Everything posted by பிழம்பு
-
தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி - நாடாளுமன்றத்தில் களேபரம் (காணொளி இணைப்பு)
அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார்; அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - நளின் பண்டார பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (3) பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பேசுகையிலேயே நளின் பண்டார இவ்வாறு தெரிவித்தார். அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார்; அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - நளின் பண்டார | Virakesari.lk
-
'100% வரி விதிப்போம்' - இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை - ஏன்?
அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்று வழியைத் தேடும் விவகாரம் குறித்து பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு சனிக்கிழமை கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை கண்டுபிடிக்க முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீது, 100 சதவிகித வரியை (இறக்குமதி வரி) விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். பிரிக்ஸ் சர்வதேச அமைப்பில், உலகின் இரண்டு பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான சீனா மற்றும் இந்தியா அடங்கியுள்ளன. டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, சீனப் பொருட்களுக்கு 60% வரை அதிக வரி விதிப்பது. டிரம்பின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரமடையும் என்ற அச்சம் நிலவியது. கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க நிறுவனமான ஹார்லி டேவிட்சன் விவகாரத்திலும் டிரம்ப் இந்தியாவை குறிவைத்து சில கருத்துக்களைக் கூறினார். பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய உறுப்பு நாடுகளாக, இந்தியாவும் சீனாவும் உள்ளன. பிரதமர் நரேந்திர மோதியை 'தனது நண்பர்’ என்று டிரம்ப் பலமுறை கூறியிருக்கிறார். அதே சமயம், டிரம்ப் வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளில் இந்தியாவை குறிவைத்து வருகிறார். டிரம்ப் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,Getty Images டிரம்ப் சனிக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில், "டாலரை விட்டு விலகும் பிரிக்ஸ் நாடுகளின் முயற்சிகளுக்கு நாங்கள் மௌனம் காத்த காலம் முடிந்துவிட்டது," என்றார். "இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது சக்தி வாய்ந்த அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறொரு நாணயத்தை முன்னிறுத்துவதையோ ஆதரிக்க மாட்டோம். அப்படி நடந்தால், 100 சதவிகித வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை முன்னிறுத்த முயற்சிக்க மாட்டோம் என்ற உறுதிமொழி எங்களுக்குத் தேவை." என டிரம்ப் தெரிவித்தார். மேலும், "பிரிக்ஸ் நாடுகள் வேறு நாணயத்தை முன்னிறுத்தினால், அற்புதமான அமெரிக்கப் பொருளாதாரத்தில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் இருந்து விடைபெற வேண்டும். அவர்கள் வேறு நாட்டில் விற்பனை செய்து கொள்ளலாம். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை மாற்றுவது பிரிக்ஸ் கூட்டமைப்பால் முடியாது. அவ்வாறு செய்யும் எந்த நாடும் அமெரிக்காவிடம் இருந்தும், அனைத்து வர்த்தகத்தில் இருந்தும் விடைபெற வேண்டும்" என்று அவர் பதிவிட்டார். கடந்த அக்டோபரில், ரஷ்யாவின் கசான் நகரில் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த சமயத்தில், பிரிக்ஸ் அதன் சொந்த நாணயத்தை உருவாக்கத் திட்டமிடுவதாக ஊகங்கள் எழுந்தன. பிரிக்ஸ் நாணயம் பற்றிய ஊகங்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த அக்டோபரில், ரஷ்யாவின் கசான் நகரில் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற்றது, பிரிக்ஸ் நாணயத்தை அறிமுகப்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் நாணயத்தை அறிமுகப்படுத்தும் யோசனையை முன்வைத்தது ரஷ்யாதான், அதற்கு பிரேசில் அதிபர் லுலா டா சில்வா ஆதரவு அளித்தார். பிரிக்ஸ் நாணயத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கசான் மாநாட்டில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இந்த நாடுகளுக்கு இடையே எல்லை தாண்டிய பண பரிவர்த்தனை செய்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்குவது குறித்து பேசப்பட்டது. இது மேற்கத்திய கட்டண முறையான 'ஸ்விஃப்ட் நெட்வொர்க்' உடன் செயல்படும். பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு அதிகமாக உள்ளூர் நாணயங்களை பயன்படுத்த விரும்புகின்றன. இதனால் டாலருக்கு எதிராக தங்கள் நாணயங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் அபாயத்தைக் குறைக்க முடியும். கசான் உச்சிமாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “இருதரப்பு வர்த்தகத்தில் உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவது அரசியலில்லா பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்” என்றார். பிரிக்ஸ் மாநாட்டில் புதின் பேசியது என்ன? கசான் மாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் புதின், "டாலர் தொடர்ந்து உலக நிதி அமைப்பின் முக்கிய அங்கமாக இருக்கும், மேலும் அரசியல் நோக்கங்களுக்காக அது பயன்படுத்தப்படும் போது அதன் திறன் குறைகிறது." "டாலரை விட்டு வெளியேறவோ அல்லது தோற்கடிக்கவோ ரஷ்யா விரும்பவில்லை, ஆனால் டாலர் பயன்பாட்டில் ரஷ்யாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதனால்தான் நாங்கள் வேறு வழிகளைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்” என்று புதின் கூறினார். யுக்ரேன் மீதான தாக்குதலை அடுத்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது 16,500க்கும் மேற்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்தத் தடைகளின் கீழ், சுமார் 276 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரஷ்யாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் பாதியளவு முடக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய வங்கிகளின் சுமார் 70 சதவிகித சொத்துக்களை முடக்கியுள்ளது மற்றும் அவற்றை `SWIFT’ வங்கி அமைப்பில் இருந்து விலக்கியுள்ளது. ஸ்விஃப்ட் விரைவான பண பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. சுமார் 200 நாடுகளில் 11,000 நிதி நிறுவனங்களால் இந்த ஸ்விஃப்ட் சேவை பயன்படுத்தப்படுகிறது. பிரிக்ஸ் நாணயம் வந்தால் டாலருக்கு மாற்றாக இருக்குமா ? உலகெங்கிலும் உள்ள நாடுகள் பரஸ்பர வர்த்தகத்தில் பண பரிவர்த்தனையில் டாலரைப் பயன்படுத்துகின்றன. பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவும், ரஷ்ய அதிபர் புதினும் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்க பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க பரிந்துரைத்திருந்தனர். இருப்பினும், 2023 பிரிக்ஸ் மாநாட்டில் இது குறித்து எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை. டப்ளின் டிரினிட்டி கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் பட்ரைக் கார்மோடி, கடந்த ஜனவரி மாதம் பிபிசியிடம் இதுபற்றி கருத்து தெரிவித்தார். "பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரம் மிகவும் வித்தியாசமாக இருப்பதால், பொதுவான நாணயத்தை உருவாக்குவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது" என அவர் கூறினார். எவ்வாறாயினும், எதிர்காலத்தில் சர்வதேச வர்த்தகத்தில் பணம் செலுத்துவதற்கான புதிய நாணயத்தை உருவாக்குவது பற்றி அவர்கள் சிந்திக்கலாம் அல்லது அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்துவதைத் தேர்வு செய்யலாம்” என்று அவர் கூறினார். தற்போது உலக அரங்கில் டாலரின் நிலை என்ன? அனைத்து வணிக பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள், கடன்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள இறக்குமதி-ஏற்றுமதி ஆகியவை அமெரிக்க டாலர்களில் செய்யப்படுகின்றன. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ப்ரூக்கிங்ஸ் என்ற திங்க் டேங்க், உலகளவில் நடக்கும் அனைத்து கடன் பரிவர்த்தனைகளில் 64% டாலர்களில் இருப்பதாகவும், உலக நாணய கையிருப்பில் 59% டாலராக இருப்பதாகவும் கூறுகிறது. சர்வதேச பரிவர்த்தனைகளில் டாலரின் பங்கு 58% ஆகும். யூரோ உருவானதில் இருந்து, டாலரின் ஆதிக்கம் சற்று குறைந்துள்ளது, ஆனால் அது இன்னும் உலகின் மிகவும் பரவலாக புழக்கத்தில் உள்ள நாணயமாக உள்ளது. ப்ரூக்கிங்ஸ் தரவுகளின்படி, டாலர் வெளிநாட்டு பரிவர்த்தனைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது, அதாவது 88% பரிவர்த்தனைகள் டாலரில் செய்யப்படுகிறது. எனினும், கடந்த 25 ஆண்டுகளில் டாலரின் ஆதிக்கம் குறைந்துள்ளது. உலகளாவிய கையிருப்பாக அமெரிக்க டாலரின் பங்கு 12% குறைந்துள்ளது. உலகளாவிய கையிருப்பில் அதன் பங்கு 2000 ஆம் ஆண்டில் 71% ஆக இருந்தது, இது 2024 இல் 59% ஆக குறையும். பிரிக்ஸ் கூட்டமைப்பு என்றால் என்ன? பிரிக்ஸ் (BRICS) என்பது வளர்ச்சிப் பாதையில் இருக்கும் பொருளாதாரங்களின் ஒரு கூட்டமைப்பாகும். இதில், ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் 2010 இல் தென்னாப்ரிக்காவும் சேர்ந்தது. இந்த பொருளாதாரக் கூட்டணி சமீப ஆண்டுகளில் பல மடங்கு விரிவடைந்துள்ளது. ஜனவரியில், எகிப்து, இரான், எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகியவையும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்தன. வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பணக்கார நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார சக்திக்கு சவால் விடும் வகையில் உலகின் மிக முக்கியமான வளரும் நாடுகளை ஒன்றிணைப்பதற்காக பிரிக்ஸ் உருவாக்கப்பட்டது. பிரிக்ஸ்-இல் சேர அஜர்பைஜான் மற்றும் துருக்கி விண்ணப்பித்த நிலையில், செளதி அரேபியாவும் கூட்டமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது. சுமார் 30 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. பிரிக்ஸ் நாடுகளின் மொத்த மக்கள் தொகை சுமார் 3.5 பில்லியன் அதாவது உலக மக்கள்தொகையில் 45%. உறுப்பு நாடுகளின் மொத்தப் பொருளாதாரம் 25.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது, இது உலகப் பொருளாதாரத்தில் 28% ஆகும். பிரிக்ஸ் பற்றி ஜெய்சங்கர் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகள், பிரிக்ஸ் கூட்டமைப்பின் செல்வாக்கு அதிகரிப்பதால் கவலையடைந்தன. இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், பாதுகாப்புக் கொள்கைக்கான உலகளாவிய மையத்தில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம்`பிரிக்ஸ்’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், “ஏற்கனவே இருக்கும் ஜி7 கூட்டமைப்பில் யாரும் இணைய அனுமதிக்கப்படாததால், பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.” "பிரிக்ஸ் பற்றி பேசும்போது ஏன் இவ்வளவு சங்கடப்படுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஜி20 அமைப்பு உருவானவுடன் ஜி7 முடிவுக்கு வந்துவிட்டதா? ஜி20 உடன் ஜி7 கூட்டமைப்பும் செயல்பாட்டில் தான் உள்ளது. எனவே, ஜி20 கூட்டமைப்போடு சேர்ந்து பிரிக்ஸ் செயல்படக் கூடாதா?” என்று பேசிய அவர், உலகப் பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் தற்போது உயர்ந்து வருவதுதான் இந்த கூட்டமைப்பின் சிறப்பு என்றார். சமீபத்திய ஆண்டுகளில், பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியை (New Development Bank) உருவாக்கியுள்ளது. நிபுணர்கள் கூறுவது என்ன? "உலகம் முழுவதும் டாலரின் ஆதிக்கம் தொடர வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்பதே டிரம்ப் கூறியுள்ள செய்தியின் பொருள்," என்று வெளிநாட்டு விவகார நிபுணரும், 'தி இமேஜ் இந்தியா இன்ஸ்டிட்யூட்' தலைவருமான ரபீந்திர சச்தேவ் நம்புகிறார். "பிரிக்ஸ் நாடுகள் இதைச் செய்ய முயற்சிக்கின்றன. அவர்களால் இதற்கு மாற்றாக வேறு நாணயத்தை உருவாக்க முடியாவிட்டாலும், அவை குறைந்தபட்சம் நிதி வலையமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றன." என ரபீந்திர சச்தேவ் கூறுகிறார். "ஸ்விஃப்ட் சர்வதேச வங்கி மீது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒரு நாடு பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் போது, இது அந்த அமைப்பிலிருந்து துண்டிக்கப்படுகின்றது" என்றார் அவர். ரஷ்யாவைப் போல , பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடலாம் என்று பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) கவலை கொண்டிருப்பதாக சச்தேவ் கூறுகிறார். இந்த அபாயத்தைத் தவிர்க்க, இந்நாடுகள் தங்கள் சொந்த நிதி வலையமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் உண்மையில் இந்தத் தேடலில் டாலருக்கு மாற்றான வேறு நாணயம் ஏதாவது இருக்கிறதா? இந்த கேள்விக்கு ரபீந்திர சச்தேவ் பதில் கூறும்போது, "பிரிக்ஸ் நாடுகள் இப்படி ஒரு யோசனையைத் திட்டமிட்டிருந்தன, ஆனால் அது அவ்வளவு விரைவில் நடக்காது. இருப்பினும், அதற்கான சில முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பகுதியாக, யுவானில் சீனா பிரேசிலோடு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. “ டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தைக் கண்டுபிடிக்க சௌதி அரேபியாவுடன் சீனாவும், ரஷ்யாவுடன் இந்தியாவும் அதேபோன்று ஒப்பந்தம் செய்துள்ளன. இத்தகைய போக்குகள் தொடங்கியுள்ளன." ஆனால்,டாலருக்கு மாற்றாக வேறு ஒரு நாணயத்தைப் பெறுவதற்கு வெகு காலமாகலாம் என்று ரபீந்திர சச்தேவ் நம்புகிறார். பட மூலாதாரம்,Getty Images டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது இதுபோன்ற ஒரு கூற்றைத் தெரிவித்ததால், புதிதாக எதுவும் சொல்லவில்லை என்று உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் மூத்த உறுப்பினரான டாக்டர். ஃபஸ்ஸூர் ரஹ்மான் நம்புகிறார். மேலும் இதுபோன்ற முயற்சிகள் எதிர்காலத்தில் டாலருக்கு சவாலாக இருக்கலாம் என்றும், இதை சமாளிக்க டிரம்ப் தயாராக இருப்பதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர். “ ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ (America First) என்ற டிரம்பின் முழக்கத்தில் அரசியல், பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரமும் அடங்கி உள்ளது. இந்த முழக்கம், எந்த விதத்திலும் பாதிப்படைய டிரம்ப் விடமாட்டார்” என்று ஃபஸூர் ரஹ்மான் கூறுகிறார். "டிரம்ப் எதற்கும் அஞ்சாதவர். ஆனால், இச்செய்தி மூலம், இவ்வாறு செயல்பட முயற்சிக்கும் ஒரு நாட்டின் நடவடிக்கையை அவர் எப்படி எதிர்கொள்வார் எனவும், யாருக்கும் அதற்கு அனுமதி வழங்க மாட்டார் எனவும் தெரிவிக்க டிரம்ப் முயற்சித்துள்ளார்" என்கிறார் ஃபஸூர் ரஹ்மான். டாலரின் நிலை நலிவடைகிறதா ? என்ற கேள்விக்கு , "உலகில் டாலரின் ஆதிக்கம் இன்னும் அப்படியே உள்ளது. சில நாடுகளின் ஒப்பந்தத்தால் டாலரின் நிலை பலவீனமடைந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் இப்படியான ஒரு விவாதத்தைத் தொடங்குவது பெரிய விஷயம். மேலும் 15-20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற விவாதத்தை தொடங்குவது சாத்தியமில்லை" என்று தெரிவித்தார் ரஹ்மான். BRICS: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை - BBC News தமிழ்
-
மலக்குழிக் கழிவுநீருடன் கிணற்றுநீர் கலக்கும் அபாயம் :பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை!
