Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. நேரம் பொன்னானது. யாழில் உள்ள மிக மட்டமான கருத்தாளருடன் என் நேரத்தை செலவழிப்பதை விட செய்வதற்கும் வாசிப்பதற்கும் வேறு நல்ல விடயங்கள் உள்ளன. டொட்.
  2. அதென்ன பழக விடுவீர்களா?நடவடிக்கையில் இறங்குவீர்களா எனும் கேள்விகள்? 18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைத்து அவர்களின் தெரிவுகளில் என் செல்வாக்கை செலுத்தும் அளவுக்கு மூடன் கிடையாது நான். மிகச் சிறந்த கல்வியும், அறிவும், சமூக பிரக்ஞையுடனும், பிரச்சனைகளை நேராக எதிர்கொள்ளும் துணிவுடனும் என் பிள்ளைகள் வளர்கின்றன. சில விடயங்களில் அவர்களின் கருத்தையும் ஆலோசனைகளையும் நான் கேட்கும் நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே அவர்களின் தெரிவுகளில் என் செல்வாக்கு அவசியம் இல்லை.
  3. கண்டிப்பாக இது ஒரு செய்திதான். ஏனெனில் 18 வயதுக்கு மேற்பட்ட இருவர் தம் சுயவிருப்பிற்கிணங்க உடலுறவு கொள்வதை மூர்க்கத்தனமாக தடுக்கின்ற, அதை எதிர்க்கின்ற ஒரு சமூகமாகவே இன்னும் யாழ் / தாயக சமூகம் உள்ளது என்பதை இந்த செய்தி மீண்டும் தெளிவாக காட்டுகின்றது. இதில் சம்பந்தப்பட்ட அயலவர்களை தூக்கி உள்ளே போட வேண்டும்.
  4. யாழ் கந்தர்மடம் பகுதிக்கு அண்மையில் நேற்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டு அறையில் அவனது கட்டிலுக்கு கீழ் இருந்து 19 வயது பிரபல பாடசாலை மாணவி ஒருவர் நிர்வாண நிலையில் பிடிக்கப்பட்டார். குறித்த மாணவனின்அறைக்கு இவ்வாறு பல மாணவிகள் பல தடவைகள் வந்து சென்றுள்ளார்கள் எனவும் இது தொடர்பாக குறித்த வீட்டின் சொந்தக்காரியான வயோதிப மாதுவுக்கு அயலவர்கள் புகார் கொடுத்திருந்தார்கள். ஆனால் மூதாட்டி அது தொடர்பாக அக்கறை செலுத்தாது தொடர்ச்சியாக மாணவன் தங்குவதற்கு அனுமதித்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே நேற்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவன் மாஸ்க்ஸ் அணிந்தவாறு பெண் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் தனது றுாமுக்கு கொண்டு செல்வதை அயலவர்கள் அவதானித்துள்ளார்கள். அதன் பின்னரே அயலவர்கள் சிலர் சேர்ந்து குறித்த மாணவனின் அறைக்குள் நுழைந்து நிலத்தில் போடப்பட்டிருந்த மெத்தைக்கு கீழ் நிர்வாண நிலையில் மறைந்து படுத்திருந்த மாணவியை பிடித்ததுடன் குறித்த மாணவனையும் நையப்புடைத்துள்ளனர். அயல்வீட்டுப் பெண்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மாணவி பின்னர் அவளது பெற்றோர் வரவழைக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகத் தெரியவருகின்றது. ஏ.எல் பாடத்தில் வர்த்தகப் பிரிவுக்கு தனிப்பட்ட வகுப்புகள் கொடுப்பதாகக் கூறியே குறித்த பல்கலைக்கழக மாணவன் தனித்தனியே பெண்களை தனது றுாமுக்கு கொண்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மாணவி உடலுறவு கொள்வதற்கு முன்னரே காப்பாற்றப்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள். (ப) நிர்வாண நிலையில் பிடிபட்ட பிரபல பாடசாலை மாணவி!
