Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. யாழ்ப்பாணம் 3 மணி நேரம் முன் "கார்த்திகை மலரே" இசைப்பாடல் வெளியீடு! நல்லூர் கிட்டு பூங்காவில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ள 'கார்த்திகை வாசம்' மலர்க் கண்காட்சியில் நேற்றய தினம் 'கார்த்திகை மலரே!' என்ற இசைப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இசைப்பாடலை வெளியீடு செய்ய சிரேஷ்ட இசையமைப்பாளர் க.சத்தியன் பெற்றுக்கொண்டார். தமிழகத்தின் பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய "கார்த்திகை மலரே! மலர்வாயா? எங்கள் காத்திருப்பை நீ அறிவாயா?, கல்லறை சேர்ந்த ஈகியர்கள் கண்ட கனவினைக் கண்ணில் தருவாயா?" என்று தொடங்கும் பாடலை ஈழத்தின் பாடகி ஜெயபாரதி பாடியுள்ளார். பூவன் மதீசன் இசையில் உருவான இப்பாடலின் ஒலிப்பதிவை மதி மனு மேற்கொண்டுள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தயாரிப்பான கார்த்திகை மலரே! என்ற இசைப்பாடலை இசை பாட பாடல் வரிகளில் எவ்வித எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாமல் எவரும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "கார்த்திகை மலரே" இசைப்பாடல் வெளியீடு!
  2. 24 Nov, 2025 | 02:53 AM மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு புத்தடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமை பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் விசுவமடு மேற்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள். விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரி புஷ்பராணி ஏற்றி வைத்ததனை தொடர்ந்து மாவீரர்களின் பொது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இதன்போது கலை நிகழ்வுகளும் மாவீரர்களின் வீரம் தியாகம் அர்ப்பணிப்பு தொடர்பிலான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கப்பட்டன. விசுவமடு மேற்கு, கிழக்கு மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு ஏற்பாட்டு குழுவின் தலைவரும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளருமான வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் கு.அகிலன், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். விசுவமடுவில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு | Virakesari.lk
  3. 24 Nov, 2025 | 03:40 AM நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஞாயிற்றுக்கிழமை (23) கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 2012ம் ஆண்டு ஆழம் கூடிய டைவிங் நீச்சல் தடாகம் யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. சில வருடங்களிலேயே குறித்த நீச்சல் தடாகம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. தற்போதைய அரசாங்கம் மீளவும் குறித்த நீச்சல் தடாகத்தை புனரமைக்க நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை (23) குறித்த கல்லூரிக்கு விஜயம் செய்த விளையாட்டு துறை அமைச்சர் நீச்சல் தடாகத்தை பார்வையிட்டதுடன் டைவிங் நீச்சல் தடாகம் எனும் போது ஒரு குறிப்பிட்டளவானவர்களே பயன்படுத்துவார்கள் என்றும் அதே நேரம் சாதாரணமான ஆழம் குறைந்த நீச்சல் தடாகமாக இதை மாற்றினால் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவார்கள். பொது நிதியில் செய்யும் போது அதிகளவிலானோருக்கு அது நன்மை அளிக்கும் என்று முடிவு எடுத்து அவ்வாறு செய்யலாம் என யோசனையை முன் வைத்தார். குறித்த முயற்சிக்கு யாழ் மத்திய கல்லூரி மட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு வேறுபட்ட நிலைப்பாடு காணப்பட்டது. இந்நிலையில் இன்று மத்திய கல்லூரிக்கு சென்ற அமைச்சர் தனது நிலைப்பாட்டை அங்கு தெரிவித்தபோது உள்ளவாறே புனரமைத்து தருமாறு ஒரு தரப்பும் சாதாரண நீச்சல் தடாகமாக மாற்றி புனரமைத்தாலும் பிரச்சினை இல்லை என கூறி அமைச்சரின் கருத்தையும் ஏற்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. குறித்த புனரமைப்புக்கான நினைவுக் கல் திரை நீக்கம் செய்ய வைக்கப்பட்டிருந்த நிலையில் நீச்சல் தடாகம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றி விட்டு, திரை நீக்கம் செய்யமாலே விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். பாடசாலை அதிபர் உள்ளிட்ட சிலர் அமைச்சரை திரை நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி கேட்ட போதும் அமைச்சர் அதனை மறுத்தார். பாடசாலை மட்டத்தில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டிய பின்னர் அதற்கேற்றவாறு புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்து அமைச்சர் வெளியேறினார். இதன்போது அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட செயலாளர் மருதலிஙக்ம் பிரதீபன், யாழ் மாநகர சபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி என பலரும் கலந்து கொண்டனர். யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு குழப்பம்; நினைவுக்கல் திறப்பு நிகழ்வை தவிர்த்து அமைச்சர் வெளியேறு | Virakesari.lk
  4. 24 Nov, 2025 | 12:37 PM வடக்கில் நீண்ட காலம் அபிவிருத்தி நடக்கவில்லை. இங்கிருந்தவர்கள் வாக்குகளை பெற்று தங்கள் வேலைகளை செய்தார்கள் என என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டிய பின்னர் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கோரிக்கையால் இதனை நாம் செய்யவில்லை. நாமாக உணர்ந்து இதனை இன்று செய்துள்ளோம். அமைச்சராக நான் முதன்முதலாக பயணத்தை மேற்கொண்டது யாழ்ப்பாணத்துக்கு தான். அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திற்கு என்ன தேவை என தீர்மானித்தோம். என்னுடைய சொந்த மாவட்டம் காலி. அமைச்சராக இன்னமும் அந்த மாவட்டத்திற்கு போகவில்லை. தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த நாம் முயற்சிக்கிறோம். எமக்கு அதிகாரம் தொலைவில் இருந்தபோதும் நாம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்தோம். சிங்கள தமிழ் முஸ்லிம் என்பதல்லக மனிதராக ஒன்றாக இருக்க வேண்டும். பிமல் ரத்நாயக்க ஆயிரம் தடவை யாழ்ப்பாணத்துக்கு வந்திருப்பார். 2013 முதல் அவர் இங்கு வந்து செயற்படுகிறார். எனவே வாக்குகளுக்கவோ அரசியல் தந்திரத்துக்காகவோ இதனை நாம் செய்யவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் தனி செயற்றிட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அதிக நிதியாக உள்ளக விளையாட்டு அரங்கிற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் தெரிவித்தார். 2025 ம் ஆண்டுக்கான நிதியில் 170 மில்லியன் ரூபாயும் 2026ம் ஆண்டுக்கான நிதியில் 200 மில்லியனும் இந்த உள்ளக விளையாட்டு அரங்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வலைப்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கபடி, மேசைப்பந்து , கரம், மார்ஷல் ஆர்ட் என பல விளையாட்டுகளை இங்கு விளையாட முடியும். விளையாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம்,யாழ்ப்பாணம்,காலி என நாம் பார்ப்பதில்லை. திறமையான பிள்ளைகளை பார்க்கிறோம். இங்கு பல திறமையானவர்கள் உள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பல வருடங்களாக பயன்பாடில்லாமல் நீச்சல் தடாகம் உள்ளது. அதற்காக 30 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்லோரும் பாவிக்கும் வகையில் அது அமைந்தால் அது பயனாக இருக்கும். மாணவர்களுக்கு உடற்பயிற்சி பெரியோருக்கு நடை பயிற்சி செய்ய சிறுவர் பூங்கா தேவை. யாழ் மாவட்ட செயலாளர் இடத்தை வழங்கினால் நல்ல பூங்காவை அமைக்க முடியும். சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் இதன் முன்னேற்றத்தை பார்க்க வருவோம். அந்த நேரத்தில் என்னென்ன தேவை என்பதை ஆராய்வோம். யாழ்ப்பாண மாவட்டத்தில் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு துறை சார்ந்து பல வேலைத்திட்டங்களை நாம் செய்வோம் - என்றார். விளையாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம்,யாழ்ப்பாணம்,காலி என நாம் பார்ப்பதில்லை ; திறமையான பிள்ளைகளை பார்க்கிறோம் - அமைச்சர் சுனில் குமார கமகே | Virakesari.lk