கொட்டித் தீர்த்த பெங்கால் புயல்மழை கிணறுகளின் நீரின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பெருக்கெடுத்த வெள்ள நீர் கிணறுகளை நிரப்பியுள்ளதோடு, பல இடங்களில் மலக்குழிக் கழிவு நீர் கிணற்று நீருடன் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொதித்தாறிய நீரைப் பருகுவதே பாதுகாப்பானது எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். பெங்கால் புயல் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்குத் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், பெங்கால் புயல் 2008 நவம்பரில் தாக்கிய நிசா புயலைவிட வீரியம் குறைவானது. ஆயினும், நிசாவைவிட மிக மோசமான வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அதன் வருடாந்தச் சராசரி மழைவீழ்ச்சியான 1240 மில்லிமீற்றர் மழையை ஒக்டோபர் மாதம் முடிவடைவதற்கு முன்பாகவே பெற்றிருந்த நிலையிலேயே பெங்கால் புயல் 720 மில்லிமீற்றர் மழையை மேலதிகமாகக் கொண்டு வந்து கொட்டியுள்ளது. ஏற்கனவே நிலம் அதன் நீர்க் கொள்ளளவை எட்டியிருந்த நிலையில் இம் மேலதிக மழைநீர் போக்கிடமின்றி வெள்ளக்காடாக உருவெடுத்ததில் நீர்நிலைகள் மாசடைந்துள்ளன. வெள்ள நிவாரணப் பணிகளில் நான் ஈடுபட்டிருந்தபோது பல்வேறு பகுதிகளிலுமுள்ள கிணறுகளில் மலக்குழிக் கழிவுநீர் கலக்கும் அபாயம் என்னால் உணரப்பட்டுள்ளது. கிணறுகளில் குளோரின் இட்டுத்தொற்று நீக்குவதும், கிணற்று நீரை இறைப்பதும் அவசியமானவை. எனினும் இவை மாத்திரமே பாதுகாப்புக்குப் போதுமானவையல்ல. வெடிப்புகளையும் துளைகளையும் கொண்ட மயோசின் சுண்ணாம்புப் பாறைகளினூடாக கிணற்றுக்குள் கசியும் நிலத்தடி நீர் இன்னும் சில வாரங்களுக்கேனும் கிருமிகளைக் காவிவரும் அபாயம் உள்ளதால் கொதித்து ஆறிய நீரே முழுப்பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஆகும். வெள்ளச் சேதம் அதிகமானதற்கு வெள்ளநீர் உடனடியாவே கடலைச் சென்றடையக்கூடிய கட்டுமான வசதிகள் எம்மிடம் போதாமையும் ஒரு காரணமாகும் இருக்கின்ற வெள்ள வாய்க்கால்களும் எம்மால் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. பூமி சூடாகுவதன் விளைவாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் வருங்காலத்தில் இன்னும் மோசமான வீரியம் மிக்க புயல்களை உருவாக்குமென ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இப்போதே நாம் விழித்துக்கொண்டு முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின் இயற்கை ஏற்படுத்தப்போகும் பேரனர்த்தங்களில் இருந்து நாம் ஒருபோதும் தப்பமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். (ப) மலக்குழிக் கழிவுநீருடன் கிணற்றுநீர் கலக்கும் அபாயம் :பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை!
-
மரணத்தை கணிக்கும் ’’மரணக் கடிகாரம்’’
செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் "டெத் க்ளாக்" என்ற அப்ளிகேஷனைப் பற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர், இது ஒருவரின் தினசரி வழக்கத்தை வைத்து அவர் இறந்த திகதியை கணிக்க முடியும். செயற்கை நுண்ணறிவால் இயங்கும் "Death Clock" செயலி கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு 125,000க்கும் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளைதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டம் ஆரோக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமின்றி பொருளாதார நிபுணர்கள் மற்றும் நிதித் திட்டமிடுபவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. "மரணக் கடிகாரம்" செயற்கை நுண்ணறிவின் சக்தியைக் கொண்டு மிகவும் துல்லியமான கணிப்புகளைச் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. "மரணக் கடிகாரம்" என்பது "பெரும்பாலான நாட்கள்" உருவாக்கியவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ப்ரென்ட் ஃபிரான்சனின் சிந்தனையில் உருவானது. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் "மரணக் கடிகாரம்" சுமார் 53 மில்லியன் பங்கேற்பாளர்களுடன் 1,200 க்கும் மேற்பட்ட ஆயுட்காலம் ஆய்வுகளின் தரவுத்தொகுப்பில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது . இது ஒரு நபரின் உணவு, உடற்பயிற்சி, மன அழுத்த நிலைகள் மற்றும் தூக்கம் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி மரணத்தின் சாத்தியக்கூறு திகதியைக் கணிக்கின்றது. இருப்பினும், "மரணக் கடிகாரம்" செயற்கை நுண்ணறிவு எப்போதும் சரியானது அல்ல என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. Tamilmirror Online || மரணத்தை கணிக்கும் ’’மரணக் கடிகாரம்’’
-
சம்பந்தனின் இல்லம் கையளிப்பு
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஐந்து மாதங்களின் பின்னர் நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ இல்லத்தை கையளிப்பதற்கு அமைச்சு ஐந்துக்கும் மேற்பட்ட நினைவூட்டல்களை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் உள்ள இந்த உத்தியோகபூர்வ இல்லம் சம்பந்தனுக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் போது 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம், சம்பந்தனுக்கு இருக்கும் வரையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதன் பராமரிப்பு பணிகள் அனைத்தும் கடந்த காலத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த உத்தியோகபூர்வ இல்லம் டிசெம்பர் 12ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என சம்பந்தனின் மகள் எழுத்து மூலம் அமைச்சுக்கு அறிவித்திருந்த போதிலும் அன்றைய தினம் அது கையளிக்கப்படவில்லை. Tamilmirror Online || சம்பந்தனின் இல்லம் கையளிப்பு
-
எக்காலத்திலும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக்கூடாது - செல்வம்
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக்கூடாது எனவும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (2) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், புதிய அரசியல் சாசனத்திலே 13ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இதன் நோக்கம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மீறுகின்ற ஒரு செயற்பாடாக அமையும். ஒரு அரசியல் சாசனம் வருகின்றபோது, தமிழ் தரப்பையும் ஆலோசனையையும் பெற்று அதன் பின்னர் அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும். எங்களுக்கு இனப்பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு தருகின்ற வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது. அண்மைக் காலங்களில் ஜனாதிபதி அவர்கள் 13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாக மாகாண சபை தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில் ஜே.வி.