  5. சங்கு சின்னம் என்பது எனக்கு எழுதித் தரப்பட்ட சின்னமல்ல. அது ஒரு சுயேட்சியின் சின்னமாகும். இலங்கை அரசியல் யாப்பில் தேர்தல் சட்டத்தின்படி, சுயேட்சை குழுவில் யாரும் போட்டியிடலாம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட்டவருமான பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஞானமுத்து சிறிநேசனுக்காக மட்டக்களப்பு மாவட்டம் பாட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி நகர்ப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) தேர்தல் பரப்புகளை மேற்கொண்டிருந்தனர். இதில் அரியநேத்திரனும் கலந்துகொண்டார். பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்ல, வட கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்களுக்கு நாம் தெரிவித்துக்கொள்வது யாதெனில், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு வீடு சின்னத்துக்கு நிச்சயமாக வாக்களிக்க வேண்டும். மட்டக்களப்பை பொறுத்தவரையில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எமது கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினரான ஞானமுத்து சிறிநேசன் அவர்களுக்காக நாம் பிரசாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். அவருக்காக வீடு சின்னத்துக்கும் ஆறாம் இலக்கத்துக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும். அதேவேளை ஏனைய இரு வேட்பாளர்களுக்கும் மக்கள் வாக்களிக்கலாம். ஒரு சிரேஷ்ட உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றபோது அபிவிருத்திகள் மாத்திரமின்றி தமிழ் தேசிய அரசியலை மேற்கொண்டு செல்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்கின்ற காரணத்தினால் நாம் அவருக்காக பரப்புரை செய்து வருகின்றோம். ஒரு கல்விமானாகவும், இலங்கை தமிழ் கட்சியிலே மூத்த உறுப்பினராகவும், கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்து அவர் செயற்பட்டு வருகிறார். சங்கு சின்னம் என்பது எனக்கு எழுதித் தரப்பட்ட சின்னமல்ல. அது ஒரு சுயேட்சியின் சின்னமாகும். இலங்கை அரசியல் யாப்பில் தேர்தல் சட்டத்தின்படி, சுயேட்சை குழுவில் யாரும் போட்டியிடலாம். அதில் நூற்றுக்கு மேற்பட்ட சின்னங்கள் வெளியிடுவார்கள். அதில் வருகின்ற ஒரு சின்னத்தை குறிப்பிட்ட குழுவுக்கு வழங்குவார்கள். இது வழக்கம். அந்த அடிப்படையில் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது நான் விரும்பிய சங்கு சின்னத்தை பெற்றுக்கொண்டேன். அப்போது முப்பது நாட்களுக்கு மாத்திரம்தான் சங்கு சின்னத்தை நான் பாவிப்பதற்கு தேர்தல் ஆணையம் எனக்கு அனுமதி வழங்கியிருந்தது. அந்த சின்னத்தை பயன்படுத்தி பரிபூரணமாக தமிழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் 83 சிவில் அமைப்புகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து என்னை களமிறக்கியதனால் நான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன். நான் அந்த ஏழு கட்சிகளிலோ, 83 சிவில் அமைப்புகளிலோ அங்கத்துவம் வகிக்கவில்லை. நான் இலங்கை தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினர். இன்றும் இலங்கை தமிழரசு கட்சியிலேதான் இருந்துகொண்டிருக்கிறேன். எனவே சங்கு சின்னத்தை ஜனாதிபதித் தேர்தலுக்காக பாவித்தது உண்மை. பின்னர் அந்த சின்னத்தை யார் எடுக்கிறார்கள், எவ்வாறு எடுப்பது என்பது தொடர்பில் தேர்தல் சட்டதிட்டங்கள் உள்ளன. சுயேட்சைக் குழுவாக யார் தேர்தல்களில் போட்டியிட்டாலும் அல்லது அரசியல் கட்சிகள் போட்டியிட்டாலும் சின்னங்களை கோருவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஒரு கட்சி கோருமாக இருந்தால் அவர்களுக்கு அவர்கள் கேட்கின்ற சின்னத்தை வழங்குவார்கள். இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள் ஒரு சின்னத்தை கோருவார்களாக இருந்தால் திருவுளச்சீட்டு மூலம் அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும். ஆகவே, சங்கு சின்னத்தை இப்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற அமைப்பு பெற்றுள்ளது. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றார். சங்கு சின்னம் எனக்கு எழுதித் தரப்பட்ட சின்னமல்ல – அரியநேத்திரன் | Virakesari.lk
  6. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மூன்று வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றும் வாகனங்களும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (21) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பியூலன்ஸ் ஒன்றும், வேன் ஒன்றும், கெப் வாகனம் ஒன்றுமே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு | Virakesari.lk
  7. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தேர்வாகியுள்ளார். இதுவரை காலமும் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் அவர்களினது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் சிவகஜன் தேர்வாகியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக இதுவரை காலமும் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் அவர்களுடைய காலத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதியான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன், கட்டமைப்பு மற்றும் பண்பு மாற்றங்களை நோக்கி மாணவர் ஒன்றியத்தையும், மாணவர்களையும் இட்டுச் சென்றது. மாணவர்களை அரசியற்படுத்தி, அணி திரட்டுவதிலும், மாற்று செயல் வடிவங்களை பல்கலைக்கழகத்திலே நடைமுறைப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தமையும் கடந்த காலங்களில் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழகத்தின் 12 பீடங்களினதும் மாணவர் ஒன்றியங்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைக்கும் தொழிற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளர்! | Virakesari.lk