  5. கொழும்பு துறைமுக வளாகத்தில் மனித புதைகுழிகள் : சில கேள்விகளை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி நீதி அமைச்சுக்கு கடிதம் ( இணையத்தள செய்திப் பிரிவு ) கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் மேலும் விபரமறிய பல்வேறு கேள்விகளை உள்ளடக்கி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளருக்கு மக்கள் போராட்ட முன்னணி கடிதமொன்றை இன்று திங்கட்கிழமை (24) அனுப்பியுள்ளது. மக்கள் போராட்ட முன்னணி அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை எத்தனை மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ? புதைகுழிகள் தொடர்பாக தடயவியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதா? அப்படியானால் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் என்னென்ன? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பல தசாப்தங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வரும் கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட கூட்டு மனித புதைக்குழி தொடர்பான பின்வரும் கேள்விகளுக்கு மக்கள் போராட்ட முன்னணி பதில்களை எதிர்பார்க்கிறது. 1. இதுவரை எத்தனை மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? 2. இதுவரை தோண்டி முடிக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பில், எந்தளவு பாரிய புதைகுழிகளுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது? 3. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைகள் மற்றும் ஊடக வெளியீடுகள் எவை? 4. இது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? மேலும் இது தொடர்புடைய காலக்கெடு மற்றும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் எவை? தனிநபர்கள் யாவர்? 5. இதற்கான காலக்கணிப்புக்காக (கார்பன் 14 சோதனைகள் போன்றவை) மாதிரிகள் சிறப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா? அப்படியானால், அந்த நிறுவனங்கள் எவை? மேலும், அந்த அறிக்கைகள் கிடைக்கப்பெறும் திகதிகளைக் குறிப்பிட முடியும? இது தொடர்பாக தடயவியல் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டதா? அப்படியானால் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் யாவை? 7. இது தொடர்பாக ஒரு இடைக்கால நீதி செயலமுறை திட்டமிடப்பட்டிருந்தால், அது எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதை விளக்க முடியுமா? 8. மனித எலும்புக்கூடுகள் தவிர வேறு ஏதேனும் சான்றுகள் (கலைப்பொருட்கள், அணிகலனகள் ஆடைகள் போன்றவை) இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா? அப்படியானால் அவை எவை? 9. காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அந்த ஆதாரங்களை அடையாளம் காண வாய்ப்பு வழங்கப்படுமா? குற்றவியல் அரசுகளின் அழிக்க முடியாத கரும்புள்ளிகளாகக் கருதப்படும் பல பாரிய மனிதப புதைகுழிகள் இலங்கையில் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றில் எதிலும் குறைந்தபட்ச நீதி அல்லது உரிய செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக முந்தைய அரசாங்கங்கள் அந்த செயல்முறைகளை வேண்டுமென்றே புறக்கணித்து தாமதப்படுத்தியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. அந்த விசாரணைகள் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்று பாரபட்சமின்றி முழு வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு / குறைந்தபட்சம் அவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த செயல்முறை முடிவடைய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். பல்வேறு காரணங்களால் ஏற்கனவே தாமதமாகி வரும் விசாரணை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை தாமதமின்றி முடிக்கவும் குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்தால் அவர்கள் மீது விரைவில் வழக்குத் தொடரவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக வளாகத்தில் மனித புதைகுழிகள் : சில கேள்விகளை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி நீதி அமைச்சுக்கு கடிதம் | Virakesari.lk
  6. 24 Nov, 2025 | 03:29 PM மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்தும் அவற்றை மீட்டுத் தருமாறு கோரியும் இன்று (24) காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் (குளோபல் சீ பூட்) நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். மூதூர் தக்வா நகர் கடற்கரை பள்ளிவாசலிலிருந்து தொடங்கிய இந்தப் ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதான வீதி ஊடாக சென்று மூதூர் பிரதேச சபையில் முடிவடைந்தது. மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மூதூர் பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் ரோஸானாவிடமும் மகஜரைக் கையளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், சமூக நல அமைப்புகள், மீனவர்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். “மீனவர்கள் பயன்படுத்தி வரும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்!” “கடல் வளங்களைப் பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” “மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்டோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாங்கள், தினமும் கடலுக்குச் சென்று எங்கள் குடும்பங்களை நடத்துபவர்கள். எங்கள் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடைமுறை எங்களுக்குச் சட்டவிரோதமாகவும் அநியாயமாகவும் இருக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர் எனக் கூறினர். தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட கடல் எல்லைகள் - மூதூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
  7. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அதனை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அத்துடன், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குள்ள ஒரே தீர்வு பயணிகளைப் பலப்படுத்துவதாகும். ஒரு பெண்ணுக்கோ அல்லது ஒரு பிள்ளைக்கோ யாராவது பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்தால், அதைக் கண்டும் காணாதது போல் இருக்காமல் அதற்கு எதிராகச் செயல்படும் மனிதர்கள் தேவை. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரி. ஆனால் என்ன நடந்திருக்கிறது என்றால், எமது பேருந்துத் துறையில் உள்ள சில மோசமான நிலைமைகள் காரணமாக மக்கள் பயப்படுகிறார்கள் இன்னொருவருக்காக முன்வருவதற்கு. , அதனால் பேருந்துத் துறையைத் தொழில்முறை நிலைக்குக் கொண்டு வருவது, முச்சக்கரவண்டி துறையைத் தொழில்முறை நிலைக்குக் கொண்டு வருவது, செம்மஞ்சல் நிறம் சிவப்பு பக்கத்திற்குச் செல்லாமல் பச்சை பக்கத்திற்குக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - பிமல் ரத்நாயக்க | Virakesari.lk
  8. புத்தளம் மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முகமட் பைசல் என்னை கொல்லுவதாக அச்சுறுத்தியுள்ளார் என்றும், இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபையில் முறையிட்டார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நிலையியல் கட்டளை கீழ் புத்தளம் வைத்தியசாலை தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது தொடர்பில் பாராளுமன்ற உணவக பகுதியில் வைத்து பைசல் எம்.பி தனக்கு அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாக அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வரவு- செலவுத்திட்ட குழுநிலை விவாதம் ஆரம்பிக்கப்பட முன்னர் புத்தளம் வைத்தியசாலை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதுடன், அதற்கு அமைச்சர் பதிலளித்திருந்தார். அதன் பின்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த சம்பவத்தின் பின்னர் உடனடியாக சபைக்குள் வந்த அர்ச்சுனா எம்.பி ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து அது தொடர்பில் சபாநாயகரிடம் முறையிட்டார். இதன்போது அர்ச்சுனா எம்.பி கூறுகையில், நான் புத்தளம் மாவட்டம் தொடர்பான கேள்வியை எழுப்பிவிட்டு சிற்றுண்டிச்சாலைக்கு போகும் போது, அங்கு வாசலில் உள்ள கேமராவுக்கு முன்னால் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் என்னை கொலை செய்வதாக தெரிவித்தார். தயவு செய்து அந்த வீடியோ பதிவை எடுத்து விசாரணையை முன்னெடுங்கள். எனக்கு சாவதற்கு பயமில்லை. ஆனால் ஒரு கேள்வியை கேட்டதற்காக இவ்வாறு கூறுகிறார் என்றார். இவ்வேளையில் பதிலளித்த சபாநாயகர் இது தொடர்பான விடயத்தை சிறப்புரிமையை பிரச்சினையாக முன்வையுங்கள் என்றார். Tamilmirror Online || அர்ச்சுனா எம்.பிக்கு மரண அச்சுறுத்தல்