பியின் முக்கிய செய்தியாக 13ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கின்ற நிலை இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக தெரிவித்துள்ளார். அந்த வகையிலே எமது பார்வை என்னவென்றால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள ஒப்பந்தத்தை மீறுகின்ற வகையில் இந்தியாவை ஓரங்கட்டுகின்ற வகையில் அல்லது இந்தியாவின் ஒப்பந்தத்தை இல்லாது செய்கிற நிலை இருக்கிறதா? என்பதனை ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன். எனவே, அரசியல் சாசனம் எழுதப்படுகின்றபோது தமிழ் தரப்புக்களையும், தமிழ் தரப்புக்களின் ஆலோசனைகளையும் பெற்று புதிய அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்தை அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது. அதனை நிறைவேற்ற வேண்டும். இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்பது இலங்கை இந்தியாவிற்கும் இடையில் அழிக்க முடியாத ஒப்பந்தமாக காணப்படுகின்றது. எனவே புதிய அரசியல் சாசனத்தை எழுதி அதனை இல்லாது ஒழிக்கும் சூழலை தற்போதைய புதிய அரசாங்கம் , ஜனாதிபதி அவர்கள் செய்யகூடாது. பாரிய அளவிலான மக்கள் அவரை நம்பி வாக்களித்து உள்ளனர். தமிழ் மக்களும் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். எனவே தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்கின்ற வகையிலே புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும். அதே போல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13ஆவது திருத்தச் சட்டமும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை புதிய அரசாங்கமும் ஜனாதிபதியும் செயல்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது. மன்னார் மாவட்ட மக்கள் அதிக அளவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் சிறந்த முறையில் பணி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மேலும் விவசாய செய்கையும் பாரியளவில் அழிவடைந்துள்ளன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். மழை வெள்ளத்தினால் அரச உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களை புறந்தள்ளாது மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை போன்று பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். எக்காலத்திலும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக்கூடாது - செல்வம் | Virakesari.lk
-
உக்ரைனிற்கு எதிரான போரில் யாழ் இளைஞர்களா?மறுக்கின்றது ரஸ்ய தூதரகம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. ரஸ்ய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரான்ஸ் பெல்ஜியத்திற்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான செய்தி குறித்து இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கவனம் செலுத்தியது. இவ்வாறான தகவல்கள் ஆதாரமற்றவை அடிப்படையற்றவை என்பதை தூதரகம் வலியுறுத்த விரும்புகின்றது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நாங்கள் உன்னி;ப்பாக அவதானித்து வருகின்றோம்,இந்த தகவல்களின் நோக்கம் இலங்கை ரஸ்யா இடையிலான பாரம்பரிய நட்புறவை சீர்குலைப்பதாகும். எங்கள் நாட்டிற்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டவர்களையும் ரஸ்ய அதிகாரிகள் மதிக்கின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை வழங்க தயாராகவுள்ளனர். ரஸ்யாவில் தங்கியிருக்கின்ற இலங்கையர்கள் தொடர்பான விடயத்தினை மொஸ்கோவில் உள்ள ரஸ்யாவிற்கான இலங்கை தூதரகமே கையாள்கின்றது என்பதையும் கவனத்தில் எடுக்கவேண்டும். நேர்மையற்ற வேலைவாய்ப்பு முகவர்கள் இலங்கையர்களை ரஸ்யாவிற்கு அனுப்புவது குறித்து தூதரகத்திற்கு எந்ததகவலும் கிடைக்கவில்லை. இதேவேளை இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கோரப்பட்டால் அதற்கு உதவுவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம். உக்ரைனிற்கு எதிரான போரில் யாழ் இளைஞர்களா?மறுக்கின்றது ரஸ்ய தூதரகம் | Virakesari.lk
-
ஒதியமலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்
02 Dec, 2024 | 04:58 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் படுகொலை இடம்பெற்ற ஒதியமலை கிராமத்தில் உள்ள நினைவுத்தூபி அருகில் இன்று திங்கட்கிழமை (02) அனுஷ்டிக்கப்பட்டது. உணவுபூர்வமாக நடைபெற்ற இந்த நினைவேந்தலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 டிசம்பர் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் 27 பேர் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 5 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வு அக்கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒட்டுசுட்டான் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு சென்று ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு மிரட்டியதாகவும், இன்று காலை நிகழ்வை ஒலிபெருக்கிகளுடன் மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும், இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் சிவரூபன் ஆகியோருடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். ஒதியமலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் | Virakesari.lk
-
தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் இரத்துச்செய்யவேண்டும்- மக்கள் போராட்ட முன்னணி
தற்போதைய அரசாங்கம் இரத்தத்தாலும் இரும்பினாலும் நசுக்கப்பட்ட வரலாற்று அனுபவத்தை நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் இரத்துச்செய்யவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணி மேலும் தெரிவித்துள்ளதாவது. சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான அறிக்கைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் ரத்துச் செய்யப்பட வேண்டிய அடக்குமுறைச் சட்டமான 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 01 ஆகிய திகதிகளில் பொலிஸார் நான்கு பேரைக் கைது செய்ததோடு அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அந்த நபர்கள் மீது பொதுச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம் மிகக் குறுகிய காலத்திற்குள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களைக் கைது செய்து தடுத்து வைப்பது இது இரண்டாவது தடவையாகும். முன்னதாகஇ அறுகம் குடா சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுஇ பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு நான்கு பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலான தகவல்களை பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடக அறிக்கையிலும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் முன்வைத்தது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி 1783ஃ2024 என்ற இலக்கத்துடனான பொலிஸாரின் ஊடக அறிக்கையில்இ ‘புலிகளின் மாவீரர் தினப் பிரச்சாரத்தை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூன்று சந்தேகநபர்கள் கைது' என்ற தலைப்பில்இ குறித்த கைது தொடர்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. நாட்டில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் மற்றும் காணொளியை முகநூல் சமூக வலைத்தளக் கணக்கின் ஊடாக வெளியிட்டமை தொடர்பிலும் கடந்த வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர்களைக் கொண்டாடும் போது எடுக்கப்பட்ட கானொளியை இந்த வருடம் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டதாகக் கூறி முகநூல் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பிலும் அவர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக ஃபேஸ்புக் ஊடாக இணையத்தில் பொய்யான பிரச்சாரங்கள் மற்றும் காணொளிகளை பரப்பியதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தண்டனைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 27 மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 120 வது பிரிவு ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி குறித்த நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக டிசம்பர் 02 ஆம் திகதிய தினமின பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்காலிக ஏற்பாட்டுச் சட்டமாக ஆறு மாத காலத்திற்குள் நீக்கப்படும் எனத் தெரிவித்தே நிறைவேற்றப்பட்டது என்பதோடு இந்த சட்டத்தின் அமுலாக்கம் பாரிய இனப்படுகொலைகளுக்கு இட்டுச் சென்றது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். இது தமிழ் மக்களுக்கு எதிராகவும்இ தற்போதைய அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராகவும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது. இறுதியாக இந்தச் சட்டம் போராட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்து மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்ததையும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை தொடர்ந்து எதிர்த்து வந்ததையும் இங்கு நினைவிற் கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியும் அதே நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வந்ததோடு இந்தச் சட்டத்தை ரத்துச் செய்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர அப்போதைய அரசாங்கம் முயற்சித்த போதும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையானது சிலர் கூறுவது போல இந்தச் சட்டம் அரசாங்கத்தால் நல்லெண்ணத்துடன் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்ற எளிய வாதமாகச் சுருக்கப்படவில்லை. மேலும் வரலாற்று ரீதியாக இச் சட்டம் தமிழ் முஸ்லிம் மற்றும் முற்போக்கு மக்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சூழலில் இருந்தே நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது. மேலும் இச்சட்டத்தில் குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் குற்றவியல் சட்டம் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் போன்ற ஏற்கனவே உள்ள கணிசமான சட்டங்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக நீதித்துறை மேற்பார்வையின்றி நிறைவேற்று அதிகாரத்தின் எதேச்சதிகார விருப்பப்படி தனிநபர் சுதந்திரத்தை கட்டுப்படுத்த இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்புபட்ட நபர்களின் வரலாற்று ரீதியான இனவாத தலையீடுகளையும் இந்த சம்பவங்கள் தொடர்பான செயற்பாடுகளையும் நாம் அரசியல் ரீதியாக தெளிவாக நிராகரிக்கின்றோம் என்பதை இங்கு மேலும் வலியுறுத்துகிறோம். ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இனவாதத்தைத் தூண்டும் முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும். ஆனால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை படிப்படியாக அமுல்படுத்துவதன் ஊடாக அதை சமூகத்தில் சாதாரண விடயமாக மாற்றுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாறாக தற்போதைய அரசாங்கம் இரத்தத்தாலும் இரும்பினாலும் நசுக்கப்பட்ட வரலாற்று அனுபவத்தை நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இச்சட்டத்தை விரைவில் ரத்துச் செய்ய வேண்டும். மேலும் அதற்குப் பதிலாக வேறொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வரக் கூடாது என்பது கொள்கையாக இருக்க வேண்டும். இனவாதத்தை முறியடித்து அதற்கு அடிப்படையாக இருக்கும் அரச அடக்குமுறையையும் தோற்கடிக்க வேண்டிய இரட்டைப் பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்பதை எமது சமூகத்திடம் வலியுறுத்துகிறோம். தற்போதைய அரசாங்கம் இரத்தத்தாலும் இரும்பினாலும் நசுக்கப்பட்ட வரலாற்று அனுபவத்தை நினைவுகூர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் இரத்துச்செய்யவேண்டும்- மக்கள் போராட்ட முன்னணி | Virakesari.lk
-
யாழில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தோருக்கு உணவு கொடுக்க மறுத்த கிராம சேவையாளர் - இருவர் கைது
Published By: Digital Desk 7 02 Dec, 2024 | 05:50 PM யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி, கற்கோவளம் பகுதியை சேர்ந்த சில குடும்பங்கள் வெள்ளம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களில் சில குடும்பத்தினருக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (01) கிராம சேவையாளர் உணவு வழங்க மறுத்தமையால் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து கிராம சேவையாளர், தனது கடமைக்கு இடையூறு விளைவித்தார்கள் என பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இருவரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமக்கு கிராம சேவையாளர் உணவு வழங்க மறுத்தமையால் அதற்கு காரணம் கேட்க, தனது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என பொய் முறைப்பாடு அளித்துள்ளனர் எனவும் அந்த பொய் முறைப்பாட்டுக்கமைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தமக்கு நீதி வேண்டும் எனவும் தெரிவித்து இன்றைய தினம் திங்கட்கிழமை (02) வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து, பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச செயலாளர், தாம் பக்க சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். யாழில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தோருக்கு உணவு கொடுக்க மறுத்த கிராம சேவையாளர் - இருவர் கைது | Virakesari.lk
-
ஜனாதிபதிக்கும் சிறு மற்றும் மத்திய அரிசி உற்பத்தியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்
தட்டுப்பாடு இன்றி, நியாயமான விலைகளில் மக்களுக்கு தொடர்ச்சியாக அரிசி விநியோகிப்பதன் அவசியம் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் திங்கட்கிழமை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும் மாதங்களில் நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசி வழங்க வேண்டியதன் அவசியத்தை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களிடம் எடுத்துரைத்த ஜனாதிபதி, அதற்காக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடினார். மக்களுக்கு தட்டுப்பாடின்றி அரிசியை வழங்கும் வகையில் நாட்டில் களஞ்சிய வசதிகளை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. அத்தோடு பெறுமதி சேர்க்கும் உற்பத்திகளுக்கு நாட்டு அரிசியை பயன்படுத்துவதால், நுகர்வுக்கு தேவையான இருப்புகளில் தட்டுப்பாடு நிலவுவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. உர மானியத்தை தேசிய உற்பத்திக்கான செயற்திறனுடன் பயன்படுத்தும் நோக்கில் QR குறியீட்டு முறைமை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் இங்கு ஜனாதிபதி கவனம் செலுத்தினார். வர்த்தகம்,வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு,கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, லக் சதொச தலைவர் கலாநிதி சமித்த பெரேரா மற்றும் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். ஜனாதிபதிக்கும் சிறு மற்றும் மத்திய அரிசி உற்பத்தியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் | Virakesari.lk
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது! பேஸ்புக் தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தைப் பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் கஜந்தரூபன் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இரண்டு குழந்தைகளின் தந்தை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாணம் மாவட்ட உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினராலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்றும், புதிய நாடாளுமன்றம் அது தொடர்பில் தீர்மானிக்கும் என்றும் ஜனாதிபதி அநுர உள்ளிட்ட பல தரப்பினரும் தொடர்ச்சியாகக் கூறிவந்தனர். எனினும், என்ன காரணத்துக்காக கடந்த அரசாங்கங்களால் தமிழர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டதோ அதேநிலைமை தற்போதைய அரசாங்கத்திலும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. (ப) பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது! #Eelam #srilanka #jaffna #uthayandigital #news
-
நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் குடை சாய்ந்தது!
நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று நேற்று வீசிய பலத்த காற்றினால் குடை சாய்ந்தது. இதனால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதலும் சேதமடைந்திருந்தது. இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இதனால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதலும் சேதமடைந்திருந்தது. இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். (ப) #Eelam #srilanka #jaffna #uthayannews #todaynews #breking குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். (ப) நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் குடை சாய்ந்தது!
-
`அரசியல் சூப்பர் ஸ்டார்' - சீறும் சீமான்; சீண்டும் வானதி; என்ன சொல்கிறார்கள்?
இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இது அன்பின் நிமித்தமான சந்திப்புதான். இருவரும் திரையுலகம், அரசியல் குறித்து விவாதித்தோம். என்னைவிட அனுபவம் வாய்ந்தவர். அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. இது ரஜினியின் மனநிலைக்கு சரிபட்டு வராது என்றுதான் முன்பு அவரை விமர்சித்தேன். இந்தக் களத்தில் நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். ஓர் ஆட்சியாளர் சிறப்பாக ஆட்சி செய்யும்போது மக்கள் அந்த ஆட்சியைக் கொண்டாடுவார்கள். இதைத்தான் ரஜினி ‘சிஸ்டம் சரியில்லை’ என்று கூறியிருந்தார். நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரசியல் ஆர்வம் நிச்சயம் இருக்கும். ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசியிருப்பதும் அரசியல்தான். விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. சம்பந்திகளைப் போல முதல்வரும், பிரதமரும் சந்தித்துக் கொள்கின்றனர். ஆனால் வெளியில் எங்களை சங்கி என்கிறார்கள். சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம். தி.மு.க-வை எதிர்த்தாலே சங்கி என்றால், அதை பெருமையாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்" என்றார். சீமானின் இந்த பதில் அடுத்த விவாதத்துக்கு வழிவகுத்தது. இதற்கு பொதுக்கூட்டத்தில் விளக்கம் கொடுத்த சீமான், "நானும் ஐயா ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்களுக்குதான் தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை. உங்கள் வீட்டில் காதுகுத்து, கல்யாணம், புத்தகம் வெளியீடு என அனைத்துக்கும் அவரை கூப்பிட்டு கூட வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? காரணம் அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சந்தித்த உடன் பயந்து விட்டார்கள். நான் இல்லையென்றால் எட்டு வழிச் சாலை, பரந்தூரில் விமான நிலையம், காட்டுப் பள்ளியில் துறைமுகம் கட்டி இருப்பார்கள். ஆனால் நானும் என் படையும் இருக்கும் வரை உங்களால் இவற்றை கட்டிவிட முடியுமா? நான் சாத்தியமில்லாததை பேசுவேன் என்று சொல்கிறார்கள். சாத்தியம் இல்லாதவற்றை சாத்தியப்படுத்துபவனுக்கு பெயர்தான் புரட்சியாளன்" என கொதித்தார். வானதி சீனிவாசன் சீமானின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், "காவி என்பதை சீமான் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். காவி என்பது பா.ஜ.க-விற்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது பாரம்பரியம், தியாகம், சனாதனத்தைக் குறிக்கிறது. சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடுத்தவர்தான் தர வேண்டும். சீமான் தனக்குத்தானே வைத்துக் கொள்ளக்கூடாது. அரசியலில் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடிதான். 3-வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற அவருக்கு மிகச்சிறந்த தலைவர் என்று உலக நாடுகள் எல்லாம் பட்டமளித்து கொண்டிருக்கின்றன. இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும்?" என்றார். இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், "எம்ஜிஆருக்கு புரட்சி நடிகர் என்கிற பட்டத்தைக் கலைஞர் கொடுத்தார். கிருபானந்த வாரியார் பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை கொடுத்தார். எனவே பட்டங்கள் மற்றவர்களால்தான் கொடுக்கப்பட வேண்டும். நமக்கு நாமே பெற்றுக்கொள்வது பட்டமாக இருக்காது. இந்த விஷயத்தில் வானதி சொல்வதில் அர்த்தம் இருக்கிறது" என்றார். தராசு ஷ்யாம் ஆனால், 'சீமானின் இந்த கருத்து விஜய்யை சீண்டும் வகையில் இருக்கிறது' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "ஏற்கெனவே யார் சூப்பர் ஸ்டார் என்பதில் ரஜினிக்கும், விஜய்க்கும் பிரச்சினை இருக்கிறது. இந்தசூழலில்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்கிறார் சீமான். இதன் மூலமாக விஜய்யை ஓரம்கட்டுகிறார். இந்த பேச்சு விஜய் மற்றும் அவரது ரசிகர்களை வெறுப்பேத்தும் வகையிலும், வம்புக்கு இழுக்கும் வகையிலும் இருக்கிறது. மேலும் அரசியல் சூப்பர் ஸ்டார் என தன்னை எப்படி சீமான் சொல்லிக் கொள்கிறார் எனத் தெரியவில்லை. தனியாக தேர்தலை சந்தித்து 8 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார். ப்ரியன் எனவே தனித்துவமான அரசியல்வாதியாக இருக்கிறார். அரசியல் சூப்பர் ஸ்டார் என்றால் பிரபலமாகவும், செல்வாக்கு மிக்கவராகவும், தேர்தல்களில் அதிக வாக்குகளும் பெற்றிருக்க வேண்டும். இதையெல்லாம் தமிழக அரசியலில் சீமான் இன்னும் நிரூபிக்கவில்லை. எனவே அவர் இவ்வளவு சீக்கிரமாக அரசியல் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துக்குத் தகுதியுடைவராக இருப்பாரா என்பது சந்தேகத்துக்குரியதுதான். தன்னைத்தானே அரசியல் சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொள்வது அவரது தன்னம்பிக்கையாக இருக்கலாம். பிறர் அதை நாகரீகமான விஷயமாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதை சீமான் புரிந்துக்கொள்ள வேண்டும்" என்றார். `அரசியல் சூப்பர் ஸ்டார்' - சீறும் சீமான்; சீண்டும் வானதி; என்ன சொல்கிறார்கள்? - Vikatan
-
’வடக்கில் காணிகளை விடுவிப்போம்’
வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார். ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட நேற்று யாழ்ப்பாணம் வந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். அது தொடர்பில் நாம் மதிப்பீடு செய்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை எடுத்துள்ளோம். நிச்சயமாக இந்த விடயத்தில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவோம். நாம் ஏற்கனவே சில வீதிகளை விடுவித்துள்ளோம். காணிகளையும் விடுவிப்போம். இந்த நாட்டு மக்களின் நலன் குறித்து நாம் எப்போதும் கரிசனையுடையவர்களாகவே உள்ளோம் என்றார். (a) Tamilmirror Online || ’வடக்கில் காணிகளை விடுவிப்போம்’
-
அமைச்சர்களின் ஓய்வூதியமும் பறிபோகும்?
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.. இதேவேளை, தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான 150 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு V8 மற்றும் Montero போன்ற சொகுசு வாகனங்களை வழங்குவதில்லை எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான உண்மைகளை மீளாய்வு செய்த பின்னரே, இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.க்களுக்கு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி பயிற்சி வழங்குதல், மக்கள் பிரதிநிதிகளுக்கான வீடுகள் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமைச்சர்களின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் விசேட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் பரிந்துரையை கருத்தில் கொண்டு அமைச்சர்களின் சிறப்புரிமைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனத் தெரியவருகிறது. எம்.பி.க்களின் சிறப்புரிமைகள் தொடர்பில், நேற்று (28), பாராளுமன்ற அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, ”இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கவில்லை” என தெரிவித்தார். “அதுவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான வீடுகள் மற்றும் ஏனைய வசதிகளுக்கான ஏற்பாடுகள் தொடரும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் நடைபெற்ற செயலமர்வில் அவர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவிருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.AN Tamilmirror Online || அமைச்சர்களின் ஓய்வூதியமும் பறிபோகும்?