  8. 21 Oct, 2024 | 04:26 PM மாவீரர் நாளினை உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கும் முகமாக 2024.11.27 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் 2024.11.27 மாவீரர் நாளினை உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கும் முகமாக பணிக்குழுவினால் அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதன் ஆரம்ப கட்டமாக சிரமதான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி | Virakesari.lk
  9. (நா.தனுஜா) தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 1.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது கடந்த செப்டெம்பர் மாதத்தில் -0.2 சதவீதமாகக் கணிசமான அளவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று புள்ளிவிபரத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இக்கணிப்பீட்டின் பிரகாரம் ஓகஸ்ட் மாதம் 2.3 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம், செப்டெம்பரில் 0.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் சகல பொருட்களுக்குமான தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 203.1 ஆகப் பதிவாயிருப்பதுடன், இதனைக் கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவான 204.1 எனும் விலைச்சுட்டெணுடன் ஒப்பிடுகையில் இது 1.0 புள்ளி வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அத்தோடு தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் பிரகாரம் கணிப்பிடப்படும் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் செப்டெம்பரில் -0.2 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. மேலும் கடந்த ஓகஸ்ட் மாதம் 2.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த ஆண்டுக்கு ஆண்டு உணவுப்பணவீக்கம் செப்டெம்பரில் 0.5 சதவீதமாகவும், ஓகஸ்ட்டில் 0.2 சதவீதமாகப் பதிவாகியிருந்த ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப்பணவீக்கம் செப்டெம்பரில் -0.7 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளன. தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் பிரகாரம் செப்டெம்பரில் பணவீக்கம் 0.2 சதவீதமாக வீழ்ச்சி | Virakesari.lk
  10. 18 Oct, 2024 | 01:00 PM கேரதீவு - சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்த நிலையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (18) நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு இப்பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சிற்றூர்தி சேவையில் பயணிக்கும் பயணிகள் மாத்திரம் வாகனப் பயணத்தில் ஈடுபட்டு, குறிப்பிட்ட சில இடங்களில் இறங்கி, நடந்து செல்ல முடியும். மேலும், அப்பாலத்தினூடாக வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கனகர வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையினை பயன்படுத்துமாறும், பாதைக்கான திருத்த வேலைகள் விரைவாக பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறித்த தினத்துக்கு முன்னர் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் அறிவித்துள்ளார். கேரதீவு - சங்குப்பிட்டி பாலத்தினூடாக பயணிக்கத் தடை | Virakesari.lk
  11. 18 Oct, 2024 | 03:51 PM யாரும் எங்களுக்கு ஆதரவு தரமுடியும்.எந்த ஆதரவினையும் நாங்கள் மறுக்கமாட்டோம்.வியாழேந்திரன் ஆதரவு தருவதாக கூறியுள்ளார்.அவருக்கும் எங்களுக்கும் இடையில் எந்த உடன்படிக்கையும் இல்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தனது பிரசாரப்பணிகளை ஆரம்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டதுடன் ஆதரவாளர்களுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டதுடன் இன்று வெள்ளிக்கிழமை (18) பிரசாரங்களையும் ஆரம்பித்துவைத்தார். இதன்போது ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார், ஜனநாயக தேசியக் கூட்டணி சங்குச் சின்னத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்று அதிக ஆசனங்களைப் பெற்று தமிழ்த்தேசியத்திற்கும் எங்களுடைய மக்களின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் எங்களுடைய கட்சிக்கு அதிகளவான வாக்குகள் கிடைப்பதற்கு மாமாங்கேஸ்வரர் உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கையோடு பிரசாரத்தை தொடங்க இருக்கின்றோம். மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அந்த ஆட்சி மாற்றத்தின் பால் தெற்கிலே மக்கள் அணிதிரளத் தொடங்கியிருக்கின்றார்கள். வடக்கிலே தமிழ்த் தேசியத்திற்காக அணிதிரள இருக்கின்றார்கள். மாற்றம் ஒன்று இந்த நாட்டிற்குத் தேவையென தெற்கிலே உள்ள மக்கள் விரும்பியிருக்கின்றார்கள். அதுபோன்று வடகிழக்கிலே உள்ள மக்களுக்கும் ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தின் அடிப்படையில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் சங்குச் சின்னத்திற்கு வடகிழக்குத் தமிழ் மக்கள் அமோகமான ஆதரவை வழங்கி மாற்றம் ஒன்றை உருவாக்குவதற்குத் தயாராக இருக்கின்றார்கள். வடகிழக்கிலும் ஒருசிலர் என்.பி.பி என்ற முகமூடியுடன் வரும் ஜே.வி.