  9. டி.கே.ஜி. கபில கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சொந்தமான இரும்புத் தொகுதியை வழங்குவதாக உறுதியளித்த ஒருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரும்பு வாங்கும் தொழிலதிபரை விமான நிலைய வருகை முனையத்திற்கு வரவழைத்து,ரூ.1 மில்லியன் பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிச் சென்றார். யாழ்ப்பாணம் பகுதியில் வசிக்கும் அவர் இரும்பு வாங்கும் தொழிலதிபரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ராகம, எண்டேரமுல்ல பகுதியில் வசிக்கும் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிக அளவு இரும்பு தொகுதி இருப்பதாகவும், அதை வாங்குவதற்கான விலைமனு கோரலை சமர்ப்பிக்க ரூ.1 மில்லியனுடன் விமான நிலையத்திற்கு வருமாறும் கூறியுள்ளார். அதன்படி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொழிலதிபர், ஒக்டோபர் 25 ஆம் திகதியன்று தனது மனைவியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார். அவர்கள் விமான நிலைய வருகை முனையத்தில் அமர்ந்திருந்தனர், அவர்களிடம் ஒரு மில்லியன் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட ராகமவைச் சேர்ந்த நபர் ஒரு மில்லியன் ரூபாயுடன் தப்பி ஓடிவிட்டார். பின்னர், யாழ்ப்பாண தொழிலதிபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரை அணுகி இது தொடர்பாக புகார் அளித்தார். பொலிஸார், தொழிலதிபருடன் விமான நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேமரா அமைப்பை கண்காணித்தனர். பணத்துடன் தப்பிச் சென்ற நபரை தொழிலதிபர் அடையாளம் கண்டு, அதை காவல்துறை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார். கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கேமரா அமைப்பின் பொறுப்பாளர் கபில சதருவன் பலிஹக்கார, வெள்ளிக்கிழமை (21) அன்று காலை, ஏதோ ஒரு காரணத்திற்காக கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு சென்றிருந்தபோது, அந்த அலுவலகத்தில் தரகராக பணியாற்றி, விமான நிலையத்தில் மோசடியாக பணம் பெற்ற நபரை அடையாளம் கண்டு, உடனடியாக கட்டுநாயக்க விமான நிலைய காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்படி, உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு சென்று, ராகம, எண்டேரமுல்லவைச் சேர்ந்த 46 வயதுடைய ரங்கநாத் சிவகுமாரை கைது செய்து, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Tamilmirror Online || யாழ். இரும்பு தொழிலதிபரை கட்டுநாயக்கவில் ஏமாற்றியவர் சிக்கினார்
  10. யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த சோகம்! யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த தர்ஷன் அஸ்வின் என்ற 9 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் பிறந்த இந்த இரட்டைக் குழந்தைகளில், பெண் குழந்தை கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது. இந்நிலையில், ஆண் குழந்தைக்கு இன்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்டதை அடுத்து குழந்தை மயக்கமடைந்துள்ளது. உடனடியாக குழந்தை சங்கானை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் சடலம் மீதான இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இறப்பிற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த சோகம்!
  11. 20 Nov, 2025 | 02:01 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முஸ்லிம் பெண் தாதியர்கள் அவர்களுடைய சீருடைக்கு மேலதிகமாக காற்சட்டை அணிவதை உறுதிப்படுத்தி சுகாதார அமைச்சினூடாக சுற்று நிருபமொன்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், திணைக்களங்களுக்கு அவசரமாக அனுப்பி முஸ்லிம் பெண் தாதியர்கள் தமது கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆடைகளை அணிவதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், முஸ்லிம் பெண் தாதியர்களின் ஆடை தொடர்பாக கடந்த சில நாட்களாக கருத்தாடல்கள் சமூக மட்டத்திலும், ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது. அரச மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றுகின்ற முஸ்லிம் பெண் தாதியர்கள் அவர்களுடைய சீருடைக்கு மேலதிகமாக காற்சட்டை அணிவதற்கு அனுமதி வழங்காத நிலையிலேயே 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இந்தப் பாராளுமன்றத்திலே ஒரு தனிநபர் பிரேரணையை நான் கொண்டு வந்தேன். அந்தப் பிரேரணை மீது நான் பேசுகின்ற போது பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டினேன். இன்று தாதிமார் தொழிலென்பது சகல மக்களுக்கும் தேவையான, சகல மக்களும் பங்குபற்றக்கூடிய, சகலரும் நம்பியிருக்க வேண்டிய ஒரு பொதுவான தொழிலாக இருக்கின்றது. அப்படியான ஒரு பொதுவான தொழிலிலை சகல சமூகங்களைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய கலாசாரங்களுக்கும் சமய அனுஷ்டானங்களுக்கும் ஏற்ற வகையில் சமயம் அனுமதிக்கக்கூடிய வகையில் ஈடுபடுவதற்கான வழிவகைகளை செய்யவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் . முஸ்லிம் பெண்கள் காற்சட்டையின்றி மேலாடை மாத்திரம் அணிவதை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்காத காரணத்தினால் அந்தத் தொழிலில் பெருமளவில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கின்றார்கள், எனவே, முஸ்லிம் தாதியர்கள் தங்களின் மார்க்கம், கலாசாரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சீருடை அணிவதற்கு வழிசெய்ய வேண்டும். இவ்வாறான காரணங்களுக்காக முஸ்லிம் பெண் தாதியர்களுக்கு காற்சட்டை அணிவதற்கான அனுமதி வழங்க வேண்டுமென இந்த சபையில் தனிநபர் பிரேரணையை கொண்டு வந்திருந்தேன். குறித்த பிரேரணை தொடர்பாக அப்போதிருந்த சகல இனத்தைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்தாலோசித்து ஆதரவாக செயற்பட்டதுடன் அன்றைய சபாநாயகராக இருந்த சபாநாயகர் மர்ஹும் எம்.எச் முஹம்மட்டும் முஸ்லிம் தாதியர்கள் அவர்களின் கலாசார முறைப்படி சீருடை அணிய இந்த பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பிரகாரம் இறுதியில் அன்றைய சுகாதார அமைச்சர் ரேணுகா ஹேரத் அனுமதியுடன் குறித்த எனது பிரேரணை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று சபாநாயகரால் குறிப்பிடப்பட்டு அங்கீகாரத்தை வழங்கியது. இவ்வாறான பின்னணியில் அன்றிலிருந்து இன்று வரை இலங்கையில் எல்லா அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் முஸ்லிம் தாதியப் பெண்கள் அவர்களுடைய சீருடைக்கு மேலதிகமாக காற்சட்டை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்கள் அணிந்து, கொண்டிருந்ததுடன் இது தொடர்பில் எந்த ஒரு பிரச்சினையும் இடம் பெறவில்லை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களும் தாதியர்களாக இன்று வரை எல்லா மருத்துவமனைகளிலும் தங்களுடைய கடமைகளை புரிகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக தேசிய தாதியர் பயிற்சி பாடசாலை மற்றும் வேறு சில வைத்தியசாலைகளிலும் இவ்வாறு காற்சட்டை அணிய அனுமதி இல்லை என்ற ஒரு முறைப்பாடு எம்மிடம் வந்திருக்கின்றது. நீங்கள் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்ற களுத்துறை மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் சகல இன மக்களுடனும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடிய அதேபோன்று அனைத்து இன மக்களும் மதிக்கின்ற ஒரு அமைச்சர் என்ற வகையிலும் இது தொடர்பாக தங்களது அமைச்சினூடாக சுற்று நிருபமொன்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், திணைக்களங்களுக்கு அவசரமாக அனுப்பி தமது கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆடைகளை அணிவதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா? என்றார். முஸ்லிம் பெண் தாதியர் தமது கலாசாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா | Virakesari.lk