-
'எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, இந்தியாவின் நட்பின்றி முன்னோக்கி செல்ல முடியாது" - டில்வின் சில்வா
29 Nov, 2024 | 03:37 PM எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, மாறாக இடதுசாரி,ஜனநாயக முற்போக்கு சக்திகளை உள்ளடக்கிய அரசாங்கம் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நட்புறவை பேணாவிட்டால் எங்களால் முன்னோக்கி நகரமுடியாது சீனாவின் உதவியும் எங்களிற்கு தேவை என குறிப்பிட்டுள்ள அவர் சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையிலிருந்;து விலகும் எண்ணம் எதுவுமில்லைஎனவும் தெரிவித்துள்ளார் டெய்லிமிரருக்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் கேள்வி- பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உங்கள் கட்சிக்கு கிடைத்த ஆணையின் முக்கியத்துவம் குறித்து நீங்கள் குறிப்பிட்டீர்கள் ? அவ்வளவு பெரும் ஆணை கிடைத்ததால் நீங்கள் பதற்றமடைந்தீர்கள்? பதில் - நாங்கள் ஆணை காரணமாக பதற்றமடையவில்லை. எங்கள் அரசியல் சக்தி என்பது ஏனையவர்களிடமிருந்து வேறுபட்டது. எங்கள் தனிப்பட்ட நலன்களிற்காக நாங்கள் மக்கள் ஆணையை கோரவில்லை.நாங்கள் அதிகாரத்துடன் பிடிவாதம் மிக்கவர்களாக இருக்கவிரும்பவில்லை. இந்த நாட்டை உயிர்ப்பிக்க மாத்திரம் நாங்கள் விரும்புகின்றோம். பெரும்பான்மையான மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்கும்போதெல்லாம் அதனை நாங்கள் உரிய தீவிரத்துடன் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு நம்மை நிலைநிறுத்த முடியும். நாட்டை கட்டியெழுப்புவதற்கான இந்த ஆணையின் உண்மையான தீவிரமான செய்தியை நாம்புரிந்துகொள்ளவேண்டும். 2 உங்களின் ஸ்தாபகதலைவர் ரோஹன விஜயவீர உட்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவுகூரப்படும் டிசம்பர் மாதத்தில் இந்த ஆணை உங்களிற்கு கிடைத்துள்ளது இந்த ஆணை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? பதில்- அது தற்செயலானது. எங்கள் தோழர்கள் உயிரிழந்த 35 வருட நினைத்தினத்தின் பின்னர் இந்த தேர்தல் வெற்றி கிடைத்துள்ளமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். எங்கள் வெற்றி அதற்கே உரிய நேரத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எங்கள் கட்சி நசுக்கப்பட்டு 35 வருடங்களின் பின்னர் கிடைத்த இந்த வெற்றி குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். கேள்வி - இந்த காலப்பகுதியில் கட்சியுடன் மிக நெருக்கமாக இருந்திக்கின்றீர்கள்? பதில்- ஆம் நான் 1978 இல் ஜேவிபியில் இணைந்தேன். கேள்வி - இந்த சூழமைவில் கட்சி ஸ்தாபிக்கப்பட்டவேளை காணப்பட்ட கொள்கைககளை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? பதில்- மக்களிற்கு நியாயமான சமூகத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம். அதற்காக அரசியலில் ஈடுபட்டோம்,கடந்த காலங்களில் எங்கள் கட்சியை நசுக்க முற்பட்டதை தொடர்ந்து எங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல பல வழிமுறைகளை நாங்கள் கையாண்டோம். சமூகம் பரிணாமவளர்ச்சியடைந்தது, நாங்களும் அதற்கேற்ப வளர்ச்சியடைந்தோம்.ஆயினும் நாங்கள் எங்கள் ஸ்தாபககொள்கையிலிருந்து ,நோக்கங்களில் இருந்து விலகவில்லை. எங்கள் உத்திகளை மாற்றிக்கொண்டு நாங்கள் எங்களை மறுசீரமைத்துக்கொண்டோம். கேள்வி - அதனை பற்றி மேலும் குறிப்பிடமுடியுமா? பதில்- ஒரு சகாப்தத்தில் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான வழியாக ஆயுதப்போராட்டங்கள் கருதப்பட்டன,சூழ்நிலை ஏற்படும்போது நாங்கள் அதனை நாடினோம். பின்னர் உலகில் இது புறக்கணிக்கப்பட்ட ஒரு முறையாக மாறியது.அதன் பின்னர் நாங்கள் ஒரு பொது இயக்கத்தை கட்டமைக்க திரும்பினோம். உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டது,தொழில்நுட்பம் வளர்ந்தது வாழ்க்கை முறைமாறியது. 1965 இல் நாங்கள் கட்சியை உருவாக்கியவேளை காணப்பட்ட மக்களின் தேவைகள் மாறிவிட்டன. அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு முதலில் மக்களின் ஆதரவை பெறவேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் ஆரம்பத்திலிருந்து செயற்பட்டு வந்தோம். ஆரம்பம் முதல் நாங்கள் மக்கள் இயக்கமாக செயற்பட முயன்றோம்.அதனை வெவ்வேறு சொற்பதங்களின் கீழ் முயன்றோம்.இது ஆரம்பத்தில் வெற்றிபெறவில்லை எனினும் 2018 இல் இது வெற்றிபெற்றது. இது ஒரு பொதுஇயக்கம் - கூட்டணி இல்லை.பொது தேவைகளின் அடிப்படையில் கோசங்களை தெரிவு செய்தோம். கேள்வி - உங்கள் கட்சி ஆரம்பம் முதல் சர்வதேச நாணயநிதியத்தை எதிர்த்தது-தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் உங்கள் கட்சி சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையை தொடர தீர்மானித்துள்ளது - இது முரணாண விடயமாக இல்லையா? பதில்- நாங்கள் சவால்களை தவிர வேறு எதனையும் காணவில்லை. நாங்கள் ஆட்சி செய்வதற்கு சிறந்த நிலையிலிருந்த நாட்டை சுவீகரிக்கவி;ல்லை.வங்குரோத்து நிலையில் காணப்பட்ட பல வருட கடன்களை செலுத்த முடியாத நிலையிலிருந்த நாட்டை நாங்கள் சுவீகரித்தோம். சாதகமற்ற உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடு இது. தற்போதைய படுகுழியிலிருந்து வெளிவருவதற்காக சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடமால்இருந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். இந்த உடன்படிக்கை ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது.இது சர்வதேச நாணயநிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கை.எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இதனை மதிக்கவேண்டும். நாங்கள் ஒருதலைப்பட்சமாக விலக முடியாது,அவ்வாறு செய்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். நாங்கள் மக்கள் அளித்த ஆணைபடி எங்கு நெகிழ்வு தன்மையை கடைப்பிடிக்கலாம் என்பது குறித்து ஆராயவேண்டும். கேள்வி - சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையிலிருந்து வெளியேறும் திட்டம் ஏதாவது உள்ளதா? பதில்- இது குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை,இதனை தற்போது செய்ய முடியாது.சில மாற்றங்களுடன் நாங்கள் இந்த உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.நாட்டில் தற்போது ஒரளவு பொருளாதார ஸ்திரதன்மை காணப்படுகின்றது.அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும். கேள்வி - வெளிவிவகார கொள்கை குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளன? சில நாடுகள் உங்களுடைய ஆட்சி இடது சாரி கொள்ளைகளை பின்பற்றும் என கருதுகின்றன-நீங்கள் சீனாவின் பக்கம் சாய்வீர்கள்,இந்தியாவுடனான உறவுகளை விட்டுக்கொடுப்பீர்கள் என சிலர் கருதுகின்றனர். உங்கள் உண்மையான வெளிவிவகார கொள்கை என்ன பதில்- முன்னர் இவ்வாறான கரிசனைகைள வெளியிட்டவர்கள் எங்கள் கட்சி புவிசார் அரசியல் கொள்கைகளை உலக அரசியலை விளங்கிக்கொள்ளவில்லை என தெரிவித்தனர். தற்போது இந்த விடயம் குறித்து அவர்கள் வேறு தொனியில் பேசுகின்றனர். இது அவர்களிற்கு விதியின் திருப்பம். நாங்கள் அரசியலை படித்துக்கற்றுக்கொள்ளும் கட்சி.உலக அரசியலையும் அதன் முரண்பாடுகளையும் புரிந்துகொண்டுள்ளோம்.நாடுகளுடனான வணிக ஒப்பந்தங்களை நம்பியிருக்கும் கட்சி இல்லை. இந்த பிராந்தியத்தில் இந்தியா எங்களின் நட்பு நாடு இந்தியாவுடனான நட்பு இன்;றி நாங்கள் முன்னேறுவது சாத்தியமில்லை, கடினம். எங்கள் பிராந்தியத்தில் சீனாவே அதிக அபிவிருத்தியடைந்த நாடு.எங்களிற்கு சீனாவின் உதவி அவசியம். இந்தியா சீனா போட்டியால் பிரச்சினைகள் உருவாகலாம் நாங்கள் அதில் ஒரு தரப்பு இல்லை. எங்களுடையது வெளிப்படையான சுதந்திரமான வெளிவிவகார கொள்கை.நாங்கள் எவர் பக்கமும் சார்ந்தவர்கள் இல்லை எவருக்கும் சேவை செய்பவர்கள் இல்லை. இதன் காரணமாக நாங்கள் இந்தியா சீனாவுடன் சமநிலையான உறவுகளை கொண்டுள்ளோம். எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, மாறாக இடதுசாரி,ஜனநாயக முற்போக்கு சக்திகளை உள்ளடக்கிய அரசாங்கம் 'எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, இடதுசாரி, ஜனநாயக முற்போக்கு சக்திகளை உள்ளடக்கிய அரசாங்கம் - இந்தியாவின் நட்பின்றி முன்னோக்கி செல்ல முடியாது" - டில்வின் சில்வா | Virakesari.lk
-
'வெள்ளை வேன்' சர்ச்சை - வழக்கிலிருந்து ராஜித உள்ளிட்ட மூவர் விடுவிப்பு
29 Nov, 2024 | 01:56 PM 'வெள்ளை வேன்' குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவரை விடுவிப்பதாக கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வெள்ளை வேனில் ஆட்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டார். அதனையடுத்து, ராஜித சேனாரத்ன மற்றும் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கிலிருந்து தற்போது ராஜித சேனாரத்ன உட்பட மூவரும் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். 'வெள்ளை வேன்' சர்ச்சை - வழக்கிலிருந்து ராஜித உள்ளிட்ட மூவர் விடுவிப்பு | Virakesari.lk
-
முல்லைத்தீவு கடற்கரையில் எழுந்த ஒலி சமிக்ஞை! - சுனாமி குறித்து பீதியடைந்த மக்கள்!