பிக்கு ஆதரவு வழங்குவதற்கு இருக்கின்றார்கள். அவர்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். தெற்கிலே இருக்கின்ற மக்களது தேவைகள் வேறு,வடகிழக்கிலே இருக்கின்ற மக்களது தேவைகள் வேறு. இங்கு ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் வேறு. தெற்கிலே அரகல போன்ற போராட்டங்கள் நடைபெற்றது. அதன் அடிப்படையில் மாற்றம் உருவாகியது. ஊழலற்ற அரசொன்று உருவாக வேண்டும், நடுத்தர மக்கள் சுதந்திரமாகவும் தன்னிறைவோடும் வாழவேண்டும் என்ற நோக்கத்திலே மாற்றத்தை கொண்டுவந்திருக்கின்றார்கள். ஆனால் வடகிழக்கிலே தமிழ் மக்கள் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை, சுயாட்சியை நாங்கள் உறுதிப்படுத்தி எங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள். அந்த மாற்றத்தை ஜனநாயக தேசியக் கூட்டணி மாத்திரமே சங்குச் சின்னத்திலே போட்டியிடும் வேட்பாளர்கள் மாத்திரமே உருவாக்கிக் கொடுப்பார்கள் என்பதை நான் உறுதியாகக் கூறுவதுடன் தமிழ்த்தேசியம் பேசும் ஏனையவர்கள் கூட கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே பெரும்பான்மையினக் கட்சிகளுக்குப் பின்னால் அவர்களை வெல்ல வைப்பதற்காக பாடுபட்டார்களே ஒழிய தமிழ்த் தேசியத்தின்பால் பொது வேட்பாளர் ஒருவரை நாங்கள் நிறுத்தி தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கி தமிழ் மக்களின் ஆதங்கத்தை வெளியிலே கொண்டுவருவது மாத்திரமல்லாமல் நாங்கள் ஒற்றுமையாக தற்காலத்திலும் எதிர்காலத்திலும் செயற்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற வேண்டும் என்பதற்கு எதிராகவே செயற்பட்டார்கள். நாங்கள் தமிழ் மக்களின் ஒற்றுமையை கருத்திற்கொண்டு ஐந்து கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணியின் சின்னமான சங்குச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எதிர்காலத்தில் தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்பாத,தமிழ்த்தேசியத்திற்கு எதிராக இருந்துகொண்டு தமிழ்த்தேசியம் பேசும் அவர்களுக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்படுவதற்கு ஒற்றுமையின் சின்னமான, தமிழர்களின் சின்னமான சங்குச்சின்னத்திற்கு வாக்களித்து அமோகமான வெற்றியை கொடுக்க வேண்டும். வியாழேந்திரனுக்கும் எங்களுக்கும் இடையே எந்த உடன்படிக்கையும் இல்லை.வடகிழக்கில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு மட்டக்களப்பில் மக்களின் ஆதரவு பெருகியிருக்கின்றது.அதனால் தமிழ் தேசியம் பேசும் கட்சிகளும் கூட எமது கூட்டணிக்கும் சங்கு சின்னத்திற்கும் எதிரான பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். சங்கு சின்னத்திற்கு பெரும் ஆதரவு குறித்து சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. வியாழேந்திரன் போட்டியிட்ட கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது,அந்த வகையில் அவர் ஆதரவு தருவதாக கூறுகின்றார்.எவர் ஆதரவு தந்தாலும் நாங்கள் மறுக்கமாட்டோம்.யாராவது ஆதரவளிக்கு முன்வரும்போது அதனை வேண்டாம் என்று கூறமுடியாது.அந்த வகையில் வியாழேந்திரன் ஆதரவு தருவதாக கூறியிருக்கின்றார்.அவருக்கும் எங்களுக்கும் எந்தவிதமான உடன்படிக்கையும் இல்லையென்பதை உறுதியாக கூறுகின்றேன். வியாழேந்திரனிற்கும் எங்களுக்கும் இடையில் எந்த உடன்படிக்கையும் இல்லை - கோவிந்தன் கருணாகரம் | Virakesari.lk
  12. 'ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்' - உறுதிப்படுத்திய இஸ்ரேல் புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் இன்று (வியாழன், அக்டோபர் 17) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். சின்வாரை அவர் ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளை’ என்று வர்ணித்தார். மேலும் "இது இஸ்ரேலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ராணுவ மற்றும் தார்மீக சாதனை. ஈரான் தலைமையிலான தீவிர இஸ்லாத்தின் தீய அச்சுக்கு எதிராக முழு சுதந்திர உலகிற்கும் கிடைத்த வெற்றி,” என்றார் காட்ஸ். "சின்வாரைக் கொன்றது பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்கும் வாய்ப்பைத் திறக்கிறது. இது காஸாவில் ஹமாஸ், மற்றும் இரானின் கட்டுப்பாடு இல்லாத ஒரு புதிய மாற்று யதார்த்தத்திற்கு வழி வகுக்கும்,” என்றார். முன்னதாக, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் கொல்லப்பட்டாரா என்பதற்கான ‘சாத்தியக்கூறுகளைச் சரிபார்த்து வருவதாக’ இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது. இது ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு மிகப்பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. Hamas Leader Yahya Sinwar: Israel ஹமாஸ் தலைவரை கொன்றதாக உறுதிப்படுத்தியது - BBC News தமிழ் ‘ஒரு வருடகால தேடுதல்’ இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு வருடகால தேடுதலுக்குப்’ பிறகு நேற்று (அக்டோபர் 16) காஸாவின் தெற்குப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டார்’, என்று கூறப்பட்டுள்ளது. சின்வார் இன்று (அக்டோபர் 17) கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதை அடுத்து இது வந்துள்ளது. இந்த முரண்பாட்டிற்கான காரணம் தெளிவாக இல்லை. இஸ்ரேல் பாதுகாப்புப் படை, தனது அறிக்கையில், சின்வார் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலைத் திட்டமிட்டு செயல்படுத்தியதாகவும், ‘பல இஸ்ரேலியர்களின் கொலை மற்றும் கடத்தலுக்குப் பொறுப்பானவர்’ என்றும் கூறுயிருக்கிறது. "காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகளில், தரைக்கு மேலேயும் கீழேயும் காஸாவின் பொதுமக்களுக்குப் பின்னால் மறைந்திருந்த யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்," என்று அது கூறுகிறது. ஹமாஸின் மூத்த உறுப்பினர்களது சந்தேகத்திற்கிடமான இடங்களைச் சுட்டிக் காட்டிய உளவுத் தகவலைத் தொடர்ந்து தெற்கு காஸாவில் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. அப்பகுதியில் இயங்கி வரும் 828-வது படைப்பிரிவைச் சேர்ந்த இஸ்ரேலிய வீரர்கள் ‘மூன்று பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு கொன்றனர்’ என்று இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சின்வார் என்பதை உறுதிப்படுத்தியது.