  12. போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலுடன் ஆறு பேர் கைது! 21 Nov, 2025 | 04:29 PM இலங்கை கடற்படையால், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் 06 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பல நாள் மீன்பிடிக் கப்பலும் சந்தேக நபர்களும் கடந்த 20 ஆம் திகதி தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய நிபுணர் பரிசோதனையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 18 பொதிகளில் 261 கிலோகிராமை விட அதிகமான ஐஸ் மற்றும் 115 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், போதைப்பொருள் கையிருப்புடன், ரிவால்வர் வகை மற்றும் பிஸ்டல் வகை 02 துப்பாக்கிகள் மற்றும் 02 மெகசின்களுடன் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை கண்காணிப்பதில் பங்கேற்றனர். இந்த போதைப்பொருள் கையிருப்பை கண்காணிப்பதில் பங்கேற்ற பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது கருத்துக்களைத் தெரிவித்ததோடு, “போதையற்ற நாடு - ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ் முழு நாட்டையும் உள்ளடக்கிய போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் தீவிரமாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வரும் கடத்தல்காரர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தினார். மேலும், தேசிய பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்தி, பாதுகாப்பான நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் உறுதி செய்வதற்காக அரசாங்கம் பல மூலோபாய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பதற்காக குறிப்பாக செயல்படுத்தப்பட்ட 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருள் சோதனைகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை சுயாதீனமாக நடத்துவதற்கு சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு எப்போதும் வாய்ப்பளிப்பதன் மூலம், ஒரு நாடாக நாம் வெற்றிகரமான முடிவுகளைக் காண முடிகிறது என்றும் அவர் கூறினார். கௌரவ ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், அரச புலனாய்வு சேவை உட்பட அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புலனாய்வு சேவைகளுடனும், பிற சட்ட அமலாக்க நிறுவனங்கள் மற்றும் ஆயுதப்படைகளுடன் ஒருங்கிணைந்து போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான மூலோபாயத் திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார். கடல் வழியாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கையாள்வதில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை, பிற படைகளுடன் இணைந்து, இலங்கை பொலிஸ், பொலிஸ் அதிரடிப் படை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் நெருங்கிய ஒருங்கிணைப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட்டு, கடந்த சில மாதங்களில் மிகவும் வெற்றிகரமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏராளமான கைதுகளைச் செய்து வருவதாக கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார். கண்ணியமான வாழ்க்கை அசைக்க முடியாத நாடு என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, நாட்டின் குழந்தைகளை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கும், தாய்நாட்டை இந்த சமூகப் பேரழிவிலிருந்து விடுவிப்பதற்கும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இலங்கை கடற்படையின் விசேட அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நபர்கள் பற்றிய தகவல்களை சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு வழங்குமாறு மீனவ சமூகத்தினரிடையே கேட்டுக்கொண்டார். போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பொறுப்பான ஊடக அறிக்கையிடலில் ஈடுபடும் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்கையும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார். மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகு, 261 கிலோகிராமை விட அதிகமான ஐஸ், 115 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின், 02 துப்பாக்கிகள், 02 மெகசின்களுடன் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் ஆறு (06) சந்தேக நபர்களும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலுடன் ஆறு பேர் கைது! | Virakesari.lk
  13. 21 Nov, 2025 | 06:19 PM திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் போராட்டம் ஓயப்போவதில்லை. தொடர்ந்தும் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என முத்து நகர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மழையையும் பாராமல் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது 351 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின்சக்தி உற்பத்திக்காக காணிகளை அபகரித்ததையிட்டே இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அங்குள்ள விவசாய குளங்களையும் மூடி, குறித்த திட்டத்தை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணி என கூறி அடாத்தாக விவசாயிகளை வெளியேற்றி இதனை செய்து வருகின்றனர். 800 ஏக்கர் அளவில் காணி சுவீகரிப்பு செய்யப்பட்ட நிலையில் குறித்த விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வீதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அபகரிக்கப்பட்ட காணியை மீளத் தருமாறும் அல்லது மாற்றீடாக காணிகளை விவசாய செய்கைக்காக வழங்குமாறும் கோரி பல போராட்டங்களை ஜனாதிபதி செயலகம் தொடக்கம் பிரதமர் செயலகம் வரை முன்னெடுத்த போதிலும் தீர்வு வழங்கப்படாமை குறத்து மன வேதனை அடைவதாகவும் தெரிவிக்கின்றனர். 1972ஆம் ஆண்டு முதல் தங்களது ஜீவனோபாயமாக விவசாய செய்கையை முன்னெடுத்து வந்த முத்து நகர் விவசாயிகள், வீதியில் வெயில் மழையிலும் போராடி வருவது, மக்களை கஷ்டத்துக்குள் தள்ளும் ஆட்சியாக இது விளங்குகிறது என்பதை உணர்த்துகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறுபான்மை மக்களுக்கான தீர்வில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எனவே முத்து நகர் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது ; முத்து நகரில் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தும் விவசாயிகள் எச்சரிக்கை | Virakesari.lk
  14. 21 Nov, 2025 | 06:12 PM தொல்பொருள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட 35 ஆம் கிராமம் கண்ணபுரம், கிராமத்தில் உள்ள வீதியில் தொல்லியல் இடமாக அங்கிகரித்து பெயர் பலகை நடுவதற்கு வெள்ளிக்கிழமை (21) வருகை தந்த தொல்லியல் திணைக்களத்தினரை போரதீவுப் பற்றுப் பிரதேசசபையின் தவிசாளர் உள்ளிட்ட குழுவின் அவ்விடத்திற்கு விரைந்து வருகை தந்த தொல்பொருள் திணைக்களத்தினரை துரத்தியடித்தியுள்ளர். இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரதேச வெல்லாவெளியில் அமைந்துள் பிரதேச செயலகத்திற்குச் சென்ற மக்கள் பிரதே சபைத் தவிசாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட குழுவினர் அற்கு நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் கலைந்து சென்றனர். இதன்போது கருத்தத் தெரிவித்த போரதீவுப் பற்றுப் பிரதெ சபையின் தவிசாளர் வி.மதிமேனன். போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக்கு உட்பட்ட வேத்துச்சேனை, கண்ணபுரம், மற்றும் விவேகானந்தபுரம், ஆகிய கிராமங்களுக்கு தொல்லியல் திணைக்களம் என்ற பெயரிலே மூன்று உத்தியோகத்தர்கள் தொல்லியல் பொருட்கள் இருப்பதாக தெரிவித்து அடையாளப்படுத்தி பல பதாகைகளை இடுவதற்காக எமது பிரதேசத்திற்கு வந்திருந்தனர். இந்த நிலையில் எமது பிரதேச சபை உறுப்பினர்கள் இப்பிரதேச பொது அமைப்புக்கள் பொதுமக்கள் அயல் பிரதேசமான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறு தொல்லியல் இடம் என அடையாளப்படுத்தும் இடுப்பதற்காக வருகை தந்திருந்த அதிகாரிகளை எதிர்த்து இவை தொல்லியல் இடம் இல்லை என்பதை நாங்கள் தெரிவித்து இருந்தோம். தொல்லியல் திணைக்களத்தினால் 24 இடம் இருப்பதாக தெரிவித்திருந்தார்கள் தற்போது கூறுகின்றார்கள் 34 இடம் இருப்பதாக கூறுகின்றார்கள். அவற்றுக்குரிய பதாகைகளை நடுவதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார்கள் அந்த வகையில் அதற்கு எமது மக்களுடன் சேர்ந்து நாங்கள் பாரிய எதிர்ப்பினை நாங்கள் தெரிவித்தோம். வடகிழக்கிலே தமிழர்களுக்கு பாரி அச்சுறுத்தலாக வன பாதுகாப்புத் திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் காணப்படுகின்றன. அதுபோன்றுதான் அண்மையில் திருவோணமலையிலும், புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கிலே