலவருடங்களிற்கு முன்னரே சி;ன்னமாக சிலர் எடுத்துவிட்டனர்,கிரிக்கெட் பந்தையும் எடுத்துவிட்டனர். நாங்கள் தேடிப்பார்த்தவேளை அவர்களிற்கும் அந்த கட்சிகளிற்கும் கிரிக்கெட்டிற்கும் எந்த தொடர்புமில்லை என்பது புலனாகியது. எனது நண்பர் ஒருவர் தெரிவித்தது போல இருந்த ஒரேயொரு சின்னம் போல்கார்ட்தான். இதன் காரணமாக எங்கள் அரசியல் கனவுகள் கலைந்தன. தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிந்தித்தோம் - போல்கார்ட் சின்னத்திலேயே போட்டியிடவேண்டிய நிலை காணப்பட்டது - மஹேல | Virakesari.lk
  18. யாழ்ப்பாணம், வல்லை - அராலி வீதியின் மீதமுள்ள வீதியையும் மக்கள் பாவனைக்காக திறந்து விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வல்லை - அராலி வீதியில் தெல்லிப்பளை கட்டுவான் சந்தி பகுதியில் இருந்து அச்சுவேலி தோலாக்கட்டி சந்தி வரையிலான வீதி கடந்த 34 வருடங்களுக்கு மேலாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகிறது. குறித்த வீதியில் வெள்ளிக்கிழமை (01) பலாலி வீதியில் உள்ள வசாவிளான் சந்தியில் இருந்து அச்சுவேலி தோலாகட்டி சந்தி வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரமான வீதியே திறந்து விடப்பட்டுள்ளது. மிகுதி வீதி இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளேயே காணப்படுகிறது. அத்தனையும் விரைவில் மக்கள் பாவனைக்கு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் அச்சுவேலி மற்றும் வடமராட்சி பகுதிகளில் வாழும் மக்கள் வலி வடக்கு மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு வருவதற்கு, வல்லை - அராலி வீதியூடாக பயணித்து , வசாவிளான் சந்தியை அடைந்து , குரும்பசிட்டி ஊடாக சுற்றி , மீண்டும் வல்லை - அராலி வீதியை அடைந்தே தமது பயணத்தை தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். அதனால் கட்டுவான் சந்திக்கும் வசாவிளான் சந்திக்கும் இடையிலான வல்லை - அராலி வீதியை இராணுவத்தினர் மக்கள் பாவனைக்கு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோன்று வசாவிளான் சந்தியில் இருந்து பொன்னாலை - பருத்தித்துறை வீதியும் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளையே காணப்படுகிறது. அந்த வீதியையும் திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி வடக்கு பிரதேசத்திற்கு மக்கள் நேரடியாக பயணிக்க முடியாது. காங்கேசன்துறை வீதியூடாகவே பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதனால் வசாவிளான் சந்தியில் இருந்து பலாலி வடக்கு பகுதிக்கு செல்லும் பலாலி வீதியினையும் முற்றாக மக்கள் பாவனைக்கு இராணுவத்தினர் திறந்து விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை இன்றைய தினம் திறக்கப்பட்ட வீதியின் இரு மருங்கிலும் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் வீதியோரமாக உள்ள ஆலயங்களில் வழிபாடு செய்யவும் அனுமதிகள் மறுக்கப்பட்டிருந்தன . எனவே வீதியினை திறந்து விட்டது போன்று , அப்பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்க வேண்டும் எனவும் , அப்பகுதியில் உள்ள ஆலயங்களை புனரமைத்து வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். வல்லை - அராலி வீதியை முழுமையாக திறக்குமாறு மக்கள் கோரிக்கை ! | Virakesari.lk
  19. ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,601,949 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 117,141 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 10 மாதங்களில் 16 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை | Virakesari.lk
  20. மூன்று தசாப்தங்களாக மூடப்பட்டிருந்த வீதி வடக்கு மக்களின் வேண்டுகோளையடுத்து திறப்பு - ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் மக்களின் அபிவிருத்தியை பாதுகாப்பை உறுதிசெய்வேன் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளது- வடமாகாண மக்கள் விடுத்த வேண்டுகோளினை ஏற்று மூன்று தசாப்தகாலத்தின் பின்னர் பலாலி அச்சுவேலி வீதியை மீளத்திறந்ததை கௌரவமான விடயமாக கருதுகின்றேன். பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் எங்கள் மக்களின் அபிவிருத்தி பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம் மூன்று தசாப்தங்களாக மூடப்பட்டிருந்த வீதி வடக்கு மக்களின் வேண்டுகோளையடுத்து திறப்பு - ஜனாதிபதி | Virakesari.lk 01 Nov, 2024 | 05:17 PM