29 Nov, 2024 | 04:41 PM முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக மக்கள் இன்று (29) பீதியடைந்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞைகள் பாெருத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து இன்று மாலை ஒலி எழுந்துள்ளது. அந்த ஒலி சமிக்ஞையை கேட்ட கடற்கரையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுனாமி பேரலை ஏற்பட்டுள்ளதாக அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து, அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், வட்டுவாகல் கடற்படை தளத்தில் ஒத்திகை பயிற்சி செய்வதாகவும் அப்பயிற்சி வேளையிலேயே இந்த ஒலி எழுப்பப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுனாமி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர். ஏதாவது அனர்த்தம் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டால் நாம் முன்கூட்டியே அறிவுறுத்தல் வழங்குவோம் என்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் கூறியுள்ளனர். முல்லைத்தீவு கடற்கரையில் எழுந்த ஒலி சமிக்ஞை! - சுனாமி குறித்து பீதியடைந்த மக்கள்! | Virakesari.lk
-
மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்; மக்களுக்கு எச்சரிக்கை!
யாழ். மருதங்கேணி பாலத்தினூடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தடை 29 Nov, 2024 | 05:37 PM மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் . மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை காரணமாக மருதங்கேணி பாலத்தின் இரு புறங்களும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதனால் பாலத்தின் ஊடாக கனரக வாகன போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. பாலம் மேலும் சேதமடையாத வகையில் பாலத்தின் இருபுறங்களும் தற்போது மண் மூடைகள் அணைக்கப்பட்டுள்ளன. விரைவில் பாலம் புனரமைக்கப்பட்ட பின்னர் கனரக வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார். யாழ். மருதங்கேணி பாலத்தினூடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தடை | Virakesari.lk
-
வடக்கில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் நோய்த்தொற்றுக்கள் பரவும் அபாயம் ; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநரிடம் சிறிதரன் வலியுறுத்தல்
29 Nov, 2024 | 05:44 PM (நா.தனுஜா) வடக்கில் அநேக இடங்களில் வெள்ளநீர் வடிந்தோட இடமின்றித் தேங்கி நிற்பதால், அங்கு வாழும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவாகியிருப்பதாகவும், எனவே இதற்குத் தீர்வுகாண்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் கடந்த ஒருவாரகாலமாக நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையாலும், வெள்ளத்தினாலும் வட, கிழக்கு மாகாணங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வடக்கின் வெள்ளப்பேரிடர் பாதிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது இம்முறை ஏற்பட்டிருக்கும் வெள்ளம் இதற்கு முன்னெப்போதுமில்லாத வகையில் இன்னமும் வடியாமல் தேங்கி நிற்பதாகவும், குறிப்பாக கொடிகாமம், தவசிகுளம் ஆகிய பகுதிகள் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுநரிடம் சுட்டிக்காட்டிய சிறிதரன், இதன் விளைவாக மக்களுக்கு நோய்த்தொற்றுக்கள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவாகியிருப்பதாக விசனம் வெளியிட்டார். அதேபோன்று வடக்கில் வெள்ளநீர் புகுந்த வீடுகள் கிணறுகளை சுத்தப்படுத்தி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்திய அவர், வெள்ளப்பேரிடரால் பாதிக்கப்பட்டு தற்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசியமான உடனடி உதவிகள் வழங்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதுமாத்திரமன்றி திடீர் அனர்த்தத்தின் விளைவாகப் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களது தொழில் மற்றும் அதன் மூலமான வருமானத்தை இழந்திருப்பதால், அவர்களுக்கு குறிப்பிட்டளவு உதவித்தொகையொன்று வழங்கப்படவேண்டியது அவசியம் எனவும் சிறிதரன் வடக்கு ஆளுநர் வேதநாயகனிடம் கேட்டுக்கொண்டார். மேலும் எதிர்வருங்காலங்களில் இவ்வாறான இயற்கைப்பேரிடர்களை எதிர்கொள்வதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. வடக்கில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் நோய்த்தொற்றுக்கள் பரவும் அபாயம் ; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநரிடம் சிறிதரன் வலியுறுத்தல் | Virakesari.lk
-
வட்டுவாகல் பாலத்தை பார்வையிட்ட பிரதியமைச்சர் உபாலி : புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிப்பு
29 Nov, 2024 | 05:38 PM வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன் ஆகியோருடன் முல்லைத்தீவு மாவட்டசெயலர், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை (29) முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தைப் பார்வையிட்டனர். அதேவளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, உரிய அமைச்சுக்களுடன் பேசி புதிய பாலத்தை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்திருந்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) அனர்த்தப் பாதிப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இடம்பெற்றது. கூட்டத்தில் வட்டுவாகல் பாலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், அதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தார். அத்தோடு குறித்த வட்டுவாகல் பாலத்தை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டசெயலர் உள்ளடங்கலாக, திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நேரடியாக பார்வையிட்டு, புதிய பாலத்தை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய ரவிகரன் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும், திணைக்கள அதிகாரிகளும் வட்டுவாகல் பாலத்திற்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டு வட்டுவாகல் பாலத்தின் பாதிப்பு நிலைமைகள் தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்டனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கோரிக்கையை ஏற்று இந்தவிடயத்தை உரிய அமைச்சுக்களுடனும், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுடனும் பேசி புதிய பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. வட்டுவாகல் பாலத்தை பார்வையிட்ட பிரதியமைச்சர் உபாலி : புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிப்பு | Virakesari.lk
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கொழும்பு மாவட்டம் - கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி முடிவுகள்! 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 26,072 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,034 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,090 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 950 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB)- 733 வாக்குகள் கொழும்பு மாவட்டம் - கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி முடிவுகள்!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கொழும்பு மாவட்டம் - கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி முடிவுகள்! 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 13,456 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7,212 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 977 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 556 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB)- 268 வாக்குகள்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
66.48% NPP1,888,267 NATIONAL PEOPLE'S POWER 101 needed for majority 12 Seats 15.89% SJB451,341 SAMAGI JANA BALAWEGAYA 111 needed for majority 2 Seats .19% NDF147,429 NEW DEMOCRATIC FRONT 113 needed for majority 0 Seats 3.68%SLPP104,544SRI LANKA PODUJANA PERAMUNA 111 needed for majority 2 Seats 1.94% SB54,967 SARVAJANA BALAYA