பௌத்தமயமாக்கல் நடவடிக்கை தேசிய மக்கள் சக்தி என்ற பெயரிலே வந்த அரசாங்கம் முன்னர் ஜேவிபியினுடைய கொள்கையை பின்பற்றி வந்துள்ள அரசாங்கம் பலாத்காரமாக தமிழர்கள் வாழும் பகுதியிலே தொல்லியல் இடங்கள் இருக்கின்றது என்பதை தெரிவித்து இனங்களுக்கிடையிலான இன முரண்பாட்டை தோற்றுவித்து எமக்குள்ளே ஓர் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாங்கள் கூறிக் கொள்வது யாதெனில் எங்கள் வடகிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்களை நீங்கள் குழப்ப முடியாது. எப்போதும் நாங்கள் எமது சமய புராண பூர்வீக நிலத்தை நாங்கள்தான் ஆள வேண்டும் நீங்கள் உங்களுடைய பௌத்த மயமாக்கல் என்பதை தொல்பொருள் திணைக்களத்தை வைத்து எமது நிலங்களை அபகரிக்க கனவிதும் நினைக்க கூடாது என்பதை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த காலத்தில் சில தமிழ் மக்கள் விட்ட தவறினால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் ஊடாக உருவாக்கி இருக்கின்றார். பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்கள் உருவாகி இருக்கின்றார்கள் எதிர்வரும் காலங்களில் தேசிய மக்கள் சக்தி ஜேவிபி போன்ற கட்சிகளுக்கு தமிழ் மக்கள் மீண்டும் வாக்களித்து அவர்களை பாராளுமன்றத்துக்கோ மாகாண சபைக்கோ உள்ளுராட்சி சபைகளுக்கோ இனியாவது அனுப்பாமல் விட்டு எமது தமிழ் மக்களின் நிலங்களை பாதுகாப்பதற்கு எமது தமிழரசுக் கட்சிதான் என்றும் கடைசி வரைக்கும் நிற்கும் என்பதை நான் கூறிக் கொள்கின்றேன். இன்றைய தினம் இந்த செயற்பாட்டுக்காக நாம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு பிரதேச செயலாளருடன் உரையாடி உள்ளோம். எங்களுடைய தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளில் பொது அமைப்புகளின் எதுவி சம்பந்தங்களும் இல்லாமல் எந்தவித கலந்துரையாடலும் இல்லாமல், தாங்கள் நினைத்தபடி பலாத்காரமாக அணுகி எதையும்சாதித்துவிட முடியாது. மக்களின் பலத்தினால் நாம் அவர்களின் அணுக்கலை நாம் இன்று முறியடித்து இருக்கின்றோம். எனவே தொல்லியல் திணைக்களத்தினர் முதன் முதலில் பொதுமக்களுடன் கலந்துரையாட வேண்டும் பிரதேச சபையினுடைய வீதியிலே பதாகைலையோ எதுவிலோ வேலை திட்டங்களோ மேற்கொள்ளும் போது பிரதேச சபையின் அனுமதியைப் பெற வேண்டும். எமது பிரதேசத்தில் அடையாளப்படுத்தி அவர்கள் அடையாளப்படுத்தி இருக்கும் 34 பிரதேச இடங்களுக்கும் சென்று அங்கிருக்கின்ற பொது அமைப்புகளுடன் கலந்துரையாட வேண்டும் அதன் பின்னர் தான் தொல்லியல் இடம் என்ன அடையாளப்படுத்தி பதாகைகளை இடவேண்டும் போன்ற தகவல்களை நாம் முன் வைத்திருக்கின்றோம் என இதன்போது போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசானர் வி.மதிமேனன் தெரிவித்தார். பௌத்த மயமாக்கல் வெல்லாவெளியில் வெடித்த போராட்டம் : துரத்தியடிக்கப்பட்ட தொல்பொருள்திணைக்களத்தினர் - களத்திற்கு விரைந்த தவிசாளர்கள் | Virakesari.lk
  15. தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டுக்குப் பிறகு விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துவந்த சீமான், இனி விஜய் மீதான விமர்சனங்களை குறைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்கள் உட்கட்சி விவரம் அறிந்த சிலர். இந்த முடிவின் பின்னணி என்ன? 2024 பிப்ரவரியில் த.வெ.க-வை தொடங்கினார் விஜய். அப்போது ஆரத்தழுவி வரவேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து விஜய்யின் நடவடிக்கைகளை வரவேற்று பேசிவந்தார். 2024 அக்டோபரில் நடந்த த.வெ.க-வின் முதல் மாநாட்டில் `நா.த.க-வை நட்பு சக்தியாக விஜய் முன்நிறுத்துவார்’ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீமானை மறைமுகமாக விமர்சித்து அதிர்ச்சி கொடுத்தார் விஜய். சீமான், விஜய் 2024 நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் இதற்கு எதிர்வினையாற்றிய சீமான், "திராவிடம் வேறு, தமிழ்த் தேசியம் வேறு. தமிழர்களுக்குத் திராவிடம் அயலமை. இரண்டும் ஒன்று எனக் கூறுவது அடிப்படை தவறு. இது கொள்கை அல்ல… கூமுட்டை. அழுகிய கூமுட்டை. இது நடுநிலை அல்ல… கொடுநிலை. கொடும் சிறையிலிருந்து ரத்தம் சிந்தி வந்தவன் நான். சத்தமா பேசுகிறேனா? ஆமாம், சரக்கு இருக்கு, கருத்து இருக்கு. அதனால்தான் சத்தமா பேசுறேன்” என விளாசினார். இதிலிருந்து தொடங்கிய நா.த.க – த.வெ.க வார்த்தை போர், கரூர் சம்பவத்தின்போது உச்சத்தைத் தொட்டது. நம்மிடம் பேசிய நா.த.க கொள்கை பரப்புச் செயலாளர்கள் “நா.த.க-வின் இளைஞர் வாக்குகளையும், அ.தி.மு.க-வின் தி.மு.க எதிர்ப்பு வாக்குகளையும் குறிவைத்தே வியூகம் அமைத்தார் ஜான் ஆரோக்கியசாமி. ஆகையால் விஜய்யை இளைஞர்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கடுமையாக விமர்சித்தோம். அதில் நாங்கள் வெற்றிப் பெற்றதாகவும் நினைக்கிறேன். களச் செயல்பாடுகள் இன்றி கரூர் விவகாரத்துக்கு பின் தவெக பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க, பா.ஜ.க கூட்டணிகள்மீது கவனத்தை திருப்பி அவர்களை டார்கெட் செய்வதே நம் வேலை என சீமான் முடிவு செய்துள்ளார்.” என்றனர். சீமான் இந்த முடிவை எடுக்க சில சம்பவங்களும் இருக்கின்றன எனப் பேசத் தொடங்கினார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள் சிலர், "சென்னையில் முத்துராமலிங்க தேவர் நினைவு பொதுக்கூட்டமும், திருவாரூரில் நடந்த தண்ணீர் மாநாட்டு பொதுக்கூட்டத்திலும் சீமான் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். அதே நேரத்தில் விஜய்மீதும் லேசான விமர்சனங்களை வைத்தார். ஆனால் கூட்டத்தின் நோக்கத்தை விட ‘விஜயை சாடிய சீமான்’ எனும் பகுதி மட்டும் வைரலாக்கப்பட்டது, அதனை அண்ணன் சீமான் விரும்பவில்லை. களச் செயல்பாடுகளற்ற கட்சியை தொடர்ந்து பேசிக் கொண்டே அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டாம்; தி.மு.க பாணியில் ‘கில்லிங் இன் சைலன்ஸ்’ வியூகத்திலேயே எதிர்க்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்.” என்றனர். இதன்பின்னே சில அரசியல் கணக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள் ஒருசிலர் "விஜயின் அரசியலை அம்பலப்படுத்தினால் அவரது அபிமானிகள் நா.த.க-வுக்கு திரும்புவார்கள் என்பது நா.த.க-வின் கணக்கு. ஆனால் கடுமையான விமர்சனங்களும் இரண்டாம் கட்ட நிர்வாகிகளின் மோசமான குற்றச்சாட்டுகளும் விஜய் ரசிகர்களைத் கொதிப்படைய செய்துவிட்டன. ஒருவேளை விஜய் அரசியலை விட்டே போனாலும், ‘சீமானுக்கு வாக்களிக்கக் கூடாது’ என்ற மனநிலைக்கு விஜய் ரசிகர்கள் வந்துவிட்டனர் என்பதை நா.த.கவினர் தற்போது உணர்ந்திருக்கிறார்கள். இதை சரிகட்டவே விஜய் விமர்சனத்தை குறைக்க சீமான் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது கடுமையாக விமர்சித்த சீமான், ரஜினி ‘கட்சி தொடங்கவில்லை’ என அறிவித்தபின், ‘அரசியல் ரீதியாக வைத்த விமர்சனங்கள் ரஜினியையோ அவரது ரசிகர்களையோ காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்’ என்று கூறினார். அதேபாணியில் விஜய் ரசிகர்களை கையாளும் வியூகமாகக்கூட இருக்கலாம்.” என்றனர் 'விஜய் விமர்சனம் இனி வேண்டாம்' – திடீரென முடிவெடுத்த சீமான்… பின்னணி என்ன? | Seeman Calls Off Attacks on TVK Vijay - Vikatan
  16. ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். ராமேசுவரம் அருகே மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர் கவிராஜ் (27). முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழர்கள் மலைச்செல்வம் (30), மணிகண்டன் (31). நண்பர்களான மூவரும் மண்டபம் முகாம் பகுதிக்குள் நேற்று இரவு மது அருந்தியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கவிராஜின் தலையில் சுத்தியலால் மலைச்செல்வன் தாக்கினார். படுகாயமடைந்த கவிராஜ், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கவிராஜ் உயிரிழந்தார். இது தொடா்பாக மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மலைச்செல்வனை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே, மண்டபம் முகாமுக்குள் வெளிநபர்கள் பலர் அடிக்கடி வந்து செல்வதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், அதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி முகாமில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். ராமேசுவரம் - மண்டபம் முகாமில் இலங்கை தமிழர் கொலை!