  13. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த வியாழேந்திரன், கிழக்கு மாகாணத்தில் வலிமையான ஒரு அரசியல் கட்டமைப்பினால்தான் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கமுடியும் என்ற அடிப்படை தத்துவத்துடனேயே 2018ஆம் ஆண்டு முற்போக்கு தமிழர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று வரையில் அந்த நோக்கத்தினை கருத்தில்கொண்டே செயற்பட்டுவருகின்றோம். தேவையற்ற விமர்சனங்களைப் புறந்தள்ளி ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு செயற்பட்டுவந்ததன் காரணமாக இரண்டு தேர்தல்களில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். அந்தவகையில் நாங்கள் எதிர்கொண்ட மூன்றாவது தேர்தல் இந்த பாராளுமன்ற தேர்தல். இந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் களம் காணயிருந்தோம். துரதிர்ஷ்டவசமாக எங்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இலங்கையில் 70க்கும் அதிகமான கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக நாங்கள் போட்டியிடவிருந்த ஜனநாயக தேசிய கூட்டணியினுடைய வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் நாங்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது. காரணம் எங்களது பலமான கட்டமைப்பு. அந்த கட்டமைப்பில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணிக்கின்ற கழக உடன்பிறப்புகள். சிறு விடயம் கவனத்தில்கொள்ளாததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆளும் பெரும்பான்மை கட்சியில் எட்டு தமிழர்களை மட்டக்களப்பில் களமிறக்கியவர்கள் நாங்கள். அதில் நாங்கள் வெற்றியும் கண்டோம்.பெரும்பான்மை கட்சிகளில் குறிப்பாக மூவினங்களையும் சார்ந்தவர்கள் இணைந்துசெயற்படுவார்கள். கடந்த காலத்தில் எம்மவர்கள் சேர்க்கும் வாக்கில் எம்மவர்கள் வெற்றிபெறுவதில்லை. ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வெற்றிபெற்றுவிடுவார்கள். அதுவே மட்டக்களப்பின் வரலாறு. அந்த வரலாற்றினை முதன்முறையாக உடைத்தவர்கள் நாங்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வெற்றிபெற்று அதிலிருந்து வெளியேறி வேறு கட்சியில் கேட்டு வெற்றிபெற்றதாக எந்த சரித்திரமும் இல்லை. ஆனால் வீட்டுச்சின்னத்திலிருந்து வெளியேறி வெற்றிபெற்ற முதலாவது நபர் நான்தான். அதுவொரு வரலாற்றுப் பதிவு. வீட்டுச்சின்னம் இல்லாமல் அரச கட்சியில் கடந்தகாலத்தில் போட்டியிட்டு போட்டியிட்டு தோல்வி கண்டவர்களே வீட்டில் கேட்டு வெற்றிபெற்றார்கள். எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்களில் நாங்கள் களமிறங்குவோம். இடைப்பட்ட காலத்தில் நாங்கள் இல்லாத இடைவெளியும் உணரப்படும். தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையான நீதியான தரப்படவேண்டிய விடயங்களைப்பற்றியே நாங்கள் பேசுவோம். இனவிகிதாசாரப்படி நான்கு தமிழ் பிரதிநிதிகள் மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்படவேண்டும். அந்த அடிப்படையில் ஒரு தமிழ் கட்சிக்கு ஆதரவினை வழங்கலாம் என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளோம். கழக உறுப்பினர்களின் அனைவரது கருத்தினையும் எடுத்து ஒரு தீர்மானத்தினை எடுத்திருக்கின்றோம். இந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் முற்போக்கு தமிழர் கழகமானது முழுமையாக எங்களது ஆதரவினை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். நாங்கள் ஒரு தனிப்பட்ட நபருக்கு எங்களது ஆதரவினை வழங்கவில்லை. சங்கு சின்னத்தில் அவர்கள் களமிறங்கியுள்ளார்கள். அவர்களுக்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம். தமிழ் பிரதிநிதித்துவத்தினை பாதுகாப்பதற்காக தயவுசெய்து முழுமையான ஆதரவினை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முற்போக்கு தமிழர் கழகத்தின் ஆதரவு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு - சதாசிவம் வியாழேந்திரன் | Virakesari.lk
  14. Published By: Vishnu 17 Oct, 2024 | 11:23 PM வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் வியாழக்கிழமை (17) பொது அமைப்புக்களால் ஒழுங்கு படுத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது. அக்கூட்டத்தில் இராணுவ வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடி யேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதன் போது, காணி தொடர்பாகவும் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் பல கோரிக்கைகளை முன் வைத்து பலர் தமது மன ஆதங்கங்களையும் வேதனைகளையும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவ‌ட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரரிடம் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர். அதன் போது கருத்து தெரிவித்திருந்த சந்திரசேகர், வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அது தொடர்பான விவரங்களையும் கோரியுள்ளார். எனவே வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள காணிகள் பெரும்பாலானவற்றை விடுவித்து தருவதாக அங்கு கூடியிருந்த பொது அமைப்புக்கள் மற்றும் மக்களிடம் உறுதிமொழி அளித்தார். வலி. வடக்கு காணிகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் - இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk
  15. புதுடெல்லி: கணவனால் மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானால் அது குற்றமாகக் கருத வேண்டுமா என்பது குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. இதில் கவனிக்கத்தக்க வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 18 வயதுக்குக் குறையாத மனைவியுடன் கணவன் கட்டாய பாலுறவு கொள்வது அல்லது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமல்ல என பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 375, விதிவிலக்கு 2 கூறுகிறது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தீர்ப்பளிக்கக் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக, இந்த விவகாரத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில், திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்குவது திருமண உறவுகளை பாதிக்கும்; கடுமையான இடையூறுகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இதனை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுமாறு மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, அதை இறுதியில் பார்ப்போம் என குறிப்பிட்டார். அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (All India Democratic Women's Association) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கருணா நண்டி, பாலியல் செயலில் பெண்ணின் சம்மதம் மிகவும் முக்கியம் என வாதிட்டார். அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி, ஒருவர் தன் மனைவியிடம் பலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டதாக நீதித் துறை அறிவித்தால் அது புதிய குற்றமாக உருவாக்குமா என்று கேள்வி எழுப்பினார். பாலியல் வன்கொடுமை என்பதற்கான வரையறையை எவ்வாறு நிர்ணயிப்பது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து தனது வாதத்தை முன்வைத்த கருணா நண்டி, "பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 375-ல் உள்ள விதிவிலக்கு 2, பெண்ணின் உரிமையை பறிக்கிறது. பாலியல் வன்கொடுமையால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு, கணவனாக இருந்தாலும், வேறு நபராக இருந்தாலும் ஒன்றுதான். ஒரு பெண் லிவ்-இன் உறவில் இருந்தால், சம்மதமின்றி பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது. ஆனால், ஒரு திருமணமான பெண் மீண்டும் மீண்டும் மிகக் கொடூரமான செயலுக்கு கணவனால் உள்ளானால் அது பாலியல் வன்கொடுமை அல்ல என்று சட்டம் கூறுகிறது. திருமண உறவில் இருக்கும் பாலியல் வன்கொடுமை விதிவிலக்கு, பாலின சமத்துவத்தை மீறுவதாக உள்ளது. பாலியல் வன்கொடுமையை பிஎன்எஸ் குற்றமாகக் குறிப்பிடுகிறது. ஆனால், கணவன் என்ற அந்தஸ்தின் அடிப்படையில் அதே குற்றத்தில் ஈடுபட்டால் அவரை முழுவதுமாக குற்றத்தில் இருந்து விலக்கி வைக்கிறது. எனவே, இதனை அரசியலமைப்புக்கு ஏற்ப கொண்டு வர வேண்டும். இங்கிலாந்தின் தலைமை நீதிபதியாக 1736-ல் இருந்த மேத்யூ ஹேலி, அளித்த தீர்ப்புதான் இன்றைக்கும் இந்த விவகாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அவர் தனது தீர்ப்பில், கணவன் - மனைவியை ஓர் உடல் என கருதினார். கணவன் பாலியல் வன்கொடுமை குற்றவாளியாக இருக்க முடியாது என்றும் அவர் அளித்த தீர்ப்பு கூறுகிறது. பரஸ்பர திருமண சம்மதம் மற்றும் ஒப்பந்தத்தின் மூலம் மனைவி, கணவனுக்கு உரிமையை கொடுத்துள்ளார் என அதில் உள்ளது. எனனும், மனைவியை கணவன் பாலியல் வன்கொடுமை செய்வதை 2003-ல் குற்றமாக இங்கிலாந்து மாற்றிவிட்டது" என குறிப்பிட்டார். மனைவியுடனான பாலியல் வன்கொடுமையை குற்றமாகக் கருதுவது திருமண உறவை பாதிக்கும் என மத்திய அரசு கூறி இருப்பதற்கு பதில் வாதத்தை முன்வைக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார். இதையடுத்து வாதிட்ட கருணா நண்டி, திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பது திருமணம் எனும் நிறுவனத்தை அழிக்காது என்றும், திருமணம் தனிப்பட்டது; நிறுவன ரீதியானது அல்ல என்றும் குறிப்பிட்டார். மனைவியை கணவன் பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றமா? - உச்ச நீதிமன்றத்தில் முக்கிய வாதங்கள் | Marital rape SC hearing: Harm no different if raped by stranger or husband - hindutamil.in
  16. தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் திறந்து வைப்பு! தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் இன்று மாலை ஏ9 வீதி ,சாவகச்சேரி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமாகிய இராமலிங்கம் சந்திரசேகரம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதோடு யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர்களும் மேள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு அலுவலகத்தின் நாடாவை வெட்டி திறந்து வைத்தார் முதன்மை வேட்பாளர் கருணாநாதன் இளங்குமரன்,மற்றும் முன்னாள் மருத்துவ நிர்வாக அதிகாரி எஸ்.சிறீ.பவனந்தராஜா,அதிபர் ஜெயச்சந்திர மூர்த்தி ரஜீவன்,தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி மகளீர் அணி அமைப்பாளர் வெண்ணிலா இராசலிங்கம்,ஆசிரியர் காரளசிங்கம் பிரகாஸ்,மென்பொருள் பொறியாளர் உதயகுமார் கீர்த்தி ஆகிய வேட்பாளர்கள் மற்றும் பிரதேச மக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். (ப) தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் திறந்து வைப்பு! (newuthayan.com)