  21. (இராஜதுரை ஹஷான்) காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள், 1 சுயேட்சை குழுக்கள் என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்து. எல்பிட்டிய தேர்தல் தொகுதியை அண்மித்த பகுதியில் பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் பதவி காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலை நிறைவு செய்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்திருந்த நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கடந்த மாதம் வெளியிட்டிருந்தார். பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்தி நிறைவு செய்ததன் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது. இவ்வாறான பின்னணியில் காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்தது. 8 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்பட 2 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் 8 அரசியல் கட்சிகளும்,1 சுயேட்சை குழுவும் மாத்திரமே குறித்த காலப்பகுதியில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. இதற்கமைய தபால்மூல வாக்களிப்பு இம்மாதம் 14 மற்றும் 18 ஆகிய தினங்களில் இடம்பெற்றது. 2024.09.21 ஆம் திகதியன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்காளரின் இடது கை சிறு விரலில் தோதான (உரிய) குறியீடு இடப்பட்டுள்ளமையால்இ உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 53 அ(3) ஆம் பிரிவினால் வாக்காளரை தோதான குறியீட்டினால் அடையாளமிடுதல் தொடர்பில் தோற்றம் பெறக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இன்று நடைப்பெறவுள்ள காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் போது வாக்காளரின் இடது கை பெருவிரலில் தோதான (உரிய) அடையாளமிடப்படும். வாக்காளரின் இடது கையில் பெருவிரல் இல்லாதிருக்கும் பட்சத்தில் உள்ளுர் அதிகார சபைகள் தெர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 53அ (3), அ,ஆ, (1),(2), (3) ஆம் பிரிவுகளுக்கு அமைய அவரது வலது கையில் உள்ள வேறேதேனுமொரு விரல் உரிய குறியீட்டினால் அடையாளமிடப்படும் . எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்கெடுப்பு இன்று தேர்தல் சட்டங்களுக்கு அமைய செயற்படுங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு | Virakesari.lk
  22. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அங்கு எஞ்சி வாழும் ஈழத் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அரச பயங்கரவாதத்தால் அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு அவல நிலையில் உழல்கிறது என்பதையும் கடந்த காலத்தின் எச்சங்களுடன் சித்தரித்திருக்கிறது ‘ஒற்றைப் பனை மரம்’. 2009இல் போரில் சரணடைந்த பெண் போராளியான கஸ்தூரி (நவயுகா), ராணு வத்தின் குண்டு வீச்சுக்கு நிறைமாதக் கர்ப்பிணி மனைவியைப் பறிகொடுத்த சுந்தரம் (புதியவன் ராசய்யா), அவர் தனது மகளாகத் தத்தெடுத்துக்கொண்ட அஜாதிகா ஆகியோர் பல வருட முகாம் வாழ்க்கைக்குப் பின்னர், சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து வசிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், போருக்குப் பிறகான வாழ்க்கை, அவர்கள் நினைத்ததைப் போல் இல்லை. “சயனைட் குப்பியைக் கடித்துச் செத்திருக்க வேண்டியதுதானே” என முன்னாள் போராளிகளைச் சக மனிதர்கள் சிலர் கேட்கின்றனர். போரில் அனைத்தையும் இழந்து வறுமையிலும் வெறுமையிலும் உழலும் அப்பாவி கைம்பெண்கள் சிலரைப் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திப் பணிய வைக்கின்றனர். ஆண் போராளிகளில் சிலரோ வயிற்றுப்பாட்டுக்காக, அடிதடித் தொழில் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். உயிர் வாழ்வதற்கான உரிமையை நிலைநாட்டவும், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் ஒரு சங்கத்தைக் கட்டமைக்க நினைக்கிறார் சுந்தரம். ஆனால், ‘வெள்ளை வேன்’ கொண்டு கடத்தி அரசத் தரப்பினர் அவரைச் சித்திரவதை செய்கின்றனர். இப்படிப்பட்ட வாழ்க்கையில் இந்த மூன்று முதன்மைக் கதாபாத்திரங்களின் நிலை எப்படிப்பட்ட அலைக்கழிப்புகளில் சிக்குகிறது, துணைக் கதாபாத்திரங்கள் உயிர் வாழ்வதற்கான நெருக்கடியில் என்ன செய்கின்றன, அங்கே உரிமைகளுக்கான போராட்டக் குரல் ஓய்ந்துபோய்விட்ட ஒன்றா என்பதை நோக்கி திரைக்கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. ஈழத்தில் உருவான ‘மண்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த புதியவன் ராசய்யா, எழுதி, இயக்கி, சுந்தரம் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருக் கிறார். தனி மனிதர்களையோ, தலைவர்களையோ, இலங்கை அரசையோ, ராணுவத்தையோ விமர்சிக்காமல் மௌன சாட்சியாகத் தனது நிலத்தின் தற்போதைய களநிலவரத்தின் ஒரு தரப்பைச் சுயவிமர்சனம் செய்யும் படமாக இதை உருவாக்கியிருக்கிறார். இதில் விடுதலைப் புலிகள் எனக் குறிப்பிடாமல் ‘மேலிடம்’ என்று பதுங்கிப் பதுங்கி அவர்களைப் பல காட்சிகளில் விமர்சித்திருக்கிறார். புலம்பெயர்ந்துபோய் ஏதிலிகளாக உழைத்து, அதன் பயனாகச் செழுமையாக