  17. யாழ்ப்பாணம் 20 மணி நேரம் முன் கடற்றொழில் அமைச்சருக்கு தீர்வுகாண திராணியில்லை; வடமராட்சி மீனவர்கள் விசனம்! வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைக்குக் கடற்றொழில் அமைச்சரால் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் முன்னரை விட இப்போதே வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன என்று வடமராட்சி மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்; இதுவரை காலமும் இல்லாத வகையில் மீனவ சமூகம் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகிறது. எங்களது பிரச்சினைகள் தொடர்பில் ஒரு தடவையேனும் கடற்றொழில் அமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடவில்லை. தேர்தலில் வாக்குப் பெறுவதற்காக மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் என்று கூறியவர்கள் அதன் பின்னர் இன்று வரை திரும்பியும் பார்க்கவில்லை. வடக்குக் கடலில் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டல் அதிகரித்துள்ளது. நாளாந்தம் நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப்படகுகள் படையெடுத்து வருகின்றன. இதற்குப் பொறுப்பான கடற்றொழில் அமைச்சரே பாரா முகமாக உள்ளபோது கடற்படையினரையோ, அரசாங்கத்தையோ குறைசொல்ல முடியாது. எனவே அவரை மாற்றி மீனவர் பிரச்சினை தொடர்பில் தெரிந்த ஒருவரை அமைச்சராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்- என்றனர். கடற்றொழில் அமைச்சருக்கு தீர்வுகாண திராணியில்லை; வடமராட்சி மீனவர்கள் விசனம்!
  18. 20 Nov, 2025 | 11:12 AM தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த படகில் இருந்த 6 இலங்கையர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 15 பொதிகள் படகிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (20) காலை தங்காலை துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு படகு கைப்பற்றல்! | Virakesari.lk
  19. வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழிலாளர்களைச் நேரில் சந்தித்து கலந்துரையாடுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளார். இந்நிலையில் ரவிகரனின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, விரைவில் முல்லைத்தீவிற்கு வருகைதந்து கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகக் கேட்டறியவுள்ளதாகப் பதிலளித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பில் துரைராசா ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர், கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதற்கமைய தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், வடகிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள், துயிலும் இல்லங்களை விடுவிப்புச் செய்தல், வட, கிழக்கில் அதிகரித்துள்ள படையினரின் பிரசன்னம், பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம், வடக்கு, கிழக்கில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசியிருந்தோம். அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் இடம்பெறும் அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் மிக மோசமாக கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன். அதேவேளை வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்கள் கடற்றொழிலுடன் தொடர்புடைய மாவட்டங்களாகக் காணப்படுகின்றன. இந்நிலையில் அங்கு அதிகளவில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதையும் அதனால் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தேன். அதேவேளை வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் பாராளுமன்றிற்கு வருகைதந்து பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து இந்த சட்டவிரோத கடற்றொழிலால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்திப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்த விடயத்தினையும் இதன்போது ஜனதிபதியிடம் தெரியப்படுத்தினேன். அத்தோடு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், சம்மேளனம், கடற்றொழிலாளர்கள் சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரால் கடிதங்கள் மூலம் என்னிடம் கோரிக்கை விடுத்ததையும், அந்தக் கோரிக்கைக் கடிதங்களுடன் ஏற்கனவே என்னால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பிலும் நினைவுபடுத்தினேன். இவ்வாறாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதியைச் சந்திக்க விரும்புகின்றனர் என்ற தகவலையும் தெரியப்படுத்தினேன். எனவே சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி மீனவர்களின் கோரிக்கைகளுக்கு அமைய, அவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அக்குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன். எமது கட்சியினரும் இதுதொடர்பில் பேசியிருந்தார்கள். இந்நிலையில் கூடிய விரைவில் தாம் முல்லைத்தீவிற்கு வருகைதந்து அந்த மீனவர்களுடன் நேரடியாக பேசுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியிருந்தார். இதுதவிர வன இலாகா, வனஜீவராசிகள் ஆகிய திணைக்களங்கள் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆக்கிரமித்த இடங்களைப் பற்றியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்ட படையினரது முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன் என்றார். வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ரவிகரன் எடுத்துரைப்பு - விரைவில் முல்லைத்தீவுக்கு அனுர விஜயம்! | Virakesari.lk
  20. 20 Nov, 2025 | 02:41 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நாளொன்றுக்கு சுமார் 25 சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகின்றன. வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நிதி கணினிக் குற்றங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு 24 குற்றங்கள் 2021 ஆம் ஆண்டு 577 குற்றங்கள், 2022 ஆம் ஆண்டு 654 குற்றங்கள், 2023 ஆம் ஆண்டு 472 குற்றங்கள், 2024ஆம் ஆண்டு 1,539 குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2025 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 2,368 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. வடக்கு மாகாணத்தில் அதிகளவான குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதேபோல், நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கணினி குற்ற விசாரணை உப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார். வட மாகாணத்தில் அதிகளவான சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் | Virakesari.lk
  21. 20 Nov, 2025 | 03:19 PM வேலணை பிரதேச சபைக்குட்பட்ட சாட்டி கடற்கரையின் அழகு மிக்க "சவுக்கு" மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரியமுறையில் பராமரிகப்பட வேண்டும் என சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம், கடற்கரையோரத்தில் குவிந்திருக்கு கழிவுகளை அகற்றி சுற்றுலா தளத்; அழகுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (20) காலை 10 மணிக்கு தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், வடபகுதியில் குறிப்பாக யாழ் மாவட்டத்தின் சுற்றுலா மையங்களில் முக்கிய இடமாக இந்த சாட்டிக் கடற்கரை இருக்கின்றது. இக்கடற்கரையின் அழகு இந்த "சவுக்கு" மரங்கள்தான். ஆனால் அவற்றுள் சில மரங்கள் பாதுகாப்பற்று முறியும் நிலையிலும், மின்சார வடங்கள் செல்லும் மார்க்கத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் இருக்கின்றன. இவற்றை உரிய முறையில் பராமரித்து சுற்றுலா தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது சபையின் பொறுப்பாகும். அதேபோன்று, இந்தப் பகுதியில் காணப்படும் கடற் சாதாளைகளும் அகற்றப்படுவது அவசியமாகும். அந்த வகையில் கரைசேர்ந்து கிடக்கும் சாதாளைகளை பசளைக்காக பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் முன்மொழிவாக வலியுறுத்தினார். குறித்த கோரிக்கை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த சீரமைப்பை அடுத்த மாதம் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் அறிவித்துள்ளார். அதேபோன்று சாதாளைகளையும் தேவையானோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வேலணை - சாட்டி கடற்கரையின் சவுக்கு மரங்களைப் பாதுகாக்க கோரிக்கை! | Virakesari.lk