  17. கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் இருந்தவர்களை புறந்தள்ளி கறைபடியா கரங்களுடைய இளையோரை நாடாளுமன்றுக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தகுதியான வேட்பாளர்களுடன் களமிறங்கியுள்ளோம். இந்த தேர்தல் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தியல் காணப்படுகிறது. தென்னிலங்கை மக்கள் பழைய ஆட்சியாளர்களை துடைத்தெறிந்து, ஊழலற்ற, நேர்மையான அரசியல்வாதிகளை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளார்கள். அதனால், தென்னிலங்கையில் இருக்கக்கூடிய பல மூத்த அரசியல்வாதிகள் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். ஆனால், வடக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்து போட்டியிட வேண்டும் என்ற பேரார்வத்துடன் காணப்படுகின்றனர். வடக்கில் எமது கட்சித் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மாத்திரம் தான் தேர்தலில் இருந்து விலகி இளையோரிடம் கையளித்துள்ளார். மற்றையவர்கள் 15 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்றில் இருந்தும் மக்களை எதுவும் செய்யாத நிலையிலும் தொடர்ந்தும் ஆசைப்படுகின்றனர். கடந்த காலங்களில் இருந்தவர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும். வடக்கிலும் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதனால் தான் கற்றறிந்த இளையோரை நாங்கள் களமிறக்கியுள்ளோம். தமிழ் மக்கள் எங்களுக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் தர வேண்டும். நாங்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் செயற்படுவோம். தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் ஆளுமைமிக்க ஆற்றல் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகள் ஒரு கண் எனில் நீடித்த பொருளாதாரமும் மற்றைய கண்ணாக இருக்க வேண்டும். இரண்டு கண்களும் தமிழ் மக்களுக்கு தேவையானது. நாம் இரண்டையும் சேர்த்தே முன்னெடுத்துச் செல்வோம். கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றை நிர்வகித்துள்ளோம். அதில் எங்களுடைய நிர்வாக ஆளுமைகளை காட்டியுள்ளோம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முன்னெடுத்துச் சென்ற அதேவேளை, பொருளாதாரத்தையும் முன்னெடுத்துச் சென்றோம். நாம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றில் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில்தான் கொரோனா தொற்றும் அதை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டன. அவ்வாறான இடர் மிகுந்த காலப்பகுதியில் நாங்கள் 45 உறுப்பினர்களை கொண்ட மாநகர சபையில் 10 உறுப்பினர்களுடன் வினைத்திறனுடன் செயற்பட்டோம். நாடு தற்போதும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளாத போதிலும் தற்போதும் தென்னிலங்கை கட்சிகள் இனவாத சிந்தனைகளுடன்தான் காணப்படுகின்றன. எனவே தென்னிலங்கை கட்சிகள் வடக்கில் கால் பதிப்பது ஆபத்தானது என மேலும் தெரிவித்தார். அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் அக்கட்சியின் வேட்பாளரான சட்டத்தரணி உமாகரன் இராசையா கருத்து தெரிவிக்கும்போது, தமிழர்களின் அடிப்படை உரிமைகளை கைவிட்டு விட்டு, பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல முடியாது. ஆங்கிலேயர்கள் இலங்கையில் இருந்து செல்லும்போது தமிழ் மக்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். ஆனால், அவர்களிடம் அரசியல் பலம் அன்று இருக்கவில்லை. பின்னரான கால பகுதியில் தமிழர்களிடம் கல்வியுடன் பொருளாதார பலமும் காணப்பட்டது. அப்போதும் அவர்களிடம் அரசியல் பலம் இல்லாததால் தான் கல்வி, பொருளாதாரம் என அனைத்தையும் இழக்க வேண்டி ஏற்பட்டது. தற்போதும் எமக்கான அரசியல் பலம் போதாது. எமக்கான தனித்துவமான அரசியல் பலம் வேண்டும். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை இழந்தும் இலட்சக்கணக்கான மக்களை இழந்து ரில்லியன் கணக்கான சொத்துக்களையும் இழந்துள்ளோம். அப்பேற்பட்ட நிலையில் எங்கள் இலட்சியங்களை தூக்கி ஏறிய முடியாது. தற்போதைய அரசாங்கம் இனவாதம் பேசவில்லை என கூறுகின்றார்கள். ஆனால் அடுத்து வருவோரும் அவ்வாறு இருப்பார்கள் என்றில்லை. மீண்டுமொரு இனக்கலவரமோ, தனி சிங்கள சட்டமோ கொண்டுவரப்பட்டால் நாம் எமக்கான தனித்துவமான அரசியல் பலம் இல்லாது அதனை எவ்வாறு கையாள்வது? ஆகவே மாற்றத்தை விரும்புவோர் எமக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார். இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன் | Virakesari.lk
  18. Published By: Digital Desk 7 17 Oct, 2024 | 05:16 PM ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகம் இன்று வியாழக்கிழமை (17) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் திறந்துவைக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால் இந்த கட்சி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகம் கிளிநொச்சியில் திறப்பு! | Virakesari.lk
  19. தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பிரதேசங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சில பகுதிகளில் தேங்காய் மொத்த விலை 160க்கு கிடைப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் தற்போது காணப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு | Virakesari.lk