வாழும் இலங்கைத் தமிழர்களின் மீதான விமர்சனம் படத்தில் பகிரங்கமாக வெளிப்பட்டிருக்கிறது. விளைவாக, இப்படம் ‘சிங்கள லாபி’யில் உருவானதோ என்கிற எண்ணத்தையும் உருவாக்குகிறது. அதேநேரம், உரிமைக்கான குரலைக் கடைசி தமிழன் இருக்கும்வரை நசுக்கிவிட முடியாது என்பதைச் சொன்ன இயக்குநரின் துணிச்சலைப் பாராட்டலாம். நடிகர்களின் அற்புதமான நடிப்பு, உருக்கும் இசை, இலங்கையில் கதை நடக்கும் பகுதிகளின் நிலப்பரப்பை விவரிக்கும் ஒளிப்பதிவு எனத் தொழில்நுட்ப ரீதியாகக் கவரும் இப்படம், தமிழகத் தமிழர்கள் காணவேண்டிய ஒன்று. ஒற்றைப் பனை மரம் - திரைப் பார்வை | இதுவும் ஈழம்தான்! | Ottrai Panai Maram movie review - hindutamil.in
  23. சம்பந்தனின் வாசஸ்தலத்தை ஒப்படைக்க நடவடிக்கை மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தன் பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரின் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தனின் மகள் நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்துள. அவர் இறப்பதற்கு முன்னர் பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரின் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளோம் என, அவரது மகள் குறிப்பிட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த பின்னரும், இந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்தும் வாழும் வாய்ப்பு சம்பந்தனுக்கு கிடைத்தது. அது நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. சம்பந்தன் கடந்த ஜூலை 1ஆம் தேதி காலமானார். அவர் காலமாகி மூன்று மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் இன்னும் அவரது குடும்ப உறுப்பினர்களிடமே உள்ளது. 2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் இரா.சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்தது. இதற்கிடையில், இந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை சம்பந்தன் தொடர்ந்து பயன்படுத்த அனுமதித்த அமைச்சரவைப் பத்திரத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் தண்ணீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்பன அரசாங்கமே செலுத்துவதுடன், வீட்டைப் பராமரிக்கும் தொழிலாளர்களின் சம்பளமும் அரசாங்கமே செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது். AN Tamilmirror Online || சம்பந்தனின் வாசஸ்தலத்தை ஒப்படைக்க நடவடிக்கை
  24. என்னை கட்சியில் இருந்து நீங்கியதாக பொய்யுரைத்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி பொது வேட்பாளாராக போட்டியிட்டவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். நான் கட்சியில் இருந்து இதுவரை நீங்கப்படவில்லை நான் பொது வேட்பாளராக போட்டியிட்ட காரணத்தால் ஒரு விளக்கம் கூறுமாறு கடிதம் மாத்திரமே அனுப்பப்பட்டுள்ளது என்றார். மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் தன்னை தமிழரசுக்கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்துவரும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இவ்விடம் குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில். நான் கட்சியில் இருந்து இதுவரை நீங்கப்படவில்லை நான் பொது வேட்பாளராக போட்டியிட்ட காரணத்தால் ஒரு விளக்கம் கூறுமாறு கடிதம் மாத்திரமே அனுப்பப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அதற்கான பதிலை நான் அனுப்பி வைத்துள்ளேன் இவ்வளவுதான் நடந்து முடிந்திருக்கின்றது. நான் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்காக நான் இன்னும் செயற்பட்டு கொண்டிருக்கின்றேன். என்னை மத்திய குழு தீர்மானத்தின்படி தமிழரசுக்கட்சி நிருவாக சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ள கூடாது என்கின்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நான் அதனையேற்று அக் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. நான் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் வெற்றிக்காக வேட்பாளர்களுடன் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றேன். அது என்னுடைய தனி மனித சுதந்திரம் அதனை எவரும் தடைசெய்ய முடியாது. கட்சியை விட்டு விலக்குவதாயின் யாப்பு விதிமுறைகளின்படி பல நடைமுறைகள் இருக்கின்றது இந் நிலையில் யாப்பு விதிமுறையினை அறியாதவர்கள் மத்திய குழுவில் இல்லாதவர்கள் என்னை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக தெரிவித்துவருகின்றனர் என அவர் இதன் போது தெரித்தார். என்னை கட்சியில் இருந்து நீங்கியதாக பொய்யுரைத்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றேன் - பா.அரியநேத்திரன் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.