  22. 20 Nov, 2025 | 04:05 PM கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த சமஷ்டி தீர்வு பற்றிய கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சரிடம் முன் வைக்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தெரிவித்தார். அவர் இன்று வியாழக்கிழமை (20) தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் என்னை சந்தித்தார்கள். இதன்போது அவர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஒரு மனுவை முதல்வர் அவர்களிடம் முன் வைத்துள்ளோம் இலங்கையின் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் புதிய அரசியலமைப்பு சட்டத்தை இலங்கை தேசத்திற்காக உருவாக்க உள்ளார். அந்த புதிய அரசியலமைப்பு சட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கும் வகையில் ஒரு கூட்டாட்சி நிர்வாக முறையை அரசமைப்பின் வழியாக கொண்டு வர வேண்டும் என்றும் அவ்வாறு கூட்டாட்சி சட்டத்தை அரசியலமைப்பில் இணைப்பதற்கு இந்திய அரசின் தலையீடு இன்றியமைபாததாகவுள்ளது. இந்திய அரசை தலையிட வைக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்கள் முன்வைத்த கோரிக்கை. அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து தமிழ்நாடு அரசு இந்திய அரசுக்கு ஈழத்தமிழர் நலன்களுக்காக புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் தன்னாட்சி அதிகாரத்தை வழங்க ஆவண செய்ய வேண்டும். இதனை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை முதல்வர் இடத்தில் வழங்கினோம். அத்துடன் அது தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் முதல்வருக்கு எழுதிய கடிதத்தையும் அவரிடம் வழங்கினோம். இது முக்கியமான கால கட்டத்தில் நாம் விடும் கோரிக்கை. ஏற்கனவே இந்திய அரசு ராஜீவ்காந்தி காலத்தில் ஒரு ஓப்பந்தத்தை செய்துள்ளது. அந்த ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்யவில்லை. 13 வது திருத்தம் மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லாத திருத்தம். எனவே 13 வது திருத்தம் எங்களுக்கு உடன்பாடில்லை என ஈழத்தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். சமஷ்டி ஆட்சிமுறையை கொண்டு வர வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கை. இதனை விளக்கி பேசி முதலமைச்சரிடம் மனு கொடுத்து இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரியுள்ளோம் எனத் தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த சமஷ்டி தீர்வு பற்றிய கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சரிடம் முன்வைப்பு: தொல் திருமாவளவன் | Virakesari.lk
  23. 20 Nov, 2025 | 05:16 PM தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை வெள்ளிக்கிழமை (21) மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. தாய்மண்ணுக்காக தம் உயிர்களை அர்ப்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு இந்த நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. “தலைமுறைகள் கடந்து வாழும் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள். உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்துவிட்டுச் செல்லுங்கள்” என ஏற்பாட்டுக் குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நல்லூர் நினைவாலயம் நாளை அங்குரார்ப்பணம் | Virakesari.lk
  24. யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்களமயமாக்கல் தொடரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றைய தினம் (20) தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில் தமிழர் தாயகத்தில் கடற்கரைப் பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக புத்த பிக்குகளினால் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருக்கின்றது. அங்குள்ள தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பின் பின் சட்ட அனுமதியற்ற கட்டுமானம் என்று சொல்லி ஸ்ரீலங்கா பொலிஸாரினால் அப்புறப்படுத்தப்படுகின்றது. இதன் பிறகு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் புத்தர் சிலையின் பாதுகாப்பு காரணமாகத்தான் அப்புறப்படுத்தப்பட்டது மீண்டும் நிறுவப்படும் என்ற பின் மீண்டும் அதே இடத்தில் அரசாங்கத்தால் புத்தபிக்குகள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து அதே புத்தர் சிலை நிறுவப்படுகின்றது. மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என்று நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இது இன்று நேற்றில்லை 76 வருடகாலமாக இந்த நாட்டில் இது தான் நடந்தேறியிருக்கின்றது. சட்டமுரணாக தமிழர் தாயகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்ட பின் பாராளுமன்றத்தில் மீண்டும் நிறுவுவோம் என்று குறிப்பிட்டு மீள சிலையை மக்களின் எதிர்ப்புக்களை மீறி நிறுவியிருக்கும் செயல் எந்த அரசு அதிகாரத்திற்கு வந்தாலும் சிங்கள பேரினவாதப்போக்கு மாறாது என்பதையே உணர்த்துகின்றது. புத்தர் சிலையின் பாதுகாப்பு கருதி அகற்றப்பட்டிருக்கின்றது என்று சொல்லுவது தொடர்ச்சியாக சிங்கள மக்களிடத்தில் தமிழர்களை தீயவர்களாக சித்தரிப்பதைத் தான் எடுத்துக்காட்டுகிறது.புத்தர் சிலையை வைத்தது யார்? அமைதியாக தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழும் தமிழ் மக்களை குழப்பியது யார்? புத்தர் சிலையை அகற்ற வந்த பொலிஸாரின் கன்னத்தில் அறைந்தது யார்? இவர்களுக்கு எதிராக எல்லாம் இந்த நாட்டில் சட்டம் செயற்படாதா? நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களுக்கான சேவையை ஆற்றுவதைக் காட்டிலும் புத்த பிக்குகளின் பேச்சை வேதவாக்காக கேட்டு நடப்பதையே இனப்பிரச்சினை தொடங்கிய காலகட்டத்திலிருந்து அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஏன் இனப்பிரச்சினையின் முக்கிய காரணமே சிங்கள பௌத்தமயமாக்கல் தான். யுத்தத்தின் ஆணிவேரும் இதுதான். தொடர்ச்சியாக தமிழர் நிலங்கள் புத்த வழிபாடு என்ற பெயரிலே பௌத்த சிங்களமயமாக்கப்பட்டுக்கொண்டே இருந்துவந்துள்ளது. சிங்கள குடியேற்றங்களால் தமிழர் குடியேற்றப் பரம்பல் மாற்றியமைக்கப்பட்டுக்கொண்டே இருந்து வந்துள்ளது. வரலாற்றில் மகாவலி ஓயா மற்றும் கல் ஓயா குடியேற்றம் என்று தமிழர் நிலங்கள் முற்றுமுழுதாக பெயர் மாற்றம் பெற்று முழுவதுமாக மாறியிருக்கிறது. தொடர்ச்சியாக இன்று வரை தமிழர்களின் தொல்லியல் நிலங்களான குருந்தூர் மலை, வெடுக்குநாறிமலை, உகந்தை மலை என்று பல்வேறு இடங்களில் பௌத்த ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது. தையிட்டி, திரியாய் என்று தமிழர் நிலங்களும் இதில் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. இதில் இருந்து தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு விடயம் தவறாமல் நடக்கும். அது சிங்கள பௌத்தமயமாக்கல். ஏன் என்றால் அது திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரல். தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றுவதென்பது மாறி மாறிவரும் சிங்கள ஆட்சியாளர்களால் காலத்திற்கு காலம் நிகழ்ந்தேறிக்கொண்டே இருந்து வந்துள்ளது. சிங்கள மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டிய விடயம் என்னவென்றால், தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை. நாங்கள் அனைத்து மதத்தையுமே சமமாக மதிப்பவர்கள். அனைத்து சமய வழிபாடுகளையும் மதித்து நடப்பவர்கள் அவமதிப்பது கிடையாது. ஆனால் வழிபாடு என்ற பெயரிலே திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களால் தமிழருடைய நிலங்கள் பறிபோவதென்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றிற்கு பல்வேறு கட்டுக்கதைகள் கட்டப்பட்டு பௌத்த நிலமாக மாறுவதற்கு எதிரானவர்கள். தமிழருடைய பூர்விகம் கேள்விக் குறியாக்கப்படுவதற்கு எதிரானவர்கள். தமிழருடைய தொல்லியல் ரீதியான நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிரானவர்கள். தமிழர் குடியேற்றப்பரம்பல் மாற்றியமைக்கப்படுவதற்கு எதிரானவர்கள். தமிழர்களுடைய இனவிகிதத்தை திட்டமிட்டு மாற்றுவதற்கு எதிரானவர்கள். நாங்கள் ஏன் ஒற்றையாட்சி அரசியலைமைப்பை மறுக்கின்றோம் தெரியுமா? இதனால்தான். சிங்கள பௌத்த பேரினவாத்ததிற்கு அடிபணிந்து கிடப்பதனால்தான். இங்கே முதலில் சுற்றுலாத்தளமான கடற்கரையில் புத்தர் சிலையை அமைப்பதற்கான அனுமதி வழங்கியது யார்? பிரதேச சபையிடமிருந்தோ இல்லாவிட்டால் நகர சபையிடமிருந்தோ அனுமதிபெறப்பட்டதா? இல்லை. முற்றமுழுதாக புத்தபிக்குகளே இலங்கையின் நிரந்தர நிறைவேற்று ஐனாதிபதிகளாக இருந்து வந்துள்ளனர்.