  20. 17 Oct, 2024 | 05:59 PM கடந்த ஆட்சிக்காலத்தில் நாம் புதிய மதுபானசாலைக்கான அனுமதியை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டதாக பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்படுகிற ஆதாரபூர்வமற்ற தகவல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (17) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு அதன் அடுத்தபடியாக பாராளுமன்ற தேர்தலை நோக்கி நாடு நகர்ந்து செல்கிறது. இந்நிலையில் என் மீதும் எனது தந்தையார் மீதும் பழி சுமத்தும் நோக்கில் சிலர் எந்த விதமான ஆதாரமுமற்ற வீண் குற்றச்சாட்டுகளை தமது சுயலாப அரசியல் தேவைகளுக்காக முன்வைத்து வருகின்றனர். இந்த ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது யார் என பார்த்தால் கடந்த காலத்தில் எம்மோடு நேரடியாக போட்டி போட்டு வெல்ல முடியாதவர்களே இவ்வாறான பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். ஒரு சில அரசியல்வாதிகளும், எமது சமூக சேவைக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களுமே இவ்வாறு பொய்யாக வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர். இவ்வாறானவர்களின் அர்த்தமற்ற பேச்சுகளுக்கு பதில் கூறவேண்டிய தேவை எமக்கில்லை. ஆனாலும் நம் மக்களை தெளிவுபடுத்தவேண்டிய தேவை நமக்குண்டு. அதனால்தான் சத்திய கடதாசி ஊடாக நாம் எமது ஆதாரங்களை முன்வைத்து, புதிதாக எந்த ஒரு மதுபானசாலை அனுமதியையும் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை என்பதை மக்களுக்கு நிரூபித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். மதுபானசாலை விவகாரத்தில் தொடர்ந்தும் ஆதாரபூர்வமற்ற தகவல்கள்; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அங்கஜன் சீற்றம் | Virakesari.lk
  21. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. [எ] அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்! (newuthayan.com) அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்! (newuthayan.com)
  22. 11 Oct, 2024 | 01:10 PM சவுதி அரேபியாவின் ரியாத் நகரை நோக்கிப் பயணித்த விமானம் ஒன்று சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் தொழினுட்ப கோளாறினால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாது. இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான யு.எல் - 265 விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து, இந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் சிலர் வேறு விமானத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், ஏனையவர்கள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொழினுட்ப கோளாறுக்குள்ளான விமானத்தை பழுதுபார்க்கும் நடவடிக்கைகளைப் பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நாடுவானில் தொழில்நுட்ப கோளாறு ; மீண்டும் கட்டுநாயக்கவிற்கு திரும்பியது விமானம் | Virakesari.lk
  23. மதுபானசாலை விவகாரம் - யாழ் வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி.க்களுக்கு கீதநாத் காசிலிங்கம் சவால் 11 Oct, 2024 | 02:06 PM யாருக்கும் மதுபானசாலைஅனுமதி பெற்றுக்கொடுக்கவில்லை என வெளிப்படையாக வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் சவால் விடுத்துள்ளார். இன்று அவர் பதிவிட்டுள்ள சமூக வலைத்தள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். “நான் என்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டேன். உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. அத்துடன் நான்; எனக்கோ என்னுடைய குடும்பத்துக்கோ, உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ அல்லது எனக்குத் தெரிந்த யாருக்கோ மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தைக் கோரவோ அல்லது மத்தியஸ்தம் பண்ணவோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி வெளிப்படையாக ஒரு வாக்குமூலத்தை வழங்குகிறேன். மாவட்டத்தின் என் சக வேட்பாளர்கள் குறிப்பாக பழைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதையே செய்ய வேண்டும் என நான் சவால் விடுக்கிறேன். அண்மைய மாதங்களில் வடக்கில் பல மதுபானக்கடைகள் தோன்றியதன் காரணமாக நாளாந்தக் கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுபானசாலை விவகாரம் - யாழ் வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி.க்களுக்கு கீதநாத் காசிலிங்கம் சவால் | Virakesari.lk
  24. 11 Oct, 2024 | 04:19 PM எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 4 சுயேட்சைக் குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சரத் சந்திர தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் 12 மணியளவில் நிறைவுக்கு வந்திருந்தது. அந்த வகையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த வகையில் இம்முறை வன்னி தேர்தல் மாவட்டத்தில் 24 அரசியல் கட்சிகள், 27 சுயேட்சைக் குழுக்கள் என மொத்தமாக 51 குழுக்கள் வேட்புமனுக்களை கையளித்திருந்தன. அவற்றில் இரண்டு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சை குழுக்களினது விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் தேர்தல் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, எங்கள் மக்கள் சக்தி மற்றும் சிறிரெலோ கட்சியின் ப.உதயராசா போட்டியிடவிருந்த ஜனநாயக தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 47 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் 6 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வன்னியில் 47 கட்சிகள், சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு; 423 பேர் களத்தில்! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.