சுருக்கமாக சொல்லுவதென்றால் நாட்டின் அரச இயந்திரம் புத்த பிக்குகளுக்கு அடிபணிந்து இருக்கின்றது. முழு சட்டங்களையும் தங்கள் பக்கம் வளைக்கும் வலது சாரிகளின் பக்கம் அரசு முழுவதுமாக திரும்பி நிற்கின்றது.தாங்கள் இடது சாரிகள், கம்யூனிச சிந்தாந்தத்தை உள்வாங்கி கொண்டு செயற்படுவதாக தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் அரசு நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுபான்மையினரான தமிழ்மக்கள் பக்கம் ஏன் நிற்கவில்லை என்று ஒரு கேள்வி எழுகிறது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு நாங்கள் அடக்குமுறைகளையும் ஆக்கிரமிப்புக்களையும் தாங்கிக்கொள்ள முடியுமென்று தெரியவில்லை. இந்தப்பிரச்சினையில் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது இலங்கையின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயல். இது ஏன் இவ்வளவு காலமும் பயங்கரவாத தடைச்சட்டமும் எடுக்கப்படவில்லை? அரசியல் கைதிகளும் முழுவதுமாக விடுதலை செய்யப்படவில்லை. இதில் அரசாங்கம் சார்பில் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்? தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக அரசியல் தீர்வுக்காக இது வரை வாய் திறந்திருக்கின்றார்களா? ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் பின்னால் ஒரு அரசியல் அரங்கேற்றம் நிகழுவதாகவே நாங்கள் கணிக்கின்றோம். 1. புத்தர் சிலையை வைத்துப்பார்த்து தமிழ் மக்கள் இன்னும் தமிழ் உணர்வுடன் தான் இருக்கின்றார்களா என்று பார்ப்பது.அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றவுடன் அகற்றுவது சிங்கள மக்களிடத்தில் செல்வாக்கு சரியுமென்ற பின் மீண்டும் நிறுவுவது. 2. அரசாங்கத்தை பலவீனப்படுத்துகின்ற எதிர்கட்சியின் திட்டமிடலாக இருக்கலாம்.ஒன்று தமிழ் மக்களிடத்தே பலவீனப்படுத்துவது அல்லது சிங்கள மக்களிடத்தே பலவீனப்படுத்துவது 3. இறுதியில் புற்றுக்குள்ளே இருந்து வெளியே வந்திருக்கும் பாம்புகளை ப்போல் சிலர் வெளியே வந்திருக்கின்றனர்.யாரென்று பார்த்தால் கடந்த ஐனாதிபதித்தேர்தலில் தற்போதைய எதிர்கட்சித்தலைவருக்கு ஆதரவளித்தவர்கள்,மாவீரர் தினத்தை யார் எடுத்து நடாத்துவது என்று தங்களுக்குள் சண்டையிட்டவர்கள்.நீங்கள் உங்களுக்குள் முழுவதுமாக ஒற்றுமை அடையாவிட்டால் எதையுமே சாதிக்க முடியாது. இறுதியாக எந்தவொரு சிங்கள பேரினவாத அரசும் தமிழ்மக்களின் பக்கம் நீதியின் பக்கம் நின்றதில்லை. மிகச்சிறந்த அரசியல் தெளிவு பெற்ற நேர்மையான இளைய தமிழத்தேசிய அரசியல் கலாச்சாரம் வடகிழக்கில் வரவேண்டும்.அப்போது தான் வெள்ளம் வரும் முன் அணை கட்ட முடியும். தமிழ்மக்களாக அனைவரும் உங்கள் சிந்தனைகளில் ஒன்றிணையுங்கள். நாங்கள் ஒன்றை நம்புகின்றோம்... தூய தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும் என்று தெரிவித்துள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்களமயமாக்கல் தொடரும்! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் | Virakesari.lk
  25. திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள்.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது .அதற்கு இடமும் கிடையாது என ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். அத்துடன் திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டை பகுதி இவ்வளவு காலம் விகாரையாக பயன்படுத்தப்படவில்லை. சிற்றூண்டி சாலையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மத வழிபாட்டிடத்தை அமைப்பது போலவே வேறு கதையும் இதனுள் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு உறுதியளித்த அவர் மேலும் பேசுகையில், திருகோணமலை விவகாரம் தற்போது சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. ஆகவே இவ்விடயம் பற்றி குறிப்பிட வேண்டும் . இந்த நாட்டில் இனவாதம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு முகங்களில் வந்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சிகள் கவிழும் போது, ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள், ஜனநாயக ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகிய காரணங்கள் இருந்தன. ஆனால் இப்போது எங்கள் அரசாங்கத்தின் மீது இதுபோன்ற எந்த குற்றச்சாட்டுகளும் கிடையாது. இதன்படி தோல்வியடைந்த தரப்புகளுக்கு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்திற்கான நியாயப்படுத்தக்கூடிய தொனிப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இனவாதத்தை உருவாக்க வேண்டிய தேவை எழுகின்றது. பொலிஸார் சட்டத்தை போன்று இதுபோன்ற விடயங்களிலும் அவதானம் செலுத்த வேண்டும். சட்டத்தை செயற்படுத்தும் போது சமூகத்தில் ஏற்படக்கூடிய குழப்ப நிலைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். இந்நிலையில் திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு செயலாளரிடம் அறிக்கையொன்றை கோரியிருந்தேன். அதன்படி பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த புத்தர் சிலை அங்கிருந்து பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் நிலையப் பதிவுகளில் உள்ளன. அடுத்ததாக இந்த மோதல் பொலிஸாருக்கும் இனவாத குழுக்களுக்கும் இடையிலேயே ஏற்படும். இதனால் மீண்டும் அந்த புத்தர்சிலை அந்த இடத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் 2014இல் வழங்கப்பட்ட உரித்தொன்று இருக்கின்றது. இவ்வளவு காலம் இது விகாரையாக பயன்படுத்தப்படவில்லை. சிற்றூண்டி சாலையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த சிற்றூண்டிசாலையின் சட்டவிரோத நிர்மாணம் இருப்பதாக அதனை அகற்றுவதற்கு கரையோர பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் அதனை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பொலிஸாருக்கும், கரையோர பாதுகாப்பு அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் நடத்தி கலந்துரையாடலின் போது பிக்கு ஒருவர் இதற்காக ஒருவார கால அவகாசம் கோரியுள்ளார். இந்த அவகாசம் 14ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இவ்வாறான நிலைமையிலேயே புத்தர் சிலை தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. இது மத வழிபாட்டிடத்தை அமைப்பது போலவே வேறு கதையும் இதனுள் இருப்பதாக தெரிகின்றது. அதனை விகாரைக்கு சொந்தமான இடம் என்பதால் இதில் விகாரை இருந்ததாக பொதுமக்கள் நினைக்கலாம். ஆனால் விகாரையின் தேரர் ஒருவருக்கு சொந்தமான இடமொன்று இருந்தது. அங்கு வழிபாடு செய்யும் இடம் இருக்கவில்லை. குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னர் மாவட்ட செயலக அலுவலகத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். கரையோர பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான பகுதி மற்றும் விகாரைக்குரிய காணி ஆகியன அளக்கப்பட்டு அதனை பிரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றம் அங்கே புதிய கட்டிடங்களை அமைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது இப்போது திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள்.இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நான் மட்டுமல்ல இந்த நாட்டின். பௌத்த மக்களும் இனவாதத்துக்கு இடமளிக்க போவதில்லை. தமிழ், முஸ்லிம்களும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது. இது வரலாற்றில் மட்டுமே இருக்கும். நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இலங்கையில் இனவாதம் எழுதப்படாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார். Tamilmirror Online || திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது: ஜனாதிபதி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.